Tuesday, August 03, 2021

திட்டம் இரண்டு -2021 - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர்)

 இயக்குநர்  அகத்தியன்  எடுத்த  விடுகதை ,  பாரதிராஜாவின்  முதல்  மரியாதை , மீராநாயர்  இயக்கிய  ஃபையர் , கே  பாலச்சந்தர்  இயக்கிய  அபூர்வ  ராகங்கள்  இந்த  படங்கள்  எல்லாமே  மாறுபட்ட காதல்  கதைகள் , ஆனா  சமூகம்  ஏத்துக்க  தயங்கும்  பொருந்தாக்காதல்  கதைகள் . இவைகளில்  விடுகதை  தவிர  மற்றவை  எல்லாம்  செம  ஹிட்  அதனால  இதே  டைப்  லவ்  ஸ்டோரி  எடுக்க  நினைத்த  இயக்குநர்  விடுகதை  மாதிரி  ஃபிளாப்  ஆகிடக்கூடாதுங்கறதுக்காக    த்ரில்லர்  ஃபார்முலாவில்  இந்தக்கதையைக்குடுத்திருக்கார் ,  யாராலும்  யூகிக்க  முடியாத  பிரமாதமான  க்ளைமாக்ஸ்  என  பலராலும்  கொண்டாடப்பட்ட இந்தப்படத்தின்  கதையை  அதன்  சஸ்பென்ஸ்  கெடாமல்  சுவராஸ்ய்மாக  சொல்வதே  ஒரு  சவால்  தான்   


சம்பவம்  1 - ஒரு  லாங்  ட்ரிப்  பஸ்  பயணம். நாயகியும்,  நாயகனும்  முன்  பின்  அறிமுகம்  ஆகாதவர்கள், அருகருகே  அமர்ந்து  பயணிக்கும்  தருணம் கவுதம்  வாசுதேவ்  மேனன்  படங்களில்  வருவது  போல  கவிதையான  தருணங்களை  சுவராஸ்யமாக  சொல்லி  பயணம்  முடிந்ததும்  இருவரும்  பிரிகின்றனர். நாயகியைப்பற்றி  எந்த  விபரமும்  நாயகனுக்கு  தெரியாது,  ஆனா  நாயகிக்கு  நாயகனின்  ஃபோன்  நெம்பர்  தெரியும் . 


சம்பவம் 2  - திருமணம்  ஆன  புது  மணத்தம்பதி.  மவுன ராகம்  படத்தில்  வருவது  போல்  நாயகிக்கு  ஏற்கனவே  ஒரு  காதலன்  இருந்திருக்கான், ஆனால்  வீட்டில் பெற்றோர்  வற்புறுத்தலுக்கு  இணங்க  மேரேஜ்க்கு  சம்மதிக்கிறாள்.,  விஷயம்  தெரிஞ்ச  கணவன்   முதல்  இரவு  நடத்தாமலேயே  சந்திரபாபுவின்  மாடி  வீட்டு  ஏழை   படம்  போல்  (  அவரது  சொந்த  வாழ்க்கைக்கதை)  மனைவியை  காதலனுடன்  சேர்த்து  வைக்கிறார் 


சம்பவம்  3 -  உன்னை  நினைத்து  பட  லைலா  கேரக்டர்  போல ஒருத்தி  காதலனை  டைம்  பாஸ்க்காக  லவ்வறா. வசதியான    வேற  ஆள்  கிடைச்சதும்  இவனைக்கழட்டி  விட்டுடறா. அவன்  செம  காண்டுல  அவளைக்கொலை  பண்ண  டைம்  பார்த்துட்டு  இருக்கான்  இன்னொரு  பெண்  குறுக்கே  வர்றா... அவ  பழகறதை  இவன்  தப்பா  புரிஞ்சுக்கிட்டு  தன்  காதலை  சொல்லறான். ஆனா  அவளுக்கு  இவனை  பிடிக்கலை . இவன்  செம  காண்டாகி  இவ்ளையும்  போட்டுத்தள்ளிடனும்னு  பிளான்  பண்றான்


சம்பவம் 4  -  நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசர். ஒரு  ஆக்சிடெண்ட்  கேஸ்.  இவரது  பால்ய  கால  பள்ளித்தோழி  ஸ்பாட்  அவுட். விசாரணைல  அது  கொலையாக  இருக்கலாம்னு  சந்தேகப்படறா.  அவ  புருசனுக்கு  வேற  ஒரு  பெண்  கூட  காண்டாக்ட்   இருந்து  அது  க்கு  இடைஞ்சலா  இருந்த  தன்  தோழியை  அதாவது  அவன்  மனைவியை  திட்டம்  போட்டு  தீர்த்துக்கட்டி  இருக்கலாம்கற  டவுட் .  அந்தக்கேசை  கைல  எடுத்து    துப்பு  துலக்கறா


 மேலே  சொன்ன  4  சம்பவங்களும்   ஒரு  புள்ளியில்  இணைவதுதான்  இந்தப்படத்தின்  திரைக்கதை 


நாயகியா  ஐஸ்வர்யா ராஜேஸ்.  வைஜெயந்தி  ஐபிஎஸ்  விஜயசாந்தி  மாதிரி  போலிஸ்  கெத்து  இவருக்கு  வர்லை  என்பதால்  அவரை  பெரும்பாலும்  போலீஸ்  யூனிஃபார்மில்  காட்டாமல்  மப்டியில்  காட்டிய்து  இயக்குநரின்  புத்திசாலித்தனம்


 இவ்ரது  தோழியா  வருபவர்  புதுமுகம்  போல , நடிப்பு  ஓக்கே ,  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் ,  பிசுறு  தட்டுது . இந்த  மாதிரி  முக்கிய  ரோலில்  ஆல்ரெடி  பிரபலமான  நாயகியை  புக்  பண்ணி  இருந்திருக்கலாம். இருந்தாலும்  அனன்யா  சமாளித்திருக்கார் 


நாயகனாக  வரும்  சுபாஷ்  செல்லம்  பெண்களைக்கவரும்  மோகன் , சுரேஷ்  பாணி  சாஃப்ட்  ஃபேஸ்.  வாய்ப்புகள்  கிடைத்தால்  வலம்  வருவார்


இயக்குநர்  விக்னேஷ்  கார்த்திக்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  மட்டும்  மலை  போல்  நம்பி  திரைக்கதை  அமைப்பில்  இடையில்  கொஞ்சம்  தடுமாறி  இருக்கிறார்.  கொஞ்சம்  மெனக்கெட்டு  அமைத்திருந்தால்  ராட்சச்ன் , மாதிரி  ஒரு  பிரமாதமான  க்ரைம்  த்ரில்லராக  உருவாக்கி  இருக்கலாம். ஆனாலும்  தமிழ்  சினிமாவில்  ஒரு  வித்தியாசமான  முயற்சியே 


இசை  சதீஷ்  ரகுநாதன்.  தீம்  மியூசிக்  குட் . த்ரில்லர்  படங்களுக்கே உரித்தான்  பர  பர  இசை . கோகுலிம்  ஒளீப்பதிவு  இரவில்  செம  பகலில்  சுமார்


நச்  வசனங்கள்


1   மிஸ்,  நான்  தூங்கறப்ப  பக்கத்துல  இருக்கறவங்க  மேல  கால்  போட்டுக்குவேன்,ம் உங்களுக்கு  ஏதும்  ஆட்சேபணை  இல்லையே?


 வாட்?


 சும்மா  சொன்னேன், பயந்துட்டீங்களா? 


2   நமக்குப்பிடிச்சவங்களை  திரும்பித்திரும்பி  மீட்  பண்ணினா  சுத்தமா  பிடிக்காமயும்  போயிடும்,  ரொம்பவே  பிடிச்சிம்  போய்டும்.


3   நாம  பயங்கரமா  லவ்  பண்ற  ஒருத்தரை  ஏன்  அவ்ளோ  தூரம்  டீப்பா  லவ்  பண்றோம்னு  கேட்டா  காரணம்  சொல்லத்தெரியாது 


4     என்னைப்பிடிச்சிருக்கா?


 பிடிக்கலைன்னா  “  கிஸ்  பண்ணவா?னு  கேட்டப்பவே  செருப்பால அடிச்சிருப்பேனே?


5  ஒரு  ஆள்  நமக்கு  எவ்ளோ தான்  க்ளோசாக  இருந்தாலும் நமக்குத்தெரியாத  ஒரு  ரகசியத்தை   சொல்லாம  இருந்தா  கடுப்பு  தான்  ஆகும்


6  மத்தவங்களை  கஷ்டப்படுத்தாதவரை நாம  பண்ற   எதையுமே  தப்பு  சொல்ல  முடியாது 


7  நம்ம  வாழ்க்கைல முக்கியமான  தருணங்களில்  நாம  எடுக்கும்  முடிவுகள்  நம்ம  சொந்த  முடிவா  இருக்கனும். மத்தவங்க  சொன்ன  முடிவா  இருக்கக்கூடாது 


சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -   காதல்  படங்களை  விரும்புகிறவர்கள்  , த்ரில்லர்  ரசிகர்கள் ,  மாறுபட்ட  கதை  அமசம்  பார்க்க  நினைப்பவர்கள்  என்  3  கேட்டகிரில  இந்தப்படம்  பரிந்திரைக்கலாம். லேடீசும்  பார்க்கும்  விதத்தில்  டீசண்ட்  ஆன  காட்சி  அமைப்புகள் .  எதிர்பார்க்கப்படும்  ஆனந்த  விகடன்  விமர்சன  மார்க்  42    குமுதம்  ரேங்க்கிங்  2.75 / 5  .சோனி  லைவ்  ஓடிடி  ரிலீஸ்