Thursday, January 21, 2016

பிங்க் கலர்ல புது ரயிலா? பெண்கள் மகிழ்ச்சி

பெண்கள் அதிகமாகப் புகைபிடிக்கும் நாடுகளில் இந்தியா 2வது இடம் # விறகு அடுப்பில் சமைத்து புகை சுவாசித்த பெண்களை கணக்கில் சேர்த்துட்டாங்களா?


============2 'தாரை தப்பட்டை' வாய்ப்புக்கு காரணம் விஷால் அல்ல: வரலெட்சுமி #  என்னம்மா? சித்தப்பா ராடன் டிவி ஆஃபீசுக்குள் இல்லைனு சொல்ற மாதிரி சொல்றீங்க?

================யாருடன் தேர்தல்  கூட்டணி? - சரத்குமார் விரைவில் அறிவிப்பு  # யார்  1 சீட்  தர்றாங்களோ அவங்களுடன் கூட்டணினு சொல்லிடுங்க, யாரும் தர மாட்டாங்க.
=================
2017ல் சாம்பல், நீலம் , மஞ்சள்  கலர்களில் அதிவேக ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு# பிங்க் கலர்ல விடுங்க, ஃபிகர்ங்களுக்குப்பிடிக்கும்

===================
திமுக, அதிமுக கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளில் செய்யாததை, 5 ஆண்டுகளில் செய்வேன்" - அன்புமணி#தமிழ் நாட்டை மொத்தமா இதுவரை விக்காம இருக்காங்க!
==================
குழந்தைகளுக்கு எதிரான  குற்றங்களுக்கு தனிச் சட்டம்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை# எல்லா ஐடியாவும் கோர்ட்டே கொடுக்குது, அரசு சொந்தமா யோசிக்காதா?================
அம்மா சிரஞ்சீவி சித்த மருத்துவ திட்டத்தை தொடங்கிவைத்தார் ஜெ. # லேபிள்ல அம்மா படம் போடாம சிரஞ்சீவி படத்தைப்போட்றாதீங்க, நாஞ்சில் கதிதான்

==================
வெட்கமே இல்லாமல் என்னுடன் கூட்டணி சேர திமுக முயல்கிறது: விஜயகாந்த் # நிச்சயதார்த்தம் நடக்கும் வரை அப்டித்தான், மேரேஜ்ஆன பின் இருக்கு கச்சேரி
================
DMKஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: மு.க.ஸ்டாலின் # கழக ஆட்சியில் எப்போதும் தாரத்துக்கு முன்னுரிமை
===================
10 அடுத்த 40 ஆண்டுக்கான திட்டத்தை இப்போதே வகுப்பவர் மோடி: இல.கணேசன்#  நாளை  பலாக்காயை விடுங்க, இன்னைக்கு கிடைக்கப்போகும் கிலாக்காய் என்ன?
===================
11 சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுக்க கூடாது!- உச்ச நீதிமன்றம் அதிரடி # சாமியே  அய்யப்பா,மாமியே ஹைய்யா டாப்பா
================
12 இன்னும் 15 வருடங்களில் கல்வித்துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழும் -ஓபிஎஸ் # அப்போ  3 ஆட்சி மாறனும் போல 
==================
13 திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் ! # போய்யா.திட்ட திட்ட திண்டுக்கல் னு சொல்லி இருப்பாரோ?


=========14 எந்த அரசாங்கமும் சினிமாவுக்கு நல்லது பண்ணலை - கமல் ஹாஸன். பண்ணலைன்னு சொல்லலை, நல்லது பண்ணி இருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்
====================15 அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கிறது -சரத்குமார் # இந்த ராணுவ ரகசியம் அம்மாவுக்குத்தெரியுமா? தகவல் கொடுக்கனுமா?===============


16 கூட்டணி குறித்து பேச இன்னும் யாரும் வரவில்லை -ஜி.கே மணி # செல் போன் ரிங் டோன் " காத்திருந்தேன் தனியே! எதிர்பார்த்திருந்தேன் உனையே!"?


================

17 கோயில்களில் ஆடை கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுக்கு ஹைகோர்ட்் இடைக்கால தடை # ரைட்டு.மிடி ஜீன்சில் வர்றவங்க எல்லாம் வரிசையா வாங்கஇன்றே கடைசி


=============

18 கேரளாவில் மதுவிலக்கை கொண்டு வந்தது போல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வர முடியுமா?: குஷ்பு # பாமக வந்தா முடியும்.ஆனா வராது.


==============

19 அண்ணா நூலகத்தை சிறுமை எண்ணத்தோடு சீர்குலைக்க ஜெயலலிதா முயற்சி: கருணாநிதி வேதனை தவறான முயற்சி தேர்தலில் வினை ஆகும்

==============

20 பேஸ்புக் காதலால் காதலனைத் தேடி... பாகிஸ்தான் சென்று திருமணம் செய்த இந்தியப் பெண் # ஏம்மா எங்களை எல்லாம் பார்த்தா மனுசனாத்தெரியலையா?


==============

0 comments: