Tuesday, September 29, 2020

விசாரணை(2016)– சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )


 


ஆனந்த  விகடன்  விமர்சனக்குழுவால்  61 மார்க்  வழங்கப்பட்ட  வெகு சில  படங்களில்  இதுவும்  ஒன்று  என்ற  பெருமை , ஏகப்பட்ட  விருதுகளைக்குவித்த  படம்  என்ற  பெருமை , சிறுகதை அல்லது  நாவலை  படமாக்கும் இலக்கிய ஆர்வலர்  இயக்குநர் வெற்றி மாறன் படம்   என்ற  லேபிள்  என  இத்தனை  அம்சங்கள்  பாசிட்டிவாக இருந்தும்  இத்தனை  நாட்களாக  நான் பார்க்காமல்  தவிர்க்க  மிக முக்கியக்காரணம்  இந்தப்படத்தில்  வரும்  போலீஸ்  சித்திரவதைக்காட்சிகள்  மனதளவில்  நம்மை  பாதிக்கும்  என்பதால்  மட்டுமே.

 

ஆனா  முதல்  20 நிமிடங்கள்  தான்  அப்படி . அதுக்குப்பின் கதைக்களம்  க்ரைம்  த்ரில்லராக , பொலிட்டிகல்  த்ரில்லராக   உரு மாற்றம் பெற்று  விறுவிறுப்பாக  செல்கிறது

 

ஒரு  விஐபியின் வீட்டில் ஒரு திருட்டு  நடக்குது. திருடுன  கும்பல்ல  ஒரு ஆள்  தமிழ்  பேசுனான்  என்ற  ஒரு சாட்சியின்  தகவலை  வைத்து  போலீஸ்  காய் நகர்த்தறாங்க . உண்மையான  குற்றவாளீயைக்கண்டு பிடிக்க  முடியல , ஆனா ,மேலிட  பிரஷர் . யாரையாவது   பிடிச்சு   ஃப்ரேம்  பண்ணிடலாம்னு  திட்டம்  போடறாங்க

 

ஹீரோவும், அவர்  நண்பர்கள்  3  பேரும்   தங்க  இடம் இல்லாமல்  ஒரு பார்க்கில்  தங்கி  இருக்காங்க . பகலில்  வேலை , இரவில்  பார்க்கில்  தங்கல்.  ஒரு பெரிய  பங்கலாவில்  வேலை  பார்க்கும் ஒரு பொண்ணுக்கும்  ஹீரோவுக்கும்  பழக்கம்  ஆகுது . எங்க  வழக்கமான  லவ் ஸ்டோரியா கொண்டு போவாங்களோ?னு பயந்திருந்தப்ப  டக்னு  கதை  டிராக்  மாறுது

 

 போலீஸ்   அவங்க  4 பேரையும்  கொத்தா  அள்ளிக்கிட்டுப்போய் ஸ்டேஷன்ல   வெச்சு  விசாரிக்கறாங்க . இவங்க எதும்  தெரியாதுங்கறாங்க .

 

பிரபலமான  அரசியல்  புள்ளியோட  ஆடிட்டர்  ஒரு கேஸ்ல  சரண்டர்  ஆகறார். கதை  வேற  கோணத்தில்  பயணிக்குது. போலீஸ்க்கு  2  டாஸ்க் , ஆளுங்கட்சி  தரப்பில்  இருந்து  இப்படி  செய்ங்க   என  ஒரு அறிவிப்பு , அடுத்த  தேர்தலில்  ஆளுங்கப்சியா  வர  வாய்ப்புள்ள  எதிர்க்கட்சி ஒரு பல்க்  அமவுண்ட்  தள்ளி  இப்படி பண்ணுங்கனு  சொல்ல  போலீஸ்  எப்படி  டபுள்  கேம்  ஆடுச்சு? அந்த  அப்பாவி இளைஞர்கள்  கதி  என்ன? என்பதை  எல்லாம்  திரையில் காண்க

 

சமுத்திரக்கனியை தான் முதல்ல  குறிப்பிடனும். பிரமாதமான  ஆக்டிங். அந்நியன்  படத்தில்  விக்ரம்  3 விதமான  உணர்ச்சிகளை   மாறி  மாறிக்காட்டுவாரே   அதை  விட டஃப் ஆன  நடிப்பு . சராசரி    போலீசாக  நடப்பது .நம்பிக்கை  துரோகம்  பண்ணும்  குற்ற  உணர்வு, உய்ற்  அதிகாரிகள்  மீது  கோபம்   என  கலவையான  உணர்ச்சிகளை  பிரமாதமாக  காட்டி இருக்கிறார் , ரகுவரன் , பிரகாஷ்  ராஜ் வரிசையில்  துல்லியமான  நடிப்பில்  இவர் கொடி  கட்டிப்பறக்கிறார்

 

அடுத்த  நடிப்பு  ஆடிட்டராக  வரும்   கிஷோர் . கெத்தாக  வரும்  அவரின் மிடுக்கு , பின்  போலீஸ்  விசாரணையில்  ஆட்டம்  காண்பது.  தர்ட்  டிகிரியில்  விசாரிக்கப்படும்போது  அதிர்ச்சி  காட்டுவது  எல்லாமே  கலக்கல்  நடிப்பு

 

அடுத்ததாக  நாயகன்  அட்டக்கத்தி  தினேஷ். பார்ப்பவர்கள்  மனதில்  பரிதாபம்  ஏற்படுத்தும்  கேரக்டர் .  நண்பர்கள்  அடி வாங்கக்கூடாது  என இவர்  காட்டும்  முனைப்பு அருமை , பின் பாதியில்   மாறுபட்ட  நடிப்பு

 

பல்  உடைந்தவராக   வரும் நன்பரின்  நடிப்பு  நெகிழ  வைக்கிறது, ரொம்ப  அப்பாவியாக  அவர் பேசுவது  உச் கொட்ட வைக்கிறது

 

 தான் சுடப்பட்டு  உயிருக்கு ஆபத்தாக  இருந்த  போதிலும்  கூட   டேய் ஓடிடுங்கடா, தப்பிச்சுடுங்க , என நண்பர்களை  எச்சரிக்கும் நப்ர்  சபாஷ்  பெறுகிறார்

 

 ஆந்திரா  போலீஸ்  ஆஃபீசரகா  மொட்டை  தலை  ஆள்  கொடூரமான  நடிப்பு

 

சபாஷ்  டைரக்டர்

 

1    லாக்கப்  என்ற நாவலின்  தழுவல் தான்  இந்த  படம்  நடந்த  உண்மை  சம்பவங்களின் தொகுப்பு . க்ளைமாக்சில்   நிஜ சம்பவ  ஆட்களை  காட்டும்போது  தியேட்டரில்  பலத்த  கை தட்டலாம்.  சந்திர குமார்  என்ர  ஆட்டோ டிரைவரின்  சுயசரிதை தான்  முதல் பாதி  கதை , பின் பாதி கதை  வேற  பக்கம்  நடந்த  உண்மை சம்பவங்களாம் 

2    போலீஸ்  ஸ்டேஷனில்  பெரும்பாலான  சம்பவங்கள்  நடப்பதால்  அங்கே  ரெகுலராக  வரும்  ஒயர்லஸ்  தகவல்  முதற்கொண்டு  துல்லியமாக  ஒலிப்பதிவு

 

3   கடமை  கண்ணியம்  கட்டுப்பாடு  படத்துக்குப்பின்  தமிழ்  சினிமாவில்  அதிகம் கெட்ட வார்த்தைகள்  இதில்  தான். தியேட்டரில்  ம்யூட்  செய்யப்பட்டாலும் நெட்  ஃபிலிக்சில்  அப்படியே  இருக்கு . அவை   காவல் துறையின்  கொடூரத்தை  பட்டவர்த்தனம் ஆக்கி இருக்கு

 

4 சமுத்திரக்கனி , கிஷோர் காம்போ காட்சிகள் , கன்வோ காட்சிகள் எல்லாமே  அருமை . என் ஸ்டேஷன்ல  இப்[படி  பண்ணச்சொல்ல  அந்த    சி யாரு? என  ஏ சி  லைனில் இருக்கும்போதே  கேட்பது  செம

 

5   அவ்ளவ்  அடி வாங்கியும்   ஹீரோ  உண்ணாவிரதம்  இருப்பதும்   கோர்ட்டில் ஜட்ஜிடம் அவர்கள்  உண்மையை  சொல்வதும்  அதுக்கு ஜக்ஜின் ரீ ஆக்சனும்

 

6  பின்னணி  இசை , எடிட்டிங்  இரண்டும்  போட்டி போட்டுக்கொண்டு   தன்  இருப்பை  வெளிப்படுத்தும்  விதம்

 

7   லாக்கப்பில்  அடிக்க  பனை  விளார்களை  போலீஸ்  கொண்டு வருவதும்  அவற்றை  ரெடி  பண்ணும்  காட்சியும்


8   ஜி வி  பிரகாஷின்  இசை  அருமை , பல  இடங்களில்  நிசப்தமாக  மவுனத்தை  கடத்திய  உத்தி  அழகு
நச் டயலாக்ஸ்


1  ஒவ்வொரு உயிரும் இந்தப் பூமிக்கு வர்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. அது போறதுக்கும் ஒரு காரணம் இருக்கணும்'


2  எத்தனை வருஷமா டிபார்ட்மென்ட்ல இருக்கீங்க, இன்னும் ‘தொழில்’ கத்துக்கலையே..!’’


3   அய்யா , ஒத்துக்கோ ஒத்துக்கோ அப்டிங்கறீங்க? எதை ஒத்துக்கனும்?


4  பேர் என்ன?''


``அப்சல்.''

``ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸா... அல்கொய்தாவா?''

``இல்ல சார்... தமிழ்நாட்ல இருந்து வந்து வேலைபார்க்கிறேன்.''

``அப்போ எல்.டி.டி.ஈ-யா?’’ -


5   ``அட சும்மா இருங்க சார்... கோட்டால உள்ளே வந்துட்டு, சிஸ்டம் புரியாமப் பேசிக்கிட்டு!’’6  `உன்னை, குற்றவாளியைக் கண்டுபிடிக்கவா சொன்னேன்... கேஸை முடிக்கத்தானே சொன்னேன்!’’


7  நீ  என்னதான்  சொல்லு , நம்ம  ஊர் போலீஸ்  ஸ்டேஷன்ல  இருப்பதும்  சுகம்தான்

8   பணம்  வெச்சிருக்கறவன்  பயப்படுவான்

9  காசை  மிச்சம்  பண்றதுக்காக   யாரும்  பார்க்ல  தங்காதீங்க , போலீஸ்ல  மாட்டிகிட்டா...


10  போலீஸ்ல  நல்ல போலீஸ்  கெட்ட  போலீஸ்  எதுவும் இல்லை, தமிழ் நாடு போலீசோ , ஆந்திரா  போலீசோ  கேசை முடிச்சா போதும்னுதான் நினைப்பாங்க 

லாஜிக் மிஸ்டேக்ஸ்

 

1        அவ்ளோ  போலீஸ்  ஆஃபீசர்ஸ்முக்கியமான  இல்லீகல்  விஷயம்  பேசும்போது  பாத்ரூமில்  வெளியாள்  இருப்பதை  கவனிக்காமல்  விடுவது  எப்படி ? 

2        பிளாட்ஃபார்ம் வாசியான  ஹீரோ  கையில்  ரிவால்வர்  கிடைத்ததும்  அதன் சேஃப்டி கேட்சை  விடுவிப்பது  எப்படி? பயப்படாமல்  குறி  வைப்பது  எப்படி?

3  போலீஸ்  ஸ்டேஷனை  க்ளீன்  பண்ணசொல்லும்போது  அடி வாங்கி  டயர்டா  இருக்கு  என  எஸ்  ஆகி இருக்கலாமே?  செய்ய  முடியாதுனு  சொன்னாத்தானே  கோபம் வரும்,  செய்யும் உடல்   தகுதி  இல்லைனு  சொல்லி இருக்கலாம்


4  பொதுவா  போலீஸ்  ஸ்டேஷன்ல  சில  குற்றங்களை ஒத்துக்கிட்டு  சரண்டர்  ஆகவே ரெடிமேடா சில  ரவுடிகள்  இருப்பாங்க , அவங்க என்ன ஆனாங்க. அவங்களை  ஃபிரேம் பண்ணிட்டா இவ்ளோ ரிஸ்க் போலீஸ்க்கு இல்லையே?

 

சி.பி   ஃபைனல் கமெண்ட் -   நெட்  ஃபிளிக்சில்  படம்  கிடைக்குது. தியேட்டரில்  பார்க்காதவர்கள்  நிச்சயம்  பார்க்கலாம்,   ரேட்டிங் 3. 5 / 5

 

 

 

 

Monday, September 28, 2020

MUNNARIYIPPU ( THE DEAD LINE 2014)-சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர்)

  

மம்முட்டி  நடிச்ச  படங்கள்லயே  படம் பூரா அண்டர்ப்ளே  ஆக்டிங்  பண்ண  ஒரே படம்  இதுதான். மற்ற படங்களிலெல்லாம்   க்ளைமாக்ஸ்  காட்சி அல்லது  ஏதோ ஒரு காட்சியிலாவது  உணர்ச்சி  பொங்க   நடிச்சிருப்பார் , எனக்குத்தெரிஞ்சு  இதுல மட்டும் தான்  ஓப்பனிங்  சீன்ல  இருந்து  லாஸ்ட்  சீன் வரை  ஒரே மாதிரி  அமைதியான  கேரக்டர்

 

நாயகி  ஒரு ஃப்ரீ லேன்ஸ்  ரிப்போர்ட்டர் . அவர்  ஒரு பார்ட்டில கலந்துக்கறார்

. அதுல  அவருக்கு  ஒரு வாய்ப்பு வருது . ஓய்வு  பெறப்போகும்    ஒரு ஜெயில்  அதிகாரி  தன்  அனுபவங்களை   சுய சரிதை  மாதிரி  எழுத  ஆசைப்படறார். அதை  எழுத  ஒரு  கோஸ்ட்  ரைட்டர்  தேவை .

 

நாயகி  அந்த  ஜெயிலரை  சந்திக்கறாங்க . எழுத  சம்மதம்  சொல்றாங்க . அப்போ  அவர்  கூடவே  இருக்கும்  ஒரு ஆள்  பற்றி ஜெயிலர்  சொல்றார்/ இவன்  பாருங்க  பேரு  ராகவன். 2  கொலை  செய்த  வழக்கில்  கைதாகி  20 வருட  ஜெயில் தண்டனையும்  முடிஞ்சிடுச்சு , ஆனா  வெளில  போக மாட்டேங்கறான். கேட்டா  வெளீல  எனக்கு  யார்  இருக்கா?  இங்கேயே  இருந்துக்கறேன்கறான்.  ஏதோ கூட மாட  ஒத்தாசைக்கு  இருக்கட்டும்னு  நானும்  சரின்னுட்டேன், இந்த  மாதிரி  பல கேஸ்ங்க பல அனுபவங்களை  கட்டுரையா எழுதனும்

 

இதுல  என்ன  ஒரு சுவராஸ்யம்னா  ராகவன்  தான் அந்த  கொலைகளை  செய்யவே இல்லைனு  சொல்றான்.  ஏன் வக்கீல்  வெச்சு  வாதாடிக்கலைன்னா நாந்தான் கொலையே செய்யலையே?    எதுக்கு  வாதாடனும்?கறான்

 

 நாயகிக்கு  அந்த  ராகவன்  கேரக்டர்  பிடிச்சுடுது. இதன் மூலம் ஒரு பர பரப்பான ஆர்ட்டிக்கிள்  ரெடி  பண்ண  முடியும்னு  நினைக்கறா.  அதே  சமயம்  இது பற்றிய  ஒரு இண்ட்ரோ   ஆர்ட்டிக்கிள்  எழுத  அது  பிரபலமான  பத்திரிக்கைல  வந்து  ஓவர்  நைட்  ஒபாமாவாக நாயகியும், அந்தக்கைதியும் புகழ்  அடைகிறார்கள்

 

ஒரு  முன்னணி  நிறுவனம்  அந்த  நாயகியுடன்  ஒரு ஒப்பந்தம்  போடுது . குறிப்பிட்ட  நாட்களுக்குள்  அந்த  கட்டுரையை  முடிச்சுக்கொடுத்துட்டா  இவ்ளோ  சன்மானம்  அப்டினு ஆஃபர்  தருது

 

 இப்போ நாயகிக்கு  ஜெயிலர்  சுயசரிதை  எழுதுவதை  விட இந்த  ராகவன்  கதை  எழுதுவதில்  ஆர்வம்  அதிகம் ஆகிடுது. நைசா  ஜெயிலரை  சமாளிக்கறா. சார் உங்க  கதையை  அப்புறம்  எழுதறேன்,  முதல்ல  ராகவன்  கதையை  எழுதறேன்கறா

 

 ஜெயிலருக்கு  ஏமாற்றம், அதே சமயம்  மீடியா நியூசால்  ஃபேமஸ்  ஆன ராகவன் பற்றி  விசாரித்து  அடிக்கடி  ஃபோன் கால்ஸ்  வருது . ஜெயிலர்  கடுப்பாகிடறார்

 

 இத்தனை  நாட்களா  நீ இங்கே  இருந்தது  போதும், கிளம்புங்கறார். இதுதான்  சாக்குனு நாயகி  தன்  கஸ்டடில  ஒரு வீடு  எடுத்து  ராகவனை  தங்க  வெச்சு  கதை  எழுதச்சொல்றா

 

 ராகவன்   அதிகம்  படிக்காதவர் . ஆங்கிலம்  அவ்வளவா  தெரியாது . அவர்  மலையாளத்துல  எழுதனும், இவரு  ஆங்கிலத்தில்  அதை  மொழி பெயர்த்து   மேகசின்க்கு தரனும் . இதான்  பிளான்

 

நான்  மேலே சொன்னவை எல்லாம்  படம்  ஆரம்பிச்சு  20 நிமிடங்களில்  முடிஞ்சுடுது. இதுக்குப்பின்  நடந்த  சுவராஸ்யமான  சம்பவங்கள்  தான்  மொத்தப்படமே.மொத்தம்  2  மணி  நேரப்படம் . க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  கடைசி  5 நிமிடங்களில்  தான்  வருது . நீங்க  யூகிச்சிருக்கவே  முடியாது , அதுக்கு  நான் கேரண்டி . ஜியோ  சினிமா ல இது  கிடைக்குது

 

ஹீரோவா  மெகா ஸ்டார்  மம்முட்டி .  அமைதியான  நதியினிலே  ஓடம்  பாட்டுதான் நினைவு வருது . படம்  பூரா  என்ன  ஒரு சாத்வீகமான  ந்டிப்பு?

ஹீரோயினா  அபர்ணா  ஓக்கே ரகம்,  அவர்  பத்திரிக்கைக்காரர்  என  காட்ட  பாய்ஸ்  கட்டிங்  தேவையா?  சேலை  உடுத்தும்  பெண்ணாகக்காட்டி இருக்கலாம்.

 

பிருத்விராஜ்   கெஸ்ட்  ரோல்.  தேவை  இல்லாத  கேரக்டர்

 

ஒளிப்பதிவு  , இசை , எடிட்டிங்  கனகச்சிதம் .

 

 படம்  முதல்  30 நிமிடங்கள்  எதிர்பார்ப்பை  ஏற்படுத்தும் விதமாகவும்  அடுத்த  1  மணி  நேரம்  மெலோ  டிராமாவாகவும் ஸ்லோவா   போகுது. க்ளைமாக்ஸில் கடைசி  5  நிமிசம்  கலக்கல் /

 

 க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  நேரடியாக  சொல்லப்படாமல்  பூடகமாக  சொல்வது  சிறப்பு


சபாஷ்  டைரக்டர்


1  ஓப்பனிங்  சீன்ல இறந்த  பல்லியை  எறும்புகள்  இரை ஆக்கிக்கொள்வது  போல்  காட்டும்  சீன்., பல்லி  இறந்ததுக்கு  எறும்புகள்  காரணமா  இருக்கலாம், அல்லது பல்லி இறந்த  பின் எறும்புகள்  மொய்த்திருக்கலாம்.,  பார்ப்பவர்  க ண்ணோட்டத்தைப்பொறுத்து அது மாறுபடும் என்ற குறியீடு சீன் 


2    வழக்கமாக  எல்லா  க்ரைம்  த்ரில்லர்களிலும்   கொலை  எப்படி  நடந்தது? அல்லது  யார் கொலை செஞ்சாங்க? எனும் ஃபிளாஸ்பேக்  சீன்  இருக்கும், இதில் மாறுபட்டு  ஒரு புதுமையான  விளக்கம்


3    பாரில்  ஹீரோ 3  ஆண்களுடன்  பேசும்  காட்சியில்  முரண்பாடான  கருத்து  எழும்போது  அவர்  வாதத்தை  தொடராமல  அந்த  இடத்தை  விட்டு செல்வதும்   அதன் மூலம்  ஹீரோ  ஆண்கள்   மேல்  ஈகோ  இல்லாதவர் , ஆண்கள்  பிரஷர்  தரும்போது  அவர்  அதை  பெரிதாக  எடுத்துக்கொள்வதில்லை  என  காட்டுவது  


4    ஓப்பனிங்கில்  நாயகி  நாயகனை  பெரிய  ஹீரோ  போல  பார்ப்பது  பின்  போகப்போக  கடுப்பில்  நாயகி  அவரை  டாமினேட்  பண்ணூவது  போல் காட்டுவது  , க்ளைமாக்சில்  ஹீரோ  டாமினேட்  பண்ணுவது  எல்லாமே  நுணுக்கம்


 நச்  டயலாக்ஸ்

 

1        பாய்  ஃபிரண்டைப்பார்க்கவா  போறே?

 வேணும்னா  அவன்  இங்கே  வரட்டும், நான்  எதுக்கு ?

 

2        வெளிச்சம், உண்மை இரண்டையும்  இல்லாம  ஆக்கவே  முடியாது , வேணும்னா  தற்காலிகமா  மறைக்கலாம்

3        மனுசனைக்காப்பாத்தாம  சட்டத்தை  மட்டும்  காப்பாத்துனா  இந்த  சமூகம் எப்படி  உருப்படும்?

4        வாய்ப்பு  2வது  தடவை  கதவைத்தட்டாது

5        நம்ம  தேசியசின்னத்துல  4  சிங்கம், அதுல 4 வது  சிங்கம்  மறைஞ்சிருக்கு ,   அது  மாதிரி  தான்  சத்தியம். நம்ம  கண்ணுக்குத்தெரியாது

6        இங்கே  ஃபேஸ்  புக்  கிடைக்குதா? 

 இங்கே  எல்லாம்  புக்சும்  கிடைக்கும்

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள்

 

1        ஒரு பிரஸ்  ரிப்போர்ட்டர்  நண்பரிடமிருந்து  கார்  ஓசி  வாங்கும்போது  ஆர் சி புக்  மற்றும்  பேப்பர்ஸ்  எல்லாம்  கேட்டு  வாங்கிக்க மாட்டாரா? அல்லது  கார்ல இருக்கா?னு செக  பண்ணிக்க  மாட்டாரா?

2   கைதி  தனது  ஸ்டேட்மெண்ட்டை  முதலில்  கொஞ்சம்  சொல்லும்போது  அவன் எழுத்துப்பூர்வமா  சொல்லலை, வாயால்  சொல்ல   நாயகி  டேப்பில்  பதிவு  பண்ணி    எழுத்தாக்குகிறார். அப்படி இருக்க  எந்த  நம்பிக்கையில் அவரை  எழுது  எழுது  என்கிறார். அவர்  எழுதாத  போது  கோபப்படுகிறார்?

 

3  முதல்  முறை  கைதியிடம்  கோபப்படுவது  சரி . ஒவ்வொரு டைமும் அவர்  எழுதாத  போது   சும்மா சும்மா  அவரைக்கோபித்து  என்ன  பயன்? சரி  , என்ன  நடந்தது? சொல்லுங்க  நான்    எழுதிக்கறேன்னா  அப்பவே  படம்  முடிஞ்சிருக்கும் இவ்ளோ இழுவை  எதுக்கு ?

 

சி.பி ஃபைனல்  கமெண்ட் -  மலையாளப்படங்கள்  ரெகுலராப்பார்ப்பவர்கள் , அதன்  ஸ்லோ  வுக்குப்பழக்கமானவர்கள்  பார்க்கலாம், க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  அருமை . ரேட்டிங்  3 /  5  

 

 

Saturday, September 26, 2020

இளமைக்காலங்கள் (1983)– சினிமா விமர்சனம் ( ம்யூசிக்கல் ஹிட்)

 


இளமைக்காலங்கள் – சினிமா விமர்சனம்

 

இந்தக்கால  இளைஞர்களுக்கு   இயக்குநர்  மனிவண்ணனை   நூறாவது நாள் , 24  மணி நேரம்  போன்ற  க்ரைம் படங்களின் இயக்குநராகவும் , அமைதிப்படை  எனும்  மைல் கல்  பொலிட்டிக்கல் சட்டயர்  பட இயக்குநராகவும், சத்யராஜ், கவுண்டமணி  காம்பினேஷனில்  நகைச்சுவை + குணச்சித்திர  நடிகராகவும் தான்  தெரியும், ஆனா  அவர்  பல  வகைப்பட்ட படங்களை  இயக்கி இருக்கார்  என்பது  நம்மில் பலருக்கும் தெரியாது

 

இவரது  முதல்  கதை  சினிமாவில் பாரதிராஜா  இயக்கத்தில்  “ நிழல்கள்”  என வந்தது . கமர்ஷியலா  ஓடலை. ஆனா  அவரது  அடுத்த  படம் அலைகள்  ஓய்வதில்லை ல  கதை , வசனம்  அவரே , இய்க்கம்  மட்டும்  பாரதிராஜா . அதிரி புதிரி  ஹிட் .இவர்  இயக்கிய  மாறுபட்ட  காதல்  கதை  தான்  இந்த  இலமைக்காலங்கள்.

 

பெரிய  பிரமாதமான  கதை  எல்லாம்  கிடையாது  என்றாலும்  இலையராஜாவின் சூப்பர்  ஹிட்  இசையில்  ஹிட்   பாடல்கள்  மூலம்  இந்தப்படம்  ஆல் செண்ட்டர்  ஹிட்  ஆனது

 

ஹீரோ  ஒரு காலேஜ்  ஸ்டூடண்ட். அதே  காலேஜில் படிக்கும் ஹீரோயின் . ஹீரோ மானவர்  தலைவர்  ஆகிறார். இருவருக்கும்  லவ்  உண்டாகுது. ஹீரோயினோட அப்பா  ஒரு போலீஸ் ஆஃபீசர்

 

இந்த காலேஜ்  ஸ்டூடண்ட்ஸ் 4  பேர் சேர்ந்து  ஒரு காதல்  ஜோடியை  வழி மறிச்சு  பெண்ணை  பாலியல்  பலாத்காரம்  பண்ணி  இருவரையும்  கொலை  பண்ணிடறாங்க .  ஊர் விட்டு வந்த  காதல்  ஜோடி தற்கொலைனு போலீஸ்  கேசை  மூடப்போகும் சமயம்   கிடைச்ச  ஒரு க்ளூ ல இந்த காலேஜ் ஸ்டூடண்ட்ட்சுக்கும் , இந்த 2 மரணத்துக்கும்  சம்பந்தம்  இருக்குனு  சந்தேகம்  வருது

 

 ஒரு டைம்  காலேஜில்  விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட  ஒரு ஸ்ட்ரைக்  விபரீதத்தில்  கொண்டு போய்  முடிக்குது . அந்த  ரேப் கோஷ்டி  ஸ்டூடன்ஸ்  4 பேரும்  இந்த சந்தர்ப்பங்களுக்கு சாதகமா  பயன்படுத்தி  கலவரம்  ஏற்படுத்தி  காலேஜ் லாங் லீவ்  விட்டுட்டா  நாம  தப்பிக்கலாம்னு பிளான் போடறாங்க

 

 நடந்த  கலவரத்தில்  ஹீரோயின் அப்பாவான  போலீஸ் ஆஃபீசர்  கொலை  செய்யப்படறார். இந்த  மரணத்துக்கு  ஸ்டரைக்  தான் காரணம், அந்த  ஸ்ட்ரைக்கிற்கு ஹீரோதான் காரண்ம் என  தவறாக  நினைக்கும் நாயகி   ஹீரோவை வெறுக்கறா

 

ஹீரோவுக்கு வீட்ல ஒரு முறைப்பொண்ணு  இருக்கு . அந்தப்பொண்ணும்  ஹீரோவை லவ்வுது . ஹீரோ  இன்னும்  பழைய  காதலியையே நினைச்ட்டு இருக்கார் என்பதால்  அவரது அப்பா கூட கருத்து  வேறுபாடு. ஹீரோ வீடை விட்டு வெளில போய்டறார்

 

ஹீரோ  யாரைக்கல்யாணம் பண்ணிக்கிட்டார்? அந்த  கொலைக்குற்ரவாளிகள்  என்ன ஆனாங்க?   என்பதுதான்   பின் பாதி திரைக்கதை

 

ஹீரோவா   மைக் மோகன் . அசால்ட்டா  நடிச்சிருக்கார் . இவருக்குன்னே பாடல்  காட்சிகள்  அமையுதா? இல்லை , இளையராஜா  வுக்கு  இவர்   மேல்  சாஃப்ட் கார்னரா? தெரில. இதே போல, டவுட்  ராமராஜன்  படங்களிலும்  வந்தது . அந்தக்கால  இளம்பெண்களின்  ஆதர்ஷ  ஹீரோ  மோகன் தான். ரொம்ப சாஃப்ட்டான  நடிப்பு . இரவல்  குரல் ( எஸ் என் சுரேந்தர்)   எனப்தே  தெரியாதவண்ணம்  இவரது  முக பாவனைகள், வாயசைப்புகள்  இருக்கும்

 

 ஹீரோயினா சசிகலா .  இது  வேற  சசிகலா.  நடிப்பெல்லாம் பெருசா  இல்லை . கிளாமர்  ஹீரோயின்  . அந்தக்காலத்துலயே  டூ பீஸ்  டிரஸ்ல  நடிச்சு    புரட்சி  செஞ்சவங்க . ஆனா  அந்த  கால கட்டத்துல  மாதவி , ஸ்ரீ தேவி  இருவரும் தான் ஸ்விம்மிங்  சூட்டுக்கும், டூ பீஸ்  கிளாமருக்கும்  பொருத்தமா  இருந்ததா  ஆராய்ச்சியாளர்கள்  கூறுகின்றனர்

 

 முறைப்பெண்ணாக  ரோகினி  பட்  அதிக  வாய்ப்பில்லை . வந்த  வரை  ஓக்கே

செந்தாமரை  முக்கிய  ரோல், நல்லா  பண்ணி இருக்கார்

 ஜனகராஜ் முக்கிய  ரோல். சஸ்பென்ஸ்  கேரகடர். பாடல்களை  தனியா சொல்லியே ஆகனும். 


1   ஈரமான  ரோஜாவே  என்னைப்பார்த்து மூடாதே  அந்தக்கால    காதலர்களின்  வரப்பிரசாதம். காதலி தெரு வழியே செல்லும்போது ஆடியோ வில் ஒலிக்கும், ஆர்க்கெஸ்ட்ராக்களில் தவறாமல் பாடப்படும். செம  மெலோடி


2  .  ஓப்பனிங் சாங்  ஆன  படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ ரோட்டிலே ரோமியோ  செம  ஹிட்டு


3   பாட  வந்ததோ  கானம், பாவை கண்ணில் ஏன் நாணம்?


4  இசை மேடையில் இந்த  வேளையில்  சொர்க்க ராகம்


5   ராகவனே  ரமணா  ரகுராமா


6  மோகம்  உள்ள  ராணி 


7  வாடா  என் வீரா 

 

சி.பி  ஃபைனல்  கமெண்ட் -     பாடல்களுக்காகவே படம்  பார்க்கலாம். ஒரு பாட்டுக்கூட சுமார் ரகம் கிடையாது., எனக்குத்தெரிஞ்சு  த்மிழ்  சினிமாவில்  பெரிய  அளவில்  கதை  அம்சம் எல்லாம் இல்லாம  பாடல்கள்  இசை  அம்சம் மட்டும் செம  ஹிட் ஆனதால்  மாங்கு மாங்கு  என  ஓடிய  படங்கள்   ஸ்ரீதரின்  தென்றலே  என்னைத்தொடு .   பருவராகம்.  பாட்டு  , டான்ஸ்க்காக ஓடிய  படம் பாடும் வானம்பாடி . ரேட்டிங்  3 / 5

 

 


Jump to navigationJump to search
Ilamai Kaalangal
Ilamai Kaalangal.jpg
Poster
Directed byManivannan
Produced byPollachi M.V.Ratnam
Written byManivannan
StarringMohan
Sasikala
Rohini
Balaji
Anuradha
Venniradai Moorthy
Senthamarai
Senthil
Sukumari
Music byIlaiyaraaja
CinematographyA.Sabhapathy
Edited byR. Bhaskaran
Production
company
Motherland Pictures
Release date
19 August 1983
CountryIndia
LanguageTamil