Showing posts with label jokes POLITICS. Show all posts
Showing posts with label jokes POLITICS. Show all posts

Friday, March 18, 2016

ஹேமமாலினியின் புதிய படம் - தாரே கோ ஜமீன் சஹாய ரேட் பர்

1  லாபம் இல்லையென்றால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது-BSNLஅதிரடி முடிவு # லாபம் வரும்போது கமுக்கமா அமுக்கிக்கிட்டு நட்டம் வந்தா இப்டி============
சமகவில் என்னை நீக்கும் உரிமை சரத்க்கு இல்லை- MLA நாராயணன்

# ஒரு கட்சியின் தலைவருக்கு இருக்கும் அதிகாரம் பற்றி நாலெட்ஜ் உங்களுக்கு இல்லை


===========

3 சமக வை விரைவில் கைப்பற்றுவோம்-எர்ணாவூர் நாராயணன்# சமாதானம் ஆகி சரத் கை பற்ற வாழ்த்து.


==============

4 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தொண்டர்கள் பாடுபடவேண்டும் -ஜெ # போனாப்போகுது.ஒரு 10 சீட் எதிர்க்கட்சிக்கு விட்டுக்கொடுங்க.பாவமில்ல?

-=============

5 40 லட்சம் போலி வாக்காளர்கள் கருணாநிதி குற்றச்சாட்டை அலட்சியப்படுத்தக்கூடாது-இல.கணேசன்# ஆமா அதுல 20 லட்சம் திமுக 20 லட்சம் அதிமுக வாம்


===============

6 திமுக ஆட்சி அமைந்தால் 90லட்சம் பேருக்கு வேலை: ஸ்டாலின் # நமக்கு நாமே திட்டப்படி சுய தொழில் தொடங்கச்சொல்லிடுவாரோ?


================

7 பா.ஜனதா – தே.மு.தி.க. கூட்டணி பேச்சு தொடரும்: தமிழிசை சவுந்தரராஜன் # மழை விட்டாலும் தூவானம் ("தூ"றல்) விடாது என்பது போலவா?


=============


8 மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: அன்புமணி ராமதாஸ் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்..# (ஏ)மாற்றம் ,பின்னேற்றம்


===========

9 ஜெ சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
# எதிரிக்கு எப்பவும் அவகாசம் தரனும் - மோடி மைன்ட் வாய்ஸ்


=============


10 சிப்ஸ், பீட்சா, கோலா பானங்களில் எச்சரிக்கை படங்கள்- மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தல் # அப்டி எச்சரிச்சு எதுக்கு விக்கனும்?தடை போடலாமே?

=============


11 தலைக்கு சாயம் பூச ரூ.55 லட்சம் செலவு செய்து தயாரிப்பாளரை தலைசுற்ற வைத்த கத்ரீனா
# ஊரான் வீட்டு நெய்யா என் பொண்டாட்டி கையா?கடைத்தேங்காய் எடுத்து வழிப்பிள்ளையார்க்கு உடைச்ச கதை


==========


12 பிப்.20ல் தேமுதிக சார்பில் ‘தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு’: விஜயகாந்த் அறிவிப்பு! # கார்த்திக் நடிச்ச திருப்புமுனை எடுபடலை.அரசியலில் கேப்டனின் திருப்பு முனை எடுபடுதா?ன்னு பார்ப்போம்=========

13 கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த பகுதியும் வளர்ச்சி அடையவில்லை: பொன்.ராதா # இல்லையே?குற்றங்கள் அதிகரிச்சிருக்கே?அது வளர்ச்சிதானே?


==============


14 அரசு நிர்வாகம்-எல்லா துறையிலும் ஊழல் புற்றுநோய் போல் பரவியுள்ளது : ராமதாஸ் # புற்றுநோயை குணப்படுத்திடலாம்.ஊழலை எந்த டாக்டராலும் ம்ஹூம்


===========


15 பழ. கருப்பையாவின் குற்றச்சாட்டுகளுக்கு 'திராணியோடு' பதில் சொல்லுங்க-ஜெ க்கு விஜயகாந்த் சவால் # தி ராணி ஆப் அதிமுக.பேர்லயே திராணி இருக்கே?


=============

16 குஷ்பு எங்க அக்கா மாதிரி...- முத்தம் கொடுத்த மாதவன் விளக்கம் # அடங்கொக்கா மக்கா! தமிழர்கள்னா தொக்கா? இதை நம்பறவங்க மக்கா


============

17 அறிக்கைகளை மட்டும் அறிவிப்பதில் ஜெ ஹீரோ,அதை செயல்படுத்துவதில் ஜீரோ - மு .க.ஸ்டாலின் குட் த்ரோ.மேடம்,த பால் ஈஸ்.ஆன் யுவர் கோர்ட்


==========


18 அ.தி.மு.க நடிகர் விசு பா.ஜனதாவில் சேர்ந்தார்; ‘மாற்றத்தை தருபவர் மோடி’ என்று புகழாரம் # மாற்றம் முன்னேற்றம் னு கட்சி மாறிட்டாரா?சபாஷ்


================


19 ஹேமமாலினிக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கியதாக சர்ச்சை: விதிமுறை மீறல் இல்லை என பாஜக # தாரே கோ ஜமீன் சஹாய ரேட் பர்


============


20 அழகிரி பிறந்தநாள்: ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் # கலைஞருக்கு, ஸ்டாலினுக்கு அல்வா கொடுத்தார்களா?


====================

Saturday, March 12, 2016

குமார சாமிக்கு ஆப்பு ரெடி

1  உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க பரிசீலனை #  ஏற்கனவே வீட்டுக்குஉள்ளே பெண்கள் உள்ளாட்சி 100% நடக்குது, இனி இது வேறயா?


==============நேஷனல் ஹெரால்டு-சோனியா குடும்பத்தினர் ஆதாயம் பெறவில்லை-காங்கிரஸ் # ஆதாயம் பெற்றதுக்கு ஆதாரம் இருக்குன்னு ஆல்ரெடி தாயம் போட்டுட்டாங்களே?
============
நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க புதிய மசோதா: மத்திய அரசு ஆலோசனை # வெரிகுட், குமாரசாமில  இருந்து பிள்ளையார் சுழி போடுங்க
===============
4  ஹரித்வாரில் அர்த்த கும்பமேளா: 15 லட்சம் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு # 15 லட்சம் பேரோட பாவமும், அழுக்கும் கழுவுன நீர் எப்டி புனித நீராகும்?
================
செல்போனில் கணவர் பேசாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை நாகர்கோவிலில் # இதே டெக்னிக்கை ஆளாளுக்கு பாலோ பண்ணப்போறாங்க===========6 சொத்து குவிப்பு வழக்கு: கைதான என்ஜினீயர், ரூ.100 கோடி லஞ்சம் பெற்றது அம்பலம் சி.பி.ஐ. விசாரணையில் தகவல் #,மனசுக்குள்ள ஆ.ராசா ன்னு நினப்பு============
7 திமுக-காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்ய கருணாநிதியுடன்13-ந் தேதி குலாம்நபிஆசாத் சந்திப்பு

# பழைய பங்காளிங்க தானே? சேர்ந்துடுவாங்க


=============

8 ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம்: பொதுமக்களுக்கு எப்.டி.ஏ. அறிவுறுத்தல் # மெடிக்கல் ஷாப் ஆளுங்க " கவனிச்ட்டாங்களா?" நிஜமாவேவா?

==============


9 இந்தியாவில் மத அரசியல் மிக மோசம் - அமெரிக்காவில் கமல் பேச்சு.# தாய் நாட்டின் பெருமையை வெளிநாட்டில் பரப்புங்கள்.குறைகளை அல்ல.

============

10 மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கும் புதியபடம்-செய்தி # அண்ணன் எப்பவும் ஒரு ஜோடியோட திருப்திப்படறதே இல்ல, 2 அல்லது 3 தான்==============


11  தேர்தலில் போட்டியிட தை அமாவாசை நாளில் 2,000 திமுகவினர் விருப்ப மனு # பகுத்தறிப்பகலவரான தானைத்தலைவர் அதை வளர்பிறை நாளில் பரிசீலிப்பார்

================12 மணமக்கள் நெற்றியில் ஜெ ஸ்டிக்கர் ஒட்டி ஏழைத் தம்பதியரை அவமானப்படுத்துவதா?- ஸ்டாலின் கண்டனம் # முதுகுல குத்தலையேன்னு சந்தோஷப்படுவோம்==============


13 ரஜினிகாந்த் கடவுள் போன்றவர் - நயன் தாரா #  ஆமா, அவருக்கு “ஆண்டவர்” , ”ஆண்டுகொண்டிருப்பவர்”னா ஒரு பயபக்தி உண்டு


==============14  வேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவரை உதைத்த மனைவி சென்னை சென்டிரலில் பரபரப்பு# உள்ளூருலயே மாட்டிக்கிட்டானா? ஜாக்கிரதையா அவுட்டோர் போய்இருக்கலாம்

================


15  இந்தியாவிலேயே முதன் முறையாக மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டம் தொடக்கம- ஜெ # டூவீலர் , இரட்டை இலை , குறியியீடு


=================


16 பலர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தாலும் ஒருவரை தான் தொகுதியில் நிறுத்த முடியும்-கலைஞர் # பல கட்சிகள் போட்டியிட்டாலும் ஒருவருக்கே வெற்றி


===============


17  எந்த வடிவத்தில் வந்தாலும் நுழைவு தேர்வை எதிர்ப்போம்-கலைஞர் # எண்ட்ரன்ஸ் எக்சாம்க்கு எண்ட் கார்டு வேணும்கறாரு "END"RANCE EXAM


===============


18  'தமிழகத்தில் பா.ஜனதா ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது': தமிழிசை சவுந்தரராஜன் # உதய சூரியனை , இரட்டை இலையை நம்பியே தாமரை மலர முடியும்


=================


19  கடலூர் -வெடிகுண்டு வதந்தி பல பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை # இதான் சாக்குன்னு லீவ் வேணும்கறவங்க எல்லாம் இதே ஃபார்முலா ஃபாலோ பண்ணிடப்போறாங்க


==================


20 நிலக்கரிச் சுரங்க முறைகேடு: எச்.சி.குப்தா உள்பட 6 பேருக்கு சம்மன் # நம்பினவங்க முகத்தில் கரி பூசிட்டாங்களா?


==================

Wednesday, March 09, 2016

“ உதய சூரியன்” வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கும்?

1  கருணாநிதியை ராகுலுடன் ஒப்பிட்டு பேசிய திக கி.வீரமணி  யாரை  அவமதிக்க நினைக்கறாரு? கலைஞரையா? ராகுலையா?=================
2  சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் - EVKS இளங்கோவன் # குஷ்பூ மனசை நோகடிக்காதீங்க சார், நீங்க சி எம் ஆவீங்கன்னாரே?

=============
தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு # நல்ல சவுண்ட் பார்ட்டி இல்ல? அதான், தக்க வெச்சுக்கிட்டாரு
================
4  நைஜீரியாவை அச்சுறுத்தும் லாசா காய்ச்சலுக்கு 101 பேர் பலியானதாக தகவல்  # அய்யோ, லாசா காய்ச்சல் வந்தா உயிரே லாஸ் சா?

===============
5  மலேசியாவில் நயன்தாராவிடம் விசாரணை: புகைப்படம் வெளியிட்ட விமான நிலைய ஊழியர் சஸ்பெண்டு. # 9 கிரகங்களும் உச்சத்தில் இருந்துட்டாங்க போல
===============
6  தேர்தல் நேரங்களில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதும், மறப்பதும் தி.மு.க.வுக்கு கைவந்த கலை-பொன்.ராதா  # அதை  சாணக்கியத்தனம்னு வேற சொல்வாக

=============
மகளுக்காக நில ஒதுக்கீட்டில் சலுகை: குஜராத் முதல் மந்திரி மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு  # ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலைஞர்
================

சல்மான்கான் குடிபோதையில் தான் காரை ஓட்டினார்: சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு வாதம் # அவர் இதுவரை பச்சைத்தண்ணியைக்கூட தொட்டதில்லையாம்


===============

9  மணமக்களுக்கு கூட மரியாதை இல்லையா. அம்மா ஸ்டிக்கர் பற்றிகுஷ்புகொதிப்பு # சாமி சிலைக்கு முன் கால் மேல கால் போட்டபடி உட்கார்ந்ததுக்கு இது தேவல


==========
10  கூட்டணிக்காக திமுக தரப்பில் தூது அனுப்பவில்லை, திருமண அழைப்பிதழ் மட்டுமே அளித்தனர்- ராமதாஸ் # தானைத்தலைவர் டெக்னிக்கே அதுதான் டாக்டர் அய்யா
========================
11 காமராஜர் இறந்தபோதே அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும்- பழ.கருப்பையா வருத்தம் # சனி பிடிக்கனும்னு இருந்தா விடாது கறுப்பு==============
12  தமிழகத்துக்கு இனி நல்ல காலம் வரப்போகிறது - ராமதாஸ்  # கவர்னர் ஆட்சி வர வாய்ப்பே இல்லையே? டாக்டர் அய்யா
=============
13 வாக்காளர்களை கவர காதணி விழா மூலம் தேர்தல் பிரச்சாரம்:புதுக்கோட்டை பாமக 80,000 அழைப்பிதழ் விநியோகம்# காது குத்து விழா , குறியீடு?
=============
14  சென்னை ஏர்போர்ட்- 55-வது முறையாக கண்ணாடி விழுந்து விபத்து # அங்கே இருக்கறவங்க இதை எல்லாம் எண்ணிப்பார்க்க மாட்டாங்களா?எண்ணிட்டே இருப்பாங்களா
===============15  ட்விட்டரில் விடுத்த கோரிக்கையை ஏற்று நோயாளிக்கு உதவிய ரயில்வே அமைச்சர் # வெரிகுட், பிரதமரின் பாராட்டுகள் ஆன் த வே
===============16 ஐஐடி.யில் படிக்கும் வெல்டிங் தொழிலாளியின் மகனுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை # வெல்டன் மை பாய்,வெல்டிங்
==============17 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ரூ.5க்கு ஆயுர்வேத மருந்து-செய்தி # சபாஷ்! சுகர் க்கு அஞ்சத்தேவை இல்லை, அஞ்சு ரூபாதான்
===============18  இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடு அல்ல: தஸ்லீமா # ஆமாங்கோ, ஊழல்,கடமையிலிருந்து தவறுதல் எல்லாத்தையும் சகிச்சுக்கறோமே?
===================19  அரசின் திட்டப் பணிகள் தாமதமாக காங்கிரஸ்தான் காரணம்: - மோடி # பிரதமரா இருந்துட்டு இப்டி சொல்லலாமா? உங்க ‘கை” வரிசையை கை யிடம் காட்டவும்
=============


20 பாஜக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை-தமிழிசை # “ உதய சூரியன்”  வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கும்னு  பாலிடிக்ஸ் பாட்டனி சொல்லுது


===================

Monday, March 07, 2016

30,000 ரூபா அரசு சம்பளம் பத்தலையாம்மா?

1  பொண்ணுங்க  நமக்கு வணக்கம் வைக்கறதே பெருசு. ஒரு பெருசு ஏதாவது படம் போட்டு வணக்கம் வைக்கலையா?ன்னு கேட்கறாரு, அய்யோ ஊர்மிளா================தனியார் டீச்சர் டிகிரி முடிச்ட்டு பிரைவேட்ல 800 ரூபா சம்பளத்துக்கு கஷ்டப்படறாங்க.+2் முடிச்ட்டு 30,000 ரூபா அரசு சம்பளம் பத்தலையாம்மா?
============3 அனைவருக்கும் சுழற்சி முறையில் அரசு வேலைத்திட்டப்படி 5 வருடங்கள் மட்டுமே அரசுப்பணி எனும் நிலை வந்தால் போராட்டம் ,வேலை வாய்ப்பின்மை இருக்காது============4 திமுக வாதிகள் ஊழல்வாதிகள்னு கோர்ட்ல நிருப்பிச்சி இருக்காங்களா?"கலைஞர் ஊழலில் சாணக்கியத்தனமானவர் ,ஜெ போல் அலட்சியமா தப்பு பண்ணி மாட்டிக்க மாட்டார்=
============5 உன் கூட பேசப்பிடிக்கலைனு ஒரு பொண்ணு சொன்னா விலகிடனும்.ஏன் பிடிக்கலைன்னு கேட்டா வெறுப்பு இன்னமும் அதிகமாகுமே தவிர குறையாது=============6 காதலி கோபத்துல ”என் கிட்டே பேச வேணாம் போ”-ன்னா டக்னு போய்டக்கூடாது,சரி, 5 அடி தள்ளி நின்னு பேசலாமா?ன்னு மொக்கை போடனும்
================மரியாதை எங்கு கிடைக்கிறதோ அங்கு பசை தடவி அமர்ந்து கொள்ள வேண்டும்னு நினைக்காதீங்க, மாமியார் வீட்ல 3 நாள் மேல இருந்தா மதிப்பே இருக்காது
=================செஸ் போர்டை காலேஜ்ல இருந்து திருடிட்டு வந்துட்டா அதுதான் சதுரங்க ஆட்டை
==============ஆஃபீசில் இருக்கும்  சுமார் ஃபிகர்களையும் ரசிக்கப்பழகிக்கொண்டால் உன் பணிமேன் மேலும் சிறக்கும்
===============
10  பிரபல ட்வீட்டர் கடல் கன்னி ஆசைப்பட்டபடி  சி எம் ஆகிட்டா  மக்கள் என்ன நினைப்பாங்க?


உப்பைத்தின்னவன் தண்ணியைக்குடிச்சுதானே ஆகனும்?================
11  11.15 AM தான் ஷோ டைம் னு தெளிவா தியேட்டர்ல ,டிக்கெட்ல எழுதி வெச்சாலும் படத்தைப்போட்றா என கூச்சல் இடுவதில் ரசிகர்களுக்கு ஒரு அலாதிப்ரியம்


===========

12 குங்குமம் வைக்காத தமிழ்ப்பெண் அழகில் தேவதை எனினும் ரசிப்பில் ஒரு மாற்று குறைவே !

============

13 உடன் பிறப்பே! கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?என ஜெ ஆட்சியில் கண்டுபிடிக்கவே இல்லை.கழக ஆட்சி அமைந்தால் பாகம் 2 பார்த்து கண்டுபிடிப்போம்


============

14 போலீஸ் சப்ஜெக்ட் படங்கள் ல ஹீரோ மீசை முறுக்கற மேனரிசம் தவறாம வந்திடுது.லேடி போலீஸ் னா ஜடையை திருகிக்குவாங்களா?


============

15 3 மணிநேரம் பொறுமையா படம் பார்த்து 1 மணிநேரம் மாங்கு மாங்குனு விமர்சனம் டைப்பிஅப்டேட்டினா அதைப்படிச்சுப்பார்க்காம படம் எப்டி?னு கேட்டா எப்டி?

===============


16 எதிரியை  அடிக்கனும்னா அவகாசம் கொடுக்கக்கூடாது, நெருக்கடியான கால கட்டத்தில் தான் தாக்கனும்


=================

17 உள்ளாடை தெரியுது   என பெண்ணிடம்  சொல்ல இடம் பொருள் ஏவல் உண்டு. 4 பேர் முன்னிலையில் சொன்னால்  கோபப்படாமல் கொஞ்சுவாங்களா?


=================


18 ஆடை விலகிய  பெண்ணிடம் நேரடியாக சொல்லாமல் அவர் அருகில் இருக்கும் பெண்ணை அழைத்து  சொல்லி அவர் மூலம் தகவல் போனால் அதுவே சரி


=============


19  உங்கள் கையில் அதிக பணம் இருக்கும்போது  உங்கள் அப்பாவை நினைத்துக்கொள்ளுங்கள்.அவர் சிக்கனம் உங்களுக்கும் வரும்,வீண் செலவு செய்ய மாட்டீர்கள்


==================


20  800 VAO  போஸ்ட்டுக்கு 10 லட்சம் பேர் அப்ளை பண்ணி இருக்காங்களாம், ஆனா தமிழக முதல்வர் போஸ்ட்கு 10 பேர் கூட அப்ளை பண்ணலை. ரெண்டே பேர் தான்


====================