Tuesday, January 12, 2016

மேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் சுருங்கிடுது?

டேய், பழநி மலைக்கு வரும்போது எதுக்கு பர்முடாஸ் போட்டுட்டு வந்திருக்கே? 

 சார், பழநி மலை முருகனே கோவணத்தோடதானே இருக்காரு?===============


2 சார், பெங்களூர் டேஸ் படத்தோட  தமிழ்  ரீமேக் டைட்டிலை சஸ்பென்சா  வெச்சிருந்தீங்களே? இப்போ  சொல்லுங்க.

 ஆங், பெங்களூர்  நாட்கள், எப்பூடி?


====================


3  டியர், நான் எது கேட்டாலும் எதிர்த்துப்பேசக்கூடாது, சரி சரின்னு தான் சொல்லனும், சரியா?

சரி.

 இன்னைக்கு என்ன ஸ்வீட்  செய்ய?

 கே”சரி”


================

4  தலைவரே! கட்சியோட கொள்கைப்பரப்புச்செயலாளரை ஏன் கட்சியை விட்டு நீக்கிட்டீங்க? கொள்கையையே  மாத்தும்போது கொள்கை பரப்புச்செயலாளரை மாத்தக்கூடாதா?

==================

5  தலைவரே! பேட்டி குடுக்கும்போது கார்ல வந்தீங்க, ரிட்டர்ன் வீட்டுக்குப்போகும்போது ஏன் நடந்து போறீங்க?

பேட்டி குடுக்கறப்பவே கட்சியை விட்டு ம் தூக்கிட்டாங்க , காரையும் தூக்கிட்டாங்க


===================


6 சம்பத் = தலைவரே! தாய்க்கழகத்துக்கே வந்துடலாம்னு பார்க்கறேன்

 வை கோ = நானும் அதான் யோசிக்கிறேன், திமுக வுக்கே போய்டலாமா?


===================


7 டியர், எதுக்காக என்னை உங்க வீட்டுக்கு வர வேணாம்கறே?

 வீட்ல மாப்ளை பார்த்துட்டாங்க. உன்னை லவ்வர் போஸ்ட்ல இருந்து விடுவிச்ட்டேன்


=================


8  கட்சில நமக்கு செல்வாக்கு இருக்குன்னு கெத்து காட்ட  பேட்டி குடுத்தது தப்பா போச்சு 


ஏன் தலைவரே?

 வாயைக்கொஞ்சம் பொத்து-ன்னு நீக்கிட்டாங்க 


=====================

9 தலைவரே! மீடியாவை நீங்க மதிக்கறதே இல்லையாமே? 

 இல்லையே? மீடியாவுல எனக்கு எதிரா பேட்டி குடுத்தவரை கட்சியை விட்டே நீக்கிட்டனே?


======================


10 மிஸ்! உங்களுக்கு பொங்கச்சோறுன்னா பிடிக்காதா?

பிடிக்குமே? சோறு பொங்க வைக்கச்சொன்னாதான் சமையல் பிடிக்காது


==================

11  மிஸ்! டெய்லி எட்டரைக்கு எந்திரிக்கும் ஏழரை நீங்க. எப்படி  விடியல் , உதய சூரியன் ஃபோட்டோ   வை  ஃபேஸ்புக்ல அப்டேட்ட்டறீங்க?


கூகுள் இருக்க கவலை எதுக்கு நமக்கு ?


===================


12 டாக்டர்.சொல்லாமலே பட ஹீரோ மாதிரி என் நாக்கை கட் பண்ணனும்.

பேச்சு.வராது.பரவால்லியா?
.பதவி வந்தா போதும்

=================


13 இந்த தாயத்தை கைல கட்டிக்கிட்டா உன் வீட்ல தனலட்சுமி குடி வந்துடுவா.

ஓஹோ.அப்போ ஆல்ரெடி குடி இருக்கற சம்சாரத்தை துரத்தி விட்டுடலாமா ஜோசியரே?

===============

14 நீக்கப்பட்டார் என்பதற்கும் விடுவிக்கப்பட்டார் என்பதற்கும் வித்தியாசம் என்ன?

 ரிசைன் லெட்டர் வாங்கிட்டு அனுப்பறது, டெர்மினேட் பண்றது


======================

15 சார், கூட ஃபிரண்டா பழகிட்டு இருந்த  பொண்ணுக்கு திடீர்னு ப்ரப்போஸ் பண்ணீங்களா?

5 வருசமா திட்டம் போட்டு  இப்பதான் டி”ஃபிரண்ட்டா” சொன்னேன்


====================

16 டாக்டர்! டெய்லி மத்தியானம்  தூங்கி எழுந்து காலைலனு நினைச்சு பல்பு வாங்குறேன்

 ஏம்மா, நிஜமா இது பல்பு கடை தான். கண்ணை முழிச்சுப்பாரு


===================

17 என்  முத பையன் தொணதொணனு பேசிட்டே இருக்கான்,2 வது பையன் சாஷ்டாங்கமா தரைல விழுந்தே கிடக்கான்


2வது பையனுக்கு அரசியல்ல நல்ல எதிர்காலம் இருக்கு


==================

18 டியர்,எங்க வீடு  ஒரு கோயில் மாதிரி.


 யோவ், அதுக்காக வீட்ல கூட நைட்டி போடக்கூடாதுன்னு உடைக்கட்டுப்பாடு விதிக்கறதா?


===================


19  மாப்ளை,கவலையேபடாதீங்க, என் பொண்ணு வாய்லயே நல்லா வடை சுடுவா.


அதெல்லாம் சரி மாமா. நிஜமான வடை சுடுவாளா?சமையல் தெரியுமா?


======================


20 மேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் சுருங்கிடுது? 
அந்த நட்பு வட்டம் வீட்டுக்கு வந்தா புருசன் ஃபிகரை கட்டம் கட்டிட்டா?ஒரு பயம்


=======================


0 comments: