Monday, January 04, 2016

சிலம்பாட்டம்

1]முதல்வர் வேட்பாளராக கட்சித் தலைமை என்னை ஒருமனதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது-
அன்புமணி# நல்லவேளை.இவருக்கு ஒரு அண்ணன் இல்லை.தப்பிச்ட்டாரு


========================


2]சிம்புவுக்கு ஆதரவு அளிக்க சிவசேனா முடிவு=சும்மாவே நல்லா ஆடுவாரு. சிலம்பத்தை வேற கட்டி விட்டுட்டாங்க.இனி சிலம்பாட்டம்தான்============3]விஜயகாந்த்சந்திப்பைக்கண்டுதிமுகபயந்துவிட்டது-வைகோ# கலைஞரைப்பத்தி இவருக்குதெரியல.தனக்குக்கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாதுனு நினைப்பாரு
===============4\மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் ஓர் அபத்த சாகசம்: காங்கிரஸ் காட்டம்# எப்டியோ உங்க வாய்ல இருந்தே அது சாகசம் தான்னு ஒத்துக்கவேண்டியதாப்போச்சு
========================
5]தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நடந்து சென்ற மோடி தடுத்து நிறுத்திய ரஷ்ய அதிகாரி# குற்றம் நடந்தது என்ன?ன்னு சோனியா ஜி இன்னும் கிளம்பலையா ?
=====================6]தெறி படத்தில் வெறும் பாடல்,ரொமான்ஸ் என்று

இல்லாமல் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளேன் - சமந்தா# அப்போ இன்ட்டர்வல் ட்விஸ்ட்ல வில்லி?=====================

7]கோயில்களில் லெக்கிங்ஸ், ஜீன்ஸ் அணிய தடை விதித்தது தமிழக அறநிலையத்துறை. # கோயில்ல தானே அணியக்கூடாது?வீட்ல அணிஞ்சுட்டு கோயில் போலாமா?
===============8]சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பெரும் நிதி தேவை: திரு.கருணாநிதி ! உங்க பேர்லயே நிதி இருக்கு.உங்க பேங்க் அக்கவுண்ட்லயும் நிதி இருக்கு
==================ரூ.22 கோடி போதாது: தேர்தலை எதிர்கொள்ள பெரும் நிதி கொடுங்கள் -கருணாநிதி ் # மனுசனை மனுசன் சாப்பிடறார்டா தம்பிப்பயலே.இது மாறுவதெப்போ நம்ம கவலை
===============10]சிம்புவுக்கு ஆதரவாக தற்கொலைப்படையாவேன்.... டி.ஆர்.ரை சந்தித்த பின் 'சர்ச்சை' வீரலட்சுமி மிரட்டல் # ஏம்மா.போட்டோல பட்டு சேலை கட்டி இருக்கீக?================11]சிம்பு தமிழகத்தை விட்டு தப்பிச்செல்லவில்லை- டி.ராஜேந்தர் #,ஆனா வீட்டில் இல்லை.எங்கே இருக்கார்னு தெரியும்.சொல்லமாட்டேன்.முடிஞ்சா கண்டுபிடி
==============12]பாக். பயணத்தால் இந்தியாவிற்கு அவப்பெயர்... மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: சிவசேனா # காலைல சாப்ட்டேன் 1,செட் பூரி.ஐ ஆம் சாரி
=============13]தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவை விட்டும் சிம்பு ஓடி ஒளியமாட்டார்.-TR# இது ஓடி ஒளியற பிள்ளை இல்ல.வான்ட்டடா வந்து மாட்டிக்கும் கைப்புள்ள
=====================14]பணத்துக்காக ஓட்டு போடக்கூடாது: இளங்கோவன் # குணத்துக்காக ஓட்டுப்போடலாம்னா ஒரு பயலும் யோக்கியர் இல்லையே சார்?=================15]இடியே விழுந்தாலும் தமிழ் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்: டி.ராஜேந்தர்.. #,போலீஸ் ல சிக்கும்போது அடி கன்பர்ம்
=================16]தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து போட்டி: EVKS் # குஷ்பூ ,நக்மா வை வேடிக்கை பார்க்க கூட்டம் வரும்.ஆனா ஒரு பய ஓட்டுப்போடமாட்டான்
=============
17பாகிஸ்தான் பயணத்தால் இந்தியாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய மோடி மன்னிப்பு கேட்கனும்:..#,ஜூஜூபி மேட்டர்.இந்தியாவுல ஒரு ரூபாய்க்கு 5,மன்னிப்பு
=================18]பத்திரிகைகாரங்களா நீங்க... தூ.. முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த் # துப்பார்க்குத்துப்பாய துப்பாக்கித்தேமுதிக துப்பாய தூ தூ வும் பிழை

================ஓடி ஒளிிய சிம்பு ஒன்றும் பயங்கரவாதி இல்லை: டி.ராஜேந்தர் பேட்டி # மைக்கை சிம்பு கிட்டே கொடுங்க.நீங்க தான் கம்பு சுத்திட்டே இருக்கீங்க==================


20]விஜய்யுடன் போட்டி போடும் அளவுக்கு நான் நடித்துள்ளேன் S.A.C ,# அய்யய்யோ அப்போ அடுத்த படத்தில் அஜித் தோட போட்டி போடுவீங்களா?


================

0 comments: