Wednesday, September 29, 2010

எந்திரன் தியேட்டர்களில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள்

1.தினகரன் பத்திரிக்கை இன்னைக்கு மட்டும் செம சேல்ஸாமே?ஏன்?

எந்திரன் பட ரிசல்ட் ஸ்பெஷல் எடிசனாம்.

2.அவரு உலக மகா அப்பாவினு எப்படி சொல்றே?

எந்திரன் ஓடற தியேட்டர்ல டிக்கட் கவுண்ட்டர் திறப்பாங்கன்னு நம்பிக்கையா க்யூவுல நிக்கறாரே?

3.சன் டி.வி.ல வர வர ஓவரா பீலா விட ஆரம்பிச்சுட்டாங்க.


ஏன்?


எந்திரன் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு ஷேர் மார்க்கெட் பிளஸ்ல போகுது,அப்படினு சன் நியூஸ்ல சொல்றாங்களே?


4.ஐஸ் யாருக்கு ஜோடி?சயிண்ட்டிஸ்ட் ரஜினிக்கா?ரோபோவுக்கா?


ரெண்டு பேருக்கும் கிடையாது,அபிஷேக்கோட ஜோடி.

5.அக்ட்டோபர் 1 முதல் 10 தேதி வரை எஸ் எம் எஸ் ல க்ரூப் மெஸேஜ் அனுப்பக்கூடாதுனு சன் டி வி ல சொல்றாங்களே,ஏன்?

எந்திரன் ரிசல்ட்டோ,கதையோ வெளில பரவிடக்கூடாதாம்.
6.தியேட்டர் ஓனர் பால்கனில படம் பாக்காம பென்ச்ல உக்காந்து பாக்கறாரே,ஏன்?

ரசிகர்கள் அப்பப்ப அள்ளி வீசற காசு,பணம் எல்லாம் கலெக்ட் பண்ணி கல்லாவுல கணக்கு காட்டனும்னு சன் பிக்சர்ஸ் ஆர்டராம்.


7.தியேட்டர் ஆப்பரேட்டர் ஏன் கோபமா இருக்கார்?


அவரைக்கூட ரூ 300 வாங்கிட்டுதான் உள்ளே விட்டாங்களாம்.


8.தியேட்டருக்கு செக்யூரிட்டிக்கு வந்த போலீஸால என்ன பிரச்சனை?


வெளில எந்தக்கலவரமும் இல்ல,உள்ள ஒரு ரவுண்ட் பார்க்கறோம்னு நைசா உள்ளே போய்ட்டாங்களாம்.


9.படம் ஓகே,ஆனா வசனம் புரியலை.


யோவ்,நீ பார்த்தது ரோபோட்,ஹிந்திப்பதிப்பு,காம்ப்ளெக்ஸ் மாறி வந்துட்டே.
10.ஆசிரியர் - அக்டோபர் 2 ந்தேதி ஏன் லீவ் விடறாங்க?


மாணவன் - சார்,எந்திரன் படத்துக்கு டிக்கட் வாங்குன களைப்பு போகவா இருக்குமோ?


ஆசிரியர் - அடப்பாவி,காந்தி ஜெயந்தின்னா என்னனு தெரியல.


11.பங்கு மார்க்கெட்,சினிமா மார்க்கெட் என்ன வித்யாசம்?

இப்போ பங்கு மார்க்கெட்ல காளையின் ஆதிக்கம் அதிகம்,சினிமா மார்க்கெட்ல முரட்டுக்காளையின் ஆதிக்கம் அதிகம்.


12.உங்க வகுப்புலயே இவன்தான் ரொம்ப பின் தங்கிய மாணவன்னு எப்படி சொல்றே?


எல்லாரும் எந்திரன் படத்தை விடிகாலை 4 மணி ஷோவே பாத்துட்டாங்க,இவன் மட்டும் மேட்னி ஷோதான் பார்த்தான்.


13.தியேட்டர் ஓனர் எப்படி போண்டி ஆனார்?


படம் திருப்தி இல்லை எனில் பணம் வாபஸ் அப்படின்னு விளம்பரம் பண்ணி மாட்டிக்கிட்டாராம்.


14.டிக்கெட்ல தியேட்டர் பேருக்குப்பதிலா பரிமளா இல்லம்னு போட்டிருக்கே?


வீடுதான்,ஹோம் தியேட்டர் வெச்சிருக்காங்களாம்.


15.எந்திரன் ஆடியன்ஸ் கிட்ட டூரிஸம் டிப்பார்ட்மெண்ட்(சுற்றுலாத்துறை) டாக்ஸ் கேக்குதே,ஏன்?


உலகின் அனைத்து டூரிஸ்ட் ஸ்பாட்லயும் ஷூட்டிங்க் எடுத்திருக்கறதா ஷங்கர் பேட்டில சொன்னாராம்.


16.என்ன சார்,ரூ 300 குடுத்து படம் பார்க்க வந்திருக்கேன்,பெஞ்ச் ல உக்காந்து பாக்கச்சொல்றீங்க?நான் வெளில போய் கலெக்டர்கிட்ட மனு குடுப்பேன்.


உனக்கெதுக்கு கஷ்டம்,அதோ உனக்கு முன்னால கலெக்டரே மண்ணைக்கூட்டி உக்காந்து படம் பாக்கறாரு பாரு,அங்கேயே போய் குடு.
எந்திரன் பற்றி ஷங்கரின் பேட்டியும்,நையாண்டி நாரதரின் நச் கேள்விகளும்

எந்திரன் திரைப்படம் தயாரானது எப்படி என்பதை பெரிய புத்தகமாக எழுதலாம். ரசிகர்களுக்கு மாத்திரமல்ல, திரைப்படத் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் பல பாடங்கள் அதிலே படிக்கக் கிடைக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வித்தியாசமானது. எல்லா அனுபவங்களுக்கும் பொதுவான தன்மை ஒன்றுதான்: சுவாரசியம்.இன்று ‘காதல் அணுக்கள்’ பாடலை படமாக்கியது குறித்த தனது உணர்வுகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஷங்கர்...

‘காதல் அணுக்கள்‘ ரொம்ப மென்மையான பாடல். கனவுப் பாடல். அதனால ஐரோப்பால ஜெர்மனி மாதிரி குளுமையான ஒரு நாட்டுல அந்த பாடலை படமாக்கலாம்னு திட்டம் போட்டிருந்தேன். ஆனா, லொகேஷன் பார்க்க போனா எல்லா இடமும் ஏதோ ஒரு டீவில வர்ற பாடல்ல பார்த்த மாதிரியே இருந்துது. அதே மாதிரி, லொகேஷன் மானேஜரும் ஒவ்வொரு இடத்துக்கு போனதும், ‘போன வாரம்தான் இந்த இடத்துல ஒரு தெலுங்கு ஷூட்டிங் நடந்துச்சு.. இந்தி பாட்டு எடுத்தாங்க..’ அப்படீம்பார்.

யாரும் ஷூட் பண்ணாத இடமா இருக்கணும்னு நான் உறுதியா இருந்தேன்.. அப்பதான் பிரேசில் நாட்ல, ‘கிளிமஞ்சாரோ‘ பாடலுக்கு இடம் தேடினப்ப பாத்து வச்ச லாங்காய்னு ஒரு இடம் ஞாபகம் வந்துது. பெரிய பாலைவனத்துல நடுவுல துண்டு துண்டா நிறைய ஏரிகள் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் லாங்காய். அந்த மாதிரி இடம் உலகத்துல வேற எங்கயுமே கிடையாது. ஆனா, கஷ்டப்பட்டு அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, ‘கிளிமஞ்சாரோ‘ பாடல்ல ஒரு பகுதியதான் அங்க எடுக்க முடியும். முழு பாடலும் எடுக்க முடியாது. அதனால் கிளம்பி வந்துட்டோம். ‘காதல் அணுக்கள்‘ அங்க எடுத்தா என்னானு தோணுச்சு. நிறைய ஸ்டில்ஸ் எடுத்துருந்தோம். அதையெல்லாம் பாத்ததும் ‘மென்மையான பாட்டுக்கு இந்த இடம் பிரமாதமான விஷுவலா இருக்கும்’னு (ஒளிப்பதிவாளர்) ரத்னவேலு அடிச்சு சொன்னார்.


உடனே புறப்பட்டோம். லாங்காய் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். ரொம்ப கட்டுப்பாடுகள். சின்ன பேப்பர்கூட கீழே போடக்கூடாது. ஓட்டல்ல இருந்து கார்ல ஒரு பயணம், அப்புறம் படகுல ஒன்றரை மணி நேரம், திரும்ப ரெண்டு மணி நேரம் கார்ல, அதுக்கு பிறகு பாலைவனத்துல போறதுக்கு ஸ்பெஷலா பண்ணின ஜீப்ல பயங்கரமான பயணம். கடைசி அஞ்சு நிமிஷம் தண்ணிக்குள்ள ஜீப் போகும். அதுக்கப்புறம் இறங்கி நடக்கணும். ஏன்னா, அது காடு. ஜீப் போகக்கூடாது. எல்லாத்தையும் தூக்கிட்டு போய் ஷூட் பண்ணுவோம். மத்தியானம் பசிக்கும். அங்க எதுவும் சாப்பிட கூடாது. திரும்ப ஒரு மணிநேரம் டிராவல் பண்ணி சாப்பிட்டுட்டு ஓடி வரணும். சிரமப்படறதுக்குன்னே போய் எடுத்த மாதிரி கஷ்டப்பட்டு எடுத்தோம். ‘சும்மா சொல்லக்கூடாது, ஷங்கர்.. கூட்டிட்டு வந்தீங்களே இடம்.. இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை..‘ன்னு ரஜினி சார் சொல்லிட்டே இருப்பார். அந்த பாலைவனத்துல எப்பவும் காத்தடிச்சுட்டே இருக்கும். எல்லார் மேலயும் மணல் விழும். முகத்துல துணி கட்டிகிட்டு கொள்ளை கோஷ்டி மாதிரி வேலை பாத்தோம். பிரமாண்டமான ஏரியா. கண்ணுக்குள்ள அடங்காது. அதனால ஹெலிகாப்டர்ல பறந்து படம் பிடிச்சோம்.

ரஜினி சார்கிட்ட எல்லாருக்கும் பிடிச்ச ஒரு லுக் இருக்கு. அதோட ஒரிஜினலை ரீ கிரியேட் பண்ணணும்னு சொல்லி பழைய ஸ்டில்ஸ் எல்லாத்தையும் பார்த்தேன். அதுல ஒரு லுக் ரொம்ப பிடிச்சிருந்துது. அருமையான லுக் அது. அதுக்கான விக் ரெடி பண்ணி, நினைச்சது வர்ற வரைக்கும் நிறைய மாற்றங்கள் பண்ணி, அதே மாதிரி லுக் கொண்டு வந்திருக்கோம். பானுவோட மேக்கப்பும் ரத்னவேலுவோட லைட்டிங்கும் சேந்து அவரை இன்னும் அழகா காட்டும். ‘ஜானி‘ படத்துல ஒரு பாட்டுல ரஜினி சார் ரொம்ப கேஷுவலா வருவார். அதே மாதிரி ‘தம்பிக்கு எந்த ஊரு‘ படத்துல ரொம்ப யதார்த்தமா பேன்ட் பாக்கெட்ல கைய விட்டு பாடிக்கிட்டே நடப்பார். அத பார்க்கும்போது நல்ல ஃபீல் கிடைக்கும். இன்னைக்கும் மறக்க முடியாது. அது மாதிரி பண்ணணும்னுதான் இந்த பாட்டுக்கு மெனக்கிட்டோம். ரகுமான் அழகா ட்யூன் போட்ருக்கார். ரஜினி சார் கிடார் வச்சுகிட்டு ஃப்ரீயா பண்ணியிருக்கார். படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்னு கேட்டா இதைத்தான் சொல்லுவேன்.

காதல் வந்த ஒரு விஞ்ஞானி பாடுற பாடல். வழக்கமான காதல் மொழி தெரியாது. அதனால் விஞ்ஞான ரீதியா ரொமான்டிக் பாடல் வேணும்னு கேட்டேன். வைரமுத்து சார் நியூட்ரான், எலக்ட்ரான்னு வச்சு வித்தியாசமா எழுதினார். எல்லாரோட பங்களிப்பும் சேந்து அந்த பாடல் சீனை எப்படி சூப்பரா அமைச்சுருக்குன்னு படத்தை பாத்துட்டு சொல்லுங்க.. ‘எந்திரன்’ படத்தில் இடம்பெறும் ‘கிளிமஞ்சாரோ’ பாடல் ஷூட்டிங், பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலையில் நடந்தது. அந்த அனுபவம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது: முதன் முதலா ‘எந்திரன்’ பட ஷூட்டிங்... முதல் ஷாட்டுன்னு வச்சுக்கோங்களேன். மச்சுபிச்சு மலையில கிளிமஞ்சாரோ பாடல். மச்சுபிச்சு மலை மேல போனோம். அங்க டான்ஸ் ஷூட். முதல்ல பெரிய மூவ்மென்ட்டுன்னு சொல்லிட்டாரு ராஜு மாஸ்டர். என்ன ஏதுன்னு கேட்டா, பண்ணிடலாம்னு, டைரக்டர்கிட்டயும் சொல்லிட் டாங்க. மொதல்ல கஷ்டமான மூவ்மென்ட்ஸை பண்ணிட்டா, அப்புறம் ஈசியாயிடும்னாங்க. சரி, ஐஸ்வர்யா ராய் வர்றதுக்கு லேட்டாகும்&அவங்க அன்னைக்குதான் இந்தியாவுல இருந்து வர்றாங்க. நாம மேக்கப்போட்டு பிராக்டிஸ் பண்ணிறலாம்னு 30, 40 வாட்டி பிராக்டிஸ் பண்ணிட்டு ரெடியா இருந்தேன். அதுக்கப்புறம் ஐஸ்வர்யா ராய் வந்தாங்க. பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். பெரிய மூவ்மென்ட், ரொம்ப டைம் எடுத்துப்பாங்க... அப்படின்னு நெனைச்சா, மூவ்மென்ட் பார்க்கலாம்னு சொன்னாங்க.


மூவ்மென்ட் பார்த்த உடனேயே டேக்குன்னு சொல்லிட்டாங்க. நான், என்னடா இது? ரிகர்சல்தான் பார்ப்பாங்கன்னு நினைச்சா, டேக்குன்னு சொல்லிட்டாங்களேன்னு நினைச்சேன். அப்புறம் டைரக்டர், மாஸ்டர் எல்லாரும் வந்து ரிகர்சல் பார்த்திரலாம்னாங்க. ஐஸ்வர்யா ராய் ரிகர்சல் பண்ணினாங்க... சூப்பர்ப். நான் 40 வாட்டி ரிகர்சல் பண்ணியிருக்கேன். பாடி ஸ்டடியா இருக்கு. மைன்ட் ஆஃப் ஆயிடுச்சு. சவுண்டும் கேட்க மாட்டேங்குது, ஒண்ணும் கேட்க மாட்டேங்குது. என்னடான்னு நினைச்சா, முதல்ல நல்லா வந்திட்டிருந்தது எல்லாமே மறந்து போச்சு எனக்கு. ஐஸ்வர்யா ராய் வந்து, ‘இது கஷ்டமான மூவ்மென்ட், டான்சர்களே கஷ்டப்படுறாங்க. நீங்க இவ்வளவு தூரம் பண்ணியிருக்கீங்களே’னு என்னை எங்கரேஜ் பண்ணினாங்க. முதல் ஷாட் ஒ.கே ஆன உடனேயே  எல்லாரும் கை தட்டினாங்க. எக்ஸலண்ட் பாட்டு. அங்க ஆடுன, பிரேசில்ல இருந்து வந்த ஒவ்வொரு டான்சரும் ஐஸ்வர்யா ராய் மாதிரி இருந்தாங்க. அவங்க உடம்புலயே ரிதம் இருந்தது. அங்க காஸ்ட்யூம் கரெக்ட் பண்றவங்களும் டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க அவங்களுக்கு டீ, காபி கொடுத்துட்டு போறவங்களும் டான்ஸ் ஆடிட்டே போனாங்க. நான் இதுலயே ஷாக் ஆயிட்டேன். நல்ல அனுபவம். நீங்க அதை படத்துல பாருங்க.


நையாண்டி நாரதரின் கேள்விகள்.

1.சிவாஜி படத்துல கறுப்பு பணத்துக்கு எதிரான கருத்தை சொன்ன நீங்க எந்திரன் ல அதை ஏன் ஃபாலோ பண்ணலை?

2.ரஜினி தன் மகளோட கல்யாணத்துக்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம்,கூட்ட நெரிசலால் அவதி ஏற்படும்னு சொன்னாரே,எந்திரன் பட ரிலீஸ்க்கும் கூட்ட நெரிசல் அதை விட 4 மடங்கு அதிகமா இருக்கும்.ரசிகர்கள் யாரும் ஒரு வாரத்துக்கு தியேட்டர் பக்கமே வராதீங்கனு சொல்லலையே ,ஏன்?

3.ஈரோட்ல 6 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகுது.விடிகாலை 4-30 மணிக்கு முத ஷோ,மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தறதுனா இப்படித்தானா?

4.டிக்கட் விலை ரூ 250,ரூ 300.நார்மல் டிக்கட்டைப்போல் 23 மடங்கு அதிகம்.இது ரசிகர்களை ஏமாற்றிப்பணம் பறிப்பது ஆகாதா?


5.ஒரு தியேட்டரில் ஒரு ஷோவுக்கு 1200 பேர் பார்ர்க்கிறார்கள்.6 ஷோ ஒரு நாளுக்கு 6 தியேட்டர் 6*6*1200=
43,200 மக்கள் ஒரு நாளில் படம் பார்க்கிறார்கள்.முதல் 10 நாட்களில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் பேர் படத்தை பார்த்து விடுவார்கள்.படம் நல்லாருக்கோ,இல்லையோ,டப்பாவோ ரிசல்ட் கேட்காமலேயே இத்தனை பேர் பார்க்கறதால புரொடியூசரான சன் டிவிக்கு ஏகப்பட்ட லாபம்.ரசிகனுக்கு?


6.இந்தப்படத்தைப்பார்க்கலைன்னா அது ஏதோ தெய்வக்குத்தம் மாதிரி ஒரு இமேஜை சன் டி வி கிளப்பிட்டிருக்கு,அது ஏன்?


7.இத்தனை பிரம்மாண்டங்களுக்கு நடுவிலும் வரிவிலக்குக்கு ஆசைப்பட்டு ரோபோ டைட்டிலை தமிழ்ல மாத்தி இருக்கீங்க,ஏன்?(வரி விலக்குஎன்பது சின்ன பட்ஜட் படங்களுக்கு அரசு மக்கள் வரிப்பணத்துல இருந்து தர்றது)


Tuesday, September 28, 2010

அரசியல்வாதிகளின் அலப்பறையும்,சினிமாக்காரர்களின் சிரிப்புரையும்

1.முதல்வர் கருணாநிதி: கள்ளக் கையெழுத்துப் போட்டோர், லஞ்சம் வாங்கியோர், அபராதம் செலுத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ராஜராஜன் காலத்தில் விதிமுறையாக இருந்தது


 நையாண்டி நாரதர் -தலைவா,ஆனா ஆ.ராசா காலத்துக்குப்பிறகு அது வழக்கொழிஞ்சு போச்சே? ஏனுங்கோ?2.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: காங்கிரஸ் கட்சியில் கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது. கூட்டணி பற்றி நானே பேசக்கூடாது. அந்த முடிவு சோனியாவிற்கு மட்டும் தான் உண்டு. எனவே, இனிமேல் கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

நையாண்டி நாரதர் - அண்ணே,தலைவர் நீங்களே கூட்டணி பற்றி பேசக்கூடாதுன்னா அப்புறம் எதுக்கு அந்த தலைவர் போஸ்ட்டிங்க்?


3.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
விஜயகாந்த் கட்சி உட்பட பல கட்சிகள் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், காங்கிரஸ், மக்களின் உரிமைக்காகப் போ ராடி வரும் இயக்கம். வரும் 2016க்குள் நாம் மூன்று பெரிய தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், இந்த ஆறு ஆண்டு காலமும் கட்சியை வலுப்படுத்த மேலிடம் முன்வந்தால், 2016ல் ஆட்சி அமைக்க முடியும்.

நையாண்டி நாரதர் - யானை போய் குதிரை வந்தது டும் டும் டும்,குதிரை போய் கழுதை வந்தது டும் டும்,2011 போய் 2016 வந்தது டும் டும் டும்


 

4.சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு:
 கருணாநிதி கூறிய வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் ஓட்டளித்தனர். இன்று குடும்பத்தினர் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றன.

 நையாண்டி நாரதர் - அது வேணா உண்மைதான்,கலைஞர் குடும்பத்துக்கு எல்லா உதவிகளும் கிடைக்குது.

5.   திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் - காதலன் பிரபுதேவா

 நையாண்டி நாரதர் -ஆம்,டைவர்ஸுக்குப்பிறகு நடிப்பார்.(இத்தனை நாளா நடிச்சாரா?)
6. இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. நான் சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்தை கொடுக்காதீங்க  - நயன்தாரா


 நையாண்டி நாரதர் -ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஃபினிஷிங்க்லதான் பிரச்சனை ஆகிடுது.போன வருஷம் சிம்பு,இந்த வருஷம் பிரபுதேவா,அடுத்த வருஷம் உங்க மனசை அசத்தப்போவது யாரு?7.பிரபுதேவா பெயரை நான் பச்சை குத்தியிருக்கிறேன். எதற்காக அவர் பெயரை பச்சை குத்தியிருக்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னதான் நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்றவங்களுக்காக நாம வாழுறோம். இதுதான் உண்மை. இது எல்லாருக்குமே பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன். எப்‌போதுமே நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு கவலைப்படுறதில்லை.

-நயன்தாரா
நையாண்டி நாரதர்-நீங்க வேணா பாருங்க கஜினி சூர்யா மாதிரி பல பேரை பச்ச குத்தி கலக்கப்போறீங்க.

Sunday, September 26, 2010

புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கம்

கடை விரித்தேன் கொள்வாரில்லை,பதிவிட்டேன் படிப்பார் இல்லை,அப்ப்டியே படித்தாலும் பின்னூட்டம் இடுவார் இல்லை என புலம்புவரா நீங்கள்,அப்போ நீங்க நம்ம ஆளு.பதிவுலகில் நான் ஒரு கத்துக்குட்டி.72 நாட்கள் மட்டுமே ஆகிறது.இதில் நான் கற்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கலைஞரின் நமக்கு நாமே திட்டப்படி எப்படி அவரது குடும்பத்துக்குள் பதவிகள்,பணங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறதோ,அதே போல் இந்த சங்கத்து நண்பர்களும் நமக்குள் உதவிக்கொள்ளலாம்.தலைவர், உப தலைவர் என யாரும் கிடையாது.அனைவரும் உறுப்பினர்களே.

1.நமக்கு யார் கமெண்ட் போட்டாலும் உடனே அவர்து ஃபோட்டோவை க்ளிக்கி அவர்து பதிவில் ஒரு கமெண்ட் போடவும்.ஃபாலோயராக சேரவும்.இந்தத்திட்டத்திற்கு மொய்க்கு மொய் என பெயர்.

2.நீங்கள் கமெண்ட் போட்டு விட்டு வேலைக்கு சென்று விடுகிறீர்கள்,பிறகு வந்து பார்க்கும்போது 4 கமெண்ட் வந்திருக்கிறது என்றால் உடனே 4 பேருக்கும் நன்றி என பொத்தாம்பொதுவாக நன்றி கூற வேண்டாம்.தனித்தனியாக நன்றி கூறவும்.


3.அப்படித்தனித்தனியாக நன்றி கூறுவதில் ஒரு டெக்னிக் உள்ளது.8 கமெண்ட் ஆகி விடும்.தமிழ் மணம் சைடு முகப்பில் 6 கமெண்ட் வாங்கிய பதிவு இடம் பெறும்.அதைப்பார்த்து அதிக பார்வையாளர்கள் வருவார்கள்.

4.உங்கள் பக்கத்து வீட்டு ஃபிகர் பெயரில்,முறைப்பெண்,அல்லது முறைக்காத பெண் பெயரில் 2 அல்லது 3 டூப்ளிகேட் மெயில் ஐ டி கிரியேட் செய்து கொள்ளவும்.நீங்கள் பதிவு போட்ட 2 வது நிமிஷமே அவர்கள் மெயில் ஐ டி யில் போய் மீ த ஃபர்ஸ்ட்,முத வடை எனக்குத்தான் என்று ஏதாவது ஒரு கமெண்ட் போட்டு விட்டு மீண்டும் உங்கள் மெயில் ஐ டி யில் போய் நன்றி சொல்லவும்.இப்போ 6 கமெண்ட் ரெடி.

5. பதிவு போடுவதை ஒரு கடமையாக வைத்துக்கொள்ளுங்கள்.வாரம் மினிமம் 3,அதிகம் 6 பதிவு போடவும்.அதே போல் ரெகுலராக ஒரே டைமில் பதிவு போடுங்கள்.உதாரணமாக காலை 7 மணி என்றால் ரெகுலராக அதே டைமில் போடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

6.உங்கள் பதிவு சினிமா,அரசியல்,சமூகவிழிப்புணர்வு என கலவையாக இருக்கட்டும்.அனைத்துப்பார்வையாளர்களையும் வரவைக்க அது உதவும்.

7.ஜெ கொடநாட்டில் போய் ஓய்வெடுப்பது மாதிரி 7 நாட்கள் திடீர் என காணாமல் போய் விடாதீர்கள்.அப்படியே போக வேண்டிய சூழல் வந்தால் ஒரு நெருங்கிய நண்பர் கம் பதிவரிடம் உங்க பாஸ்வோர்டை  குடுத்து பிளாக்கை ஒப்படைத்து கமெண்ட்டுக்கு பதில் கமெண்ட் போட வைய்யுங்கள்.

8.பதிவிட்டால் மட்டும் போதாது,மார்க்கட்டிங்க் வேணும்.சன் டி வி எந்த டப்பா படம் எடுத்தாலும் விடாமல் விளம்பரம் செய்து 5 நாள் படத்தை 30 நாள் படம் ஆக்குவது போல் முக்கிய புது பதிவர்களின் மெயில் ஐ டிக்கு ஒரு லிங்க் அனுப்புங்கள்.100 மெயில் ஐ டிக்கு அனுப்பி (க்ரூப்பாக) விளம்பரம் செய்தால் 25% பேர் வந்தாலும் லாபம்தான்.

9.தமிழ்மணம் முகப்புப்பக்கத்தின் கடைசியில் போய் பாருங்கள்,லேபிள்கள் இருக்கும்.உங்கள் பதிவை வகைப்படுத்துங்கள்.சினிமா,அரசியல்.நகைச்சுவை,நையாண்டி,சமூக விழிப்புணர்வு என.அதில் ஏதாவது ஒரு தலைப்பை இடவும்.

10.தி.மு.க மாதிரி ஓட்டு வாங்க நம்மால் பணம் தர முடியாது.ஆனால் ஓட்டுப்போடலாம்.இண்ட்லி,தமிழ்மணம்,உலவு ஆகியவற்றில் நுழைந்து படப்படவென எல்லாருக்கும் ஓட்டுப்போடவும்.மொய் திரும்ப வருமா என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டாம்.

11.கம்ப்யூட்டர் நிறுவனங்களில் உங்கள் நண்பர்கள் அல்லது நண்பர்களின் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் உங்கள் சைட்டை (பிளாக்கை) அறிமுகபடுத்தி ஃபாலோயர் ஆக்கவைக்கவும்.ஒரே சமயத்தில் 10  ஃபாலோயர்ஸ் கிடைக்கும்.

12.பின்னூட்டம் இடும்போது முடிந்தவரை பாசிட்டிவ்வாக எழுதவும்.அது சரி இல்லை,இது சரி இல்லை என குறை சொல்ல வேண்டாம்.அப்படி கூறுவதாக இருந்தால் தனி மெயிலில் கூறவும்.

13.சினிமா விமர்சனம் எழுத முடிவு எடுத்தால் ஏற்கனவே அந்தத்துறையில் ஃபேமஸ் ஆன கேபிள் சங்கர் சார்,உண்மைத்தமிழன் அண்ணன்,ஜாக்கி சேகர் அண்ணன்,ஹாலிவுட் பாலா அவர்கள்,அஜயன் பாலா அவர்கள் பதிவை படித்து அவர்கள் ஸ்டைலை காப்பி அடிக்காமல் உங்களுக்கு என தனி பாணியை அமைத்து எழுதவும்.

14.காமெடி,நகைச்சுவை எழுத முடிவெடுத்தால் காமெடியில் கலக்கி வரும் சேட்டைக்காரன் அண்ணன்,குசும்பன் சார்,பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன்,பரிசல்காரன்,வால்பையன் போன்றவர்கள் பிளாக்கை படித்துவிட்டு,பயிற்சி எடுத்து தனி பாணியில் பதிவு போடவும்.

15.தனிப்பட்ட தாக்குதல்களை,அநாகரீக வார்த்தைகளை தவிருங்கள்.நாம் நண்பர்களை உருவாக்கவே வந்தோம்,எதிரிகளை உருவாக்க அல்ல.

16.தனி நபர் அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களை தாகும் பதிவை படிக்க நேர்ந்தால் பின்னூட்டம் இடுவதை தவிர்க்கவும்,அல்லது உள்ளே ஐயா,பிரசண்ட் சார் என ஒரு அட்டண்டன்ஸை போட்டு விட்டு எஸ்கேப் ஆகுங்கள்.

17கவிதை எழுதுவதை குறையுங்கள்.இங்கே ஏற்கனவே ஏராளமான கவிஞர்கள் கோலோச்சி இருக்கிறார்கள்.மீறி எழுதினால் பனித்துளி சங்கர்,கவிதைக்காதலன்,கே ஆர் பி செந்தில் சார் போன்றவர்கள் பாணியிலிருந்து விலகி புதுசாக எழுதுங்கள்.

18.அலாஸ்கா ரேங்கிங்க்கை உங்கள் பிளாக்கில் பொருத்தவும்.மினிமம் தினமும் 250 பேர் வந்தால் போதும்.

19.மிட்நைட் 12  மணிக்கு பதிவு போட்டால் பிரமாதமான ரிசல்ட் கிடைக்கும்,காரணம் இங்கே இரவு எனில் ஃபாரீனில் பகல்.அது போக நமது பதிவு அதிக நேரம் ஆன்லைனில் வைத்திருக்க அது ஒரு குறுக்கு வழி.அந்த நேரத்தில் எழ முடியவில்லை எனில் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு போடவும்.

20.ட்விட்டர்,ஃபேஸ்புக்,கூகுள் பஸ் என எல்லாவறிலும் உறுப்பினர் ஆகி உங்கள் பதிவை இணையுங்கள்.இது ஒரு நல்ல மார்க்கெட்டிங்க் டெக்னிக்.

21.பெண் பதிவாளர்களை மரியாதைக்குறைவாக பேசுவது,தேவை இல்லாத மற்றும் எல்லை மீறிய பின்னூட்டம் இடுவது,அவர்கள் பர்சனல் விஷயங்களைப்பற்றி எழுதுவது இவற்றை நிச்சயம் தவிருங்கள்.

22.எழுதப்பட்ட பதிவுகளை நல்லவற்றை செலக்ட் செய்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் ஏதாவது துட்டு கிடைக்கும் .(நெட் கனெக்‌ஷனுக்கு பணம் கட்டனுமே?)

23.பி எஸ் என் எல் பிராட்பேண்ட் கனெக்‌ஷன் இருப்பதில் சிறந்தது,அதில் அன்லிமிட்டட் ரூ 750 திட்டத்தில் சேருங்கள்.நான் பணத்தை மிச்சம் பண்றேன் பேர்வழி என ரூ 500 திட்டத்தில் சேர்ந்தேன்.விடிகாலை 2 லிருந்து 8 மணி வரை இலவசம், மற்ற டைமில் காசு என்ற திட்டத்தில்,எனக்கு வந்த பில் ரூ 2400.

24.பழைய மாடல் சிஸ்டம் ஆக இருந்தால் கண் பாதிப்பை தவிர்க்க கண்ணாடி அணியுங்கள் அல்லது அதற்கென விற்கும் கிளாஸ் (ரூ 125) வாங்கி சிஸ்டத்தில் பொறுத்தவும்.

25.எல்லாவற்றையும் விட முக்கியம் பதிவு,நெட் என அதற்கு அடிமை ஆகி விடாமல் குடும்பத்திற்கும்,குழந்தைகளை கொஞ்சுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.


பி.கு.  இந்தப்பதிவுக்கு கமெண்ட் போடுபவர்களுக்கு  பதில் மொய் கமெண்ட்டாகவும்,ஓட்டாகவும் விழும்.மேலும் அவர்கள் ஃபாலோயர் ஆகவும் மாறி விடுவேன்.

Saturday, September 25, 2010

மன்மதன் அம்பு - காமெடி,ஜோக்ஸ்,கும்மி 1. த்ரிஷா கால்ஷீட் தராம கமலை இழுத்தடிக்கிறாராமே? 
 2.  
  அப்போ படத்தோட டைட்டிலை “மன்மதன் விட்ட அம்பும்,ரதி தந்த சொம்பும்”னு மாத்திடலாமா?
   
  2.மன்மதன் அம்பு படம் ஹிட் ஆகும்னு உன்னால கேரண்டி தர முடியுமா?
  கமல் படம்னா ஹிட்டுக்கு கேரண்டி தர முடியாது,கிஸ்ஸுக்கு வேணா கேரண்டி தரலாம்.
3.மன்மதன் அம்பு படம் ஓடறப்ப ,டூயட் சீன்ல சம்பந்தமே இல்லாம சிம்பு வர்றாராமே?
த்ரிஷா எங்கே போனாலும் பாய் ஃபிரண்டோடதான் போவாராம்.

4.த்ரிஷாவோட அம்மாவை ஒரு கேரக்டர்ல நடிக்க வெச்சிருக்காரே கமல்,எதுக்கு?
அடிக்கடி த்ரிஷா படப்பிடிப்புக்கு வராம கட் அடிச்சிடறாராம்.அவங்களை கண்ட்ரோல் பண்ண கூடவே அவங்கம்மாவும் இருந்தா நல்லாருக்கும்னுதான்

    5.கமல் பட டைட்டில்ல ஒரு பிழை இருக்கு.


   என்னாது அது?


   மன்மதன் சிம்பு தானே,மன்மதன் அம்புனு எப்படி வரும்?


   6.மன்மதன் அம்பு படம் பொங்கலுக்குத்தான் ரிலீஸ் ஆகும்னு எப்படி சொல்றே?


   மன்மதனோட பாணம் கரும்பு,கரும்புக்கான பண்டிகை பொங்கல்தானே?


   7.மேடம்,கமல் படத்துல ஒரு கெஸ்ட் ரோல் இருக்கு,பண்றீங்களா?


   சாரி,லிப் டூ லிப் கிஸ் சீன்ல நான் நடிக்கறதில்லை.


   8.த்ரிஷாவோட அம்மாவுக்கு படத்துல என்ன கேரக்டரா இருக்கும்?


   இதுல என்ன டவுட்?கமலோட மாமாவா வர்ற இன்னொரு கமலுக்கு ஜோடி கேரக்டராத்தான் இருக்கும்.(புன்னகை மன்னன் மாதிரி)


   9.கமல் - டைரக்டர் சார்,போன படத்துல (உ.போ.ஒ)
   படம் பூரா மொட்டை மாடில நின்னு ஃபோன் பேசியே படத்தை ஹிட் ஆக்கிட்டேன்,இந்தப்படத்துலயும் கப்பல் மேல் தளத்துல த்ரிஷா கூட கடலை போட்டே முடிச்சிடவா?


   கே.எஸ்.ரவிக்குமார் - எப்படியோ என்னை முடிச்சுடுவீங்கனு நினைக்கிறேன்.


   10. படத்தை சென்சார் ஆஃபீசருங்க இன்னும் பார்க்கவே இல்லையே?


   தேவை இல்லை,கமல் படம்தானே,ஏ சர்ட்டிஃபிகேட்தான்.   என்னாது இது,சின்னப்பிள்ளத்தனமா..?

   பசங்க படத்துக்கு விருது கிடைத்தது சந்தோஷமாக இருந்தது.இந்த சமயத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி ஞாபகம் வருகிறது.சின்னக்குழந்தைகளின் சந்தோஷங்களை துல்லியமாக பதிவு செய்த வகையில் பிரமாதமான படைப்பு அது.க்ளைமாக்சில் ஏந்திரி அஞ்சலி ஏந்திரி என்ற வசனம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

   குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பெறத்துடிப்பதும்,கோயில் கோயிலாக அலைவதும் நடக்கும் அதே நேரத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றவர்கள் மழலை இன்பத்தை பெறுகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

   லைப்ரரியில் நான் படித்த சில மேட்டர்களை உங்களுடன் பகிர்கிறேன்.   1.குழந்தையின் சிரிப்பில் பூலோகம் அழகு பெறுகிறது.

   2.குழந்தைகள் இல்லையென்றால், உலகம் துன்பம் நிறைந்ததாகும்.
    வயோதிகர்கள் இல்லையென்றால், உலகம் மனித இயல்பற்றதாகும்.

   3.குழந்தைகளைத் திருத்த நல்ல வழி - அவர்களைப் பாராட்டுவதுதான்.

   4.குழந்தையைக் கொஞ்சும்போது தெய்வத்திடம் பேசுவதுபோல இருக்கிறது.

   5.குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ள கை நோகிறது.
    அதை கீழே இறக்கினால் மனம் நோகிறது.

   6.இயற்கை அளிக்கும் எல்லாவற்றிலும் குழந்தையைப் பார்க்கிலும் சிறந்த இன்பம் வேறில்லை.

   7.குழந்தைகளை ஆர்வமுடன் அணையுங்கள்; இதய நோய் குறையும்.

   8.குழந்தையைக் கொஞ்ச நேரமின்றிச் சம்பாதிப்பவன் இறைவனின் அருகில் போக முடியாது.

   9.நீங்கள் கொடுக்கும் வெகுமதிகளைவிட, உங்களுடன் சேர்ந்து இருப்பதைத்தான் உங்களுடைய குழந்தைகள் விரும்புகின்றன.

   10.பல குழந்தைகள் பல கவலைகள். ஒரு குழந்தையும் இல்லாவிட்டால் ஒரு இன்பமும் இல்லை

   Friday, September 24, 2010

   எந்திரன் - காமெடி ,ஜோக்ஸ்,கும்மி

   1.எதுக்காக எந்திரன் பட ரிலீஸை அக்டோபர் -1 ல வெச்சிருக்காங்க?

   சம்பள நாள் அன்னைக்கு ரிலீஸ் பண்ணுனாத்தானே ரசிகர்கள் பாக்கெட்டை காலி பண்ண முடியும்?


   2.லயன்ஸ் கிளப் மீட்டிங்க்ல என்ன பிரச்சனை?

   அதை அரிமா சங்கம்னு பெயர் மாத்தனுமாம்.(அரிமா அரிமா பாட்டு ஹிட் ஆகிடுச்சே)

   3.ஷங்கர் ஏன் மூடு அவுட்டா இருக்காரு?

   எந்திரன் படத்தோட கதை என்னவா இருக்கும்னு இணைய தளங்கள்ல வெளியாகற யூகக்கதைகள் நிஜக்கதையை விட சூப்பரா இருக்காம்.  

   4. டிக்கெட் கவுண்ட்டர்ல வேலை செய்யறவங்களுக்கு தியேட்டர் நிர்வாகம் ஒரு மாசம் லீவ் குடுத்துடுச்சாமே,ஏன்?

   எந்திரன் படம் ரிலீஸ் ஆனதும் ஒரு மாசம் பிளாக்லதான் விக்கப்போறாங்க,எதுக்கு வீணா சம்பளம்?

   5.சன் டிவியை விட கேப்டன் டி வி தான் டேலண்ட்னு எப்படி சொல்றே?

   எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழா,இசை வெளியீட்டு விழா அப்படினுதானே புரோக்ராம் போட்டாங்க சன் டிவில?கேப்டன் டி வி ல எந்திரன் படம் ரிலீஸ்க்கு முன்னமே படத்தோட ஒரிஜினல் டிவிடியே வெளியிடப்போவுதாம்.

    6.திருப்பதி தேவஸ்தானம் மாதிரி இந்தத்தியேட்டர்ல 7 பெரிய ஹால் கட்டி வெச்சிருக்காங்களே,எதுக்கு?


   எந்திரன் படம் ரிலீஸ் ஆகுதே,டிக்கெட் எடுக்க க்யூல நிக்கற ரசிகர்களோட தள்ளுமுள்ளுவை குறைக்கத்தான்.


   7.எந்திரன் படக்கதையை ரொம்ப ரகசியமா வெச்சிருக்காங்களாம்.


   இருக்கட்டும்,அதுக்காக படம் ரிலீஸ் ஆகி 100 நாட்கள் ஆகற வரை படத்தோட விமர்சனத்தை யாரும் எழுதக்கூடாதுனு ஸ்டே ஆர்டர் வாங்கறதா?


   8.ஹீரோவுக்கு வயசு 64,ஹீரோயினுக்கு வயசு 37,கதைப்படி......


   சார்,ஒரு நிமிஷம்,இது எந்திரன் படக்கதை மாதிரி இருக்கே,நாம வேற டிரை பண்ணலாமே?


   9.எந்திரன்ல ரோபோ,சயிண்ட்டிஸ்ட் இந்த 2 கேரக்டர் போக 3வதா ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர்(சந்திரமுகி வேட்டையன் மாதிரி) ஷங்கர் சொல்றாரே?


   ம்க்கும்,ரஜினிக்கே இது சர்ப்பரைஸாம்.


   10.எந்திரன் படத்துக்கு முதல் ஷோ டிக்கட் ரிசர்வ் பண்ணனும்,அதுக்கு உங்க பேங்க்ல லோன் வேணும்.


   ஸாரி,அவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியாது,அவ்வளவு பெரிய தொகையை லோனா வாங்குனா எப்படி உங்களால் திருப்பிக்கட்ட முடியும்?


   11.பட இடைவேளை டைம்ல கூட உள்ளே டிக்கெட் தர்றாங்களே?


   படத்தோட ஸ்டில்ஸை வேடிக்கை பார்க்கக்கூட தனி டிக்கெட்டாம்.


   12.ஈரோட்ல மொத்தமே 16 தியேட்டர்ஸ்தான் இருக்கு.


   அதுக்கென்ன இப்போ?


   எந்திரன் ஈரோட்ல மட்டும் 25 தியேட்டர்ல ரிலீஸ் ஆகப்போவுதுனு சன் டிவில சொன்னாங்களே?

   காமசூத்ரா காண்டம் விளம்பரத்தின் அத்துமீறலும்,பொங்கி எழுந்த மாதர்சங்கங்களும்

   பெண்களைப்போகப்பொருளாக பயன்படுத்துவதும்,நினைப்பதும் இந்த சமூகத்தின் மாற்ற முடியாத சாபக்கேடு.ஆண்கள் உபயோகப்படுத்தும் பொருள்களைக்கூட மார்ர்க்கெட்டிங்க் டெக்னிக் என்ற பெயரில் பெண்களின் படங்களை கிளாமராகப்போட்டுத்தான் விளம்பரங்கள் செய்கிறார்கள்’போகட்டும் அதையாவது நாகரீகத்தின் எல்லையோடு நிறுத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

   சமீபத்தில் வந்த ஷேவிங்க் பிளேடு விளம்பரம் நீட்டா ஷேவ் பண்ணிட்டுப்போனா பெண்கள் எல்லாம் உங்க பின்னாடியே வருவாங்க என்றது.ஒரு பர்ஃபியூம் விளம்பரம் அவர்கள் தயாரிப்பை உபயோகித்தால் புதிதாக மணமான பெண் கூட கணவனை விட்டு விட்டு  உங்கள் பின்னால் வந்து விடுவாள் என்றது.

   பட்டியல் போட்டால் பக்கங்கள் பத்தாது.23.9.2010 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் காமசூத்ரா காண்டம் விளம்பரம் ஒன்று வந்தது,பெண்களை மிகக்கேவலமாக சித்தரித்த விளம்பரங்களில் அதற்கு முதலிடம் கொடுக்கலாம்.


   ஒரு பெண் கோன் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போலும் (மிகக்குறைந்த மேலாடை)
   அதில் ஐஸ்க்ரீம் வழிந்தோடுவது போலும்  அது அந்தப்பெண்னின் கைகளில் ஊர்ந்து செல்வது போலும் இருக்கிறது.

   முதல் பாய்ண்ட்,இவ்வளவு அநாகரீகமாக எந்தப்பெண்ணும் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை.2வது பாய்ண்ட் அந்த விளம்பரத்தின் கீழ் உள்ள வாசகம்.
   சாக்லேட்,வெண்ணிலா,ஸ்ட்ராபெர்ரி போன்ற பலவித டேஸ்ட்களில் கிடைக்கும் என்ற வாசகம் மற்றும் எழுத சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள்.

   ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை இப்படி கேவலமான விளம்பரத்தை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.சிறுவர்கள்,டீன் ஏஜ் மாணவிகள் கண்ணில் அந்த விளம்பரம் பட்டால் என்ன செய்வது?படத்துக்கு ஏ சான்றிதழ் அளிப்பது மாதிரி விளம்பரங்களுக்கும் சென்சார் வேண்டும்.

   முதலில் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு வந்தது மும்பையில்.கடும் கிளர்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.நேற்று  இரவு சென்னையிலிருந்து ஒரு பத்திரிக்கை துணை ஆசிரியர் ஃபோன் போட்டு விபரம் சொன்னார்.

   Thursday, September 23, 2010

   மாதர்தம்மை இழிவு செய்யும் மடமைதனை......

   1. தான் அழகுக்காக விலை போகிறோம் என்பதை அறியாதவரை பெண் சுதந்திரம் என்பது எட்டாக்கனிதான். - இங்க்ஸ்

   2.விளம்பரங்களில் பெண்கள் நடிக்கவில்லை,மாடல்கள் என்ற பெயரில் விலை போகிறார்கள்.இது ஒரு நவநாகரீக அநாகரீகமே . - அருந்ததிராய்

   3.பெண்ணை பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள்,பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.- ஆஸ்திரேலியப்பழமொழி

   4.ஒரு பெண்ணுக்கு எல்லாவிதமான நற்குணங்களையும் எதிர்பார்க்கும் சமூகம் ஆணிடம் மட்டும் எவ்வித நற்குணங்களையும் எதிர்பார்க்காதது எவ்விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை. - நா.பார்த்தசாரதி

   5.பெண்கள் தேவதைகள்தான்,ஆனால் திருமணம் அவர்களை குட்டிச்சாத்தானாய் ஆக்கி விடுகிறது.- லார்டு பைரன்

   6.உலகத்தில் பெரிய பூ எது? பெண்.உலகத்தில் மிக மிருதுவான விஷயம் எது? பெண்.கடவுள் படைப்பில் மிக அற்புதம் எது? பெண். கடவுள் எது? பெண்.- பாலகுமாரன்

   7.கற்புள்ள ஒரு பெண்ணைப்பற்றி மோசமாகப்பேசுவதை விட ஒரு கோயிலை இடிப்பது பெரிய பாவம். - ரஷ்யப்பழமொழி
   (நம்மாளுங்க ஒரு பெண்ணுக்கு ட்ரை பண்ணி கிடைக்கலைன்னா உடனே அந்தப்பொண்ணோட கேரக்டர் சரி இல்லைனு சொல்லிடுவாங்க.இவங்களுக்கு படிஞ்சுட்டா நல்ல கேரக்டராம்.என்ன கொடுமை சரவணன் இது?)

   8.தன் மனதை வெளிப்படுத்த ஆண்கள் கையாளும் முறைகளைக்காட்டிலும் பெண்கள் கையாளும் முறைகள் மிக மிக நுட்பமானவை.மலரின் மணத்தை விட மென்மையானவை. - ஜான் எஃப் கென்னடி

   9.பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்ற உறுதி பெண்களிடம் இருந்தால் எந்த ஆணும் நெருங்கவே முடியாது என்பதை உணர வேண்டும் பெண். - எழுத்தாளர் லட்சுமி

   10.பெண்களின் கண்ணீர் உலகிலேயே ஆற்றல் மிக்க நீர்வீழ்ச்சி.- மில்னர்

   காந்தி தேசமே.........!?


    காந்தி பிறந்த மண் இது.தேனாறும்,பாலாறும் ஓடாவிட்டாலும் பரவாயில்லை,மக்கள் பட்டினி இல்லாமல் இருந்தாலே போதும் எனும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் நம் அரசியல்வாதிகள் அவர்கள் சுயநலத்தைத்தான் பார்க்கிறார்களே தவிர மக்கள் நலத்தை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.பத்திரிக்கைகளில் அவர்களது கூற்றும்,அடிக்கும் கூத்தும்,
   காங்கிரஸ் எம்.எல்.ஏ., விடியல் சேகர்: திருப்பூர் சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு ஒதுக்கிய 200 கோடி ரூபாயை பயன்படுத்த, மாநில அரசு திட்டம் வகுக்கவில்லை. மத்திய அரசு ஆய்வு செய்ய ஒதுக்கிய ஐந்து கோடி ரூபாயை பயன்படுத்தி, திட்ட விளக்க அறிக்கை தயாரிக்கவில்லை. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு பங்குத் தொகையையும் ஒதுக்கவில்லை.


   நக்கலிஸ்ட் நாரதர் - அந்தத்திட்டத்துக்கு ஒதுக்கலைன்னா என்ன,அவங்க பர்சனலா ஒரு தொகை ஒதுக்கி இருக்க மாட்டாங்க?


   முதல்வர் கருணாநிதி: ஒவ்வொரு நாளும் காலையில் பத்திரிகைகளை படிப்பதற்கே கை நடுங்குகிறது. செய்தியைப் படிக்கிறபோது, இத்தனை பேர் இறந்தனர், இத்தனை பேர் கொல்லப்பட்டனர், இத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன என்ற செய்திகள் இந்தியாவின் ஒரு பகுதி என்று சொல்லப்படுகிற, காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது.


   நக்கலிஸ்ட் நாரதர் - அப்போ இலங்கை காஷ்மீரை விட தூரம்னு சொல்றீங்களா?சொந்தப்பொண்டாட்டிக்கு சீக்காம்,பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி உடம்பு தேக்காம்   தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: ஒரு துறைக்கு அமைச்சராக இருப்பவர், அந்த துறை சம்பந்தப்பட்ட தொழிலில் இருக்கக் கூடாது என்ற முறை பின்பற்றப்பட்டு வந்தது. அது இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறதா என்பது தெரியவில்லை.

    நக்கலிஸ்ட் நாரதர் - நம்ம அரசியல்வாதிகள் எதை ஃபாலோ பண்றாங்களோ இல்லையோ முறைகேடு எப்படி பண்ணலாம்கறதை கரெக்ட்டா ஃபாலோ பண்ணுவாங்க.   அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு: தமிழக அரசியலில் கலாசார மாற்றம் ஏற்பட வேண்டும். முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்து பேச வேண்டும்.

   நக்கலிஸ்ட் நாரதர் -அது எப்படி முடியும்?அவரு கொட நாடே கதினு இருக்கார்,இவர் தமிழ்நாடே நம்ம குடும்பத்துக்குனு கனவு காண்கறார்.

   வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு, "தமாஷ்' பேச்சு: கருணாநிதியும், ஜெயலலிதாவும் வன்னியர்கள் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. இந்த சமூகம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்றால் அன்புமணி முதல்வராக வேண்டும்.

   நக்கலிஸ்ட் நாரதர் - இந்த சமூகம்னு நீங்க சொல்றது டாக்டர் ராம்தாஸ் குடும்பம்தானே?

   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு: மற்ற கட்சிகளில் தேர்தலின் போது மட்டுமே இளைஞர்களை எப்படி பயன்படுத்த முடியும் என்று யோசிக்கின்றனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அந்த இளைஞர்களை வேலை வாய்ப்பு, கல்வி மட்டுமின்றி, நாட்டு மக்களின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான உந்து சக்தியாக பார்க்கிறது.

   நக்கலிஸ்ட் நாரதர் - உங்களுக்கு அரசியல் பரீட்சைல பாஸ்மார்க் .

   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் பேட்டி: தி.மு.க., அரசின் செயல்களை கம்யூனிஸ்டுகள் விமர்சித்தால், முதல்வருக்கு கோபம் வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை. தமிழகத்தில் மக்கள் மன நிம்மதியுடன் இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

   நக்கலிஸ்ட் நாரதர் - மக்கள் மாற்றத்தை விரும்பறாங்க,ஓகே,எந்த மாற்றம் வந்தாலும் அது பொது ஜனத்துக்கு ஏமாற்றமா போயிடுதே?

   பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: பா.ஜ., சொந்த பலத்தில் உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பும் அளவு சக்தி படைத்துள்ளது. கூட்டணி குறித்து தி.மு.க., பேச வந்தாலும், பா.ஜ., தயாரில்லை.

   நக்கலிஸ்ட் நாரதர் - பந்திலயே உக்காரவேணாம்னு சொல்றாங்களாம்,இலை ஓட்டைனு சொன்னானாம்

   மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேட்டி: மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 10 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த மின்சாரம், தற்போது, 13 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

   நக்கலிஸ்ட் நாரதர் - அண்ணே ,ஆப்பிரிக்காவைத்தான் இருண்ட கண்டம்னு சொல்வாங்க,உங்களை தொடர்ந்து மின் வாரியத்துல விட்டு வெச்சா தமிழகத்துக்கு அந்தப்பேரை வாங்கிக்குடுத்துடுவீங்க போலிருக்கே? 

   பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: தனி இட ஒதுக்கீடு என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் தற்போது உள்ள இட ஒதுக்கீட்டு அளவை விட அதிக அளவு இட ஒதுக்கீட்டை, வேலை வாய்ப்பு, உயர் கல்வியில் பெற வழி செய்ய வேண்டும். சமூக மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தனி இட ஒதுக்கீடு தான்.

   நக்கலிஸ்ட் நாரதர் - டாக்டர் அய்யா,2011 ல உங்க கட்சிக்கு எந்தக்கூட்டணிலயும் இட ஒதுக்கீடு கிடைக்கறமாதிரி தெரியலையே,என்ன் பண்ணப்போறீங்க?

   Wednesday, September 22, 2010

   விஜய்- அதிர்ச்சி தரும் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்

   1.இயக்குநர் ஷங்கர் - நான் இதுவரைக்கும் எடுத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட்ஸ்,ஒரு படம் கூட இது வரை ஃபிளாப் ஆனதில்லை.

   விஜய் - அது நேத்து வரைக்கும்,இப்போதான் என்னை வெச்சு 3 இடியட்ஸ்  
   ( நண்பன் )படம் பண்றீங்களே,மறந்துட்டீங்களா?

   ---------------------------------

   2.டைரக்டர் - படத்துக்கு கதை என்னனு முடிவு பண்ணியாச்சு.

   விஜய் - முதல்ல டைட்டிலை முடிவு பண்ணுங்க சார்,என் படத்துல யாரும் கதையை எதிர்பார்க்க மாட்டாங்க.

   ------------------------------

   3.விஜய் - தீபாவளிக்குள்ள என் படம் ரிலீஸ் ஆகிடுமா?

   புரொடியூசர் - அது தாராளமா ரிலீஸ் ஆகிடும்,ஆனா படம் ரிலீஸ் ஆனதும் வெட்டு,குத்துனு கலவரம் ஆகி நீங்கதான் உள்ளே போயிடுவீங்கனு நினைக்கிறேன்.

   ---------------------------

   4.விஜய் - அப்பா,அந்த புரொடியூசரை பகைச்சுக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா?இப்போ பாருங்க,பட போஸ்டர்ல உலக சினிமா வரலாற்றிலேயே  முதன் முதலாக 5 மெகா ஃபிளாப் குடுத்த விஜய் நடிக்கும்னு பட விளம்பரம் குடுத்திருக்கறதை...

   -------------------------------   5. விஜய் சார்,படத்துக்கு டைட்டில் காவலன் அப்படினு வெச்சுருக்கீங்க,கதைப்படி ஹீரோயினுக்கு நீங்க பாடிகார்டு,ஓகே,படம் பார்க்க வர்ற ஆடியன்சுக்கு யார் பாடிகார்டு?


   ----------------------------


   6.அரட்டை அரங்கம் விசு விஜயை ஹீரோவா போட்டு படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு?

   காவலன் அவன் கேவலன்

   --------------------------

   7.ஷங்கர் சார்,3 இடியட்ஸ்  படத்தை ரீமேக் பண்ணப்போறீங்களாமே,ஹீரோஸ் யாருனு முடிவு பண்ணீட்டீங்களா?

   ஒரு இடியட் மட்டும் இப்போதைக்கு முடிவாகி இருக்கு.(கமிட் ஆகி இருக்கு)


   -------------------------

   8.விஜய் - டைரக்டர் சார்,இந்தப்படத்துல நான் அரசியல்ல இறங்கற மாதிரி பாலிடிக்ஸ் பஞ்ச் டயலாக்ஸ் பேசி இருந்தேன்,ஏன் கட் பண்ணீட்டீங்க?

   டைரக்டர் - இது சீரியஸ் படம்,இதுல காமெடி பண்றதுக்கு இடம் இல்லை.

   ----------------------------

   9.எஸ்.ஏ.சந்திரசேகர் சார்,உங்க பையனை வெச்சு ஒரு சொந்தப்படம் எடுக்கறீங்களாமே?

   எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?அவ்வளவு ரிஸ்க் எடுக்க,வேற புரொடியூசரா சிக்காம இருக்காங்க?


   ----------------


   10..விஜய் - 5 படங்கள் தொடர்ந்து ஊத்திக்குச்சு,6வது படமும் ஃபிளாப் ஆனா என் எதிர்காலம் என்னாகும்?100 படத்தை நான் டச் பண்ண முடியுமா?

   விடுங்க .6வது படமும் ஃபிளாப் ஆனா ஆறுலயும் சாவு,நூறுலயும் சாவு அப்படினு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.,

   ------------------------

   புதுசா யோசிக்கனும்னா என்ன?

   ஆங்கிலத்தில் இன்னவேடிவ் அண்ட் கிரியேஷன் என்னும் தலைப்பில் எனக்கு வந்த ஈ மெய்ல் இது.ஃபோட்டோ கலெக்‌ஷன் ல இருந்து வ்ந்தது.

    கவிதையான காட்சிகள்.அதைப்பார்க்கும்போது நம் மனதில் ஏற்படும் டென்ஷன் எல்லாம் பறந்தோடி விடுகின்றன.கமெண்ட்ஸ் மட்டும் என்னுது.

   வா,ஒரே ஜம்ப்,இந்தக்கட்சில இருந்து அந்தக்கட்சிக்கு,டாக்டர் ராம்தாஸ் மாதிரி


   குஷ்பூவால மட்டும்தான் பரபரப்பை ஏற்படுத்த முடியுமா?இந்தப்பூவால முடியாதா என்ன?


   இதுதான் எந்திரன் வெடி,இங்கே பற்றவெச்சா மலேசியாவுல போய்
   வெடிக்கும்.

   மனசுக்குள்ள கேப்டன்னு நினைப்பா?லெக் ஃபைட் எல்லாம் ட்ரை
   பண்றே?


   காஷ்மீர் ஆப்பிளா இது,அடி பட்டிருக்கே?  தம்பி,காஷ்மீர்ல ஆளுங்களே அடிபட்டு கிடக்காங்க?இதைப்போய் பெரிசா பேச வந்துட்டே?

   என் கிட்ட வா,வந்தா எந்திரன் கூட்டிட்டு போறேன்,வர்லைனா
   வேலாயுதம் கூட்டிட்டு போயிடுவேன்,ஜாக்கிரதை!

   மணிரத்னம் மாதிரி படம் எடுக்க ஆசைப்பட்டுட்டு இப்படி வெளிச்சத்துல எடுத்தா எப்படி?

   வாலி தெரியும்,வாலி பால் தெரியும் ,இதென்ன வாலி ஸ்டோன் னா?

   மணல் கொள்ளைனா லாரில தான் எடுத்துட்டு போகனும்,இதெல்லாம்
   எந்த மூலைக்கு?

   தலைகீழா நின்னாலும் சரி,அம்மா கிட்ட சொன்னாலும் சரி,மேதை படம் எல்லாம் பார்க்க முடியாது,நான் என்ன ராமராஜன் ரசிகனா?

   ஓ,பட்டர்ஃபிளை ஏன் விரித்தாய் சிறகை

   சர்க்கஸ் பார் விளையாட்டு மாதிரி ஆகிப்போச்சு அரசியல் கூட்டணிகள்

   பை சைக்கிள் தீவ்ஸ் படம் பார்க்கப்போறதெல்லாம் ஓகே,அதுக்காக
   சுட்ட சைக்கிள்லதான் போவேன்னா எப்படி?

   நாமளும் உளவுத்துறை விஜய்காந்த் மாதிரியோ,அபிஸ் (THE ABYYS)
   மாதிரியோ எதையாவது கண்டுபிடிச்சு ஃபேமஸ் ஆகிட வேண்டியதுதான்.   பெரிய பெரிய கப்பலெல்லாம் கவுந்துடுச்சு,கேப்டன் மட்டும் இன்னும் தாக்குப்பிடிக்கிறாரே,எப்படி?

   வந்தே மாதரம் - சினிமா விமர்சனம்

    
   ஒரு புலனாய்வுப்படத்துக்கு ஆடை வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட படமோ என வியக்கும் வண்ணம் போலீஸ் ஆஃபீஸராக வரும் ஹீரோக்கள் இருவருக்கும் யூனிஃபார்மிலும் சரி,சிவில் டிரஸ்ஸிலும் சரி கலக்கலான டிரஸ்ஸிங்க் சென்ஸோடு எடுக்கப்பட்ட படம் இது.

   ராஜநீதி என்ற பெயரில் கேரளத்தில் சக்கைபோடு போட்ட மலையாள டப்பிங் படம்தான் இந்த வந்தேமாதரம்.கதை என்று புதிதாக ஏதுமில்லை,விஜய்காந்தின் மாமூல் ஃபார்முலாதான்.பாகிஸ்தான் தீவிரவாதி,இந்தியாவில் சதி,ஹீரோக்கள் முறியடிப்பு என புளித்துப்போன கதைதான்.ஆனால் காட்சி அமைப்பில் ,திரைக்கதையில் வித்யாசமும்,வேகமும் காட்டி இருக்கிறார்கள்.    அர்ஜூன் எந்த பில்டப்பும் தராமல் சாதாரணமாக அறிமுகமாகும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏர்ஹோஸ்டலாக வரும் சினேகாவும்,உளவுத்துறை அதிகாரியாக வரும் மம்முட்டியும் படத்தின் ஓப்பனிங்கில் வரும் பாடல் காட்சியான சஞ்சீவனா என் ஜீவனா பாடலில் சினேகாவுக்கு கிளாமர் தூக்கல் ரகம்.(எனக்கு ஒரு சந்தேகம்,இங்கே போர்த்தி நடிக்கும் நடிகைகள் ஆந்திராவில்,கேரளாவில் மட்டும் தாராளம் காட்டுவது ஏன்?

   எடுத்துக்கொண்ட கேஸ் படிப்படியாக முன்னேறி வரும்போது,வெற்றிகரமாக ஹீரோக்கள் நடந்து வரும்போது போடும் பின்னணி இசை அசத்தல் ரகம்.தொடர்ந்து வரும் கன்யாகுமரி,தேங்காய்பட்டினம் லொக்கேஷனும்,ஒளிப்பதிவும் அற்புதம்.   எனக்குத்தெரிந்து தீவிரவாதியை விசாரணை செய்கையில் அதிகபட்ச சித்திரவதை காட்டப்பட்டது (தமிழில்)திருப்பதிசாமி இயக்கி,விஜய்காந்த் நடித்த நரசிம்மா தான்.(நம்பவே முடியாத காட்சி அமைப்புகள்).அதை எல்லாம் தூக்கி சாப்பிடுவது இந்தப்படத்தின் சித்திரவதைக்காட்சிகள்.விசாரணை நடக்கையில் எமோஷனல் ஆகும் மம்முட்டி அருகில் இருக்கும் போலீஸ் ஆஃபீசர் மேல் கை வைக்கும் ஆவேச நடிப்பு தூள்.

   ரியாஸ்கானின் குத்துப்பாட்டுக்கான ஆட்டம்,இயக்குநர் ராஜ்கபூரின் வில்லத்தன நடிப்பு எல்லாம் அருமை.அர்ஜூன் ரியாஸ் சம்பந்தப்பட்ட சேஸிங்க் காட்சிகள் செம பரபரப்பு( கமலின் விக்ரம் படத்துக்குப்பின்)அனிமல் பிளானட் சேனலில் சிறுத்தை மானை துரத்துவது போல என்ன ஒரு விறுவிறுப்பு?    

   கஷ்டப்பட்டு பிடிக்கப்பட்ட வில்லனின் கையாள் டாக்டர் 2 ஹீரோக்கள் முன்னிலையில் சர்வ சாதரணமாக தற்கொலை செய்வது எப்படி?
   செல்ஃபோனில் வில்லன் பேசும்போது சிக்னல் லொக்கேட்டர் வைத்து பேசும் இடத்தை கண்டறிவதை பாமரனும் கை தட்டும் விதத்தில் படமாக்கிய இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

   அதே போல் பாம் பிளாஸ்ட் சீன் மிக தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டு நடிப்பு,ஒளிப்பதிவு,எடிட்டிங்க் என அனைவரும் கை கோர்த்து கலக்கிய சீன் என பெயர் வாங்கிய சீன்.அவ்வளவு களேபரத்திலும் வில்லன் பேஷண்ட் வேஷத்தில் தப்பிக்கும் சீன் செம விறு விறுப்பு.


   நான் நினைக்கிறேன்,இந்தப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஓடிக்கொண்டே எழுதியிருப்பார் என,அவ்வளவு நேர்த்தி,லாவகம்,வேகம்.இதெல்லாமே இடைவேளை வரைதான்.அதற்குப்பிறகு ஸ்பீடு கம்மி.பாட்ஷா உட்பட பெரும்பாலான சூப்பர் ஹிட் படங்களின் திரைக்கதை முன் பாதி வேகமாகவும், பின் பாதி சுமாராகவும் அமைந்து விடும் மர்மம் என்னவோ?

   பெலிக்கான் பறவை மூலம் சேதி பரப்பும் பாகிஸ்தானின் உளவாளி ஐடியா செம தூள் என்றால் அதை மம்முட்டி & கோ முறியடிப்பது செம ஸ்மார்ட்,ஆல் கிரடிட்ஸ் கோ டூ டைரக்டர்.(ALL CREDITS GO TO DIRECTOR)

   கீழே கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்க மேலே அர்ஜுனும்,வில்லனும் போடும் ஃபைட் சீன் நல்ல கற்பனை.அதை அழகியல் நேர்த்தியோடு படமாக்கிய ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்.


    

   ரசனையான சீன்கள்.

   1.விவசாயிகள் தற்கொலைக்குபோவதற்கு என்ன காரணம் என்பதை தண்ணிர்க்கஷ்டத்தின் வலியோடு படமாக்கிய டாக்குமெண்ட்ரி

   2.தேசிய நதி நீர் இணைப்பின் தேவையை,அதன் முக்கியத்துவத்தை அழகாக விளக்கிய விதம்

   3.க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில் ஜாக்கிசான் நடித்த  THE SPANISH CONNECTION (தெ ஸ்பானிஷ் கனெக்‌ஷன்) படத்தில் வருவது போல் அர்ஜூன் வில்லனை ஜம்ப்  பண்ணி நெஞ்சில் உதைக்கும் டூப்ப்  போடாமல் எடுக்கப்பட்ட அந்த ரிஸ்க் ஷாட்

   4. குத்தாட்டப்பாடலான 1,2,3,4 பாட்டில் குத்தாட்ட நாயகியின் லோ கட் சீன் கிளாமரை கலரிங் லைட் அடித்து மறைத்த சாமார்த்தியம் ( ஏற்கனவே சிங்கம் படத்தில் அனுஷ்கா நடித்த காதல் வந்தாலே பாட்டு  படமாக்கிய விதம் போல் இருந்தாலும்)

   படத்தில் நம்ப முடியாத சீன்கள்.

   1.தீவிரவாதியின் மகளுக்கு 5 வயது என வசனத்தில் வருகிறது,ஆனால் காட்சி அமைப்பில் 10 வயது ஆன மாதிரி காண்பித்தது,

   2.தீவிரவாதியை மகள் செண்ட்டிமெண்ட் காண்பித்து  மடக்க முயல்வது.99% தீவிரவாதிகள் குடும்பம் இல்லாத ,அதை துறந்தவர்கள்தான்.

   3.அப்படியே அதை ஒப்புக்கொண்டாலும் மகளாக நடிக்க வைக்க 1008 பேர் இருக்க ஹீரோவின் மனைவியையே தேர்ந்தெடுப்பதும்,முக்கியமான தருணத்தில் சினேகாவை அம்போ என வில்லனின் பாசறைக்குள் அனுப்பி அவரை உயிரிழக்க வைப்பதும்.

   சில வசன பளிச்கள்

   1.குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது,சார்,இனி இவன் மேல நான் கை வைக்கலாமா?

   ஓ,தாராளமா,இனி காலே வைக்கலாம்.

   2.என்னது,இப்போ  டாக்டருக்கே டிரீட்மெண்ட் தரவேண்டியதா இருக்கு?

   இந்தப்படம் எந்திரன் ரிலீஸ் ஆகும் வரை தங்கு தடை இன்றி அனைத்து செண்ட்டர்களிலும் ஓடும்.ஆக்‌ஷன் பிரியர்களுக்கும்,சி பி ஐ டைரி குறிப்பு,மாதிரியான கேரள புலனாய்வுப்படங்களை  ரசிப்பவர்களுக்கும் பிடித்தமான படம்.


   Tuesday, September 21, 2010

   நகைச்சுவை சரவெடி

   1.இந்த வாரத்தின் சிறந்த ஆஃபாயில் ஆறுமுகம் விருது தினகரன் நாளிதழுக்கு
   எந்திரன் படம் சென்சாரில் யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியதைக்கூட அரைப்பக்க மேட்டர் ஆக்கி வெளியிட்டமைக்காக.


   2 இந்த வாரத்தின் சிறந்த அன்சகிக்கபிள் அட்டு ஃபிகர் விருது நயன்தாராவிற்கு,100 நாள் ஓட வேண்டிய பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தனது
   மோசமான தோற்றத்தால் 75 நாள் படம் ஆக்கியதற்காக.

   3.இந்த வாரத்தின் சிறந்த சோலை புஷ்பங்களே சோப்ராஜ் விருது பிரபு
   தேவாவுக்கு,நயன் தாரா பாலைவனத்தில் தெரிந்த சோலை என பேட்டி கொடுத்ததற்காக,(இதே மாதிரி ரம்லத் யாரையாவது கட்டிக்கிட்டா ஒத்துக்குவாரா?)

   4. இந்த வாரத்தின் சிறந்த தள்ளுமுள்ளு தங்கராஜ் விருது விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லுக்கு,மல்யுத்தப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் சுசில்குமாருடன் ஃபோட்டோ எடுக்கையில் சுசிலின் பயிற்சியாளர் சத்பல்சிங்கை தள்ளிவிட்டு அநாகரீகமாக நடந்துகொண்டமைக்காக.

   5. இந்த வாரத்தின் சிறந்த ஏழைஜாதி ஏகாம்பரம் விருது அமைச்சர் ஆ ராசாவிற்கு,தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அவரது சொத்து மதிப்பு பற்றிய விசாரணையில் ரூ 88 லட்சம் மட்டுமே சொத்து இருப்பதாக புரூடா விட்டதற்கு. ( அந்த 1000 கோடியை என்ன தான் பண்ணுனீங்க?)

   6. இந்த வாரத்தின் சிறந்த ரூல்ஸ் & ரெகுலேஷன் ராமானுஜம் விருது பிரதம மந்திரி மன்மோகன் சிங்க்கிற்கு,ஏழைகளுக்கு உணவுக்கிடங்கில் வீணாகும் அரிசியை இலவசமாகத்தரமுடியாது என சட்டம் பேசியதற்காக.

   7. இந்த வாரத்தின் சிறந்த செல்ஃபோன் செல்லமுத்து விருது  ராகவேந்திரருக்கு,நடிகை சினேகாவிற்கு செல்ஃபோனில் தினம் 50 மிஸ்டுகால்,75 ஆபாச எஸ் எம் எஸ் என மானாவாரியாக அனுப்பியதற்கு.

   8. இந்த வாரத்தின் சிறந்த வள்ளுவருக்கேற்ற வாழ்க்கைத்துணைவி வாசுகி விருது நடிகை சீதாவிற்கு,டி வி நடிகர் சதிஷை 2ம் திருமணம் செய்துகொண்டு
   ஆர் பார்த்திபனையும்,குழந்தைகளையும் பரிதவிக்க விட்டமைக்காக.

   9. இந்த வாரத்தின் சிறந்த ரெட்டை வால் கழுதை ரெங்குடு விருது  எ .வ. வேலுவிற்கு,திருச்சியில் நடந்த கட்சி மீட்டிங்கில் ஜெவை குட்டிசுவர் என அநாகரீகமாக வர்ணித்ததற்காக.

   10. இந்த வாரத்தின் சிறந்த கலரிங்க் ஹேர் கல்பனா விருது மு.க ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதிக்கு,சென்னை கோட்டுப்புறம் அரசுப்பள்ளியில் நடந்த மரங்களுக்கு ராக்கி கட்டும் விழாவிற்கு கலக்கல் மேக்கப்,கலரிங்க் செய்யப்பட்ட கூந்தல் என வந்து கலக்கியமைக்காக. (சினிமா நடிகைங்க தோத்தாங்க போங்க)

   Saturday, September 18, 2010

   365 காதல் கடிதங்கள் - சினிமா விமர்சனம்   பருத்திவீரன் படம் ஹிட் ஆன சமயத்தில் வெளிவந்த ஒரு ஆங்கில படத்துக்கு 300 பருத்தி வீரர்கள் என டைட்டில் வைத்த மாதிரி இந்தப்படத்துக்கு 365 காதல் கடிதங்கள் என டைட்டில் வைத்து உள்ளார்கள்.வைத்த டைட்டிலை கரெக்ட் பண்ண ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு வருடம் தினசரி ஒரு கடிதம் அனுப்புவது மாதிரி ஒப்பேற்றி இருக்கிறார்கள்.

   படத்தின் கதை என்ன?16 வயசுப்பையன் கூடப்படிக்கும் 16 வயசுப்பொண்ணை லவ் பண்ணுகிறான்.(இந்த காலத்தில் 16 வயசுப்பையன் 34 வயசுப்பெண்ணை லவ் பண்றதுதான் ஃபேஷன் - உபயம் கிரண் நடித்த வாலிபமே வா.)+2 பாஸ் பண்ணினால் காதலை ஏற்றுக்கொள்வதாக ஹீரோயின் கூறுகிறாள்.(ஆஹா,என்னே ஒரு கஷ்டமான கண்டிஷன்?)கஷ்டப்பட்டு பாஸ் ஆன ஹீரோ ஹீரோயின் வாயால் ஐ லவ் யூ சொல்ல வைக்கிறான்.இந்த சமயத்தில் ஹீரோயின் இட மாற்றம் காரணமாக சென்னை செல்கிறாள்.அட்ரஸ் குடுத்துவிட்டு.ஹீரோ கடிதமாக போட்டுத்தள்ளுகிறான்.பதிலே இல்லை.ஹீரோயின் அம்மா அதை ஒளீத்து வைக்கிறாள்.4 வருடங்கள் கழித்து ஹீரோயின் ஹீரோ ஊருக்கு வந்து ஹீரோவை சந்திக்கும்போது ஒரு ஆக்சிடெண்ட்டில் கோமா ஸ்டேஜ்க்கு போய் விடுகிறாள். 6 வருடங்கள் சிகிச்சை செய்தும் குணம் ஆகாததால் ஹீரோயின் தந்தை அவளை கருணைக்கொலை செய்ய முடிவெடுக்கிறார்.உடனே ஹீரோ தற்கொலை செய்துகொள்கிறார்.அவர் இறந்ததும் ஹீரோயினுக்கு பழைய நினைவு திரும்பி விடுகிறது.


     
   ஹீரோ செலக்‌ஷன் மஹா மட்டம்.ஹீரோயின் செலக்‌ஷன் சுமார்.தன்னை ஹீரோ பார்க்கும்போது பெருமிதமும்,வெட்கமும் கலந்த நாணச்சிரிப்பு உதிர்ப்பது அருமை.மற்றபடி தேறாத கேஸ்.

   ஓப்பனிங்க் சீனில் ஹீரோ இன்ஸ்பெக்டர் மனைவி என தெரியாமல் ஏடாகூட போஸில் ஃபோட்டோ எடுத்து மாட்டுவது வறட்சியான காமெடி.டீ கொண்டு வர்றவனுக்கு எல்லாம் டீட்ட்ய்ல் சொல்லனுமா என அறிமுகமாகும் கருணாஸ் காமெடி எடுபடவில்லை.

   பொக்கிஷம் படத்தில் சேரன் கடித இலக்கியத்தை மையமாக வைத்து கதை எழுதும்போதே புத்திசாலித்தனமாக கதைக்களம் 1980 களில் செல்ஃபோன் அதிக உபயோகத்தில் இல்லாத காலம் என்பது மாதிரி பீரியட் ஃபிலிம் ஆக்கி விட்டிருந்தார்.ஆனால் இந்தப்படத்தில் ஹீரோயின் கையில் செல்ஃபோன் வைத்திருக்கிறார்,ஆனால் ஒரு முறை கூட ஹீரோவுடன் ஃபோனில் பேசாமல் லெட்டரையே நம்பி இருப்பது திரைக்கதையில் முதல் சறுக்கல்

   ஹீரொயின் பாத்திரப்படைப்பில் கோட்டை விட்டாரா, அல்லது எடிட்டரின் தவறா தெரியவில்லை ஹீரோயின் ஒரு காட்சியில் ஹீரோவை காதலிப்பது போலவும் அடுத்த காட்சியில் இது வெறும் நட்புதான் என சொல்லுவது போலவும் அமைந்து பார்வையாளர்களை குழப்புகிறது.

   என் 20 வருஷ அனுபவத்தில் மப்புல இருக்கறவன் கல்லை சரியா போட்டதே இல்லை,  போடுடா பார்ப்போம் என குடிகாரனை உசுப்பேற்றும் காமெடி ஓகே ரகம்.நட்பு படத்தில் செந்தில் 10 பைசா பைத்தியமாக வந்தது மாதிரி இதில் முத்துக்காளை மல்லிகா பைத்தியமாக வருகிறார்.அவர் நடிப்பு ஓவர் ஆக்டிங்.சுத்தமா சிரிப்பே வர்லை,எரிச்சல்தான் வருது.

   ஹீரோ ஹீரோயினுக்காக ஒரு வசந்த மாளிகை கட்டுகிறார்.அதற்கு ஜாஸ்மின் இல்லம் என பெயர் வைக்கிறார்.பேசாமல் படத்துக்கு மல்லிகை இல்லம் என டைட்டில் வைத்திருக்கலாம்.

   சைக்கிள் தேவதை சாலையில் ஐஸ் மழை பாடல் காட்சி நல்ல ரசனையாக 
   எடுக்கபட்டுள்ளது. முதல் மழை முதல் முத்தம் பாடல் காட்சி முதல் மழை என் மனசுக்குள் தெறித்திட்ட என்ற பாடல் வரிகளில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

    365


   படத்தில் நம்ப முடியாத சீன்கள்.

   1.ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்த வீட்டில் கள்ளக்காதலர்கள் ஒதுங்கும் இடத்தில் ஹீரோவும்,ஹீரோயினும் கம்பைன் ஸ்டடி பண்ணுவதும்,அதை ஹீரோவின் அப்பாவே பார்த்து பூரிப்பதும்
   (கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுதுன்னு சொல்வானாம் -உபயம் திண்டுக்கல் ஐ லியோனி)

   2.ஹீரொயின் காலில் ஹீரோ விழுந்து கெஞ்சியதும் ஹீரோயின் காதலிக்க ஒத்துக்கொள்வது. (காதலையே கேவலப்படுத்தி விட்டார்கள் கூடவே ஆண் வர்க்கத்தை)

   3.எந்தத்தந்தையாவது கோமா ஸ்டேஜில் இருக்கும் மகளை கருணைக்கொலை செய்ய முன் வருவாரா?( உளவியல் நிபுணர் ஒருவரிடம் விசாரித்தேன்,சான்ஸே இல்லை என்றார்.வயதானவர்கள் என்றால் ஓகே,இள வயதுப்பெண்ணை கொலை செய்ய யாரும் நினைக்க மாட்டார்களாம்.)

   4. 6 வருடங்கள் கழித்து ஹீரோவை சந்திக்க வரும் ஹீரோயின் ஏன் இத்தனை நாட்களாக கடிதமே போடலை என ஏன் கேட்கலை?ஜஸ்ட் லைக் தட் போயிடறாரே?

   5. எந்த ஸ்கூலில் பிட் அடித்த மாணவனை உடனே டி சி குடுத்து அனுப்புகிறார்கள்?

   படத்தில் வரும் ரசனையான சீன்கள்

   1.காதலியின் மேல் உதட்டில் தோன்றும் வியர்வைத்துளிகளை இங்க் ஸ்பில்லரால் காதலன் சேகரிப்பது.(காதல் என்றாலே பைத்தியக்காரத்தனங்களின் தொகுப்புதானே)

   2.என்னால என் காதலியை மறக்க முடியலை என உதார் விடும் எடுபிடியிடம் கருணாஸ் “எங்க முதலாளியைப்பார்,9 பேரை வெச்சிருந்தார்,எல்லாரையும் அப்பப்ப மறந்துடுவார் என அவரை வாருவது

   படத்தில் வரும் ரசனையான வசனங்கள்

   1.அதிக சோகத்தையும்,அதிக சந்தோஷத்தையும் தருவது காதல் மட்டும்தான்.

   2. மரணம் என்பது இறைவன் தர்ற சுகமான தூக்கம்.

   3.செம கட்டையா நிக்குதே பொண்ணு,என்னய்யா பஞ்சாயத்து?  ம்,கட்டை பஞ்சாயத்து.

   4.அறிவாளி வேலையை தேடிப்போவான்,புத்திசாலியை வேலை தேடி வரும்.

   5.டேய்,எப்படியாவது ட்ரை பண்ணி என்னை கரெக்ட் பண்ணறதுலயே நீ குறியா இருக்கேடா.

   ஆனா முடியலையே.

   6.அந்தப்பொண்ணைப்பார்த்தா தப்பானவளா தெரியலை,செத்துப்போன என் ஆத்தா மாதிரியே இருக்கா.

   உன் ஆத்தா ஜீன்ஸ் போட்டிருக்குமா?

   7. மூளை வளரனும்னு உன் பையனுக்கு முட்டைக்காபி போட்டுத்தர்றே,உன் பையன் பரீட்சைல முட்டை வாங்கக்கூடாதுங்கறதுக்காக காப்பி அடிக்கறான்.

   8.உன் பிள்ளை ராமர் மாதிரியா?

    ஆமாமா,ஒரு பொண்ணுக்கு காதல் பாலம் போட்டுட்டு இருக்கான்

   சமீப காலமாக வரும் காதல் படங்களில் ஒரு மோசமான க்ளிசே வருகிறது. அது க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது.இது மாபெரும் தவறு என்பதை அந்த படங்களின் தோல்வி உணர்த்துகிறது.

   இந்தப்படம் பி சி செண்ட்டர்களில் ஏழு நாள் ஓடினாலே அது ஏழாவது அதிசயம்தான்.

   Thursday, September 16, 2010

   பத்திரிக்கை உலகம் அதிர்ச்சி -துக்ளக் கின் கண்டனத்துக்குரிய தலையங்கம்

   பத்திரிக்கையாளர்,நகைச்சுவை நடிகர்,அரசியல் விமர்சகர்,எழுத்தாளர்,சட்டம் படித்தவர் என பன்முகத்திறமை கொண்டவர் திரு சோ அவர்கள்.முகமது பின் துக்ளக் என்ற படத்திலே அரசியல் அவலங்களை,ஓட்டுக்காக அரசியல்வாதிக்ள் எந்த அளவுக்கு இறங்கி வருவார்கள் என்பதை 37 வருடங்களுக்கு முன்பே புட்டு புட்டு வைத்தவர்.
   தி.மு.க - த மா க கூட்டணி ஏற்பட காரணமாக இருந்தவர்,பி ஜே பி அனுதாபியாக இருந்தாலும் தான் எழுதும் அரசியல் கட்டுரைகளில் நடுநிலைமை தவறாதவர்,அப்படிப்பட்டவர் இன்று வெளியாகி இருக்கும் துக்ளக் இதழில் எழுதிய தலையங்கத்தின் சாரம் அதிர்ச்சி அளிக்கிறது.
   அவர் அப்படி என்ன எழுதினார் என்பதற்கு முன் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

   மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடக் கூடாது பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி
   புதுடெல்லி, செப்.7-

   பிரதமர் மன்மோகன்சிங், நேற்று பத்திரிகை ஆசிரியர்களை தனது வீட்டிற்கு அழைத்து, உரையாடினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

   சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ஒன்றில், அரசு `குடோன்'களில் வீணாகிவரும் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை, ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

   அதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது:-

   "நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 37 சதவீதம் பேர், வறுமை கோட்டிற்கு கீழாக வறுமை நிலையில் உள்ளனர். அப்படி இருக்கும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதைப் போல், வீணாகும் உணவு தானியங்களை அனைத்து ஏழை மக்களுக்கும் எப்படி இலவசமாக வழங்க முடியும்? இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பை இன்னும் நான் படித்துப் பார்க்கவில்லை.”

   ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பேசலாமா?படித்துப்பார்த்து விட்டு பேச வேண்டியதுதானே.


   நன்றாய் தெரிகிறது நீங்கள் யாருக்கான அரசு என்று. உங்கள் சம்பளம் மட்டும் 5  மடங்கு  உயர்த்தியது போதாது என்பீர்கள்.  ஏழைகள் என்றால் கசக்கிறது. செருப்பால் அடித்தால் கூட நீங்கள் திருந்த மாட்டீர்கள்.


   இது குறித்து நண்பர் வேந்தன் அரசு கூறியது
   நம் நாட்டில் 100 கோடி டன் தானியங்கள் விளையுதுனா, அது முழுமையும்
   நாட்டு மக்களுக்கு போய் அடையணும்.
   அரசு அவற்றில் பெரும்பான்மை வாங்கி பதுக்கிவச்சா ஏழைமக்கள் என்ன
   செய்வாங்க? இது சந்தையில் இருந்தால் தானியங்களின் விலை குறையும் ஏழைகளால்
   வாங்க இயலும்..

   இதில் ஒரு பகுதியை அழுகி வீணாக்குவது என்பதை சமூக குற்றம்.
   உணவுப்பொருட்கள் இருந்தால் என்ன விலை என்றாலும் வாங்கி பசியாறலாம்
   இல்லாமலே போனால்? அவர்களால் தாமே தானியங்களை விளைவிக்கத்தான் முடியுமா?

   பில்கேட்சு போன்ற ஒரு கோடீசுவரன் வந்து 100 கோடி டன் தானியங்களையும்
   வாங்கி கடலில் கொட்டினா அரசு சும்மா இருக்குமா?

   அதனால் தானியங்களி வீணடித்த உணவுத்துறை அமைச்சரை கழுவில் ஏற்றணும்.

   நீதிபதிகளுக்கு பொலிடகலி கரெக்ட் ஆக பேச வேண்டிய அவசியம் இல்லை. அதனால்
   அவர்கள் கருத்தை அரசு கட்டாயம் கேட்கணும்.  மேலவையில் உடகார்ந்து
   சொன்னால்தான் அறிஞர்களின் கருத்தா?

   நண்பர் அசோக் கூறியது
   தானியங்கள் விலை கூடினால், அடுத்த முறை போட்டி போட்டு கொண்டு விலை அதிகமுள்ள தானியங்களை விவசாயிகள் விளைவிப்பார்கள். அதே போல் விலை குறைந்தால் அந்த தானியங்களை விளைவிக்க நாட்டம் காட்ட மாட்டார்கள்.

   தானியத்தை வீணாக்குபவனும் நட்டத்தை அடையாமல் இல்லை. நட்டத்தை நோக்கி தொழில் நடத்த அவனும் மூடன் அல்ல. தானியம் வீணாகும் நிலையில், போக்குவரத்து செலவு, தானிய விலையை விட அதிகமாக இருந்தால் தவிர அவன் அடி மாட்டு விலைக்கு தன் பொருளை விற்றே தீருவான்.

   சந்தை விதிகள் சுதந்திரமாக இயங்க விடுங்கள். அதை விட திறனான வழி முறைகள் வேறு இல்லை.


   இப்போது மேட்டருக்கு வருவோம்.சோ அவர்கள் பிரதமர் செய்ததும் ,சொன்னதும் சரிதான் என தலையங்கம் எழுதி இருக்கிறார்.ஏழைகள் பட்டினி இருந்தாலும்  பரவாயில்லை,உணவுப்பொருள்கள் வீணானாலும் பரவாயில்லை,சட்டப்படி தான் நடக்கனும் என்கிறார்

   என் கேள்வி,சட்டப்படிதான் எல்லாம் இங்கே நடக்கிறதா?

   1.ஜெ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாரே அது சட்டப்படியா?

   2.கலைஞர் 25 தலைமுறைக்கு கோடிக்கணக்கி சொத்து சேர்த்தாரே அதுவும் சட்டப்படியா?

   3.ஆ ராசா 1000 கோடி ஊழல் பண்ணியும் கூட்டணி அதர்மப்படி அதை கண்டுகொள்ளாமல் பி எம் இருக்காரே அது சட்டப்படியா?

   4.போபர்ஸ் ஊக்ஷலில் ராஜீவ் காந்தி சம்பந்தப்பட்டது தெரிந்தும் மூடி மறைக்கப்படதே,அது சட்டப்படியா?

   ஏழைகளுக்கு ஒரு நீதி,பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?

   நாயகன் படத்தில் ஒரு வசனம் வரும். 4 பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பு இல்லை என.கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை நடக்கும்போது சட்டம் மீறப்பட்டால்தான் என்ன? மனிதாபிமானம் எப்போது உயிர் பெறும்?