Thursday, December 31, 2015

அழகு குட்டி செல்லம்’

‘நஞ்சுபுரம்’ திரைப்படம் வழியாகக் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சார்லஸ். திரைப்படங்கள் குறித்தும் திரைக்கதைக் குறித்தும் எளிமையான மொழியில் ஆழமாக எழுதிவரும் அயராத வலைப்பூ எழுத்தாளராகவும்(https://vaarthaikal.wordpress.com/) தன்னைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அழகு குட்டி செல்லம்’. படம் குறித்து அவரிடம் பேசியதிலிருந்து…உங்களது பின்னணியைச் சுருக்கமாகப் பகிருங்கள்?


எனது சொந்த ஊர் கோவில்பட்டி. நான் படித்தது வளர்ந்தது எல்லாமே அங்கேதான். பள்ளிக் காலத்தில் ஓவியம் மீதும் கவிதை மீதும் அதிக ஆர்வமிருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கிறபோது யாப்பிலக்கணத்தை முறையாகப் பயின்றேன். மரபுக் கவிதைப் போட்டிகளில் மாவட்ட அளவில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.பிறகு சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். சினிமா பார்க்க வீட்டில் தடையில்லை என்பதால் சிறு வயது, முதலே அதிக படங்களைப் பார்த்து வளர்ந்தேன். பிறகு பள்ளியிறுதி வகுப்பு படிக்கிறபோது தூர்தர்சன் ஒளிபரப்பிவந்த ஒரு நிகழ்ச்சி என்னை சென்னை திரைப்படக் கல்லூரி நோக்கி இழுத்து வந்தது. பல்கலை. மாணவர்களுக்காக ஒளிபரப்பப்பட்டுவந்த உயர்கல்வி நிகழ்ச்சி அது. அதில் வாரம் ஒருமுறை ‘அண்டர்ஸ்டாண்டிங் சினிமா’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதைத் திறம்பட நடத்திவந்தவர்‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தை இயக்கிய தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஹரிஹரன். அந்த நிகழ்ச்சி சினிமா பற்றி அடிப்படையான அறிவையும் தொழில்நுட்ப அறிவையும் எனக்கு ஒருசேர வழங்கியது. பிறகு 12-ம் வகுப்பு முடிந்ததும் சென்னை அரசுத் திரைப்படக் கல்லூரியில் இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல் பிரிவில் சேர்ந்து படித்தேன். திரைப்படக் கல்லூரியின் இறுதியாண்டில் கமல ஹாசன் மருதநாயகம் படத்தைத் தொடங்கினார். அவரது படத்தில் பயிற்சி உதவி இயக்குநராக பணிபுரிய எனது துறையாசிரியரும் கமல் சாரும் தேர்ந்தெடுத்த மூன்று மாணவர்களில் நானும் ஒருவன்.எதிர்பாராத விதமாக அந்தப் படம் தொடர்ந்து நடக்காததால் நாங்கள் பணிபுரிய முடியாமல் போனது. ஆனால் தனியார் தொலைக்காட்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பு என்னைப் போன்ற இன்ஸ்டிட்யூட் மாணவர்களுக்குப் பெரிய வாசலைத் திறந்துவிட்டது.
திரைப்படக் கல்லூரி வட்டாரத்தில் விசாரிக்கும்போது உங்களை ‘அகதி’ சார்லஸ் என்றார்கள்...
நான் இயக்கிய டிப்ளமா குறும்படம்தான் ‘அகதி’. 90களில் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு இலங்கைப் பிரச்சினை பற்றி பேசவே பயந்த நாட்கள் அவை. அப்போது ஓர் ஈழ அகதியை மையப்படுத்தி நான் எனது குறும்படத்தை இயக்குகிறேன் என்றதும் கல்லூரி நிர்வாகமும் ஆசிரியர்களும் அதை விரும்பவில்லை. படத்தை எடுத்து முடிக்கும் முன்பே அதைப் பார்க்காமல் அதிருப்தி அடைந்தார்கள். ஆனால் நான் பிடிவாதமாக அந்தப் படத்தை எடுத்தேன்.எனது படத்தின் திரைமொழியில் தவறு இருந்தால் அதற்கு பெயில் மார்க் கூட போடுங்கள். ஆனால் தடுக்காதீர்கள் என்றேன். ஏற்றுக்கொண்டார்கள். அந்தக் குறும்படத்துக்காக ஒரு குண்டுவெடிப்பையும் யாழ்ப்பாணத்தையும் சித்தரிக்க வேண்டியிருந்தது. அதில் ஈழ அகதி இருந்தாலும் உலகளாவிய அகதிகளின் பிரச்சினையை பதிவு செய்தேன். இன்றளவும் புதிய மாணவர்களுக்குத் திரையிடப்படும் படமாக ‘அகதி’ இருக்கிறது. அந்தப் படம் ஏற்படுத்திக் கொடுத்த பெயர்தான் ‘அகதி’ சார்லஸ்.


‘நஞ்சுபுரம்’ திரைப்பட அனுபவம் பற்றிக் கூறுங்கள்
2006 ல் டிஜிட்டல் கேமராக்கள் இங்கே பிரபலமாகாத காலகட்டத்தில் அந்தப் படத்தை நானும் நடிகர் ராகவும் டிஜிட்டலில் உருவாக்கினோம். எங்களோடு சேர்ந்து அந்தப் படத்துக்கு மொத்தம் 29 பேர் முதலீடு செய்தார்கள். இன்று பிரபலமாக இருக்கும் தம்பி ராமைய்யா அண்ணனை இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினேன். அதேபோல சகோதரர் ‘ஆடுகளம்’ நரேனை இந்தப் படத்தில் நாயகனின் அப்பாவாக ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தேன்.ஒரே மூச்சில் படத்தை எடுத்து முடித்தாலும் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பிறகு இராம.நாராயணன் இந்தப் படத்தை வெளியிட்டு வெற்றிபெற வைத்தார். யதார்த்த சினிமா அல்லது வணிக சினிமா-இந்த இரண்டு வகைதான் இங்கே பிரதானமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், நஞ்சுபுரம் படத்தை ‘ஃபேண்டஸி கலந்த மெட்டஃபாரிக்’ படமாக முயற்சித்து வெற்றியும் பெற்றோம். பாம்புப் படம் என்றால் பக்தி கலந்த சென்டிமென்ட் முக்கியமாகக் கருதப்பட்டுவரும் நிலையில் பாம்பை ஒரு தீய சக்தியாக, சாதியத்தின் உருவகமாக அந்தப் படத்தில் சித்தரித்தேன். பாம்பின் விஷத்தைவிட சாதியத்தின் விஷம் கொடியது என்பதை அந்தப் படம் கோனார் நோட்ஸ் இல்லாமல் காட்சிகளின் வழியாகவே ரசிகர்களை உணரவைத்தது.பல விமர்சகர்கள் தமிழின் முதல் மெட்டஃபாரிக் படம் என்றும் பாராட்டியதை மறக்க முடியாது. இதைவிட மறக்க முடியாத ஒன்று நஞ்சுபுரம் ஓடிய திரையரங்குகளில் பாம்பு வரும் எல்லாக் காட்சிகளிலும் ரசிகர்கள் கால்களை இருக்கையில் தூக்கி வைத்துக்கொண்டு பயத்துடன் ரசித்தார்கள்.‘அழகு குட்டி செல்லம்’ உங்களது முந்தைய ஆக்கங்களிலிருந்து எப்படி மாறுபடுகிறது?‘நஞ்சுபுரம்’ டார்க் ஸ்டோரி என்றால் இது வெளிச்சத்தின் கதை, நம்பிக்கையின் கதை என்று சொல்ல வேண்டும். ‘அகதி’ எனக்கு நிறைய தொடர்புகளையும் நட்புலகையும் உருவாக்கித் தந்தது. ‘நீயா? நானா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இயக்குநர் அந்தோணியை ‘அகதி’ குறும்படத்தைப் எடுத்த துணிச்சலான திரைப்படக் கல்லூரி மாணவராகத்தான் சந்தித்தேன். அவர்தான் தற்போது ‘அழகு குட்டி செல்லம்’ படத்தின் தயாரிப்பாளர். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட அவர் ‘ நானே இதைத் தயாரிக்கிறேன்’ என்று முன்வந்தார்.இந்தக் கதை இப்படித்தான் போகும் என்று எல்லோரும் நினைக்கும்போது, அது ரசிகர்கள் சிலிர்த்து ஏற்றுக்கொள்ளக்கூடிய இன்னொரு பாதையில் பரபரப்பாக நகரும் திரைக்கதையைக் கொண்டது. இது சிறுவர்களைப் பற்றிய பெரியவர்களுக்கான படம். சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய படம். பல கதாபாத்திரங்கள். பல கதைகள். எல்லாக் கதைகளுமே குழந்தைகளின் விதவிதமான பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவே இருக்கும்.இந்தப் படத்தின் மையம் என்னவென்றால்… இந்த உலகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களும் குழந்தைகளுக்காகத்தான். வருங்கால சந்ததிகளை மனதில் கொள்ளாமல் நாம் ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போட முடியாது. இதை நாம் உணர்வதில்லை. அதேபோல இந்த உலகின் பெரிய பிரச்சினைகள் குழந்தைகளை மையப்படுத்தியதாக இருக்கின்றன.
இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வும் குழந்தைகள்தான். இதில் திரைக்கதையும் இசையும் கதையை நகர்த்திச் செல்வதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் காட்சிமொழியைத் தீவிரமாகவும் அழகியலுடனும் பயன்படுத்தும் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வேத் சங்கர் இசை அமைத்திருக்கிறார். பிரவீன் பாஸ்கரின் படத்தொகுப்பும் பேசப்படும். அதேபோல் இந்தப் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்களின் பங்களிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.a

 tha hindu
சார்லஸ்

ஆபாச பாடல் வழக்கு

1/திமுகவினர் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் -கருணாநிதி # அட்வான்ஸ் புக்கிங் பார் ஓட்டுப்பிச்சை?


================2/பாமக ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்-ராமதாஸ் # உங்க வீட்டில்?எல்லோர் வீட்டில்?==============
3/சாதனைகளை புரிந்துவிட்டு அமைதியாக இருக்கிறார் அம்மா.-நாஞ்சில் சம்பத்#ஸ்டிக்கர் ஒட்டறதுதான் அந்த சாதனையா? அதைஅமைதியாதான் ஒட்டனும்.=============4/சிம்புவுக்கு திருமண பேச்சுவார்த்தை! # அப்பாடா.இப்போ தான் சிம்பு சம்பந்தமா ஒரு நல்லவார்த்தை

..மீதி எல்லாம் கெட்ட வார்த்தைதான்

===========

5/ரசாயன கழிவுகளால் 7 தமிழக நதிகள் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அரசு உத்தரவு பேக்டரியால் நீர்வளம்.டையிங்

================

6/நான் சுயநலம் இல்லாதவள் - ஜெ # சொத்து வாங்கும்போது ஏன் உங்க பேர் ல வாங்கறீங்க.ஆசிரமம்/கருணை இல்லம் பேர்ல வாங்கலாமே?


==
=============

7/2 வது குழந்தைக்கு தாயாக போகும் ஜெனிலியா! தமிழனுக்கு 2 அதிர்ச்சி.1 ஜெனிலியாக்கு மேரேஜ் ஆனது 2 ஆல்ரெடி ஒரு குழந்தை பிறந்தது

==============

8/சோனியா ஊழல் வழக்கை இலவசமாக நடத்தி கொடுக்கிறேன் - ராம் ஜெத்மலானி. # அண்ணன் எப்பவும் ஊழல் ராணிகளுக்கு மட்டும்தான் வாதாடுவாரு போல


=======================
வீட்டுமனை பட்டா வழங்க ரூ.1000 லஞ்சம். நெல்லைதாசில்தாருக்கு 6 வருட சிறை #1000 கோடி அமுக்குனவங்க தப்பிடறாங்க.1000ரூபா திருடுனவன் சிக்கிடறான்
==============
10/எமி ஜாக்சனை எந்திரன்லருந்து நீக்கச் சொல்லி போராட்டம் #,அதானே.மாப்ள லிப் கிஸ் அடிச்சு எச்சி பண்ணின உதட்டை மாமனார் எச்சி பண்ணினா நல்லதா?============11/அமளியில் ஈடுபட்டதால் ஆந்திர சட்டப்பேரவையில் இருந்து நடிகை ரோஜா 1 ஆண்டு சஸ்பெண்ட்.

# ஆர் கே செல்வமணி சந்தோஷமா இருப்பாரே?


=============

12/சிம்பு வீட்டு முன்பு இன்றும் பெண்கள் அமைப்பினர் போராட்டம் # போராடப்போனவங்க எல்லாம் பத்திரமா வீடு வந்்தாச்சா?எண்ணிப்பாத்துக்குங்க

=============

13/தொழில் தொடங்க சிறந்த நாடுகள் வரிசையில் டென்மார்க் முதலிடம்! இந்தியாவுக்கு 97-வது இடம் # TEN MARK GET FIRST MARK.MARK it


=================

14/ஒரு கட்சியில் இருந்து பிரிந்து சென்று மற்றொரு கட்சியில் சேருவது நாகரீகமற்ற செயல் அல்ல-மு.க# தலைவா! அப்போ நம்ம கட்சில பச்சோந்திகளே இல்லையா?


=================

15/ரஜினி நடிக்கும் 2.0.... பாகுபலியின் இரு பாகங்களையும் மிஞ்சும் பட்ஜெட்! # நஷ்ட ஈடு கேட்க இப்பவே ரெடி ஆகிக்குங்க


================

16/சிம்புவும், அனிருத்தும் இன்று கோவை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை # காவல் துறை முதல்வரின் நேரடிப்பார்வையில் னு தெரிஞ்சுமா?செம தில் தான்

=============

17/பீப் பாடல் பாடிய சிம்பு, அனிருத் மீது பாமக வழக்கு
ஏமாளி சிக்கிட்டாரா? இதை வெச்சு ஒரு மாசம் ஓட்டிடுவாரு டாக்டர் அய்யா

===============

18/நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா இன்று கோர்ட்டில் ஆஜர் ஆதாரம் இல்லாததால் . குற்றவாளி விடுவிக்கப்படுகிறார்?

============
பீப் பாடல் பற்றி ரஜினியிடம் கேளுங்களேன் -கங்கைஅமரன் காட்டம்# உங்க சகோதரர்ட்ட கேட்காதீங்கன்னு சொல்லுங்க.அது நியாயம்.அவர்ட்ட கேளுங்கனு ஏன்?

===============

20/ஆபாச பாடல் வழக்கில் ஆஜராக நடிகர் சிம்பு 30 நாட்கள் அவகாசம் கேட்டு மனு; டூ கோவை 500 கிமீ.நடந்து போனாலே 3 நாள் ல போய்டலாமே?


=============

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்? ஜெ.க்கு விஜயகாந்த் பதிலடி!

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூரில் நிவாரணம் வழங்க வேண்டி தேமுதிக சார்பில் எனது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற பின் அதிமுகவை சார்ந்தவர்கள் மேடை, ஒலிப்பெருக்கிகள், ப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் கொடி, தோரணங்களை அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ப்ளெக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டு எனது உருவபொம்மை எரிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய தேமுதிகவினரின் வேன் கும்பகோணத்தில் வழிமறித்து கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லாம் நடக்கும் வரை அமைதியாக ஒருநாள் முழுவதும் இருந்துவிட்டு, அதன் பிறகு தேமுதிகவை சார்ந்தவர்கள் தரம் தாழ்ந்து நடந்து கொண்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

தரமில்லாதவர்களுடன் 2011ல் கூட்டணி அமைத்து, தரம்தாழ்ந்த ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று, அவர்கள் ஆட்சி அமைத்திட பாடுபட்டதற்காக நான் வெட்கப்படுகிறேன். ஜெயலலிதா என்னுடன் கூட்டணி அமைக்கும்போது தரம் தாழ்ந்திருக்கிறோம் என்பது அப்போதே தெரியவில்லையா? அது இப்போதுதான் தெரிகிறதா? மீண்டும் சொல்கிறேன் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தமைக்காக நான் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.

ஜெயலலிதாவின் தலைமையில் உள்ள அதிமுகவின் தரம் எப்படி இருக்கிறதென்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தர்மபுரியிலே மாணவிகளை எரித்த சம்பவமும், ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா சிறைக்கு செல்லும்போதும் அதிமுகவினர் நடத்தும் தரம் தாழ்ந்த அராஜகங்களையும், வன்முறைகளையும் மக்கள் பார்க்கிறார்கள். இவரது அதிமுக மட்டுமே கண்ணியமிக்கது போலவும், மக்களுக்கு தொண்டாற்றுவது போலவும் கூறியுள்ளார். 1996ல் ஊழல் குற்றச்சாட்டால் முதலமைச்சராக இருந்தபோதே  பர்கூர் தொகுதியில் தோற்றுப்போனீர்களே அப்போதே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் அதிமுகவில் இல்லையென்பது நிரூபணம் ஆகிவிட்டது.

தற்போது வெள்ள நிவாரணப் பணியில் தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களை பறித்து, அதிமுகவினர் எப்படி ஸ்டிக்கர் ஒட்டி மக்கள் தொண்டாற்றினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அதிமுக அரசு ஸ்டிக்கர் அரசாக மாறிவிட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்டிக்கர் முதலமைச்சராக மாறிவிட்டார். எனக்கு எதிராக எதையும் செய்ய வேண்டாமென அறிவித்தும் கன்னியாகுமரியிலும், விழுப்புரத்திலும், அரியலூரிலும் உருவபொம்மையை எரித்து உள்ளார்கள். இதுதான் அதிமுக தொண்டர்களின் கட்டுப்பாடா? ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர் கொடுக்கும் மரியாதையா?

நான் தேமுதிக தொண்டர்களிடம் ஆளும் அதிமுக எனக்கு எதிராக வன்முறையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்டாலும், நீங்கள் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி இருந்தேன். அதற்கு கட்டுப்பட்டு தேமுதிக தொண்டர்கள் எங்கேயும், எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடவில்லை. கட்டுப்பாடுமிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளையும், சேதங்களையும் மறைத்திடவும், உரிய நிவாரணம் எங்கேயும் வழங்காமல் இருப்பதை மக்களிடம் மறைத்திடவும், ஸ்டிக்கர் அரசாங்கத்தால் நடத்தப்படும் நாடகமே இதுவாகும்" என்று கூறியுள்ளார்.


விகடன்

வாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!

ன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்படுகிறது. இந்த 'வாட்ஸ் அப்'பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன.
இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வலைத்தளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளித்துள்ளனர்.

1.) வாட்ஸ்அப் லாக்

வாட்ஸ் அப்-ஐ லாக் செய்வதில் முக்கியமான விஷயம் முதலில் ஒரு பாஸ்வேர்டு அல்லது 'பின்' பயன்படுத்துதலே சிறந்தது. வாட்ஸ் அப்பிற்கென பிரத்யேகமாக எந்த ஒரு லாக்கும் இல்லை. இதற்கென ஆப் லாக்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், மூன்றாவது மனிதர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். ஆனாலும், செல்போன் தொலைந்துபோகும் பட்சத்தில் அதை தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 'சாட் லாக்', 'வாட்ஸ் அப் லாக்', 'செக்யூர்சாட்' இவை மூன்றையும் ஆண்ட்ராய்டு போன்களில் எளிதாக பயன்படுத்தலாம். எனவே இவற்றை பயன்படுத்தி யாரும் உங்களது தகவல்களை திருடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

2.) வாட்ஸ் அப் புகைப்படங்கள், போட்டோ ரோலில் சேர்வதை தடுக்க...

புகைப்படங்களை பரிமாறும்பொழுது, அவை பொதுவாக உங்கள் போட்டோ ரோலில் சேகரிக்கப்படுகிறது. அதனால் அவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இவற்றை ஐபோனில் எளிதில் தடுக்கலாம். போன் செட்டிங்கில் உள்ள மெனுவில் சென்று, பிரைவசியில் உள்ள புகைப்படத்தை 'டீசெலக்ட்' செய்ய வேண்டும். இதனால் அவை போட்டோ ரோலில் சேர்வது எளிதில் தடுக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பயனாளர்கள், இதனை 'பைல் எக்ஸ்ப்லோரர் ஆப்' மூலம் தடுக்கலாம். இதில், நோ மீடியா எனும் பைலை உருவாக்குவதின் மூலம் தடுக்கப்படுகிறது. வாட்ஸ் அப் இமேஜை லாக் செய்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கலாம். ஆனால், போன்கள் திருடப்படும்போது 100% பாதுகாப்பைத் தரும் என கூற முடியாது.

3.) லாஸ்ட் சீனை மறைப்பது

நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தீர்கள் என மற்றவர்களுக்கு தெரியும். இது மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வழிவகை செய்யலாம். இந்த லாஸ்ட் சீன்  மற்றவர்கள் அறியாதவாறு தடுக்க 'ஹைடு லாஸ்ட் சீனை' பயன்படுத்தலாம். ஆனால் இதை செய்தால் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களின் லாஸ்ட் சீனையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது.

4.) ப்ரொஃபைல் பிக்சரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க...

உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை நீங்கள் பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். அதோடு இந்த ப்ரொஃபைல் புகைப்படத்தை பயன்படுத்தி கூகுள் சர்ச்சில் உங்களது விவரங்களை பெற முடியும். அதனால், பிரைவசியில் உங்கள் புகைப்படத்தை தொடர்புகளில் மட்டும் பொருத்த வேண்டும்.

5.) போலி தகவல்களிடம் விழிப்போடு இருங்கள் 

வாட்ஸ் அப் எப்பொழுதும் நேரடியாக உங்களோடு தொடர்பு கொள்வதில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் நேரடியாக உரையாடல்கள், ஆடியோ தகவல்கள், புகைப்படங்கள், மாற்றங்கள், வீடியோக்களை எப்பொழுதும் மின்னஞ்சல் உதவியில்லாமல் உங்களுக்கு அனுப்பாது. குறிப்பிட்ட இலவச நன்கொடைகள் பற்றிய தகவல்கள் வந்தால் நிச்சயம் அது போலியாகத்தான் இருக்கும். இவை நம்பத்தகுந்தது அல்ல.

6.) தொலைபேசி தொலைந்தால் வாட்ஸ் அப்பை செயலிழக்கச் செய்யுங்கள்

செல்போன் தொலைந்தால், வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு எளிய மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. சிம் கார்டை லாக் செய்வது பற்றிய வசதிகளை அளிக்கறது. தொலைபேசி தொலைந்து போனால் உடனே அதே எண்ணில் மற்றொரு தொலைபேசியில் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை திறந்தால் தானாகவே தொலைந்த வாட்ஸ் அப் அக்கவுண்ட் செயலிழக்கப்படும். இதன் மூலம் வாட்ஸ் அப் அக்கவுண்ட் தானாகவே செயலிழக்கப்படும்.

7.) எதைப்பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள் 

இது கடைசி, இதுவே முடிவல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தகவல்களை எப்பொழுதும் பகிர்வதை தவிர்த்திடுங்கள். முகவரி, தொலைபேசி எண், வங்கி விவரம், கிரெடிட் கார்டு விவரம், பாஸ்வேர்டுகளை வாட்ஸ் அப்பில் பகிராதீர்கள்.

8.) வாட்ஸ் அப்பை 'லாக் அவுட்' செய்ய மறக்காதீர்கள்:

வாட்ஸ் அப் தற்போது நிறைய சேவையை வழங்கி வருகிறது. பல பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் லாக் அவுட் செய்வது பற்றிய விவரம் தெரிவதில்லை. இதை தொலைபேசி மூலமோ பிரவுசர் மூலமோ செய்யலாம்.

உஷாராக இருங்கள்!

- மு.ஜெயராஜ்
(மாணவ பத்திரிக்கையாளர்)

புத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்

ங்கிலப் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக,  சாலைகளில் நடக்கும் கொண்டாட்டத்தில் நடந்து முடிகிற அசம்பாவிதங்கள் ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகின்றன. அதிலும் தமிழகத் தலைநகர் சென்னையில் இது ஏகத்துக்கும் அதிகரிக்கிறது!

மெரீனா,  ஈ.சி. ஆர். போன்ற கடற்கரைச் சாலைகளில் சீறிப் பாயும் வாகனங்களால் நடக்கும் உயிரிழப்பு விபத்துகள், மெரீனா தொடங்கி மாமல்லபுரம் வரை  கடல் குளியலில் எதிர்பாராமல் நடந்து விடும் மூச்சுத்திணறல் மரணங்களை கடுமையான கண்காணிப்பு, எச்சரிக்கை மூலம் காவல்துறையினர் நினைத்தால் தடுத்து விட முடியும். உச்சக்கட்ட மது விருந்தால் இறக்கிறவர்களை மட்டும்தான் போலீசாரால் தடுக்க முடியாது.

டிசம்பர் 31- நள்ளிரவுக் கொண்டாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர என்ன மாதிரியான வியூகத்தை  ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?  என போலீஸ் ஏரியாவில் கேட்டதில் , வந்த தகவல்கள்... 

# புத்தாண்டில்  மது அருந்திவிட்டு பொது இடங்களில் கொண்டாட்டம் என்ற பேரில் ஆடிக் கொண்டிருக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கைதான்... எல்லாமே அளவோடு இருந்து விட்டால், ஆண்டின் முதல் நாள்தானே என்ற மனித நேயத்தோடு கண்டும் காணாமலும் இருந்து விடுவோம்.

# பெண்களை கிண்டல் செய்வதையோ, அச்சுறுத்துவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. புத்தாண்டாக இருந்தாலும், எந்த நாளாக இருந்தாலும் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
# அதிக சத்தத்தை உண்டாக்கக் கூடிய பட்டாசு போன்றவைகளை பொது இடங்களில் வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

# நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறுகிற அத்தனை அசம்பாவித சம்பவங்களுக்கும் ஹோட்டலின் மேலாளர், உரிமையாளரே பொறுப்பு. ஹோட்டல்களில் போடப்படுகிற மேடைகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியை ஹோட்டல் நிர்வாகம் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தச் சொல்லியிருக்கிறோம்.

# அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நட்சத்திர ஹோட்டலை திறந்து வைத்து கேளிக்கைகளை தொடர கண்டிப்பாக அனுமதி கிடையாது.  அதேபோன்று மது ஆதிக்கத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களை நீச்சல் குளத்தில் இறங்க ஹோட்டல் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

# ஈ.சி.ஆர். பகுதிகளில் இருக்கிற ஒருசிலர் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீடுகளை "பெஸ்டிவல்-ரென்ட்" என்ற பெயரில் நாளொன்றுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் பல லட்ச ரூபாய் என்றளவில் வாடகைக்கு விடுவதாக கடந்த ஆண்டே புகார்கள் எழுந்தது. ரகசிய சோதனையில் அந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து வைத்து சமூக விரோதச் செயல்களில், குறிப்பாய் போதை ஊசி, வரம்பு மீறிய  உல்லாசங்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுத்தோம். பண்ணை வீட்டின் அதிபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தோம்.

# குடித்து விட்டு கார், பைக் போன்ற வாகனங்களை  ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து, வாகனம் பறிமுதல்  என்பதோடு அவர்களுடன் காரிலோ, பைக்கிலோ சேர்ந்து பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யலாமா என்றும் திட்டம் ஆலோசனையில்  உள்ளது.

இத்தனைக்  கெடுபிடிகள் இருந்தாலும், மெரீனா கடலில் குளிக்க சென்று இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும்  சாலை விபத்துகளில் இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் கூடிக்கொண்டேதான் போகிறது. புத்தாண்டு சமயம் டிசம்பர் 31- இரவு 11 மணியிலிருந்து 12 மணிவரை கூடுகிற அல்லது வாகனங்களில் சீறிப்பாய்கிற மனிதத் தலைகள் மட்டும் ஐந்து லட்சம் முதல் எட்டு லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதே வேளையில் மெரீனா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரை மணற் பரப்பில் மட்டுமே பத்து லட்சத்தில் தொடங்கி ஐம்பது லட்சம் பேர் உலவுகிறார்கள். இது ஒரு மணிநேரக் கணக்கு மட்டுமே. சாலைகளில் சீறிப் பாயும் வாகனங்கள், நட்சத்திர ஓட்டல், பண்ணை வீடுகள், கடற்கரை மணல் வெளிகள், சுற்றுலா மற்றும்  வழிபாட்டுத் தலங்கள் என்று ஒட்டு மொத்த மக்களையும் பல்வேறு இடங்களில்  பாதுகாப்பு அளிக்க வேண்டிய கூடுதல் கடமை போலீசாருக்கு.

குறிப்பாக வேகமாய் பறக்கும் வாகனங்கள் மூலமும், கடலில் குளித்தல் மூலமும் அதிகபட்சமாய் பறிபோகும் உயிர்களை தடுத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் போலீசாருக்கு இருக்கிறது.

சாலை விபத்துகளுக்கு பிரதான காரணமாக ஒட்டுமொத்த அளவுகோலில் நிற்பது மது அருந்திவிட்டு வானம் ஓட்டுதலே என்பது இறுதி முடிவாக உள்ளது. கடலில் , நீர்நிலைகளில், இன்னபிற கொண்டாட்ட பொழுதுகளில் உயிரிழப்புக்கு காரணமாக  சொல்லப்படுவதும் மது அருந்தி விட்டு இவைகளில் ஈடுபடுதலே என்பதும் இதன் முடிவாக இருக்கிறது.

புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் தயார்... உயிர்கள் பறி போகாதபடி அவர்களை காப்பாற்ற போலீஸ் தயாரா ? என்ற கேள்வியைத்தான் (அவர்களின்  ஆள் பற்றாக்குறை சோகம் இருந்தும்) நாம் கேட்க வேண்டியுள்ளது.

2014 மே- இறுதி நிலவரமாக தேசிய குற்ற ஆவணக் காப்பகமும், இதர சமூக ஆர்வல குழுமங்களும் அளித்துள்ள  சாலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த ஒரு விவரம் இங்கே... 

இந்திய அளவில், சாலை விபத்து : 67,255 , காயம் மட்டும் : 77,725, இறப்பு : 15,190. நாட்டின் மொத்த விபத்தில் 14.9% தமிழ்நாட்டில்தான் நடக்கிறது.

2013-ம் ஆண்டை விட 2014-ம் ஆண்டு 1.5%  கூடுதலாய் விபத்துகள் நடந்துள்ளன.
உயிரிழப்பில் உ.பி. முதலிடமும், மகாராஷ்டிரா இரண்டாமிடமும், தமிழகத்துக்கு மூன்றாமிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டூ வீலர் மூலம் ஏற்பட்ட விபத்துகள்  26.4%, லாரி, கனரக வாகனங்கள் மூலம் 20.1%, கார்கள் மூலம் 12.1%,  வாகனங்கள் பழுது காரணமாக 2.8%, மோசமான வானிலை காரணமாக, 5.3%, மதுபோதையில் வாகனத்தை இயக்கியதின் காரணமாக 2.6% என்ற அளவில் விபத்துகள் நடந்திருக்கின்றன.

நகர்ப்புறங்களில் 54.7% அளவும், கிராமப் புறங்களில் 45.3% அளவும் விபத்துகள் நடந்துள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 5,189, மாநில சாலைகளில் 5,090, விரைவுச் சாலைகளில் 155, பிற சாலைகளில் 4,756 என்ற கணக்கில் உயிரிழப்பு சம்பவங்கள் 2014- மே மாதம் வரையிலான கணக்கில் வருகின்றன.

உலக மக்கள் தொகையில் 17.5% மக்கள் வாழ்கிற இந்தியாவில் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு மட்டுமல்ல... கடலில், நீர் நிலைகளில், இன்னபிற சூழல்களில் கவனக் குறைவாகவும், போதிய வழிகாட்டல் இல்லாமலும் இறக்கிறவர்களின் எண்ணிக்கை 2020-க்குள் முதல் இருபது இடங்களை பிடிக்கக் கூடும் என்ற கவலை சமூகவியலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

1970-ல் லட்சத்துக்கு 2.7% சதவீதம் (13 பேர்) மட்டுமே  சாலை விபத்தில் உயிரிழந்த நிலை மாறி, 2011-ல் 11.8% உயிரிழப்பும், 42.3% காயமும் என்ற நிலைக்கு சாலை விபத்துகள் எகிறியது. நாட்டிலுள்ள மொத்த வாகனத்தில் 13.9% சதவீதம் தமிழ்நாட்டில்தான் புழக்கத்தில் இருக்கின்றன.

-ந.பா.சேதுராமன் 

vikatan

பொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா

1]டெல்லி ரேப் பார்ட்டி லேடீஸ் டெய்லராம்.சவுகர்யமாப்போச்சு.தையல் மிஷினும் கொடுத்து லோன் 10,000 ம் குடுத்து.ஜனங்களே!,ஜாக்கிரதை.


===============

2]லேடீஸ் பஸ் ல அத்து மீறி ஏறி "என்ன? என்னச்சுத்தி பொண்ணுக இருக்காக?ஒரே ் கன்ப்யூஷனா இருக்கே?என குழம்புவது போல் நடிப்பான் நெட் தமிழன்

=============

3]ஆராதனா க்கு ஒரு தங்கச்சி இருந்தா அதுக்குப்பேரு ஏழாவது தனா வா?அஞ்சனா வா?,நெட் தமிழனுக்குத்தான் எத்தனை கவலைகள்?

=============

4]5 நிமிசம் வெயிட்.டிஎம் பக்கம் போய்ட்டு வர்றேன்னு நெட் தமிழச்சி சொன்னா நான் வேணா துணைக்கு வர்ட்டுமா?ங்கறான்.நெட் தமிழன்


===============

5]கடவுளே!!!

எனக்கு மட்டும் நல்லது பண்ணுனு எல்லோரும் கேட்டா எப்டி ?பாதிப்பேரு "நல்லது வரிக்கி"
நல்லது பிரெட் னு கேட்டா தேவலை

============
யாருக்கும் பயன் இல்லாமல் ,யாரும் குடி இருக்காமல் பெருமைக்காக கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படும் போர்டுடன் வெட்டியாக ு நகரில் பல பங்களாக்கள்
6]


===========
7]பொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா வாய் வார்த்தைல சண்டை போடாம கட்டிப்புரண்டு சண்டை போடுபவன் புத்திசாலி.

=============

8]பொண்ணுங்க யாருமே இல்லாத பஸ்ல யாருக்காக சடன் பிரேக் போட்டுட்டே இருக்காக?# கேரள பஸ்கள்


===========

கேரளா -திருவனந்தபுரம் -விழிஞம்.- விஜய் ரசிகர் மன்றம் போர்டில்
தெறிக்க விடலாமா?ங்கற கேள்வி எல்லாம் இங்கே கிடையாது.ஏற்கனவே நாங்க "தெறி"தான்===


==============

10]தலைவர் மைன்ட் வாய்ஸ் = சகாய விலையில் சகாயம் ஆதரவு கழகத்துக்குக்கிடைக்குமா?


=============

11]மாலை நேரத்து மயக்கம் செல்வராகவன் சம்சாரம் இயக்குனதுதானே?


டைட்டில் பிரகாரம் மிஸஸ் தான்.ஆனா ..இயக்குநரை இயக்கியவர் செல்வா


================

12]சார்.நான் சிகப்பு மனிதன் ல லிப் கிஸ் ,மதகஜராஜா வில் ரிலீஸ் பண்ண முடியாத அளவு கிளுகிளு சீன் நடிச்சீங்களே? அது ஆபாசம் இல்லையா?

============


13[நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் முன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதா?என்பதை செக்

==================

14]நயன் தாரா = சத்யம் படத்துல பாட்டு சீன் ல ஆயில் மசாஜ் சீனை மறந்துட்டீங்களா?


விஷால் = இப்போ எதுக்கு பழசை எல்லாம் கிளறிட்டு?


============

15-அன்பே! உன்னைப்பிடிக்கிறது என்பதில் இல்லை பிரச்னை.பக் வீடு ,எதிர் வீடு என எதிர்ப்படும் எல்லா பிகரை யும் பிடிக்கிறது என்பதே பிரச்னை

=======================


16]சாதா தமிழன் ஜிம்க்குப்போனோமா எக்சசைஸ் செஞ்சமா வீட்டுக்கு வந்தமான்னு இருப்பான்.நெட் தமிழன் உடற்பயிற்சி இனிதே நிறைந்ததுனு ஸ்டேட்டஸ் போடுவான்

================


17]
கேரளா-திருவனந்தபுரம் -நையாட்டிங்கரா அருகில் 20 கிமீ தொலைவில் ஒட்டசேகரமங்கலம் ஊரில் 3 சைவ ஹோட்டல்கள்.35 ரூபாதான்.அன் லிமிட்டட்.4 பொரியல்


==============

18\]திருவனந்தபுரம் எம்ஜி ரோட்டில் அன்னபூரணி ,சரவணபவன் 2 ம் சைவம்.75 ரூபா.ஆனா அன்னபூரணி ல செமகூட்டம்.சரவண பவன் காத்து வாங்குது.சம தரம்்

==============
வீட்ல அம்மா அப்பா கிட்டே எரிஞ்சு விழுந்துட்டு FBல என்னை கொஞ்சுறதுக்கு யாருமே இல்லையா னு பொண்ணுங்க உலாத்தற நேரத்தில் புலம்புவான் நெட் த்மிழன்

=============

20]பொண்ணுங்க எல்லாம் எதுனா குவாட் (QUOTE)பண்ணி சொல்லுங்கறாங்க.பசங்க குவாட்டர் அடிச்ட்டு வந்து சொல்றோம்கறாங்க.இவ்ளவ் தான் ட்விட்டர்

====================

Wednesday, December 30, 2015

பசங்க 2-திரை விமர்சனம்:

வித்தியாசமான இயல்பும் போக்கும் கொண்ட குழந்தைகள், முறைசார் கல்வியும் கட்டுப்பாடுகளும் கொண்ட பள்ளிக்கூடங்களில் தங்களைப் பொருத்திக்கொள்ளத் திணறுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு என்பதைப் பற்றிப் பேசுகிறது பாண்டிராஜின் ‘பசங்க 2’.


கவின், நயனா இரண்டு சுட்டிகளும் துறுதுறுவென்று இருக்கிறார்கள். கவி னுக்கு நடனம் என்றால் பிடிக்கும். தேஜஸ் வினிக்குப் புனைவுலகில் சஞ்சரிக்கப் பிடிக் கும். யாராவது எதையாவது சொன்னால் அதை அப்படியே பின்பற்றாமல் கேள்விகள் கேட்பது இவர்கள் பழக்கம். பள்ளிக்கூடங்களின் முறைசார்ந்த, கட்டுப்பாடு மிகுந்த கற்பித்தல் இவர்களுக்கு சரிவரவில்லை. பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்கள் சேட்டைகளைச் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன. இவர்களின் பெற்றோரைக் கூப்பிட்டுப் புகார் செய்கின்றன.பள்ளிக்கூடத்தை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கிறது. இதனால் கடுப் பாகும் பெற்றோர்கள் எடுக்கும் முடிவு குழந்தைகளை மேலும் பாதிக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீள் கிறார்கள் என்பது மீதிக் கதை.


குழந்தைகள் தொடர்பான பல பிரச் சினைகளில் அடிப்படைக் கோளாறு பெரிய வர்களிடம்தான் இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது ‘பசங்க-2’ திரைப்படம். கற்றல் குறைபாடு கள், அதீத சுறுசுறுப்பு முதலானவற்றைக் குறைகளாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் அவற்றை எப்படிக் கையாளலாம் எனபதையும் படம் தெளி வாகக் காட்டுகிறது. குறிப்பான பிரச்சினை களுக்குத் தீர்வு சொல்வதைக் காட்டிலும் குழந்தைகள் சம்பந்தமான சமூகத்தின் அணுகுமுறைகளை மாற்றுவதற்கான வழிமுறைகளின் மீது படம் கவனம் செலுத்துகிறது.பள்ளிக்கூடங்கள் நடத்தப்படும் விதம், குழந்தைகள் தொடர்பான ஒவ்வொரு விஷ யத்திலும் நிலவும் பணத்தாசை, குழந்தை களுக்கான போட்டிகள் நடத்தப்படும் முறை, அவர்களை எடைபோடுவதில் உள்ள அடிப்படையான பிழைகள் எனப் பல விஷயங்களைக் கையாள்கிறது இந்தப் படம். பெரும்பாலான காட்சிகள் குழந்தைகள் ரசித்துப் பார்க்கும் விதத்தில் அமைந்தாலும் இந்தப் படம் பெரியவர் களுக்கான பாடம் என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புத் தருவதுதான் முக்கியமே தவிர, சிலருக்கு மட்டும் பரிசளிப்பது அல்ல என்பதைச் சொல் வதோடு முடியும் படம் பெரியவர்களுக்குப் பல பாடங்களைச் சொல்கிறது.இரண்டு குடும்பங்களைச் சுற்றி நகரும் முதல் பாதியில் குழந்தைகளின் இயல்பான போக்குகளும் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் நெருக்கடிகளும் காட்சிப் படுத்தப்படுகின்றன. குழந்தைகளின் குறும்புச் சேட்டைகள் ரசிக்கும்படி இருந் தாலும் குழந்தைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் குழந்தைகளுக்கும் ஏற் படும் மன வருத்தங்கள் மனதைக் கனக்கச் செய்கின்றன. பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் இரண்டாம் பகுதி முழுக்க முழுக்க கலகலப்பாகவும் அறிவுரைகளோடும் செல்கிறது.


குழந்தைகள் உலகையும், அவர்களின் எண்ணங்களையும், கனவுகளையும், நடத்தைகளையும் நெருக்கமும் உருக்கமு மாகக் காட்டியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குழந்தைகளின் உலகம் அதன் இயல்போடு காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. எனினும் படம் முழுவதும் ஆவணப்படத் தன்மை தூக்கலாக இருக்கிறது. சூர்யாவும் அமலா பாலும் வந்த பிறகு படம் முழுக்க முழுக்க அறிவுரைப் பாதைக்கு மாறுகிறது. சூர்யாவின் குடும்பத்தில் நிலவும் அதீத ‘சந்தோஷம்’ திகட்டுகிறது. எனினும் குழந்தைகளின் அற்புதமான நடிப்பும் ரசிக்கத்தக்க காட்சிகளும் படத்தைப் பார்க்கவைக்கின்றன.


கவினாக நடித்த நிஷேஷ், நயனாவாக நடித்த வைஷ்ணவி ஆகியோரின் சேட்டை கள், குறும்புகளுக்கு ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இருவரும் அற்புத மாக நடித்திருக்கிறார்கள். ராமதாஸ், கார்த்திக் குமார், பிந்து மாதவி, வித்யா ஆகியோர் இன்றைய பெற்றோர்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறார்கள்.


சூர்யா, அமலாபால் இருவரும் படம் சொல்ல வரும் சேதியைத் தங்கள் பக்குவ மான நடிப்பால் பார்வையாளர்களுக்கு எளிதாகக் கடத்திவிடுகிறார்கள். அமலா பால் எப்போதும் சிரித்துக்கொண்டும், சூர்யா ஓயாமல் அறிவுரை சொல்லிக் கொண்டும் இருப்பது நெருடுகிறது.


குழந்தைகளின் உலகம் எவ்வளவு வண்ணமயமானது என்பதைத் தனது ஒளிப்பதிவின் மூலம் நிரூபித்திருக்கிறார் பாலசுப்பிரமணியெம். அரோல் கொரெலி இசை படத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது. ‘சோட்டாபீம்’ பாடலும், ‘காட்டுக்குள்ள கண்ணைவிட்டு’ பாடலும் கவனம் பெறுகின்றன. இடைவேளைக்குப் பின்பு வரும் காட்சிகளில் ‘பிசாசு' படத்துக் குத் தான் உபயோகித்த வயலின் இசையை அப்படியே உபயோகித்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.


படத்தின் முதல் நாயகன் வசனங்கள் தான். “பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்லை. கேட்ட வார்த்தை களைத்தான் பேசுறாங்க.”, “மதிப் பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்” - இப்படிப் படம் நெடுக பாண்டிராஜின் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன.குழந்தைகளின் அதீத சுறுசுறுப்பு முதலான பிரச்சினைகளைக் கையாள்வது குறித்த தெளிவான வழிகாட்டுதல் படத்தில் இல்லை. ஆனால், குழந்தைகளின் இயல்பைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களைக் கையாளவும் வளர்க்கவும் வேண்டும் என்பது தெளிவாகச் சொல்லப்பட்டுவிடுகிறது.


ஆவணப்பட நெடி தூக்கலாக இருந் தாலும் குழந்தைகளுக்கான ரசனை யையும் பெரியவர்களுக்கான செய்தியை யும் சம விகிதத்தில் கலந்த விதத்தில் தன் முக்கியத்துவத்தை நிலைநாட்டியிருக் கிறது ‘பசங்க 2’.


த ஹிந்து