Sunday, January 03, 2016

மீரா ,புவனா,அப்சரா,கப்சரா-கேப்டன் ரசிகன்

1]தலைவரே!கடவுள் இல்லைன்னு சொன்னீங்க இப்போ மட்டும் கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்றீங்க?


எனக்கு பகுத்தறிவுக்கொள்கையை விட மைனாரிட்டி ஓட்டு முக்கியம்


=============

2]தலைவரே!சிம்புவை அரெஸ்ட் பண்ண ஏன் துடிக்கறீங்க?


என் ஆட்சியில் என் ஆணைப்படி இல்லாமல் சிலம்பரசன் (அரசன்)னு பேர் வெச்சது உறுத்துது


=============

3]அடிமை ,கொத்தடிமை என்ன வித்யாசம்?


ஆளுங்கட்சி எம் எல் ஏ க்கும் எம் பி க்கும் கூடவா உனக்கு வித்யாசம் தெரியல?


==============

4]ஹன்சிகா =இது நம்ம ஆளு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிடுமா?


நயன் தாரா =இருக்கற நிலைமையைப்பார்த்தா நம்ம ஆளு சிம்புவே ரிலீஸ் ஆகறது டவுட்தான்

==============

5]உங்க பேருக்கு முன்னால மேடம் னு போட்டிருக்கீங்களே அது நீங்க படிச்சு வாங்கின பட்டமா மிஸ் பட்டம்மா?


அது மடம்(MADAM),குடி இருக்கும் இடம்


==============

6]நவீன் ஒரு வேஸ்ட் பையன் கறதை சுருக்கமா எப்டி சொல்ல?


ந"வீண்"==================

7]நான் ஊட்டி போய் இருக்கேன்.ஆனா ஊட்டி வர்க்கி சாப்ட்டதில்லை.ப்ளவர் ஷோ பார்த்ததில்ல.

]
ஓஹோ.குற்றாலம் போனாக்கூட அருவி யைப்பார்த்ததில்லைம்பீங்களா?===============

8]இன்ஸ்பெக்டர்.இவன் என்னை பாலோ பண்றான்


டேய்!ஏன்?
அவங்களை மட்டுமா பாலோ பண்ணேன்?ஊர்ல இருக்கற எல்லா பொண்ணுங்களையும் தான்


==================

ஜட்ஜ் = சிம்பு குற்றவாளிங்கறதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?
வக்கீல் = அவர் பட டைட்டில் மன்மதன் ,வாலு ,கெட்டவன்.இதுவே போதுமே யுவர் ஆனர்

===============

10]இன்னைக்கு செஞ்ச மாதிரி சேட்டை நாளைக்கு செய்யக்கூடாது.ஓக்கே?


ஓக்கே மிஸ்! நாளைக்கு புதுசா ஒரு சேட்டை செய்யறேன்============11]மிஸ்!,ஜீன்ஸ் பேண்ட்டை கழட்டிட்டு டவுசரோட அஞ்சான் சமந்தா போல் கோயில் வந்திருக்கீங்க?ஜீன்சுக்கு தடையாம்.செருப்போட அதையும் கழட்டிட்டேன்

==============
12]சார்.காலைலயே ஏன் மொக்க போடறீங்க?


மத்தியானம் மட்டும் மரோசரித்ரா வா படைச்சிடப்போறேன்?எப்போ எழுதுனாலும் இந்த லட்சணம் தான்


=================]\

13]பிடிக்்கலன்னா ஒதுங்கி போங்க தேவை இல்லாத பேச்சு, சண்டை ஏன்"?


மிஸ்! ஒதுங்கிப்போக நான் ஒண்டிப்புலி இல்ல.சண்டிப்புலி.முதல்ல பைட்.பின் சைட்=================


14]1பொண்ணு பேசுன 10வது நிமிஷம்FOTO
15வது நிமிஷம் PHNO்
30வது நிமிஷம் ப்ளாக்!
20வது நிமிஷம் வாட்சப்
21 டூ29 இடைப்பட்ட நேரத்தில் என்ன செஞ்சீர்?


===============

15]எனக்கு 2 குழந்தைங்க.எல்லோர்க்கும் ஷோபிகா ன்னே பேர் வெச்ட்டேன்.

குழப்பம் வராதா?
நோ.1 மார்னிங் ஷோ பிகா
2 மேட்.னி ஷோ பிகா

===================

16]அன்பே பனி விழும் இரவில் ஒத்தையடிப்பாதையில் உன் கரம் கோர்த்து நடக்கனும்.
டேய்.அப்போக்கூட சும்மா நடந்துட்டுதான் இருப்பியா?ம்ஹூம்.செட் ஆகாது=======================


17]ஆண்களுக்கு மட்டும் மாதுளைப்பழம் ஏன் ரொம்பப்பிடிக்குது டாக்டர்?
2 காரணம்.1 பேர் லயே மாது இருக்கு.


==================

18[]தாலி கட்ன பின்தான் மாப்ளை அஜித் ரசிகர் பொண்ணு விஜய் ரசிகைனு தெரிஞ்சுது்


முதல் இரவு நடக்குமா?


மாப்ளை நடந்துட்டே இருப்பாரு.பொண்ணு ஆட்டமா ஆடும்


=================


சார். மீரா ,புவனா,அப்சரா,கப்சரா ன்னு 4 பொண்ணுங்க கூடவும் பேச்சு வார்த்தை வெச்சிருக்கீங்க.யாரை மேரேஜ்?கேப்டன் ரசிகன்=வெயிட் டில் மேரேஜ்
==================


20]மிஸ்!,உங்க டிபி ல மூக்கு சரியாத்தெரியல.

வீட்ல நோஸ்கட் பண்ணிட்டாங்க.

===================

0 comments: