Sunday, September 08, 2024

ORU YATHRAMOZHI ( 1997) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ யூ ட்யூப்

         

              மோகன் லால் நடித்த படங்களில் அண்டர் ரேட்டட் மூவி என  இதை சொல்லலாம் . சிவாஜி கணேசன் , திலகன்  காம்ப்போ வில் வந்த   படம் தமிழில் 2017 ல்  பயணத்தின் மொழி   என்ற  டைட்டிலில்  டப்   செய்யப்பட்டது . தமிழ் வெர்சன் யு டியூபில் கிடைக்கவில்லை இயக்குனர் பிரதாப் போத்தன் + இளையராஜா  காம்பினேஷனில்  இப்படி ஒரு படம் வந்தது  பலருக்கும்  தெரியாது .  .கதை  - பிரியதர்சன . திரைக்கதை , வசனம்  ஜான் பால் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன்   தன அம்மாவுடன்  வசித்து வருபவன் . அப்பா எங்கேயோ ஓடிப்போய் விட்டார் . சின்ன வயதில் இருந்தே  அப்பா  இல்லாதவன் அப்பா பெயர்  தெரியாதவன் என எல்லாரும் கிண்டல் செய்ததால் அப்பா மீது செமக்கடுப்பாக இருக்கிறான் . அப்பாவைத் தேடிக்கண்டுபிடித்து கொலை செய்வதே அவனது லட்சியமாக இருக்கிறது 


அப்போது அந்த ஊருக்கு ஒரு கவர்மெண்ட் காண்ட்ராக்டர்  வருகிறார் . அவருடன் நாயகனுக்கு ஒரு நெருக்கமான நட்பு உருவாகிறது .ஒரு கட்டத்தில்  அவர் தான் நாயகனின் அப்பா என்பது நமக்குத்தெரிய வருகிறது , ஆனால் நாயகனுக்கு  அது தெரியாது . நாயகனின் அம்மா  நீண்ட வருட இடைவெளிக்குப்பின்  தன கணவனைப்பார்க்கிறாள் . பார்த்த சந்தோஷத்தை விட  இவர் தான் அப்பா என்பது  தன மகனுக்குத்தெரிய  வந்தால்  கொலை நடக்கும் , மகன் ஜெயிலுக்குப்போவான்.இந்தக்கவலையாலேயே  அம்மா  உயிர் இழக்கிறாள் 


க்ளைமாக்சில்  நாயகனுக்கு உண்மை  தெரிய  வரும்போது  என்ன முடிவு எடுத்தான் என்பதே மீதிக்கதை  


நாயகன் ஆக மோகன் லால் . வழக்கம் போல அமைதியான நடிப்பு .அவருக்கு ஜோடியாக ரஞ்சிதா . ஆச்சரியம் ஊட்டும்  விதமாக கிளாமர் இல்லாத கண்ணிய ரஞ்சிதா . அப்பாவாக சிவாஜி. பூப்பறிக்க வருகிறோம்  கெட்டப்பில்  வருகிறார் . ஓவர் ஆக்டிங்க் இல்லாமல் கச்சிதமான நடிப்பு நாயகனின் அம்மாவின் காதலன் ஆக  நெடுமுடி வேணு  அருமையான நடிப்பு .

நாயகனின் அம்மா   ஆக  பாரதி விஷ்ணுவர்தன் சரோஜா தேவி சாயலில்  இருக்கிறார் . உருக்கமான நடிப்பு . வில்லன் வேண்டுமே  என்பதற்காக பிரகாஷ் ராஜ் . ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அப்லாஸ்  வாங்கும் நடிப்பு திலகன் உடையது 

இசை இளையராஜா  6  பாடல்களில்  3  ஹிட்டு . பின்னணி இசை வழக்கம் போல அருமை முத்துக்குமாரின் ஒளிப்பதிவில்  காட்சிகள் கண்ணுக்குக்குளுமை  எடிட்டிங்க் பி லெனின் , வி டி  விஜயன் .இரண்டேகால் மணி நேரம் படம் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்


1இளையராஜாவின் பின்னணி இசை பல இடங்களில் கதைக்கு ஜீவன் சேர்க்கிறது . குறிப்பாக நெடுமுடி வேணு - சிவாஜி சந்திப்பின்போது  போட்ட பிஜிஎம் அடிபொலி 


2  மோகன் லால் , ரஞ்சிதா , சிவாஜி , நெடுமுடி வேணு  நால்வரின் நடிப்பும் பிரமாதம் 

3  க்ளைமாக்ஸ்   காட்சியில் திலகன் - சிவாஜி சந்திப்புக்காட்சியும் , அதில் வரும் டிவிஸ்ட்டும் .. அந்தக்காட்சில் திலகனின் நடிப்பு அட்டகாசம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1 மஞ்சோழும்  ராத்திரி  மாஞ்ச்சு  ( டைட்டில்சாங்க் )


2    தை  மாவின்  தணலில்  ( டூயட் சாங்க் ) 

3  காக்காலக்கண்ணம்மா கண் விழிச்சுப்பாரம்மா  கன்னி மனம் (சிவாஜி + மோகன் லால் காம்போ சாங்க் )


  ரசித்த  வசனங்கள் 


1  நான்  அந்த வழியாத்தான் வண்டில போறேன் , நீ  வந்தா  உன்னை அங்கே இறக்கி விட்டுடறேன் 


 இறக்கி   விட  நான் என்ன சரக்கா? 


2   சிவாஜி பஞ்ச் -  இந்த உலக மேப்பில்  எத்தனை இடம் உண்டோ அங்கே எல்லாம்  தடம் பதிச்சவன் நான் , என் கிட்டே  உன் வேலையை வெச்சுக்காத 


3   எனக்கு எதிரிகள்  மட்டும் தான் இருக்காங்க, அதனால என்னைப்பற்றிக்கவலைபபடாதீங்க. நீங்க தான் அசலூர்க்காரர். நீங்க தான் ஜாக்கிரதையாயிருக்கணும் 


 நான் உனக்குக்கவசம் மாட்டலாம்னு பார்த்தா  அதே  கவசத்தை எனக்கு மாட்ட நினைக்கறே? சபாஷ் 


4  வித்தை இல்லாத மனுஷன் செத்த பொணத்துக்கு சமம் 

5  பெற்ற அப்பாவை கொன்ற மகனை பிரசவித்த  மகாபாவி என்ற பெயர் எனக்குக்கிடைக்கணுமா? 


6  நான்  செஞ்ச  பாவம் சிறுகதையா முடிஞ்சுடும்  என நினைச்சேன் , ஆனா தொடர்கதையா தொடரும்னு நினைக்கலை 

7  உண்மை தெரியும்போது அதை தைரியமா நேரில் சந்திக்க துணிவு வேண்டும் 

8காரியத்தை நாம செய்யறோ ம் , காரணத்தை ஆண்டவன்   தீர்மானிக்கிறான் , சில காரியங்கள் நன்மையில் முடியும் , சில காரியங்கள் தீமையில் முடியும் 3

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   வில்லன் பிரகாஷ் ராஜ் ஒரு பெண்ணை  ரேப் செய்ய அவள் தனிமையில் இருக்கும்போது அவள் வீட்டுக்குள் நுழைகிறான் . அருகில் அபயக்குரல் கேட்டு நாயகன் அங்கே  வந்து பெண்ணைக்காப்பாற்ற  முயலாமல்  உள்  பக்கம் தாழ் போட்ட ரூம் கதவின் வெளிப்பக்க தாழ்  போடுகிறான் . இது எதுக்கு ?  ஊர் மக்களை வர வைத்து வில்லனை மாட்ட வைக்கவா? அதுக்குள்ளே  அவன்  ரேப் பண்ணிடமாட்டானா? ஆனா  வில்லன் அப்படி செய்யல . அவ கிட்டே  மன்னிப்பு கேட்டுட்டு கிளம்பறான் . என்ன விதமான காட்சி இது ? 

2   நாயகனின் அம்மா    தன கணவனின் போட்டோ வைத் தன் மகனிடம் காட்டி  இவர் தான் உன் அப்பா என அடையாளம் காட்ட மாட்டாரா?  அல்லது நாயகன் தான்  தன அப்பா  போட்டோ  காட்டு என அம்மாவிடம் கேட்க மாட்டாரா? இந்த இரண்டில் ஒன்று நிகழ்ந்திருந்தால்  இரண்டு மணி  நேரம் மிச்சம் ஆகி இருக்கும் 


3   இன்னொருவரின் மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத போது  நாயகன் அங்கே வந்து அவருக்கு கசாயம் வைத்துத்தருவது ஓகே , அதற்கு கதவை எதுக்கு சாத்தி வைக்கணும் ? அந்தப்பெண்ணின் கணவன்  போலீஸ் கூட்டத்துடன் வந்து நாயகன் மீது  பழி சுமத்துகிறார் , அந்தக்காட்சி  டிராமா சீன போல இருக்கு 

4  நாயகனின் அம்மா  தன கணவன் கூட ஜோடியாக இருக்கும் போட்டோவை  தன வீட்டில் பெட்டியில் தான் வைத்திருக்கிறார் . அதைக்கூடநாயகனால் கண்டுபிடிக்க முடியவில்லை? 

5  வாய்ப்பிருந்தும் சிவாஜி  தன்  மனைவியை சந்திக்க , பாவ மன்னிப்புக்கேட்க வீட்டுக்குப்போகாதது எதனால் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 30 நிமிடம்தான் மொத்தக்கதையின் சாராம்சம் . ஆனால்  இரண்டேகால் மணி நேரம் பொறுமை தேவை . பெண்களுக்குப்பிடிக்கும், ரேட்டிங் 2.75 / 5 


Oru Yathramozhi
Poster
Directed byPrathap Pothan
Screenplay byJohn Paul
Story byPriyadarshan
Produced byV. B. K. Menon
StarringMohanlal
Sivaji Ganeshan
CinematographyMuthukumar
Edited byB. Lenin
V. T. Vijayan
Music byIlaiyaraaja
Production
company
Anugraha Cine Arts
Distributed byAnugraha Release
Release date
  • 13 September 1997
CountryIndia
LanguageMalayalam

Saturday, September 07, 2024

SWAKARYAM SAMBHAVA BAHULAM -ஸ்வகார்யம் சம்பவ பாகூலம் (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

             


         31/5/2024  அன்று திரை அரங்குகளில் வெளியானபோது  " த்ரிஷ்யம்" பாதிப்பில்  உருவான படம் என்ற விமர்சனங்களோடு  படம் சுமாராகத்தான் போனது . ஆனால்  என் பார்வையில் இது நல்ல படம் .முதல்  பாதி    மெலோ  டிராமாவாகவும் , பின் பாதி க்ரைம் டிராமா போலவும் நகரும் ஒரு பீல் குட்  மூவி .இப்போது அமேசான் பிரைம்  ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - நாயகன் 50 வயதான சிங்கிள் டாடி . இவருக்கு ஒரு அம்மா , இரு மகள்கள்  உண்டு . மனநலக்காப் பகத்தில்  பணி புரிகிறார் . அங்கேயே பணி  புரியும்  சக ஊழியரைக்காதலிக்கிறார் . அந்தப்பெண்ணுக்கும் இவர் மீது வெளிப்படுத்தாத காதல் உண்டு .இருவருக்குமான  நட்பு  ஒரு கவிதை போல  சொல்லப்படுகிறது 



சம்பவம் 2  - நாயகனின்  இரண்டாவது மகள் டீன் ஏஜ்  கேர்ள் .பள்ளியில் படிக்கிறார் . அவளை  எப்போதும்  சுற்றி சுற்றி வரும்  ஒரு மாணவன் , அவன் கூட இருக்கும்  அவனது நண்பன் .இவளுக்கு தன்னை சுற்றி வரும் மாணவனை விட அவன் கூட இருக்கும் நண்பனைப்பிடித்து விடுகிறது . இருவரும் காதலிக்கிறார்கள் . வரம்பு மீறாத கண்ணியக் காதலாக வளர்கிறது 



சம்பவம் 3  - நாயகனின்  முதல்  மகள்  திருமணம் ஆனவள் .  காதல் திருமணம் புரிந்தவள் . கணவன் ஒரு வெட்டாபிஸ் , சரக்கு பார்ட்டி . அவ்வப்போது மனைவியை மிரட்டி மாமனார் ,மூலம் காசு வசூலிப்பவன் 


மேலே சொன்ன 3  சம்பவங்களை  வைத்து முதல் பாதி மேலோ டிராமாவாக நகர்கிறது 


 டீன் ஏஜ் கேர்ள்-ன்  ட்யூஷன் மாஸ்டர்  ஒரு நாள் அவளை பாலியல் வன் கொடுமை செய்து விடுகிறான் .விபரம் அறிந்து நாயகன் வில்லனைத்தேடிப்போனபோது ஆள் ஸ்பாட்டிலில்லை எஸ்கேப் 


முதல் மகளை   அவளது புருஷன் பணம் கேட்டு அடித்தபோது அவர்களது மகன் அந்தக்காட்சியை வீடியோ எடுத்து தாத்தாவான   நாயகனுக்கு அனுப்பி விடுகிறான் 


இந்த சம்பவத்துக்குப்பின் மகளின் புருசனைக்காணவில்லை .மகள் போலீசில்  புகார் தருகிறாள் 


நாயகன் தான்  அந்த இருவரையும் கொலை செய்தானா? போலீசில் இருந்து எப்படி  தப்பித்தான்  என்பது மீதி திரைக்கதை 

நாயகன் அக்கா ஜியோ பேபி அருமையான  அண்டர்ப்பிளே   ஆக்டிங்க் .விருதுக்குரிய நடிப்பு . மிக யதார்த்தம். முதல் மகளாக அண்ணு ஆண்டனி  பொலிவான , குடும்பப்பாங்கான தோற்றம் ..இரண்டவது மகளாக ஆர் ஜெ அஞ்சலி அழகிய முகம் பாந்தமான நடிப்பு .  நாயகி ஆக  ஷெல்லி  நல்ல குணச்சித்திர நடிப்பு . முதல் மகளின் கணவன் ஆக சஜின் செருகையில்  சுமாரான நடிப்பு 

நாயகன் அக்கா ஜியோ பேபி அருமையான  அண்டர்ப்பிளே   ஆக்டிங்க் .விருதுக்குரிய நடிப்பு . மிக யதார்த்தம். முதல் மகளாக அண்ணு ஆண்டனி  பொலிவான , குடும்பப்பாங்கான தோற்றம் ..இரண்டவது மகளாக ஆர் ஜெ அஞ்சலி அழகிய முகம் பாந்தமான நடிப்பு .  நாயகி ஆக  ஷெல்லி  நல்ல குணச்சித்திர நடிப்பு . முதல் மகளின் கணவன் ஆக சஜின் செருகையில்  சுமாரான நடிப்பு 


 நசீர்  பதருதீன்   என்பவர்தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  தயாரித்து  இருக்கிறார் 


சித்தார்த்தா பிரதீப் தான் இசை . ஒரு பாடல் செம மெலோடி . பின்னணி இசை கச்சிதம் ராகேஷ் தரேன் தான் ஒளிப்பதிவு . இரு நாயகிகளை அழகாக காட்டிய விதம் குட்  நீரஜ் குமார் டிட்டிங்கில் 2  மணி  நேரம் படம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்

1  முதல் காட்சியிலேயே நாயகனை போலீஸ்  விசாரிப்பது போல  தொடங்கி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விதம் 


2  படத்தில் வரும் மூன்று  பெண் கதாபாத்திரங்களை கண்ணியமான உடையில் , குடும்பப்பாங்காகக்காட்டிய விதம்  


3  நாயகனின்  வீட்டு நிலவறையில்  அடைத்து வைத்திருப்பது  ட்யூஷன்   மாஸ்ட்ரையா?  மாப்பிள்ளையையா?  என்ற சஸ்பென்ஸை  காப்பாற்றியது 


4 கத்தியின்றி , ரத்தம் இன்றி  வன்முறை இன்றி இப்படத்தின்  திரைக்கதையை அமைத்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1  ஒரு காதலனுக்கு வேண்டிய முக்கியமான  இரண்டாவது தகுதி என்ன தெரியுமா? தைரியம் 


ஓஹோ , அப்போ  முக்கியமான  முதலாவது தகுதி என்ன?


அதான் உன் ஆள் வர ரூட்ல பல்லு  கூட  துலக்காம  காலங்காத்தால வந்து நிக்கறியே , , இதுதான் 

  2  ஒரு பொண்ணு  தன அப்பா கிட்டே அல்லாது வேற யா கிட்டே ஆறுதல்  வார்த்தை கேட்டுக்க முடியும் ? 


3   எல்லாருக்கும் கஷ்டம் வரும்,ஆனா  எனக்கு மட்டும் லாரி பிடிச்சு  ஒரு லோடு  நிறைய வரும் 


4   போலீஸ் ஜீப் ல ஏ சி இல்லையா?  பிணம் கொண்டு போகும் ம் அமரர் ஊர்தி ல கூட ஏ சி இருக்கு 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 போலீஸ் ஸ்டேஷனில் யார் புகார் கொடுத்தாலும்   FIR பதிவு செய்யும் போது  அவங்க போன் நெம்பர் வாங்கிக்குவாங்க , ஆனால் போலீஸ் புகார் கொடுத்த பெண்ணின் அப்பாவிடம் வந்து விசாரித்து வாங்கிசெல்கின்றனர் 


2  ட்யூஷன் மாஸ்டரின்  கேரக்டர்  டிசைன் சரி இல்லை .மாணவிகளிடம்  எரிந்து விழுகின்ற கோபக்காரராகக்காட்டி விட்டு பெண் சபலம் உ ள்ளவராகவும் காட்டி இருப்பது எதனால் ? அப்படிப்பட்ட  சபல உள்ளவன்  பெண்களிடம் சிரித்துப்பேசும்  கேரக்ட்டராகத்தானே  இருப்பான் ? 


3  காணாமல் போன  ட்யூஷன் மாஸ்டரை  நாயகன் கண்டுபிடித்தது எப்படி? வீட்டின் நிலவறை  வரை கொண்டு வந்தது எப்படி? என்பது விஷூவலாகக்காட்டப்படவில்லை 


4   நாயகன்  நாயகியை  சிஸ்டர் ,சிஸ்டர்   என்று தான் படம் முழுக்க அழைக்கிறார் ( நர்ஸ்)  பெயர் சொல்லி ஒரு காட்சி யில் கூட  அழைக்கவில்லை . ஆனால் காதலிக்கிறார் .முரண்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எல்லோருக்கும் படம் பிடிக்காது . மிக மெதுவாககாட்சிகள் நகரும் . பெண்கள் ,பொறுமைசாலிகள்  பார்க்கலாம் . ரேட்டிங்க்  2. 75 / 5

Thursday, September 05, 2024

THE GOAT(2024) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)

       

              ஸ்பாய்லர்  அலெர்ட்


  தீவிரவாதத்தின் எதிர்ப்பு சிறப்புப்படையின்  தலைவன் ஆக வில்லன் முதலில் இருந்தான் .பின்  பண ஆசையால் துரோகி ஆக  மாறியதால் அந்த பதவிக்கு வேறு  ஒருவர்  வருகிறார் .அவர் தலைமையின் கீழே தான்  நாயகன்  ஸ்பெஷல் ஆண்ட்டி டெர்ரரிசம் ஸ்குவாடில்  பணி ஆற்றுகிறார் .நாயகன் தனது  டீம்  உடன் சேர்ந்து  தீவிரவாதிகளின் ஆயுதம் ஆன யுரேனியத்தைக்கைப்பற்றும்போது  எதிர்பாராதவிதமாக வில்லனின் மனைவி , மற்றும் மகன் இறக்கிறார்கள் 


இதனால்  செம கடுப்பான   வில்லன் நாயகனின்  5 வயது மகனைக்கடத்திக்கொண்டு போய் அவனது கஸ்டடியில் வளர்க்கிறான் . அந்த விசயம் நாயகனுக்குத்தெரியாது . மகன் இறந்து விட்டதாக நாயகன் நினைக்கிறான் 



15  வருடங்களுக்குப்பின்  வெளிநாடு   டூர் போகும் நாயகன் அங்கே  தன மகனைப்பார்க்கிறான் . வில்லனின் வளர்ப்பு மகன் என்பது தெரியாமல் அவனை தன்னுடன் அழைத்து வருகிறான் .இதற்குப்பின் நடக்கும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை 


 நாயகன்  மற்றும் மகன் ஆகிய  இரு வேடங்களில் விஜய் . மகன் இறந்ததாக நினைத்துக்கதறும் காடசியிலும் , என் மகன் எங்கே? என மனைவி கேட்கும்போது உண்மையை சொல்லமுடியாமல் கலங்கும் காடசியிலும் ,   விஜய்  பிரமாதமாக நடித்திருக்கிறார் 


நாயகனின்  டீமில் உடன் பனி ஆற்றுபவர்களாக பிரசாந்த் , அஜ்மல் , பிரபுதே வா   ஆகிய மூவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள் . நாயகனின்   ஹையர் ஆபீசர்  ஆக   ஜெயராம்  உருக்கமான நடிப்பு .மனைவி ஆக சினேகா  அதிக வேலை இல்லை .. மகன்  விஜய்க்கு ஜோடியூயாக  மீனாட்சி சவுத்ரி ஒரே ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடுகிறார் 


வில்லன் ஆக  மைக்   மோகன் , இவரது  கேரக்டர்  வலுவாக  எழுதப்படவில்லை . நாயகனின்  ,மகனாக  வரும் இன்னொரு விஜய் கேரக்டர்  ஏ ஐ  தொழில் நுட்பத்தில்  உருவாக்கி இருப்பதால் கொஞ்ச்ம பிசிறடிக்கிறது .அவரது வில்லன் நடிப்பு எடுபடவில்லை .பிரியமுடன் படத்தில் அவரது வில்லனிசம் நன்றாக இருந்தது 


 யோகிபாபு சில காட் சிகளில் தான் வருகிறார். ஓரளவு சிரிக்க வைக்கிறார் , யோகிபாபு சில காட் சிகளில் தான் வருகிறார். ஓரளவு சிரிக்க வைக்கிறார் .சிவகார்த்திகேயன்  ஒரு கேமியோ ரோலில் வருகிறார் 


இசை  யவன் சங்கர்  ராஜா . பாடல்கள் சுமார் ரகம் தான் .பிஜிஎம்  பட்டாசு சித்தார்த் துணியின்  ஒளிப்பதிவில்  சேசிங்க் காட்சிகள்   ஆங்கிலப்படங்கள் போல இ ருக்கின்றன .


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் வெங்கட் பிரபு 


சபாஷ்  டைரக்டர்

1   ஓப்பனிங்க் சீனில் கேப்டன் விஜயகாந்த்   ஏ ஐ டெக்னாலஜியில் இளமையாகத்தோன்றும் காட்சி செம 

2 விசில் போடு பாடல் காட்சியில்   விஜய் , பிரபு தேவா , பிரசாந்த்  மூவரின் நடனம் கலக்கல்ஸ் ரகம் 

3   நாயகன் - வில்லன்  சண்டைக்காட்சி  முடிந்தபின் வரும் இண்ட்டர்வல் பிளாக் சீன் 


  ரசித்த  வசனங்கள் 

1   யாருக்குமே   தெரியாம  யுரேனியத்தைக்கடத்திட்டு வாங்கன்னா ஒரு ரயிலையே டேமேஜ் பண்ணிட்டு வந்திருக்கீங்க? 


2      இவன்  ஒருத்தன்  சின்ன வயசுல இருந்து ஓவர் ஆக்டிங் பண்றதை நிறுத்தவே மாட்டே ங்கறான் 


3   என்னங்க , போன்ல ஒரு பொண்ணோட  வாய்ஸ்  கேட்குது , என்ன பண்றீங்க? 


இனிமே தான் பண்ணனும் 


4 ஹலோ , எங்கே இருக்கீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க? 


 வாய்ல ...


 வாட் ?


 வாயு னு சொல்ல வந்தேன் 

5  டேய , ஏதாவது பேசுடா 


 நாம இவ்ளோ பேசுனதாலதான் மாட்டி இருக்கோம் 


6    உன்னை உயிரோட எப்படி காப்பாத்தி இருக்கலாம்னு 1000 வழிகளில்  யோசி ச்சேன் , , ஆனா நீ உயிரோட இருந்தும்   ஒரு வாட்டி கூட யோசிக்கலையே? 


7    அவன் ரொம்ப டேஞ்சர்  ஆனா ஆளுப்பா 


 உன் அப்பா எப்பேர்ப்பட்ட ஆளுன்னு தெரியாம பேசிட்டு இருக்கே 



8   நான்  சொன்னபடி செஞ்சா  உன் மகனைத்தூக்கிடலாம் 


அவனை நான் தூக்கி அரை மணி நேரம் ஆகிடுச்சு 

9  வயசாகிடுச்சேன்னு யோசிக்கறீங்களா? 


 வயசானா  என்னய்யா? சிங்கம் எப்போதும்  சிங்கம் தான் , காடு மாறினாலும், அதன் போராடும் குணம் மாறாது 


10 ஹலோ , நான் காந்தி பேசறேன் , ஏங்க யாரு? 


 ,  சுபாஷ்  சந்திரபோஸ் நேதாஜி   சுபாஷ்  சந்திரபோஸ்


என்னது? 


 ஆமா, நீ  காந்தியா இருக்கும்போது   நான் நேதாஜி   சுபாஷ்  சந்திரபோஸ்  ஆக இருக்கக்கூடாதா? 


11  செல் போன் திருடன் தானே? நீ?  சி சி டி வி யைப்பார்த்தா  எல்லா  உண்மையும் தெரிஞ்சுடும் 


 நான் என்ன சப்பையா? முதல்ல  ஆப் பண்றதே சி சி டி வி யைதான் 


12   என்னடா? டிவிஸ்ட் பண்றயா?  நீ  பிறந்தது ல இருந்தே உன் அப்பா என் பிரெண்டு டா, அவனை எனக்கு நல்லத்தெரியும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகனின்  மகன்  அடையாளம்  தெரியாத அளவு கருகிய நிலையில் இறந்த  உடலாக  கண்டெடுக்கப்பட்டபோது   டி என் ஏ  டெஸ்ட் மூலம்  அது தன்  மகன் தானா? என்பதை செக் பண்ணி இருக்கலாமே? 

2     எஸ் ஏ சந்திர சேகர் இயக்கி  கேப்ட ன் விஜயகாந்த்   நடித்த ராஜதுரை (1993) படத்தின் கதை யிலிருந்து இன்ஸபிரேஷன்  ஆகித்தான்  திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் 


3  துப்பாக்கி படத்தில் வரும் இண்ட்டர்வல் பிளாக் சீன ஆன " ஐ ஆம் வெயிட்டிங்க் " டயலாக் சீன  குட் தான் , ஆனால் அதே  டயலாக்கை இன்னும் எத்தனை படத்தில் வைப்பாங்க? 


4  மகன் விஜய் தன பயலாஜிக்கல் பாதர் யார் என்று தெரிந்தபின்னும் வளர்ப்புத்தந்தைக்கு உதவியாகஇருக்க  வலுவான காரணங்கள் இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் = ஒரு லிப் லாக் சீன உண்டு . வன்முறைக்காட்சி உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - THE GOAT(2024) -விஜய் ரசிகர்கள் கொண்டாடுவது போல துப்பாக்கி , கில்லி ரேஞ்ச்சுக்கு எல்லாம் இல்லை , அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்வது போல பீஸ்ட் , பிகில் அளவு டப்பாவும் இல்லை . பார்க்கலாம் . விகடன் மார்க் 42 , ரேட்டிங் 2.75 / 5

Wednesday, September 04, 2024

GRRR (2024) - மலையாளம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா) @ ( டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் )

                        


2018 ஆம் ஆண்டு கேரளா - திருவனந்தபுரம்   விலங்கியல் பூங்காவில்  ஒரு ஆள்  எட்டிக்குதித்து விட்டான் .சுற்றிலும் வேடிக்கை  பார்த்துக்கொண்டு  இருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பி  விலங்கை உசுப்பி விட்டதால் அது அந்த ஆளைத்தாக்கிக்கொன்று விட்டது . அந்தக்காட்சி வைரல் ஆனது . அந்த ஒன் லைன்  செய்தியை வைத்து ஒரு காமெடி டிராமா வாக திரைக்கதை அமைத்து  இருக்கிறார்கள் . தியேட்டர்களில்   ரிலீஸ்  ஆன போது பெரும் எதிர்பார்ப்புடன் வந்தாலும்  வசூல் ரீதியாக சுமாராகத்தான் போனது . ஆனால்  விமர்சன ரீதியாக  மீடியாக்கள்  பாராட்டப்பெற்ரது  14/6/2024  அன்று  திரை அரங்குகளில் வெளியான இப்படம்  இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்  ல தமிழ் டப்பிங்க்லயும் கிடைக்குது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு பெரிய அரசியல் கட்சித்தலைவரின் மகள் . வேலை வெட்டி இல்லாத ஒரு விளங்காத   ஆளைக்காதலிக்கிறாள் . இருவரும்  ஓடிப்போவதாக பிளான். அவங்க திட்டப்படி  சம்பவம் நடக்கும்  நாள்  அன்று  நாயகன்  நாயகிக்கு ஃபோன் பண்ணியும்  நாயகி அட்டெண்ட் பண்ணவே  இல்லை . இதனால்  கடுப்பான  நாயகன்  சரக்கைப்போட்டு விட்டு  ஓவர் மப்பில் ஒரு ஜூவில் சிங்கம் இருக்கும்   குகை அருகே  சென்று  விடுகிறான் 


அந்த  ஜூவில்  விலங்குகளூக்கு  இரை கொடுத்து கண்காணிக்கும் பணியில் உள்ள ஆபீசர்  மேல் ஆல்ரெடி ஒரு புகார் . அதாவது சிங்கத்துக்கு  தினசரி  தர வேண்டிய இறைச்சியில் பாதியை வேலையாட்கள்  ஆட்டையைப்போட்டு விடுகிறார்கள் . அதை மேலிடத்துக்கு ரிப்போர்ட்  செய்யத்தவறியதால் அவர்  மீது  ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கு 


அந்த ஆபீசரின்  மனைவியின்   தம்பிக்கு  நாயகியைப்பெண்  பார்க்க  போகிறார்கள் . அந்த  சம்பவத்தால்  தான்  நாயகன் ஃபோன்  செய்த போது  நாயகியால்  எடுக்க முடியவில்லை 


நாயகனை சிங்கத்திடம் இருந்து ஆபீசர்  காப்பாற்றினாரா?  நாயகன் - நாயகி  காதல்  நிறைவேறியதா? என்பதை  காமெடியாக சொல்ல முயன்று  இருக்கிறார்கள் 


 நாயகன்  ஆக குஞ்சாக்காபோபன்  ரொம்ப  இயல்பா  நடித்திருக்கிறார் . இது  ஒரு  காமெடிப்படம்  என்பதாலும் , அவர்  குடிகாரன்  என்பதாலும்  சிங்கத்திடம்  அவர்  மாட்டிக்கொள்வாரோ ? என்ற  பதை பதைப்பு நமக்கு ஏற்பட வில்லை 


 ஜூ  ஆஃபீசர்  ஆக  சுராஜ்  வெஞ்சாரமூடு  கச்சிதம் . அவரது  மனைவியாக  வரும்  ஸ்ருதி  நல்ல  அழகு  ஆனால்  அதீத  ஒப்பனை . இருந்தலும்  ரசிக்க  முடிகிறது 


 நாயகி  ஆக  அனகா  மரூத்ரா  இயல்பாக  நடித்திருக்கிறார் 


 டான்  வின்செண்ட்  ,  கைலாஷ் மேனன் , டோனி   ஆகிய மூவரும் இசை . . பின்னணி  இசையில்  இன்னும்  கவனம்  செலுத்தி  இருக்கலாம் 


ஒளிப்பதிவு  ஜெயிஷ் நாயர் . அழகான  படப்பிடிப்பு விவேக்  ஹர்சன்  எடிட்டிங்கில் படம் 2  மணி  நேரம்  ஓடுகிறது 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஜே கே 



சபாஷ்  டைரக்டர்


1   பத்திரிக்கை  செய்தியை  ஒன் லைனாக  வைத்து  காமெடியாக  திரைக்கதை  அமைத்த  சாமார்த்தியம் 


2   நாயகனின்  நண்பன்  மீடியாக்களீடம்  மாறி  மாறி  ஒரே  விஷயத்தை  திருப்பி  திருப்பி  வெவ்வேறு  மாடுலேஷனில்  சொல்வது 


3   யாரும்  சத்தம்  போடாதீங்க  என  ஃபயர்  சர்வீஸ்  ஆட்கள்   ஸ்பீக்கரில்  சத்தமாக  சொல்வதும்    உடனே  மக்கள்  ஆரவாரமாக   கை  தட்டுவதும்  நுட்பமான  காமெடி 


4   நாயகியைப்பெண்  பார்க்க  வரும்  மாப்பிள்ளைக்கு டேக்கா  கொடுத்து  விட்டு  நாயகி  தப்பிக்கும் காட்சி  கலக்கல் 


5  சிங்கத்துக்கு  மயக்க  ஓசி  போட  வேண்டிய  டாக்டர்  ஒரு  குவாட்டர் அடித்தால் தான்  ஸ்டெடியாக வேலை  செய்வார்  என்பதும்  அந்த  ஜூ  இன்சார்ஜ் லேடி  அலறுவதும்  காமெடி 



  ரசித்த  வசனங்கள் 


1   சாகனும்னா   விஷம்  குடிச்சு சாக வேண்டியதுதானே? ஏன்  என் உயிரை எடுக்கறே? 


 பலசாலி கிட்டே  மோதி சாகறவன்  தான்  வீரன் 


2   ஒருவழியா  மருந்து கிடைச்சிடுச்சு , ஆனா  எக்ஸ்பயரி டேட் முடிஞ்ச்ட்டதா  இருக்கே? 


 ஒண்ணும்  பிரச்சனை இல்லை ,. மனுசனுக்கா தரப்போறோம் ? விலங்குக்குத்தானே? அதுக்குத்தெரியவா  போகுது ? 


3  கள்ளன்  சிலையை  உடைக்கனும் 


 அது  முடியாது , கள்ளன் ஜெனரல்


கள்ளன் ல கூட  ஜெனரல் கள்ளன்  இருக்கா? \


 அய்யோ அது மேஜர்  கள்ளன்  


4   ஒரு  அமைதியான  கடல்  ஒரு  போராளியை  உருவாக்க  முடியாது . புயல்  உடன்  கூடிய கடல் தான்  மாலுமியை வீரன்  ஆக்கும் 


5  மாமா  செத்த  பின்  அவரோட  கவர்மெண்ட்  ஜாப்  உனக்குக்கிடைச்சா  வேண்டாம்னா  சொல்லப்போறே? 


6   நீ  சரக்கு அடிச்சுட்டு என்ன வேலை செஞ்சே?ன்னு உனக்கு நினைவு இருக்கா? 


 இல்லை 


 அட்லீஸ்ட்  சரக்கு  பேராவது  நினைவு இருக்கா? 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  சிங்கத்திடம்  மாட்டுவது , ஆபீசர்  அவனைக்காப்பற்றுவது  இவை தான்  படத்தின்  மெயின் ஆன காட்சிகள் , ஆனால்  அந்தக்காட்சியில்   பெரிய காமெடி  உண்டாகவில்லை 


2   ஜூவில்  இருந்து  நாயகன்  தப்பிய  பிறகு  40  நிமிடங்கள்  படத்தை  இழுத்தது  ஓவர் 


3    நாயகியின்  அப்பா  க்ளைமாக்சில்  மனம்  மாற  காரணமே  சொல்லப்படவில்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   தியேட்டரில்  பார்க்கும்  அளவு  ஒர்த் இல்லை . டி வி ல  போட்டா  பார்க்கலாம் .  ரேட்டிங்  2.25 / 5 

Tuesday, September 03, 2024

வீராயி மக்கள் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா )

                   


     மாயாண்டி  குடும்பத்தார் , முத்துக்கு முத்தாக  போன்ற  படங்கள்  உங்களுக்குப்பிடிக்கும்   என்றால் இந்தப்படமும்  பிடிக்கும் . காமெடி டிராக் இல்லை , ஹீரோ பில்டப்  சீன்கள் இல்லை . கிளாமர்  டான்ஸ் இல்லை . கண்ணியமான  குடும்பக்கதை , பெண்களுக்கு மிகவும்  பிடிக்கும் விதத்தில்  உருவாகி இருக்கும் படம் இது . 9/8/2024  முதல்  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம் 9/9/24  முதல்  ஓடிடி யில் வர இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  நண்பன்  கல்யாணப்பத்திரிக்கை  வைக்க  பக்கத்து  ஊருக்குப்போகிறான் ,  கூடத்துணைக்கு  நாயகனை அழைக்கிறான். அங்கே  போனால் நண்பன்  பத்திரிக்கை  வைத்த  இடம்    நாயகனுக்கு  சொந்தம் . அத்தை  முறை  ஆகிறது . அந்த விஷயமே  நாயகனுக்கு  அத்தை  சொல்லி தான்  தெரிகிறது 


 அத்தைக்கு  ஒரு  பெண்  இருக்கிறாள் . 16 வயது  ஆகிறது . நாயகனுக்கு அவளைப்பிடித்து  விடுகிறது . அவளுக்கும்  தான். ஆனால்    நம்  குடும்பமே  பகையால்  பிரிந்து  கிடக்கிறது . நம்  காதல்  கை கூடுமா?  என  சந்தேகம்  கொள்ள  நாயகன்  குடும்பத்தை  ஒன்று சேர்க்க  எடுக்கும்  முயற்சிகள்  தான்  மீதி  திரைக்கதை 


ஃபிளாஸ்பேக்  கதை 


நாயகனின்  பாட்டிக்கு  3 மகன்கள் , ஒரு மகள் .மூத்த  மகன்  தான்  பொறுப்பானவன் . நாயகனின்  அப்பா   மூத்த  மகன் . 2 வது  மகன்  தன்  மனைவியின்  பேச்சைக்கேட்டு  சொத்தைப்பிரிங்க என்று  சொல்லி  தனியாகப்போய் விடுகிறான் . 3  வது  மகன்  யாரோ  ஒரு  பெண்ணுடன்  ஊரை  விட்டு ஓடி விடுகிறான் .   மகளின்  கல்யாணத்திற்குப்போடுவதாக  வாக்களித்தபடி போடமுடியவில்லை .5  பவுன்  ஷார்ட்டேஜ் . அதனால்  மகளின் கணவன்  அனைவரையும் எடுத்தெறிந்து  பேசி விடுகிறான் . இதனால்  குடும்பங்கள்  பிரிந்து  வாழ்கின்றன 


 நாயகன்  ஆக   சுரேஷ்  நந்தா  பாந்தமாக  நடித்திருக்கிறார். அவரது  அத்தை பெண்ணாக  நந்தனா  ஆனந்த்  அழகாக  நடித்திருக்கிறார். தமிழ்  சினிமா வில் இந்த மாதிரி கண்ணியமான  கிராமத்துபெண்  கேரக்டரைப்பார்த்து  மாமாங்கம்  ஆகிறது 


 நாயகனின்  அப்பாவாக    வேல  ராமமூர்த்தி  அட்டகாசமான குணச்சித்திர   நடிப்பை  வழங்கி  இருக்கிறார் , நாயகனை  விட  இவருக்குத்தான்  காட்சிகள்  அதிகம் . நாயகனின்  சித்தப்பாவாக  மறைந்த  நடிகர்  ஜி மாரிமுத்து  பிரமாதப்படுத்தி  இருக்கிறார் . அம்மாவின்  கல்லறையில்  புலம்பும்  காட்சி  உருக்கம் . நாயகனின்  அத்தையாக    தீபா சங்கர்  உணர்ச்சிப்பிழம்பாக  நடித்திருக்கிறார் .  நாயகனின்  பாட்டி  ஆக  வீராயி  கேரக்டரில்  பாண்டி அக்கா  வாழ்ந்திருக்கிறார் 


தீபன்  சக்ரவர்த்தி  இசையில்  3  பாடல்கள்  அருமை . பின்னணி  இசையும்  சிறப்பு முகன் வேல் எடிட்டிங்கில்  படம் 2  மணி  நெரம் 11 நிமிடங்கள்  ஓடுகிறது . எம் சீனிவாசனின்  ஒளிப்பதிவில்  கிராமியக்கதை  கண் முன் அழகாய் விரிகிறது 

 திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர்  நாகராஜ்  கருப்பையா 



சபாஷ்  டைரக்டர்


1   நாயகனின்  அத்தை  மகள்  சந்திப்பு , காதல்  காட்சிகள்  மிக  நேர்த்தி . எல்லோராலும்  கனெக்ட்  பண்ணிக்கக்கூடிய  அமைப்பு 


2   முக்கியமான  பாத்திரங்கள்  மற்றும்  அனைத்துக்கதாபாத்திரங்களை  ஏற்று  நடித்த  அனைவரது நடிப்பும்  அருமை 


3   சமூக  அமைப்பை , கூட்டுக்குடும்ப மகிமையை உணர்த்தும் வசனங்கள் குட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   நெஞ்சுக்குள்ளே  உன் பேரை பச்சை குத்தி  வெச்சிருக்கேன் 

2   தெக்கு திசை  நாடு 


3  சண்டாளச்சீமையிலே   சந்திரனைப்பெத்த  மக்கா 


  ரசித்த  வசனங்கள் 

1   கூடப்பிறந்த  பிறப்பு தான்  நம்ம பொழப்பு 

2   இது உங்க ஊர்  இல்லை , வேர் 

3  பத்து ஜென்மங்களா  வாழ்ந்துடப்போறோம். ஒத்தைப்பிறப்பு தானே? 

4  பிள்ளைங்களுக்கு  சொத்து பத்து சேர்த்து வைப்பதை  விட  சொந்தபந்தங்களை   அடையாளம் காட்டி  வளர்க்கனும் 

5  ஒரே  வீட்டில்  பிறந்தோம் , ஒரே  தட்டில்   சாப்பிட்டோம்   ஆனா  ஒண்ணா  வாழாம  விட்டுட்டோம் 

6  கெட்டதுல விட்ட  சொந்தத்தை ஒரு நல்லதுல சேர்க்கனும்   


7  ஒரு காலத்துல   அடித்துக்கொள்வதும் ஒரு காலத்துல  கூடிக்கொள்வதும் தானே  சொந்த பந்தம் ?

8  நிற்கறவரை தான் ஒரு மனுசனுக்கு மரியாதை , அவன் (கிடையில்) விழுந்துட்டா  மதிப்பில்லை 


9   என்  தலைல இருந்த  சுமையை அவன் இறக்கி வைப்பான்னு பார்த்தா  கூட  ஏத்தி வெச்சுட்டானே? 


10  அத்தை மகனைக்கட்டிக்கனும்னு ஆசை எல்லாருக்கும்தான்  இருக்கும், ஆனா  அது நடக்கனுமே? 


11  நாளை  நீ வரும் வழியில் பாலத்துல நிக்கவா? 


 நீங்க பாலத்துல நின்னா  எனக்கென்ன? சேலத்துல நின்னா  எனக்கென்ன? 


12   சொந்த பந்தம்னு கூடி வாழ்வதுதான் வாழ்க்கை  இருப்பதை எல்லாம்  அத்து விட்டுட்டு   இவரு  தனியா  வாழ்ந்து என்ன பண்ணப்போறாரு ? 


13  வயசானவங்க  கட்டைல போற  வரை  கவுரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டாங்க 




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தங்கைக்கு  பேசியபடி  பவுன் போடாதது அண்ணனின்  தப்பு தான். ஆனால் தப்பு முழுவதும் தங்கை மேல்  இருப்பது போல  முறைத்துக்கொண்டிருப்பது  எந்த விதத்தில் நியாயம் | 


2   கடைசித்தம்பி  ஊரை விட்டு  ஓடி விட்டான் , லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டான் எல்லாம்  ஓக்கே ஆனால் 10  வருடங்களாக  ஒதுங்கி  இருந்த  அண்ணன்  தன்  மகன்  கல்யாணத்துக்காக  தம்பி வர வேண்டும் என  ஆசைப்படுவது  எந்த விதத்தில் நியாயம் ? 


3   மூத்த  மகனுக்கும்  தம்பி  மனைவிக்கும்  ஆகாது . ஆனால்  வெளீயூர்  போன அண்ணன் மணீயார்டரை  தன்  அம்மா பேருக்கு  அனுப்பாமல்  தம்பி மனைவி பேருக்கு  அனுப்புவது  ஏன் ?அதனால் தான் பிரச்சனையே  வருகிறது  


4  சித்தப்பாவின்  உயிரைக்காப்பாற்றிய  நாயகனுக்கு  யாரும்  நன்றி  கூட சொல்லவில்லை 


5  நாயகனுக்கு எருமைக்கடா  மாதிரி  தோற்றம் ,  சுமார் 30 வயது இருக்கலாம் . நாயகிக்கு கதைப்படி  எட்டாம் வகுப்பு நாயகி  3 வருசம் பெயில் ஆகி படிப்பவள்  அதனால் வயசு 8+ 3+ 5 = 16 .  போஸ்கோ  சட்டத்தில்  நாயகனை உள்ளே  தான்  போடனும் 


6  நாயகன்  தன்  அத்தை மகளை  கஷ்டப்பட்டு  ரோட்டில் , களத்து மேட்டில் ஏன் சந்திக்கனும் ? அத்தை  எதிர்க்கவில்லையே? உரிமையாய் வீட்டுக்கே  போய்  இருக்கலாமே ? 


7 குடும்பங்கள்  பிரிவதில்  இருந்த  காரண  காரியங்கள்  அளவுக்கு  சேர்வதில் அழுத்தம் இல்லை . என்ன காரணத்துக்காக  சேர்கிறார்கள்  என்பதில் தெளிவு இல்லை . க்ளைமாக்ஸ்  கிட்டே  வந்தாச்சு  சேர்வோம் என்பது போல இருக்கு 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   குடும்பத்துடன்  காண   வேண்டிய  நல்ல  படம் .  ரேட்டிங்  3 / 5 


Veerayi Makkal
Directed byNagaraj Karuppaiah
Written byNagaraj Karuppaiah
Produced bySuresh Nandha
Starring
  • Suresh Nandha
  • Nandana Anand
CinematographyM. Seenivasan
Edited byMugan Vel
Music byDeepan Chakravarthy
Production
company
White Screen Films
Release date
  • 9 August 2024
CountryIndia
LanguageTamil

Monday, September 02, 2024

SARIPODHAA SANIVAARAM (தெலுங்கு) SURYA'S SATURDAY (2024) -தமிழ் -- சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )

         


   90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆன முதல் 2 நாட்களிலேயே 50 கோடிரூபாய்  வசூல் செய்து  மெகா ஹிட் ஆன மசாலா படம் இது .ஹீரோவை விட வில்லனுக்கு  அதிக கை தட்டல்கள் கிடைத்த  படம் . நான் ஈ  புகழ் நானியின் திரை  உலக வாழ்க்கையில்  அதிக செலவில் தயாரான படம் இது 


2022 ம் ஆண்டு  வெளியான  ANTE SUNDARANIKI  ( அடடே சுந்தரேஷா ) படம் பெரிய  வெற்றி அடையாத போது அதே இயக்குனருடன் இணைந்து ஒரு வெற்றிப்படம் கொடுப்பேன்  என சவால் விட்ட நானி அதில்  வெற்றி பெற்றிருக்கிறார் . இயக்குனர்  விவேக் ஆத்ரேயா + நானி  + எஸ் ஜெ   சூர்யா   கூட்டணியில் உருவாகியிருக்கும் மாஸ் மசாலா  ஆக்சன் படம் இது       


SARIPODHAA SANIVAARAM   என்ற டைட்டிலுக்கு   சனிக்கிழமை  மட்டும்  போதுமா?  என்று அர்த்தம் 



ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் சிறுவனாக இருக்கும்போதே முரடன் ஆக இருக்கிறான் , இதனால் அவனது அம்மா அவனிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொள்கிறார் . எப்போதும் கோபமாகவே இருக்காதே . வாரம் ஆறு நாட்கள்   அமைதியாக இரு . யாருடனாவது பிரச்சனை ஏற்பட்டால்   அதை   எழுதி வைத்துக்கொள் , வாரம் ஒரு நாள்  அடிதடியில் இறங்கு   என்கிறாள் , சுருக்கமா சொல்லனும்னா  நாயகன் ஞாயிறு முதல் வெள்ளி வரை மாணிக்கம் ஆகவும்,   சனிக்கிழமை  மட்டும்  மாணிக் பாட்சா ஆகவும் இருப்பான் 


வில்லன் ஒரு சைக்கோ .போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் . அவனுக்கு  பர்சனல் ஆக ஏதாவது பிரச்சனை என்றால் லாக்கப்பில் இருப்பவனை போட்டு அடி  நொறுக்குவது , அவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பது அவன் வழக்கம் 


நாயகி  வில்லன் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர்  ஆக   இருக்கும் அதே போலீஸ் ஸ்டேஷனில்  சாதா கான்ஸடபிள் 


ஒரு கட்டத்தில் நாயகன்  முகமூடி போட்டு வில்லனை அடித்து விடுகிறான் . வில்லன் தன்னை அடித்தவன் யார் என தேடுதல் வேட்டையில் இறங்குகிறான் . நாயகனுக்கு , வில்லனுக்கும்  நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான்  மீதி திரைக்கதை  


எந்த மொழியில்   எடுத்தாலும்  ஹிட் ஆக வாய்ப்புள்ள  மசாலா ஃபார்முலா  கதை   இது 


 நாயகன் ஆக  நானி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . அவரது  ஹேர் ஸ்டைல் , பாடி லேங்க்வேஜ்  கச்சிதம் 


 நாயகி ஆக  பிரியங்கா மோகன் பாந்தமான தோற்றம் . பால் அல்வா மாதிரி   மாசு மரு இல்லாத  மொசைக்  முகம் . ஆனால்  நடிப்பில் ஓக்கே  ரகம்  தான் . பிரமாதம் என சொல்ல முடியாது 


  வில்லன் ஆக அதகளப்படுத்தி இருப்பவர் நடிப்பு  அரக்கன் எஸ்  ஜே சூர்யா . நாயகனை  விட   வில்லன் கேரக்டர்  வலிமையாக எழுதப்பட்டிருப்பது பெரிய பிளஸ் . ஆக்சுவலாக  இவர் செய்வது ஓவர் ஆக்டிங் தான் , ஆனால்  ஆடியன்ஸ்  ரசிக்கிறார்கள் . இவர் நடிக்கும் காட்சிகளில் மற்ற அனைவருமே   டம்மி  ஆகத்தெரிவது  இவருக்குப்பெரிய பிளஸ் 


1985 ஆம் ஆண்டு வெளியான  காக்கிச்சட்டை படத்தில் வில்லன் ஆன சத்யராஜ்  தகடு தகடு   என்ற  டயலாக்கை  பேசும்போது  அரங்கம்  அதிரும் . அதே  பாணியில்   க்ளைமாக்சில்  கமல்  போலீஸ்  போலீஸ்  என சத்யராஜ்  பாணியில்  சதயராஜைக்கலாய்க்கும்போது  கமல்  ரசிகர்கள்   கூட   கை தட்டவில்லை . அதே  போல  இந்தப்படத்திலும்  ஹிஸ்டரி  ரிப்பீட்  ஆகி இருக்கிறது 


  வில்லன்  ஆன எஸ்  ஜே  சூர்யா  ஒரு பாணியில்  வசனம்  பேசி    கை  தட்டல்  வாங்குவார் . க்ளைமாக்சில்  நானி  அதே  பாணியில்  நான்கு  வரி  டயலாக்  பேசுவார் , ஆனால்  அது  எடுபடவில்லை 

  இவர்கள் போக   முரளி சர்மா , அதிதி பாலன் ,   அபிராமி ஆகியோர்  நடிப்பும் குட் 


 ஜேக்ஸ்  ஜோ இசையில்  12 பாடல்கள் . அவற்றில் 3  பாட்டு ஹிட்டு . பின்னணி  இசை தெறிக்கிறது 


முரளி  யின் ஒளீப்பதிவு பிரமாதம் . சனிக்கிழமை மட்டும் ரெட் ஷேடோ  மற்ற  நாட்களில்   சாதா  கலர்   என  எடுத்த ஐடியா  அட்டகாசம்


 கார்த்திகா  ஸ்ரீனிவாஸ்  எடிட்டிங்கில்  படம் 175  நிமிடங்கள்  ஓடுகின்றன 


 நாயகன் , வில்லன் , நாயகி இவர்களைப்பற்றி  அறிமுகப்படுத்துவதற்கே  முதல் ஒரு  மணி நேரம் எடுத்துக்கொண்டார்கள் , கொஞ்சம்  நீளம் தான் 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  விவேக்  ஆத்ரேயா 




சபாஷ்  டைரக்டர்


1   வாரா வாரம்  ஒரு  நாள்  ஆக்சன்  அவதாரம்  மற்ற    நாட்களில்  அமைதி  என்ற  கான்செப்ட்    நன்கு  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


2  நாயகன் , நாயகி  இருவரும்  பால்ய கால  தோழர்கள் , ஆனால்  இப்பொது  பரஸ்பரம்  ஒருவரை ஒருவர்  அடையாளம்  தெரியாது  என்ற  கான்செப்ட்  ரசிக்கும்படி  இருந்தது 


3  வில்லனின்  எண்ட்ரி   சீன்  ரொம்ப  லேட்  என்றாலும்   டோட்டலி ஸ்டீல் த ஷோ   அல்லது  டேக்கன்  த    மூவி  அண்டர்  கண்ட்ரோல்  என்று   சொல்லும்  அளவுக்கு  ஆர்ப்பாட்டமான எஸ்  ஜே  சூர்யா  நடிப்பு 


4   நாயகனின்  சனிக்கிழமை  அவதாரம்  நாயகிக்குத்தெரியாது . அப்போ  நாயகன்  நாயகி  உடன்   இருக்கும் போது  சனிக்கிழமை   அன்னைக்கு  அடிக்கனும்  என  இன்னொரு  வில்லனின்  அடியாட்களுக்கு கட்டளை  பிறப்பதும்   அந்த   ஆக்சன்  சீனும்  அதகளம் 


5   வில்லனை  நாயகன்  முதன்  முதலாக  அடிக்க  வரும்போது  சனிக்கிழமை  மிட்  நைட்  12  மணி  ஆவதும் , நாயகன்  வில்லனை  அடிக்காமல்  பின்  வாங்குவதும்  , அந்த   கடிகாரம்  10  நிமிசம்  ஃபாஸ்ட்  என்பதை  அறிந்து  திரும்பி   வந்து  அடிப்பதும்  செம  சீன் 


6   வில்லன்  நாயகன்  ஒரு  சனிக்கிழமை  சனியன்  என்பதை  கண்டு பிடிக்க  முற்படும்  காட்சிகள்  கலக்கல்  காமெடி 


7  வில்லனின்  அண்ணனை  வில்லனே  போட்டுத்தள்ள  முயல்வதும் . ஆனால்  அண்ணன்  வில்லனை  தன்  உயிரைக்காப்பாற்றியவன்  என தவறாக நினைத்து  பாசத்தில் உருகுவதும் செம காமெடி  காட்சிகள்


8  வில்லனின்  சந்தேக  வளையத்தில்   இருந்து   தப்பிக்க   நாயகன்  வில்லனிடமே  போய்   என்னை  ஒருத்தன்  சனிகிழமை அடிச்சுட்டான்  என கேஸ்  கொடுப்பதும் , அதைத்தொடர்ந்து   வில்லன்  நாயகனை  சாட்சியாக  வைத்துக்கொள்வதும்  காமெடிக்கலக்கல்கள் 


  ரசித்த  வசனங்கள் 


1 நமக்குப்பிடிச்சவங்களை ,பிடிச்சவங்களோட தான் சந்திப்போம் .


2 நீ  அம்பி  இல்லை .,அந்நியன் என்பது அவளுக்குத்தெரிஞ்சா நீ ரோமியோ ஆக முடியாது 


3 அவனை  அடிச்சதும் ,உன்னை  அடிச்சதும் , என்னை  அடிச்சதும்  ஒரே ஆள் 


 சார் , உங்களை எப்படி ... ?


 நீ எவ்ளோ ஷாக் ஆனாலும் அதான் நிஜம் 



4  இந்தப்பாவிப்பையன் கூட இருந்துக்கிட்டே  என்னை அப்பாவி ஆக்கி இருக்கான் 


5  கூப்பிட்டியா? சமந்தா? 

 இல்லையே? 


 கூப்பிடாமயே கூப்பிட்ட மாதிரி  இருந்தா ரொமான்ஸ் ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னு அர்த்தம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  ஒரு  சாதா இன்ஸ்பெக்டர் . அவர்  பண்ணும்  அட்டூழியங்கள்  ஓவர்  ரகங்கள் . இதெல்லாம் 1980  கால  கட்டத்துக்கு  ஓக்கே , ஆனால்  சமூக  வலைத்தளங்கள்  இருக்கும்  இப்போதைய  கால  கட்டத்தில்  வீடியோ  எடுத்து  வெளியிட்டு  அவரை  நாஸ்தி  பண்ணி  விட  மாட்டாரகளா? 


2  நாயகன்  தான்  தன்  அம்மாவுக்கு  வாரத்தில் ஆறு  நாட்கள்  அமைதியாக  இருப்பேன்  என  சத்தியம்  செய்து கொடுத்திருக்கிறான். வில்லனின்  அடியாட்களுக்கு  என்ன  கேடு?   ஞாயிறு  டூ  வெள்ளி  வரை  நாயகனைப்போட்டு  பொளந்து  கட்டி  இருக்கலாமே?  அவர்களும்  சனிக்கிழமை   ஏன் சண்டைக்குப்போக  வேண்டும் ? 


3  நாயகன் - நாயகி  இருவரும்  தாங்கள்  இன்னார்தான்  என்பதை  உணர்ந்து   அதற்குப்பின்  காதலை வெளிப்படுத்தி இருந்தால்  இன்னும்   கவித்துவமாய்  இருந்திருக்கும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான  கமர்ஷியல்  ஆக்சன் மசாலாப்படம்  பார்க்க விருப்பம் உள்ளவர்கள்  , எஸ் ஜெ  சூர்யாவின்  ஓவர் ஆக்ட்டிங்கை ரசிப்பவர்கள்  பார்க்கலாம் . ஆனந்த  விகடன்  மார்க் 44  , குமுதம் - நன்று. அட்ரா சக்க ரேட்டிங்  3 / 5 


Saripodhaa Sanivaaram
Theatrical release poster
Directed byVivek Athreya
Written byVivek Athreya
Produced byD. V. V. Danayya
Starring
CinematographyMurali G.
Edited byKarthika Srinivas
Music byJakes Bejoy
Production
company
Distributed bySri Venkateswara Creations
Release date
  • 29 August 2024
Running time
175 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹90 crore[2][3]
Box office41 crore[4]

Sunday, September 01, 2024

அதர்மக்கதைகள் (2024)- தமிழ் -சினிமா விமர்சனம் (( ஆந்தாலஜி ரிவெஞ்ச் த்ரில்லர் ))


ஆந்தாலஜி  என்பது தமிழ் ஆடியன்ஸுக்கு ஒத்து வராது . கலவை சாதம் சாப்பிடுவதை விட முழு சாப்பாடு சாப்பிட்டால் தான் தமிழனுக்கு திருப்தி . இதில் இயக்குனர்  நான்கு குறும்படங்களை  2 மணி  நேரத்தில் கொடுத்திருக்கிறார் . 


                       ஸ்பாய்லர்  அலெர்ட்


 1   பழி  வாங்குவது ஒரு கலை 


வில்லன் ஒரு மோசமான ரவுடி . ஓப்பனிங்க் ஷாட்லயே அவனை ஒரு கும்பல் கொலை பண்ண துரத்துது . படு காயங்களுடன் ஒரு  ஹாஸ்பிடலில்  அட்மிட் ஆகிறான் . அவனோட கெட்ட குணங்கள் அறிந்து மற்ற நர்ஸ்கள் எல்லாம்     சிகிச்சை  செய்ய தயங்கும்போது நாயகி   அதை ஒரு கடமையாக நினைத்து சாதாரணமாக அவனுக்குப்பணி விடை செய்கிறாள் ..


வில்லனைத்துரத்திய   கேங்க்  நாயகியின்  வீட்டுக்கு வந்து ஒரு  கோரிக்கை வைக்கிறார்கள் . வில்லன்  ஹாஸ்பிடலில் இருக்கும்போதே   நைசாக அவனை போட்டுத்தள்ள நாயகி உதவ வேண்டும் . அதற்கு பணம் தர தயார் . ஆனால் நாயகி அவர்களை துரத்தி விடுகிறாள் 


இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள்  மீதி  திரைக்கதை 


நாயகி ஆக அம்மு அபிராமி கச்சிதமாக நடித்திருக்கிறார் . 23 நிமிடக்குறும்படம் இது 


2  தன்னைத்தானே பழி வாங்குதல் தவறானது 


நாயகன், நாயகி  இருவரும் காதலித்துக்கல்யாணம்  செய்து கொண்டவர்கள் . ஒரு குழந்தை உண்டு . நாயகனுக்கு ஆன் லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம்  , ஏராளமான பணத்தை இழக்கிறான். பலரிடம் கடன் வாங்கி சிக்கலில் மாட்டுகிறான் . கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க  ஒரு பணக்கார வீட்டுக்குழந்தையை கடத்தி பிளாக்மெயில் செய்கிறான். ரூ 50 லட்சம்  பணம் வர இருக்கிறது . இந்த சந்தர்ப்பத்தில் நாயகிக்கு விஷயம் தெரிகிறது  


 நாயகி  நாயகனைக்கண்டிக்கிறாள் . இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட  நாயகி தலையில் அடிபட்டு  இறக்கிறாள் , ஆக்சிடெண்டல் டெத் . இதற்குப்பின்  நாயகன் எடுக்கும் முடிவு தான்  க்ளைமாக்ஸ் 


நாயகன் ஆக  வெற்றி நடித்திருக்கிறார் . வித்தியாசமான கதைகளில் நடித்து வரும்  வெற்றிக்கு  இது  அதிக ஸ்கோப்  இல்லாத  கதை தான் . வந்தவரை ஓகே  ரகம் . நாயகி ஆக சாக்ஷி அகர்வால் இளமைத்துடிப்புடன் , கிளாமருடன் வந்து போகிறார் . காதல் கொண்டாட்டத்தில்  கலக்குபவர் கோபமாக வசனம்  பேசும் காட்சியில் தடுமாறுகிறார் 

34 நிமிடக்கதை இது 


3  பழி  வாங்குவதை  மற்றவர்களுக்காகச்செய்வதும் ஒரு வகையான தர்மமே 


நாயகன் சுனாமியில் தன குடும்பத்தை இழந்த பெரியவர் . பீச்சில் பலூன்களை துப்பாக்கியால் சுடும் விளையாட்டுக்கடை நடத்தி வருகிறார் . அங்கே  3  ரவுடிகள்   பொது மக்களுக்குத்தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். போலீசில்  புகார் கொடுத்தால் பெரிய இடத்துப்பொல்லாப்பு நமக்கு எதுக்கு என போலீஸ் ஒதுங்கி விடுகிறது . அவர்கள் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லாமல் போனாலும் சமூக நலன் கருதி அவர்களை  போட்டுத்தள்ளுகிறார் நாயகன் . 


 நாயகனாக  பூ ராமு அமைதியாக நடித்திருக்கிறார் . ராஜ்கிரண் சாயல் நடிப்பில்  தெரிகிறது 



4   மன்னித்தலே மிகப்பெரிய பழி வாங்கல் 


நாயகி  ஒரு துணிக்கடையில் பணி புரியும்  ஏழை . அப்பாவுக்கு ஹாஸ்பிடல் செலவு இருக்கு . இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் அவளுக்கு ஒரு காதலும் இருக்கு . ஒரு நாள் அவள் வீடு தேடி ஒரு பணக்காரக்குடும்பத்தைச்சேர்ந்த  தம்பதி வருகிறார்கள் . 


அந்த தம்பதியில் கணவன் நகைக்கடை அதிபர் . மனைவி  கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர் . இதனால் நாயகியை வாடகைத்தாயாக இருந்து அவர்கள் குழந்தையை பெற்றுத்தர சொல்கிறார்கள் . கணவனின் உயிர் அணு + மனைவியின்   கரு முட்டை  இரண்டும்  நாயகியின்  வயிற்றில்  கர்ப்பப்பையில்  பொருத்தப்படும் . குழந்தை பெற்றுத்தர  ரூ 10 லட்சம்  சன்மானம் .


 ஆரம்பத்தில் மறுக்கும்  நாயகி  தன வறுமை நிலையை எண்ணி பின் சம்மதிக்கிறாள் .  அட்வான்ஸாக  ரூ 2 லட்சமும் மாதா மாதம்  ரூ 25,000  தந்து பேலன்ஸ் குழந்தை பிறந்த பின் செட்டில்மென்ட் என பேச்சு 



நிறை மாத கர்ப்பிணி ஆக நாயகி இருக்கும்போது  நாயகிக்கு ஒரு பிரச்சனை , அந்த தம்பதி பிரிந்து விடுகிறார்கள் . பேசிய பணத்தை  தர மறுக்கிறார்கள் 


 நாயகி போலீசில் புகார்  தருகிறார் , மீடியாவில் பரபரப்பாக  இந்த செய்தி பரவுகிறது  வில்லனின் பெயர் கெடுகிறது . இதனால் வில்லன் நாயகியைத்தீர்த்துக்கட்ட முடிவு எடுக்கிறான் . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகி ஆக திவ்யா துரைசாமி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . அவரது அம்மா கேரக்டர்  கூட சிறப்பு 


ஏ ஆர்   ரெஹானா எஸ் என் அருணகிரி ,ஹரிஷ்   அர்ஜூன் ,சரண்குமார்  ஆகிய   நால்வரும்  இசை . பாடல்கள்  ஓகே ரகம் . பின்னணி இசை சுமார் ரகமே   பரணி ,  ராஜீவ  ராஜேந்தர் , ஜெபின் ரெஜினால்டுக்கு  ஒளிப்பதிவாளர்கள் . கச்சிதம் . கதை ,  திரைக்கதை   எழுதி இயக்கி இருப்பவர் காமராஜ் வேல் 


 எடிட்டிங்க் கச்சிதம் . 2 மணி நேரம்  5 நிமிடம் படம் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்


1    மூன்று சுமாரான  கதைகள் , ஒரு நல்ல கதை என்ற பார்முலாவில் களம்  இறங்கி இருக்கிறார் இயக்குனர் .


2   லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக நடிகையரிடம் நடிப்பை வாங்கிய விதம் குட் 



  ரசித்த  வசனங்கள் 


 பொண்டாட்டியைக்கட்டிப்பிடிக்கணும்னா அடிக்கடி அவளுக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்துட்டே இருக்கணும் போலயே? 


2   பணக்காரங்க புத்தி அப்படித்தான் , காரியம் ஆகும் வரை காலைப்பிடிப்பாங்க  , காரியம் முடிஞ்சதும்  கழுத்தைப்பிடிப்பாங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லனின் அடியாட்கள்  தண்டமாய்  ஹாஸ்பிடல்  வெளியே நிற்கிறார்கள் . பாதுகாப்புக்கு உள்ளே  இருவராவது வேண்டாமா? மீண்டும் கொலை முயற்சி நடக்கும் என்பது தெரியாதா? 


2 ஒருவருக்கு உடல் நலம் சரி இல்லாத பொது காம எண்ணங்கள்  எழாது என்பது மருத்துவ உண்மை . வில்லன்  சீரியஸ் கண்டிஷனில் உயிருக்கு  போராடுகிறான் . அப்போது அவனுக்கு எப்படி காமம் வரும் ? 


3  வில்லனை  கொலை செய்ய முடிவு எடுத்த நாயகி அந்த கோஷ்டி  கொடுத்த  ஆபரை  ஏற்றிருக்கலாமே? ஒரே கல்லில் 2 மாங்கா 

--------------------------------

4  சாலையில் அனைவரும் ஹெல்மெட்டுடன் பயணிக்கும்போது நாயகன், நாயகி மட்டும் ஹெல்மெட் போடாம டூ வீலரில் சுற்றுவது எதனால் ? 


===============

5 பொது வெளியில் , பீ ச்சில் ரவுடிகள்  அட்டகாசம் செய்யும்போது போலீசும் , பொதுமக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருப்பார்கள் , மீடியாக்கள் என்ன செய்யு து ?


============

6  வாடகைத்தாய் அமர்த்த  சட்டப்படியே அணுகி இருக்கலாம் . திருமணம் ஆன ஆல்ரெடி  ஒரு குழந்தை பெற்ற எத்தனையோ ஏழைப்பெண்கள் தயாராக இருக்கிறார்கள் 


7  வாடகைத்தாய் ஆக தான்  ஆகப்போவதை நாயகி தன காதலனிடம் எதனால் சொல்லவில்லை ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தியேட்டரில் போய் பார்க்கும் அளவு ஒர்த் இல்லை , டி வி யில் போட்டால் நான்காம் கதையை மட்டும் பார்க்கலாம், ரேட்டிங்க்  2 / 5