Saturday, July 13, 2024

இந்தியன் 2 ( தமிழ் ) - 2024 - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )

                  

  இயக்குநர் ஷங்கருக்கு  ஒரு  ராசி  உண்டு , அவரது படங்களின்  டைட்டில்  “ ”ன்”  என்ற  எழுத்தில்  முடிந்தவை  எல்லாம்  மெகா  ஹிட் . உதா - ஜெண்டில் மேன் , காதலன், இந்தியன் , முதல்வன் , அந்நியன் , எந்திரன் .  அவரது  இந்த  “ ”ன்”   செண்ட்டிமெண்ட்டை  மீறி  வந்த  படங்கள்  எல்லாம்  சுமார்  அல்லது  மீடியம்  ஹிட்  உதா  பாய்ஸ் , ஜீன்ஸ் , ஐ .  டூ பாயிண்ட் ஓ .    சிவாஜி  ,ன்  வரிசையில் சேராத  மெகா  ஹிட் . நண்பன்  3  இடியட்சின்  ரீமேக் என்பதால்  அது  கணக்கிலேயே  வராது . . தமிழில் மெகா ஹிட்  ஆன  முதல்வன்  படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன  நாயக்  தோல்வி ,    இந்த  பட்டியலில்  இல்லை .  இப்போது  ரிலீஸ்  ஆகி  இருக்கும்  இந்தியன்  2  எந்த  கேட்டகிரியில் சேரப்போகிறது  என்பது  மில்லியன்  டாலர்  கொஸ்டின் 


ஷங்கர் அளித்த பேட்டியில்  என்  திரை  உலக வாழ்க்கையில் முதன் முதலாக  ஒரு  படத்துக்கு மூன்று  வசனகர்த்தாக்களை  (திரைகக்தைக்கும்)   பயன்படுத்தி  இருக்கிறேன்  என்று  சொன்னபோதே  அடேங்கப்பா  , ஒரு  பாலகுமாரனோ , ஒரு  சுஜாதாவோ   செய்ய  வேண்டிய  ஒரு  அரிதான வேலையை  மூவர்  பங்கு  போடும்போது  அதன்  தரம்  எந்த  அளவுக்கு  உயர்ந்து  இருக்கும்  என்ற  எதிர்பார்ப்பில்  தான்  படம்  பார்த்தேன் . ஏ ஆர்  ரஹமான்  , சுஜாதா , கவுண்டமணி செந்தில்  காமெடி  இல்லாமல்  ஷங்கர்   சமாளித்தாரா? என்பதைப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு  யூ ட்யூப்  போராளி. தன்  நண்பர்கள் மூவருடன் சேர்ந்து சமூக  அவலங்களைப்படம்  பிடித்து  மக்கள்  பார்வைக்குக்கொண்டு  சென்று  லைக்ஸ்  வாங்குபவர் . ஆனால் பாதிக்கப்பட்ட  ஆட்கள்  அரசியல்  செல்வாக்கும், பணபலமும்  உள்ளவர்களாக  இருப்பதால் போலீசை  ஏவி  ஈசியாக  நாயகன்  அண்ட் கோ வை  லாக்கப்பில்  தள்ளி  விடுகிறார்கள் .


  நம்மால  இது  ஆகாது . இந்தியன்  தாத்தா  மாதிரி  ஒருவர்  அல்லது  இந்தியன்  தாத்தாவே  வந்தால்  தான்  சரி  வரும்  என  நினைத்து ட்விட்டரில் கமான் இந்தியன்  என  ஹேஸ்டேக்  ஆரம்பிக்க  அது  ஹிட் ஆகி  எங்கேயோ  இருக்கும்  இந்தியன்  தாத்தா  பார்வைக்குப்போகிறது 


 அவரும்  வருகிறார். அவங்கவங்க  வீட்டில் இருக்கும்  குப்பைகளை  சரி  செய்தால்  நாடு  சுத்தமாகும்  என்கிறார். இதனால்  நாயகன்   தன்  அப்பாவை , நாயகனின்  நண்பர்கள்  அவரவர்  வீட்டில்  இருக்கும்  அம்மாவை , அண்ணனை , மாமாவை  இப்படி  நெருங்கிய  உறவினர்களை தப்பு  செய்பவர்களை  சாட்சியுடன்  போலீசில்  மாட்டி  விட  குடும்பத்தில்  கலகம்  உண்டாகிறது . இந்த  எல்லப்பிரச்சனைகளும்  இந்தியன்  தாத்தாவால்  தான்  வந்தது  என  இப்போது  கோ பேக்  இந்தியன்  என  ஹேஸ்டேக்  போடுகிறார்கள் , இதற்குப்பின்  என்ன  ஆனது  என்பது  மீதி   திரைக்கதை 


  நாயகன்  ஆக  சித்தார்த்  நடித்திருக்கிறார். அருமையான  நடிப்பு . அப்பாவை  போலீசில்  மாட்டி  விட்டதும்   அம்மா  தற்கொலை  செய்து  கொள்வதால்  மனம்  உடைந்து  கதறும்  காட்சியில்   உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருக்கிறார் 


   அவரது   நண்பர்களாக   ப்ரியா  பவானி ச் அங்கர் , ஜெகன்   கச்சிதமாக  நடித்திருக்கிரார்கள் . அவரது  காதலியாக  ரகுல் ப்ரீத்தி சிங்க்  இரு  காட்சிகளில்  வருகிறார் . 


இந்தியன்  தாத்தாவாக   கமல்  தான்  பாவம்  கம்பீரம்  இல்லாமல்  வருகிறார். முதல்  பாகத்தில்  அவர்  வரும்  ஒவ்வொரு  சீனும்  செம  கெத்து , ஆனால்  இதில்  பார்க்கவே  பரிதாபம் வரவைக்கும்  ஒப்பனை . அதில்  ஒரு  வாசகம்  சொன்னாலும்  திருவாசகம்  போல  சொல்வார் காரணம்  வசனம்  சுஜாதா . இதில்  லொட  லொட  என  பேசிக்கொண்டே  இருக்கிறார், காரணம்  வசனம்  ஜெயமோகன் 


  சிபிஐ  ஆஃபிசிஅர்  ஆக  வரும்  பாபி  சிம்ஹா  24  மணி  நேரமும்  கூலிங்க்  கிளாஸ்  போட்டு  வரும்  கேரக்டர் . அவரது  உதவியாளர்  ஆக  விவேக் 


 இவர்கள்  போக  மனோபாலா , எஸ்  ஜெ  சூர்யா ,  நெடுமுடி வேணு , டெல்லி  கணேஷ் , மனோபாலா , ரேணுகா  என  ஒரு  நட்சத்திரப்பட்டாளமே  நடித்துள்ளன 


  இசை  அனிரூத். படத்தின்  மிகப்பெரிய  மைன்ஸ்  இவர்  தான் .  முதல்  பாகத்தில்  ஏ  ஆர்  ஆர்  பிஜிஎம்மில்  பின்னி  எடுத்திருப்பார். இதில்  க்ளைமாக்சில்  மட்டும்  பிஜிஎம்  சுமாராக  இருக்கிறது 


தாத்தா  வர்றார்  என்ற  ஒரே  ஒரு  பாடல்  மட்டும் ஹிட்  பாட்டு 


 ரவிவர்மனின்  ஒளிப்பதிவு  அட்டகாசம். சிட்டிசன் , தசாவதாரம்  ஆகிய  படங்களீல்  எ3ப்படி  கெட்டப்கள்  எல்லாம்  நகைப்புக்கு  உரியதாய்  ஆனதோ  அதே  போல்  இதில்  கமல்  வரும்  ஐந்து  விதமான  கெட்டப்களும்  சுமார்  தான் 


 ஒரே  ஒரு  காட்சியில்  சேனாபதி  வெட்டி  சட்டையில்  வரும்போது  கெத்தாக  இருக்கிறார் 


ஸ்ரீகர்  பிரசாத்தின்  எடிட்டிங்கில்  படம்  3  மணி  நேரம்  ஓடுகிறது . இரண்டே கால்  மணி  நேரமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்


சபாஷ்  டைரக்டர்


1    அரசியல்வாதிகளின்  இலவசத்தால்  தான் மக்கள்  கெடுகிறார்கள்  என்று  சொல்லி  அதிமுக  ஆட்சியில்  இலவசமாகக்கொடுக்கப்பட்ட   டேபிள்  ஃபேன் , கிரைண்டர் , மிக்சி  இவற்றை  எல்லாம்  காட்டி  திமுக  ஆட்சியில்  கொடுக்கப்பட்ட  டிவி யைக்காட்டாமல்  விட்டது  (  ஏன்  எனில்  தயாரிப்பு  ரெட் ஜெயண்ட்  மூவிஸ்) 


2    விஜய் , அஜித்  படங்களில்  எல்லாம்  அனிரூத்தின் பிஜிஎம்  பிரமாதமாகப்பேசப்பட்டதால்   ட்ரெண்டுக்கு  ஏற்றபடி  அவரை  புக்  பண்ணி  விட்டு   அது  ஒர்க்  அவுட்  ஆகாததால்  முதல்  பாகத்தின்  ஏ ஆர்  ஆர்  பிஜிஎம்மை  பல  இடங்களில்  யூஸ்  செய்த  சாமார்த்தியம் 


3  இரண்டாம்  பாகத்தை  முடிக்காமல்  ஜவ்வு  இழுப்பாய்  இழுத்து  மூன்றாம்  பாகம்  வரை  கொண்டு  போன  லாவகம்  ( டபுள்  வருமானம் ) 


4     ஷூட்டிங்  நடக்கும்போதே  இறந்து  போன  கலைஞர்கள்  ஆன   விவேக்  , மனோபாலா , நெடுமுடி வேணு   ஆகியோர்  போர்சனை   ஏ ஐ  டெக்னாலஜி  மூலம்  பிசிறிலில்லாமல்  முடித்தது 


5      முதல்  பாகத்தில்  வர்மக்கலை  பெரிதாகப்பேசப்பட்டதால்   அந்த  ஒரு  விஷயத்தை  வைத்தே  நான்கு  புதுப்புது  கோணத்தில்  கொலைகள்  செய்யும்  காட்சியை  வைத்து  ஒரு  மணி  நேரம்  இழுத்தது


  ரசித்த  வசனங்கள்   (  ரைட்டர்  ஜெயமோகன் , கபிலன்  வைரமுத்து , லட்சுமி சரவணக்குமார் ) 


1      பார்த்துப்போடா   நாயே 


 பாத்ரூம்ல  போடா  (  ஓப்பனிங்  சீனில்  என்ன  ஒரு  தத்துவம் ) 


2    நான்  காமன் மேன் , ஓட்டுப்போடும்  மிஷின் 


3   முன்னாடி  எல்லாம்  5  லட்சம்  ஊழல்  என்று  தான்   பேசுவோம், இப்போ 1000 கோடி  ஊழல்  என  பேச  ஆரம்பித்து  விட்டோம் 


4   நீங்க  எல்லாம்  கரப்ட்டட், கரப்பான்  பூச்சிகல் ம், அணூகுண்டே  போட்டாலும்  அழிக்க  முடியாது 


5     எலக்சன்ல   வோட்  சேஞ்ச்  இல்லை  எக்சேஞ்ச் 


6   என்ன    நக்கலா ?


 இல்லை  நிக்கல் , தாய்வான்  50  ரூபா  காயின்  (  இந்த   வசனம்  சுஜாதாவின்  எந்திரன் டயலாக் )


7   கழிப்பறைல   எழுதிட்டு  இருந்தவங்க  எல்லாம்  இப்போ  ஃபெஸ்புக்ல  எழுதிட்டு  இருக்காங்க   (  இந்த  டயலாக்கை  ரைட்டர்    ஜெயமோகன்  தான்  எழுதி  இருப்பார் ) 


8   என்ன  கர்மம்  சார்  இது ?


 கர்மம்  இல்லை  வர்மம்  ( இந்த  டயலாக்  அதிதி  சங்கர்  ஆக  இருக்கலாம் , அவர்  தான்  மேடைகளீல்  மொக்கை  ஜோக்  சொல்வார் ) 


9   எல்லாரும்  குடும்பத்துக்காக  எதை  வேண்டுமானாலும்  விட்டுக்கொடுப்பாங்க, ஆனா  குடும்பத்தை  யாரும்  விட்டுக்கொடுக்க மாட்டாங்க 


10  லஞ்ச   ஒழிப்புத்துறைக்கே  லஞ்சமா? எத்தனை  இந்தியன்  வந்தாலும்  திருந்த  மாட்டீங்க 


11   ஈ  சேவை  மையம்  ல  வேலை  செய்யும்  கொசு


12    என்ன  கால்ல  சுளுக்கா ?


 இல்லை  நான்  கூட ........  (  டபுள்  மீனிங் ) 


13   நீ  சாப்பிட்டதால  வெயிட்  போடலை , பலரது  சாபத்தால தான் வெயிட்  போட்டிருக்கே 


14    சின்ன  வயசுல  பொய்  சொல்லாதே , திருடாதே  என  சொல்லிக்கொடுத்துட்டு  இப்போ   அதை  எல்லாம் செஞ்சாதான்  வாழ  முடியும்  என  சொன்னால்  எப்படி ? 


15  வீட்டை  சுடுகாடு  ஆக்கிட்டு  நாட்டை  வளமாக்கி  என்ன  பண்ணப்போறோம் ? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பலமான  வில்லன்  கேரக்டர்  இல்லாதது .  இந்தியன்  தாத்தாவுக்கு  ஆபத்து  வருமோ  என்ற  பதைபதைப்பே  படம்  முழுக்க  இல்லை 


2   சித்தார்த்  அண்ட்  கோவின்  குடும்பங்களில்  நடக்கும்  சம்பவங்களால்  அவர்கள்  மனம்  மாறுவது  ஒரு  நெகடிவ்  வைப்ரேசனை  எழுப்பியது  பின்னடைவு 


3   முதல்  பாகம்  போல  கவுண்டமணி  செந்தில்   காமெடி  டிராக்கோ , நகைச்சுவையோ மருந்துக்குக்கூட  இல்லாதது 


4  முதல்  பாகத்தில்  கமலுக்கு  மணீஷா , ஊர்மிளா  என  இரு  ஜோடிகள்  உண்டு , அது  போக  சுகன்யா . இரண்டாம்  பாகத்தில் கமலுக்கு  ஜோடியே  இல்லை  டூயட்டும்  இல்லை 


5  க்ளைமாக்சில்  ஒத்தை   வீல்   சைக்கிள்  மாதிரி  எதுலயோ  கமல்  எஸ்கேப்  ஆகும்  காட்சி  அநியாய   நீளம்  35  நிமிடங்கள் 


6  எல்லாவற்ரையும்  விடக்கொடுமையானது  இந்த  மொக்கையான   15  டயலாக்சை  எழுத  மூவருக்கு  தலா  ரூ 25  லட்சம்  , ஆக  மொத்தம்  75  லட்சம்  சம்பளமா? அய்யோ 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்   - கண்ட்டெண்ட்டுக்கே  பஞ்சம், இதுல  அடல்ட்  கண்ட்டெண்ட்  தான்  குறைச்சலா?  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரிலீஸ்  அன்று  வந்த  நெகடிவ்  விமர்சனங்கள்  போல படம்  அவ்ளோ  மொக்கையாக  எல்லாம்  இல்லை . பரவாயில்லை , ஆனால்  முதல்  பாகம்  போல்  10 %  கூட  இல்லை . ஆனந்த  விகடன்  மார்க்  43   குமுதம்  ரேங்க்கிங்  சுமார்   . அட்ரா  சக்க  ரேட்டிங்  2.5 / 5 


 ஈரோடு   சண்டிகாவில்  படம்  பார்த்தேன். இவ்ளோ  நெகடிவ்  விமர்சனங்கள்  வந்தும்  தியேட்டரில் 240  பேர்  ஆடியன்சாக  பார்த்தது  ஆச்சரியம்  கமல்  ஃபேன்ஸ்  ராக்கிங் 


Indian 2
Theatrical release poster
Directed byS. Shankar
Written byS. Shankar
Dialogues byB. Jeyamohan
Kabilan Vairamuthu
Lakshmi Saravana Kumar
Screenplay byS. Shankar
Story byS. Shankar
Produced by
Starring
CinematographyRavi Varman
Edited byA. Sreekar Prasad
Music byAnirudh Ravichander
Production
companies
Distributed bysee below
Release date
  • 12 July 2024
Running time
180 minutes[a]
CountryIndia
LanguageTamil
Budget150 crore[b]

Friday, July 12, 2024

அஞ்சாமை (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (மெலோ டிராமா )

 


  நீட் விலக்கு ரகசியம் எனக்குத்தெரியும்  என்று சொன்ன அரசியல்வாதிகள்  கடைசி வரை அந்த ரகசியத்தை வெளியிடாமலேயே  கமுக்கமாக இருக்கும் சூழலில் ஒரு அறிமுக இயக்குநர்  அவரளவில் நீட் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டுள்ளார் . சொல்ல வந்த கருத்தை   சிறப்பாக  காட்சிப்படுத்திய விதத்தில் கவனம் ஈர்க்கிறது  ஒரு டாக்டர்தான்  படத்தின் தயாரிப்பாளர்  என்பது கூடுதல் சுவராஸ்யம் 


7/6/2024  முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இபபடம் நல்ல வரவேற்பைப்பெற்றது .இந்த வாரக்கடைசியில் ஓடிடியில் வெளி வர வாய்ப்பிருக்கிறது 

                     


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு சிறுவன் ,அவனது அப்பா  ஒரு பூ வியாபாரி , அம்மா,தங்கை என ஒரு அழகிய குடும்பம் . நாயகனுக்கு  நீட் தேர்வில்  பங்கு பெற ஆசை .விண்ணப்பிக்கிறான் . தமிழ் நாட்டில் இருக்கும்  அவனுக்கு வட மாநிலம் ஆன ஜெய்ப்பூரில் தேர்வு மையம்  ஒதுக்கப்படுகிறது . அப்பாவுடன்  கிளம்புகிறான் .போகும் வழியில் பல டென்ஷன்களுடன்  கடந்தவன்  எப்படியோ  ஒரு வழியாகத்தேர்வு  எழுதி விடுகிறான் .ஆனால் அதீத மன அழுத்தத்தின் காரணமாக  அவனது அப்பா மாரடைப்பில் மரணம் அடைகிறார் 


தன அப்பாவின்  மரணத்துக்குக் காரணம்  இவர்கள் தான்  என சிலரின் மீது போலீசில் புகார் கொடுக்கிறான் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது . பின் என்ன ஆனது ?அவனுக்கு நீதி கிடைத்ததா? என்பது மீதி  கதை 


நாயகன் ஆக கிருத்திக் மோகன் நடித்திருக்கிறார். உணர்ச்சிகரமான நடிப்பு . அப்பாவாக  விதார்த் அருமையான  குணச்சித்திர நடிப்பு இவருடையது . திறமை இருந்தும்  , நல்ல கதைத்தேர்வு அறிவு இருந்தும் ஏனோ அந்த  அளவு சோபிக்காமல் போன  நல்ல  நடிகர்களில் விதார்த்தும் ஒருவர்.( இன்னொருவர்  அருண் விஜய்) 


அம்மாவாக வாணி போஜன் கச்சிதம் . நாயகனுக்கு உதவும் போலீஸ்  ஆஃபீசராக , பின்  வக்கீலாக  மாறும்  ரகுமான் பொருத்தமான  தேர்வு 


நீதிபதி ஆக வரும்  பாலச்சந்திரன்  பல இடங்களில்  சபாஷ் போட வைக்கிறார் .


ராம் சுதர்சனின்  எடிட்டிங்கில் படம் 121  நிமிடங்கள்  ஓடுகின்றது , ஆனால்  பின்  பாதியில் காட்சிகள்  நீளம் /


கார்த்திக்கின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கண்ணைக்கவர்கின்றன


பாடலக்ளுக்கான  இசை  ராகவ் பிரசாத் .பரவாயில்லை . பின்னணி இசை கலாசந்திரன் . குட் 


கதை , வசனம், இயக்கம்  சுப்புராமன். சமூகத்தின் மேல்  அக்கறை  கொண்ட ஒருவரால் தான்  இது போன்ற  படம்  இயக்க  முடியும்    


சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  தன்  அப்பாவுடன்  ரயிலில்  பயணிக்கும்  காட்சிகள்  நாமே  அவர்களுடன்  பயணிப்பது  போல  ஒரு  உணர்வு  உருவாவது  இயக்கத்திற்க்குக்கிடைத்த  வெற்றி 


2  விதார்த்தின்  கேரக்டர்   டிசைன்  அருமை . அவர்  மன அழுத்தத்துக்கு ஆளாவது, மிகக்களைப்பாக உணர்வது  அனைத்தையும்  மனதுக்கு  நெருக்கமாக படமாக்கி  இருப்பது  அருமை 


3  வசனம்  பல  இடங்களில்  சமூக சீர்திருத்தப்பார்வையில்  அமைந்திருக்கிறது   ரசித்த  வசனங்கள் 


1   ஒரு அப்பா 100 வாத்தியார்களுக்கு சமம் 


2 செடி வளரும்போது ஆடு , மாடு மேயும் ,அதே செடி வளர்ந்து மரம் ஆன பின்  அதன் நிழலில் அதே ஆடு மாடு வந்து இளைப்பாறும் 


3 பணம்  இருப்பவர்களுக்கு ஒரு சட்டம்,இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்


4  சில விஷயங்களில்  தரப்படும் இழப்பீடு என்பது நடந்த தப்பை  மறைப்பதற்கான லஞ்சம் 5  கல்வியைகஷ்டப்பட்டு தான் படிக்கணுமா? 


6 இந்த மீடியாக்காரங்க முக்கியமான  செய்தியை சின்னதாதான் போடுவாங்க 


7“சிலம்பம் கத்துட்டு வந்து கத்தி சண்ட போன சொன்னா எப்டி?”, “தகுதித் தேர்வுதான் முடிவென்றால், எதற்கு பள்ளிப் படிப்பு


8  ரயிலில் எதற்கு ரிசர்வேஷன், அன்ரிசர்வேஷன், ஏசி என பாகுபாடு? தகுதித் தேர்வை போல எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான சீட்டை ஒதுக்க வேண்டியது தானே


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   அவ்ளோ  செலவு  பண்ணி  தேர்வுக்குத்தயார்  ஆகிறவர்கள்  ரயிலில் போகும்போது  ரிசர்வ்  பண்ணியோ , தட்காலில்  புக்  செய்தோ  போகாமல்  அன் ரிசர்வ்டு  கம்பார்ட்மெண்ட்டில்  பயணிப்பது ஏன்?


2   தேர்வு  நடக்கும்  நாள்  அன்று  தான்  போய்ச்செருவது  போல  கிளம்பனுமா? ஒரு  நாள்  முன்பே  போகலாமே?  லாட்ஜில்  தங்க  பணம்  இல்லை   எனில்  அரசாங்க பூங்காவில் , ரயில்  நிலையத்தில்  தங்கி  சாவகாசமாக  போகலாமே? கடைசி  கட்ட  நெருக்கடியில்  ஏன்  போக  வேண்டும் ?


3   ஒரு  எக்சாம்  நடக்கிறது ,  அதற்கான  ரூல்ஸ்  என்ன  என்பது  அறிவிக்கப்பட்டிருக்கிறது , அதை  ஃபாலோ  பண்ண  வேணாமா? சிவப்பு  சட்டை  அணிந்து  வந்து   அதை  அணியுக்கூடாது  என்பது  தெரியாது  என  ஒரு  மாணவன்  குறை  சொல்வது  சரி  இல்லை . படிச்சவன்  தானே?  ரூல்ஸ்  தெரியாம  ஏன்  வர்றே? என  கேட்கத்தோன்றுகிறது 


4  எக்சாம்  நடக்கும்போது  லேட்டாக  வந்த  விதார்த்  ஒருவர்  காலில்  விழுவது  எல்லாம்  டிராமா  பார்ப்பது  போல்  உள்ளது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சில  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும்  தரமான  படம்  தான் , பார்க்கலாம்  ரேட்டிங்  3 . 5 


அஞ்சாமை
Anjaamai
இயக்கம்எஸ். பி. சுப்புராமன்
தயாரிப்புஎம். திருநாவுக்கரசு எம்டி
கதைஎஸ். பி. சுப்புராமன்
இசை
  • பாடல்கள்:
  • இராகவ் பிரசாத்
  • பின்னணி இசை:
  • கலாசந்திரன்
நடிப்புவிதார்த்
வாணி போஜன்
ரகுமான்
கார்த்திக் மோகன்
ஒளிப்பதிவுகார்த்திக்
படத்தொகுப்புஇராம் சுதர்சன்
கலையகம்திருச்சித்திரம் புரொடக்சன்சு
விநியோகம்டிரீம் வாரியர் பிக்சர்சு
வெளியீடு7 சூன் 2024
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Wednesday, July 10, 2024

VIDYA VASULA AHAM (2024) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா) @ ஆஹா தமிழ்

     


    வித்யா மற்றும் வாசு இருவரின் ஈகோ  என்பது தான் டைட்டிலுக்கான அர்த்தம்  இப்படம்  17/5/2024  முதல் ஆஹா தமிழ் ஓடி டி தளத்தில் காணக்கிடைக்கிறது தியேட்டர்களில்   ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடி யில் வெளியான படம் இது குஷி , நீதானே என் பொன் வசந்தம்  மாதிரி காதலர்களுக்கு இடையேயான ஈகோ கிளாஸ் பற்றி கதை பேசுகிறது 
  ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் ஒரு எஞ்சினியர் , நாயகி ஐ டி டிபார்ட்மெண்ட்டில்  பனி புரிபவர் . இருவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது . இருவருக்கும் பொதுவான ஒற்றுமை குணங்கள் எதுவும் இல்லை . ஆனால் இருவருக்கும் ஈகோ  இருக்கிறது 


நாயகன்  தான்  பணி  புரியும் இடத்தில்  ஹையர் ஆபிசருடன்  உண்டான வாக்குவாதத்தில்  தன   பணியை  ராஜினாமா செய்கிறான் .இதனால் இவன்  கையில் காசு இல்லை .மனைவிக்கு  விஷயம் தெரியாது .பல விஷயங்களில் இவர்கள் இருவருக்கிடையே  கருத்து மோதல்  இருக்கிறது . அதனால்  எலியும், பூனையுமாக வாழ்கிறார்கள் 


 ஒரு நாள் இருவரின் பெற்றோரும் திடீர்  விசிட் அடிக்கிறார்கள் . அவர்கள் முன் இருவரும் ஒற்றுமையாக இருப்பது போல் நடிக்கிறார்கள் . அவர்கள் எப்படி பெற்றோரை  சமாளித்தார்கள் ? எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது  மீதி திரைக்கதை 


நாயகன் ஆக ராகுல் விஜய் , நாயகி ஆக ஷிவானி ராஜசேகர் .இவர்  இதுதாண்டா போலீஸ் புகழ் டாகடர் ராஜசேகர்  + ஹலோ யார் பேசறது புகழ் ஜீவிதா  தம்பதியினரின் மகள் . இது இவரது 9 வது படம்


 நாயகன், நாயகி இருவருக்கும் சமமான ரோல் . படம் முழுக்க இவர்கள் இருவரும் தான்  ஆக்ரமிப்பு செய்கிறார்கள் 


 கல்யானி மாலிக்கின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்  பின்னணி  இசை அதை விட சுமார் ஒளி[பதிவு   அகில் வல்லூரி 

சத்யா கிடுதூறி   என்பவர் தன  எடிட்டிங்க் . இரண்டு மணி நேரம் படம் ஓடுகிறது 


 வெங்கடேஷ் ரவுது எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  மானிகாந்த்கெல்லி 


சபாஷ்  டைரக்டர்


  1  நாயகி நடத்தும் சுயம்வரப்படலம் கலகலப்பு . அவர் வரிசையாக ரிஜெக்ட் செய்யும்  மாப்பிள்ளைகள் கொடுக்கும் பதில்கள் , பெறும் பல்புகள் காமெடி ரகம் 


2  வசனம் பல இடங்களில் கவனிக்க வைக்கிறது . சில இடங்களில் ஒரே தத்துவ மழையாய் பொழிகிறது 3  நாயகன் - நாயகி கெமிஸ்ட்ரி , இருவரது தரமான நடிப்பு 

ரசித்த  வசனங்கள் 


1   பரஸ்பரம் மரியாதை கொடுப்பதே திருமண வாழ்வின்  அடிப்படை 


2 நீ கர்ப்பமா இருக்கியா? எத்தனையாவது மாசம் ? 


 12வது 


 வாட் ?


 இபபோ  நடப்பது டிசம்பர் .அது 12 வது மாசம் தானே? 


3  ஒவ்வொருவருக்கும்   அவருக்கான காலம் வரும், ஆனால் அதற்காக அவர்  காத்திருக்க வேண்டும் 4 ஹேப்பி ஒயிப் மீன்ஸ்  ஹேப்பி லைப் 


5  ஹெல்மட் போடலையா? 


 நான்தான் மேரேஜ் ஆனவன் ஆச்சே ? எதுக்கு ஹெல்மட்? 


6 நீ கோபமா இருக்கும்போதும் உன் முகத்த்துல காதலை நான் பார்த்தேன் 


7  ஒரே மாதிரி சிந்திக்கும் இருவர்  கல்யாணம் பண்ணிக்க முடியாது , வாழ்க்கை போர் அடிச்சிடும் 


8  நீ சரக்கு  அடிக்க மாட்டியா?  ஆச்சர்யமா இருக்கே? 


 ஆமா , லஞ்ச் டைம் இப்போ , அடிக்க மாட்டேன் 9 பக்கத்துல இருக்கும் ஒரு ஊருக்குப்போனா  அதுக்குப்பேரு அவுட்டிங், ஹனிமூன் அல்ல 


10   கேர்ள் பிரண்ட்ஸ் இல்லைனு ஒருத்தன்   சொன்னா அது முழுப்பொய் .அது  உண்மையா  இருந்தாக்கூட  யாருமே ரசிக்காத  ஒரு ஆளை நான்  என் கல்யாணம் பண்ணிக்கணும் ? 
11  மேரேஜ் ஈஸ் காம்ப்ரமைஸ் ஆப் லைஃப் 


12  சரக்கு பார்ட்டியா  இருந்தாக்கூட ஓகே  ஆனா  அவனுக்கு சமைக்கத்தெரிஞ்சிரு க்கணும் 13   மேரேஜ் அப்டின்னா  என்ன?  ஹனிமூன்க்கு  முன்  நடப்பது 


13   நாம தெரிஞ்சே  செய்யும்  தப்புக்குப்பேரு தான் கல்யாணம் 


14  நாம்  ஆரத்தி எடுத்து வரவேற்கும்  ஒரு  ஆபத்துதான்  கல்யாணம் 15   சார் , மேரேஜ் பற்றி என்ன  நினைக்கறீங்க? 


நீ ரெடின்னா  நானும் ரெடி 


 சார் , கருத்துதான் கேட்டேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கதை , திரைக்கதையில் ஒரு  அழுத்தம் இல்லை , எனோ தானோ  என காட்சிகள் நகர்கின்றன  


2  நாயகன் வேலைக்குப் போகாமல் வீட்டில் வெட்டியாகத்தான்  இருக்கிறான் என்பது நாயகிக்குக்கடைசி வரை தெரியவே இல்லை , அது எப்படி ? சம்சாரம் என்றாலே கழுகு மாதிரி மூக்கில் வியர்க்குமே ?


2  மாதம் ஒரு  லட்சம் சம்பளம் வாங்கும் நாயகி சமையலுக்கு ஆள் கூட வைக்க மாட்டாரா? இருவரும் டைம் டேபிள் போட்டு சமைப்பது , அதுக்காக சண்டை இடுவது ஏன்? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஷிவானி ராஜசேகரை ரசிப்பவர்கள் , மெலோ டிராமாவை பார்க்க விரும்புகிறவர்கள் போகலாம் . ரேட்டிங்  2/ 5 


வித்யா வஸுல அஹம்
இயக்கம்மணிகாந்த் கெல்லி
எழுதியவர்வெங்கடேஷ் ரவுது
மூலம் திரைக்கதைமணிகாந்த் கெல்லி
உற்பத்திநவ்யா மகேஷ் எம்.
ரஞ்சித் குமார் கோடாலி
சந்தன கட்டா
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஅகில் வல்லூரி
திருத்தியவர்சத்யா கிடுதூரி
இசைகல்யாணி மாலிக்
உற்பத்தி
நிறுவனங்கள்
எடர்னிட்டி என்டர்டெயின்மென்ட்
தன்விகா ஜாஷ்விகா கிரியேஷன்ஸ்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஆஹா
வெளிவரும் தேதி
  • 17 மே 2024
நேரம் இயங்கும்
103 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

Tuesday, July 09, 2024

PARADISE (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )

                 


       2  சுவராஸ்ய தகவல்கள் இப்படத்தைப்பார்க்கத்தூண்டியது . இது மணி ரத்னத்தின் சொந்தப்படம் . 2023 ஆம் ஆண்டு நடந்த 28 வது புஷன்  இண்ட்டர் நேசனல்  பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்டு   கிம் ஜூஸோக் விருது பெற்ற படம் இது இது போக ஏராளமான திரைபபட விருது விழாக்களில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்ற படம் . இப்பொது  தியேட்டர்களில் 28/6/2024 முதல் திரை இடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது . ஓடி டி  யில் வர இன்னும் ஒரு மா தம் ஆகும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


2022 ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி காலகட்டம் . அப்பொது நடக்கும் கதை . இலங்கை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருந்ததால் இந்தியாவில் இருந்து இலங்கை வரும்  சுற்றுலாப்பயணிகளுக்கு  பல சலுகைகளை அறிவிக்கிறது . ஒரு இந்திய  தம்பதி ஆன நாயகன் - நாயகி    இருவரும்  இலங்கை டூர் வருகிறார்கள் . ராமாயண கதையில்  சொல்லப்பட்ட இடங்களுக்கு அவர்கள் பயணம் செய்கிறார்கள் பயணத்த்தின் நடுவே ஒரு     விடுதி யில் தங்குகிறார்கள் . அன்று இரவு அவர்கள் உடமை ஆன லேப்டாப்  மற்றும் சில பொருட்கள் திருடப்படுகிறது .போலீசில் புகார் கொடுக்கிறார்கள் , ஆனால் அவர்கள் பெரிதாகக்கண்டுகொள்ளவில்லை . நாயகன் தனக்கு மேலிட  செல்வாக்கு உண்டு / மேலதிகாரிகளைத்தொடர்பு கொள்ளவா ?  என்று மிரட்டியதும்   போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது 


 குற்றவாளிகள்  என சிலரைக்கைது   செய்து  விசாரிக்கிறார்கள் . கைது செய்யப்பட்ட ஆட்களின் உறவினர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் . இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள்  தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக ரோஷன் மேத்யூ சிறப்பாக நடித்தருக்கிறார் நாயகி ஆக தர்சனா  ராஜேந்திரன் அழகாக  வந்து போகிறார். மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லை என்றாலும்  இது சர்வதேச விழாக்களில்  கலக்க இருப்பதால்  லிப் லாக் காட்சிகளை  வலுக்கட்டாயமாக திணித்திருக்கிறார்கள் 


ஷியாம் பெர்னாண்டோ என்ற இலங்கை  நடிகர் டூரிஸ்ட்  கைடாக அருமையாக நடித்திருக்கிறார் .காவல் அதிகாரி ஆக மகேந்திரா பெரேரா  பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் 


கே  என்பவர் தான் இசை .பின்னணி இசை பரபரப்பு . ஸ்ரீகர் பிரசாத் தான் எடிட்டிங்க்  மொத்தப்படமே 95  நிமிடங்கள் தான் . ராஜிவ்  ரவியின் ஒளிப்பதிவு இலங்கையின் அழகை படம் பிடித்து கண் முன் நிறுத்துகிறது 


அனுஸ்கா சேனாநாயகே  என்பவர் தான்  திரைக்கதை அமைத்து இருக்கிறார் பிரசஅண்ணா விதானகே  தான் இயக்கம் 


சபாஷ்  டைரக்டர்


 1 ராமாயணக்கத்தை நிகழும் இடங்களை  மையமாக வைத்து கதை  எழுகினால் போணி  பண்ணி விடலாம் என்ற  ஐடியா 2  பிரமாதமான ஒளிப்பதிவு 


3   நாயகன் , நாயகி , டூரிஸ்ட் கைது , போலீஸ் ஆபிஸர்  போன்ற முக்கிய நடிகர்களின் நடிப்பு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

  1  மெயின் கண்டடென்ட்  30 நிமிடங்கள் தான் .இருவரும் காரில் போவது , ஹோட்டலில் சாப்பிடுவது , ,  தம் அடிப்பது , தண்ணி அடிப்பது போன்ற தேவையற்ற காட்ச்சிகளை கேட் செய்தால் படமே ஒரு  குறும்படமாகத்தான்  வரும் 


2  நெருக்கடியான  கால கட்டங்களில் மனித மன உணர்வுகள் எப்படி வித்தியாசமாக சி ந்திக்கும் என்பதுதான்  கதைக்கரு   என  இயக்குனர்  ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார் . அதைப்படித்த பின் தான் , ஓஹோ அதுதான்  மேட்டரா ? என என்ன வைத்தது 


3   க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்  படு செயற்கை . நம்பவே முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கமர்ஷியல் பட பார்க்கும் ஜெனரல் ஆடியன்ஸுக்கு இப்படம் பிடிக்காது . ஆனால் விருதுப்படங்கள் ,உலகப்படங்கள் பார்ப்பவருக்குப்பிடிக்கும்,. மீடியாக்கள் , ரைட்டர்கள் இப்படத்தை ஆஹா ஓஹோ அபாரம் பரிமளா ரேஞ்ச்சுக்குக்கொண்டாடுகிறார்கள் , ஆனால் எனக்குப்படம் பிடிக்கவில்லை . ரேட்டிங் 2.25 / 5 

Monday, July 08, 2024

ஜோக் 101 (2024) - கன்னடம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ தந்தி 1 சேனல்

     

     யு டியூப்பில்  இலவசமாகப்படங்கள்    பார்ப்பது போலவே இப்போதைக்கு தினத்தந்தி நாளிதழின்  தந்தி 1 சேனல்  பல மாற்று மொழிப்படங்களின்  தமிழ் டப்பிங்க்  வடிவை இலவசமாகப் பதிவேற்றிக்கொண்டிருக்கிறது .இதில்  நான்  பார்த்த முதல்   படம் இது தான் . 102 நிமிடங்கள் ட்யுரேஷன் என்பதால் குயிக்  வாட்ச் ஆகவே      பார்த்து விடலாம் .7/3/2024  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ் ஆன இப்படம் இப்போது தந்தி 1 சேனல் -ல் திரை இடப்படுகிறது               


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனின் நண்பனின் தங்கை ஒருவனைக்காதலிக்கிறாள் . காதலனுடன் டூர் போகிறாள் . போன  இடத்தில் ஆள் மிஸ்ஸிங் அவள் காதலனால் 2  மாத  கர்ப்பிணி ஆக   வேறு இருக்கிறாள் . அதனால் காதலன் தான் அவளைப்போட்டுத்தள்ளி இருப்பானோ? என ஒரு டவுட் நாயகன்  - ன் நண்பன் வெளி நாட்டில் இருப்பதால் நண்பனுக்காக  நாயகன்  அந்த மர்மத்தை  துப்பு துலக்க களம்  இறங்குகிறான் 

நண்பனின் தங்கை டூர்  போன இடத்துக்கு நாயகன் வருகிறான் .

நண்பனின் தங்கைக்கு தான் பரிசாகக்கொடுத்த  நெக்லஸை   ஒரு  பெண்  அணிந்து கொண்டு ஸ்கூட்டியில் போவதைப்பார்க்கிறான்  . அந்தப்பெண்ணை பின் தொடர்ந்து  செல்கிறான் . அந்தப்பெண்  தான்   படத்தின்  நாயகி . நாயகன் நாயகி  மீது காதல் வசப்படுகிறான் . நாயகி எஸ்   ஆர் , நோ எதுவும் சொல்லாமல் தனது  பெற்றோரைப்பார்த்துப்பேசச்சொல்கிறாள் 


நாயகன் வந்த வேலையை விட்டு விட்டு தன சொந்த வேலையைப்பார்த்துக்கொண்டிருக்கிறானே என அவன் நண்பனுக்குக் காண்டு .இதற்குப்பின் நடக்கும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதைநாயகன் -நாயகி ஆக விஜய ராகவேந்திரா + தேஜஸ்வினி  நடித்திருக்கிறார்கள் . இதில் நாயகன் வழக்கமான ஆக்சன்  ஹீரோ செய்யும் எல்லா  வேலைகளையும்  செய்கிறான்  


நாயகி ஆக  வரும் தேஜஸ்வினி கொஞ்சம்  கீர்த்தி சுரேஷ் சாயல் , கொஞ்சம்  மீரா  ஜாஸ்மின்  சாயல்  என காக்ட்டெய்ல் தேவதை ஆக வருகிறார் .   அவரது   கண்ணியமான  கிளாமர்    ரசிக்க  வைக்கிறது 

சபாஷ்  டைரக்டர்


1   முதல் பாதி கதை லவ் ஸ்டோரி போல செல்வதால் நேரம் போவதே தெரியவில்லை 


2  ஜோக் அருவி யை பல கேமரா கோணங்களில் காட்டிய விதம் கொள்ளை அழகு 


3 க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் 


  ரசித்த  வசனங்கள் 


1     இந்த  அம்மன் ரொம்ப சக்தி உள்ளது . திருமணம் ஆகாத ஜோடி இங்கே வந்தா   திருமணம் ஆகும் , திருமணம் ஆன  ஜோடி இங்கே வந்தா  மீண்டும் ஒரு முறை திருமணம் ஆகும் , 


2    இவன் வாட்ச் மேனா ? எமனோட கீப்போட   பையன்  மாதிரி இருக்கிறான் 


3   பொதுவா டூரிஸ்ட்டா வர்றவங்க ஊருக்குபோய்ச்சேர்ந்தா போதும்னுதான் நினைப்பாங்க , போலீஸ் கிட்டே போக மாட்டாங்க 


4  இந்த ஊரைப்பிடிச்ச முதல் தரித்திரம் இவன் தான்னு சொல்றீங்களே? அப்போ இன்னும் இதே மாதிரி பல தரித்திரங்கள் இங்கே இருக்கா? 


5   என்ன ? விதி இங்கே டபுள்காட் போட்டு   படுத்திருக்கு ? 


6  நீ  சாப்ட்வெர்  தான் , என் அண்டர்வேர் கதை தெரியுமா? 


7  சுவரை உடைக்கும் அளவு உங்க தலை  பலமா  இருக்கலாம்  ,ஆனா  உங்க தலை உடையாம இருக்கணுமே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு குடும்பத்தில்  பாட்டி ,  அம்மா,அப்பா மூவரும் சேர்ந்து  100 கொலைகள் , கொள்ளைகள் செய்து விட்டு அந்த வீட்டுக்கு வாரிசாக இருக்கும் நபர் பார்வைக்கு எதுவுமே தெரியாமல் வாழ முடியுமா? 


2  டூரிஸ்ட் ஸ்பாட்டில் போலீஸ் , பாரஸ்ட் ஆபிசர்ஸ்  யாரும் விசிட்  அடிக்க  மாட்டார்களா? 


3  கொள்ளை அடிக்கும்  நகையை உருக்கி தங்கமாக விற்று  புது டிசைனில் நகை செய்து போடுவது பாதுகாப்பா? அப்படியே  அதே நகையை அணிவது பாதுகாப்பா? 


4   வில்லனின் [பிளாஷ்பேக்  கேவலம் .தன செய்கையை  நியாயப்படுத்த ஒரு சோகக்கதை சொல்வது   கொடுமை 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - Uசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஒளிப்பதிவு , அருவி , நாயகியின்  அழகு  இந்த மூன்றையும் ரசிக்க விரும்புபவர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.5 / 5 

Sunday, July 07, 2024

MANTHRIKA KUTHIRA (1996) -மேஜிக் குதிரை - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ யு ட்யூப்

       


         முகநூலில்  நண்பர் ஒருவர் இப்படத்தைப்பரிந்துரைத்தபோது அசால்ட் ஆக விட்டு விட்டேன் , காரணம் டைட்டில் பிடிக்கவில்லை . அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்ன பாலா  வில் வரும் வாண்டுமாமா கதை போல் தோன்றியது . ஆனால் இது ஒரு  க்ரைம் த்ரில்லர் என்பது அப்போது தெரியாது 


பரமேஸ்வரன் என்பவர் தன நாடகம்  ஆன  "ஸ்வப்னம் பக்கம் என் 32 " கதையில் இருந்து சுடப்பட்டது  என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார் . ஆனால் தீர்ப்பு அவருக்கு சாதகம் ஆக வரவில்லை . ரிலீஸ் ஆன கால கட்டத்த்தில் இப்படம் ஹிட் தான் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன் ஒரு கொலைக்குற்றவாளி . நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவன் . கோர்ட்டில் கேஸ் நடக்கிறது .நாயகன் ஒரு வக்கீல் . திறமையாக வாதாடி வில்லனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை  தீர்ப்பு வர வைக்கிறார் . இதில் செம காண்டான வில்லன் கோர்ட்டிலேயே  சவால் விடுகிறான் . உன்  குடும்பத்தைக்கொல்லாமல்  விடமாட்டேன் என்கிறான் 


நாயகன் ஒரு கிரிமினல் லாயர் மட்டும் அல்ல .க்ரைம் கதை ஆசிரியர் கூட .பார்ட் டைம் ஜாப் ஆக நாவல்கள் எழுதி வெளியிடுவார் நாயகனின்  மனைவி நாயகனுக்கு நாவல் எழுதுவதில் துணை ஆக இருக்கிறார் . அதாவது நாயகன் கதை , திரைக்கதையை சொல்லச்சொல்ல மனைவி எழுதித்தருவார் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு அவள் 10 வயது சிறுமி . ஹாஸ்ட்டலில் தங்கி படிக்கிறாள் நாயகனுக்கு ஒரு  தம்பி உண்டு . அவன் சினிமா இயக்குநர் ஆகும் கனவில் இருப்பவன் . நாயகனின் மனைவிக்கு ஒரு  தங்கை உண்டு .காலேஜில் படிக்கிறாள் . அவ்வப்போது தன அக்காவைக்காண  இங்கே வருவாள் . நாயகனின் தம்பிக்கு அவள் மேல் காதல் உண்டு , ஆனால் வெளிப்படுத்தாக காதல் நாயகன் ஒரு  ரைட்டர் என்பதால் அவருக்கு பல ரசிகைகள் உண்டு . அடிக்கடி போன் பண்ணி பேசுவார்கள் . இது நாயகனின்  மனைவிக்குப்பிடிப்பதில்லை 


ஒரு நாள் ஒரு  சாலை  விபத்தில் நாயகனின் மனைவி மாட்டிக்கொள்கிறார் . 3 மாதங்கள் ஓய்வு    எடுக்க  வேண்டும்  , தாம்பத்ய உறவு தவிர்க்க வேண்டும் என  டாக்டர் அட்வைஸ் . அந்த அட்வைஸை மீறி நாயகன் நெருங்கும்போது  மனைவி  அதை தவிர்க்கிறார் .இதனால் நாயகனுக்கு தன  மனைவி மீது கொஞ்சம்  கோபம் 


இப்படி இருக்கும்  தருணத்தில்  வில்லன் சிறையில் இருந்து தப்பி விட்டதாக தகவல் வருகிறது நாயகனின்  வீட்டுக்குப்போலிஸ் காவல் போடப்படுகிறது . வில்லன்  தப்பித்த  அடுத்த  நாள் இரவு நாயகனின் மனைவி  தற்கொலை செய்து இறந்து விடுகிறாள் போஸ்ட்  மார்ட்டம் ரிப்போர்ட்டில் அளவுக்கு அதிகமாக  தூக்க மாத்திரை உட்கொண்டு  பின் துப்பாக்கியால் தன்னைத்தானே  சுட்டுக்கொண்டதால்  மரணம்  என வருகிறது .இதில் போலீசுக்கு குழப்பம் . தற்கொலை செய்பவர்  எதற்காக இரண்டு வழிகளை  மேற்கொண்டார் ? வில்லன் தான் வந்து சுட்டிருப்பாரோ? என சந்தேகப்படுகிறார்  


நாயகனின் மனைவி சாகும் முன் எழுதி வைத்த கடிதம் போலீஸ் கையில் சிக்குகிறது . அதில்  தன தங்கையை   நாயகன் திருமணம் செய்து கொள்ள வேண்டும், தன குழந்தையை தன தங்கை  தான்  கவனித்துக்கொள்ள வேண்டும்  என எழுதி இருக்கிறார்   


நாயகனுக்கும் ,  நாயகனின் முதல் மனைவியின் தங்கைக்கும்  திருமணம் நடக்கிறது .


திருமணத்துக்குப்பின்  தான்  நாயகிக்கு  தன்    அக்கா எழுதி வைத்த  டைரி கிடைக்கிறது . சில மர்ம  முடிச்சுகள் அவிழ்கின்றன . இதற்குப்பின்  நடக்கும்  திருப்பங்கள் தான்  திரைக்கதை 

நாயகன் ஆக மனோஜ் கே ஜெயன் பிரமாதமாக நடித்திருக்கிறார் .கோர்ட்டில் வாதிடும்போதும் , வில்லனுடன் வாக்குவாதம் செய்யும்போதும் உணர்ச்சிகரமான  நடிப்பு . மனைவியுடன் கொஞ்சும் நேரத்தில் காதல் இளவரசன் . 


வில்லன் ஆக பாபுராஜ் .அதிக காட்சிகள் இல்லை . வந்தவரை ஓகே .நாயகனின் மனைவியாக  வாணி விஸ்வநாத் கச்சிதம் . கணவனின் ரசிகைகள் போனில் பேசும்போது பொஸசிவ்னெஸ்   காட்டுவது அருமை நாயகி ஆக நாயகனின் மச்சினியாக  மோகினி . ஈரமான ரோஜாவே அறிமுக நாயகி . அழகுப்பதுமை 


நாயகி மீது ஒருதலைக்காதல் கொண்டவராக திலீப் . அப்பாவித்தனமான நடிப்பு 


நாயகனின் உதவியாளராக கலாபவன் மணி  அதிக வாய்ப்புகள் இல்லை . இயக்குநர் ஆனா விஜி தம்பி வக்கீல்  கேரக்டரில்  கெஸ்ட் ரோல் பண்ணி இருக்கிறார் 


சலு  ஜார்ஜின் ஒளிப்பதிவு கச்சிதம் மோகினி, வாணி விஸ்வநாத் இருவருக்குமான க்ளோசப் ஷாட்கள் குட் 


ஸ்ரீகர் பிரஸாத்தின்  எடிட்டிங்கில்  படம் இரண்டேகால் மணி நேரம் ஓடுகிறது 


கும்மாளம் கூறினார்    என்பவர் எழுதிய கதைக்கு  சுலூர் டென்னிஸ்   என்பவர் திரைக்கதை எழுதி இருக்கிறார் .


டொமேன் ஜெ  தச்சங்கரி   என்பவர் தான்  இசை .இரண்டு பாடல்கள் சுமார்  ரகம், பின்னணி இசை குட் 

 விஜி தம்பி என்பவர் இயக்கி இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்


1  பரபரப்பான கோர்ட் சீனுடன்  டேக் ஆப் ஆகும் கதை மனைவி இறப்புக்குப்பின் இன்னும் சூடு பிடிக்கிறது 


2   நாயகன் எழுதிய நாவலின் டைட்டில் தான் படத்தின் டைட்டில் என்பதால் டைட்டிலுக்கான விளக்கம்  தேவைப்படாதது 


3  பின் பாதியில் வெளியாகும் டிவிஸ்ட் 


4  ஆசை , வாலி . உயிர் போன்ற தமிழ் ஹிட் படங்களுக்கு  முன்னோடியாக அமைந்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 

 1  என்னங்க ? உங்களுக்கு  நேரம் , காலம் எல்லாம் இல்லையா? 

டைம் டேபிள் போட்டு தம்பதிகள் லவ்  பண்ண முடியுமா? 

2  மனுஷன் கண்டுபிடிக்க முடியாததை ஒரு  நாய் கண்டுபிடிச்சிடும்னு நினைக்கிறீங்களா? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   வில்லன் 40 வருடங்கள் தண்டனை பெற்ற குற்றவாளி .அவனைப்பிடிக்காமல் போலீஸ் அசால்ட் ஆக இருப்பது எப்படி? அவன் பாட்டுக்கு அடிக்கடி நாயகன் வீட்டுக்கு கெஸ்ட் மாதிரி வந்துட்டுப்போறான் , ஆனால் செக்யூரிட்டி ஆக வேலை பார்க்கும் இரு போலீசுக்கும்  அது தெரியவில்லை  

2  மந்திரிகா குதிரை என்ற நாவலில் தான் டிவிஸ்ட் இருக்கிறது .அந்த நாவலை நாயகன் பதிப்பகத்திடம் தருகிறான் . அது ஆபத்து என்பது  தெரியாதா? 

3  மந்திரிகா குதிரை என்ற நாவலில்  நாயகனின் குயுக்தி க்ரைம்  மூளை  வெளிப்படுகிறது . அதை டிக்டேட் செய்யும்போது மனைவிக்கு சந்தேகம் வரவில்லையா? 

4  நாயகி தன  அக்காவின் உடையை அணிந்து முதல் இரவுக்கு வரும்போது பேயைக்கண்டவன் போல நாயகன்  அலறுகிறான் . க்ளைமாக்சில் நாயகி தன்னை நாயகன் நெருங்காமல் இருக்க அதே யுக்தியைக்கடைப்பிடித்திருக்கலாமே? அக்காவின் உடையை அணிந்தால் அருகில் வரமாட்டார் அல்லவா? 


5  க்ளைமாக்சில் நாயகன் நாயகியை அடைய மிகவும் தீவிரமாக முனைப்பு காட்டுகிறான் . ஆனால் திருமணம் ஆகி முதல்  இரண்டு நாட்கள் பொன்னான வாய்ப்பு .தவற விடுகிறான் 


6 வில்லன் கொடூரமானவன் . ஆல்ரெடி பல ரேப் கேசில் சிக்கியவன் . ஆனால் நாயகனின் பெட்ரும்  வரை வந்தும்   நாயகனின் மனைவியையோ , மச்சினியையோ எதுவும் செய்யவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  A

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் த்ரில்லர்  ரசிகர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 


மந்திரிகா குதிரை
திரைப்பட விசிடி கவர்
இயக்கம்விஜி தம்பி
எழுதியவர்கலூர் டென்னிஸ்
மூலம் கதைகும்மனம் கூறினார்
உற்பத்திபி.டி.ஆபிரகாம், ஜோஸ் மேத்யூ
நடித்துள்ளார்மனோஜ் கே. ஜெயன்
வாணி விஸ்வநாத்
மோகினி
லாலு அலெக்ஸ்
பாபுராஜ்
திலீப்
ஒளிப்பதிவுசலூ ஜார்ஜ்
திருத்தியவர்ஸ்ரீகர் பிரசாத்.
இசைடோமின் ஜே தச்சங்கரி
வெளிவரும் தேதி
  • 1996
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

Saturday, July 06, 2024

ரசவாதி (2024) - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் ஆக்சன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம் + ஆஹா தமிழ் ஓடிடி

         

i              இயக்குனர் சாந்த குமார் 2011 ஆம் ஆண்டு மவுன குரு  என்ற மாறுபட்ட  ஆக்சன்  த்ரில்லர்  மூவி தந்தவர் .8 வருட இடைவெளிக்குப்பின்  மகா முனி   என்ற  டபுள் ஆக்சன் ஹீரோ சப்ஜெக்ட்டை   2019ல்    தந்தவர் .அவரது முதல் படம் கமர்ஷியலாக செம ஹிட் .   இரண்டாவது  படம் பலரது பாராட்டுதல்களையும் ,விருதுகளையும்   வென்றது மூன்றாவது  படமாக ஒரு மாறுபட்ட சைக்கோ க்ரைம் ஆக்சன் த்ரில்லர் தந்திருக்கிறார் 


10/5/2024 முதல் திரை அரங்குகளில் வெளியான இப்படம் இப்போது அமேசான் பிரைம்  + ஆஹா தமிழ் ஓடிடி ஆகிய தளங்களில் காணக்கிடைக்கிறது ஸ்பாய்லர்  அலெர்ட் வில்லன் சின்ன வயதில் இருந்தே பல  கொடுமைகளைக்கண்முன் கண்டவன் . அப்பா சரி இல்லை .அம்மாவை அவன் கண் முன் அப்பா  கொடுமைப்படுத்துவார் .அம்மாவின் கொடூர மரணத்துக்கு அவனது அப்பாதான் காரணம் . இந்த வடு அவன் மனதில் பெரிய பாதிப்பை உண்டு பண்ணி அவனை சைக்கோ ஆக்குகிறது . பெரியவன்  ஆனதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறான். அவனுக்குக்கீழ் பணியாற்றும் ஆட்களைக்கொடுமைப்படுத்துகிறான் . இப்படி வில்லனின்   கேரக்டர் டிசைன் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு எக்சிக்யூட் செய்யப்பட்டுள்ளது நாயகன் ஒரு சித்த மருத்துவர்  . இயற்கை நல விரும்பி . மிக அமைதியானவர் .நாயகி  ரிசார்ட் ஒன்றில் மேலாளராகப்பணி புரிகிறார் . இருவரும் சில சந்திப்புகளில் பரஸ்பரம் விரும்புகிறார்கள் .மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலே வில்லனுக்குப்பிடிக்காது,அதுவும் நாயகன் , நாயகி இருவரும் காதலிப்பது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை . நாயகன் இதற்கு முன் வில்லனைக்கண்டதில்லை . ஆனால் வில்லனுக்கு நாயகனைத்தெரிந்திருக்கிறது .ஒரு பகையும் இருக்கிறது .வில்லனுக்கும், நாயகனுக்கும் இருக்கும்  முன் பகை என்ன? முன் பின்  கண்டிராத வில்லனுக்கு  நாயகன்  எப்படிப்பகையாளி ஆனான்  என்பது  க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் 


வில்லன் ஆக சுஜித்   சங்கர்  அற்புதமாக நடித்திருக்கிறார் . ஒரு  ரகுவரானோ , பிரகாஷ் ராஜோ  செய்ய   வேண்டிய  ரோல் .   சர்வ சாதாரணமாக இவர் அந்த ரோலில் கலக்கி இருக்கிறார். 


நாயகன் ஆக அர்ஜுன் தாஸ் . மிக அமைதியான ரோலில் படம் முழுக்க வருபவர் பிளாஷ்பேக்கில் ஆக்சன் காட்டுவது   குட்


நாயகி ஆக தான்யா ரவிச்சந்திரன் குடும்பப்பாங்கான தோற்றம் . கண்ணிய உடை அழகு. ஆனால் அவரை தம் அடிப்பவராக , போதைப்பழக்கம் உள்ளபவராக காட்டியது தேவை  அற்றது வில்லனின் மனைவி ஆக  ரேஷ் மா வெங்கடேஷ் .பாவமான தோற்றம் . பரிதாபம் வர வைக்கும் நடிப்பு  

சைக்கலாஜிக்கல் டாக்டர் ஆக   ரம்யா   சுப்ரமணியம் கச்சிதம் 

இசை எஸ் தமன் . இரண்டு பாடல்கள் ஓக்கே ரகம் .பின்னணி இசை கச்சிதம் .ஒளிப்பதிவை நான்கு பேர் கவனித்து இருக்கிறார்கள் . கொள்ளை அழகு லொகேஷன்கள் .,இயற்கைக்காட்சிகளை  ரசிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் 


விஜே சாபு , ஜோசப் இருவரும் எடிட் செய்து இருக்கிறார்கள் . இரண்டு மணி நேரம் 15  நிமிடங்கள் படம் ஓடுகிறது . பிளாஷ்பேக் காட்சி கொஞ்ச்ம ஸ்பீடு பிரேக்கர் 

கதை , திரைக்கதை எழுதி , இயக்கி தயாரித்து இருப்பவர்  இயக்குனர் சாந்த குமார் 


சபாஷ்  டைரக்டர்


1  இயக்குனர் ஹரி மாதிரி காமெராவை ஆட்டாமல் அமைதியாகக்கதை சொல்லிய பாங்கு 


2  வில்லனின் கேரக்ட்டர் டிசைனை வடிவமைத்த விதம் , அதை எக்சிக்யூட் செய்த விதம்  


3  முதல் பாதி திரைக்கதை சுவராஸ்யம் 


4   வில்லன் வரும் இடங்களில் பகிரும் பீதி ஊட்டும் பிஜிஎம் 


  ரசித்த  வசனங்கள் 


1  பாத ரசத்தை  ஏன் அரசன்  என சொல்கிறார்கள் ?  அனைத்து கேரக்ட்டர்களையும்  அரசன் உள் வாங்கிக்கொள்வது போல பாத ரசமும் செயல்படுவதால் 


2  நம்ம வீட்டுப்பெண்கள்  லவ் மேட்டர்ல வீட்ல மாட்டிக்கிட்டா உடனே கல்யாண சம்பந்தம் சொந்தத்துல  பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க 


3   கற்பனை பண்ணின வாழ்க்கைக்கும், வாழும் வாழ்க்கைக்கும்  சம்பந்தம் இல்லை , இருக்காது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1 வில்லன் ஒரு சைக்கோ பேஷண்ட் , அவனுக்கு எப்படி போலீஸ் வேலை கிடைத்தது ? டிபார்ட்மெண்ட்டில் பலரும் அவனால் பாதிக்கப்பட்டிருக்கும்போது யாருமே புகார் தர்லையா? 


2  வில்லன் தன  ஹையர் ஆபிசரைக்கோலை  செய்தது யாருக்குமே தெரியாமல் போவது எப்படி? சந்தேகம் கூட வராதது எப்படி ? 


3  திருமனம் ஆகி தன கணவன் வீ ட்டுக்குப்போகும் பெண் தன சூட்கேசில் முன்னாள் காதலனுடன் ஜோடியாக இருக்கும் போட்டோ வைக்கொண்டு போகுமா? 4  வில்லன் ஒரு சைக்கோ என ஊரே பேசுகிறது , ஆனால் பெண் வீட்டாருக்கு அது தெரியாமல் இருக்கு. விசாரிக்க மாட்டார்களா? 5 வில்லன் மீது மனைவியைத்தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதியாதது ஏன்? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரொமாண்டிக் மூவி ரசிகர்கள் , த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் . பொறுமை அவசியம் .ரேட்டிங் 2.75 / 5 


Rasavathi
Theatrical release poster
Directed bySanthakumar
Written bySanthakumar
Produced bySanthakumar
StarringArjun Das
Tanya Ravichandran
Reshma Venkatesh
Sujith Shankar
CinematographySaravanan Ilavarasu
Shiva GRN
Edited byV. J. Sabu Joseph
Music byS. Thaman
Production
companies
DNA Mechanic Company
Saraswathi Cine Creations
Distributed bySakthi Film Factory
Release date
  • 10 May 2024
CountryIndia
LanguageTamil

Friday, July 05, 2024

SUGARLESS (2022) -கன்னடம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா) @ ஜியோ சினிமாஸ்

   


    கன்னட சினிமா உலகில் வெளி வந்த முதல் சர்க்கரை வியாதி சம்பந்தப்படட கமர்ஷியல் பிலிம் இது  எஜுக்கேசன்  பிலிமோ என யாரும் பயப்பட வேண்டாம் .காமெடி சப்ஜெக்ட்  தான் .2022 ஜூலை 8 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ்  ஆகி ஹிட்ஆன  இப்படம்   இப்போது  தமிழ் டப்பிங்கில் ஜியோ சினிமாஸ்  ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு அவனோட நண்பன் வேலை செய்யும் கம்பெனில நண்பன் சிபாரிசு மூலமா வேலை கிடைக்குது . அங்கே பணி புரியும் சக பணியாளை  நாயகன் பார்த்ததுமே லவ் பன்றார் , ஆனா நாயகி கண்டுக்கவே இல்லை . ஆனா ஆ பிஸ்ல     சக்ஸஸ்புல்லா வலம் வர ஆரம்பிச்ச பிறகு நாயகி நாயகனை லவ் பண்ண ஓகே சொல்லிடறா . முதல் பாதி படம் காதல் ,பாட்டு , கலாட்டா  என    மாமூல் ரொமாண்டிக்  டிராமா   மாதிரி போகுது 


இடைவேளை அப்போதான் டிவிஸ்ட் . 28  வயதான  நாயகனுக்கு  சுகர் இருக்கு . அந்த விஷயம் நாயகிக்குத்தெரி யாம இருக்க நாயகன் படும் பாடுகள் தான்  மீ தி   கலாட்டா கதை 


நாயகன்    ஆக பிருத்வி   அம்பார் இயல்பாக நடித்திருக்கிறார்   நாயகி ஆக பிரியங்கா திம்மெஸ் கச்சிதமாக நடித்திருக்கிறார் நாயகனின் நண்பன்  ஆக  தர்மன்னா கடூர் காமெடி போர்சனை  கவனிக்கிறார் .இது போக குறிப்பிடட சிலரும் வந்து போகிறார்கள் அனுப் சிலீன்  இசையில் இரண்டு பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசை சராசரி லவித்தின்  ஒளிப்பதிவு குட் ரவிச்சந்திரன் எடிட்டிங்கில் படம் இரண்டே கால் மணி நேரம் ஓடுகிறது 


கதை , திரைக்கதை ,இயக்கம், தயாரிப்பு  என எல்லாமே  கே எம் சசிதர்  கவனிக்கிறார் சபாஷ்  டைரக்டர்


1   உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நல்ல கருத்துக்களை கமர்ஷியல் சாக்லேட் தடவிக்கொடுத்த விதம் 


2  முதல் பாதி காதல், காமெடி , பின் பாதி  காமெடி கலாட்டா  என பிரித்துக்கொண்டு  திரைக்கதை அமைத்த விதம் செம  ஹிட்  சாங்க்ஸ்


  ரசித்த  வசனங்கள் 1  யோகா எல்லாருக்கும் வராது ,நோய் யாரையும் விடாது 


2   என் சம்சாரம் வாழ்க்கைல ஒரு  கொள்கை வெச்சிருக்கா 


 டமாரம் டேவிட்  = என்னது ? உ ன் சம்சாரம்  எவனையோ  வெச்சிருக்காளா ? 


டேய் , அவ வாழ்க்கைல ஒரு   பிரின்ஸிபிள்  ( கொள்கை )  வெச்சிருக்கா 


 டமாரம் டேவிட்  = என்னது ? உ ன் சம்சாரம்  பிரின்சிபாலையும்   வெச்சிருக்காளா ? 


3 இவ தான்  அலமேலு 


இவை சாகறதே  மேலு 4   ஏ பார் ஆப்பிள்னு கத்துக்கிட்ட அப்பவே ஏ  பார் ஆண்ட்டி  என  கத்துக்கிட்ட ஆள்  நான் ,   என் கிட்டேயே இங்க்லிஷா? 


5 பக்கத்து வீட்டுல வைபை  ஆன் பண்ணினா நம்ம வீட்டு மொபைல் அதை வேணாம்னா சொல்லும் ? 


6  என்னது ? நீ பிஹெச் டி யா? 


 பிரைமரி ஹை ஸ்கூல்  டிப்ளமோ 


7  இவ தான்   அப் லோடு அனிதா , ஆபிஸ் ல என்ன நடந்தாலும் பேஸ்புக்ல  அப்டேட்   பண்ணிடுவா 


8 பத்து லவ் ;லெட்டர் எழுதி ஒரு பெண்ணை கரெக்ட் பண்ணினவுன்  இல்லை , ஒரு லெட்டர் எழுதி  10 பெண்ணை கரெக்ட் பண்ணினவுன் இவன் 


9  சேலை இலவசமா கொடுத்தா  ஆட்சியே மாறுது .. பொண்ணு மாற மாட்டாளா ?


10  ஆல்ரெடி எங்களுக்கு 2  சைட்ஸ்  அவளுக்கு ஷார்ட்  சைட் , எனக்கு லாங்க் சைட் 11  ஒரு காலத்துல  அப்பா , அம்மா கூட இருந்தா  ஆல் பிராப்ளம்ஸ்  சால்வ்டு . இப்போ அவங்க கூட இருந்தாலே பிராப்ளம் தான் 


12 கடவுள் கிட்டே வரம் கேட்டா கடவுள் மாதிரி ஒருத்தனை வரமாக்கொடுத்தா  வேணாம்னு யாராவது  சொல்வாங்களா? 


13  சரக்கைத்தொட்டே நீ கெட்டே , எமன் எருமை மாட்டில் வந்து உன்னைக்கூட்டிட்டுப்போயிடுவா ன் 


14   பூசணிக்காய்   சாப்பிட்டா  சுகர் போயிடுமா? 


பூசணிக்காய்   சாப்பிட்டா   திருஷ்டியே போகும்போது சுகர்போகாதா? 


15   காத்து காலியா இருக்கே  என காலிபிளவர் வைக்காத 

16  பண்ணி மாதிரி கிடைக்கறதை சாப்பிடக்கூடாது , நந்தி மாதிரி கீரை , காய்கறி சாப்பிடணும் 


17  இருமுகிற எல்லாருக்கும் கொரானாவும் இல்லை ,  வாக்கிங் நடக்கிற எல்லாருக்கும் சுகரும் இல்லை 


18   என்னடா? பழி வாங்கிற பாம்பு    மாதிரி பார்த்துட்டு இருக்க? 


19  அந்த ஹிந்தி பிங்கர் டிப் பாட்டு போடு 


 அப்டின்னா? 


அதான் பா , பிரண்ட்ஷிப் பாட்டு 


20  என்னது ஸ்வீ ட் ஹவுசா? வீட்டின் பேரும் சர்க்கரை , வீட்டுக்கு வரப்போகும்  மாப்பிள்ளைக்கும்  சர்க்கரை  21  மாப்பிள்ளை வாய்க்கு சர்க்கரை தான் போடணும் 


அப்படிப்போட்டா  அது  வாய்க்கரிசி தான் 


22   என் பேரு  ஏ எல் சேஷன் 


ஓ , அல்சேஷனா ?23   ஸ்வீட் சாப்பிடறதால மட்டும் சுகர் வர்றதில்லை , ஆனா  சுகர்  வந்துட்டா  ஸ்வீட் சாப்பிடக்கூடாது 


24    பிகா இல்லாத வீடு கூட இருக்கு , ஆனா  சுகர் இல்லாத வீ டு இல்லை 


25  உலகத்துலயே ரொம்ப கஷ்டமான வேலை ஒரு பொண்ணோட மனசை ஜெயிப்பதுதான் 


26 ஒவ்வொரு மனுஷனுக்குமே நல்ல நேரம் ஒரு தடவை வரும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  நாயகனுக்கு சுகர் என்ற  தகவலை என்னமோ அவனுக்கு எய்ட்ஸ் இருப்பது போல  அனைவரும் ஓவர் ரி ஆக்ட்  காட்டுவது 


2 க்ளைமாக்சில் நாயகியின் பெற்றோர் நாயகியையே குறை சொல்வது நம்பும்படி இல்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - clean u சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு கொண்டவர்கள் பார்க்க வேண்டிய காமடி டிராமா . ரேட்டிங்  2.5 / 5 


Sugarless
Theatrical release poster
Directed byK. M. Shashidhar
Written byK. M. Shashidhar
Produced byK. M. Shashidhar
Starring
CinematographyLavith
Edited byRavichandran
Music byJ. Anoop Seelin
Production
company
Shashidhar Studios Productions
Release date
  • 8 July 2022
CountryIndia
LanguageKannada