Sunday, September 24, 2023

JAANE JAAN (2023) -ஹிந்தி - சினிமா விமர்சனம் (மிஸ்ட்ரி த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

   


   2015ல்  செம  ஹிட்  ஆன  த்ரிஷ்யம்  படம்  பல  மொழிகளில்  ரீமேக்கப்பட்டு  ஹிட்  ஆனது  எல்லோருக்கும்  தெரியும்.2008 ல்  ரிலீஸ்  ஆன  ஜப்பானிஸ்  படமான  சஸ்பெக்ட்  எக்ஸ்  என்ற  படம்  அதிரி  புதிரி  ஹிட்  ஆனது . 2019ஆம்  ஆண்டு விஜய்  ஆண்ட்டனி  நடிப்பில்  கொலைக்காரன்  படம்  வெளி  வந்தது . இவை  எல்லாமே  டிவோஷன்  ஆஃப்  சஸ்பெக்ட்  எக்ஸ்   என்னும்  ஜப்பானிய  நாவலின்  தழுவல்  தான்  மேற்கூறிய  அனைத்துப்படங்களும். அதே  மாதிரி  சாயலில் உள்ள  படம்  தான்  இதுவும் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  சிங்கிள்  மதர். 13  வயதில்  ஒரு  பெண்  குழந்தை  உண்டு .  கணவனைப்பிரிந்து  வாழ்பவர் . காரணம்  அவன்  ஒரு  விளங்காதவன். மனைவியை  கிளப்களில்  ஆட  விட்டு  பணம்  சம்பாதிக்க  நினைப்பவன். இப்போது  நாயகி  கணவனைப்பிரிந்து  14  வருடங்களாக  தனிமையில்  வசித்து  வருகிறார். ஒரு  காஃபி  கஃபே  கம்  ரெஸ்ட்டாரண்ட்  நடத்தி  வருகிறார்


 நாயகன்   ஒரு  மேத்ஸ்  டீச்சர். அபாரமான  புத்திக்கூர்மை  உள்ளவன் . எல்லாவற்றையும்  மாறுபட்ட  கோணத்தில்  சிந்திப்பவன், இவனுக்கு  நாயகி  மீது  ஒரு  தலைக்காதல். தினசரி  நாயகி  கடைக்கு  வந்து  ஏதாவது  பார்சல்  வாங்கிச்செல்பவன்.  நாயகி  வீட்டுக்குப்பக்கத்து  வீடு  தான்


ஒரு  நாள்  நாயகியின்  கணவன்  திடீர்  என  நாயகியை  சந்திக்க  வருகிறான். பணம்  வசூல்  பண்ணத்தான். இருவருக்கும்  கை  கலப்பு  நடந்து எதிர்பாராத  விதமாக  கணவனை  கொலை  செய்து  விடுகிறாள் . இது  நாயகனுக்குத்தெரிய  வர  நீங்க , கவலைப்படாதீங்க . இந்தக்கொலைப்பழியில்  இருந்து  உங்களை நான் காப்பாற்றுகிறேன்  என  உத்தரவாதம்  அளிக்கிறான். டெட்  பாடியை  நாயகன்  எடுத்துக்கொண்டு  சென்று  விடுகிறான் 


 இந்த  கேசை  துப்பு  துலக்க  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  வருகிறார். அவர்  நாயகனின்  ஸ்கூல்  மேட். நாயகன் - நாயகி , போலீஸ்  இந்த  மூவருக்கும்  நிகழும்  போரட்டங்கள்  தான்  மீதிக்கதை 


நாயகி  ஆக  கரீனா  கபூர்  கான்  கச்சிதம்  ஆக  நடித்திருக்கிறார். கணவனைக்கண்டு  பொங்குவது , அவனால்  தன்  மகளுக்கு  எந்த  தீங்கும்  நடக்கக்கூடாது  என  பதறுவது  எல்லாம்  அருமை , பெண்களின்  பாராட்டைப்பெறும்  நடிப்பு


நாயகன்  ஆக  ஜெய்தீப்  அடக்கி  வாசிக்கும்  நடிப்பு.  வழுக்கைத்தலையை  அடிக்கடி  கண்டு  தாழ்வு  மனப்பான்மையில்  துடிப்பதும் , நாயகியைக்காப்பாற்றபோராடுவதும்  சிறப்பு 


போலீஸ்  ஆஃபீசர்  ஆக  விஜய்  வர்மா   துடிதுடிப்பான  நடிப்பு.  ஓப்பனிங்  ஃபைட்  சீனிலேயே  மனம்  கவர்கிறார்


ஊர்வசி  சக்சேனாவின்  எடிட்டிங்கில்  படம்  139  நிமிட   நேரம்  ஓடுகிறது . சச்சின்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம்   ஷார்  போலீஸ்  பின்னணி  இசையில்  இன்னும்  கலக்கி  இருக்கலாம்   ஆயுக்  முக்கோபதே  ஒளிப்பதிவில்  கவனம்  ஈர்க்கிறார் 


சுஜோய்  கோஷ்  திரைக்கதை   வசனம்  எழுதி  இயக்கி  இருக்கிறார்

சபாஷ்  டைரக்டர் (சுஜோய்  கோஷ்)

1    நாயகியின்  கணவன்  மீது  ஆடியன்சுக்கு  வெறுப்பு  ஏற்படுவதைப்போல  சித்தரித்த  விதம்  அருமை . அவன்  எப்படியோ  செத்தா  சரி  என்ற  எண்ணத்தை  ஏற்படுத்தியது 


2 போலீஸ்  ஆஃபீசர் , நாயகன்  இருவருமே  நாயகி  மீது  ஆசைப்படுவதாகக்காட்டினாலும்  நாயகி  யார்  மீது  மையல்  கொண்டிருக்கிறார்  என்பதை  கடைசி  வரை  சொல்லாமல் விட்டது 


3   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் , மேத்ஸ்  டீச்சர்  சம்யோசிதம்  வெளிப்படும்   இதர  காட்சிகள் 


  ரசித்த  வசனங்கள் 

1  என்னை  எப்படிகண்டுபிடிச்சே?

முயற்சி செஞ்சா கடவுளையே  கண்டுபிடிக்கலாம்


2  உனக்கு  நல்ல  நேரம், கடவுள்  உன்னைக்காப்பாத்திட்டார்


யார்  கிட்டே  இருந்து?


 என்  கிட்டே  இருந்துதான் 


3   உன்  அளவுக்கு  நான்  பர்சனாலிட்டி இல்லாம  இருக்கலாம், ஆனா  நான்  உயிரோட  இருக்கேன், நீ இல்ல 


4   நாம  சாப்பிட  ஏதாவது  ஆர்டர்  பண்ணலாமா?

என்  டைமைத்தான்  சாப்பிட்டுட்டு இருக்கீங்க, இதையும்  சாப்பிடுங்க 


5  ஜீனியஸ்க்கும், பைத்தியக்காரனுக்கும்  கொஞ்சம்  தான்  வித்தியாசம்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகி  நாயகனைக்காதலிக்கவில்லை , அதே  சமயம்  க்ளப்பில்    போலீஸ்  ஆஃபீசருடன்  நெருக்கமாக  நடனம்  ஆடியது  தெரிய  வருகிறது. இருந்தும்  தன்  வாழ்க்கையையே  பணயம்  வைக்கும்  வேலையை  ஏன்  செய்கிறார்?


2   நாயகி  செய்த  கொலையை  செல்ஃப்  டிஃபன்ஸ்  என  வாதாடி  இருந்தால்  அட்லீஸ்ட்  குறைந்த  பட்ச  தண்டனையுடன்  தப்பி  இருக்கலாம்,  நாயகியைக்காப்பாற்ற  நாயகன்  செய்த  செயலால்  தெவையற்ற  தண்டனை 


3  மேத்ஸ்  டீச்சர்  புத்திசாலி. போலீசிடம்  நான்  எப்போதாவதுதான்  நாயகி  கடைக்கு  செல்வேன்  என்கிறார். போலீஸ்  கடையில்  விசாரிக்கும்போது பணிப்பெண்கள்  தான்  ரெகுலர்  கஸ்டமர்  என்பதை  சொல்ல  வேண்டாம்  என  நாயகியிடம்  சொல்லவில்லை. அது  என்? அவ்ரால்  அதை  யூகிக்க  முடியவில்லையா? 


4  நாயகிக்கு  போலீஸ்  அஃபிச்ரைக்கவரும்  எண்ணம்  இல்லை . பின்  ஏன்  அவர்  முன்னாலேயே  அல்லது  அவர்  பார்க்கும்படி  நாயகி  தன்  வீட்டில்  உடை  மாற்றுகிறார்.  பெட்ரூமில் போய்  கதவை  சாத்தி  உடை  மாற்றி  இருக்கலாமே?

5  எப்போதும்  இறுக்கமாக  இருக்கும்  நாயகி  க்ளப்பில்  போலீஸ்  ஆஃபீசருடன்  பாட்டு  பாடி  நடனம்  ஆடுவது  எதற்கு ? செயற்கையாக  இருக்கிற்து 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  பிணம்  எரிக்கும்  காட்சி  மட்டும் கொடூரம்.



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  த்ரிஷ்யம் , கொலைகாரன் , சஸ்பெக்ட்  எக்ஸ்  போன்ற  படங்களைப்பார்க்காதவர்கள்  பார்க்கலாம், பார்த்தவர்கள்  விமர்சனம்  மட்டும்  படிக்கலாம், ரேட்டிங்  2.5 / 5 


Jaane Jaan
Official release poster
Directed bySujoy Ghosh
Written byDialogues:
Sujoy Ghosh
Raj Vasant
Screenplay bySujoy Ghosh
Based onThe Devotion of Suspect X
by Keigo Higashino
Produced by
Starring
CinematographyAvik Mukhopadhyay
Edited byUrvashi Saxena
Music bySongs:
Sachin-Jigar
Score:
Shor Police
Production
companies
Balaji Motion Pictures
12th Street Entertainment
Kross Pictures
Boundscript
Northern Lights Films
Distributed byNetflix
Release date
  • 21 September 2023
Running time
139 minutes
CountryIndia
LanguageHindi

Saturday, September 23, 2023

WHAT HAPPENED TO MONDAY (2017) -ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன்)@ அமேசான் பிரைம் த்ரில்லர் ) @

 


மேஜிக்  ரைட்டர்  அமரர்  சுஜாதா  கதை  திரைக்கதை  எழுத  கமர்ஷியல்  காக்ட்டெயில்  கிங் + உல்டா நயகன்  அட்லீ  இயக்க  லேடி  சூப்பர்  ஸ்டார்  நயன்  தாரா  ஏழு  வேடங்களில்  நடிக்க  ஒரு  தமிழ்ப்படம்  எடுத்தால்  எப்படி  இருக்கும் ? அது  மாதிரி  ஒரு மாறுபட்ட  அனுபவத்தை  இந்தப்படம்   தந்தது 


மூலக்கதை  எழுதப்பட்டபோது  இது  ஒரு  ஆணுக்கான  அதாவது  நாயகனுக்கான  படமாகத்தான்  இருந்தது , ஆனால்  இயக்குநர்  அதை  நாயகி  ஆக  மாற்றினார் . அவரது  ஐடியா  நன்றாக  ஒர்க் அவுட்  ஆனது . பல  மொழிகளில்  மொழி பெயர்க்கப்பட்டது .  செவன்  சிஸ்டர்ஸ்  என்ற  டைட்டிலில்  சில  நாடுகளில்  ரிலீஸ்  ஆனது


  ஸ்பாய்லர்  அலெர்ட்


கதைக்களம் 2043  டூ 2073ல்  நடப்பதாக  அமைகிறது . உலக  மக்கள்  தொகை  நாளுக்கு  நாள்  அதிகரிக்க  எல்லோருக்கும்  இருக்க  இடம் , உண்ண  உணவு  வழங்குவதில்  சிரமம்  ஏறட்டது . ஏகப்பட்ட  நெரிசல் . இதனால்  அரசாங்கம்  ஒரு  சட்டத்தை  இயற்றியது. அதாவது ஒரு  குடும்பத்தில் / ஒரு  தம்பதிக்கு  ஒரு  குழந்தை  மட்டுமே. சைல்டு  அல்கேஷன்  பரோ  என்ற  அமைப்பு  உருவாகிறது 


நாம்  இருவர்  நமக்கு இருவர் , நாமே  இருவர்  நமக்கு  எதற்கு  ஒருவர்  என்றெல்லாம்  ஒரு  கட்டத்தில்  மீம்ஸ்  வந்தது . அது  போல  மக்கள்  தொகையைக்கட்டுப்படுத்த  இந்த சட்டம்  கடுமையாக  அமலுக்கு  வந்தது. அதன்படி  ஒரு  தம்பதிக்கு  இரு  குழந்தைகள்  இருந்தால்  அல்லது  இரட்டைக்குழந்தை  பிறந்தால்  ஒரு  குழந்தையை  அரசாங்கம்  எடுத்துக்கொள்ளும். இத்ற்கு  குழந்தையின்  அம்மா  சம்மதம்  இல்லை  என்றாலும்  வலுக்கட்டாயம்  ஆக பிடுங்கப்படும்.  இப்போது  ஆதார்  கார்டு  உள்ளது  போல  ஒரு  பிரேஸ்லெட் போல  ஒவ்வொருவருக்கும்  வழங்கப்படும், அதில்  அனைத்து  விபரங்களும்  அடங்கி  இருக்கும்.  டோல்கேட்  போல  ஆங்காங்கே  செக்கிங்  நடக்கும். அதில்  இந்த  பிரேஸ்லெட்டை  காட்ட  வேண்டும்


இப்படிப்பட்ட  சூழலில்  ஒரு பெண்ணுக்கு  ஒரே  பிரசவத்தில்  7  குழந்தைகள் பிறக்கின்றன். பிரசவம்  முடிந்ததும்  அம்மா  இறந்து  விட்டாள் , அப்பா  யார்  என்று  தெரியாது. பெண்ணின்  அப்பா  அதாவது  குழந்தைகளின்  தாத்தா  அவர்களை  வளர்க்கிறார். வீட்டில்  ரகசிய  அறை  உருவாக்கி  அதில்  7  பேரையும்  அரசாங்கத்துக்குத்தெரியாமல்  வளர்க்கிறார். தன்  பெண்ணுக்கு  ஒரு  குழந்தை  மட்டுமே  பிறந்தது  என  கணக்குக்காட்டி  ஒரு  பிரேஸ்லெட்  வாங்கிக்கொள்கிறார்.  அந்த  பிரேஸ்லெட்டை  ஸ்கேன்  பண்ணி  அதே  போல்  போலியாக  ஆறு  உருவாக்கி  மீதி  ஆறு  பேருக்கும்  வழங்கி  விடுகிறார்


7  பேருக்கும்   ஏழு கிழமைகளின்  பெயர்  வைக்கப்படுகிறது .  எல்லோரும்  ஒரே  முக  சாயலில்  இருப்பதால்  ஸ்கூலுக்கோ ,  ஷாப்பிங்க்  காம்ப்ளெக்ஸ்க்கோ  போகும்போது  தினசரி  ஒருவர்  மட்டும்  அந்த  அடையாள  பிரேஸ்லெட்டை  அணிந்து  கொண்டு  வெளியே  போவார். வீட்டுக்கு  வந்து  அன்று  யார்  யாரை  சந்தித்தார்? என்ன  பேசினார்  என்பதை  சொல்லி  விடுவார். அடுத்த  நாள்  இன்னொருவர்  செல்வார். அவர்  அப்படியே  அதை  மெயிண்ட்டெயின்  செய்வார் 


30  வருடஙக்ள்  கழித்து   .....


 தாத்தா  இப்போது உயிருடன்  இல்லை. மிஸ்  மண்டே  ஆஃபீஸ்க்குப்போகிறார் இவர்  ஒரு  வங்கி  ஊழியர் .  அங்கே  லிஃப்டில்  ஒருவருடன்  வாக்கு வாதம்  நடக்கிறது . ஆஃபீசில்  யாருக்கு  பிரமோஷன் ?   என்பது  பற்றி  பேசிக்கொள்கிறார்கள் . நாயகிக்கு தான்  அதிக  வாய்ப்புகள்  இருக்கிறது


 அன்று  மாலை  மிஸ்  மண்டே  வீட்டுக்கு  வரவில்லை . மிஸ்  மண்டே  க்கு  என்ன  ஆனது ?   என்பதை  அறிய  அடுத்த  நாள்  மிஸ்  ட்யூஸ்டே  வெளியே  செல்கிறார்.மிஸ்  மண்டே  கடைசியாக  யாரை  சந்தித்தார்  என்பதை  விசாரிக்கிறார். ஒரு  க்ளூ  கிடைக்கிறது.


 இதற்கு  இடையே  அரசாங்கத்துக்கு  7  சகோதரிகள்  பற்றி  எப்படியோ  தெரிந்து  வீட்டுக்கு  போலீஸ்  வருகிறது . ஒரு  ஆக்சன்  அதகளம்  நடக்கிறது .


 மேலே  சொன்னவை  எல்லாம்  படம்  போட்டு 10  நிமிடங்களில்  முடிந்து  விடும், இதற்குப்பின்  நிகழும்  அதிரடித்திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக  ரூமி  ரபாஸ்  கலக்கி  இருக்கிறார். ஏழு  விதமான  ஹேர்  ஸ்டைல் , கெட்டப் , உடல்  மொழி  என  கமல் , விக்ரம் , எடி  மர்ஃபிக்கு  சவால்  விடும்  கேரக்டர். அனாயசமாக  நடித்துள்ளார் 


சைல்டு  அலக்கேஷன்  பரோ  எனப்படும் சி ஏ பி  அமைப்பின்  தலைவராக க்ளென்  க்ளோஸ்  கிட்டத்தட்ட  வில்லி  ரோலில்  வருகிறார். நயவஞ்சகம்  தெறிக்கும்  கண்கள் பிளஸ் 


ஏழு  பெண்களின்  தாத்தாவாக  வில்லியம்  டஃபோ  நடித்திருக்கிறார்.  சிறப்பான  குணச்சித்திர  நடிப்பு 


மார்வென்  கென்சாரி  மிஸ்  மண்டே வின்  காதலராக  நடித்துள்ளார். குட்  ஆக்டிங் 


மேக்ஸ் பாட்கின் , கெரி  வில்லியம்ஸ்  இருவரும்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்கள் . எப்படி  எல்லாம் யோசிக்கறாங்க  என்ற  பிரமிப்பை  எற்படுத்துகிறார்கள் 


டோம்மி  வெர்க்கோலா  தான்  படத்தின்  இயக்குநர் .  பிரித்து மேய்ந்து  விட்டார். பர  பர  என  காட்சிகள்  பற்றிக்கொண்டு  ஆக்சன்  த்ரில்லராக  ஸ்பீடாக  நகர்த்திக்கொண்டு  சென்றதில்  இவருக்கு  வெற்றி 

சபாஷ்  டைரக்டர் (டோம்மி  வெர்க்கோலா )

1   ஏழு  சிறுமிகளில்  ஒருத்தி  வெளியே  போகும்போது  ஒரு  விரலை  முறித்துக்கொண்டு  வ்ந்ததால்  அனைத்து  சிறுமிகளுக்கும்  அதே  போல்  விரல்  முறிவு  ஏற்படுத்தும் காட்சி  கொடூரம்  என்றாலும்  அந்த  ஐடியா  வியக்க  வைக்கிறது 


2  மிஸ்  மண்டே  வின்  காதலனை  சரசம்  ஆடி    அவரது  பிரேஸ்லெட்டில்  இருந்து  தகவ்ல்களை  ட்ரான்ஸ்ஃப்ர்  செய்யும்  காட்சி 


3    சேசிங்  காட்சிகள் , ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  செம  விறுவிறுப்பு 


4  மிஸ்  ட்யூஸ் டே  வின்  ஒரு  கண்ணை  மட்டும்  அரசாங்கம்  கதவைத்திறக்கும்  பாஸ்வோர்டு  ஆக  யூஸ்  பண்ணும்  காட்சி  பயங்கரம் 


 ரசித்த  வசனங்கள் 


1   போராட்டமோ , தியாகமோ  இல்லாம  வெற்றி  கிடைக்காது 


2   அவளைக்காப்பாற்ற  உன்  கிட்டே  ஏதாவது  திட்டம்  இருக்கா?


 நான்  தான்  அந்த  திட்டமே!

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வாரா  வாரம்  திங்கட்கிழமை  மட்டும்  தான்  நாம்  சந்திக்க  முடியும்  என்று  மிஸ்  மண்டே  தன்  காதலனிடம்  சொன்னபோது  அவன்  ஏன்  என்று  கேட்க வில்லையா? சந்தேகம்  கொள்ளவில்லையா?


2  மிஸ்  மண்டே  தன்  காதலன்  பற்றி  சகோதரிகளிடம்  சொல்லவில்லை . மீதி  ஆறு  பேரில்  யாராவது  ஒருவர்  தன்  காதலன்  கண்ணில்  பட்டு  விட்டால்  என்ன  ஆகும்  என்பதை  மிஸ்  மண்டே  சிந்திக்கவில்லையா? அதற்கு  மாற்று  ஏற்பாடு  ஏதும்  செய்ய வில்லையா? 


3  மிஸ்  மண்டே  மாதிரி  நடித்து  அவள்  காதலனுடன்  வேறு  சகோதரி  சரசம்  கொள்ளும் போது  அந்த  மாற்றம்  காதலனுக்கு  ஏன்  தெரியவில்லை ? ஏன்  எனில்  மிஸ்  மண்டே  உடன்  காதலன்  அடிக்கடி  அல்லது  வாரம்  ஒரு  முறை  உறவு  வைத்துக்கொண்டவன் , ஆனால்  மிஸ்  மண்டே  போல  நடித்து  அவனுடன்  சரசம்  கொள்ளும்  பெண்  இன்னொரு  சகோதரி. இவள்  கன்னிப்பெண். அந்த  வித்தியாசம்  ஏன்  காதலனுக்குத்தெரியவில்லை ? 


4  மிஸ்  மண்டே  அப்ரூவர்  ஆகி  அரசாங்கத்திடம்  தன்  சகோதரிகள்  பற்றி  தகவல்  சொல்வது  சுயநலத்துக்காக.. தான்  மட்டும்  தினசரி  வெளி  உலகில்  நடமாட  வேண்டும்  என்பதற்காக , ஆனால்  அவரிடம்  அவர்  தான்  மூத்த  சகோதரி  என்பதற்கு  என்ன  ஆதாரம்  இருக்கிறது ?  விஷயம்  தெரிந்த  ஒரே  நபர்  தாத்தா  தான்  அவர்  உயிருடன்  இல்லை. அப்படி  இருக்க  அரசாங்கத்திடம் தான்  தான்  மூத்தவர்  என்பதை  எப்படி  நிரூபிப்பார் ? 


5  சதித்திட்டம்  போடும்  மிஸ்  மண்டே  தன்  காதலனுக்கு  அது  பற்றி  தகவல்  தராதது  ஏன் ?  வேறு  சகோதரி  தன்னைப்போல்  காதலனிடம்  நடந்து  கொள்வார்  என்பதை  ஏன்  யூகிக்க  வில்லை ? 


6  மிஸ்  மண்டே  கர்ப்பம்  ஆனதால்  அவரது  க்ருவை   ஆர்ட்டிஃபிசியலாக  அரசின்  மேற்பார்வையில்  வளர்க்க  முடிவெடுக்கிறார். அது  இரட்டைக்கரு . அதை  மட்டும்  அரசு  எப்படி ஒத்துக்கொண்டது ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  கதைக்கு அவசியம்  என்பதால்  ஒரே  ஒரு  காட்சியில்  18+  இருக்கிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட  கதை  அம்சம்  கொண்ட  படம் . இது  விரைவில்  இங்கே  வலம்  வரலாம், அதற்கு  முன்  ஒரிஜினலைக்கண்டு  கொள்ளுங்கள் . ரேட்டிங் 3/ 5 



What Happened to Monday
Netflix release poster
Directed byTommy Wirkola
Written by
Produced by
Starring
CinematographyJosé David Montero
Edited byMartin Stoltz
Music byChristian Wibe
Production
companies
  • SND Films
  • Vendôme Pictures
  • Title Media
  • Raffaella Productions
  • Nexus Factory
  • Umedia
  • uFund
Distributed by
Release dates
Running time
123 minutes[4]
Countries
LanguageEnglish
Budget$20 million[6]
Box office$28 million[7][2]

Friday, September 22, 2023

NEEYAT (2023 ) -ஹிந்தி -சினிமா விமர்சனம் (க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர்)@ அமேசான் பிரைம்

 


   ஹாலிவுட்டின்  ராஜேஷ் குமாரினி  அகதா  கிறிஸ்டி  எழுதிய  நாவலைத்தழுவி உருவாக்கபப்ட்ட  நைவ்ஸ்  அவுட் ,  டெத்  ஆன்  த  நைல்   ஆகிய  படங்களின்  தாக்கத்தில் உருவான  பட,ம்  இது . நீயத்  என்ற  ஹிந்தி  சொல்லுக்கு  மோட்டிவ்  என்று  பொருள் .7.7/2023  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்பட்ம் 1/9/23  முதல்  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது


   ஸ்பாய்லர்  அலெர்ட்

விஜய் மல்லய்யா, நீரவ்  மோடி  மாதிரி  பெரிய  தொழில்  அதிபர்  தான்  படத்தோட  வில்லன். இவரு  ஏகப்பட்ட  பேங்க்ல கடன்  வாங்கி     ஏகப்பட்ட  பணத்தை  ஆட்டையைப்போட்டவரு . இவரோட  ஃபேக்டரியை  நட்டக்க்ணக்கு  காட்டி  மூடுனதால  பலர்  வேலை  இழந்து  எட்டு  பேர்  தற்கொலை  பண்ணி  இறந்துட்டாங்க . இவரு   பாட்டுக்கு  ஃபாரீன்  போய்  செட்டில்  ஆகிட்டாரு. இவ்ரைப்பிடிச்சுட்டு  வர இந்தியாவில்  இருந்து  ஒரு  சிபிஐ  ஆஃபீசர்  கிளம்பி  ஃபாரீன்  வர்றாரு 


வில்லன்  ஒரு  தனிமையான  தீவுல  தங்கி  இருக்காரு. அவருக்கு  பிறந்த  நாள் . அந்த  பிறந்த  நாளுக்கு  அவரோட  மகன், காதலி  , நண்பர்கள்  , உறவினர்கள்  உட்பட   10  பேரை  அழைத்திருக்கிறார். எல்லாரும்  பார்ட்டிக்கு  ஆஜர்  ஆகிடறாங்க. இந்த  பிறந்த  நாள்  பார்ட்டியை  நடத்த  ஈவெண்ட்  மேனேஜர்  ஒருவர்  தன்  ஆட்களுடன்  வந்திருக்கிறார். அழையா  விருந்தாளியாய்  நாயகி  ஆன  சிபிஐ  ஆஃபீசரும்  வந்திருக்கார்


பார்ட்டி  நடந்துட்டு  இருக்கும்போது  வில்லன்  ஒரு  அறிவிப்புக்கொடுக்கிறார். என்  எல்லா  சொத்துக்களையும்  இந்திய  அரசிடம் சரண்டர்  பண்ணீட்டு  நானும்  சர்ண்டர்  ஆகப்போறேன்  என்கிறார். கோடிக்கணக்கான  சொத்து  அவருக்கு . அவரோட  மகன், காதலி , நண்பர்  உட்பட  யாருக்குமே  இவரோட  முடிவில்  உடன்பாடு  இல்லை . ஏன்னா  சொத்து  கை  விட்டுப்போயிடுச்சுன்னா  இவங்க பாடு  திண்டாட்டம்  ஆகிடுமே? 


பார்ட்டி  நடந்திட்டு  இருக்கும்போது  சில  கொலை  முயற்சிகள்  நடக்குது , ஆனா  வில்லன்  தப்பி  விடுகிறார். ஒரு  கட்டத்தில்  வில்லன்  கோபமா  வெளில  கிளம்பிப்போறாரு . பின்  தொடர்ந்து  வ்ந்து  பார்த்தா  உயரமான  இடத்தில்  இருந்து  கீழே  விழுந்து  ரத்த வெள்ளத்தில்  இருக்கிறார்


நாயகி  ஆன  சிபிஐ  ஆஃபீசர்  துப்பு  துலக்க  ஆரம்பிக்கிறார். அங்கே  இருக்கும்  10  பேருக்குமே  வில்லனைக்கொலை  செய்ய  காரணம்  இருக்கிறது. ஒவ்வொருவர்  அறையையும், செல் ஃபோனையும்  செக்  பண்ணி  கொலையாளியைக்கண்டு  பிடிப்பது தான்  மீதிக்கதை 


 நாயகியாக  சிபிஐ  ஆஃபீசர்  ஆக  வித்யாபாலன்  நடித்திருக்கிறார். அவரது  ஹேர் ஸ்டைலும் , உடல்  மொழியும்  ஆணுக்கு  உரியது  போல  இருக்கிறது . அதற்கான  விளக்கம்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  வெளிப்படுகிறது 


 வில்லன்  ஆக  ராம்  கபூர். கச்சிதமான  நடிப்பு . நல்லவர்  போலவே  நடந்து கொள்ளும்  நயவஞ்சகத்தனம்  அருமை 


டெல்லி  க்ரைம்  நாயகி  ஷெஃபாலி  ஷா  கெஸ்ட்  ரோலில்  வருகிறார்.  கம்பீரமான  தோற்றம்,

130  நிமிடங்கள்  ஓடும்  படத்தில்  முதல்  60  நிமிடஙள் கழித்துக்கொலை  நடக்கிறது . இடைவேளைக்குப்பின்  இன்வ்ஸ்டிகேஷன்  ஆரம்பம்  ஆகிறது . க்ளைமாக்சில்  ஒரு  ட்விஸ்ட்டும்  இருக்கிறது


மிக்கி மெக்  கிளியரி யின்  இசையில்  பரபரப்பு  பற்றிக்கொள்கிறது ஆண்ட்ரியாஸ் நியாஸ் ஒளிப்பதிவில் காட்சிகள்  பிரம்மாண்டமாய்  கண்  முன்  விரிகிறது

திரைக்கதையை  நான்கு  பேர்  எழுத  அனு மேனன்  இயக்கி இருக்கிறார். விறுவிறுப்பாக  படம்  செல்கிறது


சபாஷ்  டைரக்டர்


1 சிபிஐ  டைரி  குறிப்பில்  நாயகன்  மம்முட்டி  பொம்மையை  மாடியில்  இருந்து  தூக்கிப்போட்டு  விழும்  பொசிஷனை  வைத்து  தற்கொலை  எனில்  எப்படி  இருக்கும் ? கொலை  எனில்  எப்படி  இருக்கும் ?> என்று  விளக்குவது  போல  நாயகி  வில்லனின்   பொசிசனை  வைத்து  இது  கொலை  தான்  என    சொல்லும்  இடம் 


2  மீடியா  ரிப்போர்ட்டர்  ஒருவர்  அந்த  பார்ட்டியில்  ஊடுருவி  இருப்பதும்  அவர்  கொலையாகும்  காட்சியும் 

3   க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லராகக்கொண்டு  போகும்  கதையை  ரிவஞ்ச்  த்ரில்லராக  மாற்றும்  லாவகம் 


  ரசித்த  வசனங்கள் 


1 உனக்குக்குழந்தைகள்  இருக்கா?

 இல்லை  சார்


 குழந்தைகள்  மாதிரி  அதாவது  நம்ம  வாரிசுகள்  மாதிரி  நம்ம  இதயத்தை  உடைக்கற  நபர்கள்  இந்த  உலகத்துல  வேற  யாரும்  இல்லை 


2  ஒரு  பொய்யை  ஆயிரம்  முறை  திருப்பி திருப்பிச்சொன்னால்  அது  உண்மை  ஆகிடும், அந்த  வேலையைத்தான்  நியூஸ்  சேனல்ஸ்  பண்ணிட்டு  இருக்காங்க   


3 தோல்விக்கு  பயப்படாதவன்  தான்  இந்த  உலகத்தை  மாற்ற  முடியும் 


4 பொய்  [பேசுபவர்க்ள்  எப்போதும்  சத்தம்  போட்டுத்தான்  பேசுவாங்க 


5   எல்லோருமே  அவங்கங்க  வயசை  கம்மியாத்தான்  சொல்வாங்க ,அது  ஒரு  க்ரைம் இல்லை 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கோடீஸ்வரர்  வீட்டில்  பர்த்டே  பார்ட்டி . அங்கே  பணி  புரிய  வந்திருக்கும்  ஊழியர்கள்   புயல்  வரப்போகிறது  என்று  நியூஸ்  சேனல்  அலெர்ட்  வந்ததும்  நாங்கள்  கிளம்பறோம்  என  சொல்வது  நம்பும்படி  இல்லை , டபுள்  பேமண்ட்  தர்றதா  சொன்ன  பின்னும்  யாரும் கண்டுக்கலை   என்பதை  வில்லன்  எப்படி  நம்புகிறார்?


2  கோடீஸ்வரர்  வீட்டில்  பணியாட்கள்  யாரும்  இருக்க  மாட்டார்களா? பர்த்  டே  பார்ட்டிக்கான  பணியாட்கள்  தான்  கிளம்பி  விட்டார்கள் , ஓக்கே, ரெகுலர்  ஆக  பங்களாவில்  இருக்கும்  பணியாட்கள்  எங்கே? 


3  பணியாட்கள்  யாருமே  இல்லாமல்  அத்தனை  பேருக்கான விருந்து  எப்படி  தயார்  ஆனது ?


4  கடல் அலை  வந்து  டெட்  பாடியை  அடித்து  சென்று  விடும்  என்ற  லாஜிக்  நம்ப  முடியவில்லை , ஒரு  கொலைக்கேஸ்  ஃபைல்  பண்ண  டெட்  பாடி  வேண்டாமா? 

5   அவ்வளவு  பெரிய  தொழில்  அதிபர்  சிபிஐ  ஆஃபீசரிடம்  ஐடி  கார்டு எங்கே  எனக்கேட்கவே  இல்லையே? 


6  வில்லன்  அம்ஜத் கான்  போல்  திடமாக  இருக்கிறார். அவர்  மகன்  அனிரூத்  மாதிரி  ஒல்லியாக  இருக்கிறார். ஒரு  கட்டத்தில்  மகன்  அப்பாவின்  முகத்தில்  பஞ்ச்  விடுவது  நம்பும்படி  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  யூகிக்க  முடியாதபடி  இருப்பதால்  ஒரு   ஸ்லோ  பர்ன்  த்ரில்லர்  மூவி ர்சிகர்கள்  பார்க்கலாம். ரேட்டிங்  2.5 / 5 


Neeyat
Theatrical release poster
Directed byAnu Menon
Written by
  • Anu Menon
  • Girvani Dhyani
  • Advaita Kala
  • Priya Venkataraman
Produced by
  • Vikram Malhotra
Starring
CinematographyAndreas Neo
Edited byAdam Moss
Music byMickey McCleary
Production
companies
Abundantia Entertainment
Amazon Studios
Distributed byPen Marudhar Entertainment
Release date
  • 7 July 2023
Running time
130 minutes[1]
CountryIndia
LanguageHindi

Thursday, September 21, 2023

SATYAPREM KI KATHA (2023) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்) @ அமேசான் பிரைம்

 


   60 கோடி  பட்ஜெட்டில்  உருவாகி  வெளியான  முதல்  மாதத்திலேயே  120  கோடி  வசூல்  செய்த  படம் . டைட்டிலுக்கு  இரண்டு  விதமாகபொருள்  கொள்ளலாம்,  நாயகன்  பெயர்  சத்யபிரேம், நாயகி  பெயர்  கதா.. அதனால்  சத்யபிரேமின்  கதா  எனவும்  அர்த்தம்  வரும், உண்மையான  காதலின்  கதை  எனவும்  ஒரு  அர்த்தம்  வரும்.இந்தப்படம்  காதலர்களுக்கும், பெண்களுக்கும்  பிடிக்கும்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  அம்மா, அப்பா, தங்கை  என  கூட்டுக்குடும்பத்தில்  வாழ்ந்து  வருபவர். ( ஒரு  காலத்துல  தாத்தா , பாட்டி  இருந்தாதான்  கூட்டுக்குடும்பம்) . ஒரு   நடன  விழாவில்  நாயகியை  சந்திக்கிறார். ஆனால்  எனக்கு  ஆல்ரெடி  பாய்  ஃபிரண்ட்  இருக்கான்  என  நாயகி  சொல்லி  விடுகிறாள் . 

ஒரு  வருடம்  கழித்து  அதே  இடம், அதே  விழா , நாயகியை  சந்திக்க  நாயகன்  முற்படும்போது  நாயகி  தற்கொலை  முயற்சியில்  ஈடுபட்டுக்கொண்டு  இருக்கிறார். நாயகன்  காப்பாற்றுகிறார். ஆனால்  நாயகிக்கு  அது  பிடிக்கவில்லை , காரணம்  காதலன்  உடனான  பிரேக்கப்பால்  மனமுடைந்து  இருக்கிறார்.


 நாயகியின்  அப்பா  பெரிய  கம்பெனி  ஓனர். பணக்காரர். நாயகன்  குடும்பம்  மிடில்  கிளாஸ். நாயகியின்  அப்பா  தன்  மகளின்  உயிரைக்காப்பாற்றிய  நாயகனுக்கு  தன்  பெண்ணைக்கொடுக்க  முன்  வருகிறார். நாயகனுக்கு  ஆச்சரியம், ஆனால்  நாயகனின்  பெற்றொருக்கு  சந்தேகம்  , ஆதாயம்  இல்லாம  பணக்காரன்  ஆத்தோட  போக  மாட்டானே? என  நினைக்கின்றனர். நாயகிக்கு  இந்த  திருமணத்தில்  இஷ்டம்  இல்லை . ஆனால்  நாயகியின்  அப்பா  தற்கொலை  மிரட்டல்  விடுத்து  நாயகியை  சம்மதிக்க  வைக்கிறார். 

திருமணம்  நடக்கிறது . ஆனால்  மற்ற  விஷயங்கள்  எதுவும்  நடக்கவில்லை ., நாயகியின்  மன  மாற்றத்திற்காக  நாயகன்  காத்திருக்க  நாயகியோ  திக்பிரமை  பிடித்தவர்  போலவே  இருக்கிறார். நாயகியின்  வாழ்வில்  நிகழ்ந்த  அந்த  அதிர்ச்சி  சம்பவம்  என்ன? நாயகன் - நாயகி இணைந்தார்களா? என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  கார்த்திக்  ஆர்யன்  சுறுசுறுப்பான  , துறுதுறுப்பான  உடல்  மொழியுடன்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். ரசிகைகள்  கூட்டம்  இனி  கூடலாம் . படம்  பார்க்கும்  பெண்களுக்கு  இந்த  மாதிரி  ஒரு  கணவன்  தனக்கு  அமைய  மாட்டானா? என  ஏக்கம்  கொள்ள  வைக்கும்  கேரக்டர்  டிசைன் 


நாயகி  ஆக  க்யாரா  அத்வானி  ( இவர்  மத்திய  அமைச்சர்  அத்வானியின்  மகள்  அல்ல ) கிளாமர் , அழகு , நடிப்பு  என  முப்பரிமாணத்தையும் காட்டி  நடித்திருக்கிறார். ஆனால்  இது  போன்ற சீரியஸ்  கேரக்டருக்கு  ஒப்ப்னிங்  சீனில்  கிளாமர்  காட்டி  நடித்திருப்பது  பின்னடைவு 


144 நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்டர்  கட்  செய்து  இருக்கிறார்.  கடைசி  40  நிமிடங்கள்  நேர்த்தியான  காட்சி  அமைப்புகள், பாராட்ட  வைக்கும்  வசனங்கள் 


ஒளிப்பதிவில்  பிரம்மாண்டம்  காட்டி  இருக்கிறார்  அயனங்கா  கோஷ் . நாயகியை  க்ளோசப்  காட்சிகளில்  அழகாகக்காட்டி  இருக்கிறார். ஹனன்  பரத்வாஜ்  இசையில்  எட்டு  பாடல்கள் ., அதில்  3  செம  ஹிட் ஹித்தேஷ்  சோனிக்  பின்னணி  இசையில்  அடக்கி வாசித்து  இருக்கிறார் 


கரண்  ஸ்ரீகாந்த்  சர்மாவின்  திரைக்கதைக்கு  சமீர்  வித்வான்ஸ்  உயிர்  கொடுத்து  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1   ஓப்பனிங்  டூயட்  சாங்கில்  மூன்று  பெரிய  இதய வடிவ  பலூன்  செட்டிங்க்க்கு  ஆயிரக்கணக்கான  பலூன்களை  ஆர்ட்  டைரக்ட்ர்  டிசைன்  செய்த  விதம்  அருமை 


2  பாடல்  காட்சிகளில்  முடிந்தவரை  ஷங்கர்  போல்  பிரம்மாண்டம், மணிரத்னம்  போல்  கவித்துவம், கவுதம்  வாசுதேவ் மேனன்  போல  அழகியல்  கொண்டு  வந்திருப்பது  அருமை 


3  நேர்  கொண்ட  பார்வையில்  வரும்  நோ  மீன்ஸ்  நோ  என்னும்  கருத்தை  அழுத்தமாகப்பதிவு  செய்த  க்ளைமாக்ஸ்  காட்சி 



  ரசித்த  வசனங்கள் 


1  உனக்கு  என்னால  பொண்ணு  பார்க்க  முடியாது , உனக்கானவளை  நீயே  பார்த்துக்கோ


 யாரு? இவனா? சோசியல்  மீடியாக்களில் இவனுக்கு  ஃபாலோயர்சே  இல்லை.  ஜோடி  மட்டும்  எப்படிகிடைக்கும் ?


2  ஏம்மா, குத்துக்கல்லு  மாதிரி  நான்  வீட்ல  இருக்கும்போது  என்  தங்கச்சிக்கு  மாப்ளை  பார்த்திருக்கியே?  எனக்கு  எப்போ  பார்ப்பே?


 உன்  கேள்விலயே  பதிலும்  இருக்கு . குத்துக்கல்லு  மாதிரி   வீட்லயே  இருந்தா  எவன்  பொண்ணு  தருவான் ? வேலைக்குப்போகனும்ல?

3   எல்லாருக்கும்  கடைசி  ஆசைனு  ஒண்ணு  இருக்கும் 


4  மாமா, எனக்குனு  ஒரு  வேலை  இன்னும் நான்  தேடிக்கலை , ஆனா  உங்க  பொண்ணைத்தர  எப்படி ரெடி  ஆனீங்க ?


  என்  பொண்ணை  லவ்  பண்றீங்களே? அதுவும்  ஒரு  வேலை  தானே? 


5  டேய்,  உன்  மேரேஜ்க்கு  முன்னாடி  ஒரு  வேலை  தேடிக்கோ


 எதுக்கு? அவன்  மாமானர்  இன்னும்  நாலு வருசமோ  அஞ்சு  வருசமோ  இருப்பாரு. அதுக்குப்பின்  அவர்  கம்பெனியை  நம்ம  பையன்  தானே  பார்த்துக்கனும்?


 ஓ  இன்னும்  நாலு  வருசம்  இருப்பாரா? 

6  என் வாழ்க்கைல  பல  தவறான  முடிவுகளை   நான் எடுத்திருக்கேன், அதனால  அப்பாவோட  இந்த  முடிவு  தவறோ  சரியோ  அதை  ஃபாலோ  பண்ணலாம்னு  இருக்கேன் 


7  டியர் , என்ன? லவ்வருக்கு  நெற்றில  முத்தம்  தர்றே? வழக்கமா  ஜனங்க  நாய்களுக்குத்தான்  ஐ  மீன்  அவங்க  வளர்த்தும்  செல்லப்பிராணிகளுக்குத்தான்  நெற்றி  முத்தம்  தருவாங்க 

8   ஹேப்பி  ஃபர்ஸ்ட்  மந்த்  வெட்டிங்  அனிவர்சரி 

 தாங்கஸ் , ஆனா  வழக்கமா  ரெட்  ரோஸ்  தானே  கொடுப்பாங்க ? நீங்க  யெல்லோ  ரோஸ்  தந்திருக்கீங்க?


 முதல்ல  ஃபிரண்ட்ஸ்  ஆவோம், அப்புறமா  தம்பதி  ஆவோம்னு  தான் 


9   நீ  பேசும்போது  யோசிச்சுப்பேச  மாட்டியா?


 உண்மையைப்பேசும்போது  எதுக்கு  யோசிக்கனும் ? 


10   எல்லா  உண்மைகளையும்  எல்லாராலும்  சகிச்சுக்க  முடியாது , சில  உண்மைகளை  நம்மாலேயே  ஜீரணிச்சுக்க  முடியாது 


11  நீ  உண்மையை  எப்போ  சொல்லனும்னு  நினைக்கறயோ  அப்போ  சொன்னாப்போதும், நான்  எப்பவும்  தயாரா  இருக்கேன் 


12  என்னைப்பற்றிய  சில  உண்மைகளை உன்னாலயே  ஜீரணிக்கவோ, சகிச்சுக்கவோ  முடியாதப்ப  உன்  பெற்றோர்களால்  எப்படி  ஏத்துக்கம்முடியும் ?


13  ஒருத்தரோட  வலியை  உங்களால  உணர  முடியலைன்னா  பரவாயில்லை , அவங்களை  மேலும்  காயப்படுத்தாம  இருந்தாலே  போதும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின்  பெற்றோரிடம்  ஆசீர்வாதம் வாங்கும்  நாயகன்  வலது  கையால்  அவர்கள்  காலைத்தொடாமல்  இடது  கையால்  தொடுகிறாரே?


2  நாயகிக்கு  உடல் நிலை  சரி  இல்லை , அவரைப்பார்த்துக்காமல்  அல்லது  பார்த்துக்க  ஆளை  நியமிக்காமல்  நாயகியின்  குடும்பம்  மொத்தமும்  நவராத்திரி  விழாவுக்கு  கொண்டாட்டமாக  வருகை  புரிந்திருக்கிறார்களே? எந்த  வீட்டில்  இப்படி  பெண்ணை  தனியா  விட்டுட்டு  வருவாங்க ? 


3  நாயகிக்கோ , அவளின்  குடும்பத்துக்கோ  நாயகன்  டீட்டெய்ல்ஸ்  எதுவும்  தெரியாது . என்  உயிரைக்காப்பாறியவன்  ஃபோன்  நெம்பர்  கண்டுபிடித்துத்தா என்று  நாயகி  சொன்ன  அடுத்த  நொடியே  நாயகியின்  தங்கை  நாயகனின்  நெம்பரைக்கண்டு பிடித்தது  எப்படி ?


4  முதல்  பாதி  திரைக்கதை  மவுன  ராகம்,  குட்  நைட்   ஆகிய  படங்களை  நினைவுபடுத்துவது  பலவீனம் . அதே  போல  பின்  பாதியில்  வரும்  சில  வசனங்கள்  பிங்க்  (  நேர்  கொண்ட  பார்வை ) கை  நினைவு  படுத்துகிறது


5   நாயகியை  உருகி  உருகிக்காதலித்த  நாயகன்  திருமணத்துக்குப்பின்  தாம்பத்ய  சுகம்  கிடைக்க வில்லை  என்றதும்  உடனே  டைவர்ஸ் பண்ணப்போறேன்  என  மாமனாரிடம்  சொல்வது  அந்த  கேரக்டர்  டிசைனையே  கேள்விக்குள்ளாக்குகிறது 


6  நாயகனும், நாயகியும்  ஒரு  பர்த்டே  பார்ட்டிக்குப்போகும்போது  அங்கே  நாயகியின்  முன்னாள்  காதலன்  பார்ட்டிக்கு  இன்னும்  அரை  மணி  நேரத்தில்  வந்து  விடுவதாக  ஃபோன் மூலம் பர்த் டே  பேபியிடம்  சொல்லிக்கொண்டிருக்கிறான். உடனே  அவசர  அவசரமாக  நாயகன்  நாயகியைக்கிளப்பிக்கொண்டு  அங்கே  இருந்து  கிளம்பி    ஹோட்டலில்  போய்  சாப்பிடுகிறார்கள் /. அதான்  அரை  மணி  நேரம்  டைம்  இருக்கே? பர்த்  டே  பார்ட்டியிலேயே  சாப்பிட்டுட்டு  போய்  இருக்கலாமே?   


7   நாயகன்  நாயகி  சொன்னபடி  வரதட்சணையா  கிடைச்ச  காரின்  சாவியை  ,மாமனாரிடம்  ரிட்டர்ன்  கொடுத்து  விட்டு  நாயகியைப்பார்க்க  வருகிறார். அப்போது  சாரி , கடைல  கஸ்ட்ம்ர்ஸ்   நிறைய இருந்ததால  வர  லேட்  ஆகிடுச்சுங்கறார். அவர் தான்  கடைல  உள்ளேயே  போகலையே?  மாமனாரைக்கடைல  பார்த்தார்  , சாவியைக்கொடுத்தார். வந்துட்டார்.  எங்கெயோ  இடிக்குதே?   

8  நாயகியோட  அப்பாவே  தன்  மாப்பிள்ளை  கிட்டே அவளை  ரெண்டு  அடி  போடு , சரி  ஆகிடும்  எல்லாம்  என்கிறார். எந்த  அப்பாவாவது  அப்படி  சொல்வாரா? அதுவும்  பாதிக்கப்பட்ட  பெண்  வேற 


9  நாயகன்  வில்லனை  அடித்து  விட்டு  லாக்கப்பில்  இருந்து  விட்டு  பின்  வீட்டுக்கு  வந்து  கையை  வாஷ்  பண்ணும்போது  அவர்  கையில்  ரத்தம்  தண்ணீரில்  சுத்தம்  ஆகிறது . இது  என்  ர்த்தம்  இல்லை , தப்பன் ( வில்லன்)  ரத்தம்  என்கிறார். அது  வரை  காயாம  இருக்குமா?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ  படம்  தான், ஆனால்  2  இடங்களில்  லிப் லாக்  காட்சிகள்  இருக்கின்றன



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாதி  கலகலப்பான  வழக்கமான  கமர்ஷியல்  டெம்ப்ளேட்  காதல்  கதை  . பின்  பாதியில்  அழுத்தமான  கதை  அம்சம், பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5 


Satyaprem Ki Katha
Threatical release poster
Directed bySameer Vidwans
Written byKaran Shrikant Sharma
Produced by
Starring
CinematographyAyananka Bose
Edited byCharu Shree Roy
Music byScore:
Hitesh Sonik
Songs:
Meet Bros
Anjjan Bhattacharya
Tanishk Bagchi
Manan Bhardwaj
Payal Dev
Rochak Kohli
Ali Sethi
Production
companies
Distributed byPen Marudhar Entertainment
Release date
  • 29 June 2023
Running time
144 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budgetest. ₹60 crore[2]
Box officeest. ₹117.77 crore[3]