Thursday, January 07, 2016

சரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன் யாரு? ஒரு ஆராய்ச்சி முடிவு

உங்க காதலி கோபத்துல உங்க செல் போனால அடிச்சா நீங்க எப்டி சமாதானப்படுத்தனும்?


செல்லால் அடிச்ச சுந்தரி

விடிஞ்சிடுச்சு எந்திரி
===========
2 டாக்டர்.மூச்சு விடவே முடியவில்லை..ரொம்ப சிரமமா இருக்கு.


எதுக்கு அவ்ளோவ் சிரமம்?,மூச்சே விடாதீங்க.விட்ருங்க============

3 மேடம்.ஏன் வாக்கிங் வர்லை?


எண்ட்ற மாமனுக்காக வெயிடிங்"

அவருக்காக உங்க வெய்ட்டை ஏன் ஏத்திக்கிட்டு இருக்கீங்க?==============

4 மேடம்.இந்த சீன்ல ஹால்ல உட்கார்ந்து ஹீரோ கிட்டே பேசிட்டு இருக்கீங்க?


கிளாமர் ஹீரோயின் = நாயுடு ஹால் லயா?================

5 மிஸ்.ஐ லவ் யூ.யூ?


தூ.ஏன் என் தங்கச்சி கிட்டே இதே கேள்வியைக்கேட்கல?

கேட்டேன்.அவ தான் உன் மூஞ்சிக்கு என் அக்காவே போதும்னு அனுப்ச்சா=============

6 டீச்சர்.டாப்சி பன் னுக்கு 2 சுழி ன் னா? 3 சுழு ண் ணா?


தமிழ் மிஸ் தன்யா = மேரேஜ் ஆகும் வரை டாப்சி பன் ஆன பின் டாப்சி பண்
================

7 பெண்பார்க்க வந்த மாப்ளை பொண்ணோட பேரைக்கேட்டதும் டக்னு சேர்ல இருந்து எந்திரிச்ட்டாரே ஏன்?


பேரு பானு மதியாம்.மதிக்கனுமில்ல?
================

8 மனைவி க்கும் கேப்டன்/சிம்பு /அர்விந்த் கேஜ்ரிவால்க்கும் என்ன வித்யாசம்?


அவங்க அடிக்கடி சாரி கேட்பாங்க.இவங்க எப்பவும் சாரி கேட்க மாட்டாங்க===============

9 சார்.உங்க பால் பண்ணை ல பீப் மில்க் கிடைக்கும்னு போர்டு இருக்கே?


சீம்பால் தான்.சீசன் க்கு ஏத்தபடி சிம்பு ரிலேட்டடா பேர் வெச்ட்டோம்
================

10 சார்.17 கிஸ் சீன் படத்துக்கு யு சர்ட்டிபிகேட் கொடுத்த நீங்க கிராமிய இசைக்கலாச்சாரப்படத்துக்கு ஏ தர்றீங்க ?


சாரி.இட மாறு தோற்றப்பிழை
==============

11 டியர், பொண்ணுங்களோட திமிரு ஒரு அழகு, உங்களுக்குப்பிடிக்குமா?

 ம்ஹூம், ஆம்பள ( விஷாலோட) திமிரே பிடிக்கல


==================


12  டாக்டர்.பித்தம் தெளியனும்னா என்ன சாப்பிடனும்.


அரை மணி நேரம் கழிச்சு சொல்றேன்.சாப்ட்ட சரக்கு மப்பு தெளியல எனக்கு

==============

13 சார்.500 ரூபா பணம் கட்டுனா 50 பாலோயர் தர்றேன்.


அப்டியா.?நான் உனக்கு 60,000 பாலோயர்சை பல்க்கா தரேன். நீ எனக்கு 6 லட்சம் ருபா தா


===============


14 பிரம்மச்சாரி மணி ஏன் தலை தெறிக்க ஓடறார்?


பூனைக்கு மணி கட்றது யாரு?னு பஞ்சாயத்துல பேசுனதை அரைகுறையா புரிஞ்சுகிட்டு பயந்துட்டான்


================


15 டியர், நம்ம காதல் ஜெயிக்கனும்னா முதல்ல நீங்க “அம்மா” கிட்டே சம்மதம் வாங்கனும்.

 அய்யய்யோ, அது நடக்காதே? நான்  எதிர்க்கட்சி ஆள் ஆச்சே?


======================

16  தலைவரே! திருப்பாவை , திருவெம்பாவை பேர் மாத்தனுமா? ஏன்? 

 செல்வி பாவை , செல்வி வெம்பாவைன்னு தானே வரனும்?யார் கிட்டே?


===================

17  தலைவரே!,துணை முதல்வர் பதவி தர்றதா உங்க மகன் கேப்டனுக்கு வாக்கு கொடுத்தாராமே?

பொய் சொன்ன வாய்க்கு போஜனம்தான் கிடைக்காது.அரியாசனம் கிடைக்கும்

==============

18 தலைவரே! நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க?

எனக்கு வந்த குற்றப்பத்திரிக்கைல 678 ம் பக்கம் வரை படிச்சிருக்கேன்.இன்னும் 328 பக்கம் படிக்கனும்

===============

19 சரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன் யாரு? வேட்டைய்யனா இல்லை சரவணன்னா?"

6 மாசம் அவரு 6 மாசம் இவரு.சுழற்சி முறை.

===============

20 துணை முதல்வர் பதவியை அவருக்கு கொடுத்துட்டா எனக்கு?

பதவிக்கு வந்ததும் ஏதோ ஒரு வம்புச்சண்டை போட்டு கூட்டணியை விட்டு துரத்தி விட்டுடுவோம்.

=============

0 comments: