Saturday, July 11, 2026

Disclosure Day(2026)- ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன் டிராமா)





 ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பெயரை அறியாத சினிமா ரசிகனே இருக்க முடியாது. Jaws(1975), E.T(1982),Indiana Jones and the temple of Doom(1984) Jurassic park(1993) saving private  Ryan(1998) என அவரது வித்தியாசமான படங்களின் பட்டியல் நீளம்  அதிகம்.குறிப்பாக  ஜூராசிக் பார்க் கின் மெகாஹிட் வசூல்  ஹாலிவுட்டையே ஒரு புரட்டு புரட்டிப்போட்ட படம்  என சொல்லலாம்.


10/6/2026 முதல் அமெரிக்காவில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இந்தியாவில் 12/6/2026 முதல் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகி இருக்கிறது.115 மில்லியன் டாலர் செலவில் உருவாகி இருக்கும் படம் இது.

1982ல் எக்ஸ்ட்ரா டெரெஸ்ட் ரியல் என்ற சயின்ஸ் பிக்சன் கதையில் ஏலியன் (வேற்றுக்கிரகவாசி) கேரக்டர் பற்றி சொன்னவர் 44 வருடங்கள் கழித்து அதே சப்ஜெக்ட்டை வித்தியாசமான முறையில் கையாண்டிருக்கிறார்.

                          க்ளோயிங் ஆராஸ் அண்ட் பிளாக் மணி என்று 2017ல் வெளிவந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின்  ஒரு கட்டுரையிலிருந்து இன்ஸ்பயர் ஆகி 2023 ல் 60 பக்கங்கள் கொண்ட கதையின் ஒன் லைன் ஸ்பீல்பெர்க்கால் எழுதப்பட்டது.    


டைட்டிலுக்கான அர்த்தம் வெளிப்படுத்தல் நாள்


ஸ்பாய்லர்  அலெர்ட்


அமெரிக்க அரசாங்கம் சில ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.அதை வெளிக்கொணர நாயகன் முயல்கிறான்

சில முக்கியமான வீடியோக்களும் ,ஒரு ரகசிய டிவைசும் நாயகனிடம் மாட்டி இருக்கிறது.அதைக்கைப்பற்ற அரசாங்கமும் ,ராணுவமும் ,இண்ட்டெலிஜென்ஸ் டீமும் படாதபாடு படுகிறது.ஓப்பனிங்க் ஷாட்டிலேயே நாயகன் தன் காதலியுடன் ,டிவைசுடன் ஓடுகிறான்.ஒரு ஆக்ரோஷமான துரத்தல் படலம் நடக்கிறது.இது ஒரு ட்ராக் .

நாயகி ஒரு செய்தி வாசிப்பாளர். வானிலை அறிக்கை வாசிப்பதுதான் தொழில்.திடீரென அவருக்கு நாக்கு குளறுகிறது.தெரியாத மொழிகள் ,அறியாத பாஷைகள் எல்லாம் பேசுகிறார் .ஏதோ சிக்னல் எங்கிருந்தோ தனக்கு வருகிறது என்பதை உணர்கிறார்.ஒருவரின் கண்களைபார்த்தே அவரது இறந்த காலம் ,எதிர் காலம் பற்றி எல்லாம் துல்லியமாக சொல்கிறார்.அவருக்கே இது எப்படி?என்பதை சொல்லத்தெரியவில்லை.ஏதோ ஒரு சக்தி தன்னை ஆட்டுவிக்கிறது என்பதை உணர்கிறார்.


நாயகன் ,நாயகி இருவரும் எந்தப்புள்ளியில் இணைகின்றனர்,இருவருக்கும் நிகழும் சோதனைகள் என்ன?வெற்றி பெற்றார்களா?என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் எமிலி ஒலிவியா லாரா பிளண்ட் 2016ல் வெளிவந்த த கேர்ள் ஆன் த ட்ரெயின் என்ற ஹாலிவுட்  க்ரைம் திரில்லர் படத்தில் நாயகியாக நடித்தவர்.இவரது கண்கள் மென்சோகத்தோடு எப்போதும் இருப்பது ஒரு தனித்துவம்.நம்ம ஊர் சோனியா அகர்வால் மாதிரி.சிரிக்கும்போது கூட கண்களில் ஒரு சோகம் எட்டிப்பார்க்கும்.பிரமாதமான நடிப்பு.கலக்கி இருக்கிறார்.

நாயகனாக ஜோஸ் ஓ கோனார் கச்சிதமாக நடித்திருக்கிறார் .

நோவா கேரக்டரில் நடித்திருக்கும் காலின் பர்த் செமயான நடிப்பு.இவர் ஏற்கனவே  2010ல் வெளிவந்த The King's speech ஹாலிவுட் படத்தில் நாயகனாக நடித்தவர் தான்.


மற்ற அனைத்துக்கேரக்டர்களின் நடிப்பும் கனகச்சிதம்.

ஒளிப்பதிவு ,இசை,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பிரமிப்பு.படத்தின் ரன்னிங் டைம்  145 நிமிடங்கள்.

டேவிட் கோயெப் திரைக்கதை எழுத ,கதை எழுதி இயக்கி இருப்பவர்  ஸ்பீல்பெர்க்.

சபாஷ்  டைரக்டர்

1 முதல் 30 நிமிடங்கள் ஆடியன்சுக்கு எதையும் விளக்காமல் சம்பவங்களை  அடுக்கிக்கொண்டே போவது சிறப்பு.

2 நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு.அது இருப்பதாக எல்லோரும் நம்புவதால்தான் இந்த சமூகம் குற்றஙகள் அதிகம் செய்யாமல் நமக்கு மேல் இருக்கும் சக்தியின் மீது கொண்ட பயத்தில் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்கிறான் என்பது மாதிரி கருத்தான வசனங்கள் ஆங்காஙகே பளிச்.

3 ஏழாம் அறிவு படத்தில் வரும் வில்லன் நோக்கு வர்மம் மூலம் எதிரில் இருப்பவரை  ஹிப்னாடிச முறையில் மடக்குவது போல் எங்கேயோ தொலைவில் இருக்கும் ஆளைக்கண்ட் ரோல் செய்வதாக வரும் கான்செப்ட் அருமை.


4 நாம் யாரும் தனிமையில் இல்லை.எங்கோ யாரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறோம் என்ற அடிப்படை விதி  சொல்லப்பட்ட பாங்கு

5 க்ளைமாக்ஸ் காட்சி மிகவும் எமோஷனல்.கண் கலங்க  வைக்கிறது.

6 அரசாங்க உயர் அதிகாரியைக்கொலை செய்ய ஹிப்னாடிசம் மாதிரி கண்ட் ரோல் செய்து முயற்சிக்கும் சீன் செம விறுவிறுப்பு.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 முதல் 40 நிமிடங்களில் உரையாடல் மூலம் மட்டுமே கதையை நகர்த்துவது சலிப்பு.

2 ஒரு அரசாங்கத்தையே எதிர்த்து ,மிலிட்ரியை மீறி தனி ஒருவனாக நாயகன் போராடுவது எல்லாம் காதில் பூ ரகம் தான்.

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கடந்த 20 வருடங்களில் வெளிவந்த ஸ்பீல்பெர்க்கின் சிறந்த படம் எனக்கொண்டாடப்படும் இந்தப்படம் பரபரப்பான ,ஸ்பீடான படம் தான்.ரேட்டிங் 3.5/5


Disclosure Day
Theatrical release poster
Directed bySteven Spielberg
Screenplay byDavid Koepp
Story bySteven Spielberg
Produced by
Starring
CinematographyJanusz Kamiński
Edited bySarah Broshar
Music byJohn Williams
Production
companies
Distributed byUniversal Pictures[1]
Release dates
Running time
145 minutes[2]
CountryUnited States
LanguageEnglish
Budget$115 million[3]
Box office$93.1 million[4][5]

Friday, July 10, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி -ஜூலை 10 தியேட்டரில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படங்கள் -ஒரு முன்னோட்டப்பார்வை

 இந்த வாரம் மொத்தம் 9 படங்கள் வெளியாகின்றன.நேரடித்தமிழ்ப்படங்கள் 4,மலையாள டப்பிங் படங்கள் 2,தெலுங்கு டப்பிங் படம் 1,ஹாலிவுட் பட டப்பிங் 1 ,ஒரு ரீ ரிலீஸ் படம்.  ஆக மொத்தம் 9 படங்கள்




1 இதயம் முரளி
2 லவ் ஓ லவ்
3 முதற்கனல்
4 லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

5 NoBody (மலையாளம்/தமிழ்)
6 அரூபி (மலையாளம்/தமிழ்)
7 லெனின் (தெலுங்கு/தமிழ்)
8 Evil Dead Burn (ஆங்கிலம்/தமிழ் )
9  ரன் (தமிழ் ரீ ரிலீஸ்)


1 இதயம் முரளி.தமிழ் . ரொமாண்டிக் ட்ராமா

தனுஷ் நடித்த இட்லிக்கடை, சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ஆகிய படங்களைத்தயாரித்த ஆகாஷ்  பாஸ்கரன் கதை,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் இது.

பாணா காத்தாடி,பரதேசி உட்பட பல படங்களில் நாயகனாக நடித்த அதர்வா முரளி இதில் நாயகனாக நடித்திருக்கிறார்.டிராகன் படப்பகழ் கயாடு லோகர் ,பிளாஸ்ட் படப்புகழ் ப்ரீத்தி முகுந்தன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க  ராம்கி,நட்டி எ நடராஜ் ,பகத் பாசில் ,இசை அமைப்பாளர் தமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இதயம் படத்தில்  முரளி கடைசி வரை தன் காதலை  சொல்லாமல் தவித்தது போலவே இதிலும் நாயகன் காதலை சொல்ல தயக்கம் காட்டுவதால் டைட்டிலும் இதயம் முரளி என்றே வைத்து விட்டார்கள் போல.

பள்ளி மாணவன்,கல்லூரி மாணவன் ,வளர்ந்த ஆள் என முன்று மாறுபட்ட கெட்டப்பில் அதர்வா நடிக்கிறார்.

தயாரிப்பாளராகப்பல படங்கள் எடுத்திருந்தாலும் இயக்குநராக ஆகாஷ் பாஸ்கரனுக்கு இது முதல் படம்.

இசை எஸ் தமன். 5 பாடல்கள்.




ரசித்த வசனங்கள்

1 என்னை மாதிரி காதலை வெளியே சொல்ல முடியாத பலர் இருக்காங்க, காதலையும் சொல்ல முடியாது,காரணமும் சொல்ல முடியாது.
2 மூணு வருசத்தில் சொல்ல முடியாத லவ்வை மூணே நிமிஷத்தில் சொல்லப்போறியா?
3  வேற லெவல் ட்விஸ்ட் இது,கொரியன் டிராமாவில் கூட இப்படி வந்ததில்லை.
4 வாழ்க்கைல நாம் கடந்து போகும் எந்த நிமிஷமும் நமக்குத்திரும்பக்கிடைக்காது.
5 சந்தோஷமோ,சங்கடமோ மனதில்  பட்டதை சொல்லிடனும்

6 இன்னமும் 10 வருசம் கழிச்சுப்பார்த்தாலும் நாங்க இப்படித்தான் இருப்போம்.


பராசக்தி இயக்குநர் சுதா கொங்கரா தன் சம்பள பாக்கி ரூ 9 கோடி செட்டில் ஆகும் வரை இந்தப்படத்தை ரிலீஸ் செய்யத்தடை கேட்டு கோர்ட்டை அணுகி இருந்தாலும் பட ரிலீசை இது பாதிக்காது என்கிறார்கள்.



2 லவ் ஓ லவ்.   தமிழ். ரொமாண்டிக் காமெடி டிராமா

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் அறிமுக இயக்குநராகக்களம் இறங்கி இருக்கும் படம் இது.இவர் ஏற்கனவே லக்சுமணன்,சந்தோஷ் பொ ஜெயக்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப்பணியாற்றியவர் தான்.

நாயகன் ஒரு மிடில் கிளாஸ் ,நாயகி ஒரு வசதியான பெண்.இவர்கள் காதல் வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதாரப்பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார்கள்?என்பது தான் கதை.

நாயகனாக பவிஷ் நாராயணன் நடித்திருக்கிறார்.தெலுங்கில் நாட்டுப்புறப்பாடல்களுக்கு நடனமாடும்  யூ ட்யூப் பிரபலம் நாக துர்கா தான் நாயகி.

இயக்குனர் செல்வராகவன்,வனிதா விஜயகுமார்,இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் ,ரம்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ட்ரெய்லரைப்பார்க்கும்போது ரொமாண்டிக் காமெடி ஜர்னர் போல் தெரிகிறது.



ரசித்த வசனங்கள்

1 சாவு வீட்டில் அலங்காரமாக இருந்தது செத்துப்போன பாட்டி தான்,ஆனா அழகா இருந்தது அவதான்.
2 லவ்வில் பிரச்சனை இல்லை சார்,லவ்வே பிரச்சனை தான்.
3 பொண்ணுங்களுக்கு கல்வியும் ,கேரியரும் அவங்க உரிமை,ஆனா பசங்களுக்கு அது கடமை

4 காசை சேர்த்து வெச்சுப்பொருளை வாங்கிக்கலாம்,ஆனா பொருளை வாங்கி வெச்சுக்கிட்டுக்காசைத்தேடிட்டு இருக்க
க்கூடாது.

5 நான் உனக்கு அதைப்பண்ணினேன் ,இதைப்பண்ணினேன்னு சொல்றதும்,நான் செஞ்சதை எல்லாம் எனக்குத்திருப்பி செய் என்று சொல்வது லவ் இல்லை.
6 என்ன ஆனாலும் நான் உன்னை கை விட்டுட மாட்டேன் என்று சொல்வதுதான் லவ்.


3 முதற்கனல். தமிழ்  மெலோ டிராமா

ஆர் வெங்கட்ராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லோ பட்ஜெட் படம் இது.


நன்றாகப்படிக்கும் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்தால் எப்படி சீரழிகிறார்கள் என்பதை எடுத்துக்கூறும் கதை.

பொதுவாக தமிழ் சினிமாவில் போதைப்பழக்கத்தைப்பின்னணியாக வைத்து எடுத்த படங்கள் ஓடுவதில்லை.சூப்பர் ஸ்டார் நடித்த ராஜா சின்ன ரோஜா,கமல் நடித்த சூரசம்ஹாரம் இரண்டும் அதற்கு உதாரணங்கள்.

பிறகு எந்த தைரியத்தில் இப்படிப்படம் எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ட்ரெய்லர் கூட சுமார் தான்.



4  லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.     தமிழ்.  க்ரைம் திரில்லர்


1944 ல் தமிழ் நாட்டை உலுக்கிய வழக்கு இது.சூப்பர் ஸ்டார் தியாஜராஜ பாகவதர் ,என் எஸ் கிருஷ்ணன் இருவரும் ஒரு பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்து நேசன் பத்திரிக்கையில் அவதூறாகக்கிசுகிசு எழுதிய லட்சுமிகாந்தனை இவர்கள் இருவரும் கூலிப்படை வைத்துக்கொலை செய்ததாக வழக்கு.

கொன்றால் பாவம் படத்தின் இயக்குநர்
தயாள் பத்மநாபன் இயக்கத்தில்  நடிகர் வெற்றி ,பிரிகிடா ,ரங்கராஜ் பாண்டே ,இளவரசு,சரவணன் நடித்திருக்கும் படம் இது.

ஆனால் ட்ரெய்லரைப்பார்க்கும்போது லட்சுமிகாந்தன் என்ற தனி மனிதன் கதையாகவே அதிகம் போகஸ் செய்திருப்பது போல் தோன்றுகிறது.



ரசித்த வசனங்கள்

1 தலையெழுத்துன்னு ஒண்ணு இல்லை.எல்லார் நெத்தியும் காலியாத்தான் இருக்கு,நமக்கு வேண்டியதை நாம்தான் எழுதிக்கனும்.

2 ஒரு அரசியல்வாதியோட மகன் அரசியல்வாதியா வர்றப்போ வராத வெட்கம் ஒரு திருடனோட மகன் இன்னொரு திருடனா வரும்போது ஏன் வரனும்?

3 திருடன்னு ஒத்துக்கற அளவு நேர்மையா இருக்கீங்க,ஆனா நேர்மையே இல்லாம திருட்டுத்தொழில் பண்றீங்க.

5 Nobody ( மலையாளம்/தமிழ்) ஹெய்ஸ்ட் ஆக்சன் திரில்லர்

கனா கண்டேன் படத்தில் நடித்த பிரிதிவ்ராஜ் சுகுமாரனின் சொந்தப்படம் இது.

நாயகன் ஒரு அரசுப்பணியில் இருப்பவன்.மிகப்பெரிய வங்கிக்கொள்ளையில் அவனுக்குத்தொடர்பு இருக்கிறது என போலீஸ் சந்தேகப்படுகிறது.நாயகன் குற்றமற்றவன் என்பதை எப்படி நிரூபிக்கிறான்?என்பதே கதை.


நாயகியாக. பார்வதி திருவோத்து ,சுராஜ் வெஞ்சாரமூடு,வினய் போர்ட் ,ஹக்கீம் ஷாஜகான்,விஜயராகவன்   ஆகியோர் நடிக்கிறார்களஜேக்ஸ் பிஜோய் இசை அமைத்திருக்கிறார்.

கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் நிஷாம் பஷீர்.

ட்ரெய்லரைப்பார்த்தால் ஒரே அடிதடி ஆக்சன் மூவி போல் தெரிகிறது. உலகம் முழுக்க 9/7/2026 முதல் ரிலீஸ்.


6 அரூபி (மலையாளம்/தமிழ்) ஹாரர் ட்ராமா

3/7/2026 ல் கேரளாவில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போது 10/7/2026  முதல் தமிழ் டப்பிங்கில் வருகிறது.

விஷாக் ரவி,நேஹா சாவ்லா  நடித்துள்ள இந்தப்படத்தை இயக்கியவர் அபிலாஷ் வாரியர்.

ஒரு பழமையான வீடு.அது 300 ஆண்டுகள் முன் கட்டப்பட்டது.அதிலிருந்து ஒரு யக்‌ஷி (பேய்) வெளிப்படுகிறது.அந்த வீட்டில் குடி இருப்பவர்கள் அந்த யக்‌ஷியிடமிருந்து எப்படித்தப்பித்தார்கள் என்பதே கதை.

ட்ரெய்லரில் ரசித்த வசனங்கள்

1. எதையோ என்னிடமிருந்து மறைக்கிறாய்.பெக்கூலியர் கேரக்டர்  யூ ஆர்

2 அதைப்பத்திப்பேசவே பயப்படறாங்க 

3 உன்னைக்கொல்லாமல் விட்டது உன் அதிர்ஷ்டம்


7 லெனின் (தெலுங்கு/தமிழ்). ரூரல் ரொமாண்டிக் ஆக்சன் டிராமா

இதயத்தைத்திருடாதே ,உதயம் புகழ் நாஜார்ஜூனாவின் சொந்தப்படம் இது.இதில் அவரது மகன்   அகில் அக்கினேனி,பாக்யஸ்ரீ  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இயக்கி இருப்பவர். முரளி கிஷோர் அப்புரி.இசை எஸ் தமன்.

ட்ரெய்கரைப்பார்த்தால் ஆக்சன், அடிதடி வெட்டுக்குத்து 80% காதல் 20%  போல் தோன்றுகிறது

ரசித்த வசனம்


1 குருச்சேத்திரத்தில் கடைசி கட்டம் விஸ்வரூபம்.


8. Evil Dead Burn. ஆங்கிலம்/தமிழ். சூப்பர் நேச்சுரல் ஹாரர் டிராமா


கணவனின் மரணத்துக்குப்பின் நாயகியும்,கணவனின் குடும்பமும் ஒரு வீட்டில் மாட்டிக்கொள்கின்றனர்.பேமிலி  ரீயூநியன் ப்ரம் ஹெல் கான்செப்ட் படி ஒவ்வொருவராக மரணிக்கிறார்கள்.நாயகி தப்பினாரா?இல்லையா?என்பது க்ளைமாகஸ் 

ட்ரெய்லரைப்பார்த்தால் கர்ண கோடூரமான ,ரத்தக்களறியான படம் போல் தெரிகிறது.

சாம் ரைமி. எழுதிய த ஈவில் டெட் நாவலில் இருந்து திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் செபாஸ்டியன் வேனிசெக்

ரன்னிங் டைம்  109 நிமிடங்கள்.




9.  ரன் (2002) தமிழ். ரொமாண்டிக் ஆக்சன் திரில்லர்

என் லிங்குசாமி + மாதவன் காம்போவில் வந்த வித்தியாசமான ஆக்சன் படம் இது.

சாக்லெட் பாய் ஆக நடித்து வந்த மாதவன் இதில் ஆக்சன் ஹீரோவாக அசத்தி இருப்பார்.

வில்லன்கள் துரத்த ஓடும் ஹீரோ பயந்து ஓடுகிறார் என நாம் இனைக்க ஷட்டர் மூடி விட்டு அடி வெளுப்பது மாஸ் சீன்.

மீரா ஜாஸ்மின் இளமை ,அழகு பெரிய பிளஸ் 
விவேக்கின் காமெடி டிராக் செமயாக இருக்கும்

வித்யா சாகர் இசையில் 7 பாடல்களும் மெகா ஹிட்

1. தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
2 இச்சுத்தா இச்சுத்தா கன்னத்துல இச்சுத்தா

3 காதல் பிசாசே காதல் பிசாசே

4. மின்சாரம் என் மீது பாய்கின்றதே

5. அழகிய  திமிருடன். ப்ரியா ஓ ப்ரியா

6. பனிக்காற்றே
7. பொய் செல்லக்கூடாது காதலி

வில்லன் ஆக அதுல் குல்கர்னி அசத்தி இருப்பார்.இவருடனான க்ளைமாக்ஸ் பைட் கலக்கல் ஆக இருக்கும்

Double Occupancy (2026)-டபுள் ஆக்குபன்சி - தமிழ் - சினிமா விமர்சனம் (பேண்ட்டசி ரொமாண்டிக் காமெடி டிராமா

 

குஷ்பூ சுந்தர் தயாரித்திருக்கும் அவரது சொந்தப்படம் இது.அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கி இருக்கும் வித்தியாசமான ,ஜாலியான சயின்ஸ் பிக்சன் பேண்ட்டசி ரொமாண்டிக் டிராமா இது

-                              


ஸ்பாய்லர்  அலெர்ட்

திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகியும் ஒரு தம்பதிக்குக்குழந்தை இல்லை.கடவுள் நம்பிக்கையே இல்லாத கணவன் கடவுளை மனமுருகி வேண்ட ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.ஆனால் நல்ல நேரத்தில் ஒரு கெட்ட நேரம் என்பது போலக்குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்து விடுகிறது.அந்தத்தம்பதி மீண்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய மீண்டும் கடவுள் அருளால் உயிர் பெறுகிறது.ஆனால் பெண் குழந்தையாக... 


காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண் ,மாலை 6.01 லிருந்து மறுநாள் காலை 5.59 வரை ஆண் ஆக வளர்கிறது குழந்தை.

ஒரு கட்டத்தில் சாலை விபத்தில் அந்தம்பதி மரணமடைய குழந்தை சென்னை வருகிறது.

பகலில் பெண் ,இரவில் ஆண். என்று வாழும் அந்தக்குழந்தை வளர்ந்த பின்  சந்திக்கும் நடைமுறை வாழ்க்கை சிக்கல்களை முடிந்த வரை கலகலப்பாக ,ஜாலியாக , கமர்சியலாக  சொல்லி இருக்கிறார்கள்.

நாயகனாக சந்தோஷூம் ,நாயகியாக ரேஷ்மாவும் நடித்திருக்கிறார்கள்.அதாவது வளர்ந்த குழந்தை ஆணாக இருக்கும்போது நாயகன் சந்தோஷ் ,பெண்ணாக இருக்கும்போது நாயகி ரேஷ்மா.

நாயகனாக வரும் சந்தோஷ் காதல் ,டான்ஸ் ,ஆக்சன் சீக்வன்ஸ் என புகுந்து விளையாடுகிறார்.இவரது காதலியாக சம்யுக்தா கச்சிதம்.

நாயகியாக வரும்  ரேஷ்மா வின் கண் பார்வை ,உடல் மொழி அருமை.ஆடியன்சுக்கு நல்ல எமோஷனல் கனெக்ட் தருவதில் இவருக்கு வெற்றி.
நாயகியின் காதலனாக வரும் வினோத் லிஷன் உயிர்ப்பான நடிப்பு. 

வி டி வி. கணேஷ் ,பகவதி பெருமாள் இருவரின் பங்களிப்பும் அருமை.

ஒளிப்பதிவு சாந்தகுமார்.அருமையான ஒர்க்.ஆண் பெண்ணாக மாறும்போது கலரிங் கலக்கல் ரகம்.

எடிட்டிங் பிரவீன் ஆண்ட்டனி.பின் பாதியில் தொய்வு ஏற்படுவதைத்தவிர்த்திருக்கலாம்.சாம் சி எஸ் சின் இசையில் பாடல்கள் ,பின்னணி இசை ஓக்கே ரகம்


சபாஷ்  டைரக்டர்

1 முதல் பாதி படத்தில் வரும் கலகலப்பான காமெடிக்காட்சிகள் அருமை.

2 வி டி வி கணேஷ் காமெடி டிராக் பெரிய பலம்.

3 அடல்ட் காமெடியாக எடுப்பதற்கு தகுதியான கதையை சாமார்த்தியமாக டீசண்ட் காமெடியாகத்தந்த விதம்.தரக்குறைவான காட்சிகள்,வசனங்களைத்தவிர்த்த விதம் அருமை

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 2012ம் ஆண்டு வெளியான அமெரிக்கன் சோசியல் டிராமாவான  The Beauty inside  என்ற படத்தைத்தழுவி 2015ம் ஆண்டில்  அதே டைட்டிலில் ஒரு சவுத்கொரியன் மூவி வந்தது.கதைக்கருவை இங்கே இருந்து தான் சுட்டிருக்கிறார்கள்.


2. எஸ் ஜே சூர்யா நாயகனாக  நடித்து இயக்கி இருந்த நியூ (2004) என்ற சயின்ஸ் பிக்சன் காமெடி டிராமா படத்தொ இருந்து கான்செப்ட் எடுத்திருக்கிறார்கள்


3 காமெடியாக முதல் பாதியை சொன்ன இயக்குநர் பின் பாதியில் எமோஷனல் டிராமாவாக அமைப்பதில் திணறி இருக்கிறார் இயக்குநர்

4 படத்தின் கிளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.வலியத்திணித்த மாதிரி இருந்தது.

5 முதல் பாதியில் காமெடியில் கலக்கிய விடிவி கணேஷ் பின் பாதியில் காணாமல் போவது ஏனோ?

6 கடவுள் அருளால் பிறந்த குழந்தை என ஆன்மீகம் பேசி விட்டு பின் பாதியில் மரபணு,மாத்திரை எபக்ட் ,வில்லன் என சுற்றி வளைப்பது ஏன்?



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல் பாதி கலகலப்பான ஜாலி பட்டாசு.பின் பாதி சராசரி காதல் கதை.வித்தியாசமான கதைக்காகப்பார்க்கலாம்.ரேட்டிங் 2.5 / 5


Double Occupancy
Theatrical release poster
Directed byAswin Kandasamy
Written byAswin Kandasamy
Produced by
Starring
CinematographyKalaiselvan Sivaji
Edited byPraveen Anthony
Music bySam C. S.
Production
companies
Avni Movies
Benzz Media Pvt Ltd
Distributed byFive Star K. Senthil
Release date
  • 12 June 2026
CountryIndia
LanguageTamil

Thursday, July 09, 2026

Sing Geetham -சிங்கீதம் (2026)-தெலுங்கு- சினிமா விமர்சனம் (பேண்ட்டசி காமெடி டிராமா)


 தனது முதல் தமிழ்ப்படமான திக்கற்ற பார்வதி(1974) க்கு சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருது வாங்கினார்.கமலின் 100வது படமான ராஜபார்வை (1981) இவர் இயக்கிய இரண்டாம் தமிழ்ப்படம்.அபூர்வசகோதரர்கள்(1989) பாக்ஸ் ஆபீசில் மெகா ஹிட் அடித்தது இவரது மூன்றாவது தமிழ்ப்படம்.மைக்கேல் மதனகாமராஜன் (1990) கிளாசிக் காமெடி ஹிட் இவரது நான்காவது தமிழ்ப்படம்.மகளிர் மட்டும் (1994) இவரது ஐந்தாவது படம்.தொடர்ந்து கமலுடனேயே நான்கு ஹிட்ஸ் கொடுத்தவர் பிரபுவுடன் இணைந்து சின்ன வாத்தியார்(1995) கொடுத்தார்.காதலா காதலா(1998)கமல் +பிரபு தேவா காம்போ காமெடிப்படம்.லிட்டில் ஜான்(2001),மும்பை எக்ஸ்பிரஸ்(2005) இந்த இரண்டு படங்களும் சரியாகப்போகவில்லை.


வசனங்களே இல்லாமல் வெளியான புஷ்பக்(1987) தமிழில் பேசும் படம் என்ற டைட்டிலில் வந்தது.

வித்தியாசமான சப்ஜெக்ட்டைக்கையில் எடுத்துக்கொண்டு அதில் காமெடியைக்கலந்து கொடுப்பதில் சிங்கீதம் சீனிவாசராவ் ஒரு விற்பன்னர்.இவருக்கு இப்போது 94 வயது ஆகிறது.இந்த வயதிலும் அப்டேட்டாக இருந்து ஒரு பேண்ட்டசி காமெடி டிராமா எடுத்திருக்கிறார்.அது எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்


--                              


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு சில்லறைத்திருடன்.ஒரு சின்ன பெட்டி கேசில் ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டு ரிலீஸ் ஆகி வெளியே வருகிறான்.தனது பூர்வீக சொத்து குபேரபுரம் என்ற ஊரில் இருப்பதை அறிந்து அதை விற்றுக்காசாக்கி விடலாம் என அங்கே போகிறான்.


ஊருக்கு வந்தபின் தான் அது ஒரு பொட்டல் காடு என்பது தெரிய வருகிறது.ஒரே ஒரு பெரிய பாரம்பரியம் மிக்க மரம் ஒன்று இருக்கிறது.அதை தனது சொந்த அம்மா போல் பாதுகாத்து வருகிறார் இயற்கை ஆர்வலரான கவுரி என்ற பெண்.


நாயகி பெயர் ரேணு.இவர் ஒரு தங்க சுரங்கத்தின் நிர்வாகி.பாரீனருடன் சேர்ந்து இன்னொரு தங்க சுரங்கத்தை விற்க ஏற்பாடு செய்யும்போது அதற்கு நாயகனின் கையெழுத்துத்தேவைப்படுகிறது.நாயகன் ,நாயகி இருவரும் இணைந்து தங்க சுரங்கத்தை விற்க முயல்கின்றனர்.சுரஙகத்தைத்தோண்டும் முன் அந்த மரத்தை வெட்ட வேண்டும்.ஆனால் கவுரி அந்த மரத்தை வெட்ட சம்மதிக்க வில்லை.


மீறி வெட்டும்போது கவுரி கடவுளிடம் வேண்டுகிறார்.அப்போது ஒரு குகைக்குள் விழுந்து விடுகிறார்.ஊர் மக்களுக்கு சாபம் கொடுக்கிறார்.அது பலிக்கிறது.அதாவது ஊர் மக்கள் இனி வாய் திறந்து வசனமாக எதுவும் பேச முடியாது.பாடலாகத்தான் வாயில் வரும். இந்த வித்தியாசமான சாபத்தில் இருந்து ஊர் மக்கள் எப்படி விடுபட்டனர் ?அந்த தங்க சுரங்கம் என்ன ஆனது ?என்பது மீதித்திரைக்கதை.


நாயகனாக அயான் நடித்துள்ளார்.நல்ல கிராமிய முகம்.நடிப்பும் கச்சிதம்.

நாயகிகளாக அஹில்யா ,ஷாலினி இருவர் நடிப்பும் பாந்தம்.குறிப்பாக கவுரி கேரக்டரில் வரும் அஹில்யா இயல்பான நடிப்பு.புதுமுகம் போலவே தெரியவில்லை.

ஷாலினி நெகடிவ் கேரக்டரில் மிளிர்கிறார்.அவர் போக துளசி ,சிவநாராயணா,பார்பர் ஆக வருபவர் ,பூசாரி,டாக்டர்,சின்னப்பசங்க  என அனைவரும் மனதில் தங்கி விடுகிறார்கள்.யதார்த்தமான நடிப்பு.


தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை அருமை.மெலோடி சாங்க்ஸ் கலக்கல் ரகம்.பின்னணி இசையும் அருமை.


அன்குரின் ஒளிப்பதிவு பிரமாதம்.பாரதி ராஜாவின் கருத்தம்மா கிராமம் போல  வறண்ட நிலப்பரப்பின் அழகைக்காட்டிய விதம் அருமை.


படத்தின் ரன்னிங்க் டைம் 137 நிமிடங்கள்.


கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் சிங்கீதம் சீனிவாசராவ்




சபாஷ்  டைரக்டர்

1 முதல் அரை மணி நேரம் தான் படத்தில் வசனம் இருக்கும்.மீதி எல்லாம் பாடல்கள் தான்.சுஜாதா எழுதிய கரையெல்லாம் செண்பகப்பூ நாவல் நினைவும் ,வாயை மூடிப்பேசவும் படத்தையும் நினைவடுத்துகிறது.வித்தியாசமான முயற்சி


2 குழந்தைகளும்,பெரியவர்களும் ரசிக்கும்படி குபேரபுரம் என்ற ஊரை செட் செய்து எமோஷனல் கனெக்ட்  அளித்த விதம்


3 கடவுள் நம்பிக்கையை வைத்து ஒரு கிண்டலான சீக்வன்ஸ் அமைத்த விதம் அருமை.

4 அந்தக்காலத்தலைமுறை ,புதியதலைமுறை பார்த்துக்கற்றுக்கொள்ள வேண்டியது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஊர் மக்களால் பேச முடியாத ஒரு நிலை வரும்போது ஏன் யாருமே ஊரை விட்டுப்போக முயலவில்லை?

2 படத்தின் மையக்கரு 1964ல் வெளியான  The umbrellas of Cherbourg படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.ஆனால் டைட்டிலில் அதற்கான க்ரெடிட்ஸ் தரப்படவில்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான ,பிரமாதமான,மியூடிக்கல்  ரூரல் காமெடி டிராமா பார்க்க நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய நல்ல படம்.ஆங்கில சப் டைட்டில் உண்டு.ரேட்டிங்க் 3.5/5

Wednesday, July 08, 2026

ஜனநாயகன் இனி ரிலீஸ் ஆவதை முதல்வர் விஜய் விரும்பவில்லையா?ஏன்?


 2026 பொங்கல் ரிலீஸ் ஆக ஜனநாயகன் ரிலீஸ் ஆனால் தனது தேர்தல் பயணத்துக்கு அது உறுதுணையாக இருக்கும் என்று விஜய் நினைத்தார் ஆனால் அது நடக்கவில்லை.


எம் ஜி ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் இதே போல் பல பிரச்சனைகளை சந்தித்தது.பல சவால்களைக்கடந்து அது ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டது
.

இப்போது விஜய் முதல்வர் ஆகி விட்டார்.ஆனால் ஜனநாயகன் ரிலீசில் அவர் ஆர்வம் காட்டவில்ல.அவரது ஆஸ்தான ஜோதிடர் அறிவுரைப்படி விஜய் நடக்க முடிவெடுத்து விட்டார் என்கிறார்கள்.

அதாவது படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்தால் அரசியல். எண்ட் ரிக்கு உதவியாக இருந்திருக்கும்.அது நடக்கவில்லை.இனிமேல் ரிலீஸ் ஆனாலும் விஜய்க்குப்பிரயோஜனம் இல்லை என ஜோதிடர் சொல்லி விட்டாராம்.

விஜயின் ஜாதகப்படி சினிமா அல்லது அரசியல் ஏதோ ஒன்றில் தான் வெற்றி பெற முடியுமாம்.இப்போது அரசியலில் விஜய் ஜெயித்து விட்டார்.இப்போது சென்சார் பிரச்சனைகளைக்கடந்து படம் ரிலீஸ் ஆனாலும் விஜய்க்கு அரசியலில் ஆபத்து வருமாம்.

ரசிகர்கள் வெறித்தனமாகப்படத்துக்காகக்காத்திருக்கிறார்கள்.எப்படியும் அதை மெகா ஹிட் ஆக்காமல் விட மாட்டார்கள்.அப்படி மெகா ஹிட் ஆனால் விஜய்க்கு அரசியலில் பிரச்சனைகள் வரலாம்.அதனால் படத்தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்ட 300 + கோடி ரூபாயை நட்ட இட்டாகத்தந்து விடலாமா?என்று விஜய் யோசிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முதல்வர் விஜய் ஜாதகப்படி அரசியல்,சினிமா இரண்டில் ஏதோ ஒன்றில் மட்டும் தான் கோலோச்ச முடியும் என்று கட்டம் சொல்கிறதாம்.ஒரு வேளை ஜனநாயகன் சென்சார் பிரச்சினை களைக்கடந்து ரிலீஸ் ஆகி ஹிட் ஆகி விட்டால் அதற்கு எதிர் வினையாக அரசியல் வாழ்க்கையில் பிரச்சனை வரும் என்று ஜோதிடர் சொல்வதால் முதல்வர் விஜய் அதைத்தவிர்க்க நினைக்கிறாராம்


இதை உறுதிப்படுத்தும் விதமாக பட இயக்குனர் ஹெச் வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில். ஜனநாயகன் பற்றிய சில கசப்பான உண்மைகளை சொல்லும் தைரியமும் எனக்கு இல்லை,அப்படியே சொன்னாலும் அதை அப்படியே பிரசுரிக்கும் துணிவும் பத்திரிக்கைகளுக்கு இல்லை. என்று சொன்னது குறிப்படத்தக்கது.



டிஸ்கி - இந்தக்கட்டுரை 4/6/2026 அன்று கல்கி இதழுக்கு அனுப்பியது.இப்போதைய அப்டேட் 31/7/2026 படம் ரிலீஸ்

Tuesday, July 07, 2026

The Marked woman (2026)- La Descondcida-ஸ்பானிஷ் /ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் திரில்லர்)@நெட் பிளிக்ஸ்

 


                      29/5/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம்  5/6/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.


ரோசா மாண்ட்டரோ,ஆலிவர் ட்ரக் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய LA Descondcida  என்ற ஸ்பானிஷ் நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட இந்தப்படத்துக்கு டைட்டிலும் நாவலின் டைட்டிலே வைக்கப்பட்டது.     


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின் அக்கா ஒரு கடத்தல் கும்பலில் வேலை செய்கிறாள்.அந்த கும்பலைப்பற்றிப்போலீசுக்குத்தகவல் தரும் இன்பார்மராக இருக்கிறாள்.கோடிக்கணக்கான ரூபாய் பணம் உள்ள ஒரு இடத்தின் பார்கோடு அவளுக்குக்கிடைக்க அவள் அதை நாயகிக்குப்பாஸ் செய்து விடுகிறாள்.அதற்குப்பின் அவள் ஆள் அட்ரசே இல்லை.உயிருடன் இருக்கிறாளா?கொல்லப்பட்டாரா?என்பது தெரியவில்லை.


நாயகி ஒரு ஐ டி டிபார்ட்மெண்ட் ஊழியர்.சிஸ்டம் ஹேக்கிங் அறிந்தவர்.படத்தோட ஓப்பனிங்க் சீனில் மயக்க நிலையில் ஒரு  கண்ட்டெய்னரில் கண்டெடுக்கப்படுகிறார்.தலையில் அடிபட்டதால் அவருக்குப்பழைய நினைவுகள் எதுவும் இல்லை.


நாயகியைத்தேடி ஒரு கும்பல் வருகிறது.பணம் இருக்கும் இடத்துக்கான பார் கோடு நாயகியிடம் இருப்பதால் அதைக்கைப்பற்ற அந்த கும்பல் துடிக்கிறது.ஆனால் நாயகிக்குத்தான் யார் என்பதும் நினைவில்லை.தன் அக்கா பற்றியும் ஞாபகம் இல்லை.


ஒரு லேடி போலீஸ் ஆபீசர் நாயகியைப்பாதுகாக்க நியமிக்கப்படுகிறார்.அந்த லேடி போலீஸ் ஆபீசருக்குத்துணையாக இன்னொரு ஆண் போலீஸ் ஆபிசர் நியமிக்கப்படுகிறார்.இவரிடம் தான் நாயகியின் அக்கா போலீஸ் இன்பார்மர் ஆக வேலை பார்த்தார் 


இந்த விஷயம் நாயகிக்கோ ,நாயகியைக்காப்பாற்ற வந்த லேடி போலீஸ் ஆபீசருக்கோ தெரியாது.நாயகியைத்தேடி வரும் கும்பலுக்கும் இந்த செக்யூரிட்டி ஆபீசர்ஸ் பற்றித்தெரியாது.


நாயகியை அந்த கும்பல் பிடித்தார்களா?நாயகியின் அக்கா நிலை என்ன? லேடி போலீஸ் ஆபீசர் வெற்றி பெற்றாரா? என்பது மீதித்திரைக்கதை.

நாயகியாக அனா ரூஜஸ் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.வெற்றி விழா கமல் மாதிரி எல்லாம் மறந்த கேரக்டராக வரும்போது பரிதாபத்தை ஏற்படுத்துபவர் ஆக்சன் சீக்வன்சில் அதகளப்படுத்துகிறார்.ஹாஸ்பிடல் பைட் சீன் கலக்கல் ரகம்.

நாயகியைக்காப்பாற்றும் லேடி போலீஸ் ஆபீசராக கேண்டேலா பெனா வித்தியாசமான கேரக்டர் டிசைனில் கவர்கிறார்.சோம்பேறித்தனமான முக பாவனை ,நியாயத்துக்குக்குரல் கொடுப்பது,உயர் அதிகாரிகளை எதிர்த்துப்பேசுவது,சக கொலீக்சை லெப்ட் ஹேண்டில். டீல் செய்வது அனைத்தும் அருமை.


லேடி போலீஸ் ஆபீசருக்கு உதவுபவராகவும் ,நாயகியின் அக்காவிடம் இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணுபவருமாக வரும் போலீஸ் ஆபீசராக போல் லோபஸ் நடித்திருக்கிறார்.இவர் வில்லனா? நாயகனா?என்ற சஸ்பென்சைக்காப்பாற்றியது கச்சிதம்.

நாயகியின் அக்காவாக கிரா மிரோ அதிக வாய்ப்பில்லை என்றாலும் கதையின் முடிச்சை அவிழ்ப்பவராக வருகிறார்.


படத்தில் வரும் மற்ற சின்ன சின்னக்கேரக்டர்களும் கச்சிதமாக நடித்துள்ளனர்.


இசை,பின்னணி இசை,ஒளிப்பதிவு ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கன கச்சிதம்


லாரா சேண்டிம் எழுதிய திரைக்கதைக்கு உயிர் கொடுத்து இயக்கி இருப்பவர் கேப் இபனேஸ்.


சபாஷ்  டைரக்டர்

1 ஓப்பனிங்க் சீனிலேயே நாயகி,நாயகியின் அக்கா சேசிங் சீனைக்காட்டி பரபரப்பைக்கிளப்பிய விதம் அருமை.

2 நாயகி ஹாஸ்பிடலில் இருக்கும்போது வில்லனின் ஆள் நாயகியைக்கொல்ல வரும் சீனில் ஆக்சன் சீக்வன்ஸ் அதகளம்.விக்ரம் படத்தில் கமல் பல கட்டிடங்களில் தாவி ஓடி குதிப்பது போல நாயகியின் சாகசம் கலக்கல் ரகம்

3  லேடி போலீஸ் ஆபீசரின் உதவியாளர். நல்லவரா?கெட்டவரா?என்பதை யூகிக்க முடியாத வண்ணம் காட்சிகளை அடுக்கிய விதம் அருமை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 முதல் 30 நிமிடங்கள்  ரொம்பவே  மெதுவான திரைக்கதை.பொறுமை தேவை

2 லேடி போலீஸ் ஆபீசருக்கும் ,உயர் அதிகாரிக்கும் நடக்கும் கருத்து மோதல்கள் பல படங்களில் பார்த்து சலித்தவை

3 நாயகி ஒரு ஐ டி டிபார்ட்மெண்ட் சிஸ்டம் ஹேக்கர் மட்டுமே.அவர் போலீஸ் போல ஆக்சனில் கலக்குவது எப்படி?போலீஸ் கட்டிப்போட்டபோது லாவகமாகத்தப்பிப்பது எப்படி?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல் பாதி ஸ்லோ பின் பாதி ஆக்சன் அதகளம் ,பொறுமை உள்ள கிரைம் திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்.ரேட்டிங். 3/5


The Marked Woman
Promotional release poster
SpanishLa desconocida
Directed byGabe Ibáñez
Screenplay byLara Sendim
Based on
La desconocida
by Rosa Montero and Olivier Truc
Starring
CinematographyBernat Bosch
Edited byNacho Ruiz Capillas
Music byFernando Velázquez
Production
companies
K&S Films
Distributed byTripictures
Release date
  • 29 May 2026
CountrySpain
LanguageSpanish

Monday, July 06, 2026

கட்டா குஸ்தி 2 (2026)-தமிழ்- சினிமா விமர்சனம் (காமெடி டிராமா)

 


முதல்வர் விஜய் ஆட்சியில் வரும் முதல் ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியீடு இது.விஷ்ணு விஷாலின் சொந்தப்படம்.கலகலப்பான ,பேமிலி ஆடியன்சை டார்கெட் செய்து ஜெயித்திருக்கும் காமெடிப்படம் இது.முதல் பாகம் பார்க்காதவர்களும் இதைப்பார்க்கலாம்.

                             


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி குத்துச்சண்டை வீராங்கனை, ஸ்போர்ட்ஸ்  கோட்டாவில் அரசுப்பணி கிடைக்க நாயகன் வீட்டைப்பார்த்துக்கொள்கிறான்.இருவருக்கும் 5 வயதில் மகள்.

ஒரு போட்டியின் பரிசளிப்பு விழாவில் நாயகி என் வெற்றிக்குக்காரணம் தன் கணவன் தான் என சொல்ல ,தன் பெயரை சொல்வார் என்று எதிர்பார்த்த நாயகியின் கோச்-க்கு அதிர்ச்சி.கோச்சின் மனைவி கோச்சை அவமானப்படுத்த கோச் வில்லன் ஆகிறான்.


எப்படியாவது நாயகியைய்தோற்கடித்து. வேறு ஒரு பெண்ணை ஜெயிக்க வைக்க வேண்டும் என சபதம் எடுக்கிறான்.


அதன்படி ஊக்க மருந்தை சத்து மருந்து என சொல்லி நாயகனிடம் கொடுக்க நாயகன் உண்மை தெரியாமல் அதை நாயகியின் உணவில் கலந்து தினமும் கொடுக்கிறான் .விளைவு போட்டியில் நாயகி தோல்வி.ஊக்க மருந்தை பயன்படுத்தியதற்கு ஒரு வருடம் போட்டிகளில் கலந்து கொள்ளத்தடை.


இதற்கெல்லாம் நாயகன் தான் காரணம் என நாயகி நினைக்கிறார்.டைவர்ஸ் நோட்டீஸ் வரை சீரியஸ் ஆகிறது.இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மிதித்திரைக்கதை


நாயகனாக விஷ்ணு விஷால் அடக்கி வாசித்து இருக்கிறார்.பொதுவாக புருஷன் என்றாலே பொண்டாட்டிக்கு அவன் எடுபுடி ஆள் தான் என்றாலும் ஈகோ இல்லாமல் நாயகன் இருப்பது சிறப்பு 

நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமிக்கு முதல் பாகத்தை விட இதில் நடிக்க அதிக வாய்ப்பு. அருமையாக பயன்படுத்தி இருக்கிறார்.

டீச்சராக வரும் மோக்சாவுக்கு தியேட்டரில் அதிக கைதட்டல் முந்தானை முடிச்சு தீபா தான் இந்த கேரக்டருக்கான இன்ஸ்பிரேசன் போல. ( தியேட்டரில் ஒரு கமெண்ட் இது தான் மோக்சாவா?செம்பு தேக்சா மாதிரி இருக்கு)

மகளாக வரும் சாரா பிரமாதமான நடிப்பு.சில இடங்களில் பேபி ஷாலினி போல் ஓவர் ஆக்டிங்காக இருந்தாலும் ,பல இடங்களில் கலக்கலான நடிப்பு.

நாயகியின் மாமாவாக முனீஷ் காந்த் ,நாயகனின் நண்பனாக காளி வெங்கட் இருவரும் காமெடிக்கு.

நாயகனின் மாமாவாக வரும் கருணஷ் போர்சன் ,காமெடி அருமை.

ஜட்ஜ் ஆக வரும் ரம்யாகிருஷ்ணன். அசத்தல்.க்ளைமாக்சில் கெஸ்ட் ரோலில் வரும் யோகிபாபு உலக அதிசயமாய் சிரிக்க வைக்கிறார்.


ஷீன் ரோல்டன் இசையில் 6 பாடல்கள்.3 நன்று.பின்னணி இசை கச்சிதம்.

கே எம் பாஸ்கரின் ஒளிப்பதிவு தரம்.சரத் விக்ரமனின் எடிட்டிங் கில் படம் 154 நிமிடங்கள் ஓடுகிறது.

கதை,திரைக்கதை எழுதி கே பாக்யராஜ் பாணியில் ஜனரஞ்சகமாக இயக்கி இருக்கிறார் செல்லா அய்யாவு 




சபாஷ்  டைரக்டர்

1 புருசன் பொண்டாட்டிக்குள் மட்டும் ஏன் அடிக்கடி சண்டை வருகிறது?என நாயகன் கேட்க கருணாஸ் அளிக்கும் விளக்கத்துக்கு தியேட்டரில் செம அப்ளாஸ் 

2 நாலாம் படிச்ச நான்சென்ஸ் என்று நினைத்த கருணாசின் மனைவி ஆங்கிலம்,ஹிந்தி மொழிகளில் மாறி மாறி ஆபீசரிடம் பேசும்போது கருணாஸ் திருதிருவென விழிப்பது கலக்கல்.

3 இடைவேளைக்குப்பின் நாயகிக்குத்தெரியாமல் நாயகனும் ,மகளும் ஸ்கூலில் சந்திக்கும் காட்சிகள் நல்ல செண்ட்டிமெண்ட் டச்.

4 பாப்பா ஊஞ்சலில் ஆடும் ஷாட் அஞ்சலி படத்தில் வரும் காட்சியை நினைவுபடுத்தினாலும் கவிதை.

5 கருணாகரனின் மனைவி ,நாயகன் இருவருக்கும் கனெக்சன் இருக்குமோ என அவர் சந்தேகப்படுவது சந்திரமுகி ,ரஜினி,வடிவேல் காமெடியை நினைவூட்டினாலும் தியேட்டரில் சிரிப்பலை.

6 பிரிந்திருக்கும் கணவனும்,குழந்தையும் சோகத்தில் இருப்பார்ககள் என நினைத்து நாயகி அவர்களைப்பார்க்கப்போகும் இடத்தில் நாயகனும் ,டீச்சரும் அப்படிப்போடு போடு கில்லி பாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பது கலக்கல் ப்ளேஸ்மெண்ட்.

7 கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்க்கு வாதாடும் வக்கீல் வாதத்தை முடித்து விட்டு மரண தண்டனை கேட்கும் இடம் செமக்காமெடி,அதற்கு ஜட்ஜ் கொடுக்கும் கவுண்ட்டர் பெரிய டைகர்  தயாநிதி (விதி படம்) செம.,

8 க்ளைமாக்ஸ் நாயகன் - நாயகி சண்டைக்காட்சியில் தோற்றுக்கொண்டே இருக்கும் நாயகன் நாயகியின் கழுத்தில் முத்தம் கொடுத்து வீழ்த்துவது எல்லாம் கே பாக்யராஜ் பாணி


  ரசித்த  வசனங்கள் 

1 பல குடும்பஙகள் அழியறதே இந்த ரீல்ஸ்லாதான்.

2 தமிழ்நாட்டில் ஆசையா வேலைக்குப்போனவங்களை விட அவமானத்துல வேலைக்குப்போறவங்கதான் அதிகம்.

3 உளி பட்டால்தான் கல் சிலை ஆகும்.

உங்களைப்பார்த்தாலே தெரியுது,உங்க மேல உளியே படலைன்னு.

4 பிடிச்ச விஷயத்தை செய்யும்போது வலி தெரியாது.

5 புருஷன்ல ஏதுடி நல்லவன்,கெட்டவன்?புருஷன்னாலே கெட்டவன் தான்.

6 புருஷன் எதை வேணாலும் தாங்கிக்குவான்,ஆனா பொண்டாட்டி அவனை விடப்பெரிய ஆள் ஆகறதைத்தாங்கிக்க மாட்டான்.

7 உலகத்துலயே நன்றி உள்ள பிராணி நாய் தான் ,நன்றி கெட்டவன் புருஷன் தான்.

8 தப்பு நம்ம மேல இருக்கும்போது நாமதான் இறங்கிப்போகனும்

9 பெத்தவங்க கிட்டே இருக்கும் பெரிய சவாலே  குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதில் தான்.

10 நல்ல விஷயங்களைத்தான் பரப்ப மாட்டாங்க,கெட்ட விஷயத்தை உடனே பரப்புவாங்க

11 பொண்டாட்டி கிட்டே சண்டை போட்டு எந்தப்புருஷன் ஜெயிச்சிருக்கான்?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 பள்ளிகளில் பெற்றோர் மீட்டிங் நடக்கும்போது டிரஸ்கோடு எதுவும் இல்லையா?நாயகன் லுங்கி(கைலி) யில் ரெகுலரா வருகிறார்?

2 தனியார் பள்ளிகளில் டீச்சர்ஸ் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட அனுமதி உண்டா?

3 பள்ளி விழாவில் நடக்கும் நடனப்போட்டிக்குத்தயாராகும் மகள் வீட்டில் பயிற்சி செய்வது சொந்த அம்மாவுக்கே தெரியாமல் இருப்பது எப்படி?

4 மகள் ரேங்க் கார்டையே பார்க்காமல் ,மகளின் கல்வி அறிவு பற்றியே தெரியாமல் ஒரு அம்மா இருப்பாரா?

5 ஸ்ட்ரெஸ் குறைய யோகா,தியானம்,பிராணயாமம்(மூச்சுப்பயிற்சி) செய்தாலே போதும்.வில்லன் நாயகனை திசை திருப்பும்போது நாயகன் ஏமாறுவது எப்படி?

6 கோபத்தைக்குறைக்க மன நல மருத்துவர் ஊசி போடுவாரா?எந்த  ஊரில்?

7 டி வி யில் வரப்போகும் ஒரு நிகழ்ச்சியில் மனைவிக்குத்தெரியாமல் ,மனைவிக்குப்பிடிக்காத பெண்ணுடன் ஜோடியாக கலந்து கொள்வானா ஒரு ஆண்?

8 உணவில் வித்தியாசமான ஒரு கண்ட்டெண்ட்டை ரெகுலராகக்கலந்து கொடுத்தால் அதை உண்ணும் நாயகிக்குப்பல மாதங்களாகத்தெரியாமல் இருக்குமா?

9 ஒரு ஸ்கூல்  டீச்சர் டிவி ஷோவில் பப்ளிக்காக    திருமணம் ஆன நாயகனுக்கு முத்தம் கொடுப்பாரா?

10 கோச் தான் காரணம் என்பதை நாயகன் நாயகியிடம் சொல்லவே இல்லையே?

11 கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப்போன மனைவியை சமாதானப்படுத்தப்போகும் நாயகன் துணைக்கு வக்கீலாக இருக்கும் நண்பனை வக்கீல் யூனிபார்முடன் அழைத்துப்போவது மடத்தனம்.

12 குடும்ப நலக்கோர்ட்டில் விசாரணைக்கு வரும் டைவர்ஸ் கேஸ் முதல் நாளே விசாரணைக்கு வருமா?கவுன்சிலிங்க் தானே அனுப்புவார்கள்?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான முதல் பாதி ,கலகலப்பான பின் பாதி ,முதல் பாகத்தை விட அதிக ஹிட்ஸ் அடிக்கும் ஜனரஞசகம். விகடன் மார்க் யூகம் 43,குமுதம் ரேட்டிங். நன்று .அட்ரா சக்க ரேட்டிங் 3/5,