Tuesday, August 03, 2021

திட்டம் இரண்டு -2021 - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர்)

 இயக்குநர்  அகத்தியன்  எடுத்த  விடுகதை ,  பாரதிராஜாவின்  முதல்  மரியாதை , மீராநாயர்  இயக்கிய  ஃபையர் , கே  பாலச்சந்தர்  இயக்கிய  அபூர்வ  ராகங்கள்  இந்த  படங்கள்  எல்லாமே  மாறுபட்ட காதல்  கதைகள் , ஆனா  சமூகம்  ஏத்துக்க  தயங்கும்  பொருந்தாக்காதல்  கதைகள் . இவைகளில்  விடுகதை  தவிர  மற்றவை  எல்லாம்  செம  ஹிட்  அதனால  இதே  டைப்  லவ்  ஸ்டோரி  எடுக்க  நினைத்த  இயக்குநர்  விடுகதை  மாதிரி  ஃபிளாப்  ஆகிடக்கூடாதுங்கறதுக்காக    த்ரில்லர்  ஃபார்முலாவில்  இந்தக்கதையைக்குடுத்திருக்கார் ,  யாராலும்  யூகிக்க  முடியாத  பிரமாதமான  க்ளைமாக்ஸ்  என  பலராலும்  கொண்டாடப்பட்ட இந்தப்படத்தின்  கதையை  அதன்  சஸ்பென்ஸ்  கெடாமல்  சுவராஸ்ய்மாக  சொல்வதே  ஒரு  சவால்  தான்   


சம்பவம்  1 - ஒரு  லாங்  ட்ரிப்  பஸ்  பயணம். நாயகியும்,  நாயகனும்  முன்  பின்  அறிமுகம்  ஆகாதவர்கள், அருகருகே  அமர்ந்து  பயணிக்கும்  தருணம் கவுதம்  வாசுதேவ்  மேனன்  படங்களில்  வருவது  போல  கவிதையான  தருணங்களை  சுவராஸ்யமாக  சொல்லி  பயணம்  முடிந்ததும்  இருவரும்  பிரிகின்றனர். நாயகியைப்பற்றி  எந்த  விபரமும்  நாயகனுக்கு  தெரியாது,  ஆனா  நாயகிக்கு  நாயகனின்  ஃபோன்  நெம்பர்  தெரியும் . 


சம்பவம் 2  - திருமணம்  ஆன  புது  மணத்தம்பதி.  மவுன ராகம்  படத்தில்  வருவது  போல்  நாயகிக்கு  ஏற்கனவே  ஒரு  காதலன்  இருந்திருக்கான், ஆனால்  வீட்டில் பெற்றோர்  வற்புறுத்தலுக்கு  இணங்க  மேரேஜ்க்கு  சம்மதிக்கிறாள்.,  விஷயம்  தெரிஞ்ச  கணவன்   முதல்  இரவு  நடத்தாமலேயே  சந்திரபாபுவின்  மாடி  வீட்டு  ஏழை   படம்  போல்  (  அவரது  சொந்த  வாழ்க்கைக்கதை)  மனைவியை  காதலனுடன்  சேர்த்து  வைக்கிறார் 


சம்பவம்  3 -  உன்னை  நினைத்து  பட  லைலா  கேரக்டர்  போல ஒருத்தி  காதலனை  டைம்  பாஸ்க்காக  லவ்வறா. வசதியான    வேற  ஆள்  கிடைச்சதும்  இவனைக்கழட்டி  விட்டுடறா. அவன்  செம  காண்டுல  அவளைக்கொலை  பண்ண  டைம்  பார்த்துட்டு  இருக்கான்  இன்னொரு  பெண்  குறுக்கே  வர்றா... அவ  பழகறதை  இவன்  தப்பா  புரிஞ்சுக்கிட்டு  தன்  காதலை  சொல்லறான். ஆனா  அவளுக்கு  இவனை  பிடிக்கலை . இவன்  செம  காண்டாகி  இவ்ளையும்  போட்டுத்தள்ளிடனும்னு  பிளான்  பண்றான்


சம்பவம் 4  -  நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசர். ஒரு  ஆக்சிடெண்ட்  கேஸ்.  இவரது  பால்ய  கால  பள்ளித்தோழி  ஸ்பாட்  அவுட். விசாரணைல  அது  கொலையாக  இருக்கலாம்னு  சந்தேகப்படறா.  அவ  புருசனுக்கு  வேற  ஒரு  பெண்  கூட  காண்டாக்ட்   இருந்து  அது  க்கு  இடைஞ்சலா  இருந்த  தன்  தோழியை  அதாவது  அவன்  மனைவியை  திட்டம்  போட்டு  தீர்த்துக்கட்டி  இருக்கலாம்கற  டவுட் .  அந்தக்கேசை  கைல  எடுத்து    துப்பு  துலக்கறா


 மேலே  சொன்ன  4  சம்பவங்களும்   ஒரு  புள்ளியில்  இணைவதுதான்  இந்தப்படத்தின்  திரைக்கதை 


நாயகியா  ஐஸ்வர்யா ராஜேஸ்.  வைஜெயந்தி  ஐபிஎஸ்  விஜயசாந்தி  மாதிரி  போலிஸ்  கெத்து  இவருக்கு  வர்லை  என்பதால்  அவரை  பெரும்பாலும்  போலீஸ்  யூனிஃபார்மில்  காட்டாமல்  மப்டியில்  காட்டிய்து  இயக்குநரின்  புத்திசாலித்தனம்


 இவ்ரது  தோழியா  வருபவர்  புதுமுகம்  போல , நடிப்பு  ஓக்கே ,  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் ,  பிசுறு  தட்டுது . இந்த  மாதிரி  முக்கிய  ரோலில்  ஆல்ரெடி  பிரபலமான  நாயகியை  புக்  பண்ணி  இருந்திருக்கலாம். இருந்தாலும்  அனன்யா  சமாளித்திருக்கார் 


நாயகனாக  வரும்  சுபாஷ்  செல்லம்  பெண்களைக்கவரும்  மோகன் , சுரேஷ்  பாணி  சாஃப்ட்  ஃபேஸ்.  வாய்ப்புகள்  கிடைத்தால்  வலம்  வருவார்


இயக்குநர்  விக்னேஷ்  கார்த்திக்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  மட்டும்  மலை  போல்  நம்பி  திரைக்கதை  அமைப்பில்  இடையில்  கொஞ்சம்  தடுமாறி  இருக்கிறார்.  கொஞ்சம்  மெனக்கெட்டு  அமைத்திருந்தால்  ராட்சச்ன் , மாதிரி  ஒரு  பிரமாதமான  க்ரைம்  த்ரில்லராக  உருவாக்கி  இருக்கலாம். ஆனாலும்  தமிழ்  சினிமாவில்  ஒரு  வித்தியாசமான  முயற்சியே 


இசை  சதீஷ்  ரகுநாதன்.  தீம்  மியூசிக்  குட் . த்ரில்லர்  படங்களுக்கே உரித்தான்  பர  பர  இசை . கோகுலிம்  ஒளீப்பதிவு  இரவில்  செம  பகலில்  சுமார்


நச்  வசனங்கள்


1   மிஸ்,  நான்  தூங்கறப்ப  பக்கத்துல  இருக்கறவங்க  மேல  கால்  போட்டுக்குவேன்,ம் உங்களுக்கு  ஏதும்  ஆட்சேபணை  இல்லையே?


 வாட்?


 சும்மா  சொன்னேன், பயந்துட்டீங்களா? 


2   நமக்குப்பிடிச்சவங்களை  திரும்பித்திரும்பி  மீட்  பண்ணினா  சுத்தமா  பிடிக்காமயும்  போயிடும்,  ரொம்பவே  பிடிச்சிம்  போய்டும்.


3   நாம  பயங்கரமா  லவ்  பண்ற  ஒருத்தரை  ஏன்  அவ்ளோ  தூரம்  டீப்பா  லவ்  பண்றோம்னு  கேட்டா  காரணம்  சொல்லத்தெரியாது 


4     என்னைப்பிடிச்சிருக்கா?


 பிடிக்கலைன்னா  “  கிஸ்  பண்ணவா?னு  கேட்டப்பவே  செருப்பால அடிச்சிருப்பேனே?


5  ஒரு  ஆள்  நமக்கு  எவ்ளோ தான்  க்ளோசாக  இருந்தாலும் நமக்குத்தெரியாத  ஒரு  ரகசியத்தை   சொல்லாம  இருந்தா  கடுப்பு  தான்  ஆகும்


6  மத்தவங்களை  கஷ்டப்படுத்தாதவரை நாம  பண்ற   எதையுமே  தப்பு  சொல்ல  முடியாது 


7  நம்ம  வாழ்க்கைல முக்கியமான  தருணங்களில்  நாம  எடுக்கும்  முடிவுகள்  நம்ம  சொந்த  முடிவா  இருக்கனும். மத்தவங்க  சொன்ன  முடிவா  இருக்கக்கூடாது 


சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -   காதல்  படங்களை  விரும்புகிறவர்கள்  , த்ரில்லர்  ரசிகர்கள் ,  மாறுபட்ட  கதை  அமசம்  பார்க்க  நினைப்பவர்கள்  என்  3  கேட்டகிரில  இந்தப்படம்  பரிந்திரைக்கலாம். லேடீசும்  பார்க்கும்  விதத்தில்  டீசண்ட்  ஆன  காட்சி  அமைப்புகள் .  எதிர்பார்க்கப்படும்  ஆனந்த  விகடன்  விமர்சன  மார்க்  42    குமுதம்  ரேங்க்கிங்  2.75 / 5  .சோனி  லைவ்  ஓடிடி  ரிலீஸ்


Thursday, July 01, 2021

AANUM PENNUM 2021 (MALAYALAM) - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரொமாண்டிக் ஸ்டோரீஸ்)

 3  வெவ்வேறு  சிறுகதைகள் , ஒன்றுக்கொன்று  தொடர்பில்லாதவை  அமேசான்  பிரைம் லயும்  நீம் ஸ்ட்ரீம்லயும்  ரிலீஸ்  ஆகி  இருக்கு. முதல்  கதைலயும், மூணாவது  கதைலயும்  அடல்ட்  கண்ட்டெண்ட்  இருப்பதால்  ஃபேமிலியோட  பார்க்க  முடியாது , அதனால்  ஃபேமிலில இருக்கற  எல்லாரும்  பேசி  வெச்சுக்கிட்டு  தனித்தனியாக பார்க்கவும் 


1  சாவித்திரி  -  ஹீரோயின்  போலீசால்  தேடப்படும்  ஒரு  கம்யூனிஸ்ட்  போராளி.  படத்தோட  ஓப்பனிங்  சீன்லயே  போலீஸார்  அவரை  துரத்தறாங்க , அவங்க எஸ்  ஆகி  ஒரு  கிராமத்துல  ஒரு  குடும்பத்துல  பணிப்பெண்ணா  ஜாயின்  பண்றாங்க , கதை  நடக்கும்  கால  கட்டம்  1948-1949  ஆனா  ஒயிட்  அண்ட்  பிளாக்  இல்லை  கலர் தான்.


அந்த  குடும்பத்துல   நாயகி  மேல  2  பேரு  கண்  வைக்கறாங்க , நெஞ்சம்  மறப்பதில்லைல  செல்வராகவன்  ரெண்டரை  மணி  நேரம்  இழுத்த  திரைக்கதையை  இவங்க  40  நிமிசத்துல   சொல்லி  இருக்காங்க  தன்னை  வேட்டையாடத்துடிக்கும்  2  ஆண்  மிருகங்களை  பக்காவா  பிளான்  பண்ணி  நாயகி  எப்ப்டி  வேட்டையாடுறா  என்பதே  கதை , இது  போக  நாயகி  காதலிக்கும்  ரொமாண்டிக்  போர்சனும்  உண்டு 


நாயகியா சனீப்தா  மேனன்  கேரளத்து  வனப்புடன்  போனாப்போகுதுனு  கொஞ்சம்  நல்ல  நடிப்பையும்  காட்டி  இருக்கிறார்


இது  போக  பாஞ்சாலி  சபதம்  தர்மன்  அர்ஜூனன்  குறியீடுகளும்  படம்  நெடுக  உண்டு 


2  ராச்சியம்மா 


ஹீரோயின்  ஒரு பால்காரி, ஆனா இவரோட  கேரக்டர்  ஸ்கெட்ச்  பிரமாதமா  வடிவமைக்கபப்ட்டிருக்கு ,  யாருக்கும்  பயப்படாத ஆனா  எந்த  ஆணும்  நெருங்க  முடியாத  துணிச்சலான  பெண். இவருக்கு  நாயகன்  கூட  மலரும்  அன்பு  நட்பு  காதல்  தான்  கதை 


நாயகியா  பார்வதி  அதகளம்  பண்ணி  இருக்காங்க  வெரிகுட்  ஆக்டிங். அவரோட  வாய்ஸ்  மாடுலேசன்  ,  பாடி  லேங்குவேஜ்  இரண்டும்  செம 


அம்மை  நோய்  வந்தபின்  நாயகனை  தாயாக  கவனிக்கும்போதும்  சரி ,  நாயகன்  தன்னை  விட்டுப்பிரிந்து  போய்  வேறு  ஒருவளை  ,மணந்து  குழந்தை பெற்றுக்கொண்டபோதும்  அந்தக்குழந்தை பேர்ல  தன்  சொத்துக்களை  டெபாசிட்  பண்ணி  வைத்ததாக  சொல்லும்போது  சரி  உருக்கமான  நடிப்பு .  மொத்தம்  35  நிமிசம்  படம்


3   ராணி 


ஹீரோ , ஹீரோயின்  இருவரும்  ஓப்பனிங்  சீன்லயே  லவ்வர்சாதான்  காட்டப்படறாங்க.  ஹீரோவோட  ஒரு  ஃபிரண்ட்  ஒரு  தனிமையான  இடத்தைப்பத்தி  சொல்லி  அங்கே  நாயகியை  தள்ளிட்டுப்போடா  என  ஐடியா  குடுக்கறார் (  ஆர்கானிக்  ஆர்காசம்  சாக்சம் )


 நாயகியை  நாயகன்  நைசா  பேசி  ஒதுக்குப்புறமான  அந்த  இடத்துக்கு  அழைத்து  செல்ல  தாஜா  பண்ணுவதுதான்  பாதிக்கதை 


ஹீரோயின்  சம்மதிச்சு  ஹீரோ  கூட  அந்த  பிரைவேட்  பிளேஸ்க்குப்போனபின்   ஏற்படும்  சம்பவங்களே  பின்  பாதி  திரைக்கதை 


நாயகியா  தர்சனா  ராஜேந்திரன்  கலக்கலான  முக  பாவங்கள்  ,  குறும்பு  கொப்புளிக்கும்   நடிப்பு  (  அதெப்பிடி  குறும்பை  கொப்பளிப்பது?னு  கேட்கக்கூடாது ) இந்த  தொகுப்புலயே  மிகவும்  ரசிக்க  வைக்கும்  கதை  இதுதான்  ஆனா  அநியாயத்துக்கு  நீளம்  கம்மி ,  நீலம்  அதிகம்  வெறும்  18  நிமிசம்  தான் 


சபாஷ்  டைரக்டர் 


1   கேரக்டர்ஸ்கெட்ச்  ,  ஒளிப்பதிவு  (  3  வெவ்வேறு  காலகட்டங்களை  பிரதிபலிக்கும்  மாறுபட்ட  ஷேடுகள் )   இரண்டும்  அருமை 


2    படத்தில்  வரும்  3  கதைகளிலுமே  நாயகியை  முன்னிலைப்படுத்தியது , நாயக்ர்களை  டம்மி  ஆக்கியது .  வில்லனுக்கும்  வேலை  இல்லை 


3   கேரளாவின்  வனப்பை  அள்ளி  எடுக்க  லொக்கேஷன்  செலக்சன்  ,  முதல்  கதையின்  நைட்  சீக்வன்ஸ் ,  மூன்றாவது  கதையில்  காஸ்ட்யூம்   டிசைனருக்கே  அதிக  வேலை  இல்லாமல்  செய்தது  , இரண்டாவது  கதையில்    ரொமான்ஸ்   என  கமர்ஷியல்  அம்சங்கள்  நிறைய 


  நச்  வசனங்கள் 


1   நீ  தனியாவே  இருக்கியே? உனக்குன்னு  யருமே  இல்லையா?


  ஏன்  இல்லை ?  கடவுள்  இருக்காரே? 

 உனக்கு  ஏதாவது  உடம்பு  சரி  ஆகாம  போனா  யார்  உன்னை  பார்த்துப்பா?  


  கடவுள்  பார்த்துப்பார் 


2  என்னய்யா?  ஆளே  மாறிட்டே?  உடம்பு  குண்டாகிடுச்சு ?


வயசாகுதில்ல?   நீ  மட்டும்  அப்படியே  இருக்கே? ரைட்  ரைட்  உனக்குதான்  வயசே  ஆகாதே? 


3   ஏன்  என்னை  விட்டு  போய்ட்டே?


  தப்பு  செய்யறது  தப்புனு  நீதானே  சொன்னே? 


ஓ, அதனாலதான்  வர்லையா?  நாமும் மனுசங்கதானே? தப்பு  செய்யாம  இருக்க  கடவுள்  இல்லையே? 


4   ரூம்ல  தனியா  இருப்பதும்  ஜெயில்ல  இருப்பதைப்போலத்தான் 


5   டேய் .. இதெல்லாம்  மேரேஜூக்குப்பின்  வெச்சுக்கலாமே?


 அது  ஓல்டு  ஃபேஷன்.  முன்னமே  பண்றதுதான்  லேட்டஸ்ட்  ஃபேசன்


சரி  நாம  பழமை  விரும்பிகளாவே  இருப்பமே? 


6   உன்  கூட  லாங்க் ட்ரிப்  வர  தயக்கமா  இருக்கு .  வேணா  தியேட்டருக்குப்போலாமா?  நீ  என்னென்ன  பண்ண  நினைக்கறியோ  அதை  எல்லாம்  செஞ்சுக்கோ


 அய்யோ , வீட்ல  பார்த்தா  வம்பு


  டேய்,  உன்  ஃபேமிலி  மெம்பர்ஸ்  எல்லாரும்  நமக்கு  பேக்  ரோல  உக்காந்தா  இருக்கப்போறாங்க ?


7   இந்தக்காலப்பசங்களுக்கு  சேகுவாரா  படம்  டி  சர்ட்ல  இருக்கனும்,  ஆனா   ரோமியோ  மனசு 


8  குருவாயூரப்பன்  சத்தியமா  உன்னை  ஏதும்  செய்ய  மாட்டேன்


  சரி ,  குருவாயூரப்பனுக்கு  பணி  கிட்டும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1  முதல்  கதைல  வர்ற  வில்லன்  நாயகியை  அடைய   முயற்சிக்கிறான்.  அவ  சம்மதம்  சொல்றாளா?  எதிர்க்கறாளா?  என்பதை  உணராமலேயே  எப்படி  நாள் நட்சத்திரம் ,  இடம்  எல்லாம்  சொல்லி  அங்கே  வரச்சொல்றான்?


2  அரண்மனை  மாதிரி  பங்களா  3  ஏக்கர்  கணக்கில்  இருக்கும்போது  அங்கேயே   தன்  விருப்பத்தை  நிறைவேத்திக்காம  பேக்கு  மாதிரி  தனியா  போய்  மாட்டிக்குவது  எப்படி ? 


3   பக்கவாதத்தால்  பாதிக்கப்பட்ட  அந்த  பெரியவர்  நடக்கவே  முடியாம  கை  காலை  அசைக்க  முடியாம  இருக்கார் , அவர்  கூட  நாயகியை  தப்பா  பார்க்கிறார்  என  காட்டுவது  ஓவர் .  பாக்கத்தான்  முடியும்? 


4      2வது  கதைல  நாயகன்  நாயகியை  விட்டுச்செல்ல  வலுவான  காரணங்கள்  இல்லை 


5    3  வது  கதைல  தனிமையான  இடத்துக்கு  செல்லும்   ஜோடிகள்  தங்கள்  உடைகளை  கழட்டி  பக்கத்துலயே  வெச்சுக்காம  அரை  பர்லாங்  தூரத்தில்  நிற்க  வைத்திருக்கும்  பைக்ல    எல்லா  டிரஸ்சையும்  கழட்டி  வெச்சுட்டு  போவது  நம்பும்படி  இல்லை 


6  டிரஸ்சை  சும்மா  விளையாட்டுக்குத்தான்  ஒளிச்சு  வெச்சேன்  என  அந்த  பெருசு  சொல்லும்போது  அந்த  லேடி  கண்டிக்காமல்  இருப்பது  ஆச்சரியம் 


 சி.பி  ஃபைனல்  கமெண்ட் -   ரொமாண்டிக்  ஸ்டோரீஸ்  விரும்பிப்பார்க்கும்  யூத்களுக்கான  படம்.  பிரமாதம்  எல்லாம்  இல்லை ,  மொக்கையும்  இல்லை .  பார்க்கலாம்  ரகம் , ரேட்டிங்  2. 5 / 5  

Sunday, June 27, 2021

மேதகு - புரட்சி வீரன் பிரபாகரனின் வாழ்க்கை சரித்திரம் பாகம்1



 விடுதலைப்புலிகளின்  தலைவர்  பிரபாகரன்  வாழ்வில்  நிகழ்ந்த  உண்மை  சம்பவங்களின்  தொகுப்புதான்  இந்தப்படம்.எந்த  வித  எதிர்பார்ப்பும்,  பில்டப்பும்  இல்லாமல்  ரிலீஸ்  ஆகி  பலரை  ஆச்சரியப்படுத்தி  இருக்கும்  படம்.


முதலில்  நம்மை  ஆச்சரியப்படுத்துவது  நடிகர்  நடிகைகள்  தேர்வு .  பிரமாதம்.அடுத்ததாக  நம்  மனம்  கவர்வது  அட்டகாசமான  வசனங்கள் .பின்னணி  இசை , ஒளிப்பதிவு , ஏடிட்டிங்  எல்லாமே  கனகச்சிதம்.  ஒரு  மாஸ்  ஹீரோவின்  படங்களில்  வருவது  போல்  கூஸ்  பம்ப்  காட்சிகளும்  உண்டு 


ஒரே  குறை  , இது  மினிமம்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  படம்,  வெறும்  50  லட்சம்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டிருக்கு . இலங்கையில்  நடக்கும்  தமிழர்  விழா   வில்  நடனக்கலைஞர்கள்  5  பெண்கள்  5  ஆண்கள்  மட்டுமே  பங்கேற்று  இருப்பது ஒரு  பின்னடைவே ,  ஆனா  வேற  வழி  இல்லை 


திரைக்கதை  ,  காட்சி  அமைப்புகள்:  எல்லாம்  இயக்குநர்  கிட்டியின்  திறமையை  பறை  சாற்றும் 


  வில்லுப்பாட்டு  மூலமாக  கதை  சொல்லும்  உத்தி  ஓக்கே  தான்..  உத்தம  வில்லன்  படத்தில்  இதே  உத்தி  கையாளப்பட்டபோது  போர்  அடிக்கும்  காட்சிகள்  இருந்தது ,  ஆனா  இதில்  போர்  அடிக்கலை 


சபாஷ்  டைரக்டர் 


1    பிரபாகரனின்  இளமைப்பருவ  உருவத்தோற்றத்துடன்  நடித்திருப்பவர்  பாடி  லேங்க்வேஜ் ,  பார்வை  ,  வசனம்  பேசும்  லாவகம்  எல்லாமே  அற்புதம் 


2   புத்த  பிட்சு  இலங்கையில்  ஒரு  முக்கிய  பிரமுகரை  கொலை  செய்யும்  காட்சி  படமாக்கபப்ட்ட  விதம்


3   ஹீரோவின்  அப்பாவுடன்  ஹீரோ  பேசும்  உரையாடல்  காட்சி  அவ்ளோ  யதார்த்தம் ,  வலிமையான  வாக்குவாதம் 


4   ஹீரோ  முதன்  முதலாக  அரங்கேற்றும்  கொலை  காட்சி 

 

5   ஹீரோவின்  சகோதரியை   சீண்டும்  போலீசை  சகோதரியே  தாக்கும்  காட்சி



நச்  வசனங்கள்

 

1   இனி யாரும் அழவேண்டாம் எனக்கூறி ஒருவன் பிறந்தான்

 

2  அப்பா நாம ஏன் திருப்பி அடிக்கல ?

 

3   ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்..! 

 

4   பிறந்தான்  பிறந்தான்  சமரசம்  இல்லா  ஒரு  மாவீரன்  

 

5    இனி  அதிகாரம்  அவங்க  கையில்  இருக்காது , வெறும்  பயம்  மட்டுமே  பையில்  இருக்கும் 

 

6  அமைதி  வழிப்போராட்டம்  பயன்  தராது   அமைதியாப்போராடுனா  பலன்  கிடைக்கும்  என்று  நம்புவது  உலகின் மிகப்பெரிய  மூட நம்பிக்கை 

 

7 எந்த  ஆயுதத்தால  எதிரி  தாக்கறானோ  அதே  ஆயுதத்தை  கையில்  நாம  எடுக்கனும் 

 

8  பயம்  ஒன்று மட்டுமே இன்னொருவர்  மனதில் அடிமைத்தனத்தை   ஆழமா  விதைக்கும் 

 

9  முதல்ல  பதட்டத்தை  உருவாக்குவோம், பயம்  தானா  உருவாகும்

 

10  விடியலை  தள்ளிப்போட  இயலாது 

 

11  சுவாசிக்க  கத்துக்கிட்டு  இருக்கும்போது  ஏன்  நுரையீரல்ல  கத்தி  பாய்ச்சறாங்க ? 

 

12  உரிமையைக்கேட்கறோம்,அதற்கு  விலை  உயிரா?  

 

 

சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -   மேதகு − விடுதலைப்புலி பிரபாகரனின் வாழ்க்கை சரித்திர சம்பவங்களின் தொகுப்பு,பாகம் 1. இது 100 நிமிடங்கள், வசனம் ,பிஜிஎம் பட்டாசு .இளவயது பிரபாகரன் நடிப்பு பாடிலேங்குவேஜ் அருமை..அனைத்து தமிழர்களும் அறிய"வேண்டிய வரலாறு என்பதால் ரேட்டிங் தேவை இல்லை 

Friday, June 18, 2021

ஜெகமே தந்திரம் - சினிமா விமர்சனம்



 ஹீரோ  ஒரு  லோக்கல்  ரவுடி ,  அவரோட   வாழ்க்கைல  ஒரு  சம்பவம்  நடக்குது .  ஃபாரீன்  போறார் . அங்கே  இரு  தரப்பு  டாண்கள்  மோதிக்கறாங்க .  ஹீரோ  ஒரு  தரப்புக்கு  ஆதரவா  இருக்கார் , இன்னொரு  தரப்பை  தந்திரமா  இன்ஃபார்மர்  மாதிரி  இருந்து  கழுத்தை  அறுக்கறார்.


 அங்கே தான்  ஒரு  ட்விஸ்ட்  யாரை  போட்டுத்தள்ள  உதவினாரோ  அந்த  டாண்  ஹீரோயினோட  கார்டியன்.  இப்போ  ஹீரோ  யூ  டர்ன்  அடிக்க  வேண்டிய  கட்டாயம்  .  வை  கோ   எப்படி  ம  ந  கூ  ஒர்க்  அவுட்  ஆகலைனு  தன்னை  துரோகினு  சொன்னவங்க  கூடவே  சேர்ந்தாரோ  அப்படி  ஒரு  அந்தர்பல்டி  அடிக்கறாரு 

 

  ஹீரோயின்  லேசுப்பட்ட  ஆளில்லை  , சசிகலா  மாதிரியே கிரிமினல்  வேலை  எல்லாம்  பண்றாப்டி  .  இறுதியில்  ஹீரோ  ஹீரோயினை  வென்றாரா?   துரோகம்  செஞ்சதுக்கு  பரிகாரம்  தேடிக்கிட்டாரா?  என்பதை  நெட்  ஃபிளீக்சில்  காண்க

 

 

 ஹீரோவா  தென்னக  ப்ரூஸ்லீ  தனுஷ் .  இவருக்கு  கேரக்டர்  படி  புதுப்பேட்டை ,  வட  சென்னை  ரோல்.  கெட்டப் படி  பேட்ட  ரஜினி     மாதிரி .,.  புகுந்து  விளையாடி  இருக்கார் .  ஆனா  என்ன  தான்  ஹீரோயிசம்  காட்டுனாலும்   ஈர்க்குச்சி  மாதிரி  இருந்துட்டு  ஒரே  ஷாட்டில்  25  பேரை  அடிப்பதெல்லாம்  ஓவர் . சரி  தமிழ்  சினிமா  தலைஎழுத்து  அவ்ளோ  தான்னு  சகிச்சுக்கலாம் 


  ஹீரோயினா  ஐஸ்வர்யா  லட்சுமி .  இலங்கைத்தமிழில்  சமாளிக்கிறார்.  சுமாரான  50  மார்க்  ஃபிகரான  இவருக்காக  ஹீரோ  90  மார்க்  ஃபிகரைக்கண்டது  போல்  உருகுவது  எல்லாம்,  ஓவரோ  ஒவர் .  ஹீரோயின்   வில்லி  ஆகப்போறார்  என்ற   அந்தக்கால  சஸ்பென்ஸ்  எல்லாம்  பெருசா  எடுபடலை.  முதல்லியே  தெரிஞ்சிடுது . அந்த  இன்ண்டர்வெல்  சஸ்பென்சை   ரொம்பவே  நம்பி  இருக்காங்க 


  வில்லனா  2  பேரு .  அந்த  லோக்கல்  டாண்  நடிப்பு  குட்  


 ஃபாரீன்  வெள்ளைக்காரன்  கெட்டப்  சைக்காலஜிக்கல்  த்ரில்லரான    த  ஆக்குபண்ட்  வில்லன்  கெட்டப் .  இடை  வேளை  வரை  ஓக்கே .  கடைசில  எடுபடலை 


  ஒரு  சீன்ல  சாமார்த்தியமா  ஒரு  டயலாக்  வெச்சிருக்காங்க .  வெள்ளைக்காரனான  வில்லன்  ஏன்  இந்தியனான  தனுஷ்  மேல  அவ்ளோ  நம்பிக்கை  வெச்சான்?  அதுக்கு  பதில்   கடைசி  வரை  இல்லை  நாம  யாரும்  கேள்வி  கேட்டுடக்கூடாதுனு  அவங்களே  கேட்டுக்கிட்டாங்க  போல 


 தமிழ்  மட்டுமே  தேரிஞ்ச  ஹீரோ ,  இங்க்லீஷ்  மட்டுமே  தெரிஞ்ச  வில்லன்  இருவர்  சந்திப்பு  காட்சிகள்  எல்லாம்   ஸ்டாலின்  மோடி  சந்திப்பு  மாதிரி  செம  காமெடி .  அவருக்கு  தமிழ்  தெரியாது  , நம்மாளுக்கு  இங்க்லீஷ்  ஹிந்தி  எதுவுமே  தெரியாது .  என்னத்தைப்பேசி  இருப்பாரோ ? 

கலையரசனுக்கு   டாணின்  தம்பி  ரோல்  பரவால்லை 


 வசனங்கள்  எல்லாம்  பரவால்லை .  இலங்கை  தமிழ்  அகதி  மேட்டரை  வலுக்கட்டாயமா  திணிச்சிருக்காங்க .  த  ஃபேமிலிமேன்  2  பாதிப்போ ? 


 இசை  சந்தோஷ்  நாராயணன்..  தர   லோக்கல்  இசை .   2  பாட்டு  தேவல 


ஒளிப்பதிவு  , எடிட்டிங்  பரவால்ல 


 இயக்கம்  கார்த்திக்  சுப்புராஜ் . அக்மார்க்  அதே  பாணி  இயக்கம் .  நாட்  பேடு  நாட்  சூப்பர்  , பராவல்லை  ரகம்

 

நச்  டயலாக்ஸ்

 


உண்மையை உண்மையா சொன்னா மட்டும் போதாது , அவங்களுக்குப்பிடிக்கற மாதிரி கதையாவும் சொல்லனும
 
2  சுருளி ,  வேணாம்,  அண்ணனுக்குத்தெரிஞ்சா...
 
உங்கொண்ணனுக்குத்தெரியனும்கறதுக்காகத்தான்  உன்னைப்போடறோம் 
 
 
3   தாம்பத்யம் ,  தாம்பூலம்  என்ன  வித்தியாசம்?
 
  தாம்பூலம்கறது  எங்கப்பா  பார்க்கற  டிவி  சீரியல்.. தாம்பத்யம்கறது  அதே  டி வி ல   நான்  பார்க்கற   கில்மா  கேள்வி பதில்  ப்ரோகிராம் 
 
 4    போய்  அவனைத்தூக்குனு  சொல்றியே?  அவன்  என்ன  அன்னாசிப்பழமா  வித்துட்டு  இருக்கான்?  அணுகுண்டு  வீசிட்டு  இருக்கான்பா  

5   அடுத்து  என்ன  எழவு  ?  எழவு  தான் ..  ரெடி  பண்றோம்

6    அஞ்சு  நிமிசம்  பேசுனா  என்னைப்பத்தி  தெரிஞ்சிடுமா?

அப்போ  அஞ்சு  மணி  நேரம்  பேசுனா  புரியுமா? 5  நாள்  பேசுனா  புரியுமா? அதான்  அன்னைக்கே  சொல்லி  வெச்சிருக்காங்க  அஞ்சுல  விளங்காதது  அம்பதுல  விளங்குமா? 

7    நான்  கல்யாணம்  பண்ணிக்கப்போற  பொண்ணு  இதுதான்
 
  காதலை  சொல்லிட்டியா?

 அதெல்லாம்  இனிமேதான், ஆனா  மேரேஜ்  மட்டும்  கன்ஃபர்ம் 

8   காசு  கொடுத்தா   என்ன  வேணா  செய்வியா?

  என்ன  வேணா  யாருக்கு  வேணா  செய்வேன் 

9   அதிகப்பணம்   நிம்மதிக்குக்கேடுனு  சொல்றவன்  எல்லாம்  பணக்காரனாத்தான்  இருக்காங்க 

10    பீட்டர்   கிட்டேயே  இரு, எனக்கு  இன்ஃபார்மரா  இரு

 எது  வரை ?  பீட்டர்  என்னைக்கண்டு  பிடிச்சு  போட்டுத்தள்ளும்,  வரையா?

  இல்ல , நான்  பீட்டரைப்போடும்  வரை 

11   எனக்கு  என்னமோ  நீங்க  பெரிய  தப்பு  பண்றீங்களோ?னு  தோணுது \\

  தப்பு  பண்றோம், அவ்ளோ தான்.  பெருசு  ,  சிறுசுனு  அளவெல்லாம்  கிடையாது 
 
12   தமிழ்  நாட்ல  நீங்க  அகதியா ?  புரியலையே?
 
  எங்களுக்கே  அது  புரியலையே?
 
13  முதல்  டேட்டிங்  என்பது  மொத  ராத்திரி  மாதிரி  ,  ரொம்ப  ஆராயவும்  கூடாது  ,  பயப்படவும்  கூடாது  , அனுபவிச்சுடனும்
 
      நெர்வசா  இருக்கு 
 
 பயப்படாதீங்க ,  கிஸ்  எல்லாம்  அடிக்க  மாட்டேன் ...   ஏன்னா  வாழ்க்கை  பூரா  அதானே   பண்ணப்போறோம்?  சும்மா  சைட்  மட்டும்  அடிச்சுக்கறேன்   

15   இந்தியா  மாதிரி  நிறைய  நாடுகள்  அகதிகளை  ஏத்துக்கறாங்க , ஆனா    அவங்களை   நிஜமா விரும்பறதில்லை 


16  யாரா  இருந்தாலும்  போரை  தொடங்கதான்  முடியும் ,  முடிக்க  முடியாது 

17    கெட்டவனா  ,  திருடனா  வாழலாம்,  ஆனா  துரோகியா  வாழக்கூடாது. துரோகியா  வாழ்வது  செத்ததுக்கு சமம் 

18   சுதந்திரம்  ரொம்ப  கா012ச்ட்லியா  இருக்கும்  போல  தெரிதே?

19     அவர்   கிட்டே  மத்தவங்களை  நம்பி   ஏமாந்து  போற  மைனஸ்  இருக்கு 

20  போராடறதுக்கு  பெரிய  பெரிய  விஷயம்  எல்லாம்  இருக்கு 

21      அய்யோ , சிரிக்கறீங்க ,    ரொம்ப  நாள்  கழிச்சு  கேப்  விட்டு  தலைவர்  படம்  பார்க்கற மாதிரி  இருக்கு

22   நேர்ந்து  விட்ட  கிடாவைத்தான்  போடப்பார்ப்பாங்க 


23   பூர்வீகம்  பூர்வீகம்னு  சொல்லிட்டு  இருக்கறவன்  முதல்ல  எங்கிருந்தோ  வந்தவன் தான் 

24    சிவராசன்  மாதிரி  இத்தனை  துப்பாக்கிகளை
  எதுக்கு   வெச்சிருக்கீங்க ?

 தலைவன்  மீண்டும்  வருவான்,  நாட்டு  மக்களுக்காகப்போராடுவான்னு  ஒரு  நம்பிக்கை  தான் 

25    வெயிட்  காட்றே...  வெள்லைக்காரனே  உன்னைக்கண்டு  பயப்படறான்

 நாம  எல்லாருமே  வெயிட்  தான் 

26    இவனுக்கு வெறும்  சாவை  மட்டும்  காட்டுனா  பத்தாதுனு ந் தோணுது



 
 
   ட்வீட்ஸ்\\
 
  வந்தா  ராஜாவாத்தான்  வருவேன்  சிம்புக்கு  பஞ்ச்  வைக்கறார்   தனுஷ் .. எனக்கு  ராஜா  எல்லாம்  வேணாம்,,   நானே  ஒரு  ராஜா  தான்
 
 
லாஜிக்  மிஸ்டேக்ஸ்  ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 
 
1  பல  வருடங்களாக   டாணாக  இருப்பவன்  ஒரு  துப்பாக்கியைக்கையில்  தூக்கியதும்  அதுல  புல்லட்  இருக்கா?  இல்லையா?  என்பதை  வெயிட்  வெச்சே  கண்டுபிடிக்க  முடியாதா? 
 
 
2   ஹீரோ  ஒரு  சமயம்  ஃபாரீனர்  ,  லொக்கல்  ஆள்  இருவரில்  ஒருவருக்கு  விசுவாசமாக  இருக்க  ஒரு  முடிவு  எடுக்கிறார்.  அது  எந்த  அடிப்படையில் ? விசுவாசம்?  வசதி  ?   அதில்  தெளிவில்லை 
 
3     க்ளைமாக்ஸ்ல  வெள்ளைக்கார  வில்லன்  அடியாளுக்கு   ஃபோன்  போட்டு  ஸ்டேட்டஸ்  கேட்கும்போது  கன்  பாயிண்ட்ல  அடியாள்  பொய்  சொல்றான் . ஆனா  அதே  வீடியோ  கால்  போட்டிருந்தா  வில்லனுக்கு  பொசிஷன்  தெரிஞ்சிருக்குமே? 
 
4    இடைவேளை  ட்விஸ்ட்  வரும்போது  ஹீரோவை   வில்லன்  ஆட்கள்  8   துப்பாக்கிக்குண்டுகள்  நெஞ்சில் ,  தோளி ல்   ஷூட்  பண்ணி  தாக்கறாங்க . அசால்ட்டா  அவர்  தப்பிப்பது  எப்படி?
 
5   இலங்கை    அகதியா   வர்ற  ஒரு  லேடி   ஹீரோவை  ஹாஸ்பிடல்  ல   க்ளுக்கோஸ்  பாட்டில்ல  விஷ  ஊசி  போடறா. அதுக்கு  டைரக்டாவே  ஹீரோ  கைல  போட்டு  இருக்கலாமே? 
 
 
6   ஹீரோவை  ஹீரோவோட  அம்மா  துரோகினு  சொல்ற  சீனும்.. அந்த  பாவக்கறையைக்கழுவிட்டு  வா  என  சொல்வதும்  சரியா  ஒட்டலை . குருதிப்புனல்ல   ஹீரோ  துரோகியா  வர்றார்னா  அதுக்கு  சரியான  காரணம்  சொல்லப்பட்டிருக்கும்,  ஆனா  இதுல  எதேச்சையா  ஹீரோ  துரோகி  ஆவது  ஏத்துக்கற  மாதிரி  இல்லையே ?     
 
  சி.பி   ஃபைனல்  கமெண்ட்   ஜெகமே தந்திரம் - வழக்கமான இரு தரப்பு டாண்கள் மோதல் கதை, அதுல எக்ஸ்ட்ரா பிட்டா இலங்கை அகதிகள் மேட்டர் . பின் பாதி நீளம் அதிகம், சுமார் ரகம், ஆனந்த விகடன் மார்க் - 41 ரேட்டிங் 2.5 / 5 தனுஷ் பாதி கார்த்திக் சுப்புராஜ் மீதி #JagameThandhiram

Friday, June 11, 2021

அவனா இவன் ? 1962 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 வீணை  எஸ்  பாலச்சந்தர்  இயக்கிய   அந்த  நாள் பாடல்களே  இல்லாமல்  ரிலீஸ்  ஆகி  செம  ஹிட்  ஆன  க்ரைம் த்ரில்லர். அதில்  சிவாஜி கணேசன்  ஆண்ட்டி  ஹீரோவாக  கலக்கி  இருப்பார்.ரோஸ்மான்  எஃபக்டில்  எடுத்த  படம். அதாவது  விருமாண்டி  படத்தில்  வருவது  போல்  படத்தில்  வரும்  கேரக்டர்கள்  அவரவர்  மன  ஓட்டத்தின்படி  என்ன  நடந்திருக்கும்  என்ற  கற்பனையை  சொல்ல  காட்சியாக  முன்னிறுத்தும்  உத்தி 


நடு  இரவில்  , பொம்மை  என   இவர்  இயக்கிய  படங்கள்  எல்லாம்  க்ரைம்  த்ரில்லராக  இருக்கும்,  ஏதாவது  ஃபாரீன்  படத்தின்  அஃபிசியல்  ரீமேக்காகவோ  தழுவலாகவோ இருக்கும் 


AN AMERICAN TRAGEDY  நாவலின்  தழுவலான  , A PLACE IN THE SUN  ஹாலிவுட்  படத்தின்  தழுவல்  இது 


ஹீரோ  ஒரு  கார்மெண்ட்ஸ்  நிறூவனத்தின்  ஓனர்.  காதலி  கர்ப்பம்,  அந்த  டைமில்  ஒரு  செல்வச்சீமாட்டியின்  குடும்பத்துடன்  ஹீரோவுக்கு  சம்பந்தம்  நடக்கிறது .இந்த  மாதிரி  நேரத்தில்  காதலியால்  பிரச்சனை  வரக்கூடாது  என  நினைத்து  ஒரு  டூர்  ஸ்பாட்க்கு கூட்டிட்டுப்போய்  ஹீரோ  காதலியை  போட்டுத்தள்ளி  விடுகிறான்


ஸ்கூல் எக்ஸ்கர்சன்  வந்த  பஸ்  ஒன்று  பஞ்சர்  ஆகி  அந்த  இடத்தில்  நிற்க அதில்  இருக்கும்  இரு குழந்தைகள்  கொலையை  பார்த்து  விடுகின்றன


ஆனா  அவங்க  பேச்சை  யாரும்  நம்புவதாக  இல்லை . போலீஸ்   ஸ்டேஷனில்  கூட  போய்  புகார்  சொல்லியாச்சு .  ஆனா  நோ  யூஸ்


இப்போ கல்யாண  ஏற்பாடுகள்  துரிதமாக  நடக்கின்றன. அந்த  கொலையைப்பார்த்த  சாட்சிகளான  இரு  குழந்தைகளும்   என்ன  திட்டம்  போட்டு  ஹீரோவை  மாட்டி  விடுகின்றன  என்பதே  மிச்ச  மீதிக்கதை 


வீணை  எஸ்  பாலச்சந்தர்  இயக்கிய  4  படங்களில்  வசூல்  ரீதியாக  பெரிய  வெற்றி  பெறாத  ஒரே  படம்  இது  தான்.


ஓப்பனிங்  சீனில்  செல்வச்சீமாட்டி  வீட்டில்  வசிக்கும்  ஒரு  சிறுமி   அவளுடன்  நட்பு  பாராட்டும்  வேலைக்காரி  மகன் ஆக  ஒரு  சிறுவன்

இவர்கள்  இருவருக்கும்  இடையே  இருக்கும்  வர்க்க  பேதம்  பற்றி  கொஞ்சம்  சொல்லி முதல்  30 நிமிடங்கள்  இழுவை  போட்டதுதான்  படத்தின்  பெரிய  மைனஸ் 


குட்டி பத்மினி  முக்கியமான  ரோலில்  வருகிறார்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோ  தன்  காதலியை  நீர்  நிலை  அருகே  அழைத்து  வந்து  கட்டையால்  அடித்துக்கொலை  செய்து  பின்  நீர்  நிலையில்  டெட்  பாடியை  தள்ளி  விடுவது  ரிஸ்க்  தான்.  டெட்  பாடி  போலீஸ்  கையில்  கிடைத்தால்  அது  கொலை  என  தெரிந்து விடும்.  அதுக்குப்பேசாம  அவன்  காதலியை  தண்ணீரில்  மூழ்கடித்தே   சாகடித்து  இருக்கலாம்


2  கொலை  செய்யும்  யாரும்  கொலை  நடந்து  முடிந்த  பின்  சுற்றிலும்  ஒரு  பார்வை  பார்த்து  யாராவது  நம்மைப்பார்க்கிறார்களா? என  நோட்டம்  விடுவர். ஆனா  ஹீரோ  அதெல்லாம்  கண்டுக்கவே  இல்லை . அப்படி  நோட்டம்  விட்டிருந்தால்  சாட்சிகளைப்பார்த்திருக்கலாம்


3  குழந்தைகள்  போலீசில்  புகார்  கொடுத்ததும்  போலீஸ்  அவங்க  சொன்ன  ஸ்பாட்டில்  டெட்  பாடி இருக்கா?  என  தேடச்சொல்லி  ஆர்டர்  போட்டிருக்கலாம்,  ஆனா  அதை  செய்யவில்லை 


4  க்ளைமாக்சில்  மக்கள்  அந்த  கொலை  நடந்த  இடத்தில்  டெட் பாடியைத்தேடும்  இடத்தில்  வில்லன்  பதட்டப்படுவது  தேவையே  இல்லாதது . அங்கே  தேடாதீங்க  , இங்கே  தேடுங்க  என  லொக்கேஷன்  மிஸ்கெய்டு  பண்ணுவதும்  அமெச்சூர்த்தனமான  முயற்சியே 


5   நீரில்  மூழ்கிய  டெட் பாடி  மீன்களுக்கு  இரையாகி  அழுகிய  நிலையில் தான் இருக்கும், ஆனா  பல  நாட்களுக்குப்பின்  தண்ணீருக்கு  உள்ளே  இருந்த  டெட்  பாடி  ஃபிரெஷ்  ஆக  இருப்பது  எப்படி  ? 



சி.பி  ஃபைனல்  கமெண்ட் - வீணை எஸ்  பாலச்சந்தர்  ரசிகர்களைப்பொறுத்தவரை  இது  ஒரு  நல்ல  படம், சராசரி  சினிமா  ரசிகர்களுக்கு  இது  சுமார்  ரக  படம்,  பார்க்கறவங்க  பாருங்க . யூ  ட்யூப்ல  கிடைக்குது 

Wednesday, June 09, 2021

பொம்மை 1964 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 வீணை  எஸ்  பாலச்சந்தர்  தமிழில்  3  படங்கள்  தான்  எடுத்தார்.  மூணுமே  க்ரைம்  த்ரில்லர்கள், எல்லாமே  அதிரி  புதிரி  ஹிட். பெரிய  ஹீரோவை  நம்பாமல்  திரைக்கதையை  நம்பி  எடுக்கப்பட்ட  படங்கள் 


  ஈரோடு  மாவட்டம்  சென்னிமலை  தேவகிரி  தியேட்டரில்  1986  ம்  வருடம்  செகண்ட்  ஷோ  பார்த்த  நினைவு  இருக்கு,  விமர்சனத்துக்காக  யூ  ட்யூப்ல  ஒரு  வாட்டி  பார்த்துட்டேன்


ஹீரோ  பெரிய  தொழில்  அதிபர் .  கம்பெனி  ஓனர் . அவரோட  பார்ட்னர்  தான்  வில்லன். ஹீரோவுக்கு  பார்ட்னர்  மேல  ரொம்ப  நம்பிக்கை . ஆனா  பார்ட்னர்  சிங்கப்பூர்  போய்  இருந்தப்போ   ஒரு  கொலை  பண்ணி   எஸ்  ஆகிட்டதா  ஒரு  தகவல்  வருது.  அது  உண்மையா?னு  விசாரிக்க  சிங்கப்பூர்  போலாம்னு  பிளான்  போடறார்



 அவர்  சிங்கப்பூர்  போய்  விசாரிச்சா  தான்  மாட்டிக்குவோம்னு வில்லன்  ஹீரோவைக்கொலை  பண்ண  பிளான்  போடறான்  ஒரு  சின்ன  பொம்மைல  டைம்பாம்  செட்  பண்ணி   கிஃப்ட்  பார்சல்  மாதிரி  ரெடி  பண்ணி  அவர்  கிட்டே  தந்து  சிங்கப்பூர்ல  ஒரு  நபர்ட்ட  இது  கிஃப்டா  தரனும்னு  சொல்லலாம்னு  பிளான்  போட்டு  தன்  உதவியாளர்களிடம்  கொடுத்து  விடறார்



 அது  டாக்சில  கை  மாறி  மிஸ்  ஆகிடுது.  ஃபிளைட்ல  ஹீரோ  கிளம்பிடறார்.  இவங்க  அந்த  பொம்மையைத்தேடி  ரவுண்ட்  அடிக்கறாங்க . அந்த  பொம்மை  டாக்சி  டிரைவர் ,  பிச்சைக்காரன்,  பணக்கார  வீட்டுப்பெண்  என  பல  கை  மாறி   சுத்திட்டு  இருக்கு 


முதல்  அரை  மணி  நேரத்தில்   இந்த  சம்பவங்கள்  எல்லாம்  நடந்துடுது ,  அடுத்த  ஒரு  மணி  நேரம்  பர பரப்பான  சேசிங்  காட்சிகள் 


 சிங்கப்பூர் போற  ஃபிளைட்  ரிப்பேர்  ஆகி  ரிட்டர்ன்  வருது.  அரை  மணி  நேரம்  கழிச்சு  மறுபடி  கிளம்புது. அதுக்குள்ள  இன்னொரு  பாம்  செட்  பண்ணி  கொண்டு  போய்  கொடுக்கறாங்க 


  இதுக்குப்பின்  என்ன  நடந்தது  என்பதே  திரைக்கதை 


 இவரோட மற்ற  இரு  படங்களில்  யார்  கொலையாளி ?  என்பதை  க்ளைமாக்ஸ்  வரை  சஸ்பென்ஸாக  கொண்டு  போனவர்  இந்த  முறை  சம்பவம்  எப்போ  நடக்கும்?  என்பதை   பர  பரப்பாக  சொல்லி  இருக்கார் 


ஹீரோவா  வழக்கம்  போல   டைரக்டரே  நடிச்சிருக்கார்.  குட் .படம்  பூரா  ஏகப்பட்ட  கேரக்டர்கள். . எல்லாத்தையும்  ஈசியா  டீல்  பண்ணி  இருக்கார் 


 படத்தில்  மொத்தம்    6  பாட்டுக்கள் ,  நீயும்  பொம்மை  நானும்  பொம்மை  நினைச்சுப்பார்த்தா  எல்லாம்  பொம்மை  செம  ஹிட்  பாட்டு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    பொம்மை  ஹீரோ  கைக்கு  போகல,  மிஸ்  ஆகிடுச்சு  என்றதும் அது  பற்றிக்கவலைப்படாம   பொம்மையை  ட்ரேஸ்  அவுட்  பண்ணனும்,  அது  எங்காவது  வெடிச்சா  நாம  மாட்டிக்குவோம்  என  டயலாக்  வருது . அப்போ  வில்லன்  தர  இருந்த  பொம்மை  ஹீரோ  கைக்குப்போய்   வெடிச்சிருந்தா  அப்போ  டவுட்  வராதா?


2   ஹீரோ  போன    ஃபிளைட்   திரும்பி  வந்து  அரை  மணி  நேரம்  கழிச்சு  கிளம்பும்னு  அறிவிக்கறாங்க . அந்த  அரை  மணி  நேரத்துல  ஹீரோ  ஏர்போர்ட்ல  இருந்து  அவர்  கம்பெனிக்கு  வந்துட்டுப்போறார். இதுக்கு  ஏர்போர்ட்  ரூல்ஸ்  ஒத்துக்காதே? 


3  க்ளைமாக்ஸ்ல  போலீஸ்  ஜிப்ல  வில்லன்  க்ரூப்பை  சேஸ்  பண்ணறப்போ  போலீஸ்  கூட  இருக்கற  சாமான்யன்  சொல்ற  ஐடியாப்படி  போலீஸ்  செயல்படுது/ அவரா  முடிவு  எடுக்க  மாட்டாரா? 


4   வில்லன்  கம்பெனில  2  வெவ்வேற  ரூம்ல  2  பேரை  அடைச்சு  வைக்கறான்.  வாய்ல  பிளாஸ்திரி  ஒட்ட  மாட்டாங்களா? 


சபாஷ்  டைரக்டர்


1  தி9ரைக்கதை ,  விறுவிறுப்பான  காட்சிகள்  இதை  எல்லாம்  சிலாகிபதை  விட  முக்கிய  விஷயம்  க்ளைமாக்ஸ்ல  டைரக்டர்  படத்தில்  பணி  ஆற்றிய  அனைத்து  நடிகர்கள் ,  தொழில்  நுட்பக்கலைஞர்கள்   அறிமுகப்படுத்தும்  காட்சி 



 சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  ரெண்டரை  மணி  நேரம்  ஓடும்  படத்துல்  6  பாட்டை  ஸ்கிப்  பண்ணிட்டா  2  மணி  நேரப்படம்,  இந்தக்கால  ரசிகர்களும்  பார்க்கலாம்.  யூ  ட்யூப்லயே  கிடைக்குது

Tuesday, June 08, 2021

நடு இரவில் 1970 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 spoiler  alert


ஹீரோ ஒரு  கோடீஸ்வரர், இவர்  இளைஞரா  இருந்தப்போ  ஒரு  பிற்படுத்தப்பட்ட  பெண்ணை  காதல்  திருமணம்  செஞ்சதால  அவரோட  அண்ணன்,  தம்பி  உட்பட  பல  சொந்தக்காரங்களால்  கரிச்சுக்கொட்டப்பட்டு  விலக்கி  வைக்கப்படுகிறார் .பிறகு  தன்  சொந்த திறமையாலும்  ,  உழைப்பாலும்  முன்னேறி  பணக்காரர்  ஆகிடறார்.


இப்போ    வெளி  உலகோடு  தொடர்பே  இல்லாத  கைலாசா  மாதிரி  ஒரு  தீவில்  தங்கி  இருக்கார். அங்கே  போலீஸோ தகவல்  தொடர்பு  சாதனங்களோ  எதுவுமே  இல்லை .இவருக்கு  ஒரு  ஃபிரண்ட்  , இவர் ஒரு  டாக்டர் 


  இப்போ  மேலே  சொன்னவை  எல்லாம்  ஃபிளாஸ்பேக்  சீன்களாக  இல்லாமல்  வசனம்  மூலமே  புரிய  வைக்கப்படுது


  படத்தோட  ஓப்பனிங்  சீன்லயெ  கதைக்கு  நேரடியா  வந்துடறாங்க 


 இப்போ  டாக்டர்  ஹீரோவிடம்  ஒரு  உண்மையை  சொல்றார். அதாவது  ஹீரோவுக்கு  பிளட்  கேன்சர் .  அவரது  நாட்கள்  எண்ணப்படுகின்றன. அதனால  உன் சொந்தம் பந்தங்களை  எல்லாம்  வர  வெச்சு  கடைசி  காலத்தை  அவங்களோட  செலவளிங்க்றார்


 ஆனா  ஹீரோவுக்கு  அதில்  உடன்பாடு  இல்லை  அவருக்கு  இன்னும்  அவங்க  மேல  உள்ள  கோபம்  தீரலை.  எப்படியோ  ஒரு  வழியா  ஹீரோவை  சம்மதிக்க  வைக்கறார்



இப்போ  சொந்தக்காரங்களுக்கு  எல்லாம்  லெட்டர்  போகுது . இந்த  மாதிரி  ஹீரோ  மரணத்தின்  விளிம்பில்  இருக்கார். நீங்க  வந்து  இங்கே தங்கி  இருந்தா  உங்களுக்கு  சொத்து  கிடைக்கும்


உடனே  எல்லாரும்  சிட்டு  மாதிரி பறந்து  வந்துடறாங்க . 


 ஹீரோ ,  மனைவி , நண்பர் ,  வேலைக்காரங்க , தோட்டக்காரங்க ,  சொந்தக்காரங்க  ஆக  மொத்தம் 24  பேர்  இப்போ  இந்த  பங்களாவில்  இருக்காங்க 


இந்த  பங்களாவில்  ஒரு  கொலை  நடக்குது.  இது  ஒரு  தொடர் கதைனு  வரிசையா  கொலைகள்  நடக்குது


இப்போ   நமக்கும்,  சொந்தக்காரங்களுக்கும்  எழும்  சந்தேகங்கள்  என்னன்னா


1   இந்த  சொந்தக்காரங்களைப்பழி  வாங்கத்தான்  ஹீரோ  பிளான்  பண்ணி  எல்லாரையும்,  வர  வெச்சு  போட்டுத்தள்ளறார்


2  ஹீரோ  இறந்துட்டா  சொத்தெல்லாம்  டாக்டருக்கே  சேரும். அப்போ  சொந்தக்காரங்க  வாரிசுரிமை  நடத்த  வந்துடக்கூடாதுனு  அவர்தான்  பிளான்  பண்ணி  வர  வெச்சு  கொலை  பண்றார்


3    வந்த  சொந்தக்காரங்கள்ள   யாரோ  ஒருத்தர்தான்  பங்கு  போட  ஆட்கள்  இருக்கக்கூடாதுனு   போட்டுத்தள்ளிட்டு  இருக்கான்

  மேலே  சொன்ன  3  பேர்களில்  யார்  கொலையாளி  என்பதுதான்  படத்தின்  க்ளைமாக்ஸ் 



இதுல  ஹீரோவா  மேஜர்  சுந்தர்ராஜன். இவரோட  ஃபேவரைட்  டயலாக்  ஆன  இங்க்லீஷ்ல  ஒருக்கா  தமிழ்ல  ஒருக்கா  வசனம்  பேசும்  பாணி  இதில்  இல்லாதது  ஏமாற்றமே


டாக்டராக  படத்தின்  இயக்குநரான  வீணை  எஸ்  பாலச்சந்தர் .  சிகரெட்  பிடித்துக்கொண்டே  இவர்  வசனம்  பேசும்  ஸ்டைல்  எல்லாம்  ஓக்கே 


துக்ளக்  சோ  வேலைக்காரராக  ஒரு  டம்மி  ரோல்


  ராகவன்  முக்கியமான  ரோல்,  விழி  ஒளி  இழந்த  மாற்றுத்திறனாளியா  வர்றார்


 எல்லாரும்  நல்லா  பண்ணி  இருக்காங்க 


அந்தக்காலத்தில்  எல்லாம்    ஒரு  ரீலுக்கு ஒரு  பாட்டு  ஃபார்முலாவில்  சினிமா   இருந்தது.  அப்பவே  மிக  தைரியமாக  பாட்டே  இல்லாமல்  எடுத்திருக்காங்க



பண்டாரி  பாய்  , சவுகார்  ஜானகி  போன்ற   அந்தக்கால  கலைஞர்கள்  நடிச்சிருக்காங்க   148  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படம்  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காமல்  இந்தக்கால  ரசிகர்களும்  ரசிக்கும்  வகையில்  எடுக்கப்பட்டிருக்கும்   யூ  ட்யூப்  ல  கிடைக்குது


 அகதா  கிறிஸ்டி  எழுதிய  And Then There Were None  என்ற  நாவலை  தழுவி  எடுகப்பட்ட  படம்


சி  பி  ஃபைனல்  கமெண்ட்  -  தமிழ்  சினிமாவின்  முக்கியமான  க்ரைம்  த்ரில்லர்கள்  லிஸ்ட்  எடுத்தால்  அதில்  வீணை  எஸ்  பாலச்சந்தர்  எடுத்த  படங்கள்  அனைத்தும்  இடம்  பெறும்.,  இந்தப்படம்  அவர்  இயக்கிய  கடைசி  படமாம் .  செம  படம்  மிஸ்  பண்ணிடாதீங்க 

Nadu Iravil.jpg
Poster
Directed byS. Balachander
Produced byS. Balachander
Based onAnd Then There Were None
by Agatha Christie
StarringS. Balachander
Major Sundarrajan
Pandari Bai
Sowcar Janaki
Music bySundaram Balachandar
CinematographyK. V. S. Reddy
Edited byK. Govindasamy
Production
company
S. B. Creations
Distributed byS. B. Creations
Release date
1970
Running time
148 minutes
CountryIndia
LanguageTamil

Monday, June 07, 2021

அதே கண்கள் 1967 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 ஹீரோயினோட அப்பா  கூடப்பிறந்தவங்க  3  பேரு ,  எல்லாரும்  ஒரு  பங்களாவில்  வசித்து  வருகிறார்கள் .முதல்  அண்ணன்  அதாவது  ஹீரோயினோட அப்பா  மைசூர்  போனப்ப  ஒரு  விபத்துல  இறக்கிறார். ஆக்சுவலா  அது  விபத்து  இல்லைனு  பின்னாளில்  தெரிய  வருது 


 படத்தோட  ஓப்பனிங்  சீன்ல   ஹீரோயினோட  சித்தப்பா  தூக்கில்  தொங்கிய  நிலையில்  இருக்கார் .  அதுவும்  தற்கொலை  இல்லை   கொலை அந்தக்கொலையை  நேரில்  பார்த்த  சித்தியையும்  கொலைகாரன் கொலை  பண்ண  ட்ரை  பண்றான், ஆனா  சித்தி  தப்பிடறா . அந்தக்கொலையைப்பார்த்த  அதிர்ச்சில  அவ  சித்தப்பிரமை  அடைஞ்ச  மாதிரி  ஆகிடறா.


போலீஸ்  வருது  ,  விசாரிக்குது.   அடுத்தடுத்து  சித்தி ,  இன்னொரு  சித்தப்பா  கொலை  ஆகறாங்க 


இது  ஒரு  டிராக் , சஸ்பென்ஸ்   டிராக்


  இன்னொரு  டிராக் . காமெடி  டிராக்


  ஹீரோயினை  லவ்  பண்ற  ஹீரோ  வாடகைக்குடி இருக்க  வீடு  தேடி  வர்றார்.  அங்கே  பிரம்மச்ச்சாரிக்கு  வீடு  இல்லைனு  சொல்றாங்க , அதனால  தன்  நண்பனுக்கு  பெண்  வேடம்  போட  வைத்து  தன் மனைவி  என  பொய்  சொல்லி  வீட்டில்  குடி  வர்றார்  ஹீரோ 


ஹவுஸ்  ஓனர்  பெண் வேடத்தில்  இருக்கும்  நண்பனைக்கண்டு  ஜொள்  விடுவது   தனி  காமெடி  டிராக்


ஹீரோ    எப்படி  கொலைகாரனைக்கண்டு  பிடிக்கறார்  என்பதே  மிச்ச  மீதிக்கதை 


 ஹீரோவா  ரவிச்சந்திரன்.  ஊமை  விழிகள்  படத்தின்  வில்லன். லிப்ஸ்டிக்  எல்லாம்  பூசி  ராமராஜனுக்கே  முன்னோடியா  இருக்கார்

ஹீரோவின்  நண்பனா  நாகேஷ்  செம  ஆக்டிங்.  பெண்  வேடத்தில்  செய்யும்  லூட்டிகள்  கலக்கல்  காமெடி 


 3  சித்தப்பாக்களில்  அசோகன்  தான்  கொலைகாரன்  என்பது  போல  காட்சிகளை  சாமார்த்தியமா  நகர்த்திக்கொண்டு  போனாலும் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  குட்  


  அந்தக்காலத்துலயே  பாடல் காட்சிகளை  படமாக்குவதில்  பிரம்மாண்டம் காட்டி  இருக்காங்க 





நச்  டயலாக்ஸ்


1    நான்  குக்கிங்க்  எக்ஸ்க்யூட்டிவ்  ஆஃபீசரா  இருக்கேன்


  ஓஹோ , சமையல்காரனா?


2   மேடம், வீடு  காலினு  வெளில  போர்டு  இருக்கு ,  உள்ளே  வந்தா  நீங்க  இருக்கீங்க்ளே?


 அதாவது  மேலே  காலி 


 ஓ. உங்களுக்கு  மேல்  மாடி  காலியா? 


3   உங்களுக்கு  எத்தனை  குழந்தைங்க ?


 விட்டா  எனக்கு  எத்தனை  ஒயிஃப்ங்கனு கேட்பீங்க  போலயே?



4    வீட்ல  பெரியவங்க  யாராவது  இருந்தா  கூப்பிடுங்க 


 ஏன் ? என்னைப்பார்த்தா  பெரியவங்க  மாதிரி  தெரியலையா?


  ச்சே  ச்சே  சின்ன  பாப்பா  மாதிரி  இருக்கீங்க 


5  என்னது ?    தண்டர்  கேக்கா?அப்டீன்னா?


 இடி  ஆப்பம்


6   இந்தாங்க  லட்டு ,  உங்க  சிஸ்டரைக்கொஞ்சம்  வரச்சொல்லுங்க 


 இந்த    ஒரு  லட்டைக்கொடுத்துட்டா?  அவ்ளோ  சீப்பாவா?




பாடல்கள் 


1   பூம்  பூ  மாட்டுக்காரன்  தெருவில்  வந்தாண்டி 


2 கண்ணுக்குத்தெரியாதா?  பெண்ணுக்குப்புரியாதா? 


3   ஓ  ஓ  எத்தனை  அழகு  20  வயதினிலே? 

4  வா  அருகில்  வா  தா  உயிரைத்தா 


5  பொம்பளை  ஒருத்தி  இருந்தாளாம்

6   என்னென்னெவோ  நான் நினைத்தேன்  (  இந்த  ஒரு  பாட்டுதான்  சுமார்  ரகம், மற்றவை  அனைத்தும்  செம  ஹிட் )



லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  கொலைகாரன்  ஹீரோயினைக்கொலை  பண்ண  பல  சான்ஸ்  கிடைச்சும்  அதை  எல்லாம்  யூஸ்  பண்ணாம  பர்த் டே  பார்ட்டியில்  அவ்ளோ  கூட்டத்தில்  குறி  மிஸ்  பண்ணி  சுடுவது  காமெடி .  ஹீரோயின்  தனிமையில்  இருக்கும்போதே  சுடலாமே? 


2  கொலைகாரனைக்கண்டுபிடிக்கறேன்னு  சவால்  விடும்  ஹீரோ  லவ்  பண்ற  வேலையைத்தான்  மெயின் ஜாப்பா  பண்ணிட்டு  இருக்காரு 


3  ஜமீன்  வாரசுகள்  5  பேரைக்கொலை  பண்ண  நினைக்கும்  கொலைகாரன்  அவங்க  எல்லாரும்  ஒரே  கார்ல  டிராவல்  பண்றப்ப  போட்டுத்தள்ளுவதுதான்  ஈசி , விபத்துனு  ஃபிரேம்  பண்ணி  இருக்கலாம்.  அதை  விட்டுட்டு  ஒவ்வொரு  ஆளா  கொலை  பண்ணுவது  காதில்  பூச்சுற்றல் 


4     அதுவரை  நடந்த  கொலைகளை  எல்லாம்  விபத்து  மாதிரி  அல்லது  தற்கொலை  மாதிரி  ஃபிரேம்  பண்ணூம்  கொலைகாரன்  ஹீரோயினைக்கொலை  செய்யும்போது  மட்டும்  அந்த  ஃபார்மெட்டில்  செய்யாமல்  கொலை  மாதிரி  தெரிஞ்சாலும்  பரவாயில்லை  என  துப்பாக்கியில்  சுட  முயற்சிப்பது  ஏன்? 


  சி.பி  கமெண்ட்  -   அந்தக்கால  படமாக  இருந்தாலும்  ஜாலி  எண்ட்டர்டெய்ன்மெண்ட்  +  க்ரைம்  த்ரில்லர்  வரிசைல  இன்றைய  ரசிகர்களும்  பார்த்து  ரசிக்கும்  அளவில்  படம் இருக்கு .  செம  ஹிட்  பாட்டு

 படம்  அமேசான்  பிரைம்ல  இருக்கு