Friday, July 21, 2017

இன்ட்டர்வ்யூ க்கு கிழிஞ்ச சட்டை பேண்ட் போட்டு வந்திருக்கே?

பிளாஸ்டிக் அரிசி மேட்டர் ஒரு வதந்தினு எப்டி சொல்றே?

ஒரு கிலோ பிளாஸ்டிக் ரேட் 80 ரூ .பொன்னி அரிசி ரூ 55,எப்டி கட்டுபடி ஆகும்?


===========

2 ஜட்ஜ் - மேரேஜே ஆகல.எப்டி அவன் உன்னை முத்தலாக் செஞ்சான்?

லேடி - அய்யோ ராமா.அவன் எனக்கு முத்த லாக் (லிப் லாக்) பண்ணிட்டான்

=========


3 OPS அணி ,EPS அணி க்கு பிடிக்காத சினிமா எது?

சரவணன் இருக்க பயமேன்?

எப்டி?
MLA சரவணன் தானே குதிரை பேரம் பத்தி வெளில சொன்னாரு?

===========

4 ஜட்ஜ்-பிளாஸ்டிக் அரிசி விஷயத்துல எப்டி மாட்னே?

கைதி-எல்லாரும் வெள்ளை பிலாஸ்டிக் அரிசி கலப்படம் செஞ்சப்போ நான் மாடர்னா கலர் பிளாஸ்டிக்


============


5 கமலுக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின்தான் தீர்க்கதரிசி.
எப்டி?
குதிரை பேரம் விஷயம் வெளி வரும்னு தெரிஞ்சு சரவணன் இருக்க பயமேன் டைட்டில் வெச்சாரே


============

6 பனை மரங்களை எல்லாம் வெட்டிட்டா கள் இறக்குவதை முற்றிலும் ஒழிச்சிடலாம்

அபாரம் தலைவரே!அதுக்குப்பதிலா குடிகாரன் தலையை வெட்டிட்டா என்ன?


===============

7 20 வயசுக்குள்ள MBA முடித்த 10 வருட மார்க்கெட்டிங் அனுபவம் உள்ள இளைஞர் தேவை.

அப்போ 10 வயசுல இருந்தே படிச்ட்டே வேலைக்குப்போறவனா இருக்கனும்


============


8 மதியம்1- 3 ஆபீஸ்ல நாங்க விளையாடிட்டு இருப்போம்.

டீச்சர் ஆகிடுங்க.காலை டூ மாலை எல்லா டைமும் விளையாடிட்டே இருக்கலாம்

=============

9 சார்.நீங்க விவசாயிக்காக குரல் கொடுத்த பேச்சு ஆல்ரெடி விஜய் TVல வேற.ஒருத்தர் பேசுனதாமே?

அதுவும் விஜய்.இதுவும் விஜய்.கூட்டிக்கழிச்சுப்பாருங்க


===========

10 வாழ்க்கை சூனியமா இருக்கேனு ஒரு மேரேஜ் பண்ணிக்கிட்டேன்

சபாஷ்.இப்போ?

சூனியக்காரி கிட்டே மாட்டிக்கிட்ட பீலிங்


=============

11 ஆண்களிடம் உள்ள கெட்ட குணமே, அவர்களை அண்ணா ன்னு கூப்பிடும் போதெல்லாம் அவர்களுக்கு காது கேக்கறதே இல்ல.

கண்ணா னு கூப்பிடுங்க.ஓடி வருவோம்


=============

12 சார்.இன்ட்டர் நெட் இல்லாமலும் படம் பார்க்கலாம்னு பொய் விளம்பரம் ஏன் பண்றீங்க?

டவுன்லோடு பண்ணும்போது மட்டும் நெட் இருந்தாபோதும்.

===========

13 தலைவரே!பெரியார் கொள்கைகளைப்பின் பற்றும் ஒரே கட்சி உங்களுதுதான்னீங்க.
ஆமா.
கட்சிக்கொடி ல ஏன் அவர் போட்டோ இல்ல?

ஏன்னா அவர் எங்க ஜாதி கிடையாது

==============

14 சார்.மக்கள் முன்னால உங்களுக்கு நடிக்க வராது னு பேசிக்கறாங்களே?

பொதுவாவே எனக்கு நடிக்க வராது


=========

15 தலைவரே! எதுக்கு அடியாளுங்களோட பேங்க் வந்திருக்கீங்க?

450 காலி இடங்கள் இருக்குனு AD வந்துச்சு.வளைச்சுப்போடலாம்னு வந்தேன்

அய்யோ.அது பணி இடம்

============


16 இந்த லவ் ஹார்ட் ஸ்மைலி கூட என் போன்ல கருப்பா தான் தெரியுது..

ஒரு வேளை பிளாக்பெர்ரி போனா இருக்குமோ?


============

17 தலைவரே!ஜனநாயகத்தைக்குழி தோண்டி புதைச்ட்டீங்களாமே?

நல்ல வேளை.நினைவுபடுத்துனே.குழி தோண்ட ஆன செலவு னு 10லட்சம் கணக்கில் எழுதனும்


============


18 5 ம் வகுப்புப்பாடத்திட்டத்துல உங்களைப்பத்தி வந்திருக்கு.

ஓட்டுப்போடும் வயசு வர
8 வருசம் ஆகும்.அதுக்குப்பின் தான் நான் அரசியலுக்கு வரனும்


==============

19 இன்ட்டர்வ்யூ க்கு கிழிஞ்ச சட்டை பேண்ட் போட்டு வந்திருக்கே?

மேலே போட்டிருக்கற டிரெசை விட உள்ளே போட்டிருக்கும் இன்னர்ஸ் தான் தரமா இருக்கனும்


============


20 DR.தலைல ஒரு நரைமுடியை பிடிங்கனாலே பல நரைமுடிகளா வருமாமே?

அதுக்காக எல்லா நரை முடியையும் பிடுங்கினா சொட்டை தான் வரும்

==============

Wednesday, July 19, 2017

சார்.விவசாயிகள் போராட்டம் பண்ணும்போது குரல் தராம இப்ப வாபஸ் வாங்குனபின் குரல் தர்றீங்க?

யுவர் ஆனர்.இந்த படைப்புக்கு காப்பிரைட்ஸ் வேணும்

இது உங்க சொந்தப்படைப்பா?
இல்லை.FBல காப்பி செஞ்சது.அதுக்கு காப்பிரைட்ஸ் வேணும்


============

2 லோன் அப்ளை செய்யறப்ப பேங்க் மேனேஜர் முன் அம்பியாய் இருந்தே.செலவு செய்யும்போது ரெமோவா மாறிட்டியே?

லோன் ட்யூ கட்டச்சொன்னா அந்நியன் ஆகிடுவேன்

============

3 கடுகளவு கூட பயனில்லாமல் இருக்கும் அதிமுக அரசு-ஸ்டாலின் # கடுகை குறைச்சு மதிப்பிட்டுட்டார்னு விவசாயிகள் அவதூறு வழக்கு போட்டுடப்போறாக

============


4 தலைவரே! உங்க மகனை எல்லாரும் பிளாஸ்டிக்கின் செல்வன்னு கூப்பிடறாங்களே ஏன்?

பொன்னியின் செல்வன் தான் வெச்ச பேரு.கூட்டணி சகவாசம் சரி இல்ல

=============

5 ஜட்ஜ் - காந்தி யை விமர்சனம் செஞ்ச குற்றத்துக்காக 6 மாசம் தண்டனை

கைதி - யுவர் ஆனர்.காந்தி படத்தை விமர்சனம் பண்ணுனது அவ்ளோ பெரிய தப்பா?


==============


6 டியர்.எம்புட்டு இருக்குது ஆசை பாட்டை கேட்டப்போ என் நினைப்பு வந்ததா?

க்யூட் புஷ்பா = புட்டு நினைவு தான் வந்தது.குழாப்புட்டா?உதிரிப்புட்டா?

==========
7  ஜட்ஜ்-பிளாஸ்டிக் அரிசி என்ன தைரியத்துல விக்கறே?

கைதி-ஆதார் அட்டை இருக்கு.18%GSTவரி கட்றேன்.இந்த தைரியத்துலதான்


============

8 2ஆம் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு.க்கு ஏன் போகலை.

இப்போ தான் நான் எழுதறதில்லையே?டைப் தானே?


============


9 எனக்கெல்லாம் சோறு கண்ட இடமே சொர்க்கம்

அப்டியா ?அப்போ குழம்பு,ரசம்,தயிர் கண்ட இடம் என்னவா இருக்கும்?

===========

10 MLAக்கள் விலை போய்ட்டதா சொல்றாங்களே?

எங்கள் ஆட்சியில்தான் ஒரு MLA வின் விலை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.இதையும் சாதனையில் சேர்க்கவும்

=========

11 தலைவரே! ஜெனிவா மாநாட்டில் நீங்க கலந்துக்கிட்டதா வந்த நியூஸ் பொய்யாமே?
ஜெனிலியா நாட்டிய நிகழ்ச்சில கலந்துக்கிட்டேன்.தப்பா நியூஸ் போட்டுட்டாக


============

12 தலைவரே! ஐ டி விங் 1 திடீர்னு உருவாக்கி இருக்கீங்களே?இது எதுக்கு?

ஐ டி ரெய்டு வராம தற்காத்துக்க இது அப்பப்ப ஐடியா தரும்


=============

13 எங்கள் ஆட்சியில்தான் தினசரி பிரேக்கிங்நியூஸ் வந்து கொண்டே இருக்கிறது.மக்களை எப்போதும் ஒரு பரபரப்பிலேயே வைத்திருப்பதும் எம் ஆட்சியின் சிறப்பு


==============

14 சிஷ்யா! எவரெஸ்ட் ஏறனும்னு நினைச்சா முதல்ல நீ ஊட்டி தொட்டபெட்டா ஏறனும்

குருவே! அதெப்டி?நேபாளம் போனாத்தானே இமயமலை பக்கம்?

==============

15 சிஷ்யா! வாழ்க்கைல எப்பவும் நீ பின் வாங்கவே கூடாது.

குருவே! பின் நெம்பர் வாங்கலைன்னா ATM கார்டு எப்டி யூஸ் பண்ண?


==============16 புது ஆப்பிள் போன் கீழே விழுந்து அடி பட்டுடுச்சு.எப்டியாவது செகண்ட்ஸ் ல வித்துடனும்

காஷ்மீர் ஆப்பிள் போன் னு சொல்லி வித்துடு.

===========


17 நெல்லை சாகுபடி செய்ய என்ன என்ன செய்யனும்?

முதல் கட்டமா நெல்லை(திருநெல்வேலி) போகனும்


==========

18 அவரோட ரைட்டிங்ஸ் பத்தி சொல்லுங்க

பெரும்பாலும் தப்பான விஷயத்தைத்தான் எழுதுவாரு
அப்போ ராங் கிங் னு சொல்லுங்க

=============

19 ஜட்ஜ் - ஆட்சியை தக்க வைக்க குதிரை பேரத்துல ஈடுபட்டீங்களா?

யுவர் ஆனர்.கோடிக்கணக்குல பணம் இருக்கு.நான் எதுக்கு பேரம் பேசனும்?


============


20 சார்.விவசாயிகள் போராட்டம் பண்ணும்போது குரல் தராம இப்ப வாபஸ் வாங்குனபின் குரல் தர்றீங்க?

அப்போ ஷூட்டிங் ல பிசி.முதல்ல தொழில்


==============

சம்பவம் நடந்த அன்னைக்கு ராத்திரி எங்கே இருந்தே?

தலைவரே!பகுத்தறிவுப்பாசறை ல இருந்து வந்துட்டு கட்சிப்பிரமுகர் வீட்டு விசேசத்துல கடவுள் படம் இருக்கே?


அப்போக்கூட தமிழ்க்கடவுளை வைக்கலை==============

2 சார்.உங்க படத்துக்கு ஏன் செம னு டைட்டில் வெச்சிருக்கீங்க?


தியேட்டர்ல என்ன படம் ஓடுது?னு கேட்டா செம படம் ஓடுது னு ஜனங்க சொல்வாங்க இல்ல?============

3 ஸார்.உங்க படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டர் FALLING DOWN படத்தோட காப்பியாமே?


மாடர்ன் கொலம்பஸ்கள் DOWN DOWN==============

4 லைப்ல முதல் தடவையா குங்குமத்துல இவ்ளோ பெரிய பொட்டு வச்சிருக்கன்


ஓஹோ.அடுத்ததா குமுதத்துல .விகடன் ல கல்கி ல வைப்பீங்களா?


=============

5 நயகரா நீர் வீழ்ச்சிக்கு ஒரு காதணி விழாவிற்கு செல்லும் வழியில் விமானத்தில் பறந்தபோது எடுத்த pic இது


காது குத்து FB பாலோயர்சுக்கா?=============

6 பொண்ணு பார்க்க வந்த மாப்ளை ஏன் தலை தெறிக்க ஓடறாரு?


பொண்ணு தனுஷ் ரசிகையாம்.அவர் தாலி எடுத்துக்கொடுக்கனுமாம்==============


7 புரோட்டா எல்லாம் லாக்கர்ல வைக்க ஒரு பேங்க் இருக்காம்


டேய்.அது பேங்க் ஆப் பரோட்டா இல்ல.பேங்க் ஆப் பரோடா============


8 பாகிஸ்தான் மேல் காட்டும் ஆக்ரோசத்தை இலங்கை மீது காட்டுவதில்லை ஏன்?


ஏன்னா பாகிஸ்தான் தானே சானியாமிர்சாவை மருமகள் ஆக்கிக்குச்சு=


===========


9 மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்கு பிடிக்காது.."ங்கற கவிதை வரி தப்பு


எப்டி?
அனிரூத்,தனுஷ் க்கெல்லாம் ரசிகைகள் கொள்ளைப்பேரு இருக்காங்க இல்ல?


================

10 குருவே! கருணை யின் பிறப்பிடம் எது?


சிஷ்யா! கருணை(மலர்),பனி(மலர்)எல்லோர் பிறப்பிடமும் அவங்கவங்க சொந்த ஊர் ஹாஸ்பிடல்தான்==================


11 மிஸ்.கோதுமை தோசை மெரூன் கலர்லதானே இருக்கும்?மஞ்சள் கலர்ல இருக்கே?


மங்களகரமா இருக்கட்டும்னு மாவுல மஞ்சள் தூள் சேர்த்துட்டோம்============

12 அத்தனை இசை கருவிகளும் கையாள தெரிந்தால் மட்டுமே எனை இசைக்க வா


கையாளப்பிறந்தவன் அப்போ இளையராஜா,ரஹ்மானாத்தான் இருக்கும்.=============

13 ஜெ-சசி என்ன வித்யாசம்?


ஜெ ஒண்டர் விமன்,சசி ஜெ நிழலுக்குப்பின் ஒண்டற (ஒளிந்து கொள்ளும்) விமன்=============


14 டியர்.இங்கே என்ன சொல்லுது?ஜெஸ்ஸி ஜெஸ்ஸி னு சொல்லுதா?


இல்ல.எதிர்காலத்துல எல்லாமே ஜெர்சி ஜெர்சி னு சொல்லுது.நாட்டு மாடு இனமே அழியப்போகுது
===============15 மன்னா! நாட்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடப்பதாக ,FB ல் தகவல் பரவுது.விற்பனையாளனை.விட்டுடுங்க.
விழிப்புணர்வு ஏற்படுத்துபவரை கைது செய்ங்க==============

16 டீச்சர்.குறும்பு க்கு சின்ன ரு வருமா?பெரிய று வருமா?


சின்னக்குறும்பு,சில்மிசக்குறும்பு,பெரிய குறும்பு எல்லாத்துக்கும் ஒரே று தான்.===============

17 அவங்க, அவங்க கஷ்டம்

அவங்களுக்கு தான தெரியும்..
இல்ல.இப்பவெல்லாம் FB ல ஷேர் பண்ணிடறதால ஊருக்கே தெரியும்.===============


18 சம்பவம் நடந்த அன்னைக்கு ராத்திரி எங்கே இருந்தே?
சம்பவம்சம்பவம்னு சொல்றாகளே அது நம்ம வாழ்க்கைல எப்போ நடக்கும்?னு மொட்டைமாடில நின்னு யோசிட்டு


===============

19 டாக்டர்.ஹாஸ்பிடல்ல எதுக்கு இத்தனை அரிசி மூட்டை அடுக்கி வெச்சிருக்கீங்க?


பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்ல?==============

20 பட்டையைக்கிளப்பிட்டார் னு ஊரே பாராட்டுது.எதுக்காக கைது பண்றீங்க?
அவரு கடைல இருந்த 100 கிலோ பட்டை கிராம்பை கிளப்பிட்டு ஆட்டையைப்போட்டுட்டார்


================

Tuesday, July 18, 2017

ரஜினி.வீட்ல ரெய்டு வருமாமே?மாட்டிக்குவாரா?

1  தலைவரே! உதய சந்திரன் சொன்னபடி ரேங்க் சிஸ்டத்தை ஒழிக்கப்போறீங்களாமே?


ஆமா.உதய சூரியன் தான் ஆகாது.


================


2 உங்க படத்துல புதுமையான கதைக்கரு வாமே?


ஆமா.முறைப்பொண்ணை ஒருதலையா காதலிக்கும் தறுதலையின் கதை


================

3 SBI(STATE BANK OF INDIA)

SIB(SARAVANAN IRUKKA BAYAM EAN) என்ன வித்யாசம்?
எதுக்கெடுத்தாலும் FINE போட்டா SBI,மொக்கை போட்டா SIB

===================

4 டீச்சர்.என் பையனுக்கு கணக்கு சுட்டுப்போட்டாலும் வராது.மன நலனும் சரி இல்லை.படிப்பு வருமா?


ஜட்ஜ் ஆகலாமே?


==================

5 மைசூர்பாக் கை சாப்பிடும்போது கை தவறி மண் ல.விழுந்திடுச்சு


ஓ.மைசூர் பாகு பலி னு சொல்லுங்க==================


6 மிஸ்! உங்க ட்விட்டர் ஹேண்டிலுக்கு லாரி மேகக்குழலி ன்னு பேர் வெச்சிருக்கீங்க்ளே?ஏன்?


கார் மேகக்குழலி யை விட நான் வசதியானவ==================

7 முஸ்லீம் பொண்ணை லவ் பண்ணா அது நம்மை அலைய வைக்கும்னு எப்டி சொல்றே?


அவங்க வீட்டு.வாசல்ல "அஸ்லாம் அலைக்கும்" னு இருந்துதே?


=================

8 தலைவரே! இந்து கடவுளை உங்க பகுத்தறிவு நக்கல் பண்ணுது


ஆமா
ஆனா உங்க பேரனோட சினிமா டைட்டிலுக்கு மட்டும் இந்து கடவுள் பேரு தேவைப்படுது?=================

9 பிரபல ட்வீட்டர் தமிழ்ப்பறவை கல்யாணத்துக்குப்பின் தனிக்குடித்தனம் போனது அதிர்ச்சியா இருக்கு


ஏன்?
பறவைன்னா "கூ(ட்)டுக்குடித்தனம்" தானே?


================

10 2 நாளா உன்னை எண்ணி பச்ச தண்ணி குடிக்கலையே.


ஓஹோ.அப்போ தாகத்துக்கு என்ன செஞ்சே?
லெமன் ஜூஸ்,பாதாம்கீர்,ரோஸ் மில்க்


===================

11 சார்.யூத் ஹீரோ வான நீங்க எப்டி கலைஞர் ரோல் பன்றீக?


மேஜிக் கலைஞராக தானே பண்றேன்?==================

12 சார், அவரு பைக் ஓட்ற சீனை பார்த்துத்தான் நீங்க அதே போல் சீன் வெச்சீங்களாமே?

 அவர் RTO  கிட்டே 8 போட்டுக்காட்டும்போது நான் 8 ரேஸ் ல கப் வாங்கிட்டேன்


====================


13 சார், உங்க படத்துக்கு ஃபாத்திமா இருக்க பயம் ஏன்?னு ஏன் டைட்டில் வைக்கலை?

ஃபாத்திமா இருப்பதில்தான் பயமே


===================

14  சார், நாளை தானே ஸ்ட்ரைக்னு சொன்னீங்க? ஏன் இன்னைக்கே ஆரம்பிச்ட்டீங்க?

முன் கூட்டியே ஆரம்பிக்கலாம்னு இப்பதான் ஸ்ட்ரைக் ஆச்சு

====================

15 தலைவரே! டி ஆர் படம் பார்த்துட்டு நேரா மேடை ஏறீட்டீங்களா?

ஏன்?

 Cooperation, operation, suppression-னு ஒரு தாயின் சபதம் டயலாக் எல்லாம் சொல்றீங்களே?


======================

16 நான் ஆதாரம் இல்லாம ஒரு பொய்யை சொல்லுவேன் ஆனா நீ ஆதாரத்தோட அதை பொய்யினு நிரூபிக்கனும்

இப்போ நீங்க தந்த ஸ்டேட்மெண்ட்டே ஒரு ஆதாரம் தானே?


===================

17 சுந்தர் சி புதுப்படத்துல ஒரு லீடிங் ஹீரோ கெஸ்ட் ரோல் ல வர்றாராம்

ஓஹோ.டைட்டில்?
சங்க(V)மித்ரா


================

18 நான் எப்போ அரசியலுக்கு வருவேன்னு ஆண்டவர் தான் முடிவு செய்வார்.

ஆல்ரெடி தமிழகத்தை ஆண்டவர் கலைஞர் தான்.அவர் சொன்னா வருவீகளா?


================

19 தனிக்கட்சி தொடங்கும் ஐடியா இருந்தா ரஜினி.வீட்ல ரெய்டு வருமாமே?மாட்டிக்குவாரா?

அவர் எஸ் ஆகிடுவார்.தனுஷ் தான் மாட்டுவார்

================

20 டியர்.எப்போ வீட்டுக்கு வருவீங்க?

நான் எப்போ.வருவேன் கறதை அந்த ஆண்டவன் தான் முடிவு செய்வான்


====================