Sunday, January 03, 2016

ஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)- சினிமா விமர்சனம்



நடிகர் : ஹாரிசன் போர்டு
நடிகை :கேர்ரி பிஷர்
இயக்குனர் :அப்ராம்ஸ்
இசை :ஜான் வில்லியம்ஸ்
ஓளிப்பதிவு :டேனியல் மின்டல்
ஸ்டார் வார்ஸ் படங்கள் இதுவரை 6 பாகங்கள் வந்துள்ளன. ஜார்ஜ் லூகாஸ் இயக்கிய முந்தைய பாகங்களின் சாதனையை ஸ்டார் வார்ஸ் 7 முறியடிக்குமா? என்ற சந்தேகத்தை தவிடுபொடியாக்கி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது அறிவியல் புனைகதைப் படமான ஸ்டார் வார்ஸ் 7-வது பாகம்.

இந்த கதையானது சூரிய குடும்பத்தை தாண்டிய மற்றொரு கேலக்ஸியில் நடைபெறுகிறது. கதையின் ஹிரோவான போ டேமரோன் ஒரு மிகச் சிறந்த பைலட். தீயவர்களை அழிக்கும் கடைசி ஜெடாய் வீரரான லூக் ஸ்கைவாக்கர் 30 ஆண்டுகளாக காணவில்லை. அவரை கண்டுபிடிக்க வேண்டுமானால் அவர் இருக்கும் இடத்தின் மேப் வேண்டும். ஆனால் வில்லனான ஸ்னோக்கும் மேப்பை கண்டுபிடித்து லூக் ஸ்கைவாக்கர் அழிக்க முயற்சிகிறான்.

ஒரு கட்டத்தில் ஹீரோயின் ரே வில்லனிடம் சிக்கிக்கொள்கிறாள். வில்லன் கிரகங்களையே அழிக்கும் ஆயுத்தை கண்டுபிடிக்கிறான். ஹிரோவுக்கு வில்லன் படையை சேர்ந்த போர் வீரன் ஒருவன் உதவுகிறான்.

கடைசியில் ஹீரோ கேலக்ஸியை காப்பாற்றினாரா?, போரில் யார் வென்றது? லூக் ஸ்கைவாக்கர் ஏன் மறைந்து வாழ்கிறார்? போன்ற கேள்விகளுக்கு சுவராசியாமாக மிரட்டலான கிராப்பிக்ஸ் காட்சிகளுடன் பதில் அளித்துள்ளார் படத்தின் இயக்குனர் அப்ராம்ஸ்.

வழக்கமான ஸ்டார் வார்ஸ் படங்களில் இருந்து இந்த படத்தின் விஷுவல்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும், கதாபாத்திரங்கள்தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. ஸ்டார் வார்ஸ் படங்களுக்கே உரிய குறிப்பிட்ட சூழ்நிலையில் கதாபாத்திரங்கள் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரசிகர்களின் மனதை வெல்லும் பல காட்சிகள் படத்தில் உள்ளன.

மொத்தத்தில் ‘ஸ்டார் வார்ஸ்’ மின்னுகிறது.
maalaimalar

0 comments: