Wednesday, May 30, 2018

நிபா வைரஸ் கேரளாவை தாக்கி இருப்பது அதிர்ச்சிதான்.ஏன்னா ...

 அணில்"கடிச்ச கொய்யா இனிக்கும் ,கிளி கொத்துன பழம் தித்திக்கும்னு இனி யாரும் பறவை ,விலங்கு எச்சில் பழத்தை சாப்ட்ராதீங்க.அது வவ்வால் கடிச்ச பழமாவும் இருக்கலாம் விழிப்புணர்வு


=========2 டிபார்ட்மெண்ட்டல் அனவுன்ஸ்மெண்ட்.ஏசி கோச் ,ரிசர்வ்டு கோச் ல தண்ணீர் பிடிக்கவும் னு எல்லா ரயில்வே ஸ்டேஷன்லயும் அறிவிப்பு வருது.ஆனா ஒரு ஸ்டேஷன்ல கூட "அன்ரிசர்வ்டு கோச்"ல தண்ணி இல்ல.பிடிங்க னு சொல்றதே இல்ல. அவங்க என்ன தக்காளி தொக்கா?=========


3 நெட் தமிழன் "கும்பல் னா
எனக்கு அலர்ஜி னு சொல்லிட்டு எப்பா பாரு பொண்ணுங்க ரயில்லயே தான் குடி இருக்காப்டி===========


4 நம்மாளுங்க பயணங்களில் பசிக்கும்போது சாப்பாடோ,டிபனோ முதல்ல சாப்பிட மாட்டாங்க.பன் ,டீ,வரிக்கி,சுருள் கேக்,தேங்காபன் னு இப்டி எதுனா சாப்டறது.அப்றம் ஒரு மணி நேரம் கழிச்சு பசி தாங்காம சாப்பாடு சாப்டறது,முதல்லியே இதை செஞ்சா காசாவது மிச்சமாகும்


==========5 தூத்துக்குடி பிரச்சனை தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டியது.ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஹெச் ராஜா அதற்கு முட்டுக்குடுப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை டைப் ஒப்புதல் ஸ்டேட்மெண்ட்


===========


6 தூத்துக்குடி ஆலை பிரச்சனையில் மக்கள் சார்பாக குரல் கொடுப்பவர்கள்தான்"சமூக நலன் கொண்டவர்கள்.அரசுக்கோ ,ஆலை நிர்வாகத்துக்கோ ஆதரவு தெரிவிப்பவர்கள் விலை போன
"100% வியாபாரி"கள்


=============


7 தூத்துக்குடி ஆலை பிரச்சனை சுமூகமாகத்தீர Ops ,Eps,h.ராஜா இவங்க குடும்ப உறுப்பினர்களை ஒரு மாசம் தங்க விட்டு கதறடிக்கனும்.ஆலையால பாதிப்பில்லைனு சொன்ன அதே வாயால ஆமா பாதிப்புதான்னு உணர வைக்கனும்============8 எப்படியும் அடுத்தமுறை ஆட்சிக்கு வர முடியாது,இருக்கும் வரை கிடைச்சதை எல்லாம் சுருட்டு என்பதே அதிமுக வின் தாரக மந்திரம்==========9 பொண்ணைப்பெத்தவரும்,இலக்கியப்படைப்பாளியும் ஒண்ணு.ஒரு டைம் நம்ம படைப்பை காமிச்ட்டா விட்ரனும்.பிடிச்சிருக்கா?கருத்து சொல்லுங்கனு கேட்டுட்டு இருந்தா கெத்து இருக்காது


==========10 நெற்றியில் விபூதி,குங்குமம் ,உதட்டில் சிரிப்பு என வளைய வரும் EPS & OPS கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருப்பது வியப்பு.பண்றதெல்லாம் துரோகம் ,பாவம்.ஆனா என்ன தைரியத்துல கோயில் போய் சாமி கும்பிடறாங்க?


==========


11 சந்தேகம்
1 யூனிபார்மில் இல்லாத மஞ்சள் உடை அணிந்தவர்கள் சுட்டது தெரிகிறது.அவங்க யாரு? 2 துப்பாக்கி சூடு ஒரு கலவரத்தில் பிரயோகிக்கப்படுதுன்னா புல்லட் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி காயம் இருக்கனும்.இறந்தவர் அனைவருக்கும் குறி தலை/நெஞ்சு 3 சம்பவம் நடந்தப்ப கலெக்டர் ஏன் அங்கே இல்ல?

==========
12 சந்தேகம்
4 தூத்துக்குடில 100 நாளா போராட்டம் நடந்தும் ,முதல்வர் ஏன் ஆறுதல் சொல்லக்கூட ஸ்பாட்டுக்கு வர்ல?கேன்சர் பயமா? 5 முன் எச்சரிக்கை நடவடிக்கையா போராட்டக்குழுவின் முக்கிய ஆட்களை கைது செய்யாமல் கொலை செய்தது ஏன்?யார் தந்த ப்ராஜக்ட் அது? 6 அரசுகேபிளில் குறிப்பிட்ட செய்தி பிளாக்டு


==========


13 ஷாப்பிங்க் மால் ,தியேட்டர் ,ரயில்வே ஸ்டேஷன்களில் எஸ்கலேட்டரில் போய் பழக்கம்இல்லாதவர்கள் கைக்குழந்தையுடன் முதல் அனுபவமாக ழுயற்சிக்காதீர்கள்.படிக்கட்டு வழி பயணமே ஆரோக்யத்துக்கு நல்லது===========14 234 தொகுதி மக்களும் நெ1 திருடன் திமுக வையும் ,நெ2 திருடன் அதிமுக வையும் ஒதுக்கி அவரவர் தொகுதி நல்ல நேர்மையான சுயேட்சையை வெற்றி பெற வைத்தால் புதிய புரட்சி உருவாகும்.ஒரு பயம் வரும்.மாறாக மாத்தி மாத்தி இந்த 2 திருடன்களையே தேர்ந்தெடுத்தா இப்டித்தான் காலாகாலத்துக்கும்


============15 ஒரு பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆக விடக்கூடாது.தாத்தா ,அப்பா,மகன் ,பேரன் என பரம்பரை பரம்பரையா ஒரே குடும்பம் கொள்ளை அடிக்க விடக்கூடாது.காங் −நேரு பரம்பரை ,திமுக −கலைஞர் பரம்பரை


============16 இந்த அசாதாரணமான சூழலில் தூத்துக்குடிக்கு புதிய கலெக்டராகப்பொறுப்பேற்க வருபவர் 45+ வயது உள்ளவராக இருந்தால் அனுபவம் பேசும்.இளமையான நபர் குருவி தலை பனங்காய் கதை தான்


=============17 ஷூட்டிங்க் ஆர்டர் யாரும் தரவில்லை என்பது எல்லோரும் தப்பிக்கும் முயற்சி.போலீஸ் மேல் பழி போடும் யுக்தி.மேலிட ஆதரவு/ஆர்டர் இல்லாமல் இது போன்ற சர்ச்சைக்குரிய இடத்தில் ஷூட்டிங்க் போலீசே நடத்த வாய்ப்பில்லை

=============


18 மறந்துவிடக்கூடாத பிரச்சனைகள் 1 தமிழகத்துக்கு தண்ணீர் தரச்சொல்லி கர்நாடகத்துக்கு கோர்ட் உத்தரவு 2 நிர்மலா vs கவர்னர் 3 எஸ் வி சேகர் கைது தள்ளிப்போவது 4 ஷூட்டிங்க் ஆர்டர் கொடுத்தது யார் என்ற உண்மை இன்னும் வெளிவராதது 5 நிபா வைரஸ்==============19 தமிழக அரசியலை நிர்ணயிக்கும் இரண்டாவது பெரிய கட்சியாக சக்தியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது-திருநாவுக்கரசர் தமிழக கட்சிகளின் வாக்கு % தெரிஞ்சுக்குங்க 1 அதிமுக 35% 2 திமுக 28% 3 தேமுதிக 8.5% 4 பாமக 4% 5 நாம் தமிழர் 3.5% 6 பாஜக 3.25% இது போக இனி கமல்"கட்சி ,ரஜினி கட்சி வேற


============


20 நிபா வைரஸ் கேரளாவை தாக்கி இருப்பது அதிர்ச்சிதான்.ஏன்னா இங்கே அனைத்து ஹோட்டல் ,மெஸ் ,தட்டுக்கடை,கையேந்திபவன்களில் சீரகத்தண்ணீர்(வெந்நீரில்"சீரகம் இட்டு)தான் குடிக்க தர்றாங்க.நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடம் அதிகம்.சாதா காய்ச்சல் மற்ற மாநிலங்களை விட குறைவு


==========பிரபாகரன் வடிவில் சீமானை பார்க்கிறேன்

காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது..− பொன் ராதா # என்ன?இப்ப வெல்லாம் ஆளாளுக்கு பழமொழி சொல்ல ஆரம்பிச்ட்டாங்க?)தளபதி மைண்ட் வாய்ஸ்


==============


2 காவிரி ஆணையத்தின் தலைமையகம் டெல்லிக்கு மாறியிருப்பது வரவேற்கத்தக்கது - தமிழிசை
# தமிழ்நாடு சம்பந்தப்பட்ட எல்லாத்துக்குமே தலைமையகம் டெல்லிதானே?


=============


3 கர்நாடகாவில்
இளைஞர்களுக்கு இலவசமாக பசுமாடு வழங்கப்படும் ....எடியூரப்பா..
# அவன்"சைவமா?னு விசாரிச்ட்டு குடுங்க,அவன்"பாட்டுக்கு"வெட்டி சாப்டறப்போறான்


===========


4 சொத்து இருந்தும் காந்தி போல எளிமையாக வாழும் ரஜினி - ஏ.சி.சண்முகம்
# காந்தி எப்போங்க வாடகை பாக்கி வெச்சாரு?செக் ரிட்டர்ன் விட்டாரு?


============


5 நான் இன்னும் கட்சி தொடங்காததால், கமல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை - ரஜினி..
# அப்போ கமல் கூட்டத்துல பங்கேற்றவர்கள் எல்லாரும் கட்சி தொடங்குனவங்களா?============6 தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் தினமும் ஊழல் நடக்கிறது - கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ

# வாக்கிங்க் போறது நல்லதுதான்,அதான் ஊழல் "தினமும் நடக்கிறது"னு செல்லூர் அறிக்கை விடுவாரோ?


===========


7 ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது
* ரஜினி" நம்பாதே"கண்களே பெண்களை நம்பாதே"பாட்டை இவர் கேட்டதில்லை போல
============8 காதல் திருமணம் செய்பவர்களை​​​
​​​யாரும் தடுக்க கூடாது :​ ​உச்சநீதி மன்றம்​ # யுவர் ஆனர் ,புருசன் கூட தடுக்கக்கூடாதா?பாதி பேரு இப்பவெல்லாம் அடுத்தவன் பொண்டாட்டியைதான் கரெக்ட் பண்றான்


============9 அரசு பங்களாவை காலி செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வேண்டுமென உ.பி முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை #2 நாள் போதாதா?எதுக்கு 2 வருசம்?அப்போ 2 வருசம் வாடகை வசூல் பண்ணிடனும்
==========10 தூத்துக்குடி கலவரத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் - நடிகர் ரஜினிகாந்த்
* நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினிகாந்த்
# அலட்சியம் மட்டுமில்ல.ஆலை நிர்வாகம் தரும் கோடிக்கணக்கான பணம் சம்பாதிப்பது தான் லட்சியம்============


11 பொதுமக்களின் உயிரை பாதுகாக்கும் பொருட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்! # நிஜமாவே யோக்கியமானவரா இருந்தா
1 கண்ணீர் புகை
2 தடியடி பிரயோகம்
3 தண்ணீர் பீய்ச்சி அடித்தல்
4 முழங்காலுக்கு கீழே சுட உத்தரவு
இதுல எதுனா பாலோ பண்ணி இருக்கனும்


===========


12 வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சந்தேகப்படும் படியான நபர்கள் வந்தால் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் - மதுரை சரக டிஐஜி # எங்க சந்தேகமே போலீஸ் மேல தான்.இதை யார் கிட்ட தெரிவிக்கனும்?============13 அரசியல் ரீதியாக வாதம் செய்ய வேண்டாம், யாருக்கும் ஆதரவாக வாதாடாமல், தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியவேண்டும், நாம் அனைவரும் மக்களுக்காகத்தான், எங்களுக்கு எதுமே தெரியாமல் இங்கு அமரவில்லை என அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம். கலைங்க முதல்ல


========14 கடந்த காலங்களில்
தலைவர்களின் பேச்சை
கேட்கவே இனிமையாக
அப்படி இல்லை
இருக்கும் தற்போது
# 2 வரி பழமொழி யை தப்பா சொல்லவே 4 தடவை துண்டு சீட்டை பாத்து பாத்து படிக்க வேண்டியதா இருக்கு ,பாவம்
-உயர்நீதிமன்ற நீதிபதிகள்


=========


15 தமிழகத்தில் மூடப்பட்ட 810 டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்!
# இதுவும் நல்ல ஐடியாதான்.குடிகாரனுங்க குடிச்சே சாவட்டும்
===========16 ஸ்டெர்லைட் ஆலை மூட தமிழக அரசு முடிவு
# இது ஏதோ கண்துடைப்பு மாதிரி இருந்தாலும் பெயரளவிற்காவது அறிவித்தது மகிழ்ச்சி=============17
'திமுக ஆட்சியில் இருந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்காதது ஏன்' - மு.க.ஸ்டாலினுக்கு பிரமலதா விஜயகாந்த் கேள்வி
# எதிர்க்கட்சியா இருக்கும்போது"மட்டும் எல்லாத்தையும் எதிர்ப்போம் ,ஆளுங்கட்சியா இருக்கும்போது"கை நீட்டி கமிஷன் வாங்கிக்குவோம்===========


18 இறைவன் கட்டளையிட்டால் விஜயகாந்துடன் கூட்டணி வைப்பேன் - சரத்குமார் #
# போன மாசம் தானே அவரை திட்டி அறிக்கை விட்டீங்க?
அது போன மாசம் ,இது இந்த"மாசம்


=============19 பிரபாகரன் வடிவில் சீமானை பார்க்கிறேன் - பாரதிராஜா #

// பாரதிராஜா வடிவில் செல்லூர் ராஜூவை பார்க்கிறோம்


===========20 கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு # விழாவுக்கு போனா "காவேரி பிரச்சனை பற்றி பேசுனீங்களா?"னு இங்கே கேப்பாங்க,போகலைன்னா காங் காவிச்சுக்கும்.தளபதி நவ் இருதலைக்கொள்ளி எறும்பு மொமெண்ட்===============

Tuesday, May 29, 2018

பெருமாள் பக்தர்களை நிபா வைரஸ் தாக்காதா?இது என்ன புது உருட்டா இருக்கு?

இதுவரைக்கும் எந்த தோழியிடமும் நானே போய் பேசுனது இல்லை என்ற ஆணவம் உண்டு

ஓஹோ,ஆனா டி எம் ல டெய்லி குட்மார்னிங்க் sms பண்றீங்களாமே?
அப்பக்கூட பேசலையே.டெக்ஸ்ட் மெசேஜ் தானே?அது கணக்கில்ல===========


2 குருவே!யோகா கத்துக்கிட்டா ஐம்புலன்களையும் அடக்கலாம்னீங்க?

ஆமா
ஆனா யோகா கிளாஸ் முடிஞ்சதும் ரஞ்சிதா ரூமுக்கு போய்டறீங்களே அது ஏன்?


============


3 குருவே!பொண்ணுங்களோட சேட்டிங்க் பண்றப்ப பசங்க மாங்கு மாங்குனு பக்கம் பக்கமா டைப்பறாங்க,ஆனா பொண்ணுங்க ம் ,ம்ஹூம்,k , s,no இப்டி மணிரத்ன சுருக்் ல ரிப்ளை பண்றாங்களே அது ஏன்?

சிஷ்யா,பசங்க நேர்மையா,சின்சியரா யாரோ ஒரு பொண்ணு கூட மட்டும் தான் சேட்டிங்.ஆனா பொண்ணுங்க மல்டிசேட்==============4 குருவே!2nd hand வண்டிய வாங்கலாமா?

சிஷ்யா! வண்டியா இருந்தாலும்",வாழ்க்கைக்குத்தேவையான எதா இருந்தாலும் செகண்ட்ஸ் வேணாம்.செலவு அதிகமானாலும் பரவால்ல,fresh தான் பெட்டர்===========


5 டாக்டர்.சாப்பிட்டுட்டு தூங்கலாமா???
தூங்கிட்டு சாப்பிடலாமா????
வாழ்வின் பெருங்குழப்பம்.
என்னம்மா எப்பப்பாரு"விதண்டாவாதமாவே கேள்வி கேட்டுட்டு.நைட்னா சாப்ட்டுட்டு 2 மணி நேரம் கழிச்சுதான் தூங்கனும்,காலைலன்னா எழுந்து 2 மணி நேரம் கழிச்சு சாப்டனும்===========6 சார்,திருப்பதி கோயில் வசூல்ல கை வெச்சீங்களாமே?இது தெய்வக்குத்தம் ஆகாதா?

ஆகாது,நான்தான் அமுக்குனதுல 10% உண்டியல்ல போட்டுடுவனே?
============


7 ஜெமினிகணேசன் க்கு ஏன் சாம்பார் ன்னு பெயர் வந்தது?

இட்லி,தோசை,பணியாரம்,சாதம்னு எல்லாவிதமான பதார்த்தத்துக்கும் சாம்பார் மேட்ச் ஆகும்.எந்த விதமான கேரக்டரா பொண்ணுங்க இருந்தாலும் அவங்களை சாமார்த்தியமா பேசி கரெக்ட் பண்ணிடுவார்.அதனால அந்த பட்டப்பேரு===========8 குருவே!பொண்ணுங்ங டபுள் மீனிங் ல பேச கூடாது னு சொல்றது சரியா?

சிங்கிள் மீனிங்க்ல பொண்ணு பேசுனாலே நம்மாளு டபுள்காட் ரூம் புக் பண்ணலாமா?னு பிட் போடறான்,இதுல டபுள் மீனிங்க்ல பேசுனா வேற வினையே வேணாம்
=================9 குருவே!10 வயது வரை குழந்தைகள் இரவில் கட்டிலில் இருந்து கீழே விழுவார்களாமே உண்மையா?

அவங்களா விழமாட்டாங்க.தம்பதிங்க தான் இடைஞ்சலா இருக்குனு இடமாற்றம் பண்ணி இருப்பாங்க===============10 600 ரூ கொடுத்து செம்பு வாட்டர் கேன் வாங்குனேன்.கெடுதல்னு சிலர் சொன்னதால தூக்கி போட்டுட்டேன்

20 ரூ குடுத்து வாங்குன மினரல் வாட்டர் கேனையே நம்மாளுங்க தண்ணி தீர்ந்தாலும் 25 வருசம் வெச்சு யூஸ் பண்றாங்க,நீங்க என்னடான்னா..============11 பெருமாள் பக்தர்களை நிபா வைரஸ் தாக்காதா?இது என்ன புது உருட்டா இருக்கு?

வவ்வால்கள் ,பன்றிகள் மூலமாதான் நிபா வைரஸ் பரவுது.பெருமாள் தான் பன்றி அவதாரம் எடுத்தவர் ஆச்சே?பக்தர்களை காப்பாத்த மாட்டாரா?===========12 டாக்டர் ,தம் டீ உடம்புக்கு நல்லதா?

தம் , டீ ரெண்டுமே உடல்நலனுக்கு கெடுதல் தான் .முன்னது கேன்சர் அபாயம் ,பின்னது பித்தம்=============13 தலைவரே!டாஸ்மாக் ல சேல்ஸ் குறைஞ்சா உடனே அதை மூடிடுவீங்களா?

நோ நோ டார்கெட் குடுத்து டார்ச்சர் பண்ணிடுவமில்ல?
ஆனா அரசுப்பள்ளிகள்ல மாணவர் சேர்க்கை குறைஞ்சா மட்டும் ஏன் ஸ்கூலை மூடறீங்க?ஒரு ஸ்கூல் திறக்க காமராஜர் எவ்ளோ கஷ்டப்பட்டாரு?==============14 டாக்டர், காலையில சாப்டதுமே தூக்கம் வருது😐😐

அப்டியா?என்ன மேடம் சாப்ட்டீங்க?வெண் பொங்கலா?
இல்ல,தூக்க மாத்திரை===========15 குருவே!கொசு கூட முதுகில் கடிப்பதில்லை..
மனிதன்தான் முதுகில் குத்தி விடுகிறான் !னு ஒரு தத்துவம் படிச்சேன்.அது உண்மையா?
தத்துவம் சொன்னவரை ஒரு நைட் பூரா குப்புறப்படுத்து தூங்கச்சொல்லு.மல்லாக்க படுத்தா எப்டிய்யா கொசு முதுகுல கடிக்கும்?


===========


16 மாமா,உங்க பொண்ணு வயசுக்கு வந்ததுக்கு குடிசை கட்ற விழா ஏன் நடத்தலை?

நான் பயங்கர"பணக்காரன்.பங்களாவா கட்டி விட்ரலாமா?னு"பாக்கேன்


=============


17 டாக்டர் ,நிபா வைரஸ் தமிழகம் ,கேரளா னு பரவிட்டே இருக்கே"?எதிர்காலத்துல இது ஒரு BIG problem ஆகிடுமோ?

அது மட்டுமில்ல,இது ஒரு"PIG problemம்"கூட============
18 நீங்க பாஜக வா?

இல்ல
அப்பறம் ஏன்"உங்க பொண்ணுக்கு""இந்து"மதி னு பேர்"வெச்சிரூக்கீங்க? முஸ்லீம்"மதி கிறிஸ்டியனைமதி"னு"வெச்சிருக்கலாமில்ல.மதநல்லிணக்கக்குடும்பமா ஆகி இருக்கும்


=============


19 தலைவரே! தூத்துக்குடி ஆலை ல உங்க கட்சி ஆளுக்கு 70% பங்கு இருக்குனு சொன்னதும் ஆளாளுக்கு அவ்ளோ பங்கு இருக்காதேனு தான் சொல்றாங்களே தவிர 1% கூட இருக்க வாய்ப்பில்லை ,நாங்க யோக்யம்னு ஒரு பயலும் சொல்லலையே?

ஆஹாங்க்,இப்டி மாட்டி விட்டுட்டாங்களா?


==========20 தலைவரே!தூத்துக்குடி கலெக்டர,எஸ் பி யை புத்திசாலித்தனமா ட்ரான்ஸ்பர் பண்ணீட்டிங்க போல?

ஆமா,நடவடிக்கை எடுத்த மாதிரி கணக்கு காட்டலாமே?
சரி,போலீஸ் இலாகா யாரோட கண்ட்ரோல் ல வருது?
அப்ப அவரை ட்ரான்ஸ்பர் பண்ணுங்க முதல்ல
முதல்வர் தான்


================