Thursday, June 12, 2025

STRAW 2025) -அமெரிக்கன் மூவி - ஆங்கிலம் / ஹிந்தி - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் க்ரைம் டிராமா )@நெட் பிளிக்ஸ்

               

         6/6/2025   முதல் நெட் பிளிக்ஸ்  ஓ டி டி  தளத்தில்நேரடியாக ரிலீஸ்  ஆகி உள்ள  ஸ்ட்ரா  என்ற  படம்  வித்தியாசமான  ஒரு ராபரி  த்ரில்லர்  எனவும் சொல்லலாம் , சைக்கலாஜிக்கல் க்ரைம் டிராமா  எனவும் சொல்லலாம் , , பெண்களின் மனதைக்கவரும்  ஒரு சென்ட்டிமென்ட்  ஸ் டோரி எனவும் சொல்லலாம் , .மூன்று விதமான ஜர்னரில்  எப்படி வேண்டுமானாலும்  எடுத்துக்கொள்ளும் விதத்தில் படம் இருக்கு  இது தரமான  படம் . குடும்பத்துடன் பார்க்கலாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு கருப்பு இனப்பெண் .சிங்கிள்  மதர் . ஒரு  மகள்  உண்டு  அவளுக்கு  சில மெடிக்கல் கம் பிளைண்ட்ஸ்     உண்டு .ஸ்கூலில் படித்து வரும் மாணவி . நாயகி  ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில்  கேஸ்  கவுண்ட் டரில்  பில்  போடுபவர்  ஆக பணிபுரிகிறார் . ஓனர்  ரொம்ப கண்டிப்பான ஆள் 


அன்று நாயகிக்கு சனீஸ்வரனின்  பார்வையால் ஒரு கெட் ட நாளாக விடிகிறது . அடுத்தடுத்து  சில பிரச்சனைகளை சந்திக்கிறார் .அன்றைய  ஒரு நாள்   பகல் பொழுதில் நடக்கும் சம்பவங்கள் தான் மொத்தக்கதையே 


நாயகியின்  வீட்டு  ஓனர் வாடகை கேட்டு  தொந்தரவு செய்கிறார் .இன்று மாலை   வாடகை தராவிட் டால்  வீட்டில் உள்ள பொருள்களை வெளியே வீசி விடுவேன் என்கிறார் . மகளின்  ஸ்கூலில்  மகளுக்கான லஞ்ச்  சாப்பாட்டுக்கான பணம் 40 டாலர்  பணம் கட்டியே ஆக வேண்டும் என்கின்றனர் 


இது   சம்பந்தமாக    ஸ்கூலில்     நிர்வாகத்துடன்  பேச  நாயகி   ஓனரிடம் பர்மிசன் கேட் கிறார் .அரை மணி நேரத்தில் வரவேண்டும்  ,இல்லை எனில் உனக்கு வேலை இல்லை . டிஸ்மிஸ் என்கிறார் ஓனர் 


 அவசர  அவரமாக  காரில்  கிளம்பிய போது  டிராபிக் போலீஸ்  லைசென்ஸ்  கேட் கிறது . ஆனால்   நாயகி அதை இன்னமும் புதுப்பிக்கவில்லை . இதனால்  நாயகிக்கு அபராதம் விதிக்கிறார்கள் . இந்த விவகாரத்தால்  லேட் ஆகிறது 



ஆனால்   நாயகியால்  அரை மணி நேரத்தில்   வர முடியவில்லை . டிஸ்மிஸ்  செய்யப்படுகிறார் . சரி செட்டில் மென்ட்  பணத்தைக்கொடுங்க, அவசரம் என்றால் ஓனர்  அதை நேராகத் தர முடியாது .தபாலில் செக் ஆக  அனுப்பப்படும் என்கிறார் 


அந்த   சமயம்  ஒரு திருடன்  கையில் துப்பாக்கியுடன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் க் கு வருகிறான் .ஓனரை மிரட்டிப்பணம் பறிக்க முயல்கிறான் .


 நாயகி செம கடுப்பாகி  அந்தத்திருடனை ,ஓனரை  திருடனின் துப்பாக்கியால் ஷூட்  செய்து விடுகிறார் .நாயகிக்கு வர வேண்டிய செட்டில்மென்ட்  தொகை  செக்    டேபிளில்  இருக்கிறது .அதை எடுத்துக்கொண்டு  பேங்க்  போகிறார் . கையில் துப்பாக்கி இருப்பதால்    நாயகியை பேங்க்கில் கொள்ளை   அடிக்க வந்த நபர் என தவறாக நினைக்கிறார்கள் 


போலீசுக்கு   தகவல்    போகிறது .போலீஸ்  பெங்க்கை சுற்றி வளைக்கிறது 


 மேலே   சொன்னவை எல்லாம் முதல் 17 நிமிடங்களில்  நடந்து   முடிந்த   விடுகிறது .இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை 


நாயகி ஆக  பிரமாதமான , உணர்ச்சி   பொங்கும் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பவர்  தாராஜி பி ஜென்சன் .குழந்தை உள்ளம் கொண்டவர்   என்பதை பல காட் சிகளில் வெளிப்படுத்தி  இருக்கிறார் . அடுத்தடுத்து இவருக்கு  சோதனை மேல் சோதனை வரும்போது இரக்கம் பிறக்கிறது 


 பேங்க்  மேனேஜர்   ஆக  ஷெரி  ஷெப்பர்டு   கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .ஆரம்பத்தில்  பயந்த நடிப்பு , பின் நாயகிக்கு ஆதரவாக மாறும் நடிப்பு என இரு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் 


 முன்னாள்   ஆர்மி ஆபீசர் +இந்நாள்  போலீஸ்  ஆபீசர்  கம் பேச்சு வார்த்தை  நடத்துபவர்    ஆக டயானா டெய்லர்  ஸ் டைலிஸான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ..இவரது   கம்பிரமான தோற்றம் ஒரு பிளஸ் 


 மேலே   சொன்ன   3 பேர்   தான் முக்கியமான கதாபாத்திரங்கள் . மற்ற  நடிகர்களுக்கு   அதிக வேலை  இல்லை . வந்தவரை ஓகே ரகம் 

 டாரா டெய்லரின்    பின்னணி  இசை   அருமை . விறுவிறுப்பைக்கூட் டி இருக்கிறது . ஜெஸ்ட்டின் மோரூவின் ஒளிப்பதிவு  பிரமாதம் . , நிக்   கோக்கரின்  எடிட்டிங்க்  பக்கா  ஷார்ப் . 108    நிமிடங்கள்  டைம்  டியூரேசன் . ஒரு சீன கூட போர் அடிக்கவில்லை ,  கதை , திரைக்கதை , வசனம் , ,இயக்கம்  , தயாரிப்பு எல்லாமே  டெய்லர் பெரி தான் 

சபாஷ்  டைரக்டர்

1   முதல்  சீனிலேயே   நேரடியாகக்கதைக்குள் போனவிதம் 


2   நாயகிக்கு அடுத்தடுத்து  நடக்கும் சம்பவங்களால்  அவர்  பிரச்சனைக்குள் சிக்குவது ஆடியன்ஸுக்கு நேரடியாகக்கனக்ட் ஆன விதம் 


3   வங்கிக்குள்  நடக்கும்     உணர்ச்சி கரமான  சம்பவங்கள் 


4  நாயகியின்  மகள்  தயாரித்த  ஒரு விளையாட்டுப்பொருளை  அனைவரும் வெடிகுண்டு என நினைப்பது 


5  பாரதிராஜா , ஷங்கர்   படங்களில்      வருவது  போல  பொது மக்கள்  நாயகிக்கு ஆதரவாகக்குரல் கொடுப்பது , அதைக்கண்டு நாயகி மனம் நெகிழ்வது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வங்கியில்  செக்யூரிட்டி ஆபீசர்  என ஒருவர் என்னதான் செய்கிறார் ? 


2   சுலபமாக முடிக்க வேண்டிய பிரச்சனையை  போலிஸ்   ஜவ்வாக இழுப்பது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - கிளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பரபரப்பான  ஒரு த்ரில்லர்   மூவி பார்க்க விரும்பும் ஆண்களும் , சென்ட்டிமென்ட்  கதை  விரும்பும் பெண்களும் பார்க்க வேண்டிய படம் . ரேட்டிங் 3/ 5 



Straw
Release posterir
Directed byTyler Perry
Written byTyler Perry
Produced by
  • Tyler Perry
  • Angi Bones
  • Tony Strickland
Starring
CinematographyJustyn Moro
Edited byNick Coker
Music byDara Taylor
Production
company
Distributed byNetflix
Release date
  • June 6, 2025
Running time
108 minutes[1]
CountryUnited States
LanguageEnglish

Wednesday, June 11, 2025

மனிதர்கள் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

   

     அறிமுக இயக்குனர் ராம் இந்திரா  முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க ஒரே இரவில்  ஒரே  காரில்  நடக்கும் பயணக்கதையாக ஒரு த்ரில்லர் படத்தைத்தந்திருக்கிறார் . அது  எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆனது என்பதைப்பார்ப்போம் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  மற்றும்  ஐந்து  நண்பர்கள்  6 பேரும் நண்பர்கள் . குடிகாரர்கள் . ஒரு நாள்  குடித்து விட்டு  மட்டை ஆகி இருக்கும்போது  ஒரு வாக்குவாதத்தில் ஒரு நண்பர் பாட்டில் குத்துப்பட்டு இறந்து கிடக்கிறார் அவர்  எப்படி இறந்தார் ?  யார்  அவரைக்கோலை செய்தது ? என்பது  மப்பில்  இருந்த மற்ற  ஐவருக்கும் தெரியவில்லை . டெட் பாடியை எங்காவது புதைத்து விடலாம் என நினைத்து  காரில்  கிளம்புகின்றனர் . வழியில்  அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் மீதி திரைக்கதை 


க்ளைமாக்சில்  அந்தப்பிணத்தைப்புதைக்கும்போது அந்த உடலில் ஒரு அசைவு தோன்றுகிறது . உயிர் இருப்பதை அனைவரும் உணர்கிறார்கள் . ஆனால்  புதைத்து விடலாம் என்று  இருவரும் ஹாஸ்பிடல்  கொண்டு  போகலாமா?  என மூவரும்  யோசிக்கிறார்கள் . இதில் ஐவருக்கும் கை  கலப்பு மற்றும் வாக்கு வாதம் உருவாகிறது .இறுதியில் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன் ஆக கபில்  வேலவன்  கச்சிதமாக நடித்திருக்கிறார் . முடிவு எடுக்கும்   திறன் கொண்ட  ஒரே ஆண்  இவர் தான் இந்தக்குழுவில் . ஆல்பா மேல் . மற்ற  அனைவரும்  கோழைகள் , பயந்தாங்கோலிகள் . தக்சா ,குணவந்தன் தனபால் , , அர்ஜுன் தேவ் , சம்பா சிவம்  ஆகிய ஐவரும்  முகத்தில்  பயத்தை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள் . டி வி சீரியலில்  வருவது  போல  படம் முழுக்க  இருவர் அழுது கொண்டே  வருவது எரிச்சல் உண்டாக்குகிறது ( ஒரு வேளை  பெண்களின்  மனம்   கவரவோ என்னவோ? )


ஐந்து  பேரில்  ஒருவர் எஸ்கேப் ஆகி ஓடுவது ,அவரைத்தேடி  , துரத்தி மற்றவர்கள் போவது , பெட்ரொல்  பங்க்கில்  அவர்களை  சந்தேகமாகப்பார்ப்பது . கார் டிக்கிக்கதவில் ரத்தக்கறை  படிந்திருப்பது ,  கோவில்  திருவிழாக்கூட்டம்  கடக்கையில்  டென்ஷன் ஆவது , ஒரு வழிப்பறிக்  கும்பலிடம் மாட்டிக்கொள்வது  என திரைக்கதையை சுவராஸ்யப்படுத்த பல சம்பவங்கள் வருகின்றன  


அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்  தான் ஒளிப்பதிவு .பிரமாதபப்டுத்தி இருக்கிறார் . ஒரு காருக்குள்  இரவில்  நடக்கும் கதை என்பதால் இவருக்கு சவாலான பணி  . காரின் ஹெட் லைட்  வெளிச்சத்தில் சாலையைக்காட்டும்போது கலக்கலான ஒளிப்பதிவு 


  அநிலேஷ்  எல் மாத்தியூ  தான் இசை .இரண்டு பாடல்கள் சுமார் ரகம் .பின்னணி இசை பரவாயில்லை ரகம் .


மகேந்திரன் பாண்டியன் தான் ஆர்ட் டைரக்ஸன் . திரு விழா செட்டிங்க்   அருமை . 


ஒளிப்பதிவு   எந்த அளவுக்கு படத்துக்குப்பெரிய பிளசோ   அந்த   அளவு  ஒலிப்பதிவு  மைனஸ் .வசனமே  புரியவில்லை .     பாதிநேரம்  அழுது கொண்டே இருப்பதாலும் .அனுதாபத்தைப்பெற  கதறிக்கொண்டே  இருப்பதாலும்  வசனங்கள் ஒன்றும் புரியவில்லை 



சபாஷ்  டைரக்டர்


1  பெண் கதாப்பாத்திரமே  இல்லாமல்   ஒரு படம் தரலாம் என்ற துணிச்சல் 


2  ஒரே  கார் ,ஒரே இரவு  என்பதால்  அதிக அலைச்சல் இல்லை .துணை நடிகர்கள் சம்பளம் மிச்சம் 


3  படம் பார்க்கும்   அனைவருக்கும்  ஒரு பதட்டத்தை  உருவாக்கியது . ஆடியன்ஸுக்கு கதையுடன் ஒரு கனெக்ட்டிவிட்டி உருவாக்குவது மிக முக்கியம் .பெரிய  பெரிய  இயக்குனர்களே  அதை செய்யத்தவறும்போது அறிமுக இயக்குனர்  செய்திருப்பது சபாஷ் போட வைக்கிறது 


  ரசித்த  வசனங்கள் 

 படம் முழுக்க  கெட் ட  வார்த்தைகள் தான் ஐவரும் பேசுகிறார்கள் .எதுவும் ரசிக்கும்படி இல்லை 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பேனிக்  அட் டாக்  வந்து  ஒருவன்   துடித்துக்கொண்டிருக்கிறான் . அவனுக்குத்தண்ணீர்  தராமல்  வெட்டியாகப்பேசிக்கொண்டிருக்கிறார்கள் 


2   ஆறு  பேர்  பயணிக்கும் காரில்  ஒரு வாட் டர்   பாட்டில் கூடவா இருக்காது ? 


3   ஒரு ராத்திரி   முழுக்க  எங்கெங்கேயோ  அலைகிறார்கள்  காரில் .ஆனால்  போலீஸ்  செக்கிங்கே  ஒரு இடத்தில் கூட இல்லை 


4  அழுக்கோண்டே  இருப்பது .பயத்தில் கத்திக்கொண்டே  இருப்பது  எரிச்சலைக்கொடுக்கிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+   (கெட் ட  வார்த்தைகள்) 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - வித்தியாசமான  படங்கள்  பார்ப்பவர்கள் , சினி பீல்டில் ஒர்க்  செய்பவர்கள்  பார்க்கலாம்.பொது ஜனங்களுக்குப்பிடிக்ககாது . விகடன் மார்க் 41  ரேட்டிங்க் 2.25 / 5 

Tuesday, June 10, 2025

MADRAS MATINEE (2025) - மெட்ராஸ் மேட்னி - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )

             

           

குடும்பக்கதைகளை  சொல்வதில்  இயக்குனர்  விசு  சம்சாரம் அது மின்சாரம் காலத்தில் இருந்து பிரபலம் . வரவு எட்டணா  செலவு பத்தணா  காலத்தில்   இருந்து  இயக்குனர்  வி சேகர்  பி அண்ட்  சி செண்ட் டர்   ரசிகர்களைக்கவர்ந்தவர் . இவர்களுக்குப்பிறகு  குடும்பக்கதைகளைப்பார்ப்பதே  அரிதாகி விட்டது .ஆக்சன்  ஹீரோக்கள்  அரிவாள் , துப்பாக்கி சகிதம்  களம்  இறங்கி  வில்லன்களையம்  , ஆடியன்ஸையும்  கொத்து புரோட்டா  ஆக்கிக்கொண்டிருக்கும் கால கட்டம் இது .இயக்குனர்  கார்த்திகேயன்  மணி  குடும்பங்கள் கொண்டாடும்  ஒரு வெற்றிப்படத்தை தந்திருக்கிறார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு ஆட்டோ  டிரைவர் , மனைவி ,மகன், மகள்  என  ஒரு  அழகான  குடும்பம் .அப்பாவாய்ப்புரிந்து கொள்ளாத மகன் .அம்மா, அப்பாவை விட்டுப்பிரிந்து  நகரத்தில் வேலை பார்க்கும் மகள் .  இவர்கள்  நால்வர்  வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் மொத்தக்கதையே . ஒரு மிடில்  கிளாஸ்  மனிதனின் வாழ்க்கையை இவ்வளவு ,சுவராஸ்யமாக  மனதைத்தொடும்படியாக சொல்ல முடியும் என  நிரூபித்தமைக்காக இயக்குநரைப்பாராட்டலாம் 


 நாயகன் ஆக காளி வெங்கட்  அமைதியான  நடிப்பு . உடல் மொழி , பார்வையாலேயே  அருமையாக நடித்திருக்கிறார் .அவரது   மனைவியாக  ஷெல்லி பொறுமையான   பெண்ணாக  பார்வையாலேயே  நம்மைக்கவர்கிறார் .மகள் ஆக  ரோஷினி ஹரிப்ரியன்  பாந்தமான  தோற்றம் .அவரது கண்ணியமான  ஆடை  வடிவமைப்பு ஒரு கவுரவத்தைத்தருகிறது . அரைகுறை டிரஸ்களில்  வலம்   வரும் நாயகிகளையே பார்த்து சலித்த  நம் கண்களுக்கு  உடல்  அழகை வெளிக்காட் டாத  கவுரவமான  உடையில்  இவர் வல ம் வருவது  மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது 


மகன் ஆக   வரும்  விஷவா  ஆரம்பத்தில்    எரிச்சலைத்தரும்  நடிப்பை வழங்கினாலும்  தன்  அம்மாவை வீட்டு வேலைக்காரி போல் இருக்கா என சொன்ன இ பி ஆபீசரை வெளுத்து வாங்கும் இடத்தில் ஜொலிக்கிறார் .


முக்கியமான இந்த      நான்கு     கதாபாத்திரங்கள் போக  பச்சோந்தி அரசியல்வாதி ஆக   வரும்  கீதா   கைலாசம்  ,பூமர்  ஆண்ட்டி  ஆக   வரும்  ஜாங்கிரி மதுமிதா ,இருவரும்   கலகலப்பான  நடிப்பை  தந்திருக்கிறார்கள் .சிறிது நேரமே  வந்தாலும்   இருவரும்  அருமை .


 இ பி  ஆபீசர்  ஆக   வரும் சுனில்  சுகாதா ,டிரைவிங்க் ஸ்கூல்  ட்ரெய்னர் ஆக   வரும் ஜார்ஜ் மரியம்  இருவரும் மனதில்  பதிகிறார்கள் 


 டி வி   புகழ்  அர்ச்சனா  எனக்குப்பிடித்த  ஒரு சிரிப்பழகி , ஆனால் இதில் அவரது நடிப்பு   கொஞ்ச்ம ஓவர் ஆக்டிங்க் மாதிரி   தோன்றியது 


 கதை   சொல்லும்     ரைட் டர்  ஆக   சத்யராஜ்   சில   இடங்களில்  ஒன்  லைனர்களால்   கவர்கிறார் .பல இடங்களில்  சலிப்பூட்டுகிறார் 

கே சி     பாலசாரங்கனின்  இசையில்  பாடல்கள்  இரண்டு  அருமை . பின்னணி   இசை  கவனிக்க வைக்கிறது .ஜி கே ஆனந்தின்  ஒளிப்பதிவில்  உயிரோட் டம் , ஆர்ட்   டைரக்ஸன்    ஜாக்கி  மிடில்கிளாஸ்   பேமிலியின் வீடடைக்கண் முன் நிறுத்துகிறார் .சதீஷ்குமார்  தான் எடிட் டிங்க் .இரண்டேகால் மணி நேரம்  டியூரேசன்

சபாஷ்  டைரக்டர்

 1 ரைட் டர் சத்யராஜ்   அந்த  மலையாளப்பெண்ணுடன்  நடத்தும்  உரையாடல்கள் அருமை 


2   நாயகனின்   மகள்   தன்னைப்பெண் பார்க்க   வந்த  மாப்பிள்ளையின்  சித்தி   தன்  அப்பாவின் ஜாதியை மட்டம்  தட் டும்  சீனில்  பொங்கி  எழுவது   செமயான சீன் 


3   மெயின்   கதை முழுக்க   ஒரு சீரியஸ்   மோடில் போய்க்கொண்டிருக்கும்போது  அந்த  இ பி ஆபீசர் - பூமர் ஆண்ட்டி  ரொமாண்டிக் போர்சன்  ஒரு ரிலாக்ஸ் .கலாட் டா  மின்சார  ஒயர்  விழுந்து   நாய் இறப்பது . அது  சம்பந்தமாக  நடக்கும்  ரகளைகள் 


4  க்ளைமாக்சில்   ஹீரோ   வில்லன் சோலோ பைட் டையே  பார்த்து சலித்த  நமக்கு  குடும்பமாக   நால்வரும் அமர்ந்து   ஒன்றாக சாப்பிட்டு டிஸ்கஸ் செய்யும் சீன்  கவிதை 


5   அந்த   ஊறுகாய் வியாபாரி  கேரக்ட்டர்  டிசைன் , நடிப்பு இரண்டும் செம 


  ரசித்த  வசனங்கள் 


1   பெண்ணின்  நிராகரிப்பை ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியாது 


2 திருமணம் ஆகாத பெண்கள் சந்திக்கும்  சவால்  என்ன?  எல்லாரும்  நம்மையே  பார்க்கிற மாதிரி    இருக்கும் 


3 வீட்டுக்கு வெளியில்  கிடைக்கும்  வலிகளை வீட்டின் உள்ளே  கிடைக்கும் பாசம், அன்பு  சரி  ஆக்கிடும் 


4  பாப்பா   எப்படி   என்னை விடக்கலரா  இருக்கா? 


 பிறக்கும்போது எல்லாரும் இந்த மாதிரி கலராதான் இருப்பாங்க , போகப்போக  கறுப்பாகிடுவாங்க 


5  நம்ம மனசு  சந்தோஷமா  இருக்க  பொருள்  தேவை இல்லை 


6   பாசமான  அப்பாவா  இருப்பதை விட பொறுப்பான அப்பாவா இருப்பது முக்கியம் 


7  நாம   டம்மி ஆகிடக்கூடாதுன்னு எல்லார் லைஃப்லயும் ஒரு பயம் இருக்கும் 


8  தப்பா  வழி நடத்தக்கூட அவனுக்குன்னு யாரும் இல்லை 


9 திமிராகப்பேசும் ஆண்களை நம்பு , ஆனால் அம்மாக்கோண்டுகளை  நம்பாதே 


10  நீ இதுவரை கஷ்டங்களை மட்டுமே பார்த்திருக்கே , கல்யாணம் ஆகிப்போகும் இடத்திலாவது சந்தோஷமா இருக்கணும் என்பதுதான் என் ஆசை 


11 போறவன், வர்றவன் எல்லாம் நம்மை அசிங்கப்படுத்தறான் . பெத்த புள்ளை  தானே ? பேசினா பேசட்டும் 


12    எல்லார் மனசுலயும் ஒரு துயரம் . இதுல கொடுமை என்னன்னா  நேற்றை  விட இன்று அதிக துன்பம் வரும் 


13   வார்த்தையால் அடிப்பது தப்பு 


14   இந்த நாட்டின் பெரிய சாபக்கேடு இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் 


15   எமன்   எப்போ  எப்படி ஆபரேட்   பண்ணுவான்னு  யாராலும்  சொல்ல முடியாது 


16    என்னை பிரேமா எனக்கூப்பிட் டா போதும் .,பச்சோந்தி   என்பது  எனது பட் டப்பெயர் தான் 


17   கிளியோபாட்ரா   நான்கு கல்யாணம் பண்ணிக்கிட் டா . நாலுமே டைவர்ஸ்  வரை போயிடுச்சு .  நானா இருந்திருந்தா அவளை கண்ணுக்குள்ளே  வெச்சு  பார்த்திருப்பேன் 



18  சாதாரண  மனிதனின் கதைதான் வெகு ஜனங்களைக்கவரும் 


19  மிடில்   கிளாஸ்   கதைல  அட்வென்ச்சர்  இருக்காது , ரொமான்ஸ் இருக்காது , ஆக்சன்  இருக்காது .செம போர் 


20   நீங்க  அழுவது போல   எதுனா சம்பவம்  உங்க   வாழ்க்கைல நடந்திருக்கா மேடம் ? 


  சரக்கு அடிச்சு  டைட் ஆனா நைட் அழுவேன் 


21   நாய் பிரவுன் கலர்ல இருந்தா பிரவுனி . பிளாக் கலர்ல இருந்தா  பிளாக்கி , ஒயிட் கலர்ல   இருந்தா ரோஸி 


22   இந்த அண்டம் , ஆகாயம்   எங்கே   இருந்து   வந்தது ?


 முண்டம் எங்கே   இருந்து   வந்தது ? தண்டம் 

23  மேரேஜ்  லைப்ல நான்  சந்தோஷமா இல்லை ,இப்ப டைவர்ஸ் பண்ணிட்டேன் 


இப்ப சந்தோஷமா இருக்கீங்களா?


ம்ம்ம் 


24   கஷ்டம் தெரியாம உங்கப்பா உன்னை வளர்த்திட் டாரு  


25  பேசுன  வார்த்தைகளை  விட பேசாத   வார்த்தைகள் தான் அதிக வலி களைத்தரும் , காயங்களை  உண்டாக்கும் 


26  எல்லாப்பக்கங்களிலிருந்தும்  எல்லாரும் எனக்குப் பிரஷர் போடற மாதிரி இருக்கு 


27  நான்  பட்ட   எல்லாக்கஷ்டங்களோட பலன் நீங்க ரெண்டுபேரும் தான் . ஆனா   நான் பட் ட   கஷ்டங்கள  நீங்க படக்கூடாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1   மெயின் கதையில்  நாம்  ஒன்றி இருக்கும்போது  சத்யராஜ்   வாய்ஸ்   ஓவரில் ஆங்காங்கே  தலையிடுவது  எரிச்சல் 


2  நாயகனின் மகள்  மாப்பிள்ளையின்  சித்தியிடம்   எரிந்து   விழுவது   சரி . ஆனால்  மாப்பிள்ளையை  அவ்ளோ  கேவலமாக  டீல் செய்திருக்க வேண்டாம் 


3    டீ  டோட் டலர்  ஆக   எந்த  தீய பழக்கங்களும்   இல்லாத நாயகன்  திடீர் என  தண்ணி அடிப்பது தம் அடிப்பது தேவை இல்லாத திணிப்பு 


4  மெயின் கதைக்கும் , டைட்டிலுக்கும் சம்பந்தம் இல்லை ,  நல்ல தமிழ்  டைட்டில்  வைத்திருக்கலாம் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கிளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 150  ரூபா  கவுண்ட்டர்   டிக்கெட்டை  முன்னணி  ஹீரோ  படம் என்பதால் முதல் நாள் முதல் ஷோ  வை  1000 ரூபா  கொடுத்துப்பார்த்து அது குப்பைப்படம் என்பதை உணர்ந்து நொந்து கொள்வதை விட இது மாதிரி  லோ பட்ஜெட் படங்களை  தியேட்டரில் பார்க்க   அனைவரும் முன் வந்தால்  நல்ல சினிமாக்கள் மேலும் மேலும் வரும் . விகடன்   மார்க் யூகம் . 41 . ரேட்டிங்க்   3 / 5 

Monday, June 09, 2025

STOLEN (2025)-- ஹிந்தி - சினிமா விமர்சனம் ( உலக சினிமா ) @ அமேசான் ப்ரைம்

       


                 திரை  அரங்குகளில்  2025ல்  ரிலீஸ் ஆனாலும்  பல திரைப்பட விழாக்களில் 2023 லேயே  கலந்து  கொண்டு பல விருதுகளை வென்ற படம் இது . டூயட் , காமெடி ,கமர்சியல்  மசாலா அம்சங்கள்  இல்லாத  கில்லி  படம் ஆகவே இதை நான் பார்க்கிறேன் . 90 நிமிடங்களே  ஓடக்கூடிய  இந்தப்படம்  ஒரு நிமிடம்   கூட போர் அடிக்காத  த்ரில்லர் படம் .பொதுவாக  விருதுப்படம் என்ற  லேபிள்  இருந்தாலே  அது  ஆமை வேகத்தில்   நகரும் .ஆனால்  இது  பரபரப்பாக விறுவிறுப்பாக இருக்கும் ஸீட் எட்ஜ் த்ரில்லர் மூவி 



புதுமையான  படங்கள்  பார்க்க விரும்பும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் . 100  கோடி 150 கோடி ஹீரோவுக்கு    தண்டமாக சம்பளம்  கொடுத்து  விட்டு  திரைக்கதையில்  கவனம்  செலுத்தாமல்  டப்பா  படம்  கொடுக்கும்  இயக்குநர்களும் , காசாய்த்தண்ணீராய்  இரைத்துப்படம் எடுத்து  விட்டு படம்  ஊத்திக்கிட்ட்தும்  கண்ணீர்  விடும் தயாரிப்பாளர்களும்   பார்க்க வேண்டிய  படம் இது 


 2018ல்   நடந்த   உண்மை சம்பவத்தை  ஒட்டி எழுதப்பட் ட  கதை   இது . உண்மைக்கு மிக நெருக்கமாக   காட் சிகள்  இருப்பதால்  ஆடியன்ஸுக்கு  கனெக்ட் ஆகும்  நல்ல   திரைக்கதை  இது .ஆடியன்ஸுக்கு  சுத்தமாக  கனெக்ட்  டே  ஆகாமல்  குப்பைப்படங்களாக  வந்த  கங்குவா , இந்தியன் 2 , வகையறாக்களைப்பார்த்து  நொந்து  போன  ரசிகர்களுக்கு  விருந்து  படைக்கும் கதை  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி   5 மாதக்குழந்தைக்குத்தாய் .  அவளது கணவனை  போலீஸ்  ஒரு பொய்க்கேசில்   உள்ளே  தள்ளி  இருக்கு . ரயில்வே   ஸ்டேசனில்    நாயகி  உறங்கிக்கொண்டிருந்தபோது  ஒரு   திருடி  குழந்தையைத்திருடிக்கொண்டு போகிறாள் 



 நாயகன் தன் விதவை  அம்மாவின்  திருமண  வைபவத்தில் கலந்து கொள்ள  ஊருக்கு வருகிறான் . ரயில்வே ஸ்டேசனில்  அவனை  பிக்கப் பண்ண  நாயகனின் அண்ணன்  வருகிறான் . நாயகன்மற்றவர்களுக்கு உதவும்  மனம்    கொண்டவன் . நாயகனின் அண்ணன் கொஞ்சம்   பணத்திமிர் உள்ளவன் 


திருடி  குழந்தையைத்திருடிக்கொண்டு ஓடும்போது  நாயகனை  இடித்துவிட்டுத்தான் கிராஸ் செய்கிறாள் . ஆனால்   நாயகனுக்கு  அவள்   திருடி   என்பது   தெரியாது . குழந்தையின்  தொப்பி  நாயகன்  கையில்  மாட்டிக்கொள்கிறது 


திருடி    தப்பி  விடுகிறாள் . நாயகி  திடீர்   என  விழிப்பு வந்து  குழந்தையைக்காணோம் என அலறுகிறாள் . அரக்கப்பறக்கத்தேடும்போது   குழந்தையின்  தொப்பி  நாயகன்  கையில்   இருப்பதைப்பார்த்து   அவன் தான் திருடன் என தவறுதலாக நினைத்து  கத்துகிறாள் 


 ;போலீஸ்   வருகிறது . நாயகனை , நாயகனின் அண்ணனை  விசாரிக்கிறது . பின்  நாயகன் திருடன் இல்லை என்பதை உணர்கிறது . ஆனால்   திருடியை ப்பார்த்த சாடசி   நாயகன்தான் . இதனால்  நாயகனை  விட போலீஸ்  மறுக்கிறது 


போலீஸ்  ஸ் டேசனுக்கு  போலீஸ்  பைக்கில் செல்ல   அவர்களை  பாலோ  செய்து  நாயகன் , நாயகனின் அண்ணன்  மூவரும்   காரில்  செல்கின்றனர் 


முதல்  பத்து  நிமிடங்களில்  மேலே   சொன்ன சம்பவங்கள்  நடக்கின்றன . இதற்குப்பின் நிகழும்  பரபரப்பான சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக   சுபம் வரதன்   நடித்திருக்கிறார் . இவர்  ஒரு திரைக்கதை ஆசிரியரும் கூட .. பிரமாதமான  அண்டர் பிளே  ஆக்டிங்க் .  மனதுக்கு நெருக்கமாகும்   அளவு அருமையான நடிப்பு ,நாயகனின் அண்ணனாக அபிஷேக் பானர்ஜி  தெனாவெட்டான  நடிப்பு .அவரது  பணத்திமிர்  டயலாக்கிலும், உடல்மொழியிலும் தெரிகிறது 


 நாயகி ஆக  மியா  மேல்சர்  தத்ரூபமான நடிப்பு .இவர்  அடிப்படையில்  விருது பெற்ற  நடிகை . நம்ம  ஊர் நந்திதா தாஸ்  போல  மாநிற  மங்கை . முகத்தில்  உணர்ச்சிக்குவியலைக்காட்டுகிறார் . பல   குறும்படங்களில் விருது பெற்ற நடிகை இவர் 


இந்த  3 கேரக்டர்கள்  தான் முக்கியமான கேரக்டர்கள் . ஒரு கார்  . இவங்க  3 பேர்  . பயணம்   தான் மொத்தப்படமும் .



இயக்கம்   கரண் தேஜ்பால் 

சபாஷ்  டைரக்டர்



1  அசாம்  மாநிலத்த்தில்  ஒரு தவறான   வாட்ஸாப் பார்வர்டு மெசேஜால்  இரு அப்பாவிகள்  திருடர்கள்  என தவறாக புரிந்துகொள்ளப்பட் டு பொது மக்களால் அடித்துக்கொல்லப்பட்டார்கள் . 2018ல்   நடந்த  அந்த உண்மை சம்பவத்தையொட்டி தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது . முதல்  10 நிமிடங்களிலேயே  கதை அப்படியே நம்மை உள்ளே  இழுத்துக்கொள்ளும் 


2   போலீஸ்   நம்மை  விசாரிக்கும்போது நாம்  கொத்தடிமை மாதிரி  பதில் சொல்ல வேண்டும் . நம் உடல் மொழியில்  , பேச்சில்  கொஞ்சம் தெனாவெட்டு  இருந்தால்  நம்மை முடித்துக்கட் டி   விடுவார்கள்   என்பதை பிரமாதமாக எடுத்து சொல்லும் சீன்கள் செம 


3  நாயகி  நல்லவளா?  கெட்டவளா ? என்பதை  தேங்காய்  உடைத்த மாதிரி   சொல்லாமல்  மாற்றி  மாற்றி  பரமபதம் விளையாடி சொல்வது அருமையான உத்தி 


4   ஊர்   மக்கள் நாயகன், நாயகனின் அண்ணன் ,நாயகி   மூவரையும்   துரத்தும்   சீன்கள்  , நாயகன்  உயிருக்குப்போராடும் சீன்கள் எல்லாம் பதைபதைக்க வைப்பவை 


5  ஒளிப்பதிவு , இசை , பின்னணி இசை  , போன்ற   டெக்கினிக்கல்   அம்சங்கள்   அனைத்தும் அருமை 

6  வசதி  இல்லாதவர்கள்  , வசதி உள்ளவர்கள்  இரு தரப்புக்கும்  கிடைக்கும் நீதி   நியாயம் வேறு வேறானவை என்பதை  உணர்த்தம்   சீன்கள்   அருமை 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U//A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - அனைவரையும் கவரும்  இந்தப்படத்தை  மிஸ்  செய்து விட வேண்டாம் . டூயட் , காமெடி ,கிளாமர்  எதுவும்  மிக்ஸ்  செய்யாத   ராவான படம் . ரேட்டிங்க்  3.5 / 5 

Friday, June 06, 2025

THUG LIFE(2025)-தக் லைப் - சினிமா விமர்சனம் (கேங்க்ஸ்டர் மசாலா)

               THUG LIFE(2025)-தக் லைப் - சினிமா விமர்சனம் (கேங்க்ஸ்டர் மசாலா)


38 வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் இணைந்திருக்கும் "நாயகன்" காம்போ மணிரத்னம் + கமல் =      தக் லைப் ஒரு சராசரிப்படம் லெவலுக்காவது வந்திருக்கா? என்பதைப்பார்ப்போம்    


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் சிறுவனாக இருக்கும்போது நடந்த  ஒரு சம்பவத்தில் தவறுதலாக நாயகனின் அப்பா வில்லன் கேங்கால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.நாயகனின் 5 வயது தங்கை காணாமல் போகிறார்.


வில்லன் ஒரு கேங்க்ஸ்டர் லீடர்.இன்னொரு கேங்க்ஸ்டர் லீடருடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது அவன் போலீசுக்கு இன்பார்ம் பண்ணி மாட்ட வைக்கிறான்.அப்போது வில்லன் போலீசிடம் இருந்து தப்பிக்க சிறுவனாக இருந்த நாயகனைக்கேடயமாகப்பயந்படுத்திக்கொள்கிறான்.இதற்கு நன்றிக்கடனாக வில்லன் நாயகனை தன் வளர்ப்பு மகனாகவே வளர்க்கிறான்


காணாமல் போன நாயகனின்  தங்கையைக்கண்டுபிடித்துத்தருவதாக வில்லன் நாயகனுக்கு வாக்குத்தருகிறான்.


20 வருடங்கள் கழித்து கதை இப்போது நடக்கிறது.நாயகன் வில்லனின் ரைட் ஹேண்ட் ஆகிறான்.எங்கிருந்தோ வந்த சிறுவன் அடுத்த. வாரிசாக உருவாவது வில்லனின் கேங்கில் இருந்த மற்றவர்களுக்குப்பிடிக்கவில்லை.


நாயகனின் மனதை வில்லனின் சகோதரன் கலைக்கிறான்.உன் அப்பாவின் மரணத்துக்கு காரணமே இவர் தான் என வில்லனைக்காட்டிக்கொடுக்கிறான்.இவர்கள் பேச்சில் மயஙகி ,நம்பி நாயகன் இவர்களுடன் இணைந்து வில்லனை சுட்டுக்கொல்கிறான்.


இப்போது நாயகன் வில்லனின் சாம்ராஜ்யத்தைக்கைப்பற்றுகிறான்


இடைவேளை

இறந்ததாக நினைத்த வில்லன் உயிர் பிழைத்து மீண்டும்  வருகிறான்.துரோகிகளை வரிசையாகப்பழி வாங்குகிறான்.கடைசியில் நாயகனையும் பழி வாங்கினானா?இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்


நாயகன் ஆக சிம்பு.வித்தியாசமான ஹேர்ஸ்டைலில்,எதற்கும் அலட்டிக்கொள்ளாத புன்னகையில் அருமையான நடிப்பு.


வில்லன் ஆகக் கமல்.நாயகனை விட இவருக்குத்தான் அதிக முக்கியத்துவம்.பல காட்சிகளில் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.வழக்கமாக தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைக்கு லிப் கிஸ் கொடுப்பதைத்தன் கொள்கையாகவே வைத்திருக்கும் கமல் இதில் ஒரு ஜோடிக்கும் மட்டும் கொடுத்து இன்னொரு ஜோடிக்குத்தராமல் அதிர்ச்சி அளிக்கிறார்.கமல் ரசிகர்களுக்குப்பெரிய ஏமாற்றம்.


4  கெட்டப்பில். கமல் வருகிறார்.ஏ ஐ தொழில் நுட்பத்தில் நாயகன் கமல் கெட்டப் அருமை.விசில் பறக்கிறது.பிறகு 20 வருடங்கள் கழித்து வரும் கெட்டப்பில் ஹேர் ஸ்டைல் அருமை.இடைவேளைக்குப்பின் வரும் கெட்டப் இந்தியன் 2 கெட்டப் போல எடுபடவில்லை.பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறார்.க்ளைமாக்ஸ் கெட்டப் பரிதாபமாக இருக்கிறது.


கமலின் மனைவியாக அபிராமி .லிப் கிஸ்க்கே சம்பளம் சரியாப்போச்சு.கமலின் கீப் ஆக திரிஷா.பிறகு சிம்பு வுக்கும் கீப் ஆக வருகிறார்.கீப் இட் அப்.


வில்லனின் அண்ணனாக நாசர்.சிறப்பான நடிப்பு.வழக்கமாகக்கமல் படஙகளில் இவரது கேரக்டர் டிசைன் வலுவாக இருக்கும்.ஆனால் இதில் அந்த அளவு இல்லை.


வில்லனின் அடியாட்களாக வீணடிக்கப்பட்ட நல்ல கலைஞர்கள் பகவதிப்பெருமாள்,ஜோஜூ ஜார்ஜ்


வில்லனைப்பிடிக்க வரும் போலீஸ் ஆபீசர் ஆக அசோக் செல்வன் கம்பீரமான தோற்றம்.ஆனால் குறைவாந காட்சிகள் தான்.அவரது மநைவியாக ஐஸ்வர்யா குறைவில்லாத நடிப்பு


வடிவுக்கரசி ஒரு கெஸ்ட் ரோலில் வருகிறார்

ஏ ஆர் ரஹ்மான் இசையில். சிங்குச்சா,சுகர் பேபி இரண்டும் அருமை.சின்மயி வெர்சன் ,தீ வெர்சன் என ட்ரெண்டிங் ஆன முத்தமழை பாட்டு படத்தில் இல்லை.பின்னணி இசை சுமார்தான்.நாயகன் ல இளையராஜா கலக்கி இருந்தார்.


ஒளிப்பதிவு,எடிட்டிங் போன்ற டெக்நிக்கல் அம்சங்கள் அருமை.

திரைக்கதை கமல் + மணிரத்நம்

இயக்கம் மணிரத்னம்


சபாஷ்  டைரக்டர்


1 கமலும் ,சிம்புவும் காரில் நடத்தும் உரையாடல் அருமை.அதில் கமல் நடிப்பு செம


2 செக்கச்சிவந்த வானம் ,அஞ்சான்,நாயகன் ஆகிய படங்களின் கதையை உல்டா அடித்த சாமார்த்தியம்

3 படம் வெளிவரும் முன் மீடியாக்களுக்கு அளித்த ஓவர் ஹைப்டு பேட்டிகள்

4 கன்னடம் பற்றிக்கமலைப்பேச வை இந்தியா முழுக்க ஓசி பிரமோ செய்த ஐடியா



  ரசித்த  வசனங்கள் 

1. ஐ லவ் யூ சொல்லுங்க

என்ன இது கண்றாவி?

பொய்யாவாவது சொல்லுங்க


2 முதல்ல என் பேரு என்ன என சொல்லுங்க


தெரியலையே? மனோரமா? காந்திமதி?


3 அகலக்கால் வைக்காதே?

4 சின்ன வீட்டுக்கு ஏன் போனீங்க?

அது என் வீக்னெஸ்.பி பி ,சுகர் மாதிரி


5  என்னை. சுத்தி எல்லாமே. புதுசா இருக்கு?மாறுனது நானா?மத்தவங்களா?

6 என் இடத்தை வேற  யாராலும் நிரப்ப முடியாது(பிடிக்க முடியாது)


7 சந்தேகம் என்பது கேன்சர் மாதிரி.பத்து வைக்காதீங்க


8 பவர் நம்மைத்தேடி வராது.நாம தான் அதைத்தேடிப்போகனும் ( பரத் ஆநே நேனு தெலுங்குப்படத்தில் இருந்து உருவல்)

9 சந்தேகம் நம் தொழிலுக்கு எதிரி

10 மகன் மாதிரினு சொன்னீங்க.என்னையே சந்தேகப்படறீஙக?


இது டெல்லி.முகலாய வம்சத்தில் மன்னர் காலத்தில் நடந்திருக்கு.அப்பாவை மகன்  கொல்வது ,அண்ணனைத்தம்பி கொல்வது சகஜவேணும். கேம் ஓவர்


அப்படி இருந்தா என் கிட்டே இப்படி பேசிட்டு இருக்க மாட்டீங்க.என்ன வேணும்? நேரடியாக்கேளுஙக

நான். பேராசைக்காரன்.   எனக்கு எல்லாமே வேணும்

11  சிவாஜி நடிச்ச படத்துல அவர் செத்துப்போன பின் சுபம்னு போடுவாங்க.அப்படி ஒரு தருணத்துக்காகக்காத்திருக்கேன்


12 நல்லவங்களை ஆண்டவன் சீக்கிரமாவே அழைச்சுக்குவான் ( எம் ஜி ஆர் கால டயலாக்)


13. எமன் எனக்கு பிரண்டுடா


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஒரு பணக்காரப்பெண் காதலனால் கர்ப்பம் ஆனதால் அவன் கை விட்டதால் இந்தக்காலத்தில் யாராவது தற்கொலை செய்வார்களா?( ஏழைப்பெண் என்றால் கூட ஓகே)


2 கேங்க்ஸ்டரை என்கவுண்ட்டர் பண்ண அபார்ட்மெண்ட்டில் மக்கள் வாழும் இடத்திலா போலீஸ் செய்யும்?


3 கமல் கர்ப்பம்  ஆன பெண்ணின் சாவுக்குப்பழி வாங்க அந்த வாலிபனைத்தனிமையில் போட்டுத்தள்ளாமல் சாட்சிகள் இருக்கும்போது எதனால் கொல்கிறார்?


4 மகள் கர்ப்பம் கலைந்தது அப்பாவுக்குத்தெரியலை.அடியாளுக்குத்தெரிஞசிருக்கு

5 கமலை சுடும்போது எதனால் ஒரே ஒரு முறை மட்டும் சுடுகிறான் அடியாள்?6 முறை சுட்டிருக்கலாமே?

6  ஜெயிலில் இருக்கும் கமல் சூப்பிரண்டண்ட் ஆபீஸ் ரூமில் திரிசாவுடன்  சரசம் செய்வது எல்லாம் ஓவர்

7 சிம்பு கமலை அண்ணன் என்கிறார்.அப்பா முறை என்கிறார்.அப்படிப்பார்த்தா கமலின் செட்டப் திரிசா அவருக்கு அண்ணி முறை.அல்லது சித்தி முறை.எப்படி காதலி ஆக்கிக்கொள்கிறார்?

8  சில்க்,அனுராதா,ஷகீலா மாதிரி ஆட்கள் நடிக்க வேண்டிய கேரக்டருக்கு திரிசாவை. ?

9 பரம எதிரி கூட டீலிங் வைப்பது எப்படி?

10 நெஞ்சில் 2 முறை ,வயிற்றில் 3 முறை சுடப்பட்டும் 1000 அடிபள்ளத்தாக்கில் விழுந்தும் கமல்  உயிரோடு இருப்பது எப்படி?11. என் லிங்குசாமியின் அஞ்சான் கதையிலிருந்து பின் பாதி கதையை உல்டா அடிக்கலாமா?

12 கமல் ஒரு கேங்க்ஸ்டர் என்பதைக்காட்ட ஒரு சீன் கூட வைக்கவில்லை


 13 அமரர் சுஜாதா இல்லாமல் தடுமாற்றம் ரைட்டிங்கில் தெரிகிறது.சுபா ,பிகேபி யாரையாவது இணைத்திருக்கலாமே?


14 ஆடியோவில். உள்ள முக்கியமான பாடல்களை படத்தில் இடம் பெற செய்யாதது ஏன்?

15 கமல் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆனதும் திரிசா வீட்டில் 6 நாட்கள் தொடர்ந்து தங்குவது ஏன்? அபிராமி வீட்டில் 1 நாள் திரிசா வீட்டில் ஒரு நாள் என மாறி மாறி தங்கி இருக்கலாமே?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆன் லைன் ரசிகர்கள் கழுவி ஊற்றியதைப்போல டப்பாப்படமோ ,குப்பைப்படமோ இல்லை.சுமார் ரகம்.விகடன் மார்க் யூகம் -40.ரேட்டிங் 2.25 / 5

Thursday, June 05, 2025

மனைவி ஒரு மாணிக்கம் (1990) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவெஞ்ச் த்ரில்லர் ) @you tube


                         

 நான்  10 வது , 12 வது  படிக்கும்போதெல்லாம்  ராமராஜன்  படம் .  ராமநாராயணன்  படம்  பார்க்கவே முடியாது .அந்தப்படப்போஸ்டர்களைப்பார்த்தாலே   நண்பர்கள்  கிண்டல் செய்வார்கள் . அதனால்  ரிலீஸ்  டைமில்  பார்க்கவில்லை . டைட்டில்  கூட  ஒரு மார்க்கமாக  பெண்களுக்குப்பிடிக்கும் விதத்தில் இருப்பதால்  தவிர்த்து  வந்தேன்  நேற்று    டிவிட் டரில்  ஒரு கான்வெர்சேஷன்  படித்தேன் .கே டி வி யில்  இந்தப்படம் ஓடுது . எப்போ போட்டாலும்  மிஸ் பண்ணாம  பார்ப்பேன்  என பேசிக்கொண்டார்கள் . சரி  பார்ப்போம் என  உட்கார்ந்தேன் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு கோடீஸ்வரியின் மகன்   சிறுவனாக  இருந்தபோது  நாவல்  பழம்  பறிக்க மரத்தில் ஏறும்போது  அங்கே  பாம்பு இருப்பதைப்பார்த்து பயந்து  கீழே  விழுந்து  இறந்து விடுகிறான் .உடனே  அம்மா  அவன்  உடலை  எடுத்துக்கொண்டு  அபூர்வ சக்தி கொண்ட  சித்தரைப்பார்க்கிறாள் . உயிர்ப்பிக்குமாறு  வேண்டுகிறாள் . அப்போது   அந்த சித்தர்  அது  முடியாது . ஒரு உயிரை  எடுத்தால்தான் இன்னொரு உயிரை  உயிர்ப்பிக்க முடியும்.,அது பாவம் என்கிறார் . அம்மா   தொடர்ந்து  அழவே  வேறு வழி  இல்லாமல்   மகனின் இறப்புக்குக்காரணமான பாம்பின் உயிரை எடுத்து  மகன்  உயிரைக்காப்பாற்றுகிறார் .அப்போது  ஒரு கண்டிஷனும்  போடுகிறார் . இறந்த  பாம்பின்  துணை  பாம்பு பழி   வாங்கும் . இனி உன் மகன் இந்த ஏரியாவி லேயே  இருக்கக்கூடாது   என்கிறார் . அதன்படி  அம்மா  தன மகனை  வெளிநாடு அனுப்பி விடுகிறாள் .



வெளிநாடு  போன மகன்  அங்கேயே  வளர்ந்து  நாயகியைக்காதலித்துக்கல்யாணம் செய்து கொள்கிறான் . அவனுக்கு இந்த பாம்பு மேட்டர்  எல்லாம் தெரியாது . எக்காரணம் கொண்டும்  இந்தியா வரக்கூடாது என்ற  அம்மா கண்டிஷனை மீறி அம்மாவுக்குத்தகவல்  தராமல் இங்கே வருகிறான் . . இங்கே  அம்மாவின் வளர்ப்பு மகன் ஒருவன் இருக்கிறான் . அவன்  தான்   நாயகன் 



இறந்து போன  பாம்பு  ஆண் . அதன் உடலைப்பத்திரமாக வைத்திருக்கிறது அதன் துணையான பெண்பாம்பு . இப்போது  மகனின் உயிரை  எடுத்து  தன  கணவனுக்கு உயிர் கொடுக்க நினைக்கிறது   பெண்பாம்பு . கூடு விட்டுக்கூடு பாயும் வித்தை அறிந்த  பெண் பாம்பு  மகனின்  மனைவியின்  உடலில்  அதாவது   நாயகியின் உடலில்  புகுந்து கொள்கிறது . இப்போது  நாயகியின்  கணவனுடன் நாயகி இணைந்தால்  ஆள்  க்ளோஸ் 


 இந்த சதித்திட் டத்தை  நாயகன்   எப்படி முறியடிக்கிறான் என்பது  மீதித்திரைக்கதை 


நாயகன் ஆக அர்ஜுன்  ஓவர் ஆக்டிங்க் . தனக்கு ஜோடி இல்லை என்ற கடுப்பிலோ என்னவோ  ஏனோ தானோ  என  நடித்திருக்கிறார் . அடிக்கடி   அவர் பபுள்கம் மெல்வது கடுப்பு .கோடீஸ்வரியின் மகன்   ஆக    மலையாள நடிகர் முகேஷ் .. தமிழில் இவர் அறிமுகம் ஆன முதல் படம் . ஆனால்   நடிக்க அதிக வாய்ப்பில்லை . நாயகியைக்கட்டிப்பிடிக்கும் வேலை மட்டும் தான் . செவ்வனே அந்த வேலையை செய்திருக்கிறார் 


 நாயகி ஆக ராதா . படம்   முழுக்க அவரது  வேலை  கணவன் கூட சரசம்  செய்வது மட்டும்தான் . அருமையாக  அந்த கடினமான பணியை செய்திருக்கிறார் .


பழி  வாங்கத்துடிக்கும் பெண்பாம்பாக சாதனா  .இவர்   நடிப்பு தான்  உயிரோட்டமான நடிப்பு . இவரது   கணவன் ஆக   பப்லு எனும் பிருத்விராஜ் . அதிக   வாய்ப்பில்லை 

அபூர்வ சக்தி கொண்ட  சித்தர்   ஆக ராதாரவி  கச்சிதமான நடிப்பு 

காமெடி டிராக்கில் எஸ்  எஸ் சந்திரன் - கோவை சரளா . ஒய் விஜயா . டபுள்   மீனிங்க்  டயலாக்குகள்  சி சென்ட்டர் ரசிகர்களை   அந்தக்காலத்தில்   விசில்  அடிக்க வைத்திருக்கும் 


சங்கர்  கணேசின்  இசையில்  3 பாடல்களுமே   சுமார் ரகம் . டபிள்யு  ஆர் சந்திரனின்  ஒளிப்பதிவு  பரவாயில்லை ரகம் 

ராஜகீர்த்தியின்  எடிட்டிங்கில்  படம்  போர் அடிக்காமல் போகிறது . 2 மணி நேரம் தான் டைம் டியூரேசன் 


கதை , திரைக்கதை  ராமநாராயணன் . வசனம் - புகழ்மணி . இயக்கம்  சோழ ராஜேந்திரன் 


சபாஷ்  டைரக்டர்


1   நீயா?(1979)படத்தின்   சாயல்  தெரியாதவாறு  திரைக்கதை   அமைத்த விதம் 


2   டி வி சீரியல்களில்  வரும்  முதல் இரவு நடக்காமல்  தடுப்பது   எப்படி என்ற  கான்செப்ட்டை  வைத்துத்திரைகக்தை அமைத்த விதம் 


3 அனைவருக்கும்  பிடிக்கும் விதத்தில்  மாயாஜாலம் . மந்திரம்,கூடு விட்டுக்கூடு பாய்தல்   என்  திரைக்கதை   அமைத்த விதம் 


4   காமெடி   டிராக்கிலும்  கூடு விட்டுக்கூடு பாய்தல்   கான்செப்ட்டில்  கழுதையை வைத்து   டபுள்   மீனிங்க்  காமெடி டிராக் அமைத்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  பெண்   மனசு நிமிசத்துக்கு நிமிஷம் மாறும் 


2 பெண்ணும் , காரும்  ஒரே விதம் , எப்போ  மக்கர் பண்ணும் என்பதை சொல்லவே முடியாது 


3 சித்தனுக்கும் , பித்தனுக்கும்  பசிக்காது 


4   உன் ஜாதகத்தில் இருக்கும் ஒரே தோஷம் சந்தோசம் தான் 


5  நோய்  என்ன?என தெரியாம மருந்து சாப்பிடக்கூடாது 


 அது டாக்டருக்குத்தெரிந்தா போதாதா? 


6 கட்டில்   அறையைக்கல்லறையா மாத்திடறேன் 


7  செஸ்  விளையாட்டு   ரொம்ப போர் . நடுவில் க்  சேர்த்தால்  செம கிக் ( அமரர்  சுஜாதாவின் நாவலில் வரும் வானம் இது ) 


8  பொன்   என என்னை எதனால கூப்பிடறே? 


 பொன்னையாவில் அய்யாவைக்கட் பண்ணிட் டேன் 


9  கிளிக்கு எகனால  சிலுக்குனு பேரு வெச்சிருக்கே? 


கிளி டிரஸ் போடலையே? 


10  என்ன  வியாதி ?

 அதை சொல்ல கூச்சமா இருக்கு 


  அவ்ளோ  அசிங்கமான வியாதியா? 



11   உங்க  கிட் டே   இருக்கும் எல்லா வாத்தியமும்  வாய்ல   வெச்சு   வாசிக்கற   மாதிரியே இருக்கே? 


 வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் 


12  தனியா  பேசணும் 


 சரி நான் போறேன் . தனியா பேசிட்டு இரு 


 ஐயோ , உங்க கிட் டே    தனியா  பேசணும் 


13  இது   என்ன ராகம் ?


 காம்போதி ராகம் 


 கபோதி  வந்த   விஷயத்தை சொல்லு 


14     புல்லாங்குழல்   இவ்ளோ   பெருசாவா இருக்கும் ?


பெருசா   இருந்தா அது நாதஸ்வரம் . சின்னதா  இருந்தாதான்   அது புல்லாங்குழல்  ( இதே   டயலாக்கை  கரகாட்டக்காரன்ல பயன்படுத்தி இருப்பாங்க ) 


15   மத்தவங்க  கிட் டே  சொல்லிட்டு செய்வது ஆம்பளை யோட லட்ஷணம் இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   பாம்பு  சிறுவனைக்கொத்தவில்லை . அவன் பயந்துதான் கீழே  விழுந்தான் .அதற்காக பாம்பைக்கொள்வது நியாயமே இல்லை 


2   பெண் பாம்பு  பழி   வாங்க வேண்டியது  மகனின் உயிரை . ஆனால் அம்மாவைக்கொல்வது எதுக்கு ? 


3  அம்மா   இறந்ததுக்கு   மகன் முகேஷோ  , வளர்ப்பு மகன் அர்ஜுனோ  வருத்தப் படவே இல்லை . ஆனால் மருமகள்  ராதா   கண்ணீர்   விடுகிறாள் 


4  பல   வருடங்களாய்ப்புழங்காத  அய்யாவின் அறை   சாவி வேலைக்காரன் இடுப்பில் இருப்பது எப்படி ? 


5  எஸ்டேட்   ஓனர்   ஆனா அர்ஜுன்  திடீர்   என மகுடி ஊதுவது   எப்படி ?  அவர் என்ன   பாம்பாட்டியா? 


6  புது பெண்  அல்லது   அறிமுகம் ஆகாத  பெண்ணுடன்  சரசம் என்றால் பரவாயில்லை  யாராவது  தாலி கட்டின சொந்த சம்சாரத்துடன்  ஓபன்  பிளேஸில்  தோட்டத்தில் சரசம்  கொள்ள   முயல்வார்களா? 


7   மின்சாரத்தைக்கட்  செய்ய   ராதா  மெயின் ஸ்விட்ஸை  ஆப் செய்யறார் . எலக்ட்ரீஷியனை அழைத்து வர செல்லும் முன் நாயகன் அதை செக் செய்ய மாட் டாரா? 


8 விஷம்  கலந்த  பாலைக்குடிக்க  நாயகன் ,நாயகி ,, மகன்   மூவரும்  போட்டி போடுவது , அதைக்குடித்து   விஷம் இல்லை என நிரூபிக்க முயல்வது  அனைத்தும்   டி ஆரின் ஒரு தாயி ன் சபதம் (1987) கோர்ட்   சீனில் இருந்து உருவி இருக்கிறார்கள் 



9  அர்ஜுன்   முகேஷுக்கு அளித்த   அய்யப்பன்   டாலர்  மிஸ்   ஆனதை   அர்ஜுன் கண்டு கொள்ளவே இல்லையே? 


10   ஒரு விழாவுக்கு  அழைக்க வருபவர்கள்  விழா நடக்க 10 நிமிஷம் இருக்கும்போது  தான் வந்து அழைப்பார்களா? 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  டபுள்  மீனிங்க்   டயலாக்ஸ் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - படம்  சுவாரஸ்யமாகத்தான் போகிறது .பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.5 / 5 ,படம்  சுவாரஸ்யமாகத்தான் போகிறது .பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.5 / 5 . இப்போதும்   இந்தப்படத்தை  ரீமேக்கலாம் . ரீமேக்கினால்  டைட்டில் மனைவி ஒரு மாணிக் பாட் சா  


மனைவி ஒரு மாணிக்கம்
இயக்கம்சோழராஜேந்திரன்
தயாரிப்புஎன். இராமசாமி
கதைராம நாராயணன்
புகழ்மணி (வசனம்)
திரைக்கதைராம நாராயணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஅர்ஜுன்
முகேஷ்
ராதா
எஸ். எஸ். சந்திரன்
ஒளிப்பதிவுடபல்யூ. ஆர். சந்திரன்
படத்தொகுப்புஇராஜகீர்த்தி
கலையகம்தேனாண்டாள் பிச்சர்ஸ்
விநியோகம்தேனாண்டாள் பிச்சர்ஸ்
வெளியீடு17 march 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Wednesday, June 04, 2025

MOON WALK(2025) -மூன் வாக் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )

               


         டான்ஸ்க்கு  முக்கியத்துவம் தந்த படங்கள் என்று  பட்டியலெடுத்தால் என் நினைவுக்கு வரும்   முக்கியமானவை   மிதுன் சக்கரவர்த்தி  நடிப்பில்  ஹிந்தியில்   வெளியான டிஸ்கோ   டான்ஸர் (1982)  ஆல்  சென்ட்டர் ஹிட் .9 பாடல்கள் . வெரைட்டி  டான்ஸ் .இதன்  தமிழ்  ரீமேக்கான  பாடும் வானம்பாடி (1985)8 பாடல்கள். ஆனந்த்பாபுவை உச்சத்துக்குக்கொண்டு போன படம் .மாற்றுத்த்திறனாளியாக இருந்தும் சுதா சந்திரன்  நடனத்தில்  அசத்திய  மயூரி (1985)தெலுங்கு , தமிழ்  இரு மொழிகளிலும்    மெகா ஹிட் ஆனது  கமலின்  பரத நாட்டியத்திறமையை  உலகுக்குச்சொன்ன படம் தெலுங்கில் வெளியான சாகர சங்கமம் -(1983 )  .இதன்  தமிழ்  டப்பிங்க் தான் சலங்கை ஒலி (1983). கமலின்  மாறுபட்ட   நடன  அசைவுகளை வெளிக்கொணர்ந்த இன்னொரு படம் புன்னகை மன்னன்..கிராமிய  நடனக்கலையை  மையமாகக்கொண்டு  வந்த மாபெரும்  ஹிட் படம் கரகாட்டக்காரன் (1989)  


மைக்கேல்  ஜான்சன்  பாணியில்  பிரபுதேவா  நட னம்   ஆடிய காதலன்  (1994) செம  ஹிட் .ஆனால் இந்து (1994) , மிஸ்டர்  ரோமியோ  இரண்டும் அட்டர் பிளாப் . சங்கமம் (1999)  ஏ ஆர்  ரஹ்மானின்  இசையில்  பாடல்கள்   செம   ஹிட் ஆனாலும்  படம் டப்பா . 


மாற்றுத்த்திறனாளியாக இருந்தும்   குட்டி  என்பவர் நாயகன்   ஆக  நடித்து  கேயார்  இயக்கத்தில்வெளியான டான்சர்(2005)  -தமிழ்ப்படம்  சுமார் ஹிட் ( இந்த  குட்டி  2007ம் ஆண்டு  ஒரு டான்ஸ்  புரோகிராமில்  ஸ் டெப்பில்  ஸ்லிப் ஆகி கீழு விழுந்து இறந்தார் )


சிவராஜ் குமாரின்  101 வது  ப டமான  லட்சுமி (2013) ஹிட் . ஆடலாம் பாய்ஸ்  சின்னதா  ஒரு டான்ஸ் (ஏபிசிடி ) எனிபடி கேன் டான்ஸ் (2013)    சுமார் 


க்ரைம்  த்ரில்லர்  படங்களில்  சமீப காலங்களாக மலையாளப்பட  உலகத்தின் பங்கு அளப்பரியது .  .உலகம் முழுக்க வரவேற்பு உண்டு . இப்போது  கேரளாவில் முற்றிலும்  புதுமுகங்கள்  நடித்து  லோ பட்ஜெட்டில் உருவாகி  ரிலீஸ் ஆகி  மெகா ஹிட் ஆகி இருக்கும் மூன்  வாக் மலையாள  சினிமா பற்றிப்பார்ப்போம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு காலேஜில்  படிக்கின்ற  சில மாணவர்களை  நடனம் என்ற  மையப்புள்ளி இணைக்கிறது . கதை  நடக்கும் கால கட்டம் 1990 .அப்போதுதான்   மைக்கேல்   ஜாக்சனின் இசையும்  , நடனமும்   பிரபலம் ஆகி  வருகிறது .டிஸ்கோ டான்ஸ்  சகாப்தம்  முடிந்து  பிரேக் டான்ஸ்  கோலோச்சும் சமயம்  . தமிழ்  நாட்டில்   எப்படி  மதுரை   அபிநயா நடன  நாட்டியக்குழு  புகழ் பெற்றதோ  அது  போல   கேரளாவில்   திருவனந்தபுரத்தில்  ஒரு டான்ஸ்  ட்ரூப்புக்கு அபார வரவேற்பு மக்களிடம்  கிடைப்பதைப்பார்த்து   அவர்களிடம்  இந்த காலேஜ் மாணவர்கள்  ஐடியா கேட் கிறார்கள் . எங்களுக்குனு டான்ஸ்   மாஸ்டர்   என   யாரும் இல்லை .மைக்கேல்   ஜாக்சனின்   வீடியோ  ஆல்பம் பார்த்து நாங்களாகக்கற்றுக்கொண்டோம் என்கின்றனர் 


சிங்கப்பூரில்  இருந்து கேரளா  வந்திருக்கும் ஒரு இளைஞருக்கு  பிரேக் டான்ஸ்  தெரியும் என்ற   தகவல் கிடைக்கிறது .இந்த காலேஜ்  மாணவர்களுடன்  படிப்பு இல்லாத   ஒரு கட்டிடக்கலை பணியாள்  இளைஞரும்  சேர்ந்து கொள்கிறார் 


 மெல்ல மெல்ல   அவர்களது ,நடை  உடை , பாவனைகள்   மாறுகிறது . இதனால் சமூகத்தில் , குடும்பத்தில்   அவர்கள்  சந்திக்கும் பிரச்சனைகள்  என்ன?  என்பது    மீதி   திரைக்கதை .மாநில  அளவிலான  டான்ஸ்  போட்டியில் அவர்கள் வென்றார்களா?என்பது க்ளைமாக்ஸ் 

இந்தப்படத்தில்  ஹீரோ ,  , வில்லன் ,காமெடியன் என   யாரும் இல்லை 


சஞ்சனா  தாஸ் , நைனிடா  மரியா   ஆகிய   இரு நாயகிகளின் நடிப்பும் அருமை . அவர்களது  வெட்கப்புன்னகை  கலக்கல் ரகம் .சிறிது  நேரமே   வந்தாலும்  நடிப்பில்  முத்திரை பதிக்கிறார்கள் .


புதுமுகங்கள்  ஆக   வரும் அனுநாத் , அப்பு ஆசாரி , அர்ஜுன்  மணி லால் , ரிஷி  கைநிக்கரா , சிபி  குட்டப்பன் ,சுஜித் பிரபாகர் மனோஜ் மோசஸ் , சித்தார்த்   என அனைவர் நடிப்பும் யதார்த்தம் .ஓவர் ஆக்டிங்க்கே  யாரும் செய்யவில்லை 


வீணா   நாயர் ,    துஷாரா பிள்ளை ,ஸ்ரீகாந்த்  முரளி   போன்ற  பழைய  நடிகர்கள்  நடிப்பும் அருமை 


 மேத்யூ வர்க்கீ ஸ் , சுனில் கோபால கிருஷ்ணன்  ஆகிய இருவரும்   கதை , திரைக்கதை   எழுத  இயக்கி இருப்பவர்  ஏ கே  வினோத் 


ஸ்ரீஜித்  பி டேஸ்லர்ஸ்   தான்  டான்ஸ்   மாஸ் டர்  . கலக்கலான  நடன அமைப்பு . இசை   பிரசாந்த் பிள்ளை .பாடல்கள்  2 ஹிட் ., பின்னணி இசை அருமை .அன்சார் ஷாவின் ஒளிப்பதிவு  ஒரு லோ பட்ஜெட்  படத்தை  பிரம்மாண்டமான  படம் ஆக்கிக்காட்டி இருக்கிறது . ஆர்ட் டைரக்ஸன்  பிரமாதம் . சாபு மோகனின் உழைப்பு 1990   கால  கட்டத்தைக் கண்  முன் நிறுத்துகிறது 


தீபு ஜோசப் +கிரண் தாஸ்  இருவரும் இணைந்து  எடிட்டிங்க்  செய்து இருக்கிறார்கள் . டைம் டியூரேசன்  2 மணி நேரம் மட்டும் 

சபாஷ்  டைரக்டர்


1  க்ளைமாக்சில்  வரும்  போட்டி நடனங்கள்  க்ரூப்  டான்ஸ் , டபுள்  டான்ஸ் , சோலோ டான்ஸ்  அனைத்தும் ஸ்டெப்ஸ்    அருமை . குறிப்பாக   கட்டிடக்கலை பணியாளாக  வரும் இளைஞரின்  டான்ஸ்   கலக்கல் ரகம் 


2  இரு இளைஞர்களின்   காதல்  எபிசோடு  நாஸ்டாலாஜிக்கல் மொமெண்ட்ஸ்  தர வல்லவை 


3 ஒரு  சீன்  கூட போர்  அடிக்காத   திரைக்கதை வடிவமைப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  இது   என்ன? 


 பிரேக் டான்ஸ் 


 சாவி   குடு   அவன் கையில்.   . காக்கா   வலிப்பு  சரி ஆகிடும் 



2   அங்க்கிள் ,  யானை    வரைஞ்சு      தர்றீங்களா?  என் அக்காவுக்கு மட்டும்  வரைஞ்சு       தந்தீங்களே? 


 அது வந்து .... பூ   ஓக்கேவா?



3  ஆளும்  , அவன்   தலை முடியும் பாரு .. காதுல கடுக்கண்  வேற ,எனக்கு   2 பொண்ணுங்க .இவனோட சேர்ந்து  3 பொண்ணுங்க  என வெச்சுக்கணும் 


4   கை  வலி  இப்போ   எப்படி   இருக்கு ? 


 பரவாயில்லை . வலி  வந்தா  தகவல் தெரிவிக்க   உங்க  போன்  நெம்பர்  தந்தா   நல்லாருக்கும் 



5  பைக்  ஓட்டக்கூடாதுன்னுதானே போலீஸ்   கண்டிஷன் ? ஸ்கூட்டர்  ஓட்டினா? 


6  ஜெயிக்க  புது ஸ்டெப்ஸ்  மட்டும்  பத்தாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பெரிய  டிவிஸ்ட்  ஆக  இயக்குனர் நினைத்து  வைத்த   அந் த போலீஸ்   ஸ்டேஷனில் மாணவர்களுக்கு  ஹேர்  கட்டிங்க்  பண்ணி விடும்  சீன்   பெரிய   சோகத்தை உண்டாக்கவில்லை .இப்போதான்   நீட்டா  இருக்காங்க .இது தண்டனையா?  என எண்ணத்தோணுது 


2  காதலில்   ஈடுபடும்  மாணவனின்  காதலியின் அண்ணா அடித்து   கை  உடைப்பது  இந்த   டான்சர்   கதைக்குத்தேவை இல்லை 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-கிளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - டி வி சீரியல்   பார்க்கும்   பெண்களுக்குப்பிடிக்காது . சோகம் இல்லை .சதித்திட்டம் இல்லை , குடும்பத்தைக்கெடுத்துக்குட்டிச்சுவர் ஆக்கும் சீன்கள்  இல்லை.யூத்துக்கான படம்  . ஜாலியான  படம் .ரேட்டிங்க்  3 / 5 

Tuesday, June 03, 2025

THE VERDICT(2025) -த வெர்டிக்ட் (தமிழ் ) சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா + க்ரைம் த்ரில்லர் )

         


               

முழுக்க முழுக்க   அமெரிக்காவில்    படப்பிடிப்பு  நடந்த  தமிழ்ப் படம் இது . அதனால்  பெரும்பாலான  வசன ங்கள்  ஆங்கிலத்தில் தான் இருக்கும்.தமிழ்  சப் டைட்டில்  உண்டு . முதல்   பாதி முழுக்க கோர்ட் ரூம் டிராமா . பின் பாதி க்ரைம்    த்ரில்லர் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு கோடீஸ்வரி   விதவை தனிமையில் இருக்கிறார் , . வாரிசு இல்லை . அவரிடம் 25 வருடங்களாக  ஒரு ஆள்  பட்லர் ஆக வேலைக்கு இருக்கிறான் நாயகி  ஒரு மிடில் கிளாஸ் பேமிலி . நாடக  நடிகை ஆக இருந்தவர் இப்போது ஷேர்  மார்க்கெட்  கன்சல்டடண்ட் ஆகப்பணி ஆற்றுகிறார் . ஒரு முறை  அந்த கோடீஸ்வரியுடன்  அறிமுகம் ஆகி பழக்கம் ஏற்படுகிறது . அவரின்  பணத்தை  எந்த சேரில் முதலீடு செய்யலாம் என  ஐடியா கொடுக்கிறாள் நாயகி . . இதைத்தொடர்ந்து  நாயகி அடிக்கடி  அந்த கோடீஸ்வரி  யின் பங்களாவுக்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறார் . அந்தக் கோடீஸ்வரி க்கு  ஆஸ்துமா ட்ரபிள்  உண்டு . அடிக்கடி  மூச்சு விடுவதில் பிரச்சனை உண்டு .


ஒரு கட்டத்தில்  நாயகியின் பணிவிடைகள் , பழக்க வழக்கங்கள் பிடித்துப்போய் நாயகிக்கு  தன சொத்தின் பெரும்பகுதியை உயில் ஆக எழுதி வைத்து விடுகிறார் . இந்த விஷயத்தை  நாயகியிடமும் சொல்லி விடுகிறார் .நாயகிக்கு  ஒரு காதலன் உண்டு . அவனுக்குப்பெரிய சம்பாத்யமோ ., வேலையோ இல்லை . ஒரு பிரைவேட்  ஹாஸ்பிடலில்  நர்ஸ் ஆக வேலை செய்கிறான் . நாயகி   தன காதலனிடம்  இந்த   சொத்து   விஷயத்தைப்பகிர்கிறாள் .கோடீஸ்வரி  இடம்  பட்லர் ஆக வேலைக்கு இருக்கிறானே  அவனுக்கு நாயகியைக்கண்டால் ஆகாது . காரணம்  நாயகி இல்லை எனில்  சொத்து  பூரா தனக்கு வரும் என நினைக்கிறான் 


 இப்படியான   சந்தர்பப்த்தில்   அந்தக் கோடீஸ்வரி  மூச்சுத்திணறி  இறக்கிறார் .அது  இயற்கை மரணமா ? கொலையா?   யார்   அதை  செய்திருப்பார்கள் ? 1   நாயகி  2  நாயகியின் காதலன்  3 கோடீஸ்வரி  இடம்  பட்லர் ஆக வேலைக்கு இருக்கிற ஆள்  இந்த கேஸ்   தான்   கோர்ட்டில் நடக்கிறது . முதல்   பாதி  முழுக்க    வாத  , பிரதிவாதங்கள்  நடக்கிறது . 


 கோர்ட்  தீர்ப்பு   என்ன  கிடைத்தது ?  தீர்ப்புக்குப்பின்  நடந்த   அதிர்ச்சி  ஊட்டும்  சம்பவங்கள்   என்ன?   என்பதை திரையில் காண்க 


கோடீஸ்வரி    ஆக  சுஹாசினி  நடித்திருக்கிறார் . இவரது  நடிப்பு எனக்குப்பிடிக்கும் .ஆனால்  இவர் பல இடங்களில் செயற்கையாக சிரிப்பார் .அது   பிடிக்காது . இவருக்கு   அதிக   வாய்ப்பில்லை . வந்த வரை ஓகே ரகம் 


  நாயகி ஆக சுருதி   ஹரிஹரன்  பிரமாதமான   நடிப்பு .கலக்கி விட் டார் .  குறிப்பாக கோடீஸ்வரி   இறக்கும்  காட்சியில்  அவரது   முகத்தில்    தெரியும் பதட்டம் கிளாசிக்


 நாயகி  சார்பில் வாதாடும்   வக்கீல் ஆக  வரலடசுமி சரத்குமார் .கம்பீரமான நடிப்பு .கோர்ட்டில் அவர் உடல் மொழி  ,  வாதிடும் பாங்கு டயலாக் டெலிவரிஅனைத்தும் அற்புதம் 


 நாயகியின் காதலன் ஆக பிரகாஷ் மோகன்தாஸ்     நடித்திருக்கிறார் . ஒரு கமல்  ஹாசனோ , தனுஷோ , சிம்புவோ  நடித்திருக்க வேண்டிய ரோல் இவருடையது . ( அதாவது  பெண் பித்தன் வேடம் ) ஆனால்  அந்த கேரக்டருக்கு வலு சேர்க்கும் அளவுக்கு இவர் நடிப்பு இல்லை . எங்க ஊர்ப்பக்கம் ஒருபழமொழி   சொல்வார்கள் .செத்துப்போனவன் கையில் வெத்தலை பாக்குக்கொடுத்தது போல என்று  , அது மாதிரி தான்  அவரது நடிப்பு தேமே  என்றிருந்தது . ஒரு ரகுவரன்  அல்லது  பிரகாஷ்  ராஜிடம்   தந்திருந்தால்  பின்னிப்பெடல்   எடுத்திருப்பார்கள் 

ஜுரி களில்  ஒருவராக   வரும்   வித்யு லேகா  ராமன்  நடிப்பு கன   கச்சிதம் 


ஒளிப்பதிவு  அர்விந்த் கிருஷ்ணா . கோர்ட்  ரூமில்  படமாக்கப்பட் ட  காட் சிகள்  தரம் . வெளிப்புறப்படப்பிடிப்பும் பிரம்மாண்டமான நேர்த்தி . ஆர்ட்   டைரக்ஸன்  நந்தினி முத்யம் , கோர்ட்ரூம் செட்டிங்க் செம . ஆதித்யா  ராவின்  இசையில்   பாடல்கள்   சுமார் ரகம்    தான் .பின்னணி இசை  கூட இன்னமும் பிரமாதப்படுத்தி இருக்கலாம் .


 கதை , திரைக்கதை எழுதி   இயக்கி இருப்பவர்  கிருஷ்ணா சங்கர் 


சபாஷ்  டைரக்டர்

1  கோர்ட்டில்   நடக்கும்   வாத , பிரதி வாதங்கள்  மிக இயற்கையாக   அமைத்த விதம் . வழக்கமான தமிழ்ப்படங்களில் காட்டுவது போல  ஓவர் ஆக்டிங்க் இல்லை 


2   கோர்ட்   தீர்ப்பு வந்த பின்  படமே  முடிந்து விட்ட்து  என நினைக்கும்போது  ஒரு புது திரைக்கதை  உருவாவது அருமை . பாதிப்படம்  அதற்குப்பின் தான் 



3  நாயகி , வக்கீல்  ஆகிய   இருவர் நடிப்பும் அருமை 


4 கொரோனா  கால  கட்டத்தை   சாமார்த்தியமாகப் பயன்படுத்திய விதம் 



  ரசித்த  வசனங்கள் 

1  குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் அப்பாவிகள்!தான் 


2  சின்ன விஷயங்களைப்பண்ணி  யாரும் நல்லவங்க ஆகிட ,முடியாது 


3 விதில  உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? 


வாழ்க்கை ல  எனக்கு நம்பிக்கை இருக்கு 



4  நான்  ஏழை தான் , ஆனா பேராசை  இல்லை மத்தவங்க  பணம்  மேல  பொறாமை   இல்லை 


5  கைல   10 பைசா   கூட இல்லைன்னாதான் பணத்தோட  அருமை , மதிப்பு தெரியும் 


6 கோர்ட்டுக்குத்தேவை  1  எவிடென்ஸ்  2 மோடிவ் 


7  நமக்கு முன்னே  10,000  அடி தள்ளி பிரச்சனை இருக்குன்னா   அதை முதலிலேயே பார்த்துடுவேன் 


 ஆனா   10 அடி   தூரத்த்தில்    இருக்கும் பிரச்சனையை கவனிக்க மாட் டீங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஹாஸ்ப்பிடலில்  சிசிடிவி கேமரா  இருக்கும் என்பது  அங்கே  பணிபுரியம்  நர்சுக்குத்தெரியாதா? அப்படி  ஈசியாக மாட்டுவாரா? 


2 ஒரு கோடீஸ்வரி , ஆஸ்துமா ட்ரபுள் உள்ளவர்  தனக்கென   தனி நர்ஸ்   வைத்துக்கொள்ள மாட் டாரா? 


3  நாயகியின்   காதலன்   எந்த நம்பிக்கையில்;  நாயகியின் வக்கீலிடம்  சில ரகசியங்களை வெளியிடுகிறான் ? 


4  எனக்கு ஒரே  ஆளிடம்  இருக்கப்பிடிக்காது  , மலருக்கு மலர்  தாவுவேன் என  டயலாக் பேசும்  ஆள் எப்படி  ஒரே ஆளிடம் 10 வருசமாக  குப்பை கொட்டுகிறான் ? 


5 ஜாக்கிசான்  உட்பட  பல கோடீஸ்வரர்கள்   தங்கள்   சொத்துக்களை   அநாதை ஆசிரமங்களுக்குத்தான் எழுதுகிறார்கள் . ஆனால்  இதில்  ஒரு கோடீஸ்வரி  அறிமுகம் அதிகம் இல்லாத  ஆளுக்கு  150 மில்லியன் டாலர்   சொத்து எழுதி   வைப்பது ஓவர் 


6  ஒரு பிரபல  லேடி   வக்கீல்  உண்மைகளை ரகசியங்களைக்கண்டு பிடிக்க  ஒரு பொம்பளைப் பொறுக்கியிடம் காதலி ஆக நடிப்பார்களா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - யூகிக்கக்கூடிய   ட்வீஸ்ட்களுடன்   ஒரு சராசரி  க்ரைம் த்ரில்லர்  படம் , பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.75 . 5  . விகடன் மார்க் யூகம் - 41 

Monday, June 02, 2025

AGNYATHAVASI(2025_ கன்னடம் - சினிமா விமர்சனம் ( மர்டர் மிஸ்ட்ரி க்ரைம் டிராமா ) @ ஜீ 5

         


               

இந்தப்படத்தை  நண்பர்   பெங்களூர்  பிரேம்  கனடாவில் இருந்து  பரிந்துரைத்தபோது  விபரம் அறிய டைட்டிலை டைப்பி கூகுளில்  தேடினேன் . 2018ம் ஆண்டு  வெளியான  எவரு  தெலுங்குப்படத்தின் ஹிந்தி வெர்சன் எனக்காட்டியது .விட்டேன் . த இன்விசிபிள்  கெஸ்ட்  என்ற ஸ்பானிஷ்  படத்தின் தெலுங்கு  பட் டி டிங்கரிங் வெர்சன் தான் எவரு  தெலுங்கு. ஹிந்தியில்  பதலா  என்ற  டைட்டிலில்  வந்தது பிறகு  எதற்காக  அதே  தெ லுங்கு வெர்சனை ஹிந்தியில் டப் செய்ய வேண்டும் ? என நினைத்தேன் . குழப்பம் நீங்கியது . அது   வேறு படம் இது வேறு படம் 


1997ல்   நடந்த  மலைநாடு  மர்டர்   என்ற  உண்மை சம்பவம் தான் கதை . அதே  லொக்கேஷனில்  ஷூட் செய்து இருக்கிறார்கள் 11/4/2025   அன்று  திரை   அரங்குகளிலே  ரிலீஸ் ஆன இந்தப்படம்  இப்போது  ஜீ 5  ஓ டி டி  யில் காணக்கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்



 25 வருடங்களாக குற்றமே  நடக்காத ஊர் அது .முதல் முதலாக அந்த ஊர் பெரிய மனிதர்  கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும்  ஒரு இளைஞன் அவன் தான் அந்த  ஊருக்கு முதல் முதலாக கம்ப்யூட் டரைக்கொண்டு வந்தவன் . (கதை நடக்கும் காலகட் டம் 1990 )  அவன் மேல்  போலீஸ் சந்தேகப்பட்டு அவன் வீ ட்டுக்குப்போனால் அவனும் இறந்து கிடக்கிறான் . இந்த இரு  மரணங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று போலீஸ் சந்தேகிக்கிறது . இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  , போலீஸ் ஆபீசர் ஆக ரங்கையனா   ரகு  அருமையாக நடித்து இருக்கிறார் . துப்பறியும் சீன்கள் அருமை .  நாயகி ஆக பாவனா  கவுடா  அழகு முகத்துடன் இளமைப்பொலிவுடன் வருகிறார் ( இவர் நம்ம ஊர் பாவனா அல்ல )நாயகி   மீது ஒருதலையாக ஆசைப்படும் இளைஞன் ஆக  சித்து  மூலிகனி  நடித்து இருக்கிறார் .இவர்   வில்லன் ஆக மாறும் சீன்கள் மிரட்டல் எனில்  நாயகி   வில்லி ஆக  மாறும் சீன்கள்   செம .


 கொலை   செய்யப்படும்  ஊர்ப்பெரியவர் ஆக சரத்  லோகிதாசவா  நல்ல நடிப்பு . உதவி   துப்பறிவாளர் ஆக  வரும் ரவி சங்கர்  கவுடா   கச்சிதமான   நடிப்பு . போலீஸ்  ஆபீசரையே   சந்தேகப்படும் சீன அருமை 

சரண்  ராஜின் இசையில்  படத்துக்குப்பெரிய வேகம்கொடுக்க முடியவில்லை .அத்வைதா குருமூர்த்தியின் ஒளிப்பதிவு அருமை . 1990 ல் நடக்கும் கதை என்பதால் லைட்டிங்கில் பழைய பாணியை  கடைப்பிடித்தது குட் . பரத்தின் எடிட்டிங்கில்  படம்  2 மணி நேரம் ஓடுகிறது ,முதல் அரை மணி நேரம் ரொம்ப ஸ்லோ ..கதை , திரைக்கதை  கிருஷ்ணராஜ் ( இது உண்மை சம்பவம் ) இயக்கம்  ஜனார்த்தன சிக்கன்னா 


சபாஷ்  டைரக்டர்


1  முதல்   அரை மணி நேரம்  ,கடைசி   அரை மணி நேரம்  இரண்டும் இழுவை . ஆனால் மெயின் கதையை  சுவராஸ்யமாக சொல்லி இருக்கிறார் . ஒரு மணி  நேரத்தில்   சொல்ல வேண்டிய கதையை   இழுத்து விட் டார் 



2   மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல்  நாயகிக்கு  ஒரு கிஸ்  சீன்  வைத்தது 


3    ரசிக்க வைக்கும் வசனங்கள் 


  ரசித்த  வசனங்கள் 



1. எல்லாருமே நாட்டை விட்டுப்போய்ட்டா யார் தான் மீதி இருப்பாங்க?

பெருசுங்க தான்

2. இளசுங்க எப்பவும் வானத்தில் குதிக்க ரெடியா இருப்பாங்க

3. இந்தப்போலீஸ் ஸ்டேஷன் ஓப்பன் பண்ணி 25 வருசம் ஆகுது.இதுவரை ஒரு கேஸ் கூட பைல் ஆகலை.இவரை எதுக்குப்பெரிய ஆபீசர் மாதிரி ஆக்ட் குடுக்கறாரு?

4. IPL 300?

Incident. Prasath collection

5. மூளை தான் மிகப்பெரிய ஆயுதம்

6. படிச்சிருந்தாப்பத்தாது.உலக நடப்புத்தெரியனும்

7 இந்த கம்ப்யூட்டருக்கு  செலவு செய்வதும் ,யானையைக்கட்டித்தீனி போடுவதும் ஒண்ணு.கட்டுபடி ஆகாது

8. கண்ணி மோகம் இன்னமும் எத்தனை உயிர்களைக்கொல்லும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்

9 இந்த உலகில் பூமியும் அம்மாவும் தான் இலவச சேவை செய்கிறார்கள்.மற்ற அனைவருமே சர்வீஸ் சார்ஜ்  வாங்கிக்கறாங்க.நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ

10  இயற்கையை யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது

11 சட்டப்படி அடுத்தவங்க லெட்டரைப்படித்தால் 2 வருசம் ஜெயில் தண்டனை இருக்கு.

12 மனம் அபாயகரமானது  .நம் பேச்சை அது கேட்காது சரி  எது ?  தப்பு எது ? அதுக்குத்தெரியாது 


13   மனசு தான் என்ன விரும்புதோ அதை அடைய முயற்சிக்கும் 


14  சில உறவுகள் நீண்ட தூரம் பயணிக்காது 


15 பாஸாம்பரம் என ஒரு மூலிகை செடி .அதை  தண்ணீரில் 3  நாட்கள்   ஊற   வைத்தால் அதன் விஷம் தண்ணீரில் இறங்கும் . அந்தத்தண்ணீரை உணவில் கலந்தால் மரணத்திற்குக்காரணம் கண்டு பிடிக்க முடியாது 


16 சாமி பூஜைக்கே  பூ பறிப்பதாக இருந்தாலும் ஒரே செடியில் பூ  பறிக்கக்கூடாது .செடி தான் என்றாலும் அதுக்கும் வலிக்கும் தானே ? 


17   குற்றவாளிக்குத்தரும் பெரிய தண்டனை  மன்னிப்பு


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   வெளிநாட்டில்  வசிக்கும் காதலனை வர வைக்க  நாயகி தன்  வருங்கால மாமனாரைக்கொ லை செய்ய முடிவு  எடுப்பது அபத்தம் . ஆனால்   உண்மை  சம்பவம் ஆச்சே ?  


2  நாயகி  மீது   ஒருதலையா க   ஆசை   வைக்கும்  வில்லன்  நாயகியின் காதலன் இங்கே   வந்து விடக்கூடாது   எனபதற்காக  நாயகியி ன்  வருங்கால மாமனாரைக்கொ லை செய்ய முடிவு  எடுப்பது அபத்தம்


3  இன்ஸ்பெக்ட்டர்   தன அம்மாவைக்கொலை செய்ய முடிவு  எடுப்பது  நம்ப முடியவில்லை .நந்தா க்ளைமாக்சில் உல்டா  வடிவம் தான் . ஆனால் நந்தாவில் அ ழுத்தமான காரணம் இருந்தது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U / A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொறுமை ரொம்ப வேண்டும் . ஆனால்   சுவாரஸ்யமான கதை தான் . ரேட்டிங்க்  2.5 / 5 


Agnyathavasi
Theatrical release poster
Directed byJanardhan Chikkanna
Written byKrishna Raj
Produced by
  • Hemanth M Rao
  • Prachura P P
  • Jayalakshmi
Starring
CinematographyAdvaitha Gurumurthy
Edited byBharath MC
Music byCharan Raj
Production
company
Dakshayini Talkies
Release date
  • 11 April 2025
Running time
122 minutes
CountryIndia
LanguageKannada