Sunday, March 31, 2024

ART OF LOVE (2024 ) - ( ROMANTIK HIRSIZ)- துருக்கி - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா + ஹெய்ஸ்ட் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


 நெட் ஃபிளிக்சில்  ரிலீஸ்   ஆன  மணி ஹெய்ஸ்ட்  வெப் சீரிசில்  நாயகி  போலீஸ்  ஆஃபீசர் , நாயகன்  திருடன்  அல்லது  கொள்ளைக்காரன் . இவரைப்பிடிக்க  அவர்  முயல்கையில்  இருவருக்கும்  காதல் . இந்த  ஃபார்முலா  பிரமாதமாக  ஒர்க்  அவுட்  ஆனதால்  அதே  ஃபார்முலாவில்  ரொமாண்டிக்  டிராமாவா? ஹெய்ஸ்ட் த்ரில்லரா?அல்லது இரண்டுமேவா?என  கணிக்க  இயலாத  ஒரு  கமர்ஷியல்  மசாலாப்படத்தை  எடுத்திருக்கிறார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி  ஒரு  இண்ட்டர்போல்  போலீஸ்  அஃபீசர். ஒரு  ஆர்ட்   கேலரி . அங்கே  வைக்கப்பட்டிருக்கும்  விலை  மதிப்பு  மிக்க  ஓவியம்  ஒன்றை ஒரு  கொள்ளைக்காரன்  திருட  இருக்கிறான் என்ற  தகவல்  கிடைத்ததும்  அவனைப்பிடிக்க  நாயகி  அங்கே   விரைகிறார். திருடன்  திருடி  தப்பிக்க  முயல்கையில்  நாயகி  கன்  பாயிண்ட்டில்  திருடனைப்பார்க்கும்போது  அதிர்ச்சி  அடைகிறார். திருடன்  நாயகியின்  முன்னாள்  காதலன். 



நாயகி  அதிர்ச்சி  ஆகி  நின்ற  ஒரு  கணத்தில்  திருடன்  தப்பி  விடுகிறான்.  நாயகி  கூட  வேலை  செய்யும்  சக  ஆஃபீசர்  இந்தக்கேசில்  நீ  ஜாக்கிரதையாக  இருக்க  வேண்டும்.  திருடனைப்பிடிக்கிறேன்  என்    அவன்  வலையில்  நீ  விழுந்து  விடக்கூடாது  என்கிறான்

  


 நாயகி  அதைக்காதில்  போட்டுக்கொள்ளவில்லை . திருடன்  கண்ணில் படுவது  போல  ஒரு  இடத்தில்  உலா  போகிறார். திருடன்  அவரை  அடையாளம்  கண்டு  கொண்டு  அழைக்கிறார். இருவரும்  சந்திக்கிறார்கள் , பேசுகிறார்கள் . 


திருடன்  தான்  நாயகன் .இப்போது  நாயகன்  நாயகியிடம்  லவ்  பிரபோஸ்  செய்கிறான். நாயகி  அதற்கு  எஸ் , அல்லது  நோ  எதுவும்  சொல்லவில்லை , அவரது நோக்கம்  நாயகன்  திருடும்போது  கையும்  , களவுமாகப்பிடிக்க  வெண்டும்  என்பதே


 நாயகி  நினைத்தபடி  நாயகனைப்பிடிக்க  முடிந்ததா? அவரையும்  மீறிக் காதலில் விழுந்தாரா? நாயகனுக்கு  நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  என்பது  தெரியாதா?   இதற்குப்பின்  என்ன  நட்ந்தது  ? என்பது  தான்  மீதி  திரைக்கதை


 நாயகி  ஆக எஸ்ரா பிரமாதமாக  நடித்துள்ளார் . இவருக்கு  இந்திய  முகம் ,குறிப்பாக  ஒரு  ஹிந்தி  நடிகை  போலவே  முகச்சாயல்  உள்ளது .   ரொமாண்டிக்  சீனில்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகும்போதும்  சரி ,  ஆக்சன்  சீக்வன்சில் , சேசிங்  சீனில்  இறங்கி  அதிரடி  காட்டும்போதும்  சரி  அப்ளாஸ்  அள்ளுகிறார் 


 நாயகன்  ஆக  பெர்கின்  சோகுள்ளு  அதிக  ஆர்ப்பாட்டம்  செய்யாமல்  அமைதியாக  வந்து  அசத்தி  உள்ளார் .


நாயகியின்  கொலீக்  ஆக பத்துவான்  பர்லாக்  நடித்துள்ளார். லேசான  பொறாமை  கலந்த  ஈடுபாட்டு  உணர்வை  நன்கு  வெளிப்படுத்தி உள்ளார் 


இதன்  திரைக்கதை  ஆசிரியர்  பெலின் கரமேமேட்டேக்லு ஏற்கனவே   த  கிஃப்ட் (2020)  , லவ்  டேக்டிஸ் (2023)  ஆகிய  படங்களூக்கு  திரைக்கதை  எழுதியவர்  தான்.கமர்ஷியலாக  திரைக்கதை  அமைப்பதில் வல்லவர் 


மை  நேம்  ஈஸ் ஃபாரா  ( 2023)  , லவ்  டேக்டிஸ் 2  (2023)   ஆகிய  இரு  படங்களை  இயக்கிய ரெக்காய்  காரகோஸ்  சிறப்பாக  இப்படத்தை  இயக்கி  உள்ளார் 


100  நிமிடங்கள்  ஓடுமாறு  எடிட்டர்  படத்தை  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்


1    நாயகன்  எப்படி  அந்த  ஓவியத்தைத்திருடி  எடுத்துச்செல்லப்போகிறான்  என்ற  எதிர்பார்ப்பை  உருவாக்கி  அதை சரியாகக்காட்சிப்படுத்திய  விதம் 


2  இஸ்தான்ஃபுல்லில்  படமாக்கப்பட்ட  காட்சிகள் , கட்டிட  அமைப்புகள் , சேசிங்  காட்சிகள்  அனைத்தும்  அருமை 


3   வாய்ஸ்  கேட்டால்  மட்டுமே  ஓப்பன்  ஆகக்கூடிய  , முகத்தைக்காட்டினால் மட்டுமே  ஓப்பன்  ஆகக்கூடிய  லாக்கரை  நாயகன்  எப்படி  ஆர்ட்டிஃபிசியல்  இண்ட்டலிஜென்ஸ்  மூலமாக  அசால்ட்  ஆக  லாக்கரைத்திறக்கிறான்  என்பதைக்காட்சிப்படுத்திய  விதம் அசத்தல் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  போலீஸ்  ஆஃபீசர்  ஆன  நாயகி  எப்போதும்  நாயகன்  கூட  இருப்பதில்லை , அடிக்கடி  ஆஃபீஸ்  போகிறார். கொலீக்சை  சந்திக்கிறார். கோடீஸ்வரன்  ஆன  நாயகன்  இதை  எல்லாம்  மிகச்சுலபமாகக்கண்டு  பிடிப்பார்  என்பது  நாயகிக்குத்தெரியாதா? 


2  நாயகன் -  நாயகி  இருவரும்  கணவன்  மனைவி  போல  ஆகி  விடுகின்றனர் . ஆனால்  ஹோட்டலில்  தனித்தனி  ரூம் எடுத்துத்தங்குகிறார்கள் . நாயகியின்  ஐடி  தெரியாமல்  இருக்க  இந்த  ஏற்பாடு , சரி , ஆனால்  நாயகனுக்குத்தன்  மேல்  சந்தேகம்  வரும்  என்பது  நாயகியால்  யூகிக்க  முடியவில்லையே? 


3  ரகசிய  அறையின்  கதவைத்திறக்கும்போது  நாயகன் - நாயகி இருவரையும்  அந்தப்பக்கமாகத்திரும்பச்சொல்லி  கோட்  வோர்டு  போட்டு  கதவைத்திறக்கும்  வில்லன்  அவ்ளோ  சிரமப்பட்டு  எதற்காக  அவர்களுக்கு  அதைக்காட்ட  வேண்டும் ? அவன்  பாட்டுக்கு  சிவனேன்னு இருக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+  காட்சிகள்  உண்டு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போர்  அடிக்காமல்  ஓடும்  டைம்  பாஸ்  கேட்டகிரி  படம்  . ரேட்டிங்  2.5 / 5 

Saturday, March 30, 2024

தொரட்டி (2019) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ யூ ட்யூப் , ஜீ 5

    


      பல  திரைப்பட விழாக்களில்கலந்து  கொண்டு  பல  விருதுகளை  வென்ற  படம்  இது .ஆனால்  ரிலீஸ்  டைமில்  தியேட்டர்களிலே   ஏதோ  பிரச்சனை  காரணமாக  குறைவான  தியேட்டர்களில்  மட்டுமே  ரிலீஸ்  ஆகி  அதிக  மக்களைப்போய்  சேரவில்லை .அப்படி  சேர்ந்திருந்தால் பருத்தி  வீரன் , சுப்ரமணியபுரம்  போல  கவனிக்கத்தக்க  மெகா  ஹிட்  படமாக  ஆகி  இருக்கும்  என  பல  மீடியாக்களில்விமர்சனம்  வந்திருந்தன. இப்போது  ஜீ  ஃபைவ்  ஓடிடி  தளத்தில் , யூ  ட்யூபில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


1980 களில்  ராமநாதபுரம்  மாவட்டத்தில்  நடந்த  உண்மை  சம்பவம்  இது   அந்தக்காலத்தில் ஒரு  அறுவடை   முடிந்த  பின்  அடுத்த  விவசாயத்துக்கு  தயார்  ஆகும்  முன்னே  நிலத்தை  ரெடி  பண்ண  ஆட்டு  மந்தையை  அந்த  நிலத்தில்  உலவ  விட்டு  ஆட்டுப்புழுக்கைகளைப்போட  வைத்து  அதையே  உரமாக்குவார்கள். அந்த  வேலையை  ஊர்  ஊராகச்சென்று  செய்து  வரும்  ஆட்டு  மந்தை  வைத்திருக்கும்  நபர்  தான்  நாயகனின்  அப்பா 


ஒரு  கிராமத்துல  அது  போல  உரம்  போட்டு  முடித்த  பின்  அதற்கான  கூலியைப்பெறும்போது  அந்த  நில  சொந்தக்காரர்  ஏமாற்றி  விடுகிறார்.இதனால் கோபம்  அடைந்து  அந்த  நிலம்  மலடாகப்போகட்டும்  என  சாபம் இட்டு  சில  உள்ளடி  வேலைகளை  செய்கிறார். அப்போது  அவனிடம்  மாட்டி  கை  கால் கள்  கட்டப்பட்டு  உயிருக்கு  ஆபத்தான  நிலையில்  நாயகனும், அவன்  அப்பாவும்  இருக்கிறார்கள் . 


 அப்போது  அங்கே  திருட  வந்த  மூவர்  இவர்களை  விடுதலை  செய்ய  நாயகன்  அந்த  திருடர்களுக்கு  நன்றிக்கடன் பட்டவன்  ஆகிறான். அவர்களுடன்  நட்பு  வளர்க்கிறான்


 அந்த  மூன்று  திருடர்களும்  நாயகனுக்கு  குடிப்பழக்கத்தைக்கற்றுத்தந்து  ஆளைக்கெடுத்து  விடுகிறார்கள்  


நாயகனுக்கு  அவனது  முறைப்பெண்ணையே  கட்டி  வைக்கிறார்  அப்பா. அந்த  மூன்று  திருடர்கள்  ஒரு  திருமண  வீட்டில்  தாலி  உட்பட  நகைகளைக்கொள்ளை  அடித்து  நாயகி  காவல்  காக்கும்  ஆட்டு  மந்தை  இருக்கும்  இடத்தில்  ஒளிந்திருக்கும்போது   நாயகி  திருடர்களைக்காட்டிக்கொடுத்து  விடுகிறாள் 


 திருடர்கள் ஜெயிலுக்குப்போகிறார்கள் . வெளியே  வந்ததும்  நாயகியைப்பழி  வாங்க  வில்லன்கள்  நினைக்கிறார்கள் . இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  நடித்து   தயாரிப்பாளர்  ஆக  பணமும்  போட்டிருக்கிறார்  சாமன்  மித்ரு. கச்சிதமான  நடிப்பு . புதிய  பாதை  பார்த்திபன்  மாதிரி  கேரக்டர்  ஆனால்  காமெடி , கிண்டல்  எல்லாம்  இல்லாத  சீரியஸ்  ரோல் . கச்சிதமாக  செய்திருக்கிறார் 


 நாயகி  ஆக  சத்யகலா  , கலக்கி  இருக்கிறார்.  படத்தில் நடித்த  அனைவரையும்  ஓரம்  கட்டி  தன்  தோளில்  மொத்தப்படத்தையும்  தாங்கி  நிற்கிறார்


 நாயகனின்  அப்பாவாக ஸ்டண்ட்  கலைஞர்  அழகு  சிறப்பான  குணச்சித்திர  நடிப்பு 


 வில்லன்கள்  ஆக  வரும்  மூவரும்  புதுமுகங்கள்  போல . கச்சிதம் , குறிப்பாக  வாய்  பேச  முடியாத  மாற்றுத்திறனாளியாக  வருபவர்  நடிப்பு  கலக்கல்  ரகம் 


ராஜா  முகமது  எடிட்டிங்கில்  படம்  128  நிமிடங்கள்  ஓடுகிறது .முதல்  30  நிமிடங்கள்  கழிந்த  பின்  தான்  கதை  செல்லும்  திசையே  புரிபடுகிறது 


 வேத்  சங்கர் , ஜிதின் கே  ரோஷன்  ஆகிய  இருவரும்  தான்  இசை 


கிராமிய  இசையில்  மாறுபட்ட  பாடலக்ள்  சினேகன்  எழுத்தில்  மனம்  கவர்கின்றன. எட்டு  பாடல்களில் ஐந்து  பாடல்கள் அபாரம் 



குமார் ஸ்ரீதர்  ஒளிப்பதிவு  தரம் .கிராமிய  அழகை  படம்  பிடித்திருக்கிறார்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  பி  மாரிமுத்து .செயற்கையான  காட்சிகள்  எதுவும்  இன்றி  யதார்த்தமான  படமாகத்தந்திருக்கிறார்

சபாஷ்  டைரக்டர்


1 மாப்பிள்ளை ஓடிப்போயிட்டா  மாப்பிள்ளையோட  அம்மா  மணமகளுக்கு  தாலி  கட்டும் சம்பிரதாயம்   நாம் பார்க்காத  ஒன்று. அருமையான  கலாச்சாரத்தை  கவிதையாக  இயக்குநர்  பதிவு  செய்த  காட்சி 


2   கூடா  நட்பு  கேடாய்  முடியும்  என்பதுதான்  படத்தின்  ஒன் லைன்  , அதை  கவனமாகக்கையாண்டு  கதை  சொன்ன  விதம்  அருமை 


3   படம்  முழுக்க  வசனங்களிலும்  சரி , பாடல்  வரிகளிலும்  சரி  ஆட்டு  இடையர்கள்  வாழ்க்கையில்  உபயோகிக்கும்  வார்த்தைகள் , சொல்லாடல்கள்  என  பார்த்து  பார்த்து  செதுக்கிய  விதம்  


4    படத்தில்  பங்கு  பெற்ற  அனைத்து  நடிக  நடிகையர்கள்  நடிப்பும்  அருமை  என்றாலும்  நாயகி  சத்யகலாவின்  நடிப்பு  அட்டகாசம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1 குள்ள  நரிக்கூட்டத்துல 


2  ஏலே  ஏலே  ஏலே  எல்லாம்  உன்னாலே 


3  சவுக்காரம்  போட்டு 


4  உசுரை  உருக்கி  எலும்பை  நொறுக்கி  என்ன  செய்யுறே? 


5  ஆளில்லாக்காட்டுக்குள்ளே


  ரசித்த  வசனங்கள் 


1  எச்சில் கிளாஸ் கழுவறதுக்கு   எம் ஜி ஆர்  கெட்டப்பா ?


2  கை  கால்  ஊனமா  இருக்கறவனுக்குக்கூட  பொண்ணு  கொடுக்கலாம், ஆனா  குடிச்சுட்டு  வாழ்க்கையே  ஊனமா  இருக்கறவனுக்கு  எவன்  பொன்ணு  தருவான் ? 

3 பத்து  நாள்  கூத்துக்கு  சாமி  வேஷம்  போட  ஆள்  தேடல ,  ஆயுசுக்கும்  கும்பிடற  குலசாமியைத்தேடறேன்


4  வேண்டாதவங்க  சேர்க்கை  இப்படித்தான் , வேண்டுனது , விரும்புனது  எல்லாத்தையும்  இழக்க  வெச்சிடும் 


5 பத்து  விரலு  பாடுபட்டு  அஞ்சு  விரலு  பிசைஞ்சு  சாப்ட்டாதான்  சோறு  வயிற்றில் ஒட்டும்


6 எவளோ   எதுக்கோ கொழுப்பெடுத்து  அறுவாமனைல  ஏறுனாளாம் 


7  ஒரு  நல்ல ஆட்டுக்காரனுக்கு  அழகு  அவன்  உடலில் ஆட்டுக்கவுச்சி  வீசுவதுதான் 


8  விளக்கு  வைக்கும்  நேரம்  வந்தாலே  வீட்டு  நினைப்பு  வரனும்,அவன்  தான்  சம்சாரி 


9  எவ்ளோ  பசிச்சாலும்  கண்ட  இடத்துல  திங்கற  பழக்கம்  எனக்குக்கிடையாது 


10 தீ , தீ  என  சொல்லிட்டே  இருந்தா  இளப்பமாத்தான்  இருக்கும், ஒரு  வாட்டி  சுட்டுடனும்,  அப்போதான்  பயம்  இருக்கும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தான்  செல்லமாக  வளர்த்த  ஆட்டை  நாயகன் தன்  சகாக்கள்  மூவருக்கும்  படையல் போட  வலுவந்தமாக  அதை  வெட்டுவது  செயற்கை . அத்தனை  ஆடுகள்  இருக்கும்போது  அந்த  ஆட்டை  ஏன்  தேர்ந்தெடுக்கனும்? சும்மா  ஆடியன்ஸ்  இரக்கத்தை  சம்பாதிக்கவா? என்னதான்  ஒரு  குடிகாரன்  குடி  போதையில்  இருந்தாலும்  தன்  செல்ல  ஆட்டைக்கூடவா  அடையாளம்  தெரியாது ? 


2  நாயகியின்  பெற்றோர்  எதிர்ப்பை  மீறி  நாயகி  குடிகாரனான  நாயகனைக்கட்டிக்க  சம்மதிக்கிறாள். பெண்  பார்க்க  வரும்   நாயகன்  குடிபோதையில்  தாடி , மீசையுடன்  பஞ்சப்பரதேசி  மாதிரி  வருகிறான், அவனைப்பார்க்கும்போது  நமக்கே  வயிற்றைப்புரட்டுகிறது . பார்த்தாலே  வாமிட்  வர்ற  மாதிரி  கேவலமா  இருக்கும்  அந்தக்குடிகாரனை  எதுக்காக  நாயகி  கட்டிக்க  முன்  வருகிறாள் ? 

3  தங்களை  ஜெயிலுக்கு  அனுப்பிய அல்லது  சாட்சி  சொல்லிய  நாயகி  மேல்  வில்லன்கள்  மூவருக்கும்  கோபம்  இருப்பது  ஓகே , ஆனால்  விசாரணையின்போது   தங்களை  அடி  வெளுத்து  வாங்கிய  போலீஸ்  ஆஃபீசர்  மேல்  கொஞ்சம்  கூட  கோபமே  இருக்காதா?மெயின்  வில்லன்  கையையே  சிதைத்து  விட்ட  போலீஸ்  ஆஃபீசர்  மேல்  வஞ்சம்  இருக்காதா?


4  நாயகி  சாட்சி  சொல்லி  மாட்டி விட்ட  வில்லன்கள் மூவரையும்  அடையாளம்  தெரியாதா?அவர்கள்  ஜெயிலில்  இருந்து  திரும்பி  வந்தபோது  யார்  என்றே  தெரியாமல்  இருக்கிறாரே?நாயகி . முக  அடையாளம்  தெரியவில்லை என்றாலும்  மாட்டி விட்ட  மூவர் , இப்போ  வந்திருக்கும்  மூவர்  இந்த  ஒற்றுமை  கூடவா  தெரியாது ?


5  தன்  உயிரைக்காப்பாற்றிய  வில்லன்கள்  மூவர்  மீதும் நாயகன் பாசம்,  நட்பு கொள்வது  ஓக்கே , ஆனால்  அவர்கள்  மூவரும்  நாயகன்  மீது  எந்த  வித  பாண்டிங்கும் கொண்டிருப்பதாகத்தெரியவில்லை , அதை  நாயகன்  உணராதது  ஏனோ?


6  நம்மை  அவளுக்கு  அடையாளம்  தெரியலை , முகத்துல  துணி கட்டி  இருந்தோமில்ல  என்று  சாமார்த்தியமாக சமாளிஃபிகேசன்  வசனம்  வைத்திருக்கிறார்கள் .ஆனால்   அந்த  சம்பவம்  நடந்தபோது   தலை , கண் , நெற்றி  எல்லாம் ஓப்பனாகத்தானே  இருக்கு ? 

7 கடைவாய்  ரத்தம் ஒழுக  போலீஸ்  ஜீப்ல  என்  புருசனைப்பார்த்தப்போ  என்  ஈரக்குலையே  அப்டினு  நாயகி  ஒரு  டயலாக்  சொல்லுது .ஆனா  அப்டி  எல்லாம்  விஷூவலாக  நமக்குக்காட்டலை. போலீஸ்  அடிக்கக்கூட  இல்லை , சும்மா  தான்  ஜீப்ல  ஏத்திக்கூட்டிட்டுப்போறாங்க ( ஒரு  வேளை  எடிட்டிங்க்ல  கட்  ஆகி  இருக்கலாம் ) 


8  வில்லன்கள்  மூவரில்  ஒருவன் மனம்  மாறி  பிரிந்து  போகும்போது  அவனைக்கொலை  செய்வது ஏற்றுக்கொள்ளும்  விதமாகக்காட்சிப்படுத்தவில்லை . போலீஸ்   ரெக்கார்டில்  மூவரும்  கூட்டாளிகளாகத்தான்  பதிவு  இருக்கு. ஒருவன்  கொலை  செய்யப்பட்டது  தெரிந்தால்  மாட்டிக்கொள்வோம்  என்பது  தெரியாதா? அவனை  அப்படியே  போக  விட்டிருக்கலாம் 

9  நாயகியின்  கொலையை  நேரில்  பார்த்த  சிறுவனின்  சாட்சி  இருக்கும்போது , ஏற்கனவே  போலீஸ்  ரெக்கார்டில்  கிரிமினல்களாக  இருக்கும்  வில்லன்களை  சட்டத்தின்  பிடியில்  மாட்ட  வைப்பது  ஈசி , ஆனால்  சினிமாத்தனமாக  பழி  வாங்குவது  தேவை  இல்லாதது 


10  வில்லன்கள்  மூவரில்  இருவர்  சேர்ந்து  ஒருவரைக்கொலை  செய்தது  வேறு  யாருக்கும்  தெரியாது . நாயகன்  கச்சிதமாக  அந்த  மூன்றாவது  ஆள்  புதைக்கப்பட்ட  இடத்தைக்கண்டுபிடித்தது  எப்படி ? 


11 வில்லன்களில்  ஒருவன்  கை  விளங்காமல்  மாற்றுத்திறனாளியாக  இருப்பதும் , க்ளைமாக்சில் அவர்கள்  சாகும்போது  நமக்கு  அவர்கள்  மீது  பரிதாபம்  வருவது  போல  காட்சி  அமைத்ததும்    திரைக்கதையின்  பின்னடைவு .இதில்  எம்  ஜி ஆர்  ஃபார்முலா  தான்  சரி .,  வில்லனை  அடிக்கும்போது  தியேட்டரில்  விசில்  பறக்கும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  படம்  தான் . லிப் லாக்  காட்சி  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாம்  கவனிக்கத்தவறிய  ஒரு  நல்ல  படம் ,  கிராமியப்படங்களை  விரும்புவோர்  அவசிய ம்  காண  வேண்டிய  தரமான   படைப்பு  . ரேட்டிங்  3/ 5 


Thorati
Directed byP. Marimuthu
Produced byShaman Mithru
StarringShaman Mithru
Sathyakala
R Nandaa (Sundar Raj)
CinematographyKumar Sridhar
Edited byRaja Mohammad
Music byVed Shankar
Jithin K. Roshan
Production
company
Shaman Pictures
Distributed bySDC Picturez
Release date
  • 2 August 2019
Running time
128 minutes
CountryIndia
LanguageTamil


Friday, March 29, 2024

TO KILL A TIGER (2024) - ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( டாகுமெண்ட்ரி ட்ராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

     

    2024 ஆம்  ஆண்டு  ஆஸ்கார்  விருதுக்காக  பரிந்துரைக்கப்பட்டு  நூலிழையில்   விருதை  தவற  விட்ட  படம் . இது   டாகுமெண்ட்ரி  படம்  ஆக  இருந்தாலும்  2013  ஆம்  ஆண்டு  நடந்த  உண்மை  சம்பவம்  என்பதால்  பார்ப்பவர்  நெஞ்சை  பதை  பதைக்க  வைக்கும்  தன்மை  கொண்ட  படம்.இந்தப்படத்தை எடுக்க  9  வருடங்கள்  போராடியதாக  இயக்குநர் நிஷா  பஹூஜா  கூறூகிறார். கனடா  நாட்டு  நிறூவனத்துடன்  இணைந்து  நெட்  ஃபிளிக்ஸ்  தயாரிப்பாக  மார்ச்  10 , 2024  அண்று  முதல்  காணக்கிடைக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஜார்க்கெண்ட்  டில் உள்ள  ஒரு  கிராமம் , அங்கே  ரஞ்சித்  என்பவர்  தன்  மனைவி ,மகள் ,  மகனுடன்  வசித்து  வருகிறார்.அவர்    வீட்டுக்குப்பக்கத்து  வீட்டில் அன்று  கல்யாண  விசேஷம்,அதனால் எல்லோரும்  ஆட்டம்,பாட்டம் , கொண்டாட்டமாக  இருந்து  விட்டு  மிட்  நைட்  12  மணிக்கு தான்  வீட்டுக்கு  வருகிறார்கள் , ஆனால்  அப்போது  13  வயதான  அவரது  மகள்  மட்டும்  இன்னும்  வரவில்லை 

 சரி , அவள்  வயது சிறுமிகளோடு  விளையாடிக்கொண்டு  இருப்பார்  என  அசால்ட்டாக  விட்டு  விடுகிறார்  அப்பா,மிட்  நைட்  1  மணிக்குத்தான்  அந்த  சிறுமி  வருகிறார். வரும்போதே  தடுமாற்றத்துடன்  அழுது  கொண்டெ  தான்  வருகிறார். வந்ததும்  மயங்கி  விழுகிறார்


 பின்  விசாரித்த  பின்  தான்  தனது மகள்  மூன்று  நபர்களால்  பாலியல் வன்கொடுமைக்கு  ஆளாக்கப்பட்டிருக்கிறார்    என்பது  தெரிய  வருகிறது. இக்கொடுமையைச்செய்தவர்களை  சட்டத்தின்  பிடியில்  சிக்க  வைக்க  வேண்டும்  என  அப்பா  முடிவெடுக்கிறார்


 அடுத்த  நாள்  காலை விடிந்ததும்  கிராம  மக்கள்   ஒன்று  கூடிப்பேச  ஆரம்பிக்கிறார்கள் . யார்  உன்  பெண்ணைக்கெடுத்தார்களோ  அந்த  மூவரில்  ஒருவனை  கல்யாணம்  செய்து  கொள்ளச்சொல்லலாம்.  என்று  சொல்ல  அபா  மறுக்கிறார்.   குற்றவாளிகளுக்கு  தண்டனை  வாங்கித்தர  வேண்டும்  என்கிறார்.


கொடுமையைச்செய்த  மூன்று  நபர்களில்  ஒருவன்  இவர்கள்  தூரத்து  சொந்தக்காரன். அந்த  3  வாலிபர்களின்  பெற்றோர்களும்  தங்கள்  மகன்  செய்த  தப்பை  மறைக்க  அந்த  சிறுமி  மீது  குற்றப்பத்திரிக்கை  வாசிக்கிறார்கள் . இரவு  நேரத்தில்  பெண்ணுக்கு  அங்கே  என்ன    வேலை ?  அவள்  மேலும்  தப்பு  இருக்கு  என்கிறார்கள் 


 இந்த  ஊர்ப்பிரச்சனையை  ஊருக்குள்ளேயே  பேசி  முடிவெடுப்போம், போலீஸ்  , கோர்ட்  என்று  போக  வேண்டாம்  என்கின்றனர் .ஆனால்  அப்பாவும், மகளும்  தங்கள்  முடிவில்  கடைசி  வரை  உறுதியாக  இருக்கிறார்கள் 


இதற்குப்பின்  நடந்த  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


இது இந்தியாவையே  உலுக்கி  எடுத்த  ஒரு உண்மை  சம்பவ வழக்கு .குற்றவாளிகள்  மூவருக்கும்  தலா  25  ஆண்டுகள் சிறைதண்டனை  வ்ழங்கி  தீர்ப்பு  வந்தது .மேல் முறையீடு  செய்திருக்கிறார்கள் 


 இந்த  டாக்குமெண்ட்டிரியில் பாதிக்கப்பட்ட சிறுமி   மற்றும்  அவர்  குடும்பத்தினரே  பேட்டி கொடுத்திருக்கிறார்கள் . அந்த  ஊர்  மக்களே  நடித்திருக்கிறார்கள் . கோர்ட்டுக்கு  உள்ளே  நடந்தது  மட்டும்  காட்டப்படவில்லை   


சபாஷ்  டைரக்டர்


1  ஒரு  அப்பா  தன்  மகளூக்கு  நடந்த  சம்பவத்தை  பேப்பரில்  எழுகிக்கொடுத்து  மனப்பாடம்  செய்யச்சொல்லி  இதை  அப்படியே  சத்தமாக  கோர்ட்டில்  சொல்ல  வேண்டும்  என  சொல்லிக்கொடுக்கும்  காட்சி  காண்போர்  மனதை  என்னமோ  செய்யும்  காட்சி 


2  சம்பவம்  நடந்த  அடுத்த  நாள்  ஊர்  மக்கள்  எல்லோரும்  சிறுமியின்  குடும்பத்தைத்தான்  டார்கெட்  பண்ணி  அவதூறு  பேசுகிறார்களே  தவிர  குற்றவாளிகளுக்கு  எதிராக  எதுவும்  சொல்லாத  அவலத்தை  காட்சிப்படுத்திய  விதம் 


3  பலரது  கொலை  மிரட்டலுக்கு  ஆளான  பின்னும்,   அப்பாவும்  மகளூம்  தங்கள்  முடிவில்  உறுதியாக  இருப்பதைக்காட்டிய  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   ஒரு  கிரிமினல்  கேஸ்ல  பஞ்சாயத்துத்தலைவர்  முடிவு  எடுக்க  முடியாது 


2  எல்லாப்பிரச்சனைகளையும்  உங்க  வீட்லயே  , உங்க  ஊர்லயே  சரி  பண்ணிட  முடியாது 


3   போராட்டம்  இல்லாம  நீதியை  அடைய  முடியாது 


4 கறை  என்பது   பாதுக்கப்பட்ட  பெண்  மீது  படியலை ,   தப்பு  செஞ்ச  ஆண்கள்  மீது தான்  படிஞ்சிருக்கு , அவங்க  தான்  வெட்கப்படனும் 


5  இந்தியாவில்  மகள்களுக்கு  ஆதரவாக  இருக்கும்  அப்பாக்கள்  குறைவு 


6   எங்க  வீட்டில்  நடந்த  கொடுமைகளால்  இனி  அக்கம்  பக்கம்  இது  போலக்கொடுமைகள்  நடக்காது  என்பது ஒரு  வகையில்  திருப்தி .  அது  என்  மகள்  செய்த  தியாகம் . தியாகத்தை  விடப்பெரியது  இந்த  உலகில்  எதுவும்  இல்லை 


7  நேர்மையான  உள்ளத்துடன்  நாம்  செய்யும்  எதுவும்   எந்தக்காரியமும்  வெற்றியே  பெறும் 


8  புலியை  வேட்டையாட  அல்லது  கொல்ல ஒரு  தனி நப்ரால் முடியாது என  சொல்கிறார்கள் . நான்  காட்றேன், எப்படி  வேட்டையாடுவது  என


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பாதிக்கப்பட்ட  சிறுமி  கோர்ட்டுக்கு  வாக்கு  மூலம்  கொடுக்கப்போகும்போது  மட்டும்  லிப்ஸ்டிக்  போட்டு  ஸ்லீவ்லெஸ்  சுடி தார்  உடன்  செல்வது  எதுக்கு ? ரெகுலராகவே  அப்படி  உடை உடுத்துபவராகக்காட்டி  இருந்தால் ஓக்கே .அந்த  ஒரு  சீனில்  மட்டும் அப்படிக்காட்டுவது  ஏன்?


2   பாதிக்கபப்ட்ட  சிறுமியின்  புகைப்படமோ , பெயரோ  வெளி வரக்கூடாது  என  சட்டம்  சொல்கிறது . இவங்க  ஒரு  படத்தையே  எடுத்து  வெச்சிருக்காங்க. எப்படி ? குற்றவாளிகள்  முகத்தைகக்டைசி  வரை  க்ளோசப்பில்  காட்டவே  இல்லை 


3  படம்  முழுக்க  அந்த  சிறுமியின்  அப்பாவின்  பார்வையிலேயே  சொல்லப்படுகிறது  , ஓக்கே , ஆனால்  தீர்ப்பு  வந்த  பின்னாவது  குற்றவாளிகள்  கருத்தை காட்டி  இருக்க  வேண்டாமா? அல்லது  அவர்களது  பெற்றோர்  மூவரையும்  காட்ட  வேண்டாமா? பாதிக்கப்பட்ட  பெற்றோரை  மட்டும்  காட்டலாமா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ , சம்பவங்கள்  வார்த்தைகளால்  சொல்லப்படுவதோடு சரி , விஷூவலாக  எதுவும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பெண்  குழந்தைகளைப்பெற்றவர்களூக்கு  ஒரு  விழிப்புணர்வுப்பட,மாக  இருக்கும். மற்றவர்களுக்கு  இது  போர்  அடிக்கும்  படமாக  இருக்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 

Thursday, March 28, 2024

ரெய்டு (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் டப்பா ட்ராமா ) @ அமேசான் பிரைம் + ஆஹா தமிழ்

     


   ரஜினி  நம்ம  ஊர்ல  சூப்பர்  ஸ்டார்  தான், அதுக்காக அவர்  நடிச்ச குப்பைப்படமான  நாட்டுக்கு  ஒரு  நல்லவன்  படத்தை  வேறு  மொழியில்  ஒரு  சாதா  நடிகர்  ரீமேக்  செஞ்சா  எவ்ளோ  கடுப்பாகும்  நமக்கு ? அந்த  மாதிரி தான் 2018ம்  ஆண்டு  கன்னட  சூப்பர்  ஸ்டார்  ஆன   சிவராஜ்  குமார்  நடிப்பில்  வெளியான  டகரு  படத்தின்  அஃபிஷியல்  ரீமேக். இந்தக்கேவலமான  கதைக்கு  ஏன்  ரீமேக்  உரிமை  எல்லாம்  வாங்கனும், ஏற்கனவே  பல  படங்களில்  வந்த  கதைதானே? 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு   போலீஸ்  ஆஃபீசர்.என்கவுண்ட்டர்  ஸ்பெஷலிஸ்ட் , அவர்  இஷ்டத்துக்கு  ரவுடிகளைப்போட்டுத்தள்ளுபவர் , அவருக்கு  மேரேஜ்  நடக்க்  இருக்கு . அவருக்குப்பார்த்த  பெண்ணை  வில்லன்கள்   கொன்று  விட  அவர்களை  நாயகன்  பழி  வாங்குவதாக  நினைத்து  ஆடியன்சான   நம்மைப்பழி  வாங்குவதுதான்  படத்தின்  கதை 


நாயகன்  ஆக  விக்ரம்  பிரபு . டாணாக்காரன்  படத்தில்  எந்த  அளவு  உண்மைக்கு  நெருக்கமான  ஒரு  கேரக்டரில்   நடித்தாரோ  அதற்கு  நேர்மாறாக  நம்ப  முடியாத  காட்சிகளுடன்  ஒரு  படம்  தந்திருக்கிறார்


 நாயகி  ஆக  அவருக்கு  ஜோடியாக  ஸ்ரீ  திவ்யா. ஒரு  சில  காட்சிகள்  தான். அவர்  எஸ்  ஆகி  விடுகிறார். நாம்  தான் கடைசி  வரை  மாட்டிக்கொள்கிறோம்


 நாயகியின்  தங்கை  ஆக அனந்தியா  சனில்குமார்  படம்  பூரா  சரக்கு  அடிக்கிறார் , தம்  அடிக்கிறார்.பாரதி கண்ட  புதுமைப்பெண்  போல . போதாததற்கு  அவர்  கஞ்சா  கேசாம்.  வசனமாக  வருது . 


போலீஸ்  கான்ஸ்டபிள் ஆக  ஜார்ஜ்  மரியம்  அதிக  காட்சிகள்  இல்லை . வில்லன்கள்  ஆக   வேலு  பிரபாகரன் ,   செல்வா  , ரிஷி  ரித்விக் ,  டேனியல்  அன்னி  போப் என  ஏகப்பட்ட  பேர்  வருகிறார்கள் , அடி  வாங்குகிறார்கள் 


சாம்  சி எஸ்  இசையில்  மூன்று  கேவலமான  பாடல்கள்  . குறிப்பாக  ஹீரோ  இண்ட்ரோ சாங்க்  மகா  மொக்கை . பிஜிஎம்மும்  சுமார்தான் 


மணி  மாறன்  எடிட்டிங்கில் 122  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது. வந்த  சீன்களே  மீண்டும்  மீண்டும்  வருது . கேட்டா  ஃபிளாஸ்பேக் காம் , நான்  லீனியர்  கட்டாம் கஷ்டம்டா  சாமி 


கதிரவனின்  ஒளிப்பதிவில்  ஸ்ரீதிவ்யா  க்ளோசப்  சீன்  மட்டும்  தேவலை 


இந்த  மாபெரும்  குப்பைப்படத்துக்கு  திரைக்கதை  எழுத  உதவி  இருக்கிறார்  இயக்குநர்  முத்தையா .படத்தை   இயக்கி  நம்மைப்பாடாய் படுத்தி  இருப்பவர்  கார்த்தி 


சபாஷ்  டைரக்டர்  (  கார்த்தி )


 1  இந்த  மாதிரி  குப்பைப்படத்தை  எடுக்க  ஒரு  தைரியம்  வேண்டும் 


2  ஓப்பனிங்  ஹீரோ  இண்ட்ரோ  சாங்கில் என்  கிட்டே  மாட்டாத , காணாம  போயிடுவே  என  குறியீடு  மூலம்  ஆடியன்சை  எச்சரித்த  சாமார்த்தியம்


3  போஸ்டர்  டிசைனில்  ஹீரோ  தலையில்  முக்காடு  போட்டு  குறியீடாக  தயாரிப்பாளர்  நிலைமையை  உணர்த்தியது 


  ரசித்த  கேவலமான  வசனங்கள்  (இயக்குநர்  முத்தையா) 


1 ஆம்பளைன்னா  ரத்தம்  இருக்கனும், அது  சுத்தமா  இருக்கனும்  (  ஏன்  பொம்பளைன்னா  ரத்தம்  இருக்காதா?  என்ன  டயலாக்  இது ? )


2   நான்  சும்மா  வந்தா  விருந்தாளி, ஆனா  உன்னைப்பார்க்க வந்தா  நீ  காலி  

( படம்  பார்க்க  வந்த  நாங்க  தான்  காலி ) 


3   ஆண்டவன்  வேணா  உன்  தலைஎழுத்தை  பென்  ல  எழுதி  இருக்கலாம், ஆனா  நான்  என்  கன்  ல  எழுதறேன் 


4    எல்லோரும்  சொந்தக்காலில்  நிற்கறாங்க , நீ  ஃபோன்  காலில்  நிற்கறே


5   என்  கண் ல  இருந்து  யாரும்  தப்பிச்சது  இல்லை , என்  கன்  ல  இருந்து  யாரும்  தப்பிச்சது  இல்லை 


6   பிரியாணி  நல்லா  இருந்தா  அம்மா  ஞாபகம்  வரும்,  பிரியாணி  நல்லாலைன்னா  அதை  செஞ்சவன்  அம்மா  ஞாபகம்  வரும்   


7  பர்மணண்ட்டா  சமையல்  பண்ண  ஆள்  பார்க்கறேன் 


 ஓ , பொண்ணு  பார்க்கறீங்களா? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஓப்பனிங்  சீனில் நாயகன்  ஒரு  பெண்ணைக்  கை  காலைக்கட்டி  ஜீப்பில்  அடைத்துக்கொண்டு  போறார். அந்தப்பெண்ணுக்கு  மானம் , ரோஷம்  இருந்தா  கோபப்படனும், அந்த  பேக்கு   கற்பனை  ல  டூயட்  பாடுது 


2  வில்லன்கள்  பேர்  எல்லாம்  கரப்பான்  பூச்சி ,  பல்லி ,  பக்கோடா .என்ன  கண்றாவி  கற்பனை  இது ? 


3   நட்ட  நடு  ரோட்டில்  வில்லன்கள்  நாயகனையும்  நாயகியையும்  துப்பாக்கியால்  சுடுகிறார்கள்  அதுவும்  நெஞ்சில், மார்பில்,  நாயகன்  மட்டும்  தப்பித்து  விடுகிறார் , எப்படி ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - இந்தப்படத்தில்  கண்ட்டெண்ட்டே  இல்லை  என்பதுதான்  வார்னிங் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இந்தக்கேவலமான  குப்பையை  டி வி  ல  போட்டாக்கூட  பார்த்துடாதீங்க , எச்சரிக்கை . ரேட்டிங்  மைன்ஸ்   1 / 5 



ரெய்டு
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்கார்த்தி
மூலம் திரைக்கதைமுத்தையா
கார்த்தி
அடிப்படையில்
துனியா சூரியின் தகரு
உற்பத்திஎஸ்.கே.கனிஷ்க்
ஜி.மணிகண்ணன்
நடிக்கிறார்கள்விக்ரம் பிரபு
ஸ்ரீ திவ்யா
ஒளிப்பதிவுகதிரவன்
திருத்தியவர்மணிமாறன்
இசைசாம் சிஎஸ்
உற்பத்தி
நிறுவனங்கள்
எம் ஸ்டுடியோஸ்
ஓபன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
ஜி பிக்சர்ஸ்
வெளிவரும் தேதி
10 நவம்பர் 2023
நேரம் இயங்கும்
122 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Wednesday, March 27, 2024

BLACK ROSE (2023) - வியட்நாம் மூவி - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

 


     இந்தப்படம்  பற்றிய  விபரங்களை  அறியலாம்  என  கூகுளில்  சர்ச்  செய்தால்  வெவ்வேறு  கால கட்டங்களில்  ,வெவ்வேறு  மொழிகளில் ,வெவ்வேறு  கதை  அமைப்பில் இதே  டைட்டிலில்  13  படங்கள் வந்துள்ளன.இது  போக  எழுத்தாளர்  இந்துமதியின்   கதை , வசனத்தில் உருவான  கறுப்பு  ரோஜா  என்ற  தமிழ்ப்படம்  வேற  இருக்கு . நெட்  ஃபிளிக்ஸ்  என்பதால்  இது  ஒரு  எரோட்டிக்  த்ரில்லர்  ஆக  இருக்குமோ  என்ற  சந்தேகத்துடன்  தான் படம்  பார்த்தேன், ஆனால் தமிழ்ப்படம்  போல ஒரு  சின்னக்கதையை  நீட்டி முழக்கி  ஜவ்வாக  இழுத்து  சொல்லி  இருந்தாலும்  சுவராஸ்யமாகவே  திரைக்கதை  அமைத்திருக்கிறார்கள் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  பணக்கார  வீட்டில்  பணிப்பெண்ணாக சேர்கிறார்.  வில்லன் - வில்லி  இருவரும்  தம்பதியினர்.அவர்களுக்கு  ஒரு  கைக்குழந்தை  இருக்கிறது . சமையல்  வேலை  மற்றும்  குழந்தையைப்பராமரிப்பது  நாயகியின்  பணி . இந்தக்குடும்பத்தை  நிர்மூலமாக்குவதுதான்  என்  குறிக்கோள் என  நாயகி  ஓப்பனிங்கிலேயே  சொல்லி  விடுவதால்  ஏதோ   திட்டத்துடன் தான்  இங்கே  வந்திருக்கிறார்  என்பது  நமக்குத்தெரிந்து  விடுகிறது  


படத்தின்  பின்  பாதியில்  சொல்லப்படும்  அந்த  ஃபிளாஸ்பேக்கை  இப்போதே  நாம்  பார்த்து  விடுவோம்.அப்போதான்  கதை  புரியும் ‘’


  நாயகியின்  தம்பியும், வில்லியும்  இணைந்து  ஒரு  ரெஸ்டாரண்ட்  நடத்தி  வருகிறார்கள் . இருவரும்  காதலர்கள் .வில்லிக்கு    இவனை  விடப்பெரிய  இடமாக   வசதியான வில்லன்  கிடைத்ததும்  நைசாக  அவனைக்கழட்டி  விட்டு  விடுகிறாள் . . நாயகியின்  தம்பி  யின்  ரெஸ்ட்டாரண்ட்  தீ  விபத்தில்  மாட்டிக்கொள்கிறது.அவனும்  மாட்டிக்கொள்கிறான்.ஒரு  பக்க  முகமே  கருகி  விடுகிறது 


 தம்பியின்  இந்த  நிலைமைக்கு  வில்லி  தான்  காரணம்  என  நாயகி   நினைக்கிறார்.,தன்  ரூட்டில்  குறுக்கே  வராமல்  இருக்க வில்லி  தன்  தம்பியை  ரூட்  க்ளியர்  பண்ணி  இருப்பாள் என  நினைக்கிறாள் .அதனால்  பழி  வாங்க  வில்லியின்  குடும்பத்தை  கெடுக்க  இங்கே  வந்திருக்கிறாள்


வில்லனின்  பிஸ்னெஸ்  பார்ட்னரும், நண்பரும்  ஆன  ஒருவன்  அடிக்கடி  வில்லன்  வீட்டுக்கு  பணி  நிமித்தம்  வருகிறான் . அவனுக்கு  நாயகியின்  அழகு  கவர்கிறது . நாயகியைப்பற்றிய  கமெண்ட்டை  நாயகியின்  அங்க  அழகு  பற்றிய  வர்ணனையை  அவன்  வில்லனிடம்  அடிக்கடி  சொல்கிறான் 


இதனால்  வில்லனுக்கு  நாயகி  மீது  ஆர்வம்  வருகிறது . வில்லனுக்கும்  , நாயகிக்கும்  கள்ளக்காதல்  உருவாகிறது . அதாவது  நாயகி  தன்  வலையில் வில்லனை  வீழ்த்துகிறாள் . 


ஒரு  கட்டத்தில்     வில்லிக்கு  வில்லன் -  நாயகி  காதல்  தெரிய  வர  அவள்  பொங்கி  விடுகிறாள் .  குடும்பத்தில்  சண்டை 


ஆக்சுவலாக  வில்லி  நாயகியின்  தம்பியை  ஏமாற்றிய  துரோகம்  மட்டும் தான்  செய்கிறாள் .   வில்லியை  அடைய  வில்லன்  தான்  திட்டம்  போட்டு  அந்த  தீ  விபத்தை  ஏற்படுத்துகிறான்.


இது  நாயகிக்கு  தெரியாது .  இதற்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  சம்பவங்கள்   


இந்த  சாதாரண  பழி  வாங்கும்  கதையை  குடும்பப்பின்னணியில்  சொல்ல  இயக்குநர்  ரொம்பவே  சிரமப்பட்டிருக்கிறார். வில்லனின்  அப்பா  பெரிய  தொழில்  அதிபர். அவர்  கம்பெனிக்கு  அடுத்த  சேர்மேன்  யார்? வில்லனா?வில்லனின்  தங்கையா?  என்ற  போட்டி   என  கிளைக்கதை  வேறு  எக்ஸ்ட்ரா  ஃபிட்டிங்க்  ஆக  இருக்கிறது


வில்லன் , வில்லி  இருவரும்  பர்சனாலிட்டி  ஆக  இருக்கிறார்கள் . வில்லனை  தன்  அழகால்  வீழ்த்தும்  அளவுக்கு  நாயகி  அவ்ளோ  அழகெல்லாம்  இல்லை . ஆனால்  கிளி  மாதிரி  சம்சாரம்  இருந்தாலும்  குரங்கு  மாதிரி  வைப்பாட்டி  வைத்துக்கொள்வது  ஆணின்  வழக்கம்  என்ற  பழமொழி  இந்த  அழகு  பிரச்சனையை  தீர்த்து  விடுகிறது


40  நிமிடத்தில்  சொல்லி  முடிக்கக்கூடிய  இந்தக்கதையை  இரண்டு  மணி  நேரம்  இழுத்திருக்கிறார்கள் . 


 ஒளிப்பதிவு ,  லொக்கேஷன்  , ஆர்ட்  டைரக்சன்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள் குட் , பின்னணி  இசை  நன்றாக  இருந்தது


சபாஷ்  டைரக்டர்


1  படம்  போட்ட  முதல்  15  நிமிடங்களிலேயே படத்தின்  மொத்தக்கதையை  ஆடியன்சால் யூகிக்க  முடியும் அளவுக்கு  திரைக்கதை  அமைத்தது 


2  சாதாரண  பழி  வாங்கும்  கதையை  குடும்பக்கதை போல  பில்டப்  பண்ணி  சொன்னது 


  ரசித்த  வசனங்கள் 


1  அதிர்ஷ்ட  தேவதையும், ஆப்புர்ச்சுனிட்டி  ஏஞ்சலும்  ஒண்ணு . உனக்கான  அதிர்ஷடக்கதவை  ரெண்டு  தடவை  தட்டிட்டு  இருக்க  மாட்டாங்க , முதல்  டொக்  டொக்  கிலேயே  நீ  கதவைத்திறந்துடனும் 


2  பெரியவங்க  அவங்க  அனுபவத்தில்  இருந்து  எதாவது  சொன்னா  அதைக்காது  கொடுத்துக்கேட்கனும். அவங்க  முழு  வாழ்க்கையை நீ  வாழ்ந்துதான்  அதை  உணரனும்னு  அவசியம்  கிடையாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வில்லியின்  தோழிகள்  ., உறவினர்  பலரும்  நாயகி  பற்றி  எச்சரிக்கிறார்கள் .இவ்வளவு  இளமையான ,அழகான  வேலைக்காரி  அமர்த்துவது  ஆபத்து  என்கிறார்கள் . வில்லி  அதைக்காதில்  போட்டுக்கவே  இல்லை . புருசன்  ராமனாவே  இருந்தாலும்  எந்த  சீதையும்  தன்  வீட்டில்  இப்படி  அழகான  இளமையான  பெண்ணை  பணிக்கு  அமர்த்த  மாட்டாள் 


2   நாயகி  பணிக்கு  வருகையில்  எப்போதும்  மிக  கிளாமரான  டிரஸ்  தான்  அணிந்து  வருகிறாள் .அப்போது  வில்லியின்  கண்களை  அத் உறுத்தவில்லையா?  ஏம்மா  மின்னல் , அடக்க  ஒழுக்கமா  டிர்ஸ்  பண்ணிட்டு  வாம்மா  என  சொல்ல  மாட்டாரா? 


3  கதைப்படி  நமக்கு  நாயகி  மீது  பரிதாபம்  வரனும், ஆனால் வரவில்லை , காரணம்  நாயகி  வில்லனை  வலையில்  வீழ்த்துகிறாள்  . சைக்கிள்  கேப்பில்  வில்லனின்  பார்ட்னருடனும்   நெருக்கமாக  இருக்கிறார்


4   வில்லி வில்லனைப்பழி  வாங்க  கடலுக்கு  படகில்  செல்லும்போது  எதற்காக  கைக்குழந்தையை  எடுத்துச்செல்கிறார்? அது  ரிஸ்க்  ஆச்சே?  வீட்டில்  பெரியவங்க  இருக்காங்களே? அவங்க  பார்த்துக்க  மாட்டாங்களா?


5 பொதுவாக  கள்ளக்காதலில்  ஈடுபடும்  நபர்  வீட்டில்  யாரும்  இல்லாத  போதுதான்  ட்ரை  பண்ணுவாங்க , ஆனால்  வில்லன் தன்   வீட்டில்   ஒரு  பார்ட்டி  நடக்கும்போது  மனைவி  ஹாலில்  இருக்கும்போது  மாடியில்  நாயகி  உடன்  சரசம்  ஆடுவது  நம்ப  முடியவில்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18 +  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பல  முறை  பார்த்துப்பழக்கப்பட்ட கதை  தான்  என்றாலும் காட்சிகள் சுவராஸ்யமாக  இருப்பதால்  ஆண்கள் பார்க்கலாம் . ரேட்டிங்  2 / 5 

Tuesday, March 26, 2024

ROAD HOUSE (2024).ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

    


இந்தப்படம்  1989ல்   இதே  டைட்டிலில்  ரிலீஸ்   ஆன  படத்தின்  ரீ  க்ரியேஷன்  தான். திரைப்பட  விருது  விழாக்களில்  கலந்து  கொண்ட  இப்படம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகும்  முன் நேரடியாக  அமேசான்  பிரைம்   ஓடிடி  யில்  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


ரோடு ஹவுஸ்  என்பது  ஒரு  கிளப் . நம்ம  ஊர்ல  டாஸ்மாக்  பார்  மாதிரி  கிளப் ல  பார்  அட்டாச்  ஆகி  இருக்கு. பாருக்கு  யாரு  வருவாங்க ?பொறுக்கிகள் , குடிகாரர்கள்  தானே  வருவாங்க ? வந்தவங்க  சும்மா  போறதில்லை .ஒரே  அலப்பறை  பண்ணி  எதுனா  தகறாரு  பண்ணி   அந்த  கிளப்பை  நாசம் பண்றாங்க


க்ளப்போட ஓனர்  ஒரு  லேடி .அந்த  லேடி  இந்த கிளப்பைப்பாதுக்காக்க  ஒரு  பவுன்சர்  வேண்டும்  என  நினைக்கிறாள் .  பிரபலமான  பாக்சர் பற்றிக்கேள்விப்பட்டு  அங்கே  போறா.அங்கே  போனா  யாரைத்தேடி  அவ  வந்தாளோ  அந்த  ஆளைப்பிளந்து  கட்டிட்டு  இருக்கான்  ஒரு  ஆளு .அவன்  தான்  படத்தோட  நாயகன். அவனையே  வேலைக்கு  அமர்த்திடலாம்னு  அந்த லேடி  நினைக்கறா


ஆரம்பத்தில்  மறுத்த  நாயகன்  பின்  அந்த  கிளப்ல  வேலைக்கு  சேருகிறான். இப்போ  நாயகன்  முன்   எந்த  ரவுடிகளும்  அந்த கிளப்ல வாலாட்டுவதில்லை அடி  வெளுத்து  விடுகிறான். அப்பப்ப  நாயகனுக்கு  காயம்  ஆகும், அதை  சரி  பண்ண  ஹாஸ்பிடல்  போறப்ப  ஒரு  லேடி  டாக்டரை  சந்திக்கிறான்.அவளுக்கு  நாயகன்  மீது  கண்டதும்  காதல். நாயகன்  எஸ்  , நோ  எதுவும்  சொல்லலை .அவன்  பாட்டுக்கு  சிவனேன்னுதான்  இருக்கான் 


 ஆனா நாயகியோட அப்பா  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் .  நாயகனை  அந்த தீவை  விட்டு  கிளம்ப  சொல்றார். அந்தத்தீவிலேயே  பெரிய  பணக்காரன்  ஒருத்தன்  அந்த  ரோடு  ஹவுஸ்  எனும்  கிளப்பை  ஆட்டையைப்போட நினைக்கிறான். அந்த  வில்லனுக்கு  நாயகன்  தடையா  இருக்கான். இவங்க  எல்லா,ம்  பத்தாதுனு  இன்னொரு  கடோத்கஜ சைக்கோ  வில்லன்  செம  ஃபைட்டர்  ஒருத்தன்  வர்றான் 


 இவங்களை  எல்லாம்  நாயகன்  எப்படி  சமாளித்தான்  என்பதுதான்  படத்தோட மொத்தக்கதையே 


நாயகன் ஆக  ஜேக்  கில்லன்  ஹால் அதகளப்படுத்தி இருக்கிறார்.எதற்குமே  அலட்டிக்கொள்ளாத  சிரித்த முகத்துடன்  அவர்  போடும்  ஃபைட்கள் எல்லாம் பிரமாதம் . ஒரு  முன்னாள்  யு எஃப்  சி  ஃபைட்டர்  உடல்  மொழி  எப்படி   இருக்குமோ  அதை  அப்படியே  கண்  முன்  நிறுத்துகிறார். 


வில்லன்  ஆக கோனார்  மெக் கிரேகர்  அசத்தி  இருக்கிறார்.ஜிம்  பாடி  மட்டுமல  அவரது  தாக்குதலை  கடைசி  வரை  நாயகனால் சமாளிக்க  முடியாமல்   திணறுகிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ்  ஃபைட்  சீனில் நாயகன்  - வில்லன்  ஒன்  டூ  ஒன்    ஃபைட்  செம 

நாயகி  ஆக  டேனியலா  மெல்காயிர்  நடித்திருக்கிறார்.கவனிக்க வைக்கும் அழகு


படம்  முழுக்க  ஆறு  இடங்களீல்  ஆக்சன்  சீக்வன்ஸ்  பொறி  பறக்கிறது . கடலில்  படகு  சேசிங்  சீனும்  உண்டு 


121  நிமிடங்கள்படம்  ஓடும்படி எடிட்  செய்திருக்கிறார் எடிட்டர்   டாக்கிராட்சர் 


ஹென்றி  பிராஹம்   ஒளிப்பதிவு  அருமை ., குறிப்பாக  நாயகி  நாயகனை  நடுக்கடலுக்கு  அழைத்துச்சென்று   டேட்டிங்  போகும் இடம்  லொக்கேஷன்  செலக்சன்  செம.,கிறிஸ்டோஃபெ பெக் கின்  பின்னணி  இசை  அமர்க்களம்.ஃபைட்  சீன்கள்  எல்லாம்  தெறிக்க பிஜிஎம்  முக்கியப்பங்கு  வகிக்கிறது 


டக்  லிமான்  தான்  இயக்கி  இருக்கிறார்.ஆக்சன்  பிரியர்களுக்கு  விருந்து


சபாஷ்  டைரக்டர்


1    கிளப்பின்  ஓனர்  ,  கிளப்பில்  பணி புரியும்  பெண்  ,   லைப்ரரி  ஓனரான  ஒரு  பெண் ,   லேடி  டாக்டர்  என  நான்கு  பெண்  கதாபாத்திரங்களுமே  நாயகன்  மேல்  ஒரு  சாஃப்ட்  கார்னர்  வைத்திருப்பதை  கவிதையாகச்சொன்ன  விதம், நால்வரில்  யாரை  ஜோடியாக  நாயகன்  தேர்ந்தெடுக்கப்போகிறான்  என்ற  எதிர்பார்ப்பை  ஏற்படுத்திய விதம் 


2    மெயின்  வில்லனின் உடல்  மொழி ,   ஜிம்  பாடி ,  ஃபைட்  சீன்  எல்லாம்  அற்புதம்  , கடைசி  வரை  வெல்ல முடியாதவான  ஸ்ட்ராங்காக கேரக்டரை  வடிவமைத்த விதம்  அருமை 


3    நான்கு  பெண்  கதாபாத்திரங்கள்  இருந்தும், தேவை  இல்லாத  காட்சிகள்   எதுவும்  வைக்காமல்  குடும்பத்துடன்  பார்க்கும்  விதமாக கண்ணியமாக  காட்சிகளை  வடிவமைத்த விதம்


  ரசித்த  வசனங்கள் 

1     சண்டையை  ஆரம்பிக்கும்  முன்  ஒண்ணே  ஒண்ணு  கேட்டுக்கறேன், உங்களுக்கெல்லாம்   இன்சூரன்ஸ்  இருக்கா?


2  சண்டைல  யாரும்    ஜெயிக்க  மாட்டாங்க 


3 எந்த  மரமண்டை  அந்த  ஐடியா  கொடுத்தது?


 நீங்க தான்  பாஸ்


4  உன்னை போட்டுத்தள்ளத்தான்  ஸ்பெஷலா  என்னை  அனுப்பி  இருக்காங்க, இன்றோடு  நீ  தொலைந்தாய் 


 தனியா  வராம எதுக்கு  இத்தனை  ஆளுங்களைக்கூட்டிட்டு  வந்திருக்கே?பயமா?


  ஷோ  பார்க்க  ஆடியன்ஸ்  வேண்டாமா? 


5   எனக்குக்கோபம்  வந்தா  என்னை  நானே  கண்ட்ரோல்பண்ண முடியாது , அப்புறம்  என்ன  நடக்கும்னு  எனக்கே  தெரியாது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ / ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஃபைட்  பிரியர்கள் , ஆக்சன்  பட  விரும்பிகள்  அவசியம்  பார்க்க வேண்டிய  படம் . ரேட்டிங்  2.75 / 5 


Road House
Release poster
Directed byDoug Liman
Screenplay by
Story by
Based onRoad House
by 
Produced byJoel Silver
Starring
CinematographyHenry Braham
Edited byDoc Crotzer
Music byChristophe Beck
Production
companies
Distributed byAmazon MGM Studios
Release dates
  • March 8, 2024 (SXSW)
  • March 21, 2024
Running time
121 minutes[1]
CountryUnited States
LanguageEnglish

Monday, March 25, 2024

ஆப்ரஹாம் ஓஸ்லர் (2024) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ டிஸ்னி + ஹாட் ஸ்டார்


ஜெயராம்  நடித்த  படங்களிலேயே அதிக  வசூல்  செய்த  படம்  என்ற  சாதனையை இது  பெற்றுள்ளது.41  கோடி  ரூபாய்  வசூலித்துள்ள  லோ  பட்ஜெட்  படம் இது     


2020   ஆம்  ஆண்டு  ரிலீஸ் ஆகி  சூப்பர்  டூப்பர்  ஹிட்  ஆன  அஞ்சாம்  பாதிரா  படத்தை இயக்கிய  மிதுன்  மேனுவல் தாமசின்  படம்  இது. 2023ல்  ரிலீஸ்  ஆன  கருடன் , ஃபீனிக்ஸ்  படங்களும்  இவர்  இயக்கியவையே


மம்முட்டி  இதில் கெஸ்ட்  ரோல்  பண்ணி  இருப்பதாக  விளம்பரம்  செய்யப்பட்டாலும்   அவருக்கான  ஸ்கோப்  குறைவே. இயக்குநரின்  மற்ற  படங்களுடன்  ஒப்பிடுகையில்  தர  வரிசையில்  ஒரு  படி  கீழே  இருந்தாலும் பேனர்  வேல்யூ  காரணமாக  வெற்றி  பெற்று   விட்டது   


ஸ்பாய்லர்  அலெர்ட்


சாலை  விபத்தில்  தொடர்ந்து  3  பேர்  அடுத்தடுத்து    காயம்  பட்ட  மூன்று  வெவ்வேறு  நபர்கள்  ஹாஸ்பிடலில்  சேர்க்கப்பட்டதும்  யாரோ  ஒரு  சீரியல் கில்லரால் கொலை  செய்யப்படுகிறார்கள் . நான்காவதாக  , கடைசியாக  ஒரு  கொலை  செய்யும்  முன்  போலீஸ்    அவரைப்பிடித்து    விடுகிறது .அவர்  ஏன்  அப்படி  செய்தார்  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக , போலீஸ்  ஆஃபீசர்  ஆக  ஜெயராம்.படம்    முழுக்க  தாடியோடு  பிச்சைக்காரன்  மாதிரி  வருகிறார். போலீஸ்  ஆஃபீசருக்கான  கம்பீரம்  மிஸ்ஸிங்.. போலீஸ்  ஆஃபீசர்  என்றால்  கெத்தாக  உடல்  மொழி  அமைய  வேண்டும் .இவர்  என்னடான்னா  படம்  முழுக்க  கையைக்கட்டிக்கொண்டு  அடக்க  ஒடுக்கமாக  வருகிறார்/  ஏ  வி  எம்  சரவணன்  இன்ஸ்பிரேஷன்  போல


வில்லன்  ஆக  மம்முட்டி  அதிக  வாய்ப்பில்லை ., அவரது  ஃபிளாஸ்பேக்  கதையில்  இள வயது  ஆளாக  வேறு  ஒருவர்  நடித்திருப்பதால்  மம்முட்டி  ரசிகர்களுக்கு  ஏமாற்றம்


 இள  வயது  மம்முட்டிக்கு  ஜோடியாக    அனஸ்வரா  ராஜன்   வசீகரிக்க  வைக்கும்  நடிப்பு .


தவறான  ஆபரேசனால்  குரல்  வளத்தை  இழந்த  பாடகர்  ஆக  சைஜூ  க்ரூப்  நன்கு  நடித்திருக்கிறார். 


அனுப்மேனன்  டாக்டர்  ஆக  வருகிறார்.சிறப்பான்  நடிப்பு 


ஷமீர் முகமதுவின்  எடிட்டிங்கில் படம்  144  நிமிடங்கள்  ஓடுகிறது . ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  விறுவிறுப்பு  இல்லை .ஒரு  மணிநேரம்  இழுவை 


மிதுன் முகுந்தன்  இசை குட் , பின்னணி  இசை நல்ல  விறுவிறுப்பு.


தேனி  ஈஸ்வர்  ஒளிப்பதிவில்    நாயகிக்கான  க்ளோசப்  ஷாட்கள்  அழகு 

ரந்தீர்    கிருஷ்ணன்  கதை , திரைக்கதை  எழுத  இயக்கி  இருப்பவர்  மிதுன்  மேனுவல் தாமஸ்  


சபாஷ்  டைரக்டர்


1  மம்முட்டியின்  ஃபிளாஸ்பேக் காட்சிகளில்  காலேஜ்  மாணவனாக  மம்முட்டியையே  நடிக்க  வைக்காமல்  வேறு  ஒருவரை  நடிக்க வைத்தது  குட் 

(  இதில்  தனுஷ்  நடித்திருந்தால்  தாடி , மீசையை  எடுத்துட்டு  காலேஜ்  ஸ்டூடண்ட்  ஆக     அவரே  நடித்திருப்பார்  )   

2  க்ளைமாக்ஸ்  காட்சியில்  நான்காவது  ஆளைக்கொலை  செய்யும்  காட்சி   ஒரு  கைதியின்  டைரி  பட  க்ளைமாக்ஸை  நினைவு  படுத்தினாலும்  சிறப்பாக  இருந்தது 

ரசித்த  வசனங்கள் 


1   குறிக்கோள்  இல்லாத  வாழ்க்கை  குழில  விழுவதற்கு  சமம் 


2  நாம  உயிரோட  இருக்கும்போதே  நம்ம  குழந்தைங்க  இறந்து  போவது  ரொம்பக்கொடுமையான  ஒண்ணு


3   எதுக்கும் துணிஞ்ச , எதற்கும தயாரா  இருக்கற  ஒருத்தனை  என்ன  சொல்லி  மிரட்டுவீங்க ?


4  குற்ற  உணர்வு இல்லாத  மனுசன்  தான்  இந்த  உலகத்துலயே  மோசமான  ஜென்மம்


5 கடவுள்  சிலபேருக்குக்கை கொடுப்பார் , சிலரை  கை  விட்டுடுவார்.அது  அவங்கவங்க  விதி 


6  கடவுளால  கைவிடப்பட்டவங்களுக்கு  சில சமயம்  சாத்தான்  கை  கொடுக்கும், ஆல்ட்டர்நேட்டிவ்  சாத்தானை  அது  உருவாக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்  சீனில்  ஹீரோவுக்கு  லோக்கல்  போலிஸ்  ஸ்டேஷனில்  இருந்து  ஒரு  ஃபோன்  கால் வருகிறது .  லேண்ட்  லைன்  ஃபோனுக்கு  அழைத்து  அதை  செக்  செய்யாமல்  , வெரிஃபை  பண்ணாமல்  அவ்வளவு  பெரிய  ஆஃபீசர்  ஏமாறுவாரா? 


2  டைட்டில்  ரோலில்  ஜெயராம் நடித்திருந்தாலும்  மெயின்  கதைக்கும்  , டைட்டிலுக்கும்  சம்பந்தம்  இல்லை


3  ஜெயராமின்  மனைவி , குழந்தை  கடத்தப்பட்ட  விஷயத்துக்கும்  , மெயின்  கதைக்கும்  சம்பந்தம்  இல்லை. அது  அடுத்த  பாகத்தில் வரும் என்று  சமாளித்திருக்கிறார்கள் 


4   வில்லன்  தான்  கொல்ல  நினைக்கும்   மூன்று  பேரை  போலியான  விபத்து  மூலம்  காயம்  பட  வைத்து  ஹாஸ்பிடலில்   சேர  வைத்து  பின்  மிக  சிரமப்பட்டு  அவர்களைக்கொலை  செய்கிறான். அதுக்கு  விபத்து  ஏற்படுத்தும்போதே  ஈசியாகப்போட்டுத்தள்ளி  இருக்கலாமே? 


5   டைட்டில்   ரோலில்  வரும்  போலீஸ்  ஆஃபீசர்  ஆன  ஜெயராம்  அந்தக்கேசில்  எதையும்  கண்டு  பிடிக்கவில்லை .கூட  இருக்கும்  ஜூனியர்  ஆஃபீசர்கள்  இருவர்  தான்  கண்டு பிடிக்கிறார்கள் , முக்கியமான  தடயத்தை  டாக்டர்  ஆக  வரும்  அனுப் மேனன்  கண்டு  பிடிக்கிறார்.இவர்  சும்மா  தண்டமாக  வருகிறார்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆப்ரஹாம் ஓஸ்லர்  வித்தியாசமான  டைட்டிலாக  இருக்கே? என  நினைத்து  பார்த்தால்  ஏமாற்றம்  அடைவீர்கள் .சராசரியான  , மாமூலான  க்ரைம்  த்ரில்லர்  தான் . ரேட்டிங்  2.25 / 5 


Abraham Ozler
Theatrical release poster
Directed byMidhun Manuel Thomas
Written byRandheer Krishnan
Produced by
  • Irshad M. Hassan
  • Midhun Manuel Thomas
StarringJayaram
Mammootty
Anoop Menon
Anaswara Rajan
Arjun Ashokan
CinematographyTheni Eswar
Edited byShameer Muhammed
Music byMidhun Mukundan
Production
companies
Nerambokku
Manual Movie Makers
Distributed byAnn Mega Media
Release date
  • 11 January 2024
Running time
144 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office40.53 crore