Sunday, May 31, 2015

எனக்கு தலைக்கனம் இல்லைனு ஒரு பொண்ணு தில்லாச்சொல்லுச்சுன்னா

நடிப்பு சரியா வராத உதயநிதி, ஆர் கே ,வகையறாக்கள் எல்லாம் ஓபிஎஸ் பார்த்து கத்துக்கங்கப்பா, என்னா பர்ஃபார்மென்ஸ்============2 உன்னிடம் டி எம்மில் யார் யார் எல்லாமோ பேசறாங்க என்னிடம் ஏன் பேசுவதில்லை? அன்பே?
=============3 நான் மட்டும் உன்னை தேடுவதே இல்லை, ஏன்னா எப்படியும் நீ கிச்சன் ரூமில் உக்காந்து நொறுக்ஸ் தான் சாப்ட்டுட்டு இருப்பேன்னு தெரியும்
===============4 2016 தேர்தலில் அதிமுக தனியா நிக்குதா? பிஜேபியோட கூட்டணி வைக்குதா? என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் தீர்ப்பின் நேர்மையை # டீலிங்==========5 உன் படைப்புத்திறனை உன் மனைவி கண்டுகொள்ளவில்லையா?கவலைப்படேல்.ஆனானப்பட்ட வள்ளுவருக்கே வாசுகி வாசகி இல்லையாம்===========6 எந்தப்பொண்ணு கிட்டே எப்போ வெயிட் என்ன?னு கேட்டாலும் 50 கேஜி னு தான் சொல்றாங்க.இதை எப்படி நம்புறது?
===========7 மாஸ் ரிலீஸ் தேதி = 29 / 5/2015 = 2+9+5+2+0+1+5 = 24 = 2+4= 6 சூப்பர்ஹிட் =6=============8 மக்கள் முதல்வர் இன்று மாநில முதல்வர் ஆனார்.ஆனால் மாநில முதல்வர் மக்கள் முதல்வர் ஆகலை.இதுதான் அரசியல்============9 உன்னைக்கடுப்பேத்துவதற்காகவே  உன்  ஆள்  பலரிடம்  பேசுவது போல்   பாவனை செய்தால் நீ அதைக்காணாதது போல் பாவனை செய்

=================
10 மாசிலாமணி யை சுருக்கி மாஸ்னு வெச்ட்டாங்களாம்.அப்போ உசிலைமணியை சுருக்கி உஷ் னு வைப்பாங்களா?================11 நல்ல வேளை.ஹீரோ பேரு கேசவன் னு வைக்கலை.வெச்சிருந்தா டைட்டில் கேஸ் ஆகி இருக்கும் # மாசிலாமணி எனும் மாஸ்
=============12 நைட் 11 மணிக்கு 19 நெட் தமிழர்கள் 91 பொண்ணுங்களோட பேசிக்கிட்டிருந்தா இந்தியா எப்படி வல்லரசு ஆகும்?ஜொள்ளரசு தான் ஆகும்
===============13 நயன் தாரா டூ  சூர்யா= மாஸ் இலா உண்மைக்காதலே  மாறுமோ சிம்பு வந்த போதிலே? # மாஸ் என்கிற மாசிலாமணி 
====================14  கேக்கறவன் கேனையா இருந்தா மாசிலாமணியின் சுருக் தான் மாஸ்னு சொல்லி வரிவிலக்கு  வாங்கிடுவாங்களாம்
================15  பசங்க ஏதோ பேசனும்கறதுக்காக பொண்ணுங்க கிட்டே எதுனா பேசும்போது அவங்க ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு எஸ் ஆவாங்க.தமிழன் விடாம ஏன்?னு கேட்பான்================
16 அரசின் வருமானம் போய்விடுமே என பயந்தால் குடிமக்களின் எதிர்காலமே வீணாய்ப்போய்விடும்

=============
17 பெரும்பாலான பெண்களின் குங்குமத்துக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால்,போதை முன்னேற்றப்பாதைக்கு எதிரான அங்கம் என்பதால்

===============


18 மாசிலாமணிகள் எதிர்காலத்தில் கையில் காசிலாமணிகள் ஆகும் அவலத்தைத்தவிர்க்க


=================

19 எனக்கு தலைக்கனம் இல்லைனு ஒரு பொண்ணு தில்லாச்சொல்லுச்சுன்னா அது சவுரியைக்கழட்டி ஆணில மாட்டிடுச்சுன்னு அர்த்தம்


============

20 குடிக்கிறவன் லாம் கெட்டவன் இல்லைதான்,ஆனா குடிச்ச பின் கடவுளா இருந்தாலும் சாத்தானா மாறுவான் என்பதால்


=================


டி எம்மில் செப்பிடு வித்தை

1  அன்பே! நீ  என்னை  ஃபாலோ பண்ணிட்டே இருக்கியே? நீ நான் செய்த பாவமா? புண்ணியமா?=============தீவிரமான  கமல் ரசிகன் யார்  தெரியுமா? பாபநாசம்  படத்துல வரும் போலீஸ்  ஆஃபீசர்   ஆண்ட்டிக்கு  கமல் கிஸ் சீன்  உண் டா? என எதிர்பார்பவனே!
==============
நேற்று வரை  மக்கள் முதல்வர் 

 இன்று மாநில முதல்வர்
நாளை மக்கள் முதல்வர் # வாழ்க்கை ஒரு வட்டம்


=============

வெள்ளி அன்று பதவி ஏற்பு , அடுத்த  நாளே சிம்ம ராசியை சனிஸ்வரர் உக்கிரமா பார்க்கறார்

==============

ஒரு ஏ சென்ட்டர் பிகரு டி சர்ட் ல FIXED னு வாசகம் எழுதி வெச்சிருக்கு.நிச்சயதார்த்தம் ஆகி இருக்குமோ?===========6 கரண்ட் ரீடிங் எடுக்கற மாதிரி டெய்லி நைட் படுக்கும்போது எத்தனை பாலோயர்ஸ் ?காலைல எத்தனை அன் பாலோ னு குறிச்சு வெச்சுக்கிட்டிருக்கேன்
=============7 வாழ்க்கைல கோல் ரொம்ப முக்கியம் தான்.ஆனா டபுள் சைட் கோல் /சேம் சைடு கோல் போடக்கூடாது
==============8 தீர்க்க சுமங்கலியாக வாழ நினைக்கும் பெண்கள் குடிகாரனை மாப்பிள்ளையாக ஏற்காதீர்கள்
============9 மரத்தை வெட்டுபவனைக்கூட மன்னிக்கலாம்.ஆனால் உலகில் தூய காற்றை தன் சிகரெட் புகையால் சீரழிப்பவனை மன்னிக்கவே கூடாது=============10 குடிகாரன் தன் உடம்பையும் தன் குடும்பத்தின் எதிர்காலத்தையும் தான் சீரழிக்கிறான்.ஆனால் ஒரு சிகரெட் பிடிப்பவன் உலகில் உள்ள காற்றை சீரழிக்கிறான்
===========11 மோடியின் வெளிநாட்டு பயணங்களால் நாட்டுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளது : அருண் ஜெட்லி"# எந்த நாட்டுக்கு? அவர் விசிட் அடிச்ச நாட்டுக்கா?
==============12 உன் அன்புக்கு உரியவர் உன்னை விட்டுவிலக நினைக்கையில் இது வரை நீ பார்க்காத அவரது இன்னொரு முகத்தைக்காண்பாய்!=============13 புரட்சித்தலைவி நன்றிக்கடன் செலுத்தவேண்டியவர்கள்

1 எம் ஜி ஆர்
2 குமாரசாமி

===============

14 அப்பாக்கள் 2 வகை

1 தான் இருக்கும்போதே தன் சிம்மாசனத்தில் மகனை அமர வைத்து அழகு பார்ப்பவர்
2 அப்படிச்செய்ய மனம் வராதவர்=============

15 லட்சுமியை எப்பாடுபட்டேனும் நீ வளைத்துப்போட்டுவிட்டால் சரஸ்வதி ,நீதி தேவதை ,அதிர்ஷ்டதேவதை மூவரையும் சுலபமாக கரெக்ட் பண்ணிடலாம்

==============

16 ஒரு தனி நபரின் அபிலாஷை ஒரு மாநிலத்தின் தலை எழுத்தையே நிர்ணயிக்கும் சக்தி படைத்தவையாக மாறக்கூடும் #,எம் ஜி ஆர் ,ஜெ

===============

17 அரசாட்சி புரிவோர்க்கு மனசாட்சி சொல்வதைக்கேட்க நேரம் இருக்காது


=============

18 நீ எவ்வளவு பெரிய திருடனாக இருந்தாலும் வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டை அணிந்து கொண்டால் மக்கள் உன்னை நம்பி ஏமாந்து விடுவார்கள்

==============19 டி எம்மில்  3  பேருகிட்டே  பேசிக்கிட்டே  டி எல்லில் 4 பொண்ணுங்க கிட்டே  பேசுவது  எப்படி? என் ற  செப்பிடு  வித்தையை மாப்பி நீ  செப்பிடு
===================20 நீதிதேவதையை விலைக்கு வாங்கியவர்களைப்பார்த்து காலதேவன் அர்த்த புஷ்டியுடன் சிரிப்பான்


=============

Saturday, May 30, 2015

புலி பசிச்சாலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாப்பிடாது?

நாளை 10 வது ரிசல்ட்
மேத்ஸ் ல சென்ட்டம் அடிச்சவங்க மேத்ஸ் க்ரூப் எடுங்க.பெயில் ஆனவங்க பிஏபிஎல் படிச்சு வக்கீல் ஆகி ஜட்ஜ் ஆகிடுங்க.


============

2 பியூட்டி பார்லர் போகாத பியூட்டியின் கூந்தல் ஆங்காங்கே செம்பட்டை வாய்ந்திருந்தால் மருதாணி அரைத்துத்தலைக்குக்குளித்திருக்கு என அறிக.நரை மறை


===========

3 பஸ்ல அறிமுகம் இல்லாத பொண்ணு கிட்டே நாட்டு நடப்பு பற்றி பேசிட்டிருக்கும்போது கொஞ்சம் கூட மேனர்சே இல்லாம போன் பண்ணிட்டே இருந்தான். புருசனாம்

==============

4 அன்பே! நீ சந்தோசமா இருக்கறப்ப சுடும் தோசையே சுமாராத்தான் இருக்கும்.கோபமா இருக்கையில் உன் இருக்கையில் அமர்ந்துஇரு கையில் மாவு அள்ளி ஊத்தினா

=============

5 பஸ் ஸ்டேன்ட்ல இருந்து நல்ல ஹோட்டல் போக பணக்காரன் 50 ரூபா ஆட்டோக்கு செலவு பண்றான்.ஏழை 25 ரூபா ல சாப்பிட்டே முடிச்சுடறான்.


==============

6 சம்சாரம்/காதலி ஜடை இழுக்க எளிய வழி =10 வது 12 வது மார்க் என்ன?என கேட்பதே.கல்லுளி மங்கிக.சொல்ல மாட்டாங்க

==================


7 கோலம் போடும் டிபி வைக்கும்  பெண்கள் சாமார்த்தியமா வீட்டுக்கதவு எண்  தெரியாதது மாதிரி வெச்சு, முகத்தையும் அந்தப்பக்கமா திருப்பிக்கறாங்க 
================
8  சிம்பு வோட  லவ்வர்சும் , 10 வது ல ஸ்டேட் ஃபர்ஸ்ட்  வாங்கறவங்க  எண்ணிக்கையும் 1. ஒரு ஆள்ல  முடிஞ்சுடாது# 41  பேரு  ஸ்டேட்  ஃபர்ஸ்ட்
===============
9  நெகமம்பட்டுசேலைதான் வேணும் நீ நெகிழ்கையில் நானும்  பாக்கெட்டில்  காசு இல்லை என  நெகிழ்கையில் நீ உங்கம்மா  வீட்டுக்குப்போகாமல் இருந்தால் நலம்
===============
10  நீ என் அருகில் வந்ததும்  ,  என்னைபார்த்து  சிரித்ததும்  இன்னைக்கு சமையலுக்கு மட்டம்  போடப்போகிறாய், ஹோட்டலுக்கு  தண்டச்செலவு என அறிந்தேன்
==============11 2 3/4அடி  கூந்தல்தான்  என முக்காலும்  உணர்ந்த ஞானிகள்  சொன்னாலும்  இல்லை அது 6 அடிக்கூந்தல்தான்னு அசால்ட்டா அடிச்சு விடுவான் நெட் தமிழன்
===============12 ஐ  லவ் யூ -னு  பொண்ணுங்க  சொல்லும்போது  வெத்து  பாண்டு பேப்பர்ல  கையெழுத்து  வாங்கி  வெச்சுகனும். இல்லைன்னா  நான் எப்போ சொன்னேன்பாங்க

==================
13 புஷ்பா ஃபிளைட்டில்  போனா புஷ்வாணம்னு சொல்ல முடியாது 

=============14  பொண்ணுங்கள கேலி பண்ற எல்லாரும் இங்க உள்ள பெண் ஐடிக்களை அன்பாலோ பண்ணிட்டு நிம்மதியா இருக்கலாமே


அன்பா  ஃபாலோ  ஓக்கே , அன்ஃபாலோ  நாட் ஓக்கே ================

15  சாலி`கிராமத்தான் அறிவாளியா இருந்தா அவரை புத்திசாலி கிராமத்தான்னு சொல்லலாம்


===========

16 கை பேசி கிட்டே இருக்கணும் ,அலை பேசி கிட்டே இருக்கனும் என்பது காதலர்களின் தேசிய வியாதி:-)"


============
17 புலி பசிச்சாலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாப்பிடாது


============

18 ஒரு குடும்பமே குடிக்கும் ஒரு லிட்டர் காபி யை ஜக்கு ல ஊத்தி குடிக்குது ஒரு பொண்ணு.இதுல வேற டயட்ல இருக்காம்


=============

19 அன்பே ஜெனி நாளை சனி ,காதல் வந்தா தினமும் சனி


===============


20 நானும் நிலாவும் பேசி கொண்டு இருந்தோம் தொந்தரவு செய்ய வந்து விட்டார்  எஸ் ஜே  சூரியா # எ கீ 


=============


Tanu Weds Manu: Returns - சினிமா விமர்சனம்

கடந்த வாரம் வெளியான ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ என்னும் இந்திப் படம் பாலிவுட் பாக்ஸ்ஆபிஸைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. ‘பிக்கு’வுக்கு முன்னாலேயே ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ நூறு கோடி வசூலை எட்டிவிடும் என்று சொல்லப்படுகிறது. அப்படி என்ன மேஜிக் இந்தப் படத்தில் இருக்கிறது என்று பதில் தேடினால், ஒரே ஒரு பதில் மட்டும்தான் கிடைக்கிறது. அது ‘கங்கனா எனும் மேஜிக்’.
2011-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் இரண்டாம் பாகம்தான் இது. தனுஜா திரிவேதி (கங்கனா ரனாவத்), மனு சர்மா (மாதவன்) இருவரின் நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது. இருவரும் ‘கவுன்சிலிங்’கிற்காக லண்டனில் இருக்கும் மனநலக் காப்பகத்துக்கு செல்கிறார்கள்.
அங்கே நிதானத்தை இழந்து மனு, தனுவிடம் சண்டையிட, அவரை மனநலக் காப்பகத்தில் அடைத்துவிடுகிறார்கள். மனுவின் நண்பர் பப்பிக்கு (தீபக் தோப்ரியல்) இந்தத் தகவலைச் சொல்லிவிட்டு தனு, தன் சொந்த ஊருக்குப் போய்விடுகிறாள். பப்பி மனுவை வெளியே கொண்டுவருகிறார்.
சொந்த ஊரில் தனு ஒரு களேபரத்தையே உண்டுபண்ணிவிடுகிறாள். காதலிக்கிறேன் என்று திருமணத்துக்கு முன்னால் தன் பின்னால் சுற்றிய பழைய ஆண் நண்பர்களை சந்திப்பது, தங்கையைப் பெண் பார்க்க வரும்போது ‘டவலுடன்’ அமர்ந்து மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசுவது எனச் சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிறாள். தனுவின் இந்த ஜாலியான நடத்தையால் காதலர்கள் பட்டியலில் வக்கீல் சிண்டுவும் (ஆயூப்) சேர்ந்துகொள்கிறார்.
பழைய காதலர் ராஜா அஸ்வதிக்கும் (ஜிம்மி ஷெர்கில்) சிண்டுவுக்கும் இதனால் மோதல். தனு தன்னிடம் மன்னிப்பு கேட்பாள் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோகிறான் மனு. தனு மாதிரியே இருக்கும் குசும் குமாரியை (கங்கனா) காதலிக்க ஆரம்பித்துவிடுகிறான். மனு-குசும் காதல் என்னவாகிறது, தனு என்ன முடிவெடுக்கிறாள் என்பதுதான் ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’.
எந்த ஒரு புதுமையான அம்சத்தையும் வைப்பதற்கு இயக்குநர் ஆனந்த் எல் ராய் யோசித்திருக்க மாட்டார் போலிருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகளில் நாம் என்ன நடக்கும் என்று நினைக்கிறோமோ அதுவே நடக்கிறது.
திருமணத்துக்குப் பின் காதல் என்னவாகிறது, திருமணத்தால் உருவாகும் சமூக நெருக்கடிகள் என்ன, ஒரு பெண் தன்னால் தாயாக முடியாது என்று தெரிந்த பின் என்ன செய்வாள் என்பன போன்ற கேள்விகளை முன்வைத்துதான் கதைக் களத்தை எழுத்தாளர் ஹிமான்ஷு சர்மாவும், இயக்குநர் ஆனந்த்தும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.
தனுவுக்கு ஏன் திருமண வாழ்வு கசந்துபோகிறது, குசும் ஏன் மனுவைக் காதலிக்கிறாள் என்பதற்கெல்லாம் பதில் இல்லை. திருமண வாழ்க்கை தனுவைச் சலிப்படைய வைத்திருக்கலாம்; அல்லது, தன் கணவர் மனுவுடன் மனமொத்து வாழ முடியாது என்று நினைத்திருக்கலாம். இப்படி, ‘லாஜிக்’ இல்லாத எல்லாக் காட்சிகளுக்கும் நாமேதான் பதில் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
தனு, குசும் கதாபாத்திரங்களுக்கும் பெண் முன்னேற்றத்துக்கும், பெண்ணியத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தப் பாத்திரங்கள் பெண்ணியம் பேசுகின்றன என நினைத்தால், அதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது.
இந்தக் குறைபாடுகளை மீறி, கங்கனாவின் நடிப்பும், தீபக்கின் நகைச்சுவையும் படத்தைக் காப்பாற்றுகின்றன. மாதவன், ஜிம்மி ஷெர்கில், ஸ்வரா, ஆயூப் என அனைவரின் நடிப்பும் படத்துக்கு வலுசேர்க்கிறது.
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சந்திக்கும் பிரச்சினைகளையும், போதாமைகளையும் பேச நினைத்து அதைக் கோட்டைவிட்டிருக்கிறது படம்.
பாலிவுட்டில் மெகா ஹீரோக்களின் பட ஓபனிங் ஹீரோயின்களுக்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. ‘என்எச்10’ அனுஷ்கா, ‘பிக்கு’ தீபிகா, இப்போது ‘தனு’ கங்கனா என சொல்லிவைத்து ‘ஹிட்’ அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சூப்பர் ‘ஹீரோயின்’ டிரெண்ட் பாலிவுட்டின் எல்லாத் தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்த ஹீரோயின் காற்று கோலிவுட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தினால் ஹீரோயிசத்தையே பார்த்துச் சலித்துப்போயிருக்கும் தமிழ் ரசிகர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.


நன்றி = த இந்து

ஓ.பி.எஸ். விரைவில் ஹாட்ரிக் அடிக்க வாழ்த்து்

1  திரிஷா எளிமை என்னை கவர்ந்தது: ஓவியா...#,ஆமா ரொம்ப எளிமையா இருப்பாங்க.ஜாக்கெட்க்கு பதிலா டாட்டு போட்டிருப்பாங்க


===========

2 ஜெயலலிதா விடுதலையான மகிழ்ச்சியில் தலைகீழாக நடந்த யோகா மாஸ்டர்.# அய்யய்யோ.அப்போ இவர் நேரா.நடக்கும்போது ஜெ உள்ளே போய்டுவாரா?


==============

3


ஒரே ஆண்டில் 18 நாடுகளுக்கு சென்றதுதான் பிரதமர் மோடியின் சாதனை -சீதாராம்யெச்சூரி # அப்போ 5 வருசத்தில் 90 நாட்டுக்குத்தான் போக முடியுமா?============


4 #தல56 ல் அஜித் டாக்சி ட்ரைவர்

//# ஹீரோ டாக்சி டிரைவரா வந்த படம் ஹிட்.ரஜினிக்கு படிக்காதவன்.கார்த்தி க்கு பையா============

5 ஜெ.மீது சர்வதேச விசாரணை எடுக்க வேண்டும் - கிருஷ்ண சாமி #இப்டியே பேசிட்டிருந்தா உங்களை பெயில் ல தான் எடுக்கனும்.அம்மா பத்தி தெரியுமில்ல?


============

6 பொதுமக்களின் 20 ஆயிரம் டன் தங்கத்தை திரட்ட ம அரசு புதுமையான திட்டம் # எங்க கிட்டே இருப்பதைப்பிடுங்குவதில் என்னத்த புதுமை வேண்டிக்கிடக்கு?


================

7 டுவிட்டருக்கு எதிராக ஆபாச பட நடிகைகள் போர்க்கொடி; ஒரு கோடி கணக்குகளுக்கு மூடுவிழா..# மூட வேண்டியதை மூடாம அக்கவுண்ட்டை மூடி என்ன பயன்?


==============

8 கைதியுடன்'36 வயதினிலே'படம் பார்த்த விவகாரம்: 3 போலீசார் சஸ்பெண்ட் # ஆல்ரெடி 16 வயதினிலே பார்த்தப்ப எஸ் ஆகி 36ல மாட்டிக்கிட்டாங்களாம்


===============

9 ஜீரோக்களால் ஹீரோக்களை கண்டுபிடிக்க முடியாது’ ராகுல் காந்திக்குBJPபதிலடி # எல்லா ஹீரோவும் ஒருநாள் ஜீரோ.எல்லா ஜீரோவும் ஒரு நாள் ஹீரோ


===============


10 ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீ வைத்து எரித்து கொலை: மனைவி ஆத்திரம் #7 பேரைப்போட்டுத்தள்ளிய 7 1/2

================

11 குடும்பம் நடத்த மறுத்த கணவன் உட்பட 7பேரை எரித்து கொன்ற மனைவி..# நடத்த முடிஞ்சவங்க வேற யாரையாவது ட்ரை பண்ணி இருக்கலாமில்ல?


===============

12 எனது சாவுக்கு டாக்டர் மற்றும் திருமணமான ஆண்களும் காரணம்; நடிகை ஷீகா ஜோஷியின் தோழி பரபரப்பு வாக்குமூலம்..# அய்யய்யய்யோ.நாங்க என்ன செஞ்சோம்?


================

13 தியேட்டரில் கைதியுடன் சினிமா பார்த்த இன்ஸ்பெக்டர் உள்பட

4 போலீசார் பணி இடைநீக்கம்# ட்யூட்டி டைம் ல சினிமா பார்ப்பதே தப்பு.கைதி கூடவா?"==============

14 5 மணிநேரத்தில் 10 லட்சம் ஃபாலோயர்கள்: கின்னஸ் சாதனை படைத்த ஒபாமா# அப்போ எங்க இளையதளபதியை விட அவர் அவ்ளோ பெரிய அபாடக்கரா?

=============

15 சட்டசபை தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக மதிமுக உருவெடுக்கும்: வைகோ.# உயிர் இல்லைன்னா டெட்பாடில அசைவு இருக்காதுனு சூசகமா புரிஞ்சுக்கனும்


============

16 தாலி எடுத்து கொடுக்க சென்று மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சுப்பிரமணிய சாமி| # நல்ல வேளை.கல்யாண முகூர்த்தத்துக்கு மட்டும் தான் அழைப்பு


============


17 இனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை! #,சும்மா டி போட்டுக்கூப்ட்டாலே போதுமா?பொண்டாட்டி கோவிச்சுக்காது?


==============

18 2வது முறையாக 'முதல்வர்' பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ். # விரைவில் ஹாட்ரிக் அடிக்க வாழ்த்து்


============

19 பொதுச் சொத்துக்களை தொண்டர்கள் சேதப்படுத்தினால் தலைவருக்கும் தண்டனை # பாதிப்பு வரிசை 1 ராம்தாஸ் 2 கலைஞர் 3 ஜெ


===============

20 பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; # பெரியார் பிறந்த மண்ணுடா


==============