Wednesday, January 31, 2024

THE TRIAL (2023) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம் & டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்

   


24/11/2023 ல் தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போதுஅமேசான்  பிரைம்    &  டிஸ்னி பிளஸ்  ஹாட்  ஸ்டார்  ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது .நாயகி , கணவன் , போலீஸ்  ஆஃபிசர்  என  மூன்றே  முக்கியக்கேரக்டர்களை  வைத்து  லோ பட்ஜெட்டில்  இது  போன்ற  தரமான  க்ரைம்  த்ரில்லர்  படத்தைக்கொடுத்ததற்காக  இயக்குநரை  பாராட்டலாம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகிக்குத்திருமணம்  ஆகி  இப்போதுதான்  முதலாம்  ஆண்டு  வெட்டிங்  அனிவர்சரி  கொண்டாட்டம்  நடக்கிறது. கணவன்  நாயகிக்கு  ஃபோன்  பண்ணி  ஒரு  குறிப்பிட்ட  இடத்துக்கு  வரச்சொல்லி  அங்கே  ஒரு  ஷாக்  சர்பப்ரைஸ்  இருக்கிறது  என  அழைக்கிறான், நாயகியும் அங்கே  போகிறாள் . அது  ஒரு  மொட்டை  மாடி. இருவரும்  தண்ணி  அடித்து  விட்டு  பேசிக்கொண்டு  இருக்கிறார்கள் . திடீர்  என  கணவன்  கீழே  விழுந்து  இறக்கிறான். அது  ஒரு  ஆக்சிடெண்ட்டல்  டெத்  என  கேஸ்  ஃபைல்  ஆகிறது 


 கணவன்  கால்  தவறிக்கீழே  விழுந்தானா?  தற்கொலை  செய்து  கொண்டானா? கொலையா? என்பதை  அப்போது  நமக்குக்காட்டவில்லை .  சில  நாட்கள்  கழித்து  போலீஸ்க்கு  ஒரு  பெட்டிசன்  வருகிறது . அந்த  சம்பவத்தில்  ஒரு  மர்மம்  இருக்கிறது , மீண்டும் கேசை  ரீ ஓப்பன்  செய்ய  வேண்டும்  என உத்தரவு  வருகிறது


நாயகி  வரவழைக்கப்படுகிறார்.. ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  இண்ட்ராகேஷன்  செய்கிறார். போலீஸ்  ஆஃபீ.சர்  கேட்கும்  கேள்விகளுக்கு  நாயகி  பதில்  சொல்கிறார். இறுதியில்  மர்மம்  விலகியதா? என்பதை சஸ்பென்சாக  சொல்லி  இருக்கிறார்கள் 


 நாயகி  ஆக  ஸ்பந்தனா  பள்ளி  பிரமாதமாக  நடித்திருக்கிறார். ஓப்பனிங்  ஷாட்டில்  சேலையில்  கிளாமராக  வரும்போதும்  சரி ,  அவர்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  என்ற  ட்விஸ்ட்  தெரிந்த  பின்  போலீஸ்  யூனிஃபார்மில்  வரும்போதும்  சரி  கலக்குகிறார்


விசாரணை  செய்யும் போலீஸ்  ஆஃபீசர்  ஆக   வம்சி  கோடி  நன்றாக  நடித்திருந்தாலும்  நாயகி  ஈசியாக  அவரை  ஓவர்  டேக்  செய்து  விடுகிறார்


  நாயகியின்  சைக்கோக்கணவனாக   யுகராம்  சுமாராக  நடித்திருக்கிறார். புரியாத  புதிர்  ரகுவரன்  போல , கல்கி  பிரகாஷ் ராஜ்  போல  அவருக்கு  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சி  வைத்திருந்தால்  அந்த  கேரக்டர்  இன்னும்  வலுவாக  இருந்திருக்கும் 


ந்சரவண  வாசுதேவன்  இசையில்  இரண்டு  பாடல்கள்  நன்றாக  இருக்கின்றன , பின்னணி  இசை  படத்துக்குப்பெரிய  பலம் .  குறிப்பாக  அந்த  தீம்  மியூசிக்  அட்டகாசம் 


எடிட்டர்  ஸ்ரீகாந்த்    97  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  ஷார்ப்  ஆக ட்ரிம்  செய்து  இருக்கிறார்


ராம் கண்ணி  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1   நாயகியை  ஓப்பனிங்கில்  அழகுபதுமையாகக்காட்டி , பின்  விசாரணையின் போது  அவர்  தான்  வில்லியோ  என  எண்ண  வைத்து  , பின்  பாதியில்  அப்பாவிக்கணவன்  ஒரு  சைக்கோ  என  ட்விஸ்ட்  வைப்பதில்  வெற்றி  பெற்று  இருக்கிறார். இவை போக  படத்தின்  க்ளைமாக்சில்  இரண்டு  ட்விஸ்ட்  இருக்கின்றன. ஒன்று  நாம்  எதிர்பார்த்தது . இன்னொன்று  எதிர்பாராத  அபாரமான  ட்விஸ்ட் 


2    நாயகியைப்பற்றி  தவறாக , அபாணடமாக    டைரியில் எழுதி  வைத்து  நாயகியை  போலீசில்  மாட்ட  வைக்கும்  வில்லனின்  ஐடியா  சூப்பர் 


3    பிஜி எம்  தெறிக்கிறது . தீம் மியூசிக்  பெரிய  பலம் 


4   இது  போன்ற  கதையில்  நாயகனுக்கோ , நாயகிக்கோ  ஒரு  கள்ளக்காதல்  இருப்பதாகக்காட்டுவார்கள் . அது  இல்லாமலேயே  முடித்தது  சிறப்பு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நான்  சாகப்போகிறேன்  என  மிரட்டுபவர்கள்  விஷமோ  ,  பூச்சிக்கொல்லி  மருந்தோ   குடிப்பது  போல்  காட்டுவது  ஓக்கே , ஆனா  உயரமான  இடத்தில்  இருந்து  குதிப்பதாக  பாவ்லா  காட்டுவது  ஆபத்து . அதை  எப்படி  போலீஸ்  நம்புகிறது ?


2   சாதா  பெண்களே  தனக்கு  வரப்போகும் கணவனைப்பற்றி  சொந்த பந்தத்தில்  விசாரிக்கிறார்கள் . ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஆக இருக்கும்  நாயகி  தனக்கு  வரப்போகும்  கணவன்  மனநலன்  பாதிக்கப்பட்டவன்  என்பதை  அறியாமல்  இருப்பது  எபப்டி ? 


3  ஒரு  சாதா சராசரிப்பெண்ணை  சிக்கலில்  மாட்டி  விடவே  கணவன்  கிரிமினல்  ஆக  யோசிக்க  வெண்டும்,  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஆன  மனைவியை  மாட்டி  விட   அல்லது  ஏமாற்ற  கணவன்  எவ்ளோ  புத்திசாலி  ஆக  யோசிக்க  வேண்டும் ? இதில்  டம்மியாக  இருக்கிறான் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ / ஏ சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    க்ரைம் த்ரில்லர்  ரசிகர்கள்  அவசியம்  பார்க்க  வேண்டிய  படம்  . ரேட்டிங்  2.75 / 5 


The Trial
Theatrical release poster
Directed byRaam Ganni
Written byRaam Ganni
Produced bySmriti Sagi
Srinivas K Naidu
StarringSpandana Palli
Yug Ram
Vamsi Kotu
CinematographyShrie Saikumaar Daara
Edited bySrikanth Patnaik
Music bySaravana Vasudevan
Release date
  • 24 November 2023
CountryIndia
LanguageTelugu

Tuesday, January 30, 2024

கண்ணகி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் பிரைம்

   


 டைட்டிலைப்பார்த்ததும்  மதுரையை  எரித்த கற்புக்கரசியின்  கதையோ  என  பயந்து  ஓடி  விட  வேண்டாம் . நம்  மனதுக்கு  நெருக்கமான  இரண்டு  அழகிய  காதல்  கதைகள் , திருஷ்டிப்பொட்டு  வைத்த  மாதிரி  சுமாரான  இரு  கதைகளின்  தொகுப்பு  தான்  இந்தப்படம் .நான்கு  தனித்தனி  கதைகளை  அடுத்தடுத்த  காட்சிகளாக  கலந்து  கட்டி  எந்த  வித  குழப்பமும்  இல்லாமல்  திரைக்கதை  அமைத்தது  அபாரம் . 2023  டிசம்பர்  15  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்படம் இப்போது  அமேசான்   பிரைம்  ஓடிடியில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது

ஸ்பாய்லர்  அலெர்ட்


 தர  வரிசைப்படி  நான்கு  கதைகளையும்  வரிசைப்படுத்திப்பார்ப்போம் 


சிறுகதை  1 -  நாயகிக்கு  திருமணம்  ஆகி  விட்டது . ஆனால் கணவன் ஆண்மை  இல்லாதவன். அவன்  மேல்  உள்ள  தவறை  மறைக்க  நாயகி  மீது  பழி  போட்டு  டைவர்ஸ்  கேட்கிறான். நாயகி  எக்காரணம்  கொண்டும்  டைவர்ஸ்  தர  மாட்டேன்  என  அடம்  பிடிக்கிறாள் . நாயகியின்  சார்பாக  வாதாட  வரும்  வக்கீல்  ஒரு  கட்டத்தில்  நாயகியை  விரும்புகிறான்.  நாயகிக்கும்  வக்கீலைப்பிடித்திருக்கிறது . இதனால்  கணவனுக்கு  டைவர்ஸ்  கொடுத்து  விடுகிறாள் . ஆனால்  வக்கீலுக்கு  ஒரு  தங்கை  இருக்கிறாள் . இதனால்  என்ன  பிரச்சனை  ஏற்படுகிறது? இருவரும்  இணைந்தார்களா? இல்லையா?  என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகி  ஆக  வித்யா  பிரதீப்  அழகாக  நடித்திருக்கிறார். பெயருக்கு  ஏற்றாற்போல  அவருக்கு  ஸ்ரீவித்யா  போல் அகன்ற  கண்கள் . வக்கீலாக  வெற்றி  நடித்திருக்கிறார். சிறப்பு 

ஒரு  விவாக  ரத்து  ஆன  பெண்ணை  இந்த  சமூகம்  எப்படிப்பார்க்கிறது  என்று  சொன்ன  விதத்தில்  இது  நான்கில்  முதலிடம்  பெறுகிறது 


சிறுகதை  2  - நாயகியின்  அம்மா , அப்பா  நாயகிக்கு  வரன்  பார்க்கிறார்கள் , வரும்  வரன்கள்  எல்லாரையும்   நாயகியின்  அம்மா  எதோ  காரணம்  சொல்லி  தட்டிக்கழிக்கிறாள் . புருசனை  மதிப்பதே  இல்லை . மனம்  வெறுத்த  புருசன் ஒரு  கட்டத்தில்  இறந்தே  விடுகிறான்


பிறகு  ஒரு  பெரிய  இடத்தில்  மாப்பிள்ளை  அமைகிறது , ஆனால்  அவன்  ஒரு  பொம்பளைப்பொறுக்கி. நாயகியின்  தாய்  மாமன்  மகன்  கூட நாயகியைப்பெண்  கேட்டு  வருகிறார் இறுதியில்  நாயகியின்  அம்மா  எடுத்த  முடிவு  என்ன ? என்பதுதான்  க்ளைமாக்ஸ் \


 மொத்தம்  உள்ள  நான்கு கதைகளில்  இந்தக்கதைக்குதான் இயக்குநர்  அதிக  முக்கியத்துவம்  கொடுத்திருக்கிறார். அதிக  காட்சிகளும்  இதற்கே .


 பல  விமர்சனங்கள்  இக்கதையைப்பாராட்டி  வந்தாலும்  ஒரு  சாதா  கதையை  ஜவ்வாக  இழுத்து  விட்டார்கள்  என்பதுதான்  என்  கருத்து 


 நாயகியாக  அம்மு  அபிராமி  பாங்குடன்  நடித்திருக்கிறார்/. நாயகியின்  அம்மாவாக  மவுனிகா  அனைவர்  வெறுப்பையும்  சம்பாதிக்கும்படியும், அப்பாவாக  மயில் சாமி  அனைவர்  மனதையும்  கவரும்படியும்  நடித்திருக்கிறார்


  சிறுகதை  3

நாயகன்  வாய்ப்புத்தேடும்  ஒரு  புதுமுக  இயக்குநர். ஒருவர்  தன்  காதலியுடன்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்ந்து  வருகிறார். எதிர்பாராத  விதமாக  நாயகி  கர்ப்பம்,  நான்கு  மாதமாக  கவனிக்காமல்  விட்டு  விடுகிறார்கள் , கருவைக்கலைத்தே  ஆக  வேண்டும்  என  கங்கணம்  கட்டி  அலைகிறார்கள் , பல  டாக்டர்கள்  கை  விரித்த  நிலையில்  அவர்கள்  என்ன  முடிவு  எடுத்தார்கள்  என்பது  க்ளைமாக்ஸ் 


 இக்கதையின்  ஒரே பிளஸ்  நாயகியாக  நடித்த  கீர்த்தி  பாண்டியன் முக  அழகு  மட்டுமே 

சிறுகதை  4 

நாயகி  பாரதியாருக்கே  ஹார்ட்  அட்டாக்  வர  வைக்கும்  புதுமைப்பெண். தண்ணி  அடிப்பது  , கஞ்சா  அடிப்பது  என  எல்லாம்  உண்டு .பாய்  ஃபிரண்டுடன் லிவ் விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்.  எல்லாவற்றுக்கும்  ஓக்கே  சொல்லும்  இவர்  மேரேஜ்க்கு  மட்டும் ஓக்கே  சொல்லவில்லை . ஆனால்  நாயகன்  தொடர்ந்து  மேரேஜூக்கு  வற்புறுத்த   கடைசி  வரை  நாயகி  சம்மதிக்கவே இல்லை . 


 புரட்சிகரமான  இந்தக்கேவலமான  கதையில்  நாயகியாக  நடித்த ஷாலின் சோயா  நடிப்பு  மிரட்டல்  ரகம் 


ஷான்  ரஹ்மான்  இசையில் இரண்டு  பாடல்கள்  சுமார்  ரகம்,  பிஜிஎம்  குட்  ராம்ஜியின்  ஒளிப்பதிவில்  ஐந்து  நாயகிகளையும்  க்ளோசப்  ஷாட்  , லாங்க்  ஷாட்களில்  அழகாகப்பார்க்க  முடிகிறது 


 கே சரத்குமாரின்  எடிட்டிங்கில்  காட்சிகள்  குழப்பம்  தராமல்  நகர்வதே  பாராட்டு  பெறுகிறது . 157  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  யஷ்வந்த் கிஷோர் 
சபாஷ்  டைரக்டர்


1  தற்கொலைக்கு  முயன்ற  பாட்டி  தன்  பேத்தியிடம்  அதற்கான  காரணத்தைக்கூறுவது  அட்டகாசம். மெயின்  கதைக்கும் சம்பந்தம்  இல்லையென்றாலும்  அருமையான  தாட்  பிராசஸ் 


2    வக்கீல்  -  டைவர்ஸ்  கேட்டு  வரும் பெண்  கதையில்  இருவருக்குமான  காம்போ  காட்சிகள்  ரொமாண்டிக்


3 மயில்சாமி ,அம்மு  அபிராமி , வித்யா  பிரதீப் ,  மவுனிகா , கீர்த்தி  பாண்டியன்  நடிப்பு  அருமை


  ரசித்த  வசனங்கள் 


1  நீங்க  தான்  என்னைப்பார்க்கும்  முதல்  மாப்பிள்ளை 


 நீங்க  தான்  நான்  பார்க்கும்  கடைசிப்பொண்ணு


2  லவ்  மேரேஜ்  பிடிக்குமா? அரேஞ்ஜ்டு   மேரேஜ்  பிடிக்குமா? 


 அய்ய்யே, ரெண்டுமே  சுத்தமாப்பிடிக்காது , டீக்குடிக்க  யாராவது  டீக்க்டையையே  வாங்குவாங்களா? 


3   ஒரு  பூ  உனக்குப்பிடிச்சிருக்குன்னா  அந்த  பூச்செடி  இருக்கும்  இடத்துக்கே  போய்  அதுக்குத்தண்ணி  ஊத்தி  வளர்த்து  வாசம்  பார்க்கறதுதான்   நல்லது , அதை  விட்டுட்டு  பூ  வை  பறிச்சு  எடுத்துட்டுப்போகனும்னு  நினைக்கக்கூடாது 


4  போன  வாரம்  நீ  உங்கம்மா  வீட்டுக்குப்போய்  இருந்தியா? 


 ஆமா, உனக்கு  எப்படி  தெரியும் ?


  உன்  புருசன்  எனக்கு  மெசேஜ்  பண்ணி  இருந்தான் 


5  ஆயில்ய  நட்சத்திரம்னா  பொண்ணோட  அம்மாவுக்கு  ஆகாது , மூல  நட்சத்திரம்னாக்கூட  பரவாயில்லை , பொண்ணோட  அப்பாவுக்குத்தான்  ஆபத்து 6   எனக்கு  அன்பு  வெண்டாம், அங்கீகாரம்  மட்டும்  போதும் 


7  உங்க  கிட்டே  ஏதாவது  ஆதாரம்  இருக்கா? 


 யுவர்  ஆனர் , இல்லற  வாழ்க்கைக்கு  சிசிடி வி  வைக்க  முடியாது 8  தீர்ப்புதான்  உங்களால  குடுக்க  முடியும், தீர்வு  கொடுக்க  முடியாது 


9  சட்டம்  பெண்களுக்கு  சாதகமானதுதான், ஆனால்  இந்த  சமுதாயம் பெண்களுக்குப்பாதகமானது 


10   எனக்குக்கடவுள்  நம்பிக்கை  இல்லை , ஆனா  மனுச  நம்பிக்கை   உண்டு 


11   புத்தர்  நாட்டைத்துறந்து  ஞானி  ஆகி  விட்டார்னு  ஈசியாச்சொல்லிடறோம், ஆனா  அவர்  போன்  பின்  எவ்ளோ   வலி, எத்தனை  கஷ்டம்னு  அவர்  பொண்டாட்டிக்குத்தான்  தெரியும் 


12   என்  நம்பிக்கை  தப்பில்லை , நம்பின  ஆள்  தான்    தப்பு 


13    டோனி  கூட  முதல்  மேட்ச்ல  தோத்துத்தான்  போனார் 


14    லவ்  , மேரேஜ்  எல்லாம்  லைஃப் ல  வந்தா  லைஃபே  போர்  அடிச்சுப்போயிடும்டா


 அப்போ  உலகம்  பூரா  பைத்தியக்காரங்க, நீ  மட்டும் தான்  புத்திசாலி ? 


15    எனக்கே  தோணாத  எங்கம்மாவோட  வலி  உனக்கு  எபப்டி  தோணுச்சு?


 ஒரு  சபிக்கப்பட்ட  ஆத்மாவோட  வலி  இன்னொரு  சபிக்கப்பட்ட  ஆத்மாவுக்குத்தான்  தெரியும்


16  நீ  பிறக்கும்போது  என்னை அழ  வெச்சே , இன்னும்  அழ  வெச்சுட்டுதான்  இருக்கே 


17  உன்  சின்னச்சின்ன  சந்தோஷங்களை  எல்லாம்  உன்  பேராசையால்  இழக்கறே


18  உன்னை  என்  அம்மா  மாதிரி  பார்த்துக்கிட்டேன் 

 ஏன்  யாரும்  உன்னை  உன்  அப்பா  மாதிரி  பார்த்துக்குவேன்னு  சொல்றதில்லை ?


19  கல்யாணம்  தான்  நமக்கு  மிகப்பெரிய  பாதுகாப்பு . அந்த  அங்கீகாரம்  கிடைச்சாத்தான்  நம்  வாழ்க்கைல  பூ  பூக்கும் 


20  எழுதப்படாத    வார்த்தைகள்  1000 அர்த்தங்கள்  தரும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பொதுவாக  இந்துப்பெண்களின்  மென்சஸ்  தேதி  என்ன  என்பதை  அறிந்து  அது  முடிந்த  12  வது  நாள்  தான்  திரு்மண  முகூர்த்த  நாளாகக்குறிப்பார்கள் . லவ்  மேரேஜ் ,  ஓடிப்போய்  அவசரமா  கல்யாணம்  பண்ணிக்கறது  போன்றவற்றில்  இதை  ஃபாலோ  பண்ண  முடியாது ,  ஆனால்  அரேஞ்ச்டு  மேரேஜில்  நிச்சய்ம்  இதை  ஃபாலோ  செய்வார்கள் .  திருமண  நாள்  அன்று  நாயகிக்கு  மென்சஸ்  ஆகி  விட்டது  என்ற  ஒரு  விஷயத்தை  வைத்து   காட்சிகள்  நகர்வது  மனதைத்தொடவில்லை 


2   நான்கு  வெவ்வேறு  சிறுகதைகளாக்காட்டி  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  வைக்கிறேன்  பேர்வழி  என  நான்கு  கதைகளுக்கும்  ஒரு  கனெக்சன்  கொடுப்பதாக    இயக்குநர்  எடுத்த  முடிவு  மகா  சொதப்பல். ஓப்பனிங்  எல்லாம்  நல்லாதான்  இருக்கு , ஃபினிசிங்  சரி  இல்லை  என்பதாய்  ஆகி  விட்டது 


3   முற்போக்கு  மாடர்ன்  கேர்ள்  ஆக  வரும் பெண்  தன்னை  ப்ரப்போஸ்  செய்யும்  காதலனை  அனைவர்  முன்னிலையிலும்  உதைப்பது ,  ஆஃபீசில்  டேபிளில்  காலைத்துக்கி  மேலே  போடுவது , கஸ்டமரை  அவமானப்படுத்துவது  என    பெண்களை  ஓவராக  மட்டம்  தட்டி  இருக்கிறார்  இயக்குநர் 


4  மாடர்ன்  கேர்ள்  என்றால்  தண்ணி  அடிப்பார் , தம்  அடிப்பார் , மேரேஜ்  பண்ணிக்க  விரும்பாமல்  மற்றதுக்கு  எல்லாம் ஓக்கே  சொல்வார்  என  சித்தரித்தது  கொடூரம் 


5   லிவ்விங்  ரிலேசன் ஷிப்பில்  வாழும்  ஜோடி  நான்கு  மாத  கர்ப்பம்  என  ஆன  பின்  கருவைக்கலைக்க  நினைப்பது  சுத்தமாக  நம்பும்படி  இல்லை . மீதி  3 மாதங்கள்  என்ன  செய்து  கொண்டிருந்தார்கள் ? 


6  க்ளைமாக்சில்  வரும்  லேடி  ரைட்டர்  ஐந்து  ஆண்களுடன்  வாழ்ந்தவர்  என்பதால்  டைட்டிலாக  பாஞ்சாலி  என்று  வைக்காமல்  விட்டது  ஏனோ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ //ஏசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொறுமைசாலிகள்   மட்டும்  பார்க்கலாம். பெண்களுக்குப்பிடிக்கும்  ரேட்டிங் 2.25 / 5 


Kannagi
Theatrical release poster
Directed byYashwanth Kishore
Written byYashwanth Kishore
Produced byM Ganesh
J Dhanush
StarringKeerthi Pandian
Ammu Abhirami
Vidya Pradeep
Shaalin Zoya
CinematographyRamji
Edited byK.Sarath Kumar
Music byShaan Rahman
Production
companies
Sky Moon Entertainment and E5 Entertainment
Distributed bySakthi Film Factory
Release date
15 December 2023
CountryIndia
LanguageTamil

Monday, January 29, 2024

மதிமாறன் (2023 ) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

    


உருவ கேலி கூடாது  என்பதை இந்த  அளவுக்கு  வலிமையாக  இதற்கு  முன்  வேறு  எந்தப்படத்திலும்  வலியுறுத்தியதாகத்தெரியவில்லை . முந்தானை  முடிச்சு  தவக்களை , அபூர்வசகோதரர்கள்  குள்ள  அப்பு  கமல் , இணைந்த  கைகள்  கிங்க் காங் , டிஸ்யூம், ஏழாம்  அறிவு  கின்னஸ்  பக்ரு   ஆகிய    நடிகர்கள்  குள்ள  கேரக்டரில்  நடித்து  புகழ்  பெற்றவர்கள் . இதில்  கமல்  தவிர  மற்ற  அனைவரும் இயற்கையாகவே  குள்ளமாகப்பிறந்தவர்கள் . ஒரு  குள்ள  கேரக்டர்  ஒரு  க்ரைம்  த்ரில்லர்  படத்தில்  நாயகனாக  வருவது  இதுவே  முதல்  முறை 


இந்தப்படத்துக்கு  முதலில்  காம்ப்ளெக்ஸ்  என  டைட்டில்  வைக்கப்பட்டு  , பின்  இன்ஃபீரியாரிட்டி  காம்ப்ளெக்ஸ்  என  வைக்கலாமா? என  பரிசீலிக்கப்பட்டு  கடைசியில்  நெடுமாறன்  என  கேரக்டர்  பெயரும் ,  மதிமாறன்  என  டைட்டில்  பெயரும்  வைக்கப்பட்டது  . . மீடியாக்களில்  இப்படத்துக்கு  பாசிடிவ்  விமர்சனங்கள்  வந்திருந்தாலும்  தியேட்டரில்  ரிலீஸ்  ஆனபோது பிரம்மாண்ட  வெற்றியைப்பெறவில்லை . 2021ல்  ஷூட்டிங்  ஆரம்பிக்கப்பட்டு  2023   டிசம்பர் 29 ல்  வெளியான  இப்படம்  2023 ஆம்  ஆண்டின்  கடைசிப்படம்  என்ற  பெருமையைப்பெறுகிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா  ஒரு  தபால் ஊழியர். அவருக்கு  மகன், மகள்  என  இரட்டை  வாரிசுகள் . இரட்டையர்களாகப்பிறந்தாலும்  மகன்  குள்ளமாகப்பிறந்ததால்  பலரது கேலிக்கும் , கிண்டலுக்கும்  ஆளாகிறான். குள்ள  உருவமாக  இருக்கும்  நாயகன்  தன்  சகோதரி  மீது  உயிரையே  வைத்திருக்கிறான்


 ஒரு  கட்டத்தில்  நாயகனின்  சகோதரி ஒரு  காலேஜ்  லெக்சரரை  காதலித்து  கர்ப்பம்  ஆகி  ஊரை  விட்டே  ஓடி  விடுகிறார். இதனால்  அவமானம்  அடைந்த  பெற்றோர்  தற்கொலை  செய்து கொள்கிறார்கள் 


இதற்குப்பின்  ஓடிப்போன  சகோதரியை   நாயகன்  கண்டு பிடித்தானா?  என்பது  ஒரு  டிராக் .


 ஊரில்  திருமணம்  ஆன  பெண்கள்  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாக்கப்பட்டு  கொல்லப்படுகிறார்கள் . அந்த  சீரியல்  கில்லர்  யார்  என்பதை  நாயகன்  எப்படிக்கண்டு  பிடிக்கிறான்  என்பது இன்னொரு  டிராக் 


 நாயகன்  ஆக  வெங்கட்  செங்குட்டுவன்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். உருவ கேலிக்கு  எதிரான  வசனங்கள்  பேசும்போது  கை தட்டலையும், பரிதாபத்தையும்  அள்ளீக்கொள்கிறார். விழா  மேடையில் நடனப்போட்டியில்  கலக்கல்  டான்ஸ்  ஆடி  ஆச்சரியப்படுத்துகிறார் 


நாயகனின்  சகோதரி  ஆக  இவானா . கண்ணியமான  அழகி .இவரது  கேரக்டர்  டிசைனில்  ஒரு  சறுக்கல்  உண்டு . ஆனால்  அது  அவர்  தவறல்ல . நடிப்பு  குட் 


நாயகி  ஆக  ஆரத்யா. இவர்  போலீஸ்  ஆஃபிசர்  ஆக  வரும்  காட்சிகளை  விட  நாயகனுக்கு  ஜோடியாக  வரும்  காட்சிகளில்  தான்  மனம்  கவர்கிறார் 


ஆடுகளம்  நரேன்  போலீஸ்  கமிஷனர்  ஆக  ஓப்பனிஞ்   சீன்களில்  ஓவர்  ஆக்டிங்கில்  சொதப்பி  இருந்தாலும்  பிஞ்  பாதியில்  கச்சிதம் .


 நாயகனின்  அப்பாவாக  எம் எஸ்  பாஸ்கர் தேர்ந்த  குணச்சித்திர  நடிப்பு . வாட்ச்மேனாக  பவா  செல்லத்துரை  பிரமாதமான  நடிப்பு \

\கார்த்திக்  ராஜாவின்  இசையில்  ஐந்து  பாடல்கள் சுமார்  ரகம் . பின்னணி  இசை  ஓக்கே  ரகம் 


 128  நிமிடங்கள்  ஓடும்படி  படத்தை  ஷார்ப்  ஆக  கட் செய்து  இருக்கிறார்  எடிட்டர்   சதீஷ்  சூர்யா .கே பர்வேசின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கச்சிதமாகப்படமாக்கப்பட்டுள்ளது 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  மந்த்ரா  வீர  பாண்டியன்  (  நடிகை  மந்த்ராவுக்கும்  இவருக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை ) 


சபாஷ்  டைரக்டர்

1  ஓப்பனிங்  ஷாட்டிலேயே  கொலைகளைக்காட்டி  ஒரு  பரபரப்பை  ஏற்படுத்திய  விதம்  குட் . ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  மெதுவாக  நகர்வதால்  அதை  ஆங்காங்கே  ஜிலேபியை  பிய்த்துப்போடுவது  போல  தூவி  இருக்கும்  விதமும்  கச்சிதம் 


2   நாயகி  நாயகன்  காதலை  வெளிப்படுத்த  எத்தனித்து  பின்  தள்ளிப்போடும்  காட்சி 


3   நாயகன்  தன்  கண்  முன்  தன்  பெற்றோர்  தற்கொலை  செய்து  கொள்ளும்  காட்சியைக்கண்டும்  தடுக்க  முடியாமல்  போவதும், அதே  சம்பவம்  வேறு  ஒரு  சமயம்  வேறு  ஜோடிக்கு  நிகழும்போது  காப்பாற்றும்  காட்சியும்  அருமை 


4  வில்லன்  கொலை  செய்யப்பட்ட  பெண்களோடு   செல்  ஃபோனில்  பேசி  இருக்கிறான், ஆனால்  அதை  சைபர்  க்ரைம்  போலீசால் கார்னர்  பண்ண  முடியவில்லை , அதற்கான  காரணமும் , வில்லனின்  ஐடியாவும்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1   இரட்டையர்களில் ஒரு  வாரிசு  ஆரோக்யமாகவும், இன்னொரு  வாரிசு  உருவ  உயரக்குறைபாடோடு  இருப்பதால்  இருவரையும்  ஒரே  இடத்தில்  வளர்த்தால்  இன்ஃபீரியாரிட்டி  காம்ப்ளெக்ஸ்  ஏற்படும், அதனால்  இருவரையும்  பிரித்து  தனித்தனி  ஏரியாக்களில்  வளர்க்கலாம் 


ஒருவருக்கு  இரு  கண்களில்  ஒரு  கண்  மாறுகண்  ஆக  இருந்தால்  அந்தக்கணைப்பிடுங்கி  தூரவா  போடுகிறோம் ? 


2   ஆளைப்பார்த்தா  அழகு  போல , ஆனா  வேலையைப்பார்த்தா  இழவு  போல 


3   செஸ்  கேம்ல  எப்பவும்  கேம்  ஆடறவங்களை  விட  வெளில  இருந்து  அதை  வேடிக்கை  பார்க்கறவங்களுக்குதான்  நிறைய  ஐடியா  கிடைக்கும், அவனை  ஆட  விட்டா  ஈசியா  ஜெயிச்சிடுவான் 


4   எந்த  காக்காவும்  தான்  கறுப்புனு  ஃபீல்  பண்ணிக்கிட்டு  இருப்பதில்லை , எந்த  கொக்குவும்  தான்  வெள்ளைனு  பெருமை  பீற்றிக்கொள்வதில்லை , மனுசங்க  மட்டும்  தான்  கலர்ல  ஃபீல்  ஆகறாங்க \


5   டெய்லி  ஒரு  புதுக்கார்ல  போனா  எப்படி  இருக்கும் ? அப்படித்தான்  எனக்கு  பொண்ணுங்க \\


6   இந்த  உலகத்துல  ஏமாற்றுவதுதான்  தப்பு , ஏமாறுவது  அவ்ளோ பெரிய  தப்பு  இல்லை 


7   மத்தவங்க  சாதிச்சாதான்  அச்சீவர்ஸ் , எங்களை  மாதிரி  ஆளுங்க  அச்சீவ்  பண்ணாதான்  சாதா  மனுசங்களாவே  ஏத்துக்குவீங்க  போல 


8  இந்த  உலகத்துலயே  மிகப்பெரிய  வன்முறை  உருவ  கேலிதான்


9   கிண்டல்  கேலி பண்ணும்  உலகம்  எப்பவும்  அதன்  வாயை  மூடுவதில்லை , ஆனா  நாம நம்  காதுகளை  மூடிக்கொள்ளலாமே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அளவுக்கு  மிஞ்சினால்   அசின்  கூட  பிசின்  தான். நாயகனை  கேலி  கிண்டல்  பண்ணுவதாக  இரண்டு  காட்சிகள்  காட்டினால்  போதாதா? அவர்  மேல்  பரிதாபம்  வரவைக்க  படம்  முழுக்க  ஏகபப்ட்ட  பாடி  ஷேமிங்  காட்சிகள் , டயலாக்குகள் , ஓவரோ ஒவர் 


2 ஆனானப்பட்ட  போலீஸ்  கமிஷனருக்கே    தோணாக  க்ரைம்  ஐடியாக்கள்  நாயகனுக்கு  தோன்றுவதும், அவனது  ஐடியாக்களை  அவர்  ஏற்றுக்கொள்வதும்  நம்பும்படி  இல்லை \\


3 போலீஸ்  ஸ்டேசனில்  ஒரு  போலீஸ்  ஆஃபீசரையே  நாயகன்  தாக்குவதும்  ஓவர் 


4   நாயகனின்  அக்கா  காதலித்த  நபர்  பணக்காரர் , காலேஜ்  லெக்சரர். ஏன்  வீட்டில்  மறைக்கனும்? பொறுக்கியை  லவ்  பண்ணி  இருந்தாதான்   பயப்படனும். அந்தக்காட்சிகள்  ஒட்டவில்லை 


5   வில்லன்  பெண்களை  கொலை  செய்வதற்கு  வலிமையான  காரணம்  சொல்லப்படவில்லை . சிங்கம்  புலி  படத்தில்  ஜீவாவுக்கு செட்  ஆவது  போல  பெண்கள்  தாங்களாகவே  அவன்  வலையில்  விழுகிறார்கள். எதற்காக  வில்லன்  ரேப் செய்யனும்? கொலை  செய்யனும் ? 


6 க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டுக்காக  ஒரு  வில்லன்  என்பதை  இரு  வில்லன்கள்  எனக்காட்டியதும்  தேவை  இல்லை 


7  விஷத்தை   சாராயம்  , பெப்சி , கொக்கோகோலா  போன்ற  பானங்களில்  கலந்தால்  தான்  கலர்  சேஞ்ச்  தெரியாது.  பாதாம் கீர் ,  மாம்பழ  ஜூஸ்  மாதிரி  லைட்  கலர்  ஜூஸ்ல  கலந்தா  கலர்  காட்டிக்கொடுக்கும் 


8  க்ளைமாக்சில்  வில்லனுக்கு  அவன்  மனைவியே  விஷம்  கலந்த  ஜூஸ்  தருவதும்  , அவன்  அதைக்குடித்த  அடுத்த  நொடியே  இறப்பதும்  காட்சிப்படுத்தப்பட்ட  விதம் நம்பும்படி  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  -  ஃபேமிலி  மெலோ  டிராமாவக  முதல்  பாதியும், க்ரைம் த்ரில்லராக  பின்  பாதியும்  உள்ளது . பார்க்கலாம்,  ரேட்டிங்  2.5 / 5 


Mathimaran
Theatrical release poster
Directed byMantra Veerapandian
Written byMantra Veerapandian
Produced byLenin Babu
Starring
  • Venkat Senguttuvan
  • Ivana
  • Aradhya
CinematographyParvaez K
Edited bySathish Suriya
Music byKarthik Raja
Production
company
GS Cinema International
Release date
  • 29 December 2023
CountryIndia
LanguageTamil

Friday, January 26, 2024

சில நொடிகளில் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


ஷாலினியின்   சகோதரர்  ரிச்சர்டு ரிஷி யை  காதல்  வைரஸ்  படத்தில்  பார்த்தது  நினைவு  இருக்கும்/அவர்  வில்லனாக  நடித்த  படம்  இது . கேரளாவில்  ரேடியோ ஜாக்கியாக  இருந்து  தயாரிப்பாளர்  கம்  நடிகை  ஆன  புன்னகைப்பூ  கீதா  நாயகி  ஆக  நடித்து  தயாரித்த  படம்  இது. ஒன்றரை  மணி  நேரத்தில்  பார்த்து  விடக்கூடிய  குயிக்  வாட்ச்  படமான  இது  க்ரைம்  த்ரில்லருக்கே  உரித்தான்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  உடன் இருந்தது . ஏ  சர்ட்டிஃபிகேட்  இருந்தாலும்  கண்ணியமான  காட்சிகள்  கொண்ட  படம்  தான் 

இது  முழுக்க  முழுக்க  லண்டனில்  படமாக்கப்பட்டது .. படத்தில் வரும்  ஐந்து  பாடல்களை  ஐந்து  வெவ்வேறு  இசை  அமைப்பாளர்களைக்கொண்டு  இசை  அமைக்கப்பட்டது


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு காஸ்மடிக்  டாக்டர். அவருக்கு  வரும்  பேஷண்ட்ஸ்  எல்லாம்  பிரபலமான நடிகைகள் , மாடலிங்க்  கேர்ள்ஸ் , செல்வச்சீமாட்டிகள்


வில்லனின்  மனைவி  தான்  நாயகி . ஒரு  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி.சமூக  சேவகி .ஆண்களால்  பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு  நிதி  வசூல்  செய்து  தருவது , நீதி  வழங்க  முயற்சி  செய்வது  இவை  தான்  இவரது  பணி .கணவருக்கும்  உதவியாக  இருக்கிறார்


வில்லன்  பெண்கள்  விஷயத்தில்  வீக்.  சாரி  ரொம்ப  ஸ்ட்ராங்க். பேஷண்ட்டாக  தன்னைக்காண  வந்த  ஒரு  மாடலிங்க்  கேர்ளை  லவ்  பண்ணுவதாக  சொல்லி  வைத்திருக்கிறார்


 மனைவி  வீட்டில்  இல்லாதபோது  தன்  கள்ளக்காதலியுடன்  வில்லன் இருக்கும்போது   குடி  போதையில்  ஓவர்  டோசாக  போதை  மருந்து  எடுத்துக்கொண்ட  கள்ளக்காதலி  திடீர்  என  இறந்து  விடுகிறாள் 


டெட்  பாடியை  டிஸ்போஸ்  பண்ண  முயற்சிப்பதற்குள்   நாயகி  வீட்டுக்கு  வந்து  விடுகிறாள்.  பிறகு  ஒரு  வழியாக  நாயகிக்குத்தெரியாமல்  வில்லன்  டெட் பாடியை  டிஸ்போஸ்  பண்ணி  விடுகிறான்  


 அடுத்ததாக  வில்லனுக்கு  புது  சிக்கல் , இறந்து  போன  கள்ளக்காதலிக்கு  ஒரு  தங்கை  இருந்திருக்கிறாள் , அது  வில்லனுக்கு  முதலில்  தெரியாது. இப்போது  வில்லனுடன் கள்ளக்காதலி  இருக்கும்  ஃபோட்டோக்களைக்காட்டி  வில்லனை  மிரட்டுகிறாள் 


 இதற்குப்பின்  வில்லன்  என்ன  செய்தான்  என்பது  மீதி  திரைக்கதை . எதிர்பாராத  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  உண்டு . ராஜேஸ்குமார் , பிகேபி , சுபா  கதைகள் , நாவல்கள்  ரெகுலராகப்படிப்பவர்களுக்கு  ட்விஸ்ட்  எதிர்பார்த்ததாக  இருக்கும்


வில்லன்  ஆக  ரிச்சர்டு.  நடிப்பு  வருதோ  இல்லையோ  நல்லா  உடம்பு  வந்து  விட்டது. சரத்குமாருக்கு  அண்ணன்  போல  இருக்கிறார். மச்சினர்  அஜித்  குமாரை  விட வெயிட்  போட்டிருக்கிறார். பொதுவாக  தாடி  வைத்த  ஆண்களை , குடுமி  வைத்த  ஆண்களை  எனக்கு  பர்சனல  ஆகப்பிடிக்காது . இவர்  இரண்டும்  வைத்திருக்கிறார்.,   சோ  நோ கமெண்ட்ஸ் 


 நாயகி  ஆக  புன்னகைப்பூ  கீதா  கச்சிதமான  நடிப்பு ,கணவன் ஒரு  துரோகி  என  அறியும்போது  அதிர்ச்சி  காட்டுவதில்  நல்ல  நடிப்பு  

கள்ளக்காதலி  ஆக  யாஷிகா  ஆனந்த்  சுமாரான தோற்றம், மிக  சுமாரான  நடிப்பு .நாயகி  ஒரு  தயாரிப்பாளர்  என்பதால்  அவரை  விட  அழகான  பெண்ணை  படத்தில்  புக்  பண்ணுவார்  என  எதிர்பார்க்க  முடியாது 


 கள்ளக்காதலியின்  தங்கை  ஆக  வருபவரும்  சுமாரான  முகம், மிக  சுமாரான  நடிப்பு  தான் 


படத்தில் , நாயகனோ , போலீசோ  இல்லாதது  ஒரு  குறை


ஷைஜால்  எடிட்டிங்கில்  90  நிமிடங்களில்  ஷார்ப்  ஆக  கட்  பண்ணி  இருக்கிறார்.  அபிமன்யூ  சதானந்தன்  ஒளிப்பதிவு. நாயகியை  அழகாகக்காட்டி  இருக்கிறார். அப்படிக்காட்டினால் தான் சம்பளம் என தயாரிப்பாளர்  சொல்லி  இருக்கக்கூடும்


திரைக்க0தை  எழுதி  இயக்கி  இருப்பவர்   வினய்  பரத்வாஜ் 


சபாஷ்  டைரக்டர்


1   வில்லன், நாயகி , வில்லி 1  , வில்லி 2  என  நான்கே  கேரக்டர்களை  வைத்து  மொத்தப்படத்தையும்  முடித்த  லாவகம் 


2  தயாரிப்பாளரை  சந்தோஷப்படுத்த  நாயகியான  அவரை  விட  வில்லி 1  வில்லி 2  இருவரையும்  சுமாரான  அழகில் , காம்ரா  கோணங்களிலும்  சுமாராகக்காட்டிய  சாமார்த்தியம் 


3  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


  ரசித்த  வசனங்கள் 


1  காலேஜ் ல  நான்  பெஸ்ட்  ஸ்டூடண்ட் ,  பெஸ்ட்  ப்ளேயர் ,  பெஸ்ட்  பாய் 


 அண்ட்  ஆல்சோ   பெஸ்ட்  லையர் ?


 வாட்?


  ஸ்டூடண்ட்  நெட்ம்பர்  ஒன்க்கு  கோபம்  வந்துடுச்சு  போல 2   இதுதான்  உனக்கு  ஃபர்ஸ்ட்  டைமா?


 நான்  பார்க்காத  பொண்ணுங்களா? ஆனா  உலகத்துலயே  அழகான  பொண்ணோட  இதுதான்  ஃபர்ஸ்ட்  டைம்


3   அன்னைக்கு  நம்ம  ரெண்டு  பேருக்குள்ள  நடந்த  சம்பவம்  ஒரு  ஆக்சிடெண்ட்  அவ்ளோ தான் 


 சரி , ஆனா  ஆக்சிடெண்ட்  ஒரே  ஒரு  டைம்  தான்  ந்டக்கனும்னு  விதி  இருக்கா  என்ன? 


4  யூ ஆர்  ஃபைன்


 நான்  பெஸ்ட்டா  இருக்கனும்னு  ஆசைபப்டறேன், என்  மாடலிங்  தொழில்ல  ஃபைனை  வெச்சுக்கிட்டு  குப்பை  கொட்ட முடியாது 


5  அவன்  வெறும் கல்  தான், அந்த  சிலையை  செதுக்கின  சிற்பி  நான் தான்


6  ரியாலிட்டி  ஈஸ்  டேஞ்சர் தன்  ஃபிக்சன்


7 உன்னை  இவ்ளோ அழகாப்பார்த்து  எத்தனை நாட்கள்  ஆச்சு ?


 நீ  என்னைப்பார்த்தாத்தானே? 

 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பணம்  கேட்டு  மிரட்டும்  வில்லி  ஓப்பன்  ஆக  தன்னை  யார்  என்று  காட்டிக்கொண்டா  மிரட்டுவார்? 


2  டெட்பாடியை  டிஸ்போஸ் செய்யும்  முன்  வில்லன்  பாக்சை  ஓப்பன்  பண்ணி  டெட்  பாடி  இருக்கிறதா?  என  செக்  செய்ய  மாட்டாரா? 


3  பஞ்ச  தந்திரம்  படத்தில்  வரும்  ஒரு  ட்விஸ்ட்  இதிலும்  வருகிறது 


4  பொதுவாக  ஆண்கள்  திருந்துவது  வரலாறு, சரித்திரத்தில்  இல்லை , அதுவும்  பெண்  பித்தன்  ஆன  வில்லன்  க்ளைமாக்ஸில்  நாயகியிடம்  தான்  திருந்தி  விட்டதாக  சொல்வது  காமெடி 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  ஏ  என்றாலும்  யூ  தான் சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    க்ரைம்  த்ரில்லர்  மிஸ்ட்ரி  த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம்  ரேட்டிங்  2.75 / 5 


Sila Nodigalil
Poster
Directed byVinay Bharadwaj
Written byVinay Bharadwaj
Produced byPunnagai Poo Gheetha
Starring
CinematographyAbhimanyu Sadanandan
Edited byShaijal P V
Music by
Production
company
Esquire Productions
Release date
  • 24 November 2023
CountryIndia
LanguageTamil

Thursday, January 25, 2024

நாராயணா அண்ட் கோ (2023) - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் (மொக்கைக் காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

 


வன்முறைகள்  நிறைந்த  மாமூல்  மசாலாக்குப்பைகளைப்பார்ப்பதை  விட  மொக்கைக்காமெடியாக  இருந்தாலும்  இது  மாதிரி    காமெடிப்படங்கள்  பார்ப்பது  நல்லது , தியேட்டர்களில் ரிலீஸ்  ஆனபோது  கலவையான  விமர்சனங்கள்  வந்திருந்தாலும்  தமிழ்  டப்பிங்கில்  ஓ டி டி  ரிலீஸ்  ஆக  வந்தபோது  பலரின்  பாராட்டுதல்களைப்பெற்ற  படம்  இது . முதல்  பாதி காமெடி , பின்  பாதி  மொக்கைக்காமெடி

. ஆர் பாண்டியராஜன்  நடித்த  கதா நாயகன் , எஸ் வி  சேகர்  , மோகன்  நடித்த  சகாதேவன் மகாதேவன் , ஆர்  பார்த்திபன்- கவுண்டமணி   நடித்த  வீ ஆர்  நாட்   டாட்டா-பிர்லா   ஆகிய படங்கள்  உங்களுக்குப்பிடிக்கும்  என்றால்  இதுவும்  பிடிக்கும்

ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன்  ஒரு  பேங்க் கேஷிய்ர். பணி  புரியும்  இடத்தில் 25  ல்ட்சம்  ரூபாய்  கேஷ்  ஷார்ட்டேஜ். உடண்டியாக  பணம்  ரெடி  பண்ண  வேண்டும். அவரது  மனைவி    வீட்டில்  இருந்த  நகைகளை  எல்லாம்  ஒரு  டுபாக்கூர்  பார்ட்டியிடம்  கொடுத்து  ஏமாறுகிறார். முதல்  மகன்  அவனது  காதலிய்டன்  நெருக்கமாக  இருந்ததை யாரோ  வீடியோ  எடுத்து  10  லட்சம்  ரூபாய்  கேட்டு  மிரட்டுகிறார்கள் . இரண்டாவது  மகன்  சூதாட்டத்தில்  ரூ  15  லட்சம்  இழக்கிறான்


  மொத்தக்குடும்பத்துக்கும்  இப்போது  உடனடி  பணத்தேவை அதனால்  பக்கத்து  வீட்டில்  திருடப்போவது , கொள்ளை  அடிக்கப்போவது  என  முயற்சி  செய்து  தோற்கிறார்கள் . 


 வில்லன்  ஒரு  தாதா . அரசியல்வாதி  ஆக  ஆசைப்படுபவன். அவனிடம்  ஒரு  கடத்தல்  சரக்கு  இருக்கிறது . அதைக்கைப்பற்ற ரெகுலராக  அவனுக்கு  வேலை பார்ப்பவர்களை  போலீஸ்  கண்காணிப்பதால்  புது  ஆட்கள்  தேவைப்படுகிறார்கள் . நாயகனின்  குடும்பத்தை  யூஸ்  பண்ணி  செய்யும்  காமெடி  கலாட்டாக்கள் தான்  மீதி  திரைக்கதை


 நாயகன்  ஆக  தேவி பிரசாத்  கச்சிதமான  காமெடியில்  கலக்கி  இருக்கிறார். அவரது  மனைவியாக  நடித்தவர் பல  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் 


மூத்த  மகனாக  நடித்தவர்  பரவாயில்லை , இளைய  மகனாக  நடித்தவர்   சுமார்  ரக  நடிப்பு 


இரு மகன்களுக்கும்  ஜோடிகளாக  வரும்  நடிகைகள்  இருவருமே  ஓக்கே  லெவல் 


வில்லன்  ஆக  வருபவர்  வில்லத்தனம்  அதிகம்  செய்யாமல்  மொக்கைக்காமெடி  செய்வது  ஒரு  ஆறுதல் 


ஸ்ரீஜனா  ஆடுஸ்மிலி தான்  படத்தின்  எடிட்டிங் . 136  நிமிடங்கள்  வரும்படி  ட்ரிம்  செய்து  இருக்கிறார். பின்  பாதியில்  ஜவ்விழுப்புக்காட்சிகள்  அதிகம் . இன்னும்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  செய்து  இருக்கலாம் 


இசையை  மூவர்  பகிர்ந்து  அளித்திருக்கிறார்கள் . இரு  பாடல்கள்  தேறுகின்றன. பின்னணி  இசை  பரவாயில்லை  ரகம் 


ராகுல்  ஸ்ரீவத்சவ்  தான்  ஒளிப்பதிவு . கச்சிதம் 


ராஜீவ்  கோசானம்  தான்  வசனம் .பல  இடங்களில்  கிரேசி மோகன்  டைப்  வார்த்தை  ஜாலக்காமெடிகள் , கவனிக்க  வைக்கின்றன.

ரவி  கோலி  தான்  திரைக்கதை முதல்  பாதியில்  கலகலப்பாகக்கொண்டு  போனவர்  பின்  பாதியில் தடுமாறி  இருக்கிறார் 

இயக்கம்  சின்ன  பாப்பிசெட்டி 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனின்  மனைவி  ஒரு  புடவைப்பைத்தியம்  என்ற  ஒரு  வரி  மேட்டரை  வைத்து  படம்  நெடுக  காமெடி களை  கட்ட  அதை  யூஸ்  பண்ணிய  விதம்  அருமை 


2  இளைஞர்களைக்கவர  நாயகனின்  இரு  மகன்களுக்குமான  இரு  வேறு  காதல்  டிராக்குகளை  சுவராஸ்யமாக  அளித்த  விதம் 


3  மெயின்  கதைக்குப்போகும்  முன்  நாயகன்  அண்ட்  கோ  ஈடுபடும்  சில்ல்றைத்திருட்டு  முயற்சிகள்  கலகல 


  ரசித்த  வசனங்கள் 


1  ஆடவே  தெரியாத  சிலுக்கு  இடுப்புல  சுளுக்குனு  சொன்னாளாம் 


2  ஃபோட்டோகிராஃபி  கத்துக்கிட்டா  பொண்ணுங்க  விழுந்திடும்னு  எந்தப்பரதேசியோ  இந்தப்பரதேசி  கிட்டே  சொல்லி  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 மொக்கைக்காமெடிப்படத்தில்  லாஜிக்ஸ்  பார்க்க  நினைத்தால்  படத்துக்கே  போகக்கூடாது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ  (  காட்சி  ரீதியாக  18+ இல்லை  ஆனால்  வசனத்தில்  லைட்  க்ரீன்  உண்டு சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மொக்கைக்காமெடிப்பட  ரசிகர்கள்  தாராளமாகப்பார்க்கலாம் . ரேட்டிங்  2.5 / 5 


Narayana & Co
Directed byChinna Papisetty
Story byRavi Goli
Dialogue: Rajiv Kosanam
Produced byPapisetty Brothers
Sudhakar Komakula
StarringSudhakar Komakula
Arati
Devi Prasad
CinematographyRahul Shrivatsav
Edited bySrujana Adusumilli
Music byDr. Josyabhatla Sharma
Naga Vamshi
Suresh Bobbili
Production
companies
Papisetty Film Productions
Sukha Media
Release date
  • 30 June 2023
Running time
136 minutes
CountryIndia
LanguageTelugu

Wednesday, January 24, 2024

மை நேம் ஈஸ் ஸ்ருதி (2023) -MY NAME IS SHRUTHI - தெலுங்கு - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


மெடிக்கல்  க்ரைம்  த்ரில்லர்  படங்களில்  இதயம், கிட்னி , உட்பட  பல  உறுப்புக்களை  திருடுவது  அடிப்படையாகக்கொண்டு  பல படங்கள்  பார்த்தாச்சு. இதுல்  ஸ்கின்  தெஃப்ட்  புது  கான்செப்ட்.


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  பொண்ணுங்களை ஏமாத்தி  காதலிப்பது  போல  நடித்து  அவங்களை  அனுபவித்து  விட்டு   அவங்க  தோலை  சேல்ஸ்  பண்ணுபவன். கோடீஸ்வர  குடும்பத்தில் இருக்கும்  யாராவது  ஒரு  பெண்  தன்  உடல்  அழகைப்பேணி  காக்க  நினைத்தால்  அவரது  அதே  பிளட்  க்ரூப்  உள்ள  இளம்பெண்  கிடைத்தால்  போதும், அவங்க  தோலை  எடுத்து  ட்ரான்ஸ்ஃபர்  பண்ணிக்குவாங்க . இந்த  டாஸ்க்கை  ஏற்று  பெண்களை  கடத்திக்கொண்டு  வருபவன்  தான்  வில்லன்  


வில்லி  போதை  மருந்துக்கு  அடிமை  ஆனவள். இவள்  ஒரு  சமயம்  வில்லன்  செய்யும்  ஃபோர்ஜரி  வேலைகளைக்கவனித்து  விடுகிறாள். அதை  வைத்து  அவனை  மிரட்டி    பணம்  சம்பாதிக்க  நினைக்கிறாள் 


நாயகி  தன்  ஊரில்  இருந்து  பணி  நிமித்தம்  நகரத்துக்கு  வருகிறாள் . ந்கரில்  தன்  தங்கை  வீட்டில்  முதலில்  தங்குகிறாள் . தங்கை  புதிதாகத்திருமணம்  ஆனவர் .அதனால்  தம்பதிக்கு  இடைஞ்சல்  ஆக  தான்  இருக்க  வேண்டாம்  என  எண்ணி  வேறு  ஒரு  தோழியுடன்  ஒரு  அபார்ட்மெண்ட்டில்  தங்கி  பணிக்கு  செல்கிறாள் 


நாயகிக்கு  ஒரு  காதலன்  உண்டு .அவனை  தன்  தோழிக்கு  ஒரு  முறை  அறிமுகப்படுத்தி  விடுகிறாள் . ஒரு  நாள் .  பணி  முடிவடையும்  முன்பாகவே  வீட்டுக்கு  வர  வேண்டிய  தேவை  ஏற்பட்டதால்   நாயகி  வீட்டுக்கு  வர  அங்கே  நாயகியின்  காதலன்  நாயகியின்  தோழியுடன்  சரசத்தில் இருக்க  சத்தம்  போடாமல்  வந்த  சுவடு தெரியாமல்  நாயகி  கிளம்பி  விடுகிறாள் 


 இதற்குப்பின்  நாயகி  செய்தது  என்ன? வில்லன், வில்லி , நாயகி  மூவருக்கும் என்ன  தொடர்பு ? என்பதை  ,மீதி  திரைக்கதையில்  காண்க 


 நாயகி  ஆக  ஹன்சிகா  மோத்வானி  கொழுக்  மொழுக்  என  இருக்கிறார். ஆனால்  பச்சைக்கிளி  முத்துச்சரம்  ஜோதிகா  போலவோ , படையப்பா  நீலாம்பரி  ரம்யா  கிருஷ்ணன்  போலவோ , மன்னன்  விஜய சாந்தி  போலவோ  அவரால்  வில்லித்தனம் காட்ட  முடியவில்லை . குழந்தை  முகம்  அவருக்கு 


போலீஸ்  ஆஃபீசர்  ஏசிபி  ஆக  முரளி  சர்மா  கம்பீரமான  நடிப்பு .வில்லனின்  ஓனர்  எம் எல்  ஏ  குரு மூர்த்தி  ஆக  ஆடுகளம்  நரேன்  சரியான  வில்லத்தன  நடிப்பு 


சோட்டா  கே  பிரசாத்தில்  எடிட்டிங்கில் படம்  இரண்டு  மணி  நேரம்  ஓடுகிறது . மார்க்  கே  ராபின்  இசையில்  ஒரு  பாடல்  சுமார்  ரகம், பின்ன்ணி  இசை  தெறிக்கிறது . பல  இடங்களில் த்ரில்லிங்  மொமெண்ட்  தந்ததே  பிஜிஎம்  தான் 


கிஷோர்  போய்டப்பி  தான்  ஒளிப்பாதிவு . நேர்த்தியாகப்படம்  பிடித்து  இருக்கிறார்


ஸ்ரீனிவாஸ்  ஓம்கார்  தான்  இயக்கம், நான்  லீனியர்  கட்டில்  திரைக்கதை  அமைத்து  ட்விஸ்ட் அண்ட்  டர்ன்ஸ்  உடன்  த்ரில்லிங்காக  படத்தை  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1 வில்லன் , வில்லி , வில்லனின்  ஓனர்  எம் எல் ஏ ,  , எம் எல் ஏவின்  ஓனர்  எம் பி  என  படத்தில்  ஏகப்பட்ட  நெகடிவ்  கேரக்டர்கள் . எல்லோருக்கும்  முக்கியத்துவம்  கொடுத்து  அவர்களது  கேரக்டர்  டிசைனை வடிவமைத்த  விதம் குட் 


2   மெடிக்கல்  க்ரைம்  த்ரில்லர்  சப்ஜெக்ட்டில்   ஸ்கின்  தெஃப்ட்  என்ற  கான்செப்ட்டை புதுமையாக  சொன்ன  விதம் 


3  நாயகி  தன்  அபார்ட்மெண்ட்க்கு  வரும்போது  போலீஸ்  இருப்பதைப்பார்த்து  பம்மும்  காட்சிகளும்  அதைத்தொடர்ந்து  வரும்  சஸ்பெண்ஸ்  நிகழ்வுக:ளும் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  மெடிக்கல்  க்ரைம்  உலக  அளவில்  நேபாள்க்கு  அடுத்து  இந்தியாவில்  தான்  அதிகம் 

2   ஹைப்போ  பிக்மெண்ட்டேஷன்  , ஸ்கின்  கிரேஃப்டிங்   இதிலெல்லாம்  கோடிக்கணகான  பணம்  புழங்குகிறது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பணம்  கேட்டு  மிரட்டுபவன்  பணம்  இருக்கும்  பையை  ஒரு  டஸ்ட்  பின்னில்  போடச்சொல்லி  விட்டு  அவனே  வந்து  எடுத்து  மாட்டிக்குவானா?  யார்  வந்து  பையை  எடுக்கிறார்கள்  என்பதைக்கண்காணிப்பார்கள்   என்ற  அடிப்படை  அறிவு  இருக்காதா?


2  வில்லன்  வில்லத்தனம்  செய்வதையே  தொழிலாகக்கொண்டவன், ஆனால்  நாயகி  ஐ டி ஆஃபீசர். நாயகி  வில்லனை  எதிர்த்து  செய்யும்  சாக்சங்கள்  நம்பும்படி  இல்லை 


3  இருக்கற  வில்லன்கள்  போதாது  என்று  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  இன்னொரு  வில்லன்.  அவன்  நாயகி  மீது  கண்  வைக்கவில்லை , கை  வைக்கவும்  நினைக்கவில்லை  என்பது  நம்ப  முடியவில்லை 


4   துப்பாக்கி  முனையில்  ஒரு ஆளை  மிரட்டும்  நபர்  பேக்கு  மாதிரி  ட்ரக்ஸ்  யூஸ்  பண்ணி  மப்பில்  மட்டை  ஆவாரா?


5   நாயகி  வீட்டுக்கு  வரும்போது  டி வி  வால்யூம்  ஓவராக இருக்க  எங்கெங்கோ  தேடி  ரிமோட்டைக்கண்டு  பிடித்து  டி வி யை  ஆஃப்  பண்றார். அதுக்கு  பேசாம  டி வி  பிளக் பாயிண்ட்  ஸ்விட்சை  ஆஃப்  பண்ணி  இருக்கலாமே?


  அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  ( வில்லன்  சில  காட்சிகளில்  டாப்லெஸ் ஆக  வருகிறான் ) சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம். முதல்  பாதி  ஒண்ணுமே  புரியாது . பிட்  பிட்டாக  காட்சிகள்  வரும், பொறுமையாகப்பார்த்தால்  பின்  பாதியில்  புரியும் . ரேட்டிங் 2.5 / 5


My Name Is Shruthi
Release poster
Directed bySrinivas Omkhar
Produced byRamya Prabhakar
Nagendra Raju
StarringHansika Motwani
CinematographyKishore Boyidapu
Edited byChota K. Prasad
Music byMark. K. Robin
Release date
  • 17 November 2023
CountryIndia
LanguageTeluguTuesday, January 23, 2024

பெர்லின் (2023) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( ஹெய்ஸ்ட் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


20`17ல்  ரிலீஸ் ஆகி உலகிலேயே  அதிக  பார்வையாளர்களைப்பெற்ற  இரண்டாவது  வெப்  சீரிஸ்  என்ற  பெருமையைப்பெற்ற ம்ணிஹெய்ஸ்ட்  வெப்  சீரிசின்   அடுத்த   படைப்பு ., அந்த  படைப்பில்  அதிக  வரவேற்பைப்பெற்ற  கேரக்டர்  புரொஃபசர் , டோக்கியோ  இருவரும்  தான், ஆனால்  அந்த  படைப்பில்  இறந்து  விடுவதாகக்காட்டபடும்  பெர்லின்  கேரக்டர்  தான்  இந்த  வெப்  சீரிசின்  வெயின்  ஹீரோ. அந்த  கொள்ளை  சம்பவத்துக்கு  முந்தின  கதையாக  சொல்லப்ப்டுகிறது ( உலகிலேயே  அதிக  பார்வையாளர்களைப்பெற்ற முதலாவது  வெப்  சீரிஸ் கேம்  ஆஃப்  த்ரோன்ஸ்)


மொத்தம்  எட்டு  எபிசோடுகள் .ஒவ்வொன்றும் 50  நிமிடங்கள் .  ஆறரை   மணி  நேரம்  ஒதுக்கினால்  ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம், முதல் பாகம்  ஆன  மணிஹெய்ஸ்ட் அளவுக்கு  ஆக்சன்  காட்சிகள் , ட்விஸ்ட்  அண்ட்  டர்ன்ஸ்  அதிகம்   இருக்காது , கொள்ளைக்கான  திட்டமிடல் , எக்ஸ்க்யூசன், தப்பித்தல்  இவை  மட்டும்  3  எபிசோடுகளிலேயே  முடித்து  இருக்கலாம்.,  ஆனால்  ரொமாண்டிக்  போர்ஷன்ஸ்   நான்கு  ஜோடிகளுக்கு  உண்டு .  எமோஷனல்  காட்சிகளும்  உண்டு 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  கொள்ளைக்காரன். ஏலத்துக்கு  வர  இருக்கும்  நகைகளை  கொள்ளை  அடிக்க  திட்டம்  இடுகிறான். கூட  அனுபவ்ம்  வாய்ந்த  ஒரு  வயதான  நபர் , அனுபவம்  அதிகம் இல்லாத  2ஆண்கள்  , 2  பெண்கள்  உடன்  களம்  இறங்குகிறான்


நகைகளுக்கு  சொந்தக்காரன்  வீட்டுக்கு  எதிரே  இருக்கும்  ஹோட்டலில்  ரூம்  புக்  ப்ண்ணி  தங்கும்  நாயகன்  அவனைக்கண்காணிக்கும்போது  அவனது  மனைவியின்  மீது  பார்வை  படுகிறது . காதலிக்கிறான். அவளும்  தான்


திட்டமிட்டபடி  கொள்ளை  சம்பவம்  முடிகிறது . நாயகனின்  கள்ளக்காதலியின்  கணவன்  மீது  பழி  விழுகிறது ஒரு  கட்டத்தில்  கள்ளக்காதலிக்கு  தன்  கணவன்  நிரபராதி , காதலன்  தான்  குற்றவாளி    என  தெரிய  வருகிறது . இதற்குப்பின்  நிக்ழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 

நாயகன்  ஆக  பெட்ரோ  அலோன் சோ  நடித்திருக்கிறார். பேருல தான் அலோன். இவர்  எப்போதும்  ஏதாவது ஒரு  பெண்ணுடன்  தான்  இருக்கிறார். மூன்றாவது  மனைவி  டைவர்ஸ்  கேட்ட  பின்  அடுத்த  நாளே  ஒரு  காதலியைப்பிடித்து  விடுகிறார்.நம்ம  ஊர்  ஜெமினி  கணேசன்,  கமல்  ஹாசன் , கார்த்திக், சிம்பு  இவர்களுக்கெல்லாம்  முன்னோடி  போல 


இவரது  கள்ளக்காதலியாக  வ்ருபவர்  அழகான  சிகை  அலங்காரம்,  பிரமாதமான  உடை  அலங்காரம்  என  கலக்குகிறார்


கண்னாடி  அணிந்த  கூச்ச  சுபாவம்  உள்ள  பெண்ணாக  வருபவர் சிஸ்டம்  ஹேக்  செய்வதில்  நிபுணி . இவரது  ரொமாண்டிக்  போர்சன்  செம, 


நீ  அவளுக்கு  கார்டியன், அப்பா  மாதிரி  இருந்து  பார்த்துக்கோ  என்று  சொல்லப்படும்  ஆள் , அவரது  கேர்ள்  ஃபிரண்ட்  இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  குட் 


கொள்ளைக்கூட்டத்தில்  வயதான  நபர்  ஆக  வருபவர்  மனைவி  பிரேக்க்ப்  சொன்னதும்  எதேச்சையாக  அவருக்கு  ஒரு புது  ஜோடி  கிடைப்பது  கலகலப்பு 


கேசை  துப்ப்றியும்  மூன்று  பெண்  போலீஸ்களும்  செம. . ஆனால்  பெரிதாக  எதுவும்  சாதிக்க வில்லை 


அலெக்ஸ்  பினா , எஸ்தர்  மார்ட்டினஸ்    இருவரும்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்கள் 


ஒளிப்பதிவு, பின்னணி  இசை,, ஆர்ட் டைரக்சன்  போன்ற  டெக்னிக்கள்  அம்சஙகள்  சிறப்பு 

 

சபாஷ்  டைரக்டர்


1  கண்காணிப்புக்கேமரா  பொருத்தப்போன  இடத்தில்  நாய்  ஒன்று  குலைக்க  ஒரு  பந்தை  எடுத்து  வீசி  அதை  பிடித்து  வர  ட்ரெய்னிங்  கொடுப்பது  போல  நாயை  டைவர்ட்  பண்ணும்  காட்சி 


2  செக்யூரிட்டி  தன்  மூன்று  நாய்களுடன்  கொள்ளையர்கள்  இருக்கும்  அறைக்கு  வர  ஒரே  வினாடியில்  அனைவரும்  வெவ்வேறு  இடத்தில்  ஒளிந்து  கொள்வதும் , அவன்  வந்த  வேலையை  முடித்துச்செல்லும்  வரை  டெம்ப்போ  ஏற்றும்  காட்சிகள் 


3 கண்காணிப்புக்கேமரா பதித்து  வரும்  ஆட்கள்  தங்கி  இருக்கும்  அறையில்  அவர்களுக்குத்தெரியாமல்  ஒரு  கண்காணிப்புக்கேமரா வை  வைத்து  நாயகன்  அவர்களையே உளவு  பார்ப்பது  எதிர்பாராத  ட்விஸ்ட் 


4 இவங்களே  பாம்  வைப்பாங்களாம், இவங்களே  எடுப்பாங்க;ளாம்  என்பது  போல  நாயகன் அண்ட்  டீம்  சுரங்கப்பாதை  தோண்டும்  முன்  அந்த  இடத்தில் இவர்களே  ஒரு  தங்கக்கப்பை  புதைத்து  விட்டு  ஃபாதர்  கண்  முன்  அதைத்தோண்டி  எடுத்து  சிலாகிப்பது  செம  சீன்

5  ஃபாதரிடம்  இருந்து  அந்த  தங்கக்கோப்பையை  கவர்ந்து  செல்ல  பைக்கில்  நடக்கும்  சேஸ்  சீன்  அதகளம் 


6 கார்  பார்க்கிங்  ஏரியாவில்   ஃபாதரின்  அடியாட்கள்  கவனத்தை  திசை  திருப்ப  பார்க்கிங்கில்  இருக்கும்  பல  கார்களை  தட்டி  விட்டு  சைரன் ஒலி  எழுப்பச்செய்து  தப்பிக்கும்  காட்சி  நல்ல  ஐடியா


7 [போலீசை  திசை  திருப்பி  சுரங்கப்பாதை  வழியே  தப்பிக்க  ஸ்பீக்கர்  செட் பண்ணும்  ஐடியா  சூப்பர் 


8  கார்  திருடும்  காட்சி  கலக்கல் 


9  போலீசின்  கவனத்த  திசை  திருப்ப  அஸ்தி  ஜாடி  ஐடியா  குட்  ஒன் 


  ரசித்த  வசனங்கள் 


1   உலகத்துல   இரண்டே  விஷயங்கள்  தான்  ஒரு  மோசமான  நாளை  அற்புதமான  நாளா  மாற்ற  முடியும்  1  காதல் 


2   காதலின்  முக்கியமான  உபயோகம்  என்னான்னா  நம்ம  கிட்டே  இருக்கும்  அற்புதமான  ஆற்றலை  வெளியே  கொண்டு  வரும் 


3  ஒருத்தன்  கூட  பழகும்போதே   அவன்  எக்ஸ்பயரி  டேட்  என்ன?னு  தான்  பார்ப்பேன், அது  அவன்  நெற்றியில்  எழுதி  ஒட்டி இருக்கும் 


4  நம்ம  ஆசை  எல்லாம்  முடிஞ்ச  பிறகும்  தொடர்ந்து  அதே  அன்பு  இருக்கறதுதான்  லவ் 


5  ஒரு  பெண்ணை  நமக்குப்பிடிச்சுப்போச்சுன்னா  அவளைப்பற்றி  எல்லாமே  தெரிஞ்சுக்க  நினைப்போம். ஒரு  க்யூரியாசிட்டி 


6  இந்த  உலகத்தில் 4000  மில்லியன்  பெண்கள்  இருக்காங்க . ஒருத்திக்காக  அந்த  ரிஸ்க்கை  எடுக்கத்தேவை  இல்லை 


7  வாழ்க்கையின்  போக்கையே  மாற்றி  அமைக்கக்கூடிய  இரண்டு  விஷயங்களில்  ஏதோ  ஒன்றைத்தான்  நான்  தேர்ந்தெடுக்கனும்  1  பணம்  2  காதல் 

8  காதல்  ஜெயிக்குதா? தோற்குதா? அதைப்பற்றி  யாருக்கும்  கவலை  இல்லை ,ஆனா  நாம  வாழ  அது   மட்டும்தான்  காரணம் 


9இந்த  உலகத்தில் 4000  மில்லியன்  பெண்கள்  இருக்காங்க  அவங்களில் நமக்குப்பிடிச்ச ஒரு  ஆளைத்தேர்ந்தெடுப்பது  எவ்ளோ  பெரிய  ரிஸ்க் 

10தூக்கம்  வராம  புரண்டு  புரண்டு  படுத்துட்டு  தவிப்பவர்கள்  இந்த  உலகத்துல  நிறைய  பேர்  இருக்காங்க 


11 நேரம்   ரொம்பக்கம்மி , ஆனா  ரிஸ்க்  அதிகம்

 ரிஸ்க்  அதிகம்  இருக்கும்போதுதான்  ஒரு  வேலையைக்கச்சிதமா  முடிக்க  முடியும்


12 ஒரு  ரிலேஷன்ஷிப்  நல்ல  மொமெண்ட்ல போய்க்கிட்டு  இருக்கும்போது  அதில்  தோல்வியும்  வரும் 


13 ஒருவர்  வாழ்க்கையில்  காதல்  புயல்  போல  வரும்போது  வேற  எதுவும்  குறுக்கே  வர  முடியாது 


14  ஒரு  போட்டியில் எதிராளியே  இல்லாமல்  ஜெயிப்பதில்  எனக்கு  உடன்பாடு இல்லை 


15  ஆம்பளையா இருக்கறவன்  சென்சிட்டிவா  இருப்பது  கடினம் 


16    வந்து  வந்து  போக அது  என்ன  காதல் ? உண்மையான  காதல்  எப்பவும்  இருக்கனும் 


17   உன்   வேலையையும், காதலையும்  எப்பவும்  மிக்ஸ்  பண்ணாதே


18  செல்ஃப்  கண்ட்ரோல்  என்பது  அமைதியாக  இருப்பது . யாருடனும்  ஆர்க்யூ  பண்ணாமல் இருப்பது 


19   என்னை  மாதிரி   ஒருவனுக்கு  உன்னை  மாதிரி  ஒருத்தி  கிடைப்பது  கோடியில்  ஒருவனுக்குத்தான்  கிடைக்கும்


20  காதலுக்காக  வாழ்வது  மட்டும்  தான்  உண்மையாக  இருக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன்  தன்  ரூமைக்காலி  பண்ணும்  வரை அ ந்த  கண்காணீப்பு  டெலஸ்கோப்பை  அகற்றாமல்  வைத்திருப்பது  ஏன்?  ரொம்ப  டேஞ்சர் . ரூம்  டூப்ளிகேட்  கீ  ஹோட்ட்ல்   மேனேஜரிடம்  இருக்கும்,  வந்து  ஓப்பன்  செய்து  பார்த்தால்  ஆபத்து 

2   கானகத்தில்  கூடாரம்  அடித்து  தங்கும்  போது  கண்னாடிக்காரப்பெண் இருட்டில்  ஒதுங்குவதும், பாம்பு  கடிப்பதும்,  அவளைக்காதலன்  காப்பாற்றுவதும்  காதில்  பூச்சுற்றல்

3   ரேஸ்  கார்  போர்சன்  ஜவ்வு  இழுப்பு  , மெயின்  கதைக்குத்தேவை  இல்லாதது


4  டிரக்கின்  மேலே  தார்பாய்க்கு  அடியே  ஒளிந்து  போலீசின்  கண்ணில்  மண்  தூவுவது  சுவராஸ்யமாக  இருந்தாலும்  நம்பகத்தன்மை  இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ காட்சிகள் , வசனங்கள்  உண்டு சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மணி ஹெய்ஸ்ட்  ரசிகர்கள்  பார்க்கலாம், அந்த  அலவு  கலக்கல்  இல்லை  என்றாலும்  ஓக்கே  ரகம்  , ரேட்டிங்  3/ 5 


Berlin
SpanishLa casa de papel: Berlín
Created byÁlex Pina
Esther Martínez Lobato
Starring
Opening theme"Bullets and Flowers"[1] by Francis White (ft. Nikki Garcia)
Country of originSpain
Original languageSpanish
No. of seasons1
No. of episodes8[1]
Production
Executive producersÁlex Pina
Esther Martínez Lobato
Albert Pintó
Cristina López Ferraz
Production locations
Spain[1]
France[1]
Camera setupSingle-camera
Running time58-61 minutes
Production companyVancouver Media[1]
Original release
NetworkNetflix
Release29 December 2023
Related