Tuesday, August 14, 2018

அடுத்தவன் சொத்தை ஆட்டையைப்போடறதுக்குனே

1 தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது”# சாமி சிலையை திருடறான், சாமி கோயில்ல உண்டியல்ல திருடறான், நாத்திகம் பரவுனதோட பலன் பயம் இல்லாம ஆசாமி திருடறது

================


எல்லா விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் உள்ளனர் - அமைச்சர் துரைக்கண்ணு    # அய்யாக்கண்ணு அப்டி சொல்லலையே இன்னும், அவர் சொன்னாதான் நம்புவோம்================ 3 எந்த தேர்தலிலும் போட்டியிட விரும்பவில்லை - சசிகலா சகோதரர் திவாகரன்: அண்ணா திராவிடர் கழகம்,   # கட்சி ஆரம்பிச்ச அப்ப உள்ளாட்சித்தேர்தல்ல போட்டியிடுவோம்னு சொன்னீங்க> வேட்பாளரே கிடைக்கலையா?வாக்காளர் எங்கே கிடைகப்போறாங்க?==============
4


புதுச்சேரி வளர்ச்சிக்கு, முதல்வர் நாராயணசாமி தடையாக உள்ளார். புதுச்சேரி முன்னேற விரும்பினால், அவர், என்னைப் பற்றி விமர்சிக்கக் கூடாது - புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி:  # இது என்ன புது ஐடியாவா இருக்கு? கவர்னரை விமர்சிக்கலைன்னா ஒரு மாநிலம் முன்னேறிடுமா?


=============
5
: தமிழக அரசையும், உயர்கல்வித் துறையையும் குறை கூற, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, எந்த தகுதியும் இல்லை. - தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்  # பாஜ க அமித்ஷா , தமிழிசை, ஹெச் ராஜா இவங்க  குறை சொன்னப்போ கமுக்கமா இருந்தீங்களே, அது ஏன்?


=================
6

 வேலைக்கு செல்வது பாதுகாப்பானது; முதல் தேதி சம்பளம் கிடைத்துவிடும். ஆனால், தொழில் முனைவோராக, நிச்சயமற்ற தன்மைகளையும், நிறைய போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம், இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது. - 
 தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்  # வேலைவாய்ப்பை பெருக்க வழி இல்லைன்னா இப்படியும் சமாளீக்கலாமா?


============
7


தமிழகத்தில், தொழில் துவங்க முயற்சிக்கும் இளைஞர்களுக்கு, தேவையான உதவிகளை அரசு வழங்குகிறது. இதன்மூலம், வேலை தேடுபவர் என்ற நிலையிலிருந்து, வேலை கொடுப்பவர் என்ற நிலைக்கு உயர முடியும் - 
 தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் # விஜய் மல்லய்யா, லலித் மோடி மாதிரி தொழில் அதிபர்களுக்குதான் அரசு உதவி செய்யுது, சாமான்யன்கள் கிட்டே டாக்குமெண்ட்ஸ் , ஜாமீன் , காரண்ட்டர் கேட்டுதானே லோன் தருது?


================

8
மன்னார்குடியில் எங்களுக்கு கூடிய கூட்டத்தை பார்த்து, எதிரிகள், துரோகிகள் பயந்து உள்ளனர். இந்த ஆட்சியை அகற்றவே, அ.ம.மு.க., உருவாகி உள்ளது.- தினகரன் # அப்ப இந்த ஆட்சிக்காலம் முடிஞ்சதும் கட்சியைக்கலைச்சிடுவீங்களா?

==============

9
அ.ம.மு.க.,வுடன் கூட்டணி வைக்க, பல கட்சியினர், இயக்கத்தினர் விரும்புகின்றனர். எதிர்வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - தினகரன் # அது ஏண்ணே 34 தொகுதிகளை விட்ட்டுட்டீங்க>20 ரூபா  டோக்கன் கம்மியா இருக்கா?=============

10
 பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, மத்திய அமைச்சராக இருந்தபோது, அவருடைய செயலர் அறையிலேயே, 1,500 கிலோ தங்கம், 1,800 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டன. எனவே, தமிழக அரசை குறைகூற, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு எந்தத் தகுதியுமில்லை. - தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் # பாஜ க தவிர வேற யார் குறை சொல்லவும் தகுதி இல்ல போல


=============
11
நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. 'நீட்' தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு வாய்ப்பே கிடையாது. தற்போதைய சூழலில், வரும் லோக்சபா தேர்தலில், காங்., அமோக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும். -  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் 


# தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, டெல்லி, குஜராத்  இந்த 6 மாநிலங்கள் ல மட்டும் தான் எதிர்ப்பு, மற்ற மாநிலங்களில் பாஜக ஆதரவுதான்னு நிலவரம் சொல்லுதே?


=================

12 கலைஞரை திராவிட இயக்க மூத்த தலைவராக ஏற்க முடியாது - தமிழக அரசு. கோர்ட்டில் வாதம் # கலைஞரின் அரசியல்"சர்வீஸ் எத்தனை வருசமோ அத்தனை வயசு கூட இருக்காது பாதி அதிமுக MLA க்களுக்கு===============
13 ஜானகி எம்ஜிஆர் இறந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க கலைஞர் மறுத்தார் - தமிழக அரசு வாதம் # டீச்சர் நேத்து என்னை அவன் கிள்ளிட்டான்,இன்னைக்கு நானு,தானிக்கு தீனி டைப் வாதம் இது
===============
14

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரி மனு பாஸ்போர்ட் ,பேங்க் அக்கவுண்ட்சை முடக்கனும்


=============
15 பிச்சை எடுப்பது குற்றம் அல்ல– உயர்நீதிமன்றம் கருத்து

# 5 வருசத்துக்கு ஒரு தடவை எல்லா கேவலமான அரசியல்வாதிகளும் எல்லா வீட்டுப்படி ஏறியும் அம்மா தாயே ஓட்டுப்போடுங்க னு பிச்சை எடுத்துட்டுதானே இருக்காங்க?அது எப்டி தப்பாகும்?5 வருசம் ஊரை அடிச்சு உலையில போடலாமில்ல?


============


16 விமர்சனங்களுக்கு பி.வி.சிந்து பதில் தங்கத்தை இழக்கவில்லை வெள்ளி வென்றிருக்கிறேன்"# சபாஷ்,கலைஞர் மாதிரியே"லாவகமா சமாளிக்கறாரு!ஏன்"தோற்றீர்கள்"எம்ஜியாரிடம்.
தோற்கவில்லை,வெற்றிவாய்ப்பை இழந்தேன்


============


17 கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதுமளவுக்கு பழக்கம் இருந்தது - சீமான்
# மொத்தத்துல எல்லா அரசியல்வாதிகளும் அடுத்தவன் சொத்தை ஆட்டையைப்போடறதுக்குனே அரசியலுக்கு வர்றாங்க


============18 கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: என்.ராம்
# எத்தனையோ முறை மேடைகளில் ,பேட்டிகளில் மட்டம் தட்டி இருக்கிறார்,வரலாறு தெரியாம பேசக்கூடாது,இந்துக்களை,இந்து மத நம்பிக்கைகளை நக்கல் அடிப்பாரு,தேர்தல் நேரத்துல மட்டும் இந்துக்கள்ட்ட ஓட்டுப்பிச்சை கேப்பாரு


===========


19 நாங்க இந்தியாவுக்குள் நுழைவோம் - சீனா
போட்டியா நாங்களும் ஒரு படத்தை டப் பண்ணி சைனா அனுப்பறமே?பார்ப்பமா?யாருக்கு பாதிப்பு அதிகம்னு?=============


20 ரபேல்' போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடு தான், நாட்டில் இதுவரை, ராணுவத் துறையில் நடந்த ஊழலில், மிகப் பெரியது- ராகுல்:  # குடும்பம் தழைக்கனும்னா தாரம் இருக்கனும், குற்றச்சாட்டை நிரூபிக்கனும்னா ஆதாரம் இருகனும்=

ஒப்பனைத்திலகம்

அறிஞர் அண்ணா காலத்தில் நேரில் சென்று தான் முகம் பார்த்து அஞ்சலி செலுத்த முடியும். இப்போ டிவியில் எல்லாம் லைவ். கூட்டம் குறைய இதுவும் ஒரு காரணம்.என சிலர் சொல்கிறார்கள் ,அண்ணா காலத்திய மக்கள் தொகை ,இப்போதைய மக்கள் தொகை இதையும் கணக்கு சேர்க்க வேண்டும்


==========

2 இனி கனிமொழியோ ,அழகிரியோ ஸ்டாலினுக்கு தொந்தரவு தராமல் இருந்தாலே போதும்,் கிட்டத்தட்ட ஜெயிச்ச மாதிரி


============

3 அரசு ஆசிரியர்களுக்கு வரலாறு காணாத சம்பளம் ஏற்றி விட்டதில் கலைஞரின் சாணக்கியத்தனம் கற்பனைக்கு எட்டாத தொலை நோக்குப்பார்வை.தேர்தல் பணிமனைகளில் ,வாக்களிக்கையில் நன்றிக்கடனாக "அட்ஜஸ்மெண்ட்" நடக்க வழி வகுத்தார்


===========


4 மணிரத்னம் இயக்கிய பிரமாதமான ஆவணப்படம் + சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த திராவிட வரலாற்று ஆவணப்படம் "இருவர்" (MGR+ கலைஞர்) ரிலீஸ் ஆன சமயத்தில் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை.இப்போ ரீ ரிலீஸ் ஆக்க உகந்த சமயம்.திரைக்கதை ,இயக்கம்,ஒளிப்பதிவு,இசை,பின்னணி இசை அனைத்தும் பிரமாதம்


===========


5 கலைஞரின் இன்னொரு மகனான மு.்க.முத்து உடல்நலக்குறைவாக இருக்கக்கூடும்.இறுதி ஊர்வலத்தில் காணவில்லை.


==========


6 சவபெட்டியில உப்பு போடுறது சடங்கா??
உப்பிட்டவரை உள்ளளவும் நினை பழமொழிக்கு ஏற்ப விருந்துகளில் வாழை இலையில் முதலில் உப்பு வைப்பார்கள்.தேர் உலாவில் அதே போல் உப்பு வீசுவார்கள்.


===========


7 நீதிபதிகள் : மெரினாவில் அடக்கம் செய்ய சட்ட சிக்கல் என்று காரணம் சொன்னீர்கள். இப்போது எந்த சட்ட சிக்கலும் இல்லையே..
அரசு வழக்கறிஞர் : சட்ட சிக்கல் இல்லை. ஆனால் மரபு இல்லை. நீதிபதிகள் : பிறகு ஏன் சட்ட சிக்கலை காரணமாக சொன்னீர்கள் ? அரசு வழக்கறிஞர் : இல்லை வழக்கு நிலுவையில் 1/3

நீதிபதிகள் : அதான் வழக்குகள் தள்ளுபடி செய்தாகிவிட்டதே.. அரசு வழக்கறிஞர் : ஒரே நேரத்தில் இத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. நீதிபதிகள் : சரி இப்போது என்ன பிரச்சினை உங்களுக்கு ? அரசு வழக்கறிஞர் : முன்னாள் முதல்வருக்கு இடம் ஒதுக்க மரபு இல்லை. #2/3


அரசு வழக்கறிஞர் : முன்னாள் முதல்வருக்கு இடம் ஒதுக்க மரபு இல்லை. நீதிபதிகள் : இன்னாள் முதல்வருக்கு தரப்படவேண்டும் என மரபு எங்கே இருக்கிறது காட்டுங்கள் ! அரசு வழக்கறிஞர் : இந்த வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க அவசியமில்லை. நீதிபதிகள் : அப்ப ஒரு வாரம் கழிச்சு விசாரணை பண்ணலாமா? #3/3


============

8 எனக்குத்தெரிஞ்சு ட்விட்டர் நண்பர்கள் (பாலோயர்ஸ் 10,0000+) திமுக காரங்க 150+ இருக்காங்க.அதில் வசதி வாய்ப்புள்ளவர்கள் 75%.ஆனா சென்னை அஞ்சலி செலுத்தப்போனவங்க 12 பேர்தான்


==========


9 ஆன் லைன் ல வர்ற திமுக ,கலைஞர்"புகழ்"பாடும் ட்வீட்களை எல்லாம்"பார்த்தா 2021 தேர்தல்ல 75% வாக்கு வந்திடும் போலயே.


==========


10 பேங்க் கேஷியர் தினமும் காலைல ஓப்பனிங்க் பேலன்ஸ் செக்"பண்ற,மாதிரி நெட்டிசன்கள் டெய்லி அவங்கவங்க பாலோயர்ஸ் கவுண்ட் சரியா இருக்கா?னு"செக் பண்றாங்க


==========


11 காமராஜர் ,அறிஞர்,அண்ணா,எம்ஜியார் ,இவர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற,பெண்கள் எண்ணிக்கையில் பாதி கூட கலைஞர் இறுதி"ஊர்வலத்தில் இல்லை.திமுக வின் தோல்விக்கு"மிக முக்கிய,காரணம் பெண்கள் வாக்குகளை"கவரத்தவறியது


============


12 விஸ்வரூபம்,2 ல ட்ரெய்லர் ல வந்த பாத்ரூம் ,பெட்ரூம் சீன் எல்லாம்"சென்சார்ல கட் டாம்.மெயின் பிக்சர்ல அதெல்லாம் கிடையாது,எனவே அந்த எதிர்பார்ப்போடு போய் ஏமாற வேண்டாம் (இதை எனக்கு"நானே சொல்லிக்கறேன்)


============


13 ஒப்பனைத்திலகம் பிக்பாஸ் புகழ் ரைசா நடித்த ப்யார் ப்ரேமாகாதல் இன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது.நாளை தள்ளிப்போடப்பட்டிருக்கு prema kadhal==========


14 ரிலையன்ஸ் ஜியோல கால் பண்ணா உடனே கால் எண்ட் வருது என்னா பண்றது?
போனை ஆப் பண்ணி ஆன் பண்ணவும்.சமிபத்தில் வந்த ஒரு ஹாலிவுட் படத்துல இந்த டயலாக் வருமே.ஹீரோயின் டூ ஹீரோ============


15 பொதுவா ஹீரோ வில்லனைப்பாத்து டயலாக் பேசும்போது ஹீரோ"பக்கத்துல நிற்கற ஹீரோயின் வில்லனோட ரீ ஆக்சனைதான் பாக்கனும்,ஆனா ஹீரோவை ஆச்சரியமாப்பார்க்கற மாதிரி தமிழ்சினிமா ல தான் காட்டறாங்க


============

16  அரசு நூலகங்கள்ல இலவசமா ஏராளமான (அனைத்து தரப்பு)நாவல்கள்,சிறுகதைகள் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கு,நகர மக்கள் அதை பயன்படுத்தறதே இல்ல.கவுரவக்குறைச்சலா நினைக்கறாங்க போல.இதே போல் பேசஞ்சர் ட்ரெயினில் பயணிப்பதையும் சிலர் தவிர்க்கின்றனர்


===========


17 விஸ்வரூபம் 2 கேரளாவில் 200 தியேட்டர்களில் வெளியிடப்படுவது ஆச்சரியம்,குறிப்பா தலைநகரான திருவனந்தபுரம் ல மொத்தமே 13 தியேட்டர்கள்தான்.அதுல 9 தியேட்டர்கள்ல ரிலீஸ்,அடேங்கப்பா.கமலின் அதிகபட்ச அச்சீவ்மெண்ட் இதுதான் போல


============


18 பேபி டிபி வெச்ச ஒரு பிரபல ட்வீட்டர் எப்ப பாத்தாலும் "எனக்கு உடம்பு சரி இல்ல" ங்கறாரு.கடலை போடறது பூரா பொண்ணுங்க கிட்ட.இது தெரியாம இத்தனை நாளா நாம ஹாஸ்பிடல் போய் டாக்டருக்கு தண்டம் கட்டி இருக்கோம்


============19 துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி க்கு ரிசர்வ் வங்கியில் முக்கிய (கவுரவ)பொறுப்பு தந்திருப்பது சாமான்ய ஜனங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இடைஞ்சலாக இருக்கும் என சொல்லப்படுகிறது============


20 அடுத்த தேர்தலில் உங்க வாக்கு யிருக்கு?னு இப்ப போல் வைக்கற 13 பேருக்கும் சொல்றேன்
1 அனுதாபம் இருக்கற இந்த டைமில் சொல்வது செல்லாது.மனம் மாறும் 2 தேர்தல் 2021 மே மாதம்.அதற்குள் பல நிகழ்வுகள் மக்கள் மனதை மாற்றும் 3 ஆன் லைன் வராத பாமர மக்கள் கருத்து முக்கியம்,அது முற்றிலும் வேறு

Monday, August 13, 2018

கீர்த்தி சுரேஷ் vs நயன்தாரா

டிஷர்ட்டும், ஷாட்ஸும் போட்டுட்டு ஆபீஸ் போனாதான் என்னவாம். கையும் மூளையும்தான வேலை செய்யுது. இந்த அயர்ன் பண்ற வேலை இருக்கே.. ச்சை...


ஆபீஸ்ல என்ன வேலை பார்க்கறீங்க?

அதான் சொன்னேனே?அயர்ன் பண்ற வேலை==============


2 டாக்டர்,வர வர எந்த சட்டை தெச்சாலும் ரெண்டு மாசத்துல சின்னதாய்ருது,டெய்லரை மாத்தனுமோ?


உங்களை மாத்தனும்,உணவுக்கட்டுப்பாடு,உடல் பயிற்சி எதையும் பாலோ பண்றதில்ல============


3 டாக்டர்,மனசு சரியில்லனா Makeup போட்டா சரியாகிடும் நு Youtube videos பாத்தேன்..நெஜமா பொய்யா?


இது என்னம்மா புது புரளியா இருக்கு?ஏழைங்களுக்கு சாப்பாடு போட்டாலாவது புண்ணியமும்,மன திருப்தியும்,நிம்மதியும் கிடைக்கும்.மேக்கப் போட்டா டிஎம் ல தொந்தரவு தான் கிடைக்கும்
===========4 தினசரி 10,000 ஸ்டெப்ஸ் ( 10 கிமீ) நடைப்பயிற்சி (வாக்கிங்) போனாத்தான் உனக்கு"ஹார்ட் அட்டாக் வராது


டாக்டர்,இது உண்மை ன்னா இந்த உலகத்துல வைகோ ,வும் அஜித்தும்"தான் தப்பிப்பாங்க
===========


5 டாக்டர்,ப்ளட் பிரஷர் அதிகமாக இருந்தா மனதுக்கு பிடித்தவர்களோடு மனம்விட்டு பேசுங்கள்.

குறைவா இருந்தால்,மனைவியோடு மட்டும் பேசுங்கள்..
உடனே நார்மலாயிடும் கறாங்களே,உண்மையா?
பிரஷர் வர்றதே பொண்டாட்டிங்களாலதான்


===========


6 இந்தாங்க போன் நெம்பர்,யாரையாவது கலாய்க்கனும்னா இந்த நெம்பருக்கு உங்க மீம்சை அனுப்புங்க


ஓஹோ,ட்ரோல் ப்ரீ நெம்பரா?
==========


7 இந்த NRIங்க எல்லாம் ஏன் சரவண பவன்ல சாப்பிடுறத பெரிய விஷயமா போட்டோ பிடிச்சி போடுறாங்க.?!


5 ரூபா இட்லியை 75 ரூபாய்க்கு சாப்பிடற முட்டாள் பசங்கனு உலகுக்கு தெரிவிக்கதான்============8 சோனி டி வி வாங்கலாம்னு இருக்கேன்ஏன்? சோனியா இருக்கற டிவி வாங்கனும்? புஷ்டியா வாங்கலாமே?============9 டாக்டர் ,லிப்ஸ்டிக் போட்ற
பெண்களை நிறைய
ஆண்களுக்கு பிடிக்காது. என்பது உண்மையா?

இது என்னய்யா புதுபுரளி, புது வகை செவ்”வாய்” தோஷம் ?

===============
10 இன்ஸ்பெக்டர் , kiki சேலஞ்ச்ல ஈடுபட்டதுக்காக அவரை ஏன் கைது பண்ணுனீங்க? என்ன பண்ணாரு?

மொக்கை ஜோக் சொல்லி எல்லாரையும் சிரிக்கச்சொல்றாரு
==============
11 இனிமே முதல்ல இருந்த மாதிரியே யாரோடவும் பேசாம நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்ஓஹோ,இதுக்கு முன்னால என்ன பண்ணீட்டு இருந்தீங்க?

கடலை போட்டுட்டு இருந்தேன்
பேசலைன்னீங்க?
சேட்டிங்க் ல டைப்பலாம் இல்ல?


===============

12 சீமானையும் ராஜாவையும் கலந்து கட்டி சீமராஜான்னு வச்சிருக்காங்க போல, பட்டையை கிளப்பும்


ஓஹோ,சீமான் ,ஹெச் ராஜா ,ஆ. ராசா எல்லாருக்குமே கெட்ட பேரு தான்.அந்த செண்ட்டிமெண்ட் தான் புதுக்கோட்டை சுவர் ஓவிய சர்ச்சைல சிக்குனாங்களே?===============


13 கிளி ஜோசியகாரன் ஒரே வார்த்தையில முடிச்சிட்டாரு உனக்கு வர பொண்டாட்டி வாயாடி ..

ஆடி மாசத்துல பொண்ணு பார்த்தா அப்டித்தான்=================


13 டைரக்டர் சார்,தீபாவளிக்கு"ரிலீஸ் ஆகப்போற நம்ம படத்துல ஹீரோ கேரக்டர்"பேரு பரத்தா?


அப்டி வெச்சா அது ரீ மேக்னு கண்டுபுடிச்சுடுவாங்க,அதனால ஹீரோ கேரக்டர் நேம் சரத் னு வெச்ட்டோம்===============


14 சார்",நான்"ஆர்டர்"பண்ணது,இன்னும்"வர்ல


வந்தாச்சு,கம்பெனிக்கு"வந்து வாங்கிக்குங்க

ஹோம் டெலிவரி னு சொன்னாங்க?
ஹோம் டெலிவரி ன்னா புடிச்சு உள்ள"போட்டுடறாங்க"இப்பவெல்லாம்
===============
15 குருவே!

"இந்த உலகம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்?"

"அவனவன் வேலையை அவனவன் செய்தாலே இந்த உலகம் நன்றாக இருக்கும்”
பாதிப்பேருக்கு வேலையே"இல்லைங்கறதுதானே பிரச்சனை!இது போதாதுனு"பொறணி பேசறதுக்கு ஒரு"கூட்டம்


==============


16 குருவே!பஸ்ல முதன்முறையாக திருக்குறளை எழுத சொன்னவரு நம்ம தானைத்தலைவர்தான்....னு வாட்சப்ல மெசேஜ் வந்தது,அது உண்மையா?


இது தேவல,வாசுகி மூலமா திருவள்ளுவர் கிட்ட சொல்லி திருக்குறளை எழுத வெச்சவரே தலைவரோட முன்னோர்கள்தான் ஒரு மெசேஜ் வந்தது==============


17 பண்ணிக்கிட்டாங்களாம்

அடடா

ஏன் தலைவரே?அவங்க குடும்பத்தை நினைச்சு கவலையா?
அதில்லை,ஏற்கனவே சார்ட்டேஜ்,அதுலயும் 34 ஓட்டு போய்டுச்சே?=============18 தலைவரே! ராமானுஜம்னு ஆன்மீக தொடருக்கு வசனம் எழுதுனீங்களே?நம்ம பகுத்தறிவுக்கொள்கைக்கு பங்கம் வந்துடாதா?

காசு முக்கியமா? கொள்கை முக்கியமா?============19 குருவே! கீர்த்தி சுரேஷ்க்கு மாடர்ன் டிரஸ் செட் ஆகாதுனு ஜனங்க பேசிக்கறாங்களே?

ஆமா,நயன்தாரா ன்னா எதா இருந்தாலும் செட் ஆகிடும்.


============


20 குருவே!ஒருவருடைய மறைவு அவரை நல்லவராக்கி விடும் என்றால் வாழும் காலத்தில் எதுக்கு நல்லவனா வாழனும்..?

காமராஜர் மாதிரி உயிருடன் இருக்கும்போதும் நல்ல பெயர் வாங்குவதுதான் வாழ்க்கைக்கு அர்த்தம்.மக்கள் வரிப்பணத்தை திருடி சொத்து சேர்ப்பது எப்போதும் அனர்த்தம்தான்


=============