Tuesday, May 12, 2026

PATRIOT (2026)-மலையாளம் - சினிமா விமர்சனம் (சைபர் க்ரைம் ஸ்பை ஆக்சன் திரில்லர்)

 




நம்ம ஊரில் ரஜினி + கமல் இணைந்து நடித்த படங்கள் 17.ஆனால் கேரளாவில் மம்முட்டி +மோகன்லால் இணைந்து நடித்த படங்கள் 50.கடைசியாக இருவரும் இணைந்து நடித்த படம் 2013ல் வெளியான கடல் கடன்னு ஒரு மாதுக்குட்டி .13 வருடங்களுக்குப்பின் இருவரும் இணைந்து நடித்த படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகி இருக்கிறது.இது இருவரும் இணைந்து நடித்த 51 வது படம்.140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்டமான  படம்.


இயக்குநர் மகேஷ் நாராயணன் எடிட்டர் ஆக  2007ல் ராத்திரி மழ படத்தில் அறிமுகம் ஆனாலும் இயக்குநர் ஆக  10 வருடங்கள் கழித்து டேக் ஆப் என்ற படத்தில் 2017ல்  களம் இறங்கியவர்.சீ யூ சூன் (2020) ,மாலிக் (2021)அறியிப்பு(2022),மனோரதங்கள்(2024) என 5 படங்கள் இயக்கி இருக்கிறார்.அனைத்தும் வெற்றிப்படங்கள்.டெக்னிக்கல் ஆக சிறந்த படங்கள்.

இப்பேர்ப்பட்ட இயக்குநருடன் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி,மோகன்லால் ,பகத்பாசில்,குஞ்சக்கா போபன்,நயன் தாரா,ரேவதி எனப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்த படம் இது.பிரம்மாண்டமான இந்தப்படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பதைப்பார்ப்போம்.


ஸ்பாய்லர் அலெர்ட்

தமிழக அரசியலில் சமீபத்தில் சொந்த மகனே அப்பா வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவியைப்பொருத்தி உளவு பார்த்த விஷயம் அனைவரும் அறிந்ததே.2022ல் இந்திய அரசியலில் ஒட்டுக்கேட்ட விவகாரம் பேசு பொருள் ஆனது.இந்த ஒட்டுக்கேட்கும் விவகாரம் தான் கதைக்கரு.

வில்லன் ஒரு சாப்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறான்.Lik படத்தின் வில்லன் லவ் ஆப் உருவாக்கியது போல இந்த வில்லன்  ஒரு ஆப் கண்டுபிடிக்கிறான்.செல்போன்,லேப்டாப்பில்  ஒருவர் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து விட்டால் அவரது ரகசியங்கள் அனைத்தையும் எடுத்து விடலாம்.

வில்லனின் அப்பா  ஆளும் கட்சி அமைச்சர்.அவர் சட்டத்துக்குப்புறம்பாக இந்த ஆப்பிற்கு சாங்க்சன் செய்கிறார்.ஏன் எனில் இது போன்ற பெரிஸ்கோப் ஸ்பைவேர் இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும்.

அரசாங்கம் ஏழை மக்களுக்கு இலவச லேப் டாப் வழங்குவது போல  இந்த ஆப்பையும் இன்ஸ்டால் செய்தே வினியோகம் செய்கிறது.இந்த ஆப்பால் சாமானிய மக்கள் பலி ஆகிறார்கள்.

சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் ,இந்த ஆப் பற்றி அறிந்த நேர்மையான இன்னொரு பெண் அமைச்சர்  இருவரும் மர்மமான முறையில் மரணிக்கிறார்கள்.

இப்போது தான் நாயகனின் எண்ட் ரி.டிபன்ஸ் டிபார்ட்மெண்ட்டில்  ஹையர் ஆபீசர் ஆகப்பணி ஆற்றுகிறார்.

வில்லனின் ஆப் பற்றிய தில்லுமுல்லுகள்,வில்லனால் இறந்த முக்கியப்புள்ளிகளின் மர்ம மரணங்கள்  இவற்றைக்கண்டறிய களம் இறங்குகிறார்.

வில்லனின் அப்பா ஒரு ஆளும் கட்சி அமைச்சர் என்பதால் நாயகனுக்கு இடையூறுகள் தருகிறார்.இதை மீறி  நாயகன் எப்படி ஜெயிக்கிறான் என்பதே மீதித்திரைக்கதை.


நாயகன் ஆக மம்முட்டி கம்பீரமாக நடித்திருக்கிறார்.70 வயது முதுமை தெரியாமல் இருக்க தாடி கெட்டப் போல.அதையும் மீறி வயோதிகம் தெரிகிறது.ஆனால் அவரது கணீர் குரல் ,உடல் மொழி பிரமாதம்.அவர் பேசும் பஞ்ச் ஒன் லைனர்களுக்கு தியேட்டரில் கை தட்டல்.

வில்லன் ஆக கார்ப்பரேட் கலக்கல் பகத் பாசில் வழக்கம் போல் அனாயசமான நடிப்பு.

மோகன்லால் இடைவேளைக்குப்பின்னால் தான் வருகிறார்.ஆனால் அவர் வரும் காட்சி கள் எல்லாம் அதகளம்.

வில்லனின் அப்பாவாக அமைச்சர் ரோலில் ராஜீவ் மேனன் கச்சிதம்.

நேர்மையான அமைச்சர் ஆக நடிகை ரேவதி நரை முடியில் ஓல்டு கெட்டப்பில் வருகிறார்.மண் வாசனை ரேவதியா இவர்?என வியக்க வைக்கிறார்.

குஞ்சக்கா போபன்.நயன் தாரா,தர்சனா  ராஜேந்திரன் ,இந்திரன்ஸ் ,கிரேஸ் ஆண்ட்டனி  என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.அனைவரும் அவரவர் ரோலை சரியாக செய்து இருக்கிறார்கள்.

சுசின் ஷ்யாம் இசை பரவாயில்லை ரகம் தான்.பின்னணி இசை நல்ல விறுவிறுப்பு.
மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு பிரம்மாண்டம்.ஹாலிவுட் தரத்தில் காட்சிகள் கண் முன் விரிகின்றன.

ராகுல் ராதாகிருஷ்ணன் ,இயக்குநர் மகேஷ் நாராயணன் இருவரும் இணைந்து எடிட்டிங்க் செய்து இருக்கிறார்கள்.3 மணி நேரம் படம் ஓடுகிறது.

முதல் பாதி நல்ல வேகம்,பின் பாதி இன்னமும் ஷார்ப் ஆக ட்ரிம் பண்ணி இருக்கலாம்.
கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் மகேஷ் நாராயணன்.


சபாஷ். டைரக்டர்

1  சாமானியனுக்கும் புரியும் வகையில் முதல் காட்சியில் இருந்தே  பெரிஸ்கோப் ஸ்பை வேர் ஆப் பற்றி விளக்கி கதைக்குள் ஆடியன்சை இழுத்த விதம் அருமை.

2  தேசபக்திப்படம் என்றாலும் துரந்தர் மாதிரி  ஜல்லி அடிக்காமல் ஆதார் கார்டு ,பாகிஸ்தான் பிரச்சனை போன்றவற்றை பொலிடிக்கல் சட்டயர் ஆக கிண்டல் செய்த விதம் அருமை.

3.  காருக்குள் நடக்கும் சண்டைக்காட்சியில் கேமரா 360 டிகிரியில் சுழன்று படம் பிடித்த விதம் அட்டகாசம்.எடிட்டிங்கும் அந்த சீனில் செம.

4.  வில்லன் ஜெட்டில் மாட்டிக்கொள்ள  நாயகன்  கீழே இருந்தபடி வில்லனை வழி நடத்திக்காப்பாற்றும்  காட்சி தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது.

5 மோகன் லால் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவு அசத்தல் ரகம்






லாஜிக் மிஸ்டேக்ஸ்



1 மெயின் ஹீரோவுக்கே டூயட் இல்லாதபோது தர்சனா ராஜேந்திரன் பாடல் காட்சி தேவை இல்லாதது.ஆக்சன் படத்தில் ஒட்டவில்லை.மெயின் கதைக்கும் இவரது பிளாஸ்பேக் கதைக்கும் சம்பந்தம் இல்லை.

2.  மம்முட்டி ,மோகன் லால் காம்போ சீன்கள் பெரிய மேஜிக் எதையும் நிகழ்த்தாதது. ஏமாற்றம்.திரைக்கதை எழுதியவர் இந்த முக்கிய விஷயத்தில் கோட்டை விட்டு விட்டார்.

3  க்ளைமாக்சில். நாயகன் ,வில்லன் ஒன் டூ ஒன் பைட் சீன் எல்லாம் தேவையே இல்லை

4 படத்தின் நீளம் சோதிக்கிறது.யப்பா,சீக்கிரம் முடிங்கப்பா என சொல்லத்தோன்றுகிறது

5. படத்தில் எதிர் பாராத ட்விஸ்ட் எதுவும் இல்லை.பிளாட்டாக செல்கிறது.நயன் தாரா கேரக்டர் கூட வலுவந்தமாக ஒரு பெரிய ஸ்டார் இருக்கட்டுமே என்று புக் செய்த மாதிரி  தெரிகிறது.


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். க்ளீன் யூ


சி பி எஸ் பைனல் கமெண்ட். கேரளா ரசிகர்கள் படத்தைக்கொண்டாடுவார்கள்.தமிழ் ஆடியன்சுக்கு. சராசரியான ஒரு ஆக்சன் திரில்லர் தான்.பார்க்கலாம்.ரேட்டிங் 3/5

ஆங்கில சப் டைட்டில் உண்டு

Patriot
Theatrical release poster
Directed byMahesh Narayanan
Written byMahesh Narayanan
Produced by
Starring
CinematographyManush Nandan
Edited byMahesh Narayanan
Rahul Radhakrishnan
Music bySushin Shyam
Production
companies
Distributed byAan Mega Media
Release date
  • 1 May 2026
Running time
180 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹140 crore[2][3]

Monday, May 11, 2026

கேரளாவில் வெள்ளம் வந்த போது ஏற்பட்ட என் அனுபவம் @ kalki

 கேரளாவில் வெள்ளம் வந்த போது ஏற்பட்ட என் அனுபவம்





நான் கேரளாவில்  பந்தலம்கற ஊர்ல இருந்தேன்( சபரி  மலை ஐயப்பன்  பிறந்த ஊர் ) . பத்தணம் திட்டா மாவட்டம் 2018 ஜூன்ல இருந்து தொடர்ந்து 43  நாட்கள் தினசரி தொடர் மழை. விடாம மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர் மழைன்னா நிஜமா சூரியனையே பார்க்க முடியாத மேக மூட்டத்துடன் தொடர் மழை. ரொம்ப சிரமம். எதிர் கொள்வது. 



ஒரு நாள் திடீர்னு வேகமா காத்தும் அடிச்சுது , மழையும் பேய் மழை பெய்தது. சரி , இதுக்கு மேல இங்கே இருந்தா ஆபத்துனு  தமிழ் நாடு கிளம்பிடலாம்னு பார்த்தா ரயில் எல்லாம் கேன்சல். பஸ் ரூட்ல வரலாம்னு பார்த்தா ரெகுலர் ரூட்டான கொச்சின், திருச்சூர், பாலக்காடு  ரூட்டும்,  கருகச்சால் வழி தேனி , கம்பம் ரூட்டும்  லாக்டு 


 மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து  டிராஃபிக் ஜாம் 



கடைசியா ஒரே ரூட் ஒரே நம்பிக்கை புனலூர் போய் தென்காசி வழியா எஸ்கேப்  ஆகனும், அல்லது சுத்து வழியா இருந்தாலும் பரவாயில்லைனு திருவனந்த புரம் போய் நாகர் கோவில் வழி ஈரோடு வரனும்



 ஆனா  லைட்ஸ்  எல்லாம் ஆஃப் ஆகிடுச்சு . கரண்ட் கட். சரி லாட்ஜ்ல தங்கிட்டு காலைல போகலாம்னு   அடூர்ல  ரூம் பார்த்தா  250 ரூபா மதிப்புள்ள  ரூம் வாடகை 2000+  சொன்னாங்க . அதுக்கும் அடிதடி. 



 சரி, பந்தலத்துக்கு திரும்பி வந்து ரெகுலரா தங்கற லாட்ஜ்ல ரூம் எடுத்து தங்கிட்டேன்


 காலைல 5 ,மணிக்கு கதவை தட்டும் சத்தம். வெளில வந்து பார்த்தா அந்த லாட்ஜ் வெளில ஃபுல்லா தண்ணி 



 நாங்க இருந்தது  3 வது மாடி . 2 ஆவது மாடி வரை தண்ணி . அரசு படகு வரும், ஹெலிகாப்டர் வரும்னு அவனவன் அலறிட்டு இருக்கான் 



 இது எப்படி நடந்ததுன்னா அரசு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம  எல்லா டேம்களையும் நைட்டோட நைட்டா திறந்து  விட்டதுதான்



 முறைப்படி அரசு என்ன பண்ணி இருக்கனும்னா மேடான பகுதிகளான கொல்லம் , திருவனந்தபுரம் பகுதிக்கு சிஃப்ட் ஆகிக்குங்கனு அறீவிப்பு தந்து கால அவகாசம் தந்து  பண்ணி  இருக்கனும்



 இதை எல்லாம்  அப்போ  யோசிக்க டைம் இல்ல . எப்படி தப்பிக்க ? லாட்ஜ் மேனேஜர் கிட்டே 1000 ரூபா எக்ஸ்ட்ரா பணம் குடுத்து இதை  வெச்சிருங்க , அவசரத்தேவைன்னா நான் மறுபடி வந்து வாங்கிக்கறேன்னு சொல்லிட்டு   என் பேண்ட் , சர்ட் எல்லாம் கழட்டி பேக்ல வெச்சுக்கிட்டு வெறும்  டிராயரோட  கைல  பேக் எடுத்து  தலை மேல வெச்சுட்டு தண்ணி ல குதிச்சி  நீந்த ஆரம்பிச்சேன்



 அப்போதான் சின்ன வயசுல கிராமத்துல நான் வேணாம் வேணாம் என சொல்லியும் கேட்காம எனக்கு வலுக்கட்டாயமா சுரப்ரடை  கட்டி வாய்க்கால்ல நீச்சல் கத்துக்கொடுத்த அப்பாவுக்கு மனசில் நன்றி சொன்னேன்



 1 கிமீ நீச்சல் அடிச்சு மெயின் ரோட்டுக்கு வந்தேன்.   மெயின் ரோட்டில்  முழ்ங்கால் அளவு தண்ணீர் தான்


 அங்கே வந்ததும் ஒருவர் பைக்கில் லிஃப்ட் கொடுத்தார் . பஸ் நிற்கும்  ஏரியா வரை  லிஃப்ட் தந்து உதவினார் . பஸ்ல ஏறி பேக்ல துண்டு எடுத்து  துவட்டி   பேண்ட் சர்ட் போட்டுக்கிட்டேன் 


திருவனந்தபுரம் வந்தேன் . நெல்லை எக்ஸ்பிரஸ் செம கூட்டம் , ஆளை விட்டாப்போதும்னு அதுல ஏறி  ஊர் வந்து சேர்ந்தேன் 


 எப்பவும் அரசு  உதவி செய்யும்னு வெயிட் ப்ண்ணிட்டு இருக்கக்கூடாதுனு அன்னைக்கு கத்துக்கிட்டேன்



 அந்த வெள்ளப்போக்கில் நீச்சல் தெரியாம உயிர் இழந்தவங்க ஏகபப்ட்ட பேர். அரசாங்கம் அறிவிச்சது கொஞ்சம் பேர் தான் 


 இன்றும் கூட   செங்கன்னூர்  டூ கோட்டயம் வரை  எம் சி ரோடு எனப்படும் மெயின் ரோட்டில்  ஏகப்பட்ட பைக்குகள்   கேட்பாரற்று நிற்பதைப்பார்க்கலாம். எல்லாம் வெள்ளப்போக்கில் அடித்து வந்தவையே , அதற்கு உரிமை கொண்டாட யாரும் வரலை . உரிமையாளர்கள் உயிருடன் இருந்தாதானே வருவாங்க ?

29(2026)-தமிழ்- சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் டிராமா)

  

ஜிகிர்தண்டா 2 ,ரெட்ரோ ஆகிய படங்களில் வில்லன் ஆக நடித்த நடிகர் விது நாயகன் ஆக நடிக்கும் முதல் படம் இது .    அயோத்தி,கிஸ் பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி தான் இதிலும் நாயகி.மேயாத மான்(2017),ஆடை(2019) ,குளுகுளு(2022) ஆகிய படங்களின் இயக்குநர் ரத்னக்குமார் தான் இந்தப்பட இயக்குநர்         


ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை நடக்கும் கால கட்டம் 2010.

21 வயதான நாயகிக்கு ஐ ஏ எஸ் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம்.ஆனால் இப்போதைக்கு டிகிரி முடித்து விட்டு ஒரு கம்பெனியில் வேலை செய்கிறாள்.


29 வயதான நாயகன் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து  வேலை செய்பவன்.அக்ரிகல்ச்சர் டிகிரி முடித்திருந்தாலும் ஐ டி கம்பெனியில் பணி புரிபவன்.இவனுக்கு என்று பெரிதாக லட்சியம் எதுவும் இல்லை.


நாயகன் ,நாயகி இருவரும் ஒரே கம்பெனியில் பணிபுரிவதால் பழகி ,நண்பர்கள் ஆகி காதலர்கள் ஆகிறார்கள்.


ஒரு முறை பேச்சு வாக்கில் உன் லட்சியம் என்ன?என நாயகி நாயகனிடம் கேட்க அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று நாயகன் கூறி விடுகிறான்.இந்த விவாதத்தில் இருவருக்கும் மனத்தாங்கல் ஆகி பிரிய  இடைவேளை.

இதற்குப்பின் அவரவர் லட்சியப்பாதையில் பயணித்தார்களா?பிரிந்த காதல் ஒன்று சேர்ந்ததா?என்பது தான் மீதித்திரைக்கதை


நாயகன் ஆக விது நடித்திருக்கிறார்.வில்லன் ரோலில் பார்த்த இவரை நாயகன் ஆகப்பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் போகப்போக கதையின் போக்கில் செட் ஆகி விடுகிறார்.

நாயகி ஆக ப்ரீத்தி அஸ்ராணி பிரமாதமான நடிப்பு.இவர் ஸ்ரீவித்யா ,ஷோபனா போல நடனத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் இவருக்காகவே ஸ்பெஷலாக நடனத்திறமையை வெளிப்படுத்தும் காட்சிகள் அமைத்து ஆட வைத்தது இயக்குநரின் சாமார்த்தியம்.

வில்லன் ஆக மாஸ்டர் மகேந்திரன் பரவாயில்லை ரகம்.


நாயகனின் நண்பன் ஆக வரும் அவினாசின் ஒன் லைனர்கள் கல கலப்பு.

நாயகனின் அம்மாவாக வரும்  ஆதிரா,நாயகியின் அம்மாவாக வரும் சிந்து இருவரும் நல்ல குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.


இவர்கள் போக மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்த அனைவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மாதேஷ்  மாணிக்கம்.கடற்கரைக்காட்சிகளில் முத்திரை  பதிக்கிறார்.

இசை ஷான் ரோல்டன்.6 பாடல்களில் 3 ஹிட்.பின்னணி இசையும் அருமை.

எடிட்டிங் ஆர் எஸ் சதீஷ் குமார்.முதல் பாதி நல்ல வேகம்.பின் பாதி ஸ்லோ.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  ரத்னக்குமார்.



சபாஷ்  டைரக்டர்


1 இதயம் படத்தை வரைவது அவ்வளவு ஈசி இல்லை.நாம ரெகுலராப்பார்க்கும் ஹார்ட் ஷேப் வேற,நிஜ இதயத்தின் வடிவம் வேற என்பதை விளக்கும் இடம் அருமை

2 கடற்கரையில் மறைந்திருக்கும் ஒரு இடத்தில் நாயகன் தன் காதலை வெளிப்படுத்தும் இடம் கவிதை.

3 காதலின் பயணம் இறுதியில் காமத்தில் தான் முடியும் என்ற கருத்தை கண்ணியமாகக்காட்சிப்படுத்திய விதம் அழகு.

4 பாச்சிலர் ரூம் காட்சிப்படுத்திய யதார்த்தம் பிரமாதம்.

5 காதலை வெளிப்படுத்தும்போது பட்டாம்பூச்சி பறக்கும் விதத்தைக்கவிதையாக சொன்ன தருணம் செம.

6 இயக்குநர் ஒரு விஜய் ரசிகர் என்பதால் படம் முழுக்க விஜய் ரெப்ரன்ஸ் வைத்திருப்பது தியேட்டரில் கொண்டாட்ட மனநிலையைக்காட்டுகிறது.

7 கவித்துவமான காதல் படமாகக்காட்ட சேப்ட்டர் 1 சேப்ட்டர் 2 என பிரித்து வரிசைப்படுத்திய விதம் அருமை





  ரசித்த  வசனங்கள் 


1 வாழ்க்கையே வேண்டாம்னு வெறுத்து ஒதுங்கும் ஒருவனுக்கு வேண்டி விரும்பி  ஒரு பொண்ணு வந்தா எப்படி இருக்கும்?

2  வாழ்க்கை பூரா நீ என்னை அண்ணாந்து பார்க்கத்தயாரா?

3 சிலை வைக்கிற அளவுக்கு நாம வளரலைன்னாலும் உலை வைக்கிற அளவுக்காவது வளர்ந்திருக்கோமே?

4  நான் யாரு?என்னோட அடையாளம் என்ன?இந்த தேவதையோட ஆளு என்பது தான் இப்போதைக்கு என்னோட அடையாளம்.

5  பெரியவனா ஆகும் முன் நீ என்னவா ஆகனும்னு ஆசைப்பட்டே?

பெரியவனா ஆகனும்னு மட்டும் தான் ஆசைப்பட்டேன்.

6  அவன் ஒண்ணும் நமக்காக மாறலை.அவன் நேசித்த பொண்ணுக்காக மாறி இருக்கான்.

7  காதல் என்னைக்கொஞ்சம் கொஞ்சமா பிச்சுத்திங்குது.


  8  லவ் பண்ணும்போது கெமிஸ்ட் ரி நல்லா இருந்தாப்போதும்,ஆனா அதுக்குப்பின் மேட்ச் வேணும்

9   அவனுக்குன்னு ஒரு அடையாளமே இல்லாம அழிச்சுக்காமிக்கிறேன்.

10 திருக்குறளை கவுத்துப்போட்ட மாதிரி அவளோட லிப்ஸ். அவளோட மேல் உதட்டை விட, கீழ் உதடு கொஞ்சம் பெருசு"
11 சாகப்போற கடைசி நிமிஷத்துல நான் முனகிட்டு இருக்கப்போற பேரை, அவ பேப்பர்ல எழுதுனா.
12 காத்துல பறக்காம இருக்க பேப்பர் வெயிட் வைக்குற மாதிரி அவ தலையில கொஞ்சூண்டு மல்லி பூ... அவளையே பரிசுப்பார்சல் பண்ண மாதிரி வந்து நின்னா"
13 இப்படி வழி அனுப்புனா நான் தீ மிதிக்க கூட தயார்.

14. ஹிந்தித்திணிப்புக்குத்தான் நாங்க எதிர்ப்பு ,ஹிந்தி மொழிக்கு அல்ல

15 ஒரே செடியை எத்தனை தடவை தான் பிடுங்கிப்பிடுங்கி நடுவீஙக?

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 இயக்குநர் கவுதம் மேனன் படஙகளில் வருவது போல நாயகன் வாய்ஸ் ஓவரில் பேசுவது பல இடங்களில் எரிச்சல்.

2 மாஸ்டர் மகேந்திரனின் கேரக்டர் டிசைன் இன்னும் வலுவாக எழுதி இருக்கலாம்.க்ளைமாக்சில் திடீர் எனத்திருந்துவது நம்பும்படி இல்லை..

3  முன் பாதி லவ் ஸ்டோரி ஆகக்கொடுத்து பின் பாதியில் ட்ராக் மாறுவதை எத்தனை பேர்களால் ஜீரணிக்க முடியுமோ?தெரியவில்லை.

4 திரைக்கதை அமைத்த விதம் பழைய பாணியில் என்பதால் சலிப்பு

5 செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனியின் பாதிப்பு பல காட்சிகளில் தெரிகிறது.

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ரசிக்க வைக்கும் முதல் பாதி காதல் கதை,சிந்திக்க வைக்கும் பின் பாதி லட்சியப்பயணக்கதை. என்பதால் பார்க்கலாம்.,80s,90s கிட்ஸ்க்கு மிகவும் பிடிக்கும்.ரேட்டிங் 3/5

Sunday, May 10, 2026

ஓ பட்டர்பிளை (2026)-தமிழ்- சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் சைக்காலஜிக்கல் திரில்லர்)@ஜியோ ஹாட் ஸ்டார்,டெண்ட் கொட்டாய்

 



6/3/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் விமர்சகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களைப்பெற்றாலும் கமர்ஷியல் ஹிட் ஆகவில்லை   .இப்போது இந்தப்படம் 4/5/2026 முதல் டெண்ட் கொட்டாய் ஓடிடி யிலும் 8/5/2026 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரிலும் வெளியாகிறது.        


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு கோடீஸ்வரி.நாயகன் ஒரு மிடில் கிளாஸ்.இருவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது.திருமணம் நடந்த அடுத்த நாளே நாயகனுக்கு வேலை போய் விடுகிறது இதனால் நாயகன் மன உளைச்சலில் இருக்கிறான்.


நாயகிக்கு திருமணத்துக்கு முன்பே ஒரு காதலன் இருந்தான்.அவனுடன் ஒரு வருடம் லிவ்விங்க் டுகெதர்  வாழ்க்கை நடத்தியவள் தான் நாயகி.சில காரணங்களால் காதலன் பிரிந்து போனதால் இப்போது நாயகனைத்திருமணம் செய்திருக்கிறாள் நாயகி.


நாயகி நாயகன்  ஆன தன் கணவனிடம்  தன் முந்தைய காதல் விஷயத்தைப்பற்றி சொல்லி விடத்துடிக்கிறாள்.பல முறை முயற்சி செய்தும் அவளால் சொல்ல முடியவில்லை.


நாயகன்,நாயகி இருவரும் கொடைக்கானல் வருகிறார்கள்.இந்த சந்தர்ப்பத்திலாவது தன் பழைய வாழ்க்கையை சொல்லி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நாயகி இருக்கிறாள்.


நாயகியின் முன்னாள் காதலன் ,வேறு ஒரு வேலையாக கொடைக்கானல் வருகிறான்.இவன் தான் இந்தப்படத்தின் வில்லன்.நாயகனும்,வில்லனும் காலேஜ் மேட்ஸ்.


நாயகன் வில்லனைக்கொடைக்கானலில் எதேச்சையாக சந்திக்க வீட்டுக்கு அழைத்து வருகிறான்.


தன் முன்னாள் காதலனை சந்தித்த நாயகி அதிர்ச்சி அடைகிறாள்.


இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதிக்கதை.


நாயகி ஆக நிவேதிதா சதீஷ் அமைதியாக நடித்திருக்கிறார்.இவருக்கு சிரிக்கவேப்தெரியாதா?எனக்கேட்க வைத்தாலும் அந்த கேரக்டர் டிசைன் அப்படி.சிறப்பான நடிப்பு.


நாயகன் ஆக ஆர் அதுல் நடித்திருக்கிறார்.தாழ்வுமனப்பான்மை கொண்ட கேரக்டர் டிசைன் என்பதால் அவரைப்பார்க்கும்போது நமக்கு எரிசசல் தான் வருகிறது.பரிதாபம் வரவில்லை.சில இடஙகளில் அவர் ஓவர் ஆக்டிங்க் வேறு.முடியலை.


வில்லன் ஆக சிபி புவனா சந்திரன் நடித்திருக்கிறார்.அதிக வேலையில்லை.நடிப்பில் சீரியஸ்தனமும் இவரிடம் இல்லை.வித்தியாசமாக காஸ்ட்யூம் ,கெட்டப் ஓக்கே,ஆனால் நடிப்பில் வெரைட்டி காட்டி இருக்க வேண்டாமா?


பட்டாம்பூச்சிகளை வளர்க்கும் நாசர் கவனிக்க வைத்தாலும் அவர் கேரக்டர் வலுவாக எழுதப்படவில்லை.நாயகியின் சகோதரி ஆக வரும் லட்சுமிப்ரபா அமைதியான நடிப்பில் கவர்கிறார்.


குறி ஜோதிடம் சொல்லும் சோடாபுட்டிப்பாட்டி ஆக வரும் கீதா கைலாசம் கவனிக்க வைக்கிறார்.படத்தில் எல்லோரும் அந்தக் கேரக்டரைக்கிழவி எனக்குறிப்பிடுவது ஏனோ?பாட்டி என்று சொல்லி இருக்கலாம்.


ஒளிப்பதிவு வேதராமன் சங்கரன்.கொடைக்கானலின் அழகைக்கூட்டி திரையில் காட்டி இருக்கிறார்.


இசை வைசாக் சோம்நாத்.பாடல்கள் சுமார் ரகம் தான்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்.

எடிட்டிங் புவனேஷ் மணிவண்ணன்.படத்தின் ரன்னிங்க் டைம் 132 நிமிடங்கள். மிக மெதுவான திரைக்கதை.


ஹரீஷ் ராஜகோபால் உடன் இணைந்து திரைக்கதை எழுதி தான் மட்டும் தனியே இயக்கி இருக்கிறார் விஜய் ரங்கநாதன்.


இயக்குநர் அறிமுக இயக்குநர் மட்டுமல்ல ,தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர்.



சபாஷ்  டைரக்டர்

1 கத்தி ,பந்து என எந்த விஷயத்தைப்பார்த்தாலும் அது ஆயுதமாக மாறி நாயகிக்குத்தீங்கு விளைவிக்கும் என்ற மனப்பான்மை கொண்ட வித்தியாசமான மன நோய் நாயகிக்கு இருப்பதும் அதை விளக்கும் ஆரம்பக்கட்ட காட்சிகளும் நமக்கு மிகவும் புதுசு.

2 ஒரு பங்களா ,நாயகன்,நாயகி ,வில்லன் என்ற மூன்றே கேரக்டர்கள்  என லொக்கேஷன்,ஆர்ட்டிஸ்ட் இரு விஷயத்திலும் சிக்கனம் காட்டி இது மினிமலிஸ்டிக் பிலிம் என்பதை நிரூபித்த விதம். அருமை.

3 ஒரு மனோவியல் தத்துவ அறிஞர் எழுதியது போல பிரமாதமான உளவியல் கூற்று வசனங்கள்  படத்தின் பெரும் பலம்.


4 மன உளைச்சலில் இருக்கும் நாயகன் ,குற்ற உணர்ச்சியில் தவிக்கும் நாயகி இருவரது கேரக்டர் டிசைனும் ,நடிப்பும் கன கச்சிதம்


  ரசித்த  வசனங்கள் 

1  நான் போறது பாதை,நீ இருப்பது பள்ளம்

2 உண்மையை சொல்ல சரியான இடம்,சரியான நேரம் என எதுவும் இல்லை.

3.  எது எப்போ நடக்கனும்னு இருக்கோ அது அப்போ நடக்கும்.

4 பட்டாம்பூச்சியின் வாழ்நாள் 15 நாட்கள் டூ 30 நாட்கள் தான் 

5 காடு காய்ஞ்சா தானாப்பத்திக்கும்.

6 பைக் பொண்ணு மாதிரி ,பொண்ணு பைக் மாதிரி.

கீ கொடுத்தா ஓடனும்,என்னுதுன்னு சொல்லிக்கனும்.சரியான ஆம்பளைத்தனம்

7. உண்மையான லவ் எது?

4 இடத்துல சாப்பிட்டாத்தான்  வீட்டு சாப்பாட்டோட அருமை தெரியும்

,8  நீ தப்பிக்க நினைப்பது  என் கிட்டே இருந்தா?உன் கிட்டே இருந்தா?

9 அடிபட்ட கொஞ்ச நாளிலேயே  அந்த காயத்தை சுத்தி ஒரு அரிப்பு வருமே அது மாதிரி....

10 மனுசங்களுக்கு ஆசை நிறைய இருக்கு.அது தான் நம்மை வழி நடத்தும்.

11 அப்பா சரி இல்லைன்னா பையன் ரொம்ப நல்லவனா இருப்பான்,அல்லது அப்பா மாதிரியே மாறிடுவான்.

12 விதி என்பது நாம் எடுக்கும் சின்னச்சின்ன முடிவுகளால் ஆனது.


13 எதிர்காலத்தைப்பத்திய பயம் எல்லார்க்கும் உண்டு


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 வில்லன் நாயகியை எதற்காகப்பிரிந்தான் என்பதை தெளிவாக சொல்லவே இல்லை.

2 நாயகனுக்கு பைக்கில் விபத்து ஏற்படும் காட்சியில் நம்பகத்தன்மையே இல்லை.

3 பட்டாம்பூச்சிகளை வளர்க்கும் நாசர்  தான் வளர்த்த பட்டாம்பூச்சியைத்தேடி கானகத்தில் அலைவது எல்லாம் ஓவரோ ஓவர்.

4 க்ளைமாக்சில் வில்லன் நாயகியை விட்டு விட்டு எங்கோ செல்வதிலும் காரணம் சொல்லப்படவில்லை.

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - உலகப்படங்கள் பார்த்துப்பழக்கம் உள்ளவர்கள் ,சீரியல் பார்க்கும் பெண்கள் பார்க்கலாம்.பொறுமை மிக அவசியம்.காமெடி டிராக்,டான்ஸ் போன்ற கமர்ஷியல் விஷயங்கள் இல்லை.ரேட்டிங்க் 3/5


Oh Butterfly
Theatrical release poster
Directed byVijay Ranganathan
Written byVijay Ranganathan
Produced byVennky
Anand S Shah
Vijay Ranganathan
Nisha Patial
Starring
CinematographyVedaraman Sankaran
Edited byBhuvanesh Manivannan
Music byVaisakh Somanath
Production
companies
Anthill Cinema
Palampur Talkies
Release date
  • 6 March 2026
Running time
132 minutes[1]
CountryIndia
LanguageTamil

Saturday, May 09, 2026

மே 8 ஓடிடி ரிலீஸ் தமிழ்+ தமிழ் டப் படங்கள் பட்டியல்

 


இந்த வாரம் அமேசான் பிரைம் 7 படங்கள்,நெட் பிளிக்ஸ் 3 படங்கள் ,ஜியோ ஹாட் ஸ்டார் 2 படங்கள் ,சன் நெக்ஸ்ட் 1 படம் ஆக மொத்தம் 13 படங்கள்



அமேசான் பிரைம்

1. L IK.  தமிழ்  சயின்ஸ் பிக்சன் ரொமாண்டிக் டிராமா

2  சாத்தான் த டார்க்.  தமிழ். ஹாரர் சைக்கலாஜிக்கல்  திரில்லர்

3. கரிகாடா  கன்னடம்/தமிழ். ரூரல் ஆக்சன் திரில்லர்

4 LUKKHE. ஹிந்தி/தமிழ். ரொமாண்டிக் டிராமா

5. DACCOIT தெலுங்கு/தமிழ்.  ரொமாண்டிக் ஆக்சன் திரில்லர்

6. CITADEL   ஸ்பை ஆக்சன் திரில்லர். ஹாலிவுட் வெப் சீரிஸ் தமிழில் (ப்ரியங்கா சோப்ரா)

7 OFF CAMPUS. ஹாலிவுட் காமெடி வெப் சீரிஸ் தமிழில்


நெட் பிளிக்ஸ்

8. LEGENDS. ஆங்கிலம்/தமிழ் பயோகிராபிக்கல்  ட்ராமா

9  பரத நாட்டியம் 2 மோகினியாட்டம்  மலையாளம்/தமிழ் ஹாரர் காமெடி டிராமா 


10  Nemisis.  க்ரைம் ட்ராமா வெப் சீரிஸ் ஆங்கிலம்/தமிழ்

ஜியோ  ஹாட் ஸ்டார்

11.  வாழ பாகம் 2. மலையாளம் /தமிழ் காமெடி டிராமா 

12 துரந்தர் 2  ஹிந்தி/தமிழ். ஸ்பை ஆக்சன் திரில்லர் 


சன் நெக்ஸ்ட்

13 ஓ பட்டர் பிளை. சைக்கலாஜிக்கல் ரொமாண்டிக் ட்ராமா

CRIME 101 (2026) -ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் திரில்லர்) @அமேசான் பிரைம்







2020 ஆம் ஆண்டு டான் வின்ஸ்லோ எழுதிய க்ரைம் 101 என்ற நாவலைத்தழுவி எழுதப்பட்ட திரைக்கதையைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள்.நம்ம ஊரில் நேஷனல் ஹை வே என் ஹெச் 47 எனக்குறிப்பிடப்படுவது போல அங்கே 101 என்ற எண்ணால் குறிப்பிடப்படுகிறது.அங்கே நடக்கும் க்ரைம் தான் கதை.

                                 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு ஸ்மார்ட் ஆன திருடன்.கத்தியின்றி,ரத்தமின்றி,வன்முறையின்றித்திருடுவதுதான் இவன் கொள்கை.யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் துப்பாக்கியைக்காட்டி மிரட்டியே  சாமார்த்தியமாகத்திருடுபவன்.இவனது திருட்டுக்கள் அனைத்தும் ஒரே பேட்டர்னில் அடங்கி விடும்.101 என்ற ஏரியாவில் தான் திருடுவான்.காரணம் போலீஸ் வருவதற்குள் சுலபமாகத்தப்பி விடலாம்.தொடர்ந்து நகைக்கடைகளாக டார்கெட் செய்து திருடுபவன்


வில்லன் ஒரு போலீஸ் ஆபீசர்.கடந்த 5 வருடங்களில் 271 திருட்டுக்கள் நடந்திருக்கின்றன.அவற்றில் வன்முறை இல்லாமல் குறிப்பிட்ட திருட்டுகள் நடந்ததைக்கவனிக்கிறார்.டிபார்ட்மெண்ட்டில் வேறு யாரும் அதை கவனிக்கவில்லை.விரைவில் திருடனைப்பிடிக்க ஸ்கெட்ச் போடுகிறேன் என்கிறார்.


நாயகி ஒரு இன்சூரன்ஸ் ஆபீசில் பணி புரிகிறார்.மிகத்திறமையாகப்பணி ஆற்றியும் தனக்கு இன்னமும் பிரமோஷன் கிடைக்க வில்லையே என்ற குறை உண்டு.


நாயகன் நாயகியை சில நாட்கள் பாலோ செய்கிறான். ஒரு கட்டத்தில் உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது.நான் கேட்கும் தகவலைக்கொடுத்தால் உனக்கு கேட்ட பணம் தருகிறேன் என்கிறான்.


ஆனால் நாயகிக்கு அதில் உடன்பாடில்லை.மறுத்து விடுகிறாள்.நீ மனசு மாறினால் என்னைத்தொடர்பு கொள் என்று நாயகியிடம் சொல்லி விட்டு செல்கிறான்.


நாயகிக்கு ஆபீசில் பிரமோஷன் கிடைக்கவில்லை.அவள் 8 வருடங்களாக இதே கம்பெனியில் வேலை செய்தும் பிரமோஷன் கிடைக்காத விரக்தியில் பாஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள்.ஆனாலும் பலன் இல்லை.


நாயகி நாயகனுக்கு உதவத்தீர்மானிக்கிறாள்.கோடிக்கணக்கான ரூபாய் விலை மதிப்புள்ள வைரம் கை மாறப்போகிறது.அந்தத்தகவலை நாயகி  சொல்கிறாள்.நாயகன் அந்த வைரத்தைக்கொள்ளை அடிக்க களத்தில் இறங்குகிறான்.


வில்லன் ஆன போலீஸ் ஆபீசர் அந்த வைரத்தைக்கொண்டு போகும் ஆளாகக்களம் இறங்கி நாயகனைப்பிடிக்க முயற்சிக்கிறார்.

இதற்குப்பின் நிகழும் பரபரப்பான சம்பவங்கள் தான் படம்.


நாயகன் ஆக க்ரிஷ் ஹெம்ஸ் வொர்த் அலட்டிக்கொள்ளாத நடிப்பு .ஸ்டைலிஷாக வருகிறார்.இவரது ஆடை வடிவமைப்பு அருமை.ஜேம்ஸ்பாண்ட் மாதிரி கம்பீரம்.

வில்லன் ஆக டிடெக்டிவ் போலீஸ் ஆபீசர்  ஆக மார்க் ருபல்லோ அருமையான  நடிப்பு.

நாயகனின் காதலி ஆக மோனிகா பர்போரா அற்புதமான அழகுடன் கச்சிதமாக நடித்திருக்கிறார்.ஆனால் அவருக்கான போர்சன் குறைவு தான்.

நாயகி ஆக ,இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆக  ஹல்லெ மரியா பெரி நடித்துள்ளார். நாயகனுடன் கூட்டு சேர தயஙகுவது,பாஸ் உடன் வாக்குவாதம் என பல முக பாவனைகளை நன்றாக வெளிப்படுத்தி உள்ளார்.


சைக்கோ பைக் வீரர் ஆக  பார்ரி கியோகான் ஆக்ரோஷமான நடிப்பு

ஒளிப்பதிவு பிரம்மாண்டம்.சேசிங் காட்சிகளில் கேமரா விளையாடி இருக்கிறது.

எடிட்டிங் ,பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் அருமை.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் பார்ட் லேட்டன்


சபாஷ்  டைரக்டர்

1 நாயகன்,நாயகி,வில்லன் ,ஒரு சைக்கோ,நாயகனின் காதலி  மொத்தம். ஐந்து  கேரக்டர்கள் டிசைனையும் அருமையாக வடிவமைத்த விதம்

2 Thor பட நாயகன் ,Hulk பட நாயகன் ,Sword Fish பட நாயகி  என பிரபலஙகளை முக்கியக்கேரக்டர்களில் நடிக்க வைத்த ஐடியா

3 நாயகன் ,வில்லன் ,நாயகி மூவரின் வாழ்க்கையையும் ஒரு புள்ளியில் இணைத்த விதம் நம்பகத்தன்மையுடன் காட்டிய விதம்.

4 தமிழ்ப்படம் போல 140 நிமிடங்கள் ஓடும் படம் என்பதால் சாவகாசமாய் கதை சொன்ன விதம் அருமை.

5 வில்லன் ,நாயகி இருவரும் யோகா கிளாஸ் போவதும் ,மூச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றிப்பேசுவதும் அருமை.

  ரசித்த  வசனங்கள் 

1 பணத்துலயே குறியா இருக்காரு?அதான் பணக்காரரா இருக்காரு.

2 ஸ்மூதி பிடிக்காதா?

அந்த வார்த்தையே பிடிக்காது

3 கோதாவில் இறங்கி ட்டா உயிராவது ?மயிராவது?

4 சந்தோஷத்தைக்காசு கொடுத்து வாங்க முடியாது.

யாரோ தப்பா சொல்லிக்கொடுத்திருக்காங்க

5 லைப்ல எவ்ளோ சம்பாதிச்சாலும் போதாது.

6  யோகா கத்துக்கறியா?யாரையாவது கரெக்ட் பண்ணவா?உடம்பை Fit ஆக வைத்துக்கொள்ளவா?

7 சின்ன வயசுல இருந்தே பிரச்சனைல வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் பர்பெக்சனா இருப்பாங்க.



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகன் ,வில்லன் இருவரும் ஒரே காரில் பயணம் பண்ணும் காட்சி ஏற்கனவே டாஸ்க் என்னும் வெப் சீரிசில் (HBO) வந்தது தான்.பல காட்சிகள் இதிலிருந்து உருவி இருக்கிறார்கள்.

2 நாயகியை 53 வயதானவர் என்று மட்டம் தட்டும் காட்சி தேவையே இல்லை .சீனியர் ஆபீசரை அதுவும் ஒரு லேடியை சீண்டுவது ஆபத்து. என்பது. தெரியாது.ப்

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மெதுவாகச்செல்லும் கிளாசிக் க்ரைம் திரில்லர் மூவி.ரசிக்கலாம் . ரேட்டிங் 3/5 


Crime 101
Theatrical release poster
Directed byBart Layton
Screenplay byBart Layton
Based onCrime 101
by Don Winslow
Produced by
Starring
CinematographyErik Wilson
Edited by
  • Jacob Secher Schulsinger
  • Julian Hart
Music byBlanck Mass
Production
companies
Distributed by
Release dates
  • January 28, 2026 (London)
  • February 13, 2026 (United States)
Running time
140 minutes[2]
Countries
  • United Kingdom
  • United States
LanguageEnglish
Budget$90 million[3]
Box office$72.5 million[4][5]