Sunday, January 17, 2016

நீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்டுனா

1  மேரேஜ் ஆன ஆன்ட்டிக்கு அட்வைஸ் பண்ணுவது எப்படி?தனித்திருமதி

விழித்திருமதி
பசித்திருமதி


=============

2 தலைவரே! ஆளுங்கட்சியை விட 2 மடங்கு ஆதரவு பெற ஒரு ஐடியா இருக்கு.சொல்லு

எல்லாருக்கும் 4 துண்டு கரும்பு தந்துடுவோம்


============


3 சார்.திருட்டு டிவிடியால் உங்க படத்திற்கு பாதிப்பே இல்லையாம்: ஏன் ?கடைல புகுந்து எல்லா டிவிடியையும் திருடிட்டு வந்துடுவேன்
===============


4 நானும் சமையல் செய்ய சம்பளத்துக்கு ஆள் கூப்பிடுவேன்னு கனவிலும் நினைக்கலமிஸ்.சமையல்காரனை கல்யாணம் கட்டிக்குங்க.மாசம் 5000 ரூ மிச்சம்


============

5 சார்.சாம்சங் போன் பழைய மாடல் போட்டோ எதுக்கு இப்போ அப்டேட்டறீங்க?S3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்ங்க ( சிங்கம்3)


============

6 மாப்ளை கேட்டரிங் சர்வீஸ் பண்றார்னீங்க.சமைக்கத்தெரியாதா?ம்ஹீம்.இது CATடரிங்.பூனை விற்கறவர்==============

7 பட டிக்கெட் ரிசர்வ் பண்ண எதுக்கு ரயில்வே ஸ்டேசன் வந்திருக்கே?படத்தோட டைட்டில் S3ன்னாங்க
===============

8 சார்.யுனிவர்சல் காப் னு டைட்டில் வெச்சா வரிவிலக்கு கிடைக்காது.தெரியும்யா.ரிலீஸ் டைம்ல சர்வதேச சிப்பாய் னு மாத்திட்டாப்போச்சு=============


9 சார்.உங்க பட டைட்டிலை ஆமா 3 ன்னு ஏன் மாத்தீட்டீங்க?எஸ்.3 ன்னு வெச்சா வரிவிலக்கு கிடையாதாம்===============

10 எதுக்காக அந்தப்பொண்ணு மேல காய்கறி யை தூக்கிப்போட்டே?யுவர் ஆனர்.அந்த பிகருக்கு பல வகைல ரூட் விட்டேன்.படியல.பைனலா பீட்ரூட் விட்டேன்=============

11 இனிமே நீங்க பச்சைக்காய்கறி தான் சாப்பிடனும்டாக்டர்.அப்போ கேரட் பீட்ரூட் எல்லாம் ரோஸ்,ரெட் கலர் ல இருக்குமே.சாப்பிடக்கூடாதா?==============

12 டியர்.உனக்கு குளிரும்போது என்னை போர்வையா எடுத்துக்கோ.ஓஹோ.எங்கப்பா துவைச்சுக்காயப்போட்ருவாரு.பரவால்லியா?=============

13 ஹலோ மிஸ்டர்! எல்லாப்பொண்ணுங்க மாதிரியும் என்னை நினைச்சுடாதீங்க.ஐ ஆம் டைப்பிகல் கேர்ள்.அடடே.டைப் தெரியுமா? லோயரா?ஹையரா?==============

14 டியர், எனக்கு போற பக்கம் எல்லாம்  செம வரவேற்பு

 அப்டியா? எங்கே போனீங்க?


ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு இண்ட்டர்வ்யூ


=================


15 மிஸ்! உங்க FACE CUT பிரமாதம்.


சாரி.எனக்கு முக ஸ்துதி பிடிக்காது.

ஓஹோ!அப்போ கொஞ்சம் இறங்கி வந்து வர்ணிக்கட்டுமா?


===========


16 பெண்கள் போர்க்குணம் மிக்கவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்.


மலையாள நாயகி மஞ்சு வாரியர் டீச்சர்.பேர்லயே போர் இருக்கே?
===============

17 டாடி.நான் அஷ்ட லட்சுமியை லவ் பண்றேன்.


அடப்பாவி.ஏதோ ஒரு லட்சுமியை மட்டும் கல்யாணம் கட்டிக்கோ.8 பேருக்கும் எப்டி செலவு செய்வே?
===========


18  உங்க கவிதை எனக்கு ரொம்ப பிடிக்குங்க..


அப்டியா? நான் எழுதுன கவிதை ஏதாவது சொல்லுங்க.

அது வந்து ஆங், உங்களைப்பார்த்ததும் உலகமே மறந்துடுது

====================


19 நாய் மாதிரி வேலை செய்யணும்.ஆனா குரைக்க மட்டும் கூடாது.சம்மதமா?

அதுக்கு யானை அளவு சம்பளம் தரனும்.சம்மதமா?


============

20 நீங்க ATMல பணம் எடுக்கும்போது  திருடன் வந்து மிரட்டுனா பின் நெம்பரை திருப்பிப்போடுங்க , போலீஸ் வரும்

என் பின் நெம்பர் 4444, எப்டி திருப்ப?=====================

0 comments: