Wednesday, October 07, 2026

டோரதி (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் ( சோசியல் டிராமா)

 


கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படம் விஜய்சேதுபதி நடித்த பீட்சா(2012) ஹிட்.பாபிசிம்ஹா நடித்த ஜிகிர்தண்டா(2014)ஓக்கே ரகம்.எஸ் ஜே சூர்யா +விஜய் சேதுபதி நடித்த இறைவி (2016) ஹிட்.பிரபுதேவா நடித்த மெர்குரி(2018) பெய்லியர் ,ரஜினி நடித்த பேட்ட(2019) ஹிட்.தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் (2021) சுமார் விக்ரம் +துருவ் விக்ரம் நடித்த   மகான் (2022) தோல்வி,ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் (2023) ஹிட்,சூர்யா நடித்த ரெட்ரோ(2025) பிளாப்.இப்போது வெளியாகி இருக்கும் இந்தப்படம் இவரது 10வது படம்.


மொத ராத்திரி படத்தின் மூலம் பெண்களின் அமோக ஆதரவு  பெற்ற ரிஷி காந்த் நாயகனாக நடித்ததும் ,இசை ஞானி இளையராஜா இசை அமைத்திருப்பதும் இந்தப்படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைத்தது.


எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?கமர்ஷியலாக சக்சஸ்  ஆகுமா?என்பதைப்பார்ப்போம்.

டோரண்ட்டோ இண்ட்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில். 11/9/2026 ல் திரையிடப்பட்டு பாராட்டுப்பெற்ற இந்தப்படம் திரையரங்குகளில் 25/11/2026 முதல் வெளியாகி இருக்கிறது.

டோரதி என்பது ஒரு பெண்ணின் பெயராக இருந்தாலும் அந்த சொல்லுக்கு அர்த்தம் கடவுளின் பரிசு.


ஸ்பாய்லர் அலெர்ட்

கதை நடக்கும் காலகட்டம் 1990.கதைக்களம். மதுரை.





நாயகன் ,வில்லன் இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே நண்பர்கள் .ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்துள்ளார்கள்.


வில்லனின் அப்பா ஆண்ட பரம்பரை.நாயகன் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.இதனால் வில்லனின் அப்பா நாயகனை சாதி ரீதியாக த்தான் பார்க்கிறார்.நடத்துகிறார்.

வில்லனின் அம்மாவையும் ,தங்கையையும்  ஆணவக்கொலை செய்யும் அளவுக்கு ஜாதி வெறி பிடித்தவர் தான் வில்லனின் அப்பா.ஆணாதிக்க மனம் கொண்டவர்.


நாயகன் ,வில்லன் இருவரும் ரவுடிகளாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

வில்லனின் அண்ணனுக்குத்திருமணம் நடக்கிறது.அண்ணி. வில்லனிடமும் ,நாயகனிடமும் பாசமாகப்பழகுகிறார்.

ஒரு கட்டத்தில் வில்லனின் அண்ணி தூக்குப்போட்டு இறந்து கிடக்கிறார்.இது தற்கொலை இல்லை.கொலைதான்.என் அப்பாவும் ,அண்ணனும்  சேர்ந்துதான் அண்ணியைக்கொலை செய்திருக்கிறார்கள் என்கிறான் வில்லன்.


வில்லனின் அம்மா,தங்கை ,அண்ணி என மூவரையும்  வில்லனின் அப்பா கொலை செய்ததால்  வில்லன் தன் அப்பா மீது செம கடுப்பில் இருக்கிறான்.


ஒரு கட்டத்தில் வில்லன் திருநஙகையாகத்தான் மாறி வருவதை உணர்கிறான்.இந்த விஷயம் வெளியே தெரிந்தால் ஊரில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என  வில்லனின் அப்பா நினைக்கிறார்.


அதனால் வில்லனின் அப்பா நாயகனை அழைத்து  வில்லனைக்கொலை செய்யச்சொல்கிறார்.

நாயகன் தன் உயிர் நண்பனான வில்லனை. கொலை செய்தாரா?நண்பனாக ஏற்றுக்கொண்டானா? என்பது க்ளைமாக்ஸ்.இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.


நாயகனாக ரிஷிகாந்த் சிறப்பான நடிப்பு.நண்பனைக்காப்பாற்றும்போது அவர் காட்டும் துடிப்பு,நண்பன்  திருநங்கை ஆனான் என்பது தெரிந்ததும் அசூயையாய்ப்பார்ப்பது என வித்தியாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.முக சாயலில் ,உடல் மொழியில் ரஜினி யை நினைவுபடுத்தும் இவர் படத்தில் ரஜினி ரசிகராகவே வருவது அருமை.


வில்லனாக ,நாயகனின் நண்பன் ஆக  சனந்த் நடிப்பு அருமை.திருநங்கை ஆன பின் அவரது ட்ரான்ஸ்பர்மேஷன் ,உடல் மொழி மாற்றம் அருமை.

வில்லனின் அண்ணியாக ,டைட்டில் ரோலில் டோரதியாக நடித்திருப்பவர் கீர்த்தி சுரேஷ்.இவருக்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் முக்கியமான ரோல் தான்.நன்றாக செய்திருக்கிறார்.


இவர்கள் போக முத்தழகி ,ஜீவா சுப்ரமணியன் ,முத்துக்குமார் ( வில்லனின் அப்பாவாக விசிலய்யா கேரக்டர்) ஆகியோர் நடிப்பும் கச்சிதம்



இசை இசைஞானி இளையராஜா.கல்யாண விருந்து ,முத்துமணி ,உன்னைத்தொட்டு. ஆகிய மூன்று பாடல்களும் இதம்.பின்னணி இசையில் தனது பழைய ஹிட் பி ஜி எம் களைப்பயன்படுத்தி இருப்பது சிறப்பு.

திருவின் ஒளிப்பதிவில் காட்சிகள் உலகத்தரமான படப்பிடிப்பு. கணேஷ் சிவாவின் எடிட்டிங்கில் 150 நிமிடங்கள் ஓடுகிறது.

சரவணன் சந்திரன் உதவியுடன் திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்பு ராஜ்.


சபாஷ் டைரக்டர்

1 முதல் பாதியில் சுப்ரமணியபுரம் மாதிரி நண்பர்களின் நட்பு ,துரோகம் மாதிரி கதையாகக்கொண்டு போய் பின் பாதியில் யூகிக்க முடியாத பாதையில் திரைக்கதை பயணிப்பது ஆச்சர்யம்


2. திருநங்கைகளின் வாழ்க்கை ,அவர்களது வலியைப்பார்வையாளர்ககுக்குக்கடத்திய விதம்.

3 பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் கிணற்றைக்காட்டிய விதம் அதிர்ச்சி அளிக்கிறது.

4 திண்டுக்கல் பஸ் ஸ்டேண்டில் நாயகனும்,நண்பனும் பேசிக்கொள்ளும் காட்சி செம 

5.  சாதிய மனநிலையை வில்லனின் அப்பா வெளிப்படையாகக்காட்டுவது திரில்.

6 பின் பாதியில் ரோடு ட்ரிப் ட்ராமாவாகப்படம் பல ஊர்களில் நகர்வது ஒளிப்பதிவாளரின் திறமையைக்காட்டக்கிடைத்த வாய்ப்பு.






லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 க்ளைமாக்சை ஜீரணிக்கவே முடியவில்லை .உயிர் நண்பனை நாயகன் நண்பனாகவே ஏற்றுக்கொண்டானா?கொலை செய்கிறானா?என்ற சஸ்பென்ஸ் கேள்வி எழுப்பி எதிர் பாராதவிதமாக ஒரு க்ளைமாக்சை வைத்தது வலியத்திணிக்கப்பட்டதாகத்தோன்றுகிறது.ஒட்டவே இல்லை.

2 முதல் பாதியில் விறுவிறுப்பாகப்போகும் படம் பின் பாதியில் படுத்து விடுகிறது.லொட லொடவெனப்பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

3 திருநங்கைகளின் சடங்குகள் நடைபெறுவது இவ்வளவு டீட்டெய்லாகக்காட்டி இருக்கத்தேவை இல்லை.




ரசித்த வசனங்கள்

1 ஏன் அழுவறே?ஆம்பிளை அழக்கூடாது.

பொண்ணுங்கதான் அழனும்னு எழுதி வெச்சிருக்கா?

2 நாமளும் பெரிய ஆளானபின் எவளையாவது பிடிச்சு இப்படித்தான் கிஸ் அடிக்கனும்.படத்தை நல்லாப்பார்த்து வெச்சுக்கோ.

3 இது பொல்லாத உலகம் தம்பி.நாளை உங்க ரெண்டு பேரையுமே மோத விட்டு வேடிக்கை பார்க்கும்.

என்னண்னே பேசறே?நாங்க எதுக்கு மோதிக்கப்போறோம் ?

4 கவுரவம் தான் நமக்கு முக்கியம்.

5 இன்னமும் 10 வருடங்கள் கழித்து நாங்க தான் மெஜாரிட்டியா இருப்போம்

6 பெண்ணும் தான் அழக்கூடாது.



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+. ( கண்ட்டெண்ட்டுக்காக)



CPS கமெண்ட் -  சுப்ரமணியபுரம் மாதிரி வித்தியாசமான கிராமத்துக்கதை தான்.ஆனால் க்ளைமாக்ஸ் சீன மக்கள் ஏற்றுக்கொள்வது சிரமம்.ஜனரஞ்சக வெற்றியும் சிரமம். குடும்பத்துடன் பார்க்க முடியாது.ரேட்டிங்க். 3/5 

Dorothy
Theatrical release poster
Directed byKarthik Subbaraj
Screenplay byKarthik Subbaraj
Story by
  • Karthik Subbaraj
  • Saravanan Chandran
Produced by
Starring
CinematographyTirru
Edited byGanesh Siva
Music byIlaiyaraaja
Production
companies
Release dates
  • 11 September 2026 (TIFF)
  • 25 September 2026 (India)
Running time
146–150 minutes[a]
CountryIndia
LanguageTamil