Tuesday, April 29, 2025

SARANGAPANI JATHAGAM-சாரங்கபாணி ஜாதகம் (2025) -( தெலுங்கு ) - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

 

25/4/2025  முதல்  திரை அரங்குகளில்  வெளியான இந்தப்படம்  கமர்ஷியலாகவும் ஹிட் அடித்துள்ளது .விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைக்குவித்து வருகிறது , கமல் நடித்த பேசும் படம் ,மைக்கேல்  மதன  காம ராஜன்  ஆகிய படங்களிலிருந்து  இன்ஸ்பையர்  ஆகி  சில காட்சிகளை  உருவாக்கி இருந்தாலும்  இதன் இயக்குனர் மைக்கேல்  மதன காமராஜன் படத்திற்கு மட்டும் டைட்டிலில் கிரெடிட் கொடுத்துள்ளார் .மெயின் கதை  புதுசு .

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லனுக்கு  ஒரு காதலி உண்டு . ஒரு கோடீஸ்வரனை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி  திருமணம் செய்து கொள்ள காதலியிடம் சொல்கிறான் வில்லன் .காதலியும்  அது போலவே  செய்ய  இப்போ சொத்துக்களை அடைய  அந்தக்கோடீஸ்வரனைக்கொல்ல  வேண்டும் . ஏதாவது  இளிச்சவாயன் கிடைத்தால்  அவன்  மூலம்  கொலையை செய்ய  வில்லன் திட்டம் போடுகிறான் 


நாயகன்  ஒரு ஜோசியப்பைத்தியம் .வாழ்வில்  எந்த ஒரு நிகழ்வையும் செய்யும் முன்  ஜாதகம் பார்த்து  அதன்படி தான் செய்வான் கார்  விற்கும் கம்பெனியில் சேல்ஸ்  எக்ஸ்க்யூட்டிவ் ஆக நாயகன் பணியாற்றுகிறான் .அதே கம்பெனியில் மேனேஜர் ஆக  நாயகி பணி ஆற்றுகிறார் 


நாயகனுக்கு   இரு வருடங்களாக நாயகி மீது லவ் , ஆனால்  அவளிடம் சொல்லவில்லை .தயக்கம் தான் .நாயகனின் ஜாதகப்படி    இன்று  ஒரு எதிர்பாராத  அதிர்ஷ்டம் நிகழும்  என இருக்க   நாயகன் இன்று தன்  காதலை வெளிப்படுத்தத்திட்டம் போடுகிறான் .


இப்போ  ஒரு டிவிஸ்ட் , நாயகி நாயகனிடம் தன காதலை  வெளிப்படுத்துகிறாள் .நாயகனுக்கு ஒரே கொண்டாட் டம் . நாயகன் ,நாயகி இரு  தரப்புப் பெற்றோரும்  சந்தித்துப்பேசி திருமணம்  நிச்சயம் செய்கிறார்கள் 



இப்போ ஒரு டிவிஸ்ட் . நாயகன் ஒரு பிரபல  கை  ரேகை  நிபுணரிடம்  தன்  எதிர்காலம் பற்றிக்கேட்க  அவர் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்கிறார் . நாயகன்  தன வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு கொலை செய்து  விடுவான்   என்பதே அது 


 இதைக்கேட்டு  நாயகன் அதிர்ச்சி  அடைகிறான் . திருமணம் ஆனபின்  கொலை நடந்தால்  பிரச்சனை என்பதால்   திருமணத்தைத்தள்ளிப்போடுகிறான் .நாயகிக்கு நாயகன் மீது சந்தேகம் வருகிறது 


சாகும் தருவாயில் உள்ள   சுகர் பேஷண்ட்  ஆன ஒரு பாட்டியைக்கொலை செய்ய  திட் டம் போடுகிறான் . ஆனால்  அது ஒர்க் அவுட் ஆகாமல்  அவள் தானாகவே இறந்து விடுகிறாள் .இரண்டாவது   முயற்சியாக  இன்னொரு நபரைப்போட்டுத்தள்ளப்பார்க்கிறான் .அது வும்  பெய்லியர் 


 இப்போது  நாயகன்  வில்லனிடம் வந்து ஐடியா கேட்கிறான் . வில்லன்  தான் கொல்ல  இருக்கும் கோடீஸ்வரனைக்காட்டி  இவனைக்கொன்று விடு என்கிறான் . நாயகன்  அதற்கான  முயற்சிகளில் ஈடுபடும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக பிரியதர்ஷி புலிகொண்டா  அசால்ட் ஆக நடித்து இருக்கிறார் . தமிழ் ரசிகர்களுக்குப்பிடித்துப்போகும் தமிழ்  நாட்டு முக வெட்டு இவருக்கு . காமெடி , காதல் , ஆக்சன்  எல்லாம் நன்கு வருகிறது இவருக்கு 


நாயகி ஆக ரூபா கொடுவாயூர் அழகாக  வந்து  போகிறார் .இவர் உண்மையில் ஒரு டாக்டர் . அதனால் தானோ  என்னவோ  இவருக்கு  ரொமான்ஸ் சரியாக வரவில்லை 


நாயகனின் நண்பன் ஆக வெண்ணிலா கிஷோர்   காமெடிக்காக .இப்போதெல்லாம் 90% தெலுங்குப்படங்களில் இவர் இருக்கிறார் 


படத்தில் நடித்த  மற்ற  அனைவருமே அவரவர்  பாத்திரங்களை சிறப்பாக செய்து இருக்கிறார்கள் 

விவேக் சாகரின்  இசையில்  ஒரு காமடிப் படத்துக்கு  என்ன மாதிரி  பிஜிஎம்  வேண்டுமோ அதைத்தந்திருக்கிறார் .பி ஜி விந்தா வின்  ஒளிப்பதிவு  கச்சிதம் . நாயகன் , நாயகி . காமெடியன் மூவரையும் அழகாககாட்டி இருக்கிறார் மார்த்தாண்ட கே வெங்கடேஷின்  எடிட்டிங்கில்  படம் இரண்டே கால் மணி நேரம் ஓடுகிறது . எங்கும் போர் அடிக்கவில்லை திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர் மோகன் கிருஷ்ண  இந்திராகாந்தி 

சபாஷ்  டைரக்டர்


1  கண் மூடித்தனமாக  ஜாதகத்தை  நம்ப வேண்டாம் என்ற  கதைக்கருவை எந்த அளவுக்குக்காமெடியாக சொல்ல முடியுமோ  அந்த அளவுக்கு சொல்லி இருக்கிறார்  இயக்குனர் 


2  குடும்பத்துடன் பார்க்கத்தக்க  கண்ணியமான கலாட்டாக்காமெடி காட்சிகள்  படத்திற்கு பலம் 


3 வசனகர்த்தா  கிரேசி மோகன் பாணியில்  வார்த்தை ஜாலக்காமெடியில்  விளையாடி இருக்கிறார் 


  ரசித்த  வசனங்கள் 


1  மேடம் , இந்த ட்ரஸ்ல  நீங்க ரொம்பஅழகா இருக்கீங்க 


 இரண்டு வருடங்களாக இதே டிரஸ் தான் போட்டுட்டு கம்பெனிக்கு வர்றேன் ,ஏன்னா இதுதான் கம்பெனி யூனிபார்ம் 


2  ஒரு பொண்ணுக்கு  பையனிடம் எதிர்பார்ப்பது , தேவைப்படுவது லாயல்ட்டி ,  ஹானஸ்ட்டி .,ப ர்சனாலிட்டி .இவை மூன்றும் உன் கிட் டே  இருக்கு .அது போக நீ  ஒரு ஸ்வீட் பர்சன் 


3  இந்த   உலகத்தில் எத்தனையோ கிரிமினல்ஸ் தனக்கான தண்டனையை அடையாம இருக்காங்க 


4 யாரு இவன் ? உங்க வீட்டுப்பால் காரனா? 


 யோவ் , அவரு  மாப்பிள்ளை 


5   ஹி ஈஸ் சிங்கிள்  வாண்ட்  டு  மிங்கிள் 


6  விஷ யூயூ   ஏ ஹேப்பி  புரடக்டிவ்  மர்டர் 


7  ஐ ஆம்   ஹெட்  வெயிட்டர் , ஆல் சோ   ஹெவி  வெயிட்டர் 


8 உங்க பையனுக்கு உங்க முக சாயல் இல்லை , ஆனா உங்க மனைவி முக சாயல் இருக்கு 


 ஏண்டி , நிஜமா அவன் என் பையன் தானா? 



 சுத்தம் , 30 வருடங்கள் கழித்து  என் மேல சந்தேகமா? 


9   அவரு  ஒரு ஆல்பா மேல் 


 இவை சிக்மா பீமேல் 


ஓ , காமாவா? 


 ஆமா 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ரொமாண்டிக்  சப்ஜெக்ட்டில்  நாயகன் - நாயகி கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட் ஆகவில்லை .காதல் காட்சிகள் : கம்மி 


2  இரண்டு   வருடங்களாக   நாயகனுடன் ஒரே கம்பெனியில் ஒரே  செக்சனில்  பணியாற்றும் நாயகிக்கு நாயகனின் ஜாதகப்பைத்தியம் தெரியாமல் இருப்பது எப்படி ?


3  கோடீஸ்வரர்  பார்ட்டிக்கு வரும்போது  செக்யூரிட்டி இல்லாமலா வருவார் ?


4  நாயகன்  ஒரு கர்ச்சீப்பால் முகத்தை மறைத்துக்கொண்டால்  நாயகிக்கு அவனை அடையாளம் தெரியாதா? உயரம் , உடல் மொழி   காட்டிக்கொடுக்காதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+   CLEAN U  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான  காமெடி டிராமா  பார்க்க நினைப்பவர்கள் ரசிக்கலாம் . ரேட்டிங் - 2.5 / 5