Monday, January 25, 2016

சன் டி வி யின் எம் டி சன்னிலியோனா? கலைஞர் அதிர்ச்சி!

டியர்! நான் எப்போ  பஜ்ஜி சாப்டும்போதும் உன் நியாபகம் வந்துடும்

 அவ்ளோவ் டேஸ்ட்டா நான்?

 இல்லை, முகமெல்லாம் ஆயிலா இருக்கும்..

=================


2  மாமா! பூனை மாதிரி இருப்பானு நினைச்சா உங்க பொண்ணு புலி மாதிரி இருக்கே?

நீங்க ஏன் பூனைனு நினைச்சீங்க?

சவு”மியா(வ்)” -னு பேர் பார்த்து


==================


3  ஜோசியரே! கல்யாணம் பண்ணிக்கிட்டா தோஷம் போய்டும்னீங்க, போகலை?

வீட்ல நிம்மதி , சந்”தோஷம்” எல்லாம் போய் இருக்குமே?=================


மேரேஜ்க்கு முன் எப்டி இருந்தாலும் சரி, மேரேஜ்க்குப்பின் ஸ்பெல்லிங்க் மாத்தனும்

 எப்டி?

 இனிமே  SOWMIYA     இல்லை     SOW"MY"A


=================

5 இன்ஸ்பெக்டர், இவன் என் DP யை திரும்ப திரும்ப பார்க்கறான்


ஏம்மா,நேர்லயே ஒரு டைம்தான் பார்க்கற மாதிரி இருக்கே?உன் DPயஎதுக்கு அப்டி பார்த்தான்


==================

6  உலகிலேயே உச்சபட்ச வலிகள் 4
1 பிரசவ.வலி 2 பல் வலி 3,மாரடைப்பு 4 அன்பு கொண்டோரின் நிராகரிப்பு்


============


7 என் சிரிப்பு உடஞ்சி சிதறி கெடக்கு
எப்ப வருவ எடுத்துக்க ? ஏன்மா நான் என்ன பொறுக்கியா? கீழே சிதறுனதை நான் எதுக்கு எடுக்கனும்?

===========

8 கோகுலக்கண்ணன் சினிமாப்படம் எடுத்தா ராதை என்ன விமர்சனம் எழுதும்?
குறையொன்றும் இல்லை... மறைமூர்த்தி கண்ணா..! குறையொன்றும் இல்லை கண்ணா...!"

===============


9 தியேட்டரில் யாரும் இல்லை,
இனி யாரும் வரமாட்டார்கள் என்று உறுதியான பிறகு தான்... இன்றே கடைசி போஸ்டர் ஒட்ட ஆரம்பிக்கிறார்கள்


===============

10 மேடம்.1000 ரூபா கடன் வேணும்.
- ஸாரி பேரு தான் "சஹாய" ராணி.பாலோயர்க்கு ஒரு சஹாயமும் பண்றதில்ல


================

11பஸ்சில் பாடல் ஒலிக்கும்போதும் தனி விருப்பப்பாடல் தான் கேட்பேன் என வாக்மேன்ல பாட்டுக்கேட்"பாவை"யர் தனிக்குடித்தன விரும்பிகளாக இருக்கக்கூடும்

================

12 பொங்கல் வாழ்த்து கூட சொல்லையே ஏன்?
பார்மாலிட்டியா வாழ்த்த நம்ம நட்பு ஒரு சாதா.நட்பு இல்லைனு நினைச்சிருக்கலாம்


==================

13 நான் உன்னை எப்படி எல்லாம் பாதித்தேன் என்று சொல்லச்சொன்னாள்!
நீ என்னில் பாதி தேன் என்றேன்


===============


14 40% வாக்கு வங்கி உள்ள ஆளுங்கட்சியை வெல்ல அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் சேர்ந்தால் மட்டுமே சாத்தியம்.பிரிந்தால் வாக்கு பிரியும்


===============

15 ஒரு முன்னாள் முதல்வரின் மகன் தயாரித்து மகன் ஹீரோவா நடிச்ச படம் கேரளாவில் ரிலீஸ் இல்லை.ஆனால் சிவகார்த்திகேயன் படம் பட்டி தொட்டி எங்கும் ரிலீஸ் # ரஜினிமுருகன் vs கெத்து

===============

16 கேட்கறவன் கேனயனா இருந்தா சன் டி வி யை கண்டு பிடிச்சது சன்னிலியோன் னு சொல்வானாம் # கிராமத்து சொலவடை

==========

17 உடன் பிறப்பே! மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் 10% ஓட்டும் உபரியா.குஷ்பூவும் நம்ம பக்கம்.எப்பூடி நம்ம சாணக்கியத்தனம்?


==================

18 கோலம் போடுவது பெண்ணடிமை த்தனம்தானே?ன்னு சிலர் கேட்கறாங்க, பொண்ணுங்க செய்யும் ஏதோ சில அழகிய பணிகளில் அதுவும் 1, அதுக்கும் தடை போட்டா எப்படி?


=====================

19 ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணினதைச்சுட்டிக்காட்னாக்கூட  என் கீ போர்டு கூட நான் சொல்றதைக்கேட்பதில்லைனு சாமார்த்தியமா சமாளிப்பார்கள் பெண்கள்


===================


20   தெலுங்குப்படவிமர்சனமும் இனிபண்றீங்களா? செத்தாய்ங்க தெலுங்குக்காரங்க
 பார்க்கறது தெலுங்கா இருந்தாலும் விமர்சனம் தமிழ்ல.எப்டி அவங்க சாவாங்க?


==========================

0 comments: