Friday, July 31, 2015

ஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும் - சினிமா விமர்சனம்

வசனம், பாடல் எழுதி விஜய் சேதுபதியே தயாரித்து நடித்த படம் என்ற காரணமே 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
'சூது கவ்வும்' படத்தில் நாற்பது வயதைக் கடந்தவராக நடித்த விஜய் சேதுபதி 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தில் அறுபது வயதைக் கடந்தவராக நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் ஆகப்பெரிய எழுதப்படாத விதி வயதானவரை ஹீரோவாக காட்டுவதில்லை. ஹீரோயின் இல்லாமல் ஹீரோவை தனியாகக் காட்டுவதும் அரிது. இந்த வழமையான இடத்தில் இருந்து அறுபது வயதைக் கடந்த முதியவர் கைலாசமாக விஜய் சேதுபதி ரசிகர்களை திருப்திப்படுத்துகிறாரா? தயாரிப்பாளராக ஜெயித்திருக்கிறாரா?
கதை ரொம்ப சிம்பிள்தான். தெனாவட்டை விட்டுக்கொடுக்காத முதியவர் தன் தனிமையைக் கழிக்க முடியாமல் ஆம்புலன்ஸை ஊர்வலம் செல்லும் தேராகப் பயன்படுத்திக்கொள்கிறார். அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும் டிரைவரும், அவசர மருத்துவ உதவியாளரும் அந்த முதியவரால் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதற்குப் பிறகு குடைச்சல் தரும் அந்த முதியவர் என்ன ஆகிறார்? மருத்துவ உதவியாளர் என்ன செய்கிறார்? என்பது மீதிக் கதை.
அறுபது வயதைக் கடந்த முதியவராக விஜய் சேதுபதி கண்மூடி சாய்ந்திருப்பதாகக் காட்டும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது.
''ஒரு ஹார்ட் பேஷண்ட்டை இப்படியா நடக்க வெச்சு கூட்டிட்டு போவீங்க. ஒரு பேஷண்ட் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாது?'' என்று அறிமுகக் காட்சியிலேயே தெனாவட்டான ஆள் என்பதை புரிய வைக்கிறார்.
வீம்பாக ஸ்ட்ரெக்சரில் உட்கார்ந்துகொண்டு வருவது, ஆம்புலன்ஸில் பாட்டு கேட்பது, தடாலடியாக எகத்தாளம் செய்வது, நோயாளிக்கே உரிய எந்த பதற்றத்தையும் காட்டாமல் இயல்பாக பயணிப்பது என எல்லா விதத்திலும் ஸ்கோர் செய்கிறார்.
தாடி, மீசை, காவியேறிய பற்கள், கண்ணாடி என்று அறுபது வயதைக் கடந்த முதியவருக்கான நடை, உடை, பாவனைகளில் மனிதர் பின்னி எடுக்கிறார். அதுவும் ஆட்டோவில் இருந்து இறங்கிவிட்டு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடும்போது கிழி கிழி கிழி என்று கிழிக்கிறார்.
முதியவருக்கே உரிய அமெச்சூர்தனமான டான்ஸூம், ஸ்டைலும் அப்ளாஸை அள்ள வைத்தது. தனிமை, ஈகோ, அடம்பிடித்தல் என்று எல்லா உணர்வுகளையும் அழாமல், கண்ணீர் சிந்தாமல், புன்னகை செய்யாமல் பார்வையிலேயே உணர்த்திவிடும் நடிப்பு விஜய் சேதுபதிக்கு வாய்த்திருக்கிறது. அதுவே படத்தின் பெரிய பலம்.
அவசர மருத்துவ உதவியாளராக வரும் ரமேஷ் திலக் நடிப்பு, பாடி லேங்வேஜ் முதல் டயலாக் டெலிவரி வரை அவ்வளவு கச்சிதம். காதலியிடம் பேசுவதில் இருக்கும் கனிவைக் காட்டிலும், விஜய் சேதுபதியிடம் காட்டும் கனிவில் மனதில் நிற்கிறார்.
ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்திருக்கும் ஆறுமுகம் பாலா, ரமேஷ் திலக் காதலியாக நடித்திருக்கும் ஆஷ்ரிதா, விஜய் சேதுபதி மகனாக நடித்திருக்கும் கருணாகரன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கத்தை பிஜூ விஸ்வநாத் நிறைவாகச் செய்திருக்கிறார். வழக்கமான ஃபார்முலா சினிமாவில் இருந்து விலகி, இப்படி ஒரு படத்தைக் கொடுத்ததற்காக பிஜு விஸ்வநாத்துக்கு ஆயிரம் லைக்ஸ்.
விஜய் சேதுபதி வசிக்கும் கிராமம், ஆம்புலன்ஸ் பயணிக்கும் இடங்கள், ரமேஷ் திலக் காதல் எபிஸோட் என்று எல்லா ஏரியாவின் அழகையும் கேமராவில் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார் பிஜூ விஸ்வநாத். எந்த ஃபிரேமும், ஷாட்டும் தேவையில்லை எனும் அளவுக்கு கிரிஸ்ப்பான கட்டிங்கில் கவனம் ஈர்க்கிறார். ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய பிளஸ்.
ஆனால், 'ஆரஞ்சு மிட்டாய்' எந்த எமோஷனையும் நமக்குள் கடத்தவில்லை. சுவாரஸ்யங்களுக்காகவே விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பயன்பட்டிருக்கிறது. அதனாலேயே நமக்குள் எந்த பாதிப்பும், அழுத்தமும் ஏற்படவில்லை.
ரோட் சைட் மூவி, பயணங்கள் வழியாக கதை சொல்வது என்ற வகையில் பார்த்தால் 'நந்தலாலா', 'அன்பே சிவம்' மாதிரியான படங்கள் உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால், அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது 'ஆரஞ்சு மிட்டாய்'.
பெரியவர்களைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் வாழ்வின் சுவாரஸ்யங்களை தெரிந்துகொள்ளவும் விரும்பினால் 'ஆரஞ்சு மிட்டாய்' உங்களுக்கு இனிக்கும். ஒரு படமாக மட்டும் பார்த்தால் 'ஆரஞ்சு மிட்டாய்' புளிக்கும்

நன்றி-த இந்து

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31/7/ 2015 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


1 ஆரஞ்சு மிட்டாய்
2 இது என்ன மாயம்
3 சகலகலாவல்லவன் அப்பாட்டக்கர்
4 நிராயுதம்
5 SPECIAL ID #31/7/2015 ரிலீஸ்


A classical film from Vijay sethupathi
1 ஆரஞ்சு மிட்டாய்


தனுஷ், விஷால், ஆர்யாவை தொடர்ந்து தயாரிப்பு உலகில் புதிதாக களமிறங்குகிறார் விஜய் சேதுபதி.
விறுவிறுவென உச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிற விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்கிற கனவு நிறையவே இருக்கிறது. அதனாலதான் சங்குதேவன் என்ற படத்தை இன்னொரு தயாரிப்பாளரின் உதவியோடு ஆரம்பித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் பாதியில் நிற்கிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி ”ஆரஞ்சு மிட்டாய்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த முறை அவர் வேறு யாருடைய தயவையும் நாடாமல் தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கி தானே நேரடி தயாரிப்பாளராக களமிறங்குகிறாராம்.
இப்போதைக்கு விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி ஆகிய படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இது தவிர இடம் பொருள் ஏவல், புறம்போக்கு ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருக்கிறது. இது முடிந்த பிறகு “ஆரஞ்சு மிட்டாய்” படத்தில் நடிப்பார் என்று தெரிய வருகிறது.


A amala paal vaseekaran film
2 இது என்ன மாயம்


தலைவா, சைவம் என தொடர் தோல்விகளை கொடுத்த விஜய் சிறிது கால ஓய்வுக்கு பிறகு விக்ரம் பிரபுவை வைத்து 'இது என்ன மாயம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.எல்.விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டமாருதம் வெற்றிப்படத்தை தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம் இது.
படம் பற்றி இயக்குனர் விஜயிடம் கேட்டோம்..”இது காதல் சம்மந்தப்பட்ட படம் தான்..காதலுங்கிறது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். அது யாருக்கு வருகிறது, அவர்களுக்கு அது எந்த கால கட்டத்தில் வருகிறது என்பது தான் காதலின் மகத்துவம். ஒருவருக்கு அது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் பூக்கிற தருணம் இனிமையானது. அதை தான் இது என்ன மாயம் பிரதிபலிக்கும். இதில் இரண்டு காலகட்டங்கள்! ஒன்று ஜாலியாகத் திரிந்த கல்லூரி வாழ்க்கை… இன்னொன்று கல்லூரி காம்பவுண்டை விட்டு வந்து நிகழ்கால வாழ்க்கையில் கடந்த கால இனிமையை நினைத்து பார்க்கும் காலகட்டம்! எனக்கு எல்லாம் மறந்து போச்சு என்று சொல்கிறவன் கூட  தனது காதலை மறக்க முடியவில்லை என்றே சொல்வான். 
அழகான காதலனாக அருண் பாத்திரத்தில் விக்ரம் பிரபு வாழ்ந்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். நான் ,நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ்குமார், நா.முத்துக்குமார் என்கிற ஒரே சிந்தனையாளர்கள் இதிலும் கை கோர்க்கிறோம் ஜெயிப்பதற்காக. இந்த வெற்றியில் மேஜிக் பிரேம்ஸ் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் மூவரும் கூட இணைந்திருக்கிறார்கள் ஜெயிப்பதற்காக”என்றார் இயக்குநர் விஜய். இப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மே 1ம் தேதி சூர்யாவின் மாஸ்' ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது அந்த படத்துடன் விக்ரம் பிரபுவின் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Jeyam ravi's masaala film
3 சகலகலாவல்லவன் அப்பாட்டக்கர்


அஞ்சலி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘சகலகலா வல்லவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 31-ந் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் சுராஜ் பேசும்போது, அஞ்சலி பற்றிய ரகசியங்கள் அவிழ்த்து விட்டார்.
அவர் பேசும்போது, அஞ்சலிக்கு இந்த படத்தில் அமைதியான கதாபாத்திரம். ஆனால், படப்பிடிப்பு முடிந்து 6 மணிக்கு மேல் இவரது அட்டகாசத்தை ஆரம்பித்துவிடுவார். அவருக்கென்று ஒரு சில உதவியாளர்கள் வைத்திருப்பார். அவர்களுடன் சேர்ந்து 9 மணி வரை கிரிக்கெட் விளையாடுவார்.
நாளை படப்பிடிப்பு இருக்கிறது, தற்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றால் கேட்க மாட்டார். ஒருமுறை சூரி, அவரிடம் கோபமாக பேச, அவரது ஐபோனை அஞ்சலி உடைத்துவிட்டார். இப்போது அஞ்சலியிடம் அதற்கான பணம் கேட்டு கெஞ்சி வருகிறார் சூரி என்று பேசினார்
Look like gilma film
4 நிராயுதம்


 ’நிராயுதம்’ படத்திற்காக அரை நிர்வாணமாக நடித்த சாரிகா
சென்னை,ஏப்.27 (டி.என்.எஸ்) எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படம் ‘நிராயுதம்’. சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ’ஒரு காதல் செய்வீர்’, ’காதல் செய்ய விரும்பு’, ’ரங்கா’ ’மிட்டாய்’ உட்பட பல படங்களில் நடித்தவர். கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘கதம் கதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார்.


கனி இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணகுமார் ஒளிப்பதிவு செய்க்கிறார். ஆர்.ஜி.ஆனந்த் படத்தொகுப்பு செய்ய, மோகனமகேந்திரன் கலையை கவனிக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை சி.ஜெயராஜ் கவனிக்கிறார்.



கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.பி.ராஜதுரை இயக்குகிறார். படம் குறித்து கூறிய இயக்குநர் ராஜதுரை,   ”கதாநாயகன் சந்தோஷ் அமெரிக்காவிலிருந்து வரும் பந்தா பேர் வழி. சாப்ட்வேரில் பணிபுரிபவர் சாரிகா. அறிமுக நடிகரான வெங்கட் கால் டாக்சி டிரைவர். சரிகா வேலை முடிந்து நடு இரவில் வெங்கட்டின் கால் டாக்சியில் பயணிக்கிறார். அவருக்கு மயக்க மருந்து ஸ்பிரே செய்து அவளை கடத்துகிறான். கண்விழித்து பார்க்கும் போது அரை குறை ஆடையுடன் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறாள். அரை குறை ஆடையுடன், தனது ஆடைகளையும், தப்பிக்க வழியையும் தேடி ஒவ்வொரு அறையாக கடந்து வரும் போது ஒரு அறையில் ஹீரோ சந்தோஷும் அரை குறை ஆடையுடன் அடைத்து வைக்கப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள்.



அரைகுறை ஆடையுடன் இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை! ஊட்டியில் பங்களா போன்று அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.” என்றார்.



5 SPECIAL ID


Chan Chi-Lung has been an infiltrator in Cheung Mo-Hung's Hong Kong triad gang for many years. After a failure of a recent negotiation by Lung with the other three local triad gangs on behalf of Hung makes the latter suspicious of Lung's identity. Hung sets to wipe out every undercover cop in his gang and as a result many cops are caught and wiped out. Sensing the danger, Lung requests to put an end to his undercover career from his captain, Cheung. However, Cheung sends Lung to Mainland China to infiltrate a business of "Special Identity" trading instead. The business is run by Hung's best protégé, Sunny, who was Lung's previous buddy in the gang. Cheung promises to reinstate Lung's police identity in conclusion of the mission once Sunny's business breaks down. Lung agrees, and joining him are local police officer Fang Jing and her chief Lei Peng from the Mainland Chinese police force. But before they can get to Sunny, the latter suddenly vanishes leaving Lung exposed and in great ..


நன்றி - மாலைமலர் , தினமணி , ஆல் சினி வெப்சைட்

பாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்ளிப் ஒரிஜினலா?

அன்பே! அரிசி மூட்டை மாதிரி ஓவர் வெய்ட் இருந்துட்டு உன்னை உப்பு மூட்டை தூக்கிப்போகச்சொல்கிறாயே இதெல்லாம் நடக்கற காரியமா?


=========



2 எக்ஸ்பிரஸ் பஸ் ல ஒவ்வொரு ஸ்டாப்பிங்கா நிறுத்தி நிறுத்திப்போறான்.1 டூ 1 அப்டின்னா இதானா?




==============



3 பாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா வீடியோ க்ளிப்பை வாட்சப்ல அனுப்பிட்டு இது ஒரிஜினலா?டூப்ளிகேட்டா?னு என்னைக்கேட்டா எனக்கெப்டித்தெரியும்?




============




4 விஜய் ரசிகை டூ அஜித் ரசிகன் (காதலி டூ காதலன்)


=
தவம் இன்றிக்கிடைத்த வரம் நீ.
என் வாழ்வில் எல்லாம் சுகமே



=============

5 வரம் எப்போ சார் வரும்?


தீபாவளிக்கு வர்றம்


==============
6 கடவுள் நேரில் தோன்றி என்ன வரம் வேண்டும்?னு கேட்டாக்கூட அய்யய்யோ வரமா?வேண்டாம்னு விஜய் ரசிகர்கள் மறுத்துடுவாங்களோ?# அஜித்-ன் வரம்


===========

7 ஜவுளிக்கடை ஓனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.MRP ரேட் ஸ்டிக்கர் எல்லா பிராடக்ட்லயும் இருக்கனும்.இல்லைன்னா 5000 ரூபா ஸ்பாட் பைன்.ரெய்டு வருது



==============


8 நானா எந்த சிம்பு படத்துக்கும் போனதில்ல .பிகர் ீங்களா வந்து கூட்டிட்டுப்போறேன்னா வேணாம்னு சொன்னதில்லை.புரிதலுக்கு நன்றி




=============


9 ஒரு நெட்தமிழன் இன்னைக்கு காலைல 6 மணிக்கு 4 பொண்ணுங்களை ரயில்ல ஏத்தி 389 மென்சன் போட்டு இன்னும் நடத்திட்டேதான் இருக்கான்.இறக்கி விட மனசு வர்ல


=================


10 தலைல முழுசா முடி இருப்பவன் கம்முனு இருக்கான்.இந்த வழுக்கை மண்டையனுங்கதான் 10 நிமிசத்துக்கு ஒரு வாட்டி சீப்பெடுத்து சீவி சிங்காரிக்கறான்


=============


11 FB ல ஒரு பொண்ணு : ...! இப்டி ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.ஒரு நெட் தமிழர் புரியாத புதிர்க்கவிதை இதுங்கறார்.3 புள்ளி 1 ஆச்சரியக்குறி தானே?


==============


12 ஒருத்தரோட தப்பை சுட்டிக்காட்ரவன் அந்த தப்ப செய்யாத வனா இருக்கணும்.னு அவசியம் இல்லை.இன்னொரு அயோக்கியன் உருவாகக்கூடாதுனு நினைப்பவனாஇருக்கலாம்ீ


============


13 வாலு பட டைட்டில் ஓடும்போது இந்தப்படம் ரிலீஸ் ஆகக்காரணமாய் இருந்தவர் உங்கள் விஜய் னு போடுவாங்களோ?


==============

14 மவுனம் பிடிக்கலைன்னா நீயே பேசிவிடு.


கிருணிகாவின் லவ்வர் =நான் பேசுனா நீ கூட கூட எதுனா பேசுவே.சண்டை வரும்.வம்பா?



--------------------

15 சிக்கலில் இருக்கும் ஊரார் (டி ஆர்) படத்தை ரிலீஸ் செய்ய உதவினால் தடை இல்லாமல் தன் படம் தானே ரிலீஸ் ஆகும் # தளபதி பார்முலா


==============


16 புரட்சித்தளபதி பாயும் புலி =,மதகஜராஜா ரிலீஸ் ஆக உதவி செய்வீங்க்ளா?
இளையதளபதி புலி = பாயும் புலி ரிசல்ட்டைப்பார்த்துட்டு சொல்றேன்


==============

17 உன் நலனில் அக்கறை கொண்டவர் உன் பெற்றோர் போல் யாரும் இலர்.பெற்றோரை மதித்து அவர் சொல் கேட்டு நடந்தாலே வாழ்வில் வெற்றி பெறுவாய்


==============


18 சூரியன் உதிக்கும் முன் நீ எழுந்து கொண்டால் அன்றைய நாளின் வெற்றி விடியலை நீ உறுதியாகக்காண்பாய்


=============


19 சைவ உணவே உடலுக்கு ,ஆன்மாவுக்கு ,ஆரோக்யத்துக்கு ,நீண்ட ஆயுளுக்கு நல்லது

==========


20 கலைஞரைப்போல் குடும்ப அரசியலை திணித்தால் என்னை செருப்பால் / சவுக்கால் அடியுங்கள் என நான் 10 வருடம் முன் சொன்னதை மறந்து விட்டு என் மகனை CM ஆக்குங்கள்-DR ராம்தாஸ்


==


============


Thursday, July 30, 2015

4 ஷகீலா படமும் நல்லா இருந்த சீமான் அண்ணாச்சியும்

எனக்கும் நிதீஷ்குமாருக்கும் இடையே சண்டையை மூட்டிவிட பார்க்கிறார் பிரதமர் மோடி; லாலு பிரசாத்் குற்றச்சாட்டு.# LKGபசங்ககூட ஒத்துமையா இருக்காக



==============




2 மொபைல் போன் பயன்படுத்தினால் கேன்சர் வரும் ; ஆய்வில் தகவல் # நாசமாப்போச்சு.10 வருசம் முன்னாடியே சொல்லித்தொலைச்சிருக்கலாமில்ல?




==========



3 கர்நாடகாவில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது..# வருமானத்துக்கு மேல 10% தானே திருடி இருக்காரு.விட்ருவாங்க இல்ல?




===========




4 முதல்–அமைச்சர் கனவு காண்கிறார் அன்புமணி: திருமாவளவன் தாக்கு..# இவருக்கு அவரு கனவு காண்பது கூடப்பொறுக்கலை போல




=========




5 புலியில் இளவரசியாக மாற்ற ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் # அவ்வை சண்முகிக்கே 2 மணி நேரம் தானேம்மா?




==========




6 தானாகவே சரண் அடைந்ததால் கருணை காட்ட வேண்டும்: யாகூப் மேமனின் மனைவி .# அவருதான் ஜெயில்ல இருக்காரே.நெட் எப்டி யூஸ்ு?கருணைமலரைபார்ப்பாரு?



============




7 விஷாலுக்கு வில்லனான சத்யராஜ்.புதுப்படம் # சரத்குமாரை வில்லனாப்போட்டுடுங்க.நேச்சுரலா இருக்கும்



==========




8 நாங்கள் தனியாக நிற்க பயப்பட மாட்டோம் - தமிழிசை # வாம்மா சோலோ ஹீரோயின்் சோப்ளாங்கி




==========




9 பிரதமர் மோடிக்கு நிதிஷ்குமார் 7-

கேள்விகள்# எப்டியும் பதில் வரப்போறது இல்லை.பல்க்கா கேட்கவேண்டியதுதானே?


===========

10 மோடி பிரபலமாகி வருவதை காங்கிரஸ் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பொறுத்துக்கொள்ள முடியல

==========

11 மாரி பத்து நாட்களில் 50 கோடி வசூல்
# என்னய்யா இது?தனுஷ் ரசிகர்களும் புள்ளி விபரத்துல "புலி"யா இருக்காங்க?


============

12 அஜித் ன் புதிய பட டைட்டில் வரம் # என்னது?வீ ரம் வ ரம் னு டைட்டில்லயே ரம் வருது?டாக்டர் அய்யா எதுனா சொல்லப்போறாரு


==============\\\

13 நல்ல பையன் கிடைத்தால் நாளைக்கே திருமணம்-
- த்ரிஷா
சிக்கல் என்னான்னா நல்ல பையன் நடிகையை கட்ட மாட்டான்.தொழில் அதிபருங்கதான் ரெடி


============


14 பாலியல் சுதந்திரம் தேவை ?" நடிகையும் பி ஜே பி யின் எம் பி யுமான கிரன்கேர் பேட்டி !!
// பயங்கர ஜொள்ளு பார்ட்டி என்பதன் சுருக் தான் பிஜேபி?


============



15 பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு
"சொட்டு மது" இருக்காது -அன்புமணி.
# வந்தாத்தானே?தமிழன் திராவிடக்கட்சிக்குதான் மாத்தி மாத்தி குத்துவான்


==========


16 செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி அதிரடியாக பறிப்பு
னாலே கவுண்டமணி ட்டயோ யார்ட்டயோ அடி வாங்குவார்னு ஜாதகத்தில இருக்கும் போல்


=============



17 MGR மலையாளி என்பதால் அவர் படங்களை நான் பார்த்ததே இல்லை : --சீமான்
#,ஷகீலா படம் மட்டும் அன்னைக்கு பாத்தீங்ளே?


============


18 அமெரிக்காவில் செல்ஃபி எடுத்தவரை கடித்த விஷப் பாம்பு: ு ரூ.95 லட்சம் செலவு # பாம்பு படம் எடுக்கும்போது போட்டிக்கு படம் எடுத்தா கோபம் வராதா?


================

19 ராகுல் கூட்டத்தில் 10 ஆயிரம் 'சேர்' மாயம்
# சேரிடம் அறிந்து சேர் னு சேர்க்குக்கூட தெரிஞ்சிருக்கு


==============


20 சென்னைமெட்ரோ ரயிலில் பயணிக்க பொதுமக்கள் அச்சம்-விஜயகாந்த்
#,ஆமா.யார்.யாரோ சரக்கடிச்ட்டு வந்து தொந்தரவு பண்றாங்களாம்


=================