Sunday, January 24, 2016

விஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம்

1  டியர்.உங்க மேல நான் வெச்சிருக்கற காதல் தானே பெருசு?
இல்ல.என் காதல் தான் பெருசு.நீ என்னை மட்டும் தானே லவ் பண்றே? நான் உன்னையும் , உன் தங்கையையும் லவ்வறேன்.1 பெருசா?2 பெருசா?

=============

2 டாக்டர்.சிவப்புக்கலர் டூத்பேஸ்ட்ல பல் துலக்கும்போது ரத்தம் வருதோ ன்னு பயமா இருக்கு.
மேடம்.இனிமே கண்ணாடி முன்னாடி நின்னு பல் துலக்காதீங்க


=============


3 தலைவரே! நம்ம கட்சில மட்டும் கோஷ்டிப்பூசலே வர்றதில்லையே எப்டி? அதுக்கு கட்சில 10 பேராவது இருக்கனுமில்ல?


==============

4 டியர்!என் போன்ல உன் நேம் -மை லைஃப்னு சேவ் பண்ணிக்கவா😍

தாராளமா பண்ணிக்கோ, ஆனா பதிலுக்கு உன் பேரை ஒயிஃப்னு சேவ் பண்ணுவேன்னு எதிர்பார்க்காதே


==================

5  தலைவரே!5 வருசத்துக்கு ஒரு தடவை ஏன் கூட்டணி யை மாத்திக்கறீங்க?
மாற்றம் முன்னேற்றம்

============


6 டியர்.நான் நான்-வெஜ் சாப்பிடமாட்டேன்.
இது என்ன பிரமாதம்?நான் வெஜ் ,நான்-வெஜ் எதுவுமே சாப்பிடமாட்டேன்


============

7 பிரேமம் படத்தை கே பாக்யராஜ் ரீமேக்கினா அதில் பாட்டு எப்டி வரும்? டீச்சர்.டீச்சர்.ஓ மை மலர் டீச்சர்.உன்னைக்கண்டாலே ஆனந்தமேஏஏஏஏ

=============

8 டேய்.மாடு மாதிரி வளர்ந்திருக்கே.குறும்பு பண்றே. உன்னை அடிக்கக்கூடாதா?

டாடி! மாட்டையே துன்புறுத்தக்கூடாதுனு தடை விதிச்ட்டாங்க.மனுசனை மட்டும் அடிக்கலாமா?

===============

9 ஜல்லிக்கட்டு பிரச்னையைப்பத்தி என்ன நினைக்கறீங்க? தலைவரே? ஜல்லி அடிக்கறாங்க.=================

10 இண்டர்வ்யூவில்

 உங்க ஐ க்யூ வை செக் பண்ணனும்


 தாராளமா, இதோ இது தான் I ,  இதுதான் Q.  எப்பூடி?

===================

11 கோர்ட் உத்தரவை மீறக்கூடாது.
அம்மா அப்பா வாத்தியார் சொன்னாலே சொல் பேச்சு கேட்க மாட்டான் தமிழன்.ஜட்ஜ் சொல்றதை மட்டும் கேட்டுடப்போறானா?

=============

12 காலையில் கழுதையின் குரல் கேட்டா அதிர்ஷ்டமாமே...நிஜமா டாக்டர்?
அப்டியாவது தமிழன் காலைல வெள்ளனே எந்திரிக்கட்டும்னு சொல்லி இருப்பாங்க

=============

13  இத்தனை நாள் லூசுத்தனமா எழுதி உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்
ச்சே ச்சே, யார் படிச்சாங்க? நீங்களே எழுதி நீங்களே படிச்சுக்க வேண்டியதுதான்


==================

14  மிஸ் இலக்கியாவுக்கு எதுக்கு கிஸ் கொடுத்தே?


யுவர் ஆனர், என்னால இலக்கியத்துக்காகத்தான் எதுவும் செய்ய முடியல, அட்லீஸ்ட் இலக்கியாவுக்காவது.


===================


15 மேனேஜர் சார்.உங்க பேங்க்ல.1 லட்சம் ரூபா லோன் வேணும்.
ஓ.தொழில் முனைவோர்க்கான லோனா? நோ.அபிமான ஹீரோக்கு கட் அவுட் வைக்கனும்


===============

16 மிஸ்! விஜய் ரசிகையான நீங்க ஒரு அஜித் ரசிகரைத்தான் கல்யாணம் கட்டிக்குவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கறீங்களே ஏன்?
பழி வாங்கத்தான்.


==============
\17 ஒரு முழு கரும்பை பல்லால் கடித்து சாப்பிட முடியுமா?
தேவையில்ல.கவர்மென்ட்டே.2,துண்டு தானே குடுத்திருக்கு?


=============

18 தலைவரே! நீதித்துறைக்கே வாழ்க்கை கொடுத்தது நாம தான் -னு எப்படி சொல்றீங்க?இன்று வரை 219 அவதூறு வழக்குகள் கோர்ட்ல தொடுத்திருக்கோம், ரெகார்டு


==================

19  மிஸ்டர்! எனக்கு  வாழ்க்கை கொடுப்பீங்களா?


அடடா, அது ரொம்ப பழைய படம் ஆச்சே?லேட்டஸ்ட் பட டிவிடி தரட்டா?

====================

20   டியர்!நீ பக்கத்து வீட்டு பெண் லுக் தான்

 நிஜமாவா? அவ்ளோவ் அழகா?

 ஆமா , லாங்க் ஷாட்ல , பக்கத்துல வந்து பார்க்க முடியாது, பயமா இருக்கும்


=========================

0 comments: