Tuesday, November 18, 2025

மதராஸ் மாபியா கம்பெனி (2025)--தமிழ்- சினிமா விமர்சனம் (காமெடி ட்ராமா)

             

            டைட்டிலையும்,போஸ்டர் டிசைனையும் பார்த்து இது அடி தடிப்படமோ என யாரும் பயப்பட வேண்டாம்.இது ஒரு மொக்கைக்காமெடி மெலோ ட்ராமா.14/11/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் விரைவில் டி வி யில் வரும்  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு லோக்கல் தாதா.அவனுக்கு சட்டப்படி ரெண்டு சம்சாரம்,செட்டப் படி ஒரு சமாச்சாரம்.பெரிய அரசியல்வாதியா வரத்தகுதியான ஆளு.இவருக்கு 4 எதிரிகள்

1 இவரை என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ளத்துடிக்கும் நாயகி ஆன போலீஸ் கமிஷனர்

2  இவருக்கு லெப்ட் ஹேண்ட் ஆக இருக்கும் ஆள் .இவரைப்போட்டுத்தள்ளி விட்டால் நாம் தான் லீடர் என நினைப்பவன்,கூடவே இருப்பவன் ( இவனுக்கு வை கோ மாதிரி கெட்டப் வேற)

3 நீ இந்தத்தொழிலுக்கு சரிப்பட்டு வர மாட்டே என நாயகனால் அவனது கேங்கை துரத்தி அடிக்கப்பட்ட காமெடியன்

4 நாயகனின் தொழில் போட்டி எதிரி

5 தனது காதலுக்கு எதிரியாக இருக்காரே? காதலனைக்கொன்று விட்டாரே?என அவர் மேல் கோபமாக இருக்கும் நாயகனின் மகள்


இவர்கள் ஐந்து பேர்களில் யாரால் நாயகனுக்கு ஆபத்து? என்பது மீதி திரைக்கதை


நாயகன் ஆக ஆனந்தராஜ்.மாநகரக்காவல்,படத்தில் வில்லனாக வந்தாலும் கெட்டப்பில் அசத்தி இருப்பார்.ஆனால் நாயகனாக வந்தும் இதில் அந்த அளவுக்கு தோரணையான நடிப்பு இல்லை.காமெடிக்கேரக்டர் என்பதால் சமாளிக்கிறார் 


காமெடியன் ஆக வரும் முனீஷ் காந்த் நாயகனைக்கொல்ல முயலும் காட்சிகள் எல்லாம் நல்ல காமெடி.

முதல் சம்சாரம் ஆக தீபாவும் ,2வது சம்சாரம் ஆக லயாவும் அவர்கள் பங்குக்கு வந்து போகிறார்கள்.


போலீஸ் ஆபீசர் ஆக வரும் சம்யுக்தா ஆள் ஜம் என்றிருந்தாலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிஙகோ என எண்ண வைக்கிறார்.

நாயகனின் மகளாக வருபவர் குட்.ஆனால் மகளின் காதலன் ஆக வருபவர் கஞ்சாக்கேஸ் மாதிரி இருக்கிறார்.

இசை ஸ்ரீகாந்த் தேவா.ஒரு குத்துப்பாட்டு சுமாரா இருக்கு.பின்னணி இசை பரவாயில்லை ரகம்

எடிட்டிங பரவாயில்லை.126 நிமிடங்கள். அசோக் ராஜின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.


இயக்கம் ஏ எஸ் முகுந்தன்



சபாஷ்  டைரக்டர்


1 காமெடியன் நாயகனைக்கொல்ல முயற்சிக்கும் அந்த நான்கு வெவ்வேறு முயற்சிகள் சிரிப்பு

2 டபுள் மீனிங்கில் கண்ணியமான காமெடி வசனஙகள் பரவாயில்லை ரகம்

3  போர் அடிக்காமல் திரைக்கதை அமைத்த விதம்


  ரசித்த  வசனங்கள் 

1 விசுவாசம் என்னும் வட்டத்துக்குள் ஒரு தடவை நீங்க விழுந்துட்டா பின் நீங்களே நினைச்சாலும் அதுல இருந்து வெளில வர முடியாது


2 நாட்டு மக்களுக்கு நான் எவ்வளவோ கெடுதல் பண்ணி இருக்கலாம்,ஆனா நாட்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன்


3  இனிமே அவ வீட்டுப்பக்கம் போவீங்க?


ச்சே ச்சே..வீட்டுக்குள்ளே வேணா போவேன்


4. பாழாப்போனது பசுவின் பால் அப்டினு சொல்வாங்க,இப்போ ஒரு பசுவே பாழாப்போகப்போகுது


5  என்னடா உனக்கு பொண்டாட்டி பாசம்.அவ உனக்கு நாலாவது சம்சாரம்.நீ அவளுக்கு மூணாவது புருசன்


6 Fun பண்றதுக்கு எல்லாம் பஞ்சாஙகம் பார்க்கலாமா?

7 பகலில் பக்கம் பார்த்துப்பேசு,டாஸ்மாக் பாரில் அதுவும் பேசாதே


8  சண்டை செய்யற எல்லாராலும் சம்பவம் (கொலை) செய்ய முடியாது

9 கண்ணி வெடின்னு தெரியாம காலை வெச்சுட்டே,எரிமலைனு தெரியாம எச்சில் துப்பிட்டே

10 கோமதி,நீ தொழிலில் ரொம்ப சுத்தம் தான்,ஆனா நீ சுத்தம் இல்லை


11 என்னை விட்டுடுங்க,நான் உங்க கிட்டே தொழில் கத்துக்கிட்டவன்

அதனாலதான் உன்னை விடக்கூடாது

12 எனக்கும் ,பூங்காவனத்துக்கும் நடப்பது  சாதா சண்டை இல்லை.கழுதைப்புலிக்கும் ,காட்டு யானைக்கும் நடக்கும் சண்டை

அப்போ நீங்க தான் அந்த கழுதைப்புலியா?

13.  கசாயம் வித்த காசு கசக்காது

கள் வித்த காசு ஆடாது


14 ஏம்மா கோமதி.அந்த ஏரியா தாதா ஆனதுல இருந்து எத்தனை பேரைப்போட்டிருப்பே?(கொலை)

போங்க.பப்ளிக்கா கேட்டா கூச்சமா இருக்காதா?

அடச்சே!அவரை கொலையைப்பத்திப்பேசிட்டு இருக்காரு


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகனின் மகளை தன் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் அக்கா பையனை மியூசிக் கிளாசில் சேர்த்து விடுகிறார்.பல நாட்கள் பாலோ பண்றார்.ஆனால் ஒரு காட்சியில் மியூசிக் கிளாஸ் லேண்ட் லைன் போன் நெம்பரே அவருக்குத்தெரியாமல் தடுமாறுகிறார்

2  நாயகன் தனது மகளின் காதலனை கோபத்தில் அடிக்கிறார்.அவன் தலையில் காயம் பட்டு பின் ட்ரீட்மெண்ட் நடந்து சில நாட்களில் இறக்கிறான்.அது ஆக்சிடெண்ட்டல் டெத் தான்.அது கொலை என மகளே சொல்லல.ஆனா போலீஸ் சொல்லியது எப்படி?

3  நாயகன் தாடி வைத்து கெட்டப் சேஞ்ச் செய்து வரும்போது 3 சம்சாரங்களுக்கும் அடையாளம் தெரியாதா? எம் ஜி ஆர் படத்தில் தான் அப்படி வரும்

4 நாயகனுக்கு எதிராக யாருமே சாட்சி சொல்ல முன் வராத போது மகள் தயார் என்கிறாள். லட்டு மாதிரி வாய்ப்பு.உடனே சாட்சியைப்பதிவு பண்ணாமல் நீ நாளை வா என சொல்வது காமெடி.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி ல போடும்போது பார்க்கக்கூடிய அளவில் ஒரு சுமாரான மொக்கைக்காமெடிப்படம்.விகடன் மார்க் யூகம் 39.குமுதம் ரேங்க்கிங்க் சுமார்.ரேட்டிங்க் 2/5

Monday, November 17, 2025

AVIHITHAM (2025 )- AN ILLICIT AFFAIR - மலையாளம் - சினிமா விமர்சனம் ( பிளாக் ஹியூமர் காமெடி டிராமா )@ ஜியோ ஹாட் ஸ்டார்

             


        டைட்டிலைப்படித்தோ,போஸ்டர் டிசைனைப்பார்த்தோ இது ஒரு மார்க்கமான படம்  என்று யாராவது எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போவீர்கள்.இது அக்மார்க் யூ படம்.   


10/10/2025 முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் 14/11/2025 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.தமிழ் டப்பிங்கிலும் உள்ளது.


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு கிராமம்.அங்கே ஒரு ஆள் நைட் டைம் சரக்கு அடிச்ட்டு  வீட்டுக்குக்கிளம்பும்போது  ஒரு கள்ளக்காதல் ஜோடி தோப்புக்குள்ளே  இருப்பதைப்பார்த்துடறான்.


அடுத்த நாள் அவன் அவனோட நண்பன் கிட்டே விஷயத்தை சொல்றான்.இப்போ ரெண்டு பேரும் அதே டைம்க்கு அதே ஸ்பாட்க்குப்போறாங்க

ரிப்பீட்டு.அதே க.கா ஜோடி (க.கா = கள்ளக்காதல்) வர்றாஙக.இருட்டுல ஆண் யார்? என தெளிவாகத்தெரிந்து விடுகிறது,ஆனால் பெண் யார்?என முகம் சரியாகத்தெரியவில்லை.


அந்த ஊர்லயே ஒரே ஒரு டெய்லர்தான்.அவனுக்கு பெண்களோட அளவுகள் எல்லாம் தெரியும்.அதை வெச்சு இருட்டில் ,நிழல் உருவத்தை வெச்சே இந்தப்பொண்ணாத்தான் இருக்கும்னு யூகம் பண்ணிக்கறான்.


அந்தப்பொண்ணோட புருசன் கிட்டே சொல்றான்.ஊரில் இருக்கும் வேலை வெட்டி இல்லாத பசஙக எல்லாம் ஒன்று கூடி அந்த ஜோடியைக்கையும் களவுமாப்பிடிக்க பிளான் போடறாஙக.


இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.


இந்தப்படத்தில் நாயகன், நாயகி,வில்லன் என யாரும் இல்லை

ஒரே கிராமத்தில் நடக்கும் கதை என்பதால்,பெரிய நட்சத்திரங்கள் என யாரும் இல்லாததால் சம்பள செலவும் ,லொக்கேஷன் செலவும் இல்லை


ஒளிப்பதிவு ஸ்ரீ ராஜ் அண்ட் ரமேஷ். கச்சிதம்.

இசை ஸ்ரீ ராக் சஜி.2 பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்.. எடிட்டிங் சிவராஜ்.106 நிமிடஙகள்.


கதை ,திரைக்கதை  அம்பரீஷ.இயக்கம் சென்னா ஹெக்டே

சபாஷ்  டைரக்டர்


1 இந்த துக்ளியூண்டு கதையை 2 மணி நேரப்படமாக எடுத்த சாமார்த்தியம்

2  கோக்கு மாக்கான படம் என்பது மாதிரி மார்க்கெட்டிங் செய்த உத்தி

3 போர் அடிக்காமல் திரைக்கதை அமைத்த விதம்


  ரசித்த  வசனங்கள் 

1  லைட்டா ,லைட்டான்னு சொல்லி சொல்லி வெய்ட்டாக்குடிக்கிறான்

2 எந்த சரக்கா இருந்தாலும் உள்ளே தள்ளிடுவேன்,அது தான் தொழிலாளர் சரக்கு


உனக்கு தான் வேலை வெட்டியே இல்லையே? அப்புறம் என்ன தொழில்?


3 டி வி சீரியலில் காட்டாத சீன் எல்லாம் இப்போ நான் காட்றேன்

4  ஏம்ப்பா,அந்த க.கா ஜோ டி கிட்டே இருந்து சத்தம் எதுவும் வர்லியே?


டால்பி சவுண்ட் சிஸ்டம்  ரெடி பண்ணிடலாமா?


5. வருசா வருசம் ஓணம் பண்டிகை முடிஞ்சதும் பொண்ணுங்க 2 இஞ்ச் பெருத்துடுவாங்க

6 இது என்ன ஊர்த்திருவிழாவா? எல்லாரும் போய்ப்பார்க்க?


7 என்னடா? காலஙகாத்தாலயே வந்துட்டீஙக?


சரி.போய்ட்டு நைட் வரவா?


8. செக் அவுட் பண்றியா?


வாட்?


பின்னே? வீட்டுக்கு நைட் வர்றே? காலைல கிளம்பிடறே! லாட்ஜ் மாதிரி


9 பொண்ணுங்க மேல எப்பவும் ஒரு கண் வெச்சிருக்கனும்.அது அம்மாவோ,தங்கையோ,மனைவியோ...இல்லைன்னா தலை மேல ஏறிக்குவாஙக.


10 தளறாம முன்னேறிப்போவதுதான் நம்மை பலசாலி ஆக்கும்


11.  அம்மா,ஒரு முக்கியமான வேலையாப்போறேன்,ஆசீர்வாதம் பண்ணுஙக

என்ன?ந்னு பண்ண?


என்னத்தையாவது சொல்லுங்க


பஸ்ல நடு சீட் கிடைக்கட்டும்


நக்கலு?


12  இவன் முகத்தைப்பாரு,சீரியல் கில்லராவே தெரியறான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1. மாவு மில்லில் மாவு அரைப்பவன் தான் அந்தக்கள்ளக்காதலன்.அவன் தான் ஓனர்.அதுவே பாதுகாப்பான இடம் தான்.அவன் அங்கே வரச்சொல்லாம  வேற ஒருவர் வீட்டு தோட்டத்துக்கு வரச்சொல்வது ரிஸ்க்

2.  நிர்மலா என்ற பெண் தான் அந்தக்காதலியோ என்ற சந்தேகம் அனைவருக்கும்.ஆனால் அவள் கணவன் நைட் ஷிப்ட் வேலையில் இல்லை.வீட்டில் மாமியார் ,10 வயது மகள் இருக்கும்போது கணவனுக்குத்தெரியாமல் மிட் நைட்டில் வெளியே போக முடியாது.

3 க்ளைமாக்சில் அகப்பட்ட அந்த பெண் பேசும் வசனஙகள் அபத்தம்.புருசன் பிடிக்கலைன்னா டைவர்ஸ் பண்ணிட்டு அவன் கூடப்போக வேண்டியது தானே?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்தப்படம்  30 நிமிடஙகளில் முடிக்க வேண்டிய  குறும்படம்,ஜவ்வாய் இழுத்து விட்டார்கள். ரேட்டிங்க் 2 /5


Avihitham
Directed bySenna Hegde
Written by
  • Ambareesh Kalathera
  • Senna Hegde
Story byAmbareesh Kalathera
Produced by
  • Mukesh R. Mehta
  • Harris Desom
  • P. B. Anish
  • C. V. Sarathi
  • Senna Hegde
Starring
  • Unni Raj
  • Renji Knakol
  • Vrinda Menon
Cinematography
  • Sreeraj Raveendran
  • Ramesh Mathews
Edited bySanath Sivaraj
Music bySreerag Saji
Production
companies
  • E4 Experiments
  • Imagin Cinemas
  • Marley State of Mind
Distributed by
  • E4 Experiments (Kerala)
  • AP International (Rest of India)
  • Home Screen Entertainment (GCC)
Release dates
  • October 9, 2025 (GCC)
  • October 10, 2025 (India)
Running time
106 minutes
CountryIndia
LanguageMalayalam

Sunday, November 16, 2025

காந்தா (2025)- தமிழ் -சினிமா விமர்சனம் (மிஸ்ட்ரி டிராமா திரில்லர் )

             


          லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜபாகவதர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்பதால் தான் "காந்தா" டைட்டில் என சிலரும்,ரத்தக்கண்ணீர்      படத்தில் எம் ஆர் ராதா "அடியே காந்தா" என்ற புகழ் பெற்ற டயலாக்கைப்பேசியதால் எம் ஆர் ராதா கதை என்பதால் காந்தா என்ற டைட்டில் என சிலரும் சொன்னாலும் இரண்டும் உண்மை அல்ல.இது ஒரு கற்பனைக்கதை.


ஆனால் பாகவதர் பேரன் இப்படத்தைத்தடை செய்யக்கோரி வழக்குப்போட்டிருக்கிறார்.ஒருவேளை சில சம்பவங்கள் உண்மையாய் இருக்கலாம்



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு டைரக்டர்.கே பாலச்சந்தர் மாதிரி பல பெரிய ஹீரோக்களை உருவாக்கியவர்.ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய சில படஙகள் தொடர் தோல்வியை சந்திக்கின்றன.


இவர் உருவாக்கிய ஒரு நடிகர் இப்போது பெரிய சூப்பர் ஸ்டார்.தொடர்ந்து 10 மெகா ஹிட் கொடுத்தவர்.நாயகன் ஒரு டைரக்டர் ஆகத்தொடர்ந்து பரிமளிக்க அந்த நடிகர் உதவி தேவைப்படுகிறது.


அந்த நடிகர் தான் படத்தின் வில்லன்.தாலி கட்டிய மனைவி இருக்கும்போதே இன்னொரு நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால் தான் இவர் வில்லன்.

நாயகன் ஆன  டைரக்டர் ,வில்லன் ஆன சூப்பர் ஸ்டார் நடிகர் இவர்கள் காம்பிநேசனில்  ஒரு படம் ஷூட் செய்யப்படுகிறது.


அந்தப்படத்தில் ஒரு புது முகம் தான் நாயகி.படத்தில் ஜோடி ஆக நடித்ததால் வாழ்க்கையிலும் ஜோடி ஆக நடிகரும்,புதுமுக நாயகியும் முடிவு செய்கிறார்கள்.


இது நாயகன் ஆன டைரக்டருக்குப்பிடிக்கவில்லை.


ஒரு கட்டத்தில் திடீர் என புதுமுக நாயகி கொலை செய்யப்படுகிறார்.

கொலை செய்தது யார்?


1 தான் கர்ப்பம் ஆக இருப்பதால் உடனே திருமணம் செய்ய வலியுறுத்தியதால் சூப்பர் ஸ்டார் கொலை செய்தாரா?

2 சூப்பர் ஸ்டாரை மாட்ட வைக்க இயக்குநர் கொலை செய்தாரா?

3 சூப்பர் ஸ்டாரின் மனைவி தனக்கு ஒரு சக்களத்தி உருவாகக்கூடாது என கொன்றாரா?

4  சூப்பர் ஸ்டாரின் மாமனார் கொலை செய்தாரா?

5 புதுமுக நாயகியை அடைய நினைத்து அது முடியாமல் போகவே விரக்தியில் புரொடியூசர் கொன்றாரா?


இது தான் படத்தின் மீதிக்கதை


நாயகன் ஆக  படத்தில் டைரக்டர் ஆக வரும்   சமுத்திரக்கனி நடிப்பு அபாரம்.ஈகோ வை முகத்தில் பிரமாதமாகக்காட்டுகிறார்.


வில்லன் ஆக படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக வரும் துல்கர் கலக்கல் நடிப்பு.பல இடஙகளில் ஸ்கோர் செய்கிறார்.


நாயகி ஆக புதுமுகம் பாக்யா ஸ்ரீ அட்டகாசமான நடிப்பு.இருவர் படத்தில் வரும் ஐஸ்வர்யாராய் கேரக்டர் டிசைனை நினைவுபடுத்துகிறார்.முக சாயல் 50% ஐஸ்வர்யாராய் 50% பூவே உனக்காக சங்கீதா.ஒரு புது முக நடிகை முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக நடித்தது அருமை


  வில்லனின் மனைவியாக வரும்  காயத் ரி கச்சிதமான நடிப்பு.

இன்வெஸ்டிகேஷன்  ஆபீசர் ஆக வரும் ராணா ஓவர் ஆக்டிங.காமெடி என்ற பெயரில் அவர் சீரியசான ரோலைக்கெடுத்து விட்டார்.

வில்லனின் பி ஏ ஆக வரும் வையாபுரிக்கு அதிக வேலை இல்லை.உதவி இயக்குனர் ஆக வரும் கஜேஷ நாகேஷ் செம நடிப்பு.


வில்லனின் மாமனாராக வரும் நிழல்கள் ரவி அடையாளமே தெரியாத அளவு கெட்டப் அருமை.இன்னொரு போலீஸ் ஆபீசர் ஆக வரும் ஆடுகளம் நரேன் அதிக வாய்ப்பில்லை.போலீஸ் கான்ஸ்டபிள் ஆக  வரும் பகவதி பெருமாள் கவனிக்க வைக்கிறார்.


ஆர்ட் டைரக்டர் ராமலிஙகம் 1950 கால கட்டத்தைக்கண் முன் நிறுத்துகிறார்.

டேனி சஞ்செஸ் லோபஸ் ஒளிப்பதிவு அருமை.ஒயிட் அண்ட் பிளாக்கில் வரும் சீன்கள் கலக்கல் ரகம்.இசை ஜானு சந்தர்.பாடல்கள் பரவாயில்லை ரகம்.பின்னணி இசை ஓக்கே ரகம்.


தமிழ் பிரபா,செல்வணி செல்வராஜ் ஆகியோர் இணைந்து  திரைக்கதை எழுதி செல்வமணி செல்வராஜ் மட்டும் தனித்து இயக்கி இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1 முதல் பாதி முழுக்க நாயகன் ,வில்லன் ஈகோ கிளாஸ் தான்.செம இன்ட்ரஸ்ட்டிஙக்

2 சமுத்திரக்கனி பேசும் வசனஙகள் பல இடஙகளில் கை தட்டலை அள்ளுகிறது

3 வில்லன் ஆக வரும் துல்கரின் கெட்டப் சில இடஙகளில் எம் ஜி ஆர் ,சில இடஙகளில் சிவாஜி என கலந்து கட்டி இருப்பது நல்ல யுக்தி

4  கண்ணாடியைப்பார்த்தபடி வில்லன் துல்கர் பேசி நடிக்கும் சீன் செம

5 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் யார் கொலையாளி என்று தெரிந்த பின் நடக்கும் இரு சம்பவங்கள் தான் எதிர்பாராத ட்விஸ்ட்ஸ்


  ரசித்த  வசனங்கள் 

1 பணத்தை இழக்கலாம், ஆனா  நல்ல கலைஞர்களை இழக்கைக்கூடாது 


2 ஒரு கதையை  எப்போ  சொல்லணும்னு  அந்தக்கதை  தான்  முடிவு பண்ணனும் 


3  நீ  பறக்க  ஆசைப்பட் டா  உன் சிறகுகளை  வெட்டுவார் 


4    கட்   சொன்ன பிறகு நடிக்காதே 


5   அவரை  ரசிகர்கள்  கடவுளாப்பார்க்கிறாங்க , சாகற  மாதிரி  எப்படி   நடிப்பார்?


 நீ  கடவுள்  வேஷம்  மட்டும் தான்  போட்டிருக்கே 


6 அய்யா,தெரியாம சொல்லிட்டேன்,மன்னிச்சுடுஙக அய்யா


வார்த்தை உதட்டில் இருந்து வர்றதல்ல,இதயத்தில் இருந்து வருவது.புகழ் உன் கண்ணை மறைக்க ஆரம்பிச்சிடுச்சு


6 அய்யா,ஆடியன்சுக்கு இது பிடிக்கும்


நீ சொல்ற ஆடியன்ஸ் 50 வருசங்களுக்குப்பின் இருக்க மாட்டான்,ஆனா நான் எடுக்கும் படம் காலத்துக்கும் இருக்கும்


7 நாம எங்கே இருந்து வந்தோம் என்பதை எப்பவும் மறக்கக்கூடாது

8  நடிப்பு சக்ரவர்த்தினு எனக்கு பட்டம் கிடைச்சுதே?


அது நான் உனக்குப்போட்ட பிச்சை


 நீங்க எனக்கு வாய்ப்பு மட்டும் தான் கொடுத்தீங்க,வாழ்க்கையை இல்லை


9.  சாமி வரம் தர்கைன்னு பூசாரிக்குப்பூ போட்டுப்பார்த்திருக்கான்


அப்டின்னா?


ஹீரோயினைக்கரெக்ட் பண்ண முடியல.சரி தோழியை ரூட் விடலாம் ?


10. ஒரு படத்துல அவர் ஒருவரே 16 வேடஙகளில் நடித்திருக்கார்


ஏன்?ஊரில் வேற நடிகர்களே இல்லையா?


அவரை மாதிரி நடிக்க நடிகர்கள். இல்லை


11. உன்னை அழிக்க 5 நிமிசம் போதும்


ஊதித்தள்ள நான் மண் இல்லை,மலை


12 உண்மையான காதல்னா என்ன?என்பதை அவளை சந்தித்த பின் தான் தெரிந்து கொண்டேன்


13  வாங்க மேடம்,கல்யாணத்துக்குப்போற மாதிரி அலஙகாரத்தோட வந்திருக்கீஙக,ஆனா இது கருமாதி


14. என்னது?2 பேருக்கும் 12 வருசப்பழக்கமா? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கவே இல்லையா?


புரிஞ்சுக்க இவன் என்ன தொல்காப்பியமா? பிராடு


15 எல்லாத்தையும் சிரிச்சுட்டே சொல்லனும்னு சொல்வியே?இப்ப நீ இல்லை என்பதை எப்படி சிரிச்சுட்டே சொல்வேன்?


16. சாவு கிட்டே போராடி ஜெயிச்சு வந்தவ அவ


17 சாவைக்கிட்டே பார்த்த யாரும் கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து பார்த்துடனும்னு வைராக்யமா இருப்பாங்க


18 எல்லாமே பொய் ,அவ மட்டும் தான் உண்மைன்னு நம்பினேன்


19 எனக்கான இடத்தை நான் தான் முடிவு பண்ணுவேன்.அந்த இடத்தை யாராலும் அசைக்க முடியாது.


20 என் கிட்டே இருந்து எதை வேணும்னாலும் பறிக்கலாம்,ஆனா நானே கட்டிக்காத்த என் இமேஜை ,என் பிம்பத்தை யாராலும் உடைக்க முடியாது.


21 இதுதான் வாழ்க்கை.இருக்கற வரைக்கும் உண்மையாய் இரு,பணிவாய் இரு.


22 ஆயிரம் சாவுகளைப்பார்த்திருக்கேன்,பல பேரைக்கொன்றிருக்கேன் ஒரு போலீஸ் ஆபீசரா..ஆனா சாகும்போது சிரிச்ச முகமா செத்த ஒருத்தரைப்பார்த்ததில்லை.

23. நீ இனி வாழும் ஒவ்வொரு நொடியும் உனக்கு தண்டனை தான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகி ஒரு அப்பாவிப்பெண்,நல்லவள் என சித்தரிக்கப்படுகிறார்.ஆனால் ஏற்கனவே திருமணமானவன் என்று தெரிந்தும் வில்லனுடன் நெருக்கம் ஆவது ஏன்? இன்னொரு பெண்ணின் வாழ்வைக்கெடுப்பது சரியா?

2. பின் பாதி இன்வெஸ்டிகேஷன் போர்சன் செம கடுப்பு.காரணம் முதல் பாதி திரைக்கதை செமயாக இருந்ததால் பின் பாதி கதையே வேறு என மாறி விடுவதால் வரும் ஏமாற்றம்

3. சினிமாவுக்குள் சினிமா என்பது தமிழ் சினிமாவில் ராசி இல்லாத சப்ஜெக்ட்.ஆல்ரெடி கே பாக்யராஜின் தாவணிக்கனவுகள், பிரகாஷ் ராஜ் நடித்த வெள்ளித்திரை உட்பட பல படஙகள் ஓடவில்லை

4 கொலைகாரன் ஒரு பிரபலம்.ஆள் வைத்துக்கொல்லாமல் நேரடியாகவா கொல்வான்?

5. சாந்தா என்று இயக்குனர் வைத்த டைட்டிலை வில்லன் காந்தா என்று மாற்றுகிறான்.பெரிய வித்யாசம் எதுவும் இல்லை.ஒரு எழுத்துத்தான் மாற்றம்.அதுக்கு ஏன் இவ்ளோ அடிதடி?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - வித்தியாசமான படஙகளை விரும்புவோர்க்கு முதல் பாதி மட்டும் பிடிக்கும்.விகடன் மார்க் யூகம் 42.குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே.ரேட்டிங்க்  3/5



Friday, November 14, 2025

குற்றம் புதிது (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் )

          



         29/8/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இன்னமும் ஓ டி டி யில் வரவில்லை         


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு அசிஸ்டெண்ட் கமிசனரின் மகள்.ஒரு நாள் நள்ளிரவில் ஆள் மிஸ்சிங்.


நாயகன் ஒரு புட் டெலிவரி பாய்.நாயகி மிஸ்சிங் கேசில் போலீஸ் நாயகனை விசாரிக்கிறது.பின் விட்டு விடுகிறது.


பின் திடீர் என நாயகன் போலீசிடம் ஆஜர் ஆகி தான் தான் கொலை செய்தது என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.அது மட்டுமல்ல.தான் ஸ்கூலில் படிக்கும்போது கணக்கு டீச்சரைக்கொலை செய்தேன்,காலேஜ் படிக்கும்போது நண்பனைக்கொலை செய்தேன் என்கிறார்


விசாரித்ததில் அந்த கணக்கு டீச்சர்,நண்பன் என இருவரும் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது.


நாயகன் ஒரு சைக்கோவா? மன நிலை பாதிக்கப்பட்டவரா? என குழம்புகையில் கொலை செய்யப்பட்டதாகக்கருதப்பட்ட நாயகி உயிருடன் வருகிறார்.

நாயகி கோர்ட்டில் கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்..தன்னை ஆட்டோ டிரைவரிடம் இருந்து காப்பாற்றியதே நாயகன் தான் என்கிறார்.


குழம்பிய ஜட்ஜ் ஒரு வாரம் லாங்க் லீவில் போகிறார்.

உண்மையில் நடந்தது என்ன? என்பது மீதி திரைக்கதை


நாயகன் ஆக தருண் விஜய் கச்சிதமாக நடித்திருக்கிறார்.மனநிலை பாதிக்கப்பட்டவர் போலப்பேசுவது,கொலைகாரன் போலப்பேசுவது , நார்மல் ஆக நடப்பது  என ரகுவரன் ஏற்று நடிக்க வேண்டிய கேரக்டர் டிசைன்.சமாளித்திருக்கிறார்.


நாயகி ஆக சேஷ்விதா கனிமொழி போல்டான பெண்ணாக ,பாதிக்கப்பட்ட பேஷண்ட் ஆக இரு பரிமாண நடிப்பில் கன கச்சிதம்.


நாயகியின் அப்பாவாக மதுசூதனன் ராவ் குணச்சித்திர  நடிப்பு அருமை.


நாயகனின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி ,அம்மாவாக வரும் ப்ரியதர்ஷினி ராஜ்குமார் இருவரும் உருக்கமான நடிப்பு.


வில்லன் ஆக வரும் ராம்ஸ் மிரட்டலான நடிப்பு ( நான் மகான் அல்ல புகழ் ராம்ஸ்)


இசை கரண் பி கிருபா.பாடல் சுமார் ரகம்.பின்னணி இசை சராசரி.

ஒளிப்பதிவு ஜேசன் வில்லியம்ஸ்.கொலை நடக்கும் ஒரு சின்ன அறையில் சாமார்த்தியமாகப்படம் பிடித்தமைக்கு ஒரு சபாஷ்.


திரைக்கதை இயக்கம் நோவா ஆர்ம்ஸ்ட்ராங்




சபாஷ்  டைரக்டர்


1 இருபது நிமிடஙகளில் முடிக்க வேண்டிய ஒரு குறும்படத்தை 2 மணி நேரப்படமாக நீட்டி முழக்கியது.

2 தயாரிப்பாளர் தான்  நாயகன் என்பதால் அவரிடம் உங்களைக் கமல் ரேஞ்சுக்கு நடிக்க வெச்சுடறேன் என அவரது கேரக்டர் டிசைனை வடிவமைத்தது 

3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்



  ரசித்த  வசனங்கள் 


1. வா...உன்னை வெச்சுக்கறேன்


சந்தோஷமா வெச்சுக்கோ!



2  எங்க ஹவுஸ் ஓனருக்கு ஒரு பொண்ணு இருக்கு.அவஙக நிஜமாவே பொண்ணு மாதிரியே இருப்பாஙக


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1. டெட் பாடி கிடைக்காமலேயே நியூஸ் சேனலில் அசிஸ்டெண்ட் கமிஷனர் மகள் கொலை என எப்படி நியூஸ் போட முடியும்?

2. ஸ்விக்கி மாதிரி புட் டெலிவரி பாய் ஆக வேலை செய்பவருக்கு ஹெல்மட் கட்டாயம்.ஆனால் நாயகன் ஹெல்மெட் போடல

3  ஐந்து நாட்களாக எதுவுமே சாப்பிடலைனு டாக்டர் சொல்றாங்க.ஆனா மகள் தெம்பாகப்பேசுகிறார்.அப்பா  போலீஸ்.டவுட் வர்லையா?


4  ஐந்து நாட்களாக எதுவும் சாப்பிடாத நிலையில் இருக்கும் பேஷண்ட்க்கு க்ளுக்கோஸ் ஏத்தலையே?


5.  நகரம் முழுக்க சிசிடிவி கேமரா இருக்கையில் இப்படி ஒரு குற்றவாளி உலவ முடியுமா? அதுவும் மாட்டிக்கொள்ளாமல்?

6 நாயகனின் போன் நெம்பரை ட்ராக் செய்யும் சைபர் க்ரைம் போலீஸ் நாயகி உடன் ஆல்ரெடி பல முறை தொடர்பில் இருந்திருக்கிறார் என்பதை ஏன் கண்டுபிடிக்கவில்லை?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மகாப்பொறுமைசாலிகள் மட்டும் பார்க்கலாம்.அந்த ட்விஸ்ட் என்ன என்பதை மட்டும் கேட்டு விட்டால் 2 மணி நேரம் மிச்சம்.விகடன் மார்க் யூகம் 39.குமுதம் ரேங்க்கிங் யூகம் ஓக்கே.ரேட்டிங்க் 2.25 /5


குற்றம் புதிது
இயக்கம்நோஆ ஆர்ம்ஸ்ட்ராங்
தயாரிப்புசெல்வா ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
கதைநோஆ ஆர்ம்ஸ்ட்ராங்
இசைஅரவிந்த் கிருஷ்ணா
நடிப்புதருண் விஜய், சேஷ்விதா கனிமொழி
ஒளிப்பதிவுஆர். பாலாஜி
படத்தொகுப்புசுரேஷ் ராஜ்
கலையகம்செல்வா ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Tuesday, November 11, 2025

OTHERS (2025)- அதர்ஸ் - தமிழ் - சினிமா விமர்சனம் ( ,மெடிக்கல் க்ரைம் திரில்லர்)

                             




ஸ்பாய்லர்  அலெர்ட்

சம்பவம் 1 - நள்ளிரவில் ஒரு கொள்ளை முயற்சி நடக்கிறது.சாலையின் நடுவில் ஒரு பாறாங்கல்லைப்போட்டு தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் வண்டியிலிருந்து கொள்ளை அடிக்க ஒருவன் திட்டமிட அவன் வலையில் மாட்டியதோ ஒரு கொலைகாரன்.ஆல்ரெடி கொலை செய்த 3 பேர் உடல்களை வண்டியில் வைத்து அதை விபத்துக்கு உள்ளானதைப்போல சித்தரிக்கும் முயற்சியில் கொலைகாரன் முயலும்போது  இந்த விபத்து நடக்கிறது.போலீஸ் ஆபீசர் ஆன நாயகன் இந்தக்கேசை விசாரிக்கிறான்


சம்பவம் 2 - நாயகி ஒரு டாக்டர்.நாயகனுடன் திருமணம் நிச்சயம் ஆனவர்.நாயகி பணி புரியும் ஹாஸ்பிடலில்  செயற்கை முறையில் கரு தரிக்க வைக்கும் பிராசில் ஒரு முறைகேடு நடப்பதைக்கண்டு பிடிக்கிறார்


சம்பவம் 3 - வில்லன் பெண். ஆக இருந்து ஆணாக மாறியவர்.இந்த சமூகம் தனக்கு இழைத்த கொடுமைகளுக்குப்பழி வாங்க எதிர் காலத்தில் ஆண்கள்,பெண்களுக்கு இணையாக எண்ணிக்கையில் திருநங்கைகள், திருநம்பிகளை உருவாக்கும் முயற்சியில் இருப்பவர்


மேலே சொன்ன 3 சம்வங்கள்,3 கேரக்டர்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது நிகழும் சம்பவங்கள் தான் மொத்தத்திரைக்கதையும்


நாயகன் ஆக அறிமுக நாயகன் ஆதித்யா போலீஸ் ஆபீசர் ஆக கம்பீரம் காட்டி இருக்கிறார்.ஜிம் பாடி செம பிட் பாடி.


நாயகி ஆக  "வெயிட்" ஸ்பெஷலிஸ்ட் போராளி கவுரி கிஷன் கச்சிதமான நடிப்பு.ஒரு டூயட்டில் இளமை அழகை அள்ளித்தெளிக்கிறார்.நிஜ வாழ்வில் அந்த யூ ட்யூபரை மடக்கியது போல படத்தில் ஒரு லேப் டெக்னீஷியனை மடக்கும் காட்சியில் தியேட்டரில் ஆரவாரம்.இனி இவர் படங்களில் இது போல காட்சி ஒன்றாவது நிச்சயம் இடம் பெறும்

 வில்லன் ஆக வித்தியாசமான வேடத்தில் ஜெகன்.காமெடியன் ஆகப்பார்த்து வில்லன் ஆக ஜீரணிக்க ஆரம்பத்தில் சிரமம் ஆக இருந்தாலும் தன் நடிப்பால் வசீகரிக்கிறார்.


வில்லனின் அப்பாவாக இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் நல்ல குணச்சித்திர நடிப்பு.


காமெடியன் ஆக முனீஷ்காந்த்  எடுபடவில்லை.


நாயகனின் கொலீக் ஆக வரும் அந்த லேடி போலீஸ் நடிப்பு அருமை


அர்விந்த்சிஙகின் ஒளிப்பதிவு கச்சிதம்.நாயகியைக் க்ளோசப் காட்சிகளில் அழகாகக்காட்டி இருக்கிறார்.


இசை ஜிப்ரான்.ஒரு பாடல் ஹிட்.பின்னணி இசை பிரமாதம்

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநர் அபி ஹரிஹரன்



சபாஷ்  டைரக்டர்


1. வில்லனின் கேரக்டர் டிசைன் அருமை.வேதா,வேதிகா,மாரி இந்த மூன்று பேரை வைத்து போலீசிடம் ஆடும் கண்ணாமூச்சி அருமை.

2 முதல் பாதியை விட பின் பாதி விறுவிறுப்பு,திருப்பஙகள்,வேகம்  அதிகம்


  ரசித்த  வசனங்கள் 


1 கிஃப்ட் இருக்கு , ஆனா  கிட்டே  வந்தாதான் கொடுப்பேன் 

2 போலீசை ஏமாத்தும் கிரிமினல்ஸ் இருக்காஙக,ஆனா போலீசிடம் மாட்டாத கிரிமினல்ஸ் யாருமே இல்லை


3  தப்பு பண்ற எல்லாருக்கும் அவஙக தரப்பு நியாயம்னு ஒண்ணு இருக்கும்,ஆனா நீ பண்றது நியாயமே இல்லை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஒரு மெடிக்கல் க்ரைம் திரில்லர்) படத்தில்  நாயகியுடனான காதல் , ஊடல் , டூயட் எல்லாம்  ஸ்பீடு பிரேக்கர்ஸ் தான் 

2  தன்னைப்போட்டுத்தள்ளதான் அந்த   மூவரும் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த அந்த வேன் டிரைவர்  என்ன தைரியத்தில்  வேனில் ஏறுகிறார்? பின் சீட்டில் இருவர் அருகில் ஒருவர் .   மூவரை  எப்படி சமாளிப்பார் ? 


3  அந்த மூவரும்  கூலி  அதிகமாக்கேட்கிறார்கள் , தர்லைன்னா வேற  பக்கம்  வேலைக்குப்போகலாம், அதுக்காக ஒரு கொலை செய்வார்களா? 

4 முனீஷ்காந்த் போலீஸ்  கேரக்டருக்காக என்ன மெனக்கெட்டார்? ஹிப்பித்தலை , பானைத்தொப்பை. சகிக்கலை 

5 நாயகன்  போலீஸ் ஆஃபீசர், ஆனால் போலீஸ்  ஹேர் கட்டிங்க்  இல்லை . லைட்டா தாடி வேற 

6 வில்லன் தரப்பில் லாஜிக்கே இல்லை.தமிழக மக்கள் தொகை 7 கோடி +.தனி ஒரு ஆளாய் வில்லன் எத்தனை குழந்தைகளை அவனைப்போல உருவாக்கி விட முடியும்?

7 வில்லனின் நடிப்பு வேட்டையாடு விளையாடு வில்லன் டேனியல் பாலாஜி  நடிப்பைக்காப்பி அடிப்பது ஏனோ?

8 கடைசி 30 நிமிடங்களில் இவர் தான். வில்லன் என ஒருவரைக்காட்டி பின் இல்லை இவர் இல்லை என சொல்லி மீண்டும் வில்லன் இவர் தான் எனக்குழப்புவது ஏன்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - க்ரைம்.   திரில்லர் ரசிகர்களுக்குப்பிடிக்கும்.விகடன் மார்க் யூகம் 41. குமுதம் ரேன்க்கிங் ஓக்கே

ரேட்டிங் 2.5 /5

Monday, November 10, 2025

ஆரோமலே (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ட்ராமா )

             

      இந்தப்படத்தை  விரும்பிப்பார்க்க இரண்டு  காரணங்கள் .

 1 வெட்டு , குத்து , ரத்தம் ,வன்முறை இல்லாமல் ஒரு படம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிடுச்சு  .

2  இதுதாண்டா போலீஸ்  ராஜசேகர் - உறவைக்காத்த கிளி    ஜீவிதா  தம்பதியினரின் மகள்  தான் படத்தின் நாயகி 


விண்ணைத்தாண்டி  வருவாயா? ராஜாராணி   சாயல்  இருந்தாலும்  பார்த்து விடலாம்  என முடிவு செய்தேன்     . காமெடி  நடிகர்  தியாகுவின்  மகன் சாரங்க் தியாகு அறிமுக இயக்குனர் ஆகி  இருக்கும் படம் . 


 ஆராமலே  என்றால்  என் அன்பெ  என்று பொருள் விண்ணைத்தாண்டி  வருவாயா?   படத்தில்   வரும்  பாடல்  வரியில்  வரும்  சொல்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சின்ன வயதில்  ஸ்கூலில்  படிக்கும்போது  , காலேஜில் படிக்கும்போது  தலா  ஒரு   ஒரு தலைக்காதல் . இரண்டுமே  தோல்வி .இப்போது  வேலைக்குப்போகலாம் என ஒரு கம்பெனியில் வேலைக்குச்செல்கிறான் 


 நாயகி தான் அந்தக்கம்பெனியில்   நாயகனுக்கு  உயர் அதிகாரி . ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் ஆன நாயகிக்கும், நாயகனுக்கும் ஒத்துப்போவதில்லை .ஒரு கட்டத்தில்  கம்பெனி வேலையில் ஒரு  தோல்வியை சந்தித்த  அவமானத்தில் நாயகி  2 நாட்கள்  கம்பெனிக்கு வராமல் இருக்க   நாயகன் ஆறுதல் சொல்ல நாயகி வீட்டுக்குப்போகிறான் . 


  அவனது  பரிவான சொல்லால் நாயகி  மனம் மகிழ்கிறாள். அது காதல்  ஆக மலர்கிற்து . நாயகன் ஒரு நாள் நாயகியிடம், வெளிப்படையாக ஐ லவ் யூ சொல்ல  நாயகிக்கு ஏதோ ஒரு  விஷயம்  தடங்கல் ஆக  இருக்கிறது. நாயகி  வேலையை ரிசைன் செய்து விட்டு வெளிநாடு போய் விடுகிறாள் 


 இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை. இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன் ஆக  கிஷன் தாஸ் பக்குவமான நடிப்பு . ஸ்கூல்  மாணவன் ஆக  அவரது  கெட்டப் அருமை . இரு காதல்  தோல்விகளை சொன்ன விதத்தில் அவரது கேரக்டர்  மனசுக்கு  நெருக்கம் ஆகி விடுவது பிளஸ் 


நாயகி ஆக   சிவாம்பிகா  அம்மா ஜீவிதா  சாயல்  அதிகம் இல்லை என்றாலும்  அழகான முகம், பாந்தமான நடிப்பு என கொள்ளை கொள்கிறார் . ஜீவிதாவுக்குக்கண்கள்  உயிர்ப்பானவை . ஹலோ  யார் பேசறது படத்தில் அவர் காட்டிய பய உணர்வு  செமயாக இருக்கும் . அந்தக்கண்களோடு அப்பீடு செய்கையில்   சிவாம்பிகா  கண்கள்  சுமார் ரகம் தான் , ஆனால்  கூந்தல் அடர்த்தியில் அம்மாவை மிஞ்சுகிறார்


 வி டி வி கணேஷ்  கல கலப்பான நடிப்பு . நாயகனின் நண்பன் ஆக வரும் ஹர்சத் கான் பேசும்  ஒன் லைனர்கள்  தியேட்டரில் கை தட்டல்களை அள்ளுகின்றன / முயன்றால் சந்தனம் இடத்துக்கு  வரலாம் , நாயகனின் அம்மாவாக வரும் துளசி , நாயகியின் தாத்தாவக வரும் காத்தாடி ராமமூர்த்தி  நடிப்பு கச்சிதம் 


சித்து  குமாரின்  இசையில் பாடல்கள்  ஓக்கே ரகம் , பின்னணி இசை குட் கவுதம் ராஜேந்திரனின்  ஒளிப்பதிவு  அருமை . ப்ரவீன் ஆண்ட்டனியின்    எடிட்டிங்கில்  படம் 2 மணி நேரம் ஓடுகிறது 


நாயகன்  ஆக  நடித்த  கிஷன் தாஸ் , அறிமுக இயக்குனர் சாரங்க் தியாகு  ஆகிய இருவருடன் இணைந்து இன்னமும் மூவர்   ஆக மொத்தம் ஐவர் திரைக்கதை  அமைத்து  இருக்கிறார்கள் 


சபாஷ்  டைரக்டர்


1   ஜாதிகள்  இல்லையடி   பாப்பா  என்ற  வாசக பனியன்    அணிந்த சுசீலாவின் அப்பா  எங்க ஆளு தான் மாப்பிள்ளையா வரனும் என்பது டைரக்சன் டச் 


2  நாயகியின்  அம்மா  காதல்  என்றால் என்ன  என்பதை  தன் மகனிட ம்  விளக்கும் சீன் அருமை . என் முன்னால்  காதல்  பற்றி  ஒரு நாள்  கூட அவர் என்னிடம் பேசியதில்லை, அதுதான்  எங்களுக்குள் இருக்கும் லவ் என்றி அவர் சொல்லும்போது நெகிழ்ச்சி 


3   நாயகியின் பெயர் அஞ்சலி  என வைத்து விட்டு  டூயட் படத்தில் வரும் அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி  பாட்டையும் , மணிரத்னம் இயக்கிய  அஞ்சலி படத்தில் வரும் டைட்டில்  ஸாங்கையும்  சாமார்த்தியமான இடங்களில் புகுத்திய விதம் 

4 நாயகியை  கண்ணியமான  உடையில் காட்டியதும்  அவரது  ஃபிளாஸ்பேக் என்ன? என்பதை சொல்லாமல் வலியைக்கடத்தியதும் அருமை 



  ரசித்த  வசனங்கள் 


1   முதல்  காதல் புட்டுக்கிச்சாம், சார் ஃபீல்  பண்றார், என்னதான்  ஊரே சிரிச்சாலும் வலி வலி தானே? 


2   மிஸ், நீ காலேஜ்ல முதல் வருசமா?


 நீ?

நான்  2 வது வருசம் 


 நான்   3 வது வருசம்  


3   அம்மா  அடிச்சதுக்கா  இவ்ளோ ஃபீல்  பண்றே? எங்கம்மா எல்லாம் தோசைக்கரண்டியை தோசைக்கல்லில் வைத்ஹதை விட என் தொடையில் சூடு வெச்சதுதான் அதிகம் 


4    என்னது ? மேட்டருக்கு மணியா? 

  அய்யோ  ராமா,  மேட்ரிமோனியல்  டா 


5     வேலை  பிடிக்கலைன்னு  வந்துட்டேன் 


 வெரிகுட். நமக்கு  வேலை  பிடிக்கலைன்னா அப்படித்தான் வந்துடனும் 

 ஐ  மீன்  என்  வேலை  அவங்களுக்குப்பிடிக்கலைன்னு என்னை அனுப்பிட்டாங்க 

6  முதல் தடவையா  ஒரு பெண்ணைப்பார்த்து லவ் வராம பயம் வந்திருக்குங்கற  எவ்ளவ் பெரிய முன்னேற்றம்  தெரியுமா?  


7  இங்கே  யாருமே  அவங்களுக்குப்பிடிச்ச வேலையைப்பார்க்கறது இல்லை, கிடைச்ச வேலையைப்பிடிச்ச மாதிரி  பார்த்துக்கறாங்க 


8   எனக்கு  தோல்வி புதுசு இல்லை , சின்ன   வயசில இருந்து  பல தோல்விகளைப்பார்த்து இருக்கேன் 


9   என்   வாழ்க்கைல நடந்த ஒரு விஷயத்தை உன் கிட்டே  சொல்லலைன்னா அதைப்பற்றிப்பேச எனக்கு விருப்பம் இல்லைன்னு அர்த்தம் 


10    மேலே  தெரியுது நிலா , நாம் இருவரும்   போலாம்  இன்ப உலா  என ரைமிங்கா எதுனா பேசு 


 இன்னைக்கு அமாவாசை 


11   இது  லவ்வா? இல்லையா?ன்னு தெரியலை , முதல்ல  எனக்கு  லவ்வுன்னா என்ன?ன்னே தெரியலை 


12   புரியாதபோது வர்றதும் , புரிஞ்ச பின் நம்மை விட்டுப்போவதும்தான் லவ் 


13   அவங்க  ரெண்டு  பேரும்  ஒருவரை ஒருவர் பார்த்துக்கிட்டாப்போதும் , மத்ததை  லவ் பார்த்துக்கும் 


14  நல்ல  காம்பினேஷன் , கெட்ட காம்பினேஷன்   என எதுவும் இல்லை , எல்லாம் நம்ம மனசு தான் காரணம் 


15  காதலைத்தேடிட்டுப்போக முடியாது , கொடுக்கத்தான் முடியும், எப்போ நீ கொடுக்கத்தயாரா  இருக்கியோ  அப்போ  காதலே உன்னைத்தேடி வரும், 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    முதல்  பாதியில்  கம்பெனியில்   ஒரு கேஸ்  விஷயம் , பின் பாதியில் இன்னொரு கேஸ்  விஷயம்  ஆகியவையே  திரைக்கதையை ஆக்ரமிக்க நாயகன் நாயகி நெருக்கத்துக்கு இடம் இல்லை . அது  ஆடியன்சுக்கு  கனெக்ட் ஆகுமா? 


2   ஒரு   அம்மா  தன் மகனிடமே  தன்னுடைய  மோசமான பக்கத்தை சொல்வாரா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன் யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   காதலர்களுக்கும் , தம்பதிகளுக்கும் பிடிக்கும் ஒரு ஃபீல் குட் மூவி  தான் . பார்க்கலம் . விகடன் மார்க் யூகம் 42 , குமுதம் ரேங்க்கிங்க்   நன்று  . ரேட்டிங்க் 2.75 / 5 


Aaromaley
Theatrical Release Poster
Directed bySarang Thiagu
Written bySarang Thiagu
Screenplay bySarang Thiagu
Kishen Das
Kaushik Sampath
Ashameera Aiyappan (additional)
Bipin R. (additional)
Produced byS. Vinod Kumar
Starring
CinematographyGowtham Rajendran
Edited byPraveen Antony
Music bySiddhu Kumar
Production
company
Mini Studio LLP
Release date
  • 7 November 2025
Running time
127 minutes[citation needed]
CountryIndia
LanguageTamil

Friday, November 07, 2025

கம்பி கட்ன கதை (2025)-தமிழ் - சினிமா விமர்சனம் (மொக்கைக்காமெடி ட்ராமா)

                             



ஸ்பாய்லர்  அலெர்ட்

உலகப்புகழ் பெற்ற கோகினூர் வைரம் ஒரு இடத்தில் இருக்கு.அதை ஆட்டையைப்போட ஒரு அரசியல்வாதி விரும்புகிறான்.அந்த வேலையை செய்ய உகந்த ஆள் நம்ம நாயகன் தான் என ஒரு போலீஸ் ஆபீசர் சிபாரிசு செய்யறார்


நாயகன் ஒரு டுபாக்கூர்   பேர்வழி.வெளிநாடு கூட்டிட்டுப்போறேன் என ஏமாற்றிப்பணம் பறிப்பவர்.அவரிடம் இந்த வேலையை ஒப்படைத்ததும் அவர் வைரத்தைத்திருடி தானே வைத்துக்கொள்ளத்தீர்மானிக்கிறார்


போலீஸ் நாயகனைக்கைது செய்கிறது.பல மாதஙகள் கழித்து ரிலீஸ் ஆகும் நாயகன் தான் வைரத்தை ஒளித்து வைத்த இடத்துக்கு வந்தால் அங்கே ஒரு கோயில் கம் ஆசிரமம் உருவாகி இருக்கிறது


நாயகன் தானும் ஒரு சாமியார் போல் உள்ளே நுழைந்து அந்த ஆசிரமத்தில் செய்யும் கூத்துக்கள் தான் மீதி திரைக்கதை


நாயகன் ஆக நட்டி என்கிற நடராஜ்.அசால்ட் ஆக நடித்திருக்கிறார்.

நித்யானந்தாவாக அவர் உருமாறிய பின் கலகலப்பு அதிகம் இல்லை.நடிகை ஜிஞ்ஜிதா ஆக ஸ்ரீ ரஞ்சனி.அதிக வேலை இல்லை. 


நாயகனின் பி ஏ ஆக சிங்கம்புலி கலகலப்பு ஊட்டுகிறார்.

 ஆசிரமத்தில் உலா வரும் இளம் ஜோடி ஆக முகேஷ் ரவி - ஷாலினி   

பூனை சுல்தான் ஆக வரும் கோதண்டம்,அவரது பி ஏ ஆக வரும் சாம்ஸ் ,முருகானந்தம் ஆகியோர் நடிக்க அதிக சான்ஸ் இல்லை


கதை திரைக்கதை வசனன் தா முருகானந்தம்.

இயக்கம் அறிமுக இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி


சபாஷ்  டைரக்டர்


1 நித்யானந்தா வை வைத்து ஒரு கதை பண்ணலாம் என்ற ஐடியா குட்.

2 சதுரங்க  வேட்டை மாதிரி ஒரு படம் என சொல்லி நட்டியிடம் கால்ஷீட் வாங்கிய லாவகம்

3 தீபாவளி ரேசில் ஓட விட்ட தில்


  ரசித்த  வசனங்கள் 


1 குயின் பர்ஸ் ல பென்குயின்?

2 அவன் ஒர்ஸ்ட்லயே பெஸ்ட்

3 நல்லா மூச்சை  உள்ளே இழுத்து. வெளியே விடுங்க


அய்யோ,என்னால முடியல


உங்களால முடியும்.வயசு கம்மிதானே?


4 போலீஸ்காரர் சகவாசம் என்பது ஆசிட்ல ஆயில் பாத் எடுப்பது போல


5 சுதந்திரக்காத்து சுத்தமாவே இல்லையே?


6 பெரிய இடங்களில் டிரைவர்,சமையற்காரன் இவஙகளுக்குத்தான் மொத்த ரகசியமும் தெரியும்


7  என் ஆள் எனக்கு உசுரு ,ஆனா அவஙகப்பன் ஒரு பிசிறு

8 பெண்களைக்குறு குறு என்று பார்ப்பவர் தான் குருநாதர்

9  சூரியகாந்தி சூரியனுக்குக்கட்டளை இடலாமா?

10 வாழ்க்கைல பணம் இருந்தும் பொண்ணுங்க இல்லைன்னாலும் வேஸ்ட்டு ,பொண்ணுங்க இருந்து பணம் இல்லைன்னாலும் வேஸ்ட்டு

11 பூஜைக்கு கன்று மட்டும் இருந்தாப்போதுமே?எதுக்கு பசுவும் வந்திருக்கு?


குருவே! நான் வேணா பசுவை ஓட்டிட்டுப்போகட்டுமா?


12 இது என்ன பிக்பாசா? எதுக்கு  இவ்ளோ சத்தம்?


13  யாழினி ரூம்க்கு நீ ஏன் வந்தே?


நீ ஏன் வந்தே?


 நீ கத்தறதைக்கேட்டு வந்தேன்


நான் கத்தறதுக்காக வந்தேன்

14 சுவாமி ,உங்களைத்தான் நம்பி இருக்கேன்


நம்பிக்கை வீண் ஆகாது.மோர் தேன் ஆகாது


15  சுவாமி! அம்மாக்கிளியை மட்டும் என் கிட்டே விட்டுடுங்க.

உன் கிளி இன்னமும் உயிரோடவா இருக்கு?


அப்பப்ப பறக்கும்

16  விஷத்தைக்குடிச்சுட்டேன்

ஏன்?


வாழப்பிடிக்கலை


வாழை பிடிக்கலைன்னா என்ன? இங்கே எத்தனை வேற வகைப்பழங்கள் இருக்கு ?


17  மன்னா! 81 மனைவிகளை எப்படி சமாளிச்சீஙக?


ஆளுஙகளை வெச்சுத்தான்


18  என்னது? அவஙக ராணி இல்லையா?


 ஆம்,ராஜாராணி


19  இருக்கும் வரை அமெரிக்க டாலர்.அதுக்கும் மேல முருகன்அலெர்ட்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 திரைக்கதையில் சரக்கு இல்லை

2  சுந்தர் சி படஙகளைப்பார்த்து இன்ஸ்பயர் ஆனது.

3 மொத்தமா 2 மணி நேரம் 12 நிமிடஙகள் ஓடும் படத்தில் 10 நிமிடஙகள் கூட சிரிப்பு இல்லை 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி ல போட்டா ஆண்கள் மட்டும் பார்க்கலாம்.எதையும் தாங்கும் இதயம் அவஙகளுக்குத்தான் உண்டு.ரேட்டிங்க் 1.5 /5. விகடன் மார்க் யூகம் 30

Thursday, November 06, 2025

ஆண் பாவம் பொல்லாதது (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா)

                        


    தலைவன் தலைவி படத்தின் கான்செப்ட் தான்,ஆனால் அதை விட ரசிக்கும் விதத்தில் திரைக்கதையில் விளையாடி இருக்கிறார்கள். அனைத்துத்தம்பதியினரும் பார்க்க வேண்டிய இப்படம் 31/10/2025 முதல் திரை அரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப்பெற்று  இருக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ,நாயகி இருவரும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.


நாயகன் அம்மா ,அப்பா போல பழமையான ,பாரம்பரியமான வாழ்க்கையைப்பார்த்து வளர்ந்தவன்,நாயகி முற்போக்கு எண்ணம் கொண்ட பெண்.இருவருக்கும் கருத்து மோதல் எழுகிறது.


டைவர்ஸ் வரை போகிறது.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை


நாயகி ஆக மாளவிகா மனோஜ் குடும்பப்பாங்கான கண்ணியமான தோற்றத்தில் அழகாக வருவதுடன் பிரமாதமாக நடித்திருக்கிறார்.படத்தில் வரும் 5 முக்கியக்கேரக்டர்களில் இவர் தான் நெ 1.

ரீல்ஸ் போடுவது ,தம் அடிப்பது ,புருசனை  எதிர்த்துப்பேசுவது  என இக்காலப்பெண்களைக்கண் முன் நிறுத்துகிறார்ம்


நாயகன் ஆக ரியோ ராஜ்.இதற்கு முன் சில படஙகளில் நடித்திருந்தாலும் இதில் மெச்சூர்டான நடிப்பு. 


நாயகனுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல் ஆக விக்னேஷ் காந்த் ,நாயகிக்கு ஆதரவாக வாதாடும்  லேடி வக்கீல் ஆக ஷீலா இருவரும்ப்கதைப்படி டைவர்ஸ் ஆன ஜோடி என்பது மெயின் கதைக்கு வலு  சேர்க்கிறது


நாயகனின் வக்கீலுக்கு அசிஸ்டெண்ட் ஆக வரும் ஜென்சன் திவாகர் நல்ல காமெடி கவுண்ட்டர்ஸ் தருகிறார்.நாயகியின் வக்கீலுக்கும் ஒரு லேடி ஜூனியர் வக்கில் இருந்திருந்தால் இன்னமும் ஜாலியாக இருந்திருக்கும்


இசை சிந்து குமார்.ஒரே ஒரு பாடல் அருமை.ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம்.நாயகி ,லேடி வக்கீல், லேடி ஜட்ஜ் என பெண்களை கண்ணியமாக ,அழகாகக்காட்டி இருக்கிறது கேமரா.


சிவகுமார் முருகேசன் வசனங்களில் தியேட்டரில் ஆண்களின் கை தட்டல்களை அள்ளுகிறது


எடிட்டிங் கச்சிதம்.2 மணி நேரம் ஓடுகிறது

அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கி இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்

1 நாயகனின் வக்கீல் ,நாயகியின் வக்கீல் இருவரும் டைவர்ஸ் ஆன தம்பதிகள் என்பது சுவராஸ்யமான முடிச்சு.

2 நாயகியை நாயகனின் வக்கீல் தூண்டி விட்டு போலீஸ் ஸ்டேசன் ல நோஸ் கட் கொடுக்கும் இடம் செம

3 நாயகனின் வக்கீல்,வக்கீலின் அசிஸ்டெண்ட் இருவரது கேரக்டர் டிசைன் சுஜாதா கதைகளில் வரும் கணேஷ வசந்த் மாதிரி இருப்பது சுவராஸ்யம்

4 படம் முழுக்க நகைச்சுவை இழையோடக்காட்சிகளை தொகுத்த விதம் அருமை

5 போலி பெண்ணியவாதிகளை வாரிய விதம்


  ரசித்த  வசனங்கள் 


1 இந்த ஆம்பளைப்பசங்க தான் எந்த போட்டோவில் அழகா இருக்கறதா நினைக்கறாங்களோ அதே போட்டோவைத்தான் பேஸ்புக் ,இன்ஸ்டா ,வாட்சப் டி பி யா வைப்பானுங்க


2 உடை என்பது நம் வசதிக்குத்தான் ( சவுகர்யத்துக்குத்தான்).கிளாமராப்போடனும்னு அவசியம் இல்லை 


3  நான் தம் அடிப்பேன்,உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?


எனக்கும் ஒரு சிகரெட் கொடுத்தாப்பிரச்சனை இல்லை


4 என்ன? உன் பொண்டாட்டி அரைகுறை டிரஸ்ல வந்திருக்கா?


பாட்டி,எனக்கு விபரம் தெரிஞ்ச நாளில் இருந்து நீ ஜாக்கெட்டே போட்டதில்லை.அவ ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் தானே போட்டிருக்கா?

5 என்னை ராணி மாதிரி பார்த்துக்குவேன்னு சொன்னே?வேலை எல்லாம் செய்ய சொல்றே?


ராணின்னா  ராஜாவோட பொண்டாட்டின்னு அர்த்தம்


ராணின்னா ராணி தான்


6. மத்ததுக்கெல்லாம் மை சாய்ஸ் ,ஆனா காசு வேணும்னா மட்டும் புருசன் வேணும்?

7 பொண்ணுங்களைப்புரிந்துகொள்வதற்குள் ஆண்களோட ஆயுசே முடிஞ்சிடும்


8 வீட்டுக்குள்ளே  சிசி டி வி கேமரா வெச்சுக்கிட்டா ஒரு பொண்ணு குடித்தனம் பண்ண முடியும்?

9 புருசன் சிரிச்சுப்பேசுனா செக்ஸ் டார்ச்சர்,சிரிக்காம பேசுனா ஆம்பளையே இல்ல என போலீஸ்ல புகார் கொடுக்கறவஙகதான் இந்தக்காலப்பொண்ணுஙக


10  காதலிலும் ,போரிலும் எல்லாமே சரி தான்.நாம ஜெயிக்கனும்னா என்ன வேணா செய்யலாம்

11 உங்க பொண்டாட்டியாவது புத்திசாலியா இருப்பாஙகனு நினைச்சேன்

ம்ஹூம்

12 இவன் நம்மைக்கண்காணிக்க நியமிக்கப்பட்ட டிடெக்டிவ் என எப்படிக்கண்டுபிடிச்சீஙக?


அவன் தான் இன்ஸ்டா ல  டேக் பண்ணி டீட்டெய்ல் சொல்லி போஸ்ட் போட்டிருந்தான்


13 இந்த லஞ்சம்

என்ன? ரிப்போர்ட் ல பொய் சொல்லனுமா?

நோ,உண்மை சொல்லனும்

அப்போ அதுக்கு இன்னமும் செலவு ஆகும்


14 பாஸ்,எப்பவாவது குடிச்சா அது பழக்கம்,டெய்லி பழக்கம்னா அது கெட்ட பழக்கம்.உங்களுக்கு இருப்பது பழக்கமா? கெட்ட பழக்கமா?

தோணும்போதெல்லாம் குடிப்பேன்

அப்போ இவரை ஒரு குடிகார நாய் தான்


15 சட்டம் பொண்ணுங்க சொல்றதைத்தான் நம்பும்

16  ஜீவனாம்சம் வாங்கவே இப்போ எல்லாம் நிறைய போலி டைவர்ஸ் கேஸ் வருது

17 காபி வேணுமா?ந்னு உங்க கிட்டே கேட்டது விருந்தோம்பல்.என் புருசன் கிட்டேக்கேட்டது லவ்.புருசன் பணத்துல தானே எல்லா செலவும் பண்றோம்?காபி போட்டுக்கொடுத்தா தப்பா?


18. இந்தக்காலத்துல அம்மிக்கல்,ஆட்டாஙகல் எதுவும் இல்லை.மிக்சி ,கிரைண்டர் தான்.ஸ்விட்ச் போட்டாப்போதும்


அந்த சுவிட்சைக்கூட பொண்ணுங்க தானே போட வேண்டி இருக்கு ?

19 பெமினிசம் என்பது புருசன் கூட சந்தோசமா வாழக்கூடாது என்பது அல்ல

20 வீட்டில் இருக்கும் ஆண்கள் என்ன சொல்வாங்கன்னு தெரியாம பிரஷர் இல்லாத  வாழ்க்கை வேண்டும்

21  இங்கே எல்லாருமே நான் ஏன் விட்டுக்கொடுக்கனும்? என நினைக்கறாங்க.கல்யாண வாழ்க்கைல அழகே விட்டுக்கொடுத்தல் தான்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 ஹனிமூன்க்கு எங்கே போகலாம் என நாயகன் கேட்டபோதே நாயகி அம்பேத்கார் பிறந்த ஊருக்குப்போலாம் என்கிறார்.அப்போதே பார்ட்டி பா ரஞ்சித் ரசிகை போல என நாயகன்  உஷார் ஆகி இருக்க வேண்டாமா?

2 இந்தக்காலத்தில் 75% பெண்கள் தாலியை மதிப்பதில்லை.நாயகி தாலியை கழட்டி நகைப்பெட்டியில் வைத்திருக்கிறார் என்பதற்கு நாயகன் ஏன் அவ்ளோ ஜெர்க் ஆகிறார்?

3 மாடர்ன் கேர்ள் என்றால் தம் அடித்தே ஆக வேண்டுமா?ஆணோ ,பெண்ணோ கேன்சர் பேஷண்ட் தானே?

4 இந்தக்காலப்பெண்கள் புருசனை வாடா,போடா என வேலைக்காரனைப்போல் அழைப்பது சகஜம் தான்,அதற்காக வீட்டில் பணிப்பெண் முன்னால் கூட அப்படித்தான் அழைக்கனுமா?அதைப்பற்றி நாயகன் கேட்கவே இல்லையே?

5 க்ளைமாக்சில் நாயகனின் வக்கீல் வாதத்தை முன் வைக்கும்போது ஜட்ஜைப்பார்த்துப்பேசாமல் கோர்ட்டில் இருக்கும் மக்களைப்பார்த்துப்பேசுவது ஓவர் டிராமா

6 முதல் பாதியில் புரட்சிப்பெண்ணாக வரும் நாயகி கேரக்டரை பின் பாதியில் டம்மி ஆக்கி விட்டது ஏனோ?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - அனைவரும் காண வேண்டிய கல கலப்பான குடும்பப்படம்.விகடன் மார்க் யூகம் 44 ( ஆனால் ரியலா 40 தான்.ஏன் குறைத்தார்கள் எனத்தெரியவில்லை.அனைத்து மீடியாக்களும் கொண்டாடுகின்றன.ஒரு வேளை ரெட்  ஜெயண்ட்ஸ் ரிலீஸ் ஆக இருந்திருந்தால் தந்திருக்குமோ?)


குமுதம் ரேன்க்கிங்க் நன்று


ரேட்டிங்க் 3/5

Wednesday, November 05, 2025

BAD GIRL(2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலொ ட்ராமா) @ஜியோ ஹாட் ஸ்டார்

       

        5/9/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் சில சர்ச்சைகளால் தடை விதிக்கப்பட்டது.இப்போது        4/11/2025 முதல் ஜியோ ஹாட் ஸ்டார் ஓ டி டி யில் வெளியாகி உள்ளது.


வெற்றிமாறன் தயாரிப்பு என்பதாலும்,7/2/2025 ல் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு  சில விருதுகளை வென்ற படம் என்பதாலும் இது முக்கியத்துவம் பெறுகிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி 15 வயது டீன் ஏஜ்  மாணவிம்+1 படிக்கிறார்.அம்மா ஸ்கூல் டீச்சர்.அதே ஸ்கூலில் நாயகி படிப்பதால் அம்மாவின் கண்டிப்பும்,கண்காணிப்பும் அதிகம்.அம்மா,அப்பா,பாட்டி உடன் கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தாலும் நாயகி  சுதந்திரமாக இருக்க விரும்புபவர்.


நாயகி சக மாணவன் ஒருவனைக்காதலிப்பது அம்மாவுக்குத்தெரிந்து விட காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.அவனை அவனது பெற்றோர் சிங்கப்பூர் அனுப்பி விடுகின்றனர்.


பின் ஒரு நாளில் நாயகி காலேஜ் போகிறார்.ஹாஸ்டலில் தங்கிப்படிக்கிறார்.அருகில் பெற்றோர் இல்லாததால் லிவ்விங் டுகெதர் ஆக  ஒரு புதுக்காதலனுடன் வாழ்கிறார்.


அவனுடன் ஒரு கட்டத்தில் பிரேக்கப் ஆக நாயகி வேறு ஒருவனைக்காதலித்தாரா? என்ன செய்தார்? என்பது மீதித்திரைக்கதை


நாயகி ஆக அஞ்சலி சிவராமன் இதில் அறிமுகம்.ஆல்ரெடி இவர் சில ஓடிடி படைப்புகளில் நடித்திருந்தாலும் சினிமாவுக்கு புதுமுகம்.


பிரமாதமான முக வெட்டு ,அழகிய கண்கள் , வசீகரிக்கும் ஹேர் ஸ்டைல், அபாரமான நடிப்பு இவரது பிளஸ்.இப்படி எல்லாம் ஒரு கேரக்டரா? என வெறுக்க வைக்கும் கேரக்டர் டிசைனில் கூட பாவம் எனப்பரிதாபத்தைப்பெறும் லாவகமான நடிப்பு.


நாயகியின் அம்மாவாக சாந்திப்ரியா கலக்கி இருக்கிறார்.சரண்யா பொன் வண்ணனுக்கு இணையான பாந்தமான நடிப்பு.

நாயகியின் முதல் காதலன் ஆக ஹிருது ஹாரூன் ( ட்யூட் படத்தில் நாயகியின் காதலன்) கச்சிதமான நடிப்பு.


நாயகியின் தோழி ஆக சரண்யா ரவிச்சந்திரன் அருமையான நடிப்பு.


நான்கு பேர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.அபாரம்.பல காட்சிகளில் நாயகி,அம்மா இருவருக்குமான க்ளோசப் ஷாட்கள் செம.


அமித் திரிவேதி தான் இசை.பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசை கச்சிதம்.


எடிட்டிங் ராதா ஸ்ரீதர்.மாறுபட்ட கட்..டைம் ட்யூரேசன் 112 நிமிடங்கள்


மாறுபட்ட இந்தக்கதையை எழுதி இயக்கி இருப்பவர் பெண் இயக்குனர் வர்சா பரத்

சபாஷ்  டைரக்டர்


1 ஒளிப்பதிவும் ,நாயகியின் அழகும்,நடிப்பும் படத்தின் பெரிய பிளஸ்

2 நாயகியின் அம்மாவாக வரும் டீச்சரின் கேரக்டர் டிசைன்,வெவ்வேறு கட்டங்களில் அவர் நடிப்பு,மகளை டீல் செய்யும் விதம் அருமை

3 தமிழில் வந்த ஆட்டோகிராப்,அட்டக்கத்தி ,மலையாளத்தில் வந்த பிரேமம் ,ஜூன் ஆர் படங்களின் திரைக்கதை சாயல் இருந்தாலும் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் பெண்ணின் பல காதல்கள் படம் ஆக இது புதுசு.( பூ படத்தில் ஒரே ஒரு காதல் தான்.பின் கணவன் வேறு ஆள்)

4 இயக்குனரின் திரை மொழி புதுசு.


  ரசித்த  வசனங்கள் 


1 சில காயஙகள் பட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் பட்டுட்டே இருக்கும்

2 கலர் பிரா எதுக்கு? உள்ளேதானே இருக்கு?யார் பார்க்கப்போறாங்க? 

3  ஒருவேளை நம்ம விஷயம் கண்டு பிடிச்சு இருப்பாஙகளோ?

அப்போ இனி பயப்பட வேண்டி இருக்காதுல்ல?

4 பைனான்சியல் ஸ்டெபிலிட்டிதான் நமக்கு முக்கியம்

5 உனக்காக எல்லாம் வாங்குனேன்,ஆல் யுவர் பேவரைட் திங்க்ஸ்

நீ தான் என் பேவரைட்

6  நீ செஞ்ச துரோகத்துக்கு உன் லைப் ல நிச்சயம் ஒரு நாள் அனுபவிப்பே

7 நீங்க உங்க அம்மா அப்பா பேச்சைக்கேட்கலைன்னா உங்க வாரிசுகள் மட்டும் உங்க பேச்சைக்கேட்கவா போகுதுங்க?


8 பாட்டியோ,அம்மாவோ அவஙகளுக்குப்போட்டு விட்ட சங்கிலியை அவஙகளால உடைக்க முடியாட்டியும் அதை நமக்குப்போட்டு விட்டு டுவாங்க

9 வயசுலயும் ,அனுபவத்துலயும் மூத்தவஙகளா இருக்கறதால அவஙக சொல்றது எல்லாம் உண்மை ஆகிடாது

10 நமக்காகத்தான் இந்த மழையே பெய்யுது.


11 ஒருத்தர் கொடுத்த வலியையும் ,வேதனையையும் இன்னொருவர் வந்து சரி பண்ணிட முடியாது.நம்மை நாம் தான் சரி பண்ணனும

12  உண்மையாவே எனக்கு போதை பிடிக்குதா? அல்லது சகவாசம் சரியில்லையா? தெரில.அதான் விட்டுப்பார்க்கலாம்னு தோணுச்சு

13. டேய்,உன் குழந்தைக்கு என் பேரு தானே வெச்சிருக்கனும்?

14  நீ போய்ட்டே ,நானும் விட்டுட்டேன்

15 ஒரு பொண்ணு எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கான மோசமான முன்னுதாரணம் நான் தான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகியின் முதல் காதலனைப்பல வருடங்களுக்குப்பின் சந்திக்கும் நாயகி வேறு ஒருத்தியைத்திருமணம் செய்த அவனுடன் கூடலுக்குத்தயார் ஆக இருக்கிறாள்.ஆனால் அவன் மறுக்கிறான்.இந்தக்காலத்தில் இந்த மாதிரி ஆண்கள் இருக்காங்களா? என்ன?


2 அம்மா,அப்பா,பாட்டி என எந்த உறவுகளையும் மதிக்காத நாயகி காணாமல் போன பூனைக்குட்டிக்காக உருகுவது நம்ப முடியவில்லை

3 இயக்குனர் ஒரு பெண் என்பதால் ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை எளிதில் கடத்த முடிகிறது.அவரது திரை மொழி அபாரம்.ஆனால் மணிரத்னம் படஙகளில் வரும் கொண்டாட்ட மனநிலை மிஸ்சிங்.ஜாலியான மொமெண்ட்ஸ் குறைவு.

4 படம் பார்க்கும் டீன் ஏஜ் பெண்கள் இது போல் வாழக்கூடாது என முடிவெடுப்பதை விட இப்படி வாழ்ந்து தான் பார்ப்போமே? என நினைக்க வாய்ப்பு அதிகம்.அது பின்னடைவு


5 நாயகி முற்போக்கானவள் என்பதைக்காட்ட அவர் தம் அடிப்பது ,தண்ணி அடிப்பது  எனக்காட்டத்தேவை இல்லை.


6  நாயகி ஒரு பிராமணக்குடும்பத்தில் இருந்து வந்தவர் என ஜாதி அடையாளம் தேவையற்றது

7 நாயகியின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும் அவரது நோக்கம் ,லட்சியம் தான் என்ன? என்பதில் தெளிவில்லை.


8 நாயகியின் காதலர்களாக வருபவர்கள் யாரும் மனதில் நிற்கவில்லை.தாடி வைத்து கஞ்சா கேஸ்கள் போல ,பிச்சைக்காரர்கள் போல இருக்கிறார்கள்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குழந்தைகளை எப்படிக்கண்டிப்புடன்,கண்காணிப்புடன் வளர்த்த வேண்டும் என பெற்றோர்களுக்குப்படிப்பினை ஊட்டும் படம்.ரேட்டிங்க் 3 /5.விகடன் மார்க் யூகம் 43

Bad Girl
Theatrical release poster
Directed byVarsha Bharath
Written byVarsha Bharath
Produced by
Starring
Cinematography
Edited byRadha Sridhar
Music byAmit Trivedi
Production
company
Release dates
Running time
112 minutes[1]
CountryIndia
LanguageTamil