Sunday, January 10, 2016

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »
காலை 11.30 மணி
Pioneer Heroes/ Pionery-geroi Dir.:Natalya Kudryashova Russia| 2015| 116’
1987-ல் ஒலேகா நகரைச் சேர்ந்த கத்யாவும் ஆந்த்ரேயும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்கள் இருவரும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர்கள். அவர்களின் பிற்கால வாழ்க்கையில் எல்லாமும் மாறிவிடுவதை இப்படம் காட்டுகிறது.


30 வயதைத் தொடும் அவர்களில் காத்யா ஒரு நடிகையாக இருக்கிறாள். அவள் திருமணமான இளைஞனை காதலிக்கிறாள். ஆந்த்ரே ஒரு அரசியல் விமர்சகனாக இருக்கிறான். தன்னுடைய வேலைச்சுமையிலிருந்து விடுபட வீடியோ விளையாட்டை நாடுகிறான். அவர்கள் இப்போதுள்ள தங்கள் நாட்டில் காணும் உண்மை இயல்பு வேறாகயிருக்கிறது.

மதியம் 2.00 மணி
Short Skin/ Dir.:Duccio Chiarini Italy| 2014| 86’
தனது நெருங்கிய தோழியை இரவுபகலாக நினைத்துக்கொண்டிருப்பவன் அவன். அவனுடைய தந்தையும் அவனுடைய தங்கையும் தொடர்ந்து பாலியல் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால் எட்வார்டோ ஒரு நுட்பமான பிரச்சனையில் இருக்கிறான். அவனுக்கு பாலியல் என்பது ஒரு மெல்லிய புண்ணாக இருக்கிறது. சுய இன்பம் அனுபவிப்பது கூட வேதனையான ஒன்றுதான் அவனுக்கு.


பல்வேறு தயக்கங்கள் அச்சங்களுக்குப் பிறகு ஒருவழியாக அறுவை சிகிச்சை ஒத்துக்கொள்கிறான். பிறகு அவனிடம் மாற்றம் ஏற்படுகிறது. அவனது விருப்பத்தை உணர்ந்த அவனது ரகசிய காதலி பியான்கா அவனை வெளியில் ஒரு இடத்திற்குச் செல்ல அழைக்கிறாள். இருவரும் செல்கின்றனர். அங்கு அவனது முயற்சி தோல்வியில் முடிகிறது. ஒரு மெல்லிய இதயம் படைத்த 17வயது இளைஞனின் ஆசைகளை வேதனைகளை மிகச் சிறப்பாக ஒரு கோடைக்கால காதல் கதையுடன் இணைத்து அழகாக கூறியுள்ள படம்.


காலை 4.30 மணி
Ang: Danpat Insaeng Iyagi/ Dir.: Naomi Kawase Japan| 2015| 113’
செண்டாரோ டொராயாகீஸ் என்ற இனிப்பினை தயாரிக்கும் சிறிய பேக்கரியை நடத்தி வருகிறான். டோகு என்ற ஒரு வயதான பெண்மணி அவனுக்கு உதவுவதாக வரும்போது வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொள்கிறான். ஆனால் அந்தப் பெண்மணி தயாரிக்கும் அன் என்ற உணவு வகை சுவை மிகுந்ததாக இருப்பதால் செண்டாரோவின் வியாபாரம் செழிக்கிறது. அதே நேராத்தில் செண்டாரோவும், டோகுவும் தங்களது கடந்த கால வாழ்க்கையைப் பற்றியும் வலியைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கின்றனர்.


உட்லண்ஸ் மாலை 7.00 மணி
Embrace of the Serpent/ El abrazo de la serpiente Dir.: Ciro Guerra Colombia| 2015| 125’
இத்திரைப்படம் 1909 மற்றும் 1940 ஆகிய இரு காலகட்டத்தில் நடைபெறும் இரு கதைகளை கூறுகிறது.அமேசானிய மதகுருவும் அவரது பழங்குடி இனத்தில் கடைசியாக உயிர்பிழைத்திருப்பவருமான கரமகாத்தே பற்றிய இருவேறு காலகட்ட கதைகள் அவை. ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி, ஒரு அமெரிக்க விஞ்ஞானி ஆகிய இருவரோடு அவர் அமேசான் காடுகளில் யாக்ரூனா எனப்படும் ஒரு புனித முறை சிகிச்சை செய்யக்கூடிய அபூர்வ செடியைத் தேடி அலைகின்றனர். 40 வருடங்களுக்கு மேலாக அவரோடு களப்பணியாற்றிய இரு விஞ்ஞானிகள் தங்கள் நாட்குறிப்புகளைத் தழுவி எடுக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் கொலம்பியாவிலிருந்து சென்று போட்டியிட்ட படம்

த தமிழ் இந்து

0 comments: