Tuesday, January 12, 2016

வாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட்டதா?

சென்னையை வேறு சென்னையாக மாற்றுவோம்: நடிகர் கார்த்தி உறுதி # அடடே, புது சென்னைல கலைஞர் , ஜெ எல்லாரும் இருக்கமாட்டாங்களா?=================வாள்வீச்சில் வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஜெ வழங்கினார் # கட்சில வாய்வீச்சு யாராவது செஞ்சா உஸ் தான்
================அறிவியல் மாநாட்டில் மோடி பேசிக் கொண்டிருந்தபோது தூங்கி விழுந்த சித்தராமையா!# நித்திரை ராமய்யா என அழைக்கப்படுவாராக==============4 ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு அதிமுகவே காரணம்-கனிமொழி # எல்லாத்துக்கும் அடுத்தவங்க மேல பழி போடறதே அரசியல்வாதிகளுக்கு வழக்கம் ஆகிடுச்சு
==============5 பாமக ஆட்சியில் விவசாயத்திற்கு அனைத்தும்் இலவசம்-்.டாக்டர். அன்புமணிராமதாஸ் # இலவசம் என்பதே என்றும் இரட்டை இலை வசம் என்பதை மாத்தப்போறாரா?
==============

6 தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது வைகோ # மாற்றம் முன்னேற்றம் னு பாமக தான் சொல்லுது.அது க்கு சப்போர்ட்டா?


==============7 விஜயகாந்த் திடீர் மும்பை பயணம் -செய்தி # அங்கே போய் தூ னு சொன்னாக்கூட யாரும் கோபப்பட மாட்டாங்க.ஹிந்தி ல தூ = நீ
==============8 வாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட்டது- கனிமொழி # 2 ஜி ஊழலாக திமுக ஆட்சி விரிந்து பரந்து.விட்டது.அதனால் கெட்டது


=============

9 ‘ஆட்’ நம்பர் மாப்பிள்ளைக்கு, ‘ஈவன்’ நம்பர் பெண் தேவை... இது டெல்லி மேட்ரிமோனியல்! # எல்லாம் கார் காலம் படுத்தும் பாடு


============

10 மும்பையில் விஜயகாந்த் 'ராக்ஸ்': வேட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்சில் தோன்றி அசத்தல் # ஏக் காவ் மே ஏக் இன்சான் துப்பிங் தா

===========

11 எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவேன்-சிம்பு # இந்த செண்ட்டிமென்ட் லொள்ளு எல்லாம் வேணாம்.எங்கே பதுங்கி இருக்கே?- போலீஸ்


==============


12 இடதுகைக்கு கூட தெரியாமல் வலதுகை கொடுக்ககூடிய ஈரமுள்ள இதயம் தேவை -மு.க# கோடிக்கணக்கில்.சொத்து வெச்சுக்கிட்டு தேர்தல் நிதி கேட்கற உலகம்


==============

13 மனதளவில் தைரியமும் திடமும் கொண்ட பெண்கள் தான் அரசியலுக்கு வரமுடியும் -கனிமொழி # வந்து ஊழலு்ம் கோடிக்கணக்கில் செஞ்சு தப்பிக்கவும் முடியும்

==============

14 மழைக்கு 470 பேர் பலி; 4,93,716 குடிசைகள் சேதம்; 3,47,297 ஹெக்டேர் பயிர்கள் நாசம்-ஜெ # எத்தனை % ஓட்டு மாறப்போகுதுனு கணக்கு எடுத்தாச்சா?


====================


15  ஜல்லிக்கட்டு அனுமதியை உடனடியாக அறிவிக்க கருணாநிதி வலியுறுத்தல் # தலைவர்  மதுரை ஏரியா  வாக்குகளை டார்கெட் வைக்கறார் போல 


======================

16  'எழுச்சி தமிழகம்'  - சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் FB இளைஞர்கள் # அப்டி சகாயம் வந்தார்னா கலைஞர் அதிமுக கூட கூட்டணி வைக்கவும் தயங்கமாட்டார்


===================


17 ஏரியை ஆக்கிரமித்தால் தட்டி கேளுங்கள்: ஐஏஎஸ் அதிகாரி அமுதா வலியுறுத்தல் # லாக்கப்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிட்டா?அதான் யோசிக்கறோம்


=================

18 ‘யாதும் ஊரே’ திட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தும் பொறுப்பை ராம்ராஜ்  ஏற்றுக்கொள்ளும் -செய்தி# குட்,அப்போ ஈரோட்டுக்கு MCR?


=================


19 உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் ஆபத்தான சூழலில் உள்ளது: சோனியா கவலை# ஓஹோ, அதனாலதான் மோடி பாதுகாப்பா ஃபாரீன்லயே ரவுண்டிங்க்ல இருக்காரா?


================

20   20 ஆண்டுகளாக ரூ.1 நோட்டு வெளியிடவில்லை - ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் # ஒரு  ரூபாய்  காய்ன் போதும், டெட் பாடி நெத்தில வைக்க


===================

0 comments: