Saturday, January 23, 2016

KYA KOOL HAIN HUM- 3 (HINDI) - சினிமா விமர்சனம்ஹீரோ ஒரு தொழில் அதிபரோட பையன். ஒரு ஆஃபீஸ் மீட்டிங்க் ல லேப்டாப்ல ஒரு பிராஜக்ட் விளக்கும்போது பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் கூடி இருக்கும்போது தவறுதலா அவர் தன் பி ஏ கூட இருக்கும் சில ஃபோட்டோஸ் ஒளிபரப்பாகிடுது. அப்பா செம கடுப்பாகி ஜெ கார் பார்ட்டிநாஞ்சில் சம்பத்தை துரத்துன மாதிரி கெட்டவுட் சொல்லிடறார்.

ஹீரோ தன் ஃபிரண்ட் கூட போய் ஜாயிண்ட் பண்ணிக்கறார். ஃபிரண்ட் சன்னி லியோன் டைப் போர்ன் ஸ்டார் நடிகைங்க 2 பேரை வெச்சு ஹிட் ஆன ஹிந்திப்படங்களை கலாய்க்கும் லோ கிளாஸ் காமெடிப்படம் எடுப்பவர்.


ஹீரோயினை ஒரு இடத்துல ஹீரோ மீட் பண்றார். பார்த்ததும் லவ். ஹீரோயின் தன் அப்பாவைக்கூட்டிட்டு ஹீரோ விட்டுக்கு மாப்ளை நிச்சயம் பண்ண வரனும்கறார். இப்போ இருக்கும் சிச்சுவேஷன்ல அப்பா கிட்டே மேரேஜ் சம்பந்தமா பேச முடியாது. அதனால கிரேசி மோகன் , எஸ் வி சேகர் டிராமாக்களில் வருவது போல் ஆள் மாறாட்ட காமெடி டிராமா செட் பண்றார்.

அதாவது ஹீரோவோட ஃபிரண்டை அப்பாவாகவும் , அந்த பிட்டுப்பட நடிகைங்க 2 பேரை ஹீரோவோட அக்கா, தங்கையாவும் நடிக்க வைக்க ரெடி பண்றார்

முதல்ல ஹீரோவோட அப்பாவா நடிக்க மறுத்த வர் பின் திடீர்னு எண்ட்ரி ஆகறார். ஹீரோ ரெடி பண்ணிய இன்னொரு டிராமா அப்பா , ஹீரோவின் ஃபிரண்ட் 2 பேரும் அப்பா கேர்கடர்ல வந்துடறாங்க, போதாததுக்கு உண்மையான அப்பாவும் ஆஜர் ஆகிடறார். 3 அப்பாக்களையும் ஹீரோ அந்த டிராமாவில் எப்படி சமாளிச்சார் என்பதே இந்தக்காமெடிப்படத்தின் மிச்ச மீதிதிரைக்கதை


ஹீரோவா துஸ்ஸார் . நல்ல நடிப்பு . சிவப்பு நிறத்தைப்பார்த்தா இவர் கண்கள் நாலா புறமும் சுழலும் என்ற நாட்டில் ( KNOT) ஜிம் கேரி யின் பாணியில் இவர் செய்யும் சேஷ்டைகள் ஓக்கே ரகம்.காதலியைக்கவர ஏதோ செய்யப்போய் எதுவாகவோ எசகுபிசகா ஆகும் காமெடிக்காட்சிகளில் பாடி லேங்குவேஜ் பக்கா


ஹீரோயினுக்கு பெரிசா வேலை இல்லை, பெருசா சொல்லிக்கும்படி எதுவும் இல்லை


போர்ன் ஸ்டாரா வரும் அந்த எக்ஸ்ட்ரா நடிகைகள் 2 பேரும் களை கட்டும் காமெடி பண்றாங்க

பின் பாதி திரைக்கதை பூரா கிட்டத்தட்ட கிரேசி மோகன் டிராமா தான் .

போஸ்டர்களில் ஒட்டி இருந்த அளவு முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் பெருசா ஏதும் இல்லை , பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் இருக்குமனதைக் கவர்ந்த  வசனங்கள்

மேடம்.டி பி ன்னா என்ன?


டர்ட்டி பிக்சர் ?, # KYA KOOL HAI HUM 3


2 மேடம்.உங்களுக்கு எத்தனை லவ்வர்ஸ் இருக்காங்க?


தெரில.50 க்கு மேல எனக்கு எண்ண வராது. # KYA KOOL HAI HUM 3
3 தூங்கும்போது கூட அழகான பொண்ணுங்க இருக்கும் இடத்துல துங்கனும்னு நினைக்கறவங்க தான் ஆண்கள்  4  மேகி , பீப் 2க்கும்  தடை பண்ணிட்டாங்க 5  அந்தப்பொண்ணு ஏன் சாதா விஷயத்துக்கு எல்லாம் ம்ம்ம் ஹாஅ ஏய்னு முணகுது?

 கில்மா கேரக்டர்ல நடிச்சு பாத்திரமாவே மாறிடுச்சு6  முதல்ல ஐஸ்க்ரீமை சாப்பிடு , அப்புறமா அவளை சாப்பிடு
7  என்  டைமண்ட்  கிஃப்ட் எப்டி?


 ரொம்ப சிறுசா இருக்கே?

 ஏன் ? சிறுசுன்னா பிடிக்காதா?


8  கதைப்படி நான்  உனக்கு சின்ன தம்பி

 என்னது? சின்னத்தம்பியா?

 ஐ மீன் ஸ்மால் பிரதர்


9  என்  லைஃப் ல இத்தனை டிரஸ் நான் போட்டதே இல்லை


10    சாப்பிடுவதற்கு முன்  எல்லாரும் கை  தான் கழுவுவாங்க , அவர் ஏன்  காலைக்கழுவறார் 

 அவர்  குடும்பத்துல எல்லாத்தையும் கழுவுவாங்களாம்
 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

இந்தியாவின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி முழு நீள காமெடிப்படம் என்ற விளம்பரத்துடன் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது KYA KOOL HAIN HUM 3 (HINDI)இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  ஃபிளைட்ல லேடீசுக்கு தலையணை கொடுத்ததும் அவங்க  தலைக்கு வெச்சு சாய்ஞ்சு படுக்க  ஹீரோ  தலையணையை  தன் மடியில் வைத்து  மறைக்கும்  சீன்2    லேப்டாப் பார்த்துட்டே   HMT  பண்ணும்போது  பாட்டி வரும் சீன்3  ஹீரோயின்  ஓப்பனிங்  சின்ல  ஹீரோ பேண்டில்   எலி  புகுந்து  விட அதை எடுக்க  ஹீரோ பேண்ட்டுக்குள்  கை விடும் சீனை ஹீரோயின்  தப்பா நினைக்கும் அந்த  10  நிமிச காமெடி டிராக்
இயக்குநரிடம்  சில கேள்விகள்


  எல்லாமே  மொக்கை  சீன்கள்  தான் , இதுல  கேட்டு ஆகப்போறதென்னா/

சி  பி  கமெண்ட் - KYA KOOL HAIN HUM -3 (hindi)ஸி சென்ட்டர் ரசிகர்களுக்கான "ஏ" கிளாஸ் காமெடி மெலொ டிராமா.கிரேசிமோகன் டிராமா டைப் ஆள்மாறாட்ட காமெடி -2.5/ 5

திருவனந்த புரம் ஏரிஸ் காம்ப்ளெக்ஸில் பார்த்தேன்


0 comments: