Tuesday, July 30, 2019

பிக்சர் ஆப்"த"நைட் 18+

1  அபூர்வமான நிகழ்வுக்கு
அத்தி பூத்தாற் போல எனும் வழக்கு இனி
அத்தி வரதர் எழுந்தருளியது போல என மாறுமோ


==============


2 புகைப்படக்கலைஞர்கள் அடிக்கடி picture of the day
😍
னு எதுனா போஸ்ட் பண்றாங்க ,பிக்சர் ஆப்"த"நைட் டும்"அப்பப்ப போடலாமில்ல?=====================


============
மண்ணின் மக்களாய் இருந்தவர்கள் இன்று மருந்தின் மக்களாய் மாறிப் போனதன் காரணம்...........

3 உழைப்பின்மை,
உணவுக்கட்டுப்பாடு இன்மை,
காய்கறிகள்,பழங்கள் ,தானியங்கள் சாப்பிடுவதைக்குறைத்து ,நொறுக்குத்தீனிகளை சாப்பிடும் மனப்பான்மை,
நேரத்துக்கு சாப்பிடாமல் அலட்சியப்படுத்துதல்,
7 மணி நேர தூக்கத்தைத்தவிர்த்து தூக்கமின்மை,மன அழுத்தம்,ஒர்க் பிரஷர்

=====================


4 அகரம் பவுண்டேசன் பற்றி
,சூர்யா பற்றி வரும் தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.நீட் தேர்வு குறித்த அவரது கருத்துக்கு எதிர் வினை தான் அது================


5 கைம்பெண் (விதவை) ஆண்பால் என்ன தமிழில்?
தபுதாரன் விதுரன்
(இதுல தபுதாரன் க்கு ஒரே அர்த்தம் ,மனைவியை இழந்தவன் ,விதுரன் க்கு அது போக பல அர்த்தங்கள் உண்டு,மனைவியைப்பிரிந்தும் வேறொருவரை மணம் செய்யாமல் இருப்பவர் விதுரன் )


===================


6 1 அழகான மனைவி
2அன்பான துணைவி
3 அறிவான இணைவி அடைந்தாலே/ அமைந்தாலே பேரின்பமே
மொத்தம் 3 − தலைவர் ராக்ஸ்


================


7 அத்திவரதர் சேலத்துலயும் ஒரு பிராஞ்ச் ஓப்பன் பண்ணி இருக்கார் போல.உதய கீதம் படத்துல கவுண்டமணி காமெடி டிராக் ல மரத்துக்கு மரம் உண்டியல் வைக்கற காமெடி மாதிரி ஆகிடுச்சு


==============


8 ரயில்கள் பெரும்பாலும் காவி நிறத்தில் உள்ளன.அது"பாஜக"வின் சதி.எனவே ரயிலின் நிறத்தை மாற்ற வேண்டும்னு போராளிகள் யாரும் இன்னும் கிளம்பலையா?


===============


9 உலகிலேயே பெரிய ராமர்"சிலை உருவாக்க"முயற்சிகள் நடக்குதாம்,அப்போ சீதை மட்டும் தக்காளித்தொக்கா?சீதைக்கும் அதே போல உயரமான சிலை வைக்கனும் னு பெண்ணியவாதிகள் ,மாதர்"சங்கங்கள் போராடலையா?==================


10 கடாரம்"கொண்டான் படம் எடுத்ததுக்காக ராஜ்கமல் யூனிட்டையோ ,ஹீரோ விக்ரம் மை யோ யாரும்"கண்டுக்கலை.அதுல கெஸ்ட் ரோல் ல போலீஸ் ஆபீசரா வரும் செர்ரி மர்டியா (31) வை கொண்டாடிட்டு இருக்காங்க,இதுல செர்ரி ஆர்மி வேற உருவாகுதாம் − ஈரோடு மாவட்ட செர்ரி ரசிகர் மன்றம்


================


11 ஜெய் ஸ்ரீராம் கோஷம"தடை செயயப்பட வேண்டும் ,அதே சமயம் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனமும் தடை செய்யப்படனும்னு போராளிகள் யாரும் கிளம்பலையா?


=============


12 பிங்க் ஒரிஜினலில்"ஹீரோவுக்கு லவ் போர்சனோ,டூயட்டா ,பைட்டோ இல்லை,ரசிகர்களுக்காக தமிழில் அவை சேர்க்கப்பட்டுள்ளன,மெயின் கதை ஓட்டத்தை ,வேகத்தை அவை குறைககாமல் இருந்தால் நல்லது #NerKondaPaarvaiFromAug8


===============


13 ரஜினி போலீஸா நடிச்ச படங்கள் பாண்டியன் ,
கொடி பறக்குது, நாட்டுக்கு ஒரு நல்லவன்
மூன்று முகம் அதிரடி ஹிட்.
3ம் பிளாப் .
தர்பார் கொஞ்சம் ரிஸ்க் தான். #Darbar


=================


14 ரஜினி,கமல் இருவரது லேட்டஸ்ட் படங்களின் ஸ்டில்களைப்பார்க்கும்போது இருவருமே தொடர்ந்து சினிமா உலகத்துலயே தங்கள் பங்களிப்புகளைத்தருவது நல்லது,அரசியலுக்கு வந்து கண்டவங்க கிட்ட திட்டு வாங்கிட்டு ,கைக்காசை நட்டப்படனும்.க்ளிக் ஆகிட்டா மகிழ்ச்சி,இல்லைன்னா இத்தனை வருசம் சம்பாதிச்சதை....


===============


15 சினிமா ஹீரோககளின் அதி தீவிர ரசிகர்களிடம் ஒரு ?.
நாம ஒர்க் பண்ற கம்பெனில குடுக்கற டார்கெட்டை அச்சீவ் பண்ணா இன்சென்ட்டிவ் ,பிரமோஷன் கிடைக்குது.லைப்ல ஒரு கோல் நாமா பிக்ஸ் பண்ணி அதை அடைஞ்சா நமக்கு முன்னேற்றம்.ஆனா யாரோ ஒரு ஹீரோக்காக மாங்கு மாங்குனு U ட்யூப்ஹிட் பண்ணா என்ன கிடைக்குது?


===============


16 ரஜினி போலீஸா நடிச்ச படங்கள் பாண்டியன் ,
கொடி பறக்குது, நாட்டுக்கு ஒரு நல்லவன்

உன் கண்ணில் நீர் வழிந்தால் 4ம் பிளாப் .
தர்பார் கொஞ்சம் ரிஸ்க் தான். #Darbar
அன்புக்கு நான் அடிமை மீடியம் ஹிட் மூன்று முகம் அதிரடி ஹிட்.============


17 போலீஸ் ஆபீசர் கேரக்டரில் ஹீரோக்களின் மெகாஹிட்
1 இது தாண்டா போலீஸ் (Dr.ராஜசேகர்)
3கடமைகண்ணியம்கட்டுப்பாடு(ச.ராஜ்)
2 ஊமை விழிகள் (விகாந்த்) 4 மூன்றுமுகம் (ரஜினி)
7 சாமி (விக்ரம்)
5 குருதிப்புனல்(கமல்) 6 காக்ககாக்க(சூர்யா)
10மங்காத்தா (அஜித்)
8 அக்னிநட்சத்திரம் (பிரபு)
9 தெறி(விஜய்)


===============


18 போராளி வைகோ = நான் இந்த அரசை எச்சரிக்கிறேன்
வெங்கய்ய நாயுடு = தம்பி,இது"கலிங்கப்பட்டி ஆலமரம் திண்ணை அல்ல.பாராளுமன்றம் ,அப்டி கூப்ல உக்காரனும்.ஒரு டீயும் ,மிக்சரும் தருவோம்,சாப்ட்டமா ,போனமானு இருக்கனும்


=============

19 ஷார்ட்டா,ஸ்வீட்டா 3 எழுத்துல வைக்கப்படும் டைட்டில் ,

நீளமா வைக்கப்படும் டைட்டில்
எது ரசிகர்களைக்கவரும்?
படமோ,கன்ட்டென்ட்டோ நீலமாதான் இருக்கக்கூடாது,டைட்டில் நீளமா இருந்தா என்ன?
மயில் தோகை, ரயில் சீனப்பெருஞ்சுவர் இதெல்லாம் நீளம்தான், ரசிக்கப்படலையா?
கொண்டாடப்படலையா?


===============


20 அடுக்ககம் ( அபார்ட்மெண்ட்ஸ்) ல குடி இருப்போர் கவனத்துக்கு,நீங்க 18 வது மாடிலயோ 25 வது மாடிலயோ குடி இருப்பீங்க,உங்களுக்கு வர்ற தபாலை/கூரியர் கவரை டோர் டெலிவரி தரனும்னு எதிர்பார்க்காதீங்க.செக்யூரிட்டி சைன் பண்ணி வாங்கி வெச்சுக்க சொல்லுங்க.நீங்க கீழே போறப்ப கவரைவாங்கிக்கலாம


==================
19=ரயில் வராத தண்டவாள்த்தில் அமர்ந்து போராட்டம் பண்றதுதானே திராவிடப்பாரம்பர்யம்?

 பணத்துக்காக நடக்கும் கொலை, கொள்ளைக்கும், அரசுக்கும் என்ன சம்பந்தம்? - அமைச்சர், சீனிவாசன்:


அப்போ காவல் துறை-னு 1 எதுக்கு இருக்கு? அதை முதல்வர் கண்காணிப்புல எதுக்கு வெச்சிருக்கீங்க?

===================
2 ,  எம்.ஜி.ஆருக்கே துரோகம் செய்த துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலுார் மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டாரா என நினைத்து பார்த்து, ஏ.சி.சண்முகத்துக்கு மக்கள் ஓட்டு போட வேண்டும்.-மதுசூதனன்:


அப்படிப்பார்த்தாச் சசிகலாவுக்கு துரோகம் செஞ்சவர்கள் தானே நீங்க எல்லாரும்?

=================
3   பார்லிமென்டை பொறுத்தவரை, இது எனக்கு அஸ்தமன நேரமாக இருக்கலாம். ஆனால், மாநில அரசியலில், இனிமேல் தான் எனக்கு சூரியோதயம் ஆரம்பிக்கப் போகிறது -மைத்ரேயன்:

 பட்சி கட்சியை விட்டுப்பறக்கப்போகுது, திமுக வில் ஐக்கியம் ஆகப்போகுதுனு அர்த்தமா?

===============
4  ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையால், ஆயிரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள், வேலையை இழக்க நேரிடும்.-கண்ணையா 

அப்போ இத்தனை நாட்களா யாரெல்லாம் துறைல பெஞ்ஜ்சைத்தேய்ச்சுட்டு இருந்தாங்கனு தெரிஞ்சிடும்?


அப்போ அதுக்கு ரெட் சிக்னல்?

=====================


5    ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையால்,  டிக்கெட் கட்டணமும், இரு மடங்கு உயரும் என்பதால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவர்-கண்ணையா 

சேவைக்கு ஏற்ற சேவைக்கட்டணம், காசுக்கேத்த தோசை

=================

6 .   ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையால், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, முதற்கட்டமாக நாடு முழுவதும், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.= கண்ணையா   

ரயில் வராத தண்டவாள்த்தில் அமர்ந்து போராட்டம் பண்றதுதானே திராவிடப்பாரம்பர்யம்?
===================7   மத்திய அரசு கொண்டு வந்துள்ள, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு மசோதாவுக்கு, தி.மு.க., ஆதரவு கொடுத்து உள்ளது. இது, சிறுபான்மையினரின், தி.மு.க., மீதான நம்பிக்கைக்கு முதல் அடி; பா.ஜ., உடனான, தி.மு.க.,வின் உறவுக்கு, முதல் படி.- முரளி அப்பாஸ்  

உதயசூரியனும் , தாமரையும் இயற்கையாவே ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதானே?
================== 


8  தமிழக அரசுக்கு, 4 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. வருமானத்தை மீறிய கடன் உள்ளதால், அ.தி.மு.க., அரசு திட்டங்களை அறிவிக்கலாமே ஒழிய, செயல்படுத்த முடியாது.-கே.எஸ்.அழகிரி  

எப்படி இருந்தாலும் பெரும்பாலான திட்டங்கள் அறிவிக்க் மட்டும் தானே?செயல் தலைவரே முதல்வர் ஆனாலும் திட்டங்கள் செயல்படாமதான் இருக்கும்

=================

9  குறிப்பாக, சமூக நலத்திட்ட உதவிகள், குடிநீர் பிரச்னைகள், சாலை வசதிகளை நிறைவேற்ற முடியாது. =கே.எஸ்.அழகிரி  

வழக்கம் போல எதிர்க்கட்சி மீது பழி போடுவாங்க, கஜானாவைக்காலி பண்ணிட்டுப்போய்ட்டாங்க, மேட்டர் சிம்ப்பிள்

===============


10  இங்கு, கடன் சுமை என்பது, தமிழக அரசுக்கு மட்டுமே தவிர, ஆட்சி செய்பவர்களுக்கு இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாகத் தான் இருக்கின்றனர்.கே.எஸ்.அழகிரி  

ஆட்சியை தக்க வைக்கவே பெரும் பாடு , உன் பாடு என் பாடு ஆகிடுது, இதுல தமிழக நலனுக்காக பாடு படுன்னா முடியுமா?

==============11 'அ.தி.மு.க., தொண்டர்கள், தி.மு.க.,வுக்கு வர வேண்டும்' என, ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவருக்கு எவ்வளவு ஆணவம் பாருங்கள்... தன்னிலை மறக்கும்போது தான், இந்த ஆணவம் வரும். தன்னிலை மறந்திருக்கிறார் ஸ்டாலின். அவருக்கு சவுக்கடி கொடுக்கக் கூடிய தேர்தலாக, வேலுார் தேர்தல் அமைய வேண்டும்.-   கே.பி.முனுசாமி : 

பதிலுக்கு நீங்களூம்  '.தி.மு.க., தொண்டர்கள், அதி.மு.க.,வுக்கு வர வேண்டும்னு அறிக்கை விடுங்க , எக்சேஞ்ச் பண்ணிக்கலாம்.தானிக்கு தீனி

=====================

12  குடிநீர் தேவைக்காகவும், வாய்க்கால் தண்ணீரை நம்பியுள்ள பயிர்களை காப்பாற்றவும், தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், ஆங்காங்கே, குடிநீருக்கான தேவை இன்னும் முழுமை அடையவில்லை என்பதால், அதை பூர்த்தி செய்ய வேண்டிய அவசிய, உடனடி நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ள வேண்டும்.-வாசன் :  

 டாஸ்மாக்ல வேணா தண்ணிப்பிரச்சனையே இல்லை

==================
13 ஆந்திராவில் ஆட்சி மாறினாலும், அங்குள்ள முதல்வர்கள், தங்கள் கொள்கையில் இருந்து மாறவில்லை. சந்திரபாபு நாயுடுவை மிஞ்சும் வகையில், ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுகிறார். பாலாற்றில் இருந்து, ஒரு சொட்டு தண்ணீர் கூட, தமிழகத்திற்கு விடமாட்டோம் என்ற வைராக்கியத்தோடு, அண்டை மாநில முதல்வர்கள் மிக கவனமாக இருக்கின்றனர். -துரைமுருகன் 

தமிழ்கத்துக்கு தண்ணி தந்தா அவங்களுக்கு அங்கே தண்ணி காட்டிடுவவாங்களே?

=====================


14   எட்டு வழி சாலை திட்டத்தின் பெயர் அதிவேக சாலை என்று மாற்றப்பட்டுள்ளது! -எடப்பாடி_பழனிச்சாமி

# மித வேகம் மிக நன்று என்பதே"போக்குவரத்து வேதம்


=================


15 8 வழிச்சாலையை மக்கள் விரும்பாவிட்டால் வேறு மாநிலத்திற்கு மாற்றலாமே? உச்சநீதிமன்றம் கேள்வி!

# மாத்தலாம்"யுவர்"ஆனர்,ஆனா"சென்னை டூ"சேலம் ரோடுதான்"பிளானே?அப்போ எதெதை"எங்கெங்கே"மாத்தனும்?


===================
16 நாங்கள் நினைத்தால் திமுக என்ற கட்சியே காணாமல் போய்விடும்!-
ராஜேந்திரபாலாஜி
# நினப்பு தான் பொழப்பைக்கெடுக்குமாம்


==================


17 புதிய கல்வி கொள்கையில், யாரோ சொல்லிக்கொடுத்த கருத்தை நடிகர் சூர்யா பேசுகிறார்!” – ஹெச்.ராஜா
# நீங்க போட்ட ட்வீட்டையே ஒரு பிரச்சனை னு வந்தப்ப அது நான் இல்லை ,அட்மின்னு ஜகா வாங்குன நீங்க அதைப்பத்தி பேசலாமா?


=============

18 "ரஜினி, சூர்யா போன்றவர்கள்
மக்களை குழப்புகிறார்கள்": தமிழிசை.
# நல்லவேளை,கமல் இன்னும் நீட் பிரச்சனை பற்றி கருத்து சொல்லல,சொல்லி இருந்தா அவரையும் லிஸ்ட்ல சேர்த்திருப்பாரு


==================


19 ஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே..!
ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..!
#இவரு போற ஸ்பீடைப்பார்த்தா அடுத்த பிரதமர் இவரு தான் போல.


===============


20 ரஜினி, சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள். - தமிழிசை # உங்களுக்கு (பாஜக) ஆதரவான நிலை எடுத்தப்ப ரஜினியை வாழ்த்தறேன்,வரவேற்கிறேன்,னு வசனம் பேசுனீங்க,இப்போ விசனப்படுறீங்களே?


=====================

16

Monday, July 29, 2019

போட்டுக்”குடுத்து” பழக்கம் இல்லை, வாங்கிதான் பழக்கம்

1   : மத்திய உள்துறை அமைச்சரிடம், யாரைப் பற்றியும், எந்தவிதமான புகாரையும் கூறவில்லை. அது போன்ற பழக்கம், எனக்கு எப்போதும் இருந்தது கிடையாது.- பன்னீர்செல்வம்


அதாவது போட்டுக்”குடுத்து” பழக்கம் இல்லை, வாங்கிதான் பழக்கம்கறாரு?


=================


2 , : ஆள் பிடிக்கும் பணியில் உள்ள முதல்வர், இ.பி.எஸ்., எங்கள் கட்சி, மாவட்ட செயலர்களிடையே, பணம் மற்றும் அரசு ஒப்பந்த பணி வழங்குவதற்காக, கட்சி மாற வேண்டும் என, கூறியுள்ளார்.-தினகரன்

நைசா உங்களுக்கும் கட்சில ஒரு பதவி கேட்டு நீங்களும் மாறிட வேண்டியதுதானே?

=====================
3  அதன், 'ஆடியோ' விரைவில் வெளியிடப்படும்.-தினகரன் # ஆடியோ லாஞ்ச் ல கலந்துக்க ஜெயில்ல இருந்து பரோல்ல சசிகலா வருவாரா>ஜெயில்ல இருந்து பரோல்ல வெளில வர சசிகலாக்கு ஒரு சாக்கு கிடைச்சிடுச்சு

======================
4   சி.பி.ஐ., போன்ற அமைப்புகள், எங்கள் கட்சியினரை மிரட்டி, பா.ஜ.,வில் சேர வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அவர்களின் கனவு பலிக்காது=மம்தா பானர்ஜி:\

மடில கனம் இருந்தாத்தானே வழில பயம், மிரட்டற அளவுக்கு அவங்க என்ன தப்பு பண்ணாங்க ?>

=============


5   மூப்பனார் பெயரை வைத்து, வாசன் அரசியலுக்கு வந்ததாக, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறுகிறார். அப்படியெனில், ராஜிவ், சோனியா இல்லாமலா, ராகுல் அரசியலுக்கு வந்தார்>?. -யுவராஜா 

 சபாஷ் .  தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி

================

6 அரசியலில் வாரிசு இருப்பதும், உழைத்து வருவதும் உண்மை தான். காங்., கட்சியில் இருந்து பிரிந்திருந்த போது, இளங்கோவன், சிதம்பரம் போன்றோர், கட்சியை செய்யாத விமர்சனத்தை, வாசன் எப்போதும் செய்ததில்லை.-யுவராஜா 

 ஒரே கல்லுல 2 மாங்கா , வாசனை பாதுகாத்த மாதிரியும் ஆச்சு , போற போக்குல ப சி , ஈவிகேஎஸ் இவங்க 2 பேரையும் போட்டுக்கொடுத்த மாதிரியும் ஆச்சு

==================

7 அரசியல் நாகரிகம் தெரியாத அழகிரிக்கு, இவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.-யுவராஜா  

 அரசியல்ல ஏதுங்க நாகரீகம்? அநாகரிகமா நடந்துக்கிட்டாதானே அது அரசியல்வாதிக்கு அழகு?
==============
8  ஆட்சி என்பது, துண்டு போன்றது; கட்சி என்பது, வேட்டி போன்றது. துண்டு போனால், அதை பிறகு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், வேட்டி போனால், அது நமக்கு அவமானம்-வைத்திலிங்கம், 

வேற கட்சில்; சேர்ந்தா வேற கரை வேட்டி கிடைக்குமே?

================== 
 9. நம் மானத்தைக் காக்கக்கூடிய தேர்தலாக, வேலுார் லோக்சபா தேர்தல் இருக்கிறது. இதை, மனதில் வைத்து, தேர்தலில் வெற்றி பெற்று, நம்மை நிரூபிக்க வேண்டும்.-வைத்திலிங்கம்,  

இப்படிச்சொன்னா ஜனங்க தோற்க வெச்சு மானத்தை வாங்கிடப்போறாங்க 

=================
10  'நீட்' தேர்வுக்கு எதிராக, அ.தி.மு.க., - தி.மு.க., - எம்.பி.,க்கள், லோக்சபாவில் ஒற்றுமையுடன் குரல் கொடுத்தனர். ஹிந்தி, ஆங்கில மொழிகளில், தபால் தேர்வு நடத்துவதை மாற்றி, பிராந்திய மொழிகளில் நடத்தவும் கோரினர். இதற்கு, மத்திய அரசு பணிந்து, தபால் துறை தேர்வை ரத்து செய்தது. இதுபோல், தமிழக பிரச்னைகளில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், பார்லிமென்டில் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான், நல்ல பலன் கிடைக்கும்.=  தனியரசு எம்.எல்.ஏ.,   

நீட் பிரச்சனைல இரு ம்கட்சிகளும் நீட்டா நடந்துக்கிட்டாங்க அப்டிங்கறாரு

=====================
11  தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட, தேசிய தகவல் ஆணையம், சில ஆண்டுகளாக, முழுமையாக செயல்படவில்லை.=தினகரன்  

 தகவல் அறியு,ம் உரி,மை சட்டப்படி அது ஏன்?னு தகவல் கேட்டுப்பாருங்க 

-==============
12  தகவல் அறியும் உரிமை சட்டத்தை முற்றிலும் செயலிழக்க செய்யும் வகையில், மத்திய அரசு அச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து, லோக்சபாவில் நிறைவேற்றி உள்ளது. =தினகரன்  

 அதெல்லாம் போகட்டும், நம்ம கட்சில இப்போ எத்தனை பேரு இருக்காங்க அப்டினு தகவல் சொல்ல ம்ஜுடியுமா?

==================
13 தன்னாட்சி அமைப்புகளை வீழ்த்தி, மத்திய அரசு தம் கட்டுப்பாட்டில் எடுத்து வருவது, ஜனநாயகத்திற்கு பேராபத்தாக முடிந்து விடும்.-தினகரன்  


ஒரு பணநாயகம் ஜனநாயகம் பற்றி கவலைப்படுதே அடடே!

====================


15 ] கல்வித்துறை சந்தித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காணாமல், கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபடுகிறது. -ஜி.ராமகிருஷ்ணன்  :

 கல்வித்துறை சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனை  இதுதான் போல 

===================


16 கஸ்துாரி ரங்கன் அறிக்கையில், 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை மூட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், தனியார் கல்வி நிறுவனங்கள் பெருக வாய்ப்பு ஏற்படும். கல்வியை தனியார் மயமாக்குவது, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும்.  -ஜி.ராமகிருஷ்ணன்  :

டாஸ்மாக் ல 20 கஸ்டமருக்கு கம்மியா வந்தா அதை மூடனும் நு சொல்லுவாங்களா?

===================

17  மேற்கு வங்கத்தின் பெயரை 'பங்கலா' என்று மாற்ற அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யும் எந்த திட்டமும் இல்லை -  மத்திய இணை அமைச்சர் 

 பங்கலா -னு மாத்துனா அது பங்களாதேஷ் பெயர்க்குழப்பம் ஏற்படுமா?


பங்கலா-னு பெயர் மாற்ற வாய்ப்பு மங்கலா இருக்கு?

====================

18  'அனைத்து முன்னாள் பிரதமர்களையும் நினைவு கூரும் வகையில், பிரம்மாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும்,'' = மோடி 

முன்னாள் முதல்வர்கள் மட்டும் என்ன தக்காளித்தொக்கா?னு கேட்டு ஒரு கூட்டம் கிளம்பப்போகுது

--------------------

19 'தமிழகத்தில் தனியார் வேலை வாய்ப்புகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கே வழங்கும் சட்டம்தேவைப்ராமதாஸ்

 ஆந்திரா வில் 75% தெலுங்கர்களுக்கே வேலை வாய்ப்புனு அறிவிச்ச்தும் ஒரு 5% கூட்டி 80% வேணும்கறார் போ;;அ

=================

20   அ.தி.மு.க.,வில் உள்ளவர்களை தன் கட்சியில் இழுக்க, தினகரன் நாடகமாடுகிறார். இது நடக்காது. தினகரன் செய்வது, போர்ஜரி தொழில்-அமைச்சர் ஜெயக்குமார் 


அவரைக்கேட்டா அதுதான் சர்ஜரி அபொடிம்பாரோ?


===================