Monday, January 18, 2016

MALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்)

மால்குடி நைட்ஸ் -னு டைட்டில் வெச்சிருந்தா மாளாத கூட்டம் வந்திருக்கும், தியேட்டருக்கு, புரொடியூசருக்கு மார்க்கெட்டிங்க் நாலெட்ஜ் பத்தலை போல , மால்குடி டேஸ்-னு வெச்ட்டாரு. 2016ஆம் ஆண்டில்  வெளியான முதல் படம் .8.1.2016ல் ரிலீஸ் ஆன இந்தப்படத்தைப்பத்தி பார்ப்போம்


ஒரே ஒரு ஊர்ல ஹீரோ ஒரே ஒரு சம்சாரம் , ஒரே ஒரு குழந்தையோட  நிம்மதியா வாழ்ந்துட்டு வர்றாரு.அப்போ அவங்க வீட்டுக்கு அர்த்த ஜாமத்துல  4 பேரு  வர்றாங்க,அதுல ஒரு ஆளுக்கு கால் ல அடி பட்டிருக்கு. உதவி கேட்கறாங்க. சரின்னு உள்ளே விட்டா அந்தாள் கால்ல பாய்ஞ்சு கிடந்தது புல்ல்ட். அவங்க மாவோயிஸ்ட் எனப்படும் தீவிரவாதிகள்


போலீசோ மிலிட்ரியோ வர்றாங்க ( யூனிஃபார்மைப்பார்த்தா காக்கியாவும் இல்ல மில்ட்ரி கலராவும் இல்ல)போலீசுக்கும் தீவிரவாதிக்கும் நடந்த தாக்குதல்ல  ஹீரோவோட சம்சாரம் மேல புல்லட் பட்டுடுது.ஆள் அவுட். ஹீரோ செம கடுப்பாகி அந்த மிலிட்ரி ஆஃபீசரை ஆன் த ஸ்பாட் சூட் பண்ணிடறாரு.


பைக்ல போகும்போது டிராஃபிக் போலீஸ் வழி மறிச்சு மாமூல் கேட்கும்போது 100 ரூபா தர்லைன்னாலே ஜென்மப்பகைவனாட்டம் நம்மைப்பார்க்கும் போலீஸ் தன் டிபார்ட்மெண்ட் ஆளையே சுட்டுக்கொன்ன ஹீரோவை விடுவாங்களா?கேப்டனைத்துரத்தும் அரசியல் கட்சிகள் மாதிரி தீவிரமாத்துரத்தறாங்க. ஹீரோ ஒரு ஸ்கூல் கிரவுண்ட் பின்னால ஒளிஞ்சுக்கிட்டு இருக்காரு. 

 இது  ஒரு டிராக் கதை 




இன்னொரு டிராக்கில்  இன்னொரு கதை.



கடல் கரைல நின்னு செல்ஃபி எடுக்கும்போது அலை வந்து அப்பாவை அடிச்ட்டுப்போய்டுது.அம்மாவும் குழந்தையும் அநாதை ஆகிடறாங்க.பெண் குழந்தை வேற . அது மனோரீதியா பாதிக்கப்படுது.சூழல் மாற்றம் வேணும்னு ஒரு ஆசிரமம் மாதிரி ஸ்கூல்ல சேர்த்து விடறாங்க

அந்த  ஸ்கூல் ல டூர் போறாங்க. போகும்போது ஒரு பையனும் ,  ஒரு பொண்ணு ( அப்பாவை இழந்த பொண்ணு)மட்டும் ஸ்கூல்க்குள்ளே மாட்டிக்கறாங்க.அவங்க 2 பேரையும்  நம்ம ஹீரோ தான் காப்பாத்தறாரு.

 ஆனா போலீஸ் அவரை என்கவுண்ட்டர்ல போட்டுத்தள்ள ஆர்டர் போட்டுடுது.


ஹீரோ  அவங்க கிட்டே மாட்னாரா? தப்பிச்சாரா? என்பது க்ளைமாக்ஸ்

இந்தக்கதையின் மூலமா டைரக்டர் உருப்படியா 2 விஷயம் தான் சொல்லி  இருக்கார்.

 1 ஸ்கூல்  டூர் போகும்போது பஸ்ல அட்டெண்டென்ஸ் நல்லா செக் பண்ணனும். ஸ்கூலைப்பூட்டிட்டுப்போகும்போது உள்ளே தரவா செக் பண்ணனும்.

2  யாருக்கு உதவுவதா இருந்தாலும் அவங்க கிட்டே ஆதார் கார்டு , ஐ டி கார்டு  ரேஷன் கார்டு இதெல்லாம் செக் பண்ணிட்டு தான் உதவனும் . நாமா தெரியாத்தனமா உதவி மாட்டிக்கக்கூடாது

 மேலே சொன்ன இந்த  2 மெசேஜை ஃபேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டசாவோ  ட்வீட்லாங்கர்ல  ஒரு ட்வீட்டாவோ போட்டிருந்தா மேட்டர்  ஓவர்


 எதுக்கு தேவை இல்லாம ஒரு  சினிமா எடுத்தாரோ?



 படம்  சின்னப்படம் தான்  108  நிமிசம் தான் . ஆனா ஒரே சமயத்தில் 2 புலி படம் பார்த்த மாதிரி  ஒரு எஃபக்ட்

ஹீரோவா  அனூப் மேனன்  செமயான நடிப்பு . ஆனா கேரக்டர் கரெக்டா  செட் ஆகலை. ஆனா அது அவர் தப்பு இல்லை அவருக்கு கொடுத்த வேலையை அவர் சரியாச்செஞ்சுட்டார் . இயக்குநர் தான் சில கேள்விகளுக்கு பதில்  சொல்லனும் 


ஹீரோயின்  பாமா. அதிக வாய்ப்பில்லை

 முழுக்கதையும் அந்த  ஸ்கூல்ல மாட்ன  குழந்தைங்களையே  ஃபோகஸ் பண்ணி இருப்பதால்  படம் செம போர் அடிக்க ஆரம்பிச்சுடுது


ஒளிப்பதிவு  இசை  சுமார்  ரகம்




இயக்குநரிடம்  சில  கேள்விகள்


1   ஒரு பொது ஜன வீட்டில்  தீவிரவாதி புகுந்துட்டாங்க என சந்தேகிக்கும்  போலீஸ் / மிலிட்ரி  முதல்ல அவங்க குடும்பத்தை காப்பாத்த நினைக்கமாட்டாங்களா? அதுக்கான எந்த முகாந்திரமும் காட்டலையே?


2  அந்த 4 பேர் மூஞ்சியைப்பார்த்தாலே கேடிக மாதிரிதான் இருக்கு, ஹீரோவுக்கோ அவர் சம்சாரத்துக்கோ ஏன் டவுட் வர்ல?


3 ஹீரோ ஸ்கூல் கிரவுண்டுக்குப்பின்னால மறைஞ்சு வாழறார் சரி அவர் கைல டப் லேது சாப்ப்பாட்டுக்கு என்ன பண்றார்? குளியல், டிரஸ் சேஞ்சிங் எதுவுமே இல்லாம எப்டி இருக்கார் பல நாட்க்ளா?



4 ஸ்கூல் வாட்ச்மேன் ஃபோனை எடுக்கலைன்னா பிரின்சிபால் அப்டியே விட்டுடுவாரா? ஸ்கூல் அக்கம் பக்கம் தெரிஞ்சவங்களுக்கு ஃபோன் போட்டு  வாட்ச்மேன் எங்கே தேட மாட்டாரா?


5   எட்டு வயசே ஆனா அந்த  2 குழந்தைங்க சாப்பாடோ  குடி நீரோ இல்லாம 3 நைட் 3 பகல் உயிரோட இருக்காங்க. அதுவரை  ஸ்கூலில் வேற யாரும் வர்லையா? ஏன்னா டூர் போனது 2 பஸ் மட்டும் . சராசரியா ஒரு பஸ் ல 60 பேர்னா 2 பஸ் ல 120 பேர் . அந்த ஸ்கூல் ல மினிமம் 2000 பேர் படிப்பாங்க. மீதி மாணவர்கள் எல்லாம் எங்கே? அவங்க ஏன் அடுத்த நாள்  ஸ்கூல் வர்ல? 


6  பிரின்சிபால்  வாட்ச்மேனுக்கு ஃபோன் போட்டு எடுக்கலைன்னதும் ஏன் மெசேஜ் அனுப்பலை? ஸ்கூலில் 2 குழந்தைங்க இருக்கா?ன்னு செக் பண்ணி சொல்னா வேலை  முடிஞ்சதே?



டிவிடி ல பார்க்கக்கூட  தகுதி இல்லாத படம் 

 ரேட்டிங் = 2 / 5

திருவனந்த புரம் ஏரிஸ் காம்ப்ளெக்ஸ் ல ஆடி 3 ல பார்த்தேன்

0 comments: