Saturday, January 16, 2021

IS LOVE ENOUGH SIR ? ( HINDI) - சினிமா விமர்சனம் ( A YOUNG WIDOW'S LOVE STORY) NET FLIX

 300  கோடி  செலவு  பண்ணி  பிரம்மாண்டமா  படம்  எடுத்துட்டு  அது  ஓடுமா?  ஓடாதா?னு  வயித்துல  நெருப்பைக்கட்டிக்கிட்டு    காத்திருப்பவங்களும்  உண்டு. திரைக்கதையை  மட்டும்  நம்பி  லோ பட்ஜெட்டில்  பிரமாதமான  படம்  கொடுப்பவர்களும்  உண்டு . இப்போ நாம  பார்க்கப்போறது  விருதுகளை  அள்ளிக்குவித்த  ஒரு  ஃபீல்  குட்  மூவியை  பத்தி
இது  ஒரு  ஹீரோயின்  ஓரியண்ட்டட்  ஃபிலிம்.. ஹீரோயின்  ரத்னா  19  வயசே  ஆன  ஒரு  இளம்  விதவை . வைதேகி  காத்திருந்தாள்  படத்துல ரேவதி  மேரேஜ்  ஆன  சில  நிமிடங்களிலேயே  ஒரு  பரிசல்  விபத்தில்  கணவனை பலி  கொடுத்து  விதவை  ஆன  மாதிரி  இந்தப்பட  நாயகி  ரத்னாவும்  திருமணம்  ஆகி  4  மாதங்களில்  கணவனை  இழந்தவர் ..ஆல்ரெடி  நோய்வாய்ப்பட்டு  இருந்த ஆளுக்கு  கல்யாணம்  பண்ணி  வைக்கறாங்க .  மாப்ளை  வீட்டு  சைடுல  அவரு  இறக்கப்போறவர்னு  தெரியும்.ஆனா  மணமகளுக்கு  தெரியாது. .


ரத்னா   வசிப்பது  ஒரு  பழமை  வாய்ந்த  கிராமம், அங்கே  எல்லாம்  விதவைன்னா  வளையல்  அணியக்கூடாது , பொட்டு  வைக்கக்கூடாது  ப்ளா ப்ளா... அதனால  நாயகி  ரத்னா  பிழைப்புக்காக  நகரத்துல  மும்பைல   ஒரு   பணக்காரர்  வீட்டுல்  பணிப்பெண்ணா  சேர்றார்,  வீட்டில்  சமையல்  வேலை , வீட்டை  க்ளீன்   பண்றது  இதுதான்  அவர்  வேலை . ஆனா  இவரோட  லட்சியம்  ஒரு  ஃபேஷன்  டிசைனர்  ஆவது .இவருக்கு  ஒரு  தங்கை  இருக்கு.  டிப்ளமோ படிக்குது. அதுக்கான  படிப்பு செலவுக்கு  நாயகி  ரத்னா  தான்  பணம்  அனுப்பறாங்க 


நாயகன்  அஸ்வின்  ஃபாரீன்ல  இருக்கறவர். அவரோட  சகோதரர்  உடம்பு  சரி  இல்லாம  இருக்கார்னு  நியூஸ்  வந்ததும்  தன்  குடும்பத்துக்கு  ஒரு  மாரல்  சப்போர்ட்டா  இருக்கனும்னு  ஃபாரீன்ல  இருந்து  மும்பை  வந்து  தங்கறார். அந்த  வீட்டில்  தான்  நாயகி பணிப்பெண்ணா  இருக்கார்.நாயகனுக்கு  மேரேஜ்  ஏற்பாடுகள்  நடக்குது. ஆனா  மணப்பெண்னுக்கு  வேற  ஒரு அஃபர்  இருப்பதால்  மேரேஜ்  கேன்சல்  ஆகுது. அந்தக்கடுப்புல  நாயகன்   இருக்கார் .


நாயகன்  அஸ்வின்  ஃபிளாட்டுக்கு  அவரோட  அம்மா, சகோதரி  அப்பப்ப  வரும்போதெல்லாம் நாயகி  ரத்னா  அவங்களை  நல்லாவே  டீல்  பண்றாங்க. நாயகன்  அஸ்வின்  பக்கா  டீசண்ட். வேலைக்காரிதானேனு  சீப்பா  நடத்தாம  ரத்னாவை  ரொம்ப  டீசண்ட்டா  நடத்தறான். ஏதாவதுன்னா  தாங்க்ஸ்  சொல்றது ., சாரி  சொல்றது    இதெல்லாம்  நமக்கு  ரொம்பவே  புதுசு .  ஏன்னா  பொதுவா  சம்பளம்  கொடுக்கற  ஆள்  கிட்டே  சாரி , தாங்க்ஸ்  சொன்ன  ஓனருங்களை  நாம  பார்த்ததில்லை .


டெய்லரிங்  வேலை  கத்துக்கலாம்னு  ஃப்ரீ  டைம்ல  ரத்னா  ஒரு  மாஸ்டர்  கிட்டே  பார்ட்  டைம்  அசிஸ்டெண்ட்டா  சேருது . அந்தாள்  என்னடான்னா  வீட்டு  வேலை,  கூட்டற  வேலை . நூல்கண்டு ,  லேஸ்  வாங்கற  வேலைனு  அலைக்கழிக்கறான். இது  செட்  ஆகாதுனு   ரத்னா  அங்கே  இருந்து  வந்துடுது


நாயகன்  அஸ்வின்  , நாயகி  ரத்னா  இருவருக்கும்  இடையே  ஏற்படும்  அன்பு  தான்  படம் .  இவங்க  வாழ்க்கை  என்ன  ஆச்சு? என்பதுதான்  திரைக்கதை. காதல்  கோட்டை , உன்னிடத்தில்  என்னைக்கொடுத்தேன்  க்ளைமாக்ஸ்  எல்லாம்  எந்த  அளவுக்கு  உங்க  மனசை  டச்  பண்ணுச்சோ  அதே  அளவு  தாக்கத்தை  இந்த  பட  க்ளைமாக்சும்  தரும்.  


 சபாஷ்  டைரக்டர் 


1   நாயகியின் கேரக்டர்  ஸ்கெட்ச்  பிரமாதம். .நாயகி    திலோத்தமா  ஷோமி  பிரமாதமான  அழகி  கிடையாது . ஆனா  அவங்க  மனசு , கேரக்டர் , தன்மானம்  எல்லாம்  அருமை . சில  காட்சிகளில்  அவர்  காட்டும்  ஃபேஸ்  எக்ஸ்பிரஸ் ஷன்ஸ்  எல்லாம்  செம  க்யுட்


2   நாயகனாக  விவேக்  கம்பீர்   இவரோட  தோற்றமும் , அமைதியான  நடிப்பும்  பெரிய  பிளஸ். ஒரு  பார்ட்டியில்  ரத்னா ஒரு  பானத்தை  அவரது  தோழி  மேல்  கொட்டி விட ஓவராக  அலட்டும்  தோழி  இவ  சம்பளத்துல  சில  ஆயிரத்தை  கட்  பண்ணு  அஸ்வின்  எனும்போது  கூல்  கூல்  என  அவரை  சமாதானப்படுத்துவதும், அதுக்குப்பின்னும் அவரது  ஓவர்  சலம்பல்  பார்த்து  அவ  என்  வீட்டுக்கு  தான்  வேலைக்காரி , உனக்கு வேலைக்காரி  இல்லை  என  நோஸ்கட்  விடுவதும்  அருமை 


‘3  நாயகன்  தனது  பிளாட்டுக்கு  ஒரு  பெண்ணைக்கூட்டி வரும்போது  நாயகி  ரத்னா  தன்  கோபத்தை  ,   இயலாமையைக்காட்டும்  இடம்  கவிதை 


4  இந்திய  சினிமா  வரலாற்றிலேயே  இளம்  விதவை  நாயகியாக  உள்ள  படங்களில்  ஒரு  ஆள்  கூட  அவரை  தவறான  கண்ணோட்டத்தில்  பார்ப்பதோ , அணுகுவதோ  இல்லாமல்  எல்லாரையும்  நல்லவராகக்காட்டி  இருக்கும்  முதல்  படம்  இதுதான்  என  நினைக்கிறேன். அநேகமா  இதன்  திரைக்கதை  ஒரு  பெண்ணாகத்தான்  இருக்கும் 


5  ரெகுலராக ஃபார்மல்   டிரஸ்  போடும்  நாயகனுக்கு   நாயகி  பூ  போட்ட கேசுவல்  டிரஸ்  பர்த்டே  கிஃப்டாக  தருவதும்  அதை  அப்பவே  அணிந்து  பார்த்து  ஆஃபீஸ்க்கு  அதே  டிரசில்  அவர்  போவதும்  அதை  பெருமிதமாக  நாயகி  பார்ப்பதும்  கவிதை   என்றால்  நாயகி  ரத்னா வுக்கு  ஃபேஷன்  டிசைனிங்க்ல  ஆர்வம்  இருக்கறது  தெரிஞ்சு   நாயகிக்கு  நாயகன்  ஃபேஷன்  டிசைனிங்க்  சம்பந்தப்பட்ட  காஸ்ட்லியான  புத்தகம்  பரிசாகத்தருவது ,  தையல்  மிஷின்  கிஃப்டாக  தருவது  , நாயகியின்  தங்கைக்கு  நடக்க  இருக்கும்  திருமணத்துக்கு  அவர்  கேட்காமயே  பண  உதவி  செய்வது  அப்போது  நாயகி  காட்டும்  ஃபேஸ்  எக்ஸ்பிரசன்ஸ்  அழகு  கவிதை  


6  நாயகன்  நாயகியிடம்  ப்ரப்போஸ்   செய்யும்போது  அதை  ஏத்துக்காம 

 உங்க  வீட்ல ஒத்துக்க  மாட்டாங்க , சமூகம்  என்னை  தப்பா பேசும் என  மறுப்பதும்  ஆச்சரியம். 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில நெருடல்கள்


1    படம்  போட்டு  முதல்  18  நிமிடங்கள்  என்னமோ  ஆர்ட்  ஃபிலிம்  பார்ப்பது  மாதிரி  நாயகி  செய்யும்  பணி  விடைகள்  மட்டுமே  காட்டப்படுவது  அயர்ச்சி.  சிலர்  அதோடு  ஸ்கிப்  ஆகும்  அபாயம்  இருக்கு . 


2  நாயகியின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  ரொம்பவே  பக்கா  அண்ட்  டீசண்ட்.  ஆனா  அவர்  2  இடங்களில்    நிலை  தடுமாறுகிறார். 1  மத்த  வீட்டு  வேலைக்காரிங்க  எல்லாம்  ஆள்  இல்லாதப்ப  டி வி  பார்ப்பது  சோபாவில்  அமர்வதுனு  இருப்பாங்க  நான்  அப்படி  இல்லை  என  தன்னிலை  விளக்கம்  தருவது  அவரது  கேரக்டருக்கு  செட்  ஆகலை . 2  நாயகன்  கேட்காமல  அவரா  தானா  முன்  வந்து  நான்  ஒரு  விதவை  இளம்  வயதில்  கணவனை  இழந்தவள்  என   வாலண்ட்ரியா  சொல்வது  இடிக்குது


3   நாயகன்  வசதியானவன்,  டீசண்ட். அவன்  நினைத்தால்  தன்  கேர்ள்  ஃபிரண்டை  வேறு    ஒரு  இடத்துக்கு ,  ஹோட்டலுக்கு  அழைத்து  சென்றிருக்க  முடியும், ஆனா  நாயகி  இருக்கும்  அதே  பிளாட்டுக்கு  நைட்  டைமில்  இன்னொரு  பெண்ணை  தன்  பெட்  ரூமில்   தங்க  வைப்பது  இடிக்குது


4   நாயகன்  அம்மா  தரும் பார்ட்டியில் நாயகி  வேலைக்காரியாய்  நடந்து கொண்டது  பிடிக்கலை  என  சொல்லும்  நாயகன்  அதுக்கு  முன்பே  நாயகியிடம்  நீ  இந்த  வீட்டில்  மட்டும்  வேலை  செஞ்சா  போதும், பார்ட்டிக்கு  வேற  ஆள்  அரேஞ்ச்  பண்ணிக்கறேன்னு  சொல்லி  இருக்கலாமே? 


5  நாயகி  க்கு  டெய்லரிங்க்  தெரியாது . கத்துக்கனும்கறா. பொதுவா  டெய்லரிங்  கத்துக்கும்போது  ஓபனிங்கில் சாதா  மிஷினான  உஷா , மெரிட்  சிங்கர்  மிஷின்ல  தான்  பழக்குவாங்க . நல்லா  செட்  ஆன  பின் தான்  ஜூக்கி  மிஷின்  தருவாங்க ,ஆனா  இவர்  பயிலும்  இன்ஸ்ட்டிடியூட்டில்  சாதா  மிஷின்  இருந்தும்   இவர்  பழகுவதே  ஜூக்கி  மிஷினில்தான் , அது  எப்படி ?இவர்  ஒரே  பாட்டில்  பணக்காரன்  ஆகும் தமிழ்  சினிமா ஹீரோ  மாதிரி  டகால்னு  ஃபேஷன்  டிசனர்  ஆவதும்  காதில்  பூ  சுற்றல் , இன்னும்  ஸ்டெப்  பை  ஸ்டெப்பா  காட்டி  இருக்கலாம் 


6  பார்ட்டியில்  இங்கிதமே  இல்லாமல்  நாயகியிடம்  நடந்து  கொள்ளும்  அங்கிதா  க்ளைமாக்சில்  நாயகிக்கு  உதவுவது , சிரித்துப்பேசுவது   நம்ப  முடியல . நாயகன்  கேட்ட்க்கொண்டார்  என  சொல்லப்பட்டாலும்  அந்த  சீன்  இன்னும்  நல்லா  டெவலப்  பண்ணி  இருக்கனும்


சி.பி    ஃபைனல்  கமெண்ட் -  இது  ஒரு  ஏ  செண்ட்டர்  ஃபிலிம். பரபபரப்பான  மசாலா  படம்  மட்டுமே  பார்ப்பவர்களுக்கு  பிடிக்காது . பெண்களை  மிகவும்  கவரும் . நெட்  ஃபிளிக்சில்  நெ 1  பிளேசில்  ட்ரெண்டிங்கில்  இருக்கு .   ரேட்டிங்  3.75  / 5 


Monday, January 11, 2021

ஒரு பக்க கதை (2020) - சினிமா விமர்சனம்

 

ஒரு  பக்க  கதை  (2020) -  சினிமா  விமர்சனம்

 

இந்தப்படத்துக்கு  பொருத்தமான  டைட்டில்  சிண்ட்ரெல்லா  அல்லது     குந்தி தேவி டூ  பாய்ண்ட்    அல்லது  கடல்  குதிரை ,  அல்லது  கடவுளின்  குழந்தை  என்பதே  மிகப்பொருத்தமா  இருக்கும், ஆனா  ஏதோ  ஒரு  காரணத்தால  கவித்துவமா  இருக்கட்டுமேனு  இந்த  டைட்டிலை  தேர்ந்தெடுத்து  இருக்காரு. வித்தியாசமான  கதை  தான். இந்த  மாதிரி  படங்களுக்கு  பொதுவா  மிக்ஸ்டு  ரிவ்யூஸ்  வர்றது  சகஜம்  தான்.படம்  வந்த  போது  பலரும்  பல விதமா  விமர்சிச்சிருந்ததால  பெண்டிங்ல  வெச்சிருந்தேன்.  ஜீ  ஃபைவ் ல  இது  கிடைக்குது .  பெண்களை  மிகவும்  கவரும்  திரைக்கதை  அமைப்பு   தியேட்டரில்  ரிலீஸ்  ஆகாமல்  போனது  பெரிய  பின்னடைவு

 

ஹீரோ ,  ஹீரோயின்  இருவரும்  லவ்வர்ஸ் னு. ஓப்பனிங்க்லயே  இவங்களை  காதலர்களா  காட்டினதால  காதல் வெளிப்படுத்துன  தருணம் . காத்திருத்தல்  அந்த  மாதிரி  போர்சன்ஸ்  டச்  பண்ண  வேண்டிய  அவசியம்  இல்லாம  போய்டுச்சு. மணிரத்னம்  இயக்கிய  பம்பாய்    கூட  பின்  பாதில  ஏகப்பட்ட  பிரச்சனைகளை  காட்ட  வேண்டி  இருந்ததா;ல்  லவ் போர்ஷனை  ஷார்ட்டா  முடிச்சிருப்பார்  இயக்குநர்  மணி  ரத்னம்

 

ஹீரோயினோட  நடவடிக்கைல  சில  மாற்றங்களைக்கண்ட  அம்மா   சந்தேகப்பட்டு  க்ளினிக்  கூட்டிட்டுப்போய்  செக்  பண்ணா  சந்தேகப்பட்டது  சரி . கர்ப்பமா  இருக்கா

 

ஹீரோவுக்கு  அதிர்ச்சி.  வேற  ஒரு  டாக்டர்  கிட்டே  காட்டலாம்னு  போனா  அங்கேயும்  அதே  ரிசல்ட்

 

 இரு தரப்புப்பெற்றோர்களும்  கூடிப்பேசி  விவாதிக்கறாங்க . ஹீரோயின்  பாடி கண்டிஷன்  வீக்கா  இருக்கறதால  கருவைக்கலைக்கக்கூடாதுனு  டாக்டர்  அட்வைஸ். அதனால  மேரேஜ்க்கு  அவசர  அவசரமா  தேதி  குறிக்கறாங்க

 

 இப்பதான்  கதைல  ஒரு  ட்விஸ்ட். ஹீரோ  , ஹீரோயின்  இருவருக்கும்  உடல்  ரீதியான  தொடர்பே  நிகழலை . இந்த  விஷயம்  முதல்ல  இருவரின்  பெற்றோர்களுக்கும்  தெரியாது

 

மொத்தம்  உள்ள  2  மணி  நேரப்படத்துல  முதல்  ஒரு  மணி  நேரம்  இந்த  ஷாக்  நியூஸ் வெவ்வேற  ஹாஸ்பிடல்ல  செக்கிங் , பெற்றோர்  சந்திப்பு  ,விவாதம்னு  போய்டுது.

 

ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  தப்பு  பண்ணலை , மயக்க  நிலைலயோ , வேற  எந்த    சூழலிலோ  ஹீரோயின்   பாலியல்  ரீதியா  யாராலும்  வன்கொடுமை  செய்யப்படலை .  பின்  எப்படி  கர்ப்பம்?

 

 இந்த  ட்விஸ்ட்  உடைஞ்ச  பின்  கதை  வேற  ரூட்ல  டேக்  டைவர்சன்  ஆகுது. அந்த  சுவராஸ்யமான  ட்விஸ்ட்  என்ன?  க்ளைமாக்ஸ்  என்ன  ஆச்சு? என்பதை  ஜீ ஃபைவில்  காண்க

 

ஹீரோவா  மலையாள  ஹீரோ  ஜெயராமின்  மகன்  காளிதாஸ்  ஜெயராமன் . இவரு  இந்தப்படத்துக்குப்பின்  நடிச்ச  பாவக்கதைகள்,புத்தம்  புது  காலை   எல்லாம்  ரிலீஸ்ல  முந்திக்கிச்சு . 2013 – 2014 லயே  ரெடி  ஆன   இந்தப்படம்  இப்பதான்  ரிலீஸ்  ஆகி  இருக்கு . ஆஹா  பட  ஹீரோ  ராஜீவ்  கிருஷ்ணா  வின் நடிப்பு  சாயல்  இவரிடம்,  மிக  சாஃப்டான  தோற்றம் , அமைதியான்  நடிப்பு . காலேஜ் , டீன்  ஏஜ்  பெண்களை  கவரும்  விதத்தில்  இருக்கார் .  சில  காட்சிகளில்  இவர்  என்ன  இவ்ளோ  நல்லவரா  இருக்காரே?  என  எண்ண  வைக்கும்  கேரக்டர்   ஸ்கெட்ச்

 

ஹீரோயினா மேகா  ஆகாஷ்   . அமைதியான  அழகு  முகம். இயல்பான  சிரிப்பு . கச்சிதமான  நடிப்பு

 

 ஹீரோ ,  ஹீரோயின்  இருவரின்  பெற்றோர்  தேர்வு  மிகப்பொருத்தம். வழக்கமான  டெம்ப்ளேட்  ஆட்களைப்போடாமல்   புது  ஆட்களைப்பார்ப்பது  நல்லா  இருக்கு . அவங்க  நடிப்பும்  அவ்ளோ  யதார்த்தம்.

 

இயக்குநர்   புதுவசந்தம்  இயக்குநர்  விக்ரமன்  மாதிரி  ,  குமுதம்  சிரி சிரி  கதை  புகழ்  நந்து  சுந்து  மாதிரி   பாசிட்டிவான  ஆள்  போல, அதுக்காக  படத்தில்  எல்லாருமே  ரொம்ப  ரொம்ப  நல்லவங்க , கெட்டவங்கனு  யாருமே  இல்லை   என  அவ்ளோ  பாசிட்டிவாக  கேரக்டர்களை  அமைத்திருக்க  வேண்டாம்


நடுவுல  கொஞ்சம்   பக்கத்தைக்காணோம்  பட  இயக்குநர்  பாலாஜி தரணிதரன்  தான்  இதன்  இயக்குநர் . இது    அவருக்கு  3  வது  படம் 

 

சபாஷ்  டைரக்டர்

 

1        மலையாளப்படங்களுக்கே  உரிய  ஸ்லோனெஸ்  இருந்தாலும்  கதை  சொன்ன  பாங்கு  மிக  இதம்

 

2        குடும்பத்துடன்  பார்க்கத்தகுந்த  கண்ணியமான  நெறியாள்கை

3         மகள்  கர்ப்பம்  என்று  தெரிந்ததும்  அப்பா மகளின்    காதலனுக்கு  ஃபோன்  பண்ணி  வீட்டுக்கு  வரச்சொல்வதும்    அப்போது  காட்டப்படும்  சூழ்நிலையும்  நல்ல  பதட்டம். வருசம்    16  படத்தில்  குஷ்பூ  குளிக்கும்போது  பாத்ரூமில்  குறும்பு  பண்ண  வரும்  கார்த்திக்  திடீர்  என  மாட்டிக்கொள்ள  அப்போது  நிலவும்  ஒரு  அசந்தர்ப்பமான  அமைதி  இதிலும் 


மமெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாத  ஆனா  மெயின்  கதையை  விட  சுவராஸ்யமான  ஒரு  கிளைக்கதை  இதிலும்  உண்டு . நான்  தெய்வத்தோட    அவதாரம்  என  சொல்லும்  சிறுவன், அவனது  பில்டப்களை  நம்பும்  சிறுவன்  இருவரின்  கேரக்டர்  ஸ்கெட்சும் , நடிப்பும்  அருமை 

9  96  படத்தின்  இசை  அமைப்பாளர்  தான்  இதிலும்  இசை. பின்னணி  இசையில் உள்ளேன்  ஐய்யா  என்கிறார்


9


ப்

லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள்

 

1 ஒரு  சர்ச்சைக்குரிய  மேட்டர்  கேள்விப்பட்டதும்   ஜனங்க  ஒவ்வொருவரும்  ஒவ்வொரு  விதமா  பேசுவாங்க . அதை  எல்லாம்  காட்டி  இருக்கனும்

 

2   ஹீரோ ,  ஹீரோயின்  இருவரும்   பல  டாக்டர்களிடம்  செக்கப்  செய்வது  கொஞ்சம்  சலிப்பு. அதே  போல்  பெற்றோர்களிடம்  யாராவது  ஒருவர்  உண்மையை  சொல்லி  இருக்கலாம்.,  மறைக்க  தேவை  இல்லை

 

4        ஃபைனலாக  ஒரு ஹாஸ்பிடலில்  பல  டாக்டர்கள்  இங்கும்  அங்கும்  போவதும்  ஹீரோ  பதட்டமாக  இருப்பதும்  பின்  டாக்டர்  தரும்  ஓப்பனிங்  பில்டப்  கொஞ்சம்  செயற்கை

5        மீடியாக்களில்  புகழ்  பெற்ற  ஒரு    ஸ்பெஷல்  குழந்தை  அரசு  போலீஸ்  பாதுகாப்பு  கொடுத்திருக்காதா? உலக  அளவில்  கவனம்  பெறும்  குழந்தைக்கு  சின்ன  செக்யூரிட்டி  கூட  இல்லை

6        கோயிலில்  குழந்தையை  இழந்த  பின்  அங்கேயே  அமர்ந்து  தர்ணா  பண்ணாமல்  பெற்றோரே    இனி  இங்கே  இருந்து  பிரயோஜனம்  இல்லை என  இடத்தை  காலி  பண்ணுவது  நம்பும்படி  இல்லை .   பாதிப்பேர்  ஸ்பாட்லயே  இருப்போம் ,  மீதிப்பேர்  போலீஸ்  , வக்கீல் ,  மீடியா  என  போவோம்  என்பதுதானே  யதார்த்தம்

7        மதங்களை  , மதங்களின்  மூட நம்பிக்கைகளை  எதிர்க்கும்போது  3  மதங்களையும்  ஒரே  தராசில்  தானே  வைக்கனும்?  திமுக  மாதிரி  இந்து  மதத்தை  மட்டும்  எதிர்ப்பது  ஏன்?  சும்மா  சால்ஜாப்புக்காக  எல்லா  மதங்களும்  தான்  என  ஒரு  வசனம்  ஒப்புக்கு  சப்பாணியா  இருக்கு

8        திரைக்கதையில்  முதல்  பாதி  ஒரு  வித  கதையோட்டம்,  பின்  பாதி  வேறு  வித  கதை  ஓட்டம்  என்பது  எல்லாருக்கும்  செட்  ஆகாது .

நச்  வசனங்கள்

 

1        குழந்தை  பிறக்கக்காரணமா  இருக்கறதால  மட்டும்  ஒருவர்  அப்பா  ஆகிட  முடியாது.குழந்தை  பெற்றுக்கொள்ளும்  மனைவியைக்காப்பதில்தான்  அப்பா  தகுதி  இருக்கு 

2   ஒருத்தருக்கு  ஏதாவது  ஒண்ணுன்னா  டக்னு  ஓடி  வந்து   உதவற  மனுசன்  தான்  கடவுள்

 

2        கடவுள்  நம்பிக்கை  வேற  ,  மூட  நம்பிக்கை  வேற . ஆனா  எப்போ  இதுல  மூட  நம்பிக்கை  வந்ததோ  அப்பவே  கடவுள்  நம்பிக்கை  தோத்துப்போகுது

3         

4        இந்த  உலகத்துல  ஒரு  சாமிதான்  இருக்கனுமா?  முருகர்  , வினாயகர் , இயேசு , அல்லா  அப்டினு  பல  சாமிகள்  இருக்கக்கூடாதா?

5         குழந்தையை  கலைக்கறதால  ந்மக்குப்பெரிய  பாதிப்பில்லை   ஆனா  உளவியல்  ரீதியா  மன்  ரீதியா  அந்தக்குழந்தையோட   அம்மாவுக்கு  எதிர்காலத்துல  மிகப்பெரிய    பாதிப்பு  இருக்கும் 

 

  சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  ஆர்ப்பாட்டமே  இல்லாத  ஒரு  ஓடையின்  பயணம்  மாதிரி   மெதுவாகப்போகும்  திரைக்கதையை  ரசிக்கும்  பாலுமகேந்திரா  டைப் படங்கள்  பார்ப்பவர்களுக்கு  இந்தப்படம்  பிடிக்கலாம் . மற்றபடி  வெகுஜன  ரசனைக்கான  படம்  இது  அல்ல.  ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க்  41 , ஆனா  ஆல்ரெடி  அவங்க  43  கொடுத்துட்டாங்க .   அட்ராசக்க  ரேட்டிங்  2.75  / 5

  டி  டி    ஜீ  ஃபைவ்ல  கிடைக்குது

 

 

Sunday, January 10, 2021

மாறா ( 2021) - சினிமா விமர்சனம்
 பொதுவா   நாம  பொண்ணு  பார்க்கப்போறப்ப  பொண்ணை  விட பொண்ணோட தங்கச்சியோ , தோழியோ  பொண்ணை  விட  அழகா  இருக்கும்,. இதை  வெளில  சொல்லவும்  முடியாது  ( அதான்  இப்போ  சொல்லிட்டியே?). இதே    மாதிரி  தான்  ஒரு  சினிமா    ஹீரோயினை  விட  ஹீரோயின்  தோழியோ  சில  சமயங்கள்ல  ஹீரோயினோட அம்மாவோ  நல்ல  ஃபிகரா  அமைஞ்சிடும் . அந்த  மாதிரி  இந்தப்படத்தோட  மெயின்  கதையை  விட  கிளைக்கதை  நல்லா  அமைஞ்சு  மெயின்  கதையை  ஓவர்  டேக்  பண்ணிடுச்சு. அதே  மாதிரி  ஹீரோயின்  அழகை  விட  இன்னொரு  சின்ன  கேரக்டர்  ஹீரோயினை  விட  அழகா  அமைஞ்சிருக்கு

 

ஒளிப்பதிவாளர்  பிசி  ஸ்ரீராம்  முதன்  முதலா  இயக்கிய  மீரா  அப்டினு  ஒரு படம்  பாடல்கள்  எல்லாம்  செம  ஹிட்ஃபோட்டோகிராஃபி  கண்ல  ஒத்திக்கற  மாதிரி  இருக்கும். ஆனா  படம்  அட்டர்  ஃபிளாப்காரணம்  ஒரு  ஒளிப்பதிவாளரா  ஃப்ரேம்  பை ஃப்ரேம்  பார்த்து  பார்த்து  இழைச்ச  சீன்கள்  எல்லாம்  பிரமாதமா  இருந்தாலும்  திரைக்கதைல  கோட்டை  விட்டதால  அவர்  இயக்குநரா  வெற்றி    பெறலை . அதே  மாதிரிதான்  இந்தப்படமும்   மேக்கிங்  ஸ்டைல்ல  நல்லா  பண்ணி  இருந்தாலும்  திரைக்கதைல  கோட்டை  விட்டுட்டாங்க  அப்டினு  சில  விமர்சனங்கள்  வந்தது .

 

படத்தோட  விமர்சனத்துக்குப்போகும்  முன்   இது  ஒரு    செண்ட்டர்  ஃபிலிம்மாமூல்  மசாலாப்பட  ரசிகர்களுக்கு  பெரிய  அளவில்  பிடிக்காது ., காதலர்களுக்கு  மட்டுமே  பிடிக்கும், ஒரிஜினல்  படமான  சார்லி  மலையாளப்படம்  பார்க்காதவர்களுக்கு  இது  பிடிக்கும்கற  டிஸ்கியை  பதிவு  பண்ணிடறேன்  (  நான்  சார்லி  பார்த்துட்டேன்  ) 

 

இது  ஒரு  ஹீரோயின்  ஓரியண்ட்டட்  ஃபிலிம். ஹீரோயின் க்கு  வீட்ல  மாப்ள  பார்க்கறாங்க , ஆனா  ஹீரோயினுக்கு  அவனைப்பிடிக்க்லை . வேற  லவ்  எல்லாம்  இல்லை, ஆனாலும் இவ்னைப்பிடிக்கலை. இதை  வெளில  சொல்ல  முடியாம  நைசா  ஹீரோயின்  வீட்டை  விட்டுக்கிளம்பிடுது

 

வந்த  இடத்துல  ஒரு  ஓவியனைப்பத்தி  கேள்விப்படுது   அவன்  வாழ்க்கைப்பயணத்தில்  சந்திச்ச  பல  மனிதர்களுக்கு  ஏதோ  ஒரு  வகைல  உதவி  பண்ணி  இருக்கான். நாடோடி  மாதிரி  சுத்திட்டு  இருக்கான்னு  தெரிஞ்சுக்குது அவனை  நேர்ல  பார்க்கனும், சந்திக்கனும்னு  ஆசைப்படுது. அவளோட  பயணங்கள்  தான்   கதை 

 

ஹீரோயினா  நேர்  கொண்ட  பார்வை  புகழ்   ஷ்ரத்தா ஸ்ரீநாத், பேருக்கு  ஏற்ற  மாதிரி  மிகவும் சிரத்தை  எடுத்து  நடிச்சிருக்கார்ஆனா  அவரோட  முகம்  ஒரு  சிடுமூஞ்சி , அல்லது  கோபமான  சாயல்  உள்ள  முகம் , கன்ஃபைட்  காஞ்சனா , ரிவால்வர்  ரீட்டா , வம்படி  வனஜா  மாதிரி  கேரக்டர்கள்  அவருக்கு  நல்லா  செட்  ஆகும்,   காதலுக்கு  ஏங்கும்  முகம்  சரியா  செட்  ஆகலை . ஒரு  லவ்  சப்ஜெக்ட்ல  ஹீரோயினைப்பார்த்ததும்  ரசிகனுக்கு  அடடா, இந்த  மாதிரி  ஒரு  ஃபிகர்  நமக்கு  சிக்கலையே  அப்டினு  ஒரு  ஃபீல்  வரனும். அது  நமக்கு  வர்லை . அது  ஒரு  மைன்ஸ் . ஆனாலும்  அவர்  நடிப்பில்  குறைவில்லை 

 

 ஹீரோவா  மாதவன் .   மின்னலே , அலை  பாயுதே  டைம்ல  வேணா  இந்த  கேரக்டர்  அவருக்கு  செட்  ஆகி  இருக்கும், இறுதிச்சுற்று   மாதிரி  மிடில்  ஏஜ்  கேரக்டர்  பண்ண  வேண்டிய  டைம்ல  சாக்லேட்  பாய்  கேரக்டர்  செட்  ஆகலை 

 

படத்தின்  முக்கியமான  அனைவரையும்  கவர்கின்ற  ரோல்  இயக்குநர்  கம்  ரைட்டர்  மவுலிக்கு  . கலக்கிட்டார்  மனுசன்கடைசி  அரை  மணி  நேரம்  இவர்  ராஜாங்கம்  தான்  .  பூ  வேலி  கார்த்திக் கின்  க்ளைமாக்ஸ்  நடிப்புக்கு  ஈடானது 

 

தற்கொலைக்கு  முயலும்  லேடி  டாக்டராக   ஷிவதா  ஹேர்ஸ்டைல்  , ஃபெஸ்கட்  இரண்டும்  அழகு . நாயகியை  விட  அழகு . பேசாம  இவரை  நாயகியா  போட்டிருக்கலாம் 

 

கில்மா  லேடியாக  விருமாண்டி  புகழ்  அபிராமியைப்பார்க்க  அதிர்ச்சியா  இருக்குஆள்  டபுள்  ஆகிட்டார் பபுள்கம்  மாதிரி  பெருத்துட்டார் 

 

அலெக்சாண்டர்  பாபு  நல்லா நடிச்சிருக்கார்.   கிஷோர்  , அப்புக்குட்டி  அனைவரும்   விழலுக்கு  இரைத்த    நீர் 

 

ஒளிப்பதிவு  கண்ல  ஒத்திக்கலாம்.,  அற்புதம். ஆர்ட்  டைரக்சன்  ஒர்க்  குட் , இசை  ஜிப்ரான்பாடல்கள்  ஹிட்  , குறிப்பா  முதல்  பாடல் .. பின்னணி  இசைலயும்  ஸ்கோர்  பண்ணி  இருக்கார்

 

 அறிமுக  இயக்குநர்  திலீப்  குமார்  பிரசண்ட்டேஷன்  நல்லா  பண்ணி  இருக்கார் . பொதுவா  ஒரு  கிஃப்ட்  கொடுக்கும்போது  கிஃப்ட்  பேக்கிங்  நல்லா  இருந்தா  மட்டும்  போதாது  உள்ளே  கண்ட்டெட்ண்ட்  செமயா  இருக்கனும்கொஞ்சம்  மிஸ்  பண்ணிட்டார் 

 

ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  சேர்வார்களாமாட்டார்களாஎன்ற  பதை பதைப்பே  ஆடியன்சுக்கு  வர்லை . அது  பெரிய  மைனஸ்  . மாறாக  மவுலி  -  மீனாட்சி  லவ்  போர்ஷன்  அருமை ,    க்ளைமாக்ஸ்   ட்விஸ்ட்  நல்லாருந்தது 

 

 

நச்   வசனங்கள்

 

நம்ம  பிறந்த  நாளுக்கு  யாரெல்லாம்  வருவாங்கனு  நமக்கு  தெரியும், ஆனா  நம்ம  சாவுக்கு  யார்  எல்லாம்  வருவாங்கனு  நமக்கு  தெரியுமாஆனா  அவனுக்கு  தெரியும் /. அவன்  சாவுக்கு  வந்தவங்களை  அவன்  நேர்லயே  பார்த்தான் 

 

2   என்னைப்பொறுத்தவரை   நாம  செய்யற  வேலை  புதுசா  இருக்கனும்இல்லை  வேலை  செய்யற  ஊரு  புதுசா  இருக்கனும்

 

ஒரே  ஒரு  ஃபோட்டோக்குள்ள  அடக்குற  அழகா  அவளுது?

 

4    காத்திருப்பதில்  வலியோட    சேர்த்து  சுகமும்  இருக்குனு  அனுபவிக்கறவங்களுக்கு  மட்டும்  தான்  தெரியும் , வேற  யாருக்கும்  புரியாது 

 

5   அவ  இப்போ  என்  கூட  இல்லைஙற  வலியை  விட  அவளை  எங்கே  நான்  மறந்துடுவேனோங்கற  பயம்  தான்  இப்போ  அதிகமா  இருக்கு

 

6   காதல்  ஒரு  மனுசனை  அவன்  அதுவரை  போகாத  இடத்துக்கெல்லாம்  கூட்டிட்டுப்போகும் 

 

7    நேத்து  உயிரா  நினைச்சுப்பழகுன  ஒருத்தியை  இன்னைக்கு  மயிரா  நினைச்சு  தூக்கிப்போடுற  உலகத்துல  50  வருசமா  ஒருத்தியையே  நினைச்சு  உருகிட்டு  இருக்காரே.... இவரோட   காதல்  ஜெயிக்கனும் 

 

8   நான்  ஸ்டேட்  ஃபர்ஸ்ட்  வந்தப்போ  நான்  உம்முனு  இருக்கற  ஃபோட்டோவைத்தான்  பப்ளிஷ்  பண்ணாங்க, ஆனா  நான்   ஒரு  கொலை  பண்ணப்ப  வந்த   ஃபோட்டோல  நான்  சிரிச்சுட்டு  இருக்கற  மாதிரி  ஃபோட்டோவைப்போட்டு  இந்தக்கொலையை  செய்தது  இந்தப்பெண்  தான்னு  போட்டாங்க 

 

9   சாத்தானுக்கு  சர்ச்    என்ன  வேலை  ?

 

10  ஏண்டா  டேய் , அடுத்தவங்க  லெட்டரைப்படிக்கறதே  தப்பு , அதுல   தப்பு  வேற  கண்டு  பிடிக்கறியா?

 

11    ரயில்ல  வந்தது  வித் அவுட்ல  இதுல  கலை  ஆர்வம்  வேற  (  கலைஞர்  ரெஃப்ரன்ஸ்டாப்  பூரா  ஓவியம்கற  பேர்ல  கிறுக்கி  வெச்சிருக்கான்

 

12    இந்த  இடத்துக்கு  இப்போவே  போகனும்..

 

 சாரி. நான்  திருடன். பகல்ல    எனக்கு  ரூட்டு  தெரியாது 

 

 

13   பிங்க்கி  பிங்க்கி  பாங்க்கி  ராஜா  ராணி  ஜாக்கி  

 

சி.பி  ஃபைனல்  கமெண்ட்  ஸ்லோ  மெலோ  டிராமா  என்பதால்  பொறுமையாகப்பார்ப்பவர்களுக்கு , காதலர்களுக்கு,   காதலில்  தோல்வி  கண்டவர்களுக்கு  படம்  பிடிக்கும்ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க்   41குமுதம்  ரேட்டிங்  ஓக்கே . அட்ரா  சக்க  ரேட்டிங்  2.75  / 5 .  அமேசான்  பிரைம்    கிடைக்குது 

டிஸ்கி -  சில  விமர்சகர்கள்  ஹீரோ  பேரு  மணி  மாறன், ஆனா  எல்லாரும்  அவரை  மணி  மணி  அப்டினு  கூப்பிடாம  மாறா  மாறா  அப்டினு  தான்  கூப்பிடறாங்க, அது  ஏன்?  அப்டினு  நக்கல்  பண்ணி  இருந்தாங்க . கதிரேசன்கற  பேரை  சுருக்கி, செல்லமா  பொதுவா  கதிர்  அல்லது  ரேஷன்  அப்டினு தானே  கூப்பிடனும், ஆனா  ஒரு  படத்துல   ஹீரோவை  கத்தினு  கூப்பிடுவாங்க. அதுக்கு  இது  தேவலை