Tuesday, January 14, 2025

JURY#2(2024)- ஆங்கிலம் - சினிமா விமர்சனம்(கோர்ட் ரூம் ட்ராமா)@அமேசான் பிரைம்

       


                    

JURY#2(2024)- ஆங்கிலம் - சினிமா விமர்சனம்(கோர்ட் ரூம் ட்ராமா)@அமேசான் பிரைம்

27/10/24 அன்று ஹாலிவுட்டில் ரிலீஸ். ஆன இப்படம். இப்போது அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது.தமிழ் டப்பிங். இல்லை.ஆங்கில சப் டைட்டில் உண்டு.


ஜிகிர்தண்டா படத்தில் ஹாலிவுட் இயக்குனர். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பற்றிக்குறிப்பிட்டு. இருப்பார்கள்.94 வயதான் இவர் கடந்த 55 வருடங்களாக சளைக்காமல் படஙகளை இயக்கி வருகிறார்.இவரது மைல்  கல் படம் Richard Jewell (2019).இவரது படங்கள் க்ரைம் திரில்லர் ஆக இருக்கும்.ஆனால் மெலோ டிராமாவாக ஸ்லோவாகத்தான் திரைக்கதை நகரும்


இந்தப்படம் பரபரப்பாக ஓடாது.மெலோ டிராமாதான்.படம் பூரா பேசிக்கிட்டே இருப்பாஙக.பொறுமைசாலிகளால் மட்டுமே பார்க்க முடியும்.12 AngryMen(1957) படத்தின் திரைக்கதை பாணியில். இதுவும் இருக்கும்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு சரக்கு சங்கரலிங்கம்.எப்போப்பாரு தண்ணிதான்.நாயகியுடனான காதலுக்கு ப்பின். திருந்தி வாழ்கிறான்.நாயகி இப்போது. நிறைமாத கர்ப்பிணி.


ஒரு கேசில் 20 பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவில் ஜூரி நெம்பர் 2 ஆக ஆகும் வாய்ப்பு. நாயகனுக்குக்கிடைக்கிறது(,பாரினில். பொதுமக்களுக்கும் ஜூரி ஆகும் வாய்ப்பு வழங்க ப்படும்.)


கேஸ் விபரம்.ஒரு வருடத்துக்கு முன் நடந்த சம்பவம்.ஒரு பாரில் காதல் ஜோடி சரக்கு அடிக்கறாஙக.ஒரு விவாதத்தில் காதலன் காதலி தலையில் பீர் பாட்டிலால் அடித்து விடுகிறான்.காதலி கோபித்துக்கொண்டு கிளம்புகிறாள்.காதலன் அவளது பின்னால் துரத்திக்கொண்டே வருகிறான்.வெளியே மழை.காதலி காதலனிடம் இனி என் பின்னால் வராதே .பிரேக்கப் தான் என சொல்லி விட்டு செல்கிறாள்.இந்த சம்பவத்தை பலரும் செல் போனில் படம் பிடிக்கிறார்கள்.அந்த வீடியோ வைரல் ஆகிறது.


அந்தக்காதலி அடுத்த நாள் காலை அதே ஏரியாவில் தலையில் அடிபட்ட நிலையில் காயங்களுடன் பிணமாகக்கிடக்கிறாள்.போலீஸ் காதலனைக்கைது செய்கிறது.ஒரு வருடமாக நடந்த இந்தக்கேஸ் இப்போது தீர்ப்பு வரும் நிலை


இப்போது நாயகனுக்கு நினைவு வருகிறது.ஒரு வருடத்துக்கு முன் தண்ணி அடித்து விட்டு மப்பில் நாயகன் தான் அந்தப்பெண்ணைக்காரில் மோதியது


இப்போது உண்மையைக்கோர்ட்டில். சொன்னால் நாயகனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்.சொல்லவில்லை எனில் அந்த அப்பாவிக்காதலனுக்கு தண்டனை கிடைக்கும்.நாயகன் என்ன முடிவு எடுத்தான்? என்பது க்ளைமாக்ஸ்


நாயகன் ஆக. நிக்கோலஸ் ஹோல்ட்,அவரது மனைவி ஆக சோயி டோக் ,வக்கீல் ஆக டோனி  காலட் நடித்திருக்கிறார்கள்.


40 நிமிடங்களில் சொல்ல வேண்டிய கதையை ஜவ்வாய் இழுத்து 2 மணி நேரம் பண்ணி விட்டார்கள்


சபாஷ்  டைரக்டர்

1. நாயகன் , மனைவி , வக்கீல் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு அருமை


2 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்


  ரசித்த  வசனங்கள் 


1 பதிவாகும் க்ரைம் கேஸ்களில் 32℅ டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ்கள்தான்


2.  ஒரு தரப்பின் நட்டம் இன்னொரு தரப்பின் லாபம்


3.  எப்போதும் உன் கட்சை. நம்பு


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  முக்கியமான ஏரியாவில் சிசிடிவி இல்லாதது எப்படி?


2 கொலையை நேரில் பார்த்த சாட்சி இல்லை.கொலை செய்யப்பயன்படுத்திய ஆயுதம் கைப்பற்றப்படவில்லை


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரொம்பப்பொறுமை வேண்டும்.பெண்கள் பார்க்கலாம்.ரேட்டிங் 2.5 /5

Monday, January 13, 2025

மதகஜராஜா (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி கிளாமர் மசாலா)

           


         மதகஜராஜா (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி கிளாமர் மசாலா)


படம் பார்த்த ரசிகர்களின் ஆரவாரமான கை தட்டலில் பாதி வசனங்கள் காதில் விழவே இல்லை.ஆனாலும் அனைவரும் கொண்டாட்டமாக வீடு திரும்புகிறார்கள்.பிரம்மாண்டமாக செலவு செய்து டப்பாப்படங்களை இயக்குபவர்கள், ஜாதி வெறிப்படங்களைத்தருபவர்கள்,வேண்டும் என்றே சோகத்தை வலுக்கட்டாயமாகத்திணிப்பவர்களுக்கு  இந்தப்படத்தின் வெற்றி ஒரு பாடம்.அதே சமயம் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்கும் சந்தாநத்தை      ஒரு நொடியாவது யோசிக்க வைக்கும் படம் இது


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு போலீஸ் ஆபீசரின் மகன்.ஒரு கேஸ் விஷயமாக ஒரு டுபாக்கூர் ரவுடியைத்தன் வீட்டில் தங்க வைக்க வேண்டிய சூழல் .அந்த ரவுடியின் மகளும் தங்குகிறாள்.நாயகன் ,நாயகி காதல் மலர இந்த ஒரு சிச்சுவேஷன் போதாதா?

நாயகன் தன் நண்பர்கள் நால்வருடன் ஸ்கூல் மாஸ்டரின் மகள் திருமண நிகழ்வுக்குப்போகிறார்.அங்கே நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் முதல் பாதிக்கதை.


நண்பர்கள் இருவர் வில்லனால் பாதிக்கப்படுகிறார்கள்.நாயகன் வில்லனை எப்படி முறியடிக்கிறார்? என்பது பின் பாதி காமெடிக்கதை.கூடவே இரு நாயகிகளின் கிளாமரும் உண்டு.மருந்துக்குக்கூட சோகக்காட்சிகளே இல்லை.

நாயகன் ஆக விஷால் ஜாலியாக. நடித்திருக்கிறார்.க்ளைமாக்சில் வில்லனுடன் போடும் சோலோ பைட்டில் எய்ட் பேக்ஸ் ஜிம் பாடி காட்டுகிறார்


இரண்டாவது நாயகன் ஆக காமெடி கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் சந்தானம்.டைவர்ஸ் கேட்கும் மனைவி,ஆகாவளி மாமியார் இவர்களுடன் அடிக்கும் லூட்டி கல கல


நாயகிகள் ஆக  அஞ்சலி,வரலட்சுமி என இருவர் .அருமையான கிளாமர்.

மகளிர் மட்டும் நாகேஷ் டெட்பாடிக்காமெடி டிராக் போல இதிலும் மனோபாலா காமெடி இருக்கு.செம.


மணிவண்ணன் நடிப்பும் அருமை.வில்லன் ஆக சோனு சூட் குட்.


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  சுந்தர் சி.

விஜய் ஆண்ட்டனியின் இசையில் ஆல்ரெடி 3 பாடல்கள் மெகா ஹிட்.  ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு கண்களுக்குக்குளுமை.136 நிமிடங்கள் டைம் ட்யூரேசன்.


சபாஷ்  டைரக்டர்

1.  விஷால் ,அஞ்சலி காதல் மலரும் ஓப்பனிங சீன்

2. சந்தானம் ,அவர் சம்சாரம்,மாமியார் காமெடி டிராக் குட்

3. கிணற்றுக்குள் விஷால்,அஞ்சலி,வரு மூவரும் விழும் காட்சி அழகு அதன் பின். வரும் காமெடி டிராக் செம

4. மனோபாலா டெட் பாடி காமெடி டிராக்

5 சந்தாநத்தின். ஒன் லைனர் காமெடிக்கலக்கள்கள் 38



செம  ஹிட்  சாங்க்ஸ்

1.சற்று முன் இருந்த என்னில் உன்னைக்கண்ட பின்

2  சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு வண்டி

3'டியர் லவ்வரு. டியர் லவ்வரு நீ ஒரு


  ரசித்த  வசனங்கள் 

1 வாழ்க்கைல எதை ஜெயிக்கிறோம்கறது முக்கியம் இல்லை.எதுல ஜெயிச்சு வாழ்க்கையை ஜெயிக்கிறோம்கறதுதான் முக்கியம்

2. எவ்ளோ அழகாப்பேசி அக்யூஸ்ட் பொண்ண. நைசா அவனோட வீட்டுக்குத்தள்ளிட்டுப்போறான் பார்த்தியா?


3  ஒத்தப்பெண்ணைக்காப்பாத்திட்டு எம் ஜி ஆர்ஙகறியே?அப்போ நான் யாரு?சரோஜா தேவியா!?


4  கட்டுன பொண்டாட்டியை வாடி போடிநு. கூப்பிடாம. வதஙகுன கோழின்னா கூப்பிடுவாங்க?

5. அடல்ட்ஸ் ஒன்லி சாமியாரும் ,அடஙகாத மாமியாரும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை


6. முன்னே பின்னே நீ பொண்ணுங்களைப்பார்த்ததே இல்லையா?

முன்னே பார்த்தாச்சு.பின்னே இன்னும். பார்க்கலை


7 உன் மச்சினியை நான் சைட். அடிச்சுக்கறேன்.என் மாமியாரை நீ  பார்த்துக்க


8.   உங்களை. எல்லாம் குழந்தையா. இருந்தப்போ பார்த்தது.இப்போ உங்க கால குழந்தை

என்ன பண்றது? மேரேஜ் மட்டும்தான் பெரியவஙக பண்ணி வைக்கறாங்க.மத்ததெல்லாம் தானா நடந்துடுது.

9 கட்ன பெண்டாட்டி யை க்கை நீட்டி அடிக்கலாமா?

இதுக்காகக்கராத்தே கத்துக்கிட்டு வந்து கால் நீட்டி உதைக்க முடியுமா!?


10. கல்யாண வீட்டில். சாவு விழுந்தா. மேரேஜ் நின்னுடுமா? இது தான் சாக்குனு மாம்யாரைக்காலி பண்ணிடலாமா?


11. பாடில பல வகை இருக்கு.அவனுது. பைட் பண்ற. பாடி.என்னுது ரொமான்ஸ் பாடி.வேனும்னா உன். பொண்ணைக்கேட்டுப்பாரு

.12   ஆயிரம் தான் இருந்தாலும் உன் சம்சாரம் சப்பை பிகருதான்


டேய்


பிரண்ட். சம்சாரத்தை ரசிச்சாதான் தப்பு.திட்டுனா. தப்பில்ல


13  நம்மால முடியுமா? என நினைப்பதை விட நம்னால முடியலைனா. வேற

யாரால். முடியும்னு நினைப்போம்


14.  சென்னை ல பாதிப்பேரு வாழ்க்கையைத்தொலைத்தவர்கள்.மீதிப்பேரு நிம்மதியை. தொலைத்தவர்கள்


15. வேண்டும் என சொல்லும். பெண்ணை விட நம்மை வேண்டாம்னு சொல்ற பொண்ணுதான் சீக்கிரம் கிடைக்கும்


16 நல்ல. நேரம். பார்த்தாச்சா?


உலகம். சுற்றும். வாலிபன் கூடப்பாத்தாச்சி


17  கம்முனு. இருந்த காலநில கும்முனு ஒரு. பிகரு


18 எத்தனை பசஙகளை. நாய் மாதிரி அலைய விட்டிருப்பா நாய் அவளைத்துரத்துனா என்ன ?


19 நான் பார்க்கத்தான் கோமாளி.நிஜத்துலபேமானி


20. கிணத்துல விழுந்துட்டேன்


அது எப்படி விழும்போது ரெண்டு பொண்ணுங்களையும் கூட்டிட்டுப்போய் விழுந்தே?


21.கயிறை எடுத்துப்போடு


நீ நூல் விடுவே.நான் கயிறு விடனுமா?


22 மேல யாரும் இல்ல


கீழே யும். யாரும். இல்லை


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


காமெடிப்படத்துல எதுக்கு லாஜிக் பார்க்கனும்?அஞ்சலி,வரலட்சுமியப்பார்க்கவே டைம் பத்தல




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மதகஜராஜா(2025)- தமிழ் -13 வருடங்களுக்கு முன் வர வேண்டிய படம்,லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக ஹிட் அடித்திருக்கிறது.முதல் பாதி சந்தானத்தின் கலக்கல் காமெடி +மனோபாலா,மணிவண்ணன் பிரமாதமான நடிப்பு+விஷாலின் எய்ட் பேக்ஸ் உழைப்பு ,பின் பாதி மாமூல் மசாலா.பி ,சி செண்ட்டர்களில் பின்னிப்பெடல் எடுக்கும்

விகடன் மார்க் 45. ரேட்டிங். 3.25. / 5

வணங்கான்(2025)- சினிமா விமர்சனம் (ரிவஞ்ச் ட்ராமா)

                   


வணங்கான்(2025)- சினிமா விமர்சனம் (ரிவஞ்ச் ட்ராமா)


இயக்குனர் பாலா வின் சரித்திரத்தைப்புரட்டிப்பார்த்தால்  அவரது முதல் படமான. சேது(1999),3 வது படமான. பிதா மகன் (2003 )    இரண்டுமே ரசிகர்களால்,விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படஙகள்.கமர்சியல் வெற்றியும் பெற்றவை.இரண்டாவது படமான நந்தா (2001) விமர்சன ரீதியாகப்பாராட்டுப்பெற்றாலும் ,சூர்யாவுக்குப்புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தினாலும் பிரம்மாண்ட வெற்றி இல்லை.4 வது படமான நான் கடவுள் (2009),6 வது படமான பரதேசி (2013) இரண்டுமே பல விருதுகளைப்பெற்றாலும்,விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும்  கமர்சியல் சக்சஸ் பெறவில்லை.5 வது படமான அவன் இவன் (2011) ,7 வது படமான தாரை தப்பட்டை(2016) ,8 வது படமான. நாச்சியார் (2018) மூன்றுமே டப்பாப்படங்கள்.9 படமான வர்மா(2020) வெளிவரவே இல்லை.தயாரிப்பாளருக்கே பிடிக்கவில்லை.இது பாலா வுக்கு பத்தாவது படம்.



திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் பெரிய ரீச் இல்லாத நாயகன் அருண் விஜய்.முறைமாப்பிள்ளை (1994) மூலம் சினிமாவுக்குள் வந்தவரின் கவனிக்கத்தக்க படஙகள். பாண்டவர் பூமி(2001),இயற்கை(2003),தடையறத்தாக்க (2012),தடம்(2018),மிஷன் சேப்டர் 1(2024)


இவர்கள் இருவரின் காம்போவில் வந்திருக்கும் படம் கமர்ஷியலாக ஹிட் தான்

ஸ்பாய்லர்  அலெர்ட்

பிதாமகன் விக்ரம் கேரக்டர் போலவே இப்படத்தின் நாயகனும் காது கேளாத ,வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.பெற்றோர் இல்லை.ஒரு தங்கை உண்டு.


நாயகி டூரிஸ்ட் கைடு.நாயகனை. சுற்றி சுற்றி வருபவர்.இவர்களை சுற்றியே முதல் 50 நிமிடஙகள் திரைக்கதை கலகலப்பாய் நகர்கிறது.52 வது நிமிடத்தில் மெயின் கதை தொடங்குகிறது.


விழி ஒளி இழந்த பெண்களுக்கான விடுதியில் மூவர் புகுந்து பெண்கள் பாத்-ரூமில் குளிக்கும்போது பார்த்து ரசிக்கின்றனர்.விஷயமறிந்த நாயகன் மூவரில் இருவரைகோடூரமாகத்தாக்கிக்கொலை  செய்கிறான்.போலீஸ் விசாரனையில் தானாக முன் வந்து சரண் அடைகிறான்.


மூன்றாவது குற்றவாளி என்ன ஆனான்? நாயகனுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பது மீதி திரைக்கதை


நாயகன் ஆக அருண் விஜய் பிரமாதமாக நடித்துள்ளார்.வசனமே பேசாமல் ஆடியன்சைக்கவர்கிறார்

கீர்த்தி ஷெட்டி ,ரோஷினி பிரகாஷ,மமிதா பைஜூ ,மிஷ்கின்,சமுத்திரக்கனி உட்பட அனைவரது நடிப்பும் அருமை


பாடல்களுக்கான இசை ஜி வி பிரகாஷ். குமார்.பரவாயில்லை ரகம்.பின்னணி இசை. சாம் சி எஸ்.குட்.சதீசின் எடிட்டிங் கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது.ஒளிப்பதிவு குருதேவ்.குட் ஒர்க்

சபாஷ்  டைரக்டர்

1 ஜட்ஜ் ஆக வரும் மிஷ்கின் கேரக்டர் டிசைன்,அவர் நடிப்பு,அவர் வரும் காட்சிகள் அனைத்தும் கலக்கல் ரகம்


2 விசார்ணை அதிகாரி ஆக வரும் சமுத்திரக்கனியின் உடல் மொழி, கம்பீரம் ,தோற்றம் செம


3 நாயகனின் தங்கையாக வருபவர் நடிப்பு,நாயகி,நாயகன் அனைவர் நடிப்பும் ரசிக்க வைத்தன







  ரசித்த  வசனங்கள் 

1. எந்தக்குறையுமே இல்லாத உங்களால எங்களை மாதிரி குறை உள்ளவங்க பிரச்சனைகளைப்புரிந்துகொள்ள முடியாது


2 நான் சொல்வதை எச்சரிக்கையாகவும். எடுத்துக்கலாம்.வேண்டுகோளாகவும் எடுத்துக்கலாம்.


3 யாரம்மா நீங்க? எங்கே போறீங்க? யாரைபார்க்கனும்?

ஏக் காவ் மே ஏக் கிசான் ரஹதா த்தா


ஒக்கே மேடம்.நீங்க போகலாம்

4 டாக்டர்.ஆரம்பிக்கலாமா?


இது என்ன பாஸ்ட் புட் கடையா?


5. சண்டைன்னா கட்டிப்புரண்டு சண்டை போட வேணாமா? ஒரு கிக்கே இல்லை.


6. விவேகானந்தர் எந்தப்பாறையில் நின்று தன் உரையை நிகழ்த்தினார்?


திஸ் ராக்?


எஸ்.யூ ராக்ஸ்


7 அவரு பார்க்க. சிவாஜி மாதிரி இருந்தாருஙக.அதனால நடிக்கிறார்னு நினைச்சுட்டேன்


8 ஓஹோ.முன். கோபக்காரனா. இருந்தா போலீஸ் ஸ்டேசன்ல பைட் போடுவியா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 125 நிமிடப்படத்தில் முதல் பாதி. வரை மெயின் கதைக்கே வரவில்லை

2 வில்லனின் கேரக்டர் வலுவாக அமைக்கப்படவில்லை

3 கொடூரக்கொலைகள் செய்த நாயகனை ஜாமீனில் எப்படி விடுகிறார்கள்?ஜாமீன் தொகை கட்டும் அளவு அவருக்கு வசதி இல்லை.

4 கொலைக்கான காரணத்தை பெண்கள் நலன் கருதி நாயகன் சொல்ல மறுக்கிறான்.ஆனால் திரும்பத்திரும்ப சொல்லு சொல்லு என எல்லோரும்வற்புறுத்துவது போர்.ஒரு கட்டத்தில் எரிச்சல்

5 க்ளைமாக்ஸ் சோகம் வலியத்திணிக்கப்பட்டது

6. பிராமணப்பெண்களை நாயகி மட்டம் தட்டும் காட்சி தேவை இல்லாதது.அதே போல் திருநங்கை களை சித்திரவதை செய்யும். காட்சி  திணிப்பு


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+


கொடூரமான வன்முறை



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் .ஆண்கள் பார்த்து ரசிப்பார்கள்.விகடன் மார்க் 43. ரேட்டிங் !/2.75 /5

Sunday, January 12, 2025

மெட்ராஸ்காரன்(2025)-தமிழ் - சினிமா விமர்சனம்( ஆக்சன் ட்ராமா)

         


    மெட்ராஸ்காரன்(2025)-தமிழ் - சினிமா விமர்சனம்( ஆக்சன் ட்ராமா)               


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ,நாயகி இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன்  திருமணம் செய்ய இருப்பவர்கள்.விடிந்தால் அவர்களுக்குத்திருமணம்.



வில்லன் ஒரு முன் கோபி.நண்பரின் மகளை யாரோ ஒருவன் ரெகுலராக பஸ்சில் தகறாரு செய்கிறான் என்பதை அறிந்ததும் அதே பஸ்சில் அவன் கையை வெட்டி ஜெயிலுக்குப்போனவர்.வில்லனின் மனைவி நிறை மாத கர்ப்பிணி.


நாயகி நாயகனுக்கு போன் செய்து விடிந்தால் நமக்குத்திருமணம்.கணவன் ,மனைவி ஆகி விடுவோம்.கடைசி சந்திப்பாக நாம் காதலர்களாக சந்திக்க வேண்டும்.உடனே கிளம்பி வா என அழைக்கிறாள்.நாயகனும் ஒரு ஆர்வத்துடன் காரை எடுத்துக்கொண்டு மணமகள் ஆன நாயகி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு செல்கிறான்.வழியில் எதிர்பாராத விதமாக வில்லனின் மனைவி மீது நாயகனின் கார் மோதி விடுகிறது


பெரிய கலவரம் ஆகி விடுகிறது.வில்லனின் ஆட்கள் நாயகனைப்பிடித்து வைத்துகொள்கிறார்கள்.போலீஸ் கேஸ் பைல் ஆகிறது.திருமணம் நின்று போகிறது


இதற்குப்பின் நிகழும். திருப்பங்கள் தான். மீதி திரைக்கதை


நாயகன் ஆக கும்பாளிங்கி நைட்ஸ் பட நாயகன்  ஷான் நிஹாம் அருமையாக நடித்துள்ளார்.அனுதாபம் ஏற்படுத்தும் நல்ல கேரக்டர்.நடிக்க பல இடஙகளில் நல்ல வாய்ப்பு.சரியாகப்பயன்படுத்தி இருக்கிறார்.


நாயகி ஆக. நிஹாரிகா அழகு.ஆனால் அதிக வாய்ப்பில்லை.ஒரே ஒரு பாடல் காட்சி ,சில வசனங்கள் மட்டுமே.


வில்லன் ஆக கலையரசன்.பின்னி இருக்கிறார் நடிப்பில்.அவரது மனைவி ஆக ஐஸ்வர்யா தத்தா .நல்ல நடிப்பு.நாயகியை விட இவருக்குத்தான் அதிகக்காட்சிகள்


நாயகனின் தாய் மாமா ஆக கருணாஸ் நல்ல குணச்சித்திர நடிப்பு. கீதா கைலாசம் ,தீபா இருவரும் ஜோதிகாவுக்கே டப் பைட் கொடுக்கும் ஓவர் ஆக்டிஙக் ஓமனாக்கள்


சாம் சி எஸ் இசையில் 3 பாடல்கள் குட்.பின்னணி இசை ஓக்கே ரகம்.ஆர் வசந்த குமாரின் எடிட்டிங் கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது.ஒளிப்பதிவு பிரசன்னா. எஸ் குமார்.திருமண மண்டபத்தில் நிகழும் ஜாலி கலாட்டாக்களை தத்.ரூபமாகப்படம் பிடித்துள்ளார்.


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் வாலி மோகன் தாஸ்




சபாஷ்  டைரக்டர்

1. முதல் பாதி திரைக்கதை. ஆடியன்சுடன் நன்றாகவே. கனெக்ட் ஆகி ஒரு பதைபதைப்பை ஏற்படுத்துகிறது


2  நாயகன்,வில்லன் உட்பட அனைவரின் நடிப்புமே பாராட்டத்தக்கவை

3. மூன்று பாடல்களைப்படமாக்கிய விதம் .முதல் பாடல் ஓபனிங்கில் வரும் திருமணக்கொண்டாட்டப்பாடல்.இரண்டாவது இழவு வீட்டுப்பாடல்.இரண்டுக்குமான முரணை நன்கு வெளிப்படுத்திய விதம்

 ஹிட்  சாங்க்ஸ்

1. தைத்தக்கான் கல்யாணம் தகிடதத்தான் கல்யாணம்


2. ஏன் சாமி ஏன் சாமி உனக்குக்கண் இல்லையா?

3. கண்ணாடி நெஞ்சில் ஏண்டி கல் எறிஞ்சே?


  ரசித்த  வசனங்கள் 

1 தான் கஷ்டப்பட்ட ஊரில் ஜாம் ஜாம்னு வாழ்ந்து காட்ட ஆசை அவருக்கு


2. திருமணம் ஆன புதுசுல எல்லாத்தம்பதிகளும் இணக்கமாத்தான் இருப்பாஙக .ஒரு ஆறு மாசம் போனா. எலியும்,பூனையுமா ஆகிடுவாஙக


3. நான் அதிகமா ஏமாறுவது அவ சிரிக்கும்போதுதான்


4 வலி என்னோடது.

5. என் வாழ்க்கை எங்கே தொலைந்ததோ அங்கே போய்த்தேடறேன்


6. கடவுளாப்பார்த்து உன்னை அனுப்பி இருக்கார்.கண்ணை மூடி கடவுளை வேண்டிக்கோ.உன்னை. அந்தக்கடவுள் கிட்டேயே அனுப்பி வைக்கிறேன்


7. எனக்குத்தோல்வியில் கவலை இல்லை.அந்த ஜாதிக்காரன்கிட்டே தோத்ததுதான் கவலை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 இடைவேளைக்ஜ்ய்ப்பின்னான 50 நிமிடக்காட்சிகளை வெட்டி விட்டுக் க்ளைமாக்ஸ் 10 நிமிசக்காட்சி மட்டும் இருந்தாலே போதும்.பின் பாதி தேவை இல்லாத தலை சுற்றல்


2. நாயகனுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை.வாழ்விடம் சென்னை.ஆனால் மலையாளம் கலந்த தமிழில் பேசுகிறார்


3 டைட்டிலுக்கும். படத்துக்கும் சம்பந்தம். இல்லை


4. ஒரு காட்சியில் நாயகனிடம் கிராமத்து ஆட்கள் நீ எந்த ஊர்? எனக்கேட்கும்போது. நாயகன் புதுக்கோட்டை என சொல்லாமல் மெட்ராஸ்காரன் என்கிறார்


5. முக்கியமான பல காட்சிகளில் யாருமே மொபைல்ப்போன் யூஸ் பண்ணவே இல்லை


6. ஹாஸ்பிடலில் நடக்கும் ரகளையில் ஆளாளுக்கு ஏய் ஓய் எனக்கத்த நமக்குக்காநமக்குக்காது வலிக்குது


7  வில்லனும் ,அவன் மனைவியும் டூ வீலரில் போகும்போது நடக்கும்  சண்டைக்காட்சி நிகழ்காலமா?பிளாச்பேக்கா? என்ற குழப்பம்

8  வில்லனின் மச்சினனை இன்னொரு வில்லனாக பில்டப் காட்டி விட்டு அந்த கேரக்டரை அம்போ என விட்டு விட்டார்கள்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யு/ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி நல்லாருக்கு.பின் பாதி சொதப்பல்.விகடன் மார்க் 40.குமுதம் ரேங்க்கிங். சுமார்.ரேட்டிங் 2./5

Saturday, January 11, 2025

BARROZ (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் (பேன்ட்டசி டிராமா )

             

  மலையாளம் சினிமா   உலகில்  முதல்  100 கோடி  வசூல் சாதனை செய்த  படம் புலிமுருகன் (2016) .அந்த  தெம்பில்  100 கோடி ரூபாய் பட்ஜெட்டில்  நேரடி  3  டி படமாக  ஒரு படத்தைக்கொடுத்திருக்கிறார் இயக்குனராக முதன் முதலாக அவதாரம் எடுத்திருக்கும் மோகன் லால் . மை  டியர் குட்டிசாத்தான் (1984)  இந்தியாவின் முதல் 3 டி படம் .அந்தப்படத்தின் இயக்குனர் ஆன ஜிஜோ  பொன்னூஸ்  எழுதிய பெரோஸ் -கார்டியன் ஆப்  டி காமாஸ்  ட்ரெஷர் என்ற   நாவலை  மையமாக  வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் .பாக்ஸ் ஆபீசில்  இந்தப்படம்  வெறும்  13 கோடி  மட்டுமே  வசூலித்து  தோல்வி  அடைந்திருக்கிறது . குழந்தைகளை க்கவரும் வகையில்  இருக்கும் இந்தப்படம்  எதனால்  எல்லோரையும் கவரவில்லை என்பதைப்பார்ப்போம்  .இந்தப்படத்தின்  தயாரிப்பாளரும் மோகன் லால்  தான்             


ஸ்பாய்லர்  அலெர்ட்


கதைக்களம்  1600 ல்  நடக்கிறது . நாயகன் ஆன பரோஸ்  போர்த்துக்கீசிய  மன்னரிடம்  பணி  புரிகிறார் . மன்னருக்கு மிகவும் நம்பிக்கையானவர் . ஒரு வேலை விஷயமாக வெளியூர் போக நேரிடும்போது  மன்னர்  நாயகனை  அழைத்து   ஒரு பூதமாக  அவரை  மாற்றி   நான் திரும்பி வரும் வரை  அல்லது என்  சந்ததியினர் வரும் வரை   இந்த பொக்கிஷத்தைப்பாதுகாக்கும்பணி உன்னுடையது என கட்டளை  இடுகிறார் .400  ஆண்டுகளாக  அதைப்பாதுகாத்து வருகிறார்நாயகன்  .இடைப்பட் ட  காலத்தில்  பலரும்  அந்த பொக்கிஷத்தை அடைய நினைத்தும் யாராலும் முடியவில்லை 


13  வயது   சிறுமி  ஒருத்தி  அவள் தான்  அந்த மன்னரின்  கடைசி  வாரிசு  அங்கே  வருகிறாள் . நாயகன்  அந்தப்பெண்ணை  அடையாளம்  கண்டு கொண்டாரா ?  சிறுமி  பூதத்தைப்புரிந்து கொண்டதா?  என்ன ஆனது என்பது   மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  மோகன் லால்  மொட்டை கெட்டப்பில்  வருகிறார் . நடிக்க அதிக வாய்ப்பு இல்லை .குழந்தைகளைக்கவரலாம் , அவ்வளவு தான் .நாயகனுக்கு   வழி காட்டும்  பொம்மையாக  வூடு  என்னும்   கேரக்ட்டர்   ரசிக்க  வைக்கிறது .குழந்தைகளை மிகவும் கவரும் . வாரிசு  சிறுமியாக  மாயா ராவ் அழகாக வந்து போகிறார் . ஆனால்  இவருக்கும் நடிக்க  அதிக    வாய்ப்பில்லை 


 பி அஜித்  குமாரின் எடிட்டிங்கில்  படம் 157  நிமிடங்கள்   ஓடுகிறது . சந்தோஷ்  சிவன்தான்  ஒளிப்பதிவு .கலக்கி இருக்கிறார் பாடல்களுக்கான இசையை லிடியன் நாதஸ்வரம் , பெர்ணான்டோ,  மைக்கேல்  ஆகிய மூவரும்  அமைத்து  இருக்கிறார்கள் .பின்னணி இசை  -  மார்க்  கில்லியன் .வசனம் - கலவூர் ரவிக்குமார் 


சபாஷ்  டைரக்டர்


 1    2 டி  கேமராவில்  படமாக்கி பின் அதை 3 டி யில் மாற்றி  ஏமாற்றாமல்  நேரடியாக  3 டி யில் படமாக்கிய விதம் அருமை . குழந்தைகளைக்கவரும் காட்சிகள்  செம 


2  நாயகனுக்கு   வழி காட்டியாக  வரும்   அந்த  வூடு பொம்மையின்  சுட்டித்தனங்கள் செம .அனிமேஷன்  கேரக்ட்டர்   தான் என்றாலும்  கலக்கல் டிசைனிங்க் 


3 ஒளிப்பதிவின்  பிரம்மாண்டம் , ஆழ் கடல்  காட்சிகள் ,ஆர்ட்  டைரக்சன் , கோவாவின் அழகைக்காட்டிய விதம் 


4   சவுன்ட்  டிசைனிங்  ஒர்க் , சி ஜி  ஒர்க்   எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான பிரம்மாண்டம், செய் நேர்த்தி 

 ரசித்த  வசனங்கள் (கலவூர் ரவிக்குமார் ) 


1  அதிகப்பிரசங்கித்தனத்துக்கு அப்ரிசியேசன்  தந்திருக்கேன் 


2   ஒரு அப்பாவுக்கு  அம்மாவாக  இருக்கவும்  தெரியணும் , குறிப்பா  அம்மா  இல்லாத குழநதைக்கு அப்பாவா இருப்பவருக்கு .....


3  மறக்க  வேண்டிய  வேதனைகளை  திரும்பி  திரும்பி  நினைச்சிட்டு இருக்கக்கூடாது 


4 அழுது  புலம்பவே உனக்கு உரிமை இல்லை .எல்லாம் கர்மாப்படி தான் நடக்கும் 


5  கொடுத்த வாக்கு   என்  உயிருக்கு சமம் 


6 எஜமான் மேல  அளவுக்கதிகமான  விசுவாசம்   பூதத்தின்  குணாம்சம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  கங்குவா  படத்தில்  நாயகனுக்கும் அந்த சிறுவனுக்கும் உள்ள பாண்டிங்க்  ஆடியன்ஸான  நமக்கு எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது . ஒரு கனெக்ட்டே  உருவாக்கி இருக்காது . அதே  பிரச்சனை  இந்தப்படத்திலும் . நாயகன் ஆன பூதம் ,இசபெல்லா ஆன அந்த வாரிசு  சிறுமி   இருவருக்குமான  பாண்டிங்க்  சரியாக சொல்லப்பட வில்லை . அது மாபெரும்   மைனஸ் 


2  பாடல்கள்  தேவையற்ற திணிப்பு .ஆல்ரெடி  திரைக்கதை  செல்ப் எடுக்காமல்  தடுமாறும்போது  அப்பப்ப   பாடல் காட்சிகள் வந்து பாடாய்ப்படுத்துது 


3   வில்லனை  நாயகன் எப்படி சமாளிக்கப்போகிறார்   என்பதை  முந்திரிக்கொ ட்டைத்தனமாக  முன் கூட்டியே  சொல்லி விடுவதால்   சுவராஸ்யம் இல்லை 


4  பரோஸ்  என்னும் பூதம் யார் ? என்பதை  அடிக்கடி  இடம் சுட்டிப்பொருள்  விளக்கிக்கொண்டு இருப்பது எதுக்கு ? 


5   13   தலைமுறைகளாக  மன்னரின் வாரிசுகள்  எல்லாம் எதனால் சைலன்ட் மோடில்  இருந்தன ?என்ற கேள்விக்கு விடை இல்லை 

6  காட் சிகள்  ஒவ்வொன்றும்  டி வி சீரியல்  மாதிரி  ரொம்ப நீளம் .டக் டக் என கட் பண்ண வேண்டாமா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-CLEAN U 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - குழந்தைகள் , பெண்கள்  ரசித்துப்பார்ப்பார்கள் . ஆண்களுக்குப்பொறுமை இருக்காது .மோகன் லால்  ரசிகர்கள்  கடுப்பாகிடுவாங்க . தவிர்த்தல் நலம் . ரேட்டிங்  2/ 5 

 இந்தியன் எக்ஸ்பிரஸ்  ரேட்டிங்  = 1/ 5 

த  வீக்  ரேட்டிங்  = 1/ 5 


Barroz
Mohanlal with an armoured outfit
Theatrical release poster
Directed byMohanlal
Dialogues byKalavoor Ravikumar
Based onBarroz: Guardian of D'Gama's Treasure
by Jijo Punnoose
Produced byAntony Perumbavoor
Starring
  • Mohanlal
  • Maya Rao West
CinematographySantosh Sivan
Edited byB. Ajithkumar
Music bySongs:
Lydian Nadhaswaram
Fernando Guerreiro
Miguel Guerreiro
Score:
Mark Killian
Production
company
Distributed by
Release date
  • 25 December 2024
Running time
154 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget100 crore[2]
Box office13.50 crore[3]

Friday, January 10, 2025

GAME CHANGER (2025) -தெலுங்கு - கேம் சேஞ்சர் - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )

                             



ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்   மாநில   முதல்வரின் மகன் .தன அப்பாவின் பதவிக்காலம்   முடிய இருப்பதால் அடுத்து   தான் முதல்வர் ஆக வேண்டும் என நினைக்கிறான் .நாயகன்  ஒரு ஐ ஏ எஸ்  ஆபீசர் . அவர்  பொறுப்பேற்ற  ஊரில்  இருக்கும் அநியாயங்களை எல்லாம் களை  எடுக்கிறார் . நாயகனுக்கும், வில்லனுக்கும் மோதல் உருவாகிறது .  திடீர் என   முதல்வர்  மாநிலத்தின் அடுத்த  முதல்வராக நாயகனை அறிவிக்கிறார் .வில்லனுக்கு   பெரிய  அதிர்ச்சி . அவர் எதனால் அப்படி நடந்து கொண்டார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது .நாயகன் - வில்லன் மோதல் தொடர்கிறது .இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் ? எப்படி ? என்பது மீதி திரைக்கதை 



 நாயகன் ,நாயகனின் அப்பா  என  இரு  வேடங்களில்  க்ளோபல்  ஸ்டார்  ராம்சரண் .இந்த  உலகநாயகன் (க்ளோபல்  ஸ்டார்)  பட் டம்  ராசி  இல்லை போல . . திக்கு வாய்  கேரக்ட்டரில்  வரும்  அப்பா ராம்சரண் ,காலேஜ்  மாணவனாக  அடிதடி  ராம்சரண் , முதலில்  ஐ பிஸ்  ஆபீசர்  , பிறகு ஐ ஏ எஸ்  ஆபீசர்  ராம்சரண்  என  மாறுபட்ட   மூன்று  கெட் டப்கள் , இரு வேடங்களில்  நடித்திருக்கிறார் . இதில்  அப்பா  கேரக்ட்டர்  தான் நடிக்க வாய்ப்பு .மகன் கேரக்ட்டர்  சும்மா டூயட் பாட  , பைட் போடமட்டுமே 


வில்லன் ஆக எஸ்  ஜே  சூர்யா   அதகளம்  செய்கிறார் .வழக்கம்  போல  ஓவர் ஆக்டிங் . ஆனால் ரசிக்க வைக்கும் நடிப்பு . அஞ்சலி  மாறுபட்ட  கெட் டப்பில்  அசத்துகிறார் .நாயகி ஆக  கியாரா அத்வானி  3  டூயட்டுக்கு மட்டும் வந்து போகிறார் .சமுத்திரக்கனி  அடக்கி  வாசித்திருக்கும் ஒரே படம் இதுதான் போல . ஸ்ரீகாந்த் நல்ல ரோல் , காமெடி  நடிகர்  சுனில்  கொஞ்சம்   சிரிக்க வைக்கிறார் . ஹோ ம்  மினிஸ்ட்டர் ஆக  வரும்  ஜெயராம்  காமெடி  செய்கிறார் . இவர்கள்  போக  மீதி 478 ஆர்ட்டிஸ்ட்கள் முக்கியக்கேரக் டர்களில் வருகிறார்கள் . பெரிய பட்ஜெட் படம் ஆச்சே 



எஸ்  தமன்  இசையில் பாடல்கள்  பரவாயில்லை ரகம் தான் .பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார் .ஒளிப்பதிவு  திரு .கலக்கலான  பிரம்மாண்டம் .கலர் புல்லாக காட்சிகள் .சமீரின் எடிட்டிங்கில்  படம் 165 நிமிடங்கள்  ஓடுகிறது .இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம் .

 பாடல் ஆசிரியர்   விவேகா  திரைக்கதை அமைத்திருக்கிறார் .இந்தப்படத்துக்குக்கதை  "ரெடி "செய்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் .வசனம்  சாய்  மாதவ் புர்ரா .


சபாஷ்  டைரக்டர்


1  ஜருகண்டி  பாடல்  காட் சியில்   திருவின்  ஒளிப்பதிவு  கலக்கல் ரகம் 


2  எஸ்  ஜெ  சூரியாவின்   அதகளமான நடிப்பு , அஞ்சலியின்  குணச்சித்திர நடிப்பு 


3  காமெடியன்   சுனில்  , ஜெயராம்   இருவரின்   காமெடிக்காட்சிகள் 


4   நாயகி  குடி இருக்கும் ஏரியா  நாயகன் கலெக்ட்டர் ஆக இருக்கும் ஏரியாபார்டர்   தாண்டுவதால்   அவர் வீடுக்குப் போகமாட்ட்டார்   என்ற  ரசிக்க வைக்கும் காமெடி 


  ரசித்த  வசனங்கள் 


1 நாம  செஞ்ச  தப்பெல்லாம் நம்மைத்துரத்திட் டே  வருது , அதை எல்லாம் சரி செய்யணும் 


2  நல்லவங்க அரசியலுக்கு வந்தா நமக்கே  தெரியாம  நம்ம  நேர்மையை  அழிச்சுடுவாங்க 


3   ஒரு நல்லது  நடக்கணும்னா  வருடக்கனக்கா  காத்திருக்க வேண்டி இருக்கு 


4   இப்போ  இல்லைன்னா எப்பவும் இல்லை 


5   சைட்  அடிக்கிறவனைப்பார்த்திருக்கேன் , இவன் ஏன்  சைடு சைடா நடக்கிறான் ? 


6  நீங்க  பார்க்க கமல் மாதிரியே இருக்கீங்க .


 நிஜமாவா? 


 குருதிப் புனல்  க்ளைமாக்ஸ்  கமல் மாதிரி  ( 12/10/1995  தேதி  இட் ட  குமுதம்  வார இதழில்  வெளியான ஜோக் இது )  



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பிரபல  வார இதழ்களில்  ரூ 100  சன்மானம்    கதைக்கே  1008  உறுதி மொழிகள்   வாங்குவார்கள் . இது எனது சொந்தக்கற்பனை . அட்லீ  போல  திருடிய கதை அல்ல  என  உறுதி அளித்தால் தான் கதை பிரசுரம் ஆகும் . அப்படி இருக்கும்போது  இந்த திருட்டுக்கதையை  இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜிடம்  வாங்கி அதற்கு  சம்பளமாய்  3 கோடி ரூபாய் தண்டமாய் தந்தது  எதனால் ?பிரேமலதா  விஜயகாந்த்துக்கு  ரூ  50 லட்ச ம்   தந்தாலே   தென்னவன்  பட ரீ மேக் உரிமை  கிடைத்திருக்குமே ? 


2   ஒரு காட் சியில்  வில்லன் எஸ்   ஜே   சூர்யா  500  ரூபாய்  நோட்டுக்கட்டுகள்   பலவற்றை   தண்ணீரில்  வீசி   வீணடிப்பார் . இன்னொரு காட் சியில்  தன அடியாளிடம்   ஏண்டா ,பணத்தோட அருமை தெரியுமா?   எனகேட்பார் .கேரக் டர்   டிசைனில்  குழப்பம் 


3    ஐ ஏ எஸ் ஆபீஸருக்கு  உதவியாளராக , டவலை கவரும் காமடியன்   பார்வைக்குறைபாடு உள்ளவர்   எனக்காட்டி இருக்கிறார்கள் .எந்த  மாநில   அரசாங்கம்  அப்படி   கவர்மென்ட்   ஜாப் தருது ?


4   குருதிப்புனல்    கமல்  ஜோக்  குமுதத்தில்  வந்து   அதை மதுரை  முத்து , ஈரோடு  மகேஷ்  உட்படபல பேர் திருடி  மேடைகளில் பலமுறை ஒப்பித்து விட் டார்கள் .அப்படி  இருந்தும்  அந்த ஜோக் படத்தில் வருது .என்ன  சூப்பர் வைசிங்க் பண்றீங்க?  வாசிப்பு அனுபவம்  மீடியா  டச்  எதுவுமே இல்லாமல் அப்டேட் ஆகாமல் இருந்தா எப்படி ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்கேம் சேஞ்சர் (2025) - தெலுங்கு/தமிழ் - முதல் பாதி நல்ல வேகம் ,பாடல் காட் சிகள் வழக்கமான பிரம்மாண்டம் .தமிழ் செல்வன் (1996) + தென்னவன் (2003) இந்த ரெண்டு படங்களும் நினைவு வருது .தமன் இசை பரவாயில்லை ரகம் தான் ,ஏ ஆர் ஆர் அளவில் பாதி கூட வரலை.எஸ் ஜே சூர்யா செம ஆக்டிங்க். ஷங்கர் "ஜெய்" ஷங்கர் ஆவது சிரமம் ..இந்தியன் பாகம் 2 அளவு டப்பா இல்லை ,அதே சமயம் டாப்பாகவும் இல்லை .முதல்வன் (1999) மாதிரி எடுக்க நினைத்திருக்கிறார் ..முடியவில்லை விகடன் மார்க் 40 ரேட்டிங் 2.25 / 5


Game Changer
Theatrical release poster
Directed byS. Shankar
Screenplay byVivek Velmurugan
Dialogues bySai Madhav Burra
Story byKarthik Subbaraj
Produced by
Starring
CinematographyTirru
Edited byShameer Muhammed
Ruben
Music byThaman S
Production
company
Distributed bysee below
Release date
  • 10 January 2025
Running time
165 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹350–400 crore[2][3][4]

Thursday, January 09, 2025

IDENTITY (2025)- மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

               

          2/1/2025  அன்று  கேரளாவில் ரிலீஸ் ஆன இப்படம்  அட்டகாசமான  முதல் பாதி க்ரைம் த்ரில்லர் பாணி திரைக்கதை , கொஞ்சம்   சுற்றி வளைத்துக்குழப்பி அடிக்கும்  பின் பாதி ஆக்சன் த்ரில்லர் திரைக்கதை  எனக்கலந்து  கட்டி  அடித்து  ரசிகர்களைக்கவர்ந்த இப்படம்  முதல்  வாரத்திலேயே  23 கோடி வசூல் செய்துள்ளது .தமிழ் நாட்டில் தமிழ்  டப்பிங்கில்  வெளியாகி உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு  விட்னஸ் செக்யூரிட்டி ஆபீசர் .அதாவது  ஒரு கொலை ,,கொள்ளை திருட்டு  ஏதாவது நடந்தால்  குற்றவாளியை  நேரில் பார்த்த  சாட் சியை  அந்த   கேஸ்  கோர்ட்டில் நடக்கும் வரை சாட் சியை பாதுகாப்பாக தன கஸ்டடியில் வைத்திருப்பவர் .



 நாயகன்  ஒரு ஓவியர் .போலீஸ்  டிபார்ட்மெண்ட்டுக்கு  உதவியாக  இருப்பவர் . குற்றவாளியை  நேரில் பார்த்த  சாட் சி  கொடுக்கும்  விவரங்கள் , வர்ணனைகளை  வைத்து  குற்றவாளியின்  உருவத்தை  தத்ரூபமாக வரைந்து கொடுப்பவர் 


 நாயகி  ஒரு தனியார் டி வி யில்  பணி  புரிபவர் . அலுவலக வேலையாக ஒரு வேலை செய்யும்போது  ஒரு கொலையை நேரில் பார்த்து விடுகிறார் .கொலையை நேரில் பார்த்த சாட் சியான இவரை  வில்லன்  தன்  கஸ் டடியில் வைக்கிறான் 


ஒரு ஜவுளிக்கடையில்  ட்ரையல்  ரூமில் துணி மாற்றும்போது  அங்கே  ரகசியக்கேமரா போன்  இருப்பதை ஒரு பெண் பார்த்து விடுகிறார் .அந்தப்பெண்ணை  வீடியோ  எடுத்த  நபர்  பணம் கேட்டு பிளாக் மெயில்  செய்கிறான் . இந்த  மிரடடல் பேர்வழியைத்தான்  யாரோ  கொடூரமாகக்கொலை செய்கிறார்கள் .அதைத்தான் நாயகி பார்த்து  விடுகிறார் 

கொலையை நேரில் பார்த்த அதிர்ச்சியில் நாயகி ஓடி வரும்பொது  ஒரு விபத்தில்  தலையில் அடிபட்டு பேச ரிகக்னைஸ்  குறைபாடு ஏற்படுகிறது .அதாவது இவர்  ஒரு முகத்தை நேரில் பார்த்தால்  அடுத்த 10 நிமிடங்கள் கழித்து அதே முகத்தை நேரில் பார்த்தாலும் சரியாக அடையாளம் சொல்ல முடியாது 


இப்படிப்பட் ட   சூழலில்   வில்லன் நாயகியை   நாயகனிடம் அழைத்து  வருகிறான் .நாயகி விபரங்கள் சொல்லச்சொல்ல  நாயகன் கொலைகாரன் ஓவியத்தை வரைகிறான் . அந்த ஓவியத்தைப்பார்த்து வில்லன் அதிர்ச்சி  அடைகிறான் .ஏன்  எனில் அது நாயகனின் முகம் தான் .இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதிக்கதை 


 நாயகன் ஆக  டொவினோ தாமஸ்  கலக்கி இருக்கிறார் .அல்டடல் , பந்தா இல்லாத இயல்பான நடிப்பு . ஆக்சன் காட் சிகளில்  , சேசிங்க் காட் சிகளில்  பொறி  பறக்கிறது 


 வில்லன் ஆக  வினய்    தெனாவெட்டாக  வருகிறார் . நாயகனை விட பர்சனாலிட்டியாக இருக்கிறார் 


 நாயகி ஆக த்ரிஷா அற்புதமாக நடித்திருக்கிறார் . கொலையைப்பார்த்து  மிரளும்போதும் சரி ,தனக்கு வந்திருக்கும்  நோய் கண்டு கலங்கும்போதும் சரி கலக்கல் நடிப்பு .தமிழ்   சினிமாவில்  பய முகத்தை  அருமையாகப்பதிவு செய்தவர்கள் இருவர் தான் .1  நூறாவது நாள் நளினி  2 ஹலோ யார் பேசறது ஜீவிதா .அந்த பட்டியலில் இணைகிறார் த்ரிஷா 


அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு  பிரம்மாண்டம் .கார் சேசிங்  ,ஹெலிகாப்டர்  சீன என கலக்கலாகப்பதிவு செய்திருக்கிறது  அவரது கேமரா . ஜாக்ஸ்  பிஜோய்  தான் இசை  .5   பாடல்கள் . சுமார் ரகம் . பின்னணி இசை  அருமை சமன்  சாக்கோ வின்    எடிட்டிங்கில்  படம் 157 நிமிடங்கள் ஓடுகின்றது . பின் பாதியில்  இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம் . அகில் பால்  + அனாஸ்  கான்  இருவரும் இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார்கள் 

சபாஷ்  டைரக்டர்

1  பரபரப்பாக  நகரும்  முதல் பாதி  திரைக்கதை   அருமை 


2 பின் பாதியில்  திரைக்கதை  வேறு  பாதையில் சென்றாலும்  சுவராஸ்யமாகவே  இருக்கிறது 


3 நாயகன்  , வில்லன், நாயகி உட்பட  அனைவரது நடிப்பும்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 

1  ஒருவரது  முகத்தைப்பார்த்தால் முதலில் மனதில் தங்குவது அவரது ஹேர் ஸ்டைல் தான் 


2  எல்லாருக்குமே  சாப்பாடு ,இசை  இந்த இரண்டில்  பிடித்தவை ,அலாதியானவை என ஒரு பட்டியல் இருக்கும் 


3  மிருகங்களோட  முகத்தை வைத்து அடையாளம் காணும் அறிவு சாதா மனித மூளைக்கு இல்லை 


4  உன் வில் பவரால் நீ அடைந்ததை வேற யாராலும் திருப்பி எடுத்துக்க முடியாது 


5  ஒரு கொலை செய்ய   அவன் என்னை ஒரு கருவி ஆக்கி இருக்கான் 



கொலைக்கு சாட் சியாக  உன்னை உருவாக்கிட் டான்னும் சொல்லலாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   அவ்ளோ  பெரிய ஜவுளிக்கடையில்  ஒரு செக்யூலாரிட்டி கூட இருக்க மாட்டா ங்களா? செல்போன் கேமரா  வைத்தவனைத்துரத்த ஆள் இல்லை 


2  வானிலை  அறிக்கை வாசிக்கும் நாயகி  திடீர்  என துப்பறியும்  ஆள் போல   பாலோ  செய்வது எப்படி ?


3 திருப்பங்கள்  வேண்டும் என்பதற்காக  வலிய திணிக்கப் பட் டதாகவே  பின் பாதி  திரைக்கதை  அமைந்திருக்கிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம்  த்ரில்லர்  , ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்கள்  அனைவரும் பார்க்கலாம் .செம ஸ்பீடு  படம்  .ரேட்டிங் 3 / 5 



Identity
Theatrical release poster
Directed by
  • Akhil Paul
  • Anas Khan
Written by
  • Akhil Paul
  • Anas Khan
Produced by
  • Raju Malliath
  • Roy C. J.
Starring
CinematographyAkhil George
Edited byChaman Chakko
Music byJakes Bejoy
Production
companies
  • Ragam Movies
  • Confident Group
Distributed bySree Gokulam Movies
Release date
  • 2 January 2025
Running time
157 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office23.20 crore

Wednesday, January 08, 2025

லாரா (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (சஸ்பென்ஸ் த்ரில்லர்)

                     


     ஸ்பாய்லர்  அலெர்ட்




நாயகன்  ஒரு போலீஸ்  இன்ஸ்பெக்ட்டர் .அவருக்கும்,அந்த  ஏரியா கவுன்சிலருக்கும்  ஆல்ரெடி  ஒரு பஞ்சாயத்து இருக்கு .பதவி கெத்தைக்காட்டும்போது நாயகன் பளார் என அறைந்து விடுகிறார் . அந்த கவுன்சிலரோட அடியாள் ஒருத்தன் தன மனைவி காணாம போயிடுச்சி என போலீஸில் புகார் கொடுக்கிறான் .அதே  சமயம் அருகில்  வேறு  ஒரு ஏரியாவில்  முகம் சிதைக்கப்பட்டு  அடையாளம் தெரியாமல் இருக்கும் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது . மிஸ் ஆன அந்த மிஸஸ்  இது  தானா?எனக்கேட்க  அவன்  இல்லை என்கிறான் . நாயகன்  அந்தக்கேஸை  விசாரிக்கிறார் .பல  மர்மங்கள்  வெளிப்படுகின்றன 



நாயகன்  தான் பட த்தின்   தயாரிப்பாளர் .கார்த்திகேசன் . சங்கர்லால்  துப்பறியும் கதைகளில்  வருவது போல இவரும் சீனுக்கு சீன் டீ  குடிக்கிறார் . பொதுவாக  ஆக்சன் மசாலாப்படங்களில்  நாயகன் தம் அடிப்பார், சரக்கு அடிப்பார் . அது மாதிரி இல்லாமல் இவர் டீ அடிக்கிறார்.. ஆறுதல் 



லாரா  கேரக்ட்டரில்  வரும் அனுஸ்ரேயா  ராஜன் கச்சிதம் .எம் எல் ஏ  கேரக்ட்டரில்  வரும்  மேத்யூவு வர்கீஸ் நல்ல தெனாவெட்டு .பெரும்பலானவர்கள்  புது  முகங்கள் .ஆனால் நடிப்பு குட்


ஆர்  ஜெ  ரவீனின் ஒளிப்பதிவு  பிரமாதம் . இசை  ராகு சரவண குமார் .பாடல்கள்  சுமார் ரகம் . பின்னணி இசை  அருமை .  வளர்  பாண்டியின் எடிட்டிங்கில்  117 நிமிடங்கள்  படம் ஓடுகிறது . திரைக்கதை  வ்ழுதி  இயக்கி இருப்பவர் மணி மூர்த்தி 



பாஷ்  டைரக்டர்


1  கதைக்களம்  நிரவி , காரைக்கால் ., பாண்டிச்சேரி  ஏரியாவில் போலீஸ்  யூனிபார்ம்  எப்படி  மாறுபட்டு இருக்கும் என்பதை கச்சிதமாக காண்பித்த விதம் 

2  போஸ்ட்  மார்ட் டம்   ரிப்போர்ட்டில்  இறந்து கிடக்கும் பெண்ணின்  மரண காரணம்  கொலையா? தற்   கொலையா?   என்பது  கண்டுபிடிக்க முடியவில்லை என்பது  கூடுதல் சுவராஸ்யம் 


3   மெயின்  கதையுடன்   ஹவாலா குற்றங்கள் , வெளி நாடு வாழ்க்கை மேல் கொள்ளும் மோகம் ,பெண்களை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சாடிஸ்ட்டின் கிளைக்கதை , ஒரு காதல் கதை , காரைக்கால் ஏரியாவின் திருவிழாக்கள்  என  டாக்குமெண்டரி  படம் தரும் சுவராஸ்யத்தையும் கமர்ஷியலாகத்தந்த விதம் 


4  படத்தில்  வரும் சின்ன சின்ன கேரக்ட்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த விதம்,அனைவரும் புதுமுகங்கள் என்றாலும்  நல்ல  நடிப்பை வாங்கிய விதம் 


5  ஆக்சன்  மசாலா  ஹீரோவுக்கு  ஓப்பனிங்க்  சீனில் ஒரு பைட்  வைப்பது போல  இது மாதிரி  துப்பறியும் கதாபாத்திரத்துக்கு  ஓப்பனிங் சீனாக  ஒரு இன்வெஸ்டிகேஷன்  கேஸை  தீர்ப்பது போல வைப்பார்கள் .அந்த  சீனும் குட் 


6    காமெடி டிராக் இல்லை ,ஆனால் கதையோடு  சேர்ந்து வரும் காமெடி  உண்டு .உதா - ஒரு சீனில் போலீஸ் ஆபீசர் ஆன நாயகன்  ஒரு ரவுடியோடு  ஓரு பெண்ணை  சந்திக்க  பலான ஏரியாவில் நிற்பார் .அப்போது  ஒரு ஹோமோ கேஸ்  ரவுடியிடம்  நீ வா , அந்த ஆளு  வேண்டாம் என சொல்ல போலீஸ் கடுப்பாகும் காட்சி  செம காமெடி ரகளை 

7 லாரா- எம் எல்ஏ  மகன்  இருவரின் காதல் கதை ,  கவுன்சிலரின் அடியாள்    மனைவியின்  சோகக்கதை , சிவப்பு விளக்குப்பெண்ணின்  பரிதாபக்கதை  இந்தமூன்று கதைகளையும்  இணைத்து  ஒரு கதை சொன்ன விதம் .இந்தமூன்று பெண்களுமே  ஒரே  நிற உடையை  அணிந்து இருந்ததால்   நிகழும் குழப்பம்  சுவாரஸ்யம் 

 ரசித்த  வசனங்கள் 


1   எந்த எலியா இருந்தாலும் பொறி ல மாட்டி தான் ஆகணும் 

2 கொத்து புரோட்டாவை  தண்ணீர்ல  ஊறவெச்சு  கொண்டு வந்த மாதிரி டெட் பாடியைக்கொண்டு வந்தா எப்படி ? 

3     எதுக்காக அவனைத்தேடறீங்க? ஏதாவது   தப்பு பண்ணிட் டானா?  

ஜனாதிபதி அவார்டு  தரலாம்னு இருக்கோம் 

நிஜமாவா? அந்த அளவு அவன் என்ன செஞ்சான் ? 

4  எங்களை மாதிரி  பெண்கள் சுயநினைவில் இருக்கும் வரை தான் எங்களுக்குப்பாதுகாப்பு 

5  நீ   வாழனும்னாலும் என் ஆசைப்படிதான் வாழனும் , நீ சாகணும்னாலும்   என் ஆசைப்படிதான்  சாகனும் 

6   நியாயதுக்காகக்கோபப்படக்கூடாதுன்னா எப்படி ? 

7   எவன்  திருப்பி அடிக்க மாட்டானோ அவனை திருப்பித்திருப்பி அடிப்பதுதானே  உங்க வீரம் ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   இன்ஸ்பெக்ட்டர்  தொப்பையுடன் இருக்கார் .சப் இன்ஸ்பெக்ட்டர்  சிக்ஸ் பேக்  ஜிம் பாடியுடன் பக்கா பிட்னசுடன்  இருக்கார் 

2  ஒரு சீனில்  போலீஸ்  கான்ஸடபிள்  பைக்கின் சைடு ஸ் டே ண்டை  காலால்  போடாமல் கையால் குனிந்து போடுகிறார் 

3  கவுன்சிலரின் அடியாள்  தன்  மனைவியை தெருவில் அனைவரும் பார்க்கும்படி  வாசல்  திண்ணையில்  

கட் டி வைப்பது எந்த தைரியத்தில் ? 

4  கவுன்சிலரின் லட்சக்கணக்கான  ஹவாலாப்பணத்தை  பீரோவில் வைக்காமல் , பூட் டாமல் அசால்ட் ஆக வைப்பது எப்படி ?

5ஆஸ்துமா  பிரச்சனையால்  அவதிப்படும்  லாரா  அடிக்கடி  இன்ஹேலர்  இல்லாமல் சிரமப்படுவது போல 

 காட்சிகள்  வருது .ஒரு முறை எனில் ஓகே ,ஒவ்வொரு முறையும் அப்படியா?  ஒரு இன்ஹேலர் எக்ஸ்ட்ரா ஸ் டாக்   வைத்டுக்கொள்ளமாட் டாரா  ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U / A 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சஸ்பென்ஸ்  த்ரில்லர் ,  க்ரைம் த்ரில்லர்  ரசிகர்கள்  அனைவரும்  பார்க்கலாம் .ஸ்டார் வேல்யூ இல்லையே? என்ற தயக்கம் வேண்டாம் . தெரிந்த பேயை விட தெரியாத பிசாசே   மேல் . விகடன் மார்க்  - 42 ,குமுதம் ரேங்க்கிங்க் ஓகே , ரேட்டிங்  2.75/ 5 


லாரா
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்மணி மூர்த்தி
எழுதியவர்மணி மூர்த்தி
தயாரித்ததுஎம்.கார்த்திகேசன்
நடிக்கிறார்கள்
  • அசோக் குமார் பாலகிருஷ்ணன்
  • எம் கார்த்திகேசன்
  • அனுஸ்ரேயா ராஜன்
ஒளிப்பதிவுRj ரவீன்
திருத்தியதுவளர் பாண்டி
இசைரகு ஸ்ரவன் குமார்
தயாரிப்பு
நிறுவனம்
எம்.கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ்
வெளியீட்டு தேதி
  • 3 ஜனவரி 2025
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Tuesday, January 07, 2025

எக்ஸ்ட்ரீம் (2025) - XTREME -தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

             

 எதேச்சையாக  நடந்ததா?அல்லது திட் டமிட்டு செய்ததா என்பது தெரியவில்லை அறிமுக இயக்குனர் ஆன    ராஜவேல்  கிருஷ்ணா  இயக்கிய முதல்  படம் ஆன  பிழை  வெளியான நாள்  3/1/2020 . மூன்றாவது  படம் ஆன 

 எக்ஸ்ட்ரீம் வெளியான நாள்  3/1/2025. தமிழ்  சினிமாவில் எந்த ஒரு இயக்குனரும் செய்யாத செயல் இது . இவரது இரண்டாவது படம் ஆன தூவல் 22/11/2024   அன்று  வெளியானது . இவரது  முதல்  இரண்டு படங்களுமே  மாறுபட்ட  கதைக்களம் ,மெலோ டிராமா  வகை தான் என்றாலும்  கமர்ஷியலாகப்போகவில்லை .அதனால் இந்த முறை  கமர்ஷியலாக , விறு விறுப்பாக  ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தைக்கொடுத்திருக்கிறார்              


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியோட அம்மா ஒரு பணிப்பெண் . அபார்ட்மென்ட்டில் இருக்கும் சில வீடுகளில் வீட்டு வேலை செய்து வருபவர் . அவருக்கு  உடல் நலம் சரி இல்லை எனில் தனது 18 வயதான மகளை , அதாவது  நாயகியை ஆல்ட்டர்னேட்டிவாக அனுப்பி விடுவார் .அப்படி ஒரு நாள்  வேலைக்குப்போன  நாயகி  கொலை  செய்யப்படுகிறார் .அவரைக்கோலை செய்தது யார்?என்பதை போலீஸ் துப்பறிந்து கண்டு பிடிப்பதே கதை 



இந்தக்கேஸை  துப்பறியும்  போலீஸ்  ஆபீசர் ,அவருக்கு உதவியாக ஒரு பெண்  சப் இன்ஸ்பெக்ட்டர்  இருவரும் காலத்தில் இறங்கினாலும்  அவர்கள்  குடும்பத்தில்  நிகழும்  சில சம்பவங்கள்  அவங்க  ட்யூட்டியை எப்படி பாதிக்கிறது என்பதையம்  போகிற  போக்கில்  திரைக்கதையில்   சொல்லி இருக்கிறார்கள் 



 நாயகன் ஆக ராஜ்குமார்  நாகராஜ் கச்சிதமாக நடித்துள்ளார் இவர் தான்  படத்தின்  தயாரிப்பாளரும் கூட . பெண்  சப் இன்ஸ்பெக்ட்டர் ஆக  பிக் பாஸ் புகழ்  ரக்ஷிதா  மகாலட்சுமி  நடித்துள்ளார் .. சரவணன்  மீனாட் சி  சீரியலில்  பார்த்த  நடிப்புக்கும் இந்த போலீஸ் நடிப்புக்கும் நல்ல வித்தியாசம் காட்டி இருக்கிறார் 


 கொலை செய்யப்படும்  நாயகி ஆக அபி நட்சத்திரா   அருமையாக  நடித்துள்ளார் .அவரது அப்பாவித்தனமான முகமும், வெள்ளந்தியான சிரிப்பும் அவருக்கு பெரிய பிளஸ் 


நாயகிக்கு  குழந்தை முகம் ,பெண்  சப் இன்ஸ்பெக்ட்டர் கிளாமர்  காட்டிட  முடியாது . புத்திசாலி இயக்குனர்  ஒரு ஐடியா  செய்து  கிளாமருக்காகவே  ஒரு கேரக்ட்டரை உருவாக்கி  அவர் வீட்டில் நாயகி வேலை செய்வது போல  காட்டி விட் டார் .அந்த  கேரக்ட்டருக்கு  அம்ரிதா ஹோல் டர்  அசால்ட்  ஆக நடித்து   தன கிளாமர் கடமையை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார் . அம்ரிதாவின் காதலர் ஆக  அனந்த நாக்  நடித்திருக்கிறார் 

ஒளிப்பதிவு  டி ஜெ  பாலா . மூன்று  முக்கியப்பெண் கதாபாத்திரங்களை  க்ளோசப் ஷாட்  , லாங்க் ஷாட்  என அழகாகவே  படம்  பிடித்துள்ளார் .இசை  ராஜ் பிரதாப் . சுமார் ரகம் .பின்னணி  இசையில் இன்னும் கவனம்  செலுத்தி இருக்கலாம் 


எடிட்டிங்க்  குட் .122  நிமிடங்கள்  படம் ஓடுகிறது . திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  ராஜவேல் கிருஷ்ணா 

சபாஷ்  டைரக்டர்

1  முதல் காட் சியில் இருந்து  இறுதிக்காட் சி  வரை  எங்குமே  தொய்வு  இல்லாமல் பரபரப்பாகக்காடசிகளை நகர்த்திய விதம் 


2   துப்பறியும்  போலீஸ்  ஆபீசர் ,அவருக்கு உதவியாக ஒரு பெண்  சப் இன்ஸ்பெக்ட்டர்  இருவருக்கும்  உள்ள  உறவு  முறையை  சஸ்பென்சாகக்கொண்டு போனது 


3  யூயூகிக்க முடியாத க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட் 


4  மாடர்ன்  பெண்களின்  அரை குறை ஆடை  பற்றி  விழிப்புணர்வ் ஊட்டும்  விதத்தில் வசனங்கள் ,காட் சிகள்  வைத்தது 

ரசித்த  வசனங்கள் 


1   என்  உடம்பு என்னும் ஆயதத்தை நான் மட்டும் தான் யூஸ் செய்வேன் 


2    நான் நிர்வாணமாக  வந்தாலும் நீ கட்டுப்பாட்டுடன் இருக்கணும் .பெண்ணின்  ஆடை அவளது  விருப்பம்,அதைக்காரணமாக சொல்லக்கூடாது 


3 லிப்ஸ்டிக்  , ஓவர் மேக்கப்  போடணும்னா அந்த பொண்ணுங்க புரொபஸனலா இருக்கணும் அல்லது பிராஸ்ட்டியூட்டா  இருக்கணும் 


4  இந்த  போன் மாடல்  நான் கேட்ட  மாடல் ஆச்சே ?


 உன்னை இம்ப்ரஸ்  பண்ண  வாங்குனதுதான் 


 இப்போ  அவளை  இம்ப்ரஸ்  பண்ண முடிவு   பண்ணிட் டியாக்கும் ? 


5   லவ் பண்றப்போ பிளஸ்  மட்டும்தான் தெரியும், பிரேக்கப் ஆகிட் டா மைனஸ் மட்டும் தான் தெரியும் 

 6  ஆண்களுக்கு    அனுபவத்தால் கிடைக்கும் அறிவு , நாலெட்ஜ்  இவை எல்லாம் ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே கிடைத்து விடும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

  1   சைபர்  க்ரைம்  போலீஸ் செய்ய வேண்டிய வேலையை  குற்றவாளி  என சந்தேக பட்டியலில் உள்ள ஒரு நபரே நாயகனுக்கு செய்து தருவது எப்படி ?


2    மெயின் கதைக்கும், நாயகனின்  பர்சனல்  லைப் சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம் ? 


3  படிக்க  எனக்கு ஆன்ட் றாயிடு  போன் வேண்டும்  என நாயகி  கேட்பதாக  ஒரு  சீன் .ஆனால்  அதற்கு   முன்பாகவே   நாயகியிடம் அந்த  மாடல்  போன் இருக்கு .நாயகியின் அம்மா  எடுக்கிறாள் .


4  நாயகி  18 வயது ஆன பெண் .அவளை  இரவு 8 மணி  வரை தனிமையில்  அபார்ட்மென்ட்டில் இருக்க அம்மா அனுமதிப்பது எப்படி ? 


5   ஒரு பார்ட்டி நடக்குது .அதில் நாயகி டான்ஸ் ஆடுகிறாள் .அதைப்பாராட்டி  ஒருவன் அவளை  கட்டி அனைத்துத்தூக்கி பாராட்டுகிறான் .நாயகியின் அம்மா வேடிக்கை பார்க்கிறாள் 


6  மாதம்  3000  ரூபாய்க்கு  வீட்டு வேலை செய்யும் பெண்ணின்  18 வயது  மக்களுக்கு ரூ  30,000   செலவில்  ஒரு செல்போன் பரிசு வாங்கித்தரும்  ஆள் , அதை அனுமதிக்கும் அம்மா ..எல்லாம் ஓவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -      விறுவிறுப்பாக  செல்லும் , கண்ணியமான  க்ரைம் த்ரில்லர்  படம் இது .  பார்க்கலாம் . விகடன் மார்க்  41 , குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே  . ரேட்டிங்  2.75 / 5