மிகவும் பொறுமை காக்கும் பெண்கள் ,ஆண்களுக்கு மட்டும் இந்தப்படம் பிடிக்கும்,மிக மெதுவாக செல்லும் திரைக்கதை .அதனால் மாமூல் ஆக்சன் மசாலாப்படங்களை ரசிப்பவர்வைகள் ,காமெடி ,டூயட் போன்ற கமர்ஷியல் அம்சங்களை எதிர்பார்ப்பவர்கள் தவிர்க்கவும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாராயணி என்ற அம்மா சீரியஸ் ஆக இருக்கிறார் . அவருக்கு மூன்று மகன்கள் .இரு மகன்கள் அம்மாவுடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கின்றனர் . முதல் மகனுக்கு திருமணம் ஆகி 19 வயதில் ஒரு மகள் உண்டு . இரண்டாவது மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை மூன்றாவது மகன் வீடடை எதிர்த்து ஒரு முஸ்லீம் பெண்ணைத்திருமணம் செய்து கொண்டு பாரினில் செட்டில் ஆகி விட்டான் .அவனுக்கு 18 வயதில் ஒரு மகன் உண்டு
டாக்டர் கை விரித்து விட் டார் எந்த நேரமும் மரணம் நிகழலாம் .பாரினில் இருந்து மூன்றாவது மகன் தன குடும்பத்துடன் வந்து விட் டான் . ஆனால் அவன் வந்து ஒரு வாரம் ஆகியும் மரணம் நிகழவில்லை .. ஒரு வாரத்தில் வெளிநாடு போக வேண்டும்
இந்த சூழலில் முயன்று முக்கிய சம்பவங்கள் அந்த வீட்டில் நிகழ்கின்றன
சம்பவம் 1 - நாராயினியின் கணவர் இடம் தன் நிலத்தை அடமானம் வைத்து 2 லட்ச ரூபாய் கடன் வாங்கியவர் இப்போது 40 லட்ச ரூபாய் தந்து நிலத்தை மீட்க தயாராக இருக்கிறார் .ஆனால் மூத்த மகன் தர மறுக்கிறார் .80 லட்ச ம் கேட்கிறார்
சம்பவம் 2 - உங்க உறவும் வேண்டாம் , சொத்தும் வேண்டாம் என வீட்டை விட்டு வெளியேறி காதலியுடன் பாரீன் போன கடைசி மகன் இப்போது பாகப்பிரிவினை கோருகிறான் . மூத்த அண்ணன் தர மறுக்கிறார் . இத்தனை வருடங்களாக , அம்மா , அப்பாவைப் பராமரித்தவன் நான் . பொறுப்பில்லாமல் ஊரை விட்டு ஓடியவன் நீ . இப்போ சொத்து மட்டும் வேண்டுமா? என்கிறார்
சம்பவம் 3 - நாராயினியின் முதல் மகனின் 19 வயது மகள் + நாராயினியின் கடைசி மகன் உடைய 18 வயது மகன் இருவரும் நெருக்கமாக ப்பழகுகிறார்கள் . அதாவது பெரியப்பா மகள் , சித்தப்பா மகன் உடன் நெருக்கம் காட்டுகிறாள் .அக்கா , தம்பி முறை ஆகும் இவர்களது இன்செஸ்ட் லவ் இருவரது பெற்றோ ருக்கும் தெரியவருகிறது
இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித் திரைக்கதை
மூன்று மகன்களாக முறையே அலென்ஸியர் , ஜோஜூ ஜார்ஜ் , சுராஜ் வெஞ்சாரமூடு ஆகிய மூவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள் .அந்தந்த கேரக்ட்டர்கள் ஆகவே வாழ்ந்திருக்கிறார்கள் என சொல்லலாம்
முதல் மருமகள் , மூன்றாவது மருமகள் ஆக முறையே சஜிதா மடத்தில் , ஷெல்லி கிஷோர் இருவரும் குடும்பப்பாங்கான முகத்துடன் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள் இன்செஸ்ட் லவ் ஜோடி ஆக தாமஸ் மேத்யூ+ கார்கி ஆனந்தன் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் டீன் ஏஜ் கேர்ள் ஆக வரும் கார்கி ஆனந்தன் அம்மாவிடம் சிடுமூஞ்சி ஆக இருப்பது , காதலனிடம் குழைவது , அப்பாவிடம் நார்மல் ஆக இருப்பது , தோழியுடன் கல கலப்பாக கலாய்ப்பது என நுட்பமாக முக உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார் . இவர் வருங்காலத்தில் ஒரு த்ரிஷா அல்லது நயன் தாரா போல புகழ் பெறுவது உறுதி
ராகுல் ராஜ் தான் இசை . ஒரு மெலோடி சாங்க் நன்றாக இருக்கிறது .பின்னணி இசை ஓகே ரகம் ஜியோதி ஸ்வரூப் பாண்ட் தான் எடிட்டிங்க் 107 நிமிடங்கள் படம் ஓடுகிறது . இரண்டரை மணி நேரம் ஓடியது போல பிரமை அப்பு பிரபாகரின் ஒளிப்பதிவு அருமை . ஊர்த்திருவிழா , குளக்கரை , நாயகியின் க்ளோஸப் ஷாட் என கலக்கி இருக்கிறார் சரண் வேணுகோபாலின் வசனத்தில் பல இடங்கள் பாராட்டும்படி இருக்கிறது . கதை திரைக்கதை எழுதி .இயக்கி இருப்பவரும் இவரே
சபாஷ் டைரக்டர்
1 ஒரு ஊரில் நடக்கும் சம்பவத்தை நாம் நேரில் கண்டு களிப்பது போல மனதுக்கு நெருக்கமாக காட்சிகளை அமைத்தது
2 அனைவரது கேரக்ட்டர் டிசைன் . நடிப்பு உயிரோட்டம்
3 இரண்டு மகன்களும் சாகாமல் இழுத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொன்று விடலாமா?என முயன்று பின் முடிவை மாற்றி விடும் சீன் உருக்கம்
4 அக்கா - தம்பி முறை உள்ள இருவரும் காதலிப்பதை நெருடல் இல்லாமல் காட் சிகளை அமைத்த விதம்
ரசித்த வசனங்கள்
1 சோஷியல் ஒர்க் , சோஷியல் சரவீஸ் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கா? அதுவே எனக்குத்தெரியாது
2 இழவு காண வந்தவர் = அம்மா இறந்துட் டாங்களாப்பா
இன்னும் இல்லை
அடடா , செய்தி கேட்ட்தும் அவசரமா சாப்பிடாம கூட வந்துட்டென்
உள்ளே தோசை இருக்கு
3 இஞ்சினியரிங்க் படிச்சது ஒரு பயனும் இல்லை . சாதா டிகிரி போதும்
4 ஏம்மா , நீ இன்னும் முஸ்லிமா தான் இருக்கியா?
இன்னும் மதம் மாறலை
5 எதனால சோகமா இருக்கே?
அம்மாவின் மரணத்துக்காக காத்துக்கிட்டு இருக்கேன்
பெத்த அம்மா எப்போ சாவா என எதிர்பார்த்துட்டு இருக்கோமே ? இது பாவம் இல்லையா?
6 டாகடர் , எங்க அம்மா எதனால இன்னும் சாகலை ?
தேவையான ஊட் டச்சத்து கிடை ச்சிடுச்சு போல
அப்போ உணவு கொடுப்பதை நிறுத்திடவா?
அடப்பாவமே . போகும்போது நிம்மதியாப்போகட்டும்
7 எல்லா உறவிலும் ஒரு எல்லை தேவை
8 மே ஐ கம் இன் ?
நோ . இன்விடேஷன் வெச்சா கூப்பிடுவாங்க . வா
9 நீ கோபமா இருக்கும்போது ரொம்ப அழகா இருக்கே
சும்மா என்னை சமாதானப்படுத்த எதையாவது சொல்லாத
10 உன் கிட்டே நிறைய சொல்லணும் .ஆனா எல்லாம் மெஸ் ஆகி ஜாம் ஆகி இருக்கு . அப்புறமா மெயில் பன்றே ன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 தனது அண்ணன் மகளும் , , தம்பி மகனும் தனி அறையில் தம் அடிப்பதைக்கண்டிக்காமல் அவர்ளுடன் சேர்ந்து ஜோஜு ஜார்ஜ் தம் அடிப்பது நெருடல்
2 அக்கா , தம்பி முறை என்றாலும் இருவரும் அடிக்கடி ஜோடி சேர்ந்து சுற்றும்போது யாரும் கண்டுக்கவே இல்லை
3 2017 ஆண்டு வெளிவந்த ஸ்பானிஷ் படமான பிளாக் ஸ்னோ என்ற படத்தின் படி டிங்கரிங்க் அட்லிவெர்சன் தான் இது .டைட்டிலில் க்ரெடிட் கொடுக்கவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்-
சென்சார் சர்ட்டிபிகேட் படி யு/ஏ தான் .ஆனால் லிப் லாக் சீன்கள் இரண்டு உண்டு .18+ தான்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஒரிஜினல் ஆன 2017 ஆண்டு வெளிவந்த ஸ்பானிஷ் படமான பிளாக் ஸ்னோ பார்க்காதவர்கள் இதைப்பார்க்கலாம் . ரேட்டிங்க் 3 / 5