Wednesday, November 30, 2016

கவுதமி- காரல்மார்க்ஸ் -கமல்

இடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையானவை: விஜயகாந்த் # எப்பவும் உண்மை மைனாரிட்டி.பொய் மெஜாரிட்டி ங்கறாரா?===============2 இனி டெபிட் கார்டு மூலம் பிக் பஜாரில் ரூ 2,000 பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு # எபிக் ஐடியானு நினைச்சுக்கிட்டாங்க=============3 பழைய ரூ நோட்டை மாற்றுவதில் முறைகேடு.. வங்கி அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை # சீசன் பிஸ்னெஸ் மாதிரி பேங்க் ஆபீசர்ஸ் செம சம்பாதிப்பு==============4 3 தொகுதி முடிவு: அதிமுக 54.6%; திமுக 37.8%; பாஜக- 2.5%; தேமுதிக 1.3%; நாம் தமிழர்- 0.6%;பாமக- 0.3% # டாக்டர் அய்யாக்கு 3 தொகுதிலயும் நாமம்============5 500,1000 நோட்டை மாற்ற கியூவில் நின்றாலும் போலீஸ் அடி உதை சோஷியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ ஒரு 500 தூக்கிப்போட்டா கவ்விக்கும்
================6 தேமுதிகவை விட பாமகவுக்குத்தான் டேமேஜ்.1000ஓட்டுக்கேஅல்லாடியபரிதாபம் அய்யா ஒரு விளக்கம் கொடுப்பார் பாருங்க.ஐஆம் வெய்ட்டிங்===========7 டெல்லியில் நடு வீதியில் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்ட பெண்கள்# நெல்லிக்குப்பமோ டெல்லியோசண்டைல பெண்கள் கில்லி தான்============8 இது போன்ற மோசடியான தேர்தல்களை தமிழகம் இதுவரை கண்டதில்லை- டாக்டர் ராமதாஸ் # மக்கள் இவரைக்கண்டுக்கலைங்கறதை சுத்தி வளைச்சு விக்ஸ்னு எழுதறாரு===========9 3 தொகுதியிலும் அதிமுக வென்றாலும் எதிர்காலத்தில் தோல்வியையே தழுவும்.. மு.க. ஸ்டாலின் # எதிர்க்கட்சிக்கு எதிர்காலமே இல்லைங்கறாங்களே?==============10 மோடி பாட்டுக் கச்சேரியில் பேசுவார்.. நாடாளுமன்றத்தில் பேசமாட்டார்.. ராகுல் # கவுதமியை சந்திப்பார்.எம் பிக்களை.சந்திக்க மாட்டார்===============11 இளைஞர்கள் மத்தியில் இருப்பது எனது பலம்.. பிரதமர் மோடி பேச்சு நீங்கள் (ஆட்சியில்)இருப்பது சாமான்ய மக்களுக்கு பலவீனம் ?
================12 மக்கள் என் பக்கம் உள்ளதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளனர் : ஜெ # ஆனா நீங்க மட்டும் மக்களை.விட்டு ஒரு தூரத்துலயே இருக்கீங்க அது ஏன்?==============13 தே.மு.தி.கவை பின்னுக்கு தள்ளிய நோட்டா # கேப்டனுக்கு டாட்டா சொல்லுது டேட்டா
===============1 4 விஜய் மல்லையாவின் ரூ.1,201 கோடி கடன் தள்ளுபடி: பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம் # SBI பங்குகள்.சரியும்.முதலீட்டாளர்கள் கவனம்==============15 கார்ல்மார்க்ஸ் சொன்னதைத்தான் மோடி செய்கிறார் - உமாபாரதி #,கவுதமியை சந்திக்கவெல்லாம் கூடவா காரல்மார்க்ஸ் சொன்னாரு?============16 மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக, ரொக்கப் பணம் வழங்கப்படாது"- சக்திகாந்த தாஸ் அறிவிப்பு # மகிழ்ச்சி============17 கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் புதிய ₹2000 நோட்டுகள் பறிமுதல்..# 2000ரூ நோட்டு வெச்சிருக்கறவங்க எல்லாரும் தீவிரவாதினு அறிவிச்சுடுவாங்களோ?
===========18 விவசாயிகளுக்கான திட்டத்தை இலாகா இல்லாத முதல்வர் ஜெ எப்படி அறிவித்தார்?- ஸ்டாலின் கேள்வி # சபாஷ்.முதல்வன் பட் ட்விஸ்ட்=============19 திமுக வை எந்த தீய சக்தியாலும் அழிக்க முடியாது -ஸ்டாலின்.

# முள்ளை முள்ளால தான் எடுக்கனும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே?


================

20 எதிர்காலத்தில் அதிமுக தோல்வி அடையும். -ஸ்டாலின்.
# நாளை கிடைக்க இருக்கும் பலாக்காயை விடுங்க.இன்னைக்கு கைவிட்டுப்போன கிலாக்காய் பத்தி

=============

ஏத்துன விளக்கை அணைக்க ஒரு பொண்ணு

1  நாம ஒரு பொண்ணுகிட்ட பேசலாம்னு போகும்போது நமக்கு முன்னாடி 4 பேரு கடைய விரிச்சி உட்காந்துருக்கானுங்கஅஞ்சாதே.5வது கடை உன்னுது. 6 வது கடை என்னுது

===========

2 இன்ஸ்பெக்டர்.கள்ள நோட்டுன்னு எப்டி கண்டுபிடிச்சீங்க?புதுசா வந்த.2000ரூ நோட்டுல காந்தி போட்டோ கிடையாதுனு தெரியாம வேலை பாத்திட்டாக

=============

3 தலைவரே! நாம சேத்து வெச்ச எல்லா கறுப்புப்பணமும் மர் கயா வா?'உடன்பிறப்பே! எப்பவும் போலீசைவிட திருடன்தான் நல்லா யோசிப்பான்

===============

4 சார். சன் டி விக்கு நன்றி னு சொன்னீங்களே எதுக்கு?
அதுல தான் பிச்சைக்காரன் காமெடி சீனும்.,சிவாஜி பட ரஜினி பஞ்ச் சீனும் காட்டி ஐடியா குடுத்தாக


=============


5 டாக்டர்.அப்போல்லோ ல 2 மாசமா ICU ல இருந்த பேஷண்ட்டை திடீற்னு எப்டி சரி செஞ்சீங்க?500ரூ ,1000 ரூ செல்லாதுனு காது கிட்டே போய் சொன்னோம்


=============

6 பேங்க் கவுன்ட்டர்ல ஏன் இத்தனை கூட்டம்?எல்லாம் மோடி யோட என் கவுண்ட்டரால தான்


============

7 வர இருக்கும் எங்க ஆள் படம் 500 கோடி வசூல் பண்ணும்யோவ்.500 ரூபா நோட்டும் இனி செல்லாது.100 கோடி வடையும் இனி ஆகாது

=============

8 சார்.உங்க புது படத்துக்கு 2,இசை அமைப்பாளர்களாமே?ஆமா.எப்பவும் எனக்கு 2 தான் பிடிக்கும்

=================

9 சார்,  உங்க  படம் பாகம் 2 -ல் என்ன ஸ்பெஷல்?

 முதல் பாகம் முடிஞ்ச பின் ஹீரோயினுக்கு டைவர்ஸ் ஆச்சு,  2  வது பாகம் ஆரம்பிக்கும்போதே புரொடியூசருக்கு டைவர்ஸ்


==================

10 தலைவரே!,நீங்க சேர்த்து வெச்ச கறுப்புப்பணத்தை என்ன செய்யப்போறீங்க?நான் சாணக்கியன்.நகையாவும் ,நிலமாவும்,டாலராவும் வெச்சிருக்கேன்.

===============

11 டாக்டர்.கோபத்தை படிப்படியா குறைக்கணும்.என்ன வழி?10 மாடிக்கட்டிடம் ஏறி இறங்குங்க கோபம் வரும்போதெல்லாம்


==============

12 குருவே!500, 1000 ரூ வை இப்போ திருப்பதி உண்டியல்ல போட்டா அது பாவத்துல சேருமா புண்ணியத்துல சேருமா..?முதல்ல உண்டியல்ல சேரும்.

==================


13 யானைகளுக்கு வெட்டின குழில எறும்புகள் விழத்தான் செய்யும்.னு சொல்றாங்களே?ஆனா யானைகள் எல்லாம் தப்பிச்சிடுதே?மாட்னது பூரா எறும்பு

================

14 சார்.ஓப்பனிங் ல ஹீரோயினை பைக்ல கூட்டிட்டு.500கிமீ போறீங்கசார்.கதை என்ன?
அவ்ளோவ் தான் கதை.


===============

15 சார்.படத்துக்கு பாசிட்டிவ் ரிவ்யூஸ் வர ஆரம்பிச்சிடுச்சு
ஆமா.பொது ஜனங்க நாளைக்குதானே பார்ப்பாங்க.நெகடிவ் ரிவ்யூ வரும்

===============


16 சார்.படத்துல வர்ற 5 வில்லன் கள் ல 4 பேரைஒரே டைம் ல ஷூட் பண்றீங்க.ஓஹோ5 வது ஆளை ?
படத்தை இழுக்கனும்ல? வெயிட் & ஷூட்================

17 படம் பிளாக் பஸ்டர் ஆகிடுச்சாம் ?படம் பார்த்த ஜனங்க சொன்னாங்களா ?
இல்ல.படம் எடுத்த டைரக்டரே சொல்லிட்டாரு

================


18 குருவே! கடலை எண்ணெயில் விளக்கேத்தினா கடன் வரும் என்று ஒரு நம்பிக்கை. இருக்கே உண்மையா?

விளக்கேத்துனா வெளிச்சம்தானே முதல்ல வரும்?

===================


19  என் வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு தேவைன்னீங்க, சரி, இப்போ எதுக்கு இன்னொரு மேரேஜ்?

 அந்த ஏத்துன விளக்கை அணைக்க ஒரு பொண்ணு, ஹிஹி


====================


20  மிஸ்! உங்களுக்கு பாய் ஃபிரண்ட்ஸ் யாரும் இல்லையா?

 யா

 அதுக்காக பேங்க் செக் லீஃப் ல  DATE    - காலம் ல   டில் நவ் நோ டேட்டிங் அப்டினு எழுதனுமா?

===================

Tuesday, November 29, 2016

ஊரு உருப்பட்ட மாதிரிதான்

1 1962ல் என்னோடு, தி.மு.க.,வுக்கு புறப்பட்டவர்கள் ஏராளம், பலரும் விலகி விட்டனர்,நான் நல்ல நிலையில் இருக்கிறேன்-துரைமுருகன் # பழைய ஆட்கள் பலர் விலகிட்டாங்கன்னு சொன்னா கலைஞர் கோவிச்சுக்க மாட்டாரா?

============

2 ரூ.1000, ரூ.500 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ‘‘விளைவுகள் சரியாக நீண்ட காலம் ஆகும்’’ ப.சிதம்பரம # கன்னித்தீவு கதை போல் இழுத்துட்டே போகும்னு தோணுது

================

3 பிரதமரின் அறிவிப்பால் வசூல் பாதிப்பு இல்லை திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் # பாவக்கணக்கை புண்ணியக்கணக்கு ஆக்க முயற்சி போல

============

4 கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு -தமிழிசை # இதை நீங்க அடிக்கடி திருப்பித்திருப்பி சொல்றதாலதான் டவுட்டே வருது

--

============
5 தி.மு.க. சார்பில் 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் கருணாநிதி அறிவிப்பு # இதுவே அதிமுக நடத்தினா அடிமை சங்கிலி போராட்டம்
===============

6 நாட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள் எனது இதயத்தைப் பெரிதும் பாதித்துள்ளன- # வீட்டில் நடக்கும் அழகிரி-ஸ்டாலின் சண்டையைப்பற்றி சொல்றாரு போல

===============

7  தமிழகத்தில் முதல் எஜமானர்கள், விவசாயி -பிரேமலதா # இப்டி சொல்வீங்கன்னு தெரிஞ்சுதான் தானைத்தலைவர் நானும் விவசாயக்குடும்பம்தான்னு சொல்லிட்டாரு


============

ஜனநாயகத்தை காக்க காங்கிரப்ஸ் தலைமையில் ஒன்று சேர வேண்டும்! - திருமாவளவன் #ஊரு உருப்பட்ட மாதிரிதான்


=============9 டாக்டரான எனது கோட்டும் ஒயிட் சம்பாதித்த நோட்டும் ஒயிட்தான். -தமிழிசை # சாப்பிடறது கூட ஒயிட் ரைஸ் தான்,குடிப்பது ஒயிட்ரோஸ்=============10 ரூபாய் நோட்டு பிரச்சனையில் நேர்மையாளர்க்கு எவ்வித சிரமமும் இல்லை - மோடி # அவங்களுக்கு வீடு தேடி பணம்.வருமா ஜி?================11 புதிய ரூபாய் நோட்டுகளுடன், பழைய, 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்க  அரசு

அனுமதிக்க வேண்டும்.- மம்தா பானர்ஜி: # மேடம் கிட்டே பழைய 1000 ரூ நோட்டு ஸ்டாக் இல்ல போல


===================


12 

நாட்டில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது, தீய நோக்கத்துடன் கூடிய நடவடிக்கை.-அகிலேஷ் யாதவ்: # தீய எண்ணங்கள் கொண்ட கறுப்புப்பண முதலைகளுக்கு எதிரான நடவடிக்கை


================

13 ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட்? அடுத்த அதிரடிக்கு பிரதமர் தயார் #  இது அதிரடி மாதிரி தெரியல, அரசோட ஜேப்படி மாதிரி தெரியுது.==================

=======================


15 பத்திரப்பதிவு வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி:அரசு திட்டங்களுக்கு சிக்கல் # ரியல் எஸ்டேட்  பிஸ்னெஸ்   ஸ்டேட்டஸ் ரொம்ப மோசம் ஆகிடும்


-==========================

16 ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் திருமாவளவன்
# விஜய்காந்த்தை முதல்வர் ஆக்கனும்னு சொன்ன ராசியான அதே வாய்

============

17 திமுக வின் தலைவர் கருணாநிதியா ஸ்டாலினா .......... விஜயகாந்த் # தேமுதிக வில் முடிவு எடுப்பது பிரேமலதாவா?விகாந்த்தா?ன்னு கலைஞர் கேட்டுட்டா?


=============

18 ராகுலை பிரதமராக்க வேண்டும் - திருமாவளவன்
# திருமா வுக்கு நெட் வாசிகள் குருமா வைக்கப்போறாங்க


====================

19 திருமண செலவுகளுக்கு பணம் எடுக்கும் விதிமுறைகள்-ரிசர்வ் வங்கி # நல்லவேளை.எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.இவங்க ரூல்சை படிக்கத்தேவை இல்ல

===============

20 ரூ.650 கோடி செலவில் ஆடம்பரத் திருமணம்: ஜனார்தன் ரெட்டி அலுவலகங்களில் அதிரடி சோதனை # வளர்ப்பு மகன் திருமணம்னு சொல்லுங்க .விட்டுடுவாங்க

==================

பெண்களைக்கவர்வது எப்படி?

1  நெற்றியில் முத்தம் கிடைத்தால் அது சாதம்.

கன்னத்தில் முத்தம் கிடைத்தால்
அது பிரசாதம்.
உதட்டில் கிடைத்தால் அது வரப்பிரசாதம்


=============

2 மேடம்.மாடில போர்சன் காலியா இருக்கா?ன்னு கேட்கறீங்களே?ஏன்?கிரவுண்ட் ப்ளோர் வேணாமா?


அப்சரா.மேட்சுக்கு மேட்ச்.


==============

3 காமெடி நடிகர்களில் சமூக நல ஆர்வலர்கள்

1,என் எஸ் கிருஷ்ணன்
2 விவேக்
3 ஆர் ஜே பாலாஜி


============

4 ஹீரோக்களில் சமூக நல ஆர்வலர்கள்


1 எம் ஜி ஆர்
2 விஜயகாந்த்
அது போல் காட்டிக்கொள்பவர்கள்
3 கமல் 1 ரஜினி
2 விஜய்


=============

5 உண்மையான அன்பாக இருந்தாலும் அவ்வப்போது புதுப்பிக்கப்படாத ,வெளிப்படுத்தாத அன்பிற்கு ஆயுள் குறைவு

===============

6 அநியாயம் எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்பதில்லை, ஆனால் உண்மையான அன்பு யாரால் தரப்பட்டாலும் தட்டிக்கழிப்பதில்லை================மிஸ்! உங்க லவ்வர் மழைச்சேறு ரோட்டில் வழுக்கி விழுந்துட்டாரா??


யா, எப்டி தெரியும்?
மழைக்கால மண் வாசம் அவன்அப்டினு கவிதை எழுதி இருக்கீங்களே

=============

8 தினமும் நாம் உடுத்தும் உடைகளை வாரம் ஒரு நாள் நாமே துவைத்து, காய வைத்து ,அயர்ன் செய்வதில் கொஞ்சல் சலிப்பும் ,நிறைய ஆத்ம திருப்தியும்

===========

9 எல்லோரும் மகிழ்ச்சியாய் இருக்கும் நாள் அவரவர் பிறந்தநாள்.மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாள் அன்புக்கு உரியவர் பிறந்தநாள்

============

10 டாக்டர்! நம்
மனதை மாற்ற என்ன செய்யனும்?

புது ஊருக்கு புது சூழ்நிலைக்கு போய்ட்டா பழைய நினைவுகள், பிரச்சனைகள் தற்காலிகமா தள்ளிப்போகும்

===============


11 ராஜ்மவுலி ரேஞ்ச்க்கு பிரம்மாண்டமா பண்ணி இருப்பார்னு பார்த்தா ராமநாராயணண் அவதார் படம் ரீமேக்கினது மாதிரி வெச்சு செஞ்சுட்டார் போல


============12 ரஜினியை மாஸ் ஹீரோவாக ஸ்டைலிஷாக காட்டுவதில் விற்பன்னர்கள்

1 படையப்பா கே எஸ் ரவிக்குமார்
2 தளபதி மணிரத்னம்
3 பாட்ஷா சுரேஷ் கிருஷ்ணா

=============

13 ஷங்கர் என்னதான் ரஜினியை இளமையாகக்காட்டுவதில் வெற்றி அடைந்தாலும் அவர் பிரம்மாண்ட இமேஜால் ரஜினியின் வழக்கமான ஸ்டைல் அமுக்கப்பட்டுவிடுகிறது

=============

14 பெஸ்ட் கமர்ஷியல் காம்போ
1 ரஜினி-KS ரவிக்குமார்
2 கமல்-மணிரத்னம்
3 அஜித்-விஷ்ணுவர்தன்
4 விஜய்-AR முருகதாஸ்

==============

15 மணிரத்னம் சர்வதேச பிரச்சனையை கையில் எடுத்து எப்படி தன் அழகியல் படமாக்கலை கோட்டை விட்டாரோ அப்படி மும்பை ரசிகர்களைக்கவர ஷங்கர் தமிழ் ரசனையைக்கோட்டை விட்டுடுவார் என தோணுது


================

16 அன்பின் வெளிப்பாடுகள் யாவும் சண்டையில் தான் பலப்படும்.எந்த வித கருத்து வேற்றுமையும் இல்லா அன்பு நாளடைவில் பலவீனப்படும்


============17 எளிமையான அழகு என்பது எவ்வித ஒப்பனையும் இன்றி அழகாய்திகழ்வது.

வலிமையான அன்பு என்பது எவ்வித பாசாங்கும் இன்றி இயல்பாய் இருப்பது.

===============

18 நல்லவருக்கு நல்லவர்
வல்லவருக்கு வல்லவர்
என மாறிக்கொண்டே இருப்பது நம்பகத்தன்மையில் வராது.
கெட்டவருக்கும் நல்லவராக இருக்க முயல்வதே சிறப்பு

===============

19 பெரும்பாலான ஆண்களின் பெரும்பான்மையான நேரம் பெண்களைக்கவர்வது எப்படி?என்பதன் சிந்தனையிலேயே செலவாகி விடுகிறது


=================


20 என் மனதைப்படிக்கும் முயற்சி வேண்டாம்.என் ரகசியம் என்னோடு.உன்ரகசியம் உன்னோடு


================