Wednesday, January 27, 2016

நம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்

விஜயகாந்த் அரியணையில் அமரபோகிறார் -பிரேமலதா # மேட்டூர் அணை ல வேணா உட்காரலாம்.நுழைவுக்கட்டணம் 5 ரூபாதான்


=============
2 என் அர்ப்பணிப்பு வாழ்வை விளக்கி தேர்தல் பணியாற்றுவீர்: - ஜெ வேண்டுகோள் # அர்ப்பணிப்பு, சேவை இவற்றை சொல்லிக்காட்டக்கூடாதுனு காமராஜர் சொன்னாரு
==================3  ஸ்டார்ட்-அப் திட்டமும் சகிப்பின்மையும் இணைந்து செல்ல முடியாது- ராகுல் காந்தி #  திட்டம் ஸ்டார்ட் ஆகட்டும்,அதுக்குள்ள  சகிப்பின்மை எதுக்கு?
==================
இனி தமிழகத்தில் ஜல்லிக்கட்டே நடக்காது: வழக்குத் தொடர்ந்த காங்கிரஸ் அமைச்சர் மகள் கருத்து # காங்கிரஸ்க்கு தமிழகத்தில் எதிர்காலமே இருக்காது
===============
ஏர் இந்தியா நிறுவன மேலாளரின் கன்னத்தில் அறைந்த ஆந்திர MP கைது #,கன்னத்துல வை னு சரத்குமார் பாட்டை ரிங் டோனா வெச்சிருந்தார்னு சமாளிப்பாரோ?


============

6 அரசு அதிகாரியை அறைந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா?: தீயாய் பரவும் வீடியோ.# என்னய்யா இப்டிப்பன்றீங்களேய்யா.கேப்டன்னு மனசுல நினப்பாய்யா?

============

7 சிவகார்த்திகேயன் கலாய்ப்பு எல்லை மீறிவிட்டது: லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்...# ஓஹோ.உங்க வீட்டுக்கே வந்து கிண்டல் பண்ணினாரா?

=========

8 தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெ வேண்டுகோள். # மேடம்.பண விநியோகம் இன்னைக்கேவா?தமிழன் மறந்துடப்போறான்.மெதுவா குடுங்க


===========

9 அடுத்த வருடத்திற்கு கண்டிப்பாக அனுமதி பெற்றுதருவோம் - தமிழிசை!# ஓட்டு கேட்க வரும்போது அடுத்த தேர்தல் ல போடறேன்பான் தமிழன்

============

10  கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் தவிர மற்றவர்களின் படங்கள் போஸ்டர், பேனர்களில் இடம்பெறக் கூடாது.'- மு.க  # மற்றவர்களுக்கு இதயத்தில் இடமா?


===================

11 சரத்குமார் மீது குற்றப்பிரிவு போலீசில் புகார் - நடிகர் சங்கம் முடிவு #  ச”ரத்(தா)குமா”?ர் விஷால் வீட்டுக்குள்ளேயே பிரச்சனையை பேசி முடிங்க


===============


12 ஜெ வால் ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.60,000 கடன் சுமத்தப்பட்டிருக்கிறது -ராமதாஸ் # கலைஞர் ஆட்சில 40,000 தானே இருந்துது,முன்னேற்றம்தானே?


================


13 நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்-களை திறக்கிறது தபால்துறை # நீங்களாவது வருடாந்திர சர்வீஸ் சார்ஜ் தாளிக்காம இருந்தா தேவலை================14 வதந்திகளை நம்ப வேண்டாம், நான் பீட்டாவின் விளம்பர தூதர் அல்ல- நடிகர் தனுஷ் # ஆதார டேட்டா வாட்சப்பில் வலம் வருதே?==============
15 பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அரசு #,வாக்குப்பிச்சை ,காதல் பிச்சை விதிவிலக்கு?==============
16 ஜல்லிக்கட்டு பிரச்சனையில் பாஜக இரட்டை வேடம் போடவில்லை-கருணாநிதி # இப்போ இவர்தான் இரட்டை வேடம் போடறார், நம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்=================

17 டெல்லி பூங்காவில் பயங்கரம் கள்ளக்காதலியைச் சுட்டுக் கொன்று தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ # கன்ல புல்லட் லோடு பண்ணும்போதே 1 தான் போட்டிருப்பாரோ?

===============


18 வசூல் ராஜா'வாக மாறியது 'ரஜினி முருகன்'.. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா! # தனுஷ் சிம்பு வை எல்லாம் தாண்டிட்டராமே?அடுத்த விஜய்!

============

19 சிரிப்பாய் சிரிக்கும் அதிமுகவின் விளம்பரக் கலாச்சாரத்தோடு எந்த கட்சியாலும் போட்டியிட முடியாது: திமுக # அதுல நெ 1 அதிமுக.நெ 2,திமுக

===============

20 மனசாட்சி இல்லாத ஜெயலலிதாவுக்கு மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும்: ராமதாஸ் # மனசாட்சி இல்லாத அரசாட்சி

===============

0 comments: