Tuesday, January 19, 2016

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ..........

அன்பே! உன் ஹேண்டில் பக்கத்தில் துக்ளியூண்டு சைசில் ன்னு போட்டிருக்கே?அப்டின்னா நீ சி சென்ட்டர் பிகரா?ஏ சென்ட்டர்னு நினைச்சு ஏமாந்துட்டன்


================2 தான் என்னமோ செவ்விந்தியர் வம்சாவழி வந்த செவத்த செவலைக்காளை மாதிரி நினைச்சுக்கிட்டு பொண்ணுங்களை போடி கருவாச்சி"னு எள்ளல்.செய்வான் நெட் தமிழன்==============3 பாரீன் டூர் போறப்பக்கூட வீட்ல சொல்லிட்டுப்போகாத நெட் தமிழச்சிங்க சாப்பிடப்போறப்பக்கூட டாட்டா ஸி யூ பை பை ஸ்டேட்டஸ் போட்டுட்டுப்போறாக==============4 மிஸ்! உங்க மோதிர விரல்ல மட்டும் பூ விழுந்துடுச்சு போல, நகச்சுத்தி வந்துடப்போகுது, டாக்டரைப்பாருங்க


 யோவ், அது நெயில் பாலிஸ் டிசைன்


===============

5  டியர், உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன்


சண்டே இல்லையா? தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக்குளிக்கும்போது கண்ல தங்கிடுச்சு


===================

6 செஸ்ல ஜெயிச்சுட்டேன்


 சபாஷ் மிஸ்! யார் கூட விளையாண்டீங்க?


கண்டவன் கூட விளையாண்டா அம்மா திட்டுவாங்க. நானே 2 சைடுலயும் மூவ் பண்ணி விளையாண்டேன்


================


விஷால் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது,படம் நல்லாருந்தா கதகளி ஆடிட்டார் டைரக்டர்னும் நல்லா இல்லைன்னா கத காலி ( (KADHA KALI)ன்னும் சொல்வாங்களோ


==================


8  நாம பேசாம அமைதியா இருந்தா ட்விட்டரும்/FB யும் அமைதியாதான் இருக்கு.

 மிஸ்! அப்போ நீங்க கண்ணாடிக்கு முன்னால உக்காந்திருக்கீங்கன்னு அர்த்தம்


===================

பொண்ணுங்க  எல்லாம் அடிக்கடி டிபி, ஹேண்டில் நேம் மாற்றிக்கொள்வதால் பலதரப்பட்டோர்க்கு டி எம் அனுப்புவோர் கவனமாக புதுப்புது கவிதையை அனுப்புக


==================

10  மிஸ்! ஐ லவ் யூ!

 எங்கப்பாவுக்குத்தெரிஞ்சா  உனக்கு டின் கட்டுவாரு

ஓஹோ, உன்னைக்கட்டித்தர மாட்டாரா?


==================


11  ஆராதனாவும் , சிம்ம வாகினியும் க்ளோஸ் ஃபிரண்ட்ஸாம், அதனால ஒரே கவிதையை 2 காபி ஜெராக்ஸ் எடுத்து டிஎம் அனுப்பி மாட்டிக்காதீங்க மக்களே!


==================


12 நெட் தமிழன் எக்சலன்ட் அட்மாஸ்பியர்.னு சிலாகிச்சா அந்த அந்த அட்”மாஸ்””பியர்” டாஸ்மாக் என கொள்க


=====================


13  பரந்த மனப்பான்மை கொண்டோர் பெரும்பாலும் மெத்தப்படித்தோராக இல்லாமல் சாதாரணராக சாமான்யராக நம்முடன் உலா.வருவோரே!


=============14 அதிகாலையில் துயில் எழுந்த படைப்பாளிகள் எல்லோரும் எழுச்சிக்கலைஞர்களே!சமூக வலையாளர்கள் எல்லோரும் எழுச்சி வலைஞர்களே!
===================15 பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கு வைரஸ் காய்ச்சல் வந்தா அதை  ஆண்ட்டி வைரஸ் காய்ச்சல் -னு சொல்லலாமா?
==================

16 பொண்ணுங்க் கேப்டன் மாதிரி  தூன்னு துப்புனாக்கூட

தூரி தூரி  தும்மக்க தூரி
 தூ மேரி ப்யாரி-ன்னு  பாசிட்டிவ்வா டூயட் பாடி கரெக்ட் பண்ணிடறான்


===============

17 பொண்ணுங்க யாராவது பிளாக் பண்ணா  அதை அவமானமா நினைச்சது அந்தக்காலம், அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப்பெருமையாப்போட்டுக்குவது இந்தக்காலம்


==================


18 டைம்லைன்ல எத்தனை பொண்ணுங்க  ஒளிஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு செக் பண்ண குறுக்கு வழி- அழகி எங்கிருந்தாலும் ஒரு அட்டெண்டென்ஸ் போடவும் என்பதே


===============

19 அன்பே! ரோஜாவை வரைஞ்சிடலாம்,  ரோஜாவின் வாசத்தை , ஆர் கே செல்வமணியை வரைய முடியாது


=================


20 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் னு நெட் தமிழன் இன்னும் ரீமிக்ஸ் பாட்டு பாடலையா?

===============

0 comments: