Friday, April 24, 2020

சினிமா -சிச்சுவேசன் சீன் போட்டி - பிகேபி + சுபா - எனது பங்களிப்பு

பவுனு பவுனுதான் மூலம் கே பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக , திரைக்கதை ஆலோசகராக, வசன பங்களிப்பையும் ஆற்றிய பிகேபி  எனும் பட்டுக்கோட்டை பிரபாகர் பிறகு  ஏ வெங்கடேஷ் இயக்கிய மகாப்ரபு , ஏய் படங்களுக்கு வசனம் எழுதினார் ,லேட்டஸ்ட்டாக கே வி ஆனந்த் இயக்கிய காப்பான் பட வசனகர்த்தாவும் அவரே


மாலைமதியில் பொன் ஜிதா எனும் வைரஸ் ரிலேட்டட் த்ரில்லர் நாவலை 1990களிலேயே எழுதிய சுபா பிறகு கேவி ஆனந்த் உடன் கோ , அயன் உள்பட பல படங்களில் வசனகர்த்தாவாக பணி ஆற்றினார்


பிகேபி சார் அவரது தளத்தில் அறிவித்த போட்டி


இன்றைக்கு சினிமா பார்க்கிற அத்தனை பேருக்கும் நல்ல ரசனையும் கற்பனை வளமும் ஒரு துடிப்பும்,
ஆர்வமும் இருக்கிறது.
"இந்த சீனுக்குப் பதிலா இப்படி சீன் வெச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும்'' என்று பலரும் கமெண்ட் செய்கிறீர்கள்.
ஒரு கற்பனையான சூழல் சொல்கிறேன்.
அசத்தலாக அதற்கு ஒரு சீன் எழுதுங்கள் பார்க்கலாம்.
சூழல் இது:
மிகவும் அரசியல் செல்வாக்குள்ள, இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவர்தான் வில்லன்.
அவருக்கு குடும்பம் இல்லை. தனியாள்.
அவருக்கு ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு.
ஹீரோவுக்கும் அவருக்கும் அறிமுகம் இல்லை. ஹீரோ அவரை மட்டும் தனியாக ஒரு பொது இடத்திற்கு வரவழைக்க வேண்டும்.
என்ன ஐடியா செய்து வரவழைப்பான்?
நிபந்தனைகள்:
1. வேறு படங்களில் வந்த காட்சியை எழுதக் கூடாது.
2. காட்சி விளக்கம் மட்டும் போதும்.
3. வசனம் தேவையில்லை.
4. பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள்!
5. நாளை( 21ம் தேதி ) மாலை 7 மணி வரை மட்டும்.
சிறந்த 10 சீன்களை தேர்வு செய்யப் போவது
என் இனிய நண்பர்களும் தமிழ் சினிமாவில்
தனித் தடம் பதித்து பயணம் செய்யும் சிறந்த திரைக்கதையாசிரியர்களுமான..
சுபா!

நான் எழுதிய 10  சிச்சுவேஷன்கள் இங்கே தந்திருக்கிறேன். இவற்றில் ஒன்று தேர்வாகி இருக்கு. அது எது என  நெம்பர் குறிப்பிட்டு கமெண்ட் ல சொல்லுங்க , யார் சரியா யூகிக்கறாங்கனு பார்ப்போம்

======================

1  குடும்பம் இல்லாத தனி ஆள் என்றால் லேடீஸ் விஷயத்தில் அப்டி இப்டி இருந்திருப்பான், எனவே ஹீரோ வில்லனுக்கு ஃபோன் பண்ணி நீயும் ஒரு லேடியும் இருக்கற கில்மா க்ளிப்பிங் கிடைச்சிருக்கு, இதை ரிலீஸ் பண்ணாம இருக்கனும்னா நாம ஒரு டீல் பேசனும், நேர்ல தான் பேசனும், ஆதாரமா அந்த சீனை வாட்சப் எல்லாம் அனுப்ப முடியாது, டேஞ்சர், யாராவது ஹேக் பண்ணிட்டா உனக்கு தான் அபாயம்,எனவே நான் சொல்ற இடத்துக்கு வா என அழைக்கலாம்

====================

2 வில்லன் பெரிய கோடீஸ்வரன்களில் ஒருவன் என்பதால் அவரைப்போலவே சக கோடீஸ்வரன் பெயரையோ , அரசியல் எதிரி பெயரையோ சொல்லி இவனால உனக்கு ஆபத்து , உன் ஃபேக்டரிகள்ல எல்லாம் ஒரே டைம்ல மாஸ் ரெய்டு நடத்த பிளான் பண்ணி இருக்காங்க . இதைப்பற்றி ஃபோன்ல பேசறதை விட நேர்ல பேசறதுதான் உனக்கு சேஃப்டி . யாரையும் நம்பாம தனியா வா. எப்பவும் கூடவே இருக்கறவனால தான் ஆபத்து வரும் , மலையூர் மம்பட்டியான்ல இருந்து ஜெ வரை எல்லாருக்கும் அழிவு கூட இருந்தவங்களாலதான்/, அதனால தனியா வா நான் சொல்ற இடத்துக்கு என அழைக்கலாம்


================

3 வில்லனோட அப்பாவுக்கு என்ன வயசு இருக்குமோ அந்த வயசுல வில்லன் ஃபோட்டோவை மார்ஃபிங் பண்ணி வில்லனோட அப்பா இவருதான். இவரைப்பற்றிய ரகசியங்கள் தெரிஞ்சுக்க நினைச்சா நான் சொல்ற இடத்துக்கு வா, நீ நினைக்கற மாதிரி நீ அநாதை இல்லை, உனக்கு குடும்பம் இருக்கு , உன் அப்பா உன்னை விட 10 ,மடங்கு வசதியானவரு , இப்போ ஃபாரீன்ல இருக்காருனு பொய் சொல்லி வர வழைக்கலாம்

================

4 வில்லனோட ஃபேமிலி டாக்டர் யார்?னு கண்டுபிடிச்சு அவரைப்பார்த்து ஏதோ வகைல சம்மதிக்க வெச்சு வில்லனோட உடம்புல கொரோனா வைரஸ் மாதிரி எதுனா வைரஸ் கிருமியை ஊடுருவச்செய்யனும்.,பாதிப்பு தெரிஞ்சதும் வில்லன் முதல்ல ஃபேமிலி டாக்டரிடம்தான் வருவான். ஏற்கனவே ஹீரோ சொல்லிக்குடுத்தபடி வில்லனோட ஃபேமிலி டாக்டர் ஒரு குறீப்பிட்ட பொது இடத்தை சொல்லி இங்கே போய் இவரைப்பாருங்க, இவராலதான் இந்த வைரஸ்க்கு ரெமிடி தர முடியும், இவர் ஒரு சயிண்ட்டிஸ்ட்னு சொல்லலாம் ( ஃபேமிலி டாக்டரை சம்மதிக்க வைக்க டாக்டரோட மனைவி , மகள் யாரையாவது கடத்தி வெச்சுக்கலாம்)

======================


5 வில்லனுக்கு குடும்பம் தானே இல்லை? எப்படியும் சின்ன வீடு அல்லது சின்ன பங்களா இருக்கும், முதலில் ஹீரோ வில்லனை ஃபாலோ பண்ணி வில்லனோட சின்ன வீட்டைக்கண்டுபிடிக்கனும். . அந்தப்பொண்ணு கிட்டே தான் ஒரு புரொடியூசர் என பொய் சொல்லி சினிமாவில் நடிக்க ஆசை இருக்கா?னு கேட்கனும். எந்தப்பெண்ணுக்குதான் சினி ஃபீல்டில் ஜெயிக்க ஆசை இருக்காது?ஓக்கே சொன்னதும் ஃபோட்டோ ஷூட் எடுக்கறேன்னு அவரை வெச்சு வேறு ஒரு ஆளுடன் நெருக்கமான காட்சிகளை எடுக்கனும். படம் ரிலீஸ் ஆகும் வரை மேட்டரை வெளில யாருக்கும் லீக் பண்ண வேணாம் என சொல்லி விட்டு வில்லனின் வாட்சப்க்கு இந்த ஃபோட்டோக்களை அனுப்பி உன் ஆளுக்கும் , இவனுக்கும் கனெக்சன் இருக்கு, மேலாதிக்க விபரங்களுக்கு இன்ன இடத்துக்கு இன்ன டைம்ல வா, நேரில் பேசுவோம்னு சொல்லலாம்

=========================

6 வில்லனோட கிச்சன் ரூம் இன் சார்ஜ் யார்?னு கண்டுபிடிச்சு அவன் மூலமா வில்லன் சாப்பிடற டெய்லி ரொட்டீன் ஃபுட் டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பண்ணனும் . அவன் கிட்டே இது சர்ப்பரைசான ரிப்போர்ட்டிங். வார இதழில் கோடீஸ்வரரின் உணவுப்பழக்கவழக்கங்கள்னு ஒரு ஆர்ட்டிக்கிள் வரப்போகுது, அதுக்காக .. ஆனா நீ மேட்டரை ஓப்பன் பண்ணக்கூடாது , சஸ்பென்சா வெச்சுக்கோனு சொல்லி அவனுக்கு லஞ்சமா பொன்னோ , பொருளோ, பொண்னோ தந்து கரெக்ட் பண்ணி வெச்சுடனும், பின் வில்லனுக்கு ஃபோன் பண்ணி “ நீ என்ன என்ன கிழமைல என்ன என்ன சாப்பிடறே? அந்த லிஸ்ட் இதுதான், சரியா? செக் பண்ணிக்கோ. உன் எதிரிகள் உனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்துட்டு இருக்காங்க. யாரையும் நம்பாதே. நான் சொல்ற இடத்துக்கு தனியா வா. மிச்ச விபரத்தை அங்கே வெச்சுப்பேசுவோம்னு சொல்லலாம்

================

7 பொதுவா பணக்காரங்க கிட்டே ஒரு பழக்கம் இருக்கும், எதை செய்ய வேணாம்கறமோ அதைதான் செய்வாங்க. இந்த ஈகோ வை ஹீரோ யூஸ் பண்றாரு, அதாவது பப்ளிக் பிளேஸ் ல வில்லனை மீட் பண்ணனும், வா அப்டினா வர மாட்டான். அதனால வில்லனுக்கு ஃபோன் பண்ணி உனக்கு ஆபத்து இருக்கு. ஒரு மாசத்துக்கு எங்கேயும் வெளில வராதே அப்டினு ஃபோன் பண்ணி சொல்லனும். எப்படியும் அதைக்கேட்காம வில்லன் தன் ஃபேக்டரிக்கு போய்ட்டு இருப்பான். அப்பப்ப ஃபோன் பண்ணி ஏன் நான் சொல்லியும் கேட்காம ஃபேக்டரிக்கு வந்திருக்கே? இங்கே வந்திருக்கே.. அப்டினு வில்லனோட ஒவ்வொரு விசிட்க்கும் ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து அவனை டார்ச்சர் பண்ணனும், பின் சரி இங்கே எல்லாம் வந்தது சரி . ஆனா பபளிக் பிளேஸ் பார்க் , பீச் இந்த மாதிரி இடத்துக்கு மட்டும் போய்டாதே அப்டிங்கனும் . நீ என்ன சொல்றது? எந்த செக்யூரிட்டியும் இல்லாம தனியா இன்னைக்கு பீச்க்கு வாக்கிங் போறேன், பார்க்கறியா?னு வில்லனே சவால் விட்டு ஹீரோ கிட்டே மாட்டிக்குவான்


=============

8 வில்லன் அரசியல் செல்வாக்கு மிக்க கோடீஸ்வரன் எனில் அவனுக்குப்போட்டியாக தொழிலில் டாப் 3 எதிரிகள் அல்லது சம பலம் மிக்கவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் தனித்தனியாக ஹீரோ போய் சந்தித்து இந்த மாதிரி உங்கள் எதிரியும் நெ 1 கோடீஸ்வரனுமான வில்லனை தனியே வர வைக்க உங்க உதவி தேவைப்படுது. நீங்க ஒரு இடத்துல கூடி என் கிட்டே சிறைப்பட்டது போல ஒரு வீடியோ க்ளிப் எடுத்துக்க உதவி செஞ்சா போதும் , சுத்தி பாதுகாப்புக்கு உங்க ஆட்களை வெச்சுக்குங்க. நான் அந்த வீடியோவை அனுப்பி வில்லனை பொது இடத்துக்கு வரச்சொல்லிக்கறேன் என கன்வின்ஸ் செய்து 3 போட்டியாளர்களை ஒரே இடத்தில்; வரவைத்து பணயக்கைதிகள் போல் அடைத்து வைத்து வீடியோ எடுத்து மெயின் வில்லனுக்கு அனுப்பி உன் தொழில் எதிரிகள் இப்போ என் வசம். அவங்க உனக்கு வேணும்னா நான் சொல்ற இடத்துக்கு தனிமையில் வா .தனியா வர பயமா இருந்தா உன் செக்யூரிட்டியை கூட்டிக்க என அவன் ஈகோவை தூண்டினால் ரோஷப்பட்டு தனியே வந்துடுவான்

===================

9 ஹீரோ ஒரு ஹேக்கரின் உதவி கொண்டு வில்லனின் அடியாட்கள் , செக்யூரிட்டிஸ் , மேனேஜர் , வாட்ச்மேன் என அனைவருக்கும் ஒரு மெசேஜ் வில்லனின் நெம்பரில் இருந்து அனுப்பனும். நாளை ஒரு பிரச்சனை , யாரும் அவங்கவங்க வீட்டை விட்டு வெளில வர வேண்டாம், எந்த ஃபோன் காலையும் அட்டெண்ட் பண்ண வேணாம், என்ன விபரம்னு நாளை சொல்றேன். , இந்த மெசேஜை அனுப்பும் முன் வில்லனின் பங்களாவில் உள்ள அனைத்து லேண்ட் லைன் இணைப்புகளையும் கட் பண்ணனும். பிறகு அடுத்த நாள் வில்லனுக்கு ஃபோன் செய்து “ இன்னைக்கு உன் ஆளுங்க யாரும் வேலைக்கு வந்திருக்க மாட்டாங்களே? உனக்கு எதிரா சதி நடக்குது. மேலும் விபரம் அறிய நீ அக்கவுண்ட் வெச்சிருக்கற இன்ன பேங்க் குக்கு உடனே வா... என பேசனும்.போலீஸ் கிட்டே யோ, தனியார் டிடெக்டிவ் கிட்டேயோ உதவி கேட்காதே, இது உனக்குதான் ஆபத்து , பிளாக் மணி மேட்டர் என சொல்லனும்

======================


10 வில்லன் ஒரு ரஜினி ரசிகன் என்பதைத்தெரிந்து கொண்ட ஹீரோ வில்லனுக்கு ஃபோன் பண்ணி “ உனக்கு என்னதான் வசதி , செல்வாக்கு இருந்தாலும்  எங்களை மாதிரி சாமான்யன்கள் போல்  தனியா எந்த பாதுகாப்பும் இல்லாம வெளில வர முடியுமா? எப்பவும் கூட்டத்தோட தான் வர்றே, போறே, பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும் , போகும்னு தலைவரே சொல்லி இருக்காரு அப்டினு உசுப்பேத்தறான்.பிறகு சரி டெய்லி வேணாம், ஒரே ஒரு நாள் உன்னால உன் இஷ்டத்துக்க்கு  தனியா சுத்த முடியுமா? பார்க், பீச்னு அப்டினு சவால் விடறான், முதல்வன் படத்துல ஒரு நாள் முதல்வன் போல ஒரு நாள் சாதாரணன் ஆக சுத்திப்பார்  அப்டிங்கறான். ஒரு கோடீஸ்வரனால இதெல்லாம் சாத்தியமா?னு வில்லன் கேட்டா “ ஏன்? பிச்சைக்காரன் படத்துல ஹீரோ தன் சொத்துக்களை எல்லாம் துறந்து பிச்சைக்காரனா வாழலையா?னு ஹீரோ மடக்கறான். வில்லன் அந்த சவாலை ஏத்துக்கறான். ஒரு நாள் பூரா தனியாவே செக்யூரிட்டி இல்லாம பொது இடங்களுக்கு வர்றான்

================



Tuesday, April 21, 2020

தடயம்- விமர்சனம் ( தேநீர் பதிப்பகம் விமர்சனப்போட்டி )



படம் டைட்டில் போடும்போது என்னைக்கவர்ந்த 2 விஷயங்கள்

1  ஆனந்த விகடனில் பிரசுரம் ஆன சிறுகதை இது
2 இயக்குநர்  கம் கதாசிரியர் தமயந்தி +  க்ரவுட் ஃபண்டிங் முறைல பலரது கூட்டுத்தயாரிப்பில் உருவான படம் இது

படத்தோட கதை ஒன் லைன்ல சொல்லிடலாம், முன்னாள் காதலியை நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்க வரும்  காதலனின் அனுபவங்கள்


 வழக்கமா இது மாதிரி கதை அம்சம் உள்ள படங்களில் நாயகனும், நாயகியும் உடல் ரீதியா சேருவாங்களா? எனும் ரசிகனின் எதிர்பார்ப்பை  வைத்தே திரைக்கதையில் விளையாடுவார்கள் இயக்குநர்கள் , இதற்கு லேட்டஸ்ட் உதா - 96. ஆனா அந்த  மாதிரி எதிர்பார்க்கவே வழி இல்லாத மாதிரி நாயகியை ஒரு நோயாளியா , படுத்த படுக்கையா காட்டி இருப்பதில் தெரிகிறது இயக்குநரின் தன்னம்பிக்கை 

நாயகியின்  கேரக்டர் ஸ்கெட்ச் பாலுமகேந்திராவின் ஜூலி கணபதி பட சரிதாவை நினைவு படுத்தியது . நாயகிக்கு வைத்த  பெயர் கடலோரக்கவிதைகள் ரேகா ( ஜெனிஃபர் டீச்சர்)வை ஞாபகப்படுத்தியது . நாயகியின் நடிப்பு அபாரம், ஒப்பனையே இல்லாமல் மிக யதார்த்த நடிப்பிலேயே ரசிகர்க்ளை கட்டிப்போட வேண்டிய கட்டாயம்.அவர் நிஜமாவே படுத்த படுக்கையாத்தான் இருக்காரோ என நினைக்க வைக்கும் அளவுக்கு அவர் உடல் மொழியில் அவ்ளவ் யதார்த்தம். வெல்டன்


 நாயகனாக வருபவர் நாயகியை விட ஒரு ஸ்டெப் கம்மிதான் நடிப்பில் . ஆனாலும் நேர்த்தியான பங்களிப்பு . பார்வைகளாலேயே தன் காதலை உணர்த்தி விடுகிறார்


 நச் டயலாக்ஸ்


1 திடீர்னு வரக்கூடிய மழை நமக்குள்ளே  இருக்கற  பல ஞாபகங்களை  கிளறிவிடும்


2 வாழ்க்கைல யு டர்ன் கிடையாது


3   என்ன ஆகிடும்? மேக்சிமம் செத்திடுவேன், அவ்ளோ தானே?

4  நீ பெண்ணா இருந்தா அந்த கஷ்டம் தெரிஞ்சிருக்கும்


5   உனக்கு எல்லாமே விளையாட்டுதானா?

 அப்படி (விளையாட்டுத்தனமா )  இல்லைனா எப்பவோ நான் செத்திருப்பேன்


6  உனக்கு (பணத்) தேவை இருந்தா ( என்னைத்தவிர ) வேற யார்ட்டயும் கேட்க மாட்டேனு எனக்கு தெரியும் 

7 எவ்ளோ ஈகோயிஸ்ட்  நீ, என் முன்னால சின்னப்பிள்ளை மாதிரி அழறே?

8   அந்த கவிதா ஒரு ரசனைக்காரி , ஒரே வீட்ல  பி. சுசீலாவும் , அவுரங்கசீப்பும் வாழ முடியுமா?

9  நான் ஒரு மக்குடா , இல்லைன்னா உன்னை ,மிஸ் பண்ணி இருப்பேனா?

10  பொய் சொல்லாதே , என் காதல் பொய் சொல்ல வைக்கக்கூடாது, கஷ்டப்பட வைக்கக்கூடாது


சபாஷ் இயக்குநர்


1  நாயகன் , நாயகி இருவருமே நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும்போது பரஸ்பரம் அவங்கவங்க தாம்பத்ய வாழ்க்கை , லைஃப் பார்ட்னர் பற்றி விசாரித்துக்கொள்வது மிக யதார்த்தம்

2    இயக்குநர் ஒரு பெண் என்பதால் ரொமாண்டிக் காட்சிகளில் நெற்றி முத்தம் முக்கிய இடம் பிடித்ததைப்பார்க்க முடிந்தது. இதுவே ஆண் இயக்குநர் எனில் இதழ் முத்தம், கன்ன முத்தம் என வழகக்மான  ரொமான்சாக இருந்திருக்கும்

3   ஃபிளாஸ்பேக்கில் வரும் அந்த டூயட் காட்சி அட்டகாசம், மொத்தப்படமுமே  ஒரே அறையில் கிட்டத்தட்ட ஹாஸ்பிடல் மோட்ல யே இருப்பதால் அந்த இயற்கை எழில் கொஞ்சும் பசுமை வெளிகளில்  படமாக்கப்பட்ட காட்சி அழகு கவிதை


4   பின்னணி இசை அமைத்தவர்   இளையராஜா ரசிகர் போல . மவுனமும் ஒரு இசை தான் என்பதையும் , காட்சிகளில்  உணர்த்தி விடுகிறார்


5  பசுமையான நினைவுகள் என்பதாலோ , இயக்குநருக்குப்பிடித்த நிறம் என்பதாலோ எப்படியோ படம் பூரா பச்சை நிறம் தனி பங்களிப்பு எடுத்திருக்கிறது.  நாயகி , சுஜாதா , கவிதா என 3 பெண் கேர்க்டர்களுமே  பச்சைக்கலர் உடையில் இருப்பது கோ இன்சிடென்சாவும் இருக்கலாம்


6   நிகழ்கால உரையாடல்களை வைத்தே அவர்களது கடந்த கால சம்பவங்களை நினைவு கூர வைத்தது இயக்குநர் டச்

7   க்ளைமாக்சில்  அனுதாபத்துக்காக நாயகியை சாகடிக்கும் மலிவான டெக்னிக் எதுவும் இல்லாமல் எதார்த்தமான முடிவாக அமைந்தது மகிழ்ச்சி 



 திரைக்கதையில் சில நெருடல்கள் 


1   கேன்சர் பேஷண்ட்டான முன்னாள் நாயகியைப்பார்க்க வரும் நாயகன் கேன்சர்க்கு வழி வகுக்கும் சிகரெட் பிடிப்பவராக அடிக்கடி காட்டி இருப்பது ஏனோ? ஒரு பெண் இயக்குநரே   தம் காட்சிகளை எடுக்கலாமா?


2   கள்ளக்காதலர்கள் என்ற பதம் அடிக்கடி நாயகியால் சொல்லபப்டுது. அது எதுக்கு ? கல்யாணத்துக்குப்பிறகு ஏற்படும் எக்ஸ்ட்ரா மேரிட்டல் லைஃப் தானே கள்ளக்காதல்? இது கல்யாணத்துக்கு முன் இருந்த  காதல் தானே?


3  காதலர்கள்  தங்களுக்குள் பரஸ்பரம் செல்லப்பெயர் வைத்துக்கொஞ்சிக்கொள்வது வழக்கம் தான், எருமை , பேயே, நாயே , இப்டி.. ஆனா நாயகன் அடிக்கடி நாயகியை “ மூதேவி “ என சொல்வ்து அமங்கலமா இருக்கு. இத்தனைக்கும்  நாயகி படுத்த படுக்கையா இருக்கும் பேஷண்ட். . புரியாத புதிர் படத்தில் ரகுவரன் ஐ நோ ஐ நோ என பல டைம் சொல்வார் , அது மாதிரி இங்கே இது.. தவிர்த்திருக்கலாம்



4  நாயகி ஒரு முறை சுஜாதா கண்கள் பெருசா பள பளனு இருக்கும்  என வர்ணிக்கிறாள் , ஆனால் நிஜத்தில் சுஜாதா சின்னக்கண் உடையவர் ஆக காட்டப்படுகிறார்


5  கவிதா கேர்க்டர் எதுக்கு சம்பந்தம் இல்லாமல் . வந்ததுமே 2 நிமிசத்துல கிளம்பிடுது.அதே போல ஃபிளாஸ்பேக்கில் நாயகன் இப்போதைய தோற்றத்துலயே தாடி , நரை முடியோட டல்லா வர்றார். ஃபிரெஷ் ஆன நாயகி கெட்டப் காட்றப்ப நாயகனையும் அப்படி யூத் மாதிரி காட்டி இருக்க வேணாமா?


6   கவிதா வரும்போது வீடு தாழ் போடப்பட்டிருக்கு. அந்த சின்ன வீட்டுக்கு எதுக்கு தாழ்? ஹால், பெட்ரூம், கிச்சன் ரூம்  என பெரிய வீடா இருந்தா தாழ் போடலாம்.

7   மெல்லிய மயில் இறகால் வருடுவது போல வசனங்கள் வந்து போகையில் வத்தக்குழம்பை நக்கி நக்கி சாப்பிடறது என்ற வசனம் முகத்தில் அறைகிறது. தவிர்த்திருக்கலாம்



 எனிவே படம்  நல்ல முயற்சி. பாடல்களை கவிதாயினி குட்டி ரேவதியுடன் இணைந்து இயக்குநர் தமயந்தியும் எழுதி இருப்பது மகிழ்ச்சி . பாடல் ஆசிரியர் தாமரையையும் இந்த லிஸ்ட்டில் இணைத்திருக்கலாம் .

ஆனந்த விகடனில் வந்த சிறுகதையின் பெயர் என்ன? என்பதை குறிப்பிட்டிருக்கலாம்.படத்துக்கு டைட்டில் தடயம் என வைத்தது  க்ரைம் த்ரில்லர் போல காட்டுது. தடம் என வைத்திருக்கலாம்.படம்     ஸ்லோ என்பதால் ஏ செண்ட்டர் ஆடியன்சை மட்டுமே கவரும் என கணிக்கிறேன்

 தமயந்தி க்கு ஒரு கிளாசிக்கல் மூவி . ரேட்டிங்   3.5 / 5



Monday, April 20, 2020

கவிதாயினி தாமரை + PKP சினிமாப்பாடல் பல்லவி போட்டி

பிகேபி எழுதியது -


எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர், பாடலாசிரியர் தாமரை "வேட்டையாடு விளையாடு" படத்தில் எழுதிய "பார்த்த முதல் நாளே" பாடல் நினைவிருக்கிறதா?

அந்தப் பாடலின் பல்லவிக்கு மட்டும் அதே மெட்டுக்கு புதிய பல்லவி எழுதுங்கள். மீண்டும் சொல்கிறேன்.. மொத்த பாடலும் அல்ல. பல்லவிக்கு மட்டும். அதே காட்சி சூழலுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். யூ டியூப் இணைப்பில் அந்தப் பாடல் இருக்கிறது. பார்க்கலாம்.கேட்கலாம்.

சிறந்த பல்லவிகள் பத்தை தாமரை அவர்களே தேர்ந்தெடுக்கிறார். அவர்களுக்கு ஊரடங்கு சரியானதும் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பாடல்கள் அடங்கிய ஒரு ஆடியோ சிடி அனுப்பி வைக்கப்படும்.

இது தொடர்பாக தாமரையிடம் பேசியபோது மெட்டுக்கு பாட்டெழுதுவது குறித்து ஒரு சிறு குறிப்பை வழங்குவதாகத் தெரிவித்தார்.

இதோ.. ஓவர் டு தாமரை:
-------------------------------------------------------------------------------

Kavithayini தாமரை (@writer_thamarai) | Twitter
வணக்கம்.

மெட்டுக்குப் பாட்டு எழுதுவது என்பது ஒரு கலை.... பின்னே, செருப்புக்கு ஏற்றவாறு காலை வெட்டுவதும் வெட்டிய காயம் தெரியாமல் அழகாக நடப்பதும் கலையில்லையா ? 😀
மெட்டுக்கு எழுதுவது ஒரு கலை என்றால், ஏற்கெனவே எழுதப்பட்ட மெட்டுக்கு எழுதுவது மிகப்பெரிய கலை ! 😀
ஆம், ஏற்கெனவே எழுதியதிலிருந்து விலகி எழுத வேண்டும், அதே சாயல் வந்து விடக் கூடாது, புதிதாக இருக்க வேண்டும், முன்னதைத் தாண்டியும் இருக்க வேண்டும்...
மெட்டுக்கு எழுதும்போது குத்துமதிப்பாக எழுதக் கூடாது, அளவெடுத்தாற்போல் கச்சிதமாக இருக்க வேண்டும். இதை இங்கே திரைத்துறையில், 'மீட்டர்' என்று சொல்வார்கள்.
இசையமைப்பாளர்கள் சில சமயம் பொய் வார்த்தைகளைப் போட்டு மெட்டுக் கட்டுவார்கள், அதையே பாடலாசிரியர்களுக்கும் கொடுத்து விடுவார்கள். 'Dummy words' என்று சொல்வார்கள். அளவு வார்த்தைகளாக மெட்டு இருந்தால் அளவு இருக்கும் ஆனால் கற்பனையைக் கெடுக்கும். எனவே நான், எனக்கு மெட்டு தரும்போது குறிப்பாக 'அளவு வார்த்தைகள் கூடாது, தத்தகாரம்தான் வேண்டும்' என்று நிபந்தனை போட்டு விடுவேன். தத்தகாரம் என்பது, மெட்டை 'தனனனா தானா' பாணியில் பாடித் தருவது.
உங்களுக்குத் தரப் பட்டுள்ள பாடல் 'பார்த்த முதல் நாளே' !. இதற்கான தத்தகாரம், 'தான னன னானா'...
பாடல் எழுத, கதை மற்றும் பாடல் சூழல் தேவை.

இருவர் பாடும் காதல் பாடல். ஒரு பெண்ணைப் பார்த்த உடனேயே பிடித்துப் போய், இரண்டு மணி நேரங்களில் 'உன்னைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்' என்று நாயகன் சொல்லி விடுகிறான். அங்கு ஆரம்பமாகும் பாடல், இருவரின் அளவு கடந்த காதல், திருமண நிகழ்வுகள், ஒன்றாக ஒரு வீட்டில் வாழ்வது, அவர்களுக்கிடையேயான பொழுதுகள் என ஒரு பயணம், சிலபல மாதங்கள் என வைத்துக் கொள்ளலாம். வீடு, உட்புறம், வெளிப்புறம் எனக் காட்சிகள் நகரும்... நாயகன் மிடுக்கான காவல்துறை அதிகாரி என்பதை நினைவில் வைக்க வேண்டும்... பாடல் பெண்குரலில் தொடங்குகிறது.
எங்கே... இப்போது மெட்டு, சூழல் இரண்டும் கிடைத்து விட்டது...உங்களுக்குள் இருக்கும் கவிஞரை வெளியே கொண்டு வாருங்கள் பார்க்கலாம்... நான் எழுதியதை மறந்து விட்டு, புதிதாகக் கேட்பது போல் எழுதுங்கள் பார்க்கலாம் 😀.

நான் தேர்வு செய்யும்போது, அளவில் இல்லாமல் குத்துமதிப்பாக எழுதப் பட்டவற்றை நிராகரித்து விடுவேன் என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறேன்.
பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் இது சற்று சிக்கலான மெட்டுதான். முயன்று பாருங்கள். எழுத எழுதப் பிடிபடும்.

அன்புடன்,
தாமரை

=======================

போட்டிக்கு நான் எழுதிய 3 பல்லவிகள் 


1  பெண் = பாயும் நதி போலே 
மதகில்  பாயும் நதி போலே 
மீனின் நிலை போலே  குதித்தேன்  
  மீனின் நிலை போலே  

ஆலங்கட்டி மழையாய் மாறி எனை நனைத்தாய்
சூரிய சுடராய் ஆகி விதை விதைத்தாய்
என் கனாவைத்தாங்கிய 
உன் விழி உன் விழி 
என்றும் மூடாதே!


ஆண் = வாட்டி எடுக்கிறதே
நினைவு வாட்டி எடுக்கிறதே
கானம் பொழிகிறதே
இதழில் பாடல் வளர்கிறதே!


உன் கண்ணில்  நெளியும் மின்னல்களை
கோர்த்தேன், சேர்த்தேன் தினம் தினமே
உன் அழகிய முகம் தனைக்கண்ட பின்
நானும் கவி ஆனேன்

===================


2  

பெண் =

ஆடும் மயில் போலே 
மழையில்   
ஆடும் மயில் போலே 

பாடும் குயில் போலே  மகிழ்ந்தேன் 
  பாடும் குயில் போலே  

வைரசாய் வந்து எனைப் பிடித்தாய்
தரிசாய்க்கிடந்த  எனை   நனைத்தாய் 

உதகைக்குளிர் கொண்ட 

உன் நிலை உன் நிலை 

என்றும் கரையாதே



ஆண்=

போட்டி வைக்கிற்தே
பெண்ணே
  போட்டி வைக்கிற்தே 
ஊட்டிக்குளிரும்
உந்தன் அண்மையும் 
முந்தப்பார்க்கிறதே


நத்தையின் மென்மை கொண்ட கன்னங்களை
தொட்டேன் பட்டேன் கதுப்புகளை
உன் அனாயச அழகினில் 
விழுந்த விழுந்த பின் நானும் 
சிலை ஆனேன் 

==================


3 பெண் =
தீர்த்தக்கரை தனிலே என்னை
ஈர்த்த முதல் ஆணே!
வேர்த்த உடல் போலே உணர்ந்தேன்
  வேர்த்த உடல் போலே !

சுனாமியாய் வந்தெனை சுருட்டி விட்டாய்!
பினாமியாய் மாறி வளைத்து விட்டாய்!

என் மன  அரசாங்க  கெஜட்டினில்
உன் பேர் உன் பேர் என்றும் மாறாதே!  

ஆண் =

பேட்டி கொடுக்கிறதே! 
உன் இதழ் பேட்டி   கொடுக்கிறதே!
நாணம் தடுக்கிறதே!
கன்னம் தானே  சிவக்கிறதே!

உன் கண்ணில் வழியும் கண்ணீர்களை
உணர்ந்தேன், தெளிந்தேன் தினம் தினமே!
 உன் ஆனந்த அழுகையில் 
கரைந்த பின்  கரைந்த பின் 
நானும் மெழுகானேன்!

==========================

Wednesday, April 01, 2020

சரக்கு சங்கரலிங்கங்கள் கவனத்துக்கு

ஆல்கஹால் வித்டியாரல் 

(Alcohol withdrawal)
இந்த ஊரடங்கு முன்னிட்டு ஊரில் உள்ள எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் போது, டாஸ்மாக் கடைகளும் சேர்த்து அடைக்கப்பட்டு விட்டது

இதனால் தினமும் மது குடித்து அடிமையாக இருந்த மக்களுக்கு திடீரென நிப்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் ஆல்கஹால் வித்டிராவல் சிண்ட்ரோம் எனப்படும். 

யாரெல்லாம் அதிக அளவில் குடிக்கிறார்களோ அவர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் வரை வாய்ப்பு உள்ளது.

 அதிக அளவு என்பது 
ஆண்களுக்கு ஒரு வாரத்திற்கு 15 ட்ரிங்க்ஸ் எனவும் 
பெண்களுக்கு ஒரு வாரத்தில் எட்டு ட்ரிங்க்ஸ் எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது

ஒரு டிரிங்க் (one drink) என்பது 
பீர் - 285 ml
வோட்கா - 100 ml
விஸ்கி /பிராந்தி - 30 ml

நீங்கள் குடிப்பது எத்தனை டிரிங்க்ஸ் ஒரு வாரத்திற்கு வரும் என்பதை கணக்கீடு செய்து கொள்ளுங்கள். 

நீங்கள் மதுவிற்கு அடிமையா இல்லையா என்பதை கீழ்காணும் அட்டவணை விளக்குகிறது 
CAGE questions 
1)நீங்க எப்பவாவது, நாம் அதிகமாக குடிக்கிறோம், குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தது உண்டா 
(cut down - yes - 1 no - 0)

2)உங்கள் அருகில் அல்லது வீட்டில் இருக்கும் யாராவது நீங்கள் அதிகமாக குடிக்கிறார்கள் என்று சத்தம் போட்டது உண்டா? 
(Annoying - yes-1 No-0)

3)நீங்கள் அதிகமாக குடிப்பது பற்றி என்றைக்காவது குற்ற உணர்வு கொண்டது உண்டா? 
(guilty - yes - 1 No-0)

4) என்றைக்காவது ஒருநாள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குடித்தது உண்டா? 

(Eye opener yes-1 No-0)

இதில் ஸ்கோர் 4 என்று சொல்லுகிறவர்கள் கண்டிப்பாக மதுவிற்கு அடிமையாக இருப்பவர்கள். - High risk
2-3 intermediate risk
0-1 low risk 

இந்த மாதிரி High risk ஆட்கள் மது நிறுத்திய உடன் 
ஆல்கஹால் வித்டிராவல் சிண்ட்ரோம் வர வாய்ப்பு அதிகம். நிறுத்திய ஆறு மணி நேரத்தில் இருந்து சில நாட்களுக்கு வரை இந்த பிரச்சினை நீடிக்கும். 
1)கைகால் நடுக்கம் 
2) வாந்தி வரும் உணர்வு 
3)பதட்டம் 
4)தலைவலி 
5)படபடப்பு 
6)வியர்த்துக் கொட்டுதல் 
7)குழப்பமான மனநிலை 
8)தூக்கமின்மை 
9)அதிக இரத்த அழுத்தம் 
10)துர் கனவுகள் 

சில சமயங்களில் 
காய்ச்சல் 
வலிப்பு 
நினைவுக் கோளாறு 
உடம்பில் எறும்பு ஊர்வது மாதிரி, பின் குத்துவது மாதிரியான உணர்வுகள் ஏற்படுதல் 
காதில் யாரோ பேசிக் கொண்டு இருப்பது மாதிரியான உணர்வு 
கண்களுக்கு முன் வித விதமான உருவங்கள் நெளியும் மாதிரி உணர்வு 

இந்த ஆல்கஹால் வித்டிராவல் சிண்ட்ரோம்,  Clinical institute of withdrawal assessment for Alcohol - CIWA-Ar  என்ற அளவுகோலின் படி மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது 

1)Mild- ஸ்கோர் <10 div="">
2)Moderate ஸ்கோர் <15 div="">
3)severe  ஸ்கோர் >15

மேற்கண்ட அறிகுறிகளின் தீவிரங்கள் பொறுத்து இவை வகைப்படுத்தப்படும் அவற்றிற்கு மருந்துகள் அளிக்கப்படும். 

நிறைய நோயாளிகள் இந்த மாதிரி பிரச்சனைகளுடன் மருத்துவ மனையில் உள் நோயாளிகள் ஆக அனுமதிக்கப்படுவதை தொடர்ந்து, 
மாவட்ட மன நோய் பிரிவு ஒவ்வொரு அரசாங்க மருத்துவமனைக்கும் இப்படி mild, moderate, severe என்று வகைப் படுத்த வேண்டும் எனவும் அதன் பிறகு அவர்கள் எந்த அளவிற்கு மாத்திரைகள் எத்தனை நாளைக்கு சாப்பிட வேண்டும் என்று ஒரு guidelines வெளியிட்டு உள்ளது 

இந்த மாதிரி வித்டிராவல் அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களது அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் தொடர்பு கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஒன்று இரண்டு வாரங்களில் இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்து விடலாம். 

இல்லையெனில் இந்த மாதிரி பிரச்சனைகள் வாரக் கணக்கில் நீடிக்கும் அபாயம் உள்ளது. இது தன்னுடைய வழக்கமான பழக்கம் வழக்கங்களில் மாறுதல் ஏற்படுத்த வல்லது. இந்த மாற்றங்கள் மனத்தின் சம நிலையைப் பாதித்து நாளடைவில் severe depression ஆக்கி தற்கொலை செய்யும் எண்ணங்களை உருவாக்கும் வலிமை உடையது.

சீக்கிரம் வைத்தியம் செய்வது இதில் இருந்து எளிதாக மீண்டு வர இயலும். கேரளாவில் இந்த மாதிரி தற்கொலைகள் அதிகரித்த பின்னரே கேரள அரசாங்கம் திரும்ப கடைகளை திறக்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்து உள்ளது என்று தோன்றுகிறது. 

கீழ்க்கண்ட இணைப்பில் உங்களது ஸ்கோர் என்ன என்பதை நீங்களே கண்டு கொள்ள முடியும். ஸ்கோர் அதிகமாக வரும் பட்சத்தில் நீங்களே அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

நன்றி -*டாக்டர். சில்வியா பிளாத் -