Sunday, April 21, 2019

.பூங்குழலிகள் குறைவு,கார்குழலிகள்,சுருள்குழலிகள் அதிகம் @ கேரளா, அது ஏன்? ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி

 1 பூமர் ,MCR ,ராம்ராஜ் ஓட்டோ ,க்ரோக்கடைல் போன்ற பிராண்டட் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 60% வரை சப் காண்ட்ராக்ட் மூலம் வெளியே குடுத்து தைக்கப்பட்டு வாங்குபவை.எனவே கன்ஸ்யூமர்கள் தயார் நிலையில் அதை அணுகவும்.


============2 தேர்தலின் போக்கை தீர்மானிக்கப்போவது படிப்பறிவு இல்லாத பாமர மக்களின் வாக்குகளே! எழுத்தாளர்கள் சொல்லி என்ன ஆகப்போகுது? இவுங்க புக்கே விற்கறதில்லைனு இவங்களே புலம்பறாங்க
=============3 அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு கை கொடுக்கும்போது மோதிரம்,பிரேஸ்லெட்,வளையல் பத்திரம்,நம்மாளுக நைசா உருவிடுவானுக
===============
4 சதுரங்கத்தில் ஓப்பனிங்கலயே ராஜாவுக்கு செக் & மேட் வெச்ட்டா சுவராஸ்யம் இல்லாம போய்டும்.மந்திரி,சிப்பாய்னு வரிசையா போட்டுத்தாக்கிட்டு கடைசியா நிர்க்கதியா ராஜாவை அரெஸ்ட் பண்ணனும்,அதுதான் கிக் − விஸ்வநாதன் ஆனந்த் டைரியிலிருந்து
==============
5 தூத்துக்குடி தொகுதியைச்சேர்ந்த திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா...==============
6 சிறுகதை எழுத்தாளர்கள் கவனத்துக்கு,கதைக்கு டைட்டில் வைக்கும்போது ஏற்கனவே வந்த சினிமாப்பட டைட்டிலை வைப்பது கேட்சிங்காக இருக்கும் என நினைப்பது தவறு.கற்பனை வறட்சி என வாசகர்கள் நினைக்கலாம்.மிக எளிமையாக மக்களைக்கவர்ந்திழுக்கும் வகையில் டைட்டில் இருக்கனும்================
7 என்னைய பத்தி உங்க மனசுல இருக்குறத ஒரே வார்த்தைல பளிச்சுனு சொல்லுங்க பார்ப்போம் னு ஆளாளுக்கு பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடறாங்க.உங்களைப்பத்தி உங்களுக்கோ ,உங்க குடும்பத்துக்கோ தெரியாததா இங்கே இருக்கறவங்களுக்கு தெரிஞ்சிடப்போகுது?🤔==============


தாலி"கட்டுன தன்னோட சொந்த) பொண்டாட்டி கிட்ட நல்ல பேர் எடுத்த புருசனும் கிடையாது.இதோ ஒரு நாள்ல தந்துடறேன் னு அவசரமா"கடன் வாங்கிட்டுப்போனவங்க சொன்னபடி திருப்பித்தந்ததும் கிடையாது


================


9 காலணி ஆதிக்கம் தொடங்கிய காலகட்டம் பேட்டா செருப்பு புகழின் உச்சிக்கு வந்த தினம்===============


10 உப்புமாவே ஒரு கொடூரம். அதுக்கு தொட்டுக்க தயிரா?

ஆமா,தயிர் ல லெமன் ஊறுகா யைப்போட்டு கலந்து அடிச்சுப்பாருங்க.தயிர்ல லைட்டா உப்பைத்தூவிடனும்

===============


11 ஜில்லுனு ஒரு காதல் என்பது கோடை காலத்தில் ஐஸ்க்ரீமை குறிக்கும்===============

12 திமுக தமிழகத்தில் உள்ள 2 வது பெரிய கட்சி.தன் பலத்துக்கு நிகரான அதிமுக வை எதிர்க்காமல் 2% , 4% வாக்கு வங்கி கூட இல்லாத கட்சிகளை எதிர்த்துக்கொண்டிருப்பது ஏனோ?சிங்கம்னா புலி,சிறுத்தை ,யானை யை எதிர்க்கனும்,சும்மா எலி,முயல் னு துரத்தறது எதுக்கு?==============


13 யாரோ ஒரு திருடன் பதவி பெற உங்கள் நேரத்தை வீணடித்து கொளுத்தும் வெய்யிலில் பிரச்சாரத்துக்கு போகாதீர்கள்.பணம் சம்பாதிக்க பல வழி உண்டு

================


14 வசனகர்த்தாக்கள் ,பாடல் ஆசிரியர்கள் சில சமயங்களில் அவர்களையும் அறியாமல் மாற்றுத்திறனாளிகளை மனம் புண்படும்படி எழுதி விடுகிறார்கள்.சில உதா + மாற்றுச்சொற்கள்
குருட்டு அதிர்ஷ்டம் = விழி ஒளி இழந்த அதிர்ஷ்டம்
நொண்டிச்சாக்கு = செயல்படா கால் சாக்கு
செவிட்டுப்பயலே = செவித்திறன் குறைந்த பயலே================


15 
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும். என்பது சாத்தியமே இல்லாத சட்டப்படி வழியே இல்லாதவை.டுபாக்கூர் கட்சி,டகால்டி வாக்குறுதி


================


16 சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க இன்னொரு கம்பெனிக்கு ஜம்ப் ஆக தேர்ந்தெடுக்கும் நேரம் தீபாவளி (போனஸ் வாங்கிட்டு)
அதே முதலாளிகள் ,கம்பெனி எம்.டி கள் ,தொழிலாளர்களை கழட்டி விட தேர்ந்தெடுப்பது மார்ச் 31 ( பைனான்சியல் இயர் என்டிங்)===============


17 திறமையும் அதிரஷ்டமும் சேர்ந்தா சினி பீல்டுல கமர்ஷியலா ஜெயிச்சிடலாம் எனும் கருத்தை பொய்ப்பிக்க வந்த படம் சூப்பர்டீ"லக்ஸ்"

===========


18 சென்சாரில் பொத்தாம்பொதுவா ஏ 18+ னு குடுத்துடறாங்க.ஆனா
1 கில்மா காட்சிகள் உள்ளது
2 வன்முறைக்காட்சிகள் தெறிக்குது
3 குடும்பத்துடன் பார்க்க தகுதி அற்ற படம்
னு போஸ்டர்ல மென்ஷன்"பண்ணனும் னு சட்டம் வரனும்.எத்தனை பேர் பேமிலியோட வந்து சங்கடப்படப்போறாங்களோ?


=================


19 தலைவரே!பாவம் பண்றவங்க,ஊர் சொத்தை திருடறவங்க வசதியா வாழ்றாங்களே!அது எப்டி?

வசதி இருக்கு,ஆரோக்யம் இருக்கா?அதுதான் முக்கியம் ஒரு மனுசனுக்கு===============


20 மலையாளப்பெண்கள் தமிழ்ப்பெண்கள் போல் கூந்தலில் மல்லிகைச்சரம் சூடுவதில் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை(யாம்) (கேள்வி அறிவு).பூங்குழலிகள் குறைவு,கார்குழலிகள்,சுருள்குழலிகள் அதிகம் (என்று கூறுகிறார்கள்)


==================

Saturday, April 20, 2019

2016 ல மானசீக குரு விஜயகாந்த்தா?2019 ல கலைஞர், அப்போ 2021 ல யாரு?

 1 எங்கள் கட்சியின் சின்னமான, 'டார்ச்லைட்' வெளியே தெரியக்கூடாது என, மறைக்க சிலர் முயற்சி செய்கின்றனர்.   -கமல்  # லைட்டா எடுத்துக்குங்க, இதெல்லாம் ஒரு பிரச்சனையா?


--------------

2  பூரண மது விலக்கு கொண்டு வந்தால், மாபியாக்கள், கள்ள மார்க்கெட், கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள் உருவாவர். மது விலக்கு சாத்தியமில்லாதது  - கமல்ஹாசன்: @

= இவருக்கு குஜராத்ல பூரண மதுவிலக்கு இருப்பது தெரியாது போல, அங்கே எப்படி சமாளிக்கறாங்கனு கேட்டு தெரிஞ்சுக்கலாமே? 

=================

3   : தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையே, ஊழல்வாதிகள், ஜெ., மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிப்பது தான்  -ஸ்டாலின்  # ஊழல்வாதிகளை தண்டிப்பீங்களா? அப்போ உங்க கட்சி ஆளுங்க  மனம் புண்படாதா?


=================


4  : கருணாநிதியை மானசீக குருவாக ஏற்றவன் நான். தி.மு.க.,வில் உறுப்பினராகவில்லையே தவிர, எவ்வித நிபந்தனையும் இன்றி, அக்கட்சியுடன் பழகி வருகிறேன்  - திருமாவளவன்  # 2016 ல மானசீக குரு விஜயகாந்த்தா?2019 ல கலைஞர், அப்போ 2021 ல யாரு?


=================

5   . ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், விலைவாசி தொடர்ந்து உயர்கிறது. லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆறு கோடி பேர் வேலை இழந்துள்ளனர் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  # ஜிஎஸ்டி பற்றி முதன்முதலா திட்டம் போட்டதே காங்கிரஸ்தானே? மாமியார் உடைச்சா மண்குடம், மருமக உடைச்சா பொன்குடம்?


================


6  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், காங்., ஆட்சியில், 163 ரூபாயாக இருந்த ஊதியம், 229 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. -பொன்.ராதா  # பெட்ரோல் டீசல் விலை உயர்வு மாதிரியா?


==========


பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை,  ரஜினிகாந்த் உட்பட, அனைவரும் வரவேற்றுள்ளனர்.-அமைச்சர் சீனிவாசன் # இதுதான் சாக்குன்னு ரஜினியின் ஆதரவு பெற்ற கட்சினு பிரச்சாரத்த ஆரம்பிச்சிடுவாரோ?


=================

: நாட்டுக்குள் ஊடுருவியவர்களை களையெடுக்க, பா.ஜ., விரும்புகிறது-  அமித் ஷா # அப்டியே லோன் வாங்கிட்டு நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்ல ஊடுருவறங்களையும் தடுங்க

==============


9  பாகிஸ்தானில் இருந்து, ஒரு துப்பாக்கி தோட்டா சுடப்பட்டால், இங்கிருந்து, வெடிகுண்டுகள் வழியாக பதிலடி தரப்படும்-அமித் ஷா  # ஆளீல்லாத இடத்துல குண்டு போட்டுட்டு வந்துடுவாங்களா?


===============


10  மோடி ஆட்சியில், பல துறைகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது-முத்தரசன் # இப்போ நீங்க பேசிட்டு இருக்கறதே பேச்சுரிமை பறிக்கப்படலை என்பதற்கு சாட்சி தானே?
==================

11     தெலுங்கானா மாநிலத்தில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அத்துமீறி நுழைந்து, புகைப்படம் எடுத்த, ஆளும் கட்சி பிரமுகர், கைது  # செல்பி மோகம் உயிரைப்பறிக்குது, ஜெயிலுக்கும் அனுப்புது


==============


12  ராகுலை புத்தராக பார்க்கிறேன் - காங்., தலைவர் அழகிரி  # அப்போ திடீர்னு எல்லாத்தையும் துறந்துட்டு போய்டுவாரா? அப்போ அவர் பிர்தமர் ஆனாலும் பிரயோஜனம் இல்லையே?


============


13  தேர்தலில், மக்கள் தான் எஜமானர்களாகவும், நீதிபதிகளாகவும் செயல்படுகின்றனர்-ஓபிஎஸ்  # அதனால தேர்தல் வரும்போது மட்டும் ஜனங்களுக்கு பயந்து நடக்க வேண்டியதா இருக்கு?


==============


14   ''நாங்கள் எதற்கு பணம் பட்டுவாடா செய்யப் போகிறோம். நானே அப்பிராணியாக இருக்கிறேன்,'' - கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு  #  ஒரு அமைச்சரே அப்பிராணியா இருக்கலாமா? உஷரா இருக்க வேணாம்?


==================


15   'எந்த காலத்திலும், ஸ்டாலின் முதல்வராக வரப் போவதில்லை,''- சரத்குமார்  # ராகு(ல்) காலம் வந்தாலுமா?

===============
16 

ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது: ஓ.பி.எஸ்., # இப்போ நடக்கறது நாடாளுமன்றத்தேர்தலா? சட்டமன்றத்தேர்தலா? ஆளாளுக்கு இதையே சொல்றீங்க?


=============


17   இரட்டை இலை, துரோகிகள் கையில் உள்ளது,'' - அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன்   #  சின்னத்தைப்பற்றி எங்களூக்கு கவலை இல்லைன்னீங்களே?


===============


18  நான் நடித்த, கரகாட்டக்காரன் படத்தில், 'காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரியை, இப்ப யார் வைச்சிருக்காக...' என்று கேட்பது போல, அ.தி.மு.க., இப்போது பன்னீர் செல்வத்திடமா அல்லது பழனிசாமியிடமா அல்லது மோடியிடமா என, தெரியவில்லை.-

நடிகர் செந்தில் # போன தேர்தல்ல வடிவேலுக்கு மார்க்கெட் போன மாதிரி இந்தத்தேர்தல்ல செந்திலுக்கா?


=============


19 மற்ற கட்சிகளின் கூட்டங்கள், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டன. 'ஆனால், மக்கள் நீதி மையத்திற்கென யாரையும் அழைக்காமல் தொண்டர்கள் தானாக வருகின்றனர்.-கமல் # நேரில் பேசறதைப்பார்த்தாலாவது உங்க பேச்சு புரியுமா?னு பார்க்கவா இருக்குமோ?


=================


20  பிரதமர் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய பின், அதில் இருந்த கறுப்பு நிற பெட்டி, இன்னோவா கார் ஒன்றில் ஏற்றப்பட்டது.இது குறித்து விசாரணை நடத்த வேண்டு-காங்., செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா, # கறுப்புப்பெட்டி என்பதால் கறுப்புப்பணம் இருக்கும்னு நினைக்கறாரோ?


=================


பிரேக்கிங் நியூஸ்

1  

உதயசூரியன் சின்னத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும் மோடியின் தலையில் விழும் குட்டு: உதயநிதி பேச்சு # அப்போ உதய சூரியன் சின்னத்துக்கு விழாத ஒவ்வொரு ஓட்டும்  மோடிக்கு கிடைக்கும் ஷொட்டுனு எடுத்துக்கலாமா?


=================


2  இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்: தமிழிசை # அடடா, அப்போ அதர்மம் தான் ஜெயிக்கும்னு சொல்ல வர்றாரா? ஏன்னா தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும்னு தானே சொல்வாங்க, அப்போ இந்த டைம் தோத்துடுவாரு, அடுத்த டைம் ஜெயிப்பாருனு அர்த்தம் ஆகுதே?


==============

8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள்: பொன். ராதாகிருஷ்ணன் #  கார்ப்பரேட் மக்களா? விவசாய மக்களா?==============


4  மகள் திருமணத்துக்காக 6 மாத பரோல்: தானே வாதிட நளினி ஆட்கொணர்வு மனு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு  # மக கல்யாணத்தை நடத்த , ஏற்பாடுகளை கவனிக 10 நாட்கள் போதுமே? எதுக்கு 6 மாசம்?


============5  மக்கள் விரோத மத்திய, மாநில ஆட்சிகளையும் இரட்டை வேட திமுகவையும் தோற்கடிப்போம்: டிடிவி தினகரன் சூளுரை  #  தாமரையும்  வேணாம் கை யும் வேணாம்னா யார்தான் பிரதமரா வரனும்கறாரு?================   


6  

உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு


தேர்தலை முன்னிட்டு பணமழை வேணா பொழியுது


==========

பொய் செய்திகளைப் பரப்பும் வாட்ஸ் அப் எண்கள் முடக்கம்  # அப்போ 90% நெம்பர் லாக் ஆகிடுமே?=============


8  

7.8 கோடி பேரின் ஆதார் தகவல் திருட்டு: தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மீது புகார்  # அடிப்படை ஆதார் (ஆதாரம்) இல்லாம குற்றம் சாட்டாதீங்கனு வக்காலத்து வாங்குனவங்க இப்போ என்ன சொல்லப்போறாங்க?
===============


9  நீங்கள் தேசியவாதி என்றால் பாகிஸ்தானை எப்போதும் விமர்சிப்பதை விடுத்து இந்தியாவுக்கு இந்திய மக்களுக்கு விவசாயிகளுக்கு ஏழைகளுக்கு என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றி பேசுங்கள்.-

பாஜகவை விளாசிய பிரியங்கா காந்தி # செஞ்சிருந்தா பேசி இருக்க மாட்டாரா?=================


10  

பிரதமர் மோடியின் மக்களவைப் பிரச்சாரத்துக்கு பணம் எங்கிருந்து வருகிறது?- ராகுல் காந்தி கேள்வி  # நாம ஆட்சில இருந்தப்ப காங் கட்சிக்கு பணம் எங்கிருந்து வந்ததோ அங்கே இருந்துதான்================


11  ஜெவையும், அதிமுகவையும் திமுகவை விட மிக கேவலமாக திட்டிய பாமகவை பக்கத்தில் வைத்திருக்கும் EPS அணிக்கு உண்மையான ஒரு அதிமுக தொண்டன் கூட ஓட்டுப்போட மாட்டான்'' - அமமுக புகழேந்தி .#வை கோ கூடத்தான்  திமுக வை எவ்ளவோ திட்னாரு, திமுக வை கோ வை கொலைக்குற்றச்சாட்டு எல்லாம் வெச்சுது, இப்போ அவங்க சேரலையா?


================


12  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஏழைகளுக்கு மாதந்தோறும் வருவாய் திட்டம் ஏமாற்று வேலை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்   # அதுவும் நம்ம 15 லட்சம் ரூபா அக்கவுண்ட்ல போட்டு விடறதா அடிச்சு விட்டது மாதிரி தானா?

===============


13 

சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் பெருகி வரும் இந்தியாவின் மக்கள் தொகை: ஐ.நா. அறிக்கையில் தகவல் # சீனாவை எதுல முந்தறமோ இல்லையோ இதுல முந்தறோம்


===============


14 மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய தயார் - அர்விந்த் கேஜ்ரிவால்  # பாஜ க கூட கூட்டணின்னாலும் ஓக்கேவா?


==============


15  

தரக்குறைவான மேடைப் பேச்சு: திமுக பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம் # திமுக காங் கூட்டணிக்கட்சிங்கறதை மறந்துட்டாரா? தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு திமுக வை தாக்க நல்ல சந்தர்ப்பம்னு இருக்காரா?

====================


16 

டிவியை உடைக்கும் விளம்பரத்தில் மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவை ஏற்றார் கமல்


# பிரேக்கிங் நியூஸ்?


================
17 தென் மாவட்டங்கள்லயே தூத்துக்குடியும், திருநெல்வேலியும்தான் திமுக கூட்டணி ஜெயிக்கும். மத்த இடங்கள்ல மண்ண கவ்வப் போகுது -

அழகிரி சொன்ன ஆருடம்

#  தம்பி மேல கோபம் இருந்தாலும் தங்கச்சி மேல பாசம் இன்னும் இருக்கு போல 


===================

18    நான், ஜெ., பாணியில் தேர்தல் பிரசாரம் செய்வதாகக் கூறுகின்றனர்-பிரேமலதா #   யாரையும் மதிக்கறதில்லைங்கறதைத்தான் அப்படி நாசூக்கா சொல்றாங்க 


==================


.19  நான் எப்போதும், எனக்கென்று, ஒரு பாணி வைத்துள்ளேன். அந்த பாணியில் தான், ஆரம்பக் காலத்தில் இருந்து, பிரசாரம் செய்கிறேன். -பிரேமலதா  #  நிராயுதபாணியா?

============,


20   ஜெ., இருக்கும்போது, என் பிரசாரத்தை, யாரும் கவனிக்கவில்லை. இப்போது, என் பிரசாரத்தை உன்னிப்பாக கவனிக்கும்போது, அதுபோல் சொல்கின்றனர்-பிரேமலதா # இப்பவெல்லாம் பொண்ணுங்க உண்மையை ஒத்துக்கறாங்க , தன் பேச்சை யாரும் கவனிக்கலை, சீண்டலைங்கறதையே ஒத்துக்கறாங்க 


=================

==============

Friday, April 19, 2019

தமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார்? மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்

1  சபாஷ்"துபாஷ்

====================


தமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்
===============

3   நல்லவேளை,ஹிந்தி ல sow = 100. கிடார் னா இசைக்கருவி.100 கிடார் னு சொல்லலை


==================================


இந்த வருசம் வெற்றிக்கோப்பை நமக்கே=ராகுல்===============


ரா ரா ராகுல்

================


6  கும்பிடு குருசாமியின் நடிப்பு


=============================

7  பாதர் :- தோத்திரம் தளபதியாரே
ஸ்டாலின் :- என்னது தோத்துருவோமா?

===============


பின்னாடி நிற்கறாங்க
என்னது?கண்ணாடி விற்கறாங்களா? எம் ஏ பிலாசபி கட்டிக்கோ

----------------


சிம்ப்ளிசிட்டி சின்னு


=============================10  களவாணி விமல் ரசிகர் நற்பணிமன்றம் எதிர்க்கலையா?