Monday, March 31, 2014

வேலை இல்லா பட்டதாரி " இறங்கி அடிக்கும்" = ???!!

1. சம்சாரம் ஆபீஸ் டைம் ல போன் பண்ணி உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்கனு தெனாவெட்டா அதட்னா ஏதோ ஆதாரம் சிக்கிக்குச்சுனு அர்த்தம்========================


2  இயேசுநாதர் இரு முறை மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவித்தார் 1 சிலுவையில் அறையப்பட்டபோது 2 டி ஆர் ஃபேமிலி மதம் மாறிய போது # சும்மா===========================3 பில் கட்டும் கடைசி தேதி இது வரை பிரதி மாதம் 20 ஆக இருந்தது.இனி 19 ம் தேதி யாம்.ஏர் செல் ஆபீசில் இருந்து தகவல் # தமிழேண்டா


====================


====================


4 அன்பே! அறிவில் நீ அரை வேக்காடு , ஆனாலும் அழகில் நீ செழித்து வளர்ந்த வயல்காடு====================5 சித்தி ராதிகா நடிக்கும் வாணி ராணி சீரியல் டைட்டிலில் ஏதாவது குறியீடு இருக்குமோ? ஜெ வைப்பார்த்து வா நீ ராணி!=======================


6 ட்விட்டரும் ஒரு கோயில் மாதிரி தான் , காலைலயே பொண்ணுங்க கூட்டம் அதிகமா இருக்கே?======================7 தமிழன் கிட்டே எனக்குப்பிடிச்சதே தனக்குப்பொண்ணுங்கன்னாலே பெரிசா எந்த ஆர்வமும் இல்லை அப்டினு பொண்ணுங்க கிட்டேயே சொல்லிக்கறதுதான் ;-)=========================இந்தப்பொண்ணுங்க எல்லாம் டபக் டபக்னு.5,நிமிசத்துல கோவிச்சுக்காறாங்க.நாம 50 நாள் சமாதானப்படுத்தனும்====================


9 குமுதம் பேட்டி ல அனிரூத் " ஐ வில் டூ வித் அஜித்"னு சொல்லி இருப்பாரு.நம்மாளுங்க " ஐ ஆம் டூயிங்" னு அடிச்சு விட்டிருப்பாங்க # யூகம்==================10 பேய்ப்படத்துல எல்லாம் பேயை டக் னு காட்ட மாட்டாங்க.கொலுசு ,ஜிமிக்கி ,பூ இப்டி பில்டப் குடுத்து கடைசியா தான்யா முகம் காட்டுவாங்க===========================11 பிரிந்த லவ் ஜோடிகள் சினிமாவில் மீண்டும் சேரும் சீசன் இது.எனவே அந்த ராசி உங்களுக்கும் ஒர்க் அவுட் ஆகுதா? என்பதை பழைய காதலியிடம் செக்=======================12 பின்னாடி திரும்பி நிக்கற போஸ் தான் டிபியா வைப்பேன்னு அடம் பிடிக்கும் தன்யாக்கள் முன்னாடி கண்ணாடி பார்ப்பது போல் வைக்கவும்=====================


13 குக்கூ ஏகப்பட்ட அவார்டு வாங்கும்.போட்ட முதலீடு ஊ ஊ ஊ


====================14 அன்பே! நீ தரும் முத்தம் எவ்ளவ் மென்மை எனில் என் வலது கன்னத்துக்கு தரும் முத்தம் என் இடது கன்னம் அறியாதபடி======================


15 நான் இதுவரை நேரில் சந்தித்த ட்வீட்டர்கள் னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணேன்.ஆனா என் சம்சாரம் அதை பாத்துட்டா வில்லங்கம் ஆகிடுமேனு யோசிக்கேன்
========================16 நாங்க தேவை இல்லாம பொங்க மாட்டோம். பொங்கனும்னு நினைச்சா பொங்கல் வைப்போம் #,சும்மா


======================17 பஸ்ல ஒரு பிகரு நெத்தில மத்தில குங்குமம் ,திருநீறு,ஆஞ்சநேயர் சாந்து,மை பொட்டு ,ஸ்டிக்கர் பொட்டு னு 5 வெச்சிருக்கு.பூஜைத்தட்டு மாதிரி=======================


18 ராஜூ முருகன் அனுதாப ஓட்டு ல ஜெயிக்கலாம்னு பார்க்கறார்.இலக்கியம் பரிச்சயம் ஆன அளவு தமிழன் பத்தி தெரியல போல # குக்கூஊஉஊஊஉ======================


19  வேலை இல்லா பட்டதாரி பட விளம்பரத்தில் " இறங்கி அடிக்கும்" பாடல்கள் னு விளம்பர வரி.தனுஷ் மார்க்கெட் இறங்கிடுச்சு.படம் அடி வாங்குது?=======================20 மத்திய அரசின் தேவையற்ற கால தாமதத்தை கண்டிக்கும் கோர்ட் அடையாள தண்டிப்பாய் அரசுக்கு ஏதாவது அபராதம் விதித்திருக்கலாம்==========================


மோடி VS நடிகை மேக்னா படேல்

1. சிறையில் மூவரும் மகிழ்ச்சியாய் இருந்தார்கள்-மத்திய அரசு# ஓஹோ! இதே போல் சோனியாவும் மகிழ்ச்சியா இருக்க காலம் அருள் புரியட்டும்==================2 ரஜினி யின் மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி - தமனா # அதுல அலெக்ஸ் கேரக்டர் ல கார்த்தி செமயா காமெடி பண்ணிடுவாப்ல.ராசியான பேரு வேற======================3 தூக்கு தண்டணை ரத்து ஏமாற்றமளிக்குறது-ஞானதேசிகன்
#ஏமாற்றம் தாங்க முடியாம எசகு பிசகா ஏதும் செஞ்சுக்காதீங்க.கட்சில இருக்கும் ஒரே காமெடியன்========================


4 பணம் வாங்கிகொண்டு நடிக்கும் கமலுக்கு பத்மபூஷண் எதற்கு?
---தங்கர் பச்சான்""# வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்கறதுக்குன்னே ஒரு GROUP


===================5 5 வட்டிக்கு கடன் வாங்கி சசிகுமார் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்! # பிரம்மன் எழுதிய தலை எழுத்தை பிரம்மனே நினைச்சாலும் மாத்த முடியாதாம்====================6 தூக்கு தண்டனை ரத்தானது துரதிருஷ்டவசமானது - சு.சுவாமி # சாமி வரம் கொடுத்தா பூசாரி சாபம் குடுப்பாராம்=======================7 தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தனும்-ி காங்கிரஸ் # அம்புட்டு யோக்கியம்னா இந்தியா பூராவும் மதுவிலக்கு வேணும் னு PM கிட்டே கேட்கலாமே?======================8 நல்ல விஷயங்களுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்தவும்: மதுரை கலெக்டர் .# லவ்வருக்கு மெசேஜ் குடுக்கறது நல்ல விஷயம் தான்.ஆனா புருசன் பாத்தா
=====================

9 இந்தியாவுக்கான தூதரை திரும்ப பெறுவதாக இத்தாலி அரசு அறிவிப்பு!# அப்டியே உங்க உங்க நாட்டுக்காரரையும் அழைத்துக்கொள்ளவும்

=====================


10 ஜெ. பிறந்தநாளை முன்னிட்டு ஒரே நாளில் 53,129 பேர் ரத்த தானம். கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. # ஜெ பண்ணி இருக்க மாட்டாரே?=======================


11 தலைவன் னா் சிரித்த முகமாகவும் நாக்கை துருத்தாதவனாகவும் இருக்கவேண்டும்!- சரத்குமார் #மரியாதை கொடுப்பவராக பழைய நட்பை மதிப்பவராக இருக்கனும்======================12 பார்லி., நடவடிக்கை ஒளிபரப்புக்கு தடை : சபாநாயகர் உத்தரவு # நாம பண்றது ஒரு பயலுக்கும் வெளில தெரிஞ்சிடக்கூடாது====================13 பணத்திற்காக நடிக்கும் கமலுக்கு எதற்கு பத்ம பூஷன்? - தங்கர் பச்சான் # அண்ணன் டைரக்ட் பண்ண படம் எதுக்கும் சம்பளமே வாங்கிக்காத தியாகி===================14 முருகன், சாந்தன், பேரறிவாளன் 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம்-கோர்ட் # அதையும் கோர்ட்டே சொல்லி இருக்கலாம்
=======================15 முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்குத்தண்டனையை ரத்து செய்துகோர்ட்் உத்தரவு. # தேர்தல் ஸ்டண்டோ ,எதேச்சையானதோ வரவேற்கப்படவேண்டிய தீர்ப்பு==========================
16 கிறுக்குத்தனமான சாகசம் தான் பொண்ணுங்களுக்கு பிடிக்கும-் குக்கூ"# குடும்பம் நடத்தறது = சாகசம் .சம்சாரத்தை சமாளிப்பது = கிறுக்குத்தனம்======================


17 இந்திய அரசு எப்போதும் தமிழர் பக்கம்தான் : நாராயணசாமி # அண்ணனுக்கு பங்கம், பக்கம் 2க்கும் வித்தியாசம் தெரியாது போல========================


18 அதிமுகவுன் அதிகாரப்பூர்வ இணையதளம்
# அம்மா என்றால் அன்பு ,அதிமுக அம்மா என்றால் அதிகாரம்==========================19 இனி, தமிழ், மலையாளம் என, இருவழிப்பாதையில், என் கலைப்பயணத்தை தொடருவேன் -லட்சுமி மேனன் # பிரமாதம் மேடம், உங்களுக்கு“விஷால்”ல மான மனசு
=====================================20மோடிக்காக நிர்வாண போஸ் கொடுக்கவில்லை-ு நடிகை மேக்னா படேல் #யூசுவலா ,கேசுவலா,விஷ்ுவலா எப்பவும் அப்ப்டித்தானா?


================================

Sunday, March 30, 2014

எனி ஹெல்ப் ஷாலினி?"

1. உத்தம வில்லன் 50% ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு னு யாரும் இன்னும் சொல்லலையா? ;-)))=================
2 கடன் தொல்லை ஒருவரை தற்கொலை வரை செல்லத்தூண்டும் எனில் எந்த ஒரு சூழலிலும் நாம் கந்து வட்டிக்குப்பணம் வாங்கித்தொழில் செய்பதைத்தவிர்ப்போம்
==================
3 நிமிர்ந்து நில் போஸ்டர் அருகே சேலம் சிவராஜ் சித்த வைத்திய விளம்பர போஸ்டர்கள் @,ஈரோடு #,வாட் எ ஐடியா ஜி .தமிழேண்டா
================4 உன்னைச்சுத்தி 1000 பிரச்சனை இருந்தாலும் அது பத்தி எல்லாம் கவலைப்படாதே தமிழா! ஊர் சுத்து,கம்பு சுத்து.இது தான் நம்ம கெத்து
=================
5 தமிழ் இனத்தின் தலைவரே மொக்கை ட்வீட்ஸ் போடும்போது ஒரு சாதாத்தமிழன் மொக்கை போடுவது தவறா? ;-))
=================
6 தன் குழந்தைகள் எந்த மாதிரி சினிமாக்களைப்பார்க்க வேண்டும் என்று முடிவெடுக்கும் பொறுப்புணர்வு பெற்றோரிடம் குறைந்து வருவது நல்லதல்ல


================


7 பெண்கள் தினத்தன்னைக்கு மாதர் சங்கங்கள் எல்லாம் ஊர்வலம் போகுதாம். நல்ல வேளை அன்னைக்கு நைட் புருசன் வீட்டுக்குத்தான் வந்தாகனும் ;-)====================


8 பிஜேபி = எத்தனை சீட் வேணும் ? 

பாமக = கேப்டனுக்கு தர்ற அளவு சமமா! 

கேப்டன் = பாமக வுக்கு தர்றதுல டபுள் 

வைகோ = குடுக்கறதைக்குடுங்க


================

9 ஆண்களைக்கவர பெண்களை நக்கல் அடிப்பவன் டி எம் மில் பெண்களிடம் மகளிர் தின வாழ்த்து சொல்வான் #,தமிழேண்டா


================


10 பிஜேபி கூட்டணியில் கேப்டன் தான் கேப்டன்.அவருக்கு தந்தது போகத்தான் பிஜேபிக்கே # கேப்டன் ராக்ஸ்


===============


11 BJP யில் கேப்டன் செல்வாக்கைக்கண்டு வயிறு எரிபவர் = ஜெ . பெருமூச்சு விடுபவர் =மு க=================


12 போயஸ் தோட்டத்தில் அன்று கேப்டன் போய் கூட்டணி பேச்சு .தேமுதிக அலுவலகத்தில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று # வாழ்க்கை ஒரு வட்டம்


================


13 நிஜத்துல இந்தக்கால பொண்ணுங்க தன் நகையையே தர மாட்டாங்க.சன் டி வி சீரியல்ல மாமியார் நகையையே மாப்ளைக்கு த்ருது ;-))


================


14 என் வெற்றியைக்கொண்டாட என்னுடன் எல்லோரும் வருவார்கள்.என் தோல்வியின்போது ஆறுதல் சொல்ல நீ மட்டும்தான் வருவாய்!


=================

15 உன் மீதான என் அதிக பட்ச வன்முறை உன் கன்னத்தைக்கிள்ளியதே! என் மீதான உன் குறைந்த பட்ச மென்முறை இதழ் ஒத்தடமே!


=================

16 கல்விக்கடவுள் சரஸ்வதி மாதிரி ,செல்வத்துக்கு லட்சுமி மாதிரி பிரிவுக்கு ஒரு கடவுள் இருந்தால் யாரும் அந்தக்கோயில் பக்கமே போக மாட்டார்கள்


====================


17 மாமா.உங்க சம்சாரம் தராட்டி என்ன?,தக்காளி தொக்கு ,லெமன் தொக்கு எந்தத்தொக்கு வேணும்னாலும் என்னைக்கேளுங்க #,சன் டி வி குடும்பசீரியல்


=================


18 காலை ஆறரைக்கே ஏதோ ஏழரை போல.


================

19 பழகிய பின் ஒருவரைப்பிடிக்கவில்லை ,கருத்து வேற்றுமை எனில் இரு தரப்பும் ஒதுங்கிப்போவதே நல்லது=================

20 அம்மா ,மனைவி,மகள் என நெருங்கிய சொந்தங்கள்.எல்லோருக்கும் பொதுவான ் மகளிர் தின வாழ்த்துகள்


=================

21 தன் வாழ்வில் ஒரே ஒரு பெண்ணிடமாவது உண்மையான அன்பையும் ,நம்பிக்கையையும் பெற்று விடும் ஆண் தான் வெற்றிகரமான மனிதன்


================

22 மகளிர் தினத்து அன்று வெளியாகும் நிமிர்ந்து நில் டைட்டில் பெண்களுக்காக அமைந்த தற்செயலான குறியீடோ?


================


23 தன் வீட்டில் இருக்கும் பெண்களை வழக்கம் போல் வேலை செய்ய விட்டு விட்டு சமூக வலைத்தளங்களில் வந்து " எனி ஹெல்ப் ஷாலினி?" எனக்கேட்பான் தமிழன்


=================


நெடுஞ்சாலை - சினிமா விமர்சனம்


இது ஒரு பீரியட் ஃபிலிம்.1980களில் நடக்கும் கதை .திராவிடக்கட்சிகள் தமிழ் நாட்டைக்கொள்ளை அடிக்க ஆரம்பித்த கால கட்டத்தில்  சில சாதா கொள்ளையர்கள் நெடுஞ்சாலைகளில்  லாரி , வேன்களை மடக்கி நள்ளிரவில் ஆட்டையைப்போட்டாங்களே அந்த கதைக்களம். 

நாயகன்  ஒரு நெடுஞ்சாலை க்கொள்ளைக்காரன்.நள்ளிரவில் லாரியில் சரக்குப்போனா அது பின்னால போய் நைசா சரக்கை  இவர் போகும் வண்டில கை மாத்தி விட்டுட்டு ஜஸ்ட் லைக் தட் எஸ் ஆகும்  திருடன், 

வில்லன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் .பொதுவாவே போலீஸ்னாலே பொம்பளைப்பொறுக்கிகளாத்தான் இருப்பாங்க (சில விதி விலக்குகள் அபூர்வமாய் உண்டு).நம்ம வில்லன் ஒண்ணாம் நெம்பர் லேடீஸ் கலெக்டர்


நாயகி ஒரு மலையாள பகவதி.நெடுஞ்சாலையில்   டிஃபன் செண்ட்டர் வெச்சிருக்காங்க.போற வர்ற லாரி டிரைவருங்க எல்லாம் டிஃபன் சாப்பிடும் சாக்கில் அங்கே வந்து ஜொள்ளு விட்டுட்டு இருக்காங்க. 

ஒரு டைம் வில்லன் நாயகியை ஏடாகூடமா கை வைக்க முயற்சிக்கும்போது நாயகி வில்ல ன் முழங்கால்லயே மடார்னு ஒரு அடி.வில்லன் கடுப்பாகி நாயகியை பிராத்தல் கேஸ்ல மாட்டி விடறாரு.அதுக்கு பொய் சாட்சியா நாயகனை ரெடி பண்றாரு.நாயகனுக்கு ஆல்ரெடி வில்லன் கூட பகை.கோர்ட்ல வில்லனைக்காட்டிக்குடுக்கறாரு.

டக் -னு நாயகிக்கு நாயகன் மேல லவ் வந்துடுது.நாயகன் லவ்வினாரா?வில்லன் நாயகியை என்ன செஞ்சார்?க்ளைமாக்ஸ் என்ன? என்பதை வெண் திரையில் காண்க 


நாயகனாக வரும் ஆரிக்கு பருத்தி வீரன் கார்த்தி கேரக்டர் . அசால்ட்டா நடிச்சிருக்கார் . சபாஷ்

நாயகியா வரும் ஷிவிதா நாயர் முக வெட்டு , மன வெட்டு , கை வெட்டு , கால் வெட்டு எல்லாம் அட்டகாசம் .இவரது தாராள மாப்பான்மை தமிழனைக்கவரும் .தமிழ் சினிமா இயக்குநர்கள் இவரை நல்ல முறையில் ( திரையில் ) பயன்படுத்திக்கொள்வார்கள் 

வில்லனாக வரும் பிரசாந்த் நாராயணன் கலக்கல் நடிப்பு 

தம்பி ராமய்யா , கதை சொல்லும் கேரக்டர் இருவர் நடிப்பும் கா கச்சிதம் 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1.  படத்தில்  முக்கியமாகக்குறிப்பிட வேண்டிய அம்சங்கள் நேர்த்தியான திரைக்கதை , விறுவிறுப்பான சம்பவங்கள் , அழகான ஒளிப்பதிவு ,சில பல பிஜி எம்கள் , ஆர்ட் டைரக்சன் , இயக்கம்  எல்லாமே  எபவ் ஆவரேஜ். வெரி குட் அட்டெம்ப்ட்.சபாஷ் இயக்குநர் 

2 ட்ரெய்லர் மேக்கிங்க் , மார்க்கெட்டிங்க்  உத்திகள்  கன கச்சிதம்

3  நண்டூறுது நரியூறுது பாடல் செம கலக்கலான  லோக்கல் டப்பாங்குத்து டான்ஸ் , அதுக்கான நடன அசைவுகள் , இசை எல்லாம் அருமை 

4 நானே அஞ்சாதே அஞ்சாதே பாட்டுக்கு  ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றிபடம் பிடித்த அழகு 


இயக்குநரிடம் சில கேள்விகள் 

1. ஹோட்டல்ல சாப்ட்டுட்டு பணம் தர்லைனு நாயகனை நாயகி   ஒரு வீட்டில் அடைச்சு வெச்சுட்டு போலீசை வர வைக்குது.நாயகன் ஒரு திருடன். அவன் 170 செமீ உயரம் . அவ அடைபட்ட வீடு மேலே கூரையில்  ஓலை வேய்ந்த சாதா வீடு. அதன் உயரம் ஜஸ்ட்  5 அடி தான். நாயகன் ஈசியா தப்பிக்காம கேப்டன் கூட்டணிக்காக காத்திருக்கும்  தேசியக்கட்சிகள் மாதிரி போலீஸ் வரட்டும்னு காத்திருப்பானா? 

2 லாரியின்  பின்னால  ஆள் ஏறி  கொக்கி போட்டு சரக்கை மாத்தும்போது லாரி ஜெர்க் ஆகுமே  எந்த  லாரி டிரைவரும் அதைக்கண்டுக்க மாட்டாங்களா? 

3 நாயகி  கற்புள்ள ஒரு அக்மார்க் கேரளாப்பெண்.யாராவது வரம்பு மீறினா கண்ணகி ஆகிடுது . வெரிகுட் கேர்ள். ஆனா டிரஸ்சிங்ல மட்டும் ஏன் தாவணிநஹி ,முண்டுநஹி ஆகிடுது. மேல அட்லீஸ்ட்  ஒரு துண்டாவது  போட்டிருக்கலாமே? 

4 ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் ஒரு மொள்ளமாரி. இவர் சர்வீசில் எத்தனை பேரைப்பார்த்திருப்பாரு? ஒரு பொண்ணு முழுங்கால்  ல அடிச்சுட்டானு உடனே பேக் அடிப்பது ஏனோ? இவர் கைல அரசாங்கம்  கொடுத்த கன் இருக்கு.  இவரோட லட்சியம் ரேப் பண்றது.இவர் ஏன் தன் லட்சியத்தை ஈசியா விட்டுத்தர்றாரு ? 
மனம் கவர்ந்த வசனங்கள்

1.  என்னது?என் மூக்குல ரத்தம் வருதா? வலிக்கவே இல்ல?

அதுதான் உள் காயம் 

2. வாடிக்கையாளரைக்கடவுள் மாதிரி நினைக்கறேன்

அப்டியா? எங்கே சாப்ட்டுட்டு இருந்த கஸ்டமரைக்காணோம்? கடவுள் மாதிரி மறைஞ்சிட்டாரா? 

3  போலீஸ் கிட்டே எப்பவும் பாலீசா நடந்துக்கனும்

4 சார், இனிமே உங்களுக்கு என்ன சாப்பிட வேணுமோ அதை ஸ்டேஷனுக்கே அனுப்பறேன்

அப்போ என்னை சாப்பிட இங்கே வர வேணாம்கறியா?

5  ஜட்ஜ் = உன் பேரென்னம்மா?

கில்மா லேடி = கண்ணகிங்க 

 பிராத்தல் பண்ணீயா?

ஆமாங்க 

 முதல்ல உன் பேரை மாத்து , இல்லை தொழிலை மாத்து 


6  யோவ் , இவ எனக்குத்தான் பிறந்தாளா?னு ஒரு டவுட்

ரொம்ப நாளா எனக்கும் அதே டவுட்

7  என்னய்யா? என்னைக்கண்டுக்கண்டுக்கவே மாட்டேங்கறே? நானே தான் லவ் பண்ணனும் போல இருக்கே? 

சரி , சரி , சீக்கிரம் லவ் பண்ணிட்டுக்கிளம்பு 

8 மண்ணுக்குள்ளே போனவன் கூட திரும்பி வந்துடுவான்.  ஆனா பெண்ணுக்குள்ளே போனவன் ,,, # நெடுஞ்சாலை

9  சாகறதுக்கு முன்  யாரும் யாரால தான் செத்தோம்னு தெரிஞ்சுக்காமயே போய்டக்கூடாது படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1 அந்தக்காலத்தில் நடந்த  ஹை வே ராபரி பற்றி மிக விஸ்தீரணமான படம் #,நெடுஞ்சாலை.பிரமாதமான ஓப்பனிங்

2 வி நெக் ஜாக்கெட் கேரளா நாயகி  இன்ட்ரோ .தாவணி போடாத ராவடி


3 பீரியட் பிலிம் ன் முதுகெலும்பு ஆர்ட் டைரக்சன் . அபார உழைப்பு .கலை இயக்குநர் ராக்கிங்


4 நேர்த்தியான திரைக்கதை  ,ஆர்ட் டைரக்சன் ,சில துள்ளல் பிஜிஎம் @ நெடுஞ்சாலை இடைவேளை

 5  சில்லுனு ஒரு காதல் மூலம் ஏ சென்டர் ரசிகர்களைக்கவர்ந்த் இயக்குநர் இதில் பி ,சி சென்ட்டர் ரசிகர்களைக்கவர்கிறார் #,நெடுஞ்சாலை

6  ஒளிப்பதிவு ஜால வித்தை 84 கட்ஷாட் . அடியே பாட்டு கலக்கல் # நெடுஞ்சாலை
சி பி கமெண்ட் - நெடுஞ்சாலை - புதிய கதைக்களம் ,நேர்த்தியான திரைக்கதை ,ஒளிப்பதிவு ,இசை நச்.- விறுவிறுப்பான லவ் த்ரில்லர் 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =44 ,


குமுதம் ரேட்டிங்க் = நன்று


 ரேட்டிங் = 3 / 5

ஈரோடு விஎஸ் பி ல படம் பார்த்தேன். பி , சி செட்டர்களில் செம வசூலை அள்ளிக்கிவிக்கும் . ஏ செண்ட்டரில்  3 மடங்கு லாபமும் , பி சி யில்  5 மடங்கு லாபமும் சம்பாதிச்சுகுடுக்கும். இது ஒரு கமர்ஷியல்  ஹிட் ஆஃப் 2014 

உங்கள் உயரத்துக்கு நிகராய் நிற்கும் பிகராய் இருந்தால் அடுத்து என்ன செய்யனும்?

1. ஜெயம் ரவி யோட FDFS போலாமா?னு நண்பன்ட்ட கேட்டா சுரத்தே இல்லாம ம் ம் னான்.அமலாபால் க்கு 2 சீன் இருக்குன்னேன்.நிமிர்ந்துட்டான் # தமிழேண்டா


================


2 தமிழா! யாருக்கோ வாக்களி! காங்கிரஸை மட்டும் வேரோடு அழி!


=================


3 மோடியா? ராகுலா? என்றெல்லாம் யோசிக்காமல் தமிழன் வழக்கம் போல் ஜெ அல்லது முக என வாக்களிப்பான் என அவதானிக்கிறேன்


=================

4 உன் அன்பு தான் என்னை செலுத்திச்செல்கிறது.தொடர்ந்து அதே அன்பை செலுத்திக்கொண்டே இரு!


=====================


5 மீனராசி ரேவதி நட்சத்திர அன்பர்களே! நீங்கள் இன்று உயர்ந்த இடத்துக்கு செல்வீர்கள்.அது ஆபீஸ் மொட்டை மாடியாகவும் இருக்கலாம்


=====================

6 கை ரேகை யை நம்பாதே ! உன் கையை நம்பு! காங்கிரஸ் கையை யும் நம்பாதே!================


7 கண்ணில் பட்டதை உள்ளது உள்ளபடி சொன்னால் அதை அனுபவப்பகிர்வோ என சந்தேகிப்பான் தமிழன்


================


8 பஸ் ல ஒரு பிகரு துக்ளியூண்டு இங்க் பாட்டில் சைஸ்ல என்னமோ கொண்டு வந்திருக்கு.என்னாம்மா இது?ன்னு கேட்டா வாட்டர் கேனாம்.அடங்கோ ;-))


=================


9 வாவ்! வாட் எ கேட்ச்? ஜடை யில் இருந்த ரோஜாப்பூ தரை யில் விழும் முன் இடை யில் தாங்கிய அபார கேட்ச்.டேய்.எங்கிருந்துடா வர்றீங்க?


=================

10 லைப்ரரி போய் ஓசி ல புக் எடுத்துப்படிச்ட்டு அதை திருப்பிக்குடுக்காம ஆன் லைன் ல வாங்குனேன்னு அள்ளி விடுவான் தமிழன்


====================

11 பூச்சரம் நெருக்கமா கட்டி இருந்தால் கட்டிய பெண் கட்டிக்க உகந்தது.தள்ளி தள்ளி கட்டி இருந்தா சைட் அடிக்க மட்டுமே தகுந்தது


=====================


12 சிம்ம ராசி அன்பர்களே! நீங்கள் வெற்றி அடைவீர்கள்.ஆனால் அதை தனிமையில் தான் கொண்டாடுவீர்கள்


=================


13 இன்று நம்பியார் பிறந்தநாள்.உன்னை நம்பி வந்த பெண்ணை யார் தடுத்தாலும் எதிர்த்து நின்று காப்பாய் தமிழா! ( 7 3 14 )


==================


14 உங்கள் உயரத்துக்கு நிகராய் நிற்கும் பிகராய் இருந்தால் உடனே காலைப்பாருங்கள்.அரை அடியில் ஹைஹீல்ஸ் அணிந்திருக்கும்
\

===============

15 என் வாழ்க்கை இயல்பு நிலைக்குத்திரும்பிடுச்சுனு ஒரு பொண்ணு.சொன்னா கணவர் எல்லா சமையல் வேலைகளிலும் ஒத்தாசை பண்றார்னு அர்த்தம்


=============================


16 தன் குழந்தைகள் எந்த மாதிரி சினிமாக்களைப்பார்க்க வேண்டும் என்று முடிவெடுக்கும் பொறுப்புணர்வு பெற்றோரிடம் குறைந்து வருவது நல்லதல்ல ==================17 ஒவ்வொருவரின் முக்கிய முடிவு ,இடமாற்றம் எல்லாம்.அவரது ஒரு அவமானகரமான நிகழ்வுக்குப்பின் அமையும்================


18 தோல்வி தான் ஒரு மனிதனின் பெரிய பலவீனம். எதிரிக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்துவதே நமது முதல் பலம் # சதுரங்க விதி


=================


19 குலாப் கேங் னு ஒரு புரட்சிப்படம்.ரூபாய்க்கான குறியீடான ஹிந்தி ரூ வை நாயகி நெத்திப்பொட்டா வெச்சுக்குது.இதுல ஏதாவது குறியீடு இருக்கா ?


====================

20 ஆண்களுக்குப்போதிய பாதுகாப்பில்லை.எனவே மகளிர்தினத்தன்று ஆண்கள் தனியாக உலவி மாட்டிக்கொள்ள வேண்டாம்===========================