தம்பதிகள் குழந்தையோட ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் போற வ்ழில ஹீரோ ஒரு தீவிரவாதியைப்பார்க்கறாரு. சம்சாரத்தை பர்ச்சேஸ் பண்ண விட்டுட்டு இவரு அந்த தீவிரவாதியை ஃபாலோ பண்ணிட்டுப்போறாரு.பின் சிட்ல குழந்தை இருக்கு.ஹீரோக்கும் தீவிரவாதி க்ரூப்க்கும் ஃபைட்.தீவிரவாதிகள் தாக்குதல்ல குழந்தை இறந்துடுது.
எந்த அப்பாவாவது தன் குழந்தை இறக்கட்டும்னு விரும்புவானா? இந்த தத்தி பொண்டாட்டிங்களுக்கு புருசனை புரட்டிப்போட்டு அடிக்கத்தெரிந்த அளவுக்கு புருசனைப்புரிஞ்சுக்கத்தெரியாது. தன் குழந்தை சாவுக்கு தன் புருசன் தான் காரணம், அவனோட அஜாக்கிரதைன்னாலதான் செத்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு கோவிச்ட்டு தனியாப்போய்டுது.
ஹீரோ தனி ஆகிடறார். அப்போ அவருக்கு ஒரு செஸ் மாஸ்டர் நட்பு கிடைக்குது. இருவரும் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவராஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துக்கறாங்க செஸ் மாஸ்டர் உடனான சந்திப்புக்குப்பின் தன் வாழ்க்கை புது திசையில் போவதா ஹீரோ உணர்றார். புதுசா ஜிம்முக்குப்போனவன் மனசும், மெடிட்டேசன் கிளாஸ் போனவன் மனசும் முதல் 10 நாள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருக்குமே அப்டி ஹீரோ உணர்றார்.
அப்போ செஸ் மாஸ்டர் ஒரு குண்டைத்தூக்கிப்போடறார். ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரை போட்டுத்தள்ளனும், அதுக்கு நான் ஐடியா கொடுக்கேன் , நீ செஞ்சுமுடிங்கறார்
சாணக்கியத்தனமா ஒரு திட்டமும் போட்டுத்தர்றார். ஹீரோ அந்தக்கொலையை செஞ்சாரா? செஸ் மாஸ்டரோட ஃபிளாஸ்பேக் என்ன? கோவிச்ட்டுப்போன சம்சாரம் மறுபடி வந்து சேர்ந்துச்சா? இதெல்லாம் வெண் திரையில் காண்க

அமிதாப் பச்சன் செஸ் மாஸ்டரா அசத்தி இருக்கார் . அவர் வீல் சேரிலேயே படம் முழுக்க வரும் மாற்றுத்திறனாளியா இருந்தாலும் பிரமாதப்படுத்தி இருக்கார்.பாடி லேங்குவேஜ் , வசன உச்சரிப்பு என அவர் பங்களிப்பு பக்கா
பர்கான் அக்தர் தான் ஹீரோ , ஆஜானுபாவகமான தோற்றம், நம்ம ஊர் விஷால் போல். ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்குது. அந்த செஸ் மாஸ்டர் ட்விஸ்ட் சீனில் ஹீரோ நடிப்பு அற்புதம்
அதிதி ராவ் தான் ஹீரோயின். இவரை இன்னும் நல்லா முழுசா பயன்படுத்தி இருக்கலாம். ஆனா இது ஆக்சன் ஸ்டோரி . அதனால ஹீரோயினை ஊறுகாய் மாதிரி தான் யூஸ் பண்ண முடியும்.
வில்லன் நடிப்பில் கொடூரம் இன்னும் காட்டி இருக்கலாம்.

மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 ஜெயிக்கறதுக்காக இங்கே வரும் பலரும் நமக்கு ஜெயிக்க கத்துத்தர்றாங்க.செஸ் மூவ் மாதிரி ஒவ்வொருவர்ட்டயும் ஒரு ஐடியா #Wazir
2 பண்டிதர்கள் மேலும் படித்து மகா பண்டிதர்கள் ஆகிறார்கள்.திறமைசாலி மேன்மேலும் தன் திறமையை வாய்ப்புக்கிடைக்கும்போதுகூர் தீட்டிக்கொள்கிறான்#wazir
3 வெற்றியும் , தோல்வியும் வெவ்வேறு விதமான படிப்பினையைக்கற்றுத்தரும்.செஸ் விளையாட்டிலும் வாழ்க்கையிலும் #Wazir
4 சவாலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு வாழ்வு ஒரு செஸ் ஆட்டம் போல். ஒவ்வொரு மூவ்-ம் முக்கியம்.ஒரு சின்ன தப்ப்பும் சிக்கலில் மாட்டி வைக்கும் #Wazir

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 அமிதாப் பச்சன் அருணாச்சலம் ரஜினி ( அப்பா கேரக்டர்) ஸ்டைலில் வீடியோவில் தோன்றி சொல்லும் ட்விஸ்ட் சீன் எதிர்பாராதது.
2 ஆக்சன் ,கார் சேசிங் சீன் கள் எல்லாம் பக்கா.
1 அமிதாப் பச்சன் அருணாச்சலம் ரஜினி ( அப்பா கேரக்டர்) ஸ்டைலில் வீடியோவில் தோன்றி சொல்லும் ட்விஸ்ட் சீன் எதிர்பாராதது.
2 ஆக்சன் ,கார் சேசிங் சீன் கள் எல்லாம் பக்கா.

இயக்குநரிடம் சில கேள்விகள்
1 பின் சீட்டில் குழந்தையை வெச்சுக்கிட்டு ஒரு பொறுப்பான அப்பா ஒரு தீவிரவாதியை துரத்துவாரா? சாதாரணமா நடுத்தரக்குடும்ப அப்பா 80 கிமீ வேகத்துல பைக்ல போறவரா இருந்தாலும் பின் சீட்டில் குழந்தை இருந்தா 40 தான் போவார் அப்படி இருக்கும்போது ஹீரோ பின் சீட்ல பேபியை வெச்சுக்கிட்டு காரை கண்ணை மூடிக்கிட்டு வேகமா ஓட்டுவதும் , தீவிரவாதியை தாக்குவதும் நம்ப முடியலை.குழந்தையை அம்மா கிட்டே அனுப்பிட்டு அப்புறமா ஃபாலோ பண்ணி இருக்கலாமே?
2 பின் பாதி திரைக்கதை சீன் பை சீன் யூகிக்க முடிவது திரைக்கதையின் மைனஸ்
3 அமிதாப் பச்சனும் ஹீரோ போலவே ஃபேமிலியை இழந்தவர் என்பதான கதை பெரிய சுவராஸ்யம் தர்லை

சி பி கமெண்ட்
WAZIR - அமிதாப் பச்சனின் ஆக்சன் + திரைக்கதையில் ஒரு ட்விஸ்ட்,மற்றபடி மாமூல் மசாலா- ரேட்டிங் = 2.5 / 5
திருவனந்தபுரம் ஏரீஸ்பிளக்ஸ் காம்ப்ளெக்ஸில் படம் பார்த்தேன்
Wazir | |
---|---|
![]()
Theatrical release poster
| |
Directed by | Bejoy Nambiar |
Produced by | Vidhu Vinod Chopra |
Written by |
|
Screenplay by | Abhijat Joshi Vidhu Vinod Chopra |
Starring | |
Music by |
|
Cinematography | Sanu Varghese |
Edited by |
|
Production
companies | |
Distributed by | Reliance Entertainment |
Release dates
|
|
Running time
| 104 minutes[1] |
Country | India |
Language | Hindi |
Budget | ₹35 crore(US$5.2 million)[2] |
Box office | ₹44 crore(US$6.5 million)[3] (first week) |

0 comments:
Post a Comment