Sunday, August 28, 2022

DELHI CRIME -2 (ஹிந்தி) -( 2022 ) - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) @ நெட்ஃபிளிக்ஸ்

 


இந்த வெப் சீரிஸின் முதல்  பாகம்  யாராவது  பார்க்காம  இருந்தா முதல்ல  பார்த்துடுங்க  ஏன்னா எல்லாருக்கும்  தெரிஞ்ச  டெல்லி  நிர்பயா  கேஸ் தானே? அதுல  புதுசா  சுவராஸ்யமா  என்ன  இருக்கு?னு ஒரு  வருசம்  அதை  பார்க்காம  விட்டுட்டேன். ஆனா  இந்தியாவின்  சிறந்த  வெப்  சீரிஸ்  விருது  வாங்கிய  பின் தான்  பார்த்தேன். பிரமாதமான  நுணுக்கமான  வழக்கு  விபரங்கள் ஆளுங்களைப்பிடிக்க  போலீஸ்  எவ்ளோ  கஷ்டப்பட்டாங்க? என்ன  உத்தியைக்கடைப்பிடிச்சாங்க? பொதுமக்கள்  எதிர்ப்பு   மீடியாக்கள் அத்து  மீறல்னு  டீட்டெய்லிங்க் அருமையா  இருந்தது


இதுல  லீடு ரோல் பண்ணிய  நாயகியின்  மாறுபட்ட  காமெடி  நடிப்பைக்காண  இதே  நெட் ஃபிளிக்சில்  ரிலீஸ்  ஆன டார்லிங்க்ஸ்  பாருங்க . அதுல  சீன்  பை  சீன்  சிரிச்சுட்டே  இருப்பாங்க . இதுல  ஒரு  சீன்  கூட  சிரிக்க  மாட்டாங்க / இதே  போல  தமிழில்  சத்யராஜ் கடமை  கண்ணியம்  கட்டுப்பாடு , ரஜினி  தளபதி ( ராக்கம்மா  கையைத்தட்டு . காட்டுக்குயிலு பாடல்கள்  விதி விலக்கு ) விஜயகாந்த்  சத்ரியன் , சிவகார்த்திகேயன் டாக்டர்  படங்களில்  பண்ணி  இருக்காங்க . இதுல  அபூர்வமான  ஒற்றுமை  என்னான்னா எல்லாப்படங்களூம்  ஹிட் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


டெல்லில ஒரு  குறிப்பிட்ட  ஏரியாக்களில்  வயசான  தம்பதிகள்  கொடூரமா  கொலை  செய்யப்படறாங்க . கொள்ளை  திருட்டு  நடக்குது .  போலீஸ்க்கு  அதிரிச்சி . ஏன்னா  1990களில்  இது  மாதிரி  கச்சா  பனியன்  கேங் உருவாகி  இருந்தது . அவங்க  குறிப்பிட்ட  பழங்குடி  இனத்தைச்சேர்ந்தவங்க 2002  வரை  அப்படி  சம்பவங்கள்  நடந்தது , ஆட்களைப்பிடிச்சாச்சு. இப்போ  அவங்க  மறுபடி  வந்துட்டாங்களா? இல்லை  அவங்க  வாரிசுகள்  களம்  இறங்கி  இருக்காங்களா?னு  தெரில 


 அதனால  1990 ல்  இந்த  கேசை  டீல்  பண்ணுன  போலீஸ்  ஆஃபீசர்  உதவி  தேவைனு  ஹீரோயின்  நினைக்கறாங்க .   ஹீரோயின்  ஒரு  பொலீஸ்  டிஐஜி  என்பதால்  அவங்க  ஆணைக்கு  கட்டுப்பட்டு  உதவி  செய்ய  அவர்  சம்மதிக்கிறார்


 அவரது  வழிகாட்டுதல்படி  அந்த  குறிப்பிட்ட பழங்குடி  மக்கள்  வசிக்கும்  பகுதி  ரவுண்ட்  அப்  செய்யப்பட்டு  சந்தேகத்துக்கு  இடமான  ஆட்கள்  அவங்க  குடும்பம்  எல்லாத்தையும்  போலீஸ்   வேன்ல  ஏத்திட்டு  வந்துடறாங்க அவங்களில் ரெண்டு  பேரு  மெயின்  சஸ்பெக்ட்டா இருக்காங்க . சம்பவம்  நடந்த  அன்னைக்கு  அவங்க   வேற  ஒரு  வீட்ல ஒரு  பணக்காரர்  வெச்சிருந்த  30  லட்சம்  ரூபா  பிளாக்  மணியைக்கொள்ளை  அடிச்சிருக்காங்க . ஆனா  இந்த  வயதான  தம்பதிகளைக்கொலை  செஞ்சது  இவங்களா?  என்பது  சரியா  தெரில . ஆதாரம்  சிக்கலை 


 அதுக்குள்ள  மீடியாக்கள்  தூண்டுதலால்  மக்களிடையே குறிப்பிட்ட  இன  மக்களை  போலீஸ்   அடக்கப்பாக்குது அப்டினு  ஜாதி  ரீதியா  பிரச்சனையைக்கிளப்பறாங்க . மக்கள்  கவனம்  கவர்ந்த  கேஸ்  என்பதால்  அதை  சீக்கிரம்  க்ளோஸ்  பண்ண  ஹீரோயினுக்கு  மேலிட  பிரஷர்  வருது 


முதல்  3  எபிசோடு  முடியறப்ப  ஒரு  ட்விஸ்ட்  வழக்கில்  உருவாகுது 


இங்கே  அப்டியே  கட்  பண்றோம். கதைப்போக்கை  குற்ரவாளிகள்  பக்கம்    திருப்பறோம் \


  வில்லி  ஒரு  பியூட்டி  பார்ல  ஒர்க்ல்  பண்றா. அங்கே  வர்ற  கஸ்டமர்ஸ்  கிட்டே  நல்லா  பழகறா. இவளுக்கு  ஆல்ரெடி  மேரேஜ்  ஆகி  ஒரு  குழந்தையும் இருக்கு , ஆனா  வசதியான  வாழ்க்கை வாழ  ஆசைப்பட்டு  அவங்களை  விட்டுட்டு தனியா  வந்துடறா


 வில்லிக்கு  ஒரு கள்ளக்காதலன்  , அவனுக்கு  ஒரு  நண்பன், நண்பனின்  நண்பன்  என  மொத்தம்  இப்போ 4 பேரு . இவங்க தான் கொலை  கொள்ளை  செய்யும்  டீம், இவங்க  திட்டப்படி  கொள்ளை  கொலை  சம்பவம்  பண்ணப்போறப்போ  உடம்பு  பூரா  ஆயில்  தடவிக்குவாங்க . இது 1990 களில்  அந்த  கச்சா பனியன்  கேங்  கடைப்பிடிச்ச  ஒரு  உத்தி . யாராவது  அவங்களைப்பிடிக்க  வந்தா ஆயில்  நழுவி  வழுக்கி  விட்டு  எஸ்  ஆகிடலாம்கறது  பிளான் 


இந்த  டீம்ல  இருக்கற  ஆட்கள்  புது  ஆட்களா? ஆல்ரெடி  கைது  செய்யப்ப்ட்ட  இரு  நபர்களா? என்பது  சஸ்பென்ஸ்.  


 இவங்களை  ஹீரோயின்  எப்படிப்பிடிச்சாங்க  என்பது  தான்  திரைக்கதை 


 ஹீரோயின்  நடிப்பு  பிரமாதம் . போலீஸ்  மிடுக்கு  கூடவே  அப்பப்ப  தன்  மகள்  உடன்  ஃபோனில்  உரையாடல்  என  நடிப்பில்  சிக்சர் தான் 


 வில்லியாக  வருபவர்  நடிப்பு  ஓக்கே    ஆனா  அவர்  சராசரி  பெண்  மாதிரி  காட்டி  இருக்காங்க  படையப்ப்பா  நீலாம்பரி  ரம்யா  கிருஷ்ணன்  மாதிரி  மன்னன்  விஜயசாந்தி  மாதிரி  சந்திரமுகி  ஜோதிகா  மாதிரி  டெரரா  காட்டி  இருந்தா  இன்னும்  கலக்கலா   இருந்திருக்கும்   அட்லீஸ்ட்  பச்சைக்கிளி  முத்துச்சரம்  ஜோதிகா  வில்லியா  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன்ல  கலக்குன  மாதிரி  பவர்  ஃபுல்லா  காட்டி  இருக்கலாம்


மற்ற  நடிகர்கள்  அனைவர்  நடிப்பும்  குட் . ஒளிப்பதிவு  எடிட்டிங்  இசை  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  குட் 


 மொத்தம் 5  எபிசோடுதான் அஞ்சும்  தலா 40  நிமிடங்கள்  டோட்டலா  200  நிமிடங்கள் 


ரசித்த  வசனங்கள் 


1  மிலிட்ரிக்காரன்  என்னைக்காவது  யாராவது  எங்காவது  குண்டா  இருந்து  பார்த்திருக்கியா?  (  அதே  மாதிரி  பனை மரம்  ஏறுபவர்  விறகுவெட்டி , கூலி  வேலை  செய்யும்  போர்ட்டர்கள்  ஃபிட்  பாடியா  இருப்பாங்க ) 


2   பசி  எடுக்கும்போது  நீ  கோபப்படறே , கோபப்படும்போது  நீ  ரொம்ப  அழகா  இருக்கே ? 


3   டெட் பாடி  போற ஸ்ட்ரெச்சர்ல  நீங்களும்  ட்ராவல்  பண்ணலாம்  ஆனா  போர்வையை  நீக்கி  அவங்க  முகத்தை  மட்டும்  பார்த்துடாதீங்க  , என்னா  பிற்காலத்துல  உங்க  மனசு பூரா  கடைசியா  பார்த்த  அந்த  கோரமான  முகமே  நினைவில்  இருக்கும் . நல்ல  விஷயங்கள்  தான்  நினைவில்  இருக்கனும் 


4    மேடம், இந்த   உதவியை  நான்  செஞ்சா  எனக்கு  மெடல்  கிடைக்குமா? 

 ட்யூட்டியை  சரியா  செஞ்சாலே  அது  மெடல்  வாங்குனதுக்கு  சமம் தானே? 


5   என்  வாழ்க்கை  பூரா  போலீஸ்  ஸ்டேஷன்லயே  முடிஞ்சிடுச்சு . பெருசா  நான்  எதும்  எதிர்பார்க்கல. எனக்கு  உண்டான  மரியாதை  மட்டும்  கிடைச்சாப்போதும் 


6   நல்லதா  நினைக்கறதால  மட்டுமே  நமக்கு  நல்லது  நடந்துடும்னு  சொல்லிட  முடியாது


7  குற்றவாளிகளின்  வாழ்க்கைல  சில  சமயங்களில்  ஓடுவதை  விட  ஒளிஞ்சுக்கறதுதான்  சேஃப்டி 


சபாஷ்  டைரக்டர் 

1    டெல்லியில்  நடந்த  இன்னொரு  உண்மை  சம்பவம்  உண்மையான  வழக்கை   கம்ர்ஷியலாக  தந்த  விதம் . போன  எபிசோடு  7  எபிசோடு  அது  ஹிட்டு  இந்த  எபிசோடும்  அதே  மாதிரி  இழுத்துடுவோம்னு  பண்ணாம  கச்சிதமா  கதைக்குத்தேவைப்பட்ட  நீளத்தை  கச்சிதமா  தந்த  விதம்


2  இந்த  வழக்கில்  இருந்து  உங்களை  விடுவிக்க  எல்லாரும்  தலா ரூ 15000  தரனும்  என ஒரு  புல்லுருவி  போலீஸ்  லஞ்சம்  கேட்பதை  வெளிக்கொணரும் விதமும்  அந்த  இடத்தில்  கேஸ்  ஒரு  டர்னிங்  பாயிண்ட்  எடுக்கும் விதமும் 


3   ஒரு  ஐபிஎஸ்  ஆஃபீசரே  குற்றவாளியைப்பாதுகாக்கும்  பணீயில்  இருக்கும்போது  செல் ஃபோனில்  மெசேஜ்  பார்ப்பதும்  அப்போ  அவர்கள்  தப்பிப்பதும்  அதைத்தொடர்ந்து  வரும்  நெருக்கடிகளும் 


4  போலீஸ்  ஆஃபிசிஅரைக்காதலிக்கும்போது  ஒரு  முகம்  கல்யாணம்  ஆனபின்  ஒரு  முகம்  என  காட்டும்  மிலிடிரிகாரரின்  குணத்தை  வெளிப்படுத்திய  காட்சி    மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  ரசிக்க  வைத்தது 


5  போலீஸ்  டிபார்ட்மெண்ட்லயே  ஒரு  புல்லிருவி  மீடியாக்களுக்கு  நியூஸ்  சப்ளை  செய்வதை  ஹீரோயின்  கண்டுபிடிப்பதும்  அதை  டீல்  செய்யும்  விதமும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , இயக்குநருக்கு  சில  ஆலோசனைகள் 


1  போலீஸ்  டவுன்  டவுன்  ஒழிக  கோஷங்கள்  ,  மீடியாக்களை  இங்கே  அனுமதிக்காதீங்க  போன்ற  க்ளிஷே  காட்சிகள்  முதல்  செசன்ல  வந்த  மாதிரியே  இப்பவும்  வருவது  கொஞ்சம்  சலிப்பு . தவிர்த்திருக்கலாம் 


2   ஹீரோயினின்  மகள் ஃபோன்  உரையாடல் ,  ஹீரோயின்  கணவர்  உடனான  ஃபோன்  உரையாடல்    இதெல்லாம்  ஸ்பீடு  பிரேக்கர்கள் \\


3  ஒரு  ஐபிஎஸ் ஆஃபீசர்  ஒரு  லேடி  கான்ஸ்டபிள்  போல  டம்மியாக  ஒரு  பேஷண்டுக்கு  பாதுகாப்பாக  இருப்பது  ஏன்?


4  போலீஸ்  ஐபிஎஸ்  ஆஃபீசர்  அவரது  காதல்  கணவர் , மாமியார்  , டூர்  , லீவ் , காரசார  விவாதம்  இவை  எல்லாம்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை 


5  கோடிக்கணக்கில்  கொள்ளை  அடிக்கும்  சாமார்த்தியம்  உள்ள  வில்லி  பியூட்டி  பார்லர்  நடத்த  பீளான்  போடுவது  எதுக்கு ? பெங்க்ல  போட்டு  வெச்சா  வட்டியே  அள்ளுமே? 


6  வில்லி  இன்னொருவர்  ஐடெண்ட்டிட்டில  வாழ்வது  புதுமையான  காட்சிதான்  ஆனா  சாத்தியம்  கம்மி 


7  பெரிய  தொகை  கொடுத்து  ஒரு  இடத்தை  விலைக்கு  வாங்கும் வில்லி  பின்னாளில்  அதை  வெச்சே  போலீஸ்  டிராக்  பண்ணுவாங்க  பிடிப்பாங்க  என்பதை  ஏன்  உணரவில்லை |?


8   வில்லி , காதலன்  இருவருக்குமிடையே  கருத்து  மோதல்  வருவது  ஒருவரை ஒருவர்   தாக்குவது  போன்ற  காட்சிகளில்  இன்னும்  நம்பகத்தன்மை  தேவை 


  சி பிஎ ஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  என்றாலே  ஸ்லோவாகத்தான்  போகும் . முதல்  3  எபிசோடு  ஸ்லோ  லாஸ்ட் 2   செம  ஸ்பீடு . பார்க்க  நினைக்கும்  ஆட்கள்  பார்க்கலாம்.  ரேட்டிங் 3 / 5 


டிஸ்கி 1 -  பொதுவாக  நான்  வெப்  சீரிஸ்  அதிகம்  பார்ப்பதில்லை . காரணம்  டைம் ஃபுல்லா  வேஸ்ட்  ஆகும். ஒரு  சினிமான்னா   ரெண்டு  மணி  நேரத்தில்  முடிச்சிடலாம் . வெப்  சீரிஸ்னா 5  மணி  நேரம் . 7  மணி  நேரம்  ஆகுது . அந்த  டைம்க்கு  3  சினிமா  பார்த்துடலாம். வெப் சைட்டில்  அதிக  ஹிட்ஸ்  கிடைப்பதும்  அதுக்குத்தான். நாட்டுத்தக்காளி  வாங்குனா  கிலோ  50  ரூபா  செலவாகுது  பெங்களூர்த்தக்காளின்னா  கிலோ 10  ரூபாய்க்குக்கிடைக்குதுனு  எல்லாரும்  இப்படிக்கணக்குப்பார்த்து  நாட்டுத்தக்காளி  வரத்தே  இல்லாமப்போன  மாதிரி  ஆகிடுச்சு 


டிஸ்கி 2  =  பதிவில்  வரும்  கமெண்ட்ஸ்க்கு  பதில்  போட  சோம்பேறித்தனப்பட்டு   என்  மகளிடம் பொறுப்பை  ஒப்படைத்ததில்  ஒரு  சிக்கல் . ஆண்கள்  பதிலுக்கு  எல்லாம்  ப்ளூ  லைக்கும்  பொண்ணுங்க  பதிலுக்கு  ஹார்ட்  சிம்பலும்  போட்டுடுச்சு . அதுல  என்ன  சிக்கல்? அது  தனிப்பதிவாப்போடறேன்

Friday, August 26, 2022

LOVING ADULTS (2022) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ நெட்ஃபிளிக்ஸ்


 பொதுவாவே ஒரு  நாவலைக்கட்டிப்பிடிச்சோ அதாங்க  தழுவியோ  அல்லது  ஒரு  சிறுகதையை  பேஸ்  பண்ணியோ  ஒரு  படம்  எடுத்தா  அது  பெரும்பாலும்  சுவராஸ்யமாவே  இருக்கும்.ராஜேஷ் குமாரின்  எத்தனையோ நாவல்கள்  அவருக்கே  தெரியாம படமாக்கப்பட்டு  ஹிட்  ஆகி  இருக்கு . எண்டமூரி  வீரேந்திரநாத் கதைகள்  கூட  பல  அஃபிஷியலாவோ  அன் அஃபிஷியலாவோ    படம்  ஆகி  ஹிட்  அடிச்சிருக்கு .  சுஜாதாவின்  ப்ரியா , காயத்ரி ,பிரிவோம்  சந்திப்போம் , கரையெல்லாம்  செண்பகப்பூ , என் இனிய  இயந்திரா, ஆ, அப்டினு  லிஸ்ட்  போய்க்கிட்டே  இருக்கு . மாலைமதியில் வெளியான  சுபாவின்  நாவலான  பொன்ஜிதா  வை  இதுவரை  யாரும்  படமாக்கலையா? இல்லை  ஆல்ரெடி  அட்லீ  ஒர்க்  பண்ணீட்டாங்களா?னு  தெரியல . பிகேபியின்  தொட்டால்  தொடரும்  நாவல்  நல்ல  சினிமா  மெட்டீரியல் /இந்தப்படம்  டென்மார்க்  ரைட்டர்  எழுதுன  நாவலின்  திரை  வ்டிவம் 


TILL  DEATH DO AS PART    தான்  நாவலின்  டைட்டில்  . எழுதியவர்  அன்னா  எக்பர்க் 

ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோ , ஹீரோயின்  இருவரும்  கருத்தொருமித்த  தம்பதிகள் . இவங்களுக்கு  ஒரு  மகன் , இவனுக்கு  ஒரு  மெடிக்கல் பிராப்ளம்  இருக்கு  அதனால  அவனைக்கவனிக்கறதுல  ரொம்ப  அக்கறை  எடுத்துக்க  வேண்டிய  சூழல். 20  வருடங்களா   சேர்ந்து  வாழ்ந்த  இவங்க  வாழ்க்கைல   ஒரு  புயல்  வீசுது


 ஹீரோ  ஒர்க்  பண்ற  இடத்துல  எக்ஸ்ட்ரா  மேரீட்டல்  லைஃப்  பார்ட்னர்  உருவாகறார். உடைச்சுச்சொல்லனும்னா  கள்ளக்காதல் . அந்த  க. கா ( கள்ளக்காதலியின்  செல்ல சுருக்) ஹீரோவை  டார்ச்சர்  பண்ணுது . ஒரு வருசமா  நாம  பழகிட்டு  இருக்கோம், எப்போக்கேட்டாலும்  இதா  அதானு இழுத்துட்டே  இருக்கே? எப்போ  நம்ம  காதலைப்பற்றி  உன்  மனைவி  கிட்டே  சொல்லப்போறே?னு  கேட்குது 


 ஹீரோ  மென்னு  முழுங்கறான். ஒரு  நாள்  நைட்  ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  பெட்ல  படுத்துட்டு  இருக்கறப்போ  ஹீரோ  செல்  ஃபோனுக்கு  ஒரு  மெசேஜ்  வருது டக்னு  செல்லை  ஆஃப்  பண்ணறான்   சம்சாரத்துக்கு  டவுட்  வருது. 


பொதுவாவே   சம்சாரங்க  ஜீன் ல  துப்பறியும்  சாம்பு  ,ஜேம்ஸ்பாண்ட்   எல்லாரும்  ஒளிஞ்சிருப்பாங்க . அது  துப்பறிஞ்சு  கண்டு  பிடிச்சிடுது 


இப்போ  ஹீரோவுக்கு  ஒரு  அதிர்ச்சித்தகவல்  தெரிய  வருது . 21  வ்ருடங்களுக்கு  முன்  ஹீரோயினோட  முதல்  காதலனுக்கு  2 வதா  ஒரு  கள்ளக்காதலி  இருந்த  மேட்டர்  தெரிஞ்சு  ஹீரோயின்  தன்  காதலனைப்போட்டுத்தள்ளிட்டாளாம் 


 இதைக்கேட்டு  ஹீரோக்கு  அல்லு  இல்ல . அவ  நம்மைப்போட்டுத்தள்ளும்  முன்  நாம  அவளைப்போட்டுத்தள்ளிடனும்னு  நினைக்கறான்

 இதுக்குப்பின்  நட்ந்த  சுவ்ராஸ்யமான  சம்பவங்கள்  தான்  கதை 


 என்னடா  முழுக்கதையையும்  சொல்லிட்டானேனு  யாரும்  வருத்தப்படவேணாம்.  இடைவேளை  வரை  தான்  சொல்லி  இருக்கேன் 

ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  சுமாராதான்  இருக்காங்க . கள்ளக்காதலியா  வர்றவரும்  இன்னும்  சுமாராதான்  இருக்காப்டி 


 இசை  ஒளிப்பதிவு  பக்காவா  இருக்கு 


சபாஷ்  டைரக்டர் 


1  கவுதம் வாசுதேவ்  மேனன்  படங்களில்  வாய்ஸ்  ஓவர் ல  கதை  சொல்ற  , மாதிரி   இதுல  2  பேரு  இந்த  கேஸ்  பற்றி  பேசிட்டு  இருக்கற  மாதிரி  நான் லீனியர்  கட்ல  கதை  சொன்ன  விதம் 


2  விருமாண்டி  ப்டத்துல  அவரவர்  கோணத்துல  அவங்க  பக்க  நியாயம்  சொல்வ்து  போல  ஹீரோயினின்  தோழி  அந்த  கொலை  சம்பவம்  பற்றி  சொல்வதும்  அதே  சம்பவத்தை  ஹீரோயின்  தன்  தரப்பு  க்தையா  சொல்லும்போதும்  மாறுபட்ட  இரு  சம்பவங்கள்  வருவது 


3   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  இடைவேளை  ட்விஸ்ட்  ரெண்டும்  குட் 


4  நம்ம  தமிழ்ப்படங்களில்  எல்லாம் நீதி தான்  வெல்லும்    தர்மம் தான்  ஜெயிக்கும் கற  மாதிரி  இன்னும்  ஜல்லி  அடிச்ட்டே  இருப்பாங்க ( விதி  விலக்கு  மங்காத்தா , திருட்டுப்பயலே )  இதுல வில்லன்  வில்லி  தப்பிப்பது  போல  காட்சி  அமைச்சது 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  கள்ளக்காதல்  கதைகள்  எப்போ  வந்தாலும்  நான்  சுட்டிக்காட்டும்  ஒரே  விஷயம் தான்  இப்பவும்  சொல்றேன். அவ்ளோ  வசதி  உள்ள  ஹீரோ  வீட்டில்  ஒரு  செல் ஃபோன்  ஆஃபீசில்  ஒர்  செல்  ஃபோன்  என வெச்சுக்கிட்டா  பிரச்சனையே  இல்லையே?  அல்லது  சைலண்ட்  மோட்லயாவது  போடனும்  ரெண்டும்  இல்லாம  க.கா  விடம்  இருந்து  மெசேஜ்  வந்ததும்  செல்  ஃபோனை ஸ்விட்ச்  ஆஃப்  பண்ணுனா  சம்சாரத்துக்கு  டவுட்  வராமயா  இருக்கும் ? அட்லீஸ்ட்  வீட்டுக்கு  வரும்போதே  செல் ஃபோனை  ஆஃப்  பண்ணி இருக்கலாம்


2  கள்ளக்காதலி  ஹீரோ  கிட்டே  எப்போ  சொல்லப்போறே?னு  ஒரு  வருசமா  கேட்டுட்டே  இருக்கு . பார்ட்டிக்கு   ஹீரோ  வீடும்  தெரியும்  மனைவியையும்  தெரியும், ஈசியா  தெரியப்படுத்தி  இருக்கலாமே? 


3 மனைவியை  கார்  ஏற்றிக்கொலை  பண்றவன்  செத்தது  மனைவிதானா?னு  செக்  பண்ண  மாட்டானா? 


4  ரெகுலரா  ஜாகிங்  போற  ரூட்டை  விட்டு  புது  ரூட்டில்  ஹீரோயின்  ஜாகிங்  போவது   ஏன்?னு  விள்க்கம்  கொடுக்கவே  இல்லை 


5   ஏரிக்கரை  வரைக்கும்  வரும்   போலீஸ் நாய்  ஏரித்தண்ணீரில்  இறங்காதா? நீச்ச்ல்  தெரியாதா?  டெட்  பாடிக்கும்  நாய்க்கும்  உள்ள  தூரம்  ஒரு  பர்லாங்  தான் 


6   போலீஸ்  ஏதாவது  கேள்வி  கேட்டா  உங்களால பதில்  சொல்ல  முடியாத  கேள்விகளுக்கு  நான்  பதில்  சொல்றேன்னு  ஹீரோயின்  சொல்றா  ஓக்கே  ஆனா  போலீஸ்க்கு  ஏன்  டவுட்  வர்ல? எம்மா  மின்னல் ? உன்  புருசனைக்கேள்வி  கேட்டா  நீ  பதில்  சொல்றியே  அப்போ  உன்னைக்கேள்வி  கேட்டா  புருசன் பதில்  சொல்வானா?னு    ஏன் மடக்கலை ?


7  பொதுவாக  போலீஸ்  சந்தேகப்பட்டா  தனித்தனியா  விசார்ணை  செஞ்சு  முரணான  பதில்கள்  வந்தா  டக்னு  பிடிப்பாங்க். அந்த  டெக்னிக்கை  ஃபாலோ  பண்ணவே  இல்லை 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  ஸ்லோவான  க்ரைம்  ட்ராமாதான்  ஆனாலும்  சுவராஸ்யமாவே  இருந்தது . பார்க்கறவங்க  நெட்  ஃபிளிக்சில்  பார்க்கலாம்  இன்னைக்கு  தான்  ரிலீஸ்  ஆகி  இருக்கு  அடல்ட்  க்ண்ட்டென்ட்  லைட்டா  இருக்கு  (  வழக்கமா  நெட்  ஃபிளிக்ஸ்னா  கதைக்கு  சம்பந்தமே  இல்லாம  டார்க்கா  இருக்கும் )  ரேட்டிங்  2.75 / 5 


டிஸ்கி  -  கூகுள்ல  சர்ச்  பண்ணிப்பார்த்தேன்  . உலக  தொலைக்காட்சி  வரலாற்றில்  முதல்  முறையாக  இந்தப்படத்துக்கு  இந்த  விமர்சனம்  தான்  முதல்ல   வருது . ஆனா  இதை    பெருமையாச்சொன்னா    நாம  வெட்டியா  இருக்கோம்  மத்தவங்க  எல்லாம்  வேலை  வெட்டி  பார்க்கறாங்க  என்பது  தெரிஞ்சிடும் , அதனால  கமுக்கமா இருப்போம் Thursday, August 25, 2022

DARLINGS (2022 ) - சினிமா விமர்சனம் ( பிளாக் ஹ்யூமர் காமெடி மெலோ டிராமா) @ நெட்ஃபிளிக்ஸ்


குடிகாரன்  பேச்சு  விடிஞ்சா  போச்சு ,
 குடிகாரனுக்கு  ஆயுள்  ரேகை  அரைகுறையா  ஆச்சு
குடிகாரனைக்கண்டால்  கொரானாவுக்குக்கொண்டாட்ட,ம்

 போன்ற  பழமொழிகள்  எத்தனை  வந்தாலும்  இந்தப்பெண்கள்  ஏன் தான்  குடிகாரனைக்கல்யாணம்  பண்ணிக்கறாங்களோ  தெரில , கேட்டா  நான்  திருத்தறேன்கறாங்க. ஆல்ரெடி  கல்லீரல்  டேமேஜ்  ஆகி  சாகக்கிடக்கறவனைத்திருத்தி  என்ன  ப்ண்ணப்போறாங்க ? இவங்க  பண்றது  போதாதுனு  பெற்றோர்கள்  கூட  குடிகாரனா  இருந்தாலும்  பரவால்ல  ப்ணக்காரனா  இருக்கனும்னு  பொண்ணுக்கு  மாப்ளை  பார்க்கறாங்க . அவங்களுக்கு  எல்லாம்  சவுக்கடி  கொடுக்கற  மாதிரி  ஒரு  படம்  டொமெஸ்டிக்  வயலன்ஸ்  எனப்படும்  வீட்டில்  பெண்களுக்கு  இழைக்கப்படும்  வன்முறை  பற்றி  காமெடியாக  சொல்ல  வந்த  ஒரு  த்ரில்லர்  படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

ஹீரோ  ஒரு  சரக்கு  சங்கர லிங்கம்  பகலில்  ஆஃபீஸ்ல  ஒழுங்கா  வேலை  பார்ப்பான்  நைட்  ஆனா  தண்ணி  அடிசுட்டு  வந்து    மனைவியை  சைக்கோ  போல  நடத்துவான். சாப்பாட்டில்  உப்பு  பத்தலைன்னாக்கூட  கொடூரமா  நடத்துவான்

 ஹீரோயின்  ஒரு  புள்ளைப்பூச்சி . தன்  புருசன்  தண்ணி  அடிச்சாதான்  கெட்டவன்  இல்லைன்னா  நல்லவன்  என  நம்புற  அப்பாவி 

 ஹீரோயினோட  அம்மா அவங்க  எதிர்  வீட்லயே  குடி  இருக்காங்க அப்பப்ப  ஹீரோயினுக்கு    ஐடியா  குடுப்பாங்க

 இவங்களோட  ஃபேமிலி  ஃபிரண்ட்  ஒருத்தர்  இருக்கார் 

 இந்த  4  பேரை  மட்டும்  மையப்படுத்தி  ஒரு  காமெடி  மெலோ டிராமாவைத்தந்திருக்காங்க  ஹீரோவா குடிகாரனா  சைக்கோவா  விஜயவர்மா.  குட்  ஆக்டிங்.  பல  இடங்களில்  பதை பதைக்க  வைக்கிறார். போலீஸ்  ஸ்டேஷன்  போய்  அவமானப்பட்டும்  திருந்தாத  ஜென்மமாய்  கலக்கல்  நடிப்பு 

 ஹீரோயினா  அலியா பட்  வாட் எ க்யூட்  ஃபேஸ் எக்ஸ்பிரஷன். செம  நடிப்பு  சின்ன்ச்சின்ன  முக  பாவனைகளில்  ஸ்கோர்  பண்றார். மொத்தப்படத்தையும்  தாங்கி  நிற்பது  இவரது  நடிப்புதான் 

  ஹீரோயினின்  அம்மாவா   ஷெஃபாலிசா. இவரை  நினைவிருக்கா? அமேசான்  பிரைம்ல  டெல்லி  க்ரைம்  வெப்  சீரிஸ்ல  போலீஸ்  ஆஃபீசரா  பிரமாதமா  நடிச்சவர் , இதுல  காமெடி  ரோல் . கலக்கல்  நடிப்பு 


ஃபேமிலி  ஃபிரண்டா   ரோஷன்  மேத்யூ . இவர்  கப்பீலா  மலையாளப்படத்தில்  ஹீரோவா  நடிச்சவர் . குறை  சொல்ல  முடியாத  நடிப்பு 

  இசை  ஒளிப்பதிவு  எடிட்டிங்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  குட் 

 சபாஷ்  டைரக்டர்

1    அம்மா  மகள்  இருவரும்  எதிர்  எதிர்  வீட்டு  வாசலில்  நின்று  கண்களாலாலேயே  பேசிக்கொள்ளும்  அழகு  ஒரு  கவிதை 

2  அம்மா  வும்  மகளும்    புருசனைபோட்டுத்தள்ளிடலாமா? என  டிஸ்க்ஸ்  பண்ணும்போது  கரெக்டா  போலீஸ்  ஸ்டேஷன்ல  இருந்து  வேற  ஒரு  விஷயமா  ஃபோன்  வர  அதெப்பிடி  அதுக்குள்ளே  மேட்டர்  லீக்  ஆச்சு ?>  என  இருவரும்  பத்றுவது  செமக்காமெடி 

3   போலீஸ்  ஸ்டேஷனில்  ந்டக்கும்  அந்தக்காமெடிகள்  மூன்றும்     காதலா  காதலா   பட  ஆள் மாறாட்டக்காமெடி  போல  செம  ரகளை 


4 புகார்  கொடுத்தது  மாமியாரும்  இல்லை  மனைவியும் இல்லை  அப்போ  யாரா  இருக்கும்  என  ஹீரோ  சந்தேகப்படுவதும்  உண்மை  தெரிந்த பின்  வீட்டுக்குக்கோபமாக  வருவதும்  திக் திக்  திகில்  நிமிடங்கள்  ( ராஜேஷ்  குமார்  நாவல்  ப்ரமோ  மாதிரி  இருக்கோ ? ) 

5  ஹீரொயினுக்கும்  ஃபேமிலி  ஃபிரண்டுக்கும்  தொடர்பு  இருக்குமா? என  போலீஸ்  விசாரிக்கும்போது  ஹீரோயின்  அவன்  எனக்கு  பிரதர்  மாதிரி  என  சொல்லும்போது  அவர்  ஆமா  நான் அவங்கம்மா  மீதுதான்  ஆசைப்பட்டேன்  என  குண்டைத்தூக்கிப்போடும்போது  மாமியார்  காட்டும்  ரீ  ஆக்சன்  அதகளம் 

6  ஹீரோவின்  ஆஃபிஸ்  மேனேஜர்  வீட்டுக்கு  வரும்போது  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  ரசிக்க  வைத்தாலும்  அந்த  சீனை இன்னும்  நல்லா  டெவலப் பண்ணி  இருக்கலாம்

7  ஹீரோயினின்  அப்பாவுக்கு  என்ன  ஆச்சு  ? என்ற  மைக்ரோ  செகண்ட்   ஃபிளாஸ்பேக் பதை  பதைக்க  வைக்கிறது

8     சீரியசான  திரைக்கதையில்  ஆங்காங்கே  காமெடி  கலக்கல்கள்  வந்து  போவது  செம  ஐடியா 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள்


 1  இந்தக்கதை  1990  க்ளில்  நடப்பது  போலக்காட்டி  இருந்தால்  நம்பகத்தன்மை  கூடுதலா  இருக்கும். ஏன்னா  இந்தக்காலத்துல் புருச்னைத்தானே  பொண்டாட்டிங்க  கொடுமைப்படுத்தறாங்க , ஆன்னா  ஊன்னா  போலீஸ்  ஸ்டேஷன்  போய்டறாங்க  பொண்டாட்டிங்க

2  போலீஸ்  ஸ்டேஷனில்  வார்னிங்  குடுத்து  அனுப்பப்பட்ட  ஹீரோ  காரில்  வரும்போது  நடக்கும்  வாக்குவாதத்தில்  மாமியாரைத்தாக்குவது  எல்லாம்  ஓவர் . அப்பவே  காரைத்திருப்பி  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  விட்டால்  என்ன  ஆகி  இருக்கும் ? அந்த  பயமே  இல்லையே?

3   வீட்டில்   கணவனைக்கட்டிப்போட்டு  அடைத்து  விட்டு  போலீஸ்  ஸ்டேஷன்  போய்  மிஸ்சிங்  கேஸ்  கொடுப்பது  மடத்தனம்.  போலீஸ்  வீட்டுக்கு  வந்து  பார்த்தா  மாட்டிக்குவோமே  என  நினைக்க  மாட்டாங்களா? 


4  ஃபேமிலி  ஃபிரண்டுக்கு  ஹீரோயினின்  அம்மா  ஹீரோயின்  பக்கத்துல  இருக்கும்போதே  கிஸ்  அடிப்பது  நம்பும்படி  இல்லை . அந்த  சீன்  காமெடிக்காக  வெச்சாங்களா?  கிளு  கிளுப்புக்காக  வெச்சாங்களா  தெரில  எடுபடலை 


5  அவ்ளோ  பெரிய  அப்பார்ட்மெண்ட்ல  நைட்  டைம்ல  கணவனின்  உடலை  சாக்குக்குள்  சுருட்டி  டாக்சியில்  ஏற்றி  ரயில்வே  ஸ்டேஷ்ன்  போவது  எல்லாம்  சாத்தியமே  இல்லை 


6   ரயில்வே  டிராக்கில்  கணவனைக்கட்டி  வைத்து  அது  தற்கொலை  அல்லது  விபத்து  மாதிரி  செட்  பண்றது  ஓக்கே ஆனா  கையைக்கட்டி  வைத்த  தடம்  காட்டிக்கொடுக்காதா? 

7  ரயில்  டிராக்கில்  ரிலீஸ்  ஆன  ஹீரோ  டக்னு  அந்த  ஏரியாவை  விட்டு  நகரப்பார்ப்பாரா? ரயில்  வரும்  டிராக்கில்  நின்று  பஞ்ச்  டயலாக்  பேசிட்டு  இருப்பாரா? சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  இந்தப்படம்  பெண்களுக்கு  ரொம்ப ரொம்பப்பிடிக்கும் ., அந்த  விதத்தில்தான்  எடுக்கப்பட்டிருக்கு . காரணம்  இயக்குநர்  ஒரு  பெண்  . தயாரிப்பாளரும்  ஒரு  பெண் (  நாயகி) . ஒரு  பொண்ணோட  மனசு  இன்னொரு  சாரி இரு  பெண்களுக்குத்தானே  தெரியும் ? 
ரேட்டிங்  2. 5 /  5. இந்தப்படம்  ஹிட்  ஆனதால்  தமிழில்  ரீமேக்  ஆகப்போகுதாம் 

 பின் குறிப்பு 1 - இந்தப்படத்தின்  மூலம்  ஆண்கள்  கற்றுக்கொள்ள  வேண்டியது  மாமியார்  வீடு  எதிரில்  இருந்தா  என்னைக்கும்  ஆபத்து  நாம    நிஜ  மாமியார்  வீட்டுக்குப்போய்  கம்பி  எண்ண  வேண்டி  இருக்கும்

 பின்  குறிப்பு 2  - நடுச்சாமத்துல  பதிவு  போட்டாதான்  அதிக  லைக்ஸ்  கமெண்ட்ஸ்  கிடைக்கும்னு  ஒரு  புள்ளி  விபரம்  சொல்லுது  . அப்படிப்பண்ணுனா  எனக்கு  பூவா  கிடைக்காது  , திண்ணைல தான்  படுக்கனும், அதனால  ஆஃபீஸ்  டைம்ல  தான்  பதிவு  வ்ரும்  அதுவும்  லஞ்ச்  டைம்லதான். அதனால  மிட்  நைட்  மசாலாப்பிரியர்கள்  இந்தப்பதிவை  நடு  ராத்திரில  ரிலீஸ்  ஆனதா  நினைச்சுக்கவும் 

Wednesday, August 24, 2022

HEAVEN (2022) (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் + ரிவஞ்ச் த்ரில்லர்)@ டிஸ்னி ஹாட் ஸ்டார் +


 கேரளா - கோட்டயம் - சங்கணாச்சேரி  தன்யா வில்  இந்தப்படம்  போன  மாசம் ரிலீஸ்  ஆன போது  நான்  போய் இருந்தேன். ஆனா 8  பேர்தான் ஆடியன்ஸ். மினிமம் 15  பேர்  வந்தாதான்  கரண்ட்  சார்ஜ்ஜூக்காவது  கட்டுபடி  ஆகும்னு  சொல்லிட்டதால    ர்ட்டர்ன்  வ்ந்துட்டேன். தியேட்டர்  ரிலீஸ்ல  கமர்ஷியலா  சரியா ஹிட் ஆகாத  படம்  ஓடி டி  ரிலீஸ்ல  பலரும்  பாராட்டும்  படமாகவும்  பரிந்துரைக்கும்  படமாகவும்  ஆனது  கண்டு  மகிழ்ச்சி . ரெண்டு  நிலைப்பாட்டுக்கும்  என்ன  காரணம்?னு  கடைசில  சொல்றேன்  


பொதுவா  ஹீரோ  போலீஸ்  ஆஃபீசர்னாலே  நம்ம  கண்  முன்  வந்து  போவது  சிங்கம்  சூர்யா , சத்ரியன்  விஜயகாந்த் , வால்டர்  வெற்றிவேல்  சத்யராஜ். படங்கள்  ஹிட்  ஆனாலும்  சில  இடங்களில்  ஹீரோவின்  ஓவர்  ஆக்டிங்  அல்லது  ஹீரோ  பில்டப்  தனியா  தெரியும்., ஆனா  ஓப்பனிங்  சீன்ல  இருந்து  கடைசி  வரை  இந்தப்பட  ஹீரோவின்  மிடுக்கான  ஆனால்  அண்டர்ப்ளே  ஆக்டிங்  மிகவும்  கவர்ந்தது 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


சம்பவம் 1 


ஸ்கூல்  என் சி சி  ஸ்டூடண்ட்ஸ்  டூர்  போறாங்க . போன  இடத்துல  ஒரு ஜோடி  அங்கே  கொலை  செய்யப்பட்ட  டெட்பாடியைப்பார்த்து போலீஸ்க்கு  தகவல்  சொல்றாங்க. போலீஸ்  சம்பவ  இடத்துக்கு  வருது . அந்தக்கொலை  நடந்து  4 நாட்கள்   இருக்கலாம். என  தடயவியல்  நிபுணர்கள்  சொல்றாங்க . கிடைச்ச  தடயங்களை  வெச்சு  அந்தக்கொலையை  செஞ்சது  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்தான்னு   முடிவுக்கு    வர்றாங்க 


சம்பவம் 2 -  ஒரு  கொள்ளை  சம்பவம்  நடக்குது/ ஸ்பாட்க்கு  போலீஸ்  அண்ட்  டீம்  வருது  அங்கே  ஹவுஸ்  ஓனர்  சம்சாரம்   , மகள்  அவளோட  க்ளாஸ்  மேட்  நாலு  பேரும்  கொலை  செய்யப்பட்டுக்கிடக்கறாங்க. இன்வெஸ்டிகேஷன்  ஸ்டார்ட்  ஆகுது 


சம்பவம் 3 - வைரங்களை  புதிய  முறையில் கடத்தும்  கும்பல்  ஒண்ணு  இருக்கு . அதன்  தலைவன்  ஐடியாப்படி  கர்ப்பிணியா  இருக்கற லேடி  விமானம்  கிளம்பற  டைம்ல  ஒரு  மாத்திரை  சாப்பிடும்  அப்போ  க்ரிட்டிக்கலான  சூழ்நிலை  நிலவும்  ஃபிளைட்டை  தரை  இறக்குவாங்க . டாக்டர்  கிட்டே  கூட்டிட்டு  போவாங்க . அவரு  அந்த  லேடி  உடம்பில்  இருக்கும்  வைரத்தை ஆபரேஷன்  பண்ணி  எடுத்துடுவார்  ( கமல்  நடிச்ச  டிக் டிக்  டிக்  படம்  பார்க்க) 


மேலே  சொன்ன  3  சம்பவங்களுக்கும்  என்ன  தொடர்பு  என்பதே  திரைக்கதை 

ஹீரோவா  சுராஜ்  . இவரது  பாடி லேங்க்வேஜ்  டிரஸ்சிங்  சென்ஸ்  எல்லாம்  பிரமாதம்.. போலீஸ்  யூனிஃபார்ம்ல  வரும்போதும்  சரி மஃப்டில  வரும்போதும்  சரி  பக்காவான  காஸ்ட்யூம்ஸ் 


நிமிஷா  சஞ்சயன்  கோர்ட்  சீன்ல  வர்றார்  ஓக்கே  தனிப்பட்ட  முறையில்  இவரை  எனக்குப்பிடிக்காது  சிரிப்பே  வராத  முகம்  எப்பவும்  சிடுசிடுனு  இருக்கற  மாதிரி  தோணும் 


ஐ  ஜி  கேரக்டரில்  வரும்  லேடி  கம்பீரம் . 


 படத்தில்  மற்ற  கேரக்டர்கள்  எல்லாம்  சரியா  டிசைன்  செய்யப்படலை 


வினோத் இளம்பிள்ளையின்  ஒளிப்பதிவு   கேரளா-  இடுக்கி  மாவட்டத்தை  கண்  முன்  நிறுத்துது . எடிட்டிங்  இசை  எல்லாம்  தரம் . பாடல்  காட்சிகள்  இல்லாதது  பலம் 


 சபாஷ்  டைரக்டர்


 1  ஒரு  சிறுகதையின்  தொடக்கம்  அவனை  கதைக்குள்  உள்ளிழுத்து  வந்துடனும்  என  மேஜிக்  ரைட்டர்  சுஜாதா   சொல்லி  இருக்கார்  அதன்படி   இந்தப்படத்தின்  முதல்  15  நிமிடங்கள்  செம  சுவராஸ்யம்  . அப்படியே  நம்மைக்கதைக்குள்  இழுத்துச்செல்லுது 


2  ஒரு  டெட்  பாடி  இருந்தா  அதுல  புழு  ஃபார்ம்  ஆகும்  அதன்  ஆயுளை  வெச்சு  எத்தனை  நாள்  ஆச்சு  கொலை  நடந்து  என  கண்டு  பிடிக்கலாம்  என்ற  டீட்டெய்லிங் 


3  கொலை  நட்ந்த  பாடி  இருக்கும்  இடத்தைத்தோண்டும்  போது  ஒரு  ஒரு  பைப்  லைன்  வரும்  அதை  உடைச்சா  மீத்தேன்  கேஸ்  வரும் . தீ  பற்றும், அதை  வெச்சு  அங்கே  டெட்  பாடி  இருக்கும்னு  தெரிஞ்சுக்கலாம் என்ற  விப்ரம்  புதுசா  இருந்தது
லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  ரிவஞ்ச்  த்ரில்லர்களில்  ஹீரோ  அல்லது  வில்லன்  ஒரு  கொலையை  செஞ்சா  அதுக்கு  பிராப்பரான  ரீசன்  வேணும். . உதாரண்மா மோகன்  நடிச்ச  டிசம்பர்  பூக்கள்  படத்துல  கார்  ஆக்சிடெண்ட்ல    சிக்கி சீரியசா  இருக்கும்  தன்  மனைவிக்கு  பிளட்  டொனேசன்  தர  மறுத்த  4  பேரை  போட்டுத்தள்ளுவது  ஏத்துக்கவே  முடியாத  சீன்.. தண்ணியைப்போட்டுட்டு  மப்புல  விபத்து  ஏற்படுத்துனது  ஹீரோ  நியாயமா  அவரு  அவரையே  கொலை  பண்ணனும்  அதை  விட்டுட்டு  பிளட்  டொனேட்  பண்ண  மறுத்தவங்களை  கொலை  பண்ணிட்டு  இருப்பாரு 


2   வில்லன்  கொலை  பண்ண  ஒரு  வீட்டுக்குப்போறாரு. அதுல குறிப்பிட்ட  அந்த  ஆளைக்கொலை  செய்வதும்  கொலையைப்பார்த்த  சாட்சியான  மனைவியைக்கொலை  செய்வதும்  ஓக்கே  ஆனா  வீட்டில்  வேற  ஒரு  இடத்துல  விளையாடிட்டு  இருக்கற  மக  இன்னொரு  இடத்துல  இருக்கற  மகளோட  க்ளாஸ்மேட்  அப்டினு  கொலையைப்பார்க்காத  ஆட்களை  அதுவும்  சிறுவர்களைக்கொலை  செய்வது  எதுக்கு ? மடத்தனமா  இருக்கு 


3  ஹீரோ  போலிஸ்  என்பதால்  வழக்கமா  தமிழ்ப்படங்களில்  ஒரு ஓப்பனிங்  ஃபைட்  சீன்  வைப்பாங்க   மலையாளப்படத்துல்  ஒரு  கேஸ்  விசாரணை  வைப்பாங்க , ஆனா  இந்தப்படத்துல  ஹீரோ  3  வெவ்வேற  கேசை  டீல்  பண்ணிட்டு  இருக்காரு  . மெயின்  க்தைக்கும்  அந்த  கேஸ்களுக்கும்  சம்பந்தமே  இல்லை .  அந்த  சம்பவங்களில்  ஒன்று ஆல்ரெடி  ஹிட்  ஆன  ஆக்சன்  ஹீரோ  பைஜூ  ல  இருக்குது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் =  மேக்கிங்  ஸ்டைல்   ஆக்டிங்  பர்ஃபார்மென்ஸ்  இவற்ரை  மட்டும்  கவனிச்சா  இது  தரமான  படம்  லாஜிக்  மிஸ்டேக்சை  கவனிச்சா  இது  சுமாரான  படம்  மீதி  உங்கள்  கைல   டிஸ்னி  ஹாட்  ஸ்டார்ல  படம்  கிடைக்குது  ரேட்டிங்  2.5 / 5 


டிஸ்கி - இப்டியே போய்க்கிட்டு இருந்தா இனி வரும் காலங்களில் எனக்கு இவன் டீ வாங்கித்தர்லை , ஃபேஸ்புக்ல என் போஸ்ட்ட்க்கு லைக் போடலை அதனால கொலை பண்ணிட்டேன்னு வில்லன் சொல்லும் ரிவஞ்ச் த்ரில்லர் படங்கள் வர்லாம்

Tuesday, August 23, 2022

ஏணிப்படிகள் (1979) - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்)

 


1  ஏனுங்க  மாப்பிள்ளை  இந்த  நினைப்பு

‘இங்கு என்னாத்தக்கண்டீங்க  இந்தச்சிரிப்பு


2  பூந்தேனில்  கலந்து பொன் வண்டு  எழுந்து  சங்கீதம்  படித்ததென்ன?


மேலே  சொன்ன  ரெண்டு  சூப்பர்  ஹிட்  பாடல்கள்  அந்தக்காலத்துல  ஒலிக்காத  வீடுகளே  இல்லை 


தேசிய  விருது  பெற்ற  பசி உட்பட  ஷோபா  நடிச்ச  பெரும்பாலான  படங்களில்  க்ளைமாக்ஸ்ல  அவருக்கு  சோகமான  முடிவு  அல்லது  படத்துக்கு  சோகமான  முடிவு  இருக்கும்  இதில்  மட்டும் தான்  ஹேப்பி  எண்டிங். எஸ்  பாஸ்  என  ஒரு  சீனில்  வந்துட்டுப்போன  சத்யராஜ்  இதில்  பேர்  சொல்லும் வில்லனாக  வருவார் 


1978ல் தெலுங்கில் ரிலீஸ்  ஆன  சீதா லட்சுமி  என்ற  படத்தின்  அஃபிசியல்  ரீ மேக்  இது . இந்தப்படத்தின்  பாதிப்பில்  கே  பாக்யராஜ்  தாவணிக்கனவுகள் , விக்ரமன்  உன்னிடத்தில்  என்னைக்கொடுத்தேன்  படங்கள்  தந்தது  வரலாறு . முழுக்கதையும்  அப்டியே  எடுக்கலை.  சில  காட்சிகள்  மட்டும் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோ  ஹீரோயின்  ரெண்டு பேருமே  கிராமத்தில்  இருக்கும்  டெண்ட்டுக்கொட்டாய்ல  வேலை  செய்யறவங்க . இருவரும்  காதலர்கள் . ஒரே  தியேட்டரில்  ஓன்றாக  இரவில்  தங்க  நேர்ந்தாலும்  எல்லை  மீறாத  கண்ணியக்காதலர்கள் 


அந்த  ஊருக்கு ஒரு  சினிமா  டைரக்டர்  வர்றார்.. வந்தவர்  ஹீரோயின்  அழகைப்பார்த்து  உனக்கு  ஒரு  சான்ஸ்  தர்றேன்  சென்னை  போய்  லெட்டர்  போடறேன்னு  சொல்லிட்டுப்போய்ட்டார்


 இதுக்குப்பின்  ஊரெல்லாம்  ஹீரோயின்  செம  ஹிட்  ஆகிட்டார் . சினிமாவுக்குப்போகப்போகும்  சித்தாளு  என  ஏக  மவுசு 


ஆனா  போன  ஆள்  போனதுதான்  ஒரு  தகவலும்  இல்லை /


இப்போ  ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  சென்னை  வர்றாங்க . அட்ரசை  வெச்சு  ஆளைப்பிடிச்சா  அந்தாளு  ஒரு  டுபாக்கூர் பார்ட்டி.  என்ன  பண்றதுனு

 தெரியாம  முழிக்கறாங்க., திரும்பி  ஊருக்குப்போனா  அவனவன்  நக்கல்  ப்ண்ணுவான், அதனால  அங்கேயே எதுனா  வேலை  பார்ப்போம்னு  முடிவு  பண்றாங்க 


 அப்போ  நிஜமாலுமே  ஒரு  நல்ல  டைரக்டர்  கண்ல  பட்டு  சினிமால்;  நடிக்க  ஹீரோயின்  ஒப்பந்தம்  ஆகறார்


இதுக்குப்பின்  திரைக்கதையில்  ஏற்பட்ட  திருப்பங்களை  யூ  ட்யுப்ல  காண்க . பெரிய  ஸ்டார்  ஆன  ஹீரோயின்   தன்  காதலனைக்கல்யாணம்  பண்ணிக்குதா? இல்லையா?  என்பதுதான்   க்ளைமாக்ஸ்


ஹீரோவா  சிவக்குமார். இந்தப்படம்  அவரது  திரை வாழ்வில்  முக்கியமான  படம் . கிராமத்தானாக  நல்லா  பண்ணி  இருக்கார்


ஹீரோயினா  ஷோபா / இவரது  நடிப்பைப்பற்றி  பல  முறை  சிலாகித்தாகி  விட்டது 


வில்லனாக  சத்யராஜ்  ஓக்கே ரகம்,  இவரு  செம  ஹிட் ஆனது காக்கிச்சட்டை  தக்டு  தகடு  டயலாக்கிற்குப்பிறகு தான் 


மனோரமா  காமெடிக்கு . ஷோபாவைப்பார்த்து  பொறாமைபப்டும்  கேரக்டர்


 கே வி  மகாதேவன்  இசையில்  4  பாடல்களூமே  குட்  அதுல  2  பாட்டு  செம  ஹிட்டு . டைரக்டர்  பேரு  பி  மாதவன்   லாஜிக்  மிஸ்டேக்ஸ்  + திரைக்கதையில்  சில  ஆலோசனைகள் 


1  சென்னைல  இருந்து  கிராமத்துக்கு  ரிட்டர்ன்  வரும்  ஹீரோ   ஹீரோயினின்  குடும்பத்துக்கு  டிரஸ்  கிஃப்ட்  எல்லாம்  கொண்டு  வந்து  கொடுத்துட்டு  பணமும்  கொடுத்துட்டு  கிளம்புங்க  உங்களைக்கையோடு  கூட்டிட்டு  வரச்சொலிடுச்சுனு  சொல்றார். அப்றம்  எதுக்கு  அவ்ளோ  கிஃப்ட்டு?  அங்கே  இருந்து  இங்கே  கொண்டு  வந்து  ,மறுபடி  அங்கே  கொண்டு  போகனும் ? அதுக்கு  பருத்தி  மூட்டை  குடோன்லயே  இருந்திருக்கலாமே?


2 சினிமா  ஸ்டார்  ஆன  பின்  ஹீரோயின்  தன்  கிராமத்துக்கு  வர்றா  ஒரு  பள்ளி  விழாவில்  கலந்துக்கறா  மைக்  பிடிச்சு  பேசறா  அப்போ  ஹீரோ  பத்தி  ஒரு  வார்த்தை  பேசி  இருக்கலாமே? மனத்தாங்கலில்  இருக்கும்  ஹீரோவுக்கு  கவுரவம்  குடுத்த  மாதிரி  இருக்கும்  ., இந்த  மிஸ்  ஆன  சீன்  தான்  உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்  க்ளைமாக்ஸ். ஆடியன்ஸ்  அப்ளாஸ்  அள்ளிக்கும் \

3 கிராமத்துக்கு  வந்த  ஹீரோ  சினிமா ல  நடிகை  ஆன  ஹீரோயின்  கார்  பங்களா  எல்லாம்  வாங்கிட்டா  வச்தி  ஆகிட்டா  என  சொல்றார்  ஆனா  சென்னைல  காமிரா  ஜூம்  ஆகும்போது  முதல்  படமே  இன்னும்  ரிலீஸ்  ஆகல  என  சொல்றாங்க . முதல்  பட  அறிமுகத்துக்கு  எந்த  புரொடியூசர்  அவ்ளோ  அள்ளிக்குடுக்கறார்?

4  ஹீரோயின்  நடிச்ச  படம்  கிராமத்தில்  ரிலீஸ்  ஆகி அங்கே  ஹிட்  ஆகி  மக்கள்  கொண்டாடற  மாதிரி  ஒரு  சீன்  வெச்சிருக்கலாம்


5  கணவனால்  கை  விடப்பட்ட  ஒரு  பெண்ணுக்கு  வாழ்வு  கொடுக்கபோரேன்னு  ஒரு  டைம்  ஹீரோ  ஹீரோயின் கிட்டே  ஒரு  வேகத்துல  சொல்லி  இருப்பார்  அதே  கதையை  வெச்சு    வில்லன்  ஹீரோயின்  கிட்டே  ஹீரோ  அந்தப்பெண்ணை   வெச்சிருக்கார்  என  சொல்வதை நம்புவது  எப்படி ? செகண்ட்  ஒப்பீனியன்  யார்  கிட்டேயாவது  கேட்க  மாட்டாரா? 


6  ஹீரோயின்  தற்கொலை  என  பொய்யாக  நியூஸ்  தர  சம்மதிக்கும்  ஹீரோயின்  அதைப்பார்த்தா  ஹீரோ விபரீத  முடிவு  எடுப்பார்  என  தெரியாதா? அதை  முன்  கூட்டியே  இது  சினி ஃபீல்டுக்காக  டிராமா   என  தகவல்  சொல்ல  மாட்டாரா? 


7  சத்யராஜ்  அண்ட்  கோ  தான்  ஹீரோயின்  கால்ஷீட்  விவகாரங்களை  கவனிச்சுக்கறார்னு  டயலாக்  வருது . இதுவரை  எத்தனை  படம்  நடிச்சு  உங்களுக்கு  கொட்டி  இருக்கேன்னு  டயலாக்  வருது  , ஆனா  முதல்  படம்  மட்டும் தான்  நான்  கிளம்பறேன்னு  ஒரு  இடத்தில்  டயலாக்  வருது . திரைக்கதைல  ஹீரோயின்  பல  படங்கள்  ப்ண்ணினவர்  எனவும்  ஒரே  ஒரு படம் தான்  ப்ண்ணினார்  என்வும்  மாறி  மாறி  டயலாக்  வருது  . எடிட்டர்  எப்படி  கவனிக்காமல்  விட்டார் ?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  அந்தக்காலத்தில்  ஹிட்  ஆன   படம் . இந்தக்காலத்தில்  சுமாராதான்  தெரியும்  பாட்டு  ஹிட்  அதுக்காகப்பார்க்கறவங்க  பாருங்க  ரேட்டிங்  2.25 /5 
Monday, August 22, 2022

ஜீவி 2 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ஆஹா ஓ டி டி


 ஜீவி முதல்  பாகம்  செம  ஹிட்  ஆனதால்  சினிமா  உலக  மரபுப்படி  2வது  பாகம்  ரிலீஸ்  ஆகி  இருக்கு  ஒரு  சின்ன  வித்தியாசம்  திரைக்கதை  மட்டும்  வேற  ஆள். அதனால  அந்த  அளவுக்கு  இதில்  பிரமாதமா  சைன்  பண்ண  முடியலை .


ஸ்பாய்லர்  அலெர்ட்

முதல்  பாகம்  பார்க்காதவங்க  மட்டும்  இந்த  கதைச்சுருக்கத்தை  பார்த்துடுங்க . ஹீரோ  தன்  நண்பனுடன்  ஒரு  வாடகை வீட்டில்  தங்கி  இருக்கார். அவரோட  காதலி  ப்ணம்  தான்  பெருசுனு  அவருக்கு  டாட்டா  காட்டிட்டு  வேற  ப்ணக்காரனைக்கட்டிக்கிட்டதால  செம  காண்ட்  ஆகி  பணம்  சம்பாதிக்க குறுக்கு  வ்ழியை  தேர்ந்தெடுக்கிறார். அவர்  குடி  இருக்கற  ஹவுஸ்  ஓனர்  தன்  பொண்ணோட  மேரேஜூக்கு  சேர்த்து  வெச்சிருந்த  நகையைக்கொள்ளை  அடிக்கிறார். முக்கோண  விதி  , தொடர்பியல் விதி  பிரகாரம்  அவருக்கு  சில  சம்பவங்கள்  நடக்குது , அதுக்கு  பிராயச்சித்தமா  ஹவுஸ்  ஓனர்  பொண்ணையே  மேரேஜ்  பண்ணிக்கறார். 

 2 வது  பாகம்


ஹீரோ  மேரேஜ்  பண்ண்க்கிட்ட  ஹவுஸ் ஓனரோட  பொண்ணு  விழி  ஒளி  இழந்தவர், ஆனாலும்  அவர்  மீது  அன்போடு  வாழ்கிறார். அவருக்கு  கண்  ஆபரேஷன்  பண்ணவும்  , குடும்பசெலவுகள்  அதிகம்  ஆகிட்டதாலும்  அவருக்கு  பணம்  தேவைப்படுது 


 ஹீரோ  முதல்  பாகத்துல  இருந்த  நண்பனுடன்  புதுசா  ஒரு  ப்ணக்கார  ந்ண்பன்  கூடவும்  பழகறார். 3   பேரும்  சேர்ந்து  தண்ணி  அடிக்கற  அளவு    நெருக்கம் . பணக்கார  நண்பனின்  வீட்டில்  லாக்கர்ல  நகை , பணத்தை  ஆட்டையைப்போட்டுட்டு  ஹீரோ  கிளம்பறார்.  அடுத்த  நாள்  மாமியார்  வீட்ல  இருந்து  அழைப்பு  . அந்த  பணக்கார  நண்பன்  கொலை  செய்யப்பட்டு  இருக்காப்டி . 


 தன்  மேல்  போலீஸ்க்கு  சந்தேகம்  வந்ததால்  தானே  அந்த  கொலைகாரனைக்கண்டுபிடிப்பது  என  ஹீரோ  முடிவு  எடுக்கிறார்  அதான்  கதை 


இந்த  2வது  பாகம்  பார்க்கறவங்க  முதல் 25  நிமிடங்களை  கட்  பண்ணிடலாம். அதுக்குப்பின் தான்  கதை  ஆரம்பிக்குது ., மொத்தமே  2  ம்ணி  நேரம்தான் 


 ஹீரோவா  எட்டு  தோட்டாக்கள்  ஹீரோ வெற்றி  . முதல்  பாகத்தைப்போலவே  இதிலும்  கச்சிதமான  நடிப்பு  கோபம்  கொள்ளும்  காட்சி  மட்டும்  சரியா  ஒர்க்  அவுட்  ஆகலை 


ஹீரோயினா அஸ்வினி . பரிதாபம்  ஏற்படுத்தும்  தோற்றம்  ஒரு  உண்மையை  சொல்லியே  ஆகனும்  ஹீரோயினின்  அம்மாவாக  வரும்  ரோகினி  ஹீரோயினை  விட  அழகாக  இருக்கிறார் ,ரகுவரன்  ஆத்மா  என்னை  மன்னிக்கட்டும்


 நண்பரா  கருனாகரன்  ஓக்கே  ஆனா  முதல்  பாகத்தில்  இருந்த  முக்கியத்துவம்  இதுல  இல்ல  சும்மா  கூடவே  வந்து  போறார்  அவ்ளவ் தான் 


போலீஸ்  ஆஃபீசராக  நடித்திருப்பவர்  நடிகர்  நாசரின்  தம்பியாம்.  உடல்  மொழி  எடுபடலை  நடிப்பும்  சுமார் . ஆள்  ஹைட்  கம்மி  எப்படி  போலீஸ்  ஆஃபீசர்  ஆனாரோ ?  


 மைம்  கோபி  ஒரு  முக்கிய  ரோலில்  வர்றார்  குட் 


 பாடல்கள்  சுமார்தான். ஓப்பனிங்கில்  வரும்  பாட்டு  சும்மா  கிளாமருக்காக  வலிய  திணிக்கப்பட்டிருக்கு  ரசித்த  வசனங்கள் 


1  கல்யாணத்துக்கு  முன்னே  இருக்கற  பணத்தை  வெச்சு  சமாளிச்ட்டு  இருந்தோம்  இப்போ  தேவைகள்  கூடிட்டுது 


2 மாதா  பிதா  குரு  பணம்  அப்டினு  ஆகிடுச்சு  ப்ணம்  இல்லைன்னா  யாருமே  மதிக்க  மாட்டேங்கறாங்க 


3   அவன்  ஒரு  முட்டாள்  ஆள்   அதனாலதான்  நல்லவனா  இருக்கான் 


4 நல்லவனை  இந்த  சமூகம்  முட்டாள்னு  தான்  சொல்லும் 


5  சாமிக்கே    காணிக்கைங்கற  பேருல  லஞ்சம்  குடுக்கறவங்க தான்  நாம்


6 கோபப்படறவனைக்கூட  நம்பிடலாம் ஆனா  நம்ம  மனசுல  நம்பிக்கை  விதைக்கற  மாதிரி  பேசறவங்களை  நம்ப  முடியாது 


7  பொண்ணுங்களுக்கு மட்டும் ஏன்டா இப்டி நடக்குது..?', 

'ஏன்னா அவங்க பொண்ணுங்க'


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 

1   விழி  ஒளி  இழந்த  நாயகி வீட்டில்  கிச்சன்  ரூம்ல   இருக்கார். ஹீரோ  தடிமாடு  மாதிரி  வளர்ந்திருக்கார்  அவரே  தண்ணி  முகண்டு  குடிச்சிருக்கலாம், ஹால்ல  இருந்து  கிச்சன்  ரூம்  வந்து  ஏம்மா  குடிக்க  தண்ணி  கொண்டு  வா  அப்டினு  சொல்லிட்டு  மறுபடியும்  ஹாலுக்குப்போய்  உக்காந்துக்கறார்   அட   விளங்காதவனேனு  திட்டத்தோணுது 


2  கொலை  நட்ந்த  இடத்துக்கு  போலீஸ்  ஆஃபீசர்  வர்றார்.  அவரோட  கான்செண்ட்ரேசன்  பூரா  அவரோட  ஃபோன்  காலில் தான்  இருக்கு . சம்சாரம்  கூட  பேசிட்டே  ஏனோதானோனு  டெட்பாடியப்பார்க்கறார்


3   கொலை  நடந்த  ஸ்பாட்க்கு  யாரையும்  போலீஸ்  அலோ  பண்ணாது  ஏன்னா  கை  ரேகை  தடயங்கள்  சிதைஞ்சிடும், ஆனா  இந்த  லூஸ்  ஆஃபீசர்   ஹீரோவையும்  நண்பனையும்  ஸ்பாட்க்கே  வரசொல்லி  டெட்  பாடி  பக்கத்துலயே   நிக்க  வெச்சு  பேசிட்டு  இருக்கார்  நல்ல  வேளை  செல்ஃபி  ஏதும்  எடுக்கலை 

4  கொலை  நடந்த  வீட்டில்  சில  சாட்சிகளை  ச்ந்தேகப்படுபவர்களை  விசாரிக்கும்  போலீஸ்  ஆஃபீசர்  கடனுக்கு / க்டமைக்கு  விசாரிக்கற  மாதிரிதான்  இருக்கு . அவங்க  சொல்றதை  எல்லாம்  அப்படியே  நம்பிக்கறார்  ஒரு  க்ராஸ்  கொஸ்டீன்  கூட  இல்லை 


5  படத்துல  வர்ற  மொத்தமா  41  கேரக்டர்ல 38  கேரக்டர்களும்  எப்போப்பாரு  தம் டிக்குது  தண்ணி  அடிக்குது  டீ  குடிக்குது  அந்த  டைம்  ட்யூரேசனை  கட்  பண்ணாலே  20  நிமிசம்  மிச்சம் 


6  கொலை  செய்யப்பட்ட பணக்கார  நண்பனின்  இன்னொரு  நண்பன் மெக்கானிக்  ர்வியைத்தேடி  அவர்  ஃபோன்  நெம்பருக்காக  காடு மலை  எல்லாம்  அலைஞ்சு  500  கிமீ  தண்டமா  ஹீரோ  சுத்திட்டு  இருக்கார் .  டெட்  பாடி  கிட்டே  இருக்கற  செல்  ஃபோனை  போலீஸ்  பர்மிசன்ல  வாங்கி  காண்டாக்ட்  லிஸ்ட்ல  மெக்கானிக்  ரவி   அப்டினு  சர்ச்  பண்ணா  ஈசியா  வேலை  முடிஞ்சிருக்கும் படத்துல  25  நிமிசம்  மிச்சம் 


7  போலீஸ்  ஆஃபீசர்  க்ளைமாக்ஸ்ல  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  ஃபோன்  பண்ணி   இவரு  எங்கே  இருக்கார்  என  எந்தத்தகவலும்  சொல்லாம “ அக்யூஸ்ட்  மாட்டிக்கிட்டான்  உடனே  ஸ்பாட்க்கு  வாங்க  அப்டிங்கறார்  உடனே   போலீசும்  வ்ருது  அந்த  ஸ்பாட்  எப்படி  தெரிஞ்சுது ? 


8  ஒரு  சீன் ல பந்தி  ப்ரிமாறி  இருக்காங்க   எதிர் எதிரே  2  பந்தி  இரண்டுக்கும்  இடையே  ஒரு  அடி  இடைவெளி  கூட  இல்லை  பந்தி  பரிமாறுபவங்க  எப்படி  அந்த  வழில  போக  முடியும் >  செட்டப்  பந்தி  மாதிரியே  இருக்கு 


9  ஒரு  சீன்ல  ஹீரோவும்  அந்த  அனாதை  சிறுமியும்  மழைல 5  நிமிசம்  நனையறாங்க  அப்டியே  நடந்து  வந்து  ரூம்க்கு  வரும்போது  நனைஞ்ச  சுவடே  இல்லை 


10   போன  பாகத்துல  ரோகினி  என்  பொண்ணைக்காட்டாத   டாக்டர்  இல்லை  போகாத  ஹாஸ்பிடல்  இல்லை  ஆனா  பார்வை  கிடைக்கலைனு  சொல்லி  இருப்பார்  இந்த  பாகத்துல  ஹிரோ  ஒண்ணும்  பிரச்சனை  இல்லை  உனக்கு  பார்வை  வந்திடும்  டாக்டரே  சொல்லிட்டார்னு  அடிச்சு  விடறாரு


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுமாரான  த்ரில்லர்  மூவி  பார்க்கனும்னா  பாருங்க   விக்டன்  மார்க் 40  ரேட்டிங்  2/ 5   


Sunday, August 21, 2022

மழலைப்பட்டாளம் ( 1980) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா)


 டைட்டில் அல்லது  போஸ்டர்  டிசைனைப்பார்த்ததும்  பலரும்  இது  குழந்தைகளை  மையப்படுத்தி  எடுத்த  சில்ட்ரன்  ஸ்டோரி  என   ஸ்கிப்  பண்ண  வாய்ப்பு  உண்டு ,  ஆனா  முதல்  பாதி  பொயட்டிக்  லவ்  ஸ்டோரி  பின் பாதிதான்  மழலைகள்  குறும்புக்கொண்டாட்டக்  காமெடி  என்பதால்  அனைவரும்  பார்க்கத்தக்க  படமே . டைட்டிலில்  கதை = விஜி  ,திரைக்கதை  வசனம் - விசு , இயக்கம் =நடிகை  லட்சுமி  என  வந்தாலும் இது  ஒரு  அட்லீ  டைப்  பட்டி  டிங்கரிங்  படமே . ரிலீஸ்  ஆன  டைமில்  செம  ஹிட்  ஆனது. குறைந்த  முதலீடு  அதிக  லாபம்.


1968;ல ஹாலிவுட்ல   ரிலீஸ்  ஆன   YOURS MINE  AND  OURS     என்ற்  ஹாலிவுட்  படத்தை  பட்டி டிங்கரிங்  பண்ணி KHATTA MEETHA  என  ஹிந்தில 1978ல  எடுத்தாங்க. அந்த  2  படங்களையும்  பட்டி  டிங்கரிங்  பண்ணி  இவங்களே  எழுதுன  சொந்தக்கதை  மாதிரி  எடுத்திருக்காங்க. எம் அசோக் ராஜா  அரவக்குறிச்சிப்பட்டி ,  கே  இந்து  குமரப்பன், விழுப்புரம்   மாதிரி  ஈ  ஐடிச்சான்  காப்பி  இல்லைன்னாலும்  ஈரோடு  மகேஷ் , மதுரை  முத்து  பண்ற   மாதிரி இன்ஸ்பயர்டு ஆகி  ரெடி  பண்ணினதுதான் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோ ஒரு  ரைட்டர். இவருக்கு  ஆல்ரெடி  மேரேஜ்  ஆகி 5  குழந்தைங்க  இருக்கு . ஆனா  இப்போ  சம்சாரம்  இல்லை , இவர் ஒரு  விதவன் அல்லது  கைஆண் ( கைம்பெண்  க்கு  எதிர்  பதம் )


ஹீரோயின்  ஒரு  கம்பெனில  ரிசப்ஷனிஸ்ட்  கம்  டெலிஃபோன்  ஆபரேட்டர்  ஆக  இருக்கார்  இவருக்கு 6  குழந்தகள்  இருக்கு  . கணவர்  இல்லை . இவரு    ரைட்டரோட  பரம  விசிறி . ஆனா  நேரில்  அவரைப்பார்த்ததில்லை . அடிக்கடி  கம்பெனி  டைம்ல   கம்பெனி  லேண்ட்  லைன்  ஃபோன்ல  இருந்து  பத்திரிக்கை  ஆஃபீஸ்க்கு  ஃபோன்  பண்ணி  ரைட்டரைப்பற்றி  விசாரிப்பாரு. அந்தப்பத்திரிக்கையோட  எடிட்டர்    ரைட்டர்  பற்றிய  விபரங்கள்  தர்றதில்லை.  தன் படைப்பு  பற்றியும்   மேதாவிலாசம்  பற்றியும்  தம்பட்டம்  அடிச்ட்டு  இருக்காரு 


ஹீரோயினை  ஒரு  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்  அடிக்கடி  பாலிசி  போடுங்கனு  நச்சரிச்ட்டே  இருக்காரு/ ஹீரோயினுக்கு  அந்த  ஆளைக்கண்டாலே  பிடிக்கலை   அவாய்டு  பண்ணிட்டு  இருக்கா . ஆனா  அந்த  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்க்கு  ஹீரோயின்  மேல  ஒரு  கண்  சாரி  ரெண்டு  கண்


ஒரு  சமயம்  குறிப்பிட்ட இடத்தில்  மீட்  ப்ண்ணலாம்னு  ரைட்டர்    அப்பாய்ண்ட்மெண்ட்  தர்றாரு.  இருவரும்  சந்திக்கும்போது  ஹீரோயினுக்கு  ஒரு  அதிர்ச்சி  காத்திருக்கு 


2 பேரும்  பரஸ்பரம்  ஒருவரை  ஒருவர்  லவ்  பண்ணாலும்  தங்களுக்கு  குழந்தைகள்  இருக்கு  என்பதை  மட்டும்  ஓப்பனா  சொல்ல  தயக்கம் 


 இதுவரை  ஆல்  செண்ட்டர்  ஆடியன்சுக்கும்  பிடிச்ச  ரொமாண்டிக்  லவ்  ஸ்டோர்யா  போகுது .  இடைவேளை 


 இதுக்குப்பின்  இவங்க  மேரேஜ்  பண்ணிக்கிட்டாங்களா? இவங்க  குழந்தைகள்  11  பேர்  நிலை  என்ன? அவங்க  பண்ற  காமெடி  கலாட்டாக்கள்  என்ன  ?  என்பதுதான்  பின்  பாதிக்  கதை 


 இந்த  பின்  பாதி  திரைக்கதை  லேடீஸ்க்கு  பிடிக்கும், எல்லா  ஆண்களுக்கும் பிடிக்கும்னு  சொல்லிட  முடியாது 


ஹீரோவா  க்ன்னட  நடிகர்  விஷ்ணுவர்தன்  (  ரஜினி  நடித்த  விடுதலை  படத்தில்   கூட  நடிச்சாரே? நாட்டுக்குள்ள   நம்மைப்பாற்றிக்கேட்டுப்பாருங்க  அம்மம்மா  இவர்தான்  சூபர்  ஸ்டாருங்க )  கண்ணாடி  போட்டு  மிடில் கிளாஸ்  இளைஞனா  வர்றார். குட்  ஆக்டிங் 


 ஹிரோயினா மல்கோவா  கன்ன  அழகி  சுமித்ரா . வெட்கப்படும்போதும்  பதட்டப்படும்போதும்  இவர்  ந்டிப்பு  கிளாசிக்


குழந்தைகள்  11  பேரைப்பற்றியும்  சொல்லிட்டு  இருந்தா  விடிஞ்சிடும். ஆனா  அவங்க  பண்ற  குறும்புகள்  எல்லாம்  ரசிக்க  வைப்பவை  . பேபி  இந்திரா  குறிப்பிடத்தக்க  நடிப்பு 


 இசை  எம் எஸ்  விஸ்வநாதன் . பாடல்கள்  3  செம  ஹிட் 


 கவுரி  மனோகரியைக்கண்டேன்  ஒரு  ஆடவன்  வடிவத்திலே  பட்டி  தொட்டி  எல்லாம்  ஹிட்  ஆன  பாட்டு 


போற  இடம்  எங்கேப்பா? போனப்ப்றம்  சொல்றேன்பா   ரேடியோவில்  அடிக்கடி  ஒலித்த  பாட்டு  சபாஷ்  டைரக்டர் 


1   ஒரிஜினல்  கதைல  ஹீரோக்கு  11  குழந்தைகள்  ஹீரோய்னுக்கு  10  குழந்தைக்ள்  இதுல  தமிழுக்குத்தக்கபடி  50%  ரிடக்சன்  செய்து  அமைத்த  விதம்


2  தமிழ்  சினிமா  இலக்கணப்படி  ஹீரோ  எத்தனை  பொண்ணுங்க  கூட  கூத்தடிச்சாலும்  பிரச்சனை  இல்லை  ஹீரோயின்  கன்னிப்பெண்  என  காட்டனும்  அதுக்காக  ஹீரோய்னுக்கு ஒரு  ஃபிளாஸ்பேக்  போட்டு அந்தக்குழந்தைகள்  எல்லாம்  ஹீரோயினோட அக்காவுது  ரெண்டு  பேரும்  ட்வின்ஸ், அக்கா  ஒரு  விபத்தில்  இறந்துட்டாங்க  அக்கா  கணவரும்  விபத்த்ல்  அவுட்   என  பல்டி  அடிச்சது 


3  ரைட்டரைகண்டுபிடிக்க  ஹீரோயின்  எடுக்கும்  நடவடிக்கைகள்  குட்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்  திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1  பல வருட  மண  வாழ்க்கையில்  மனைவி  கூட  குடும்பம்  நடத்திய  ஹீரோ  ஹீரோயின்  ஒரு  கன்னிப்பெண்  என்பதை  திருமணம்  ஆகி  அவள்  கர்ப்பம்  ஆகும்  வரை  கண்டு பிடிக்க  முடியாதது  ஏன்??  


2  ஹீரோயினுக்கு  ரொற்ப  சம்பளம்  ஹீரோ  ஒரு  தண்டக்கடன் . 11  குழந்தைகள்  + இவங்க  2  பேர்  செலவுக்கு  துட்டு  ஏது ? 


3   இடைவேளைக்குப்பின்  11 பேரில் ஒரு   பெண்  ஒரு  ப்ணக்காரப்பையனை  லவ்  பண்ணுவது  அவங்க  வீட்டில்  மறுப்பது   இவங்க  10  பேரும்  போய்  கலாட்டா  பண்ணி  மேரேஜ்  நடத்துவது  சரியான  காதில்  பூ  சுற்றும்  டிராமா 

4    ஹீரோ  காதல்  போதைல  இருக்கும்போதே  எனக்கு  இன்னும்  மேரேஜ்  ஆகலை  என்  அக்கா  குழந்தைங்க  இவங்க  இஷ்டம்னா  என்னை  மேரேஜ்  பண்ணிக்குங்க  குழந்தைங்க  நம்ம  கூடத்தான்  இருக்கும்  என  கண்டிஷன்  போட  என்ன  தயக்கம் >?  ஏன்  மென்னு  முழுங்கனும் ? 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாதி  கவித்துவமான  காதல்  கதை  பின்  பாதி மழலைகள்  கொண்டாட்டக்குறும்புக்காமெடி  மெலோ  டிராமா  பார்க்கலாம்  ரேட்டிங்  2.5 / 5 


 

Saturday, August 20, 2022

கடாவர் (2022) - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார்


கடாவர்னா  உயிர்  அற்ற  உடல்னு  அர்த்தம்.  2016ல்  ரிலீஸ்  ஆன த  அதர் மீ கிரேக்கப்படம் ,  2018ல் ரிலீஸ்  ஆன  ஜோசஃப் எனும்  மலையாளப்படம்  அதன்  ரீமேக்  ஆன  விசித்திரன்  தமிழ்ப்படம்  இந்த  மூன்றும்  சேர்ந்த  கலவை தான்  கடாவர் . அமலா  பால்  சொந்தப்படம்.  மாறுபட்ட  கெட்டப் புதிய  உடல்மொழில  ட்ரை  பண்ணி  இருக்கும்  படம்  எப்படி  வந்திருக்கு?னு  பார்ப்போம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - ஹீரோயின்  ஒரு   அனாதை  ஹீரோ  அவளை  லவ்  பண்றார்.  மேரேஜூம்  ஆகுது. அனாதை  எனும்  குறையே  தெரியாத  மாதிரி  எல்லா  வசதிகளும்  செஞ்சு  குடுக்கனும்னு  ஹீரோ  ட்ரை  பண்றார். நிறை  மாத  கர்ப்பிணியா  இருக்கும்  ஹீரோயின்  ஹீரோ  கூட   பைகல்  போகும் போது  ஒரு  சாலை  விபத்துல  மாட்டிக்கிறார்    உயிருக்கு  ஆபத்தில்லை   ஹாஸ்பிடலில்  சேர்க்கப்படுகிறார்


 சம்பவம் 2  -  குறிப்பிட்ட  அரிய வகை  ரத்த  க்ரூப்  இருக்கற  ஒரு  நபரின்  இதயம்  தேவைப்படுது  ஒரு  பணக்காரருக்கு அதுக்காக  2 கோடி  ரூபா  தரத்தயாரா  இருக்கார் , கிட்னி  தானம்  ரத்த  தானம்னா  ஆள்  உயிரோட  இருக்கும்போதே  தர  முடியும், ஆனா  இருக்கறதே  ஒரு  இதயம்  அதை  எப்படி  தர   முடியும் ? 


 சம்பவம்  3   பிரபலமான  தனியார்  ஹாஸ்பிடலில்   சீஃப்   டாக்டரா  இருக்கும்  ஒருவர்  மர்மமான  முறையில்  கொலை  செய்யப்படுகிறார். கொலைன்னா  சாதாக்கொலை  இல்லை  நாடி  நரம்பு  ரத்தம்  சதை  எல்லாம்  பழி  வாங்கும்  உணர்வு  கொண்ட    ஒருவன்  தான் அந்தக்கொலையை  கடும்  சித்திரவதைக்கு  உட்படுத்தி  பின்  பண்ணி  இருக்கான் 


சமபவம் 4  -  ஜெயிலில்  இருக்கும்  தண்டனை  பெற்ற  கைதி  போலீஸ்க்கு  சவால்  விடறான்  இன்ன    தேதில  இன்னாரை  நான்  கொலை  பண்ணபோறேன்   , முடிஞ்சா  தடுத்துக்கோ  என  சவால்  விடறான்.  அது  எப்படி  சாத்தியம்? போலீஸ்க்கு  புரியல 


சம்பவம் 5  =   மேலே  சொன்ன  சம்பவங்கள் 3 அண்ட்  4   இரண்டைப்பற்றியும்  விசாரிக்க  ஒரு  போலிஸ்  டீம்  அமைக்கப்படுது  அதுல  இன்னொரு  நாயகியான  டாக்டர்  கம்  போலீஸ்  ஆஃபீசர்  கம்  போஸ்ட் மார்ட்டம்   செய்பவர்  கம்  கிரிமினாலஜி  படிச்சவர்  , பேத்தாலஜிஸ்ட் இடம்   பெறுகிறார் 


  இதுக்குப்பின்  கதையில்  என்ன  நடந்தது  என்பதை  டிஸ்னி  ஹாட்  ஸ்டாரில்  கண்டு  மகிழ்க  சம்பவம் 1 ல்  வரும்   நாயகியா  கர்ப்பிணியா  அதுல்யா  ரவி  அழகிய  முகம்  ஆனா  இவரது  நடிப்பில்  ஒரு  முக்கியமான  குறை   கொஞ்சம்  செயற்கையான  சிரிப்பு   டைரக்டர்  சொல்லிக்குடுத்ததை  ஸ்விட்ச்  போட்ட  பொம்மை  மாதிரி  செய்வது  லைட்டா  நிரடுது 


 மெயின்  ஹீரோயினா  அமலாபால்  மாறுபட்ட   நடிப்பு ., இவரது  ஓப்பனிங்  சீன்  கமர்ஷியல்  ஹீரோக்களின்  ஓப்பனிங்  சீன்  மாதிரி  ரசிக்க  வைக்கும்படி  இருக்கு . அவரது  பாய்ஸ்  கட்டிங்  கேரடக்ருக்காக  என்றாலும்  எனக்கு  தனிப்பட்ட  முறையில்  பெண்ணின்  அழகு  மயில்  தோகை  மாதிரி  கூந்தலில்தான்  அதை  பாய்ஸ்  கட்  பண்ணுவது  எனப்து  ஆண்  மயிலின்  தோகையை  வெட்டி  விட்டு  அழகு  நிலையம்    அனுப்புவது  போலத்தான்  தோணுது 


 ஹரீஷ்  உத்தமன்  டம்மி  போலீஸ்  ஆஃபீசராக  முனீஷ்  காந்த்  இன்னொரு  போலிசாக    வர்றாங்க . அது  போக  ஏகபப்ட்ட  துணைக்கதாபாத்திரங்கள்சபாஷ்  டைரக்டர் 

 

1  தயாரிப்பாளர்  தான்  ஹீரோயின்  என்பதால்  அவரது  கேரக்டரை  டிசைன்  பண்ணிய  விதம்  அருமை . பக்காவா  எழுதி  இருக்காரு. 


2  பல  காட்சிகள்  தமிழ்  சினிமா  வுக்குப்புதுசு  குறிப்பா ஓப்பனிங்  சீனில்  போஸ்ட்மார்ட்டம்  நடக்கும்  ரூமில்  அமலாபால்  இயல்பாக  சாப்பிடுவது  அதற்கான  காரணத்தை  முனீஷ்  இடம்  சொல்வது   அவர்  க்ண்டு  பிடிக்கும்  மெடிக்கல்  உண்மைகள்  தரும்  தர்வுகள்  எல்லாம்  சபாஷ்  போட  வைக்குது 


3  மொக்கை  காமெடி  டிராக்  தேவை இல்லாத  பாடல்  காட்சிகள்   இல்லாமல் க்ரிஷா   கட்  பண்ணிய  எடிட்டிங்  சாமார்த்தியம் 


4  ஆசிட்  வீசப்பட்ட  நர்ஸ்  இடம்  இருந்து  வாக்குமூலம்  வாங்க   அமலாபால்  பயன்படுத்தும்  டெக்னிக்  சபாஷ்  ஏன்னா  அவர்  உடலை  கை காலை  அசைக்கவே  முடியாது  கண்  இமையை  மட்டுமே  சிமிட்ட  முடியும் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ்  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    அமலாபால்  தான்  எல்லாத்தையும்  கண்டுபிடிக்கிறார்  கூட  இருக்கும்  போலீஸ்  ஆஃபீசர்கள்  எல்லாம்  டம்மியா  வந்துதான்  போறாங்க . ட்லிஸ்ட்  10 க்கு  ஒரு  சீனாவது  அவங்களும்  ஏதாவது  கண்டுபிடிசிருக்கலாம் 


2   அதுல்யா  ரவியின்  கணவர்  என்ன  காரணத்துக்காக  ஜெயிலுக்குப்போனார்  எத்தனை  வருசம்  தண்டனை  என்பதெல்லாம்  கடைசி  வரை  தெரியலை , அவ்ளோ  சஸ்பென்ஸா? 


3  ஒரு  ஹாஸ்பிடலில்  ஒரு  நர்ஸ்  லேப்  டாப்  டூ  லேப்டாப்  காபி  பண்ற  சீன் எல்லாம்  பாசிபிலிட்டி இல்லை  சிசிடிவி காமிரா  காட்டிக்குடுக்காதா? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சராசரியான  ஒரு  க்ரைம்  மெலோ  ட்ராமா  கொஞ்சம்  ஸ்லோவாதான்  போகுது  .  பார்க்கறவங்க  பார்க்கலாம் . அமலா பால்  ரசிகர்கள்  கொஞ்சம்  மனசை  திடப்படுத்திட்டுப்பார்க்கவும்   ரேட்டிங் 2 / 5  ஆனந்த  விகடன்  யூக  மார்க்  40   ஓடி டி லதானே  பார்க்கிறோம்  வீட்ல  ஹாயா  சாப்பிட்டுட்டே  பார்க்கலாம்னு  யாரும்  நினைச்சுடாதீங்க. சாப்பிட்ட  பின்  பார்க்கவும் Friday, August 19, 2022

தென்றலே என்னைத்தொடு 1985 - சினிமா விமர்சனம் ( மியூசிக்கல் மெகா ஹிட் மூவி )


கதை  சரி  இல்லைங்க  சார்  அதான்  படம்  ஓடலைனு  யாராவது  சொன்னா  அதை  நம்பாதீங்க . கதையே  இல்லாம  சூப்பர்  டூப்பர்  ஹிட்  ஆன  படங்கள் பல  உண்டு . உதா= பருவ ராகம்  ,  தென்றலே  என்னைத்தொடு  . இந்த  ரெண்டு  படத்துலயும்  கதை இலாகா  அப்டினு  ஒண்ணு  தேவையே படலை . பாடல்கள்  இசை  செம  ஹிட்டு   அந்தப்பாடல்களை  ஷூட்  பண்ணிட்டு  போனாப்போகுதுனு  ஹீரோ  ஹீரோயின்  பேசிட்டு  இருக்கறது   டூ  விட்டுட்டுப்போறது  மறுபடி  பழம் விடறது  இதை எல்லாம்  எடுத்து  அட்டாச்  பண்ணினா  படம்  ரெடி . ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காது. மொக்கை  காமெடி  டிராக்  இருக்காது . சீரியலில்  வருவது  போல  அழுகாச்சி  சீன் அம்மா , அக்கா  அப்பா  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  எதுவும்  இருக்காது  ஜாலி  எண்ட்ட்ர்டெயின்மெண்ட்  ஒன்லி

 

 வ்ழக்கமா  எல்லாப்படங்களிலும்  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  கண்டுபிடிக்க  ரொம்ப  மெனக்கெடுவேன். இதுல  அதெல்லாம்  கிடையாது அதனால  பதிவு  சின்னதாப்போய்டுமே  என்ன  பண்ண?னு  யோசிச்சேன்  அதனால  படத்துல  ஹீரோவோட  அனுபவம்  அதே  சிச்சுவெஷன்ல  என்  அனுபவம்  எப்படி  இருக்குனு  ஒரு  கம்ப்பேரிசன்  மட்டும்  இருக்கும்

 

ஸ்பாய்லர்  அலெர்ட் ( ரொம்ப  முக்கியம் )

 

ஹீரோயின் ஒரு பெரிய  கம்பெனி எம் டி யோட  பொண்ணு . ஹீரோ  தமிழ்  சினிமா  இலக்கணப்படி  வேலை  எதுவும்  இல்லாத  வெட்டாஃபீஸ் . ஒரு  இண்ட்டர்வீயூவுக்குப்போறாரு அங்கே ஆல்ரெடி  வேலைக்கு  ஆள்  எடுத்துட்டாங்க  சும்மா  கண்  துடைப்புக்காகத்தான்  இண்ட்டர்வ்யூ  நடக்குதுனு  தகவல்  கிடைக்குது அதனால  இண்ட்டர்வ்யூல  கண்டபடி  பதில்    சொல்லி   அவங்களை  திட்டிட்டு வெளில  வர்றாரு  ஹீரோ

 

 ஆனா   என்ன  ஒரு  அதிசயம்? உங்க  துணிச்சல்  போல்டுநெஸ்  எல்லாம்  பிடிச்சிருக்குனு  வேலை  குடுத்துடறாங்க

 

நிஜ  வாழ்க்கைல டெபாசிட்  கட்டு  விஐபி யாராவது  தெரியுமா? மினிமம்  5   வருசம்  வேலைல  இருக்கனும் ம் 25  வயசான  ஆளுக்கு 52  வருச அனுபவம் இருக்கனும்,  அக்ரீமெண்ட்ல  சைன் பண்ணுனு  உயிரை  எடுப்பாங்க

 

ஹீரோயின்  கார்  வழில  ரிப்பேர்  ஆகிடுது . ஹீரோக்கு ஒரு  வேலையும்  தெரியாது  ஆனா  மெக்கானிக்கால  கூட  பார்க்க  முடியாத  ரிப்பேரை  எல்லாம்  இவர்  பார்த்துடறாரு. 10 நிமிசத்துல  கார்  ரெடி.

 

 இப்போ  ஹீரோயின்  நினைக்குது , சாதா  காரையே  இவ்ளோ பிரமாதமா  ரிப்பேர்  பார்க்கறானே  இந்த  ஆளைக்கட்டிக்கிட்டா  நம்ம  உடம்பு ல எதுனா  ரிப்பேர்  ஆனாக்கூட   டாக்டர்  கிட்டே  போகத்தேவையே  இல்லாம  நம்மை ரெடி  பண்ணிடுவான்னு  நினைக்குது  லவ்வும்  பண்ணுது  ஆனா  வெளில  சொல்லலை

 

நிஜத்துல  இந்த  மாதிரி  பணக்காரப்பொண்ணுங்க  எல்லாம்  நம்மை  கண்டுக்கவே  மாட்டாங்க .  அற்ப  மானிடப்பதரே  அப்டிங்கற  எள்ளல்  அவங்க  பார்வைல  இருக்கும்

 

 நம்ம  வாழ்க்கைல  பொதுவா  பொண்ணுங்க  காதலை  சொல்ல  தேர்ந்தெடுக்கும்  இடம்  கோவில்தான்  எல்லாம்  ஒரு  செண்ட்டிமெண்ட் தான்  தெய்வ  சாட்சியா  சொல்லிட்டம்னா  நாளைக்கு  ஏதாவ்து  வில்லங்கம்னா  சாமி  பார்த்துக்கும்னு  ஒரு  நினைப்பு

 

ஆனா  இங்கே தான்  டைரக்டர்  தன்  புத்திசாலித்தனத்தைக்காட்றார். ஹீரோயின்  ஒரு அழகிய குணச்சித்திர  நடிகை, புதுமுகம்  வேற  சொன்ன  பேச்சைக்கேட்டாகனும். அவரை  கிளாமர்  காட்ட  வைக்கனும்  என்ன  வழி ? மேடம்  கதைக்கு  ரொம்ப  முக்கியமான  சீன்  இது  ஸ்விம்மிங்க்  பூல்ல தான்  நீங்க   லவ்வையே  சொல்றீங்கனு  அடிச்சு  விடறார்

 

 ஹீரோயின்  அதை  நம்பி  எல்லாப்படங்களிலுமே  சேலை  மட்டும்  கட்டி  கண்ணியமான  தோற்றத்தில்  உலா  வரும் ஒளிக்கதிரா பிற்காலத்தில்  இருந்தவங்க  கிளாமரா   ஸ்விம்  சூட்  போட்டுட்டு   நீச்சல்  அடிச்சுட்டு  இருக்கு

 

 ஹீரோ ஒரே  ஒரு  ஜட்டி  மட்டும்  போட்டுக்கிட்டு  (  ஏன்னா  சென்சார்  பிராப்ளம்  வருமில்ல ?)  அந்த  நீச்சல்  குளத்துக்கு  வர்றாரு. இதுதான்  தக்க  தருணம்னு  ஹீரோயின்     லவ்  யூ  சொல்லுது

 

அங்கே  ஒரு  பாட்டு . படத்தை  பார்க்கும்போது  ந்ம்ம  பாட்டு என்ன  சிச்சுவேஷன்ல  எப்படி  ஷூட்   பண்ணி  இருக்காங்கனு  பார்த்தா  கவிஞர்  தற்கொலையே  பண்ணிக்கனும், ஏன்னா  பிர்மாதமான  மெலோடி  சாங்  ஆனா  படம்  பிடிச்சது  கிளாமர்  டிரஸ்ல

 

இப்போதான்  ஸ்டோரி  டிஸ்கஷன்  பண்ணிட்டு  இருந்த  க்ரூப்க்கு  ஒரு  டவுட்  படத்துலதான்  வில்லனே  இல்லையே  எப்படி  இதுக்குப்பின்  கதையை  ஓட்டறது ? இப்டியே  போனா  நம்மை  ஓட்டுவாங்களே?அதனால  ஹீரோ  ஹீரோயின்  கிட்டே  மாட்டிக்கற  மாதிரி  ஒரு  மொக்கை  சீன்


 ஹீரோ  ஆஃபிஸ்  ல    கூட  ஒர்க்  பண்ற  2  பேரு   நாம  பிரைவேட்  ட்யூசன்  செண்ட்டர்  போற  மாதிரி  பிரைவேட்  காபரே  டான்ஸ் பார்ட்டிக்கு  போறாங்க  ஹீரோ  சும்மா  துணைக்குப்போறாரு 


இதுக்கு  ஏன்  தண்டமா  காசை  செலவு  பண்றாங்கனு  தெரில   சென்னிமலை  தேர்  திருவிழாவில்  வருசா  வருசம்  கரகாட்டம்  ஒயிலாட்டம்  நடக்கற  மாதிரி  எல்லா  கிராமங்களீலும்  இப்டி  டான்ஸ்  ப்ரோக்ராம்  நடக்குமே?


 அந்த  டான்ஸ்  மேட்டர்ல  போலீஸ்  ரெய்டு  வருது  ஹீரோ  மாட்றாரு  ஹீரோயின்  கோவிச்சுக்குது . ஒரு  பாட்டுப்பாடி  சமாதானப்படுத்திடறாரு


 நிஜ  வாழ்க்கைல  லவ்வர்  கோவிச்சுக்கிட்டா  சமாதானம்  ஆக  2  வருசம்  ஆகும்  சம்சாரமா  இருந்தா 6  மாசம்  கெஞ்சிட்டு  இருக்கனும் 


அடுத்ததா  ஒரு  ட்விஸ்ட். ஹீரோ   வீட்டில்  பாத்ரூம்ல   வேற  ஒரு  பொண்ணு  குளிச்ட்டு  வெளில  வர்றதை  ஹீரோயின்  பார்த்துடுது.  அவங்க  வீட்டு  பாத்ரூம்ல்  த்ண்ணி  வர்ல  போல . உடனே  ஹீரோயின்  சந்தேகபப்டுது


 இந்த  இம்சையே  வேணாம்னு  ஹீரோ  வேலையை  ரிசைன்  பண்ணிட்டு  வேற  ஊர்  போறார்  அங்கே  ஒரு  அபார்ட்மெண்ட்    மேனேஜர்  வேலை  கிடைக்குது


அங்கே  ஒரு  பொண்ணுக்கு  சைக்கிள்  ஓட்டக்கத்துக்குடுக்கறார், இன்னொரு  பொண்ணுக்கு   வேற  என்னமோ  கத்துத்தர்றார்  ஹீரோயின்  அங்கே  வருது . ஹீரோயினை  வெறுப்பேத்த  ஒரு  பாட்டு 


நிஜ  வாழ்க்கைல  இந்த  மாதிரி  நாம  கத்துத்தரலாம்னா  பொண்ணோட  அண்னனோ  அப்பாவோ  முட்டுக்கட்டை  போட்டுடுவாங்க 


 க்ளைமாக்ஸ் . ஹீரோயினுக்கு   வேற  ஒருவர்  கூட  மேரேஜ்னு  பத்திரிக்கை  வருது  அடிச்சுப்பிடிச்சு  ஹீரோ  அங்கே  போறார்


 பார்த்தா  ஹீரோயின்  செட்டப் இதெல்லாம ,  நிஜ  வாழ்வில்  நாம  இருந்தா  அந்த  கல்யாண  மண்டபத்துக்கு  ஒரு   ஃபோன்  அடிச்சு  இன்ன  டேட் ல  இன்னாருக்கு  மேரேஜா?னு  கேட்டா  ஒரு  ரூபாய்  செலவுல  வேலை  முடிஞ்சுது 


  ஹீரோவா  மோகன் . திருப்பதி  லட்டு  மாதிரி  புதுமுக  ஹீரோயின்  , ஜிலேபி  மாதிரி  ரசகுல்லா  மாதிரி  எக்ச்ட்ரா  2  பொண்ணுங்க  இவங்க  கூட  ஜாலியா  கட்டிப்பிடிச்சு  டூயட்  பாட  சம்பளம்  வேற  நல்லா  இருங்க   சார்       ( வயித்தெரிச்சலோ  பொறாமையோ  இல்லை  , ஒரு  ஆற்றாமைதான் )  


 ஜெயஸ்ரீ  புதுமுகம்  அறிமுகம்  பிங்க்  கலர் தேகம்  உதடு  நிறைய  சிரிப்பு  கூந்தல்  நிறைய  மல்லிகைப்பூ   இவர்  ஒரு  புன்னகை  குடோன்  எல்லா  சீன்களிலும்  சிரிச்ச  முக்மா  வருவார்  புன்னகை  அரசி  கே  ஆர்  விஜயா  புன்னகை  இளவரசி  சினேகா  எல்லாம்  பின்னால  நிக்கனு,ம் 


  தேங்காய்  சினிவாசன்  வெ  ஆ  மூர்த்தி  காமெடிக்கு .  

 படத்துல  வில்லன்  இல்லை 

 ஒளிப்பதிவு  பாடலக்ள்  இசை  எல்லாம்  செமயா  இருக்கும்   ஹிட்  சாங்க்ஸ்  லிஸ்ட் 


1   புதிய  பூவிது  பூத்தது  இளைய  வண்டுதான்  பார்த்தது 


2  கவிதை  பாடு  குயிலே  குயிலே  இனி  வச்ந்தமே 


3  தென்றல்  வந்து  என்னைத்தொடும் ஆஹா  சத்தம்  இன்றி  முத்தம்  இடும் 


4  கண்மணி  நீ  வரக்காத்திருந்தேன்  ஜன்னலில்   பார்த்திருந்தேன் 


5  ஏம்மா  அந்தி  மயக்கமா? 


6  என்னாங்க  மாப்பிள்ளை  நலம்  தானா?


  சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்தப்படத்தைப்பார்க்காதவங்க  பெரும்பாலும் இருக்க  முடியாது   அப்படி  யாராவது  அப்படி ஒரு  பாவம்  பண்ணி  இருந்தா  காசி  ராமேஸ்வரம்  போறதுக்குப்பதிலா  இதைப்பாருங்க   ஜென்ம  சாபல்யம்  அடைவீர்கள்   ரேட்டிங்   2/. 75 ? 5   (   ஜெயஸ்ரீ  சிரிப்புக்கே 4 / 5  தரலாம்னு  யாரும்  சண்டை  போட  வேண்டாம்)