Tuesday, November 29, 2022

லவ் டுடே (2022) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் 2/12/22 முதல்


 திரைக்கதை  மன்னன்  கே  பாக்யராஜின்  சிஷ்யர்  ஆர்  பாண்டியராஜன்  அவர்களுக்கும் இந்தப்பட  இயக்குநர்  பிரதீப் ரங்கநாதனுக்கும்  ஒரு  ஒற்றுமை  இருக்கிறது. இருவருமே  தங்கள்  முதல்  படத்தை  வேறு  ஒரு  ஹீரோவை  வைத்து  மீடியம்  ஹிட்  படத்தைக்கொடுத்தவர்கள் . 2  வது  படத்தில்  தாங்களே  ஹீரோவாக  நடித்து  தன்னைத்தானே  இயக்கிக்கொண்டவர்கள். முதல்  படத்தை  விட  இரண்டாவது  படம்  மெகா  ஹிட் . இருவர்  படங்களுமே மிகச்சிறிய  முதலீடு , மாபெரும்  கலெக்சன். கன்னி  ராசி  படத்தில்  பிரபுவை  ஹீரோவா  வெச்சு  படம்  எடுத்துட்டு  அடுத்து  ஆண்பாவம்    அதிரி  புதிரி  ஹிட்  கொடுத்தவர்தான்  பாண்டியராஜன். இவர்  ஜெயம்  ரவியை  வெச்சு  கோமாளி  எனும்  மாறுபட்ட  காமெடி  ரொமாண்டிக்  மெலோ  டிராமா  தந்தவர் . இந்தப்படம்  வெறும்  5  கோடி  முதலீட்டில்  எடுக்கப்பட்டு  இப்போ 70  கோடி கலெக்சன்  என  சொல்றாங்க 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  , ஹீரோயின்  இருவரும்  லவ்வர்ஸ். ஹீரோயினோட  அப்பாவுக்கு  இவங்க  லவ்  மேட்ட்ர்  தெரிஞ்சு  ஹீரோவை  வீட்டுக்கு  வரச்சொல்றார்.  நகைக்கடைல  எக்சேஞ்ஸ்  ஆஃபர்ஸ்  போடுவாங்களே  அது  மாதிரி   இருவர்  செல்ஃபோனையும்  ஒரே  ஒரு  நாள்  மாத்தி  வெச்சிருந்தா  போதும் , மேரேஜ்க்கு  ஓக்கே  சொல்றார். இதுதானே ? ஜூஜூபி  மேட்டர்  என  நினைக்கும்  இருவரும்  அவர்களே  எதிர்பாராமல்   சந்திக்கும்  பிரச்சனைகள்  தான்  கதை , க்ளைமாக்சில்  அவர்கள்  இணைந்தார்களா? இல்லையா?  என்பதை  திரையில்  காண்க 


ஹீரோவாக  பிரதீப்  ரங்கநாதன்  பலரும்  சொல்லியது  போலவே  நடிகர்  தனுஷ்  சாயலில்தான்  இருக்கிறார்.  அவர்  பாணி  நடிப்பு  பாதி  தன்  பாணி  நடிப்பு  மீதி  என  கலந்து  கட்டி  அடிக்கிறார்.  ரஜினி  போலவே  நடித்த  நளினி  காந்த்  ,  கே  பாக்யராஜ்  போலவே  நடித்த  யோகராஜ்  இருவ்ரும்  பெரிய  அளவில்  முன்னேறாததுக்குக்காரணம்  சொந்த  சரக்கு  இல்லை  என்பதால். ஆனால் இவரிடம்  நடிகராகவும்  சரி , இயக்குநராகவும்   சரி  சரக்கு  இருக்கு 


ஹீரோயினாக   இவனா.. குடும்பப்பாங்கான  பாந்தமான  முகம் , க்ண்ணியமான  உடை , கச்சிதமான  முக  பவனைகள் , கண்  கவரும்  முக  வசீகரம்  , ஒரு  தமிழ்  நடிகைக்கு  இதை  விட  வேறு  என்ன  வேண்டும் ? நடிகை  சுவலட்சுமி  அளவுக்கு  பேசப்படுவார் 


நாயகியின்  அப்பாவாக  சத்யராஜ் . இவருடைய  கேரக்டர்  வில்லன்  கேரக்டர்   மாதிரியும்  இருக்கு  , குணச்சித்திர  கதாபாத்திரம்  போலவும்  இருக்கு 


நாயகனின்  அம்மாவாக  சித்தி  ராதிகா.  அனுபவம்  பேசுது ., அருமையான  நடிப்பு 


நாயகனின்  தங்கைக்கு  வரும்  மாப்பிள்ளையாக  யோகிபாபு  வுக்கு  லைஃப்  டைம் கேரக்டர். பிரமாதமான  கேரக்டர்  டிசைன். தன்  செல்  ஃபோனை  யாருக்கும்  தராதவர்  என  வில்லன்  முகம்  காட்டுபவர்  பின்  அதற்கான  காரணம்  சொல்லும்போது  அடடா  என  அசத்துகிறார்


நாயகனின்  தஙகையாக  வரும்  ரவீனா   மெழுகுச்சிலை  போல  இருக்கிறார், கச்சிதமான  நடிப்பு 

யுவன்  சங்கர்  ராஜாவின்  பிஜிஎம்  கலக்கல்  ரகம் ,  3  பாட்டு  ஆல்ரெடி  செம  ஹிட்டு   தினேஷ்  புருஷோத்தமனின்  ஒளிப்பதிவு  கண்ணுக்குக்குளிர்ச்சி 


சபாஷ்  டைரக்டர்


1   படத்தின்  கதை  செல்  ஃபோன்  பேக்டிராப்பில்  வருவதால்  டைட்டில்  போடும்போது  மேக்கிங்  ஆஃப்  செல் டோன்  டீட்டெய்ல்ஸ்  காட்டியது 


2   நாயகன் . நாயகி , சத்யராஜ் , ராதிகா , யோகிபாபு -  ரவீனா  ரவி  இவர்கள்  கேரக்டர்  டிசைன்  செய்யப்பட்ட  விதம்  அவர்களிடம்  கச்சிதமான  நடிப்பை  வெளிக்கொணர  வைத்த  பாங்கு 


3  மெயின்  கதையை  விட  அதிக  ரசனைக்குரிய  யோகிபாபு  - ரவீனா   காதல்  காட்சிகள்  கல்யாண  காட்சிகள்  அதகளம்


4   பெண்கள்  என்றாலே  1000  பேர்  ஃப்ளர்ட்டிங்  பண்ண  வருவாங்க , என்  கிட்டே  கூட  வந்தாங்க  என  ராதிகா  உணர்த்தும்  இடம்  சரியான  செண்ட்டிமெண்ட்  சீன் 


5    அந்த  ஹேக்கர்  என்னடா  பண்றான்?  என  ஹீரோ  ஒவ்வொரு  முறை  கேட்கும்போதும்  தொட்டா  தூக்கிடலாம்  என  பில்டப்  குடுக்கும்  நண்பன்  காமெடி  டிராக்  கலக்கல்  சீன்


6  பதம்  பார்க்கறதுன்னா  என்னடா? என  நாயகி  கேட்கும்போது  நாயகன்  சமாளிக்கும்  காட்சியும் ,  அதைத்தொடர்ந்து  நாயகி  கொடுக்கும்  கவுண்ட்டர்  டயலாக்கும் 


  ரசித்த  வசனங்கள் 


1  வெறும்  கையை  வீசிட்டு  வ்ந்துடாத 


 மருதாணி  வெச்ட்டு  வரவா?


2   பாஸ்போர்ட்  வெரிஃபிகேஷனுக்காக  கால்  பண்ணி  இருக்கோம்

 இது  நாம   போட்டு  வெச்ச  திட்டம்  ஆச்சே?  கொஸ்டீன்  பேப்பர்  லீக்  ஆகிடுச்சா? 


3   நாம  லவ்  பண்றவங்க  நமக்கு   உண்மையா  இருக்கனும்னு  நினைப்போம், ஆனா  நாம  அவங்களுக்கு  அதே  மாதிரி  உண்மையா  இருக்கனும்னு  நினைக்க  மாட்டோம் 


4   ஒரு  விஷயத்தை  நாம  மறைச்சா  தப்பானதைப் பண்றோம்னு  அர்த்தம்  இல்லை தெரியக்கூடதுனு  கூட  இருக்கலாம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனுக்கும்  எக்ஸ்  கேர்ள்  ஃபிரண்ட்ஸ்  உண்டு  நாயகிக்கும்  பல  பாய்  பெஸ்டிகள்  (  எடுபுடி  வேலை  செய்பவ்ர்கள்)  உண்டு , ஆனா   நாயகியை  மட்டும்  நாயகன்  குறை  சொல்வது  ஏனோ ?   தானிக்கு  தீனி  சரியாப்போச்சுதானே? 


2  நாயகியை  மார்ஃபிங்  பண்ணி  எடுக்கப்பட்ட  அந்த  வீடியோ  க்ளிப்  காட்சி    இல்லாமலேயே  பவர்ஃபுல்  க்ளைமாக்ஸ்  அமைத்திருக்க  முடியும் 


3  போலி  ட்விட்டர்  அக்கவுண்ட்டை  நாயகன்  உட்பட பல  நண்பர்களும்  ஆபரேட்  செய்ததாக  சொல்லும்  ஹீரோ  நாயகியின்  தஙகையை  வர்ணித்தது  யார்? என  தனக்குத்தெரியாது  என  வாதிடுகிறார், ஆனால்  பாஸ்வோர்டு  சரியாகப்போட்டாலும்  ட்விட்டர்  அல்ல்து   ஃபேஸ்புக்கில்  வேறு  லொகேஷன்ல  இருந்து  ஆபரேட்  செய்தால்  மெயிலுக்கு  தகவல்  வருமே? 


4  டபுள்  மீனிங்  டயலாக்ஸ்  ,  முகம்  சுளிக்க    வைக்கும்  காட்சிகள்  ஆங்காங்கே  உண்டு. ஃபேமிலியோட  பார்க்க  சங்கட,ம்  தான் சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  ஆல்ரெடி  சூப்ப்ர்  டூப்ப்ர்  ஹிட்  ஆன  படம்.  இனி  புதுசா  சொல்ல  என்ன  இருக்கு ?   ஆனந்த  விகடன்  மார்க்  44 ( இது  துப்பாக்கி  க்கு  அளிக்கப்பட்ட  மார்க் )   நெட்  ஃபிளிக்சில்  2/12/22  முதல்  கிடைக்கும்   ரேட்டிங் 3 / 5 


Love Today
Love Today 2022 poster.jpg
Poster
Directed byPradeep Ranganathan
Written byPradeep Ranganathan
Based onApp(a) Lock
by Pradeep Ranganathan
Produced byKalpathi S. Aghoram
Kalpathi S. Ganesh
Kalpathi S. Suresh
StarringPradeep Ranganathan
Ivana
Raveena Ravi
CinematographyDinesh Purushothaman
Edited byPradeep E. Ragav
Music byYuvan Shankar Raja
Production
company
Distributed byRed Giant Movies
Release date
4 November 2022
Running time
154 minutes
CountryIndia
LanguageTamil
Budget5 crore[1]
Box office70 crore[2]

Monday, November 28, 2022

varane avashyamund (2020)=வாரனே அவஷ்யமுண்ட்(மலையாளம்) -சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


 கேரளாவில்  சின்ன  ஊரான  சங்கணாச்சேரியிலேயே 40  நாட்கள்  ஓடிய  ஹிட்  படம்  தான்  இது.போஸ்டர்  டிசைன்  எனக்குப்பிடிக்காததால்  அப்போது  பார்க்கவில்லை. இது  நம்ம  ஆளு   நான் ஆளான  தாமரை  பாடல்  புகழ்  ஷோபனாவை  வயோதிகத்தோற்றத்தில்  பார்க்கும்  மனோதிடம்  இல்லாததால்  தவிர்த்தேன். ஆனால்  இப்போது   நெட்  ஃபிளிக்ஸ்ல  ரிலீஸ்  ஆனதாலும்    பலரும்  இந்தப்படத்தை  புகழ்ந்து  தள்ளியதாலும்  படம்  பார்த்தேன் 


சம்சாரம்  அது  மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி , காவலன்  அவன்  கோவலன்  போன்ற  குடும்பப்பாங்கான  படங்களை  எடுக்கு,ம்  விசு  ஒரு  அபார்ட்மெண்ட்லயே  மொத்தப்படத்தையும்  எடுத்து முடித்து  விடுவார். அவர்  பாணியில் கொஞ்சம்  காமெடி  கலந்து  சி  செண்ட்டர்  ரசிர்களை  திருப்திப்ப்டுத்தும்  விதமாக  வி  சேகர்  படங்களை  எடுப்பார் . இயக்குநர்  விக்ரமன்  படங்களில்  நெகடிவ்  கேரக்டர்களே  இருக்காது ., வில்லன்க்ள்  இல்லாத  நல்ல  படங்களைக்கொடுத்தவர்.  இயக்குநர்  கவுதம்  வாசுதேவ்  மேனன்  படங்களில்  ஒரு  பிரமாதமான  ரொமாண்டிக்  ஃபீலிங்  கிடைக்கும். இந்த  நான்கு  இயக்குநர்களின்  ரசிகராக  இருக்கும்  ஒரு  இயக்குநர்  ஒரு  படம்  எடுத்தால்  எப்படி  இருக்குமோ  அப்படி  இந்தப்படம்  இருக்கிறது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகியின்  அம்மா  சிங்கிள்  மதர். கணவனைப்பிரிந்து  வாழ்பவர். பிரிந்து  போன  கணவருக்கு  இன்னொரு  மனைவி  , வாரிசுகள்  என  எல்லாம்  உண்டு . ஆனால்  இவருக்கு  ஒரே  ஒரு  மகள்  மட்டுமே. நாயகிக்கு  சில  வரன்கள்  வந்து  போகிறது , ஆனால்  எதுவும்  செட்  ஆகவில்லை . செட்  ஆன  ஒரு  வரன்  நாயகியுடன்  பேசிப்பழகியதில்  நாயகியின்  அம்மா  விஷயம்  கேள்விப்பட்டு   திருமணத்துக்கு  ஒத்துக்கொள்ளவில்லை, இதனால்  நாயகிக்கு  அம்மா  மீது  கொஞ்சம்  கோபம் 


 இது  போதாது  என்று  அந்த  அப்பார்ட்மெண்ட்டுக்கு  புதிதாக  குடிவரும்  ஒரு  மிலிட்ரி  ரிட்டயர்டு  மேன்  மீது  நாயகியின்  அம்மாவுக்கு  ஒரு  காதல்  வேறு . எல்லோரிடமும்  சிடுசிடுமுகமாக  இருக்கும்  அந்த  ,மிலிட்ரிமேன்  நாயகியின்  அம்மாவிடம்  மட்டும்  சிரித்துப்பேசுகிறார் ( இது  ஒன்றும்  புதிய  விஷயம்  இல்லை ,  முக  நூலிலே  கூட ஆண்களின்  பதிவுகளுக்கு  எட்டியே  பார்க்காத  பெரிய  பெரிய  ஆளுமைகள் , ரைட்டர்கள்  எல்லாரும்  பெண்கள்  பதிவில்  ஹார்ட்டின்  விட்டு  கமெண்ட்  போடுவது  காலம்  காலமாக  நடப்பதுதானே?) 


அதே  அப்பார்ட்மெண்ட்டில்  குடி  இருக்கும்  நாயகன் தனது தம்பியுடன்  அடிக்கடி  சண்டை  போட்டுக்கொண்டே  இருக்கிறான். அண்ணன்  தம்பி  இருவருக்கும்  வயது  வித்தியாசம்  அதிகம் .நாயகன்  தன்  முன்  கதையை  நாயகிக்கு  சொன்னதும்  நாயகிக்கு  நாயகன்  மீது அன்பு  பிறக்கிறது


 நாயகி, நாயகன், நாயகியின் அம்மா , மிலிட்ரிமேன்  இந்த    இரண்டு  செட்  லவ்  ஜோடிகள்  அவர்களை  சுற்றி  வாழும்  100%  அக்மார்க்  நல்லவர்கள்   நடத்தும்  சம்பவங்களே  திரைக்கதை 


நாயகியின்  அம்மாவாக  ஷோபனா. வயதானலும்  மயிலுக்கு  தோகை  அழகுதான்  என்பது  போல  ஷோபனாவின்  நடன  அசைவுகள்  இன்னும்  சிலாகிக்க  வைக்கின்றன. தன்னைப்பாராட்டாமல் தன்  மகள்  ஊர்வசியைப்பாராட்டுவது  கண்டு  துணுக்குறும்  காட்சி  கிளாசிக் . நாயகி  வீட்டில்  இல்லாத  போது    பக்கத்து  வீட்டுப்பையன்  மூலம்  மிலிடிரி  மேனுக்கு  சாப்பாடு  கொடுத்து  விட  முயலும்போது  நாயகி  ஆஜர்  ஆகி  நானே  கொண்டு  போய்  கொடுக்கிறேன்  என  சொல்லி விட்டு  லெட்டர்  ஏதும்  இருக்கா?  என  கேட்கையில்  ஷோபனா  காட்டும்  முக  பாவனைகள்  அட்டகாசம் 


நாயகியாக கல்யாணி  பிரியதர்ஷன் .  லூஸ்தனமான  தமிழ்  நாயகிகளையே பார்த்துப்பழக்கப்பட்ட  நமக்கு  யதார்த்தமான  புத்திசாலித்தனமான  நாயகியப்பார்க்க  மனதுக்கு  அறுதல்தான்.  கிட்டத்தட்ட  திரும்ணம்  நிச்சயம்  ஆகிவிட்டது  என்ற  நிலையில்  கூட  மாப்பிள்ளை  ஒரு  முத்தம்  கேட்கும்போது  அவர்  காட்டும்  தயக்கம்  இன்னமும்  பெண்கள்  தங்கள்  கண்ணியத்தைக்கட்டிக்காக்கிறார்கள்  என்ற  எண்ணம்  மேலோங்குகிறது மாப்பிள்ளையை விட  அவரது  அம்மா  பிடிச்சிருக்கு , அவரைத்தான்  மிஸ்  பண்றேன்  என  சொல்லும்போதும், நான்  இப்போ  அழுததை  உங்க  மகன்  கிட்டே  சொல்லிடாதீங்க  என  ஊர்வசியிடம்  வேண்டும்போதும்  கல்யாணி  பிரியதர்ஷன் .  மிகச்சிறந்த  நடிப்பை  வழங்கி  இருக்கிறார், நதியாவின்  குறும்பு , ரேவதியின்  எளிமை , சுஹாசினியின்  யதார்த்தம்  கலந்த  கலவை  இவர் வாழ்ந்து  கெட்ட  குடும்ப,ம்  மாதிரி  ஒரு  காலத்தில்  போலீஸ்  ஆஃபீசராக  பட்டையைக்கிளப்பிய  சுரேஷ்  கோபிக்கு  இதில்  அடக்கி  வாசிக்கும்  பாத்திரம். அவரது  ரசிகர்களுக்காக  ஒரு  ஃபைட்  சீனும்  உண்டு  நாட்டிய  விழாவில்  ஷோபனாவின்  நிகழ்ச்சி  பார்க்கும்போது  அவர்  காட்டும்  முக  பாவனைகள் கிளாசிக் 


நாயகன்  ஆக  துல்கர்  சல்மான்  கெஸ்ட்  ரோலில்  வருகிறார். நாயகிக்கு  கொடுக்கப்ப்ட்ட  ஸ்க்ரீன்  ஸ்பேசை  விட  இவருக்கு  மூன்று  மடங்கு  குறைவு , ஒரே  ஒரு  ஃபிளாஸ்பேக்  சீன்  கதை  சொல்லுவதிலே தனது  அக்மார்க்  முத்திரையைப்பதித்து  இருக்கிறார்


  ஊர்வசி  நாயகிக்கு  வருங்கால  மாமியாராக  வந்து  அசத்துகிறார். ஹோட்டலில்  சாப்பிடும்போது  நாயகியிடம்  நாசூக்காக  திருமணம்  கேன்சல் என்பதை  சொல்லும்  நேர்த்தி  போதும்  அவரது  ந்டிப்புக்கு 


இவர்கள்  நான்கு  பேர்  போக  அப்பார்ட்மெண்ட்வாசிகள்  எல்லாருமே  அவரவர்க்கு  தரப்பட்ட  கேரக்டரை  கச்சிதமாக  செய்திருக்கிறார்கள் . ஒரு  பாசிட்டிவ்  எனர்ஜியே  ஓடுது 

சபாஷ்  டைரக்டர்


1  நாயகிக்கு  வரனாக  வரும்  ஒரு  டிராஃபிக்  இன்ஸ்பெக்டர்  எப்போப்பாரு  ட்யூட்டி  ஞாபகவாகவே  இருக்க  அவரை  நைசாக  நாயகி  கழட்டி  விடும்  காட்சி  கிளாசிக்  காமெடி


2   சாக்லெட்  என்றால்  விரும்பி  சாப்பிடும்  நாயகி  அந்த  ஒரு  காரணத்துக்காகவே   ஒரு  வரனை  ஒக்கே  சொல்வதும்  அந்த  வரன் -  ஊர்வசி  - நாயகி  மூவருக்குமான  காட்சிகள் ஒரு  சிறுகதை


3 நாயகி , அம்மா  இருவரும்  பேசும்  அந்த  நீண்ட  லாங்க்  ஷாட்  கச்சித,ம். இருவரின்  ந்டிப்பும்  செம 


4 துல்கரின்  ஃபிளாஸ்பேக்கில்  அம்மா, அப்பா  இருவ்ரும்  இறந்து  கிடக்கும்  வீட்டில்  பிணத்துக்கு  அருகில்  தன்  தம்பியுடன்  உறங்கிய  அனுபவத்தைப்பகிரும்போது    பகீர் 


5  துல்கரின்  அத்தையாக  வருபவர்  வாடசப் க்ரூப்  தோழி  என  ஓப்பன்  பண்ணும் ஷாட்  ரசித்த  வசனங்கள் 


1 சார், லவ்  மேரேஜ்னா  பொறுப்பா  சைன்  பண்ண  அப்பா  வேணு,ம்


அப்பா  பொறுப்பே  இல்லாதவர்


2 சினிமாவை  விட  சீரியலுக்குத்தான்  அதிக  வரவேற்பு 


3  என்னது ?  உன்  பாஸ்வோர்டு  சுடுதண்ணியா?


4  வயசான  பின்  நம்ம  மைலேஜ்  கூடனும்னா  குறைவான  உணவு  எடுத்துக்கனும் 5  பார்ப்பது  என்னமோ  டாம்  அண்ட்  ஜெர்ரிதான் , ஆனா அழுதுட்டே  பார்ப்பா 


6  உங்க  மனசு  மாறனும்னா  மீன்  வாங்கி  பேரு  வைங்க . இவ  பேரு  எலிசபெத், என்  மனைவி, இந்தப்பேரு  வேணாம்,  வேற  நல்ல  பேரு  வைங்க 


7  பேரு  என்ன?


  மேஜர்


 நாயோட  பேரு  கேட்டேன்


 ஜிம்மி  


அப்போ  மேஜர்  ஜிம்மினு  கூப்பிடலாமா?8  சர்வர் = சார் , ஆர்டர்  பண்ணுங்க 


 டிரஃபிக்  எஸ் ஐ =  லைசென்சை  எடு


 வாட்?


 சாரி  லைம்  ஜூஸ்  கொண்டு  வா


, சாப்பாட்டை    ரெடி  பண்றதை விட  அவளுக்கு  மேரேஜ்  பண்ணிக்கறது  ஈசினு  நினைக்கறா


10  அம்மா,  உனக்கும் , மேஜருக்கும்  லவ்  இருக்குனு  அபார்ட்மெண்ட்ல  அரசல்  புரசலா  பேசிக்கிறாங்க , நிஜமா?


  ச்சே  ச்சே  அப்படி  சொல்லிட  முடியாது 


 ஹப்பாடி 


 அப்படி  இல்லைனும்  சொல்ல  முடியாது 


11  மேரேஜூக்குப்பின்  வேற  ஒரு  முகம்  காட்டுவது  ஆணின்  குணம்   அது  என்னை  பயப்படுத்துது 


12  இவன்  தான்  என்  தூக்க  மாத்திரை , இவன்  அருகில்  இருந்தாதான்  எனக்கு  தூக்கம்  வரும் 13 வாழ்க்கைல  ஒரு  புது  உறவு  வர்றது  நல்லதுதான்  என்பதை  தெரிஞ்சுக்க  ஒரு  ஸ்பேஸ்  கொடுக்கனும்  நாம 


14  பயணம்  நம்மை  புதுப்பிக்கும்,  புதிய  மனிதர்கள்  , புதிய  மொழி  , புதிய  உணவு 15   ப்யணங்களின்  கூடுதல்  அழகு  எது  தெரியுமா?  ரிட்டர்ன்  டிக்கெட்  எடுத்து  வெச்சுக்குவதுதான்


16  நமக்காக  ஒருவர்  காத்துக்கொண்டிருக்கிறார்  என்ற  உணர்வு  இல்லை  எனில்  நாம்  போகும் பயணம்  வீணே!


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 சுரேஷ்  கோபியும்  துல்கரும்  செஸ்  விளையாடும்போது   ராணிக்கு  குதிரை  மூலமா  அட்டாக்  கொடுக்கும்போது  லூஸ்தனமா  ராணியை  நகர்த்தாம  பான்  மூவ்  பண்றாரு. ஒரு  எல்  போர்டு  பிளேயர்  கூட  அப்படி  ஆடமாட்டான் 


2   டூ வீல்ர்ல  போகும்போது  நாயகன் , நாயகி  இருவருமே  ஹெல்மெட்  இல்லாம  தான்  பயணிக்கறாங்க .மக்களுக்கு  விழிப்புணர்வை  ஊட்ட  வேண்டாமா? 

3   சுரேஷ்  கோபி  ஒரு  ஆளிடம்  சட்டை  இவ்ளோ  சுருக்கமா  இருக்கு    அயர்ன்  பண்ணிட்டு  வா  என  ஒரு  சட்டையை  விரித்துக்காட்டும்போது  அது   பர்ஃபெக்ட்டா  அயர்ன்  பண்ணிதான்  இருக்கு .  என் கண்  தான்  ஏமாற்றுதோனு  ரிவர்ஸ்  ஓட்டிப்பார்த்தேன்


4  ஷோபனா  தன்  மகளிடம்  நான்  10வது  படிக்கும்போது  ஒருத்தனை  லவ்  பண்ணினேன்,  12  வது  படிக்கும்போது  ஒருத்தன், காலேஜ்  படிக்கும்போது  ரெண்டு  பேரை லவ்  பண்ணினேன், , ஆனா  மேரேஜ்  ஆனது  வேற  ஒருத்தன்  கூட  அதுவும்  லவ்  மேரேஜ்  தான்  என  சொல்லும்  வ்சனம்  எதுக்கு ? தியேட்டரில்   கை  தட்டல்  வாங்க  வேண்டுமானால்  இது  யூஸ்  ஆகலாம், ஆனா  ஆரோக்யமான  வசனம்  அல்ல,  அப்போ  நாயகி  பதிலடியாக  சொல்வதும்  அதே  தேவை  இல்லாத  ஆணி  தான் 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் . எந்த  திருப்பங்களும்,  விறுவிறுப்பும்  இல்லாத  அமைதியான  நதியைப்போல ஒரு  ஃபீல்  குட்  மூவி  பார்க்க  விரும்புவர்கள்  மட்டும்  பார்க்கலாம் . மொக்கை  காமெடி  டிராக் , வில்லன் ,  காபரே  டான்ஸ்  லொட்டு  லொசுக்கு  இல்லாத  கண்ணியமான  படம்  ரேட்டிங்  3  / 5 


Varane Avashyamund
Varane Aavashyamundu.jpg
Theatrical release poster
Directed byAnoop Sathyan
Written byAnoop Sathyan
Produced byDulquer Salmaan
Starring
CinematographyMukesh Muraleedharan
Edited byToby John
Music byAlphons Joseph
Production
companies
  • Wayfarer Films
  • M Star Entertainments
Distributed byPlay House Release
Release date
  • 7 February 2020
Running time
145 Minutes
CountryIndia
LanguageMalayalam

Sunday, November 27, 2022

PADAVETTU (2022) (மலையாளம்) - திரை விமர்சனம் ( பொலிடிக்கல் மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


 மலையாளத்தில்  படவெட்டு  என்றால்  போர்  என்று அர்த்தம். ஏழை  மக்களின் அப்பாவித்தனத்தைப்பயன்படுத்தி  அரசியல்  செய்து  குளிர்  காய  நினைக்கும்  சுயநல  அரசியல்வாதிக்கும், சாமான்ய  மனிதனுக்கும்  இடையே  நடக்கும்  போர்  தான்  கதை 

நாயகன்  ஒரு  விளையாட்டு  வீர்ர். காலில்  அடிபட்டு  அவரால்  விளையாட்டிலும்  கவனம்  செலுத்த  முடியவில்லை , வாழ்க்கையிலும்  வெற்றி  பெற  முடிவதில்லை .இதனால்  தான்  காதலித்த  பெண்ணைக்கூட  கல்யாணம்  செய்து  கொள்ள  முடியாத  சூழ்நிலைக்கைதி  ஆகிறான்


நாயகிக்கு  வேறொருவன்  கூட  திருமணம்  ஆகி  விவாகரத்தும்  ஆகி  விடுகிறது. இருவரும்  ஒரே  ஊர் தான் 


நாயகனுக்கு  அப்பா, அம்மா  இல்லை , தன்  சித்தியுடன்  வசித்து  வருகிறான். அவர்கள்  வீடு   சிதிலம்  அடைந்து  இருக்கிறது . உள்ளூர்  அரசியல்வாதி  ஒருவன்  தன்  சுய நலத்துக்காக  மக்களிடையே  நல்ல  பேர்  வாங்கி  ஓட்டு  வாங்குவதற்காக   நாயகன்  வீட்டை  தன்  சொந்தச்செலவில்  புதுப்பித்து  தருவதாக  அறிவிக்கிறான்


 இதில்  நாயகனுக்கு  உடன்பாடு  இல்லை  என்றாலும்  நாயகியின்  சித்தி  அதை  மகிழ்ச்சியோடு  ஏற்கிறாள் . வீடு  புதுப்பிக்கப்பட்டபின்  வீட்டின்  முன்  ஸ்பான்சர்டு  பை இன்னார்  என  கட்சிப்பேர்  பொறிக்கப்படுகிறது 


 நாயகனை  ஊரில்  உள்ளோர்  ஸ்பானசர்டு  ரவி  என  கிண்டல்  செய்கிறார்கள் . இது  பொறுக்காத  நாயகன்  அந்த  நினைவுக்கல்லை  பெயர்த்து  விடுகிறான்


எதிர்க்கட்சியான  வில்லன்  அதை  உடைத்தது  நாயகன்  தான்  என்பதை தெரிந்திருந்தும்  அதை  உடைத்தது  ஆளும்  கட்சி  என  மக்களிடையே  வதந்தி  பரப்புகிறான்


வில்லன்  ஏழை  மக்களின்  நிலங்களை  அபகரிக்க  திட்டம்  போடுகிறான். அதை  நாயகன்  எப்படி  முறியடிக்கிறான்  என்பதே  திரைக்கதை  


நாயகனாக  நிவின் பாலி . வேலை  வெட்டிக்கே  போகாத  இளைஞன்  கதாபாத்திரம்  ஏன்  அப்படி  இருக்கிறான்  என்பது திரைகக்தையின்  பின்  பகுதியில்தான்  நமக்குத்தெரிய  வருகிறது.  அதனால்  நாயகன்  மீது  நமக்கு  ஒரு  பிடிப்பே  வரவில்லை 


 நாயகியாக அதிதி  பாலன். இவருக்கு  வசனத்தை  விட  தன்  கண்களில்  தான்  அதிக  நம்பிக்கை  போல்  இருக்கிறது . நாயகனுடன்  கண்களாலேயே  பேசுகிறார். மெயின்  கதையில்  நிகழும்  அரசியல்  சண்டைகளை  விட  கிளைக்கதையான  நாயகியின்  காதல்  தான்  நம்  மனதில்  தங்கி  விடுகிறது. பிரமாதமான , அமைதியான்  நடிப்பு , தான்  சொல்ல  வருவதை  முக  பாவனைகளாலேயே  நடித்து  விடுகிறார். நாயகியின்  கதாபாத்திரம்  எப்ப்டி  உயிரோட்டம்  உள்ளதாக  இருக்கவேண்டும்  என்பதற்கு  நல்ல  உதாரணம் . நாயகிக்கு  அறிமுகப்பாடல்  காட்சியோ , டூயட்  காட்சியோ  இல்லை , ஆனாலும்  அவர் ரசிகர்கள்  மனதில்  சிம்மாசனம்  இட்டு  அமர்ந்து  விடுகிறார்


நாயகனின்  சித்தியாக  வரும்  ரம்யா  சுரேஷ்   வீட்டு  வேலைகளை  செய்து  கொண்டே  பட  பட  என  பொறிந்து  கொண்டே  வசனம்  பேசும்போது  மனோரமாவை  நினைவுபடுத்துகிறார்


அரசியல்வாதி  வில்லனாக  ஷம்மி   திலகன்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்.

ஷினே  டாம்  ஷாக்கோ  வுக்கு  அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  வந்தவரை  நிறைவான  நடிப்பு 


நாயகியின்  அப்பாவாக  வரும்  இந்திரன்ஸ்  கச்சிதம் 


காட்டுப்பன்றியை  விரட்டிக்கொல்லும்  காட்சியில்  ஒளிப்பதிவாளரும், இசை  அமைப்பாளரும்  மிரட்டி  இருக்கிறார்கள் 


கோவிந்த்  வசந்தராசன்  இசையில்  நாயகன்  - நாயகி  பார்வையாலேயே  காதலைப்பரிமாறும்  மழை  காட்சி  அற்புதம் 


ஷமித்  அகமதுவின்  படத்தொகுப்பு  கச்சிதம்  என்றாலும்  திரைக்கதை  மிக  மெதுவாக  நகர்வதால்  பல  இடங்களில்  சலிப்பு  ஏற்படுகிறது 


இயக்குநர் விஜி  கிருஷ்ணராஜ்  துணிச்சலாக  படத்தை  இயக்கி  இருந்தாலும் ப்டத்தின்  டைட்டிலைப்போல்வே போர்  என  சொல்லத்தக்க வகையில்  தான்  காட்சிகள்  நகர்கின்றன. இன்னும்  திரைக்கதையில்  சுவராஸ்யத்தைக்கூட்டி  இருக்க  வேண்டும் 


நெட்  ஃபிளிக்சில்  இன்று  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது ரசித்த  வசனங்கள் 

  


1 ஏழைகள்  சிந்திக்க  நாம  நேரம்  கொடுத்திடக்கூடாது. அவங்களை உபயோகிச்சுக்கனும்


2 நாம ப்த்துப்பேருக்கு உதவி  செஞ்சா  அதைப்பார்த்து  ஒரு  பத்துப்பேரு  இன்னொரு  பத்துப்பேருக்கு  உதவி  செய்ய  மாட்டாங்க ?\


3 நமக்கான  மண்  நமக்கானது , நமக்கான  நீர்  நமக்கானதுநமக்கான  உரினையை  பிறர்  தட்டிப்பறிக்க  நினைக்கும்போது  நாம்  எட்டிப்பாய்வதில்  தவறில்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   மாற்றுத்திறனாளிகள்  கூட  வேலைக்குப்போய்  சம்பாதிக்கறாங்க , ஆனா  நாயகன்  காலில்  அடிபட்டதுக்காக  வீட்டுத்திண்ணைலயே  முடங்கிக்கிடப்பது  அவரது  கேரக்டர்  மேல்  எரிச்சலையே  கிளப்புகிறது 


2  நாயகன்  தன்  சித்தியை பல  முறை அடிக்கிறார், தள்ளி  விடுகிறார்.  ஆனால்  டைட்டிலில்  எந்த  உயிரினமும்  துன்புறுத்தப்படவில்லை  என  அறிவிப்பது  எப்படி ?


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சாதா  ஆளை  ஏமாற்றும்  அரசியல்வாதியின்  கதையைச்சொன்ன பாரதிராஜாவின்  என்   உயிர்த்தோழன்  ஒரு  தோல்விப்படமே., ஆனா  அதுல  இருந்த  உயிரோட்டம்  கூட  இதுல  இல்லை . ரேட்டிங்  2.25 / 5 


Padavettu
Padavettu.jpg
Theatrical release poster
Directed byLiju Krishna
Written byLiju Krishna
Produced by
Starring
CinematographyDeepak D. Menon
Edited byShafique Mohamed Ali
Music byGovind Vasantha
Production
companies
Distributed byCentury Release
Release date
  • 21 October 2022
Running time
145 minutes
CountryIndia
LanguageMalayalam

Saturday, November 26, 2022

MY POLICE MAN ( 2022) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ,மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


  டைட்டிலைப்பார்த்ததும் வால்டர்  வெற்றிவேல் , காக்க  காக்க , சாமி, சத்ரியன்  மாதிரி  போலீஸ்  சப்ஜெக்ட்  படங்கள்  எல்லாம்  கண்  முன்  வந்து  போனது. அதனால  போன  மாசமே  ரிலீஸ்  ஆன  இந்தப்படத்தை  பெண்டிங் ல  போட்டு  வெச்சிருந்தேன்,  இது  லவ்  ஸ்டோரினு  தெரிஞ்ச  பின்  பார்த்துட்டேன்’ இது  இதே  பெயரில்  வந்த  நாவலில்   இருந்து  திரைக்கதை  எழுதப்பட்டது, பொதுவாகவே  நாவல், அல்லது  சிறுகதையிலிருந்து  தழுவி  எடுக்கப்பட்ட  பட்ங்களில்  உயிரோட்டம்  இருக்கும், அது  இந்தப்படத்துலயும்  மெய்ப்பிக்கப்பட்டதா? என்பதைப்பார்ப்போம்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  டாம்  ஒரு  போலீஸ்  . நாயகி மரியன்  ஒரு  ஸ்கூல்  டீச்சர் .  இருவரும்  ஆரம்பத்தில்  நண்பர்களா  பழகறாங்க  ஜோடியா  வெளில  போறாங்க , வர்றாங்க . அப்போ  அருங்காட்சியகம்  நடத்தும்  பாட்ரிக்  உடன்  பழக்கம்  ஆகுது , மூன்று  பேரும்  இப்போ  ஜோடியா  சுத்தறாங்க 


நாயகியின்  தோழி  நாயகி  கிட்டே  கேட்கறா. உனக்கு  யார்  மேல  இண்ட்ரஸ்ட்?  டாம்  மேலயா? பாட்ரிக்  மேலயா?  பாட்ரிக்கை  எனக்குப்பிடிக்கும்,  திறமையானவன், ஆனா  டாம்  தான்  என்  வாழ்க்கைக்கு  சரி  என்கிறாள்.


இப்போ  மேலே  சொன்ன  சம்பவங்கள்  எல்லாம்  1950 ;ல  நடந்தவை

 அப்படியே   கட்  பண்ணி  நிகழ் காலத்துக்கு  வர்றோம் அதாவது  2012  (  நாவல்  எழுதப்பட்ட  வருடம்  2012. படமாக்கம்  2022) 


பாட்ரிக் சமீபத்தில்  ரிலீஸ்  ஆன  அப்பன்  மலையாளப்பட  நாயகன்  மாதிரி  இடுப்புக்குக்கீழே  உடல்  உறுப்புகள்  செயல்  இழந்து  வீல்  சேரில்   செட்டில்  ஆகி  இருக்கான் , இப்போ  தான்  ஹாஸ்பிடலில்  இருந்து  டிஸ்சார்ஜ்  ஆகி  இருக்கான். அவனை  நாயகி  மரியான்  தான்  டேக்  ஓவர்  பண்ணிக்கறா. நாங்க  பார்த்துக்கறோம்கறா 


 இது  நாயகன்  டாம் க்கு பிடிக்கலை . நான்  பாட்ரிக்  முகத்துலயே  விழிக்க  விரும்பலை  அப்டினு  கோபமா  சொல்றான் , அதே  சமயம்  நாயகி  பாட்ரிக் கை  கவனித்துக்கொள்வதை  வலுவாக  எதிர்க்கவும்  இல்லை 


நாயகி  இப்போ  பாட்ரிக்கின்  டைரியை  எடுத்துப்படிக்கிறா


 கட்  பண்னா  1950 


நாயகன், நாயகி  இருவரும்  அவுட்டிங்  போறாங்க  , அப்போ  நாயகன்  நாயகியை  கிண்டல்  பண்றான்,  பாட்ரிக் கிற்கு  உன்  மேல  ஒரு  கண்ணு  இருக்கு .  உன்னை  அடிக்கடி  பார்க்கிறான்  அப்டிங்கறான். நாயகி  பெருசா  அலட்டிக்கலை   


யாரோ  ஒரு  ஆள்  போலீஸ்க்கு  மொட்டைக்கடுதாசி    எழுதிடறாங்க ,

அருங்காட்சியகத்துகு  வரும்  குழந்தைகள் , சிறுவர்களுக்கு   பாட்ரிக்கால் ஆபத்து  இருக்கு . அவன்  ஒரு   ஹோமோ 


1967ல்  தான்  தன்  பால் ஈர்ப்பு  திருமணங்கள்  சட்டம்  ஆச்சு  அது  வரை  அது  சட்டவிரோதம்

இதனால  பாட்ரிக்  கைது  செய்யப்படுகிறான். போலீஸின்  கடுமையான  விசாரணை  நடக்குது . பாட்ரிக்கின்  டைரி  கைப்பற்றப்படுது 


நாயகனுக்கு  ஒரு   பயம்.. தன்  மனைவியை அடைய  அல்லது  வேறு  எதற்கோ  தன்னை  அவன்  மாட்டி  விட்டுடுவானோ  என 


 பாட்ரிக்  போலீஸ்  விசாரனையில்  நாயகனை  மாட்டி  விட்டானா?

 மொட்டைக்கடுதாசி  எழுதியது  யார் ?


பாட்ரிக்   உடல்  நிலை  பாதிக்கப்பட்டு  வயோதிக  நிலையில்  ஆதரவற்று  இருக்கும்போது  நாயகி  ஏன்  அவனுக்கு  உதவுகிறாள் ?


 இதற்கெல்லாம்  விடை  படம்  பார்த்து  தெரிந்து  கொள்ளுங்கள் 


படத்தில்  மூன்றே  முக்கிய கேரக்டர்கள்  என்பதால்  சிலருக்கு   போர்  அடிக்க  வாய்ப்பு  இருக்கு 


நாயகனாக  இளம்  வயது டாம்  ஆக ஹாரி  ஸ்டைல்ஸ்  பேருக்கு  ஏற்றபடி  ஸ்டைலிஷாக  பண்ணி  இருக்கார் .  பாடெரிக்காக   டேவிட்  டாசன்  சவாலான  ரோலில் அசத்தி  இருக்கிறார்/ நாயகியாக    எம்மா  காமின்  உயிரோட்டமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


இவர்கள்  வயதான  ரோல்களில்  வேறு  நடிகர்கள்    நடிக்க  வைத்திருக்கிறார்கள் 

ஒளிப்பதிவு  , பின்னணி  இசை , ஆர்ட்  டைரக்சன்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  கச்சிதம் 


சபாஷ்  டைரக்டர்


1  இந்தப்படத்தை  நேரடியான  கதையாக  சொன்னால்  சுவராஸ்யம்  குறைவாக  இருக்கும்  என  நான்  லீனியர்  கட்டில்  திரைக்கதை   முன்னும்  பின்னும்  போய்  வரும்படி  அமைத்தது 


2   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டும்   , நாயகி  எடுக்கும்  முடிவும் 


  ரசித்த  வசனங்கள் 


 1  சாதாரணமானவங்களுக்கே   /  சாமான்யமானவர்களுக்கே அழகிய  முகம்  அமையும்


2  ரசனை  என்பது  நாம்  உணர்ந்ததின்  வெளிப்பாட்டை  அறிவதுதான்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 பாட்ரிக்கின்  டைரியைப்படிப்பது  மூலமாகத்தான்  ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  விரிகின்றன .அதில்  பாட்ரிக்  இருக்கும்  காட்சிகள்  மட்டும்  தானே  வரனும் ?  நாயகி  அவள்  தோழியுடன்  பேசுவது  ,  நாயகன்  நாயகி  தனியாக  விவாதிப்பது  இதெல்லாமா  பாட்ரிக்  டைரியில்  எழுத  முடியும் ? 


2  பாட்ரிக்கின்  டைரியை  நாயகி  படிப்பது  ஆபத்து  என்பது  தெரிந்தும்  நாயகன் ஏன்  அதை  தடுக்க  முயலவில்லை ?  அல்லது  டைரியை  மறைக்கவில்லை ? சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  இது  அனைத்துத்தரப்புக்குமான  ஜனரஞ்சகமான  படம்  இல்லை . நாயகியின் அழகும் , நடிப்பும்  பிரமாதம், அதை  ரசிப்பவர்கள்  மட்டும்  பார்க்கவும் . ரேட்டிங்  2.5 /5 . இதன்  திரைக்கதை  ஆஸ்கார்  அவார்டுக்கு  பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது 

Friday, November 25, 2022

WONDER WOMEN (2022) (ஆங்கிலம்) - சினிமா விமர்சனம் @ சோனி லைவ்

 


பெண் ரசிகைகளுக்காக  பெண்  நடிகைகளை  வைத்து  ஒரு  பெண்  இயக்குநர்  திரைக்கதை  எழுதி  உருவாக்கிய  இந்தப்படம்  பெண்களுக்கு  மட்டுமல்ல , பெண்களை  தன்னில்  பாதியாக  மதிக்க  வேண்டிய  ஆண்களுக்கும்  சேர்த்துத்தான்.மொத்தம்  80  நிமிடங்களே  ஓடும்  இந்தப்படத்தில்  கர்ப்பிணிப்பெண்களுக்கான அடிப்படைப்பாடமாக , மன  ரீதியாக  , உடல்  ரீதியாக  அவர்கள்  எப்படித்தயார் ஆக  வேண்டும்  என  பாடம்  எடுக்கும்  படமாக  இருக்கிறது 

7  பெண்கள்  மட்டுமே  முக்கிய  கதா  பாத்திரங்கள்:. கர்ப்பமான  ஆறு  பெண்கள் கர்ப்பவதிகளுக்கான பயிற்சி  நடத்தும் ஒரு  பெண்ணின்  பெற்றோர்  பராமரிப்பு  மையத்தில்  நிகழும்  சம்பவங்கள்  தான்  கதை . அந்தப்பெண்கள்  ஒரு  வாட்சப்  க்ரூப்  ஓப்பன்  பண்ணி  அவர்களுடைய  சுக  துக்கங்களைப்பகிர்ந்து  கொள்கின்றனர் . அந்த  வாட்சப்  க்ரூப்பின்  பெயர் தான்  வொண்டர்  விமன் ( அதிசயப்பெண்கள் ) 


பெற்றோர்  பராமரிப்பு  மையம்  நடத்தும்  பெண்ணாக  நதியா மிக  கண்ணியமான  தோற்றத்தில்  ஒரு  தாயாக , ஆசிரியையாக  , தோழியாக  படம்  முழுக்க  வந்து  அங்கே  இருக்கும்  பெண்களுக்கு  தன்னம்பிக்கை  ஊட்டுகிறார்


நித்யாமேனன்  வசனங்களை  நம்புவதை  விட  தன்  முக  பாவனைகளையே  பெரிதும் நம்பி  இருக்கிறார், அவரது  உற்சாகமான  சிரிப்பு  அனைவர்  மனதையும்  எளிதில்  கவர்ந்து  விடுகிறது 


பார்வதி  திருவோத்து  யாருடனும்  சகஜமாகப்பழக  விரும்பாத ரிசர்வ்  டைப்  பெண்ணாக  வந்து  க்ளைமாக்சில்  மனம்  மாறுபவராக  கவனிக்க  வைக்கும்  நடிப்பு 


பத்மப்ரியா  கணவனின்  அன்போ, அரவணைப்போ  கிடைக்காமல்  எதற்கு  எடுத்தாலும்  மாமியார்  தயவை  நாட  வேண்டியவராக  வந்து  பின்  கணவரின்  நடவடிக்கைகளில்  மாற்றம்  ஏற்படுத்துபவராக  கச்சிதமான  குடும்பப்பாங்கான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார் 

லிவ்விங்  டுகெதர்  லைஃப்  மூலம்  கர்ப்பம்  ஆன  சயனோரா  தன்  மொழி  ஆளுமையாலும்  விழி  ஆளுமையாலும்  ஆடியன்ஸ்  மனதை  எளிதில்  கவர்கிறார் 


பராமரிப்பு  மையத்தில்  பணி  புரிந்து  கொண்டே  இந்த பயிற்சி  மையத்தில்  சேர்ந்து  மற்றவர்களுடன் பழகும் அர்ச்சனா  பத்மினி  பக்கத்துவீட்டுப்பெண்  போல  எளிமையான  உடல்  மொழியால்   கவனம்  ஈர்க்கிறார் 


ஏற்கனவே  இரு  முறை  கர்ப்பம்  ஆகி  கலைந்த  நிலையில்  இதுதான்  கடைசி  வாய்ப்பு  என  டாக்டரால்  எச்சரிக்கப்பட்ட  அம்ருதா  சுபாஷ்  கண் கலங்க  வைக்கும்  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


இந்த  ஏழு  கதாபாத்திரங்கள்  போக   அவரவர்  கணவன் , காதலன் , மாமியார் ,  கார்டியன்  என  சில  பாத்திரங்கள்  கொடுக்கப்பட்ட  பணியை  கச்சிதமாக  செய்திருக்கின்றனர் 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  அஞ்சலி  மேனன் . ஒரு  பெண்ணோட  கஷ்டம்  இன்னொரு  பெண்ணுக்குத்தான்  தெரியும்  எனும்  ஃபார்முலாப்படி    கர்ப்பம்  ஆன  பெண்களுக்கு  நிகழும்  உளவியல்  ரீதியான  மாற்றங்கள் , எதிர்  கொள்ள  வேண்டிய  பிரச்சனைகள் , செய்ய  வேண்டிய  உடல் , மன  பயிற்சிகள்  ஆகியவற்றை  கச்சிதமாக  பின்னி  இருக்கிறார்

மணிஷ்  மாதவன்  ஒளிப்பதிவில்  கண்களை  உறுத்தாத  இயல்பான காட்சிகள்  கவர்கின்றன.. பிரவீன்  பிரபாகரனின்  எடிட்டிங்கில்  கனகச்சிதமாக    72  நிமிடங்களில்  படம்  முடிகிறது . மீதி  எட்டு  நிமிடங்கள்  டைட்டில்  ஓட


இந்தபடத்தைத்தயாரித்திருப்பவர்கள்   இரு  பெண்கள்  என்பது  கூடுதல்  ஆச்சரியங்கள் 


இது  ஜனரஞ்சகமான  படம்  அல்ல , அனைத்துத்தரப்பினரும்  ரசிக்க  முடியாது, பெண்களின்  மனதைப்பெரிதும்  கவரும்  மெலோ  டிராமா . . சோனி  லைவ்  ஓடி டி  தளத்தில்  வெளியாகியுள்ளது 


தமிழ் , தெலுங்கு, மலையாளம், ஹிந்தி   என  பல மொழிகள்  பேசும்  6  வெவ்வேறு  மாநில  பெண்களை  பாத்திரைப்படைப்பாக  உருவாக்கியது  புத்திசாலித்தனம்ரசித்த  வசனங்கள்

1  வலியை  விட   வேதனையானது  வலி  பற்றிய  பயம்  தான் 

2  பய  உணர்வு  உங்களை  ஆட்கொள்ள  நீங்கள்  விடவே  கூடாது 

3  ஒவ்வொரு  குழந்தையும்  இயற்கையின்  ஒரு  அதிசயம் தான்


Thanks to Kalki weekly
This article was published in Kalki on 20/11/2022 in the name of SAP karpagavalli (my mom)
Wonder Women
Directed byAnjali Menon
Screenplay byAnjali Menon
Produced byRonnie Screwvala
Ashi Dua Sara
StarringNadiya Moidu
Nithya Menen
Padmapriya Janakiraman
Parvathy Thiruvothu
Sayanora Philip
Archana Padmini
Amruta Subhash
CinematographyManesh Madhavan
Edited byPraveen Prabhakar
Music byGovind Vasantha
Production
companies
RSVP
Flying Unicorn Entertainment
Little Films Productions
Distributed bySonyLIV
Release date
18 November 2022
Running time
80 minutes
CountryIndia
LanguageEnglish

Wednesday, November 23, 2022

அனல் மேலே பனித்துளி (2022) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ சோனி லைவ் ஓடிடி


 காலம்  காலமாக  ஒரு பெண்  பாதிக்கப்படும்போது  பெண்  எப்படி  நடந்து  கொள்ள  வேண்டும் ? எந்த  மாதிரி  ஆடைகளை  உடுத்திக்கொள்ள  வேண்டும் ?  எந்த  நேரத்தில்  வெளியே  போக  வேண்டும் ? எப்போது  வெளியே  போகக்கூடாது  என  பெண்களுக்குத்தான்  அறிவுரை  சொல்லப்படுகிறதே  தவிர ஆண்களுக்கு  யாரும்  அறிவுரையோ  எச்சரிக்கையோ  தருவது  இல்லை . 


ஒரு   பெண்  பாலியல்  வன்  கொடுமைக்கு ஆளாகும்போது  அந்த  விஷயம்  வெளியே  தெரிந்தால்  அந்தக்கொடுமையை  செய்த  ஆணுக்கு  எந்தவிதமான  அவமானம்  நேரும், அவனது  குடும்பம்  எப்படி  பாதிக்கப்படும் ? அவனுக்கு  ஏற்படும்  மன  உளைச்சல்கள்  எப்படி  இருக்கும் ? என்னும்  விதமாக  எப்போது  திரைப்படங்கள்  உருவாகிறதோ  அப்போதுதான்   பெண்களுக்கு  எதிரான  கொடுமைகள்  செய்ய  ஆண்கள்  அச்சப்படுவார்கள் 


நாயகி  ஒரு  ஷாப்பிங்  காம்ப்ளெக்சில்  சூப்பர்வைசராக   பணி புரிகிறாள் . அங்கே  சேல்ஸ்  கேர்ளாக  பணி  புரியும்  பெண்ணின்  காதலனுடன்  அவளுக்கு  பிரேக்கப்  ஆகிறது. முதலில்  காதலித்தவள்  பின்  அவனது  கேரக்டர்  சரி  இல்லாததால்  காதல்  வாழ்வை  முறிவுக்குக்கொண்டு  வர  தீர்மானிக்கிறாள். ஆனால்  காதலன்  அவளை  விடுவதில்லை . தொடர்ந்து  வந்து  டார்ச்சர்  செய்கிறான். நாயகி  அந்தப்பணிப்பெண்ணை  டார்ச்சர்  செய்யும்  அவளது  காதலனை    எச்சரித்து  அனுப்புகிறாள் . இதனால்  காதலன்  நாயகி  மேல்  கோபமாக  இருக்கிறான்இன்னொரு  சம்பவம், அந்த  காம்ப்ளெக்சில்  பணி  புரியும் ஒரு  ஆண்  தன்  நண்பன்  உதவியுடன்  ஒரு  உடையை  திட்டம்  போட்டு  திருடுகிறான், அதைக்கண்டு  பிடித்து  அவனை  பணியில்  இருந்து  நீக்குகிறார்  நாயகி . இந்த  ஒரு  முறை  மன்னித்து  விட்டு  விடுங்கள்  என  அவன்  கெஞ்சியும்  நாயகி  மனம்  இரங்கவில்லை . இதனால்  அவனும்  அவனது  நண்பனும்  நாயகி  மீது  கோபமாக  இருக்கிறார்கள்


தான்  பணி  புரியும்  இடத்தில்  ஒருவரின்  திருமண  நிகழ்ச்சிக்காக  கொடைக்கானல்  செல்கிறார்  நாயகி . அங்கே  அடையாளம்  தெரியாத  3  நபர்களால்  பாலியல்  வன் கொடுமைக்கு  ஆளாகிறார்.அந்தகொடுமைக்கு  அவரை  ஆளாக்கியவர்கள்  யார்? மேலே  சொன்ன  சம்பவங்களில்  புதிதாய்  முளைத்த  அந்த  எதிரிகளா?  வேறு  நபர்களா?  இதற்குப்பின்  நாயகியின்  வாழ்வில்  நடந்த திடுக்கிடும்  சம்பவங்கள்  என்ன? இதுதான்  திரைக்கதை  


நாயகியாக  ஆண்ட்ரியா. மனதில்  தங்கி  விடும்  அருமையான  நடிப்பு .  பணி  புரியும்  இடத்தில்  கம்பீரமாக  நடந்து   கொள்வது , பாதிக்கப்பட்ட  பின்  அவரது  உடல்  மொழியில்  மாற்றம் , அவமானப்படுத்தப்படும்போது  அவரது  உள்ளக்குமுறல்கள்  எல்லாவற்றையும்  சிறப்பாக  வெளிப்படுத்தி  இருக்கிறார்   


போலீஸ்  சப் இன்ஸ்பெக்டராக  அழகம்பெருமாள்  மாறுபட்ட  நடிப்பை  வழங்கி  உள்ளார் ,  போலீஸ்  ஏட்டய்யாவாக  வரும்  இளவரசு  மிரட்டி  இருக்கிறார் 


போலீஸ்  இன்ஸ்பெக்டராக  வரும்  அந்தப்பெண்  புதிய  முகம்  போல  தெரிகிறது . வித்தியாசமான  நடிப்பு 


நாயகியின்  காதலனாக ஆதவ்  கண்ணதாசன்  பொறுமையான    நடிப்பை  வழங்கியுள்ளார் 


ஆர்  கெய்சர்  ஆனந்த்  முதல்  30  நிமிடங்கள்  கதைக்கு  உள்ளே  போக   நேரம்  எடுத்துக்கொண்டு  அதற்குப்பின்  காவல்  நிலையத்துக்கு  நாயகி  ;புகார்  கொடுக்கப்போகும்  நிமிடத்தில்  இருந்து  திரைக்கதையில்  வீரியம்  பற்றிக்கொள்கிறது/  சினிமாத்தனம்  இல்லாத  யதார்த்தமான  நிகழ்வுகள்  கண்  முன்    நடக்க  பார்வையாளர்களின்  இதயத்துடிப்பை  எகிற  வைக்கும்  நிகழ்வுகள்  கச்சிதமாக  சொல்லப்பட்டிருக்கிறது 


  வெற்றி  மாறன்  தான்  இந்தப்படத்தை  தயாரித்து  இருக்கிறார் . சந்தோஷ்  நாராயணன்  இசையில்  ஒரு  பாடல்  மனதில்  தங்குகிறது. பின்னணி  இசையில்  போதுமான  பதட்டத்தை  ஏற்படுத்தி  இருக்கிறார்.


இந்தப்படம்  18+க்கான  சென்சார்  சான்றிதழ்  வழங்கப்பட்டிருந்தாலும்  கண்ணியக்குறைவான  காட்சிகள்  எதுவும்  இல்லை .  கதையின்  கரு, காட்சியின்  தீவிரம்  இவற்றுக்காகத்தான்  ஏ  சான்றிதழ் , மற்றபடி  இது  பெண்களுக்கான  ,  சிறுமிகளுக்கான  விழிப்புணர்வுப்படம்தான்


நச்  டயலாக்ஸ்  


1  ஆண்கள்  என்றாலே  அதிகாரம்  தான், அதுவும்  அதிகாரத்தில்  ஆண்கள்  இருந்தால்?  


2  மானம்  என்பது  நாம  போட்டிருக்கும்  உடையில்  இல்லை ,நாம்   வாழும்  வாழ்க்கையில்  இருக்கிறது .


3  நம்ம  ஊர்ப்பெண்கள்  துப்பாக்கி  முனையில்  நிற்க  வைத்தால்  கூட  நெஞ்சை  நிமிர்த்திட்டு  எதிர்த்து  நிற்பாங்க , ஆனா  துணியை  அவுத்துட்டா  ஒடுங்கி  பயந்து  ஓடிடுவாங்க 


போன்ற  வசனங்கள்  அருமை .


பாதிக்கப்பட்ட  பெண்கள்  தன்னை  கொடுமைக்கு  ஆளாக்கிய  ஆண்களை  சட்டத்தின்  பிடியில்  சிக்க  வைக்க  எவ்வளவு  சிரமங்களை  எதிர்கொள்ள  வேண்டி  இருக்கிறது  என்பதை  தத்ரூபமாக  சொல்லும்  படம் 


 இது  சோனி  லைவ்  ஓடிடி  தளத்தில்  வெளியாகி  உள்ளது 


சபாஷ்  டைரக்டர் 


1   காவல்  துறை  உங்கள்  நண்பன்  , விசாரணை , யுத்த  காண்டம்  போன்ற  படங்களுக்குப்பின்  பெரும்பாலான  காட்சிகள்  காவல்  நிலையத்துலயே  நடப்பது  போல்  திரைக்கதை  கொண்ட  படம்  இது .  ரசிக்கும்படி  அந்த  போர்சன்  இருக்கிறது 


2  போலீசால்  பொதுமக்கள்  ஏராளமாக  பாதிக்கப்பட்டு  இருப்பதால்  அவர்களை  வில்லன்களாக  காட்டுவது   மக்கள்  ஆதரவைப்பெறும் 


3  குணச்சித்திர  நடிப்பை  இதற்கு  முன்  வழங்கிய  முக்கிய  நடிகர்களை   வில்லன்கள்  ஆக்கியதும்  அருமை . இதற்கு  முன்  நூறாவது  நாள்  படத்தில்  மோகன்  வில்லனாக  நடித்தது  கவனம்  கொள்ள  வைத்தது  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   பொதுவா    பெண்கள்  தனியே  வெளியே  செல்வது  ஆபத்து . சமீபத்தில்  இரு  எதிரிகளை  சம்பாதித்த நாயகி  அவர்கள்  தன்னைப்பின்  தொடர்ந்து  கொடைக்கானல்  வருவது  தெரிந்தும்  தனிமையில்  ஊர்  சுற்றிப்பார்க்கக்கிளம்புவது  எப்படி ?


2  குற்றவாளிகள்  மூவர்  ஒருவர்  பைக்கிலும்  இருவர்  ஜீப்பிலும்  வந்திருக்கிறார்கள், ஆனால்  நாயகி  ஸ்டேட்மெண்ட்டில்  மூவருமே  ஹெல்மெட்  அணிந்து  இருந்ததால்  முகம்  அடையாளம்  தெரியலை  என்பது   நெருடுது


3  ஒரு  பெண்ணோட  மனசு  இன்னொரு  பெண்ணுக்குத்தான்  தெரியும்  என்பது  உண்மைன்னா  போலீஸ்  பெண்    இன்ஸ்பெக்டர்  போலீஸ்  ஸ்டேஷனில்  நாயகியைப்பார்த்ததுமே  தன்  வீட்டுக்கு  அழைத்துச்சென்றிருக்க  வேண்டும் .  எந்த  நம்பிக்கையில்  இரவில்  தனிமையில்  அவரை  விட்டுச்செல்கிறார் ?


 4   ரேப் செய்யப்பட்டு  24  மணி  நேரத்துக்குள்  டாக்டர்  சிகிச்சை  அளித்தால்தான்  குற்றவாளி  சம்பந்தமாக  தடயங்கள்  கிடைக்கும் ,  இன்ஸ்பெக்டர்  அதை  கருத்தில்  கொண்டு  ஜீப்பில்  அவரை  கொண்டு  போய்  ஜி ஹெச்சில்  விட்டிருக்க  வேண்டும்  ஏன்  அதை  செய்யலை ?


5  பாதிக்கப்பட்ட  பெண்  தங்களைப்பற்றிய  தடயங்கள்  தகவல்கள்  கசிய  விட்டால்  ஆபத்து  என்பதை  உ ணர்ந்த   குற்றவாளிகள்  நாயகியை  கொலை  செய்யாமல்  போவதும்  ஆச்சரியமே 


6  க்ளைமாக்சில்  குற்றவாளிகளுக்கு  என்ன  தண்டனை  கிடைத்தது  அவர்கள்  பட்ட  அவமானம்  என்ன? அவர்கள்  குடும்பம்  சந்தித்த  பிரச்சனைகள்  போன்றவற்றை  விலாவாரியாக  காட்ட  வேண்டும், அப்போதான்  தப்பு  செய்பவர்களுக்கு  ஒரு  பயம்  இருக்கும்  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   கமர்ஷியல்  அம்சங்கள்  எதையும்  வலியத்திணிக்காமல்,  யதார்த்தமான ஒரு  கதை  பெண்களுக்காக  படைத்திருக்கும்  இயக்குநர்  பாராட்டப்பட  வேண்டியவர் , ஆனந்த  விகடன்  மார்க்  43  ரேட்டிங்  2.75 / 5 

Anel Meley Pani Thuli
Anal Mele Pani Thuli First Look Poster 1.jpg
Directed byR. Kaiser Anand
Written byR. Kaiser Anand
Produced byVetrimaaran
StarringAndrea Jeremiah
Aadhav Kannadasan
CinematographyVelraj
Edited byRaja Mohammad
Music bySanthosh Narayanan
Production
company
Distributed bySonyLIV
Release date
18 November 2022
CountryIndia
LanguageTamil

Tuesday, November 22, 2022

கவுரவம் (1973) - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா)

 


சூப்பர் ஸ்டார்   ரஜினி  சிவாஜியா  நடிச்ச  ஷங்கர்  படத்தை  ரிலீஸ்  அன்னைக்கே  பார்த்தாச்சு, ஆனா  சிவாஜி கணேசன்  ரஜினிகாந்த்தா  நடிச்ச  கவுரவம்  படத்தை  இத்தனை  நாட்களா  ஏன்  பார்க்கலைனு  தெரியல . இது லீகல்  டிராமா  அல்லது  கோர்ட்  ரூம்  டிராமா  கதைனு   முதல்ல  தெரியாது .  தெரிஞ்சிருந்தா  அப்பவே  பார்த்திருப்பேன், மிஸ்  ஆகிடுச்சு 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லனோட  மனைவி  ஒரு  மன நோயாளி .ஹிஸ்டீரியா  பேஷண்ட் அவளைக்கொலை  செஞ்ச  வழக்கில்  மாட்டின  வில்லன்  வக்கீல்  கிட்டே  சொன்ன  சம்பவம்... ஒரு  மழை  நாளில்  வில்லன்  தன்  மனைவி  கிட்டே  உனக்கும்  எனக்கும்  இனி  ஒத்து  வராது . இந்த  விடுதலைப்பத்திரத்தில்  கையெழுத்துப்போட்டுடு. நாம்  இருவரும்  பிரிந்து  விடலாம்  என  சொல்லும்போது  மனைவி  அதற்கு  ஒத்துக்கலை. இருவருக்குமான  வாக்குவாதம் , தள்ளுமுல்லுல  மனைவி  மாடில  இருந்து  கீழே  விழுந்து  இறந்துடறா,இந்த  சம்பவத்தை  நேரில்  பார்த்த  சாட்சி  இருந்தும்  வக்கீல்  தன்  வாதத்திறமையால்  வில்லனை  ரிலீஸ்  ஆக  வெச்சுடறார்வில்லனுக்கு  இன்னொரு  மேரேஜ்  நடக்க  இருக்கு , ஒரு  பெண்ணை  மேரேஜ்ஜூக்கு ரெடி  பண்றார். . ஒரு  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்  வீட்டுக்கு  வந்து  வில்லனின்  வருங்கால  மனைவிக்கு  இன்சூரன்ஸ்  பாலிசி  பத்திரத்தில்  சைன்  வாங்கிக்கறான்.  சில நாட்கள்  கழித்து வில்லன் உடைய  வருங்கால   மனைவி   பாத் டப் ல  குளிக்கும்போது   மர்மமான  முறையில்  இறந்துடறா. இந்த  கேஸ்ல  மீண்டும்  வில்லன்  மாட்டிக்கறான்.  முதல்  கேஸ்ல  காப்பாற்றுன  அதே  வக்கீல்  இந்த  கேஸ்க்கும்  ஆஜர்  ஆக  இருக்கிறார்


 இப்போ  நாயகன்  அறிமுகம்.   வில்லனைக்காப்பாற்றும்  வக்கீல்  உடைய  தம்பி  மகன்  தான்   நாயகன். . மகன்னா  நேரடி  வாரிசு  இல்லை ., பெரியப்பானுதான்  கூப்பிடறான். ஆனாலும்  இருவருக்கும்  அப்படி  ஒரு  பாண்டிங் .  பெரியப்பா  சொல்  தட்டாத  மகன் 


நாயகனோட பெரியப்பா  ஈகோ  பிடிச்சவர் , தோல்வியைத்தாங்க  முஜ்டியாதவர். நாயகனும், பெரியப்பாவும்  செஸ்  விளையாடும்போது  தோல்வி  ஏற்படும்  நிலை  வந்தாக்கூட  அதைத்தாங்கிக்க  முடியாதவர் 


 ஒரு  கட்டத்தில்  அப்பா , மகனுக்கு  வாக்குவாதம்  வந்து  வீட்டை  விட்டு  வெளீல  போனு  சொல்லிட்றார் . காரணம்  ஒரே  கேசில்  எதிர்  எதிர்  துருவங்களாக  இருவரும்  வாதாட  முடிவு  எடுத்ததே 


இதற்குப்பின்  அந்த  கேசில்  யார்  ஜெயித்தார்கள்  என்பதே  க்ளைமாக்ஸ்


வில்லனாக  மேஜர்  சுந்தர்ராஜன். பசுத்தோல்  போர்த்திய  புலியாக  பிரமாதமான  நடிப்பு , ஆனா  அவர்  பிராண்ட் டயலாக்  ஆன  இங்க்லீஷ்ல   ஒரு  முறை  தமிழில்  ஒரு  முறை  ஒரே  டயலாக்கை  ரிப்பீட்  பண்ற  சீன்  இல்லாதது  ஒரு  ஏமாற்றமே


நாயகனாக , நாயகனின்  பெரியப்பாவாக  இரு  வேடங்களில்  சிவாஜி  கணேசன். பாரிஸ்டர்  ரஜினிகாந்த்தாக  இவர்  பண்ணும்  அலப்பறைகள்  பிரமாதம் . ஆனா  பிளட்  பிரஷர்  வந்த  மாதிரி  அவர்  ஓவர்  ஆக்ட்  பண்றாரோனு  தோணுது .  நாயகனாக  வரும்   சிவாஜி  அமைதியே  உருவாக  வருகிறார்


நாயகியாக  உஷா  நந்தினி  , அதிக  வாய்ப்பில்லை , ஒரே  ஒரு  டூயட்தான்  மிச்சம் 


 பெரியம்மாவாக  பண்டாரி  பாய் . அந்தக்காலத்துல  அம்மா  ரோலுக்கு   இவர்தான்  நேர்ந்து  விடப்பட்ட நைவேத்தியம் 


இந்தப்படம்  மெகா  ஹிட்டாம்.   மெயின்  கதையான  அந்த  கொலை  வழக்கு பற்றிய  பேச்சு  மக்கள்  மத்தியில்  இல்லை ,  சைடு  கதையான  பாரிஸ்டர்  ரஜினிகாந்த்தின்  வறட்டு  கவுரவம் , அப்பா  மகன்  ஈகோ  மோதல்  சம்பவம்தான்  டாக்  ஆஃப்  த  டவுனா  இருந்ததாம்  


 நாகேஷ்  , வி கே  ராமசாமி  , செந்தாமரை   எல்லாரும்  உண்டு .  சும்மா  சில  காடசிகள்  தான் 


எம் எஸ்  விஸ்வநாதன்  இசையில்   5  பாடல்கள்  அவற்றில்  2  பாடல்கள்  மெகா  ஹிட் 


1    யமுனா  நதி  இங்கே 

2  அதிசய  உலகம் 


3   பாலூட்டி  வளர்த்த  கிளி  பழம்  கொடுத்துப்பார்த்த  கிளி 


4  மெழுகுவர்த்தி  எரிகின்றது 


5   நீயும்  நானுமா?கண்ணா  நீயும்  நானுமா


சபாஷ்  டைரக்டர்1   பாரிஸ்டர்  ரஜினிகாந்த்  கேரக்டர்  டிசைன்  எழுதப்பட்ட  விதமும்  அதற்கு  உயிர்  ஊட்டிய  சிவாஜியின்  நடிப்பும் 


2   கோர்ட்  ரூம்  காட்சிகளில்  வசனம் 


  ரசித்த  வசனங்கள் 


1    நாய்  கடிச்சு  சாவதை  விட  யானை  மிதிச்சு  சாவது  உயர்ந்தது 


2   வாழ்க்கைங்கறது  பால்  மாதிரின்னா  காதல்  என்பது  சர்க்கரை  போல 


3   டாக்டர்  கிட்டேயும்  வக்கீல்  கிட்டேயும்  பொய்  சொல்லக்கூடாது 


 அதாவது  நாம  அவங்க  கிட்டே  பொஉ  சொல்லக்கூடாது , ஆனா  அவங்க  பொய்  சொல்லலாம் 


4   விளையாட்டிக்குக்கூட  ஒரு  விளையாட்டில்  கூட  என்னால  தோல்வியைத்தாங்கிக்க  முடியாது , அதே  சமயம்  விட்டுக்கொடுக்கப்பட்ட  வெற்றியையும்  ஏற்றுக்கொள்ள  முடியாது 


5  அடுத்தவங்க  வாழ்க்கைல  அக்கறை  எடுத்துக்கொள்ளும்  ஒரே  ஜீவன்  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்  தான் 


6  ஒருவரின் பலத்தோட  போட்டி  போட்டு  ஜெயிக்க  முடியலைன்னா  அவரின்   பலவீனத்தோட  போட்டி  போட்டு  ஜெயிக்க  வேண்டியதுதான் 


7  அப்பா  , உங்களை  எதிர்த்து   வாதாடி  நான்  ஜெயிச்சாலும்  அது  உங்களுக்குப்பெரும்னைதானே?


 என்னை  எதிர்த்து  நீ  ஜெயிச்சாலும், தோற்றாலும்  அது  எனக்கு  அவமானம்  தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஃபிளாஸ்பேக்  சீனில்  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்தான்  பாலிசி  போடச்சொல்லி  வற்புறுத்தறான்  , ஆனா  க்ளைமாக்ஸ்ல  கோர்ட்ல  ஜட்ஜ்  கிட்டே  அந்த  ஏஜண்ட்  வில்லன்  தான்  வற்புறுத்தி  பாலிசி  போட  வெச்சார்னு  பொய்  சொல்றான் 


2  ஓப்பனிங்  சீன்  கேஸ்ல  ஜட்ஜோட  நடிப்பு  ரொம்ப  ஓவர்  ஆக்டிங்கா  இருந்தது, சிவாஜி  ரசிகரா  இருக்கும்  போல 


3    ஓப்பனிங்  சீன்ல   கேஸ்ல  குற்றவாளிக்கூண்டில்  நிற்கும்போது  வில்லன்  சர்ட்  பட்டன்கள்  முதல்  இரண்டைக்  கழட்டிட்டு  அசால்ட்டா  நிற்கறார் கேஸ்  முடிந்து  கோர்ட்  வளாகம்  தாண்டி   கூட்டிச்செல்லப்படும்போது  பட்டன்கள்  போடப்பட்டு   இருக்கு 


4  பாரிஸ்டர்  சிவாஜி  நைட்  தூங்கி  எழும்  ஒரு  காட்சியில்  ஃபுல்  ஸ்லீவ்  சர்ட்  போட்டு  அயர்ன்  பண்ணின  மடிப்புக்கலையாம  இருக்கார் ,  தூங்கும்போது நைட்  டிரஸ் ல  ஃப்ரீயா  அல்லது  பனியனோட  இருப்பாங்களா?   இப்படி  ஆஃபீஸ்  போற  மாதிரி  பக்காவா  டிரஸ்  பண்ணிட்டு  இருப்பாங்களா?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் .  ரெண்டரை  மணி  நேரப்படத்துல  போர்  அடிக்காம  போகுது ,  பாடல்கள்  ஹிட்  என்பதாலும்  கோர்ட்  ரூம்  வாதத்துக்காகவும்  பார்க்கலாம்  ., ரேட்டிங் 2.75 / 5 


Gauravam
Gauravam 1973 poster.jpg
Theatrical release poster
Directed byVietnam Veedu Sundaram
Written byVietnam Veedu Sundaram
Based onKannan Vanthaan
by Vietnam Veedu Sundaram
Produced byS. Rangarajan
StarringSivaji Ganesan
Ushanandini
Pandari Bai
CinematographyA. Vincent
Edited byR. Devarajan
Music byM. S. Viswanathan
Production
company
Vietnam Movies
Release date
  • 25 October 1973
Running time
136 minutes
CountryIndia
LanguageTamil