Friday, May 31, 2024

P T SIR -பி டி சார் ( 2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா )

                

    இந்தப்படம்  2022 ஆம்  ஆண்டு  நவம்பர்  மாதம்  பூஜை  போடும்போது  ஹிப் ஹாப்  தமிழா  ஆதியின்  17 வது  படம்  என்றார்கள் , ஆனால்  இப்போது  ரிலீஸ்  ஆகும்போது  அவரது  25  வது  படம்  என்கிறார்கள் . இடைப்பட்ட  கேப்பில் 8  படம்  முடிச்சுட்டாரா? என்ன? ( ஒரு  வேளை  இசை  அமைப்பில்  25  வது  படம், நடிப்பில்  17  வது  படமோ ? )

பிரியங்கா (1994) , நேர் கொண்ட  பார்வை   (2019) ,கார்கி (2022) , சித்தா (2023)  ஆகிய  படங்களின்  வரிசையில்  பாலியல்  ரீதியாக  கொடுமைக்கு  உள்ளாகும்  பெண்ணின்  போராட்டங்களை  சொல்லும்  கதையாக  இயக்குநர்  இதை  உருவாக்கி  இருக்கிறார், 


2022  ஆம்  ஆண்டு  கள்ளக்குறிச்சியில்  ஒரு  தனியார்  பள்ளி  மாணவிக்கு  உண்டான  கொடுமைகள்  பற்றிய  உண்மை சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  இப்படத்தை  உருவாக்கி  இருக்கிறார்


முழுக்க  முழுக்க  ஒரு  கோர்ட்  ரூம்  டிராமாவாக  இதை உருவாக்கி  இருந்தால்  தரமான  படமாக  மாறி  இருக்கும், ஆனால்  கமர்ஷியல்  ஆக  கதை  சொல்லலாம்  என  ஹீரோ , ஹீரோயின் ,  பாடல்கள்  என  எல்லாவற்றையும்  கலந்து  கட்டி  அடித்ததில்  வீரியம்  குறைந்த  சாரைப்பாம்பாகவே  படம்  உருவாகி  இருக்கிறது 

 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அம்மா  வுக்கு  ஜாதகம் , ஜோதிடம்  இவற்றில்  நல்ல  நம்பிக்கை உண்டு   நாயகனின்  ஜாதகப்படி  திருமணம்  ஆகும்  வரை  அவர்  எந்த  ஒரு  வம்பு  தும்புக்கும்  போகாமல்  இருக்க  வேண்டும். இல்லை  எனில்  அவருக்கு  கண்டம்  ஏற்படும்  என்கிறார்கள்  அதனால்  நாயகனை  அம்மா  புள்ளைப்பூச்சியாகவே  வளர்க்கிறார்.  எங்கே  என்ன  நடந்தாலும்  கண்டுக்காம  இரு , உன்  வேலையைப்பார்  என்றே  அட்வைஸ்  செய்து  வளர்த்து  வருகிறார் 


 நாயகன்  ஒரு     தனியார்  பள்ளியில்  பி டி  மாஸ்டர்  ஆகப்பணி  புரிகிறார். நாயகி  அதே  பள்ளியில்  ஆங்கில  ஆசிரியை, இருவருக்கும்  காதல். திருமணம்  வரை  போகிறது , நிச்சயதார்த்தம்  நடைபெறும்  நாளில்  ஒரு  சம்பவம்  நடக்கிறது 


 நாயகனின்    பக்கத்து  வீட்டில்  ஒரு  மாணவி  நான்கு  இளைஞர்களால்  கிண்டல்  செய்யப்படுகிறார். கிளாமர்  ஆக  டிரஸ்  செய்து  போனதால்  அவர்  அந்த  நிலைக்கு  ஆளாகிறார்.  சமூக  வலை  தளங்களில் அந்த  வீடியோ  வைரல்  ஆகிறது 


 இதனால் அந்த  மாணவி  படிக்கும்  பள்ளியில் அவருக்குக்கெட்ட  பெயர் , அவரை பள்ளியில்  இருந்து  நீக்க  நிர்வாகம்  முடிவு  செய்கிறது . அந்த  மாணவி  பள்ளியின்  நிர்வாகி  ஆன  வில்லனை  சந்தித்து  நியாயம்  கேட்கிறார். ஆனால்  வில்லன்  மாணவி மீதே  கை  வைக்கிறான்


 அந்த  மாணவி  தற்கொலை  செய்து  கொள்கிறாள் . இதனால்  பொங்கி  எழுந்த  நாயகன்  வில்லன்  மேல்  கோர்ட்டில்  கேஸ்  தொடுக்கிறான். அந்த  கேசில்  ஜெயித்தானா? இல்லையா? என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஹிப் ஹாப்   தமிழா  ஆதி  காமெடி , காதல் , குறும்பு  கலந்த  கேரக்டர். நன்றாக  செய்திருக்கிறார். பாடல்  காட்சிகளில் , சில  சேஷ்டைகளில்  அவர்  ஏன் பிரபு  தேவா  பாணியில்  நடிக்க  முற்படுகிறார்  எனத்தெரியவில்லை 


நாயகி  ஆக  கஷ்மீரா  பர்தேசி.அழகாக  வந்து  போகிறார். ஆனால்  அதிக  வாய்ப்பு  இல்லை 

  நாயகியை  விட  கனமான  பாத்திரத்தில் , முக்கியத்துவம்  வாய்ந்த  ரோலில்   அனிகா  சுரேந்திரன்  நன்கு  நடித்திருக்கிறார்


நாயகனின்  அம்மாவாக  தேவதர்ஷினி  , அப்பாவாக  பட்டிமன்ற  ராஜா  கலகலப்பாக  படத்தைக்கொண்டு  போகிறார்கள் 


பாதிக்கப்பட்ட  பெண்ணின்  அப்பாவாக  இளவரசு  அட்டகாசமான  குணச்சித்திர  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார் 


 வில்லன்  ஆக  தியாகராஜன்  மிரட்டி  இருக்கிறார். அவர்  கண்களும், குரலும்  பெரிய  பிளஸ்  பாயிண்ட் 


 கே  பாக்யராஜ்  ஜட்ஜ்  ஆக  வருகிறார்.  ஓப்பனிங்  சீனில்  அவர்  செய்யும்  காமெடி  அவரது  ஜட்ஜ்  ரோலுக்குப்பொருத்தமாக  இல்லை 


ஆர்  பாண்டிய  ராஜன், முனீஸ்காந்த்  போன்ற  வீணடிக்கப்பட்ட  திறமைசாலிகள்  பட்டியலும்  உண்டு 


நாயகனின்  மாமனார்  கம்  வக்கீல்  ஆக  பிரபு  கச்சிதம் 


இசை  ஹிப் ஹாப்  தமிழா. 2  பாடல்கள்  ஓக்கே  ரகம் 


ஓக்கே  பிரசன்னா  வின்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நேரம்  10  நிமிடங்கள்  ஓடுகிறது   


 மாதேஷ்  மாணிக்கத்தின்  ஒளிப்பதிவு  குட் 


  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  கார்த்திக்  வேணுகோபால் 


சபாஷ்  டைரக்டர்


1  மாணவ  மாணவிகள்  யார்  வேண்டுமானாலும்  என்ன  வேண்டுமானாலும் இக்ந்த  சுவரில்  எழுதலாம், எழுதியது  நடக்கும் என்ற  அந்த  மேஜிக்  வால்  ஐடியா  அருமை .  பாத்ரூம் , டாய்லெட்களில்  கிறுக்கல்  எழுத்தாளர்களை பப்ளிக்காக  எழுத  வைக்கும்  ஐடியா  அது 


2   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  யாரும்  எதிர்பாராதது 


3  பாட்ஷா  ,  அந்நியன்  பாணியில்  நாயகனின்  கதாபாத்திரத்தை  உருவாக்கிய  விதம் 


4  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  நாயகி  நாயகனிடம்  தன்  காதலை  வெளிப்படுத்தும்  கவித்துவம்  மிக்க  காட்சி 


5 வில்லன்  தியாகராஜன், இளவரசு  ஆகியோரின்  நடிப்பு 


6  நாயகனின் அம்மா, அப்பா  இருவரின்  ஜாதகங்களை  நாயகன் , நாயகி  ஜாதகங்களுக்குப்பதிலாக  ஜோதிடரிடம்  மாற்றிக்கொடுத்து  விட்டு  பலா  பலன்கள்  பார்க்கும்போது  இந்த  ஜோடிக்கு  செட்டே  ஆகாதே  என  ஜோசியர்  சொல்வது  செம  காமெடி  சீன் 


  ரசித்த  வசனங்கள் 


1    யோவ்  , இந்த  வண்டில  நான்  வந்தா  இந்த  வருச  எக்சாமை  எழுத  முடியாது , அடுத்த  வருச  அரியரைத்தான்  எழுத  முடியும் 


2   ஹெல்மெட்  போட்டுக்கோ


  சைக்கிளுக்கு  எதுக்கு  ஹெல்மெட். நீ  சைக்கிள்  வேகத்துல தானே  போறே?


3  வெளில  சொல்ல  முடியாத  சில  விஷயங்களை  அது  பாசிட்டிவோ , நெகடிவ்வோ  ஓப்பனா  சொல்ல  முடிவது  மேஜிக்  வாலின்  ஸ்பெஷாலிட்டி .  நம்ம  மனபாரங்களைக்குறைக்குது 


4   எம்மா  உன்  கண்ல  ஏதாவது  பிராப்ளம் இருக்கா?


 இல்லையே? அங்க்கிள்   , ஏன்  கேட்கறீங்க ?

 போயும்  ;போயும்  இவனை  ஏன்  காதலிச்சே?


5   நான்  எப்படி  வாழனும்?னு  ஒரு  ஜோசியக்காரன்  சொல்ல  வேண்டியதில்லை ‘


‘6  பாதிக்கப்பட்ட  பொண்ணு  செத்துப்போயிட்டா  ஜனங்க  அவளுக்கு  ஆதரவா  கருத்து  சொல்வாங்க , ஆனா  உயிரோட  இருந்தா  அவளைப்பேசியே  சாகடிச்சுடுவாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கோர்ட்  ரூம்  காட்சிகள்  அனைத்தும்  ஓவர்  டிராம்டிக். நம்பகத்தன்மையே  இல்லை 


2  இளவரசு  போலீஸ்  ஸ்டேஷனுக்குப்போய்  ஒரு  ஃபுல்  நைட்  அங்கேயே  இருக்கிறார்.  வீட்டுக்கு  தகவல்  சொல்ல  மாட்டாரா?  அவரைக்காணாமல்  குடும்பம்  தவிக்கும்  என்பது  தெரியாதா? 


3  நாயகன்  வில்லனை  அடிக்கும்  காட்சி  நம்பகத்தன்மையே  இல்லை. ஒரு  சாதாரண  ஆசிரியர்  பள்ளி  நிர்வாகியையே  அசால்டாக  அறைவது  எல்லாம்  சாத்தியமே  இல்லை .  அது  போக  வில்லனின்  கேரக்டர்  மிக  பலவீனம்  ஆகி  விடுகிறது . அந்தக்காட்சிக்குப்பின்  வில்லன்  மேல்  எப்படி  பயம்  வரும் ? 


4  பாதிக்கப்பட்ட  மாணவி  வில்லனின்  இடத்திற்கு  ஏன்  தனியாகப்போகிறார்?  அம்மா, அப்பாவை  அழைத்துச்சென்றிருக்கலாம், அல்லது  நாயகனை  அழைத்துச்சென்றிருக்கலாம் 


5 படத்தின்  டைட்டிலுக்கும், மெயின்  கதைக்கும்  என்ன  சம்பந்தம் ?  நாயகன்  கணக்கு  வாத்தியாராக  இருந்தாலும்  இதே  கதை  ஓக்கே  தான். எதுக்கு  பி டி மாஸ்டர் ?  ஸ்போர்ட்ஸ்  டிராமா  கதை  அல்லவே ? 


6  பாதிக்கப்பட்ட  மாணவி  நைட்  டைமில்  கிளாமர்  ஆக  டிரஸ்  பண்ணிட்டுப்போவது  தப்புத்தான். அதை  நியாயப்படுத்தும்  விதமாக  எனக்குப்பிடிச்ச  மாதிரி  நான்  டிரஸ்  பண்ணிட்டுப்போறது  தப்பா? என  டயலாக்  வருது , அதைத்தவிர்த்திருக்கலாம்  



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஒரு  நல்ல  கதைக்கரு  சாதாரண  மசாலா  திரைக்கதையால்  சுமாரான  அவுட்  புட்டைக்கொடுத்து  விட்டது .  ஜனரஞ்சகமாய் செல்கிறது  ரேட்டிங்  2.5 / 5 


PT Sir
Theatrical release poster
Directed byKarthik Venugopal
Written byKarthik Venugopal
Produced byIshari K. Ganesh
Starring
CinematographyMadhesh Manickam
Edited byPrasanna GK
Music byHiphop Tamizha
Production
company
Vels Films International
Release date
  • 24 May 2024
CountryIndia
LanguageTamil

Thursday, May 30, 2024

THE LAST STOP IN YUMA COUNTRY (2023) - அமெரிக்கன் மூவி - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் )

   

   கனடா , யூ எஸ் ஏ  வில்  ரிலீஸ்  ஆன  முதல்  வாரத்திலேயே  42,000  டாலர்  வசூல்  செய்து  அந்த  ஆண்டின்  வசூல்  படங்களில்  29  வது  இடத்தைப்பிடித்த   கமர்ஷியல்  சக்சஸ்  ஃபிலிம்  இது , மீடியாக்களீன்  ஏகோபித்த  பாராட்டுக்களையும்  பெற்றது              


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  காரில்  பயணம்  செய்து  ஒரு  கேஸ்  ஃபில்லிங்  ஸ்டேஷனுக்கு  வருகிறான் காரில். பெட்ரோல்  , டீசல் க்குப்பதிலாக  கேஸ்  ஃபில்லப்  செய்து  ஓட்டும்  மாடல்  அது . ஆனால் அங்கே  கேஸ்  இருப்பு இல்லை . இன்னும்  10  நிமிடங்கள்  கழித்து கேஸ்  வருமாம், அதுவரை  அட்டாச்டு  ரெஸ்டாரண்ட்டில்  டீ, காஃபி  ஏதாவது  சாப்பிடலாம்  என  வெயிட்  செய்கிறான்


ஒரு  போலீஸ்  காரர்  தன்  மனைவியை  அங்கே  டிராப்  பண்ணீ  விட்டுப்போகிறார். அவர்  தான்  நாயகி . அந்த  ரெஸ்டாரண்ட்டில்  சர்வர்.


அப்போது  அங்கே  ஒரு  காரில்  இருவர்  வருகிறார்கள் . பார்க்கவே  முரட்டு  ஆட்களாக  இருக்கிறார்கள் . அப்போது  தான்  நியூசில்  ஒரு  தகவல்  சொல்கிறார்கள் , அருகில்  உள்ள  வங்கியில்  பணத்தைக்கொள்ளை  அடித்து  விட்டு  காரில் இருவர்  தப்பிச்சென்றார்கள்   என்ற  செய்தி  ஒலிபரப்பாகிறது 


 நாயகன்  நாயகியிடம்  நைசாகப்பேச்சுக்கொடுத்து  உங்க  புருசன்  போலீஸ்  தானே? அவருக்கு  ஃபோன்  பண்ணி  தகவல்  சொல்லுங்கள் . வந்திருக்கும்  இருவரும்  வங்கிக்கொள்ளையர்களாகத்தான்  தெரிகிறது  என்கிறான்


  அதே  சமயம்   ஒரு  லவ்  ஜோடி  காரில்  அங்கே  வந்து  சேர்கிறார்கள் . இதற்குப்பின்  நடக்கும்  பரபரப்பான  சம்பவங்கள்  தான்  மீதிக்கதை 


 ஒரே  ஒரு  ஹோட்டலில்  நடக்கும்  சம்பவங்கள் . மிக  மிக  லோ பட்ஜெட். எந்த  செலவும்  இல்லை . நல்ல  ஐடியா 


கத்தி  வியாபாரியாக , நாயகன்  ஆக  ஜிம்  கம்மிங்க்ஸ்  நடித்திருக்கிறார். முதல்  பாதியில்  அமைதியாக  இருந்து  விட்டு பின்  பாதியில்  ஆக்சனில்  இறங்கும்  கேரக்டர். கச்சிதமாக  செய்திருக்கிறார்


 நாயகி  ஆக  , ஹோட்டல்  சர்வர்  ஆக  ஜாக்லின் பிரமாதப்படுத்தி  இருக்கிறார்


வில்லன்களாக  வருபவர்கள்  தோற்ரம் , கெட்டப் , உடல்  மொழியால்  மிரட்டி  இருக்கிறார்கள் 


 போலீஸ்  ஆஃபீசர்களாக  வரும் இருவர்  நடிப்பும்  நல்ல  சுறுசுறுப்பு 


மிகச்சரியாக  90  நிமிடங்கள்  ஓடும்படி ஷார்ப்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 


மாத்யூ  காம்ப்ட்டனின் பின்னணி  இசை  ஒரு  த்ரில்லர்  படத்துக்குத்தேவையான  பணீயைச்செவ்வனே  செய்திருக்கிறது . ஒளிப்பதிவும்  தரம் 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஃபிரான்சிஸ்  காலுப்பில்


சபாஷ்  டைரக்டர்


1   தேவை  இல்லாமல்  லொக்கேஷன்  சேஞ்ச் ,  நடிகர்கள் , நடிகைகள்  கூட்டம்  எதுவும் இல்லாமல்  10  பேர் , ஒரே  ஒரு  ஹோட்டல்  என்று  தேர்ந்தெடுத்து  திரைக்கதை  அமைத்த  விதம் . லோ பட்ஜெட்டில் படத்தை  முடித்த  விதம் 


2  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்   அபாரம்,  என  சொல்ல  முடியாவிட்டாலும்  ஓக்கே  ரகம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  பேங்க்கில்  கொள்ளை  அடிப்பவர்கள்  அவ்ளோ  பணத்துடன்  நேராக  வீட்டுக்கோ , மறைவான  இடத்துக்கோ போய்  பணத்தைப்பத்திரப்படுத்தாமல்  காரில்  டிக்கியில் பணப்பேக்கை  வைத்து  விட்டு  அசால்ட்  ஆக  ஹோட்டலுக்குள்ளே  நுழைவார்களா? 


2    நாயகன்  ரொம்ப  தூரம்  காரில் போக  வேண்டிய  தேவை  இருக்கு . பெட்ரோலை காரிலிருந்து  கேனுக்கு  மாற்றும்போது  அருகில்  இருந்து  கச்சிதமாக  அந்த  வேலையை  செய்யாமல்  பெட்ரோலை  லீக்  செய்து  வேஸ்ட்  செய்வது  ஏன் ?  (  அதனாலேயே  பாதி  வழியில்  கார்  நிற்கிறது ) 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   தரமான  க்ரைம்  த்ரில்லர் , குடும்பத்துடன்  பார்க்கலாம், கொஞ்சம்  ஸ்லோ  மூவி  . ரேட்டிங்  3/ 5 


The Last Stop in Yuma County
Theatrical release poster
Directed byFrancis Galluppi
Written byFrancis Galluppi
Produced by
  • Matt O'Neill
  • Atif Malik
  • Francis Galluppi
Starring
CinematographyMac Fisken
Edited byFrancis Galluppi
Music byMatthew Compton
Production
companies
Distributed byWell Go USA Entertainment
Release dates
Running time
90 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$1 million[2]
Box office$41,520[3][4]

Wednesday, May 29, 2024

CLIMAX (2021) - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 

         ஒரே  இரவில்  நடக்கும்  கதை  என்ற  விஷயமும், 76 நிமிடங்கள்  தான்  என்ற  டைம்  டியூரேஷனும்  இப்படத்தைப்பார்க்கலாம்  என்று  எண்ண  வைத்தது . தெலுங்குப்படம்  தான்  என்றாலும்  தமிழ்  டப்பிங்கில்  அமேசான் பிரைம் ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது 


விஜய்  மல்லய்யா  , நீரவ்  மோடி ஆகிய  இரு  தொழில்  அதிபர்களின்  பெயர்களில்  இருந்து  பாதிப்பாதி  உருவி  விஜய்  மோடி  என்ற  கேரக்டரை  உருவாக்கி  தொழில்  அதிபர்களை  டேமேஜ்    செய்வதற்கென்றே  எழுதப்பட்ட  திரைக்கதை  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  மிகப்பெரிய  கோடீஸ்வரன். வீட்டில்  சண்டை  போட்டுக்கொண்டு  கோபித்துக்கொண்டு நண்பரின்  ஃபைவ்  ஸ்டார்  ஹோட்டலில்  ரூம்  எடுத்துத்தங்குகிறார். இவர்  ஒரு  எம்  பி  யின்  பினாமியும்  கூட . எம்  பி  யின்  பிளாக்  மணி  ரூ  200   கோடி  ஹாட்  கேஷ்  ஆக  இவருடன்  ரூமில்  இருக்கிறது


 ஹோட்டலில்  ஒரு அழகான  பெண்ணைப்பார்க்கிறார். அவள்  தன்  காதலனுக்காக  காத்திருப்பவள் . பின்  அலைபேசியில்  அவள்  காதலனுடன்  ஏதோ  வாக்கு  வாதம்  செய்கிறாள் இதைக்கண்ட  நாயகன்  என்  கூட  ஒரு  நைட்  தங்கு.  தப்பாக  நினக்க  வேண்டாம்.  மனம்  விட்டு  சில  விஷயங்கள்  பேச  வேண்டும், நான்  சொல்வதை  காது  கொடுத்துக்கேட்க  ஒரு ஆள்  வேண்டும்  , அவ்வளவு  தான். நான்  இந்த  கட்டிலில்  இருப்பேன் , நீ  அந்த  சோபாவில்  இருக்கலாம். தொட  மாட்டேன் ., காலையில்  எழுந்ததும்    நீ  ஒரு  கோடி  ரூபாய்  சன்மானம்  வாங்கிக்கொண்டு  போயிடலாம் . டீலா? என்கிறார்.


இந்த  டீலுக்கு  அந்தப்பெண்  ஒத்துக்கொள்கிறாள். அடுத்த  நாள்  காலை அந்தப்பெண்  எழுந்து  கிளம்பி  விடுகிறாள் . ஒரு  கோடி  வாங்கிக்கொள்ள வில்லை  


அந்த  ரூம்  கதவு  நீண்ட  நேரம்  திறக்காமல்  இருப்பதால்  போலீஸ்க்கு  தகவல்  தெரிவிக்கப்பட்டு  ஓப்பன்  செய்து  பார்த்தால்  கோடீஸ்வரன்  கொடூரமாகக்கொலை  செய்யப்பட்டு  இருக்கிறான்.200  கோடி பணமும்  காணோம்


 எம் பி  தரப்பில்  இருந்து  பயங்கர  பிரஷர் 


போலீஸ்  விசாரிக்கிறது . நாயகனுக்கு  பேங்க்கில்  2500  கோடி  ரூபாய்  அடைக்க  வேண்டிய  கடன்  இருக்கிறது   அவர்  பங்களா , சொத்துக்கள்  எல்லாவற்றையும்  விற்றாலும்   கடனை அ டைக்க  முடியாது 


 ஆனால்  அவர்  பல  இன்சூரன்ஸ்  பாலிசி  எடுத்து  வைத்திருக்கிறார். அதன்  மதிப்பு  ரூ  500  கோடி 


 இப்போது  போலீசின்  சந்தேகம்   அந்த  இன்சூரன்ஸ்  பணத்தை  பெற  கொலை  செய்யப்பட்டாரா?  ரூமில்  இருந்த  எம் பி  யின்  கறுப்புப்பணம்  ஆன  200  கோடியைக்கைப்பற்றக்கொலை  செய்யப்பட்டாரா?   என்பதில் இருக்கிறது 


  இவை  போக  அந்தப்பெண்  ஏன்  ஒரு  கோடி வாங்கிக்கொள்ளாமல்  சென்றாள் ? அந்தப்பெண்  யார்? என்பதையும்  துப்பு  துலக்குகிறது


 இந்தக்கேஸ்  எப்படி  முடிகிறது  என்பது  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  தெலுங்கின்  மூத்த  நடிகர்  ராஜேந்திரப்பிரசாத்  அசால்ட்டாக  நடித்திருக்கிறார். அவரது , கெட்டப் , உடல்  மொழி , வசன உச்சரிப்பு  அனித்தும்  அருமை 


  நாயகி  ஆக  அந்த  ஒன் நைட்  ஸ்டேண்ட்  நைட்டிங்கேல்  ஆக சாஷா  சிங்  கச்சிதமான  நடிப்பு , முக  அழகு , இளமை , சிரிப்பு  அனைத்தும்  அருமை 


 மீதி  பெரும்பாலும்  புதுமுகங்கள் , கொடுத்த  பாத்திரத்தை  கச்சிதமாக  ஏற்று நடித்திருக்கிறார்கள் 


ராஜேஷ்  நித்வானா  இசையில்  ஒரு  த்ரில்லர்  படத்துக்கு  எந்த  மாதிரி  பிஜிஎம்  வேண்டும்  என்பதை  உணர்ந்து  வெளிப்படுத்தி  இருக்கிறார்


ராய்  குமார்  நீலா வின்  எடிட்டிங்க்  ஷார்ப்  ஆக  இருக்கிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  பவானி  சங்கர் 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகன்    தான்  ஒரு  தனிக்கட்சி  ஆரம்பித்தால்  என்ன  மாதிரி  எல்லாம்  திட்டங்கள்  செயலபடுத்துவேன்   என்று  சொல்லும் காட்சி  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  ரசிக்கத்தக்க   காட்சி .அடடே. இப்படி  இருந்தாக்கூட  நல்லாதான்  இருக்கும்  என்று  சொல்ல  வைக்கும்  அந்த  8  பாய்ண்ட்ஸ்


2   ஒரு  த்ரில்லர்  படத்தில்  கருத்தாழம்  மிக்க  வசனங்களை  அட்டகாசமாக  எழுதிய  வசனகர்த்தா 


3 க்ளை,மாக்ஸ்  ட்விஸ்ட் 


  ரசித்த  வசனங்கள் 


1   நேர்மை  சினிமாவைத்தவிர   வேறு  எங்கும்  ஜெயித்ததே  இல்லை 


2 அப்பாவியா  வாழ்வது  பெரிய  சாபம் 


3 எனக்கு  வயசாகிடுச்சு , நிம்மதியாப்போய்ச்சேரலாம்னு  யாராவது  நினைக்கிறார்களா? சாவின்  விளிம்பில்  இருப்பவர்கள்  கூட  இன்னும்  கொஞ்சம்  நாள்  வாழத்தான்  ஆசைப்படுகிறார்கள் 


6 பிள்ளைகள்  மேல்  பெற்றவர்கள்  வைக்கும்  அன்பு  போல  பெற்றவர்கள்  மீது  பிள்ளை  கள்  அன்பு  வைப்பதில்லை 


7  உன்னை  பிளான் பண்ணி  பெத்துக்கலை , அது    ஒரு  சைடு  எஃப்ஃபக்ட் 


8   எல்லா  ஆண்களும்  பொசசிவ்னெஸ்  உடன்  தான்  இருப்பார்கள் , அதில்  என்ன  தப்பு ?/ 


9  பிச்சைக்காரன்  ஆக  இருந்தாலும், பில்கேட்ஸ்  ஆக  இருந்தாலும்  சந்தோஷம் , துக்கம்  இரண்டும்  பொது 


10  எந்த  கிரிமினலா  இருந்தாலும்  ஏதாவது  ஒரு  தடயத்தை  விட்டுட்டுத்தான்  போவான் 


11   பாப்புலாரிட்டி  இருப்பவனுக்குப்ப்ணம்  கிடைக்குது , ஆனா  பணம்  வெச்சிருக்கும்  எல்லாருக்கும்  பாப்புலாரிட்டி  கிடைக்காது / அதுக்கு   எந்த  கேரண்டியும்  இல்லை 


12  வேலை  நடக்கனும்னா  நம்ம  கைல  பவர்  இருக்கனும் 


13  சாமான்யன்  பார்வைல  ஐ  க்யூ  அதிகமா  இருப்பவன்  , ஐ  க்யூ  கம்மியா  இருப்பவன்  எல்லாம்  ஒண்ணுதான் 


14   இந்த  உலகத்துல  49 % பேர்  பெஸ்ட் ஆக   இருக்காங்க  51 %  பேர் சராசரி  ஆளுங்களா  இருக்காங்க 


15  வாழ்க்கைல  நம்மைப்பின்  தொடர்பவர்கள்   ரெண்டே  பேரு  தான்  1  நம்ம  வாரிசுகள்  2 நம்மிடம்  பணிபுரிபவர்கள் 

 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  நாயகன  லாக்கரைத்திறக்கும்போது  ரகசிய  எண்ணை  பிரஸ்  பண்ன  வேண்டும், நாயகியை  அந்தப்பக்கம்  திரும்பு  என்று  சொல்லும்போது  நாயகி  ஃபோனைப்பார்ப்பது  போல  வீடியோ  எடுக்கிறார். அது  கூடவா  நாயகனுக்குத்தெரியாது ?


2  சொந்த  மகன்  பணம்  கேட்கும்போது  அவ்ளோ  பணம் இல்லை  என்று  சொல்லி  ஒரு  லட்சம்  வேணா  தர்றேன்  என்பவர்  முன்  பின் தெரியாத  பெண்ணுக்கு  தண்டமாய்  ஒரு  கோடி  கொடுக்க முன்  வருவது 

3 இவ்ளோ  கடன்கள் , பிரச்சனைகள்  உள்ள  நபரையா  ஒரு  எம் பி  தன்  பினாமியாக  தேர்ந்தெடுப்பார் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான  த்ரில்லர்  பார்க்க  விரும்புபவர்கள்  பார்க்கலாம் , போர்  அடிக்கவில்லை ., ரேட்டிங்  2.5 / 5 

Tuesday, May 28, 2024

நியதி (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

     

 ஒரு  படத்தின்  இயக்குநரே  அந்தப்படத்தின்  நாயகனாக  இருப்பதில்  பல  சவுகரியங்கள்  இருக்கின்றன.நாயகனுக்கு  இயக்குநர்  நடித்துக்காட்ட  வேண்டியதில்லை . இந்தப்படத்தின்  இயக்குநர்  நவீன்  சந்திரன்  லோ  பட்ஜெட்டில்  ஒரு  தரமான  க்ரைம்  த்ரில்லர்   படத்தைக்கொடுத்துள்ளார்          


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு  பிரைவேட்  டிடெக்டிவ்  ஏஜென்சியில்  துப்பறிவாளர்  ஆகப்பணி  புரிகிறார்.மிக  சாமார்த்தியமாக  கேஸ்களை  டீல்  செய்வதில்  இவர்  விற்பன்னர் 


ஒரு  நாள்  ஒரு  பெரியவர்  ஒரு  ஆணின்  ஃபோட்டோவைக்கொண்டு  வந்து  கொடுத்து  இந்தப்படத்தில்  இருக்கும் நபர்  பற்றிய  தகவல்  வேண்டும். இவர்  ஒரு  காலேஜ்  லைப்ரரியில்  ஒர்க்  பண்ணியவர் , இப்போது  ஆளைப்பிடிக்க  முடியவில்லை  என்கிறார். தன்  மகளுக்கு  பார்த்திருக்கும்  வரன்  இவர் ., இவர்  பற்றிய  தகவல்  வேண்டும்  என்கிறார்


 நாயகன்   அன்று  இரவு  காரில்  போய்க்கொண்டிருக்கும்போது  ஒரு  ஆள்  மீது  மோதி  விடுகிறார்.  ஆள்  ஸ்பாட்  அவுட் . டெட்  பாடியை  காரில்  போட்டு  டிஸ்போஸ்  பண்ண  ஒரு  இடத்துக்கு  எடுத்துச்செல்லும்போதுதான்   அந்தப்பெரியவர்  காட்டிய  லைப்ரரியன்  இவன்  தான்  என்பது  தெரிய  வருகிறது 


 அதே  போல்  அவன்  கார்  மோதி  இறக்கவில்லை , ஏற்கனவே  கத்திக்குத்து  பட்டு  இறக்கும்  தருவாயில்  இருந்தவன்  என்பது  தெரிய  வருகிறது 


  வில்லன்  ஒரு  காலேஜ்  லைப்ரரியில்  பணி  புரிபவன் .இவன்  பெண்  சபலிஸ்ட் .காலேஜ்  மாணவிகளை  பாத்ரூமில்  அந்தரங்க  வீடியோக்கள்  எடுத்து  அவர்களை  மிரட்டி  பணம்  பறிப்பவன் 


நாயகி  தோற்றத்தில்  பெண்  ஆக  இருந்தாலும்  உள்ளத்தில்  ஆணாக  தன்னை  நினைப்பவர் .வில்லன்  செய்த  ஒரு  கொடுமையைத்தடுத்துத்தட்டிக்கேட்டதால்  கடுப்பான  வில்லன்   நாயகியைப்பழி  வாங்கத்துடிக்கிறார்


  நாயகன் ஆன  துப்பறிவாளன்  ,  வில்லன்  ஆன  லைப்ரரியன் ,  நாயகி  ஆன  திருநம்பி ( திருநங்கைக்கு  எதிர் பதம் ) இவர்கள்  மூவர்  வாழ்க்கையிலும்  நடக்கும்  திருப்பங்கள்  தான்  மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக  நவீன்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். ஓப்பனிங்  காட்சியில்  இவர்  டீல்  செய்யும்  இரண்டு  கேஸ்களும்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லையென்றாலும்  சுவராஸ்யம் 


நாயகி  ஆக அஞ்சனா  பாபு  அற்புதமாக  நடித்திருக்கிறார்.இது  போன்ற  கேரக்டரில்  நடிக்கவே  ஒரு  துணிச்சல்  வேண்டும். இன்னும்  சில  காட்சிகள்  வர  மாட்டாரா? என  ஏங்க  வைக்கும்  அளவு  இவரது  அழகு , நடிப்பு  கவர்ந்திழுத்தது


நாயகனின்  அசிஸ்டெண்ட்  ஆக  கோபிகா  சுரேஷ்  கனகச்சிதம் .   கொடுக்கப்பட்ட  வேலையை  சரியாகச்செய்து  இருக்கிறார்


வில்லனாக  நடித்தவர்  பெயர்  தெரியவில்லை .ஓக்கே  ரகம் 


 நாயகியின்  அப்பாவாக  தேனி  முருகன்  சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்.  நாயகிக்கும் , இவருக்குமான  உணர்ச்சிகரமான  ஒரு  உரையாடலில்  இருவர்  நடிப்பும்  அதகளம் 


ஜாக்  வாரியர்  தான்  இசை .ஒரு  க்ரைம்  த்ரில்லர்  படத்துக்கு பின்னணி  இசை  எந்த  அளவு  முக்கியம்  என்பதை  உணர்ந்து  பிஜிஎம்  போட்டிருக்கிறார் 


பிரபு  கண்ணனின்  ஒளிப்பதிவு  கச்சிதம் . நாயகிகள்  இருவரையும்  க்ளோசப்பில் , லாங்க்  ஷாட்டில்  அழகாகக்காட்டி  இருக்கிறார்


அஜூ  வில்பரின் எடிட்டிங்  ஷார்ப்  ஆக  இரண்டு  மணி  நேரத்தில்  படத்தை  ட்ரிம்  செய்து  இருக்கிறது 



சபாஷ்  டைரக்டர்


1  ஓப்பனிங்  காட்சியில்  வரும்  கணவன் -  மனைவி  -  மனைவியின்  முன்னாள்  காதலனின்  மிரட்டல் கடிதம்  கேசை  நாயகன்  டீல்  செய்த  விதம்  அருமை 


2  பூட்டிய  வீட்டை  உடைத்துக்கொள்ளை  நடந்ததாக  சொல்லப்படும்  ஸ்பாட்டை  போலீஸ்  ஆஃபீசர்  பார்த்து  கண்டு  பிடிக்காத  ஒரு  விஷயத்தை  நாயகன்  கண்டு  பிடித்து  போலீஸ்  ஆஃபீசரிடமே  சொல்வது  பிரமாதம் 


3  நாயகன் , வில்லன் , நாயகி  இந்த  மூன்று  பேருக்கான  கேரக்டர்  டிசைன்  வடிவமைப்பு  கச்சிதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   பிரச்சனையை  சால்வ்  பண்றது  மட்டும்  ஒரு  டிடெக்டிவோட  வேலை  இல்லை , அதை  எக்சிக்யூட்  பண்ண  கத்துக்கனும் 


2  பொறுமை  தான்  ஒரு  மனிதனுக்கு  மிக  முக்கியமான  குணம், அதை நீ  உன்  அப்பா  கிட்டே  இருந்து  கத்துக்கோ 


3 நமக்கு  நடக்கும்  எல்லாப்பிரச்சனைகளுக்கும்  தீர்வு  நம்ம  கிட்டே  தான்  இருக்கும் , யோசிச்சா  நாமே  அதைக்கண்டு  பிடிச்சுடலாம் 


4 பயம்  தான்  எல்லாப்பிரச்சனைகளுக்கும்  காரணம் 

5    இப்ப   வர்ற  திருடனுங்க  எல்லாம்  சிசிடிவி  ல  சிக்க  மாட்டானுங்க . அவங்களுக்கும்  டெக்னாலஜி  தெரிஞ்சிருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   டெட் பாடியை  கார்  டிக்கியில்  போட்டு  காரில்  போகும் நாயகன்  அந்த  டிக்கி  டோரை  பிராப்பர்  ஆக  ஏன்  சாத்தவில்லை ? 


2   ஆள் அரவம்  இல்லாத  சாலை , சிசிடிவி  கேமரா  இல்லாத  ஏரியா . யாராவது  ஒரு  ஆள்  மீது  மோதினால்  ஆளை  அப்படியே  விட்டுட்டு  எஸ்  ஆகப்பார்ப்பாங்களா? பூனையை  மடியில் கட்டிக்கிட்டே  சகுனம்  பார்ப்பது  போல  அந்த  ஆளை  கார்  டிக்கியில்  எடுத்துப்போட்டுக்கொண்டு புதைக்கப்போவார்களா?ரிஸ்க்  அதிகம்  ஆச்சே? இதே  மாதிரி  காட்சி  படத்தில்  இரண்டு  இடங்களில்  வருகிறது 


3    டெட்  பாடியை  மறைவாகப்போட்டு  விட்டுக்கிளம்பாமல்  எதற்காக  மெனக்கெட்டு  அதை  புதைக்கனும் ?


4   கடப்பாறை  , மண்  வெட்டி  எதுவும் இல்லாமல்  ஒரு  மரக்குச்சியை  வைத்தே  ஆறு  அடி  நீளம் , 3  அடி  அகலம் , ஆறு  அடி ஆழம்  உள்ள குழியைத்தோண்ட  முடியுமா?


5   டெட்  பாடியை  தூக்கி  புதைக்கும்போது  முதுகில்  கத்திக்குத்தால்  வழியும்  ரத்தத்தைப்பார்க்கவில்லையே  நாயகன் , ஏன் ? 


6   நாயகியின்  அப்பா  வெளியே  போகும்போது  கதவை  தாழ்  போட்டுக்கோ  என்கிறார். நாயகி  தாழ்  போடுவதை  க்ளோசப்ல  காட்றாங்க . அப்பா  திரும்பி  வரும்போது  கதவு  தாழ்  இல்லாமல்  இருப்பது  எப்படி ? 


7  அப்பாவுக்குத்தெரியாமல்  வீட்டுக்குள்  தம் அடிக்கும்  நாயகி  புகை  வாசம்  காட்டிக்கொடுக்கும்  என்பதை உணராதவரா?


8 பொதுவாக  தம்  பார்ட்டிகள்  அந்த  தம்  நாற்றம்  வாயில்  அடிக்காமல்  இருக்க  ஏலக்காய் , ஹால்ஸ் , ஏதாவது  மென்று  மறைப்பார்கள் . நாயகி  அப்படி ஏதும்[  செய்யாமல்  அப்பாவிடம்  மாட்டிக்கொள்கிறார் 


9  நாயகியின் சகோதரன்  வில்லனைக்கொன்ற  போதே  அந்த  சிம்  கார்டு ,மெமரிக்கார்டை  ஏன்  கைப்பற்ற வில்லை ?



10 வில்லன்  காலேஜ்  லைப்ரரியில் எடுத்த  ஆபாசப்படத்தை  வைரல்  ஆக்குகிறான் .அதில்  லைப்ரரியும்  காட்டப்படுது . லைப்ரரியன்  ஆன  வில்லன்  மாட்டிக்க  மாட்டானா?லொக்கேஷனை  மறைக்க  மாட்டானா ? 

11  வில்லன்  ஆன  லைப்ரரியன்  ஒரு  அப்பாவிப்பெண்ணின்  கையைப்பிடித்து  தர  தர  என  இழுத்து  வந்து  இன்னைக்கு  லைப்ரரி  க்ளோஸ்  பண்றேன் , எல்லாரும்  கிளம்புங்க  என்றதும்  எல்லாரும்  பேசாமல்  கிளம்புறாங்க .யாரும்  எதுவும்  தட்டிக்கேட்க  மாட்டாங்களா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  ஒரு  தரமான  க்ரைம்  த்ரில்லர்  படம், அவசியம்  பார்க்க  வேண்டிய  படம் , ரேட்டிங்  3 / 5 

Monday, May 27, 2024

எலெக்சன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் டிராமா )

       


         2022 ஆம்  ஆண்டு  வெளியான  சேத்து  மான்  என்ற  தரமான  படத்தை  இயக்கிய இயக்குநர்  தமிழ்  +  உறியடி  பாகம் 1  , பாகம்2, ஃபைட்  கிளப்  ஆகிய  படங்களின்  நாயகன்  விஜய்  குமார்  இவர்களது  காம்போவில்  வந்திருக்கும்  ,மாறுபட்ட  பொலிடிக்கல்  டிராமா  இது. தமிழ்  சினிமாவில்  முழுக்க  முழுக்க அரசியல்  அங்கத  படமாக  வந்த  அமைதிப்படை  போல  உள்ளூர்  பஞ்சாயத்துத்தேர்தலை  மிக  விபரமாக காட்டிய  முதல்  படம்  என்ற  பெருமையையும்  இது  பெறுகிறது  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா   60  வருடங்களாக  ஒரு  கட்சியில்  அடிமட்டத்தொண்டராக  வேலை  பார்த்தவர் . எந்த  விதமான  பதவிக்கும்  ஆசைப்படாதவர் . கடைசி  வரை  கட்சிப்பணியை  மட்டுமே  கவனித்து  வந்தவர் .நாயகனின்  அப்பாவுக்கு  ஒரு  நண்பர்  உண்டு. அவரும்  அரசியல்  கட்சியிலே  தொண்டர்  தான். அவருக்கு  தேர்தலில்  சீட்  கிடைக்காததால்  சுயேச்சையாக  தேர்தலில்  நின்று  தோற்கிறார். நாயகனின்  அப்பா  நண்பருக்கு  ஆதரவு  தெரிவிக்காமல்  கட்சி  அறிவித்த  வேட்பாளருக்கு  ஆதரவாக  பிரச்சாரம்  செய்ததால்  நண்பர்கள்  இருவருக்குள்ளும் பகை


  நாயகன்  தன்  அப்பாவின்  நண்பரின்  மகளைக்காதலிக்கிறார். ஏற்கனவே  இந்த  அரசியல்  பகையாலும் , ஜாதிப்பிரச்சனையாலும்  காதலுக்கு  பெண்ணின்  அப்பா  ஒத்துக்கொள்ளவில்லை. தன்  மகளுக்கு  வெளிநாட்டு  மாப்பிள்ளையைப்பார்த்து  மணம்  முடிக்கிறார். ஆனால்  அவர்  மகள் அங்கே  போய்  தற்கொலை  செய்து  கொள்கிறாள் ., இந்த  விஷயம்  நாயகனுக்குத்தெரியாது .


நாயகனுக்கு  வேறு  ஒரு  பெண்ணுடன்  திருமணம்  நடக்கிறது. நாயகன் - நாயகி  இருவருக்கும் ஒரு  குழந்தையும்  பிறக்கிறது . நாயகனின்  முன்னாள்  காதலியின்  அப்பா   அரசியல்  தோல்வி , மகள்  இறப்பு  இதனால்  பாதிக்கப்பட்டு உடல் நலம்  குன்றி  பக்கவாதத்தால்  பாதிக்கப்பாட்டு  படுத்த  படுக்கை  ஆகிறார்


 நாயகனின்  முன்னாள்  காதலியின்  அண்ணன்  நாயகனைப்பழி  வாங்கத்திட்டம்  போடுகிறார். நாயகனை  தேர்தலில்  நிற்க  வைத்துத்தோற்கடித்து  அவமானப்படுத்துவதும் ,  கடனாளி  ஆக்குவதும்  தான்  வில்லனின்  திட்டம் 


நாயகனுக்கு    முன்னாள்  காதலி  இறந்ததும்  தெரியாது .  முன்னாள்  காதலியின்  அண்ணன்  தான்  வில்லன் , கூட  இருந்தே  குழி  பறிப்பவன்  என்பதும்  தெரியாது . அரசியல்  ஆர்வமே  இல்லாத  நாயகன்  எப்படி  அரசியலுக்கு  வருகிறார்? பின்  என்ன  நடந்தது  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  விஜய்  குமார் . கோபமான  காட்சிகளில்  ஸ்கோர்  செய்கிறார்.காதல்  காட்சிகளில்   சுமார்  நடிப்பு  தான் . சோகக்காட்சிகளில்  ஓக்கே  ரகம் 


நாயகி  ஆக  , மனைவி  ஆக  அயோத்தி  நாயகி  ப்ரீத்தி  அஸ்ராணி  குடும்பப்பாங்கான  முகத்துடன் , கண்ணியமான  உடைகளுடன்  அக்மார்க்  தமிழகப்பெண்ணாக  நடித்து  மனம்  கவர்கிறார்.இவர்  சும்மா  ஒரு  புன்னகை  புரிந்தாலே  அழகாக  இருக்கிறது 


நாயகனின்  முன்னாள்  காதலி  ஆக   ரிச்சா  ஜோஷி , அதிக  வாய்ப்பில்லை ., ஒரு  டூயட்டும், சில  காட்சிகளும்  தான் . வந்தவரை  ஓக்கே 


நாயகனின்  அப்பாவாக  ஜார்ஜ்  மரியம்  சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்.ஆனால்  இவருக்கான  போர்சன்  குறைவு , இன்னும்  அதிக  காட்சி களில் வர  விட்டிருக்கலா,ம் 


வில்லன்  ஆக  , கூட  இருந்தே  குழி  பறிப்பவர்  அக  வத்திக்குச்சி  ( 2013)  படத்தின்  நாயகன்  திலீபன்  அருமையான  நடிப்பு , நயவஞ்சக  வில்லத்தனத்தை  நன்கு  வெளிப்படுத்துகிறார்


நாயகனின்  அம்மாவாக  நாச்சியாள்  சுகந்தி  கச்சிதமான  நடிப்பு. இவர்  ஃபேஸ்புக்கில்  நண்பர்  பட்டியலில் இருக்கிறார். 


மகேந்திரன்  ஜெயராஜூ  தான்  ஒளிப்பதிவு .லோ  பட்ஜெட்  படம்  என்பது  தெரியாத  வண்ணம்  சாமார்த்தியமாக  படம்  பிடித்த  விதம்  குட் 


கோவிந்த  வ்சந்தாவின்  இசையில்  இரு  பாடல்கள்  அருமை .ஆனால்  பொலிடிக்கல்  த்ரில்லர்  என்பதால்  மெலோடி  சாங் எடுபடவில்லை 


சி எஸ்  பிரேம்  குமாரின்  எடிட்டிங்கில்  படம்  ஷார்ப்  ஆக  2  மணி  நேரம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  ஒவ்வொரு  ரவுண்டிலும்  லீடிங்  எப்படி  சொல்கிறார்கள்  என்பதை , செல்லாத  ஓட்டு  எப்படி  கணக்கிடப்படுகிறது  என்பதை  இவ்வளவு  டீட்டெய்லிங்காக  எந்த  ஒரு  தமிழ்ப்படத்திலும்  இதுவரை  காட்டப்படவில்லை  என்ற  அளவில்  இது  முக்கியத்துவம்  வாய்ந்த  படமாக  அமைகிறது 


2   பதவி பலத்துக்கு  ஆசைப்பட்டால்  கை  வசம் இருக்கும்  காசெல்லாம்  கரையும் என்ற  நீதி  மனதில்  அழுத்தமாகப்பதியும்  அளவு  அமைந்த  திரைக்கதை 


3   நாயகன் , நாயகி ,நாயகனின்  அம்மா, அப்பா , வில்லன்  என  பெரும்பாலான  நடிகர்  நடிகைகளின்  நடிப்பு  கன  கச்சிதம் 



  ரசித்த  வசனங்கள்  ( அழகிய  பெரியவன் + இயக்குநர்  தமிழ் +  நாயகன்  விஜய்குமார்) 

1  ஒரு  காரியத்தைக்கையில்  எடுக்கும்  முன்பே  இது  ஆகாதுனு  சொல்றவன்  உருப்பட  மாட்டான் 


2  குட்டையைக்குழப்பி  மீன்  பிடிக்க  நினைக்காதே , குட்டைல  மீன்  மட்டுமில்லை , முதலையும்  இருக்கும் 

3   ஓட்டு  தான் நம்ம  ஆயுதம்


4  அரசியலில்  தோற்பதும் ,  ஜெயிப்பதும்  சகஜம்  தான் , ஒரு  தடவை  தோத்ததுக்கே  ஒதுங்கிட்டா  எப்படி ? 


5 வாழ்க்கைல  எல்லாருக்கும்  செகண்ட்  சான்ஸ்  கிடைக்காது , உனக்கு  அது  கிடைச்சிருக்கு . மிஸ்  பண்ணிடாத 


6   உண்மையான  கட்சிக்காரனை  பணத்தால  எடை போடாதீங்க 


7  இல்லாதவன்  கடைசி  வரை  உழைப்பான் , இருப்பவன்  அதை  அறுவடை  செய்வான் 


8  நான்  செய்யலை , நான்  செஞ்சா  பிசிறு  இல்லாம  செய்வேன் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஓட்டுக்கு  பணம்  தர  நாயகன்  கந்து  வட்டிக்கு  பணம்  கடன்  வாங்குவது  எல்லாம்  ஓவர் .எம் எல்  ஏ  எலெக்சன்  என்றால்  கூட  சம்பாதித்து  விடலாம் , கவுன்சிலர்  ஆகி  அவ்ளோ  சம்பாதிக்க  முடியுமா? 


2  கவுன்சிலர்  தேர்தலுக்கு  இரண்டாம்  முறையாக  நிற்கும்  நாயகனுக்கு  வேட்பு  மனு  தாக்கல்  செய்யும்போது  வீட்டு  வரி  ரசீது  இருக்க  வேண்டும்  என்பது  தெரியாதா? இன்னொருவர்  சொல்லி  மீண்டும்  வீட்டுக்குப்போய்  எடுத்து  வருகிறார்

3   நாயகனின்  முன்னாள்  காதலி  தற்கொலை  விஷயத்தை  சஸ்பென்சாக  க்ளைமாக்சில்  சொல்லி  இருப்பதற்குப்பதிலாக  கதை  ஓட்டத்திலேயே  சொல்லி  இருக்கலாம்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  வன்முறை  அதிகம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தேர்தல் ஸ்பெஷல்  படம்  என்பதால்  ஆண்களை  மட்டுமே  கவரும். ரேட்டிங் 2.75 / 5


தேர்தல்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்தமிழ்
மூலம் திரைக்கதைதமிழ்
மூலம் கதைதமிழ்
மூலம் உரையாடல்கள்அழகிய பெரியவன்
விஜய் குமார்
தமிழ்
உற்பத்திஆதித்யா
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுமகேந்திரன் ஜெயராஜூ
திருத்தியவர்சிஎஸ் பிரேம் குமார்
இசைகோவிந்த் வசந்தா
தயாரிப்பு
நிறுவனம்
ரீல் நல்ல படங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுசக்தி திரைப்பட தொழிற்சாலை
வெளிவரும் தேதி
  • 17 மே 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Sunday, May 26, 2024

பாறை (2003)-தமிழ் -மாகாயானம் (1989)-மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

     

  மகாயானம்  படத்தில்  நாயகன்  ஆக  நடித்ததற்காக  மம்முட்டிக்கு  1989 ஆம்  ஆண்டின்   கேரள மாநில  அரசின்   சிறந்த  நடிகர்  விருது கிடைத்தது, கமர்ஷியல்  சக்சஸ் , மீடியாக்கள்  பாராட்டு  ஆகியவற்றை  ஒருங்கே  பெற்ற  இப்படத்தை  கே  எஸ்  ரவிக்குமார்  தமிழில்  ரீமேக்கினார். மம்முட்டி  ரோலில்  சரத்  குமார் , முகேஷ்  ரோலில்  ஜெயராம்  நடித்தார்கள் .  ஆனால்  எதிர்பார்த்த  வெற்றியை  ஏனோ  பெறவில்லை 


சரத் குமார்  கே  எஸ்  ரவிக்குமார்  காம்பினேஷன்  படங்கள் புரியாத  புதிர் (1990), சேரன்  பாண்டியன் (1991) ,ஊர்  மரியாதை (1992)  ,  பேண்டு  மாஸ்டர் (1993)  , நாட்டாமை (1994) ,நட்புக்காக  (1998)  பாட்டாளி (1999) , சமுத்திரம் (2001) , பாறை (2003) ,ஜக்குபாய் (2010)   என  மொத்தம்  10  படங்கள் , இவற்றில்  கடைசி  இரண்டு  படங்கள்  மட்டுமே  சுமாராகப்போன  படங்கள் , மற்றவை  வெற்றிப்படங்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  லாரி  டிரைவர் , கொஞ்சம்  முன்  கோபி. வாய்  பேசாது , கை  தான்  பேசும். எல்லோரிடமும்  கோபமாகவே  நடந்து  கொள்ளும்  இவர்  தன்  லாரி  கிளீனர்  ஆக  வேலை  செய்யும்  நபரிடம்  மட்டும்  பாசமாகப்பழகுகிறார். அவரும்  இவரை  அண்ணன்  என்றே  அழைத்து  அன்பாகப்பழகுகிறார்


 நாயகனுக்கு  சொந்த  பந்தம்  யாரும்  இல்லை ,  அவருக்கு  என  லட்சியம்  ஏதும்  இல்லை . ஆனால்  நாயகனின்  நண்பரும்  லாரி  க்ளீனரும்  ஆன  நபருக்கு  ஒரு  மனைவி , அம்மா, குழந்தை  உண்டு . எப்போதும்   தான்  ஒரு  சொந்த  வீடு  கட்ட  வேண்டும்  , லைஃபில்  செட்டில்  ஆக  வேண்டும்  என்ற  நினைப்போடும், சேமிப்பில்  முனைப்போடும்  இருப்பவர் 


ஒரு  நாள்  நாயகனின்  நண்பர்  விபத்தில்  இறக்கிறார்.  நாயகன்  அவரது  பிணத்தை  அவர்கள்  வீட்டில்  ஒப்படைக்க  செல்பவர்  அந்த  ஊரிலேயே  தங்குகிறார். நண்பரின்  குடும்பத்துக்கு  உதவி  செய்கிறார். நண்பரின்  லட்சியம்  ஆன  சொந்த  வீடு  கட்டுவதை  இவரே  கையில்  எடுத்து  வீடு  கட்டித்தரும்  முனைப்பில்  இருக்கிறார்


 ஊர்  மக்கள் , வில்லன்  என  எல்லோரும்  நாயகனை   நாயகனின்  நண்பனின்  மனைவியுடன்  இணைத்துத்தப்பாகப்பேசுகிறார்கள் . ஆனால்  கடைசி  வரை  நாயகன்  அண்ணன்  முறையில்  தான்  பழகுகிறார். இறுதியில் வில்லனின்  எண்ணம்  நிறைவேறியதா? நாயகன்  வீடு  கட்டி  முடித்தானா? என்பது  க்ளைமாக்ஸ் 


 நாயகன்  ஆக சரத்  குமார் , கச்சிதமான  நடிப்பு. இறுக்கமான  முகம், எப்போதும்  வாயில்  பீடியுடன்  சுற்றும்  கேரக்டர். அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார்


 நண்பர்  ஆக  ஜெயராம், காமெடியாக  வந்து  போகிறார். அதிக  காட்சிகள்  இல்லை .இவருக்கு  ஜோடி  ஆக  மீனா  கச்சிதம், மீனாவின்  மாமியார்  ஆக  வடிவுக்கரசி  பொருத்தமான  நடிப்பு  


  நாயகி  ஆக  ரம்யா  கிருஷ்ணண். அதிக  காட்சிகள் இல்லை 


 வில்லன்  ஆக  உதிரிப்பூக்கள்  விஜயன், எடுபுடி  ஆக  மன்சூர்  அலிகான்  வந்து  போகிறார்கள்  , அதிகம்  வாய்ப்பு   இல்லை 


லாரி  ஓனர்  ஆக    வரும்  வினுச்சக்கரவர்த்தி  நடிப்பும், அவரது  கேரக்டர்  டிசைனும்  குட் 

ரமேஷ்  கண்ணா , சிட்டி  பாபு  இருவரும்  காமெடிக்கு , ஆனால்  சிரிப்பு   வரவில்லை 


சபாஷ்  டைரக்டர்


1  திருமணம்  ஆன  பின் சாதித்த  நடிகர்கள்  பட்டியலை  வெளியிட்டு  ஜெயராம்  பேசும்போது  சரத்குமார்   திருமணம் ஆகாமல்  சாதித்த    வாஜ்பாய் , அப்துல்கலாம்  லிஸ்ட்  சொல்லி  விளக்கும்  காட்சி 


ஏரோப்ளான்  பறக்குது  பார்  மேலே   பாட்டுக்கு  ஆடும்  அசோக்  ராஜா  குட் 


சபேஷ்  முரளியின்   இசையில்  ஆறு  பாடல்கள்  . அவற்றில்  இரண்டு  செம  ஹிட்  


செம  ஹிட்  சாங்க்ஸ்


  1  ஏரோப்ளான்  பறக்குது  பார்  மேலே 


2  நான் ஒரு  கனாக்கண்டேன்


3 கண்ணுக்குள்  டிக் டிக் 


4 நண்பனே  நண்பனே


5  வினாயகா வினாயகா  


6  என்  தாய் 


  ரசித்த  வசனங்கள் 


1  நாமெல்லாம்  ஏழைகள் , நம்ம  கிட்டே  கொஞ்சமாப்பணம்  இருந்தாலும்  அதை  அடிக்கடி  எண்ணிப்பார்ப்பது  ஒரு  சுகம்  ( கவுண்ட்டிங்) 


2 வாயாடிப்பொண்ணுக்கே  வாய்ல  ரத்தம்  வர்ற  அளவு  முத்தம்  கொடுத்திருக்கான்


3  உன்  பேரு  பாவாடை , ஆனா  நீ  எப்பவும்  வேட்டி தான்  கட்றே, எப்பவாவது  பாவாடை  கட்டி  இருக்கியா? 


4  சைக்கிள்  கேப்ல  கிடா  வெட்டுவாங்கனு  கேள்விப்பட்டிருக்கேன், இங்கே  சைக்கிளையே  அடிச்சுட்டாங்களே  சின்ன  கேப்ல


5    யாரோ  கம்மலைத்திருடிட்டாங்க ‘


  அய்யய்யோ  நான்  சுடலை 


 நீ  சுடலை  என்பது  தெரியும், ( பேரு  சுடலை )  கம்மலை  சுட்டியா? இல்லையா? அதை  சொல்லு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஜெயராம், சரத்  குமார்  உயிரைக்காப்பாற்றுகிறார்  இதுதான்  சீன். இதைப்படமாக்கிய  விதம்  மிக  மோசம்,    ரோட்டிலேயே  சரத் குமார்  படுத்துத்தூங்குகிறார். லாரி  வருது . ஜெயராம்  வந்து  காப்பாத்தறார். நம்பற  மாதிரியே  இல்லை 


2  ஜெயராம்  விபத்தில்  இறங்கும்  காட்சியும்  மனதைத்தொடும்  அளவில்  படம் பிடிக்காமல்  ஏனோ தானோ  என  அசால்ட்  ஆகப்படம்  பிடிக்கப்பட்டிருந்தது


3  வில்லன்  விஜயன்  கேரக்டர்  டிசைன்  மகா  பலவீனம்.  வில்லனிடம்  வேலை செய்யும்  ஐடியாக்களை  எல்லாம்  கேட்கிறார். பத்துப்பைசாவுக்குப்பிரயோஜனம்  இல்லாத  ஐடியாக்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சுமாரான  படம்  தான், சரத்  குமார்  நடிப்புக்காகவும், ஏரோப்ளான்  பாட்டுக்காகவும்  பார்க்கலாம். ரேட்டிங் 2.25 / 5


Paarai
DVD cover
Directed byK. S. Ravikumar
Story byA. K. Lohithadas
Based onMahayanam (Malayalam)
Produced byS.S.Durairaj
StarringSarath Kumar
Meena
Jayaram
Ramya Krishnan
CinematographyS. Sriram
Edited byK. Thanikachalam
Music bySabesh–Murali
Production
company
Mass Movie Makers
Release date
  • 13 June 2003
Running time
170 minutes
CountryIndia
LanguageTamil