Friday, September 29, 2017

ஹர ஹர மகாதேவகி -சினிமா விமர்சனம் ( கில்மா காமெடி 18+)

Image result for haraharamahadevaki
நவரச நாயகன் கார்த்திக் நடிச்ச ரெட்டைக்குழல் துப்பாக்கி படம்தான் எனக்கு தெரிஞ்சு  அவருக்கு கெட்ட பேர் வாங்கித்தந்த படம் , அப்பா சம்பாதிச்ச அந்தப்பேரை கவுதம் கார்த்திக்  இப்பவே சம்பாதிச்சதை நினைக்கும்போது பெருமையா இருக்கு , அவர் மாதவன் மாதிரி ரொமாண்டிக் ஹீரோவா வலம் வருவார்னு பார்த்தா போயும் போயும் கேவலம் த்ரிஷா இல்லன்னா நயன் தாரா வில் ஹீரோவா வந்தாரே அவர் பேர் கூட ஆங்  ஜிவி பிரகாஷ் மாதிரி தர லோக்கல் கில்மா உருப்படியாய் மாறி வருவது சோகம்  


சரி , இந்த கேவலமான படத்தோட கதை என்னா?ன்னு பார்ப்போம்

சமீபத்தில் ரிலீஸ் ஆன தரமான படம் குரங்கு பொம்மை , அதில் ஒரு பை கை மாறி பலரிடம் போவதுதான் கதைக்கரு, 


டைம் பாம் வைக்கப்பட்ட ஒரு பை , கள்ள நோட்டு ரூ 2 கோடி வைக்கப்பட்ட ஒரு பை , துணி மணிகள் வைக்கப்பட்ட ஒரு பை இந்த 3 ம் எப்படி படாதபாடு பட்டு இரட்டை இலை சின்னம் போல் சிக்கி சின்னாபின்னம் ஆகுது என்பதே திரைக்கதை , அதை எந்த அளவு மொக்கையா சொல்ல முடியுமோ அந்த அளவு ரம்பம் போட்டிருக்காங்க 


4 விதமான கிளைக்கதைகள் . ஒரு புள்ளியில் இணைக்க படாத பாடு படும் இயக்குநர் எடிட்டிங் பண்ணும்போ தாவது ரசிகர் நலன் கருதி கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம், அட்லீஸ்ட் கருணை மலரையாவது காட்டி இருக்கலாம் 


ஹீரோவா கவுதம் கார்த்திக் , படு கேவலமான பாத்திரப்படைப்பு , ஒரே ஒரு டப்பாங்குத்து டான்ஸ் நல்லா ஆடறார் , இவருக்குக்கூட காலேஜ் பொண்ணுங்க ரசிகைகளா இருக்காங்கனு நினைக்கும்போது சிரிப்பாவும் இருக்கு, நல்லா வேணும்னு சந்தோசமாவும் இருக்கு 

Image result for haraharamahadevaki

 ஹீரோயின் நிக்கி கல்ராணி , நிக்கி செங்கல் ராணினு பேர்  மாத்திக்கலாம், அவ்ளோ சிவப்பு , ரோஸ் பவுடர் மேக்கப் . ஏ ரக காட்சிகளில் தெரிஞ்சு நடிச்சாரோ தெரியாம குத்து மதிப்பா சமாளிச்சாரோ தெரியல


 காமெடியனா நம்ம சதீஷ் , ஆர் ஜே பாலாஜியை நக்கல் அடிக்கறதா நினைச்சு ட்விட்டர்ல ரசிகர்கள் கிட்டே பல்பு வாங்கினாரே அந்த சதீஷ் தான் . 2 1/2 மணீ நேர படத்தில் ஹீரோ கூடவே வரும் சதீஷ் ஒரு சீனில் கூட ஒரு ஜோக் கூட சொல்லவே  இல்லை


 பத்திரிக்கைகளில் வரும் ஜோக்சை திருடி மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மதுரை  முத்து , ஈரோடு மகேஷ் கூட ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் சிரிக்க வைக்க ஒரு சொந்த  ஜோக் சொல்வார்கள் , சதீஷ் மருந்துக்குக்கூட ஒரு  ஜோக் சொல்லலை , இவர் லுங்கி யும்   ஃபுல் ஹேண்ட் சர்ட் , டை என கேவலமான கெட்டப்பில் வருவது  சகிக்கலை

  ரவி மரியா , மொட்டை ராஜேந்திரன் காமெடிகள் ஓரளவு சகிக்கும்படி  இருக்கு


 எடிட்டிங் , ஒளிப்பதிவு , இசை எல்லாம் சுமார் ரகம்


டி வி ல இந்தப்படம் போட தகுதி இல்லாத படம் என்பதால் மட்டமான ரசனை உள்ளவர்கள் உடனடியாக தியேட்டர் சென்று பார்த்து விடவும் 

 தப்பித்தவறி பெண்கள் தியேட்டருக்கு சென்று விட வேண்டாம் , படு  கேவலமான காட்சிகள் , வசனங்கள் நெளிய வைக்கும்


Image result for nikkikalrani
நச் டயலாக்ஸ்


1 வீட்ல எல்லாரும் திருப்பதி போய் இருக்காங்க

 நீ அவளை திருப்திப்படுத்த போய் இருப்பியே? #HaraHaraMahadevaki


2 அவங்க காதல்ல சின்னதா ஒரு பிராப்ளம்

 சின்ன பிராப்ளமா? சின்னதா இருப்பதுதான் பிராப்ளமா? #HaraHaraMahadevaki 18+


நல்ல நோட்டா?கள்ள நோட்டா?னு பாக்காம நாம கொடுக்கறதை வாங்கிட்டு போறது நம்ம நாட்லயே போலீஸ்காரனுங்கதான் (யப்பா ,என்னா அடி)

4 ஜட்டி போடற கெட்ட பழக்கம் உனக்கு இருக்கா?

கிளி யை கூண்டுல அடைக்கற பழக்கம் என்னைக்கும் இருந்ததில்ல 18+

5 எந்த வேலை வேணா செய்யலாம்,வேலையே செய்யாம இருக்கறதுதான் தப்பு

ஏய்.. ம்..
சும்மா இருங்க ,பையன் இருக்கான்
ஓ.உனக்கு அந்த நினப்பு வேறயா?சரக்கு அடிக்கனும்.2 பேரும் வெளில போங்க

வாட்சப் வந்தாலும் வந்தது,சின்ன பசங்க சரக்கு குடிக்கற போட்டோ,பொண்ணுங்க குளிக்கற போட்டோ எல்லாம் இதுல தான் வருது

8  தப்பு பண்றவன் மாட்டிக்கறதில்லை, தப்பை தப்பா பண்றவன் தான் மாட்டிக்கறான்

ரொம்ப சந்தோஷமா இருக்காளே,லவ்வர் கூட சேர்ந்துட்டாளோ?
இந்தக்கால பொண்ணுங்க லவ்வரை கழட்டி விடறப்பதானே சந்தோசமா இருப்பாங்க?

10 உன் வாட்ச்ல ஒரு நிமிசத்துக்கு எத்தனை நொடி?

60

என்னுதுல 100, அதான் வாட்ச் ஸ்லோவா ஓடுது போல #HaraHaraMahadevaki 


11 அடுக்கு மொழி பேசியே ஆட்சியைப்பிடிச்சது எல்லாம் அந்தக்காலம் #HaraHaraMahadevaki 


Image result for nikkikalrani
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

 இது 1  தான் குறைச்சல் 

சபாஷ் டைரக்டர்


 இந்த மொக்கைப்படத்துக்கு டீசர் , ட்ரெய்லர் எல்லாம் விட்டு ப்ரமோ தந்த விதம்



லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


தனி கட்டுரையே எழுதனும்



சி.பி கமெண்ட் -ஹரஹரமகாதேவகி −C சென்ட்டர்ரசிகர்களுக்கான மொக்கை காமெடி கில்மா மெலோ டிராமா ,அய்யோ அம்மா ,விகடன் 35 ,ரேட்டிங் 2 / 5 , 18 +


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)   35


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)  2.5 / 5 



கருப்பன் - சினிமா விமர்சனம்

Image result for karuppan motion posterவிஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'கருப்பன்'. முழுக்க முழுக்க கிராமத்துக் கதை கொண்ட இப்படத்தை, ரேனிகுண்டா படத்தின் இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்க தன்யா கதாநாயகியாக நடிக்கிறார். முதலில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிப்பதாக இருந்தார். அதன்பின் லட்சுமி மேனனைத் தேர்வு செய்தனர் படக்குழு. 

படப்பிடிப்பின்போது லட்சுமி மேனனுக்குக் காலில் அடிபட்ட காரணத்தினால் 'பலே வெள்ளையத் தேவா', ’பிருந்தாவனம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த தன்யா தேர்வு செய்யப்பட்டார். பாபி சிம்ஹா, கிஷோர் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திண்டுக்கல் மற்றும் தேனியைச் சுற்றியுள்ள ஊர்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தினர். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நன்றி - விகடன்

சரி , விமர்சனத்துக்குள்ளே போவோம்


Image result for karuppan motion poster

ஹீரோ ஒரு சண்டியர் , சரக்கு சங்கர லிங்கம் , ஹீரோயின் அண்ணன் போட்ட ஜல்லிக்கட்டு பந்தயத்தில் ஜெயிச்சு மேரேஜ் பண்ணிக்கறாரு, அவங்க எப்படி அதிமுக +பாஜக் போல அன்னியோன்யமா வாழறாங்க என்பதை இடைவேளை காட்றாங்க , திடீர்னு தினகரன் வடிவில் அதிமுக வுக்கு சிக்கல் வந்தது போல்  ஹீரோயினோட முறை மாமன் மூலமா சிக்கல் வருது , ஹீரோ எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை 

 ஹீரோவா விஜய் சேதுபதி ,  சி செண்ட்டர் ஆடியன்ஸ்  ஆரவாரமான கைதட்டல்களுடன்  அறிமுகம் ஆகறாரு . அவருடனான ஹீரோயின் கெமிஸ்ட்ரி பிரமாதமா ஒர்க் அவுட் ஆகி இருக்கு . குடிகாரன் கேரக்டர் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல், லேடீசுக்குப்பிடிக்கும் விதத்தில்  திரைக்கதை நகர்வது +


ஹீரோயினா தன்யா, ஆள் ஸ்லிம்மா இருக்கு , கலரா இருக்கு, யூத்தா இருக்கு , எல்லாம் இருந்தும் ஒரிஜினாலிட்டி கம்மி . கீர்த்தி சுரேஷை நினைவு படுத்தும் முக பாவனைகள்: . இருந்தாலும் தேறிடும் 


ஹீரோயின் அண்ணனா பசுபதி , பாவம் , யானைப்பசி சோளப்பொரி கதை தான்

 வில்லனா பாபி சிம்ஹா , ஜெ தீபா மாதிரி அம்போன்னு வர்றார் போறார் பாவம்


 சிங்கம் புலி படம் பூரா வந்து ரசிக்கும்படியான நடிப்பை தந்திருக்கார்  

 3 பாடல்கள் தேறுது , இசை , ஒளிப்பதிவு சராசரி 

 பின் பாதி காட்சிகள்  இழுவை ம், யூகிக்க முடியும் திரைக்கதை _ 


Image result for karuppan movie

நச் டயலாக்ஸ்


1 கால்ல ,கைல அடிபட்டிருந்தா தொடைச்சிட்டு போய் இருப்பேன், கண்ல குத்தி இருக்கான் #Karuppan

2 செய்யப்போற சம்பவம் இந்த ஏரியாவுல யாரும் இதுவரை செய்யாததா இருக்கனும் #Karuppan

3  நீ தள்ளி நின்னு வேடிக்கை மட்டும் பாரு #Karuppan

மண்ணும் சரி , மனுசனும் சரி சூடு ஒரு அளவுக்குதான் தாக்குப்பிடிக்க முடியும்

மாடு ஏறி நிக்கும்போது அதை எதித்து நிக்க ஒரு தில்லு வேணும்,அது அவன் கிட்டே நிறையவே இருக்கு

வசதியான பொண்ணுன்னு தெரிஞ்சும் வளைச்சுப்போட நினைக்கலை பாத்தியா?அவன் தான்யா ஆம்பள

ஆம்பளைன்னா 4 பேர்ட்ட சண்டை போடத்தான்யா செய்வான்,எந்த வம்பு தும்புக்குமே போகலைன்னா அவன் என்ன ஆம்பளை?

என்னடி முத ராத்திரியும் அதுவுமா உன்"புருசன் வெளில படுத்திருக்கான்?எல்லாமே வெளில தானா?
ஆமாண்டி,விடிய விடிய வந்து வேடிக்கை பாருங்க

 சரி , ஒரு 10 டிக்கெட் கொடு, ஃபிரண்ட்சை கூட்டிட்டு வாரேன்

பேசாம சாப்பிடுய்யா,அப்போதான் உடம்புல ஒட்டும்

10 என் பொண்டாட்டி என்னை வேலைக்கு போகச்சொல்லிட்டா,எங்கே போறதுனு தெரில
நம்ம கலெக்டர் 2 நாள் லீவாம் ,போறீயா? ம் சரி

11 மாம்ஸ்,ஒரு தொழில் தொடங்கலாம்னு இருக்கேன்,என்ன பண்ணலாம்? ஒயின்ஷாப் ?

12 விவசாயம் பண்றவனை ஒரு காலத்துல இந்த உலகமே சாமியா கொண்டாடப்போகுது


Image result for karuppan movie

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

நாயகி தன்யா ரவிச்சந்திரன் டிரஸ்சிங் சென்சில் நதியா ,உதட்டு சுளிப்பில் கீர்த்தி சுரேஷ் ,முக வசீகரத்தில் கவுசல்யா

ஆலுமா டோலுமா பாட்டை போட்டு விட்டு எல்லாரும் டானஸ் ஆடுவாங்க,விஜய் சேதுபதி பைட் போடறாரு

கணவன் மனைவி அன்னியோன்யம் − முறை மாமன் வில்லத்தனம் ,சராசரி கிராமத்துக்கதை ,இடைவேளை

தூள் புகழ் பசுபதி ,ஜிகிர்தண்டா புகழ் பாபிசிம்ஹா போன்ற ஆளுமைகளை நம்பாமல் ,முழுக்கமுழுக்க விஜய்சேதுபதியையே நம்பியது பின்னடைவு

விவசாயத்தை நம்பி வாழும் நாயகன் கோபத்தில் அன்ன லட்சுமியான சாதத்தட்டை மண்ணில் எறிவது போன்ற காட்சி முரண்

கே பாக்யராஜ் + விஜயகாந்த் காம்போ வின் சொக்கத்தங்கம் பட காட்சிகள் பல இடங்களில் ரிப்பீட் ஆவது திரைக்கதைக்கு பின்னடைவு



Image result for tanya ravichandran images

சபாஷ் டைரக்டர்

1  முன் பாதி முழுக்க கலகலப்பு , கிளுகிளுப்பு என ஜாலியா படத்தை கொண்டு போனது

2  ஹீரோயின் டிரஸ்ஸிங் சென்ஸ்  செம டீசண்ட்

3 அம்மா ,. மனைவி செண்ட்டிமெண்ட் காட்சிகள்



Image result for tanya ravichandran images


லாஜிக் மிஸ்டேக்ஸ்  திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  அண்ணனிடம் போய் மன்னிப்பு கேட்கலாம் என ஹீரோ இறங்கி வரும்போது நாயகி தடுப்பது ஏனோ? சண்டைக்கா போறார் ? சமாதானத்துக்குத்தானே?

2   வில்லன் தன் எல்லா திட்டங்களையும் க்ளைமாக்சில் லூஸ் போல் அப்படி உளறி மாட்டுவது ஏன்?

3 காயம் அடைந்த மாட்டை  சிகிச்சைக்காக நெருங்கும் ஹீரோ காளையை இரு புறமும் இரு மரங்களுக்கு இடையே கட்டி சிகிச்சை பார்க்காமல் ஆட்களை நம்பி கயிறை அவர்கள் கையில் கொடுப்பது ஏனோ? 



சி.பி கமெண்ட்-கருப்பன் - 25% சொக்கத்தங்கம்,25% நிறைஞ்ச மனசு, 25% கொம்பன் .லேடீசுக்கு பிடிக்கும், பி சி செண்ட்டர்களில் ஓடும், விகடன் 40, ரேட்டிங் 2.5 / 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 40 


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)3 /.5

 ஈரோடு அபிராமி  தியேட்டரில் பார்த்தேன்  , ஆனூரிலும் ,  மகா ராஜா விலும்  ரிலீஸ் , ஆனா ஓப்பனிங் இல்லை , சுமாரான கூட்டம் தான் , பிரமோஷன் சரியா தர்லை 
Image result for karuppan movie


Friday, September 22, 2017

( நான் ஆணையிட்டால்) Nene Raju Nene Mantri (telugu) - சினிமா விமர்சனம்

Image result for nene raju nene mantri poster

ஹீரோ தன்னோட சொந்த சம்சாரம் மேல அளவு கடந்த பாசம் வெச்சிருக்காரு ஜெ . தீபா மேல மாதவன் இப்போ வெச்சிருக்கற மாதிரி .ஆனா ஊர் தலைவர் பதவி வெறில மாசமா இருந்த ஹீரோயினை தாக்கி இனிமே மாசமே ஆகாதபடி கண்டம் பண்ணிடறாரு ( ரேப் எல்லாம் இல்லை).அப்போதான் ஹீரோ சம்பந்தமே இல்லாம சபதம் போடறாரு, நானும் அரசியலுக்கு வந்து சி எம் ஆவேன்னு ( இப்பொ நம்ம கமல் சொல்ற மாதிரி _)


அவர் சபதத்தில் ஜெயிச்சாரா? தோத்தாரா? என்பது திரைக்கதை

பாகுபலி மெகா ஹிட்டுக்குப்பின் ராணா வுக்கு கிடைச்ச லட்டு சப்ஜெக்ட் , அரசியல் கதை ஆந்திராவில் அள்ளும். இதிலும் வசனங்கள் பட்டாசா இருக்கு , ஹிட்டுதான் . ராணா வின் ஜிம் பாடி , ரகுவரன் ஹைட் எல்லாம் சொல்லவே தேவை இல்லை , ஆனானப்பட்ட த்ரிஷாவையே மயக்கிய ஆகிருதி ஆச்சே. பஞ்ச்டயலாக்  பேசும்போது இவர் முகம்  பாறை போல் இறுகிடுது  , அதுதான் மேனரிசம் போல . ஃபைட் சீன்கள் கம்மிதான், தப்பிச்சோம்


 நாயகியா காஜில் ஜில் அகர் வாவ் வால் .மகதீரா ( மாவீரன்) க்குப்பின் இதில் தான் காஜலுக்கு செம சீன் , மாமியாவுக்குப்பிடிக்காத மருமக நின்னா குத்தம், நடந்தா குத்தம் ஒரு பழமொழி இருக்கு, அது மாதிரி காஜல் என்ன செஞ்சாலும் , அழுதாலும் கேமரா ஆங்கிள் எப்பவும் ஹிப் ஹோப்  தமிழா என இடைப்பிரதேசங்களிலே  பயணம் செய்யுது 


இடைச்செருகல் நாயகியா கேத்ரின் தெரசா. இவரோட கேரக்டரைசேஷன் செம காமெடி . மாதர்  சங்கங்கள் பார்த்தா பொங்கிடுவாங்க . மீடியாவில் பகிரங்க சவால் விடும் இவரை ஹீரோ  ரேப்பி விடுகிறார். அதை தொடர்ந்து இவர் பூ ஒன்று புயலானது ரேஞ்சுக்கு பொங்குவார்னு பார்த்தா இவரும் பதிலுக்கு ஹீரோவை ரெண்டு மூணு டைம் ரேப் பண்ணிடறாரு

 அதை விட பெரிய காமெடி  ஹீரோ ஹீரோயினிடம் கொடுக்கும் சால்ஜாப் விளக்கம் , அவளை நான் வேணும்னு கெடுக்கலை . உன் நல்லதுக்காகத்தான், அரசியல்ல முன்னுக்கு வரத்தான் ( அரசியல்ல முன்னுக்கு வரனும்னா ஃபிகரை ரேப்பனுமா? என்ன கொடுமை சரவணா இது )  என கேவலமாக சொல்வதும் , அதை ஹீரோயின் நம்பி ஏமாறுவதும் 


படத்தின் ஜீவநாடி  உயிர் நாடி  எல்லாம் வசனங்கள் தான், அதில் தான் படம் தப்பிக்குது. நிகழ்கால தமிழக அரசியல் , பீகார் அரசியல் எல்லாம் பிரிச்சு மேய்ஞ்சிருக்காங்க , ஆனா நம்மாளுங்களுக்கு உரைக்க வாய்ப்பில்லை 


பின்னணி இசை கொடூரம் ,. சும்மா டம் டம்னு எதுனா சவுண்ட் கொடுத்துட்டே இருக்காங்க, ஒளிப்பதிவு , லொக்கேஷன்கள் ஓக்கே 


கேத்ரீன் தெரசா   பிக் பாஸ் ரைசா மாதிரியே மிடி போட்டுக்கிட்டு ரம்பா மாதிரி உலா வருது, முடிஞ்ச வரை திறமை காட்டப்பாத்திருக்கு , ஆனா காஜல் காட்டுன திறமையை விட கம்மியா தான் காட்டி இருக்கு , வந்த வரை லாபம்

 நவ்தீப்  தியாகி கேரக்டர். க்ளைமாக்ஸ்  ஷங்கர் ,  முருகதாஸ் படங்களின் பாதிப்பு , க்ளைமாக்ஸ்  அப்ப்ட்டமான ரமணா தழுவல்

Image result for catherine tresa


சபாஷ் இயக்குநர் 


1   காஜல் அகர்வாலுக்கு கேமரா ஆங்கிள் வைத்த ஒளிப்பதிவாளர் அபார ஞானம். அழுகை காட்சியில் கூட சீன் காட்டறார்


2  லைப்ரரி போய் பழமொழிகள் புக்கை எடுத்து ஏகப்பட்ட டயலாக்ஸ் எழுதி இருக்காங்க அதிலும் ஒரு நேர்மை , ஒவ்வொரு பழ்மொழியையும் சொல்லும்போது இது ஒரு பழமொழினு அவங்களே சொல்லிக்கறாங்க ( அந்தக்கால இளைய தளபதி படங்களில் இந்தப்பாடலை பாடுவது உங்கள் அபிமான விஜய்-னு டைட்டில்ல போடுவாங்களே அப்டி ) 


3 கேத்ரீன் தெரசாவை ஹீரோ ரேப் செய்யும் மறைமுக சீன்


Image result for kajal agarwal


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்



1   எவ்ளோ பெரிய ரவுடியாக இருந்தாலும் மாநில முதல்வர் ஆஃபீசுக்கே வந்து சி எம்மையே மிரட்டுவது  ஓவர் , செக்யூரிட்டி ஆபீசர்கள் வாயைப்பிளந்து பார்ப்பதும், சகிக்கலை 


2 மக்கள் வாட்சப்பில்; செய்தி பரப்பினால் தூக்குதண்டனைக்கைதிக்கு விடுதலை கிடைக்குமா?


3 எல்லா கேமராவும் ஆன் ல இருக்கு , உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது என ஹீரோயின் கேத்ரீன் சவால் விட்டதும் ஹீரோ அவரை ரேப்புவது என்ன லாஜிக், அதை விட கேவலம் ரேப்புக்கு  காஜலிடம் அவர் தரும் தன்னிலை விளக்கங்கள்: 

4 கேத்ரீன் கூட மேட்டர் பண்ணதையே ஜீரணிச்ச காஜல் அகர்வால் ஹீரோ சாப்பிட்ட எச்சில் காபியை கேத்ரீன் குடிப்பதை பொறுத்துக்கொள்ளாமல் துடிப்பது இன்னும் கேவலம், ஏம்மா அதான் எல்லாம் முடிச்ட்டாரே?


5  நவ்தீப் தியாக மரணம் சேப்டர் எடுபடலை.  திரைக்கதையில் கவனம் தேவை 

Image result for kajal agarwal

நச் வசனங்கள் 

1 எனக்கு எதுக்குடா இனி நடு ராத்திரில நாதஸ்வரம்? #NeneRajuNeneManthri ( TELUGU)

2 OPS & EPS பற்றி சொல்லு

டேய், அரசியல் வேணாம்

ஓப்பனிங் சீன், எண்ட் சீன் பற்றி கேட்டேன் #NeneRajuNeneManthri ( TELUGU)


3 அடுத்த வேளை சோத்துக்கு வக்கில்லை , ஆனா ஊருக்கு நான் தான் ராஜான்னானாம் #NeneRajuNeneManthri ( TELUGU)


4 எனக்கு வாங்கறதுல சந்தோஷம் , அவளுக்கு கொடுக்கறதுல சந்தோஷம் #NeneRajuNeneManthri ( TELUGU)

5 ஊர்ப்பெரியவா கிட்டேயும் , மதம் பிடிச்ச யானை கிட்டேயும் வம்பு வெச்சுக்கக்கூடாது #NeneRajuNeneManthri ( TELUGU)

6  தன்னோட புத்துல கை வெச்சா எறும்பே கடிக்கும், நான் எதும் செய்ய மாட்டேனா?  #NeneRajuNeneManthri ( TELUGU)

7  வாழ்றதா இருந்தா உங்க கூட வாழனும், சாகறதா இருந்தா உங்களுக்கு  முன்னால  சாகனும்   #NeneRajuNeneManthri ( TELUGU)

8 பவர் இருந்தா நாய் கூட சிங்கம் மாதிரி போஸ் கொடுக்குமாம்   #NeneRajuNeneManthri ( TELUGU)

9 செத்தா சாதிக்க முடியாதுன்னா சாகடிச்சு சாதிக்கனுமா?  #NeneRajuNeneManthri ( TELUGU)

10 கஷ்டப்பட்டது கோவிந்த ராஜனாம், காசு பார்த்தது ரங்கராஜனாம், அப்டி இருக்கு கதை  #NeneRajuNeneManthri ( TELUGU)

Image result for kajal agarwal

11  அடுத்தவன் போட்டிருக்கும் கோட்டு நாம உடுத்த ஆசைப்பட்ட நம்ம கிட்டே இருக்கும் கோவணமும் உருவப்படும் #NeneRajuNeneManthri ( TELUGU)


12  உதட்டை சுட்டுக்கறதுதான் சிகரெட் குடிப்பதற்கான முதல் தகுதி #NeneRajuNeneManthri ( TELUGU)

13 சர்தார் வல்லபாய் படேல் தான் பிரதமர் ஆகி இருக்கனும், ஆனா ஜவஹர்லால் நேரு ஆகிட்டாரு, அதான்யா பாலிடிக்ஸ் #NeneRajuNeneManthri ( TELUGU)

14 சில விஷயங்கள் நடக்காதுன்னு தெரிஞ்சாலும் அதை காதால் கேட்பதும் ஒரு வகை இனிமையே #NeneRajuNeneManthri ( TELUGU)

15 அவனோட வீக்னெஸ் என்ன?ன்னு விசாரிச்சயா?

 சம்சாரம்னா அவனுக்கு உயிரு

நம்ம அண்ணனுக்கு அடுத்தவன் சம்சாரம்னா உயிரு #NeneRajuNeneManthri ( TELUGU)

16 டெக்னாலஜி எல்லார் கிட்டேயும் இருக்கு, ஆனா அதை யூஸ் பண்ணனுமில்ல 

நம்ம டெக்னாலஜி துரு ஏறிக்கிடக்கு  #NeneRajuNeneManthri ( TELUGU)


17 யுத்தத்தை நிறுத்த ரெண்டே வழி
`1 ராஜா வை போட்டுத்தள்ளனும்
2 படைகளை நிர்மூலம் ஆக்கனும்
 எது ஈசி?னு நீயே டிசைட் பண்ணிக்கோ #NeneRajuNeneManthri

18 காசு இருக்கறவன் திருப்பதி போனாலும் அவனுக்கு மொட்டை தான் அடிச்சு விடுவாங்க , கிரீடம் வெச்சு விட மாட்டாங்க  #NeneRajuNeneManthri(TELUGU)


19  என் வாழ்க்கைல குற்ற வாளியும் நான் தான், நீதிபதியும் நான் தான் #NeneRajuNeneManthri(TELUGU)

20 செய்யற ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கணக்கு இருக்கும், சும்மா எவனும் எதையும் செய்ய மாட்டான்   #NeneRajuNeneManthri(TELUGU)


21  கால்ல முள் குத்தினா முள்ளை தான் எடுக்கனும், வலில அவசரப்பட்டு காலையா எடுக்கறோம்?    #NeneRajuNeneManthri(TELUGU)

22 என் இடது கை என்னை எதிர்த்தா என் வலது கையால அதை வெட்டிடுவேன்   #NeneRajuNeneManthri(TELUGU)

23 இந்த நாட்ல ஊழல் செய்யாத கட்சியே இல்லை , மக்களுக்கும் வேற ஆப்சன் இல்லை, ரெண்டே கட்சி, இதை விட்டா அது, அதை விட்டா இது   #NeneRajuNeneManthri

24 நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும் பின்னாடியும் அந்தந்த கட்சியின் சுயநல ஓட்டரசியல் இருக்கு #NeneRajuNeneManthri(TELUGU)

25 அரசியல் சதுரங்கத்தில் மேலே போக தேவை  உயரம் இல்லை , மூளை தான், குயுக்தியா யோசிப்பவன் ஜெயிப்பான்  #NeneRajuNeneManthri(TELUGU)
Image result for catherine tresa


சி.பி. கமெண்ட் - நான் ஆணையிட்டால் -NeneRajuNeneManthri(TELUGU)- தமிழக அரசியல் சூழலை நக்கலடிக்கும் தெலுங்குப்படம்,  காஜல் அகர்வாவ்!செம சீன் - ரேட்டிங் 2.5 / 5

அக்கப்"போர்" வரும்போது பாத்துக்கலாம்

EPS CM ஆக இருக்க காரணம் சசிகலா தான்- செல்லூர் ராஜூ# சசிகலா ஜெயிலில் இருக்கக்காரணம் ஜெ தான் , னும் அடிச்சு விடுங்க


================


2 பாமக அறிக்கைகளை கமல் படிக்க வேண்டும் - டாகடர் ராமதாஸ் # படிக்கா விட்டால் அவர் படப்பெட்டி தூக்கிச்செல்லப்படும்?


================


3 பெரிய திட்டங்கள் இருந்தா தெளிவா சொல்லுங்க”

கமலுக்கு கஸ்தூரி வேண்டுகோள் # சொல்லுங்க ன்னாலே"தடுமாறுவாரு.இதுல தெளிவா வேற சொல்லனுமா?

=================


4 ஒரு ரூபாய் க்ளினிக் அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகம் - செய்தி # க்ளீன் இந்தியா ல தான் பேர் வாங்க முடியல,க்ளினிக் இந்தியா விலாவது..

=================


5 ஜெ. மரணத்தில் மர்மம் இல்ல, வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது: (திவாகரன் மகன்)ஜெயானந்த் # பிக்பாஸ் பிந்துமாதவி போல் புதுபுது கேரக்டர் வருதே


=================

6 அரசுக்கு எதிராக கமல் பேசுவது வெறும் பேச்சுதான். அரசியல் களத்துக்கு வாங்க. சீமான் # இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பை ரணகளம் ஆக்கிடாக

================


7 பெங்களூருவில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர் # தமிழர்களை பாத்து திருந்துங்கப்பா,ரைசாவுக்கு வோட்டிங்

=============


8 தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது இலக்கு: கமல் # கடந்த 50 வருசமா தமிழகத்துக்கு கிடைக்கவில்லை அந்த லக்கு

=================

9 ஜெ இல்லாத நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பவர்களில், கமலஹாசனும் ஒருவர்-ஆர்.பி உதயகுமார் # Mr Rp! all for TRP

===================

10 தினகரனால் ஆட்சியிலும் , கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது - ஆர்.பி உதயகுமார் குட்டை னு இப்போ நீங்கதானே சொன்னீக?

=================


11 வாடகை தராததால் லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளியை கட்டட உரிமையாளர் பூட்டினார் "போர்" வரும்போது பாத்துக்கலாம்னு இருந்தார் போல

==================

12 கரூரிலிருந்து திருச்சி வரை காவிரி ஆற்றில் மணல் அள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை
இருந்து கரூர் வரை"அள்ளலாமா?னு கேட்பாக

===================

13 அதிமுக இன்னும் சில நாட்களில் 4, 5 அணிகளாக மாறும் : துரைமுருகன் # இலவு காத்த கிளி

==================

14 நில உரிமையாளர் தொல்லை கொடுக்கிறார்: லதா ரஜினிகாந்த் #10 கோடி பில்லைபாக்கி வெச்சா தொல்லை தராம ஆசீர்வாதமா தருவாங்க?

================

15 இனி தமிழகத்தின் அடுத்த

அம்மா மோடி தான் - தமிழிசை
# அவ்ளோ"சொத்துக்களை சேர்த்து வெச்ச மாதிரி தெரிலயே?


====================


16 BMW'ல் இருந்து Range Rover'க்கு மாறியது பிரதமர் மோடியின் அலுவல் வாகனம். இதுவரை மயில்வாகனத்தை மாத்தலை

====================


17 ட்ரம்பின் ட்விட்டால்

அமேசான் நிறுவனத்தின்
5.7பில்லியன் டாலர்
# ஒரே ஒரு ட்வீட்ல ரிவிட் அடிச்ட்டாரு
பங்குகள் வீழ்ச்சி


==================

18 இன்னும் 13 நாட்களில் ரஜினி புதிய கட்சி தொடங்குவார்: தமிழருவி மணியன் # ரஜினிக்காக வாய்ஸ் தர்றாரு,ஸ்கூல் வாடகையை எப்போ யார் தருவாக?

========================


19 சிலிப்பர் செல்" போல் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்; தேவைப்பட்ட நேரத்தில் ஆதரவாக வருவார்கள் : தினகரன் # MLA க்களுக்கு செம சம்பாத்யம்தான்

===================


20 தமிழகத்திற்கு பாதிப்பு இல்லாமல் காவிரியில் அணை கட்டி கொள்ளலாம்

-நீதிமன்றம் # அணை"கட்றதே தமிழ்நாட்டுக்கு வர்ற தண்ணியை தடுக்கத்தான்

=================

Thursday, September 21, 2017

தமிழன் தான் நல்லவங்களை அடையாளம் காண்பதில் டாப்

காயத்ரி சிரிக்கும்போது ஒரு நயவஞ்சகியின் சிரிப்பு எப்படி"இருக்கும்?னு நமக்கு பாடம் நடத்துது

==============

2 கமல் =பிக்பாஸ் ஸ்க்ரிப்ட் கிடையாது,ரியாலிட்டி ஷோ தான்
ரீல்னு நாங்க சொல்லல.ரியலா இருந்தா நல்லதுனு சொல்றோம்

================

3 சாமான்யனை ,எளிமையானவனை பெண்கள் (பெரும்பாலும்) விரும்புவதில்லை.பலரையும் கரெக்ட் பண்ற கவிஞர்கள் கிட்டேதான் அதிகம் ஏமாறுகிறார்கள்

===============

4 எதிரியை ஒழிக்க முடிவெடுத்தால் முதலில் அவனை(ளை) தனிமைப்படுத்து

============

5 அனுதாபம் பெற பொய்யாக அழறவங்களை நம்பாதே!
ஆபத்தானவர்கள்


=============

6 நீ அழும்போது உன்னால் அழுதவர்களின் சாபம் உன் கண் முன்னால் வந்து போகும்


==============

7 வெற்றிக்கோட்டை நூலிழையில் தவற விட்டவரின் பாதையில் கவனத்துடன் முன்னேறினால் நீ வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.உதா− ஓவியா பாணியில் ரைசா


==============


8 நான் சின்னப்பையனா இருந்தப்போ மழை வந்தா பொண்ணுங்க FB ல ஐ மழைனு"ஸ்டேடஸ் போட்டாங்க.இப்போ மழையை"போட்டோ பிடிச்சு போடறாங்க.நாளை ?


================

9 சிவகார்த்திகேயன் படம்"ரிலீஸ் ஆகும்போது மத்த ஹீரோ ரசிகர்கள் பெருசா அலட்டிக்கறதில்லை,ஆனா"விஜய் ரசிகர்கள் கிட்டே மட்டும் ஒரு பதட்டம்.ஏன்?


==========================

10 சூழ்நிலைக்கு ஏத்த மாறி நம்மளை மாத்துனது போதும்..!
இப்போ நமக்கேத்த மாறி சூழ்நிலைய மாத்துவோம்.(வே கா) ரைசா பார்முலா


==================

11 கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீர் தர்ல.அதனால கன்னடப்பைங்கிளி ரைசாவுக்கும் எங்க வாக்கு இல்லைனு இன்னும் ஒருத்தரும் கிளம்பல?


===============


12 தன்னோட படம் பரபரப்பா பேசப்பட ரஜினி படத்துல எப்டி அரசியல் வசனம் வெச்சாரோ அதே"போல் கமலும் ட்விட்டர்ல,பிக்பாஸ்ல பேசறார்


===================

13 ரைசா வின் டாஸ்க் எதிர்ப்பு டிராமா வும் ஒரு டாஸ்க்கே
1 ஓவியா வழி னு காட்டிக்க 2 விறுவிறுப்பில்லா டிராமா வை சுவை ஏற்ற 3 காயத்ரியை காப்பாற்ற


================


14 மம்மி முன் (பொய்யா)பம்மின OPS போல் சினேகன் பிக்பாஸ் முன் ரொம்ப பணிவுள்ளவர் போல் நடிப்பது கடுப்பு


==================


15 ஒத்துமையா எல்லாரும் இருக்கனும்னு சகுனி காயத்ரி சொல்வதும்
தனிமனித ஒழுக்கம் வேணும்னு மருத்துவ முத்த ஏமாற்றாளன் ஆரவ் சொல்வதும் நகை முரண்

====================


16 பேய் டாஸ்க் எடுபடாததற்கு காரணம் ஆடியன்சுக்கு முன் கூட்டியே"சொல்லப்பட்டதே

===================


17 VIP 2 கேரளாவில்"செம ஓப்பனிங்,ரெக்கார்டு"பிரேக் கலெக்சன்னாங்க.நான்"FDFS பார்த்த கேரளா திருவல்லா சிலங்கா தியேட்டர் ல 28 பேர் தான் இருந்தாங்க

==================

18 தமிழன் தான் நல்லவங்களை அடையாளம் காண்பதில் டாப்
ஓவியா(கேரளா) ரைசா(கர்நாடகா)

================


19 சினேகனுக்கு செம நோஸ்கட்,அதுவும் பொண்ணுங்களால.மகிழ்ச்சி.ரைசா ,பிந்து மாதவி ராக்கிங்

================

20 ரஜினி பேர் ரிப்பேர் ஆவதில்
1 தனுஷ் 2 சவுந்தர்யா 3 ஐஸ்வர்யா 4 லதா இவ்வரிசைப்படி பங்கு உண்டு

=================